எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இருளில் கண்ணீரும் எதற்கு? - கதைத் திரி

Status
Not open for further replies.

Nuha Maryam

Moderator
IMG_20220213_170557.jpg

"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." கதையில் வரும் பிரணவ்வின் கதை. ❤️
 
Last edited:

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 1

ஆடவனின் பார்வை வீச்சை தாங்காது வெண்மதியவள் மேகக் கூட்டங்களின் பின்னே ஒளிந்து கொள்ள, அதனை வெறித்துப் பார்த்துக் கொண்டே புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான் பிரணவ்‌.

"ஆர்யான்... நீ என்ன பண்ணினாலும் தாரா எனக்கு தான்... அவளை நான் அடையாம விட மாட்டேன்... இந்த என்கேஜ்மென்ட் எப்படி நடக்கும்னு நானும் பார்க்குறேன்..." எனக் கோபமாகக் கூறியவன் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்து நசுக்கினான்.

************************************

மூர்த்தி மற்றும் லக்ஷ்மி தம்பதியினரின் ஒரே மகன் தான் பிரணவ். வசதி வாய்ப்பில் குறைவற்றவன். பணத்திலே வளர்ந்தவன். மூர்த்தி மற்றும் லக்ஷ்மி இருவருக்கும் எப்போதும் பணம் சம்பாதிப்பதே ஒரே குறிக்கோள். அதனால் அடிக்கடி இருவரும் வேலை விஷயமாக எங்காவது கிளம்புவர். அப்போதெல்லாம் பிரணவ்வைப் பார்த்துக் கொள்வது வேலைக்காரர்கள் தான். அவனை சுற்றி எல்லாவற்றுக்கும் வேலைக்காரர்கள் காணப்படுவர். பிரணவ்வின் பெற்றோர் தகுதி பார்த்தே மற்றவர்களிடம் பழகுவர். தம்மை விட வசதியில் குறைந்தவர்களை கீழ்த்தரமாக நினைப்பவர்கள். அதனையே தம் மகனுக்கும் கற்றுக் கொடுக்க, பிரணவ்வும் தகுதி பார்த்தே பழகினான். அவனின் நண்பர்கள் கூட நன்கு வசதியானவர்களாகவே இருந்தனர். பெற்றோரைப் பின்பற்றி வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ அனைத்திலுமே சிறந்ததை மட்டுமே விரும்பினான். ஆனால் அவனின் வாழ்வில் விதிவிலக்காக வந்து சேர்ந்தவன் தான் அபினவ்.

பிரணவ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. அன்று அவனின் பிறந்தநாள். பெற்றோரிடமிருந்து வாழ்த்து வராது என்பதை அறிந்திருந்திருந்தும் எப்போதும் போல் அவர்களின் வாழ்த்துக்காக காத்திருக்க, அன்று முழு நாளுமே அவர்கள் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் போகவும் ஆத்திரம் அடைந்து பாதையைக் கடந்து மறுபக்கம் நிற்கும் தன் வண்டியில் ஏறச் சென்றவன் தூரமாக வந்த லாரியைக் கவனிக்கவில்லை. ஆனால் சரியான சமயம் எங்கிருந்தோ ஓடி வந்த அபினவ் பிரணவ்வை இழுத்ததால் நூலிழையில் தப்பித்தான் பிரணவ். அபினவ்விற்கு தான் கை கால்களில் லேசாக சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அப்போது தான் அவன் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டு உள்ளோம் என்பதை புரிந்து கொண்டவன் தன் அருகில் விழுந்து கிடந்த அபினவ்விடம் சென்று, "ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ... எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்தி இருக்கீங்க... நீங்க வரலன்னா என்ன நடந்து இருக்கும்னே நெனச்சி பார்க்க முடியல..." என்க,

"இட்ஸ் ஓக்கே... தேங்க்ஸ் எல்லாம் வேணாம்... நான் கிளம்புறேன்..." என்று விட்டு செல்ல முனைந்தான் அபினவ்.

பிரணவ், "முதல்ல வாங்க ஹாஸ்பிடல் போகலாம்... உங்களுக்கு காயம் ஆகியிருக்கு..." என்கவும் மறுத்த அபினவ், "அதெல்லாம் ஒன்னும் இல்லை... சின்ன காயம் தான் ப்ரோ... கொஞ்சம் நேரத்துல தானா ஆறிடும்..." என்றவனை வலுக்கட்டாயமாக மருத்துவமனை அழைத்துச் சென்று காயத்திற்கு மருந்திட்டான்.

பின் இருவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வரவும், அபினவ் கிளம்பப் பார்க்க, "ஒரு நிமிஷம் இருங்க ப்ரோ... எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க... உங்க நேம் என்ன? என்ன பண்றீங்க? எங்க தங்கி இருக்கீங்க?" எனப் பிரணவ் கேட்க,

"ஐம் அபினவ்... எம்.எஸ்.வி. காலேஜ்ல செகன்ட் இயர் டெக்னாலஜி படிக்கிறேன்... ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்கேன்..." என்கவும் அதிர்ந்த பிரணவ், "ஹேய் அப்போ நீங்க எங்க க்ளாஸா? சாரி அபினவ்... எனக்கு தெரியல..." என்றான்.

அபினவ், "இட்ஸ் ஓக்கே பிரணவ்... பட் எனக்கு உங்கள தெரியும்... சரி எனக்கு ரொம்ப லேட் ஆகிடுச்சு... நான் கிளம்புறேன்..." என்றவனை தடுத்த பிரணவ், "எங்க கிளம்புறீங்க... இனிமே நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்... நீங்க ஹாஸ்டல்ல எல்லாம் தங்க வேணாம்... எங்க வீட்டுல தங்கிக்கோங்க..." என்க, "உங்க ஃப்ரெண்ட்ஷிப்ப நான் ஏத்துக்குறேன்... பட் நான் ஹாஸ்டல்லயே இருந்துக்குறேன்... எனக்கு அதான் கம்ஃபடபிளா இருக்கும்..." என்றான் அபினவ்.

பிரணவ், "அதெல்லாம் முடியாது... எங்க வீட்டுல நான் தனியா தான் இருக்கேன்... உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது... நிச்சயம் உங்களுக்கு கம்ஃபடபிளா இருக்கும்... ப்ளீஸ் மறுக்காதீங்க..." என்கவும் வேறு வழியின்றி சம்மதித்தான் அபினவ்.

அன்றிலிருந்து இருவரும் நல்ல நண்பர்களாயினர். அப்போது தான் பிரணவ்விற்கு உண்மையான நட்பின் அர்த்தமே புரிந்தது. அவனின் பழைய நண்பர்கள் எல்லாம் எப்போதும் கூத்தும் கும்மாளமுமாகவும் இருக்கவும் வேறு எதாவது தேவைக்காகவும் தான் பிரணவ்வுடன் பழகினர். ஆனால் அபினவ்வோ பிரணவ்வின் தவறுகளை சுட்டிக் காட்டி தேவையான சமயம் கடிந்து கொண்டு அவனைத் திருத்தினான். பிரணவ் கொஞ்சம் கொஞ்சமாக தன் மற்ற நண்பர்களிடமிருந்து விலக ஆரம்பிக்கவும் அதில் ஆத்திரமடைந்தவர்கள் பிரணவ்வையும் அபினவ்வையும் பிரிக்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். அபினவ்வின் சகோதரனான ஆதர்ஷ் அபினவ்வைக் காண வரும் போது பிரணவ்வுடன் பழகி இருவருக்கும் இடையில் நல்ல நட்பொன்று உருவாகியது.

நாட்கள் இவ்வாறு வேகமாகக் கடக்க, பிரணவ்வும் அபினவ்வும் தம் கல்லூரிப் படிப்பை முடித்தனர். அபினவ் ஒரு கம்பனியில் வேலைக்கு சேர, பிரணவ்வோ அவனின் தந்தை மூர்த்தி வற்புறுத்தியதால் அவர்களின் கம்பனிப் பொறுப்பை ஏற்றான். பிரணவ் அபினவ்வையும் தன் கம்பனியில் வேலைக்கு சேர கூற, அவனோ முடியாது என உறுதியாக மறுத்து விடவும் இதற்கு மேல் அவனை கட்டாயப்படுத்த முடியாது என பிரணவ்வும் அமைதியாகினான்.

அபினவ்வின் ஊரான பூஞ்சோலைக் கிராமத்தில் ஊர்த் திருவிழா நடைபெறுவதால் பிரணவ்வையும் அழைத்துக் கொண்டு தன் ஊருக்குக் கிளம்பினான். அங்கு தான் முதன் முதலாக சிதாராவைப் பார்த்தான் பிரணவ். அபினவ்வின் காதலியான அக்ஷராவின் தோழி தான் சிதாரா. சிதாராவைப் பார்த்த நொடியே பிரணவ்வின் மனதில் ஏதோ ஒரு உணர்வு. சிதாராவையே அவன் கண்கள் பின் தொடர்ந்தன‌.

சிதாராவின் நினைவில் இருந்தவனுக்கு ஏதோ அழைப்பு வரவும் அதே மகிழ்ச்சியில் அழைப்பை ஏற்க, மறுபக்கம் அவனின் பழைய நண்பனான ராகுல் தான் அழைத்திருந்தான்.

பிரணவ் எடுத்ததும், "சொல்லு மச்சான்..." என உற்சாகமாகப் பேச, "என்ன பிரணவ்... புதிய ஃப்ரெண்ட் கிடைச்சதும் எங்கள எல்லாம் மறந்துட்டேல்ல நீ... கண்டுக்கவும் மாட்டேங்குற... ஃபோன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குற..." என ஒரு மாதிரி குரலில் கூறவும் அதனை உணராத பிரணவ்வோ, "அப்படி எல்லாம் இல்லடா... இங்க அபி கூட அவங்க ஊர்த்திருவிழா பார்க்க வந்திருக்கேன்..." என்க,

ராகுல், "ஓஹ்... அதான் நீ அவ்வளவு குஷியா இருக்கியோ..." என வார்த்தையில் வன்மத்தை தேக்கி வைத்து கேட்க, அதை புரிந்து கொள்ளாத பிரணவ்வோ, "அதுவும் தான் மச்சான்..." என்றவன் சிதாராவைப் பற்றி ராகுலிடம் கூறினான்.

பிரணவ் கூறியதைக் கேட்ட ராகுல், 'ஓஹோ... சார் லவ்வுல விழுந்திட்டீங்களோ... இதை வெச்சே உன்னையும் அந்த அபினவ்வையும் பிரிச்சு காட்டுறேன்டா... உன்ன பத்தி எனக்கு ரொம்ப நல்லா தெரியும்டா... என்ன சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னும் தெரியும்டா...' என மனதில் நினைத்தவன், "டேய்... பார்க்குறதோட நிறுத்திக்கோடா... லவ்வு கிவ்வுன்னு பண்ணி வெச்சிடாதேடா..." என்கவும் புரியாமல் முழித்த பிரணவ்,"என்னடா சொல்ற?" எனக் கேட்க,

"நீ சிட்டியிலேயே வளர்ந்தவன்டா... உனக்கு இந்த கிராமத்து பொண்ணுங்களை பத்தி சரியா தெரியாது மச்சான்... அதுங்க எங்கடா பணக்கார பையன் மாட்டுவான்னு பார்த்துட்டு இருப்பாளுங்க... நீ மட்டும் லவ்வுன்னு போய் நின்னா உடனே ஏத்துக்கிட்டு நல்லா உன் கிட்ட இருந்து பணத்தை கரந்துடுவாளுங்க... ஆனா அதுக்கு மேல ஒன்னும் நடக்காதுடா... அதுங்க யூஸ் பண்ணிட்டு தூக்கி போட மட்டும் தான் சரிப்பட்டு வரும்டா... பார்த்து இருந்துக்கோடா..." என ராகுல் கூறவும் அதனை உண்மை என நம்பியது தான் அவன் வாழ்வே திசை மாற காரணமாகியது.

அன்று இரவு மேடை நாடகம் நடந்து முடிந்ததும் ஆதர்ஷின் அத்தை மகளான லாவண்யா அவனுடன் ஏதோ சண்டை பிடித்துக் கொண்டிருக்க, அவளின் அருகில் நின்ற சிதாராவையே பிரணவ்வின் கண்கள் மொய்த்தன. பிரணவ்வின் பார்வை கண்டு முகம் சிவந்தவள் தலை குனிந்துகொள்ள பிரணவ்வின் மனதில் ராகுல் கூறியவைகளே ஓடின.

அடுத்து வந்த நாட்களும் திருவிழா களை கட்ட, பிரணவ்வோ சிதாராவையே எப்போதும் பின் தொடர்ந்தான்.

இதனை அபினவ் அவதானித்து பிரணவ்விடம் கேட்க அவனோ,

"எனக்கு அவள பிடிச்சிருக்குடா மச்சி..." என்கவும் பிரணவ் சிதாராவை காதலிக்கிறான் என நினைத்துக் கொண்டான் அபினவ்.

அபினவ் பிரணவ் கூறியதை ஆதர்ஷிடம் கூற, "இங்க பாருடா... அவன் எனக்கு ஃப்ரென்ட் ஆக முன்னாடியே சித்து என்னோட தங்கச்சி... இவனோட காதலால அவளுக்கு எந்த பிரச்சினையும் வராம பார்த்துக்கோ..." என்றான்.

லாவண்யாவும் அக்ஷராவும் ஒரு ஐஸ் க்ரீமிற்காக சண்டை பிடித்துக் கொண்டிருக்க, சிதாரா அவர்களை விட்டு சற்று தள்ளி வரவும் அவளிடம் வந்த பிரணவ்,

"தாரா.. நான் உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்..." என்று கூற,

அவனது தனிப்பட்ட தாரா என்ற அழைப்பில் அவனையே விழி விரித்து நோக்கினாள் சிதாரா.

பிரணவ், "எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தாரா... நீ ரொம்ப அழகா இருக்காய்... ப்ளீஸ் உன் நம்பர் கிடைக்குமா..." என்க,

அவனின் பார்வை ஏற்கனவே சிதாராவை ஏதோ செய்ய,

தன் அண்ணனின நண்பன் தன்னிடம் இவ்வாறு கூறவும் எப்படி எதிர்வினையாற்ற என தெரியாமல் முழிக்க,

அவள் யோசிக்கும் இடைவேளையில் அவள் கரத்திலிருந்த மொபைலைக் கண்டு கொண்ட பிரணவ் அவள் கையிலிருந்து அதனைப் பறித்து அவசரமாக தன் எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து விட்டு அவளிடமே ஒப்படைத்தான்.

பிரணவ்வின் இந்த திடீர் செயலில் அதிர்ந்த சிதாரா அவன் விரல் தன் கரத்தை தீண்டவும் அவளுள் நடந்த இரசாயன மாற்றத்தில் அவஸ்தைப்பட்டாள்.

அதற்குள் லாவண்யாவும் அக்ஷராவும் அவர்களை நோக்கி வருவதைக் கண்ட பிரணவ் சிதாராவிடம் ஹஸ்கி வாய்சில்,

"பாய் தாரா... அப்புறம் கால் பண்றேன்..." என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

பிரணவ்விற்கு தான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறோம் என்றே புரியவில்லை. சிதாராவிடமிருந்து அவளின் எண்ணை வாங்கியும் அவளுக்கு அழைக்காமல் இருந்தவன் ஒருவேளை ராகுல் ஏதோ தவறாக கூறி இருப்பான் என எண்ணி மறுநாள் காலையிலேயே அவளுக்கு அழைத்தவன் சிதாரா அழைப்பை ஏற்றதும், "தாரா..." என்க, சிதாரா அவசரமாக, "ஏங்க நைட்டு கால் பண்ணல?" என்கவும் பிரணவ்வோ ராகுல் கூறியவை அனைத்தும் உண்மை என எண்ணிக் கொண்டான்.

பிரணவ், "என் காலுக்கு வெய்ட் பண்ணியா தாரா..." என்க, "ஹ்ம்ம்.." என்ற சத்தம் மட்டும் தான் அவளிடம் வந்தது.

'இந்த பிரணவ் கிட்டயே உங்க சீப்பான புத்திய காட்ட பார்க்குறியா? இருடி உனக்கு நல்ல வேலை பண்றேன்... லோ க்ளாஸ் புத்தியே இப்படி தான்... ச்சே...' என மனதிற்குள் எண்ணிய பிரணவ், "உன்ன பாத்ததும் எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சு போச்சி தாரா... இதை முதல்ல உங்க ஆதர்ஷ் அண்ணா கிட்ட தான் சொன்னேன்... அவருக்கும் சம்மதம்னு சொன்னாரு..." என்றான்.

சிதாரா ஆதர்ஷ் மீதிருக்கும் பாசத்தில் ஆதர்ஷ் என்ன கூறினாலும் செய்வாள் என அறிந்து வைத்திருந்த பிரணவ் அதற்காகத்தான் முதலிலே இதனை சிதாராவிடம் கூறினாள்.

அதே போல் சிதாராவும் அவன் கூறியதை நம்பி ஆதர்ஷ் எப்போதும் தனது விடயத்தில் தவறான முடிவு எடுக்க மாட்டான் என அதன் பின் பிரணவ்வுடன் எந்த தயக்கமுமின்றி பேச ஆரம்பித்தாள்.

திருவிழா முடியும் வரையிலுமே இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.

லாவண்யா, அக்ஷரா கூட இதனை அறிந்து சிதாராவை கேலி செய்தனர்.

அபினவ்வோ சிதாராவும் பிரணவ்வை விரும்புவது அறிந்து தன் நண்பனுடன் அவள் இணைந்தால் நண்பர்களுக்குள் பிரிவு வராது என எண்ணி அக்ஷராவை சைட்டடிக்கும் வேலையில் மூழ்கினான்.

ஆதர்ஷ் தான் பிரணவ்விடம் அடிக்கடி, "அவ என் தங்கச்சிடா... அவளுக்கு குழந்தை மனசு... எந்த காரணம் கொண்டும் அவள கஷ்டப்படுத்திராதே.." என்பான்.

பிரணவ்வும் ஒரு தலையசைப்புடன் கடந்து விடுவான்.

பிரணவ்வின் தீண்டல் சிதாராவில் மாற்றத்தை ஏற்படுத்துவதை அறிந்து கொண்டவன் ஒவ்வொரு முறையும் அவளை சந்திக்கும் போதும் அவள் கரத்தை பிடித்து தடவியபடி பேசுவான்.

சிதாராவோ அவன் தீண்டலில் மயங்கி கிடக்கவும் பல தடவை அவளை மேலும் நெருங்க முயற்சித்தான்.

ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து அவனால் முடியாமல் போய்விடும்.

திருவிழா முடிய அபினவ், பிரணவ் இருவரும் மீண்டும் சென்னை கிளம்பினர்.

ஆனால் பிரணவ் சிதாராவுடன் எப்போதும் தொடர்பில் இருந்தான்.

இவ்வாறிருக்க ஒருநாள் பிரணவ் தன் ஆஃபீஸில் வேலையாக இருக்கும் போது திடீரென சிதாரா அழைத்து என்ன ஏது என்று காரணம் கூறாது அவனை ஊருக்கு வருமாறு அழைக்கவும் சலித்துக் கொண்டவன் அனைத்துக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என நினைத்து அபினவ்விடம் கூட கூறாது சிதாராவை சந்திக்க பூஞ்சோலைக் கிராமத்துக்கு சென்றான்.

ஒரு கோயிலில் பிரணவ்விற்கு முன்பே சிதாரா வந்து அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

பிரணவ்வோ சிதாரா வந்ததும் அவள் கைப்பிடித்து, "எப்படி இருக்காய் தாரா... ஐ மிஸ்ட் யூ சோ மச்.." எனக் கூறி அவளை அணைக்க வரவும் அவனைத் தடுத்த சிதாரா,

"பிரணவ்... எனக்கு பயமா இருக்கு... தயவு செஞ்சி எங்க வீட்டுல வந்து உடனே பேசுங்க..." என்க,

அவள் கூறுவது புரியாது முழித்த பிரணவ், "என்னாச்சு தாரா... உங்க வீட்டுல வந்து நான் என்ன பேசனும்?" என்றான்.

சிதாரா, "எங்க வீட்டுல எனக்கு கல்யாணம் பேசுறாங்க பிரணவ்... எங்க அத்த அவங்க பையனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணுறாங்க.." என்க,

பிரணவ்வோ அவள் கையைத் தடவியபடியே, "இனி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே..." என்க சிதாரா அதிர்ந்தாள்.

பிரணவ் தன்னைக் கேலி செய்கிறான் என நினைத்த சிதாரா,

"என்ன விளையாடுறீங்களா பிரணவ்? நான் சீரியசா பேசிட்டு இருக்கேன்..." என்கவும்,

"நானும் சீரியசா தான் சொல்றேன் தாராமா..." என்றான்.

"என்ன பிரணவ் சொல்றீங்க? உங்கள காதலிச்சிட்டு நான் எப்படி இன்னொருத்தனுக்கு கழுத்த நீட்டுவேன்... நீங்களும் என்னை காதலிக்கிறீங்கல்ல... அப்போ எங்க வீட்டுல வந்து பேசுங்க.." என அழுதபடி சிதாரா கேட்க,

அவள் கரத்தை விட்ட பிரணவ், "நான் எப்போ உன்ன காதலிக்கிறதா சொன்னேன்?" என்றான்.

பிரணவ் தன் கையை விட்டதும் அவனைப் புரியாது பார்த்த சிதாரா அதன் பின் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள்.

சிதாரா, "திருவிழா நேரம் நீங்க தானே என்ன பிடிச்சிருக்கிறதா சொன்னீங்க... அதுக்கப்புறம் பேசும் போது கூட ரொம்ப உரிமையா காதலிக்கிறது போல தானே பேசினீங்க..." என்க,

சத்தமாக சிரித்த பிரணவ், "நீ என்ன லூசா தாரா... பிடிச்சிருக்குதுன்னு சொன்னா காதலிக்கிறேன்னு அர்த்தமா... இப்போ கூட எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தான்... அதுக்காக உன்ன காதலிக்க எல்லாம் இல்ல... பார்க்க ஏதோ அழகா இருந்தாய்... பிடிச்சிருக்குன்னு சொன்னேன்... அவ்வளவு தான்..." என்றான்.

சிதாரா, "இல்ல... எனக்கு தெரியும்... நீங்க பொய் சொல்லுறீங்க... வாங்க இப்பவே போய் வீட்டுல பேசலாம்..." என அழுதுகொண்டே அவன் கைப்பிடித்து இழுக்க,

அவள் கையை உதறியவன், "ஏய்... ஒரு தடவ சொன்னா புரியாதா உனக்கு... அறிவில்லயா... அதான் சொல்றேனே நான் உன்ன காதலிக்கலன்னு... நீ ரொம்ப அழகா இருந்தாய்... உன் அழக நானும் கொஞ்சம் அனுபவிக்கனும்னு தோணுச்சி... அதான் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்... பல தடவ உன்ன நெருங்க ட்ரை பண்ணேன்... முடியல... அதுக்காக உன்னயெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா...

அழகான பையன் ஒன்னு.. அதுவும் சிட்டில இருந்து வந்தவன்.. பிடிச்சிருக்குன்னு சொன்னதும் உடனே பிடிச்சிக்குவீங்களே... இவ்வளவு மாடர்ன் வேர்ல்ட்ல இன்னுமே பாவாடை தாவணி கட்டி, முடிய கூட எண்ணைய பூசி இழுத்து கட்டிக்கிட்டு இன்னும் அந்தக் காலத்துலயே இருக்குற உனக்கெல்லாம் என்ன கல்யாணம் பண்ணிக்குற தகுதி இருக்கா... நான் எங்கயாவது போறன்னா கூட உன்ன கூட்டிட்டு போய் என் பக்கத்துல நிற்க வெச்சா எனக்கு தான் அசிங்கம்... உனக்கும் எனக்கும் ஏணி வெச்சா கூட எட்டாது...

சாதாரண கிராமத்துக்காரி நீ... உனக்கு சிட்டி வாழ்க்கை கேக்குதோ... உன்னயெல்லாம் அனுபவிச்சிட்டு தூக்கி போட மட்டும் தான் நல்லா இருக்கும்... கல்யாணம் பண்ணி வாழ்க்கை பூரா குப்பை கொட்ட முடியாது... உனக்கேத்த கிராமத்துப் பையனா பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து பதினஞ்சி குழந்தை பெத்து போட்டு அத வளத்துட்டு வீட்டோட இரு... அத விட்டுட்டு சிட்டி வாழ்க்கை எல்லாம் ஆசப்படாதே..." என்றான்.

பிரணவ்வின் வார்த்தைகள் சிதாராவின் மனதை சுக்குநூறாக உடைத்தது.

பின், "வரட்டா பேபி..." என அவள் கன்னத்தை கிள்ளியவன் செல்லப் பார்க்க, பிரணவ்வின் காலில் விழுந்த சிதாரா அவன் காலைக் கட்டிக் கொண்டு,

"தயவு செஞ்சி என்ன விட்டு போய்டாதீங்க... என்னால நீங்க இல்லாம வாழ முடியாது... உங்கள தவிர என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது... ப்ளீஸ்... உங்களுக்கு பிடிச்ச மாதிரி கூட என்னை நான் மாத்திக்குறேன்... என்ன விட்டு மட்டும் போக வேணாம்..." என அழுது கெஞ்ச,

"ச்சீ... போடி அந்தப்பக்கம்.." என அவளை உதறி விட்டுச் சென்றான் பிரணவ்.

************************************

தவறான நட்பினால் ஒரு அப்பாவிப் பெண்ணின் மனதை உடைத்து விட்டுச் சென்றவனுக்கு பரிசாக விதி என்ன வைத்துக் காத்திருக்கிறதோ?
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 2

அடுத்து வந்த நாட்களில் பிரணவ் சிதாரா என்ற ஒருத்தியையே மறந்து விட்டான். இருவருக்கும் இடையில் நடந்தது எதுவுமே அபினவ்விற்கும் ஆதர்ஷிற்கும் தெரியாது. சிதாரா எதுவும் சொல்லவில்லை. பிரணவ்விடம் கேட்கவும் விடவில்லை. அது பிரணவ்விற்கு இன்னும் சாதகமாக அமைந்தது. அப்படி இருந்த ஒரு சமயம் தான் விதி மீண்டும் சிதாராவை பிரணவ்வின் கண் முன் காட்டி அவனின் வாழ்வையே தலைகீழாக புரட்டிப்போட்டது.

பிரணவ் தன் தொழிலில் சுயமாக முன்னேறி நல்ல நிலையில் இருந்தான். ஒருநாள் அவனின் நண்பனான அபினவ் பிரணவ்விற்கு அழைத்து மறுநாள் ஊட்டிக்கு ஏதோ சுற்றுலா செல்ல அழைத்திருந்தான். உற்ற தோழனின் பேச்சை மறுக்க முடியாது சம்மதித்தான் பிரணவ்.

மறுநாள் பிரணவ் அபினவ்வின் ஊருக்குக் கிளம்பத் தயாராக இருக்கும் போது அவனிடமிருந்து மீண்டும் ஒரு அழைப்பு வந்தது. அபினவ், "மச்சான் ஏர்போட்ல ஒருத்தங்க வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க.. நீ வரும் போது அவங்கள பிக்கப் பண்ணி இங்க கூட்டிட்டு வரியா" என்க, "சரி நீ நேம் என்ட் எப்படி இருப்பாங்கன்னு சொல்லு" எனக்‌ கேட்டவனுக்கு அபினவ் பதில் சொல்லப்போக, அதற்குள் அவனை யாரோ அழைக்கவும், "மச்சான் நீ போய் கால் ஒன்னு தா.. அவங்களே வருவாங்க.. சரிடா இங்க சின்ன வேலையொன்னு.. பாய்..." என அழைப்பைத் துண்டித்து விட்டான்.

பிரணவ்வின் கத்தல் எதுவும் அபினவ்வின்‌ செவியை அடையவில்லை. "ப்ச்.. இவன் வேற யாருன்னு டீட்டைல்ஸ் சொல்லாம கட் பண்ணிட்டான்.. எல்லாம் முடிஞ்சி கடைசில என்ன ட்ரைவர் வேலையையும் பார்க்க வெச்சிட்டான்.. எல்லாம் என்‌ தலையெழுத்து.." எனக் கூறிவிட்டு காரை‌ உயிர்ப்பித்தான்‌ பிரணவ்.

ஏர்போட்டை அடைந்தவன் அபினவ்வுக்கு அழைத்து, "நான் வந்துட்டேன்..எங்க இருக்காங்கடா" என்க, "உன்னோட கார் நம்பர் குடுத்து இருக்கேன்டா.. வெய்ட் பண்ணு வருவாங்க.." என்றான் அபினவ். பின் காரிலிருந்து இறங்கி மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் தன் முன் நிழலாட மொபைலிலிருந்து பார்வையை அகற்றியவன் தன் முன்னே யாரென்றே அடையாளம் தெரியாதவாறு லக்கேஜ்ஜுடன் விரித்து விட்ட கூந்தல், கண்ணில் சன் கிளாஸ் அணிந்து மாஸ்க் போட்டு கறுப்பு ஷேர்ட், ஜீன்ஸ் அணிந்து கையில் ஓவர்கோட், ஹேன்ட்பேக் சகிதம் நின்றிருந்தவளை கேள்வியாய் நோக்கினான். பின் நினைவு வந்தவனாக "நீங்க தான் அபினவ் சொன்னவங்களா... வாங்க கிளம்பலாம்.. உங்க லக்கேஜ குடுங்க.. நான் எடுத்து வெக்கிறேன்.." என்றவன் அந்தப் பெண்ணிடமிருந்து லக்கேஜை வாங்கி காரில் ஏற்ற, அவள் ஏறியதும் கார் புறப்பட்டது.

சிறிது நேரத்தில் அப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு வர, அவள் அதனை ஏற்றுப் பேசவும் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்தவனின் நெற்றியில் யோசனை முடிச்சுகள்.

பிரணவ் மனதில், 'இந்த வாய்ஸ் நம்ம ரொம்ப கேட்டு பழக்கப்பட்ட வாய்ஸா இருக்கே...யாரா‌ இருக்கும்...' என யோசித்த வண்ணம் ஃப்ரொன்ட் மிரர் வழியாக அப் பெண்ணைப் பார்த்தான். மாஸ்க் போட்டு இருந்ததால் அவனால் அடையாளம் காண இயலவில்லை.

"ப்ச், யாரா இருந்தா நமக்கென்ன" என மீண்டும் பாதையில் கவனம் செலுத்தினான். அப் பெண்ணோ அழைப்பில் மூழ்கி இருந்தாள்.

அந் நேரம் அபினவ் மீண்டும் பிரணவ்வை தொடர்பு கொண்டான். எடுத்ததும், "மச்சான் ஆல் ஓக்கே தானே... எதுவும் பிரச்சினை இல்லல்ல... எங்க இருக்கீங்க..." என அபினவ் பதற்றமாக கேக்க, பிரணவ் "எதுக்கு மச்சான் இவ்ளோ டென்ஷனா இருக்காய்.. பக்கத்துல வந்துட்டோம்... ஆல் ஓக்கே.. என்ன பிரச்சினை வர போகுது... நீ கூட்டிட்டு வர சொன்னவங்க முகத்த கூட நான் பார்க்கல இன்னும்..." என்க, அந்தப்பக்கம் அபிணவ் பெருமூச்சு விடுவது நன்றாகவே கேட்டது.

பின் அபினவ், "சரி மச்சான். நீ சீக்கிரமா வந்து சேரு... நாம அப்புறமா பேசலாம்..." என பிரணவ் மேலும் கேள்விகளை அடுக்கு முன் அவசரமாக அழைப்பை துண்டித்தான்.

பிரணவோ, "என்னாச்சு இவனுக்கு..‌எதயுமே முழுசா சொல்லுறான்‌ இல்ல.." என சலிப்பாக கூறிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் கார் கிராமத்தை‌ அடைந்தது. உடனே வண்டியிலிருந்து இறங்கியவள் லக்கேஜ்ஜை கூட எடுக்காமல் அவனிடம் எதுவும் சொல்லாமல் நேராக வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் செல்வதைக் கண்ட‌ பிரணவ், "அவ்வளவு தூரம் ஓசில இந்தப் பொண்ணுக்கு ட்ரைவர் வேலை பாத்திருக்கேன்... ஒரு தேங்ஸ் கூட சொல்லாம போறத்த பாரு... இதுக்கெல்லாம் அந்த அபினவ்வ சொல்லனும்..." என எப்போதும் போல் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

அக்ஷராவும் லாவண்யாவும் வண்டியிலிருந்த பெண்ணின் லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டிருக்க, மொபைலில் அழைப்பொன்றில் இருந்த பிரணவ் பேசி முடித்து விட்டு அவர்களிடம் வந்தான்.

பிரணவ், "யாரு வனிம்மா அந்த பொண்ணு... உங்க ப்ரெண்டா... சரியான திமிரு பிடிச்சவளா இருப்பா போல...‌ ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம அவ பாட்டுக்கு போறா..." என்கவும் அக்ஷராவும் லாவண்யாவும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

எங்கே அவனுக்கு அடையாளம் தெரிய. அவள் தான் முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்டு இருந்தாளே.

"என்னண்ணா இப்படி‌ கேக்குறீங்க... நெஜமாலுமே அவள உங்களுக்கு அடையாளம் தெரியலயா..." என‌ அக்ஷரா கேட்க, அவளுக்கு இல்லை என்பதாய் இட வலமாக தலையசைத்தான்.

லாவண்யா, "என்ன எங்க கூட விளையாடுறீங்களாண்ணா... உங்களுக்கு அவள பிடிக்காதுங்குறதுக்காக நீங்க சித்துவ பத்தி இப்படியெல்லாம் பேச‌ வேணாம் அண்ணா..." என்று‌ விட்டு வேகமாக அங்கிருந்து அகன்றனர்.

அவர்கள்‌ கோவமாக சென்றது எதுவும் பிரணவ்வின்‌ கருத்தில் பதியவில்லை.

அவன் தான் 'சித்து' என்ற பெயரிலே விழி விரித்து சிலையாகி நின்றானே. அதிர்ச்சியில் விழி விரித்து நின்றவனை கலைத்தது ஆதர்ஷின் அழைப்பு.

"இங்க என்னடா பண்ற தனியா... வா உள்ள போலாம்..." என ஆதர்ஷ் கூறவும்,

"மச்சான்... நான் தாரா கூட பேசனும்டா... ப்ளீஸ்டா..." என்ற பிரணவ்வின் பதிலில் அவனை ஆழ நோக்கினான் ஆதர்ஷ்.

அதற்குள் அபினவ்வும் அங்கு வந்து சேர்ந்தான்.

பின் நிதானமாக குரலில் கடுமையை தேக்கி வைத்து, "இங்க பாரு பிரணவ்... நான் உனக்கு இது முதலும் கடைசியுமா சொல்றேன்... உனக்கும் சித்துவுக்குமான உறவு எப்பவோ முடிஞ்சி போச்சி... இல்ல இல்ல... நீ தான் முடிச்சி வெச்சாய்.... உன்னால அவ ரொம்ப கஷ்டப்பட்டுடா... அகைன் உன்னால அவ கஷ்டப்படுறத நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்... நீ எனக்கு ஃப்ரெண்டா இருக்கலாம்... இதுக்கு முன்னாடி நீ பண்ண தப்புக்கு எதுவும் சொல்லலன்னு நீ பண்ற எல்லா விஷயத்துக்கும் நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு எதிர்ப்பாக்காதே... இப்ப இருக்கிறது உன்னோட தாரா இல்ல... ஜஸ்ட் சிதாரா... எங்க எல்லாருக்கும் சித்து... அவ்ளோ தான்... உன்னால அவளுக்கு மட்டும் ஏதாச்சும் பிரச்சினை வந்தால் நீ இந்த ஆதர்ஷ ஃப்ரெண்டா மட்டும் தானே பாத்திருக்காய்... அதுக்கப்புறம் சித்துக்கு அண்ணனா பார்ப்பாய்..." என்று விட்டு உள்ளே சென்று விட்டான் ஆதர்ஷ்.

அபினவ்வோ, "ஆதர்ஷ் சொல்லிட்டு போறதெல்லாம் நீ மைன்ட் பண்ணிக்காத மச்சான்... அவன் சித்து மேல உள்ள பாசத்துல பேசிட்டு போறான்.. கோவம் கொறஞ்சதும் அவனாவே வந்து பேசுவான்.. வா நாம உள்ள போலாம்..." என பிரணவ்வை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

மறுநாள் அதிகாலையிலே செல்ல இருப்பதால் அன்று இரவு யாருமே உறங்கவில்லை.

எனவே அனைவரும் வெளியே தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரு பக்கம் பெண்களும் மறுபக்கம் ஆண்களும் என இருக்க பிரணவ்வின் பார்வை முழுவதும் சிதாராவிடமே இருந்தது.

இதனைக் கவனித்த அபினவ் பிரணவ்வை நெருங்கி அவன் காதில் மெதுவாக, "டேய்... எனக்கென்னவோ நீ இன்னிக்கி ஆதர்ஷ் கிட்ட அடி வாங்காம இருக்க மாட்டாய் போல..." என்றான்.

அவன் கூறியது பிரணவ்வின் செவிகளை எட்டினால் தானே. அபினவ்வால் தலையில் அடித்துக்கொள்ள மட்டும் தான் முடிந்தது.

சற்று நேரத்தில் அங்கு இருக்க முடியாமல் சிதாரா எழுந்து வீட்டிற்குள் செல்ல நினைக்க, வீட்டினுள் நுழையச் செல்லும் நேரம் சரியாக அவளை மோதுவது போல் வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு கார்.

கார் அவளை நோக்கி மோதுவது போல் வரவும் தோட்டத்திலிருந்த அனைவரும் பயந்து அவளின் திசை பார்க்க பிரணவ்வோ, "தாரா... கார்..." எனக் கத்தினான்.

கார் தன்னை நோக்கி வந்ததும் சிதாராவின் இதயமே ஒரு நிமிடம் நின்றது. அதனால் பிரணவ் அவளை அழைத்ததை அவள் கவனிக்கவில்லை. அது நிறுத்தப்பட்டதும் தான் போன உயிர் திரும்ப வந்தது.

பிரணவ்வும் அங்கிருந்து சிதாராவை அவதானித்துக் கொண்டிருந்தான். முதலில் கோபமாக அக் காரை நோக்கி சென்றவள் அக் காரிலிருந்து இறங்கியவனைக் கண்டதும் அதிர்ந்து பின் அவனை அணைத்துக் கொள்ளவும் பிரணவ்விற்கு உள்ளே பற்றி எரிந்தது.

பின் அக்ஷராவும் லாவண்யாவும் அவ்விடம் சென்று அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு நண்பர்களை நோக்கி வந்தனர்.

சிதாரா அனைவருக்கு வந்த அந்த ஆடவனை அறிமுகப்படுத்தி வைத்தாள். அவன் ஆர்யான். நியுயார்க்கில் சிதாராவின் சீனிய் மற்றும் அவளின் உயிர்த்தோழன் கூட.

பின் அபினவ் மற்றும் ஆதர்ஷை அறிமுகப்படுத்தச் செல்லவும் அவளைத் தடுத்தவன், "வெய்ட் வெய்ட் மினி... நானே சொல்றேன்..." என்க, அவனுக்கு சம்மதமாய் தலையாட்டினாள்.

ஆர்யான் ஆதர்ஷ் மற்றும் அபினவ்வை நோக்கி, "இவங்க ஆதர்ஷ் அப்புறம் அபினவ்... மினியோட சீனியர்ஸ்... எல்லாத்துக்கும் மேல அவளோட ஸ்வீட் ப்ரதர்ஸ்... மினிக்கு என்ன பிரச்சினைனாலும் முன்னாடி வந்து சப்போர்ட் பண்ணுவாங்க..." என்க இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

"ஐம் ஆர்யான்... நைஸ் டு மீட் யூ காய்ஸ்..." என அவர்களை அணைத்து விடுவித்தான்.

பின்‌ பிரணவ்விடம் திரும்பியவன், "இவரு..." என‌ சற்று நேரம் யோசிக்க, "இது பிரணவ் அண்ணா... அபி என்ட் தர்ஷ் அண்ணாவோட ஃப்ரெண்ட்..." என அக்ஷரா அவசரமாக பதிலளித்தாள்.

"ஓஹ்... சாரி டியுட்... மினி இவங்கள பத்தி தன்னோட லைஃப்ல ரொம்ப முக்கியமான பர்சன்ஸ்னு சொல்லிருக்கா... அதனால தான் அவங்கள முன்னாடியே தெரியும்.." என ஆர்யான் பிரணவ்விடம் மன்னிப்பு வேண்டும் விதமாக கூற, சிதாராவின் உதடுகள் தானாகவே, "அடப்பாவி... என்னமா நடிக்கிறான்..." என முனுமுனுத்தன.

ஆதர்ஷ் மற்றும் அபினவ் இருவருக்குமே தர்மசங்கடமான ஒரு நிலை உருவாகியது.

பிரணவ்வுக்கோ உள்ளே புகைந்தது. மனதிற்குள்ளேயே, "நான்‌ அவளுக்கு வேண்டாதவனா... என்ன பத்தி எதுவுமே இவன் கிட்ட சொல்லலயா இவ..." என அவர்களை வறுத்தெடுத்தான்.

சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு ஆதர்ஷ் அபினவ் உட்பட அனைவருமே தத்தம் வேலையை கவனிக்க உள்ளே சென்று விட பிரணவ் மட்டும் அங்கு தனித்து விடப்பட்டான்.

அவனோ, "யார் இந்த புதுசா வந்து சேர்ந்து இருக்கிறவன்... வார்த்தைக்கு வார்த்தை என்னோட மினி என்னோட‌ மினினு வேற சொல்றான்... இத இப்படியே விடக்கூடாது... ஏதாச்சும் பண்ணனும்..." என யோசனையிலிருந்தான்.

மறுநாள் சுற்றுலா ஆரம்பிக்க, ஆர்யான் எப்போதும் சிதாராவுடனே சுற்றிக் கொண்டிருக்கவும் பிரணவ்விற்கு ஆத்திரமாக வந்தது.

எப்படியாவது சிதாராவுடன் தனியாக பேச வேண்டும் என பிரணவ் காத்திருக்க, ஆர்யானோ அதற்கு வாய்ப்பளிக்காது அவளுடனே சுற்றவும் எரிச்சலடைந்த பிரணவ் சிதாரா தனியாக மாட்டியதும் அவள் கரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஆள் அரவமற்ற ஒரு இடத்துக்கு வந்தான்.

அவன் விட்டதும் அவன் அழுத்திப் பிடித்த இடம் சிவந்திருக்க வலியில் கையைப் பிடித்துக் கொண்டு சிதாரா, "ஹவ் டேர் யூ... யாரு உங்களுக்கு என் கைய பிடிச்சு இழுத்துட்டு வர இவ்வளோ ரைட்ஸ குடுத்தது..." என ஆவேசமாகக் கேட்டு விட்டு அங்கிருந்து செல்லப் பார்க்க,

மீண்டும் அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன் விடாமலே, "ஏன் நான் பிடிச்சா மட்டும் உனக்கு வெறுப்பா இருக்கா தாரா... நான் பிடிக்காம உன் கூட வந்தானே ஒருத்தன் எப்பப்பாரு உன்னையே ஒட்டிக்கிட்டு... அவன் பிடிச்சா மட்டும் சுகமா இருக்...." என அவன் முடிக்கும் முன்னே அவன் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது சிதாராவின் கைகள்.

சிதாரா, "அவன பத்தி என்ன தெரியும்னு இவ்வளோ அசிங்கமா பேசுறாய்... அது சரி.. உன் புத்தியே இதானே.. அது எப்படி மாறும்..." என்க,

"ச...சாரி தாரா... அது உன் மேல உள்ள லவ்வுல பேசிட்டேன்... அவன் யாரு என் தாராவ தொட்டு பேசன்னு ஒரு பொசசிவ்னஸ்ல பேசிட்டேன்... ஐம் சாரி தாரா..." என பிரணவ் அவளிடம் கெஞ்ச,

அவன் கூறியதைக் கேட்டு கத்தி சிரித்தாள் சிதாரா.

பின், "உனக்கு என் மேல லவ்வு... இதுல பொசசிவ்னஸ் வேறயாம்... ச்சீ... இப்படி சொல்லவே உனக்கு அசிங்கமா இல்ல... உன்ன பாத்தாவே வெறுப்பா இருக்கு..." என்றாள்.

அவள் தோள்களைப் பற்றிக் கொண்ட பிரணவ், "நீ பொய் சொல்லுற தாரா... எனக்கு தெரியும் நீ எனக்காக தான் இவ்வளவு மாறி‌ இருக்கன்னு... உனக்கு என் மேல இன்னும் லவ் இருக்கு.." என்க,

அவன் கரங்களைத் தட்டி விட்டவள் ஆவேசமாக, "இல்ல... இல்ல... இல்ல... நான் உன்ன வெறுக்குறேன்... அடியோட வெறுக்குறேன்... உன்ன எந்தளவு காதலிச்சேனோ அத விட பல மடங்கு உன்ன நான் வெறுக்குறேன்... உன் பார்வை என் மேல படுறதயே நான் அசிங்கமா நெனக்கிறேன்..." என கத்தினாள்.

அவ்வளவு நாளும் கட்டுப்படுத்தி வைத்த கண்ணீர் அவளையும் மீறி வெளிப்பட்டது.

அவள் சத்தம் கேட்டு அனைவரும் அவ்விடம் வரப்பார்க்க அவர்களை தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறி அனுப்பிய அபினவ்வும் ஆதர்ஷும் அங்கு வந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து லாவண்யா, அக்ஷரா மற்றும் ஆர்யான் வந்தனர்.

ஆர்யான் அங்கு வந்ததுமே அவசரமாக சிதாராவிடம் சென்று, "மினி கூல்.. அமைதியா இரு... எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்..." என அவளை சமாதானப்படுத்தப் பார்க்கவும் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளிய பிரணவ்,

"நீ யார்டா எங்களுக்குள்ள வர... அவ என் தாரா... அவ என்ன பத்தி என்ன வேணாலும் பேசுவா... உனக்கென்னடா வந்தது..." என்றான்.

அக்ஷராவும் லாவண்யாவும் சிதாராவின் அழுகையை நிறுத்தப் போராட மேலும் மேலும் அவள் அழுகை அதிகமானது.

அவன் தன்னை தள்ளி விட்டதைக் கூட பொருட்படுத்தாத ஆர்யான், "ப்ளீஸ் பிரணவ்.. நீங்க என் கூட எப்ப வேணாலும் சண்ட போடுங்க... ப்ளீஸ்... இப்போ மினிய எதுவும் கேக்க வேணாம்..." எனக் கெஞ்ச,

"இவ்வளவு சொல்றேன் திரும்ப திரும்ப மினி மினின்னுட்டு வராய்... அவ என் தாரா... எனக்கும் அவளுக்கும் இடைல ஆயிரம் இருக்கும்... நீ யார்டா அதை பத்தி பேச..." என பிரணவ் மீண்டும் ஆர்யானை அடிக்கப் பாய,

ஆதர்ஷும் அபினவ்வும் அவனைத் தடுக்க முன் வர அதற்குள் சிதாரா, "நிறுத்துங்க..." எனக் கத்தியதும் பிரணவ் அப்படியே நின்றான்.

பின் பிரணவ்வை நோக்கி சிதாரா வர, ஆர்யான், "மினி... வேணாம் ப்ளீஸ்டா..." என்க, அவன் முன் கை நீட்டி தடுத்தவள் தன் கண்களைத் துடைத்து கொண்டு பிரணவ்விடம் திரும்பி,

"சொல்லு... நீ யாரு எனக்கு... வார்த்தைக்கு வார்த்தை என் தாரா என் தாரானு சொல்லுறாய்... எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்..." என்க,

பிரணவ், "தாரா நீ ஏன் இப்படி எல்லாம் பேசுறாய்... நான் உன்னோட பிரணவ்... நானும் நீயும் ரெண்டு வருஷமா காதலிச்சோம்... " என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு கை தட்டி சிரித்த சிதாரா, "ஓஹ்... காதலிச்சது உண்மை தான்... பட் நான் மட்டும் தான் காதலிச்சேன்... நீ... ச்சீ.. சொல்லவே அசிங்கமா இருக்கு..." என்க,

"ஓக்கே தாரா... எல்லாம் விடு... இந்த நிமிஷம் நான் உன்ன லவ் பண்றேன்... எனக்கு தெரியும் நீயும் என்ன இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்காய்..." என பிரணவ் கூற,

சிதாரா, "நான் எப்படி பிரணவ் நீ சொல்றத நம்புவேன்... எவ்வளவு சீப்பான ரீசன் சொல்லிட்டு விட்டுப் போனாய்..." என அவள் சொல்லி முடிக்கும் முன்னே கண்ணீர் அவள் கன்னத்தைத் தாண்டி ஓடியது.

ஆர்யான், "போதும் மினி... இதுக்கு மேல எதுவும் சொல்லாதே... ப்ளீஸ்..." என்றவனைத் தடுத்தவள்,

"இல்லடா... நான் இன்னெக்கி பேசியே ஆகணும்... எவ்வளவு நாளைக்கு தான் என் மனசுலயே எல்லாம் வெச்சிட்டு இருப்பேன்... இதுக்கு ஒரு முடிவு வேணாம்..." என்ற சிதாரா அழுதவாறே பேசினாள்.

"உன் கிட்ட அன்னெக்கி எவ்வளவு கெஞ்சினேன்... என்ன விட்டுப் போகாதேன்னு... உன் கால்ல கூட விழுந்தேன்..." என உடைந்த குரலில் கூறியவள் திடீரென பிரணவ்வின் சட்டையைப் பிடித்து,

"ஆனா நீ... என்ன வார்த்தையெல்லாம் சொன்னாய்.. இப்ப கூட அதப் பத்தி நெனச்சா..." என சொல்லும் போதே அவளுக்கு மூச்சு வாங்க அனைவரும் அவர்களின் பின்னே நின்றதால் அவர்களுக்கு அவள் முகம் தெரியவில்லை.

பிரணவ் மாத்திரம் அவள் வேகமாக மூச்சு வாங்குவதைக் கண்டவன், "தாரா..." என ஏதோ சொல்ல வர அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தவள், "ச்சீ... இனி என்ன அப்படி கூப்பிடாதே... உனக்கு அந்த தகுதி கூட இல்ல... உன் வாய்ல இருந்து என் பேரு வரதே அசிங்கமா நெனக்கிறேன்.. " என்றவள்,

பின் அவன் முன் விரல் நீட்டி, "திரும்ப என் லைஃப்ல என்டர் ஆகனும்னு நெனச்ச... அசிங்கமாகிரும்... திஸ் இஸ் மை லாஸ்ட் வார்னிங்..." என்றாள்.

சிதாராவின் பேச்சிலே பிரணவ் தன் தவறு உணர்ந்திருந்தான்.

எதுவுமே கூறாது அவளைத் தடுக்க வழியற்று கண்களில் சோகத்தைத் தேக்கி கல்லாக சமைந்திருந்தான்.

சிதாரா நேராக ஆர்யானிடம் சென்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

அங்கிருந்த யாரும் எதுவுமே பேசவில்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 3

திடீரென ஆர்யான், "மினி..." எனக் கத்தவும் அவன் கத்தலில் திரும்பியவர்கள் சிதாராவின் நிலையைக் கண்டு அதிர்ந்து அவசரமாக அவளிடம் ஓடினர்.

பிரணவ், "தாரா..." என அவளிடம் செல்லப் பார்க்க, அவன் கையை யாரோ பிடித்து வைத்திருப்பதை உணர்ந்தவன் யாரெனப் பார்க்க, ஆதர்ஷ் தான் அவனை செல்ல விடாமல் பிடித்திருந்தான்.

ஆதர்ஷ், "நீ பண்ணது எல்லாம் போதும்... தயவு செஞ்சி இங்கயே இரு..." என கோபமாகக் கூறியவன் சிதாராவிடம் விரைந்தான்.

பிரணவ் எதுவும் செய்ய முடியாமல் அங்கு நின்றே கவலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிதாரா வலிப்பு வந்து துடிக்க ஆர்யான் அவசரமாக அருகிலிருந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்து அவள் உள்ளங்கையில் வைத்து மடித்து அழுத்தினான்.

மெதுவாக அவளது வலிப்பு நிற்க சிதாராவை கரங்களில் ஏந்திய ஆர்யான் யாரிடம் எதுவும் கூறாது ஓடிச் சென்று டாக்சி பிடிக்க அக்ஷராவும் லாவண்யாவும் அவனுடன் சென்றனர்.

ஏனையோரிடம் தகவலைக் கூறி அவர்களை ரெட் ஹவுஸ் செல்லக் கூறிய அபினவ் இன்னொரு டாக்சி பிடித்து ஆதர்ஷ், பிரணவ்வுடன் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

ஹாஸ்பிடலில் அனைவரும் டாக்டர் சிதாராவைப் பரிசோதித்து விட்டு வரும் வரை தவிப்புடன் இருக்க,

பிரணவ் அங்கு ஒரு ஓரமாக கை கட்டி நிற்பதைப் பார்த்த ஆர்யான் பிரணவ்விடம் சென்று அவன் சட்டையைப் பிடித்து,

"எதுக்குடா இன்னும் இங்க நின்னுட்டு இருக்காய்... இன்னும் என்ன வேணும் உனக்கு... அவ்வளவு படிச்சி படிச்சி சொன்னேன் தானே இப்போ எதையும் பேச வேணாம் நிறுத்து நிறுத்துன்னு... கேட்டியாடா... இப்ப பாரு மினி எந்த நிலைல இருக்கான்னு... இதுக்கெல்லாம் நீ மட்டும் தான்டா காரணம்... உன்ன..." என கோபத்தில் கத்தி விட்டு பிரணவ்வை அடிக்கக் கை ஓங்க,

அபினவ் அவனைத் தடுக்க முயற்சிக்க, சிதாராவைப் பரிசோதித்து விட்டு வெளியே வந்த டாக்டர் அவர்களைக் கண்டு,

"நிறுத்துங்க... இங்க என்ன நடக்குது... இது என்ன ரௌடிசம் பண்ணுற இடம்னு நெனச்சீங்களா... பேஷன்ட்ஸ் இருக்குற இடம்... திரும்ப இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்திங்கனா நான் போலிஸ கூப்பிட்டுருவேன்... மைன்ட் இட்..." என அவர்களைத் திட்ட,

பிரணவ்வை விட்டு டாக்டரிடம் ஓடி வந்த ஆர்யான், "சாரி.. சாரி டாக்டர்... மினி இப்போ எப்படி இருக்கா... நல்லா இருக்கால்ல... " என பதட்டமாய்க் கேட்டான்.

டாக்டர், "ப்ளீஸ் பீ காம் சார்... அவங்க இப்போ நல்லா தான் இருக்காங்க... டோன்ட் வொரி... அவங்களுக்கு இதுக்கு முன்னாடி ஃபிட்ஸ் வந்து இருக்கா..." என்க,

லாவண்யா இல்லை என சொல்ல வர,

"ஆமா டாக்டர்... இது தேர்ட் டைம்..." என ஆர்யானிடமிருந்து பதில் வர அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

டாக்டர், "ஆஹ் ஓக்கே... ஏதோ ஒரு விஷயம் அவங்க மனச ரொம்ப பாதிச்சிருக்கு... அத ஞாபகப்படுத்துற விதமா ஏதாச்சும் நடந்தா தான் இப்படி ஃபிட்ஸ் வருது இவங்களுக்கு... ஐ திங்க் இன்னெக்கி ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்து இருக்காங்க... அதனால தான் இன்னும் கான்ஷியஸ் வரல... நாங்க ட்ரீட்மன்ட் பண்ணி இருக்கோம்... சோ ஒரு டூ த்ரீ ஹவர்ஸ்ல கண்ணு முழிச்சிருவாங்க... அவங்கள வார்டுக்கு சேன்ஜ் பண்ணுறோம்... அதுக்கப்புறம் நீங்க போய் பார்க்கலாம்..." என்க,

ஆர்யான், "தேங்க் யூ டாக்டர்.." என்றதும் அவர் சென்றார்.

பின் ஆர்யான் இதற்கு முன்பு சிதாராவிற்கு வலிப்பு வந்தது பற்றியும் தாம் எவ்வாறு நண்பர்கள் ஆனோம் என்பது பற்றியும் கூறவும் அனைவரும் அதிர்ந்தனர். நர்ஸ் வந்து டாக்டர் அழைப்பதாகக் கூறவும் ஆர்யானும் ஆதர்ஷும் அவரை சந்திக்கச் செல்ல, அவரோ மீண்டும் சிதாராவிற்கு இவ்வாறு வலிப்பு ஏற்பட்டால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் எனக் கூறவும் இருவருமே அதிர்ந்தனர்.

அவரிடம் நன்றி கூறி விட்டு இருவரும் சிதாரா இருந்த வார்டுக்கு வந்தனர்.

அக்ஷரா, "டாக்டர் என்ன சொன்னாங்க அண்ணா..." என ஆர்யானிடம் கேட்க, அவன் ஏதோ யோசனையில் இருக்க,

ஆதர்ஷ் டாக்டர் கூறிய அனைத்தையும் அவர்களிடம் கூறியவன் வந்த ஆத்திரத்தில் பிரணவ்விடம் சென்று அவன் கன்னங்களில் மாறி மாறி அடித்தான்.

பிரணவ்வோ குற்றவுணர்ச்சியில் இருந்ததால் ஆதர்ஷ் அடித்தது எதுவும் உறைக்கவில்லை.

ஆதர்ஷ், "மனுஷனாடா நீ... ச்சீ... உன்ன எல்லாம் ஃப்ரண்ட்டுன்னு சொல்லவே அசிங்கமா இருக்குடா..." என்றவன் மீண்டும் அவனை அடிக்க லாவண்யா வந்து தடுத்தாள்.

பின் பிரணவ்வை பார்த்து லாவண்யா, "உங்களுக்கும் சித்துக்கும் இடைல ஏதோ மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்... அதனால தான் பிரிஞ்சிட்டீங்கன்னு நெனச்சேன் அண்ணா... பட் எங்க சித்துவ நீங்க இப்படியெல்லாம் பேசி இருப்பீங்கன்னு சத்தியமா எதிர்ப்பார்க்கல அண்ணா... அந்த பைத்தியக்காரி உங்கள எவ்வளவு காதலிச்சிருக்கான்னா எங்க கிட்ட ஒரு வார்த்தை உங்கள பத்தி தப்பா சொல்லல அவ... " என்கவும் பிரணவ்விற்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.

நர்ஸ் வந்து, "இவ்வளவு பேர் இருந்தா பேஷன்ட்டுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்... யாராவது ஒருத்தர் மட்டும் கூட இருங்க..." என்க,

ஆர்யான் சிதாராவுடன் இருக்க மற்ற அனைவரும் வெளியேறினர்.

சற்று நேரத்தில் சிதாரா கண் விழித்து ஆர்யானுடன் பேசிக்கொண்டு இருக்க, அபினவ், பிரணவ் தவிர அனைவருமே சிதாராவைக் காண உள்ளே வந்தனர்.

ஆதர்ஷ் தான் அவனை உள்ளே வர வேண்டாம் எனக் கூறியிருந்தான்.

பிரணவ் ஏற்கனவே குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருப்பதால் அவனுடன் அபினவ்வும் நின்றான்.

அபினவ் பிரணவ்விடம், "நீ பண்ணது தப்பு தான் மச்சான்... இல்லன்னு சொல்லல... அதுக்காக நான் இங்க நின்னுட்டு இருக்குறதுக்கு அர்த்தம் நீ பண்ண தப்புக்கு சப்போர்ட்டா இருக்குறேன்னு இல்ல... என்னோட ஃப்ரெண்ட் தான் பண்ண தப்ப உணர்ந்திருப்பான்னு ஒரு நம்பிக்கை... இந்த நேரத்துல உன்ன தனியா விட எனக்கு மனசு வரலடா..." என்க,

"தேங்க்ஸ் டா..." என அவனை அணைத்துக் கொண்ட பிரணவ்,

"நீயும் உள்ள போடா... உனக்கும் அவ மேல நிறைய அக்கறை இருக்குன்னு எனக்கு தெரியும்... எப்படியும் உள்ள இருக்குற யாரும் தாராவ பத்தி என் கிட்ட சொல்ல மாட்டாங்க... நீ போய் பாத்துட்டு வந்து அவள் எப்படி இருக்கான்னு சொல்லு..." என்றான்.

அபினவ், "நீயும் உள்ள வா மச்சான்... " என்க,

"வேணாம்டா... தாரா என்ன பாத்தா இப்ப ரொம்ப டென்ஷன் ஆகுவா... என்னாலயும் அவ முகத்த நேரா பார்க்க சக்தி இல்ல..." என பிரணவ் கூற,

வேறு எதுவும் கூறாமல் சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்தான் அபினவ்.

பின் சிதாராவை டிஸ்சார்ஜ் செய்து அவர்கள் தங்கியிருந்த ரெட் ஹவுஸ் அழைத்துச் சென்றனர்.

அடுத்த இரண்டு நாளில் டூர் முடிய அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.

அந்த இரண்டு நாளுமே ஆர்யான், லாவண்யா, அக்ஷரா மூவரும் சிதாராவை விட்டு எங்கும் அசையவில்லை.

எப்போதும் அவளுடன் ஏதாவது பேசிக்கொண்டு அவள் யோசனை வேறு எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

பூஞ்சோலை கிராமத்தை அடையும் போது இரவாகி இருந்தது.

எனவே அனைவரும் அன்று அங்கே தங்கி விட்டு அடுத்த நாள் வீடுகளுக்கு செல்ல முடிவெடுத்தனர்.

மறுநாள் காலையில் அனைவரும் கிளம்பிய பின் ஆதர்ஷ், பிரணவ், அபினவ் மூவரும் கிளம்பத் தயாராகினர்.

ஆர்யான் தோழிகள் மூவருடன் ஹாலில் இருக்க மற்ற மூன்று‌ ஆண்களும் மேலே அறையில் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

பிரணவ், "டேய் ஆதர்ஷ்... ப்ளீஸ்டா... ஒரே ஒரு தடவ நான் தாரா கூட பேசனும்டா... திரும்ப அவள ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பேச மாட்டேன்... ப்ராமிஸ்டா... " என்க,

ஆதர்ஷோ அபினவ்வைப் பார்த்து, "இவனுக்கு பேசாம இருக்க சொல்லு அபிணவ்... இது வரைக்கும் இவன் செஞ்சி வெச்சிருக்குறதையே சரி பண்ண முடியாம இருக்கோம்... ஒழுங்கா ஊருக்கு கிளம்புற வேலைய பார்க்க சொல்லு..." என்க,

பிரணவ், "மச்சான் ப்ளீஸ்டா... ஊருக்கு போக முன்னாடி கடைசியா ஒரே ஒரு தடவ தாரா கூட பேசிட்டு வரேன்டா..." என்றான்.

அதற்கும் ஆதர்ஷ் அபினவ்வைப் பார்த்து ஏதோ சொல்ல வர,

இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழித்த அபினவ்,

"அட ச்சீ நிறுத்துங்க... ஆதர்ஷ்... உனக்கு தான் அவன் மேல இருந்த கோவம் கொறஞ்சிடுச்சுல்ல... பின்ன நேரா பார்த்து பேசிக்கிட்டா என்னவாம்... நடுவுல என்ன வெச்சி காமெடி பண்றீங்களா... டேய்.. அதான் பிரணவ் அவன் பண்ண தப்ப உணர்ந்துட்டானே... கடைசியா ஒரு தடவ சித்து கூட பேசுறேன்னு சொல்றான்.. சரின்னு சொல்லேன்டா..." என ஆதர்ஷைப் பார்த்து கூறியவன்,

பின் பிரணவ்விடம், "இங்க பாருடா... திரும்ப ஏதாவது ஏடாகூடமா பேசினன்னு வையேன்... அப்புறம் நானே உன்ன சும்மா விட மாட்டேன்..." என்றான்.

சற்று சமாதானமான ஆதர்ஷ், "சரி... பட் அவன் எங்க எல்லாரு முன்னாடியும் தான் சித்து கூட பேசணும்..." என்கவும் பிரணவ் சற்று யோசித்து விட்டு சரி என்றான்.

தமது பையுடன் மூவரும் கிளம்பி ஹாலுக்கு வர ஆர்யான் ஏதோ சீரியசாக கூறிக் கொண்டிருக்க, மூவரும் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

பிரணவ் மெதுவாக அவர்களிடம் சென்று தொண்டையை செறும நால்வரும் அவனை ஏறிட்டனர்.

பிரணவ் தயங்கியபடி சிதாராவைப் பார்த்து 'தாரா' எனக்கூற வர சிதாராவின் பார்வையில் அவசரமாக,

"சிதாரா.. நான் உன் கூட கொஞ்சம் பேசணும்.." என்க,

ஆர்யான் கோவமாக எழுந்து ஏதோ கூற வர அவனைத் தடுத்த சிதாரா,

"சொல்லுங்க பிரணவ்..." என சிறிதும் மாற்றமின்றி தெளிவான குரலில் கூறினாள்.

அவளின் தெளிவான பேச்சில் அங்கிருந்த அனைவருமே வியக்க ஆர்யான் மட்டும் மகிழ்ந்தான்.

பிரணவ், "உன் கிட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இருக்கான்னு தெரியல... எதுவும் தெரியாம பண்ணேன்னு பொய் சொல்ல மாட்டேன்... தெரிஞ்சி தான் எல்லாம் பண்ணேன்... பட் ப்ளீஸ் முடிஞ்சா என்ன மன்னிச்சிடு..." என்க,

சிதாரா ஒரு நொடி கூட யோசிக்காது, "சரி மன்னிச்சிட்டேன்... வேற ஏதாவது சொல்லனுமா..." என்றாள்.

சிதாராவின் தெளிவான பேச்சை பிரணவ் கூட எதிர்ப்பார்க்கவில்லை.

அதை அவன் முகமே காட்டிக் கொடுத்தது.

ஆர்யானுக்கு அப்போது பிரணவ்வைக் காணும் போது ஏனோ சிரிப்பு வந்தது.

வாயை மூடி சிரித்தான்.

"எனக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் தர மாட்டியா தாரா..." என சட்டென பிரணவ் ஏக்கமாக வினவ,

ஆதர்ஷ் கோவத்தில் பிரணவ்வை ஏதோ சொல்ல முன்னேற அவன் கைப் பிடித்து தடுத்தான் அபினவ்.

அனைவரும் சிதாராவின் பதிலை எதிர்ப்பார்க்க சிதாராவோ திரும்பி ஆர்யானைப் பார்த்து புன்னகைத்தாள்.

ஆர்யான் கூட சிதாராவின் முகத்தை தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிதாரா, "சாரி பிரணவ்... என்னால நீங்க கேட்டத தர முடியாது... நான் உங்கள மன்னிச்சிட்டேன் தான்... ஆனா நீங்க பண்ண எதையுமே மறக்கல... அத என்னால மறக்க முடியுமான்னு கூட தெரியல... அதை மனசுல வெச்சிக்கிட்டு திரும்ப உங்க கூட என்னால இருக்க முடியாது... சோ நீங்க ஆசைப்படுற மாதிரி உங்களுக்கு ஏத்த ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க... சாரி..." என்க,

பிரணவ், "நான் நிஜமாவே திருந்திட்டேன் தாரா... என் தப்ப உணர்ந்துட்டேன்... என்னால இனி உன்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது... நம்ம பிரேக்கப் அப்போ நீ கூட சொன்னாய் தானே என்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு... நாமளே கல்யாணம் பண்ணிக்கலாமே..." என்கவும் சிரித்தாள் சிதாரா.

பின், "அந்த டைம்ல காதல் கண்ண மறச்சிடுச்சி பிரணவ்... ஏதோ உங்க மேல அப்போ இருந்த அளவுக்கதிகமான காதல்ல அப்படி சொன்னேன்... இப்போ தான் வெளியுலகத்த பாத்து கொஞ்சம் மெச்சூர்ட் ஆகி இருக்கேன்... அதனால தான் நான் எவ்வளவு பைத்தியக்காரியா இருந்திருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன்..." என சிரித்தபடி கூறிய சிதாரா பின் பிரணவ்வின் கண்களைப் பார்த்து அழுத்தமாக தெளிவாக,

"ஆனா இப்போ தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க... நான் நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன்... ஆனா அது என்ன பத்தி முழுசா தெரிஞ்சி என்ன புரிஞ்சிக்கிட்டு என்ன நானாவே ஏத்துக்குற ஒருத்தனா இருப்பான்... நிச்சயம் அது நீங்க இல்ல.." எனக் கூறினாள்.

அவள் இன்னொருவனைத் திருமணம் செய்வேன் எனக் கூறியதைக் கேட்ட பிரணவ்விற்கு கோபமாக வந்தது.

பிரணவ், "உன்னால நிச்சயமா என்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது தாரா... எப்போ இருந்தாலும் நீ என்ன தான் கல்யாணம் பண்ணிப்பாய்..." என சிதாராவைப் பார்த்து கூறியவன் தனது பையுடன் அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்.

அவன் செல்வதை புன்னகையுடன் பார்த்தக் கொண்டிருந்தாள் சிதாரா.

ஆதர்ஷ், "சாரிம்மா.. அவன் சொன்னது எதையும் நீ கண்டுக்காதே... அவன் சும்மா பைத்தியம் போல உளறிட்டு போறான்... நாங்களும் கிளம்புறோம்மா.." என சிதாராவிடம் கூறினான்.

பின் அபினவ், ஆதர்ஷ் இருவரும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப அனைவரும் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் ஆதர்ஷிடமிருந்து அபினவ்விற்கு அழைப்பு வந்தது. ஆதர்ஷ் அபினவ்விடம் சிதாராவிற்கும் ஆர்யானிற்கும் திருமணம் நிச்சயித்து உள்ளதாகக் கூறவும் அபினவ் மகிழ, அபினவ்வின் அருகில் இருந்த பிரணவ்வும் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

பிரணவ் மனதில், "உன்னால அவ்வளவு சீக்கிரம் தாராவ என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது ஆர்யான்... குறுக்கு வழிலயாவது நான் அவள அடஞ்சே தீருவேன்..." என நினைத்துக் கொண்டான்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 4

சரியாக ஆர்யான் மற்றும் சிதாராவின் நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் பிரணவ்விற்கு ஆஃபீஸில் ஏதோ வேலை விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.

எவ்வாறாவது ஆர்யான் மற்றும் சிதாராவின் திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டும் என பிரணவ் திட்டமிட்டுக் கொண்டிருக்க, திடீரென வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படவும் அவனின் தந்தை மூர்த்தியின் வற்புறுத்தலாலும் கிளம்பினான் பிரணவ்.

பெங்களூர் சென்றவன் முதல் நாள் மீட்டிங் முடித்து விட்டு அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பி வந்து கொண்டிருக்க, 'என்ன நடந்தாலும் உன்னால என் மினிக்கு எந்த பிரச்சினையும் நான் வர விட மாட்டேன்...' என ஊட்டி சென்று வந்த அன்று இரவு பிரணவ்வை சந்தித்த ஆர்யான் அவனிடம் கூறியதே காதில் ஒலிக்க, "என் மினி... என் மினி... என் மினி... எப்பப்பாரு மினி மணின்னு அவ பின்னாடியே வால் பிடிச்சி சுத்திட்டு இருக்கான்... இல்ல... நான் அந்தக் கல்யாணத்தை நடக்க விட மாட்டேன்... அவ என் தாரா... அவளை நான் அடையாம விட மாட்டேன் ஆர்யான்..." எனக் கோபமாகக் கூறிய பிரணவ் தன் கோபத்தை எல்லாம் காரின் வேகத்தில் காட்ட, அக் கார் வீதியில் சீறிப் பாய்ந்தது.

திடீரென தூரத்தில் ஒரு லாரி வேகமாக வருவதை அவதானித்த பிரணவ் அவசரமாக தன் காரை திசை திருப்ப முயல, அதுவோ தன் கட்டுப்பாட்டை இழந்திருந்தது. சில நிமிடங்களிலே அந்த லாரி வேகமாக வந்து பிரணவ்வின் காருடன் மோத, காரில் இருந்து தூக்கி எறியப்பட்டான் பிரணவ்.

பிரணவ் பலத்த காயங்களுடன் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருக்க, அவனைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடினர். ஆனால் ஒருவர் கூட அடிபட்டு இருந்தவனை நெருங்கி அவனுக்கு என்ன ஏது என்று பார்க்க முயற்சிக்கவில்லை.

அப்போது தான் தன் தோழியுடன் அவ் இடத்தை அடைந்தாள் அனுபல்லவி.

************************************

"இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க அனு? ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு... இன்னைக்கு ஏதோ இம்பார்டன்ட் மீட்டிங் வேற இருக்குன்னு சொன்னாங்க... நீ என்னடான்னா ஆடி அசைஞ்சி ரெடி ஆகிட்டு இருக்க..." எனக் கடு கடுத்தாள் சாரு என்கிற சாருமதி.

ஆனால் அவளின் கோபத்தை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாது கூலாக கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் அனுபல்லவி.

சாருமதி, "என்னவோ மேடம பொண்ணு பார்க்க வர போறது போல இப்படி ரெடி ஆகிட்டு இருக்க... சீக்கிரம் வா டி..." எனக் கத்தவும் ஒருவாறு தயாராகி முடித்த அனு, "கூல் பேபி... எதுக்கு இவ்வளவு கோவப்படுற? கூல்... கூல்... ஆஹ் அப்புறம் இன்னொரு விஷயம்... ஒரு விதத்துல நீ சொன்னது கூட கரெக்ட் தான் சாரு... காலைல இருந்து நான் இன்னைக்கு உன் அண்ணன மீட் பண்ண போறேன்னு உள்ள இருக்குற பட்சி சொல்லிட்டே இருக்கு..." என சாருமதியின் தோளில் கை ஊன்றி கூறினாள்.

"அண்ணனா?" என சாருமதி புரியாமல் கேட்கவும், "என் ஆளு டி... என் ஆளு உனக்கு அண்ணன் முறை தானே..." என அனு புன்னகையுடன் கூறவும் அவளை ஏகத்துக்கும் முறைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள் சாருமதி.

சாருமதி தன் ஸ்கூட்டியை இயக்கவும் எங்கு தன் தோழி தன்னை விட்டு விட்டு சென்று விடுவாளோ எனப் பதறிய அனு ஓடி வந்து சாருமதியின் பின்னே ஏறிக்கொள்ள, ஸ்கூட்டி அவர்களின் ஆஃபீஸை நோக்கிப் பறந்தது.

"சாரு ஸ்டாப்... ஸ்டாப்..." என வேகமாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டியின் பின்னே அமர்ந்திருந்த அனு பதட்டமாகக் கூறவும், பதறி வண்டியை ஓரமாக நிறுத்திய சாருமதி, "என்னாச்சு அனு? எதுக்கு வண்டிய அவசரமா நிறுத்த சொன்ன? ஏதாவது கீழ விழுந்திடுச்சா?" என்க,

"அங்க பாரு சாரு... ஒரே கூட்டமா இருக்கு... ஏதோ ஆக்சிடன்ட் போல... வா போய் பார்க்கலாம்..." என அனு பதிலளிக்கவும், "உனக்கு என்ன பைத்தியமா அனு? எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை? ஆல்ரெடி ஆஃபீஸுக்கு லேட் ஆகிடுச்சு... எம்.டி நம்மள திட்ட போறாரு..." எனக் கோபமாகக் கூறினாள் சாருமதி.

அந்தோ பரிதாபம். இவ்வளவு நேரம் சாரு கத்தியதைச் செவிமடுக்கத் தான் அங்கு யாரும் இருக்கவில்லை. அனு எப்போதோ அக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு விபந்து நடந்த இடத்தை நோக்கிச் சென்றிருந்தாள்.

அதனைக் கண்டு தலையில் அடித்துக்கொண்ட சாருமதி தன் நண்பியைப் பின் தொடர்ந்து சென்றாள்.

அங்கு அனு, "தள்ளுங்க ப்ளீஸ்..." என்றவாறு கூட்டத்தை விலக்கிக்கொண்டு செல்ல, இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த பிரணவ்வைக் கண்டு அதிர்ந்தவள் அவசரமாக கீழே இருந்தவனை மடியில் ஏந்தி தன் துப்பட்டாவை எடுத்து இரத்தம் வரும் இடத்தை இறுக்கிக் கட்டி விட்டு, "யாராவது சீக்கிரமா இவர ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போக ஹெல்ப் பண்ணுங்க... ப்ளீஸ் சீக்கிரம்..." என்க,

சுற்றியிருந்த சனமோ தமக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்க, அவர்களில் ஒருவர், "பார்க்க சின்ன பொண்ணா இருக்க... உனக்கு எதுக்குமா தேவையில்லாத வேலை... ஆக்சிடன்ட் வேற... போலீஸ் ஸ்டேஷன் அது இதுன்னு அலைய வேண்டி வரும்..." என்றார்.

அதனைக் கேட்டு ஆத்திரப்பட்ட அனு, "என்ன மனுஷங்க நீங்க? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா உங்களுக்கு? ரோட்டுல அடி பட்டு விழுந்து கிடக்குறார்... நீங்க எல்லாருமே வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க..." என்கவும் மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்த பிரணவ் கஷ்டப்பட்டு விழி திறந்து பார்க்க, அனுவின் முகம் மங்கலாக அவன் மனதில் பதிந்திட, அடுத்த நொடியே மயங்கியிருந்தான் பிரணவ்.

அதற்குள் சாருமதியே அவசர ஊர்த்திக்கு அழைத்திருக்க, அது வந்ததும் பிரணவ்வை அதில் ஏற்றி விட்டு அனுவும் அவனுடன் ஏறப் பார்க்க, அதற்குள் அவளின் கைப் பிடித்து தடுத்த சாருமதி, "போதும் அனு... அதான் ஆம்பியூலன்ஸ் வந்திடுச்சே... அவங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவாங்க... இப்பவாச்சும் கிளம்பலாம் டி..." என்க, தோழியின் வார்த்தைக்கு இணங்கி மனமேயின்றி அவ் இடத்திலிருந்து சென்றாள் அனு. அவசர ஊர்த்தியும் மருத்துவமனையை நோக்கிக் கிளம்ப, அனுவின் மனதிலோ ஏதோ சொல்ல முடியா வலி.

************************************

வைத்தியசாலையில் பிரணவ்விற்கு சிகிச்சை நடைபெற, அவனின் கைப்பேசியில் இறுதியாக அழைத்த எண்களில் அவனின் பி.ஏ இன் எண் இருக்கவும் அவனுக்கு அழைத்து தகவல் தெரிவிக்கவும் உடனே பெங்களூர் கிளம்பி வந்தான் பிரணவ்வின் பி.ஏ ஆகாஷ்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணவ் மூன்று நாட்கள் கழித்தே கண் விழித்தான்.

என்ன நடந்தது என்பது புரியவே அவனுக்கு சற்று நேரம் எடுத்தது.

இதர பரிசோதனைகள் முடிந்து பிரணவ்வை வார்டுக்கு மாற்றியதும் ஆகாஷ் அவனைக் காண வர, "என்னாச்சு?" எனத் தலையைப் பிடித்தபடி மெல்லிய குரலில் கேட்க, "ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க பாஸ்... அன்னைக்கு மீட்டிங் முடிஞ்சு வரும் போது உங்களுக்கு ஆக்சிடன்ட் நடந்து மூணு நாள் கழிச்சி இன்னைக்கு தான் நீங்க கண் முழிச்சி இருக்கீங்க... அன்னைக்கு நீங்க அட்டன்ட் பண்ணின மீட்டிங்ல கான்ட்ராக்ட் நம்ம கம்பனிக்கே கிடைச்சிடுச்சு பாஸ்... அப்புறம்..." என ஆகாஷ் இழுக்க, பிரணவ் புருவம் சுருக்கி அவனைக் கேள்வியாய் நோக்கவும், "சாருக்கும் மேடமுக்கும் இன்ஃபார்ம் பண்ணேன்... பட் அவங்க ஏதோ பிஸ்னஸ் மீட்டிங் இருக்குறதா சொல்லி என்னையே பார்த்துக்க சொல்லிட்டாங்க..." என்றான் தயங்கியபடி.

ஒரு கசந்த புன்னகையை உதிர்த்த பிரணவ், 'பெத்த பையன் ஆக்சிடன்ட் ஆகி சாக கிடந்தேன்... ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் பிஸ்னஸ் தான் முக்கியமா போச்சு...' என்றான் மனதில்.

அப்போது அறைக்குள் நுழைந்த மருத்துவர், "ஹெலோ மிஸ்டர் பிரணவ்... ஹவ் டூ யூ ஃபீல் நவ்?" என்க, "பெட்டர் டாக்டர்... நான் எப்போ டிஸ்சார்ஜ் ஆகலாம்?" எனக் கேட்டான் பிரணவ்.

மருத்துவர், "உங்களுக்கு நிறைய இன்டர்னல் இன்ஜுரீஸ் இருக்குறதனால வன் வீக் கழிச்சி தான் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண முடியும்... அப்புறம்..." என இழுத்தவாறு ஆகாஷைப் பார்க்க, "எனக்கு நம்பிக்கையான ஆள் தான் டாக்டர்... நீங்க சொல்லுங்க..." எனப் பிரணவ் கூறவும், "சாரி டு சே மிஸ்டர் பிரணவ்... அந்த ஆக்சிடன்ட்னால உங்களால ஒரு குழந்தைக்கு அப்பா ஆகுற வாய்ப்பை இழந்துட்டீங்க..." என மருத்துவர் ஒரு இடியை இறக்கவும் அதிர்ந்தான் பிரணவ்.

ஆகாஷ், "இதுக்கு ட்ரீட்மெண்ட் இருக்கு தானே டாக்டர்..." எனப் பதறிக் கேட்கவும் பெருமூச்சு விட்ட மருத்துவர், "ட்ரீட்மெண்ட் பண்ணலாம்... ஆனா அது எந்த அளவுக்கு சக்சஸ்னு உறுதியா சொல்ல முடியாது... பட் நீங்க கண்டிப்பா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோங்க... எல்லாம் அந்த கடவுள் கைல இருக்கு..." என்று விட்டு வெளியேறினார்.

பிரணவ்வோ மருத்துவர் கூறிய செய்தியில் கல்லாக சமைந்திருக்க, "பாஸ்..." என ஆகாஷ் அவன் தோள் தொடவும் தன்னிலை அடைந்த பிரணவ், "அபினவ் ஏன் வரல? எனக்கு ஆக்சிடன்ட் ஆகின விஷயம் அவனுக்கு தெரியுமா?" எனக் கேட்டான்.

"தெரியாது பாஸ்... அபினவ் சார் இன்னும் ஊர்ல இருந்து வரல... அதனால என்னால அவர் கிட்ட சொல்ல முடியல..." என ஆகாஷ் கூறவும், "அவனுக்கு ஃபோன் போட்டு கொடுங்க..." என்றான் பிரணவ்.

அபினவ் அழைப்பை ஏற்றதும், "என்னடா பண்ற இன்னும்... என்கேஜ்மன்டுக்கு போய்ட்டு வரேன் சொல்லிட்டு போன... இன்னுமே திரும்ப வரல..." எனப் பிரணவ் கேட்க,

"நீ ஏன்டா ரெண்டு நாளா கால் ஆன்சர் பண்ணல... என்கேஜ்மன்டுக்கு தான் வந்தேன்... பட் சடன்னா மேரேஜ் எடுக்க வேண்டிய நிலமை... அதான் வர முடியல.." என்றான் அபினவ்.

"ஓஹ்...." என்று விட்டு சற்று நேரம் அமைதியாக இருந்த பிரணவ், "சரி மச்சான்... சின்ன வேலை ஒன்னு... நான் அப்புறம் பேசுறேன்..." என்று விட்டு அபினவ்வின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது அழைப்பைத் துண்டித்து விட்டான்.

சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்து இருந்த பிரணவ்விற்கு மருத்துவர் கூறியவையும் அவன் சிதாராவுக்கு செய்த அநியாயமுமே மாறி மாறி நினைவு வர, சிதாராவிற்கு அவன் செய்த அநியாயத்துக்கு கிடைத்த தண்டனையாகவே இதனை எண்ணினான் பிரணவ்.

எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவனையும் மீறி மூடி இருந்த இமைகளைத் தாண்டி கண்ணீர் வடிய, "பாஸ்..." என்ற ஆகாஷின் குரலில், "நீங்க கிளம்புங்க ஆகாஷ்... நான் கொஞ்சம் நேரம் தனியா இருக்கணும்..." எனப் பிரணவ் கூறவும் தன் முதலாளியின் பேச்சைத் தட்ட முடியாது அங்கிருந்து வெளியேறினான் ஆகாஷ்.

************************************

சென்னைக்கு வந்ததிலிருந்து பிரணவ்விற்கு தன்னை யாரோ பின் தொடர்வது போல் இருக்க, ஆகாஷின் மூலம் அது யார் எனக் கண்டறிந்தவன் நேரே அவனைக் காணச் சென்றான்.

பிரணவ், "வேலை நேரத்துல உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி சார்... பட் நீங்க கொஞ்ச நாளா என்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்குறத நான் அவதானிச்சேன்... எதனாலன்னு தெரிஞ்சிக்கலாமா?" எனக் கேட்க,

முதலில் பிரணவ்வைக் கண்டு அதிர்ந்த ஆர்யானின் காவல்துறை நண்பனான ரவி அவனின் கேள்வியில் கேலியாகப் புன்னகைத்தவன்,

"ஹ்ம்ம்.. ரொம்ப தைரியம் தான்... போலீஸ் கிட்டயே வந்து எதுக்கு என்ன ஃபாலோ பண்றன்னு கேக்குற அளவுக்கு நல்லவனா நீ?" என்றான் கோபமாக.

பிரணவ் அவனைப் புரியாமல் பார்க்கவும், "எதுக்காக சிதாராவ கடத்த முயற்சி பண்ண..." என ரவி கேட்கவும் அதிர்ந்தான் பிரணவ்.

பிரணவ், "என்ன சொல்றீங்க சார்... நான் எதுக்கு தாராவ கடத்தனும்? " என்க,

ரவி, "சும்மா நடிக்காதேடா... நீ தான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆர்யான் கிட்ட எப்படியாவது சிதாராவ உன் கிட்ட வர‌ வைக்கிறதா சேலேன்ஜ் பண்ணி இருக்க..." என்க,

"நான் ஆர்யான் கிட்ட அன்னைக்கு அப்படி சொன்னது உண்மை தான்... அது நான் தாராவுக்கு பண்ண தப்ப உணர்ந்தேன்... தாரா என்ன ரொம்ப லவ் பண்ணா... ஆர்யானுக்கு என்னை பிடிக்கல... அதனால தான் நான் அப்படி சொன்னேன்... ஆனா என் மனசுல இப்போ அப்படி எந்த எண்ணமும் இல்ல சார்.." என பிரணவ் கூற அவனை சந்தேகமாய் நோக்கினான் ரவி.

சற்று அமைதி காத்த பிரணவ் பின், "தாராவுக்கு ஆர்யான் கூட கல்யாணம்னு தெரிஞ்சப்ப எப்படியாவது இந்த கல்யாணத்த நிறுத்தனும்னு நான் நெனச்சது உண்மை தான்...‌ ஆனா அவங்க என்கேஜ்மன்டுக்கு ரெண்டு நாள் முன்னாடி நான் வேலை விஷயமா வெளியூர் போனேன்... போன இடத்துல எனக்கு ஒரு ஆக்சிடன்ட்... அதனால என்னால இனிமே எப்பவும் ஒரு குழந்தைக்கு அப்பாவா ஆக முடியாதுன்னு சொல்லிட்டாங்க... தாராவுக்கு நான் பண்ணின அநியாயத்துக்கு தான் எனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைச்சிருக்குறதா நான் நெனச்சேன்... அப்போவே முடிவு பண்ணேன் தாரா இனிமே சந்தோஷமா இருக்கணும்னு... நிச்சயம் ஆர்யானால தான் அவள சந்தோஷமா வெச்சிக்க முடியும்... அதனால அதுக்கப்புறம் நான் தாராவ டிஸ்டர்ப் பண்ணல..." என்க,

"நீங்களும் சிதாராவ கடத்தலன்னா வேற யாரா இருக்கும்... ஆர்யானுக்கு கூட கால் பண்ணி மிரட்டி இருக்கான்... பட் சேட்டலைட் ஃபோன் யூஸ் பண்றதால எங்களால அவன ட்ரேஸ் பண்ண முடியல..." என்றான் ரவி.

பிரணவ், "உங்களுக்கு ஓக்கேன்னா என்னால தாராவ யாரு கடத்த ட்ரை பண்ணாங்கன்னு கண்டுபிடிக்க உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்..." என்கவும் அவனைக் கேள்வியாய் நோக்கினான் ரவி.

"காலேஜ் டேய்ஸ்ல நான் ஹேக்கிங் படிச்சிருக்கேன்... அத வெச்சி என்னால கண்டு பிடிக்க முடியும்னு நினைக்கிறேன்... தாராவ கடத்த முயற்சி பண்ணவங்க எவ்வளவு உஷாரா இருந்தாலும் எங்கயாவது ஏதாவது சின்ன தப்பாவது பண்ணி இருப்பாங்க... அதை வெச்சி அவங்கள பிடிக்க முடியும்..." என பிரணவ் கூறவும் ரவி சம்மதித்தான்.

பிரணவ் சென்ற பின் ஆர்யானிடம் கூற அவனுக்கு முதலில் நம்ப முடியவில்லை என்றாலும் தன்னவளின் நலனுக்காக அதற்கு சம்மதித்தான்.

ஆர்யான் பிரணவ்வுக்கு அழைக்க அவனும் சிதாராவுக்கு செய்த தப்புக்கு பிராயச்சித்தமாக செய்வதாகக் கூறினான்.

ஜீவாவிடமிருந்து பெற்ற எண்ணையும் பிரணவ்விடம் வழங்கி யாரெனக் கண்டு பிடிக்கக் கூற அவன் அது நியுயார்க்கிலிருந்து வந்த அழைப்பு எனக் கூறியதும் சிதாராவைக் கடத்த முயன்றவனுக்கும் ஜீவாவிடமிருந்து தகவல் பெறுபவனுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக ரவிக்குப் புரிந்தது.

அதனைக் கண்டு பிடிப்பதற்காக ரவி முதலில் நியுயார்க் செல்ல, அவனுக்கு உதவியாக பிரணவ்வையும் வரவழைத்தான்‌.

ஆர்யான் திடீரென அழைத்து சிதாராவைக் கடத்தி விட்டதாகக் கூறி நடந்ததைக் கூறவும் பிரணவ் சிதாராவின் எண் கடைசியாக சிக்னல் கட் ஆன இடத்தைக் கண்டு பிடித்தான்.

ஆர்யான், ரவி, பிரணவ் மூவரும் அங்கு செல்ல அங்கு ஒரு வேன் மட்டும் யாருமின்றி தனியே கிடந்தது.

ரவி அதன் எண்ணை வைத்து யாருடைய பெயரில் அந்த வேன் பதியப்பட்டிருப்பதைத் தேட, அதுவோ மிஸ்ஸிங் கேசில் பதியப்பட்டிருந்தது.

என்ன செய்ய என யோசிக்கும் போது தான் ஆர்யானுக்கு தன் வீட்டின் அருகே கிடைத்த பிரேஸ்லெட் ஞாபகம் வந்தது.

ஆர்யான் ரவியிடம், "டேய்.. எனக்கொரு டவுட் இருக்கு... பிரணவ்.. நீங்க நான் சொல்ற நம்பர் இருக்குற இடத்த ட்ரேஸ் பண்ணுங்க... நான் நினைக்கிறது சரின்னா மினி அங்க தான் இருக்கனும்..." என்க,

பிரணவ் உடனே ஆர்யான் தந்த ஆதித்யாவின் எண்ணை ட்ரேஸ் செய்து அது இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தான்.

ரவி நியுயார்க் போலீஸ் உதவியுடன் அங்கு சென்று ஆதித்யாவைப் பிடித்தான்.

ஆர்யான் ஆதித்யாவை ஜெயிலில் அடைத்து விட்டு சிதாராவை அனுமதித்திருந்த ஹாஸ்பிடல் வர, சிதாரா இருந்த அறைக்கு வெளியே அமர்ந்திருந்தவனை நெருங்கிய ஆர்யான் அவன் தோள் தொட்டு, "ரொம்ப தேங்க்ஸ் நீங்க பண்ண உதவிக்கு..." என்க,

"தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு ஆர்யான்? தாராக்கு நான் பண்ண பாவத்துக்கு ஒரு பிராயச்சித்தமா தான் நான் இதை பண்ணேன்.." என்றான் பிரணவ்.

பிரணவ், "சரி ஆர்யான்.. அப்போ நான் கிளம்புறேன்... நான் இதை உங்க கிட்ட சொல்லணும்னு அவசியமில்ல... தாராவ நல்லா பார்த்துக்கோங்க... ஆல்ரெடி அப்படி தான் பாத்துக்குறீங்க... " என்க,

ஆர்யான், "மினிய பார்த்துட்டு போகலையா?" எனக் கேட்டான்.

அவனைப் பார்த்து புன்னகைத்த பிரணவ், "இல்ல ஆர்யான்... அவ இப்போ சுயநினைவு இல்லாம இருக்கலாம்... ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு... நீங்க அவ கூட இருந்தா நிச்சயம் அவ சரி ஆகிடுவா... தாராக்கு என்னை பத்தி எதுவும் தெரிய வேணாம்... அவ லைஃப்ல நான் முடிஞ்சு போன சேப்டர்... அது அப்படியே இருக்கட்டும்... எனக்கு தெரியும் தாராவுக்கு நான் பண்ணின காரியத்துக்கு உங்களுக்கு என் மேல கோவம் இருக்கும்... முடிஞ்சா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க... நான் போறேன்..." என்றவன் ஆர்யானின் தோளில் தட்டி விட்டு சென்றான்.

அன்றே மீண்டும் கிளம்பி இந்தியா வந்தடைந்தான் பிரணவ். பிரணவ் வந்ததும் கையில் ஏதோ பையுடன் அவனைக் காண வந்த ஆகாஷ், "பாஸ்... இது அன்னைக்கு ஹாஸ்பிடல்ல கொடுத்து விட்டாங்க... உங்க திங்க்ஸ்..." என்க, அதனை வாங்கிக்கொண்ட பிரணவ், "ஆகாஷ்... இன்னைக்கு இருக்குற மீட்டிங்ஸ் டீட்டைல்ஸ் எல்லாம் எனக்கு மெயில் பண்ணி விட்டுடுங்க..." என்கவும் சரி எனத் தலையசைத்து விட்டு கிளம்பினான் ஆகாஷ்‌.

ஆகாஷ் சென்றதும் அவன் தந்த பையைப் பிரித்து பார்த்த பிரணவ் அதில் இருந்த இளமஞ்சள் நிற ஷாலைக் கண்டு புருவம் சுருக்கினான். அதற்குள் அவனுக்கு ஏதோ அழைப்பு வரவும் அதனை தன் கப்போர்ட்டில் வைத்துப் பூட்டி விட்டு அழைப்பை ஏற்கச் சென்றான்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 5

அன்று பிரணவ்வின் ஒரே நண்பனான அபினவ்வினதும் அவனது சகோதரன் ஆதர்ஷினதும் திருமணம்.

ஆனால் பிரணவ்வோ திருமணத்திற்கு செல்லாது ஆஃபீஸில் வேலையாக இருக்க, அனுமதி கேட்டு விட்டு அவன் அறைக்குள் நுழைந்த ஆகாஷ், "பாஸ்... அபினவ் சார் கல்யாணத்துக்கு நீங்க போகலயா?" எனக் கேட்கவும் தலை நிமிராமலே இல்லை எனத் தலையசைத்தான் பிரணவ்.

ஒரு நிமிடம் தயங்கி விட்டு, "அபினவ் சார் காலைல இருந்து நிறைய தடவை எனக்கு கால் பண்ணிட்டார் நீங்க அவர் கால் அட்டன்ட் பண்ணலன்னு... நான் நீங்க மீட்டிங்ல இருக்குறதா சொல்லி சமாளிச்சேன்..." என ஆகாஷ் கூறவும் பிரணவ் அதே போல தலையை நிமிர்த்தாமலே, "ஓஹ்... நான் கவனிக்கல..." எனக் கூறும் போதே அவனின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

அபினவ் தான் அழைத்திருந்தான். அழைப்பை ஏற்காமல் கைப்பேசித் திரையையே வெறித்த பிரணவ் ஆகாஷ் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டவன் வேறு வழியின்றி அழைப்பை ஏற்றான்.

"டேய்... எங்கடா இருக்க... நீ எங்க கல்யாணத்துக்கு வருவியா மாட்டியா?" என அழைப்பின் மறுபக்கத்தில் இருந்த அபினவ் எடுத்ததுமே கோபமாகக் கேட்க,

"சாரிடா அபி... நான் வரலடா... ஆதர்ஷ் கிட்டயும் சாரி கேட்டதா சொல்லு..." என பிரணவ் பதிலளிக்கவும்,

அபினவ், "அப்படி என்ன பிரச்சினைடா உனக்கு? ஃப்ரெண்டு ஃப்ரெண்ட்னு பேச்சுக்கு தான் சொன்னியா? எங்க கல்யாணத்துக்கு கூட உன்னால வர முடியாதா?" என்கவும் சில நொடி அமைதி காத்த பிரணவ்,

"நான் அங்க வந்தா தாரா கஷ்டப்படுவா அபி... அவ ஃப்ரெண்ட்ஸோட மேரேஜ்... என்னைப் பார்த்தா அவ மூடே ஸ்பாய்ல் ஆகிடும்டா..." என்றான்.

மறுபக்கம் கைப்பேசி கை மாறும் சத்தம் கேட்க, "பிரணவ்... இன்னைக்கு மினியோட ஃப்ரெண்ட்ஸுக்கு மட்டுமில்ல மேரேஜ்... உங்க ஃப்ரெண்ட்ஸுக்கும் தான்... நீங்க வாங்க... என் மினிக்காக நீங்க எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க..." என்க,

"இல்ல ஆர்யான்... நான் வந்தா எல்லாருக்கும் சங்கடமா இருக்கும்... ப்ளீஸ்... என்னைக் கம்பில் பண்ணாதீங்க..." என மறுத்த பிரணவ்விற்கு ஆர்யானின் என் மினியில் இருந்த அழுத்தம் புரியாமல் இல்லை.

அபினவ், ஆதர்ஷ், ஆர்யான் என மூவருமே மாறி மாறி பிரணவ்விடம் எவ்வளவு கெஞ்சியும் முடியாது என உறுதியாகவே மறுத்து விட்டான் பிரணவ்.

வேறு வழியின்றி அபினவ்வும் கோபமாக அழைப்பைத் துண்டித்து விட, இன்னும் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷைப் பார்த்து புருவம் உயர்த்தி கண்களாலே என்ன எனக் கேட்டான்.

ஆகாஷ், "பாஸ்... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... அபினவ் சார் கல்யாணத்துக்கு போனா உங்களுக்கும் கொஞ்சம் மனசுக்கு சேன்ஜா இருக்கும்..." என்க, ஒரு கசந்த புன்னகையை உதிர்த்த பிரணவ், "ஆல்ரெடி குற்றவுணர்ச்சில இருக்கேன் ஆகாஷ்... அந்த கல்யாணத்துக்கு போனா என் கடந்த காலத்தை திரும்ப பார்க்க வேண்டி வரும்... அது என்னை இன்னும் குற்றவுணர்ச்சில தான் ஆழ்த்தும்... எவ்வளவு தூரம் என் பாஸ்ட்ட விட்டு விலகி ஓட முடியுமோ அவ்வளவு தூரம் போக விரும்புறேன்..." என ஒரு நிமிடம் இடைவெளி விட்டவன், "அதனால தான் அப்பா கிட்ட எங்க பெங்களூர் பிரான்ச்ச பொறுப்பெடுக்க பர்மிஷன் வாங்கி இருக்கேன்... பட் யாருக்கும் நான் தான் அங்க எம்.டினு தெரிய போறது இல்ல... ஜஸ்ட் ப்ராஜெக்ட் மேனேஜரா தான் போக போறேன்...இன்னும் வன் மந்த்ல அங்க போக வேண்டி வரும்..." என்கவும், "பாஸ்..." என நெஞ்சில் கை வைத்து அலறி விட்டான் ஆகாஷ்.

ஆகாஷின் அதிர்ந்த முகத்திலே அவனின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட பிரணவ், "பயப்படாதீங்க ஆகாஷ்... உங்களுக்கு வேலை போகாது... நீங்களும் என்னோட பெங்களூர் வரீங்க..." எனப் புன்னகையுடன் கூறவும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆகாஷ், "ஒரு நிமிஷம் பயந்துட்டேன் பாஸ்..." என்க, "இன்னும் ஏதாவது இருக்கா?" எனக் கேட்டான் பிரணவ்.

ஆகாஷ் இல்லை என இட வலமாகத் தலையசைக்க, "அப்போ..." என கண்களாலே கதவைக் காட்டினான் வெளியேறுமாறு.

"ஆஹ்... ஆஹ்... யேஸ் பாஸ்..." என உடனே பிரணவ்வைப் பார்த்து ஆகாஷ் சல்யூட் அடிக்கவும் பிரணவ் அவனை வேற்றுக்கிரக ஜந்து போல் நோக்க, தன் செயல் புரிந்து அவசரமாகக் கையைக் கீழே போட்ட ஆகாஷ் பிரணவ்வைப் பார்த்து இளித்து விட்டு வெளியே ஓடி விட்டான்.

பிரணவ் தான், 'பைத்தியமா இவன்?' என்ற ரீதியில் பார்த்து விட்டு தோளைக் குலுக்கினான்.

************************************
"ஹேய் காய்ஸ்... ஒரு குட் நியூஸ்... நம்ம டீமுக்கு புது ப்ராஜெக்ட் மேனேஜர் வரப் போறாங்க... சென்னை பிரான்ச்ல இருந்து ட்ரான்ஸர் ஆகி வரார்... இனிமே அந்த சிடுமூஞ்சி சிங்காரம் கிட்ட வீணா திட்டு வாங்க வேண்டிய அவசியமில்ல..." என மாலதி உற்சாகமாகக் கூறவும்,

"ப்ச்... அடப்போம்மா நீ வேற... இப்போ வரப் போறவன் கூட இந்த சிடுமூஞ்சி சிங்காரத்த போலவே ஓல்ட் பீஸ் ஒன்னா இருக்கும்... எப்படியும் நம்மள திட்ட தான் போறார்... ஏனா நம்ம முக ராசி அப்படி..." என்றாள் சாருமதி சலிப்பாக.

அதனைக் கேட்டு அனு உதட்டை மடித்து சிரிக்க, "அதான் டி இல்ல சாரு... இப்போ வரப் போறவர் யூத்... செம்ம ஹேன்ட்சம்மா இருப்பார்... நான் ஒரு தடவை அவரை மீட்டிங் ஒன்னுல பார்த்து இருக்கேன்..." என மாலதி கூறவும் சாருவின் கண்கள் பளிச்சிட, "ஹேய்... ஹேய் மாலு... சொல்லுடி அவரைப் பத்தி... ஆள் பார்க்க எப்படி இருப்பார்? எனக்கு மேட்ச்சா இருப்பாரா?" என ஆர்வமாகக் கேட்க, மாலதி புது பிராஜெக்ட் மேனேஜரைப் பற்றி தனக்கு தெரிந்தை வைத்து ஆஹா ஓஹோ என வர்ணிக்க, ஏனோ அனுவின் நினைவு அந்தப் பெயர் தெரியாதவனிடமே சென்றது.

அன்று பிரணவ் விபத்துக்குள்ளாகி அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு சாருமதியுடன் ஆஃபீஸ் வந்த அனுபல்லவியால் அந்த இரத்தம் படிந்திருந்த முகத்தை மறக்க முடியவில்லை.

'அவன் இப்போது எப்படி இருப்பான்? குணமாகி விட்டானா? இல்லை அன்று விபத்துக்குள்ளானதில்‌ ஏதாவது ஆகி விட்டதா? உயிருடன் தான் இருக்கின்றானா?' என அனுவின் மனதில் பல கேள்விகள்.

திடீரென சாருமதியின் சிரிப்புச் சத்தம் கேட்கவும் தன்னிலை அடைந்த அனுபல்லவி முயன்று தன் மனதை வேறு வேலையில் பதித்தாள்.

************************************

சரியாக ஒரு மாதத்தில் பெங்களூர் கிளம்ப தயார் ஆகினான் பிரணவ். ஊருக்கு கிளம்புவதற்காக உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அவன் பார்வையில் பட்டது அன்று ஆகாஷ் தந்த பையில் இருந்த அந்த இளமஞ்சள் நிற துப்பட்டா.

அதனைக் கரத்தில் எடுத்தவனின் நினைவில் ஒரு பெண்ணின் முகம் மங்கலாகத் தெரிய, பல தடவை முயன்றும் அம் முகத்திற்கு சொந்தக்காரியை அவனால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை.

பிரணவ், "ச்சே..." எனத் தலையைப் பிடித்துக் கொண்டு கோபமாக கட்டிலில் அமர்ந்தவன் அந்த துப்பட்டாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

'யார் அவ? ஏன் எனக்கு அவ முகம் ஞாபகத்துக்கு வருதில்ல? இந்த ஷால் எப்படி என் கிட்ட...?' என சிந்தித்தவனுக்கு மயக்க நிலையில் ஒரு பெண்ணின் குரல் மெதுவாகக் கேட்டது நினைவு வரவும், "ஓஹ்... ஆக்சிடன்ட் அன்னைக்கு என்னை ஹாஸ்பிடல் அனுப்பி வெச்ச யாரோடயாவது இருக்கும் போல..." என பிரணவ் தனக்கே கூறிக்கொண்டான்.

அப்போது கீழிருந்து அவனின் தாயின் குரல் கேட்கவும் பிரணவ் அந்த துப்பட்டாவைக் கட்டிலில் வீசி விட்டுச் செல்ல, அந்த துப்பட்டாவோ பிரணவ்வின் பைக்குள் தஞ்சம் அடைந்தது.

ஹால் சோஃபாவில் லக்ஷ்மி கோபமாக அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் ஏதோ கோப்பை கையில் வைத்து படித்தவாறு அமர்ந்து இருந்தார் மூர்த்தி.

தன் தாயைக் கேள்வியாக நோக்கியபடியே பிரணவ் அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து என்ன விஷயம் என்பது போல லக்ஷ்மியைப் பார்க்க, அவரோ பிரணவ்வை முறைத்து விட்டு, "உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க பிரணவ்? யாரைக் கேட்டு நீ இப்படி பண்ற? எம்.எல் க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸோட வருங்கால எம்.டி நீ... ஆனா நீ என்னன்னா அங்க போய் வெறும் ப்ராஜெக்ட் மேனேஜரா இருக்க போறதா சொல்ற..." என்றார் கோபமாக.

பிரணவ், "ஏன் அதுவும் நம்ம கம்பனி தானே... நான் வேற யாரோட கம்பனியில சரி எம்ப்ளாயியா வர்க் பண்ணா தான் நீங்க அசிங்கப்படணும்... இதுல என்ன இருக்கு?" எனக் கேட்கவும் லக்ஷ்மி ஏதோ கூற வர, அவர் முன் கை நீட்டி தடுத்த பிரணவ், "உங்க புருஷன் கிட்ட நான் என் முடிவை சொல்லி அவர் சம்மதத்தோட தான் நான் கிளம்புறேன்... இதுக்கு மேலயும் என்னை தடுக்க நினைச்சீங்கன்னா எதுவும் வேணாம்னு தூக்கி போட்டு கிளம்பி போய்ட்டே இருப்பேன்..." என்று விட்டு தன் அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டான்.

************************************

அன்று ஆஃபீஸ் முழுவதுமே ஒரே பரபரப்பாகக் காணப்பட்டது.

அனு, "ஏன் டி சாரு... நம்ம டீமுக்கு தானே புதிய ப்ராஜெக்ட் மேனேஜர் வரார்... ஜஸ்ட் ஒரு ப்ராஜெக்ட் மேனேஜரை வெல்கம் பண்ண எதுக்கு இவ்வளவு அலப்பறை?" எனப் புரியாமல் கேட்க, "அதான் அனு எனக்கும் புரியல... சரி வெய்ட் பண்ணி பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு..." எனச் சாருமதி கூறவும் தோளைக் குலுக்கினாள் அனுபல்லவி.

அப்போது திடீரென ஏதோ சலசலப்புச் சத்தம் கேட்கவும் தோழிகள் இருவரும் கூட்டத்தின் பக்கம் திரும்ப, அங்கு வந்துகொண்டு இருந்ததோ ஆகாஷ்‌.

சாருமதி, "இந்த பாடிக்கு தான் இவ்வளவு அலப்பறை பண்ணினாங்களா?" எனக் கேலியாகக் கேட்கவும் வாயை மூடிச் சிரித்தாள் அனுபல்லவி.

ஜெனரல் மேனேஜரை தனியே சந்தித்த ஆகாஷ் அவரிடம் ஏதோ ரகசியமாகக் கூற, புரிந்தது போல் தலை ஆட்டியவர் கூடி இருந்த கூட்டத்தின் அருகே வந்து, "எல்லாரும் எதுக்கு இப்போ கும்பலா இருக்கீங்க? போய் வேலையை பாருங்க..." என்று சத்தமிடவும் அனைவரும் கலைந்து சென்று விட, ஆகாஷும் அங்கிருந்து சென்றான்.

"இவன் இல்லையா அப்போ அந்த ப்ராஜெக்ட் மேனேஜர்? இவன் யாரு அனு அப்போ? இவன் பேச்சை கேட்டு நம்ம ஜி‌.எம்மே பூம் பூம் மாடு மாதிரி மண்டையை ஆட்டுறார்..." எனச் சாருமதி நக்கலாகக் கூறவும் அவளின் தோளில் அடித்து அமைதிப்படுத்திய அனுபல்லவி, "ஷ்ஷ்ஷ் சாரு... பேசாம இரு டி... கேட்டுட போகுது... யார் வந்தா நமக்கு என்ன?" என்றாள்.

சிறிது நேரம் கழித்து அனுபல்லவின் டீம் உறுப்பினர்களை ஜீ.எம் மீட்டிங் ஹாலுக்கு அழைப்பு விடுக்கவும் அனைவரும் அங்கு செல்ல, அங்கு ஜி.எம். இற்கு அருகில் அமர்ந்து இருந்தவனைக் கண்டு அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தாள் அனுபல்லவி.

ஜீ.எம், "சா..." சார் எனக் கூற வந்தவர் பிரணவ்வின் அழுத்தமான பார்வையில் அவசரமாகத் திருத்தி, "மிஸ்டர் பிரணவ்... இவங்க தான் உங்க டீம் மெம்பர்ஸ்..." என்கவும் பிரணவ் திரும்பி ஒவ்வொருவராய் அவதானிக்க,

தான் காப்பாற்றியவன் நலமுடன் இருக்கின்றான் என அனுபல்லவியின் முகம் மலர, பிரணவ்வோ அவளைப் பார்த்து விட்டு மற்ற ஆள் மீது கவனம் பதிக்கவும் அனுபல்லவியின் முகம் வாடிப் போனது.

அனுபல்லவி, 'என்ன இது? இவருக்கு என்னைக் கொஞ்சம் கூட ஞாபகம் இல்லையா? ப்ச்... அவருக்கு எப்படி என்னை ஞாபகம் இருக்கும்? அவர் தான் மயக்கத்துல இருந்தாரே...' என மனதுக்குள்ளே பட்டிமன்றம் நடத்தினாள்.

பிரணவ்வின் குரலில் தன்னிலை மீண்டவள் அவனின் மீது பார்வையை செலுத்த, "ஹாய் காய்ஸ்... ஐம் பிரணவ்... நைஸ் டு மீட் யூ ஆல்... இன்னைல இருந்து நான் தான் உங்க ப்ராஜெக்ட் மேனேஜர்... என்னைப் பத்தி சொல்லி தெரிஞ்சிக்கணும்னு இல்ல... போக போக புரியும் உங்களுக்கே... நாம ஒரு டீமா இருக்கும் போது உங்க ஒப்பீனியன்ஸ தயங்காம நீங்க முன் வைக்கலாம்... ஏதாவது டவுட் இருந்தாலும் எப்பன்னாலும் யூ ஆர் ஃபீல் ஃப்ரீ டு ஆஸ்க்..." என பிரணவ் அழுத்தமான குரலில் கூறவும் அனைவரின் தலையும் தானாகவே சம்மதம் என மேலும் கீழும் ஆடியது.

பிரணவ் ஜீ.எம். இற்கு கண் காட்டவும், "யூ மே கோ நவ்..." என ஜீ.எம். கட்டளையிட, அனைவரும் வெளியேறினர்.

பிரணவ்வின் மீதே பார்வை பதித்திருந்த அனுபல்லவிக்கு தான் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அவனின் பார்வை தன் மீது படிந்தது போல் ஒரு மாயை.

தன் தலையில் தட்டிக்கொண்ட அனுபல்லவி, 'ப்ச் அனு... உனக்கு என்னாச்சு? அவருக்கு உன்ன யாருன்னு கூட தெரியல... அவர் எதுக்கு உன்ன பார்க்க போறார்? அது மட்டும் இல்லாம அந்த ஆக்சிடன்ட் அப்போ அங்க யாரு இருந்தாலும் நீ அப்படி தான் காப்பாத்தி இருக்க போற... அதுக்காக அவங்களுக்கு நம்மள ஞாபகம் இருக்கணும்னு அவசியமா என்ன? அவர் உன்னோட பாஸ்... நீ ஒரு எம்ப்ளாயி... அவ்வளவு தான்...' எனத் தன்னையே சமாதானப்படுத்திக்கொள்ள, எவ்வளவு நேரமாக அழைத்தும் பதிலளிக்காது வித விதமான முக பாவனைகளைக் காட்டிக் கொண்டிருந்த தோழியை புருவம் சுருக்கிப் பார்த்தாள் சாருமதி.

அப்போது தான் தோழியின் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்து அனுபல்லவி அவளைப் பார்த்து இளித்து வைக்க, பெருமூச்சு விட்ட சாருமதி, "நான் கூட புதுசா வர ப்ராஜெக்ட் மேனேஜர் ரொம்ப ஜாலி டைப்பா இருப்பார்னு எதிர்ப்பார்த்தேன்... இவர் என்னன்னா சிரிப்பு என்ன விலைனு கேட்பார் போல... பரவால்ல... ஆளு பார்க்க செம்ம ஹேன்ட்ஸமா இருக்கார்... அதனால அவர் திட்டினா கூட சந்தோஷமா கேட்டுக்கலாம்..." என்றாள் கண்கள் மின்ன.

அதில் ஏனோ அனுபல்லவிக்கு லேசாக பொறாமை எட்டிப் பார்க்க, "மிஸ் சாருமதி... அவர் நம்ம பாஸ்... சோ நீங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கிறீங்களா?" எனப் பல்லைக் கடித்துக்கொண்டு கேட்கவும் உதட்டை சுழித்த சாருமதி, "அடப் போம்மா அங்குட்டு... சரியான ரசனை கெட்டவ..." எனக் கூறி விட்டு தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள்.

ஒரு நிமிடம் நின்று பிரணவ் இருந்த அறையைத் திரும்பிப் பார்த்த அனுபல்லவி, 'வர வர ரொம்ப ஓவரா போற அனு நீ... இது நல்லதுக்கு இல்ல...' என்ற மனசாட்சியின் எச்சரிக்கையில் தான் செய்து கொண்டிருக்கும் காரியம் உணர்ந்து தலையில் அடித்துக் கொண்டாள்.

டீம் உறுப்பினர்கள் அனைவரும் சென்றதும் ஜீ.எம்மின் பக்கம் திரும்பிய பிரணவ், "மிஸ்டர் மோகன்... எனக்கு கொஞ்சம் சேன்ஜ் வேணும்... அதனால தான் நான் இந்த பிரான்ச்ச பொறுப்பேற்று இருக்கேன்... பட் இங்க இருக்குற எம்ப்ளாயீஸ் யாருக்கும் நான் தான் இந்த கம்பனி எம்.டி னு தெரியக் கூடாது... கோட் இட்?" என்கவும் புரிந்ததாய் தலை ஆட்டினார் மோகன்.

அவர் சென்றதும் கண்களை மூடி தலையில் கை வைத்து அமர்ந்தவனின் மனக்கண் முன் அனுபல்லவி வந்து சென்றாள்.

வந்ததிலிருந்தே தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளை அவனும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான். ஆனால் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. கடைசியாக செல்லும் போது அவளின் கண்களில் தெரிந்த ஏக்கத்தின் காரணம் தான் அவனுக்கு புரியவில்லை.

அதனை‌ முயன்று ஒதுக்கித் தள்ளிய பிரணவ் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும், "யேஸ் கம் இன்..." என்கவும் அறைக்குள் நுழைந்த ஆகாஷ், "பாஸ்... நீங்க கேட்ட டீட்டைய்ல்ஸ்... உங்க டீம் மெம்பர்ஸோட டீட்டைல்ஸ் அப்புறம் கம்பனி பத்தி ஃபுல் ரிப்போர்ட் இதுல இருக்கு..." என்கவும் அதனை வாங்கிப் படித்த பிரணவ்வின் கண்கள் அனுபல்லவி பற்றி இருந்த தாளில் சற்று நேரம் நிலைத்து நின்றது.

'பல்லவி...' என மனதில் கூறிப் பார்த்தவனின் கவனத்தைக் கலைத்தது ஆகாஷின் செறுமல். அவசரமாக மற்ற தகவல்களில் பார்வையை பதித்த பிரணவ், "ஆகாஷ்... நாளைக்கு காலையில என் டீம் மெம்பர்ஸ் எல்லாருக்கும் மீட்டிங் அரேன்ஜ் பண்ணிடுங்க... இப்போவே அதை பத்தி அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க..." எனக் கட்டளை இட்டான்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 6

"அனு.............." என்ற சாருமதியின் கத்தலில் தூக்கத்தில் இருந்து பதறி எழுந்தாள் அனுபல்லவி.

அனுபல்லவி, "என்னாச்சு? என்னாச்சு? யாரு செத்துட்டாங்க?" என அரைத் தூக்கத்தில் பதட்டமாகக் கேட்க, அவள் முகத்தில் உடையை விட்டெறிந்த சாருமதி, "நான் குளிக்க போக முன்னாடி உன்ன எழுப்பாட்டிட்டு தானே போனேன்... நீ என்னன்னா திரும்ப தூங்கிட்டு இருக்க..." என்றாள் கோபமாக.

"ப்ச்..." என மீண்டும் போர்வையால் முகத்தை மூடியபடி அனுபல்லவி தூங்கவும் சாருமதி குளியலறையில் இருந்து ஒரு பாக்கெட் தண்ணீரை எடுத்து வந்து வஞ்சகமே இன்றி அனுபல்லவியின் மீது ஊற்றவும், "ஐயோ... அம்மா..." எனப் பதறித் துடித்துக்கொண்டு எழுந்தாள் அனுபல்லலி.

சாருமதியின் கரத்தில் இருந்த பாக்கெட்டைக் கண்டு அனுபல்லவி அவளை ஏகத்துக்கும் முறைக்க, அவளுக்கு சமமாய் பதிலுக்கு முறைத்த சாருமதி, "புது ப்ராஜெக்ட் மேனேஜர் வந்து இன்னைக்கு ஃப்ர்ஸ்ட் டே... போர்ட் மீட்டிங் வேற இருக்கு மறந்துட்டியா?" என்கவும் அதிர்ந்து தலையில் கை வைத்த அனுபல்லவி இன்னும் தன் தோழி தன்னை முறைத்துக்கொண்டு இருப்பதைக் கண்டு அவசரமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

எவ்வளவு வேகமாகக் குளித்தும் அரை மணி நேரத்திற்கு மேல் கடந்திருக்க, வேகமாகக் குளியலறைக் கதவைத் தட்டிய சாருமதி, "அனு... இம்பார்டன்ட் ஃபைல் ஒன்ன சப்மிட் பண்ண வேண்டி இருக்கு டி..‌. நேத்து கொடுக்க மறந்துட்டேன்... சோ நான் முன்னாடி போறேன்... லேட் ஆகிடுச்சு... நான் ஸ்கூட்டியை எடுத்துட்டு போறேன்... நீ பஸ் பிடிச்சி வா..." என்றவள் அனுபல்லவி, "ஹேய் சாரு... இரு டி‌... எனக்கு தனியா பஸ்ல போய் பழக்கம் இல்ல டி... சாரு..." எனக் கத்தக் கத்தக் கேட்காது அங்கிருந்து சென்றாள்.

சாருமதி சென்றதும் உதட்டைப் பிதுக்கிய அனுபல்லவி, "உனக்கு இன்னைக்கு நேரம் சரி இல்ல டி அனு... எல்லாம் அவரால தான்... நீ எதுக்கு நைட் ஃபுல்லா அவரைப் பத்தியே யோசிச்சிட்டு இருந்த?" எனத் தன்னையே கேட்டுக்கொள்ள, 'இன்னும் நீ கிளம்பாம லூசு மாதிரி தனியா பேசிட்டு இருக்கியா?' என்ற மனசாட்சியின் கேள்வியில் தன்னிலை அடைந்து அவசரமாக குளித்து உடை மாற்றி விட்டு பேரூந்தைப் பிடிக்க ஓடினாள்.

அனுபல்லவியும் சாருமதியும் ஒரே நாளில் தான் வேலையில் சேர்ந்தனர். அதனால் தான் என்னவோ இருவருக்கும் இடையிலும் அனைத்தும் பொருந்திப் போகும். சில நாட்களிலே இருவரும் உயிர்த்தோழிகள் ஆக மாறினர். ஒன்றாகவே தங்கியும் இருந்தனர். எப்போதும் வேலைக்குச் செல்லும் போது இருவரும் ஒன்றாகத் தான் ஸ்கூட்டியில் செல்வர். அதனால் அனுபல்லவிக்கு இதுவரை பேரூந்தில் சென்று பழக்கம் இல்லை.

பேரூந்துத் தரிப்பிடத்தில் பேரூந்து வரும் வரை காத்திருந்த அனுபல்லவிக்கு லேசாக பயமாக இருந்தது. இருந்தும் முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளாது பேரூந்துக்காக காத்திருந்தாள். முதல் இரண்டு பேரூந்திலும் சன நெரிசல் என்று ஏறாமல் இருந்த அனுபல்லவி நேரம் வேறு செல்லுவதால் வேறு வழியின்றி அடுத்து வந்த பேரூந்தில் ஏறினாள்.

அதிலும் கூட்டமாக இருக்கவும் நின்று கொண்டே பயணித்தாள். அனுபல்லவியின் அருகில் நின்ற ஒரு ஆடவன் வேண்டும் என்றே அவள் உடலில் உரச, முதலில் அதை கண்டு கொள்ளாமல் தள்ளி நின்றவள் மேலும் மேலும் அவன் அதையே செய்யவும் ஏற்கனவே ஆஃபீஸுக்கு தாமதமாகி உள்ள கடுப்பில் திரும்பி அவனை முறைத்தவள் ஓங்கி அவன் காலை மிதிக்கவும் அவனின் கண்கள் அதிர்ச்சியிலும் வலியிலும் வெளியே தெறித்து விடும் அளவு விரிந்தன.

பேரூந்தில் குழப்பத்தை ஏற்படுத்தாது இருக்க அவனின் முகத்தின் முன் விரல் நீட்டிய அனுபல்லவி, "என்ன? நீ வேணும்னே தெரியாத மாதிரி வந்து வந்து உரசுவாய்... மத்த பொண்ணுங்களை போல நானும் வேற வழி இல்லாம அமைதியா போவேன்னு நினைச்சியா? ஆல்ரெடி செம்ம காண்டுல இருக்கேன் மகனே... மரியாதையா நீயே பஸ்ஸ விட்டு இறங்கி ஓடிடு... இல்ல தர்ம அடி வாங்கி தருவேன்..." எனப் பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியான குரலில் மிரட்டவும் அடிக்குப் பயந்து நடத்துனரிடம் பேரூந்தை நிறுத்தக் கூறி இறங்கி ஓடினான்.

ஒரு வழியாக ஒரு மணி நேரம் பிந்தி ஆஃபீஸை அடைந்த அனுபல்லவி நேரத்தைப் பார்த்து அதிர்ந்தவள் மீட்டிங் நடக்கும் ஹாலை நோக்கி ஓடி மூச்சிறைக்க நிற்கவும் அவளை கேள்வியாகப் பார்த்தான் பிரணவ்.

அனுபல்லவிக்கு முன்னதாகவே ஆஃபீஸ் வந்த சாருமதி அவள் முடிக்காமல் இடையில் விட்டிருந்த வேலையை செய்து முடிக்க, சற்று நேரத்திலேயே மீட்டிங் ஆரம்பமானது.

ஏதோ புதிய ப்ராஜெக்ட் பற்றி பிரணவ் விளக்கிக் கொண்டிருக்க, சாருமதியோ அடிக்கடி கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள் தோழியின் வருகையை எதிர்ப்பார்த்து.

திடீரென, "மிஸ் சாருமதி..." என்ற பிரணவ்வின் கோபக் குரலில் சாருமதி பதறி எழுந்து நிற்க, "நான் இப்போ சொன்னதை இவங்களுக்கு புரியிற மாதிரி எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க..." என அழுத்தமான குரலில் கூறவும், "சா...சார்...‌ அ...அது..." என சாருமதியின் நா தந்தி அடித்தது.

பிரணவ், "இது தான் நீங்க மீட்டிங்கை கவனிக்கிற லட்சணமா? வேலை பார்க்க வந்தீங்களா? இல்ல வேடிக்கை பார்க்க வந்தீங்களா? ப்ராஜெக்ட் பண்ண இஷ்டம் இல்லன்னா இப்பவே கிளம்புங்க..." எனக் கோபமாகக் கூறவும் தலை குனிந்த சாருமதி, "சாரி சார்...‌" என்க, "சிட் டவுன்..."‌என்ற பிரணவ்வின்‌ அழுத்தமான குரலில் அவசரமாக அமர்ந்து கொண்டாள் சாருமதி.

பிரணவ் மீண்டும் பேச ஆரம்பிக்கவும் தான் மூச்சிறைக்க ஓடி வந்தாள் அனுபல்லவி.

தன் கைக் கடிகாரத்தை ஒரு முறை பார்த்து விட்டு பிரணவ் அனுபல்லவியைக் கேள்வியாக நோக்க, "சாரி சார்... அது... பஸ் மிஸ் ஆகிடுச்சு..." என அனுபல்லவி தயங்கிக் கொண்டே கூற, பெருமூச்சு விட்டான் பிரணவ்.

'பாவம் அனு... ஆல்ரெடி பாஸ் செம்ம கோவத்துல இருக்கார்... இவ வேற நேரம் காலம் தெரியாம வந்து மாட்டிட்டா...' என தோழிக்காக மனதில் வருத்தப்பட்டாள் சாருமதி.

பிரணவ், "இது என்ன ஸ்கூலா காலேஜா?" என அமைதியாக வினவவும் புரியாமல் முழித்த அனுபல்லவி, "சார்..." என இழுக்கவும் பிரணவ், "ஸ்கூல் பசங்க போல பஸ் மிஸ் பண்ணிட்டேன்னு ரீசன் சொல்றீங்க... நேத்தே ஆகாஷ் மீட்டிங் பத்தி இன்ஃபார்ம் பண்ணிட்டார் தானே... கொஞ்சம் கூட பன்க்சுவாலிட்டி இல்லயா? இப்படி தான் டெய்லி ஆஃபீஸுக்கு ஆடி அசைஞ்சி வருவீங்களா?" எனக் கேட்டான் கடுமையாக.

பிரணவ்வின் கோபமான பேச்சில் அனுபல்லவியின் கண்கள் கலங்கி விட, பிரணவ்வோ அதனைக் கொஞ்சம் கூட கருத்திற் கொள்ளாது, "கெட் அவுட்..." என வெளியே கை காட்டவும் அதிர்ந்த அனுபல்லவி, "சாரி சார்... நான்..." என ஏதோ கூற வரவும், "ஐ செய்ட் கெட் அவுட்..." எனக் கத்தினான் பிரணவ்.

அதில் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அனுபல்லவியின் கன்னம் தாண்டி வடிய, அழுதுகொண்டே தன் இடத்திற்கு சென்றாள் அனுபல்லவி.

சாருமதி தோழியை எண்ணி கலங்க, பிரணவ்வோ, "இது தான் ஃபர்ஸ்ட் என்ட் லாஸ்ட்டா இருக்கணும்... இனிமே மீட்டிங் இருந்தா கரெக்ட் டைமுக்கு எல்லாரும் அட்டன்ட் பண்ணணும்..." என்று விட்டு தன் பாட்டில் மீண்டும் மீட்டிங்கைத் தொடங்கினான்.

இங்கு தன் இடத்திற்கு வந்த அனுபல்லவியோ பிரணவ்வின் கோபத்தில் கண் கலங்க அமர்ந்து இருந்தாள்.

அனுபல்லவி, "எதுக்கு அவ்வளவு கோவப்படுறார்? அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் நான்? ஒரே ஒரு நாள் தானே லேட் ஆகினேன்..." என மூக்கு உறிஞ்சி உறிஞ்சி தன்னையே கேட்டுக்கொள்ள, 'நீ இன்னைக்கு மட்டுமா லேட்?' என அனுபல்லவியின் மனசாட்சியே அவளுக்கு எதிராக சதி செய்தது.

"அதுக்காக எல்லார் முன்னாடியும் வெச்சி அப்படி திட்டலாமா?" என அனுபல்லவி மூக்கை உறிஞ்ச, 'இப்போ உனக்கு அவர் உன்னை திட்டினது பிரச்சினையா? இல்ல எல்லார் முன்னாடியும் வெச்சி திட்டினது பிரச்சினையா?' எனக் கேட்டது மனசாட்சி.

அனுபல்லவி, "ம்ம்ம்ம்... தெரியல... அவரை அன்னைக்கு ஆக்சிடன்ட் அப்போ காப்பாத்தினதுக்காகவாவது கொஞ்சம் பாசமா பேசலாம் இல்லையா? பாசமா எதுக்கு? இப்படி திட்டாம இருக்கலாமே..." என மீண்டும் கண் கலங்க, 'அட அறிவுக் கொழுந்தே... நீ காப்பாத்தினது அவருக்கு எப்படி தெரியும்? நீ சொன்னியா? அது மட்டும் இல்லாம இதுக்கு முன்னாடி இருந்த ப்ராஜெக்ட் மேனேஜர் கூட உன்னை திட்டி இருக்கார்ல... அப்போ எல்லாம் நீ இப்படி அழுதுட்டு இருக்கலயே...' என மனசாட்சி சரியான பாய்ன்ட்டைப் பிடிக்கவும், "அ...அது... அது..." என என்ன கூறுவது எனத் தெரியாது விளித்தாள்.

அப்போது அனுபல்லவிக்கு அருகில் அழுத்தமான காலடி ஓசை கேட்கவும் அதிர்ந்து திரும்ப, அவளுக்கு பின்னே கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி நின்றிருந்தான் பிரணவ்.

அனுபல்லவி, "சார்..." என எழுந்து நிற்க, "கம் இன் டு மை கேபின்..." என்று விட்டு சென்றான்.

பிரணவ் சென்றதும் அனுபல்லவி நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், 'நான் தனியா உளறினதை கேட்டு இருப்பாரோ... ச்சே ச்சே இருக்காது...' என சிந்தித்துக் கொண்டிருக்க, மீட்டிங் முடிந்து வந்த சாருமதி அனுபல்லவியின் தோள் தொடவும் தன்னிலை அடைந்தாள்.

அனுபல்லவியை அணைத்துக்கொண்ட சாருமதி, "சாரி டி அனு... என்னால தான் நீ வீணா சார் கிட்ட திட்டு வாங்கின... நான் மட்டும் உன்ன விட்டுட்டு வரலன்னா நீ எல்லார் முன்னாடியும் திட்டு வாங்கி இருக்க வேணாம்..." என்று வருத்தப்படவும் புன்னகைத்த அனுபல்லவி, "ப்ச்... சாரு... என்ன இது? நீ என்ன வேணும்னா என்ன விட்டுட்டு வந்த? அடுத்தது இதுல உன் தப்பு எதுவும் இல்ல டி... நான் தானே லேட்டா எழுந்திரிச்சேன்... சரி அதை விடு... லேட் ஆகிடுச்சுன்னு ஓடி வந்தது டயர்டா இருக்கு டி... எனக்கு ஒரு காஃபி எடுத்துட்டு வந்து வைக்கிறியா? நான் போய் ப்ராஜெக்ட் மேனேஜரை பார்த்துட்டு வரேன்..." என்று விட்டு சென்றாள்.

லேப்டாப்பில் மூழ்கி இருந்த பிரணவ் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும், "யேஸ் கம் இன்..." என்கவும் தயக்கமாக உள் நுழைந்த அனுபல்லவி பிரணவ் இன்னுமே லேப்டாப்பில் இருந்து பார்வையை அகற்றாமல் இருக்கவும் தொண்டையைச் செறுமி தன் இருப்பை உணர்த்தினாள்.

அதில் அனுபல்லவியை நிமிர்ந்து பார்த்த பிரணவ் தனக்கு முன் இருந்த இருக்கையைப் பார்வையால் காட்டி அமருமாறு சைகை செய்ய, 'வாய்ல என்ன கொழுக்கட்டையா வெச்சி இருக்கார்? வாய திறந்து பேசினா அப்படியே முத்து உதிர்ந்திடும்...' என அனுபல்லவி மனதில் பிரணவ்வை வருத்து எடுத்துக்கொண்டே அவன் காட்டிய இருக்கையில் அமர, "என்ன? திட்டி முடிச்சிட்டீங்களா என்னை?" என்ற பிரணவ்வின் குரலில் அதிர்ந்து இருக்கையை விட்டு எழுந்து நின்றாள்.

அனுபல்லவி, "சா...ர்..." எனத் தடுமாற, அவளைக் கேள்வியாக நோக்கிய பிரணவ், "உட்காருங்க மிஸ் பல்லவி..." என்கவும் அனுபல்லவியின் மனதில் ஏதோ சொல்ல முடியாத உணர்வு.

'பல்லவி...' என அனுபல்லவி தன் பெயரையே மனதில் மீட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, மேசையில் தட்டி அவளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிய பிரணவ், "என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க பல்லவி? சொன்னது புரியலயா?" என்கவும் தான் அவசரமாக பிரணவ் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.

பிரணவ் லேப்டாப்பில் ஏதோ டைப் செய்து ப்ரின்ட் எடுத்து அனுபல்லவியிடம் வழங்க, 'லேட்டா வந்ததுக்கு எம்.டி கிட்ட சொல்லி என்னை வேலையை விட்டு தூக்க போறாரோ?' என யோசித்த வண்ணம் அதனை வாங்கிப் படித்த அனுபல்லவியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

அனுபல்லவி, "சார்..." என இழுக்க, "புரிஞ்சிதா மிஸ் பல்லவி? என்ன போட்டு இருக்கு?" எனக் கேட்டான் பிரணவ்.

"ப்ராஜெக்ட் பத்தி சார்..." என்ற அனுபல்லவியிடம், "ஹ்ம்ம்... உங்களோட ஓல்ட் ப்ராஜெக்ட் வர்க்ஸ் பத்தி பார்த்தேன் நான்... இந்த நியூ ப்ராஜெக்ட்ல நம்ம டீம்ம லீட் பண்ண போறது நீங்க தான்... டுமோரோ இன்னொரு மீட்டிங் அரேன்ஜ் பண்ணி மத்த டீம் மேட்ஸுக்கு இன்ஃபார்ம் பண்றேன்... அதுவரை இதை பத்தி யார் கிட்டயும் சொல்ல வேணாம்... உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா ஆகாஷ் கிட்ட கேட்டுக்கோங்க..." என பிரணவ் கூறவும் அனுபல்லவி சம்மதமாகத் தலையசைக்க, "அப்புறம் இன்னொரு விஷயம்... இனிமே ஆஃபீஸுக்கு லேட் பண்ணாம வரப் பாருங்க... லீடர்ஷிப் அப்படிங்கிறது சாதாரண விஷயம் இல்ல... நிறைய பொறுப்பு இருக்கு அதுல... உங்கள பார்த்து தான் உங்களுக்கு கீழ இருக்குறவங்க இயங்குவாங்க..." என்றான் பிரணவ்.

அனுபல்லவி, "சாரி சார்... இனிமே ஒழுங்கா நடந்துக்குறேன்..." என்று விடை பெற்றாள்.

அனுபல்லவி சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்த பிரணவ்வின் கண் முன் மீண்டும் அந்த மங்கலான முகம் தெரிய, தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

ஏதோ யோசனையுடனே வந்த அனுபல்லவியைப் பார்த்து புருவம் சுருக்கிய சாருமதி, "என்னாச்சு அனு? சார் திரும்ப திட்டிட்டாரா?" என வருத்தத்துடன் கேட்கவும் புன்னகைத்த அனுபல்லவி, "இல்ல சாரு..." என்று பிரணவ் தந்த ஃபைலைக் காட்டினாள்.

அதனை வாங்கிப் படித்த சாருமதி மகிழ்ச்சியில் அனுபல்லவியைக் அணைத்துக்கொண்டு, "ஹே சூப்பர் டி அனு..." என்க, "என்னால முடியுமா சாரு? எனக்கு பயமா இருக்கு..." என்றாள் அனுபல்லவி கவலையாக.

அவளின் தோளில் தட்டிக் கொடுத்த சாருமதி, "அனு... இது உன் திறமைக்கு கிடைச்ச அங்கீகாரம்... உன்னோட ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட் வேற... உன்ன நம்பி சார் இந்த ப்ராஜெக்ட்டை ஒப்படைச்சி இருக்கார்... நீ இதை சக்சஸ்ஃபுல்லா முடிச்சு காட்டு..." என அனுபல்லவியை ஊக்குவிக்கவும் முகம் மலர்ந்தாள் அனுபல்லவி.

மறுநாள் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, மீண்டும் எதற்காக ஒரு மீட்டிங் என அனைவரும் புரியாமல் விளிக்க, சாருமதியும் அனுபல்லவியும் எதையும் காட்டிக்கொள்ளாது அமைதியாக இருந்தனர்.

பிரணவ் வந்ததும் அனைவரும் அமைதியாக, "குட் மார்னிங் எவ்ரியோன்... திரும்ப எதுக்கு இந்த மீட்டிங்னு நீங்க யோசிக்கிறது புரியுது... நேத்து நான் நியூ ப்ராஜெக்ட் பத்தி எல்லாமே சொன்னேன்... எங்களுக்கு வன் மந்த் தான் டைம் இருக்கு.‌‌.. டெட்லைனுக்கு முன்னாடி கரெக்ட்டா ப்ராஜெக்ட்டை முடிக்கணும்... இந்த ப்ராஜெக்ட்டை மட்டும் நாங்க சக்சஸ்ஃபுல்லா முடிச்சோம்னா இதுக்கு அப்புறம் பெரிய பெரிய ப்ராஜெக்ட் நமக்கு கிடைக்க சான்ஸ் இருக்கு... சோ இந்த ப்ராஜெக்ட் ஃபுல்லா உங்களை கைட் பண்ண ஒரு டீம் லீடர் அவசியம்..." என்கவும் வழமையாக டீம் லீடராக இருக்கும் அர்ச்சனா ஆவலுடன் எழுந்துகொள்ள, "மிஸ் பல்லவி தான் உங்களை லீட் பண்ண போறாங்க..." எனப் பிரணவ் கூறவும் சாருமதி கை தட்ட, புன்னகையுடன் எழுந்து நின்றாள் அனுபல்லவி.

பிரணவ் அனுபல்லவியின் பெயரைக் கூறவும் அர்ச்சனாவின் நண்பர்கள் அவளைக் கேலியாகப் பார்க்க, அதனைக் கண்டு உள்ளம் கொதித்தவள் அனுபல்லவியின் மீது வன்மம் கொண்டாள்.

பிரணவ் வந்த அன்றிலிருந்தே அர்ச்சனாவிற்கு அவன் மீது ஒரு கண். இப்போது டீம் லீடர் தெரிவு செய்யும் போது முதல் ஆளாக எழுந்ததே அவனுடன் அதிக நேரம் செலவழித்து நெருக்கமாக வேண்டும் என்று தான்.

ஆனால் பிரணவ் அனுபல்லவியை டீம் லீடராகத் தெரிவு செய்யவும் ஆத்திரம் அடைந்தவள் இருக்கையில் பட்டென்று அமர, பிரணவ்வோ ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் பேசத் தொடங்கினான்.

"மிஸ் பல்லவி இனிமே உங்களை லீட் பண்ணுவாங்க... ஆல்ரெடி நான் உங்களுக்கு ப்ராஜெக்ட் பத்தி சொல்லி இருக்கேன்... அதனால எந்த பிரச்சினையும் இருக்காதுன்னு நம்புறேன்... ப்ராஜெக்ட் சம்பந்தமா உங்களுக்கு ஏதாவது டவுட்ஸ் இருந்தா நீங்க மிஸ் பல்லவி கிட்ட கேட்கலாம்..." என அனைவருக்கும் பொதுவாகக் கூறிய பிரணவ் அனுபல்லவியின் புறம் திரும்பி, "மிஸ் பல்லவி... நீங்க இந்த வன் மந்த்தும் எக்ஸ்ட்ரா டைம் வர்க் பண்ண வேண்டி வரும்... டீம் மெம்பர்ஸுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தா அதை என்னன்னு கேட்டு நீங்க க்ளியர் பண்ணுங்க... முடியாத பட்சத்துல என்னை வந்து பாருங்க..." எனக் கட்டளை பிறப்பித்தான்.

அவனின் ஆளுமையில் ஒரு நிமிடம் கண் இமைக்க மறந்தாள் அனுபல்லவி.

பிரணவ், "ஓக்கே காய்ஸ்... சியர் அப்... எல்லாரும் ஃபுல் கோர்டினேஷன்ல இந்த ப்ராஜெக்ட்டை சக்சஸா முடிக்கலாம்... இன்னைக்கே வேலையை ஆரம்பிங்க... ஆல் தி பெஸ்ட் காய்ஸ்..." எனப் புன்னகையுடன் கூறவும் அனைவரின் பார்வையும் ஒரே விதமாக இருந்தது, 'இவனுக்கு சிரிக்கவும் தெரியுமா?' என்று.

அர்ச்சனா கோபத்தில் மீட்டிங் ஹாலில் இருந்து முதல் ஆளாக வெளியேற, மற்றவர்களும் சென்றதும் தலையைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் பிரணவ்.

இன்று காலையில் இருந்தே அவனுக்கு அடிக்கடி அந்த விபத்து நடந்த விதமும் அந்த மங்கலான முகமும் நினைவுக்கு வந்து அவனுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

கண்களை அழுத்த மூடி தலையை இரு புறமும் ஆட்டி பிரணவ் தன் வலியைக் கட்டுப்படுத்த முயல, அது குறைந்த பாடில்லை.

பல முறை தட்டியும் உள்ளிருந்து பதில் வராததால் வேறு வழியின்றி கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்த அனுபல்லவி பிரணவ்வின் நிலையைக் கண்டு அதிர்ந்தவள், "சா...சார்... என்னாச்சு? சார்..." என அவனை உலுக்க, பிரணவ்வோ பதில் கூறாது வலியில் துடித்தான்.

அனுபல்லவி, "என்னாச்சு சார்? வாங்க ஹாஸ்பிடல் போகலாம்..." என்கவும் மறுப்பாகத் தலை அசைத்த பிரணவ் அனுபல்லவியின் கரத்தை அழுத்தமாகப் பற்றி தன் வலியைக் குறைக்க முயல, பிரணவ்வின் இறுக்கமான பிடியில் அனுபல்லவி வலியில் முகம் சுருக்கினாலும் அவனின் வலியையும் அதன் மூலம் உணர்ந்து கொண்டாள்.

"வாங்க சார் ஹாஸ்பிடல் போகலாம்..." என அனுபல்லவி மீண்டும் அழைத்தும் மறுத்தவன் தன் பிடியை விடாது, "ஆ...ஆகாஷை... கூப்பிடுங்க..." என்றான் பிரணவ்.

பிரணவ்வின் நிலையைக் கண்டு கண் கலங்கிய அனுபல்லவி மறு கரத்தால் தன் கைப்பேசியை எடுத்து ஆகாஷிற்கு தகவல் தெரிவித்தாள்.

அவன் வந்ததும், "தேங்க்ஸ்ங்க... சாரை நான் பார்த்துக்குறேன்... நீங்க கிளம்புங்க... ஆஹ் அப்புறம்... இது வெளியே யாருக்கும் தெரிய வேணாம்..." என ஆகாஷ் பிரணவ்வின் உடல்நிலை பற்றி யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காகக் கூற, அனுபல்லவி புரிந்து கொண்டதாய் தலை அசைக்கவும் பிரணவ்வை அழைத்துக்கொண்டு வேறு வழியாக வெளியேறினான் ஆகாஷ்.

பிரணவ்வின் தலை மறையும் வரை அவன் சென்ற திசையையே கண்ணீருடன் நோக்கிக் கொண்டிருந்தாள் அனுபல்லவி.

************************************

"ஹஹஹா... எவ்வளவு பெரிய விஷயம் சொல்லி இருக்க... அன்னைக்கு அந்த பிரணவ்வை லாரி வெச்சி தூக்க பிளான் போட்டும் அவன் தப்பிச்சிட்டான்... ஆனா அதை விட பெரிய நியூஸ் இப்போ கிடைச்சிருக்கு... இது மூலமா அந்த பிரணவ் அவமானத்துல வெந்து சாகணும்..." என்றான் அவன் ஆத்திரத்துடன்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 7

வலியில் துடித்துக்கொண்டிருந்த பிரணவ்வை அழைத்துக்கொண்டு ஆகாஷ் மருத்துவமனை செல்லப் பார்க்க, பிரணவ்வோ, " வீட்டுக்கு போகலாம் ஆகாஷ்..." என்றான் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து கொண்டு.

ஆகாஷ், "பட் பாஸ் நீங்க..." என ஏதோ கூற வர, "சொன்னத செய்ங்க ஆகாஷ்..." என்ற பிரணவ்வின் அழுத்தமான குரலில் வேறு வழியின்றி பிரணவ் தங்கியிருந்த வீட்டிற்கு காரை செலுத்தினான் ஆகாஷ்.

விழி மூடிக் கிடந்தவனின் மனமோ அந்த முகம் அறியாப் பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

வீட்டை அடைந்ததைக் கூட அறியாது சிந்தனைகளுக்கு மத்தியில் உழன்று கொண்டிருந்த பிரணவ்வைக் கலைத்தது ஆகாஷின் குரல்.

"பாஸ்... வந்திடுச்சி..." என்கவும் இமை திறந்து சுற்று முற்றும் பார்த்த பிரணவ் காரிலிருந்து இறங்கிக்கொள்ள, அவனைப் பின் தொடர்ந்து வரப் பார்த்த ஆகாஷைத் தடுத்தவன், "நீங்க ஆஃபீஸ் கிளம்புங்க ஆகாஷ்... ஐம் ஓக்கே... ப்ராஜெக்ட் சம்பந்தமா டீம் மெம்பர்ஸுக்கு ஹெல்ப் பண்ணுங்க..." எனக் கட்டளை இடவும் சரி எனத் தலை அசைத்து விட்டு ஆகாஷ் கிளம்பினான்.

சோர்வாக வீட்டினுள் நுழைந்த பிரணவ் தலைவலி தாங்காது மாத்திரை சாப்பிட்டவன் கொஞ்சம் நேரம் உறங்கலாம் என தன் அறைக்குச் சென்றான்.

உடை மாற்ற தன் உடைகள் அடங்கி இருந்த பையைத் திறந்தவனின் பார்வையில் பட்டது அந்த இளமஞ்சள் நிற துப்பட்டா.

கண்கள் சுருக்கி அதனை யோசனையுடன் பார்த்தவாறே வந்து கட்டிலில் அமர, அனுபல்லவியின் முகம் தானாகவே அவனின் மனக்கண் முன் வந்து சென்றது.

"யார் அவள்? இந்த துப்பட்ட்வோட சொந்தக்காரி யார்? அவ முகம் ஏன் எனக்கு ஞாபகம் வரது இல்ல? ஏன் பல்லவியைப் பார்க்கும் போது மட்டும் எனக்கு ஏதோ ஒரு உணர்வு தோணுது?" எனப் பிரணவ் தன்னையே கேட்டுக்கொள்ள, அவனுக்கு தலைவலி அதிகரித்தது தான் மிச்சம்.

அப்படியே கட்டிலில் சாய்ந்தவன் அந்த துப்பட்டாவினால் முகத்தை மூடிக்கொண்டு உறக்கத்தைத் தழுவினான்.

************************************
"எல்லா நியூஸ் சேனல்ஸ், சோசியல் மீடியாஸ்லயும் அந்த பிரணவ் பத்தின நியூஸை கொடுக்கட்டுமா சார்?" என அவனின் பீ.ஏ. கேட்கவும் விஷமமாகப் புன்னகைத்தபடி மறுப்பாகத் தலையசைத்தவன், "இப்பவே வேணாம்... எதுக்கும் சரியான நேரம்னு ஒன்னு இருக்கு... சரியான சமயத்துல அவன பழி வாங்குவேன் நான்... அது சாவை விட கொடுமையானதா இருக்கும்..." என்றான் அவன் குரூரமாக.

************************************
மறுநாள் காலையில் வழமையை விட விரைவாக எழுந்த அனுபல்லவி அவசரமாகத் தயாராகிக் கொண்டிருக்க, அப்போது தான் கண் விழித்த சாருமதி தன் தோழியைப் புரியாமல் பார்த்தாள்.

சாருமதி, "இவ்வளவு சீக்கிரமா எங்க கிளம்பிட்டிருக்க அனு?" எனக் கேட்கவும், அவள் பக்கம் திரும்பாமலே, "ஆஃபீஸ் டி... நான் கிளம்புறேன்..." என்ற அனுபல்லவி பேக்கை மாட்டிக்கொண்டு வெளியே ஓடினாள்.

நேராக பேரூந்து நிலையத்தை நோக்கி ஓடியவளின் போதாத நேரம் அவ்வளவு காலையில் எந்த பேரூந்துமே வரவில்லை.

"ப்ச்..." என சலித்துக்கொண்டே பாதையில் வரும் வாகனங்களை நோக்கி லிஃப்ட் கேட்டு கரத்தை நீட்ட, அவளுக்கு முன் கருப்பு நிற ஆடி கார் ஒன்று வந்து நின்றது.

அனுபல்லவி, "தேங்க்ஸ் சார்... என்னை எம்.எல்‌. கான்ஸ்ட்ரக்ஷன் கிட்ட ட்ராப் பண்ணிடுங்க..." என காரில் ஏறிக்கொண்டே கூற, இன்னும் காரை இயக்காமல் இருக்கவும் ட்ரைவர் சீட்டின் பக்கம் திரும்பியவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

காலையில் சீக்கிரமே எழுந்து தயாராகி வந்ததே பிரணவ்வின் உடல்நிலையைப் பற்றி அறிந்து கொள்ளத் தான். இப்போது கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல பிரணவ்வே அவள் முன் வந்து நிற்கவும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தவள், "சா..." என ஏதோ கூற வர, பிரணவ் காரை வேகமாக இயக்கவும் தான் தன்னிலை அடைந்தாள் அனுபல்லவி.

அனுபல்லவி, 'ப்ச் அனு... என்ன டி லூசு மாதிரி பண்ணிட்டு இருக்க? அவர் உன்ன பத்தி என்ன நினைப்பார்?' என தலையில் அடித்தபடி மனதில் தன்னையே கடிந்துகொள்ள, அவளின் செய்கைகளை கடைக் கண்ணால் பார்த்து விட்டு மீண்டும் சாலையிலேயே பார்வையைப் பதித்தான் பிரணவ்.

"சாரி சார்... அது... நீங்கன்னு தெரியல... நான் வேற யாரோன்னு நினைச்சிட்டேன்..." என அனுபல்லவி தயங்கியபடி கூறவும் பிரணவ்விடமிருந்து, "ம்ம்ம்..." என்ற பதில் மட்டுமே வந்தது.

அனுபல்லவி, "சரியான உம்மனா மூஞ்சி... கொஞ்சம் வாய திறந்து பேசினா தான் என்னவாம்?" என நேரே பார்த்தவாறு முணுமுணுக்க, அது பிரணவ்வின் செவிகளை எட்டினாலும் அவன் பதில் உரைக்கவில்லை.

பிரணவ்வின் கார் எம்.எல். கான்ஸ்ட்ரக்ஷனை அடையவும் காரைப் பார்க் செய்தவன் அனுபல்லவி இறங்கும் வரை காத்திருக்க, அவளோ வாய் வரை வந்த கேள்வியைக் கேட்காமல் கார்க் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள்.

அப்போது தான் பிரணவ் அவளின் சிவந்திருந்த மணிக்கட்டை அவதானித்தான்.

நேற்று அவன் வலியில் துடித்த போது அனுபல்லவியின் கரத்தை அழுத்திப் பிடித்ததால் ஏற்பட்ட அடையாளம் எனப் புரிந்து கொண்டவன் அவசரமாக இறங்கி உள்ளே சென்றான்.

"ச்சே... இவ்வளவு நல்ல சான்ஸ் கிடைச்சும் அவர் கூட பேசி அவருக்கு இப்போ எப்படி இருக்குன்னு கேட்ட முடியாம போச்சே..." என அனுபல்லவி சலித்துக்கொள்ள, 'ஆமா... வாயை திறந்து பேச தைரியம் இல்ல... இப்போ இங்க வந்து ஒவ்வொன்னு சொல்ற...' என வழமை போல் அவளின் மனசாட்சி காரி உமிழ்ந்தது.

அனுபல்லவி தன் இடத்தில் வந்து அமர்ந்து ப்ராஜெக்ட் வேலையைக் கவனித்துக் கொண்டிருக்க, "பே..." என சாருமதி அவள் காதின் அருகில் வந்து கத்தவும் பயத்தில் துள்ளி விழுந்தவள் தோழியின் கேலிச் சிரிப்பில் தன் நெஞ்சை நீவி தன்னை சமன்படுத்த முயன்றாள்.

சாருமதி, "என்ன பயந்துட்டியா? அது சரி... எதுக்கு அவ்வளவு அவசரமா ஆஃபீஸ் வந்த?" எனக் கேட்கவும் அவ்வளவு நேரம் சாருமதியை முறைத்துக் கொண்டிருந்த அனுபல்லவி தோழியிடம் என்ன கூறி சமாளிக்கவென்று புரியாது திருட்டு முழி முழித்தவள், "அது... நான்... ஆஹ்... ப்ராஜெக்ட் விஷயமா சாரு... ப்ராஜெக்ட் விஷயமா..." என்றாள் சமாளிப்பாக.

"ஹ்ம்ம்... சரி ஓக்கே டி... நான் என் ப்ளேஸுக்கு போறேன்..." என்று விட்டு சாருமதி கிளம்பவும் அவ் வழியாக வந்த அர்ச்சனா தன் கையில் வைத்திருந்த காஃபியை வேண்டும் என்றே அனுபல்லவி தன் மேசை மீது வைத்திருந்த ஃபைலில் கொட்டி விட்டாள்.

அனுபல்லவி, "ஐயோ என் ஃபைல்..." என பதற, "ஓஹ் மை காட்... சாரி அனு... சாரி... சீரியஸ்லி நான் கவனிக்கல..." என்ற அர்ச்சனா ஃபைலைத் துடைப்பது போல் காஃபியை எல்லா இடத்திலும் தேய்த்து விட்டாள்.

"என்ன பண்றீங்க அர்ச்சனா? அது இன்னும் ஸ்பொய்ல் ஆகிடுச்சு..." எனக் கத்தவும், "அச்சோ... சாரி அனு..." என அர்ச்சனா மீண்டும் அதே கதையைக் கூறவும் அவளை முறைத்த அனுபல்லவி, "ப்ளீஸ் இதை நானே பார்த்துக்குறேன்... நீங்க கிளம்புங்க..." என்றாள் கடுப்பாக.

தோளைக் குலுக்கிய அர்ச்சனா, "ம்ம்ம் ஓக்கே..." என அங்கிருந்து சென்றவள், 'இது வெறும் ஆரம்பம் மட்டும் தான் அனு... பிரணவ் வாயாலயே உனக்கு இந்த ப்ராஜெக்டை தந்ததுக்கு ஃபீல் பண்ண வைக்கல நான் அர்ச்சனா இல்ல...' என்றாள் மனதில்.

அர்ச்சனா சென்றதுமே அனுபல்லவியின் மேசை மீதிருந்த தொலைபேசி அலற, அனுபல்லவி எடுத்து காதில் வைத்ததும், "அன்னைக்கு நான் தந்த ஃபைல எடுத்துட்டு என் கேபின் வாங்க..." என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

பிரணவ் தான் அழைத்திருந்தான். என்ன கூறப் போகிறானோ என்ற பயத்துடனே காஃபி கொட்டப்பட்ட ஃபைலையும் எடுத்துக்கொண்டு அவனின் அறைக்குச் சென்றாள் அனுபல்லவி.

அனுபல்லவி உள்ளே வந்ததுமே தன் மேசை ட்ராயரைத் திறந்து அதிலிருந்து ஏதோ களிம்பொன்றை எடுத்து அவளிடம் நீட்டினான் பிரணவ்.

அனுபல்லவி அவனைக் கேள்வியாக நோக்க, "சாரி மிஸ் பல்லவி... நேத்து உங்களை தெரியாம ஹர்ட் பண்ணிட்டேன்..." என்ற பிரணவ் தயக்கமாக அவளின் சிவந்திருந்த மணிக்கட்டைக் ஏறிடவும் அனுபல்லவியின் முகத்தில் மெல்லியதாய் ஒரு முறுவல்.

"தேங்க்ஸ்..." என அனுபல்லவி நன்றி உரைத்து விட்டு அதனை வாங்கிக்கொள்ளவும் பிரணவ் ஃபைலைக் கேட்டு கரத்தை நீட்ட, அவளோ புரியாமல் விளித்தாள்.

பிரணவ், "ஃபைல்..." என்கவும் தான் அது பற்றிய நினைவு வந்து தலை குனிந்து நின்றாள் அனுபல்லவி.

"என்னாச்சு?" என்ற பிரணவ்வின் கேள்விக்கு, தன் பின்னே மறைத்து வைத்திருந்த கிழிந்த ப்ராஜெக்ட் ஃபைலை அனுபல்லவி எடுத்து நீட்டவும், "என்ன இது?" எனக் கேட்டான் பிரணவ் கோபமாக.

"சார் அது..." என ஏதோ கூற வர, "உங்க எந்த எக்ஸ்ப்ளனேஷனும் எனக்கு அவசியம் இல்ல... உங்களை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைச்சா இப்படி தான் நீங்க அதை பண்ணுவீங்களா?" எனப் பிரணவ் பல்லிடுக்கில் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, அனுபல்லவியின் விழிகள் கண்ணீரைச் சுரந்தன.

அனுபல்லவி, 'இப்போ தானே நல்லா பேசினார்... அதுக்குள்ள கோவப்படுறார்... இவரைப் புரிஞ்சிக்கவே முடியல என்னால...' என மனதில் எண்ணியவாறு, "சார் என்ன நடந்திச்சுனா..." என தன்னிலை விளக்கம் கொடுக்க முற்பட்டாள்.

ஆனால் பிரணவ்வோ அதனைக் காதிலே வாங்காது அனுபல்லவியின் பேச்சை நிறுத்த அவளின் முகம் முன் கரம் நீட்டியவன், "எதுவும் சொல்ல வேணாம்... அதை டேபிள்ல வெச்சிட்டு போங்க நீங்க..." எனக் கோபமாகக் கூறவும் கலங்கிய விழிகளுடனே அங்கிருந்து புறப்பட்டாள் அனுபல்லவி.

அனுபல்லவி பிரணவ்வின் அறையினுள் நுழைவதும் சற்று நேரத்தில் அழுதுகொண்டே வெளி வருவதையும் அவதானித்துக் கொண்டிருந்த அர்ச்சனாவின் மனம் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட, அதற்கு வேட்டு வைக்கும் விதமாக அவளின் மேசை மீதிருந்த தொலைபேசி ஒலி எழுப்பியது.

பிரணவ் அர்ச்சனாவைத் தன் கேபினுக்கு வருமாறு கட்டளை இடவும் புதிய ப்ராஜெக்ட்டை தன்னிடம் ஒப்படைக்க போவதாக நம்பிக்கொண்டு அர்ச்சனா பிரணவ்வின் அறைக்குச் சென்றாள்.

செல்லும் வழியில் இடைப்பட்ட அனுபல்லவியை கேலிப் பார்வை பார்த்து விட்டு செல்ல, அனுபல்லவியும் பிரணவ் அந்த ப்ராஜெக்ட்டை அர்ச்சனாவிடம் ஒப்படைக்கத் தான் அழைக்கிறான் என நினைத்தாள்.

அர்ச்சனா உள்ளே செல்லும் போது பிரணவ் கணினித் திரையில் ஏதோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அர்ச்சனா வந்ததை அறிந்தவன், "உட்காருங்க அர்ச்சனா..." என்கவும் வாயெல்லாம் பல்லாக அவன் முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் அர்ச்சனா.

தன் இருக்கையில் ஒரு பக்கம் சாய்ந்து அமர்ந்து கொண்ட பிரணவ் ஒரு விரலால் தாடையைத் தடவியபடியே அர்ச்சனாவின் முகத்தை தீவிரமாக நோக்கினான்.

அர்ச்சனா பிரணவ்வின் தீர்க்கமான பார்வையை காதல் பார்வை என எண்ணினாள் போலும். அவனைப் பார்த்து வெட்கப்பட, தன் முன் இருந்த கணினியை பிரணவ் அர்ச்சனாவின் பக்கம் திருப்பவும் அதிர்ந்த அர்ச்சனாவின் மனதில் பயப் பந்து உருள ஆரம்பித்தது.

இருக்கையில் நேராக அமர்ந்து கொண்ட பிரணவ், "எதுக்காக இப்படி பண்ணினீங்க?" எனக் கேட்டான் கோபமாக.

அர்ச்சனா, "சார் நான் இல்ல... அது அனு..." என ஏதோ கூற வர, "ஜஸ்ட் ஸ்டாப் இட்..." என பிரணவ் கோபத்தில் மேசையில் ஓங்கித் தட்டவும் பயத்தில் எழுந்து நின்று விட்டாள் அர்ச்சனா.

பிரணவ், "நீங்க எதுக்காக இப்படி பண்ணினீங்கன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா?" என்கவும் அனுபல்லவி தான் ஏதோ தன்னைப் பற்றி தவறாகப் போட்டுக் கொடுத்து உள்ளாள் என அர்ச்சனா மனதில் மேலும் அனுபல்லவி மேல் வன்மம் வளர்த்துக் கொள்ள, "இது தான் நான் உங்களுக்கு தர ஃப்ர்ஸ்ட் என்ட் லாஸ்ட் வார்னிங்... திரும்ப இப்படி ஏதாவது சின்ன பிள்ளைத்தனமா பண்ணினீங்கன்னா மூட்டை முடிச்சை எல்லாம் கட்டிக்கிட்டு வீட்டுக்கு போக வேண்டி வரும்..." என்றான் பிரணவ் மிரட்டலாய்.

அதில் லேசாக பயம் வந்தாலும் வெறும் ப்ராஜெக்ட் மேனேஜர் இவன் என்ன செய்து விடப் போகிறான் என்ற தைரியத்தில், "இதுக்கு முன்னாடி எல்லாம் நான் தான் எங்க டீமை லீட் பண்ணேன்... இப்போ நீங்க புதுசா வந்து ஒன்னுமே தெரியாத அந்த அனு கிட்ட இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்டை தூக்கி கொடுத்து இருக்கீங்க..." என அர்ச்சனா சற்று குரலை உயர்த்தவும் கேலியாக சிரித்த பிரணவ், "இதுக்கு முன்னாடி இருந்த ப்ராஜெக்ட் மேனேஜர் உங்க அப்பாவோட ஃப்ரெண்ட் அப்படிங்கிறதால தான் உங்களை லீடரா போட்டார்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா மிஸ் அர்ச்சனா? டோன்ட் ஜட்ஜ் அ புக் பை இட்ஸ் கவர்..‌. அன்டர்ஸ்டேன்ட்..." என்றான் அழுத்தமாய்.

பிரணவ்வை முறைத்த அர்ச்சனா கோபமாக எழுந்து அங்கிருந்து வெளியே செல்ல, கதவைத் திறக்கப் போனவளை சொடக்கிட்டு அழைத்த பிரணவ், "அப்புறம் இன்னொரு விஷயம்... இந்த பிரணவ் முன்னாடி வாய்ஸ் ரெய்ஸ் பண்ணுறது இதுவே கடைசியா இருக்கட்டும்... இல்ல நடக்குறதே வேற..." என்கவும் காலைத் தரையில் உதைத்தபடி அர்ச்சனா அங்கிருந்து வெளியேறவும் ஆகாஷ் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

கோபமாக செல்லுபவளையே புரியாமல் பார்த்தபடி வந்த ஆகாஷ், "என்னாச்சு பாஸ்? எதுக்காக அந்த பொண்ணு இந்த முறை முறைச்சிட்டு போகுது? ஒருவேளை நீங்க ஏதாவது....." என இழுக்க, பிரணவ் பார்த்த பார்வையில் கப்சிப் என வாயை மூடிக் கொண்டான்.

பிரணவ், "இன்னைக்கு ஷெடியூல் என்ன ஆகாஷ்?" என்க, "வன் அ க்ளாக் போர்ட் மீட்டிங் இருக்கு பாஸ்... அது முடிஞ்சதும் மிஸ்டர் மெஹெரா கூட ஜூம் மீட்டிங் இருக்கு பாஸ்... ப்ராஜெக்ட் சம்பந்தமா உங்க கூட ஏதோ இம்பார்ட்டன்ட்டா டிஸ்கஸ் பண்ண இருக்குறதா சொன்னார்..." என்றான்.

"ஹ்ம்ம் ஓக்கே... மிஸ்டர் மெஹெரா கூட இருக்குற மீட்டிங்ல மிஸ் பல்லவியையும் ஜாய்ன் பண்ணிக்க சொல்லுங்க... அதுக்கு முன்னாடி மிஸ் பல்லவியை என்னை வந்து பார்க்க சொல்லுங்க..." என பிரணவ் அடுத்தடுத்து கட்டளைகளைப் பிறப்பிக்க, பட் பாஸ்... மிஸ் பல்லவி எதுக்கு அந்த மீட்டிங்ல?" எனக் கேட்டான் ஆகாஷ் புரியாமல்.

பிரணவ், "அவங்க தானே இந்த ப்ராஜெக்ட்ல டீம் மெம்பர்ஸ லீட் பண்ண போறாங்க... சோ இந்த ப்ராஜெக்ட் நம்ம கம்பனிக்கு எவ்வளவு இம்பார்டன்ட்னு அவங்களுக்கு புரியணும்..." என்கவும் ஆகாஷ் சரி எனத் தலையசைத்தான்.

ஆகாஷ், "அப்புறம் பாஸ்..." என ஏதோ கூற வருவதும் தயங்குவதுமாக இருக்க, "என்னாச்சு ஆகாஷ்?" எனக் கேட்டான் பிரணவ் தொலைபேசியில் யாருக்கோ அழைத்தபடி.

"லக்ஷ்மி மேடம் உங்க மேல ரொம்ப கோவமா இருக்காங்க பாஸ்... நீங்க இந்த கம்பனிய எம்.டியா எடுத்து நடத்தணும்னு அவங்க விரும்புறாங்க... நீங்களா சொல்லலன்னா மேடமே எல்லாருக்கும் அதைப் பத்தி தெரியப்படுத்துறேன்னு சொல்றாங்க..." என ஆகாஷ் கூறவும் பிரணவ் மேசையில் இருந்த தொலைபேசியை கோபத்தில் தள்ளி விட்டான்.

"என் லைஃப் இப்படி இருக்குறதுக்கு முக்கிய காரணமே அவங்க தான்... இன்னும் என்ன தான் அவங்களுக்கு வேணுமாம்? இப்போ கூட நான் இங்க நிம்மதியா இருக்குறது அவங்களுக்கு பிடிக்கலயா?" என பிரணவ் ஆத்திரமாகக் கேட்கும் போதே அவ் அறைக்குள் நுழைந்தாள் அனுபல்லவி.

பிரணவ் அனுபல்லவிக்கு அழைக்கும் போது தான் ஆகாஷ் பிரணவ்வின் தாயைப் பற்றிக் கூறும் போது கோபத்தில் தொலைபேசியைத் தள்ளி விட்டது.

பிரணவ்வின் இந்த கோப அவதாரத்தைக் கண்டு அனுபல்லவி வாசலிலே அதிர்ந்து நிற்க, கண்களை மூடி தன்னை சமன் படுத்திக்கொண்டு ஆகாஷை வெளியேறுமாறு கண் காட்டினான்.

ஆகாஷ் வெளியேறியதுமே தன் இருக்கையில் அமர்ந்து பெருமூச்சு விட்டான் பிரணவ்.

அனுபல்லவி இன்னும் அதே இடத்தில் நின்று பிரணவ்வையே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க, "இன்னைக்கு ஃபுல்லா அப்படியே நின்னுட்டு இருக்க ப்ளேனா?" என ஏற்கனவே இருந்த கடுப்பில் பிரணவ் கேட்கவும் தன்னிலை அடைந்த அனுபல்லவி அவசரமாக உள்ளே வந்து அவன் முன்னே நின்றாள்.

தலையை ஒரு கையால் தாங்கியபடி மேசையில் ஒரு ஃபைலைத் தூக்கிப் போட்ட பிரணவ், "இந்த ஃபைல்ல இருக்குறதை எல்லாம் ரிஃபர் பண்ணிக்கோங்க... ஈவ்னிங் மிஸ்டர் மெஹெரா கூட ஒரு மீட்டிங் இருக்கு... நீங்களும் ஜாய்ன் பண்ணிக்கணும்..." என்கவும் அனுபல்லவி ஏன் எதற்கு என்று கேட்காமலே, "ஓக்கே சார்..." என வாங்கிக் கொண்டாள்.

பிரணவ் தலையை அழுத்திப் பிடித்தபடி நெற்றி சுருக்கி அமர்ந்து இருப்பதைக் கண்டு மனம் கேளாத அனுபல்லவி, "ஆர் யூ ஓக்கே சார்?" என ஒருவாறு கேட்டு முடிக்க, தலையை நிமிர்த்தி அனுபல்லவியின் முகம் நோக்கியவன், "ஏன்? என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? பைத்தியம் போல இருக்கேனா?" எனப் பிரணவ் கோபமாகக் கேட்கவும் அவசரமாக மறுப்பாகத் தலையசைத்தாள் அனுபல்லவி.

"அப்போ என்ன? கிளம்ப வேண்டியது தானே... இன்னும் நிற்குறீங்க..." எனப் பிரணவ் பல்லிடுக்கில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பவும், "சாரி சார்... சாரி..." என்ற அனுபல்லவி அவசரமாக எழுந்து வெளியே ஓடினாள்.

அவள் சென்றதும், "ப்ச்..." என சலித்துக்கொண்ட பிரணவ், "அம்மா மேல இருக்குற கோவத்தை அந்த பொண்ணு கிட்ட காட்டினா சரியா? ச்சே..." என்றவனுக்கு தன் மீதே ஆத்திரம் வந்தது.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 8

"ஹெலோ மிஸ்டர் பிரணவ்... கே சே ஹோ? (எப்படி இருக்கீங்க?)" என திரையில் தெரிந்த மிஸ்டர் மெஹெரா புன்னகையுடன் கேட்கவும், "மே அச்சா ஹு மிஸ்டர் மெஹெரா... (நான் நல்லா இருக்கேன்)" எனப் புன்னகையுடன் பதிலளித்தான் பிரணவ்.

மிஸ்டர் மெஹெரா, "அச்சா... அச்சா... யே கோன் ஹே? (நல்லது... நல்லது... இவர் யார்?)" எனக் கேட்டார் அனுபல்லவியைக் காட்டி.

இவ்வளவு நேரமும் ஏதோ ஊமைப் படம் பார்ப்பது போல் அவர்கள் பேசுவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த அனுபல்லவி திரையில் தெரிந்தவர் தன்னைக் காட்டி பிரணவ்விடம் ஏதோ கூறவும் பிரணவ்வைப் பார்த்து கண்களை விரித்தாள்.

அவளின் முக பாவனைகள் சிரிப்பை வரவழைத்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாத பிரணவ், "யே மிஸ் அனுபல்லவி ஹே... வோ வஹீ ஹே ஜோ இஸ் ப்ராஜெக்ட் மே சபீ கா மார்க்தர்ஷன் கர்னே வாலே ஹே... (இவர் மிஸ் அனுபல்லவி... இந்த ப்ராஜெக்ட்டில் அனைவரையும் வழி நடத்தப் போவது இவர் தான்)" என அனுபல்லவியை அறிமுகப்படுத்தவும், "ஹெலோ மிஸ் அனுபல்லவி..." என அனுபல்லவியைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தார் மிஸ்டர் மெஹெரா.

அனுபல்லவி, "ஹெலோ சார்..." எனப் பதிலளிக்கவும் லேசாகத் தொண்டையை செறுமிய பிரணவ், "தென் லெட்ஸ் டிஸ்கஸ் அபௌட் தி ப்ராஜெக்ட் மிஸ்டர் மெஹெரா..." என்கவும் மிஸ்டர் மெஹெரா ப்ராஜெக்ட் பற்றிய தன் விருப்பங்களையும் வேண்டுகோள்களையும் முன் வைத்தார்.

அனுபல்லவிக்கு புரியும் நோக்கில் ஆங்கிலத்திலேயே கலந்துரையாடல் இடம்பெற்றது.

பிரணவ் அனுபல்லவிக்கு கண் காட்டவும் அனுபல்லவி தன்னால் முடியுமா என்ற விதமாக அவனைத் தயக்கமாக ஏறிட, பிரணவ் கண்களை மூடித் திறந்து அவளுக்கு தைரியம் ஊட்டவும் ஆழப் பெருமூச்சு விட்டுக் கொண்ட அனுபல்லவி மிஸ்டர் மெஹெரா கூறியவைகளுக்கு தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தாள்.

ஏற்கனவே பிரணவ் அந்த பிராஜெக்ட் விஷயமாக அவளுக்கு தேவையான தெளிவுகளை வழங்கி இருக்க, அதன் மூலம் முதன் முறையாக இருந்தாலும் சிறப்பாவே தன் கருத்துக்களை எடுத்துரைத்தாள் அனுபல்லவி.

மெஹெராவிற்கும் அவள் கூறிய யோசனைகள் பிடித்து விட, "க்ரேட் மிஸ் அனுபல்லவி... க்ரேட்... ஐம் ரியலி இம்ப்ரஸ்ட் வித் யுவர் ஐடியாஸ்... மிஸ்டர் பிரணவ்... லெட்ஸ் கன்ட்னியூ திஸ் ப்ராஜெக்ட் வித் ஹர் ஐடியாஸ்..." என்கவும் பிரணவ்விற்கும் அனுபல்லவிக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதுவும் அனுபல்லவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிரணவ் தன்னை நம்பி ஒப்படைத்த முதல் வேலையின் ஆரம்ப கட்டத்திலேயே அவன் மனதைக் கவர்ந்ததை எண்ணி அவ்வளவு ஆனந்தம்.

இன்னும் சிலவற்றை பேசி முடித்து விட்டு ஜூம் மீட்டிங் நிறைவு பெற, புன்னகை முகத்துடன் நின்ற அனுபல்லவியின் பக்கம் திரும்பிய பிரணவ், "கங்ரேட்ஸ் மிஸ் பல்லவி..." என அவளை நோக்கி கரம் நீட்டினான்.

"தேங்க்ஸ் சார்..." என நீட்டி இருந்த அவனின் கரத்தைப் பற்றிக் கூறினாள் அனுபல்லவி.

அனுபல்லவியின் மலர்ந்த முகத்தையே ஒரு நிமிடம் தன்னை மறந்து ரசித்த பிரணவ் இன்னும் பற்றிய அவளின் கரத்தை விடாமல் இருக்கவும், "சார்..." என அனுபல்லவி தன் கரத்தை அவனின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றபடி அழைக்கவும் தன்னிலை அடைந்த பிரணவ் அவசரமாக அவளின் கரத்தை விட்டான்.

பிரணவ், "சா...சாரி சாரி பல்லவி... நான் வேற ஏதோ..." என ஏதோ கூற வரவும், "இட்ஸ் ஓக்கே சார்..." என்றாள் அனுபல்லவி புன்னகையுடன்.

"அப்புறம்... மிஸ்டர் மெஹெரா அவ்வளவு ஈசியா எந்த டீலிங்குக்கும் ஒத்துக்க மாட்டார்... ஆனா உங்க ஃபர்ஸ்ட் ட்ரைலயே அவரை இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க... ரியலி சூப்பர்... சீக்கிரம் இந்த ப்ராஜெக்ட்டையும் அதே போல நல்லா செஞ்சி முடிப்பீங்கன்னு நம்புறேன்..." என பிரணவ் கூற, "ஷியுர் சார்... நான் கிளம்பட்டுமா?" என அனுபல்லவி அனுமதி கேட்கவும் சரி எனத் தலையசைத்தான் பிரணவ்.

************************************

மறுநாளில் இருந்து ப்ராஜெக்ட் வேலைகள் துரிதமாக நடைபெற்றன.

அனுபல்லவியின் தலைமைத்துவம் குழுவில் இருந்த அனைவரையும் கவர்ந்து விட, பிரணவ்விற்கே அவளை நினைத்து பிரமிப்பாக இருந்தது.

அர்ச்சனா மாத்திரம் அனுபல்லவியைப் பழி வாங்க எப்போது வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தாள்.

அதற்கு ஏற்றதாக சரியான வாய்ப்பும் வெகு விரைவில் அவளுக்கு கிட்டியது.

குழுவிலுள்ள ஒவ்வொருவருமே ப்ராஜெக்ட் வேலைகளை பிரித்து செய்ய, இறுதியில் அனுபல்லவி அதனை சரி பார்த்து பிரணவ்விடம் ஒப்படைப்பாள்.

அன்றும் அது போலவே ப்ராஜெக்ட் சம்பந்தமான ஃபைல்களை மறுபரிசீலனை செய்து விட்டு பிரணவ்விடம் ஒப்படைக்கச் சென்றாள்.

அப்போது பிரணவ் அறையில் இருக்காமையால் ஃபைல்களை அவனின் மேசை மீது வைத்து விட்டு வெளியேற, அர்ச்சனா அவ் அறைக்குள் நுழைந்தாள்.

அனுபல்லவி வைத்த ஃபைல்களுக்கு பதிலாக தான் கொண்டு வந்த ஃபைல்களை மாற்றி வைத்தவளின் முகத்தில் ஒரு குரூரச் சிரிப்பு.

சற்று நேரத்திலே ஆகாஷுடன் அவ் அறைக்கு வந்தான் பிரணவ்.

"நாளைக்கு மார்னிங் போர்ட் மீட்டிங்கை அரேன்ஜ் பண்ணிடுங்க... அப்புறம் அப்பா மெய்ன் ப்ரான்ச்ல ஏதோ ப்ராப்ளம்னு சொன்னார்... அது என்னன்னு பாருங்க... ப்ராஜெக்ட் வர்க் எந்த அளவுல போய்ட்டு இருக்கு?" எனப் பிரணவ் தன் இருக்கையில் அமர்ந்தவாறு கேட்க, "டன் பாஸ்... நான் மூர்த்தி சார் கூட பேசுறேன்... டீம்ல எல்லாருமே ரொம்ப ஃபாஸ்ட் அன்ட் ஸ்மார்ட்டா வர்க் பண்றாங்க பாஸ்..." என்றான் ஆகாஷ்.

பிரணவ், "குட்... இந்த ப்ராஜெக்ட் சக்சஸா முடிஞ்சா அப்புறம் ஓவர்சீஸ்ல கூட எங்க கம்பனிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்..." என்றான் மகிழ்வுடன்.

"ஆமா பாஸ்... நீங்க கரெக்டான ஆள் கிட்ட தான் இந்த ப்ராஜெக்டை மேனேஜ் பண்ண கொடுத்து இருக்கீங்க... உங்க அளவுக்கே மிஸ் அனுபல்லவியும் இந்த ப்ராஜெக்டுக்காக அவ்வளவு சின்சியரா வர்க் பண்றாங்க..." என்கவும் பிரணவ்வின் முகத்தில் மெல்லியதாக புன்னகை அரும்பியது.

பின் ஆகாஷ் யாருக்கோ கைப்பேசியில் அழைத்தவாறு வெளியேறியவன் யாருடனோ மோதி நின்றான்.

"ஸ்ஸ்ஸ்..." எனத் தலையைத் தேய்த்தபடி நிமிர்ந்த சாருமதி தனக்கு முன்னே கைப்பேசியில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த ஆகாஷைப் பார்வையாலே எரித்தவள் அவன் காதில் வைத்திருந்த கைப்பேசியைப் பறித்து அழைப்பைத் துண்டித்தாள்.

திடீரென நடந்த இச் செயலில், "ஹேய்..." எனக் கோபமாகத் திரும்பிய ஆகாஷ் தன்னையே முறைத்துக் கொண்டிருந்த சாருமதியைக் கேள்வியாய் நோக்கினான்.

"யோவ்... எங்கயா பார்த்துட்டு வர? கண்ணு என்ன பிடரிலயா இருக்கு? பனை மரத்துக்கு பாதி வளர்ந்து இருக்க... முன்னாடி வரவங்க எல்லாம் எங்க கண்ணுக்கு தெரிய போகுது? நெட்ட கொக்கு..." என சாருமதி எகிற, "ஏய்... யாரைப் பார்த்து டி நெட்ட கொக்குன்னு சொன்ன? நாங்க எல்லாம் கரெக்ட் ஹைட்ல தான் இருக்கோம்... நீ தான் டென்த் ஸ்டேன்டுக்கு மேல வளராம விட்டுட்ட போல... குட்டச்சி... குட்டச்சி..." என்றான் ஆகாஷ் கேலியாக.

சாருமதி, "உன்ன... உன்ன... நான் குட்டச்சியா? நான் குட்டச்சியா?" எனக் கோபமாகக் கேட்டவள் ஆகாஷின் கரத்தை இழுத்து பற்தடம் தெரிய கடித்து வைத்தாள்.

ஆகாஷ், "ஆஹ்... இரத்தக் காட்டேரி... வலிக்கிது விடு டி..." என வலியில் கத்தவும் அந்தத் தளத்தில் இருந்த அனைவரின் பார்வையும் அவர்கள் பக்கம் திரும்ப, சத்தம் கேட்டு அங்கு வந்த அனுபல்லவி, "ஹேய் சாரு... சாரு... என்ன டி பண்ற? விடு டி அவரை..." என சாருமதியை தன் பக்கம் இழுக்கவும் ஆகாஷின் கரத்தை விட்டாள் சாருமதி.

சாருமதி கோபத்தில் மூச்சு வாங்க, "என்ன பண்ற சாரு? அவர் பிரணவ் சாரோட பீ.ஏ." என அனுபல்லவி கடிந்து கொள்ள, "அதுக்காக? என்ன வேணாலும் சொல்லுவாரா?" எனச் சாருமதி கோபமாகக் கேட்க, "நீ தான் டி முதல்ல என் கூட சண்டைக்கு வந்த..." என்றான் ஆகாஷ் சாருமதியின் முகம் முன் விரல் நீட்டி.

"யூ... யூ... ஹவ் டேர் யூ? எப்படி நீ என்னை டி போட்டு பேசலாம்?" என சாருமதி மீண்டும் ஆகாஷிடம் சண்டைக்குச் செல்ல, "இங்க என்ன நடந்துட்டு இருக்கு? இது என்ன ஆஃபீஸா? இல்ல ஃபிஷ் மார்க்கட்டா?" என்ற பிரணவ்வின் கோபமான குரலில் அவ் இடமே அமைதி ஆனது.

பிரணவ், "ஆகாஷ்... நீங்க இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நான் சொன்ன வேலையை செஞ்சீங்களா? இல்லையா?" எனக் கடுமையாகக் கேட்க, "சாரி பாஸ்... இதோ இப்போ போய் பார்க்குறேன்..." என்ற ஆகாஷ் போகும் போது சாருமதியைப் பார்த்து முறைத்து விட்டு போனான்.

ஆஃபீஸில் இருந்த மற்றவர்கள் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, "இங்க என்ன ஃபேஷன் ஷோவா நடக்குது?" எனப் பிரணவ் கோபமாகக் கேட்கவும் அவசரமாக அனைவரும் தம் வேலையைப் பார்க்க செல்ல, அவர்களைத் தொடர்ந்து செல்லப் பார்த்த அனுபல்லவியைத் தடுத்த பிரணவ், "மிஸ் பல்லவி‌... நீங்க எங்க போறீங்க? இம்மீடியட்டா என் கேபினுக்கு வாங்க..." என்று விட்டு சென்றான்.

அவனின் குரலில் இருந்த கடுமையே அனுபல்லவிக்கு உள்ளுக்குள் உதறலைக் கொடுத்தது.

அனுபல்லவி தயக்கமாக உள்ளே நுழைய, அவளின் மேல் சில ஃபைல்களை தூக்கி வீசினான் பிரணவ்.

பயமும் அதிர்ச்சியுமாக பிரணவ் வீசிய ஃபைல்களை அனுபல்லவி கையில் எடுக்க, "என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல? கொஞ்சம் பாராட்டினா போதுமே‌... உடனே தலைல ஏறி உட்கார்ந்துடுவீங்க..." என ஆத்திரத்தில் கத்தினான் பிரணவ்.

"சார்... எ...என்னாச்சு?" எனக் கேட்டாள் அனுபல்லவி தயக்கமாக.

"பாருங்க என்ன பண்ணி வெச்சி இருக்கீங்கன்னு... எல்லா கோடிங்குமே தப்பு தப்பா இருக்கு... ரீசெக் பண்ணிட்டு சப்மிட் பண்ண மாட்டீங்களா?" என பிரணவ் கடிந்துகொள்ள, அவசரமாக தன் முன் பிரணவ் தூக்கிப் போட்ட ஃபைல்களை புரட்டிப் பார்த்தாள் அனுபல்லவி.

அதில் இருந்தவற்றைக் கண்டு அதிர்ந்த அனுபல்லவி, "சார்... இது... நான் எல்லாம் கரெக்ட்டா செக் பண்ணிட்டு தான் உங்க டேபிள்ல கொண்டு வந்து வெச்சேன்... இது நான் வெச்ச ஃபைல் இல்ல சார்..." என்க, "அப்போ... நான் தான் எல்லாம் மாத்தி வெச்சேனா? இல்ல நான் பொய் சொல்றேனா?" எனக் கேட்டான் பிரணவ் கோபமாக.

அனுபல்லவி, "ஐயோ இல்ல சார்... இதுல என் தப்பு எதுவும் இல்லன்னு சொல்றேன்... நான் கோடிங் எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணேன்..." என தன் பக்கம் உள்ள நியாயத்தை விளக்கப் பேச, அது பிரணவ்வின் கோபத்தை இன்னும் தூண்டி விட்டது.

பிரணவ், "ஷட் அப்... ஜஸ்ட் ஸ்டாப் யுவர் நான்சன்ஸ்... எதுவும் பேச வேணாம்... இன்னைக்கே இதெல்லாம் கரெக்ட் பண்ணி என் கிட்ட சப்மிட் பண்ணணும்... யாரோட ஹெல்ப்பும் இல்லாம நீங்க மட்டும் தனியா..." எனக் காட்டுக் கத்தலாய் கத்த, "பட் சார் ஆல்ரெடி லேட் ஆகிடுச்சு... இன்னைக்கே எப்படி?" எனக் கேட்டாள் அனுபல்லவி.

"ஐ டோன்ட் வான்ட் டு ஹியர் யுவர் ப்ளடி டாக்... ஜஸ்ட் டூ வட் ஐ சே... இன்னைக்கே இதெல்லாம் முடிச்சு கொடுத்துட்டு தான் நீங்க கிளம்பணும்... எத்தனை மணி ஆகினாலும் சரி..." எனப் பிரணவ் கட்டளை இடவும் தலை குனிந்த அனுபல்லவி வேறு வழியின்றி அவன் கூறியதை செய்து முடிக்க அங்கிருந்து சென்றாள்.

ஏற்கனவே ஆஃபீஸில் இருக்கும் அனைவரும் வேலை முடிந்து வீடுகளுக்கு கிளம்பி இருக்க, ஓரிரண்டு பேர் மட்டுமே காணப்பட்டனர்.

சாருமதி அனுபல்லவிக்காக காத்திருக்க, கவலை தோய்ந்த முகத்துடன் தன்னை நோக்கி வந்த தோழியைப் புரியாமல் நோக்கியவள், "என்னாச்சு அனு? ஏன் டல்லா இருக்க? கிளம்பலாமா?" எனக் கேட்டாள்.

"இல்ல சாரு... நீ கிளம்பு... எனக்கு கொஞ்சம் வர்க் இருக்கு..." என அனுபல்லவி சோகமாகக் கூறவும், "இன்னுமா? ஓக்கே அப்போ நானும் இருந்து உனக்கு ஹெல்ப் பண்றேன்..." என சாருமதி கூறவும் பிரணவ் கூறியதை எண்ணி பல்லைக் கடித்த அனுபல்லவி தன்னை சமன் படுத்திக்கொண்டு, "ம்ஹ்ம்... நீ போ சாரு... இது நான் பண்ண வேண்டிய வேலை... முடிச்சிட்டு வரேன்..." என்றாள்.

சாருமதி, "நீ மட்டும் எப்படி தனியா வர போற? ஆஃபீஸ்ல கூட யாருமே இல்ல..." என்க, "எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல டி... நான் சீக்கிரம் எல்லா வர்க்கையும் முடிச்சிட்டு பஸ்ல வரேன்... இல்லன்னா டாக்சி புக் பண்ணி வரேன்... நீ என்னை நினைச்சி ஃபீல் பண்ணாதே... போய்ட்டு வா..." என அனுபல்லவி மறுக்கவும், "நிஜமா தான் சொல்றியா? உன்னால முடியுமா?" என தோழியை எண்ணி வருத்தமாகக் கேட்டாள்.

அவளுக்கு கண்களை மூடித் திறந்து அனுபல்லவி ஆறுதல் அளிக்கவும் மனமேயின்றி அங்கிருந்து கிளம்பிய சாருமதி தனக்கு நேராக வந்து கொண்டிருந்தவனைக் கவனிக்காது அவன் மீது மோதவும் அவனின் கரத்தில் இருந்த ஃபைல்கள் அனைத்தும் கீழே விழுந்தன.

"ப்ச்... சாரி சார்... சாரி சார்..." என சாருமதி அவன் யார் என்று கூட கவனிக்காது அவசரமாக குனிந்து கீழே விழுந்து கிடந்த ஃபைல்களை எடுத்து அடுக்க, அவளுக்கு உதவியாக குனிந்து ஃபைல்களை எடுத்தவன், "கண்ணு எங்க பிடரிலயா இருக்கு குட்டச்சி?" என்றான் கேலிக் குரலில்.

அதிர்ச்சியுடன் தலை நிமிர்ந்து பார்த்த சாருமதி தனக்கு முன் தன்னை நக்கலான பார்வையுடன் நோக்கிக் கொண்டிருந்த ஆகாஷைக் கண்டு கோபத்தில் பல்லைக் கடித்தாள்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 9

"கண்ணு எங்க பிடரிலயா இருக்கு குட்டச்சி?" என்ற கேலிக் குரலில் அதிர்ச்சியுடன் தலை நிமிர்ந்து பார்த்த சாருமதி தனக்கு முன் தன்னை நக்கலான பார்வையுடன் நோக்கிக் கொண்டிருந்த ஆகாஷைக் கண்டு கோபத்தில் பல்லைக் கடித்தாள்.

ஆகாஷ், "என்ன குட்டச்சி? அப்படி பார்க்குற? எவன் கூட கடலை போட்டுக்கிட்டு இப்படி ரோட்ட நேரா பார்க்காம நடக்குற?" எனக் கேலி செய்யவும், "யூ ப்ளடி இடியட்... நான் எவன் கூடயாவது கடலை போடுறதை நீ பார்த்தியா மேன்? அப்படியே போட்டாலும் உனக்கு என்னடா வந்தது?" எனக் கேட்டாள் சாருமதி கோபமாக.

"எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல குட்டச்சி... ஆனா அந்தப் பையனை நினைச்சா தான் ரொம்ப பாவமா இருக்கு..." என ஆகாஷ் உச்சுக் கொட்டவும் சாருமதி அவனைப் புரியாமல் நோக்க, அவளின் தோளில் தன் முழங்கையை ஊன்றிய ஆகாஷ், "அது ஒன்னுமில்ல குட்டச்சி... இந்த மூஞ்சிய எல்லாம் எப்படி தான் காலம் பூரா பார்த்துட்டு இருக்க போறானோ? அநேகமா கூடிய சீக்கிரம் சந்நியாசி ஆகிடுவான்னு நினைக்கிறேன்... இல்லன்னா இப்படி குட்டி அண்டா சைஸ்ல இருக்குற உனக்கு எப்படி லைஃப் லாங் சாப்பாடு போடுவான்?" என்றான் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு.

ஒரு நிமிடம் அவன் என்ன கூறுகிறான் என அமைதியாகக் கேட்ட சாருமதி ஆகாஷ் என்ன கூற வருகிறான் எனப் புரிந்துகொண்டவள் கோபத்தில் அவனின் கரத்தைத் தட்டி விட்டு, "உன்னைக் கொல்லாம விட மாட்டேன்டா நான்..." எனத் தன் கைப்பையால் ஆகாஷைப் போட்டு அடித்தாள்.

"உண்மைகள் சில நேரம் கசக்கும் டி குட்டச்சி..." எனக் கேலியாகக் கூறிய ஆகாஷ் அவளிடமிருந்து தப்பித்து ஓடினான்.

ஆகாஷ் மேல் இருந்த கோபத்தில் தரையைக் காலால் உதைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் சாருமதி.

சாருமதி சென்றதும் தன் இருக்கையில் வந்தமர்ந்த அனுபல்லவி, "சரியான சிடுமூஞ்சி... எப்பப்பாரு உர்ருன்னே இருக்குறது... ஒரு மனுஷி பேசுறதை காது கொடுத்து கேட்டா தான் என்னவாம்? சிடுமூஞ்சி சிடுமூஞ்சி..." என பிரணவ்வை வறுத்தெடுத்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தாள்.

இங்கு தன் அறை கண்ணாடி வழியாக தெளிவற்றுத் தெரியும் அனுபல்லவியின் விம்பத்தைப் பார்த்தவாறு தண்ணீர் குடித்த பிரணவ்விற்கு திடீரென புறை ஏறியது.

தன் தலையில் தட்டி அடக்கிய பிரணவ்வின் பார்வை தானாகவே அனுபல்லவி இருந்த இடத்தை அடைந்தது. அவன் முகத்தில் கூட ஒரு இளநகை.

பிரணவ், 'ஓஹ்... திட்டுறீங்களா மேடம்?' என மனதில் எண்ணி விட்டு கணினித் திரையில் பார்வையைப் பதித்தான்.

நன்றாக இருட்டி விட்ட நிலையில் சாருமதி அடிக்கடி அனுபல்லவிக்கு அழைத்து அவள் எந்த நேரத்தில் வருவாள் எனக் கேட்டு விசாரித்தாள்.

ஆனால் அனுபல்லவிக்குத் தான் வேலைகள் முடிந்த பாடில்லை.

பத்து பேர் இணைந்து செய்யும் வேலையை அவள் ஒருத்தியே செய்தால் எப்படி முடியும்? போதாக்குறைக்கு தூக்கக்கலக்கம் வேறு.

அடிக்கடி கொட்டாவி விட்டபடி தூங்கி விழுந்தவளை நெருங்கியது அழுத்தமான காலடி ஓசை.

வேலைகளின் இடையே தன் கைக் கடிகாரத்தை தூக்கி மணியைப் பார்த்த பிரணவ் நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கவும் அனுபல்லவி இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாள் எனப் பார்க்க வந்தான்.

அனுபல்லவி இருக்கையில் சாய்ந்து தலை ஒரு பக்கம் வளைய ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளைத் தட்டி எழுப்புவதற்காக தன் கரத்தை நீட்டிய பிரணவ் என்ன நினைத்தானோ கரத்தைப் பின்னே இழுத்துக்கொண்டான்.

பெருமூச்சு விட்டபடி சுற்றும் முற்றும் பார்த்தவன் அனுபல்லவியின் மேசை மீதிருந்த தண்ணீர்க் குவளையை எடுத்து பட்டென்று கீழே போட, அமைதியாக இருந்த ஆஃபீஸில் தண்ணீர்க் குவளை விழுந்து உடையும் சத்தம் பலமாக எதிரொலித்தது.

திடீரென கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு விழித்த அனுபல்லவி தன் அருகில் பிரணவ்வை எதிர்ப்பார்க்காது பயத்தில், "ஆ...." எனக் கத்தவும் அவசரமாக தன் கரம் கொண்டு அவளின் வாயை அடைத்தான் பிரணவ்.

"ஷ்ஷ்ஷ்... ஷ்ஷ்ஷ்... எதுக்கு கத்துற? நான் தான்..." என பிரணவ் கடுப்பாகக் கூறவும், "ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்..." என அனுபல்லவி ஏதோ கூற முயன்றாள்.

பிரணவ், "முதல்ல வாய திறந்து பேசு..." எனக் கோபமாகக் கூறவும் கண்களால் தன் வாயை மூடியிருந்த பிரணவ்வின் கரத்தை சுட்டிக் காட்டினாள் அனுபல்லவி.

அவசரமாக தன் கரத்தை எடுத்த பிரணவ், "ஓஹ் சாரி... சாரி..." என்க, நெஞ்சை நீவி பெருமூச்சு விட்ட அனுபல்லவி, "ஏன் சார் இப்படி பயமுறுத்துறீங்க? இன்னும் கொஞ்சம் இருந்து இருந்தா எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து அல்பாயுசுல போய் சேர்ந்து இருப்பேன்... எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல... அட்லீஸ்ட் லவ் கூட பண்ணல..." எனச் சோகமாகக் கூறவும் அவளை ஏகத்துக்கும் முறைத்தான் பிரணவ்.

அப்போது தான் அவன் கூறிய வேலை ஞாபகம் வந்து அதிர்ச்சியில் கண்களை விரித்த அனுபல்லவி, "சாரி சார்... சாரி சார்... திரும்ப திட்டிடாதீங்க... தெரியாம தூங்கிட்டேன்... இப்போவே முடிச்சிடுறேன்..." என அவசரமாகத் திரும்பி வேலை செய்யவும் அனுபல்லவிக்கு முன் இருந்த கணினியை அணைத்தான் பிரணவ்.

அனுபல்லவி, "சார்..." என இழுக்க, "நாளைக்கு ஏர்லியா வந்து வர்க்க முடிங்க... இப்போ கிளம்புங்க... ரொம்ப லேட் ஆகிடுச்சு..." என பிரணவ் கூறவும், "பரவால்ல சார்... நான் இதை முடிச்சிட்டே கிளம்புறேன்..." என்றாள் அனுபல்லவி.

"அதான் கிளம்புங்கன்னு சொல்றேன்ல..." எனப் பிரணவ் சற்று குரலை உயர்த்திப் பேசவும், "ஓக்கே சார்... ஓக்கே சார்..." என அவசரமாக இருக்கையை விட்டு எழுந்த அனுபல்லவி நேரத்தைப் பார்க்க, மணி நள்ளிரவு பன்னிரண்டைக் கடந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தவள், "என்ன? டுவல்வ் பாஸா? சாரு வேற திட்டுவாளே..." என்று அவசரமாக பிரணவ்விடம் கூட கூறாது தன் கைப்பையைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினாள்.

அவளின் செய்கையைக் கண்டு தோளைக் குலுக்கிய பிரணவ் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பினான்.

ஆஃபீஸில் இருந்து வெளியே வந்த அனுபல்லவி தன் கைப்பேசியை எடுத்து டாக்சிக்கு அழைக்கப் பார்க்க, அதுவோ எப்போதோ தன் உயிரை விட்டிருந்தது.

"ப்ச்... போயும் போயும் இப்பவா இந்த மொபைலும் சதி பண்ணணும்? ச்சே... இப்போ எப்படி வீட்டுக்கு போறது? சாரு வேற நிறைய தடவை கால் பண்ணி இருந்தாளே... ம்ம்ம்... வேற வழி இல்ல... பஸ்ல போக வேண்டியது தான்..." என்ற அனுபல்லவி நடந்தே பேரூந்து தரிப்பிடம் நோக்கிச் சென்றாள்.

நேரம் நள்ளிரவைக் கடந்து விட்டதால் பேரூந்து தரிப்பிடத்தில் யாருமே இருக்கவில்லை. இரண்டு பேர் குடித்து விட்டு வாய்த் தாக்கம் செய்து கொண்டிருக்க, அவர்களை விட்டு சற்று ஓரமாக சென்று நின்ற அனுபல்லவி, 'இந்த டைம் பஸ் வருமா இல்லயான்னு கூட தெரியலயே...' என மனதில் பேசினாள்.

வாய்த் தாக்கம் செய்து கொண்டிருந்த இருவரின் பார்வையும் மெதுவாக அனுபல்லவியின் பக்கம் திரும்ப, இருவரின் முகத்திலும் ஒரு குரூரப் புன்னகை.

பேரூந்து வரும் வரை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த அனுபல்லவிக்கு யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல் உணர்வு வர, லேசாகத் திரும்பிப் பார்த்தவள் இருவரின் பார்வையையும் கண்டு அதிர்ந்தாள்.

தன் கைப்பைக்குள் கையை விட்டு ஏதோ தேடிய அனுபல்லவி, அவர்கள் அவளை நெருங்கவும் தன் கைப்பையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேயை எடுத்து அவர்களின் முகத்தில் அடிக்கப் பார்க்க, சரியாக பிரணவ்வின் கார் வந்து அனுபல்லவியின் அருகில் நின்றது.

திடீரென யாரோ வரவும் அந்த குடிகாரர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல, அனுபல்லவி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

ஆஃபீஸில் இருந்து கிளம்பிய பிரணவ் அவன் தங்கியிருந்த வீட்டை நோக்கிச் செல்ல, வழியில் பேரூந்து தரிப்பிடத்தில் அனுபல்லவி காத்திருப்பதைக் கண்டு முதலில் அவளைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றான்.

சற்று தூரம் செல்லவும் கார் சைட் மிரரில் அந்த குடிகாரர்கள் இருவரும் கண்களில் வெறியுடன் அனுபல்லவியை நெருங்குவதைக் கண்டு கொண்டவன் அவசரமாக ரிவர்ஸ் எடுத்து அனுபல்லவியின் அருகே காரை நிறுத்தினான்.

அவர்கள் சென்றதும் பிரணவ் கார் ஹார்னை வேகமாக அழுத்த, வேகமாக வந்து காரில் ஏறிக் கொண்டாள் அனுபல்லவி.

அனுபல்லவி ஏறியதும் பிரணவ் காரை இயக்க, அனுபல்லவி தன் கைப்பேசியை இயக்க முயன்று கொண்டிருந்தாள்.

மெதுவாக தொண்டையைச் செறுமிய பிரணவ், "இந்த தேங்க்ஸ் எல்லாம் சொல்ற பழக்கம் இல்லயா?" என்க, அவனைப் புரியாமல் பார்த்த அனுபல்லவி, "எதுக்கு தேங்க்ஸ்?" எனக் கேட்டாள்.

"அந்த குடிகாரங்க கிட்ட இருந்து உங்களைக் காப்பாத்தினதுக்கு தான்..." என பிரணவ் பாதையில் பார்வையைப் பதித்தவாறு கூற, ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் அனுபல்லவி.

பிரணவ் திரும்பி அவளை முறைக்க, கஷ்டப்பட்டு தன் சிரிப்பை அடக்கிய அனுபல்லவி, "சாரி சார்.‌‌.." என்று விட்டு தன் கைப்பையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேயை எடுத்துக் காட்டினாள்.

பிரணவ் ஒற்றைப் புருவம் உயர்த்தி கண்களாலே என்ன என வினவ, "பெப்பர் ஸ்ப்ரே... நீங்க வரலன்னா கூட நான் அவங்களை சமாளிச்சிருப்பேன்‌... சரியாப் பார்த்தா நீங்க தான் என் கிட்ட சாரி சொல்லணும்... பத்து பேர் சேர்ந்து செய்ய வேண்டிய வேலையை ஒத்த ஆளா என் கிட்ட கொடுத்து இவ்வளவு நேரம் தனியா வர்க் பண்ண விட்டீங்க... அதனால் தான் இவ்வளவு லேட் ஆகி, என் மொபைல் ஆஃப் ஆகி, டாக்ஸிக்கு கூட வர சொல்ல முடியல..." என்றாள் அனுபல்லவி சற்று கடுப்பாக.

பிரணவ்வோ அவள் கூறியதை காதிலே வாங்காதவன் போல, "வழி?" என்க, "அதானே... இவர் வாயை திறந்தா தான் அப்படியே முத்து உதிர்ந்திடுமே..." என முணுமுணுத்த அனுபல்லவி வீட்டுக்குச் செல்லும் வழியைக் கூறினாள்.

சற்று நேரத்திலே அனுபல்லவியும் சாருமதியும் தங்கியிருந்த வீடு வர, பிரணவ் அங்கு காரை நிறுத்தவும் இறங்கிக் கொண்டாள் அனுபல்லவி.

சாருமதி அவளுக்காக வாசலிலேயே காத்திருக்க, காரை விட்டு இறங்கிய அனுபல்லவி கார் விண்டோவைத் தட்டவும் பிரணவ் விண்டோவைத் தாழ்த்தினான்.

அனுபல்லவி, "தேங்க்ஸ் சார்... இந்த தேங்க்ஸ் அன்டைம்ல அந்த பஸ் ஸ்டாப்ல யாரோன்னு என்னைக் கண்டுக்காம தனியா விட்டுட்டு போகாம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டதுக்கு..." எனப் புன்னகையுடன் கூற, "யாரோன்னு உங்களைக் கண்டுக்காம உங்களைக் கடந்து தான் போனேன் மிஸ் பல்லவி... அப்புறம் அந்த குடிகாரங்களால உங்களுக்கு பிரச்சினையோன்னு தான் திரும்ப வந்து பிக்கப் பண்ணேன்..." என கண்களில் ஒரு வித திமிருடன் ஏளனமாகக் கூறிய பிரணவ் அனுபல்லவியின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது காரை இயக்கிக்கொண்டு அங்கிருந்து செல்லவும் கோபத்தில் பல்லைக் கடித்தாள் அனுபல்லவி.

அனுபல்லவியை வந்து அணைத்துக்கொண்ட சாருமதி, "அனு... ரொம்ப பயந்துட்டேன் டி... லேட் ஆனா கால் பண்ண மாட்டியா டி?" என்று கடிந்து கொண்டாள்.

"சாரி சாரு... மொபைல் டெட்... அதான் உன்ன கான்டேக்ட் பண்ண முடியல... டைம் போனதே தெரியல... சார் வந்து கிளம்ப சொன்னதுக்கு அப்புறம் தான் டைம் பார்த்தேன்..." என அனுபல்லவி விளக்கம் அளிக்க, "பொல்லாத சார்... ப்ராஜெக்ட் மேனேஜரா இருந்தே நம்மள இப்படி வாட்டுறார்... இதுவே எம்.டியா இருந்தா நாம காலி..." என்றாள் சாரு கோபமாக.

அதில் புன்னகைத்த அனுபல்லவி, "விடு டி... என் மிஸ்டேக்னால தானே அவருக்கு கோவம் வந்துச்சு..." என்றவளுக்கு ஏனோ தோழியிடம் கூட பிரணவ்வை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை.

அனுபல்லவி, "சாரு... ரொம்ப டயர்டா இருக்கு... காஃபி ஒன்னு போட்டு கொடு டி... ப்ளீஸ்..." எனக் கண்கள் சுருக்கிக் கெஞ்ச, அவள் தோளில் அடித்த சாருமதி, "லூசு... போட்டுத் தான்னு கேட்டா போட்டு தரப் போறேன்... அதுக்கு எதுக்கு டி ப்ளீஸ்லாம் சொல்லிக்கிட்டு?" என்கவும் இளித்து வைத்தாள் அனுபல்லவி.

சாருமதி உள்ளே செல்ல, அவளைத் தொடர்ந்து கைகளில் நெட்டி முறித்தபடி அனுபல்லவி சென்றாள்.

காரில் சென்று கொண்டிருந்த பிரணவ்விற்கு அனுபல்லவி கூறியதே காதில் ஓடியது. சிதாராவின் பயந்த சுபாவத்துடன் அனுபல்லவியை ஒப்பிட்டுப் பார்த்தவனுக்கு அவனையும் அறியாமல் அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை.

ஆனால் உடனே சிதாராவுக்கு தான் செய்த அநியாயத்தை எண்ணி பிரணவ்வின் உடல் இறுக்கத்தைத் தத்தெடுத்தது.

************************************

மறுநாள் காலை சற்று விரைவாகவே ஆஃபீஸ் வந்த பிரணவ்விற்கு தன் மேசை மீது கிடந்த கோப்புகளைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. தன் அறையில் இருந்து வெளியே வந்து பார்க்க, ஆஃபீஸிற்கு அந் நேரத்தில் ஓரிரண்டு பேரே வந்திருக்க, அனுபல்லவியோ தன் மேசை மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

மீண்டும் தன் கேபினுக்குள் நுழைந்து அனுபல்லவி வைத்திருந்த கோப்புகளைச் சரி பார்த்தவன் அனுபல்லவிக்கு அழைத்து தன் கேபினுக்கு வரக் கூறினாள்.

தூக்கக் கலக்கத்திலேயே சரி எனப் பதிலளித்தவள் சற்று நேரத்தில் அனுமதி வாங்கிக்கொண்டு பிரணவ்வின் அறைக்குள் நுழைந்தாள்.

அனுபல்லவியின் முகத்தில் ஆங்காங்கே இருந்த நீர்த் துளிகள் அவள் அப்போது தான் தூக்கத்தைப் போக்க முகம் கழுவி விட்டு வந்துள்ளாள் என எடுத்துரைத்தது.

அனுபல்லவி, "சார்... வர சொன்னீங்க..." என்க, "ம்ம்ம்... குட் ஜாப் மிஸ் பல்லவி... ஃபைல்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கு... இனிமே இந்த மிஸ்டேக்ஸ் விடாம பார்த்துக்கோங்க..." என பிரணவ் கூறவும், "ஓக்கே சார்..." என்றாள் அனுபல்லவி.

பிரணவ், "அப்புறம் நான் சில சேன்ஜஸ் சொல்றேன்... நோட் பண்ணிக்கோங்க..." என்கவும் அனுபல்லவி மேசையில் இருந்த பேப்பர் பென்னை எடுத்து பிரணவ் கூறக் கூற குறித்துக் கொண்டாள்.

ஒவ்வொரு முறையும் பேனையைப் பிடித்து எழுதும் போது அனுபல்லவி வலியில் முகம் சுருக்குவதை பிரணவ் முதலில் கவனிக்கவில்லை.

திடீரென அனுபல்லவி வலியில், "ஸ்ஸ்ஸ்..." என முனங்கவும் தலையை நிமிர்த்திப் பார்த்த பிரணவ் அனுபல்லவியின் வலியில் சுருங்கிய முகத்தைக் கண்டு, "என்னாச்சு?" எனக் கேட்க, "நத்திங் சார்... நீங்க சொல்லுங்க..." என சமாளித்தாள் அனுபல்லவி.

தன் இருக்கையை விட்டு எழுந்த பிரணவ் அனுபல்லவியின் முகத்தை அழுத்தமாகப் பார்த்தபடி அவளை நெருங்க, அனுபல்லவியின் இதயம் வேகமாகத் துடித்து.

அனுபல்லவி, "சா...ர்..." எனத் தடுமாற, அவளை நெருங்கிய பிரணவ் அனுபல்லவியின் கரங்களை அவளின் அனுமதி இன்றியே பிடித்துப் பார்த்தான்.

பிரணவ்வின் திடீர் செயலில் அனுபல்லவியின் கரத்திலிருந்த பேப்பர் பென் கீழே விழ, அவளின் கரங்களோ அனிச்சையாக நடுங்கியன.

முன் தினம் பல மணி நேரம் ஓய்வின்றி டைப் செய்ததால் அனுபல்லவியின் உள்ளங்கையில் ஆங்காங்கு சிவந்து கன்றிப் போய் இருக்க, பிரணவ்விற்கு குற்றவுணர்வாக இருந்தது.

அவளின் கரத்தை வெறித்தவாறே, "ஐம் சாரி..." எனப் பிரணவ் மன்னிப்பு கேட்க, பிரணவ்வின் நெருக்கம் தந்த நடுக்கத்தில், "ப...பரவால்ல சார்..." என்ற அனுபல்லவி அவசரமாக தன் கரத்தைப் பின்னே இழுத்துக் கொண்டாள்.

அனுபல்லவி, "அவ்வளவு தான்னா நான் போகட்டுமா சார்?" எனத் தயக்கமாகக் கேட்கவும் பிரணவ் சரி எனத் தலையசைக்க, விட்டால் போதும் என அங்கிருந்து ஓடப் பார்த்த அனுபல்லவியை பிரணவ்வின், "பல்லவி..." என்ற குரல் தடுத்து நிறுத்தியது.

அனுபல்லவி திரும்பி பிரணவ்வைக் கேள்வியாக நோக்க, "நீங்க இன்னைக்கு லீவ் போட்டு வீட்டுல ரெஸ்ட் எடுங்க... கைக்கு ஏதாவது ஒய்ன்மன்ட் பூசுங்க..." எனப் பிரணவ் கூறவும் மறுக்க வாய் எடுத்தவள் அதற்கும் பிரணவ் ஏதாவது திட்டுவான் என நினைத்து அமைதியாக சரி எனத் தலையசைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அனுபல்லவி சென்றதும் பெருமூச்சு விட்ட பிரணவ் தன் பணியினைத் தொடர்ந்தான்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 10

"ஹேய் அர்ச்சனா... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நேத்து ஆஃபீஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் பிரணவ் சாரும் அந்த அனுவும் மட்டும் ஆஃபீஸ்ல ரொம்ப நேரம் தனியா இருந்து இருக்காங்க டி... நம்ம செக்யூரிட்டி சொன்னார்... என்ன என்ன நடந்து இருக்குமோ ரெண்டு பேருக்கும் இடைல?" என அர்ச்சனாவின் தோழி மீனா கூற, கோபத்தில் பல்லைக் கடித்த அர்ச்சனா, 'ச்சே... நாம என்ன பண்ணாலும் அது நமக்கு எதிராவே திரும்புதே... விட மாட்டேன்... என்ன நடந்தாலும் பிரணவ் எனக்கு தான்...' என்றாள் மனதில்.

ஏதோ நினைத்தவளாக கோப்பு ஒன்றை எடுத்துக்கொண்டு பிரணவ்வின் அறைக் கதவை அனுமதி வேண்டி தட்ட, "கம் இன்..." என‌ உள்ளிருந்து பிரணவ்வின் குரல் கேட்கவும் அறைக் கதவைத் திறந்து கொண்டு ஒயிலாக நடந்து சென்றாள்.

பிரணவ் கணினியில் பார்வையை பதித்தவாறே, "சொல்லுங்க என்ன விஷயம்?" என்க, "இந்த ஃபைல்ல நீங்க ஒரு சைன் பண்ணணும் சார்..." என்ற அர்ச்சனா பிரணவ்வின் இடப்பக்கம் வந்து அவனுக்கு மிக நெருக்கமாக குனிந்தவாறு கூறினாள்.

தூரத்தில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு அர்ச்சனா பிரணவ்வின் மீது சாய்ந்து இருப்பது போல் தோன்றும்.

ஆத்திரத்தில் பல்லைக் கடித்த பிரணவ் கோபமாக தன் இருக்கையில் இருந்து எழுந்துகொள்ள, அதனை எதிர்ப்பார்க்காத அர்ச்சனா ஒரு நிமிடம் தடுமாறி பின் சரியாக நின்று கொண்டாள்.

அர்ச்சனாவை அழுத்தமாகப் பார்த்த பிரணவ், "என்ன வேணும் உனக்கு?" என்க, "சார்... நான்... சைன்..." என வார்த்தை வராது தடுமாறினாள் அர்ச்சனா.

அவளை நெருங்கி அவளின் தாடையை அழுத்தமாகப் பற்றிய பிரணவ், "நான் யாருன்னு சரியா தெரியாம இதெல்லாம் பண்ணிட்டு இருக்க நீ... நான் யாருன்னு தெரிஞ்சா பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ... உனக்கு இந்த வேலைல நிரந்தரமா இருக்கணும்னா என் கிட்ட இருந்து தள்ளியே இரு... அதை விட்டுட்டு சீப்பா பிஹேவ் பண்ண நினைச்சன்னா உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்... மைன்ட் இட்..." என மிரட்டிவிட்டு, "கெட் லாஸ்ட்..." எனக் கத்தினான்.

அர்ச்சனா அங்கிருந்து செல்லப் பார்க்க, "வன் மினிட்..." என்ற பிரணவ் ப்ளாஸ்கில் இருந்த கொதிநீரை ஒரு குவளையில் ஊற்றி, "இதை எடுங்க..." என்றான் அர்ச்சனாவிடம்.

அர்ச்சனாவும் ஏன் என்று புரியாமல் அதனைக் கையில் எடுக்க, குவளையுடன் சேர்த்து அர்ச்சனாவின் கரத்தை இறுக்கப் பற்றினான் பிரணவ்.

"ஸ்ஸ்ஸ் ஆ..." என அதன் சூடு தாங்காது அர்ச்சனா கத்த, பிரணவ்வின் முகத்தில் அவ்வளவு ஆத்திரம்.

"ஸ்ஸ்ஸ்... வலிக்கிது சார்..." என அர்ச்சனா முணங்க, "இது ஃபைல்ஸை மாத்தி வெச்சதுக்கு..." என பிரணவ் கூறவும், 'இவருக்கு எப்படி தெரிஞ்சது?' என அர்ச்சனா அதிர்ச்சி ஆக, "எனக்கு எப்படி தெரியும்னு பார்க்குறீங்களா? இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க மிஸ் அர்ச்சனா?' என மறு கரத்தால் சிசீடீவியை காட்டினான்.

ஏளனமாக நகைத்த பிரணவ் தன் பிடியில் அழுத்தத்தைக் கூட்டவும், "ஆ..." என அர்ச்சனா வலியில் அலற, பிரணவ்வின் மனது குளிர்ந்தது.

பட்டென பிரணவ் அர்ச்சனாவின் கரத்தை விடவும் கொதிநீர்க் குவளை அர்ச்சனாவின் காலில் விழுந்து அவளின் கால் வெந்து புண்ணானது.

வலியில் அர்ச்சனாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க, காலைப் பற்றியபடி கீழே அமர்ந்தாள்.

அர்ச்சனாவின் கை, கால் இரண்டுமே வெந்து புண்ணாகி இருக்க, காயம் தந்த வலியை விட அனுபல்லவியின் மீதிருந்த வன்மம் அதிகமாகிக்கொண்டே சென்றது.

அவளின் முகத்துக்கு நேராக குனிந்த பிரணவ், "இது ஜஸ்ட் டெமோ தான்... திரும்ப இப்படி ஏதாவது பண்ணா விளைவு இதை விட கொடூரமா இருக்கும்..." என்றான் பிரணவ் கண்களில் வெறியுடன்.

ஆகாஷிற்கு அழைத்த பிரணவ் அவன் அழைப்பை ஏற்கவும், "இங்க என் கேபின்ல ஒரு பேஷன்ட் இருக்காங்க... வந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க..." என உத்தரவு இட்டு விட்டு அழைப்பைத் துண்டிக்க, கண்களில் கண்ணீருடன் அவனை முறைத்துப் பார்த்தாள் அர்ச்சனா.

தன் இருக்கையில் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்ட பிரணவ், "மிஸ் அர்ச்சனா... இந்த பிரணவ்வை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? என்னைப் பத்தி உங்களுக்கு சரியா தெரியலன்னு நினைக்கிறேன்... அவ்வளவு சீக்கிரமா யாராலயும் இந்த பிரணவ்வை வளைச்சி போட முடியாது..." என்றான் திமிருடன்.

சற்று நேரத்தில் அங்கு வந்த ஆகாஷ் தரையில் காலைப் பிடித்தபடி அமர்ந்திருந்த அர்ச்சனாவைக் கண்டு முதலில் அதிர்ந்தவன் பிரணவ்வைத் திரும்பிப் பார்க்க, அவன் இருந்த தோற்றமே என்ன நடந்து இருக்கும் என்று ஆகாஷிற்கு கூறியது.

இவ்வளவு நாட்களாக பிரணவ்வுடன் இருக்கிறான். அவனுக்கு தெரியாததா தன் பாஸ் யாருடன் எப்படி நடந்துகொள்வார் என்று.

பிரணவ், "ஆகாஷ்... மிஸ் அர்ச்சனாவை பார்த்து பத்திரமா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் நல்ல டாக்டரா காட்டி மெடிசின்ஸ் வாங்கி கொடுங்க... அப்போ தான் சீக்கிரமே குணம் ஆகுவாங்க..." என இருபொருள் பட நக்கல் குரலில் கூறவும் வாயை மூடி சிரித்த ஆகாஷ் அர்ச்சனா பார்த்த பார்வையில் கப்சிப் என வாயை மூடிக்கொண்டு, "வாங்க மேடம்... நான் உங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்..." என அர்ச்சனாவிற்கு எழுந்துகொள்ள கை கொடுத்தான்.

ஆனால் அர்ச்சனாவோ ஆகாஷின் கரத்தைத் தட்டி விட்டு தானே எழுந்துகொள்ள முயல, திடீரென, "ஆ..." என வலியில் கத்திக்கொண்டு மீண்டும் கீழே விழுந்தாள்.

கஷ்டப்பட்டு தன் சிரிப்பை அடக்கிய ஆகாஷ், "அதான் சொல்றேன்ல மேடம்... வாங்க..." என அர்ச்சனாவின் தோளைப் பிடித்து எழ வைத்து அழைத்துச் சென்றான்.

************************************

ஆஃபீஸில் லீவ் போட்டு விட்டு அவர்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டிற்கு சென்ற அனுபல்லவி கண்ணாடி முன் நின்று தன் விம்பத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன் கரங்கள் இரண்டையும் முகத்தின் முன் கொண்டு வந்தவளுக்கு பிரணவ் பிடித்த இடம் இன்னுமே குறுகுறுப்பது போல் ஒரு உணர்வு.

கன்னங்கள் இரண்டும் வெட்கச் சதுப்பை பூசிக்கொள்ள, அனுபல்லவியின் மனசாட்சியோ, 'அடக் கூறு கெட்டவளே... கொஞ்சம் கூட இந்த சூடு, சுரணை எதுவுமே இல்லயா உனக்கு? பத்து பேர் சேர்ந்து பண்ண வேண்டிய வேலையை ஒத்த ஆளா உன்ன பண்ண வெச்சி, உன் கை எல்லாம் புண்ணாக்கி வெச்சிருக்கான் அந்த பிரணவ்... நீ என்னன்னா அவனை நினைச்சி பல்லைக் காட்டிட்டு இருக்க...' எனக் காரித் துப்பியது.

அனுபல்லவி, "அட ச்சே... அனு... வர வர நீ போற ரூட் கொஞ்சம் கூட சரி இல்ல... சரியா பார்த்தா நீ அவர் மேல கோவப்படணும்..." எனத் தலையில் அடித்தபடி தன்னையே திட்டிக் கொண்டவள், "ஆ... வலிக்கிதே... ரொம்பத் தான் கொடுமை பண்ணுறார்..." என வலியில் முகம் சுருக்கினாள்.

"பனை மரத்துக்கு பாதி வளர்ந்து இருக்கான்... என்னை குட்டச்சின்னு சொல்றான்... இடியட்... ஹவ் டேர் ஹீ... பிரணவ் சாருக்கு பீ.ஏ. னா கொழுப்பு கூடிடுமா? நாளைக்கு இருக்கு அவனுக்கு..." எனக் கத்திக்கொண்டே பாதணிகளை ஒவ்வொரு மூலைக்கும் தூக்கி வீசியபடி வந்த தோழியைப் புரியாமல் பார்த்தாள் அனுபல்லவி.

அனுபல்லவி, "என்னாச்சு சாரு? ஏன் இவ்வளவு கோவமா இருக்க? யாரைத் திட்டுற?" எனக் கேட்க, "எல்லாம் அந்த நெட்டக் கொக்கு ஆகாஷை தான்... சச் அ இரிட்டேட்டிங் பர்சன்..." எனப் பல்லைக் கடித்தாள் சாருமதி.

"ஆகாஷ்?" என யோசித்த அனுபல்லவி, "ஓஹ்... பிரணவ் சாரோட பீ.ஏ. வா? அவர் என்ன பண்ணார்?" என்க, "என்ன தான் பண்ணல? ரொம்ப கடுப்படிக்குறான் டி அனு..‌. இன்னைக்கு நீ வேற ஹாஃப் டேல போய்ட்ட... செம்மயா போர் அடிச்சிச்சேன்னு ஏதாவது சாப்பிடலாம்னு கஃபடேரியா போய் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டேன்... எங்க இருந்து தான் அந்த மலக் குரங்கு வந்துச்சுன்னு தெரியல... சடன்னா வந்து என் கைல இருந்த ஐஸ் கிரீமை பிடுங்கி சாப்பிடுறான்... அதுக்கப்புறமாவது சும்மா இருந்தானா?" என சாருமதி ஆகாஷை அர்ச்சிக்க, ஏதோ கதை கேட்பது போல் கன்னத்தில் கை வைத்து சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தாள் அனுபல்லவி.

அனுபல்லவி, "அப்புறம் என்ன டி பண்ணினார்?" என ஆர்வமாகக் கேட்க, "அந்தக் கொடுமையை ஏன் டி கேட்குற?" எனச் சோகமாகக் கூறிய சாருமதி மாலை ஆஃபீஸில் நடந்தவற்றை கூறினாள்.

************************************

கஃபடேரியாவில் ஐஸ் கிரீம் வாங்கிக்கொண்டு யாரும் இல்லாத ஒரு மூலையில் போய் அமர்ந்து கொண்ட சாருமதி சுற்றியும் வேடிக்கை பார்த்தபடி ஐஸ் கிரீமை சாப்பிட, திடீரென அங்கு வந்து சாருமதியின் அருகில் அமர்ந்த ஆகாஷ் அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐஸ் கிரீமை தன் பக்கம் இழுத்து சாப்பிட தொடங்கினான்.

கோபத்தில் பல்லைக் கடித்த சாருமதி, "மலக் குரங்கே... ஐஸ் கிரீம் வேணும்னா வாங்கி சாப்பிட வேண்டியது தானே... எதுக்குடா என்னோடதை பறிச்சு சாப்பிடுற?" என்க, "இதைப் போல டேஸ்ட்டான ஐஸ் கிரீம் வேற இல்லயாம் குட்டச்சி..." என்றான் ஆகாஷ் கூலாக.

"அதுக்காக? என்னோடதை பறிச்சி சாப்பிடுவியா நீ? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லயா?" எனச் சாருமதி ஆவேசமாகக் கேட்கவும் அவளைப் பார்த்து புன்னகைத்த ஆகாஷ், "உன் கிட்ட எனக்கு என்ன டி மேனர்ஸ் பார்க்க வேண்டி இருக்கு குட்டச்சி?" என்கவும் சாருமதியின் பற்கள் அரைபடும் ஓசை அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

சாருமதி எண்ணெய்யில் இட்ட கடுகாய் வெடிக்கத் தயாராக, அதற்கு மேலும் தூபம் போடுவது போல், "அது மட்டும் இல்ல குட்டச்சி... ஆல்ரெடி நீ குட்டி அண்டா சைஸ்ல இருக்க... இதுக்கு மேலயும் ஐஸ் கிரீம் சாப்பிட்டா அண்டா சைஸ்ல இருக்குற நீ பீப்பா சைஸ் ஆகிடுவ... அப்புறம் உன் ஃபியூச்சர் ஹப்பி எப்படி உன்ன தூக்க முடியும் குட்டச்சி?" எனக் ஆகாஷ் ஐஸ் கிரீமை வாயில் போட்டு சுவைத்தபடி கூற, "அதைப் பத்தி உனக்கு என்னடா கவலை பனை மரம்? என் ஃபியூச்சர் ஹப்பிக்கு நான் எப்படி இருந்தாலும் பிடிக்கும்..." என்றாள் சாருமதி கண்கள் மின்ன.

ஆகாஷ், "ஹ்ம்ம்... அது என்னவோ கரெக்ட் தான் குட்டச்சி... அதனால தான் நான் ஃபீல் பண்றேன் குட்டச்சி... பிகாஸ் ஃபியூச்சர்ல நான் தானே உன்ன லைஃப் லாங் சுமக்க போறேன் மை டியர் ஃபியூச்சர் வைஃபீ..." எனப் பளீர் புன்னகையுடன் சாருமதியின் தலையில் ஒரு மினி அணுகுண்டை இறக்கவும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தவள் கண்கள் வெளியே தெரித்து விடும் அளவுக்கு விரித்தாள்.

உதடு மடித்துப் புன்னகைத்தபடி சாருமதியின் அதிர்ந்த முகத்தை ரசித்த ஆகாஷ் அவள் தன்னிலை மீளும் முன்னே சாருமதியின் உதட்டோரம் ஒட்டி இருந்த ஐஸ் கிரீமை முத்தமிட்டு தன் உதட்டுக்கு மாற்றிக்கொண்டு, "வரேன் குட்டச்சி பேபி..." என்று விட்டு சென்றான்.

அவன் சென்று பல நிமிடங்கள் கடந்த பின்னும் இன்னும் அதே நிலையில் இருந்தவளை ஏதோ கீழே விழும் சத்தம் மீட்டெடுத்தது.

அவசரமாக தலையை உலுக்கிக் கொண்ட சாருமதி, 'இப்போ நடந்தது எல்லாம் கனவா?' என யோசிக்க, அவளின் உதட்டின் ஓரம் எஞ்சி இருந்த ஆகாஷின் முத்தத்தின் ஈரம் நடந்தவை அனைத்தும் நிஜம் என எடுத்துரைக்க, "ஆகாஷ்..." எனக் கோபத்தில் பல்லைக் கடித்தாள் சாருமதி.

************************************

சாருமதி மாலை ஆஃபீஸில் நடந்தவற்றை சோகமாகக் கூறி முடிக்கவும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் அனுபல்லவி.

"நான் எவ்வளவு ஃபீலிங்கா சொல்லிட்டு இருக்கேன்... நீ பாட்டுக்கு சிரிக்கிற..." என சாருமதி கோபப்பட, "ஹஹஹா... இப்படி கூட யாராவது ப்ரபோஸ் பண்ணுவாங்களா சாரு? இதுல கிஸ் வேற..." என மீண்டும் சிரித்தாள் அனுபல்லவி.

அதில் உதட்டைப் பிதுக்கிய சாருமதி ஆகாஷ் முத்தமிட்ட இடத்தை அழுந்தத் தேய்க்க, தோழியின் நிலையை எண்ணி கடினப்பட்டு தன் சிரிப்பை அடக்கிய அனுபல்லவி சாருமதியின் தோளில் கை போட்டு, "சாரு... எதுக்கு இப்போ நீ ஃபீல் பண்ற? ஆகாஷ் உனக்கு ப்ரபோஸ் பண்ணதனாலயா?" எனக் கேட்கவும், "அவன் எப்படி பப்ளிக்ல எல்லார் முன்னாடியும் அப்படி கிஸ் பண்ணலாம்?" என்றாள் சாருமதி பட்டென்று கோபமாக.

அனுபல்லவி, "ஓஹ்... அப்போ அவர் உனக்கு ப்ரபோஸ் பண்ணினது உனக்கு பிரச்சினை இல்ல... கிஸ் பண்ணினது கூட பிரச்சினை இல்ல... அப்படி எல்லார் முன்னாடியும் கிஸ் பண்ணது தான் பிரச்சினை... அப்படி தானே..." என ஒவ்வொரு வார்த்தையாக அழுத்திக் கேட்கவும், "ஆஹ்... அது... அது..." எனத் தடுமாறினாள் சாருமதி.

"எது எதுமா?" என அனுபல்லவி கேலியாகக் கேட்கவும் சுதாகரித்த சாருமதி, "அது எப்படி நேத்து தான் சரியாப் பார்த்து பேசினோம்... இல்ல இல்ல சண்டை போட்டோம்... அதுக்குள்ள எப்படி லவ்? அந்த நெட்டக் கொக்குக்கு வேற வேலை இல்ல... சும்மா என்னைக் குழப்புறான்... நாளைக்கு இருக்கு அவனுக்கு... பிரணவ் சாரோட பீ.ஏ.னா என்ன வேணாலும் பண்ணுவாரா?" எனக் கோபமாகக் கேட்டவள் அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

சாருமதி சென்ற திக்கைப் பார்த்து புன்னகைத்த அனுபல்லவி, "ஹ்ம்ம்ம்ம்... நமக்கெல்லாம் எப்போ தான் இந்த லவ் எல்லாம் செட் ஆக போகுதோ?" எனப் பெருமூச்சு விடவும் பிரணவ்வின் முகம் அவள் கண் முன் வந்து போக, அவசரமாக தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டாள்.

************************************

"டேய் பிரதாப்... அர்த்த ராத்திரியில எல்லாம் பேக் பண்ணிட்டு எங்க கிளம்பிட்டு இருக்க நீ?" என அவனின் தந்தை கேட்க, "அதைத் தான்ங்க நானும் இம்புட்டு நேரமா கேட்டுட்டு இருக்கேன்... பதில் சொல்லாம அவன் பாட்டுக்கு எல்லாத்தையும் எடுத்து வைக்கிறான்..." என அவனின் தாய் சலிப்பாகக் கூறினார்.

ஆனால் பிரதாப் என்பவனோ தனக்கு வேண்டியவை எல்லாம் எடுத்து பையில் வைத்தவன், "அம்மா... அப்பா... நான் போய்ட்டு வரேன்... அந்த ஓடுகாலி அனு எங்க இருக்கான்னு தெரிஞ்சிடுச்சி... இந்தத் தடவை அவளால என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது..." என்கவும் அவனின் தாய், தந்தை இருவரின் முகத்திலும் அப்படி ஒரு வன்மமான பாவனை.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 11

விடிந்தும் விடியாததுமாய் இருக்கும் அதிகாலைப் பொழுதில் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் கையில் பையுடன் வந்து நின்ற நண்பனைக் கேள்வியாய் நோக்கினான் கார்த்திக்.

கார்த்திக், "டேய் பிரதாப்? என்னடா இது? நீ வரதா சொல்லவே இல்ல?" எனக் கேட்க, "ப்ச்... சொல்லிட்டு வரலன்னா வீட்டுக்குள்ள எடுக்க மாட்டியா? ச்சீ தள்ளு..." எனக் கடுப்புடன் கூறிய பிரதாப் வாசலில் நின்ற கார்த்திக்கைத் தள்ளிக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றான்.

'என்ன நடக்குது இங்க? இது என் வீடா? இல்ல அவன் வீடா?' என மனதினுள் தன்னையே கேட்டுக்கொண்ட கார்த்திக் பிரதாப்பின், "டேய் நாயே..." என்ற கத்தலில் தோளைக் குலுக்கிக் கொண்டு அவசரமாக உள்ளே ஓடினான்.

சமையலறையில் காஃபி தயாரித்துக் கொண்டிருந்த பிரதாப்பிடம் சென்ற கார்த்திக், "என்ன விஷயமா பெங்களூர் வந்து இருக்கடா?" எனக் கேட்கவும், "முக்கியமான ஒருத்தரை தேடி வந்திருக்கேன்... என் லைஃப்ல ரொம்....ப முக்கியமான ஒருத்தர்..." என ரொம்ப என்பதில் அழுத்தம் கொடுத்து கூறிய பிரதாப்பின் கண்களில் இருந்த வெறியை நல்ல நேரம் கார்த்திக் கவனிக்கவில்லை.

கார்த்திக், "ஓஹ்... ஃபிகரா மச்சி? நீ நடத்து ராசா... பட் ஜாக்கிரதை பிரதாப்... சென்னை போல இல்லடா பெங்களூர்... அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்..." என்கவும் பிரதாப் காஃபியை ஒரு மிடர் பருகியபடி சரி எனத் தலையசைத்தான்.

"சரிடா... அப்போ நான் ஆஃபீஸ் கிளம்ப ரெடி ஆகுறேன்... ஏதாவது தேவைன்னா கால் பண்ணு... நான் வர ஈவ்னிங் ஆகும்..." என்று விட்டு கார்த்திக் கிளம்பி விட,

'அனு... வந்துட்டேன் டி... இந்த தடவை உன்னால என் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது...' என்று விஷமமாக புன்னகைத்தான் பிரதாப்.

************************************

"அனு... என்ன பண்ணுற? ஆஃபீஸ் கிளம்பலயா?" என்ற சாருமதியின் கேள்விக்கு கட்டிலில் குப்புப்படுத்தவாறே மறுப்பாகத் தலையசைத்தாள் அனுபல்லவி.

அவளின் அருகில் சென்று ஆறுதலாக தோள் மீது கை வைத்த சாருமதி, "அனு... எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே இருக்க போற? நீ பெங்களூர் வந்து மூணு வருஷம் ஆச்சு... ஒவ்வொரு வருஷமும் இந்த நாள்ல நீ இப்படி தான் இடிஞ்சி போய் சோகமா இருக்க... அப்படி என்ன தான் நடந்துச்சின்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற... பெஸ்ட் ஃப்ரெண்ட்னு பேச்சுக்கு தான் சொல்ற... ஆனா எனக்கு உன்ன பத்தி எதுவுமே தெரியல..." எனக் கோபமும் வருத்தமும் கலந்து உரைக்கவும் எழுந்த அனுபல்லவி சாருமதியைப் பக்கவாட்டில் அணைத்துக் கொண்டவள், "சாரு... நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு என்னை விட உனக்கு நல்லா தெரியும்..." என்றாள் கண்கள் கலங்க.

"ஹ்ம்ம் ஹ்ம்ம்... தெரியும் தெரியும்... அதனால தான் உன்ன எதுவும் கேட்காம இருக்கேன்..." என்றாள் சாருமதி போலிக் கோபத்துடன்.

அனுபல்லவி, "தேங்க்ஸ் டி... சரியான நேரம் வரும் போது நான் உன் கிட்ட எல்லா உண்மையையும் சொல்றேன்... அதுவரைக்கும் ப்ளீஸ் இதை பத்தி என் கிட்ட எதுவும் கேட்காதே சாரு..." என்றவள் சாருமதி சரி எனத் தலையசைக்கவும், "சாரு... என்னை பத்தி எல்லா உண்மையையும் தெரிஞ்சதுக்கு அப்புறம் நீ என்னை வெறுத்துட மாட்டேல்ல..." எனக் கண்ணீருடன் கேட்க, "லூசு அனு... நான் எப்படி உன்ன வெறுப்பேன்... உன்ன பத்தி எனக்கு தெரியாதா? நீ என்ன பண்ணினாலும் அதுக்கு ஒரு வேலிட் ரீசன் இருக்கும்னு நான் நம்புறேன்..." எனச் சாருமதி கூறவும் அவளைப் பாய்ந்து அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள் அனுபல்லவி.

சற்று நேரத்தில் அனுபல்லவி அழுது அழுதே உறங்கிப் போக, சாருமதி மாத்திரம் ஆஃபீஸ் கிளம்பினாள்.

நேற்றில் இருந்தே அனுபல்லவியைக் காணாதது பிரணவ்விற்கு ஏதோ போல் இருந்தது.

சீசிடீவி கேமரா வழியாக தன் கணினியில் அடிக்கடி அனுபல்லவி வழமையாக அமரும் இடத்தையே பார்த்தபடி இருந்தான்.

'ஏன் பல்லவி இன்னைக்கு வரல?' என யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் அவனது மெயிலுக்கு அனுபல்லவியின் விடுமுறைக் கடிதம் வந்தது.

ஏதோ சுகவீனம் என்று கூறி இன்று மாத்திரம் விடுமுறைக் கேட்டிருக்க, அதனை ஆமோதித்து பதில் அனுப்பிய பிரணவ்விற்கு தன்னால் தானோ அவள் சுகவீனமுற்றாள் எனக் குற்றவுணர்வாக இருந்தது.

அனுபல்லவியைப் பற்றி பிரணவ் யோசிக்கும் போதே அவனைக் காப்பாற்றிய அந்த முகம் அறியாப் பெண்ணின் நினைவும் சேர்ந்து வந்து விட, தலைவலி வந்தது தான் மிச்சம்.

சரியாக ஆகாஷ் அங்கு வரவும் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தவனைக் கண்டு பதறி, "என்னாச்சு பாஸ்? திரும்ப தலைவலியா? ஹாஸ்பிடல் போகலாமா?" எனக் கேட்டான்.

மறுப்பாகத் தலையசைத்த பிரணவ், "எனக்கு ஒன்னுமில்ல ஆகாஷ்... டோன்ட் வொரி... எனக்கு ஒரு இன்ஃபர்மேஷன் தெரியணும் ஆகாஷ்..." என்க, "சொல்லுங்க பாஸ்... எதைப் பத்தி இன்ஃபார்மேஷன் வேணும் உங்களுக்கு?" எனக் கேட்டான் ஆகாஷ்.

சில நொடி அமைதி காத்த பிரணவ், "அன்னைக்கு எனக்கு ஆக்சிடன்ட் ஆனப்போ ஒரு பொண்ணு தான் என்னைக் காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்துச்சு... அந்தப் பொண்ணைப் பத்தி தெரியணும்..." என்க, 'பொண்ணா? இவர் எதுக்கு அந்தப் பொண்ணைப் பத்தி கேட்குறார்?' என யோசித்த ஆகாஷ் அதனை மறைக்காமல் பிரணவ்விடமே கேட்டு விட்டான்.

ஆகாஷ், "எதுக்கு பாஸ் அந்தப் பொண்ணைப் பத்தி தெரிஞ்சிக்க நினைக்கிறீங்க?" எனக் கேட்கவும், "ஜஸ்ட் தேங்க்ஸ் சொல்ல தான்... எனக்கு மறு வாழ்வு கொடுத்து இருக்கா அந்தப் பொண்ணு... அவளுக்கு ஏதாவது என்னால உதவி பண்ண முடிஞ்சா பண்ண தான்..." என்றான் பிரணவ்.

"ஓஹ்... உதவி... ஹ்ம்ம்ம்ம்..." எனக் கேலி இழையோடிய குரலில் ஆகாஷ் இழுக்கவும், "என்ன?" என பிரணவ் பார்த்த அழுத்தப் பார்வையில், "ஓக்கே பாஸ்... ஓக்கே பாஸ்... நான் உடனே விசாரிச்சு சொல்றேன்..." என்று விட்டு கிளம்பப் பார்த்த ஆகாஷ் மீண்டும் நின்று, "ஆமா... எப்படி பாஸ் உங்களைக் காப்பாத்தினது ஒரு பொண்ணு தான்னு கன்ஃபார்மா சொல்றீங்க? டாக்டர்ஸ் கூட உங்களை ஹாஸ்பிடல் கொண்டு வரப்போ நீங்க சுயநினைவு இல்லாம இருந்ததா சொன்னாங்களே..." என ஆர்வம் மிகுதியில் கேட்டு விட்டு நாக்கைக் கடித்தான் பிரணவ் என்ன சொல்லுவானோ என்ற பயத்தில்.

நெஞ்சுக்கு குறுக்காக கரங்களைக் கட்டிக்கொண்டு ஆகாஷை அழுத்தமாகப் பார்த்த பிரணவ், "ஆகாஷ்... நீங்க இப்போ நான் சொன்ன வேலையை செய்ய போறீங்களா? இல்ல இங்க நின்னு என்னை என்கொய்ரி பண்ண போறீங்களா?" எனக் கேட்டான்.

"இதோ போய்ட்டேன் பாஸ்..." என்று விட்டு தப்பித்தால் போதும் என அங்கிருந்து ஓடிய ஆகாஷ் சாருமதியின் மேல் மோதி நிற்க, "இடியட்... உனக்கு இதே வேலையா போச்சா? எப்பப்பாரு என்னையே வந்து இடிச்சிட்டு இருக்க... உனக்கு வேற ஆளே கிடைக்கலயா? சரியா இரிட்டேட் பண்றான்..." எனக் கோபத்தில் கத்தியபடி கீழே விழுந்த தன் கைப்பையை எடுக்கக் குனிய, அவளுக்கு முன்பே குனிந்து அந்தக் கைப்பையை எடுத்த ஆகாஷ் சாருமதியின் கரத்தில் கைப்பையைத் திணித்து விட்டு, "ஏய் குட்டச்சி... என்ன வாய் ரொம்ப நீளுது? எனக்கு வேற வேலை இல்லாம தான் பாரு நான் வந்து உன்னை இடிக்கிறேன்... ஏதோ ரெண்டு தடவை தெரியாம உன் மேல வந்து மோதிட்டேன்னு ரொம்ப தான் பேசுற... நாம மேடமுக்கு இரிட்டேட்டிங்காமே... ஏதோ லவ் பண்ற பொண்ணாச்சேன்னு அமைதியா போறேன்... வந்துட்டா மனுஷனுக்கு கடுப்பைக் கிளப்பிக்கிட்டு..." என சாருமதியை விட கோபமாகக் கத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

முதன் முறையான ஆகாஷின் கோபத்தில் ஒரு நிமிடம் கண் கலங்கி நின்ற சாருமதி, "அவன் கோவமா பேசினா எனக்கென்ன வந்தது? நான் எதுக்கு ஃபீல் பண்ணணும்? நான் என்ன அந்த பனை மரத்த லவ் பண்றேனா? இல்லயே... அவன் எப்படி இருந்தா எனக்கென்ன? காலையிலயே மூட ஸ்பாய்ல் பண்ணிட்டான்... திரும்ப வந்தா இருக்கு அவனுக்கு..." எனத் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு தன் பணியினைப் பார்க்கக் கிளம்பினாள்.

************************************

"அர்ச்சு... என்னாச்சு உனக்கு? எப்படி இவ்வளவு பெரிய காயம்? அவ்வளவு கேர்லெஸ்ஸா இருப்பியா நீ? ஆஃபீஸ் போனப்போ மீனா தான் உனக்கு நடந்ததை சொன்னா... உடனே கிளம்பி உன்னப் பார்க்க வந்துட்டேன்..." என நல்ல நண்பனாக கார்த்திக் கடிந்துகொள்ள, "நிறுத்து கார்த்திக்... எனக்கு அட்வைஸ் பண்ண தான் நீ இப்போ இங்க வந்தியா? ஆல்ரெடி செம்ம காண்டுல இருக்கேன்... வந்துட்டான் கேள்வி கேட்டுட்டு..." என்றாள் அர்ச்சனா சலிப்பாக.

அர்ச்சனா, கார்த்திக் இருவருக்குமே பெற்றோர் குடும்பம் என யாரும் இல்லை. ஒரே ஆசிரமத்திலேயே இருவரும் வளர்ந்தனர். சிறு வயதில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். தொடர்ந்து கல்லூரி, ஆஃபீஸ் என அந் நட்பு தொடர, இன்று திடீரென அர்ச்சனா தன்னை எடுத்தெறிந்து பேசவும் மனம் வாடிய கார்த்திக் அதனைத் தன் தோழியிடம் காட்டிக் கொள்ளவில்லை.

அர்ச்சனா, "காஃபி போடும் போது கெட்டில் சூடா இருக்குறதை கவனிக்காம எடுத்து கால்ல ஊத்திக்கிட்டேன்... அவ்வளவு தான்... சரி அதை விடு... கார்த்திக்... அந்த அனுவுக்கும் ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் இடைல என்ன இருக்கு?" என நேராக விஷயத்திற்கு வர, "அவளைப் புரியாமல் பார்த்த கார்த்திக், "நீ என்ன கேட்குறன்னு புரியல அர்ச்சு... என்ன இருக்குன்னா என்ன அர்த்தம்? நீ ஏன் அதைப் பத்தி கேட்குற?" எனக் கேட்டான்.

"ப்ச்... என்ன நீ வந்ததுல இருந்து கேள்வியே கேட்டுட்டு இருக்க கார்த்திக்? நான் ஒரு கேள்வி கேட்டா அதுக்கு டைரெக்டா பதில் சொல்ல முடியாதா உன்னால? என்ன இருக்குன்னா என்ன இருக்கு தான்... நான் பிரணவ்வை லவ் பண்றேன்... அவர் அனு கூட க்ளோஸா இருக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல..." என அர்ச்சனா கோபமாகக் கூற, கார்த்திக்கின் மனதில் ஏதோ சொல்ல முடியாத வலி.

அது ஏன் என்று கூட அவனுக்குப் புரியவில்லை.

கார்த்திக், "அ...அர்ச்சு... நீ... என்ன சொல்ற? லவ்வா? அதுவும் பிரணவ் சார் மேலயா? எப்படி?" எனத் தயக்கமாகக் கேட்க, "ஆமா... லவ் தான்... ஏன் எனக்கு என்ன குறை? அழகு இல்லயா? படிப்பு இல்லயா? எத்தனை பசங்க என் ஒரு கண் அசைவுக்காக என் பின்னாடி நாய் மாதிரி அலைஞ்சி இருப்பானுங்க... அதுவும் போக அந்த பிரணவ் யூஸ் பண்ற கார், மொபைல் எல்லாம் பார்த்து இருக்கியா நீ? எல்லாமே ஹை க்ளாஸ் பசங்க யூஸ் பண்றது... அவன் சாதாரணமானவன் இல்லன்னு நினைக்கிறேன்... அவன் கூட இருந்தா நான் ஆசைப்படுற லக்ஸரி லைஃப என்னால வாழ முடியும்... பையன் ஹேன்ட்ஸமா வேற இருக்கான்... சின்ன வயசுல இருந்தே யாரோ உடுத்திட்டு தூக்கிப் போட்ட ட்ரெஸ்ஸைப் போட்டு, பிடிச்சதை வாங்கிக்க முடியாத நிலமை கொடுமை கார்த்திக்... இனிமேலும் என்னால இந்த நரகத்துல இருக்க முடியாது... பிரணவ்வை சீக்கிரமா என் பக்கம் விழ வெச்சி காட்டுறேன்... ஆனா இந்த அனு தான் எனக்கு தடையா இருக்கா..." எனக் கண்களில் தீவிரத்துடன் கூறிய அர்ச்சனாவைக் காண கார்த்திக்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

வெறும் பணத்திற்காக தன் தோழி இந்த அளவுக்கு இறங்கிப் போகிறாள் என நினைக்கும் போது கார்த்திக்கின் மனம் ஒரு பக்கம் வேதனை அடைய, தன்னால் அவளுக்கு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுக்க முடியவில்லையே எனத் தன் மீதும் கழிவிரக்கம் தோன்றியது.

"அர்ச்சு... நீ ஏதோ அவசரப்பட்டு முடிவு எடுத்திருக்கன்னு தோணுது... நல்லா யோசிச்சு பாரு... நீ ஆசைப்படுறது போல வாழணும்ங்குறதுக்காக லவ் பண்றது சரியா?" என தோழிக்குப் புரிய வைக்கும் நோக்கில் பேசிய கார்த்திக்கை கை நீட்டி தடுத்த அர்ச்சனா, "உன்னால எனக்கு ஹெல்ப் பண்ண முடிஞ்சா பண்ணு கார்த்திக்... இல்லன்னா கிளம்பி போய்ட்டே இரு... சும்மா சும்மா அட்வைஸ் பண்ணிட்டு வராதே..." என்றாள் கோபமாக.

அப்போது சரியாக பிரதாப்பிடமிருந்து கார்த்திக்கிற்கு அழைப்பு வந்தது.

அர்ச்சனாவை ஏக்கமாகப் பார்த்தபடியே கார்த்திக் அழைப்பை ஏற்கவும் மறுபக்கம் பிரதாப், "டேய் எங்கடா இருக்க நீ? ஈவ்னிங் வீட்டுக்கு வரேன்னு சொன்ன... இன்னும் காணோம்..." எனக் கோபமாகக் கேட்க, 'ஏதோ நான் இவன் பொண்டாட்டி போல கேள்வி கேட்குறதை பாரு... ஏன் வீட்டுக்கு இன்னும் வரலயாம்... ச்சே... இவன் வேற...' என மனதுக்குள் பிரதாப்பை வறுத்தெடுத்த கார்த்திக், "வரேன் மச்சான்... என் ஃப்ரெண்டுக்கு சின்ன ஆக்சிடன்ட் ஒன்னு... அதான் பார்க்க வந்தேன்... இப்போ கிளம்பிட்டேன்..." என்றான் அர்ச்சனாவை நோட்டம் விட்டபடி.

அவளோ பிரணவ்வை எப்படி தன் காதல் வலையில் சிக்க வைக்கலாம் எனத் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்க, அழைப்பில் இருந்த பிரதாப், "நீ ஒன்னும் வர வேணாம்... எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகணும்..." என்க, 'அதானே... இவன் எப்போ நம்மளை மனுஷனா மதிச்சிருக்கான்?' என எப்போதும் போல மனதில் கவுன்டர் கொடுத்தான் கார்த்திக்.

கார்த்திக், "ஹ்ம்ம்... சொல்லுடா... என்ன பண்ணணும்? மது மாது ஏதாவதுன்னு மட்டும் சொன்ன கொலை பண்ணிடுவேன்..." என மிரட்ட, "ஏ ச்சீ வாயைக் கழுவு... அசிங்கமா பேசிக்கிட்டு... எனக்கு உடனடியா ஒரு பைக் ஆர் கார் ரென்ட்டுக்கு வேணும்..." என்றான் பிரதாப்.

'ஆமா... நான் அசிங்கமா பேசுறேன்... ஐயா பண்றது எல்லாமே புண்ணிய காரியம்...' என மனதில் பிரதாப்பிற்கு கவுன்டர் கொடுத்த கார்த்திக்கிற்கு அப்போது தான் அவன் கேட்டது மூளையில் பதிய, "என்ன? பைக் ஆர் காரா? ரென்ட்டுக்கா? டேய்... நானே மாசம் பதினைந்தாயிரம் சம்பளத்துல வாடகை வீட்டுல நாளைக் கடத்திட்டு இருக்கேன்... எனக்கு ஆஃபீஸ் போறதுக்கே கஷ்டப்பட்டு கடன் வாங்கி ஒரு பைக்கை வாங்கி இருக்கேன்... நீ ஈசியா ஏதோ சாக்லேட் வாங்கி கேட்குறதை போல கேட்குற..." எனக் கேட்டான் கோபமாக.

பிரதாப், "ஓஹ்... அதுவும் சரி தான்... சரிடா... அப்போ நாளைல இருந்து நீ பஸ் பிடிச்சு ஆஃபீஸ் போ... உன் பைக்கையே நான் யூஸ் பண்ணிக்குறேன்... நான் பெங்களூர்ல இருந்து போகும் வரை எனக்கு தேவைப்படும்..." என்றவன் கார்த்திக்கின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது அழைப்பைத் துண்டித்து விட, "டேய் பிரதாப்... மச்சான்..." என கார்த்திக் கத்தினது எதுவும் பிரதாப்பின் செவியை எட்டவில்லை.

அர்ச்சனா, "என்ன கார்த்திக்? ஓக்கேயா? அந்த அனுவை என்ன பண்ணலாம்? அவளை பிரணவ்வே கம்பனியை விட்டு துரத்தி விடுறது போல பண்ணணும்..." என ஆத்திரமாகக் கூற, 'இதுங்களுக்கு ஃப்ரெண்டா இருக்குற பாவத்துக்கு என்னை வெச்சி செய்றாங்க...' என மானசீகமாகத் தன்னையே நொந்து கொண்டான் கார்த்திக்.

************************************

கணினித் திரையில் பார்வையைப் பதித்திருந்த பிரணவ் தன்னிடம் அனுமதி கூட வாங்காமல், "பாஸ்..." எனப் பதட்டமாக ஓடி வந்த ஆகாஷைக் கேள்வியாக நோக்கியவன் ஆகாஷ் கூறிய செய்தியில் அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 12

அனுபல்லவியின் தலைமையில் பிரணவ்வின் வழி நடத்தலில் மிஸ்டர் மெஹெராவிடம் வாக்களித்த ஒரு மாதத்திலேயே வெற்றிகரமாக அந்த பிராஜெக்டை பிரணவ்வின் குழு நிறைவு செய்தனர்.

இதில் அனுபல்லவிக்குத் தான் ஏகபோக மகிழ்ச்சி. பிரணவ் தன்னை நம்பி ஒப்படைத்த முதல் ப்ராஜெக்டை எந்தவொரு பிரச்சினையும் இன்றி நிறைவு செய்ததால் வந்த மகிழ்ச்சி அது.

ஆனால் எந்தவொரு பிரச்சினையும் வரவில்லை என அனுபல்லவி நினைத்துக் கொண்டிருக்க, அவளுக்கு எதிராக தீட்டிய சதித் திட்டங்கள் அனைத்தையும் பிரணவ் அழகாக முறியடித்ததை அவள் அறியாமல் போனாள்.

************************************

விடுமுறை முடிந்து மறுநாளே ஆஃபீஸ் வந்த அனுபல்லவியை பிரணவ் எதுவுமே கேட்கவில்லை.

'என்ன இவர் எதுவுமே நம்மள கேட்கல? இப்படி எல்லாம் இருக்க மாட்டாரே... சும்மாவே எறிஞ்சி விழுவார்... இதுல ப்ராஜெக்ட் டைம்ல சடன்னா லீவ் வேற போட்டு இருக்கேன்... ஒருவேளை புலி பதுங்குறது பாயுறதுக்கோ?' என யோசிக்க, 'அவர் என்ன கேட்கணும்னு நீ எதிர்ப்பார்க்குற?' என்ற மனசாட்சியின் கேள்வியில் தலையில் அடித்துக்கொண்ட அனுபல்லவி, 'அதானே... நான் ஒருத்தி லூசு மாதிரி...' எனத் தன்னையே கடிந்து கொண்டாள்.

பிரணவ், "மிஸ் பல்லவி... பல்லவி... பல்லவி உங்களைத் தான்..." என்ற கத்தலில் தன்னிலை அடைந்த அனுபல்லவி, "ஆஹ் சார்... ஏதாவது சொன்னீங்களா?" எனக் கேட்டாள் அவசரமாக.

"என்ன ஆச்சு உங்களுக்கு? இவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன்... காதுல விழலயா?" எனப் பிரணவ் கோபமாகக் கேட்கவும் தலை குனிந்த அனுபல்லவி, "சாரி சார்... வேற ஏதோ யோசனை..." என்றாள் தயக்கமாக.

பிரணவ், "எப்பப்பாரு இதே வேலையா போச்சு உங்களுக்கு... எல்லாம் பண்ணிட்டு அதுக்கப்புறம் சாரி கேட்பீங்க... ப்ராஜெக்ட் எந்த அளவுல போய்ட்டு இருக்கு? டெட்லைனுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு..." என்க, "மேக்சிமம் முடிச்சிட்டோம் சார்... ஃபைல்ஸ் எல்லாம் ஈவ்னிங் உள்ள உங்க கிட்ட சப்மிட் பண்றேன் சார்..." என அனுபல்லவி கூற, "குட்... இதே ஸ்பிரிட்டோட வர்க் பண்ணுங்க... யூ மே லீவ் நவ்..." எனப் பிரணவ் கூறவும் அனுபல்லவி வெளியேறினாள்.

இங்கு பிரதாப்போ பெங்களூர் முழுவதும் அனுபல்லவியைப் பற்றி விசாரிக்க, எங்கு கேட்டும் அவனுக்கு சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

சலித்துப் போய் வீட்டில் அமர்ந்து இருக்கும் போது வாசல் அழைப்பு மணி ஒலி எழுப்பவும் பிரதாப் சென்று கதவைத் திறக்க, அங்கு அர்ச்சனா கோபமாக நின்றிருந்தாள்.

பிரதாப்பைக் கேள்வியாக நோக்கிய அர்ச்சனா, "கார்த்திக் எங்க? நீங்க யாரு?" என வீட்டினுள் நுழைந்தவாறு கேட்க, 'என்ன இவ பாட்டுக்கு உள்ள வரா... ஒருவேளை கார்த்திக்கோட ஆளா இருப்பாளோ... ஆனா அவன் அப்படி என் கிட்ட எதுவும் சொல்லலயே...' என பிரதாப் யோசிக்கும் போதே, "உங்களைத் தான் கேட்குறேன் மிஸ்டர்... கார்த்திக் எங்க?" எனக் கேட்டாள் அர்ச்சனா.

பிரதாப், "குளிச்சிட்டு இருக்கான்... வருவான் இப்போ... வெய்ட் பண்ணுங்க..." என்க, சமையலறைக்குச் சென்று குளிரூட்டியைத் திறந்து குளிர் நீர் போத்தலை எடுத்து வந்து ஹாலில் அமர்ந்தாள் அர்ச்சனா.

சற்று நேரத்திலேயே குளித்து விட்டு வந்த கார்த்திக், "ஹேய் அர்ச்சு... எப்போ வந்த?" எனப் புன்னகையுடன் கேட்டவாறு வர, "ஹ்ம்ம் இப்போ தான் கார்த்திக்... அது யாரு? உன் ஃப்ரெண்டா?" என ஒரு ஓரமாக நின்று இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்தபடி இருந்த பிரதாப்பைக் காட்டிக் கேட்டாள் அர்ச்சனா.

கார்த்திக், "ஆமா அர்ச்சு... இவன் பிரதாப்... பிரதாப்... இது அர்ச்சனா... என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்... நாங்க சின்ன வயசுல இருந்து ஒன்னா ஒரே ஆசிரமத்துல தான் வளர்ந்தோம்..." என இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைக்க, பிரதாப்பிடம் சிறு தலையசைப்பு மட்டுமே.

அர்ச்சனா, "கார்த்திக்... நீ ஏதாவது யோசிச்சியா? வர வர அந்த அனு தொல்லை தாங்கல... இந்த பிரணவ் வேற எப்பப்பாரு பல்லவி பல்லவின்னு அவளைத் தனியா கூப்பிட்டு பேசுறான்... எனக்கு பிரணவ் வேணும் கார்த்திக்... எதாவது ஐடியா சொல்லு..." எனக் கோபமாகக் கூற, அவளின் கூற்றில் முகம் வாடிய கார்த்திக் அதனைத் தன் தோழிக்குத் தெரியாமல் மறைத்தபடி, "நீ இந்த விஷயத்துல சீரியஸா தான் இருக்கியா அர்ச்சு? எதுக்கும் கொஞ்சம் இன்னொரு தடவை திங்க் பண்ணு..." எனக் கெஞ்சினான்.

பதிலுக்கு அர்ச்சனா ஏதோ கோபமாகக் கூற வர, இவ்வளவு நேரமும் இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்த பிரதாப் அர்ச்சனா அனு என்று கூறியதும் நெற்றி சுருக்கியவன், "அர்ச்சனா... நீங்க இப்போ என்ன பெயர் சொன்னீங்க... ஒரு பொண்ணு பெயர் சொன்னீங்கல்ல..." எனக் கேட்க, அவனைப் புரியாமல் நோக்கிய அர்ச்சனா, "ஹ்ம்ம்... அனு..." என்றாள்.

பிரதாப், "ஃபுல் நேம் என்ன அந்தப் பொண்ணோட?" என்க, "அனுபல்லவி" என அர்ச்சனா கூறவும் பிரதாப்பின் முகம் காட்டிய உணர்வில் அர்ச்சனாவிற்கே 'திக்' என்றானது.

"அனு தான் உங்க காதலுக்கு தடையா இருக்காளா? அவளால இனிமே உங்களுக்கு எந்தத் தொல்லையும் இருக்காது... அதுக்கு நான் கேரென்ட்டி..." என பிரதாப் விஷமப் புன்னகையுடன் கூற, "டேய் பிரதாப்? என்னடா சொல்ற? அனுவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?" எனக் கேட்டான் கார்த்திக் புரியாமல்.

அர்ச்சனாவும் அதே கேள்வியைத் தாங்கி பிரதாப்பின் முகம் நோக்க, "அனுவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு உங்களுக்கு அவசியம் இல்ல... உங்களுக்கு என் ஹெல்ப் வேணும் இப்போ... அவ்வளவு தான்..." என்றான் பிரதாப்.

விஷமப் புன்னகையுடன் பிரதாப் முன் கரத்தை நீட்டிய அர்ச்சனா, "என் வழில இருந்து அனுவைத் தூக்கிட்டா போதும்... அவ உங்களுக்கு யாரா இருந்தாலும் எனக்கு பிரச்சினை இல்ல..." என்க, பதிலுக்கு தன் கரம் நீட்டிய பிரதாப், "என் கிட்ட விடுங்க..." என்றான் அதே விஷமப் புன்னகையுடன்.

************************************

அன்று அனுபல்லவிக்கு வேலை முடிய சற்று தாமதம் ஆனதால் சாருமதி முன்னதாகவே வீட்டிற்கு சென்றிருக்க, ஆஃபீஸில் இருந்து வெளியே வந்த அனுபல்லவியை திடீரென வழிமறித்து நின்றான் பிரதாப்.

பிரதாப்பைக் கண்டதும் அனுபல்லவி அதிர்ச்சியில் உறைய, "என்ன அனு? மாமனைக் கண்டது உனக்கு சந்தோஷமா இல்லையா?" என விஷமமாகக் கேட்க, "பிர...பிரதாப்... நீ... நீ எப்படி இங்க?" எனக் கேட்டாள் அனுபல்லவி பயத்துடன்.

அவளின் தாடையை அழுத்திப் பிடித்த பிரதாப், "பெங்களூர்ல வந்து ஒழிஞ்சிக்கிட்டா எங்களால கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைச்சியா? நீ உயிரோடா இருந்தாலும் செத்தாலும் எங்களுக்கு பிரச்சினை இல்ல... ஆனா எங்களுக்கு சேர வேண்டியதைக் கொடுத்துட்டு எங்க வேணாலும் போய்த் தொலை..." எனக் கோபமாகக் கூறியவன் தன் பிடியை இன்னும் அதிகரிக்க, வலியில் கண்கள் கலங்கிய அனுபல்லவி பிரதாப்பின் கரத்தை தட்டி விட முயன்றாள்.

ஆனால் முடியாமல் போக, "என்னைக்... கொன்னே போட்....டாலும் நீங்க நினைச்சது... நடக்க விட மாட்டேன்..." என்றாள் அனுபல்லவி கஷ்டப்பட்டு.

அனுபல்லவியின் தாடையிலிருந்து தன் கரத்தை எடுத்த பிரதாப் ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் சேர்த்து அவள் கன்னத்தில் ஓங்கி அறையவும் கீழே விழுந்தவளின் உதடு கிழிந்து இரத்தம் கசிந்தது.

அவளின் முடியை ஆவேசமாகப் பற்றிய பிரதாப், "இப்பவே நீ என் கூட ஊருக்கு வராய்... அடுத்த முகூர்த்தத்துலயே உனக்கும் எனக்கும் கல்யாணம்..." என்க, அப்போது தான் ஆஃபீஸில் இருந்து வெளியே வந்த பிரணவ் அனுபல்லவியிடம் ஒருவன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதைக் கண்டு, "ஏய்... யாரு நீ? பல்லவி..." என்றவாறு அவசரமாக அவர்கள் அருகில் சென்றான்.

அனுபல்லவி, "பிரணவ் சார்..." எனக் கண்கள் கலங்க அழைக்க, அவளின் கண்ணீர் பிரணவ்வை ஏதோ செய்தது.

அனுபல்லவியின் முடியை விட்ட பிரதாப், "ஓஹ்... நீ தான் அந்த பிரணவ்வா?" எனக் கேட்டான் இளக்காரமாக.

பிரதாப்பின் காலரைக் கோபமாகப் பிடித்த பிரணவ், "யாரு டா நீ? எதுக்கு எங்க ஆஃபீஸ் முன்னாடியே எங்க ஸ்டாஃப் கிட்ட பிரச்சினை பண்ற?" என்க, "வெறும் ஸ்டாஃப் மட்டும் தானா?" என அனுபல்லவியை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்தபடி பிரதாப் கேட்கவும் அனுபல்லவிக்கு அவமானமாக இருக்க, பிரதாப்பின் பேச்சில் எரிச்சலடைந்த பிரணவ், "நீ யாரா வேணாலும் இரு... என் இடத்துக்கு வந்து எங்க ஆஃபீஸ் பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணன்னா சும்மா விட மாட்டேன்..." என்றவன் பிரதாப்பைத் தள்ளி விட்டு அனுபல்லவியிடம் சென்றான்.

"பல்லவி... ஆர் யூ ஓக்கே?" எனக் கேட்ட பிரணவ் அவளுக்கு எழுந்துகொள்ள கை கொடுக்க, பிரணவ்வின் கரத்தைப் பற்றி எழுந்த அனுபல்லவி, "ஐம் ஓக்கே சார்... தேங்க்ஸ்..." என்கவும் தான் அவளின் உதட்டில் இருந்து வடிந்த இரத்தத்தைக் கண்டு கொண்டான் பிரணவ்.

பிரணவ், "பல்லவி பிளட்..." எனத் தன் கைக்குட்டையை எடுத்து அவளின் காயத்தைத் துடைக்கும் போது, "என்னடா பல்லவி பல்லவின்னு ரொம்பத் தான் கொஞ்சுற... அவளைப் பத்தி உனக்கு என்னடா தெரியும்?" எனக் கோபமாகக் கேட்ட பிரதாப் அனுபல்லவியிடம் இருந்து பிரணவ்வைப் பிரித்து தள்ளி விடவும் சமநிலை இழந்த பிரணவ் அருகில் இருந்த கம்பத்தில் பலமாகத் தலை மோதி கீழே விழுந்தான்.

"பிரணவ்..." என அனுபல்லவி அதிர்ந்து கத்தவும், "என்ன டி பிரணவ்? ஒழுங்கு மரியாதையா என் கூட வா..." என்ற பிரதாப் அனுபல்லவியின் கரத்தைப் பிடித்து இழுக்க, அவனிடமிருந்து தன் கரத்தை விடுவிக்கப் போராடினாள் அனுபல்லவி.

தூரத்தில் எங்கோ போலீஸ் ஜீப்பின் சத்தம் கேட்கவும் பயந்த பிரதாப், "இன்னைக்கு என் கிட்ட இருந்து தப்பிச்சிட்ட... சீக்கிரம் உன்னைத் தேடி திரும்ப வருவேன் டி..." என்றவன் அவசரமாக தன் பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றான்.

பிரதாப் சென்றதும் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த பிரணவ்விடம் ஓடிய அனுபல்லவி, "சார்... என்னாச்சு சார்? நீங்க நல்லா இருக்கீங்களா? வாங்க ஹாஸ்பிடல் போகலாம்..." எனப் பதற, பிரணவ்விற்கோ அன்று விபத்தின் போது தன்னைக் காப்பாற்றிய பெண்ணின் குரல் கேட்பது போல் இருந்தது.

மெதுவாகத் தலையைத் தூக்கி அனுபல்லவியின் முகம் காண வழமையாக அவனின் மனக் கண்ணில் தெரியும் அந்த மங்கலான முகத்திற்கு பதிலாக இப்போது அனுபல்லவியின் முகம் தெளிவாகத் தெரிந்தது.

தன்னை மறந்து அவளின் முகத்தைத் தொட கரம் நீட்டிய பிரணவ், "சார்..." என்ற அனுபல்லவியின் குரலில் தன்னிலை அடைந்து அவசரமாக தலையை உலுக்கி தன்னை சமன் படுத்திக்கொண்டான்.

பிரணவ், "ஐம் ஓக்கே பல்லவி..." என்றவன் அனுபல்லவியின் உதவியை மறுத்து விட்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்று, "நானே உங்களை ட்ராப் பண்றேன்..." என்று விட்டு தன் வண்டியை நோக்கி சென்றான்.

அனுபல்லவியும் தலை குனிந்தபடியே பிரணவ்வின் பின்னே சென்று வண்டியில் ஏறியவள் கவலையாக அமர்ந்து இருக்க, "யார் அது பல்லவி?" எனத் தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்டியபடி பிரணவ் கேட்கவும் தலை குனிந்த அனுபல்லவி, "என் அத்தை பையன் சார்..." என்றவள் தண்ணீர் மொத்தத்தையும் ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்.

அதிலே அவளின் பயத்தை உணர்ந்து, "எதுக்கு அப்போ உன்ன மிரட்டிட்டு இருந்தான்?" எனக் கேட்டான் பிரணவ் புரியாமல்.

இமை தாண்டி வடிந்த கண்ணீரை பிரணவ்விற்கு தெரியாமல் மறைக்க கார் விண்டோ வழியே வெளியே பார்வையைப் பதித்த அனுபல்லவி, "அதைப் பத்தி மட்டும் எதுவும் கேட்காதீங்க சார்... ப்ளீஸ்..." என்று மட்டும் கூறினாள்.

அதன் பின் பிரணவ்வும் அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்டு தொல்லை கொடுக்காமல் அமைதியாக வர, அனுபல்லவிக்கு பிரணவ் ஏதும் கேட்காதது நிம்மதியாக இருந்தது.

அனுபல்லவி தங்கியிருந்த அபார்ட்மெண்ட் வந்ததும் பிரணவ் காரை நிறுத்த, அதைக் கூட உணர முடியாத நிலையில் ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருந்த அனுபல்லவியின் கரம் பற்றி, "பல்லவி..." எனப் பிரணவ் அழைக்கவும் திடுக்கிட்டவள் அதன் பின்னே சுற்றம் உணர்ந்தாள்.

எதுவும் பேசாது காரை விட்டு இறங்கிய அனுபல்லவி பிரணவ்விடம் எதுவும் கூறாது கால் போன போக்கில் வீட்டினுள் நுழைய, அவள் வீட்டினுள் நுழைந்து கதவை மூடும் வரை அவள் சென்ற திசையையே வெறித்திருந்தான் பிரணவ்.

பின் தன் வீட்டிற்கு சென்றவன் அந்த இளமஞ்சள் நிற துப்பட்டாவை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.

"பல்லவி... நீ தான் எனக்கு மறுஜென்மம் அளிச்சியா? ஏன் எனக்கு ஒன்னுன்னதும் நீ அவ்வளவு துடிச்ச?" எனத் தன்னையே கேட்டவனின் இதழ்கள் அழகாய் விரிந்தன.

அனுபல்லவியின் துப்பட்டாவை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனுக்கு ஏதோ அவளையே அணைத்த உணர்வு.

பல நாட்கள் கழித்து மனம் விட்டு புன்னகைத்தான்.

************************************

பிரணவ் ஆஃபீஸில் தன் அறையில் வேலையாக இருக்க, திடீரென, "பாஸ்..." எனக் கத்திக்கொண்டு அவனின் அனுமதி கூட வாங்காது அறையினுள் நுழைந்தான் ஆகாஷ்.

அவனைப் புரியாமல் பார்த்த பிரணவ், "என்னாச்சு ஆகாஷ்?" எனக் கேட்க, ஓடி வந்த களைப்பில் நீண்ட மூச்சுகளாக விட்டு தன்னை சமன் செய்து கொண்ட ஆகாஷ், "பாஸ்... உங்களைக் காப்பாத்தி ஹாஸ்பிடல் சேர்த்த அந்தப் பொண்ணு யாருன்னு கண்டு பிடிச்சிட்டேன்..." என்க, "பல்லவி..." என்றான் பிரணவ்.

ஆகாஷ் அதிர்ச்சியாக அவனை நோக்க, "அனுபல்லவி தான் என்னை அன்னைக்கு காப்பாத்தினாங்க... இல்லயா?" என பிரணவ் கேட்க, "பாஸ்... செம்ம பாஸ்... எப்படி கண்டு பிடிச்சீங்க?" என ஆகாஷ் கேட்கவும் அவனுக்கு பதிலளிக்காது மெல்லியதாக புன்னகைத்த பிரணவ், "இதை சொல்லத் தான் அவ்வளவு அவசரமா ஓடி வந்தீங்களா ஆகாஷ்?" எனக் கேட்டான்.

தலையில் அடித்துக்கொண்ட ஆகாஷ், "பாருங்க பாஸ்... முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன்..." என்கவும் பிரணவ் அவனைக் கேள்வியாக நோக்க, "பாஸ்... அன்னைக்கு உங்க காரை ஆக்சிடன்ட் பண்ணின லாரி ட்ரைவர் ஆக்சிடன்ட் பண்ணிட்டு பயந்து தப்பி ஓடிட்டான்னு போலீஸ் சொன்னாங்கல்ல... அவன் தெரியாம ஒன்னும் ஆக்சிடன்ட் பண்ணல... அவனுக்கு பணம் கொடுத்து உங்களை ஆக்சிடன்ட் பண்ண வெச்சிருக்காங்க..." என்கவும் அதிர்ச்சியில் எழுந்து நின்றான் பிரணவ்.

ஆகாஷ், "ஆமா பாஸ்... நேத்து தான் அந்த லாரி ட்ரைவர் ஒரு குடோன்ல மறைஞ்சி இருக்கும் போது போலீஸ் அவனை பிடிச்சு இருக்காங்க... அந்த குடோன் உங்க மாமா பெயர்ல இருக்கு..." என்கவும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட பிரணவ்விற்கு தலைவலி வந்து இருக்கையில் பட்டென அமர்ந்தான்.

"பாஸ்... என்னாச்சு?" என ஆகாஷ் பதட்டமாகக் கேட்கவும், "எனக்கு ஒன்னும் இல்ல ஆகாஷ்... மாமா எதுக்கு என்னைக் கொல்ல ட்ரை பண்ணார்? இந்த விஷயம் அம்மாவுக்கு தெரியுமா?" எனக் கேட்டான் கரங்களால் தலையை ஏந்தியபடி.

"என்ன காரணம்னு சரியாத் தெரியல பாஸ்... அந்த லாரி ட்ரைவர் போலீஸ் கிட்ட மாட்டினதும் போலீஸ் அவனை விசாரிக்கவும் தான் உங்க மாமா பெயரை சொல்லி இருக்கான்... பட் நேத்து நைட் அவன் ஜெய்ல்ல தற்கொலை பண்ணிக்கிட்டான்... அதனால அதுக்கு மேல எந்த விஷயமும் தெரியல... உங்க மாமாவுக்கு எதிரான வேற எந்த ஆதாரமும் அவங்களுக்கு கிடைக்கல பாஸ்... அப்புறம் மேடமுக்கு இன்னுமே இதைப் பத்தி தெரியாது..." என ஆகாஷ் கூறவும் யோசனை வயப்பட்டான் பிரணவ்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 13

தன் மாமனே தன்னைக் கொல்ல நினைக்கிறார் என அறிந்து அதிர்ச்சியில் உறைந்த பிரணவ்விற்கு அதற்கான காரணம் தான் பிடிபடவில்லை.

தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவனைக் காணும் போது ஆகாஷிற்கு பாவமாக இருக்க, "பாஸ்..." என்றான் தயங்கியபடி.

பிரணவ் தலையை நிமிர்த்தாமலே, "ஐம் ஓக்கே ஆகாஷ்... நீங்க போங்க..." என்கவும் ஆகாஷ் சென்று விட, பிரணவ் தன் தாய் மாமனை எண்ணி யோசனையில் ஆழ்ந்தான்.

பிரணவ்வின் பெற்றோர் எப்போதும் பிஸ்னஸ் பிஸ்னஸ் என்று ஓடிக் கொண்டிருந்தாலும் பிரணவ்வின் தாய் மாமன் அடிக்கடி அவனை வந்து பார்த்து அவனிடம் அன்பாகவே நடந்து கொள்வார். தன் பெற்றோரை விட பிரணவ் அவரிடம் சற்று நெருக்கமாகவே பழகுவான். அப்படி இருக்கும் போது தன் மாமாவே தன்னைக் கொல்ல முயன்றதை அறியும் போது அவனால் அதனை நம்பவே முடியவில்லை.

சற்று நேரம் அது பற்றியே சிந்தித்தவன் வேண்டும் என்றே வேறு யாரோ தனக்கும் தன் மாமனுக்கும் இடையில் பிணக்கு ஏற்படுத்த இவ்வாறு செய்வதாகவே முடிவெடுத்தான்.

************************************

பிரணவ் கேட்ட ஃபைல்களை ஒப்படைக்க அனுபல்லவி அவனின் அறைக் கதவைத் தட்ட, உள்ளிருந்து எந்தப் பதிலும் வராததால் அன்று போல் பிரணவ்விற்கு ஏதாவது ஆகி விட்டதோ எனப் பயந்தவள் அவசரமாக உள்ளே நுழைந்தாள்.

ஆனால் அறையில் யாருமே இருக்கவில்லை. "சார்..." என அழைத்தவாறு சுற்றும் முற்றும் பார்வையைப் பதித்த அனுபல்லவியைக் கவர்ந்தது மேசையில் வைக்கப்பட்டிருந்த நாவல்.

அதனைக் கையில் எடுத்துப் பார்த்த அனுபல்லவி, "ஓஹ்... நம்ம ஆளு நவல்ஸ்லாம் ரீட் பண்ணுவாரா?" என ஆச்சரியமாகத் தன்னையே கேட்டுக் கொண்டவளிடம், 'எதே? உன் ஆளா?' எனக் கேட்டது மனசாட்சி.

மனசாட்சியின் கேள்வியில் முகம் சிவந்தவள், "ஏன்? என் ஆளுன்னு சொன்னா என்ன தப்பு? எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு... அப்புறம் அவர் சிங்கிள் வேற..." என்க, 'உனக்கு எப்போ இருந்து அவரைப் பிடிச்சிருக்கு? அப்புறம் அவர் சிங்கிள்னு உன் கிட்ட யாரு சொன்னாங்க?' என மனசாட்சி மீண்டும் வினா எழுப்ப, "இந்த சிடுமூஞ்சியாவது யாரையாவது லவ் பண்றதாவது? அவரை எப்போ இருந்து பிடிக்கும்னு நான் அவர் கிட்டயே சொல்லிக்குறேன்... உன் கிட்ட ஒன்னும் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல..." என அனுபல்லவி மனசாட்சிக்கு குட்டு வைத்தவாறு மெதுவாகத் திரும்ப, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டி, ஒரு காலை மடக்கி சுவரில் சாய்ந்தவாறு நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரணவ்.

பிரணவ் நின்ற தோற்றம் வழமை போலவே அனுபல்லவியை அவனை ரசிக்கத் தூண்ட, பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போல் அவனையே விழி அகற்றாமல் ரசித்தாள் அனுபல்லவி.

பிரணவ், "என்ன மிஸ் பல்லவி? சைட் அடிச்சி முடிச்சிட்டீங்களா?" என்ற பிரணவ்வின் குரலில் சுயம் உணர்ந்த அனுபல்லவி அவள் இவ்வளவு நேரம் செய்து கொண்டிருந்த காரியத்தை உணர்ந்து அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள்.

அனுபல்லவி, "சார்... நான்... நான்... ஃபைல்..." என வார்த்தை வராது தடுமாற, "ஹ்ம்ம்... சொல்லுங்க பல்லவி... எத்தனை மார்க் போடலாம்? தேருவேனா?" எனப் பிரணவ் கேட்கவும், "இனிஃபினிட்டி..." எனத் தன்னை மறந்து கூறிய அனுபல்லவி அவசரமாக நாக்கைக் கடித்தாள்.

அப்போது தான் பிரணவ்வின் பார்வையில் தெரிந்த மாற்றத்தைக் கவனித்தாள். எப்போதும் இருக்கும் இறுக்கம் அகன்று, முகத்தில் மெல்லிய புன்னகையுடன் கண்களில் ஒரு வித ரசனையுடன் அவனின் பார்வை அனுபல்லவியைத் தழுவியது.

அதன் காரணம் அறியாத பேதையோ, 'என்ன இவர் இப்படி பார்க்குறார்? கோவமா பார்த்தா கூட தாங்கிக்கலாம்... இது என்ன பார்வை? ஏன் இந்தப் பார்வை என்னை ஏதோ பண்ணுது?' என மனதினுள் விவாதம் நடத்திக் கொண்டிருக்க, தன் அழுத்தமான காலடிகளுடன் மெதுவாக அவளை நெருங்கினான் பிரணவ்.

'ஐயோ பக்கத்துல வராரே... நான் இப்போ என்ன பண்றது? அவர் கிட்ட பர்மிஷன் கேட்காம அவரோட புக்கை எடுத்தேன்னு அடிப்பாரோ? எங்க அடிப்பார்? கன்னத்துல அடிச்சிட்டார்னா என்ன பண்றது? யாராவது கேட்டா இவரை மாட்டி விடவும் முடியாதே?' என அனுபல்லவி மீண்டும் மனதுக்குள் விவாதிக்க, அவளின் கால்களோ பிரணவ் முன்னேறும் ஒவ்வொரு அடிக்கும் பின்னோக்கி நகர்ந்து அதற்கு மேல் முடியாது மேசையுடன் ஒட்டி நின்றாள்.

அனுபல்லவியின் முகத்தில் தெரியும் பதட்டத்தையும் அவளின் முகம் காட்டும் பல்வேறு பாவனைகளையும் ரசித்தவாறே அவளை நெருங்கிய பிரணவ் அனுபல்லவி நகர முயற்சித்தால் அவன் நெஞ்சின் மீது மோதும் இடைவெளியில் தன் நடையை நிறுத்தினான்.

இவ்வளவு நெருக்கமாக பிரணவ் வந்து நிற்கவும் இன்னும் பின்னே நகர முயற்சித்தவளை மேசை தடுக்க, மேசையிலேயே உட்கார்ந்து விட்டாள்.

ஒரு பக்கம் அனுபல்லவிக்கு பிரணவ் என்ன செய்து விடுவானோ என்ற பதட்டம் இருக்க, இன்னொரு பக்கம் இவ்வளவு நெருக்கமாக நிற்பவனை ரசித்தது அவளது மனம்.

தான் நின்ற இடத்தில் இருந்தே அனுபல்லவியின் பக்கம் லேசாக சாய்ந்த பிரணவ் தன் இடது கையால் அனுபல்லவிக்கு நெருக்கமாக மேசையைப் பிடித்தவன் அவளை இன்னும் சற்று நெருங்கவும், "சா...ர்..." என்றவளின் நா தந்தியடித்தது.

இதழ் மூடி புன்னகைத்த பிரணவ் அனுபல்லவியை அணைப்பது போல் மற்ற கையையும் கொண்டு செல்ல, அனுபல்லவியின் இதயத்துடிப்பு எகிற, அவனின் நெருக்கத்தில் அனுபல்லவியின் காது மடல்கள் வெட்கத்தில் சிவந்தன.

அதனை மறைக்கக் கூட வழியின்றி அவளின் விழிகள் தன்னால் மூடிக்கொள்ள, சில நொடிகளில் ஏதோ சத்தம் கேட்கவும் விழி திறந்தவள் கண்டது அவளை சுற்றி தன் கரத்தை நீட்டி மேசை ட்ராயரைத் திறந்து கொண்டிருந்த பிரணவ்வைத் தான்.

சரியாக பிரணவ்வின் இரு கரங்களுக்கும் இடையில் அனுபல்லவி சிறை பிடிக்கப்பட்டிருக்க, அசையக் கூட இடமின்றி அவனின் நெருக்கத்தில் அவஸ்தைப்பட்ட அனுபல்லவியின் இதழைச் சுற்றி வியர்வைப் பூக்கள் பூத்தன.

அவள் படும் அவஸ்தையை ரசித்தவாறே ட்ராயரைத் திறந்து அனுபல்லவியின் இளமஞ்சள் நிற துப்பட்டாவை பிரணவ் கையில் எடுத்துக்கொண்டு நிமிரவும் அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள் அனுபல்லவி.

இன்னுமே பிரணவ்வின் இரு கரங்களுக்கும் இடையில் சிறை பிடிக்கப்பட்டு இருந்தவளோ அதைக் கூட உணராது, 'அவருக்கு தெரிஞ்சிடுச்சா நான் தான் அவரைக் காப்பாத்தினதுன்னு?' என சிந்திக்க, இதற்கு மேலும் அனுபல்லவியை சீண்ட விரும்பாத பிரணவ் தன் கரங்களை எடுத்து அவளுக்கு விடுதலை அளித்தான்.

அந்த துப்பட்டாவை அனுபல்லவியின் முகத்துக்கு நேராக ஆட்டிக் காட்டிய பிரணவ், "அடுத்தவங்களுக்கு சொந்தமான பொருளை வெச்சிக்கிறது எனக்கு பிடிக்காது..." என்க, 'நான் அடுத்தவளா?' எனத் திடீரென முளைத்த கோபத்தில் அவனின் கரத்தில் இருந்த தன் துப்பட்டாவைப் பறிக்க கரத்தை நீட்டினாள் அனுபல்லவி.

பட்டென அதனைத் தனக்குப் பின்னே மறைத்த பிரணவ் குறும்புப் புன்னகையுடன், "ஆனா....." என இழுத்தவன் அனுபல்லவியின் உதட்டின் மேல் பூத்திருந்த வியர்வையை தன் பெருவிரலால் அழுத்தித் துடைக்க, அனுபல்லவிக்கோ மூச்சு விடவும் சிரமமாக இருந்தது.

அனுபல்லவியின் கண்கள் அவனின் செயலில் அதிர்ச்சியில் விரிந்திருக்க, அதனை ரசித்தவாறே அந்த துப்பட்டாவை முன்னே கொண்டு வந்தவன் அதன் வாசனையை தனக்குள் இழுத்துக்கொள்வது போல் புன்னகையுடன் இழுத்து முகர்ந்தான்.

அனுபல்லவிக்கு அவன் ஏதோ தன்னையே முகர்ந்தது போல் மேனி சிலிர்க்க, முகம் சிவந்தவள் பிரணவ் எதிர்ப்பார்க்காத சமயம் அவனைத் தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடினாள்.

அனுபல்லவி சென்ற பின்னும் அவள் சென்ற திசையைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த பிரணவ் அந்த துப்பட்டாவை தன் நெஞ்சுடன் அணைத்தபடி, "பல்லவி... பல்லவி... யூ ஆர் டெம்ப்டிங் மீ..." என்றான் விழிகளை முடி ரசனையுடன்.

இங்கு பிரணவ்விடமிருந்து தப்பித்து ஓடி வந்தவளோ, ஒரு பாட்டில் தண்ணீர் முழுவதையுமே காலி செய்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அவளை விசித்திரமாகப் பார்த்த சாருமதி, "என்னாச்சு அனு? எதுக்கு ஏதோ ரேஸ் ஓடிட்டு வந்ததைப் போல தண்ணியை குடிக்கிற?" எனக் கேட்கவும் அவளிடம் என்ன கூறி சமாளிக்க என விளித்த அனுபல்லவி, "அது... அது... ஒன்னுமில்ல டி... சும்மா தான்... ஆஹ்... ஆகாஷ் உன்ன லவ் பண்றதா சொன்னன்னு சொன்னியே... அப்புறம் என்னாச்சு?" எனப் பேச்சைத் திசை மாற்ற, அது சரியாக சாருமதியிடம் வேலை செய்தது.

சாருமதி, "அவனைப் பத்தி நினைச்சாலே கடுப்பா வருது அனு... சரியான இம்சை..‌. அன்னைக்கு என்னைத் திட்டிட்டு அப்புறம் வந்து கொஞ்சுறான்... அதுலயும் அந்த பனைமரம் என்னைக் குட்டச்சி பேபின்னு சொல்லும் போது அப்படியே அவனைக் கடிச்சு குதறி விடத் தோணுது டி..." என ஆகாஷை அர்ச்சிக்கத் தொடங்க, அதனை சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த அனுபல்லவி சாருமதிக்கு பின்னே வந்து நின்றவனைக் கண்டு கஷ்டப்பட்டு தன் சிரிப்பை அடக்கியவள், "சாரு... நீ அவரைத் திட்டிட்டு இரு... நான் வாஷ்ரூம் போய்ட்டு வரேன்..." என அங்கிருந்து மெதுவாகக் கழன்று கொள்ள, "ஹேய் அனு... நில்லு டி..." என்ற சாருமதியின் கத்தல் அனுபல்லவியின் இருக்கையில் வந்து அமர்ந்த ஆகாஷைக் கண்டதும் தடைப்பட்டது.

"நீ... நீ... நீ இங்க என்ன பண்ணுற?" என திடீரென ஆகாஷை அங்கு எதிர்ப்பார்க்காது சாருமதி திக்கித் திணறிக் கேட்க, "யாரோ என்னை ரொம்ப புகழ்றாங்கன்னு என் மனசு சொல்லிச்சு... வந்து பார்த்தா என் குட்டச்சி பேபி..." என ஆகாஷ் கண்களில் காதல் சொட்டக் கூறினான்.

ஆகாஷின் பார்வையில் அவன் பக்கம் சாயத் துடித்த மனதை கடினப்பட்டு அடக்கிய சாருமதி, "சாருக்கு புகழ்ச்சி ஒன்னு தான் குறைச்சல்... ஆளையும் மூஞ்சியையும் பாரு..." என்றாள் உதட்டை சுழித்தபடி.

ஆகாஷ், "குட்டச்சி.‌‌.." என ஏதோ கூற வரவும் ஆவேசமாக எழுந்த சாருமதி, "யாரு டா குட்டச்சி? திரும்ப திரும்ப அதையே சொல்ற... மவனே நீ இன்னைக்கு செத்தடா பனைமரம்..." என்றவள் ஆகாஷின் முடியைப் பிடித்து எல்லாப் பக்கமும் ஆட்ட, மொத்த ஆஃபீஸும் அவர்களை வேடிக்கை பார்த்தது.

கூட்டம் கூடி இருப்பதைக் கண்டு அங்கு வந்த பிரணவ் இவர்களின் செயலில் கோபம் மூண்டு, "ஆகாஷ்‌..." எனக் கத்த, இருவரும் பதறி விலகினர்.

பிரணவ், "என்ன நடக்குது இங்க ஆகாஷ்? இதென்ன ப்ளே க்ரௌண்ட்டா? உங்க விளையாட்டை எல்லாம் ஆஃபீஸுக்கு வெளிய வெச்சிக்கோங்க... கண்டிப்பா இதுக்கு உங்களுக்கு பனிஷ்மன்ட் இருக்கு... மேனேஜ்மன்ட் கிட்ட சொல்லி உங்க ரெண்டு பேரோட இந்த மந்த் போனஸை கட் பண்றேன்..." என்றான் கோபமாக.

பிரணவ்வின் கோபத்திற்கு பயந்து அனைவரும் கலைந்து செல்ல, தலைகுனிந்து நின்றிருந்த இருவரையும் முறைத்த பிரணவ், "இன்னும் என்ன நிற்கிறீங்க? வேலையைப் பாருங்க... ஆகாஷ்... என் கேபினுக்கு வாங்க..." எனக் கட்டளையிட்டு விட்டு சென்றான்.

பிரணவ் சென்றதும் சாருமதி ஆகாஷை ஏகத்துக்கும் முறைக்க, 'ஆத்தி... குட்டச்சி காளி அவதாரம் எடுத்துட்டா... எஸ்கேப் ஆகிடுடா ஆகாஷ்...' என மனதில் எண்ணியவன், "இதோ வந்துட்டேன் பாஸ்..." என்றவாறு பிரணவ்வின் அறைக்கு ஓடினான்.

************************************

வாஷ்ரூம் வந்த அனுபல்லவி கண்ணாடியில் தெரியும் தன் விம்பத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

பிரணவ்வின் நெருக்கத்தில் சிவந்த அவளின் காது மடல்கள் இன்னும் சிவப்பாகவே இருந்தன.

பிரணவ் தொட்ட இடம் கூட இன்னும் குறுகுறுக்க, "ஐயோ... கொல்றானே..." என வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள் அனுபல்லவி.

'அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்? என்ன ஆச்சு அனு உனக்கு? நோ அனு... கூல் டவுன்... அவர் வேணும்னே உன்ன சீண்டுறார்... மாட்டிக்காதே...' என மனதிற்குள் பேசிய அனுபல்லவி வெளியே ஏதோ சத்தம் கேட்கவும் முகத்தில் நன்றாக நீரை அடித்துத் துடைத்துக் கொண்டு வெளியே செல்ல, வாஷ்ரூமுக்கு வெளியே அர்ச்சனா நின்றிருந்தாள்.

அனுபல்லவி அவளைக் கண்டு கொள்ளாமல் தன் பாட்டுக்கு செல்ல, அர்ச்சனா தான் அவளின் சிவந்திருந்த முகத்தை சந்தேகமாக நோக்கினாள்.

உடனே பிரதாப்பிற்கு அழைத்த அர்ச்சனா அவன் அழைப்பை ஏற்றதும் கத்தத் தொடங்கினாள்.

அர்ச்சனா, "நீ இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க பிரதாப்? பெரிசா சபதம் போட்ட அந்த அனுவை என் வழில இருந்து தூக்கி காட்டுறேன்னு... போற போக்க பார்த்தா எனக்கு எதிரா தான் எல்லாம் நடக்கும் போல... நீ அவளை எதுவுமே பண்ணலயா?" எனக் கோபமாகக் கேட்க,

"ஏய்... என்ன ரொம்ப தான் சத்தம் போடுற? இங்க உனக்கு தான் என் ஹெல்ப் தேவை... எனக்கு இல்ல... நான் எதுவுமே பண்ணலன்னு நினைச்சிட்டு இருக்கியா? நான் என்ன பண்ணினாலும் அந்த பிரணவ் என் எல்லாப் ப்ளேனையும் தவிடு பொடியாக்குறான்... கொஞ்சம் நாள் பொறுமையா இருந்து அவங்க எதிர்ப்பார்க்காத சமயம் தான் காயை நகர்த்தணும்... உனக்கு அவ்வளவு அவசரம்னா நீயே ஏதாவது பண்ணி வழக்கம் போல அவன் கிட்ட மாட்டிக்கோ..." எனக் கோபத்தில் கத்தி விட்டு பிரதாப் அழைப்பைத் துண்டிக்கவும் கோபத்தில் பல்லைக் கடித்த அர்ச்சனா காலால் தரையை உதைத்தாள்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 14

அடுத்து வந்த நாட்களில் எல்லாம் பிரணவ் அனுபல்லவியை எப்போதும் தன் முன்னே வைத்திருப்தற்காக இல்லாத வேலைகள் எல்லாம் அவளுக்கு கொடுக்க, மனதில் அவனைத் திட்டித் தீர்த்தாலும் அனைத்தையும் ஒழுங்காக செய்தாள் அனுபல்லவி.

இடைக்கிடையே வேண்டுமென்றே பிரணவ் அனுபல்லவியை சீண்டுவதும் அதில் அவள் படும் அவஸ்தையை ரசிப்பதுமாக இருந்தான்.

அனுபல்லவிக்கு தான் பிரணவ்வின் மாற்றத்திற்கான காரணமும் புரியாமல் அவனின் சீண்டல்களால் உள்ளுக்குள் அவன் மேல் எழும் காதலை மறைக்கவும் முடியாமல் திண்டாடினாள்.

இவர்களுக்கு நடுவில் அர்ச்சனா தான் பிரணவ்வை அனுபல்லவியிடம் இருந்து மொத்தமாக விலக்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள்.

ஆகாஷோ சாருமதியை வெறுப்பேற்றி பதிலுக்கு சாருமதி அவனுடன் சண்டையிடும் நிமிடங்களை எல்லாம் சுவாரசியமாக ரசித்தான்.

சரியாக ஒரு வாரத்தில் அனுபல்லவியின் தலைமையில் பிரணவ்வின் வழி நடத்தலில் மிஸ்டர் மெஹெராவிடம் வாக்களித்த ஒரு மாதத்திலேயே வெற்றிகரமாக அந்த பிராஜெக்டை பிரணவ்வின் குழு நிறைவு செய்தனர்.

இதில் அனுபல்லவிக்குத் தான் ஏகபோக மகிழ்ச்சி. பிரணவ் தன்னை நம்பி ஒப்படைத்த முதல் ப்ராஜெக்டை எந்தவொரு பிரச்சினையும் இன்றி நிறைவு செய்ததால் வந்த மகிழ்ச்சி அது.

ப்ராஜெக்ட் வேலைகள் சிறப்பாக முடியவும் அனைவரையும் மீட்டிங் ஹாலில் ஒன்று கூட்டி இருந்தான் பிரணவ்.

அனைவரும் வந்து அமரவும் அவர்களைப் பார்த்து புன்னகைத்த பிரணவ், "இந்த வன் மந்த்தா எல்லாரையும் ரொம்ப படுத்திட்டேன்னு நினைக்கிறேன்..." என்கவும் அனைவரும் புன்னகைக்க, அனுபல்லவியோ, 'எல்லாரையும் எங்க படுத்தினீங்க? என்னைத் தானே வெச்சி செஞ்சீங்க...' என உள்ளுக்குள் கறுவினாள்.

பிரணவ்விற்கு அவளின் முக பாவனையில் இருந்தே அவள் என்ன நினைக்கிறாள் எனப் புரிந்து கொண்டவன் யாரும் கவனிக்காத நேரம் அவளைப் பார்த்து கண் அடிக்க, அனுபல்லவியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அதற்கு மாறாக அவளின் கன்னங்களோ வெட்கச் சதுப்பைப் பூசிக் கொண்டன.

தன் தொண்டையை செறுமிய பிரணவ், "அப்புறம் ஒரு குட் நியுஸ் சொல்லத் தான் உங்க எல்லாரையும் இன்னைக்கு கூப்பிட்டேன்..." என்கவும் அனைவரும் அவனை ஆர்வமாக நோக்க, "நான் எதிர்ப்பார்த்ததை விடவே இந்த ப்ராஜெக்டை நீங்க எல்லாரும் ரொம்ப நல்லாவே கம்ப்ளீட் பண்ணி இருக்கீங்க... வெல் டன் காய்ஸ்..." எனக் கை தட்டவும் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

பிரணவ், "என்ட் ஆல்சோ மிஸ் பல்லவியை கண்டிப்பா நாம பாராட்டியே ஆக வேண்டும்... ஏன்னா இது அவங்க கைட் பண்ற ஃப்ர்ஸ்ட் ப்ராஜெக்ட்... பட் எந்தவொரு குறையும் சொல்ல முடியாத அளவுக்கு அவங்க வர்க்க அவ்வளவு அழகா பண்ணினாங்க..." என்கவும் அங்கிருந்த அனைவரும் அவளுக்காக கை தட்ட, அர்ச்சனாவோ பல்லைக் கடித்து தன் கோபத்தை அடக்கினாள்.

"சூப்பர் டி அனு..." என சாருமதி அவளை அணைத்துக்கொள்ள, புன்னகைத்த அனுபல்லவி எழுந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தாள்.

"சரி இப்போ அந்த குட் நியூஸ் என்னன்னு சொல்றேன்..." என்ற பிரணவ் அனைவரும் அவனின் முகத்தையே ஆவலுடன் நோக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு புன்னகைத்தவன், "இந்த ப்ராஜெக்ட்டை நீங்க சக்சஸ்ஃபுல்லா முடிச்சதால இந்த மந்த உங்க சேலரி டபள் ஆக்கப்பட்டிருக்கு..." என்கவும், "ஹே....." என அனைவரும் உற்சாகமாகக் கத்தினர்.

ஆகாஷ், "சைலன்ட்ஸ்... சைலன்ட்ஸ்..." என அவர்களை அடக்கவும் அமைதி அடைந்தனர் அனைவரும்.

பிரணவ், "இந்த சக்சஸை செலிப்ரேட் பண்ணும் விதமா உங்க எல்லாருக்கும் நம்ம கம்பெனி சார்பாக இன்னைக்கு லஞ்ச் அரேன்ஜ் பண்ணி இருக்கு... ஹோப் யூ ஆல் என்ஜாய்..." என்று விட்டு முடித்துக் கொண்டான்.

அனைவரும் உற்சாகமாக மீட்டிங் ஹாலில் இருந்து கலைந்து செல்ல, சாருமதியுடன் செல்லப் போன அனுபல்லவியை, "பல்லவி... ஒரு நிமிஷம்..." என தடுத்து நிறுத்தினான் பிரணவ்.

சாருமதியும் அவளுடன் நிற்க, "மிஸ் சாருமதி... நீங்க கிளம்புங்க... பல்லவி கூட இம்பார்டன்ட் விஷயம் ஒன்னு பேச இருக்கு..." எனப் பிரணவ் கூறவும் அனுபல்லவி கண் காட்டவும் சாருமதி அங்கிருந்து செல்ல, அவளுடன் கூடவே பின்னால் சென்றான் ஆகாஷ்.

அனுபல்லவி, "சொல்லுங்க சார்..." என்கவும், "அது... பல்லவி... நாளைக்கு ஈவ்னிங் மிஸ்டர் மெஹெராவோட பார்ட்டி ஒன்னு இருக்கு... அதுக்கு நீங்களும் என் கூட வரணும்..." என்றான் பிரணவ்.

"சார்... நான் எதுக்கு?" எனத் தயங்க, "ஏன்? என் கூட வரது உங்களுக்கு இஷ்டம் இல்லையா? இல்லன்னா நான் உங்களை ஏதாவது பண்ணிடுவேனோன்னு பயப்படுறீங்களா?" என்றான் பிரணவ்.

எவ்வளவு முயன்றும் தன் வார்த்தைகளில் இருந்த கடுமையை பிரணவ்வால் மறைக்க முடியவில்லை. அனுபல்லவி மறுக்கவும் ஏன் என்றே தெரியாத ஒரு கோபம் துளிர் விட்டது.

பிரணவ்வின் கோபத்தில் பதறிய அனுபல்லவி, "ஐயோ அப்படி எதுவும் இல்ல சார்... நான் சும்மா தான் கேட்டேன்..." என்க, "மிஸ்டர் மெஹெரா தான் உங்களை இன்வைட் பண்ணினார்..." என்றான் பிரணவ்.

அனுபல்லவி, 'அச்சோ அனு... கொஞ்சம் கூட உனக்கு அறிவில்ல... இந்த வன் வீக்கா தான் அவர் உன் கிட்ட நல்லா பேசுறார்... வீணா திரும்ப அவரைக் கோவப்படுத்திட்ட...' என மனதில் தன்னையே கடிந்து கொண்டவள், "நான் வரேன் சார்... எத்தனை மணிக்கு பார்ட்டி? எங்க நடக்கும்?" எனக் கேட்கவும் மனதில் எழுந்த மகிழ்ச்சியை வெளியே காட்டாத பிரணவ், "ஈவ்னிங் ஃபைவ் அ க்ளாக் போல ரெடி ஆகி இருங்க... நானே உங்களை வந்து பிக்கப் பண்றேன்..." என்றான்.

தானே வருவதாக கூற வந்த அனுபல்லவி பிரணவ்வின் கோபம் நினைவு வந்தவளாய், "ஓக்கே சார்... அப்போ நான் போகட்டா?" எனக் கேட்டாள்.

பிரணவ், "என்ன அவசரம்? கொஞ்சம் இருங்க..." என்றவன் வண்ணக் காகிதத்தால் சுற்றிய ஒரு பெட்டியை அனுபல்லவியிடம் நீட்டவும் அனுபல்லவி தயக்கமாக, "என்ன சார் இது?" எனக் கேட்க, "ஏன்? சொன்னா தான் வாங்கிக்குவீங்களா?" எனப் பிரணவ் சற்று கடுமையாகக் கேட்கவும் சட்டென அவன் கையில் இருந்த பெட்டியை வாங்கிக் கொண்டாள் அனுபல்லவி.

அனுபல்லவிக்கு தெரியாமல் லேசாகப் புன்னகைத்த பிரணவ், "நாளைக்கு இந்த ட்ரெஸ்ஸ போட்டுட்டு ரெடி ஆகிட்டு இருங்க..." என்றான் கட்டளையாக.

"ம்ம்ம்ம்ம்..." எனத் தலையாட்டிய அனுபல்லவி அங்கேயே நிற்க, அவளைப் புருவம் உயர்த்தி கேள்வியாக நோக்கிய பிரணவ், "இன்னும் என்ன?" என்க, "ஆஹ்... ஒன்னும் இல்ல சார்... நான் போறேன்..." என்று விட்டு அவசரமாக அங்கிருந்து சென்றாள்.

அனுபல்லவி சென்றதும் பெருமூச்சு விட்டபடி தன் இருக்கையில் அமர்ந்த பிரணவ், "ஹப்பாடா... ஒரு வழியா அவ எந்த கேள்வியும் கேட்காதது போல பண்ணிட்டேன்... ஒரு கிஃப்ட் கொடுக்க இருக்குற பாடு... ஐயையோ... உன் நிலமை ரொம்ப மோசம்டா பிரணவ்..." எனக் கூறிப் புன்னகைத்தவனின் முகம் திடீரென மாறியது.

தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் வலியை உணர, தலையை அழுத்தப் பற்றிக் கொண்டான்.

சில நிமிடங்கள் கழித்து வலி லேசாக மட்டுப்படுவது போல் இருக்க, ட்ராயரைத் திறந்து தலைவலி மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டான்.

இங்கு சாருமதியைத் தொடர்ந்து வந்த ஆகாஷோ, "ஹேய் குட்டச்சி..." எனக் கத்த, கோபத்துடன் அவன் பக்கம் திரும்பிய சாருமதி அவன் முன் விரல் நீட்டி ஏதோ சொல்ல முயன்றவள் என்ன நினைத்தாலோ கண்ணை மூடி தன்னை சமன்படுத்திக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

சாருமதி அமைதியாகப் போவது ஆகாஷிற்கு ஏதோ போல் இருக்க, ஓடிச் சென்று அவள் முன் நின்று வழி மறித்தான்.

சாருமதி அவனைக் கேள்வியாக நோக்கவும் "ஈஈஈஈ..." என இளித்த ஆகாஷ், "சாரி குட்டச்சி..." என்க, "இங்க பாருங்க ஆகாஷ்... உங்க கூட பேசினாவே சண்டை தான் வருது... தயவு செஞ்சி என்னை டிஸ்டர்ப் பண்ணாம போங்க..." என்றாள் சாருமதி சலிப்பாக.

ஆகாஷ், "மதி... உன் கிட்ட மட்டும் தான் நான் இப்படி நடந்துக்குறேன்... உன்னை சீண்ட எனக்கு பிடிச்சிருக்கு..." என்க, அவனின் பிரத்தியேகமான அழைப்பு சாருமதியில் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ண, அதனை முகத்தில் காட்டாதவள், "ஏன் என்னைப் பார்த்தா உங்களுக்கு லூசு போல தெரியுதா? எப்பப்பாரு ஏதாவது சொல்லி சீண்டிட்டே இருக்க..." என்றாள் முறைப்புடன்.

'கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டோமோ?' என எண்ணிய ஆகாஷின் முகம் வாடியது.

"சாரி மதி... இனி உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்... பட் நான் உன்ன லவ் பண்றேன்னு சொன்னது நிஜம் தான்... அது விளையாட்டுக்கு சொல்லல..." என்ற ஆகாஷ் அங்கிருந்து நகர, 'என்ன பட்டுன்னு சாரி கேட்டுட்டு போறான்? விடக் கூடாதே...' என நினைத்த சாருமதி, "ஹேய் பனைமரம்..." என அழைக்கவும் அவள் பக்கம் திரும்பினான் ஆகாஷ்.

சாருமதி, "என்ன நீ ஈஸியா சாரி சொல்லிட்டு போற? இவ்வளவு நாளா என்னை சீண்டினதுக்கு எல்லாம் பனிஷ்மென்ட்டா இன்னைக்கு உன் பர்ஸை காலி பண்ண போறேன்... மரியாதையா வந்து பில் பே பண்ணுங்க..." என்கவும் ஆகாஷ் சரி எனத் தலையசைக்க, கேன்டினை நோக்கி நடந்த சாருமதி ஆகாஷைக் கடந்து செல்லும் போது, "லவ் பண்ணுறேன்னு சொல்லுவாங்களாம்... ஆனா நம்மள இம்ப்ரஸ் பண்றது போல எதுவும் பண்ண மாட்டார்... சீண்டுறதுல மட்டும் குறைச்சல் இல்ல..." என முணுமுணுத்தவாறு செல்ல, அதனைக் கேட்ட ஆகாஷின் இதழ்கள் தானாக மலர்ந்தன.

************************************

மறுநாள் மாலை தன் வீட்டில் அனுபல்லவி பார்ட்டிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்க, அவளையே புருவம் சுருக்கி பார்த்த சாருமதி, "அனு... இந்த ட்ரெஸ் எப்போ வாங்கின? நான் இதுவரை உன் கிட்ட இப்படி ஒரு ட்ரெஸ்ஸ பார்த்ததே இல்லயே... ரொம்ப ரிச்சா வேற இருக்கு..." என்க, தோழியின் கேள்வியில் தன் முகத்தில் தெரிந்த பதட்டத்தை மறைத்த அனுபல்லவி, "அது... சாரு... நேத்து பிரணவ் சார் மிஸ்டர் மெஹெராவோட பார்ட்டிக்கு இன்வைய்ட் பண்ணி இருக்காங்கன்னு சொன்னதும் வரும் போது வாங்கிட்டு வந்தேன்... அங்க பார்ட்டிக்கு பெரிய பெரிய இடத்துல இருந்து வருவாங்க... அதான் டி நல்ல ரிச் ட்ரெஸ்ஸா வாங்கினேன்... இந்த மந்த் சேலரி கூட டபிளா தருவாங்க தானே... சோ எந்தப் பிரச்சினையும் இருக்காது..." என சமாளிக்கவும் சரி எனத் தலையசைத்தாள் சாருமதி.

சரியாக மாலை ஐந்து மணி வாக்கில் பிரணவ் அனுபல்லவியின் வீட்டின் முன் வந்து ஹார்ன் அடிக்க, கிளம்பத் தயாரான அனுபல்லவியிடம் வந்த சாருமதி, "அனு... பார்த்து பத்திரமா போய்ட்டு வா... உனக்கு இந்த பார்ட்டி எல்லாம் புதுசு... பிரணவ் சார் கூட போறதனால பயம் இல்ல... ஆனா அங்க வர எல்லாரையும் நம்ப முடியாதே... ஜாக்கிரதையா இரு..." என்கவும் புன்னகைத்த அனுபல்லவி, "சரி சாரு... நான் கவனமா இருக்கேன்... நீ எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காதே... தூங்கு... என் கிட்ட தான் இன்னொரு கீ இருக்குல... சரி டி... அப்போ நான் கிளம்புறேன்..." என்று விட்டு புறப்பட்டாள்.

அனுபல்லவி வரும் வரை கார் ஸ்டீரிங் வீலில் விரல்களால் தாளமிட்டபடி இருந்த பிரணவ்வின் விழிகள் இமைக்க மறந்தன.

பிரணவ் நேற்று கொடுத்த பார்டரில் கல் வேலை செய்யப்பட்ட இளஞ்சிவப்பு நிற சாரியில் அதற்கேற்றவாறு பட்டர்ஃப்ளை ஸ்லீவ் ப்ளவுஸ் அணிந்து அவளின் நீண்ட சுருள் கூந்தலை விரித்து மொத்தமாக ஒரு பக்கம் போட்டு அளவான ஒப்பனையில் தோதான நகைகளுடன் நடந்து வந்த அனுபல்லவியை விட்டு பிரணவ்வின் விழிகள் அகல மறுத்தன.

அனுபல்லவி வந்து காரில் ஏறிய பின்பும் பிரணவ் அதே நிலையில் இருக்க, "சார்..." என்ற அனுபல்லவியின் குரலில் தன்னிலை அடைந்து அவசரமாக பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

பிரணவ்வின் பார்வையில் அனுபல்லவியின் மொத்த உடலும் சிலிர்த்து அடங்க, பிரணவ்வோ இரு கைகளாலும் முகத்தை தேய்த்து விட்டவன், 'இப்படியாடா பிரணவ் பார்த்து வைப்ப? பல்லவி உன்ன பத்தி என்ன நினைச்சி இருப்பா? இதுக்கு முன்ன பொண்ணுங்களை பார்த்ததே இல்லையா? ஓஹ் காட்... கன்ட்ரோல் யுவர் செல்ஃப் பிரணவ்...' என அனுபல்லவியின் பக்கம் அலை பாயும் தன் மனதை அடக்க வெகுவாகப் போராடினான்.

'ஏன் நான் பார்க்க கூடாதா? எனக்கு இல்லாத உரிமையா?' என பிரணவ் தன் மனதிடம் கேள்வி எழுப்ப, பிரணவ் இன்னும் காரை உயிர்ப்பிக்காமல் முகத்தை மூடியபடி அமர்ந்திருக்கவும் அவனுக்கு என்னவோ என பதட்டமடைந்த அனுபல்லவி பிரணவ்வின் தோள் தொட்டு, "சார்... என்னாச்சு? ஆர் யூ ஓக்கே?" எனக் கேட்கவும் நிமிர்ந்த பிரணவ், "ஐ... ஐம் ஓக்கே பல்லவி... போகலாம்..." எனக் காரை உயிர்ப்பித்தான்.

அப் பயணம் வெகு அமைதியாகக் கழிய, இருவரின் மனங்களோ மற்றவரின் அருகாமையை எண்ணி உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டன.

அனுபல்லவியின் அருகாமையில் பிரணவ்வின் உடலில் ஹார்மோன்கள் தன் வேலையை சிறப்பாக ஆரம்பிக்க, ஏசி போட்ட காரிலும் அவனுக்கு வியர்த்து வடிந்தன.

இதே நிலை நீடித்தால் நிச்சயம் தன் வசம் இழப்போம் எனப் புரிந்து கொண்ட பிரணவ் அதனைக் கலைக்கும் விதமாக மியூசிக் பிளேயரை ஆன் செய்ய, அதுவும் கூட அவனுக்கு எதிராக செய்தது.

பாடல் வரிகளில் அனுபல்லவியின் முகம் சிவக்க, விஜய் யேசுதாஸின் குரல் அவ் ஏகாந்த நிலையை மேலும் அதிகரிக்க, இருவரின் பார்வையும் தம் இணைகளுடன் கலக்க முயற்சித்தன.

தெளிமானம் மழவில்லின்
நிறம் அணியும் நேரம்
நிறமார்ந்நொரு கனவு என்னில்
தெளியுன்ன போலே

புழையோரம் தழுகும்
தண்ணீரும் காற்றும்
புளகங்ஙள் இழை நெய்‌தொரு
குழல் ஊதிய போலே

குளிரேகும் கனவு என்னில்
கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம்
தளிராடிய நேரம்

அகம் அருவும் மயிலிணைகள்
துயிலுணரும் காலம்
என் அகதாரில் அனுராகம்
பகருன்ன யாமம்

அழகே…!!!
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே…!!!
என்னுயிரில் விடரும் பனிமலரே

மலரே நின்னை
காணாதிருந்நால்
மிழிவேகிய நிறமெல்லாம்
மாயுன்ன போலே

அலிவோடு என் அரிகத்தின்
அணையாதிருந்நால்
அழகேகிய கனவெல்லாம்
அகலுன்ன போலே

ஞானென்றே ஆத்மாவின்
ஆழத்தின் உள்ளில்
அதிலோலம் ஆரோரும்
அறியாதே சூட்சிச்ச

தாளங்கள் ராகங்கள்
ஈணங்களாயி
ஓரோரு வர்ணங்களாயி

இடறுன்னு ஒரென்றே
இடை நெஞ்சின் உள்ளில்
ப்ரணயத்தின் மழையாய்
நீ பொழியுன்னீ நாளில்

தளருன்னு ஒரென்றே
தனு தோறும் நின்றே
அலை தல்லும் ப்ரணயத்தால்
உணரும் மலரே… அழகே…

குளிரேகும் கனவு என்னில்
கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம்
தளிராடிய நேரம்

அகம் அருவும் மயிலிணைகள்
துயில் உணரும் காலம்
என் அகதாரில் அனுராகம்
பகருன்ன யாமம்

அழகே…!!!
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே…!!!
என்னுயிரில் விடரும் பனிமலரே...


இதே நிலை அவர்கள் திரும்பி வரும் பொழுதும் நீடிக்குமா?
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 15

அந்த ரம்யமான பொழுதை இருவரும் ஒருவர் கண்களை ஒருவர் காதலுடன் நோக்கியவாறு ரசித்துக் கொண்டிருக்க, திடீரென பின்னால் ஒலித்த ஹார்ன் ஒலியில் தான் இருவரும் தன்னிலை மீண்டனர்.

அப்போது தான் பிரணவ் வண்டியை சிக்னலில் நிறுத்தி இருப்பது புரிய, அவன் இருந்த நிலையில் சிக்னலில் காரை நிறுத்தியதை கூட உணராது இருந்ததை எண்ணி வெட்கத்தில் ஒற்றைக் கையால் முகத்தை மறைத்துக் கொண்டான்.

அனுபல்லவியும் சிவந்த முகத்துடன் மறுபுறம் திரும்பிக்கொள்ள, மீண்டும் பின்னால் இருந்த வாகனங்கள் ஹார்ன் அடிக்கவும் விரைவாக தன் காரை உயிர்ப்பித்தான் பிரணவ்.

சற்று நேரத்திலேயே கார் பார்ட்டி நடக்கும் இடத்தை அடைய, முதலில் காரை விட்டு இறங்கிய பிரணவ் அனுபல்லவி இறங்குவதற்காக மறுபக்கம் வந்து கதவைத் திறந்து விட்டான்.

'என்ன இவர் இப்படி எல்லாம் பண்ணுறார்?' எனப் புன்னகையுடன் எண்ணியபடியே காரில் இருந்து இறங்கினாள் அனுபல்லவி.

இருவருமே ஒன்றாகவே பார்ட்டி நடக்கும் ஹாலுக்குள் நுழைய, அந்த ஹாலின் பிரம்மண்டத்தைக் கண்டு அசந்து போன அனுபல்லவியின் கண்கள் விரிந்தன.

"ஹேய் மிஸ்டர் பிரணவ்...வெல்கம்... ஹவ் ஆர் யூ மேன்?" என பிரணவ்வை வரவேற்றபடி வந்தார் மிஸ்டர் மெஹெரா.

பிரணவ், "ஐம் குட் மிஸ்டர் மெஹெரா..." எனப் புன்னகையுடன் பதிலளிக்கும் போதே அனுபல்லவியைக் கண்டு கொண்ட மிஸ்டர் மெஹெரா, "ஹாய் மிஸ் பல்லவி... நைஸ் டு மீட் யூ..." என்க, "ஹாய் சார்... மீ டூ..." எனப் பதிலளித்தாள் அனுபல்லவி.

மெஹெரா, "மிஸ்டர் பிரணவ்... திஸ் பார்ட்டி இஸ் அரேன்ஜ்ட் டு செலிப்ரேட் அவர் சக்சஸ்ஃபுல் ப்ராஜெக்ட்... யூ டூ ஆர் தி மோஸ்ட் இம்பார்டன்ட் கெஸ்ட் டுடே... சோ ப்ளீஸ் என்ஜாய் தி பார்ட்டி..." எனும் போதே, "ஹேய் மை பாய்..." என கையில் மதுக் குவளையுடன் வந்து பிரணவ்வை அணைத்துக் கொண்டார் நடுத்தர வயது ஒருவர். அவர் தான் ராமலிங்கம். பிரணவ்வின் தாய் மாமன்.

அவரைக் கண்டதும் முகம் மலர்ந்த பிரணவ்விற்து ஆகாஷ் கூறியதும் சேர்ந்து நினைவு வந்து அது பற்றி இன்று அவரிடம் பேசியே ஆக வேண்டும் என முடிவெடுத்தவன், "நல்லா இருக்கேன் மாமா..." என்றான்.

மெஹெரா, "ஹேய் காய்ஸ்... ஆர் யூ ரிலேடிவ்ஸ்?" எனக் கேள்வியாக நோக்கவும் பிரணவ்வின் தோளில் கரத்தைப் போட்ட ராமலிங்கம், "ஹீ இஸ் மை நெஃபிவ்..." என்றவர் பிரணவ்விடம் திரும்பி, "பிரணவ்... நானும் மிஸ்டர் மெஹெராவும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்..." என்கவும் புன்னகையுடன் தலையசைத்தான் பிரணவ்.

யாரோ அழைக்கவும், "ஐ வில் கெட் யூ பெக்..." என்று விட்டு மெஹெரா அங்கிருந்து சென்று விட, அப்போது தான் பிரணவ்வின் அருகில் தயக்கமாக நின்று கொண்டிருந்த அனுபல்லவியைக் கவனித்தார் ராமலிங்கம்.

பிரணவ் அங்கு வந்த ஒரு தொழிலதிபருடன் பேசிக் கொண்டிருக்க, ராமலிங்கமின் பார்வை அனுபல்லவியை மேலிருந்து கீழாக அங்குலம் அங்குலமாக அளவிட, அனுபல்லவியின் முதுகுத்தண்டு சில்லிட்டது.

தன்னை அறியாமலே பயத்தில் பிரணவ்வின் கரத்தை பற்றிப் பிடித்தவளை குழப்பமாகப் பார்த்தவன் அவள் பார்வை சென்ற திக்கில் பார்வையைத் திருப்ப, அவன் கண்கள் கோபத்தில் சிவந்தன.

அவன் கூலர்ஸ் அணிந்து இருந்ததால் யாரின் கண்களுக்குமே புலப்படாமல் போக, அனுபல்லவியின் இடை பற்றி தன் அருகே நெருக்கமாக நிற்க வைத்தவனின் அணைப்பு அனுபல்லவியின் பயத்தை ஓரளவு குறைத்தது.

ராமலிங்கம், "அப்புறம்... யாரு மாப்பிள்ளை இது? எத்தனை நாளைக்கு இந்த கேஸ்?" என அனுபல்லவியைப் பார்த்துக் கொண்டு கேட்க, அனுபல்லவியின் கண்கள் சட்டெனக் கலங்கி விட்டன.

பிரணவ் ராமலிங்கத்திடம் கோபமாக ஏதோ கூற முனையும் போது அந்த பார்ட்டி ஹால் விளக்குகள் அணைக்கப்பட்டு இருளடைந்து மேடையில் மட்டும் ஒளி பிறப்பிக்கப்பட்டது.

ஒலிவாங்கியுடன் மேடையில் நின்ற மெஹெரா, "ஹெலோ எவ்ரிபாடி... ஃபர்ஸ்ட் ஆப் ஆல் ஐ வுட் லைக் டு எக்ஸ்ப்ரெஸ் மை க்ரடிடியுட் டு எவ்ரிவன் ஹூ எக்சப்டட் மை ரிகுவெஸ்ட் என்ட் கேம் ஹியர்... திஸ் பார்ட்டி அரேன்ஜ்ட் டு அப்ரிசியேட் மிஸ்டர் பிரணவ் ஃபார் கம்ப்ளீட்டிங் மை ப்ராஜெக்ட் சக்சஸ்ஃபுலி..." என்கவும் அங்கு வந்திருந்த அனைவரும் கை தட்ட, பிரணவ் புன்னகைத்தான்.

மெஹெரா, "ஓக்கே காய்ஸ்... லெட்ஸ் என்ஜாய் தி பார்ட்டி..." என்கவும் பாடல்கள் ஒலிக்க, அங்கு வந்திருந்த ஆண்கள், பெண்கள் எனப் பாகுபாடின்றி அனைவருமே கையில் மதுக் குவளைகளுடன் நடனமாட, அதனைக் கண்டு முகம் சுழித்தாள் அனுபல்லவி.

வெய்ட்டர் ஒருவர் மதுக்குவளைகளை ஏந்திக் கொண்டு பிரணவ் இருந்த இடத்திற்கு வர, அதிலிருந்து ஒரு குவளையைக் கையில் எடுத்தவன் வெய்ட்டரிடம் ஆரேன்ஜ் ஜூஸ் ஒன்று கொண்டு வரும்படி கட்டளை இட்டான்.

பிரணவ் மதுக் குவளையை கையில் எடுத்ததுமே அனுபல்லவியின் முகம் வாட, அதனைக் கவனித்தவன், "என்னாச்சு?" எனக் கேட்கவும் ஒன்றுமில்லை எனத் தலையாட்டிய அனுபல்லவி அப்போது தான் தன் இடையைச் சுற்றி இருந்த பிரணவ்வின் கரத்தைக் கவனித்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

அந்த நேரம் ஏதோ ஒரு கோபத்தில் அவளை அணைத்திருந்தவனுக்கும் அப்போது தான் அது புரிய, "ஓஹ்... சாரி பல்லவி... ரியலி சாரி..." எனத் தன் கரத்தை விலக்கிக் கொண்டான் பிரணவ்.

அனுபல்லவியின் முக மாற்றத்தைக் கண்டு, தான் அவளை அணைத்ததை அவள் விரும்பவில்லை போல எனத் தவறாக எண்ணிய பிரணவ்விற்கு மனதில் வலி உண்டாக, அதனை மறைக்க கையில் இருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.

ஆனால் உண்மையாகவே பிரணவ்வின் நெருக்கம் அனுபல்லவியின் காதல் கொண்ட மனதை ஏதோ செய்ய, உள்ளுக்குள் மகிழ்வாக இருந்தது.

சற்று நேரத்திலேயே பிரணவ் கேட்ட ஜூஸுடன் வந்த வெய்ட்டர் அதனை அனுபல்லவியிடம் நீட்ட,பிரணவ் கண் காட்டவும் தயக்கமாக அதனை எடுத்துக் குடித்தாள்.

அனுபல்லவி அந்த ஜூஸைப் பருகுவதை தூரத்திலிருந்து விஷமச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராமலிங்கம்.

பிரணவ், "பல்லவி... நீங்க அந்த டேபிள்ல உட்காருங்க... நான் ஒருத்தர் கூட பேசிட்டு வரேன்..." என்றவன் அனுபல்லவி தலையசைக்கவும் அங்கிருந்து சென்றான்.

அனுபல்லவிக்கும் அந்தக் கூட்டத்தின் நடுவே நிற்க ஏதோ போல் இருக்க, பிரணவ் கூறவும் உடனே வந்து ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள்.

திடீரென்று லேசாக தலை சுற்றுவது போல் இருக்க, வாஷ்ரூம் செல்வதற்காக எழுந்தாள்.

அனுபல்லவி வாஷ்ரூம் செல்லவும் விஷமமாகப் புன்னகைத்த ராமலிங்கம் அவளை மெதுவாகப் பின் தொடர்ந்தார்.

முகத்தில் நன்றாக நீரை அடித்த அனுபல்லவி, "என்னாச்சு எனக்கு? ஏன் இப்படி தலை சுத்துது?" என்றவளால் நேராக நிற்க கூட முடியவில்லை.

"ஏன்னா நீ குடிச்ச ஜூஸ்ல மயக்க மருந்து கலந்து இருந்தது..." எனக் கூறியபடி அங்கு வந்தார் ராமலிங்கம்.

அவரை அங்கு எதிர்ப்பார்க்காத அனுபல்லவி, "நீ...நீங்க... இங்...க..." என்றவள் சமநிலை இழந்து விழப் பார்க்க, அவசரமாக அவளைப் பிடித்துக் கொண்டார் ராமலிங்கம்.

அனுபல்லவி, "ச்சீ... என்னை விடுங்க..." என முகம் சுழித்தவள் ராமலிங்கத்திடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போராட, "என்ன பேபி நீ? என் மருமகனுக்கு மட்டும் தான் கம்பனி கொடுப்பியா? எனக்கு எல்லாம் கொடுக்க மாட்டியா?" என முழுப் போதையில் வக்கிரமாகக் கேட்டவரின் பார்வை அனுபல்லவியின் உடலில் மேய்ந்தது.

மயக்க மருந்து அதன் வேலையைக் காட்டத் தொடங்க, கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்த அனுபல்லவி, "பி...பிரணவ்..." என முணுமுணுக்க, ராமலிங்கமோ அனுபல்லவியின் முகத்தை வருடியபடி, "செக்ஸி..." என்றவர் அவளின் தோளில் இருந்த சேலையை மெதுவாக விலக்கி விட்டு அவள் இதழை நோக்கி நெருங்க, அவரை இழுத்து அவரின் முகத்திலே ஒரு குத்து விட்டான் பிரணவ்.

அனுபல்லவியை விட்டு வந்தாலும் பிரணவ்வின் பார்வை முழுவதும் அனுபல்லவியைச் சுற்றியே இருந்தது.

அப்போது தான் அவள் தலையைப் பிடிப்பதும் கஷ்டப்பட்டு எழுந்து வாஷ்ரூம் செல்வதும் கண்ணில் பட, அவளைத் தொடர்ந்து செல்லப் போன பிரணவ்வைப் பிடித்துக் கொண்டார் மெஹெரா.

அவர் ஏதோ முக்கியமான விடயமாக பேசவும் பிரணவ்விற்கு அங்கிருந்து நகர முடியாத நிலை.

ஒருவாறு அவரை சமாளித்து விட்டு அவசரமாக அனுபல்லவி சென்ற திசையில் நடந்தவனுக்கு அனுபல்லவியின் கத்தல் சத்தம் கேட்கவும் எதுவும் யோசிக்காமல் வாஷ்ரூம் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்த பிரணவ் அவனின் மாமாவே தன்னவளிடம் தவறாக நடக்க முற்படுவதைக் கண்டு ஆத்திரமடைந்தவன் அவரின் முகத்தில் ஓங்கி குத்தினான்.

பிரணவ்வின் அடியில் வலியில் முகத்தைப் பிடித்தபடி கீழே விழுந்தார் ராமலிங்கம்.

"பல்லவி..." என அனுபல்லவியைத் தாங்கிக் கொண்ட பிரணவ் அவளின் தோளைச் சுற்றி சேலையைப் போர்த்தி விட்டு முகத்தில் தட்டியும் அனுபல்லவி கண் விழிக்கவில்லை.

உடனே தண்ணீர் பிடித்து அனுபல்லவியின் முகத்தில் தெளிக்கவும் மெதுவாக விழி திறந்தாள் அனுபல்லவி.

அதற்குள் எழுந்த ராமலிங்கம், "என்ன மாப்பிள்ளை? பார்ட்டில என்ஜாய் பண்ண தானே இந்த பொண்ண கூட்டிட்டு வந்த... உன் மாமன் கூட ஷேர் பண்ணிக்க மாட்டியா?" என்கவும் அனுபல்லவி முகம் சுழிக்க, ராமலிங்கத்தின் சட்டையை ஆவேசமாகப் பற்றிய பிரணவ், "எங்க அம்மாவோட தம்பின்னு பார்க்குறேன்... இல்ல இப்போ நீ பண்ண போன காரியத்துக்கு உன்ன வெட்டி போட்டு இருப்பேன்..." என்றான்.

அவனின் கரத்தைத் தட்டி விட்ட ராமலிங்கம், "ஓஹ்... என்னவோ நீ உத்தமன் போல பேசுற... ஏற்கனவே ஒரு பொண்ணைக் காதலிக்கிறது போல நடிச்சி ஏமாத்தினவன் தானே நீ..." என ஏளனமாகக் கூறவும் அனுபல்லவி அதிர்ச்சி அடைய, கோபத்தில் பல்லைக் கடித்த பிரணவ், "அன்னைக்கு ஆக்சிடன்ட் நடக்க காரணம் நீ தான்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்... என்னைப் பகைச்சிக்கிட்டா கம்பி எண்ண வேண்டி வரும்..." என மிரட்டினான்.

அதனைக் கேட்கவும் சத்தமாகச் சிரித்த ராமலிங்கம், "அப்போ உனக்கு எல்லாமே தெரிஞ்சிடுச்சு போல மருமகனே... அதுவும் நல்லதுக்கு தான்... இனிமே உன் முன்னாடி நல்லவன் வேடம் போட வேண்டியதில்ல..." என்கவும் பிரணவ் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான்.

ஆகாஷ் அவரைப் பற்றிக் கூறியும் பிரணவ் அதனை நம்பவில்லை. இப்போதும் அவரின் வாயால் உண்மையை வரவழைக்கவே அப்படிக் கூற, ராமலிங்கம் உண்மையை ஒத்துக் கொண்டது பிரணவ்விற்கு அதிர்ச்சியாக இருந்தது.

ராமலிங்கம், "ஆமாடா... நான் தான் உன்ன ஆக்சிடன் பண்ண அந்த லாரி ட்ரைவரை செட் பண்ணேன்... கொஞ்சம் கூட உரிமையே இல்லாத நீ எப்படி எங்க அக்கா, மாமாவோட சொத்த உன் இஷ்டத்துக்கு அனுபவிக்கலாம்? " என்கவும் பிரணவ் அவரைப் புரியாமல் நோக்க, "என்ன புரியலயா? ஹஹஹா... உன் பிறப்பை பத்தின பெரிய ரகசியம் ஒன்னு இருக்கு மருமகனே... அதைத் தெரிஞ்சிக்க வேண்டாமா?" என நக்கலாகக் கேட்கவும் அவரின் சட்டையைப் பற்றிய பிரணவ், "என்ன சொல்ற?" எனக் கேட்டான் கோபமாக.

"ரொம்ப ஆத்திரப்படக் கூடாது மாப்பிள்ளை... ஆல்ரெடி உனக்கு ஹெல்த் ப்ராப்ளம் வேற இருக்கு..." என நக்கலாகக் கூறவும் பிரணவ்வின் முகம் இறுக, "சீக்கிரமே உனக்கு எல்லா உண்மையும் தெரிய வரும்... வெய்ட் என்ட் சீ மருமகனே..." என்ற ராமலிங்கம் அங்கிருந்து நகர, பிரணவ்விற்கு குழப்பமாக இருந்தது.

அனுபல்லவி அப்போது தான் நன்றாக மயக்கம் தெளிந்திருக்க, தனக்கு நடக்க இருந்த கொடுமையை எண்ணி கூனிக்குறுகி பிரம்மை பிடித்தது போல் நின்றிருந்தாள்.

அனுபல்லவியின் நினைவு வந்து அவள் பக்கம் திரும்பிய பிரணவ்விற்கு அனுபல்லவி நின்றிருந்த தோற்றம் மனதை வாட்ட, "பல்லவி..." எனப் பாய்ந்து அணைத்துக் கொண்டான்.

அவளிடம் இருந்து எந்த சத்தமும் வெளி வரவில்லை. ஆனால் பிரணவ்வின் மார்பு ஈரம் ஆகுவதிலேயே அனுபல்லவி அழுகிறாள் எனப் புரிந்து கொண்டவனின் அணைப்பு மேலும இறுகியது.

பிரணவ், "ஒன்னும் இல்ல பல்லவி... உனக்கு எதுவும் நடக்கல... உனக்கு எதுவும் நடக்க நான் விட மாட்டேன்..." என்றவாறு அனுபல்லவியின் தலையை வருட, "நீங்க மட்டும் வரலன்னா என்ன ஆகி இருக்கும்ங்க? அந்த... அந்த ஆள்... என்னை... என்னை..." என்ற அனுபல்லவியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

"ஷ்ஷ்ஷ்... ஒன்னும் இல்ல பல்லவி... அதான் நான் வந்துட்டேன்ல... என்னால தான் உனக்கு இந்த நிலமை... நான் தான் உன்ன ஃபோர்ஸ் பண்ணி பார்ட்டிக்கு வர வெச்சேன்... அப்படி கூட்டிட்டு வந்தும் நான் உன்ன சரியா கவனிக்கல... ஐம் சாரி..." என்ற பிரணவ்வின் கண்கள் கலங்கின.

சில நொடிகள் மௌனமாய் கழிய, "வா பல்லவி நாம போகலாம்... இனிமே இங்க இருக்க வேணாம்..." என்ற பிரணவ் அனுபல்லவியை அங்கிருந்து அழைத்துக்கொண்டு சென்றான்.

காரில் செல்லும் போது அனுபல்லவி ஓரளவு சமாதானம் அடைந்திருக்க, பிரணவ்வோ ராமலிங்கம் கூறியது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

பிரணவ்வின் இறுகிய தோற்றத்தைக் கவனித்த அனுபல்லவி, "அது... பீச் போலாமா?" எனத் தயங்கியவாறு கேட்கவும் அவளைக் கேள்வியாக நோக்கினான் பிரணவ்.

அனுபல்லவி, "இன்னைக்கு பௌர்ணமி... பீச்ல இருந்து கடல் அலை சத்தத்தோட சேர்த்து பௌர்ணமி நிலாவை ரசிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை... அதனால தான் சொன்னேன்..." என்கவும் சரி எனத் தலையசைத்த பிரணவ் கடற்கரையை நோக்கி வண்டியை செலுத்தினான்.

கடல் அலை பாதத்தை நனைக்க, சிறிது தூரம் காலாற நடந்தவர்கள் ஒரு இடத்தில் ஓய்வாக அமர்ந்தனர்.

இருவருமே வானில் தெரிந்த பௌர்ணமி நிலவை சில நொடிகள் ரசிக்க, "அவர் ஏன் உங்களை அப்படி சொன்னார்?" எனத் திடீரெனக் கேட்டாள் அனுபல்லவி.

பிரணவ், "நீ என்ன நினைக்கிற?" என அனுபல்லவியின் கண்களை ஆழமாகப் பார்த்தபடி கேட்க, "அது சும்மா உங்க மேல பழி போடுறார் போல..." என அனுபல்லவி கூறவும் பிரணவ்வின் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.

"அவர் சொன்னது உண்மை தான்..." என கடலை வெறித்தவாறு பிரணவ் கூறவும் அதிர்ந்தாள் அனுபல்லவி.

பிரணவ், "நான் ஒரு பொண்ண காதலிக்கிறது போல நடிச்சி ஏமாத்தினேன் தான்..." என்றவன் சிறுவயது முதல் பெற்றோர் இருந்தும் அவர்களுடன் ஒன்றாக இருக்காதது பற்றியும் அதிலிருந்து அவர்களின் கவனத்தைக் கவர்வதற்கு வேண்டும் என்றே ஏதாவது தவறு செய்வது, அபினய்யின் நட்பு தொடக்கம் சிதாராவைப் பற்றியும் அனைத்தையும் கூறினான்.

தன் மனதில் இவ்வளவு நாளும் அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை அனுபல்லவியிடம் கொட்டவும் நிம்மதியாக உணர்ந்த பிரணவ், "தாராவுக்கு நான் பண்ணின அநியாயத்துக்கு தண்டனையா தான் அன்னைக்கு எனக்கு அந்த ஆக்சிடன்ட் ஆகி என்னால ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாத நிலமைக்கு ஆளாகி இருக்கேன்... ஒரு பொண்ணைக் காதலிக்கவோ, கல்யாணம் பண்ணிக்கவோ கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன் நான்..." எனப் பெருமூச்சு விட்டான்.

சில நிமிடங்கள் மௌனமாய் கழிய, "நீங்க தப்பு பண்ணி இருக்கீங்க தான்... பெண் பாவம் பொல்லாததுன்னு சொல்லுவாங்க... நீங்க அந்த தப்பு உணர்ந்து அதுக்கு தண்டனையும் உங்களுக்கு கிடைச்சிடுச்சு... அதே நேரம் ரொம்ப ஆபத்தான நேரத்துல சிதாராவை நீங்க காப்பாத்தி இருக்கீங்க... எப்போ நீங்க உங்க தப்பை மனசார உணருறீங்களோ அப்பவே நீங்க திருந்திட்டீங்க... அதுக்கப்புறம் நீங்க எந்த தப்பும் பண்ணல தானே... இன்னும் ஏன் அப்போ அதை நினைச்சி ஃபீல் பண்றீங்க?" என அனுபல்லவி கூறவும் பிரணவ் அவளின் முகத்தை கேள்வியாக நோக்க, "கடவுளுக்கு தெரியும் எது உங்களுக்கு எப்போ கிடைக்கணும்னு... நிச்சயமா நீங்களும் ஒரு குழந்தைக்கு தந்தை ஸ்தானத்தை பெறுவீங்க... அப்புறம்..." என நிறுத்தி பிரணவ்வின் கண்களைப் பார்த்தாள் அனுபல்லவி.

பிரணவ்வும் அவள் என்ன கூற வருகிறாள் என அவளையே பார்த்திருக்க, "காதலிக்கவும், காதலிக்கப்படவும், கல்யாணம் பண்ணிக்கவும் எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு..." என்ற அனுபல்லவி பிரணவ்வின் கரத்தை அழுத்தப் பற்றினாள்.

இருவரின் கோர்த்திருந்த கரங்களையே பிரணவ் வெறித்துக் கொண்டிருக்க, "சின்ன வயசுல இருந்தே பாசத்துக்காக ஏங்கி இருக்கீங்க... ஆனா இனிமே அதுக்கு அவசியம் இல்ல... உங்களுக்கு தாயா, தாரமா, குழந்தையா, எல்லாமுமா நான் இருப்பேன் உங்க கூட கடைசி வரைக்கும்..." என அனுபல்லவி கூறவும் பிரணவ்வின் கண்கள் கலங்கின.

பிரணவ் அனுபல்லவியையே பார்த்துக் கொண்டிருக்க, "அன்னைக்கு உங்களுக்கு ஆக்சிடன்ட் ஆகி உங்களை அந்த நிலமைல பார்த்ததும் ஏன்னே தெரியாம என் மனசு உங்களுக்காக ரொம்ப துடிச்சது... உங்களுக்கு எதுவும் ஆக கூடாதுன்னு நான் வேண்டாத தெய்வம் இல்ல... அது ஏன்னு அப்போ புரியல... அப்புறம் ஆஃபீஸ்ல உங்களை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ உங்களுக்கு எதுவும் ஆகல... நீங்க நல்லா இருக்கீங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன்... என் மனசு கொஞ்சம் கொஞ்சமா உங்க பக்கம் சரிய ஆரம்பிச்சது... நீங்க எப்பவும் ஏதோ ஒரு மாதிரி இறுக்கமாவே இருப்பீங்க..‌. அதைப் பார்க்குறப்போ எல்லாம் உங்க முகத்துல சந்தோஷத்தை கொண்டு வரணும்னு தோணும்... அப்போ தான் எனக்கு புரிஞ்சது என் மனசு முழுசா நீங்க இருக்கீங்கன்னு... உங்க பாஸ்ட் எப்படி இருந்தாலும் எனக்கு முக்கியம் இல்ல... அதெல்லாம் மறந்து போகும் அளவுக்கு என் காதல்ல உங்களை மூழ்கடிக்கணும்... ஐ லவ் யூ பிரணவ்..." என பிரணவ்வின் விழிகளை ஆழமாக நோக்கியபடி கூறிய அனுபல்லவி பிரணவ்வின் நெற்றியில் தன் முதல் இதழ் அச்சாரத்தைப் பதிக்க, அவளைப் பாய்ந்து அணைத்துக்கொண்ட பிரணவ் இத்தனை வருடமும் தான் கட்டுப்படுத்தி வைத்த மொத்த கண்ணீரையும் அனுபல்லவியின் தோளில் அழுது கரைத்தான்.

தன் மொத்த வலியையும் போக்கும் விதமாக அனுபல்லவியை அணைத்துக்கொண்டு கதறிய பிரணவ்வின் தலையை வருடியபடி எதுவும் கூறாது அழ விட்டாள் அனுபல்லவி.

சில மணி நேரம் கழித்து அழுது முடிந்த பிரணவ் மெதுவாக அனுபல்லவியை விட்டு விலகி அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

தனக்குரிய இடத்தை அடைந்து கொண்ட மன நிம்மதியோ என்னவோ அனுபல்லவியின் மடியில் தலை சாய்த்ததுமே பல வருடங்கள் கழித்து நிம்மதியாக உறக்கத்தைத் தழுவினான் பிரணவ்.

குழந்தை போல் புன்னகைத்தபடி தன் மடியில் துயில் கொள்ளும் தன்னவனையே விழி அகற்றாமல் பார்த்த அனுபல்லவி, 'இன்னைக்கு என் மனசுல உள்ள காதலை உங்க கிட்ட சொல்லாம விட்டேன்னா இனி எப்பவுமே அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்காதுன்னு தோணிச்சு பிரணவ்... அதனால தான் இன்னைக்கே எல்லாத்தையும் உங்க கிட்ட சொன்னேன்... என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் கூட என் மேல இதே காதல் உங்களுக்கு இருக்குமா பிரணவ்?' என எண்ணியவளின் விழி நீர் பிரணவ்வின் கன்னத்தில் விழவும் திரும்பி அனுபல்லவியின் வயிற்றில் முகம் புதைத்தான் பிரணவ்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 16

பல நாட்கள் கழித்து கடல் காற்று முகத்தை வருட, தன்னவளின் மடியில் நிம்மதியாக உறங்கினான் பிரணவ்.

பிரணவ்வின் தலையை வருடியபடி கடலை வெறித்துக் கொண்டிருந்த அனுபல்லவியின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள்.

தன்னைப் பற்றி முழுவதும் அறிந்தால் பிரணவ் தன்னை ஏற்றுக்கொள்வானா என்ற கேள்வியே அவளை அதிகம் பயமுறுத்தியது.

சில மணி நேரங்களிலேயே விழிப்புத் தட்டிய பிரணவ் கண்டது கடலை வெறித்துக் கொண்டிருந்த அனுபல்லவியைத் தான்.

பிரணவ் சட்டென எழுந்து அமரவும் திடுக்கிட்ட அனுபல்லவி, "என்னாச்சுங்க? உங்க தூக்கத்தை கலைச்சிட்டேனா?" என வருத்தமாகக் கேட்கவும் கலங்கியிருந்த அவளின் கண்களை துடைத்து விட்ட பிரணவ், "சாரி பல்லவி... ரொம்ப நாள் கழிச்சி அசந்து தூங்கிட்டேன்... உனக்கு கால் வலிச்சி இருக்கும்ல..." என்றான் வருத்தமாக.

அனுபல்லவி, "அச்சோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல பிரணவ்... அது சும்மா காத்துக்கு கண்ணு கலங்கி இருக்கு... நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க... அதான் நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணல..." என்றாள்.

லேசாகப் புன்னகைத்த பிரணவ் அனுபல்லவியை தன் நெஞ்சின் மீது சாய்த்துக்கொண்டு, "நிஜமாவே நான் முன்னாடி பண்ணின தப்பை நினைச்சி உனக்கு என் மேல கோவம் இல்லையா பல்லவி?" எனக் கேட்டான்.

பிரணவ்வின் நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்ட அனுபல்லவி, "நீங்க இன்னுமே அப்படி இருந்தீங்கன்னா நிச்சயம் நான் கோவப்பட்டு இருப்பேன்... வருத்தப்பட்டு இருப்பேன்... ஆனா நீங்க தான் இப்போ திருந்திட்டீங்களே பிரணவ்... என் கிட்ட வரும் போது நீங்க பொண்ணுங்களை மதிக்கிற, அவங்களை கண்ணியமா நடத்துறவரா தானே இருக்கீங்க... அதனால எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்..." எனப் புன்னகையுடன் கூறவும் அவளைத் தன்னுள் இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்ட பிரணவ், "பல்லவி... இந்த லைஃப் நீ எனக்கு கொடுத்த மறுஜென்மம்... ஆக்சிடன்ட்டுக்கு அப்புறம் எனக்கு இப்படி ஒரு குறை இருக்குன்னு தெரிஞ்சதும் எதுக்குடா இன்னும் வாழுறோம்னு தோணிச்சு... ஆனா அந்த ஆக்சிடன்ட்டுக்கு அப்புறம் தினமும் என்னைக் காப்பாத்தின பொண்ணோட முகம் என் கனவுல வரும்... ஆனா உன் முகம் சரியா தெரியாது... உன்ன முதல் தடவை பார்த்ததும் என்னையே அறியாம உன்னோட எல்லா செயலையும் ரசிச்சேன்... அதனால எனக்கு என் மேலயே கோபம்... உன்ன காதலிக்க கொஞ்சம் கூட தகுதியே இல்லாத என்னைப் போல ஒரு குறை உள்ளவன் உன்ன எப்படி ரசிக்கலாம்னு... அந்த கோவத்தை தான் முட்டாள் மாதிரி உன் மேல காட்டி உன்ன கஷ்டப்படுத்தினேன்... ஆனாலும் நீ என்னை விட்டு தூரமா போறதை என் மனசு ஏத்துக்கல... அதனால தான் ஏதாவது ஒரு காரணம் காட்டி உன்ன என் கூடவே வெச்சிக்கிட்டேன்... இப்போ இந்த நிமிஷம் தோணுது இப்படியே உன் கைய பிடிச்சிக்கிட்டு நூறு வருஷம் வாழணும்னு..." என்றவன் அனுபல்லவியின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

அதனை விழி மூடி அனுபவித்தாள் அனுபல்லவி.

சில நொடிகள் மௌனமாய் கழிய, "பல்லவி... ரொம்ப லேட் ஆகிடுச்சு... உன் ஃப்ரெண்ட் உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பா... வா போகலாம்..." என்ற பிரணவ் எழுந்து அனுபல்லவிக்கு எழுவதற்காக கையை நீட்டினான்.

அனுபல்லவி, "அவ கிட்ட வர லேட் ஆகும்னு ஆஷ்ரெடி இன்ஃபார்ம் பண்ணிட்டேன்..." என்றவள் பிரணவ்வின் கரத்தைப் பற்றி எழுந்து நின்றாள்.

பிரணவ் காரை ஓட்ட, அனுபல்லவி அவனின் தோளில் சாய்ந்தவாறு வர, அனுபல்லவியின் அபார்ட்மெண்ட் வந்ததும் காரை நிறுத்திய பிரணவ் அனுபல்லவியின் கன்னத்தில் முத்தமிட்டு, "நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..." என்கவும் முகம் சிவந்தாள் அனுபல்லவி.

************************************

சாருமதியும் அனுபல்லவியும் மறுநாள் சாவகாசமாக ஆஃபீஸ் வர, மொத்த கம்பனியும் ஒரே பரபரப்பாக இருந்தது.

அவர்களைப் புரியாமல் பார்த்தபடி இருவரும் சென்று தம் இருக்கையில் அமர, ஆகாஷ் அவர்களைக் கடந்து செல்லவும், "ஓய் பனைமரம்..." என அழைத்தாள் சாருமதி.

ஆகாஷ் வாயெல்லாம் பல்லாக, "என்ன குட்டச்சி பேபி?" என இளித்துக்கொண்டு வர, அவனைக் கேவலமாக ஒரு லுக்கு விட்ட சாருமதி, "எதுக்கு இப்போ ப்ரஷ் பண்ண போறது போல மொத்த பல்லையும் காட்டிட்டு இருக்க?" எனக் கேட்கவும் அனுபல்லவி வாயை மூடி சிரித்தாள்.

சாருமதியை முறைத்தவாறு, "சொல்லு என்ன விஷயம்? எதுக்கு கூப்பிட்ட?" எனக் கேட்டான் ஆகாஷ்.

சாருமதி, "ஆமா... இன்னைக்கு ஏதாவது இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கா? எதுக்கு எல்லாரும் டென்ஷனா இருக்காங்க?" எனக் கேட்கவும், "ஓஹ்... அதுவா... கம்பனி எம்.டி வராங்க இன்னைக்கு..." என்றான் ஆகாஷ் கூலாக.

அனுபல்லவி, "என்ன? மூர்த்தி சார் வராரா? ஏன் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணல?" எனப் பதறிக் கேட்க, "அவர் கம்பனி... அவருக்கு வேண்டிய நேரம் அவர் வராரு... உனக்கு என்ன டி வந்துச்சு? ஏதோ தப்பு பண்ணி மாட்டிக்கிட்டது போல முழிக்கிற..." என்றாள் சாருமதி.

அவளைப் பார்த்து இளித்து வைத்த அனுபல்லவி, "ஆமால்ல... சும்மா பயப்படுறேன் நான்..." என்றாள்.

ஆகாஷ், "மூர்த்தி சார் ஒன்னும் இன்னைக்கு வரல... அவர் பையன் தான் வரார்..." என்கவும், "என்ன? அவர் பையனா? எப்படி இருப்பார்? பார்க்க ஹேன்ட்சமா இருப்பாரா?" எனச் சாருமதி கண்கள் பளிச்சிடக் கேட்கவும் ஆகாஷிற்கு உள்ளுக்குள் எரிந்தது.

அவனின் முகம் போன போக்கைப் பார்த்து தனக்குள் சிரித்த சாருமதி, "சொல்லு பனைமரம்... ஆள் பார்க்க எப்படி இருப்பார்?" என வேண்டும் என்றே அவனைக் கடுப்பேற்றுவதற்காக கேட்க, "ஆஹ்... அவர் வந்ததும் நீயே போய் பார்த்துக்கோ..." எனக் கடுப்பாக கூறிய ஆகாஷ், "வந்துட்டா ஹேன்ட்சம் அது இதுன்னு... ஒருத்தன் அவ பின்னாடியே சுத்துறேன்... அதெல்லாம் அவ முட்டைக் கண்ணுக்கு தெரியாது... என் கிட்டயே கேட்குறா பாரு கேள்வி..." என முணுமுணுத்தவாறு அங்கிருந்து செல்லவும் சாருமதி வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

அனுபல்லவி, "ஹேய் பாவம் டி சாரு அவர்... எதுக்கு சும்மா அவரை டீஸ் பண்ற?" எனத் தோழியைக் கடிந்துகொள்ள, "என்ன எவ்வளவு கடுப்பேத்தி இருப்பான்... கொஞ்சம் நேரம் வயிறு எரியட்டும்..." எனச் சிரித்தாள் சாருமதி.

சற்று நேரத்திலேயே அங்கு வந்த மேனேஜர் மோகன், "காய்ஸ்... சீக்கிரம் எல்லாரும் மீட்டிங் ஹாலுக்கு வாங்க... எம்.டி வந்துட்டு இருக்கார்..." என்கவும் அனைவருமே மீட்டிங் ஹாலிற்கு சென்றனர்.

அனுபல்லவி, 'என்ன இன்னைக்கு இவர் இன்னும் வரல? எம்.டி வேற வராராமே... எம்.டி கிட்ட திட்டு வாங்குவாறோ? ஏதோ சர்ப்ரைஸ் இருக்குன்னு வேற சொன்னாரே...' என எண்ணியபடி சென்றாள்.

மீட்டிங் ஹாலில் அனைவரும் அமர்ந்து தமக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருக்க, புயல் வேகத்தில் கோட் சூட் அணிந்து ஸ்டைலாக அவ் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டு அனைவரின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்தன.

சாருமதி திறந்த வாய் மூடாமல் இருக்க, அவனைத் தொடர்ந்து வந்த ஆகாஷோ சாருமதியைப் பார்த்து நக்கலாக சிரித்தான்.

அனுபல்லவிக்கோ இன்னும் என்ன நடக்கிறது என்று புரியாத நிலை.

அர்ச்சனா ஒரு படி மேலே சென்று கனவுலகில் மிதந்து கொண்டிருந்தாள்.

அவள் அருகில் அம்ர்ந்து இருந்த கார்த்திக் தான் அர்ச்சனாவைப் பார்ந்து மனம் வாடினான்.

கம்பனி எம்.டி என்பதற்கு பொருத்தமாக கருநீல நிற கோர்ட் சூட் அணிந்து டை கட்டி கம்பீரமாய் வந்திருந்த பிரணவ்வோ அனைவரையும் பார்த்து புன்னகைத்தவாறு, "ஹாய் காய்ஸ்..." என்றான்.

பிரணவ், "என்னைப் பத்தின இன்ட்ரூ உங்களுக்கு அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்... இருந்தாலும் சொல்றேன்... என் ஃபுல் நேம் பிரணவ் ராஜ்... எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ் சீ.இ.ஓ. மூர்த்தி ராஜோட ஒரே பையன்... இந்த கம்பனி எம்.டி நான் தான்..." என்றவன் ஆகாஷிடம் கண் காட்ட, அதனைப் புரிந்து கொண்டதாய் தலையசைத்த ஆகாஷ், "தன்னோட ஸ்டாப்ஸோட ஸ்டாஃப்ஸா வேலை பார்த்து அவங்க மனசுல என்ன இருக்குங்குறதை தெரிஞ்சிக்க தான் பாஸ் நம்ம கம்பனில ப்ராஜெக்ட் மேனேஜர் போல ஜாய்ன் பண்ணார்... பாஸ் கைட் பண்ணின டீம் மட்டும் இல்லாம எல்லா டீமுமே ரொம்ப நல்லா வர்க் பண்ணீங்க... சோ இன்னைல இருந்து பாஸ் எம்.எல். கம்பனீஸ் பெங்களூர் ப்ரான்ச்சை பொறுப்பு எடுத்து நடத்துவார்..." என்கவும் அனைவரும் கை தட்டினர்.

இன்னும் சில முக்கியமான விடயங்களைப் பேசி விட்டு மீட்டிங் முடிய, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாருமதியின் பின்னே பெளியேறிய ஆகாஷ், "என்ன குட்டச்சி? உங்க எம்.டி ஹேன்ட்சமா இருக்காரா?" எனக் கேலி செய்ய, அவனைப் பார்த்து உதட்டை சுழித்த சாருமதி, "உன்ன விட ஹேன்ட்சமா தான் இருக்கார் நெட்டக்கொக்கு..." என்று விட்டு செல்லவும் குறும்பாகப் புன்னகைத்தான் ஆகாஷ்.

அனைவரும் சென்ற பின்னும் அனுபல்லவி மட்டும் அங்கேயே நிற்க, அனைவரும் சென்று விட்டதை உறுதிப்படுத்தி விட்டு அனுபல்லவியை நெருங்கிய பிரணவ் அவளின் தோள்களில் தன் கரத்தைப் போட்டுக்கொண்டு, "எப்படி இருக்கு என் சர்ப்ரைஸ்?" எனக் கேட்டான் புன்னகையுடன்.

அவனைத் தயக்கமாக ஏறிட்ட அனுபல்லவி, "நீங்க தான் இந்த கம்பனி எம்.டி னு ஏன் முன்னாடியே சொல்லல?" எனக் கேட்க, "ஏன் பல்லவி? நான் எம்.டி யா இருக்குறது உனக்குப் பிடிக்கலயா?" என வருத்தமாகக் கேட்ட பிரணவ், "மனசுக்கு ஒரு சேன்ஜ் தேவைப்பட்டது... என் கடந்த காலத்தை விட்டு எவ்வளவு தூரம் விலகி வர முடியுமோ அவ்வளவு தூரம் விலகி வர நினைச்சேன்... அதனால தான்..." என்றான்.

வருவிக்கப்பட்ட புன்னகையுடன், "ஓஹ்... இல்ல எனக்கு ஹேப்பி தான்... திடீர்னு சொல்லவும் கொஞ்சம் ஷாக்... அவ்வளவு தான்..." என்ற அனுபல்லவி, "நா... நான் போகட்டுமா?" எனக் கேட்டாள்.

அவளின் நடவடிக்கைகளை குழப்பமாகப் பார்த்த பிரணவ், "என்னாச்சு பல்லவி? ஆர் யூ ஓக்கே? உடம்புக்கு ஏதாவது முடியலயா? நீ வேணா லீவ் எடுத்துக்குறியா?" என அனுபல்லவியின் முகத்தை தன் கரங்களில் ஏந்தி வினவினான்.

பிரணவ்வின் அக்கறையில் உள்ளம் குளிர்ந்த அனுபல்லவி புன்னகையுடன், "நான் நல்லா இருக்கேன்... எனக்கு ஒன்னும் இல்ல... டென்ஷன் ஆகாதீங்க... யாராவது வந்தா தப்பா நினைப்பாங்க... அதான்..." என்க, "அதுல என்ன இருக்கு?" எனக் கேட்டான் பிரணவ் புரியாமல்.

ஒரு நொடி அமைதியாக இருந்த அனுபல்லவி, "பிரணவ்... சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம்... நாம காதலிக்கிற விஷயம் இப்பவே யாருக்கும் தெரிய வேணாம்... ப்ளீஸ்... எனக்காக இதை மட்டும் பண்ணுவீங்களா?" எனக் கேட்டாள் கண்களை சுருக்கி.

அவளின் முகத்தை ஆழ்ந்து நோக்கிய பிரணவ் உடனே புன்னகையுடன், "நீ கேட்டு நான் மறுப்பேனா பல்லவி? யாருக்கும் எதுவும் தெரியாது... பயப்பட வேணாம்... நீ போய் வேலையை கவனி... எனக்கும் கொஞ்சம் வர்க் இருக்கு..." என்கவும் முகம் மலர்ந்த அனுபல்லவி அங்கிருந்து சென்றாள்.

அனுபல்லவி சென்றதும் லேசாக தலை வலிப்பது போல் உணர்ந்த பிரணவ் அதனைப் பெரிதாகக் கண்டு கொள்ளாது தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றான்.

அனுபல்லவி புன்னகையுடன் தன் இருக்கையில் வந்து அமர, "அனு... என்னாச்சு? ஏன் சிரிச்சிட்டே வர? நேத்துல இருந்து நீ சரி இல்லயே... ஒரு மார்க்கமாவே சுத்திட்டு இருக்க..." எனக் கேட்டாள் சாருமதி சந்தேகமாக.

"ஒன்னும் இல்லயே... ஒன்னும் இல்லயே..." என சிரித்தே சமாளித்த அனுபல்லவி, "இந்த சுதந்திர இந்தியாவுல ஒரு பொண்ணு சும்மா சிரிக்க கூட காரணம் வேணுமா?" என வராத கண்ணீரைத் துடைக்கவும் அவளை முறைத்த சாருமதி, "போதும் மேடம்... உங்க ட்ராமாவை நிறுத்துங்க... எப்படி இருந்தாலும் கடைசில என் கிட்ட தானே வந்தாகணும்... அப்போ பார்த்துக்கலாம்..." என்றாள்.

பின் சாருமதியின் கவனம் வேலையில் பதிய, நிம்மதிப் பெருமூச்சு விட்ட அனுபல்லவி, 'எப்படியோ இன்னைக்கு சமாளிச்சிட்ட அனு... டெய்லி இப்படி மறைக்க முடியுமா? பேசாம நானும் பிரணவ்வும் லவ் பண்றதை அவ கிட்ட சொல்லிடலாமா?' எனத் தன்னையே கேட்டுக்கொள்ளவும் அவளின் மனசாட்சி விழித்துக் கொண்டது.

மனசாட்சி, 'ஆமா... பிரணவ் எப்போ உன்ன லவ் பண்ணுறதா சொன்னான்?' எனக் கேட்கவும், 'ஆமால்ல... நான் மட்டும் தானே என் லவ்வை அவர் கிட்ட சொன்னேன்... அவர் ஒரு தடவை கூட ஐ லவ் யூ சொல்லலயே...' என யோசித்தவள், 'ச்சே ச்சே... பிரணவ் ஐ லவ் யூ சொல்லலன்னா என்ன? அவர் என்னைக் காதலிக்கிறது எனக்கு தெரியாதா? அவரோட பார்வையே என் மேல உள்ள காதலை சொல்லுது...' எனத் தன் மனசாட்சியை அடக்கினாள்.

அனுபல்லவி தன் போக்கில் மனதில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க, அவள் தலையில் குட்டிய சாருமதி, "எந்த கோட்டையை பிடிக்கலாம்னு இப்போ யோசிச்சிட்டு இருக்க?" எனக் கேட்டாள் கேலியாக.

வலியில் தன் தலையைத் தடவியபடி சாருமதியை முறைத்த அனுபல்லவி அவளுக்கு பதிலளிக்காது கணினித் திரையில் பார்வையைப் பதித்தாள்.

************************************

"என்ன சொல்ற அர்ச்சனா? அந்த பிரணவ் தான் உங்க கம்பனி எம்.டி யா?" எனப் பிரதாப் அதிர்ச்சியாகக் கேட்கவும் மறுபக்கம் அழைப்பில் இருந்த அர்ச்சனா, "ஆமா பிரதாப்... நான் தான் சொன்னேனே அவனைப் பார்த்தா சாதாரண ஆள் போல தெரியலன்னு... எப்படியோ நான் ஆசைப்பட்டபடியே வசதியான வாழ்க்கை வாழ முடியும்... அதுக்கு முதல்ல நீ அந்த அனுவை ஏதாவது பண்ணு... உன்னால முடியலன்னா சொல்லு... நான் என் வழில அவ கதையை முடிக்கிறேன்..." என்றாள் வன்மமாக.

பிரதாப், "அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதே அர்ச்சனா... அனுவுக்கு சீக்கிரம் நான் ஒரு வழி பண்றேன்... இனிமே அவ உன் வழில குறுக்கா இருக்க மாட்டா... நான் அதுக்கு இப்போவே ஏற்பாடு பண்றேன்..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அர்ச்சனாவோ பகல் கனவு காணத் தொடங்க, அவளையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், "அர்ச்சு... ஏன் நீ இவ்வளவு மாறிட்ட? ப்ளீஸ்... இப்படி எல்லாம் பண்ண வேணாமே..." எனக் கெஞ்ச, அவனைக் கோபமாக நோக்கிய அர்ச்சனா, "என்ன வேணாம்? நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ எனக்கு உரிமை இல்லயா?" எனக் கேட்டாள் கோபமாக.

கார்த்திக், "அது தப்பில்ல அர்ச்சு... பட் ஒரு பொண்ணு வாழ்க்கையை ஸ்பாய்ல் பண்ணிட்டு உனக்கு அப்படி ஒரு வாழ்க்கை தேவையா?" எனக் கேட்க, "பிரணவ்வைப் பத்தி எதுவும் சரியா தெரியாமலே அவனை அடைய ஆசைப்பட்டேன் நான்... இப்போ இவ்வளவு பெரிய சொத்துக்கு சொந்தக்காரன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் ஈஸியா விட்டுக் கொடுத்துடுவேனா? நான் நினைச்சதை நடத்தியே தீருவேன்... அதுக்கு யாரு குறுக்கா நின்னாலும் அவங்களை என்ன வேணாலும் பண்ணுவேன்.." என்றாள் அர்ச்சனா ஆவேசமாக.

அர்ச்சனாவின் முகத்தில் தெரிந்த வன்மத்தில் கார்த்திக்கிற்கே திக் என்றானது.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 17

"அப்பா... வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு? அந்த வக்கீல் நம்ம டீலுக்கு சம்மதிச்சாரா?" என பிரதாப் கேட்கவும் மறுபக்கம் அழைப்பில் இருந்த அவனின் தந்தை, "எங்கடா மகனே அந்த ஆளு சம்மதிக்கிறது? ஒரே நீதி, நேர்மை, விசுவாசம்னு கதை அளந்துட்டு இருக்கான்... மெய்ன் டாக்கிமன்ட் நம்ம கைக்கு வராம நம்மளாலயும் எதுவும் பண்ண முடியல..." என்றார் சலிப்பாக.

பிரதாப்,"நீங்க கவலைப்படாதீங்கப்பா... அந்த ஓடுகாலி கழுதையை என் வழிக்கு சீக்கிரமா கொண்டு வரேன்..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவன் உடனே அவன் தீட்டிய திட்டத்தை செயற்படுத்த ஆயத்தமானான்.

************************************

"ஏங்க... நம்ம இன்னைக்கு பெங்களூர் போகலாமா? எனக்கு பிரணவ்வை பார்க்கணும் போல இருக்குங்க..." என ஆஃபீஸ் கிளம்பிக் கொண்டிருந்த மூர்த்தியிடம் அவர் மனையாள் லக்ஷ்மி கேட்கவும் அவரைக் கேலிப் பார்வை பார்த்த மூர்த்தி, "என்ன லக்ஷ்மி? புதுசா பையன் மேல அக்கறை?" எனக் கேட்டார்.

லக்ஷ்மி, "எனக்கு எப்பவும் என் பையன் மேல அக்கறை இருக்குங்க... அது உங்களுக்கும் உங்க பையனுக்கும் தான் புரியல... அவன் தகுதி தராதரம் பார்த்து யார் கூடவும் பழக மாட்டேங்குறான்னு தான் எனக்கு கோவமே..." என்றார் முறைப்புடன்.

மூர்த்தி, "சரி அதை விடு லக்ஷ்மி... எதுக்கு இப்போ திடீர்னு அவனைப் பார்க்க போகணும்னு சொல்ற... முன்னாடி கூட அவன் தனியா தானே இருப்பான் அதிகமா..." என்க, "தெரியலங்க... ப்ளீஸ் நாம இப்பவே கிளம்பலாம்... காலைல இருந்து என் மனசுக்கு என்னவோ போல இருக்குங்க..." என்ற லக்ஷ்மி அடுத்த ஒரு மணி நேரத்தில் கணவனுடன் சேர்ந்து விமானத்தில் பெங்களூர் பறந்தார்.

************************************

அன்று அனைவருக்கும் முன்னதாகவே ஆஃபீஸ் வந்து விட்டாள் அனுபல்லவி.

வழமையாகவே பிரணவ் அனைவருக்கும் முன்னதாக ஆஃபீஸ் வந்து விடுவான். அதனால் இன்று சாருமதியிடம் அனுபல்லவி ஏதேதோ கூறி சமாளித்து விட்டு பிரணவ்வை சந்திக்க வந்து விட்டாள்.

தன் மேசையில் இருந்த கோப்புகளை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வந்தவன் கதவு தட்டும் சத்தத்தில் ஆகாஷ் தான் வந்து விட்டதாக எண்ணி, "உள்ள வாங்க ஆகாஷ்... நான் சொன்ன வர்க்ஸ் எல்லாம் முடிஞ்சிடுச்சா?" எனக் கேட்டான் தலையை நிமிர்த்தாமலே.

பல நிமிடங்கள் கழித்தும் பதில் வராததால் தலையை நிமிர்த்திப் பார்த்த பிரணவ் தன் முன் மௌனமே உருவாய் தலை குனிந்து நின்றிருந்த அனுபல்லவியைக் கண்டு அதிர்ந்தான்.

"பல்லவி... என்னாச்சு? ஏன் பேசாம நின்னுட்டு இருக்க?" எனக் கேட்டவாறு எழுந்து அவளிடம் சென்று அவளின் தாடையைப் பற்றி தன் முகம் பார்க்க வைத்தான் பிரணவ்.

அனுபல்லவியின் கலங்கியிருந்த கண்களைக் கண்டு பதட்டம் அடைந்த பிரணவ், "ஏன் பல்லவி கண் கலங்கி இருக்கு? அந்த பிரதாப் திரும்ப உன்ன தொந்தரவு பண்ணானா? அன்னைக்கே அவனுக்கு நான் ஒரு வழி பண்ணி இருப்பேன்... நீ தான் வேணாம்னு சொன்ன..." என ஆத்திரப்படவும் சட்டென அவனை அணைத்துக் கொண்டாள் அனுபல்லவி.

புன்முறுவலுடன் தன்னவளை ஒரு கரத்தால் அணைத்துக்கொண்டு மறு கரத்தால் அவளின் தலையை வருடி விட்ட பிரணவ், "ஷ்ஷ்ஷ்... அழாதேடா... என்னாச்சு?" எனக் கேட்கவும் அவன் நெஞ்சில் இன்னும் அழுத்தமாக முகத்தைப் புதைத்த அனுபல்லவி, "நான் ஒரு விஷயம் சொன்னா நீங்க என்னை வெறுக்க மாட்டீங்களே..." எனக் கேட்டாள்.

பிரணவ், "நீ எனக்கு கிடைச்ச வரம்... உன்ன எப்படி நான் வெறுப்பேன்..." என்க, "என்னை விட்டு போயிட மாட்டீங்களே..." என அழுதவாறே பல்லவி கேட்கவும் அவளைத் தன்னை விட்டுப் பிரித்து அனுபல்லவியின் கன்னங்களைத் தாங்கி விழியோடு விழி நோக்கிய பிரணவ், "உன்னைப் பிரியும் ஒரு சூழ்நிலை வந்தா அது என் கடைசி மூச்சு நின்னு போற நேரமா இருக்கும்..." என்கவும் பட்டென அவன் வாயில் அடித்தாள் அனுபல்லவி.

"ஹேய்... எதுக்கு டி அடிக்கிற? நீ கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்..." என்றான் பிரணவ் மென்னகையுடன்.

அனுபல்லவி, "அதுக்காக அப்படி சொல்லுவீங்களா நீங்க?" என முறைக்க, அவளின் கோபத்தை ரசித்த பிரணவ், "சரி சரி சாரி டா... சொல்லு என்ன விஷயம்? என்னைப் பார்க்க தான் இவ்வளவு ஏர்லியா வந்தியா?" எனக் கேட்டான்.

"ஹ்ம்ம்... உங்க கிட்ட... அது... என்னைப் பத்தி முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்..." என பிரணவ்விடமிருந்து விலகி அனுபல்லவி தயங்கியவாறு கூறவும் பிரணவ் அவளை இழுத்து தன் கை வளைவில் வைத்துக்கொண்டே, "என்ன சொல்றதா இருந்தாலும் இப்படியே இருந்துட்டு சொல்லு... நமக்குள்ள எந்த டிஸ்டான்ஸும் இருக்க கூடாது..." என்றவன் அனுபல்லவியின் கழுத்தில் முகம் புதைத்தான்.

பிரணவ்வின் நெருக்கம் அனுபல்லவியை ஏதோ செய்ய, நெளிந்து கொண்டே, "நான்..." என ஏதோ கூற வர, அதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பட்டென பிரணவ்வை விட்டு விலகினாள்.

பிரணவ், "கம் இன்..." என அனுமதி அளிக்கவும் உள்ளே வந்த ஆகாஷ் அனுபல்லவியை ஒரு பார்வை பார்த்து விட்டு, "பாஸ்...மேடமும் சாரும் வந்து இருக்காங்க..." என்கவும், "வாட்?" என அதிர்ந்தான் பிரணவ்.

அனுபல்லவிக்கு தான் கூற வந்ததை பிரணவ்விடம் கூறிய முடியாமல் போனது வருத்தமாக இருந்தாலும் தன் அத்தை, மாமாவைக் காணும் ஆவல் ஏற்பட்டது.

பிரணவ், "அவங்க எதுக்கு இங்க வந்தாங்க? என் கிட்ட கூட சொல்லாம..." எனக் கோபப்படும் போதே அவ் அறைக்குள் நுழைந்த லக்ஷ்மி, "எங்க பையனை பார்க்க வர எங்களுக்கு உரிமை இல்லயா? எவ்வளவு ஆசையா வந்தோம் உன்ன பார்க்க... நீ என்னன்னா நாங்க ஏன் வந்தோம்னு கேட்குற?" எனக் கேட்டார் வருத்தம் தோய்ந்த குரலில்.

அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த பிரணவ், "இது என்ன புதுக் கதையா இருக்கு? நான் எப்படி இருக்கேன் என்ன பண்ணுறேன்னு சின்ன வயசுல இருந்தே என்னைக் கண்டுக்காம பிஸ்னஸ் பிஸ்னஸ்னு ஓடினவங்களுக்கு இப்போ மட்டும் என்ன பாசம்?" எனக் கேட்கவும், "பிரணவ்..." எனச் சத்தமாக அழைத்தார் மூர்த்தி.

மூர்த்தி, "இப்படி தான் பெத்தவங்க கூட பேசுவியா? அதுவும் இல்லாம நீ இந்தக் கம்பனி எம்.டி மட்டும் தான்... எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ் என்னோடது. எங்களுக்கு இங்க வர உரிமை இல்லயா?" என்கவும் பிரணவ்வின் முகம் இறுக, அனுபல்லவிக்கு தன்னவனைக் காணக் கவலையாக இருந்தது.

மூர்த்தியின் பேச்சில், "வாவ்... ரொம்ப நல்லா இருக்கு டேட்... உங்க கம்பனி... ஹ்ம்ம்..." எனக் கை தட்ட, "பிரணவ்... அப்பா அந்த அர்த்தத்துல சொல்ல வரலப்பா... இந்த மொத்த சொத்துக்கும் நீ தான் வாரிசு..." என்றார் லக்ஷ்மி.

இன்னும் ஏதோ பேச வந்த லக்ஷ்மி அங்கு நின்ற அனுபல்லவியை ஒரு பார்வை பார்க்க, "சார்... நான்... நான் அப்புறம் வரேன்..." எனப் பிரணவ்விடம் கூறிவிட்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறினாள்.

பிரணவ் கோபமாக தன் இருக்கையில் அமர்ந்தவன், "ஆகாஷ்... என்ன விஷயமா இங்க வந்து இருக்காங்கன்னு கேளுங்க..." என்க, பிரணவ் தம்மை யாரோ போல் நடத்துவது மூர்த்தியையும் லக்ஷ்மியையும் குத்திக் கிழித்தது.

லக்ஷ்மி, "பிரணவ் கண்ணா... அப்பாவும் அம்மாவும் உனக்காக தானே டா ஓடியோடி சம்பாதிக்கிறோம்..." என பிரணவ்வின் தலையை வருடவும், "நான் கேட்டேனா?" என ஆவேசமாகக் கேட்டான் பிரணவ்.

பிரணவ்வின் கோபக் குரல் மூடி இருந்த அறையைத் தாண்டி வெளியே கேட்க, அப்போது தான் ஆஃபீஸ் வந்தவர்கள் அனைவரும் என்னவோ ஏதோ என அவ் அறைக்கு வெளியே கூடினர்.

அனுபல்லவியும் சாருமதியுடன் அங்கு பதட்டமாக நின்றிருந்தாள். பிரணவ்வை இது வரை இவ்வளவு ஆத்திரப்பட்டு காணாதவளுக்கு அவனின் இந்தக் கோபம் அதிர்ச்சியாக இருந்தது.

"பாஸ்..." என உடனே ஆகாஷ் அவனை அமைதிப்படுத்த முயல, "நான் கேட்டேனா உங்க பணம் எனக்கு வேணும்னு? சொல்லுங்க... நான் கேட்டேனா எனக்கு பணம் தான் முக்கியம்னு... சின்ன வயசுல இருந்தே நான் உங்க கிட்ட கேட்டது எனக்கான பாசத்தை... அதைத் தந்தீங்களா ரெண்டு பேரும்?" எனக் கேட்டான் பிரணவ் கோபமாக.

அவனின் ஒவ்வொரு கேள்வியும் மூர்த்தியையும் லக்ஷ்மியையும் சாட்டையால் அடிப்பது போல் இருந்தது.

பிரணவ், "நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எனக்கு தேவையான எல்லாம் பண்ணினது நீங்க சம்பளம் கொடுத்து வெச்சிருந்த வேலைக்காரங்க தான்... எனக்கு சின்னதா காய்ச்சல் வந்தா கூட உங்க மடில படுக்க ஆசைப்பட்டு எத்தனை தடவை உங்களைத் தேடி இருக்கேன்னு தெரியுமாம்மா?" எனக் கேட்டான் லக்ஷ்மியிடம்.

மூர்த்தி, "பிரணவ்..." என அவனை நெருங்க, "இருங்க... நான் இன்னைக்கு பேசியே ஆகணும்... எவ்வளவு நாள் தான் எல்லாத்தையும் மனசுக்குள்ளே வெச்சி நான் அவஸ்தைப்படுறது? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அப்பா அம்மா கூட ஸ்கூல் வருவாங்க... நான் மட்டும் டெய்லி ட்ரைவர் கூட போவேன்... பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்குக்கு கூட வர மாட்டீங்க... எல்லாம் கால்ல பேசி முடிச்சிடுவீங்க... அப்பா அம்மா இருந்தும் அநாதையா இருக்குறது எவ்வளவு கொடுமை தெரியுமா?" என்றவனின் கண்கள் கலங்கின.

மூர்த்திக்கும் லக்ஷ்மிக்கும் அப்போது தான் தம் தவறு புரிந்தது.

பிரணவ்வின் நலனுக்காக என எண்ணி செய்தவை அனைத்தும் தம் மகனுக்கு இவ்வளவு அநீதி இழைத்துள்ளதா எனப் புரிந்து குற்றவுணர்ச்சியில் நின்றனர்.

சரியாக ஆகாஷின் கைப்பேசி ஒலி எழுப்ப, ஒரு ஓரமாகச் சென்று அழைப்பை ஏற்றவன் மறுபக்கம் கூறப்பட்ட செய்தியில் அதிர்ந்தான்.

ஆகாஷ், "பாஸ்..." எனப் பிரணவ்விடம் வந்தவன் அறை சுவற்றில் மாட்டி இருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க, அதில் காட்டிய செய்தியில் அனைவரும் அதிர்ந்தனர்.

அறைக்கு வெளியே நின்றிருந்த ஊழியர்கள் கூட அச் செய்தியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைவருக்குமே அதில் கூறப்பட்ட செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

அனுபல்லவிக்கு தன்னவனின் மனநிலையை எண்ணி வருத்தமாக இருந்தது. இப்போதே உள்ளே நுழைந்து அவனை அணைத்து ஆறுதல் அளிக்க அவளின் மனம் உந்தியது.

"பிரபல தொழிலதிபர் மற்றும் எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ் ஸ்தாபகர் மூர்த்தி ராஜின் மகனான இளம் தொழிலதிபர் பிரணவ் ராஜ் அவரின் சொந்த மகன் இல்லை என சற்று முன்னர் வெளிவந்த செய்தியில் மக்கள் மத்தியில் பரபரப்பு."

"தொழிலதிபர் மூர்த்தி ராஜின் மனைவியின் சகோதரரான எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸின் பங்குதாரரான ராமலிங்கத்தின் பேட்டி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது."

"இளம் தொழிலதிபர் பிரணவ்விற்கு ஆண்மைக் குறைபாடு."

"ஆண்மையற்ற ஒருவர் நிறுவனத்தைப் பொறுப்பெடுத்து நடத்துவதா? எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ் ஊழியர்கள் எதிர்ப்பு"

"ஆம்பளையே இல்லாதவன்லாம் எப்படி கம்பனி நடத்துவான்?"

"ஒரு அநாதைக்கு இவ்வளவு சொத்தா? கொடுத்து வெச்சவன் தான்..."

இவை அனைத்தும் சில மணி நேரத்துக்குள் பத்திரிகை, தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்களில் வந்த செய்திகள்.

தொலைக்காட்சியில் கூறப்பட்ட செய்தியைக் கேட்டதும் பிரணவ்விற்கு அன்று பார்ட்டியின் போது ராமலிங்கம் கூறியவை மாத்திரம் தான் செவிகளில் ஒலித்தன.

லக்ஷ்மி, "பிரணவ் கண்ணா... அவனுங்க ஏதோ பொய் சொல்றாங்க... நீ அதெல்லாம் கண்டுக்காதேப்பா... நீ எங்க பையன்டா..." என அவனை நெருங்க, "கிட்ட வராதீங்க..." என்றான் பிரணவ் அழுத்தமாக.

அவனின் இறுகி இருந்த தோற்றம் ஆகாஷிற்கே வருத்தமாக இருந்தது.

மூர்த்தி, "பிரணவ்... என்ன நடந்ததுன்னு அப்பா சொல்றேன் டா..." என்கவும் அவரின் முகத்தை ஏளனமாக நோக்கிய பிரணவ், "அப்பாவா? யாருக்கு? அதான் உங்க மச்சினர், அம்மாவோட தம்பி, என்னோட பாசமான தாய் மாமன் மிஸ்டர் ராமலிங்கம் எல்லா நியூஸ்லயும் பேட்டி கொடுத்து இருக்காரே... இன்னுமா மறைக்க நினைக்கிறீங்க?" எனக் கேட்டவனின் குரலில் இனம் காண முடியாத ஒரு உணர்வு.

லக்ஷ்மி, "பெத்தா மட்டும் தான் உனக்கு நாங்க அப்பா அம்மாவா? உன்ன வளர்த்த எங்களுக்கு அந்தத் தகுதி இல்லயா?" எனக் கேட்டார் கண்ணீருடன்.

இவ்வளவு நேரமும் தான் கேட்டவை அனைத்தும் பொய்யாக இருக்க வேண்டும் என அவனின் உள் மனம் பிரார்த்திக்க, லக்ஷ்மி கூறியதைக் கேட்டதும் மொத்தமாகவே உடைந்து விட்டான் பிரணவ்.

அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தவனின் அருகில், "கண்ணா..." என அழைத்தவாறு மூர்த்தியும் லக்ஷ்மியும் நெருங்க, "இதனால தான் இவ்வளவு வருஷமா என்னை உங்க கிட்ட இருந்து தள்ளியே வெச்சி இருந்தீங்களாம்மா? அப்படியாப்பா?" என உடைந்த குரலில் கேட்க, "இல்லப்பா... நீ எங்க புள்ள..." எனக் கண்ணீர் விட்டார் லக்ஷ்மி.

கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்த பிரணவ், "வளர்த்தா அப்பா அம்மா இல்லயான்னு கேட்டீங்க... நீங்க எங்கம்மா என்னை வளர்த்தீங்க? நானா தானே வளர்ந்தேன்..." என்கவும், "பிரணவ்..." என்றார் மூர்த்தி கண்ணீருடன்.

பிரணவ் திடீரென தலையை அழுத்தமாகப் பற்றிக்கொள்ள, "பிரணவ் கண்ணா... என்னப்பா ஆச்சு?" என லக்ஷ்மி பதற, அவர் முன் கை நீட்டி தடுத்த பிரணவ், "இதுக்கு மேல எதையும் தாங்குற சக்தி இல்ல... இப்பவாவது உண்மைய சொல்லுங்கம்மா..." என்றான் கெஞ்சலுடன்.

"அதை சொல்லத் தான் மருமகனே நான் வந்து இருக்கேன்..." என்றவாறு உள்ளே நுழைந்தார் ராமலிங்கம்.

அவரைக் கண்டு பிரணவ் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாதிருக்க, ராமலிங்கத்தின் சட்டையௌ ஆவேசமாகப் பற்றிய மூர்த்தி, "ஏன் டா இப்படி பண்ண? நாங்க உனக்கு என்னடா பண்ணோம்?" எனக் கேட்டார்.

தன் தம்பியின் கன்னத்தில் ஓங்கி அறைந்த லக்ஷ்மி, "ஏன் லிங்கா இப்படி பண்ண? நான் உன்ன தம்பியாவா டா நடத்தின? உன்னையும் என் பையன் போல தானே டா நடத்தினேன்... பாவி... பாவி..." எனக் கதறினார்.

அவரின் கரத்தைத் தட்டி விட்ட ராமலிங்கம், "ஆமா... யார் இல்லன்னு சொன்னாங்க? நீயும் மாமாவும் என்னை உங்க பையனா தான் பார்த்துக்கிட்டீங்க... ஆனா இந்த அநாதை வந்ததுக்கு அப்புறம் என்ன ஆச்சு?" என்கவும் மூர்த்தியும் லக்ஷ்மியும் அதிர்ந்தனர்.

பிரணவ்வோ ராமலிங்கத்தையே கேள்வியாக நோக்கினான்.

வெளியே நின்றிருந்த ஊழியர்களும் செய்தியில் காட்டியதைப் பற்றியே தமக்குள் கிசுகிசுத்துக்கொள்ள, "என்ன டி அனு நடக்குது இங்க? ஏதேதோ சொல்றாங்க..." எனக் கேட்டாள் சாருமதி குழப்பமாக.

அனுபல்லவியோ தோழிக்கு பதிலளிக்காது பதட்டமாக இருந்தாள்.

"என்ன இங்க கூட்டமா இருக்கு? உங்களுக்கு வேலை எதுவும் இல்லயா? போங்க எல்லாரும் இங்க இருந்து..." என மேனேஜர் மோகன் சத்தமிடவும் கூட்டம் கலைந்தது.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 18

ஏழ்மையே உருவான ஒரு வரிய குடும்பத்தில் பிறந்தவர் தான் லக்ஷ்மி. அவரின் ஒரே தம்பி ராமலிங்கம். இருவருக்கும் இடையில் பத்து வருட வயது வித்தியாசம். தன் ஐந்து வயதிலேயே ஒரு விபத்தில் பெற்றோரை இழந்த ராமலிங்கத்திற்கு லக்ஷ்மி தான் தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக, சகோதரிக்கு சகோதரியாக இருந்து வந்தார்.

வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தவர்களின் வாழ்வில் வசந்தம் வீசுவதற்காகவே நுழைந்தார் மூர்த்தி ராஜ்.

நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மூர்த்தி ராஜிற்கு லக்ஷ்மியின் மேல் கண்டதும் காதல் வர, அதனை தாமதிக்காமல் அவரிடம் வெளிப்படுத்தினார்.

உறவினர்கள் என்று யாரும் அப்போது அவர்களுக்கு இருக்கவில்லை.

முதல் முறை ஒரு ஆணவன் வந்து காதலைக் கூறவும் லக்ஷ்மி அதனை ஏற்கத் தயங்க, ராமலிங்கமோ அவரைத் திருமணம் செய்தால் நாம் வறுமை நீங்கி வசதியாக வாழலாம் எனத் தமக்கையை ஊக்கிவித்தார்.

லக்ஷ்மியின் மனதிலும் அந்த எண்ணம் தோன்றியதால் மூர்த்தியின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

மகனின் சந்தோஷமே முக்கியம் என மூர்த்தியின் பெற்றோர் உடனே இருவரின் திருமணத்தையும் நடத்தி வைத்தனர்.

சிறு வயதிலிருந்தே வறுமையில் வளர்ந்தவர்களுக்கு திடீரென இவ்வளவு வசதியான வாழ்வைப் பார்த்ததும் பேராசை எழுந்தது.

லக்ஷ்மிக்கு தன் கணவனின் சொத்து, அதனால் தான் வேண்டியவாறு இதனைப் பயன்படுத்தலாம். தானும் தம்பியும் பெற்றோரை இழந்து வறுமையில் கஷ்டப்பட்ட போது ஒரு சிறிய உதவிக்கு கூட வராதவர்கள் முன் தான் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. தம் தகுதிக்கு குறைவானவர்களுடன் பேசுவதே தமக்கு இழுக்கு என்று எண்ணினார்.

அதனால் மூர்த்தியிடமே தொழிலைக் கற்று அவருக்கு தொழிலில் உதவியாக இருந்தார்.

ஆனால் ராமலிங்கத்திற்கோ தன் மாமனின் பணத்தை செலவலிப்பதில் மாத்திரமே நேரம் சென்றது.

மூர்த்தியும் ராமலிங்கத்தை மைத்துனன் என்ற நிலையைத் தாண்டி மகனாகவே நடத்தினார். அதுவே அவருக்கு இன்னும் வசதியாகிப் போயிற்று.

மூர்த்தி மற்றும் லக்ஷ்மியின் மொத்த சொத்தையும் மொத்த பாசத்தையும் ராமலிங்கம் ஒருவரே அனுபவித்து வந்தார்.

வருடங்கள் கடந்தும் மனமொத்த தம்பதியர்களாய் வாழ்ந்து வந்த மூர்த்திக்கும் லக்ஷ்மிக்கும் குழந்தைப் பாக்கியம் மற்றும் கிடைக்கவே இல்லை.

சிகிச்சைகள், வேண்டுதல்கள் எதுவுமே பலனளிக்காது போகவும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர்.

உடனே காலம் தாழ்த்தாது பிறந்த சில நாட்களே ஆன பிரணவ்வைத் தத்தெடுத்து அன்பைப் பொழிந்து வளர்க்கத் தொடங்க, பிரணவ் மெது மெதுவாக வளரத் தொடங்கவும் இருவரின் கவனமும் மீண்டும் தொழிலிற்கு சென்றது.

குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக கேர் டேக்கர் ஒருவரை நியமித்து பிரணவ்வின் மொத்தப் பொறுப்பையும் அவரிடமே வழங்கினார்.

தம் மகனிற்கு எல்லாமே சிறந்ததாக மாத்திரமே கிடைக்க வேண்டும் என்று விரும்பிய லக்ஷ்மி, பெரிய பெரிய பள்ளிக்கூடம், கல்லூரி என்பவற்றில் பிரணவ்வை சேர்த்து தேவைக்கு அதிகமாகவே பணத்தை வாரி வழங்கியவர் அவனுக்கு வேண்டிய அன்பை மட்டும் கொடுக்கத் தவறினார்.

ஆரம்பத்தில் ராமலிங்கமும் தனக்கு தாய் தந்தையாக இருக்கும் அக்காவினதும் மாமாவினதும் குழந்தை மீது மிகுந்த பாசத்தை வைத்திருந்தார்.

அதனால் தான் பிரணவ் கூட தன் பெற்றோரை விட அவரிடத்தில் நெருக்கமாக இருந்தார்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, பிரணவ் கல்லூரிப் படிப்பை முடித்ததும் தன் பிஸ்னஸ் மொத்தத்திற்கும் பிரணவ்வை வாரிசாக மூர்த்தி அறிவிக்கவும் மாமனுக்கு பிறகு தன்னைத் தான் தொழில் வாரிசாக அறிவிப்பார் என எண்ணிக் கொண்டிருந்த ராமலிங்கத்திற்கு அது பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

அந்த ஏமாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக பிரணவ்வின் மீது‌ வெறுப்பாக மாறத் தொடங்கியது.

ராமலிங்கம் பிரணவ் மீது இவ்வளவு வெறுப்பை வளர்க்கும் அளவுக்கு மூர்த்தி ஒன்றும் அவருக்கு அநீதி இழைத்து விடவில்லை.

எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸின் மெய்ன் ப்ரான்ச்சில் ராமலிங்கத்திற்கு ஒரு உயர்ந்த பதவியை வழங்கி இருந்தார். தான் எது செய்வதாக இருந்தாலும் ராமலிங்கத்திடமும் ஒரு வார்த்தை கூறி விட்டே செய்வார்.

அப்படி இருந்தும் பிரணவ் மேல் வெறுப்பை வளர்த்த ராமலிங்கம் அவனை தன் வழியில் இருந்து அழிக்க சரியான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தார்.

சரியாக பிரணவ்வும் பெங்களூர் செல்ல, அங்கு வைத்து யாருக்கும் சந்தேகம் வராதவாறு அவன் கதையை முடிக்க ஒரு லாரியை ஏற்பாடு செய்தார்.

அதிலிருந்தும் பிரணவ் உயிர்ச்சேதம் இன்றி தப்பித்து விட, பார்ட்டியில் வைத்து தன்னை அவமானப்படுத்தியதற்கும் சேர்த்து பழி வாங்குவதற்காகவே இன்று பத்திரிகைகளில் அவனின் உண்மையை எல்லாம் கூறி பேட்டி கொடுத்தது.

ராமலிங்கம் கூறியவற்றைக் கேட்டு லக்ஷ்மி அதிர்ச்சியில் உறைந்திருக்க, மூர்த்தியோ இத்தனை காலமும் பாம்புக்கா பால் ஊட்டி வளர்த்தேன் என மனம் நொந்தார்.

தம்பியின் செயலில் மனம் உடைந்த லக்ஷ்மி ஆவேசமாக அவன் சட்டையைப் பற்றி, "உனக்கு இந்த சொத்து தான் வேணும்னா அதை எங்க கிட்ட கேட்டு இருக்க வேண்டியது தானே டா... நீ ஒரு வார்த்தை கேட்டா நாங்க மாட்டோம்னு சொல்லி இருப்போமா டா? ஆனா நீ உனக்காக நானும் உன் மாமாவும் பண்ணின எல்லாத்தையும் மறந்துட்டு எங்க பையனையே கொல்ல பார்த்து இருக்கேல்ல... ச்சீ... உன்ன என் தம்பின்னு சொல்லவும் அசிங்கமா இருக்குடா..." எனக் காரி உமிழ்ந்தார்.

மூர்த்தி, "உனக்கு நான் எதுல குறை வெச்சேன் லிங்கா? அப்படி இருந்தும் எங்க பையனை எங்க கிட்ட இருந்து மொத்தமா பிரிக்க முயற்சி பண்ணி இருக்க நீ..." என்றார் வருத்தமாக.

பிரணவ்வோ ராமலிங்கம் கூறியவற்றை எல்லாம் கேட்டு முடித்த பின்னும் எதுவும் கூறாமல் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

அவன் அருகில் சென்ற லக்ஷ்மி, "பிரணவ் கண்ணா... இந்த வயித்துல உன்ன பத்து மாசம் சுமந்து பெத்துக்குற பாக்கியத்தை பெறலன்னாலும் நீ தான் கண்ணா எங்க பையன்...எங்க ரெண்டு பேருக்கும் நீ தான்பா எல்லாமே... நீ நல்லா இருக்கணும்னு உனக்காக பணம் சேர்த்து வைக்க நெனச்சோமே தவிர நீ இப்படி பாசத்துக்காக ஏங்குவன்னு நினைக்கலப்பா... அம்மாவ நம்பு பிரணவ்... உன் மேல அம்மா உயிரையே வெச்சிருக்கேன்... சத்தியமா உன்ன நாங்க அநாதையா பார்க்கலப்பா... அம்மாவை நம்பு பிரணவ்..." எனக் கண்ணீர் வடித்தவர் இரத்த அழுத்தம் அதிகரித்து அப்படியே மயங்கிச் சரிய, "லக்ஷ்மி..." "அக்கா..." "மேடம்..." என மூர்த்தி, ராமலிங்கம், ஆகாஷ் மூவருமே அவரிடம் ஓடினர்.

ராமலிங்கத்தின் முன் கை நீட்டி தடுத்த மூர்த்தி, "உன்ன எங்க குடும்பத்துல ஒருத்தனா பார்த்துக்கிட்டதுக்கு நீ எங்களுக்கு பண்ணினது வரை போதும்... தயவு செஞ்சி இனிமே எங்க மூஞ்சில கூட முழிக்காதே... இங்க இருந்து போயிடு... இதுக்கு மேல ஒரு நிமிஷம் நீ இங்க நின்னாலும் நான் போலீஸை கூப்பிட்டு உன்ன உள்ள தள்ளுவேன்..." என எச்சரிக்கவும் அனைவரையும் முறைத்து விட்டு அங்கிருந்து சென்றார் ராமலிங்கம்.

இத்தனை களேபரம் நடந்தும் முகத்தில் எந்த உணர்வும் காட்டாது வெறித்திருந்த பிரணவ் திடீரென எழுந்து நின்று, "ஆகாஷ்... டோன்ட் ஃபாலோ மீ..." என்று விட்டு வேகமாக கிளம்பினான்.

************************************

காலையிலிருந்தே அனுபல்லவி பிரணவ்விற்கு பல முறை அழைத்தும் அவளின் எந்த அழைப்புமே ஏற்கப்படவில்லை.

அனுபல்லவிக்கு அவனை நினைத்து உள்ளம் அடித்துக்கொண்டது.

"அவர் ஏன் கால் அட்டன்ட் பண்ண மாட்டேங்குறார்? காலைல ஆஃபீஸ்ல ரொம்ப உடஞ்சி போய் இருந்தாரே... அவரைப் அப்படி பார்க்கவே முடியல..." எனக் கலங்கிய அனுபல்லவி மீண்டும் பிரணவ்விற்கு அழைக்க முயற்சிக்க, இம்முறையும் அழைப்பு ஏற்கப்படவில்லை.

வேறு வழியின்றி ஆகாஷிற்கு அழைத்தாள் அனுபல்லவி.

மறுபக்கம் ஆகாஷ் அழைப்பை ஏற்றதும், "அ...அண்ணா... அது... சார் எங்க இருக்கார்?" என அனுபல்லவி கேட்கவும் குழம்பிய ஆகாஷ், "அனு... என்னாச்சுங்க?" எனக் கேட்டான்.

அனுபல்லவி, "சாருக்கு ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்... பட் அவர் கால் அட்டன்ட் பண்ணவே இல்ல... அதான் சார் எங்க இருக்காருன்னு உங்களுக்கு தெரியுமான்னு கேட்க தான் கால் பண்ணேன்..." என்றாள்.

ஆகாஷும் ஆரம்பத்திலிருந்தே பிரணவ்வும் அனுபல்லவியும் ஒருவரையொருவர் காணும் போது இருவரின் முகத்திலும் தெரியும் மலர்ச்சியை அவதானித்திருந்தான்.

இப்போது அனுபல்லவி கேட்கவும் அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் எனப் புரிந்துகொண்ட ஆகாஷ், "பாஸ் எங்க போனார்னு எனக்கும் தெரியலங்க... ரொம்ப அப்சட்டா கிளம்பி போனார்... அவரை ஃபாலோ பண்ண வேணாம்னு என் கிட்ட சொன்னார்..." என்கவும், "ஓஹ்... உ...உங்களுக்கும் தெரியலயா?" எனக் கேட்டாள் அனுபல்லவி வருத்தமாக.

"எக்சேக்டா தெரியலம்மா... ஆனா பாஸ் கவலையா இருக்கும் போது அவரோட பீச் ஹவுஸ் போவார்... அநேகமா அங்க தான் இருப்பார்னு நினைக்கிறேன்..." என ஆகாஷ் கூறவும் மகிழ்ந்த அனுபல்லவி, "எனக்கு உடனே அந்த பீச் ஹவுஸ் அட்ரஸை அனுப்புறீங்களா? ப்ளீஸ்..." என்கவும் சரி என அழைப்பைத் துண்டித்த ஆகாஷ் உடனே அனுபல்லவியின் எண்ணுக்கு அந்த முகவரியை அனுப்பி வைத்தான்.

ஆகாஷ் மனமோ, 'இந்தப் பொண்ணால மட்டும் தான் பாஸ் முகத்துல பழைய சிரிப்பை கொண்டு வர முடியும்னு நம்புறேன்...' என வேண்டியது.

இவ்வளவு நேரமும் ஏதோ இழந்ததைப் போல் சுற்றிக் கொண்டிருந்த தோழி திடீரென மிகுந்த மகிழ்வுடன் காணப்படுவதைப் புரியாமல் பார்த்த சாருமதி, "என்னாச்சு அனு? யார் கால்ல?" எனக் கேட்கவும், "சாரு... நான் கொஞ்சம் அர்ஜென்ட்டா வெளிய போய்ட்டு வரேன்... நீ எனக்காக வெய்ட் பண்ணாம தூங்கு..." என்று விட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேற, "ஹேய் அனு... இந்த நைட் டைம்ல எங்க டி போற? சொல்லிட்டு போடி..." என சாருமதி கத்தியது எதுவும் அனுபல்லவியின் செவிகளை எட்டவில்லை.

தன்னவனை உடனே காண வேண்டும் என்ற பதட்டத்தில் முன்பு பேரூந்தில் செல்லும் போது இருந்த பயம் எதுவுமின்றி அவசரமாக பேரூந்தில் ஏறி ஆகாஷ் அனுப்பிய முகவரியை சென்றடைந்தாள் அனுபல்லவி.

************************************

ஆகாஷிடம் தன்னைப் பின் தொடர வேண்டாம் என்று கட்டளை இட்ட பிரணவ் நேராக சென்றது தன் பீச் ஹவுஸிற்கு தான்.

கடற்கரை ஓரமாக நடந்தவனின் கால்களை அலைகள் முத்தமிட்டுச் செல்ல, ஆனால் அவனின் மனமோ அமைதியடைய மறுத்தது.

உடனே கடலில் இறங்கி தண்ணீருக்கு அடியில் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு சில நிமிடங்கள் இருந்த பிரணவ்வின் மனமோ இந்த நிமிடமே இந்த ஆழ்கடலில் மூழ்கி தான் இறந்து போக மாட்டோமா என வேண்டியது.

அந்த அளவு மனமுடைந்து காணப்பட்டான் பிரணவ்.

எதிலுமே மனம் லயிக்கவில்லை.

தற்கொலை செய்யக் கூட மனதில் துணிச்சல் வேண்டுமாமே. அதற்கு கூட வழியின்றி தண்ணீரில் இருந்து வெளியே வந்த பிரணவ் கடல் மணலில் படுத்துக் கொண்டான்.

நினைவு தெரிந்த நாளில் இருந்தே யாரின் அன்புக்காக அவன் ஏங்கினானோ அவர்களே தனக்கு சொந்தம் இல்லை என்பதை அறிந்ததும் துடித்துப் போனான் பிரணவ்.

இத்தனை வருடங்களும் செல்லும் இடம் எல்லாம் பிரணவ் ராஜ் எனத் தன்னைப் பெருமையாக அறிமுகப்படுத்தியவனின் பெயரில் பாதியே அவனுக்கு சொந்தமில்லை என்ற உண்மை கசந்தது.

பெற்றோரை விட தன் மேல் அதிகம் பாசத்தை பொழிந்த மாமாவிற்கு தன் மேல் இவ்வளவு வெறுப்பு இருந்து இருக்கிறது என்ற உண்மையை பிரணவ்வால் ஏற்க முடியவில்லை.

பல எண்ணங்களுடன் வானத்தை வெறித்துக் கொண்டிருந்த பிரணவ் அவனே அறியாமல் உறங்கிப் போனான்.

சில மணி நேரங்கள் கழித்து மெதுவாகக் கண் விழிக்க, நன்றாகவே இருட்டி இருந்தது.

எழுந்து மணலில் கையூன்றி அமர்ந்த பிரணவ்விற்கு காலை நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நினைவு வந்து அவனை வருத்தியது.

"ப...பல்லவி... பல்லவிக்கும் இந்த நேரம் என்னைப் பத்தின எல்லா உண்மையும் தெரிஞ்சி இருக்கும்ல... ஒ... ஒருவேளை அவளும் என்னை விட்டு போயிடுவாளா?" எனத் தன்னையே கேட்டுக் கொண்டவனை தலைவலி பிய்த்துத் தின்றது.

"ஆஹ்..." என வலியில் அலறிய பிரணவ் அங்கிருந்து எழுந்து வீட்டை நோக்கி நடந்தான்.

தன் மனதில் உள்ள வலியை கொஞ்சம் நேரமாவது மறப்பதற்காக கப்போர்ட்டிலிருந்து மது பாட்டில்களை எடுத்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தான்.

ஒரு பாட்டிலைத் திறந்து வாயில் சரிக்கச் செல்லும் போதே வாசலில், "பிரணவ்..." என்ற அனுபல்லவியின் குரல் கேட்கவும் அவள் பக்கம் திரும்பினான் பிரணவ்.

அனுபல்லவியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மதுபாட்டிலை மீண்டும் கையில் எடுத்த பிரணவ் அவளைப் பார்க்காமலே, "நீ எதுக்கு இங்க வந்த?" எனக் கேட்டான்.

அவனை நெருங்கிய அனுபல்லவி, "என்ன பண்ணுறீங்க பிரணவ்? எதுக்காக இப்போ குடிச்சி உடம்பைக் கெடுத்துக்க போறீங்க?" எனக் கேட்டாள் கோபமாக.

பதிலுக்கு கசந்த புன்னகையை உதிர்த்த பிரணவ், "ஆல்ரெடி கெட்டுப் போன உடம்பு தானே... அதான் பேப்பர் நியூஸ்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சே... இதுக்கு மேல இந்த உடம்புக்கு என்ன நடந்தாலும் யாருக்கு நஷ்டம்?" என்றான் விரக்தியாய்.

அனுபல்லவி, "அதுக்காக குடிச்சி உங்களை நீங்களே அழிச்சிப்பீங்களா? இதைக் குடிச்சன்னு உங்களுக்கு என்ன கிடைக்க போகுது?" எனக் கோபமாகக் கேட்கவும் மறு நொடியே பிரணவ்விடமிருந்து, "நிம்மதி... ஆறுதல்... என் மனசுல உள்ள வலி கொஞ்சமாவது இது மூலமா குறையும்..." என்ற பதில் வந்தது.

அவனின் கலங்கியிருந்த கண்களைக் கண்டு மனம் பொறுக்காமல், "இதைக் குடிச்சா உங்க வலி போயிடுமா பிரணவ்?" என அனுபல்லவி வருத்தமாகக் கேட்கவும், "வேற என்ன தான் என்னைப் பண்ண சொல்ற பல்லவி?" என அவளின் முகம் பார்த்து கத்திய பிரணவ்வின் விழிகள் கண்ணீரை சிந்தின.

அனுபல்லவியிடமிருந்து மௌனமே பதிலாய் கிடைக்கவும், "சொல்லு பல்லவி... இந்த வலியை மறக்க இதை விட்டா வேற என்ன வழி இருக்குன்னு சொல்லு... உன்னால முடியுமா இந்த வலியை மறக்க வைக்க? முடியல டி... ரொம்ப வலிக்கிது..." எனக் கவலையுடன் கூறிய பிரணவ்வின் இதழ்கள் மறு நொடியே அனுபல்லவியின் இதழ்களினால் சிறை செய்யப்பட்டன.

இருவருக்கும் முதல் இதழ் முத்தம்.‌ அவ் இதழ் முத்தத்தை ஆரம்பித்தது என்னவோ அனுபல்லவி தான். ஆனால் அது உடனே பிரணவ்வின் ஆட்சியாகி அவளுள் இன்னும் இன்னும் மூழ்கிப் போக முயன்றான்.

பிரணவ்வின் கன்னங்களைத் தாங்கியிருந்த அனுபல்லவியின் கரங்கள் மெதுவாகக் கீழிறங்கி அவனின் சட்டை பட்டனை மேலிருந்து ஒவ்வொன்றாகக் கழற்றவும் தன்னிலை அடைந்த பிரணவ் கஷ்டப்பட்டு தன்னிடமிருந்து அவளைப் பிரித்தான்.

பிரணவ்வின் மடியில் அமர்ந்து அவன் முகத்தைக் கேள்வியாக நோக்கிய அனுபல்லவியை அதிர்ச்சியாகப் பார்த்த பிரணவ், "ப...பவி... எ...என்னப் பண்ணுற நீ?" எனக் கேட்டான்.

அவனின் பிரத்தியேகமான அழைப்பில் கண்களில் காதல் சொட்ட பிரணவ்வின் விழிகளுடன் தன் விழிகள் கலந்த அனுபல்லவி, "உங்க வலியை மறக்க வைக்க என்னால முடிஞ்சது..." என்றவள் மீண்டும் அவனின் இதழ்களை சிறை பிடிக்கவும் வலுக்கட்டாயமாக அவளைத் தன்னை விட்டுப் பிரித்த பிரணவ், "பைத்தியமா பல்லவி உனக்கு? நீ என்ன பண்ணுறன்னு தெரிஞ்சி தான் பண்ணுறியா? வே...வேணாம்... நீ போயிடு இங்கிருந்து..." என்றான் எங்கோ பார்த்தபடி.

பிரணவ்வின் தாடையைப் பற்றி தன் முகம் காண வைத்த அனுபல்லவி, "எனக்கு எதைப் பத்தியுமே கவலை இல்ல பிரணவ்... இப்போ எனக்கு தெரியிறது எல்லாம் உங்க வலி... வலி மட்டும் தான்... உங்களை இப்படி உடஞ்சி போய் என்னால பார்க்க முடியல... அந்த வலியைப் போக்க நான் எந்த எல்லைக்கும் போவேன்... பிகாஸ் ஐ லவ் யூ மோர் தென் எவ்ரித்திங்... என்ன நடந்தாலும் எப்படியான நிலமையாக இருந்தாலும் உங்களுக்கு நான் இருக்கேன்... பிரணவ்வுக்காக எப்பவுமே அவனோட பல்லவி இருப்பா..." எனக் காதலுடன் கூறவும் பிரணவ்வின் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கின.

'இவள் என்னவள்... எனக்கானவள்‌..‌. எனக்கு என் பவி இருக்கா...' என்ற எண்ணம் பிரணவ்வின் மனதில் ஆழப் பதிந்தது.

கண்ணீருடன் தன்னையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்த தன்னவனின் கன்னம் பற்றிய அனுபல்லவி, "ஐ லவ் யூ பிரணவ்..." என்று அவனின் அதரங்களை சிறைப் பிடிக்க, தன்னவளின் இதழ்த் தேனை இம்முறை விரும்பியே சுவைத்தவன் அவளுள் புதைந்து போனான்.

வெகுநேரம் நீடித்த இதழ் முத்தம் இருவரையும் அடுத்த கட்டம் நோக்கிப் பயணிக்கத் தூண்ட, அனுபல்லவியைத் தன்னை விட்டுப் பிரிக்காமலே மெதுவாக அவளைக் கரங்களில் ஏந்திக்கொண்டு அறையை நோக்கி நடந்தான் பிரணவ்.

மென் பஞ்சு மெத்தையில் தன்னவளை மெதுவாக கிடத்திய பிரணவ் அவள் மேல் படர்ந்து கழுத்தில் முகத்தைப் புதைத்தான்.

அனுபல்லவி, "பி...பிரணவ்..." எனத் தயக்கமாக அழைக்கவும், "பவி... நி...நிஜமாவே உனக்கு சம்மதமா?" என அவளின் கண்களைப் பார்த்து கேட்ட பிரணவ்வின் கண்களில் தெரிந்த ஏக்கம் அனுபல்லவியின் கன்னத்தை வெட்கத்தில் சிவக்கச் செய்து முகத்தில் மென் முறுவல் தோன்றியது.

அனுபல்லவியின் முகமே அவளின் பதிலைக் கூறவும் மகிழ்ந்த பிரணவ் மறு நொடியே தன்னவளை முத்தங்களால் அர்ச்சிக்கத் தொடங்கினான்.

பிரணவ்வின் விரல்கள் அனுபல்லவியின் உடலில் அத்துமீற, விரும்பியே அவனுக்குள் தொலைந்தாள் அனுபல்லவி.

விடியும் வரையுமே தம் இணைகளுக்குள் தம்மைத் தொலைத்து, ஆடை இழந்த மேனிகளுக்கு ஒருவருக்கொருவர் தாமே ஆடையாகி, ஈருடல் ஈருயிராக இருந்தவர்கள் ஈருடல் ஓருயிராக மாறி, தன் காதலால் தன்னவனின் வலியை மறக்கச் செய்யும் நோக்கில் அவளும், தன்னவளின் காதலில் அனைத்தையும் மறக்கும் மாயத்தில் தன்னையே தொலைக்க விரும்பி அவனும் கூடலில் திளைத்தனர்.

லேசாக அறையில் வெளிச்சம் படரத் தொடங்கவும் தன்னவளை விட்டுப் பிரிந்த பிரணவ் அவளின் பிறை நுதலில் அழுத்தமாக இதழ் பதித்து இராப் பொழுதில் தொடங்கிய கூடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

அனுபல்லவியை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்ட பிரணவ் காற்று கூட இருவருக்கும் இடையில் புக இயலாதவாறு எங்கு தன்னவளை விட்டால் அவள் மாயமாக மறைந்து விடுவாளோ என்ற பயத்தில் அனுபல்லவியை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 19
அனுபல்லவியின் கன்னத்தில் தன் கன்னம் உரச அவளை இறுக்கி அணைத்தவாறு படுத்திருந்தான் பிரணவ்.

சில நொடிகளிலேயே அனுபல்லவியின் கன்னம் ஈரமாகவும் அதிர்ந்தவள் தன் தலையை உயர்த்தி தன்னவனைக் காண, பிரணவ்வின் மூடியிருந்த விழிகளைத் தாண்டி கண்ணீர் கசிய தன் அணைப்பை இன்னும் இறுக்கினான்.

அனுபல்லவிக்கு வலித்தாலும் தன்னவனின் வலியை அதன் மூலம் உணர்ந்தவள் தன் இதழால் அவனின் விழி நீரைத் துடைக்கவும், இமை திறந்தான் பிரணவ்.

பிரணவ், "என் வலியை மறக்கணும்னு நான் உன்ன கஷ்டப்படுத்துறேனா பவி?" எனத் தன்னவளின் முகம் பார்த்து வருத்தமாக வினவவும் பிரணவ்வை விட்டு விலகி கட்டிலில் சாய்ந்தமர்ந்த அனுபல்லவி தன் மடியைக் காட்டினாள்.

அதனைப் புரிந்துகொண்ட பிரணவ் உடனே அவள் மடியில் தலை சாய்த்து வயிற்றில் முகம் புதைத்தான்.

பிரணவ்வின் தலையை வருடியவாறே, "உங்களால என்னை எந்த சூழ்நிலையிலும் கஷ்டப்படுத்த முடியாது பிரணவ்..." என்றாள் அனுபல்லவி புன்னகையுடன்.

"ஒருவேளை நீ மட்டும் என் பக்கத்துல இல்லன்னா எனக்கு என்ன ஆகி இருக்கும்னே தெரியல பவி..." எனப் பிரணவ் கூறவும் அவனைப் பேச விட்டு அமைதியாக இருந்தாள் அனுபல்லவி.

பிரணவ், "சின்ன குழந்தையா இருக்கும் போது எதுவுமே தெரியல... அம்மாவும் அப்பாவும் கூடவே இருப்பாங்க... அவங்க கையை விட்டு இறக்கவே மாட்டாங்க... அப்படி எல்லாம் இருந்துட்டு ஓரளவுக்கு வளர்ந்ததும் திடீர்னு ஒருநாள் கேர்டேக்கரை கூட்டிட்டு வந்து அவங்க கைல என்னை ஒப்படைச்சிட்டு அப்பாவும் அம்மாவும் பிஸ்னஸை கவனிக்க போய்ட்டாங்க...

எனக்கு அந்த கேர்டேக்கரை பிடிக்கவே இல்ல... சம்பளம் தராங்கன்னு கடமைக்கு என்னைப் பார்த்துப்பாங்க... ரொம்ப திட்டுவாங்க... அதனாலயே நான் அவங்களை கடிச்சி வைப்பேன்... இதை அவங்க அம்மா கிட்ட போட்டு கொடுக்கவும் அம்மா என்னைத் திட்டிட்டு வேற கேர்டேக்கர் ஏற்பாடு பண்ணாங்க... எல்லாருமே அப்படி தான்... பணத்துக்காக வேலை பார்க்குறாங்க... எத்தனையோ கேர்டேக்கர் மாத்தினாங்க... ஆனா கடைசி வரை அம்மாவால மட்டும் தான் என்னைப் பார்த்துக்க முடியும்னு அம்மாவுக்கு புரியல... ஒரு கட்டத்துக்கு மேல எனக்கே எல்லாம் வெறுத்து போய் எனக்குள்ளே ஒடுங்கி போய் அமைதியாகினேன்... என்னோட வேலை எல்லாம் நானே பண்ணிக்க ஆரம்பிச்சேன்... அதுக்கப்புறம் அம்மா எந்த கேர்டேக்கரும் வைக்கல... நான் பேசுறதை கூட குறைச்சிக்கிட்டேன்...

பக்கத்து வீட்டுல என் வயசுலயே ஒரு பையன் இருந்தான்... ஆனா அவங்க ரொம்ப வசதி இல்லாதவங்க... அந்தப் பையன் கூட நான் சேர்ந்து விளையாடுவேன்... இதைப் பத்தி அம்மாவுக்கு தெரிஞ்சதும் என்னை ரொம்ப திட்டிட்டாங்க... நம்ம தகுதிக்கு குறைஞ்ச யார் கூடவும் பழகக் கூடாது... எல்லாருமே பணத்துக்காக தான் நம்ம கூட பழகுவாங்கன்னு சொன்னாங்க... அது அந்த வயசுலயே என் மனசுல பதிஞ்சி போயிடுச்சு... அப்புறம் அந்தப் பையன் கூட நான் சேர்ந்து விளையாடல...

ஸ்கூல் காலேஜ் எல்லாமே நல்ல பெரிய வசியானதா பார்த்து அம்மா சேர்த்து விட்டாங்க... அங்க படிக்கிற எல்லாருமே பணக்கார வீட்டுப் பசங்க... பணம் இருக்குற எல்லா இடத்திலும் குணம் இருக்கும்னு எதிர்ப்பார்க்க முடியாது இல்லயா... அங்க கூட அப்படி தான்... எல்லாருமே கெட்டவங்கன்னு இல்ல... நல்லவங்களும் இருந்தாங்க... ஆனா நான் தேடி தேடி கெட்ட பசங்களாவே ஃப்ரெண்ட் ஆனேன்... எல்லாருமே பணத்துக்காக மட்டும் தான் என் கூட ஃப்ரெண்ட் ஆனாங்க... அது தெரிஞ்சும் நான் கண்டுக்கல... ஏன்னா நான் தப்பு பண்ணினா அப்போவாவது அப்பாவும் அம்மாவும் எனக்காக வருவாங்கன்னு தான்... எல்லார் கூடவும் சண்டை போடுவேன்... யாரையாவது போட்டு அடிப்பேன்... அப்போ கூட அவங்க வரல... எல்லாத்தையும் கால்லயே பேசி முடிச்சிடுவாங்க...

ஸ்கூல் காம்படிஷன்ஸ்ல வின் பண்ணி அவார்டோட அவங்க கிட்ட காட்ட ஓடி வருவேன் சீக்கிரமா... பட் வீட்டுல யாருமே இருக்க மாட்டாங்க... நைட் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் காட்டலாம்னா டயர்ட் ஆகி வருவாங்க... நான் ஹேப்பியா என்னோட அவார்டை காட்டினா சூப்பர் பா... அப்புறம் பார்க்குறேன்... டயர்டா இருக்குன்னு சொல்லுவாங்க... அதைக் கைல கூட எடுத்து பார்க்க மாட்டாங்க... வாழ்க்கையே வெறுத்து போய் இருந்தப்போ தான் என் வாழ்க்கைல அபி வந்தான்... அபினவ்... எனக்கு கிடைச்ச உண்மையான ஃப்ரெண்ட்... கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள பூட்டி வெச்சிருந்த நல்லவன வெளிய கொண்டு வந்தான்... அப்பா அம்மாவோட பாசத்துக்கு ஏங்கிட்டு இருந்த எனக்கு எல்லாமுமா இருந்தான்... தப்பு பண்ணினா தட்டி கொடுக்கல... தட்டி கேட்டான்... அவன் மூலமா அவனோட அண்ணன் ஆதர்ஷ் ஃப்ரெண்ட் ஆகினான்... அவங்க கூட இருந்தப்போ மட்டும் தான் நான் நானாக இருந்தேன்... மனசுல உள்ள கவலை எல்லாம் மறந்து சந்தோஷமா இருந்தேன்...

அப்படி இருக்குறப்போ தான் தாராவ பார்த்தேன்... சிதாரா... பார்த்ததும் பிடிச்சி போச்சு அவள... அது எப்படிப்பட்ட பிடித்தம்னு எல்லாம் தெரியல... பிடிச்சிருந்தது... அவளுக்கும் அப்படி தான்... அப்போ தான் என் காலேஜ் ஃப்ரெண்ட் ராகுல் கால் பண்ணான்... அவனுங்களுக்கு நான் அபி கூட இருக்குறது சுத்தமா பிடிக்காது... எங்களை பிரிக்க எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டு இருந்தாங்க... சரியா அவன் கால் பண்ணப்போ ரொம்ப ஹேப்பியா தாராவ பத்தி சொன்னேன்... ஆனா அவன் கிராமத்துப் பொண்ணுங்களைப் பத்தி ரொம்ப தப்பு தப்பா சொன்னான்... ஏற்கனவே சின்ன வயசுல அம்மா சொன்னதும் சேர்ந்து நானே தப்பா முடிவு பண்ணேன் தாராவும் என் கூட பணத்துக்காக தான் பழகுறான்னு...

ஆனாலும் என்னால அவள விட முடியல... அவள பிடிச்சிருந்தது... அவ அழகா இருக்குறதால ஒருவேளை அவளை யூஸ் பண்ணி பார்க்கணும்னு வர ஆசைன்னு நானே மனசை சமாதானம் பண்ணேன்... அதுக்கேத்த மாதிரியே அவ கூட பழகினேன்... ஆனா என்னால அதையும் பண்ண முடியல... அவள விடவும் முடியல... திரும்ப சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் ஒரு நாள் கால் பண்ணி அவ ஊருக்கு அவசரமா வர சொன்னா... வீட்டுல கல்யாணம் பேசுறாங்கன்னு கல்யாணம் பண்ணிக்க சொன்னா... என் சொத்துக்காக தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறதா நினைச்சி அவளை பத்தி சீப்பா பேசிட்டு அங்க இருந்து வந்துட்டேன்...

இருந்தாலும் மனசுக்குள்ள ஏதோ ஒரு உறுத்தல்... தாராவ ஆர்யான் கூட பார்த்ததும் என் பொருளை என் கிட்ட இருந்து எடுத்துட்டது போல ஃபீல்... திரும்ப அவ கூட சேர நினைச்சேன்... பட் முடியல... அதுக்கப்புறம் நடந்த எல்லாம் தான் உனக்கு தெரியுமே... ஆர்யான் தான் தாராவுக்கு ஏத்தவன்... அவளுக்கு பண்ணின அநியாயத்துக்கு தான் எனக்கு அப்படி ஒரு தண்டனை கிடைச்சது... நான் தாராவுக்கு பண்ணின அநியாயம் அபிக்கு தெரியவும் என்னால முன்ன மாதிரி அவன் கூட பழக முடியல... அதனால தான் எல்லாத்தையும் விட்டுட்டு பெங்களூர் வந்தேன்...‌

அந்த ஆக்சிடன்ட் பத்தி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரிஞ்சதும் ரொம்ப துடிச்சிட்டாங்க... என் அப்பாவும் அம்மாவும் எனக்கே திரும்ப கிடைச்சிட்டதா நினைச்சி சந்தோஷப்பட்டேன்..‌. ஆனா கொஞ்ச நாளைக்கு அப்புறம் திரும்ப பிஸ்னஸ் அது இதுன்னு ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க... ரொம்ப மனசு உடைஞ்சிடுச்சு... யாருமே வேணாம்னு முடிவெடுத்து தனியா இருக்கும் போது தான் நீ என் வாழ்க்கைல வந்த... என்னோட கார்டியன் ஏஞ்சல்..." என்றவனின் அணைப்பு இறுகியது.

அனுபல்லவியின் வயிற்றுப் பகுதி சூடாகுவதை வைத்தே தன்னவன் அழுகிறான் என் உணர்ந்தவளுக்கும் தன்னவன் இத்தனை வருடங்களாக மனதளவில் அடைந்த வேதனையை எண்ணி கண்ணீர் சுரந்தது‌.

அனுபல்லவியின் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் பிரணவ்வின் கன்னத்தில் பட்டுத் தெறிக்கவும் அவசரமாக அவளின் முகம் நோக்கி கண்ணீரைத் துடைத்து விட்ட பிரணவ், "நீ என் லைஃப்ல வந்ததுக்கு அப்புறம் தான் பழையபடி என் முகத்துல சிரிப்பு வந்தது... அபி கூட இருக்குறப்போ எவ்வளவு ஹேப்பியா இருந்தேனோ நீ என் பக்கத்துல இருக்கும் போது அதை விட பல மடங்கு ஹேப்பியா இருந்தேன்... ஆனா இப்படி ஒரு குறையோட உன் வாழ்க்கைய ஸ்பாய்ல் பண்ண கூடாதுன்னு தான் உன்ன என்னை விட்டு தள்ளியே வைக்க ட்ரை பண்ணேன்... பட் உன்னோட காதலால என் தயக்கம் எல்லாத்தையும் தகர்த்து எறிய வெச்சி என்னை உனக்குள்ள கட்டிப் போட்டுட்ட..." என்றான் இவ்வளவு நேரம் இருந்த வருத்தம் மறைந்து புன்னகையுடன்.

அவன் கூறிய விதத்தில் அனுபல்லவியை வெட்கம் பிடுங்கித் திண்ண, கண்களில் மையலுடன் அதனை ரசித்தவன் அனுபல்லவியின் முகத்தை தன்னை நோக்கி இழுத்து அவளின் அதரங்களில் கவி படித்தான் பிரணவ்.

சில நிமிடங்கள் நீண்ட இதழ் முத்தத்தில் அனுபல்லவி மூச்சு விட சிரமப்படவும் மனமேயின்றி அவளை விடுவித்த பிரணவ் தன்னவளை ஏக்கமாக நோக்கினான்.

அவனின் நெற்றியில் அனுபல்லவி முத்தமிடவும் கண்களை மூடி அதனை ரசித்த பிரணவ், "நீ தர லிப் கிஸ்ஸை விட இது தான் எனக்கு பிடிச்சிருக்கு..." என்கவும் அவனைப் பொய்யாக முறைத்த அனுபல்லவி, "அப்போ இதுக்கு என்ன அர்த்தம்?" என்றாள் தன் இதழில் இருந்த காயத்தைச் சுட்டிக்காட்டி.

அதில் குறும்பாகப் புன்னகைத்த பிரணவ், "அது வேற டிப்பார்ட்மென்ட்..." என்கவும் அவனின் தோளில் செல்லமாக அடித்த அனுபல்லவி, "பிரணவ்... நான் ஒன்னு சொன்னா கேட்பீங்களா?" எனக் கேட்டாள் தயக்கமாக.

அனுபல்லவியின் மடியில் வாகாகப் படுத்துக்கொண்டு அவளின் கரத்தை எடுத்து தன் தலை மீது வைத்து விட்டு கண்களை மூடிக்கொண்ட பிரணவ், "இப்போ சொல்லு..." என்றான்.

சில நொடி மௌனத்திற்குப் பின், "பிரணவ்... அத்தையும் மாமாவும் பண்ணினது தப்பு தான்... இல்லன்னு சொல்லல... நீங்க அதனால் நிறைய பாதிக்கப்பட்டு இருக்கீங்க... இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் நீங்க நல்லா இருக்கணும்னு தானே ஓடி ஓடி உழைச்சாங்க... அதுலயும் உங்க அம்மா... சின்ன வயசுல அவங்க பட்ட கஷ்டம் எதையும் நீங்க அனுபவிக்க கூடாதுன்னு நினைச்சாங்க..." என அனுபல்லவி கூறவும் பெருமூச்சு விட்ட பிரணவ்,

"நீ சொல்றது எல்லாம் கரெக்டா இருக்கும் பல்லவி... அவங்க எவ்வளவு தான் எனக்காக தான் பண்ணினாங்கன்னு ரீசன் சொன்னாலும் எனக்கு தேவைப்பட்டது அது இல்லயே... என்னைப் பொருத்தவரை இந்த பாசம் ரொம்ப பொல்லாதது பல்லவி... நாம அதுக்காக ஏங்கும் போது அது கிடைக்காது... எதுவும் வேணாம்னு இருக்கும் போது கிடைக்கும்... அந்த சமயத்துல அதை அவ்வளவு சீக்கிரமா நம்மளால அக்செப்ட் பண்ணிக்க முடியாது... எல்லாம் விடு... அவங்க நான் கேட்ட பாசத்தை தரல... அது கூட ஓக்கே... ஆனா யாரை நான் இவ்வளவு நாளா அம்மா அப்பான்னு நினைச்சேனோ, யாரோட பாசத்துக்காக நான் தவியா தவிச்சேனோ இன்னைக்கு அவங்க எனக்கு சொந்தம் இல்லங்குற உண்மைய தான் என்னால் ஏத்துக்க முடியல டி..." என்றான் கண்ணீருடன்.

அனுபல்லவி, "யாரு சொன்னாங்க அவங்க உங்களுக்கு சொந்தம் இல்லன்னு... உங்களுக்கு மட்டும் தான் அவங்க சொந்தம்... யாராலயும் உரிமை கோர முடியாது... அநாதை ஆசிரமங்கள்ல எவ்வளவு பசங்க இருப்பாங்க அப்பா, அம்மா, குடும்பம் எதுவுமே இல்லாம... ஆனா உங்களுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேரும் இருக்காங்க... பிரணவ் ராஜ்னு ஒரு அடையாளம் இருக்கு... ஆனா எந்த அடையாளமும் இல்லாம எத்தனை பேர் இந்த உலகத்துல இருக்காங்க தெரியுமா?" எனும் போதே அவளின் கண்கள் கலங்கி விட்டன.

ஆனால் பிரணவ் அதனைக் கவனிக்கவில்லை.

"கடவுள் சில பேருக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்க மாட்டார்... சில பேருக்கு அப்பா அம்மா இல்ல... இதுக்கு காரணம் என்ன தெரியுமா? அந்த அப்பா அம்மா இல்லாத பசங்களுக்கும் அப்பா அம்மா பாசம் கிடைக்கணும்னு தான் உங்க அப்பா அம்மா மாதிரி ஆனவங்க இருக்காங்க... யாரோ நியூஸ்ல நீங்க அவங்க புள்ள இல்லன்னு சொன்னா அது உண்மை ஆகிடுமா? உங்களுக்கும் உங்க அப்பா அம்மாவுக்கும் இரத்த உறவு வேணா இல்லாம இருக்கலாம்... ஆனா ஆத்மார்த்தமான அன்பு இருக்கு உங்களுக்குள்ள... அத்தையும் மாமாவும் உங்கள கண்டுக்கல... பிஸ்னஸ் பிஸ்னஸ்னு ஓடினாங்கன்னு சொல்றீங்களே பிரணவ்... ஒரு வயசுக்கு அப்புறம் நீங்க கூட தான் அவங்கள ஒதுக்கி வெச்சீங்க..." என அனுபல்லவி கூறவும் அவளைப் புரியாமல் பார்த்தான் பிரணவ்.

அனுபல்லவி, "ஆமாங்க... சின்ன வயசுல நீங்க உங்களுக்குள்ள ஒடுங்கி வளர்ந்ததுக்கு அப்புறம் அவங்க கூட பேசுறதையே நிறுத்திட்டீங்க... தேவைக்கு மட்டும் தான் பேசுறீங்க... உங்க மனசுல எல்லாத்தையும் போட்டு பூட்டி வெச்சி நீங்களும் கஷ்டப்பட்டு இப்போ உங்க அப்பா அம்மாவையும் சேர்த்து கஷ்டப்பட வைக்கிறதுக்கு நீங்க ஒரு தடவ அவங்க கிட்ட மனசு விட்டு பேசி இருக்கலாமே..." எனும் போதே இடையில் குறுக்கிட்ட பிரணவ், "அவங்க தான் எனக்கு பேச கூட டைம் தரலன்னு சொல்றேனே பல்லவி..." என்றான்.

"இதெல்லாம் வெறும் சாக்கு போக்கு பிரணவ்... இப்போ இருக்குற பசங்க எவ்வளவு விஷயத்துக்கு பிடிவாதம் பிடிக்கிறாங்க... உங்களால ஒரே ஒரு தடவ பிடிவாதம் பிடிச்சி அவங்க கூட பேச முடியலயா? நீங்க பேசணும்னு சொன்னா அவங்க முடியாதுன்னு சொல்ல போறாங்களா? அவங்க ரெண்டு பேரும் உங்களை புரிஞ்சிக்கலன்னு சொல்றீங்களே... நீங்களும் தான் பிரணவ் அவங்கள புரிஞ்சிக்கல..." என அனுபல்லவி கூறவும் நெற்றியை அழுத்திப் பிடித்தான் பிரணவ்.

மெதுவாக அவனின் நெற்றியை நீவி விட்ட அனுபல்லவி, "விடுங்க பிரணவ்... எல்லாம் முடிஞ்சு போன விஷயம்... இனி வர நாட்களை சரி அவங்கள புரிஞ்சி நீங்களும் அவங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க... உங்க வார்த்தைகள்ல இருந்த வலியை ஆல்ரெடி அவங்க புரிஞ்சிக்கிட்டு நிச்சயம் தங்களோட தவறை உணர்ந்து இருப்பாங்க... இதுக்கு மேலயும் அவங்களுக்கு தண்டனை தர வேணாம்... அவங்க தப்பு பண்ணி இருக்காங்க தான்... ஆனா அவங்க உங்க அப்பா அம்மா... அவங்களுக்கு தங்களோட தப்பை திருத்திக்க ஒரு வாய்ப்பை கொடுக்குறது தப்பே இல்ல... இன்னொரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோங்க... அவங்க உங்க அப்பா அம்மா... யாரு சொன்னாலும் நீங்க அவங்க புள்ள இல்லன்னு ஆகிடாது... நான் இப்படி பேசினது உங்களுக்கு கஷ்டமா இருக்கா?" எனப் பிரணவ்வின் வாடி இருந்த முகத்தைப் பார்த்து வருத்தமாகக் கேட்டாள்.

உடனே அவளை விட்டுப் பிரிந்த பிரணவ் அனுபல்லவியின் முகத்தை தன் கரங்களில் ஏந்தி, "நான் தப்பு பண்ணா என்னைத் திருத்துற எல்லா உரிமையும் உனக்கு இருக்கு... பிரணவ்வும் பல்லவியும் வேற வேற இல்ல... ரெண்டு பேரும் ஒன்னு தான்... என்னை அடிக்கவும் உனக்கு உரிமை இருக்கு... சும்மா எதையும் நினைச்சி ஃபீல் பண்ணாதே... நீ இவ்வளவு சொல்லலன்னா நிச்சயம் நான் அவங்கள இப்போ வரைக்கும் தப்பா தான் புரிஞ்சிக்கிட்டு இருப்பேன்... என் மேலயும் தப்பு இருக்கு... அவங்க ரெண்டு பேரும் என்னைத் தேடி வரும் போது நான் தான் தூரமா போனேன்... என் பவி சொல்லிட்டாளே... இனிமே உன்னோட பிரணவ் குட் பாயா இருப்பான்... ஓக்கே..." என்றவன் அனுபல்லவியின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு அவளை அணைத்துக் கொண்டான்.

சில நொடிகள் அவனின் அணைப்பில் கட்டுண்டு கிடந்தவளுக்கு அப்போது தான் தன் தோழியின் நினைவு எழுந்தது.

அவசரமாக பிரணவ்வை விட்டு விலகி தலையில் கை வைத்து அமர்ந்தவளைப் புரியாது நோக்கிய பிரணவ், "என்னாச்சு பல்லவி?" எனக் கேட்டான்.

அனுபல்லவி, "சாரு கிட்ட நைட் சீக்கிரமா வரேன்னு எங்க போறேன்னு கூட சொல்லாம வந்தேன்... அவ இந்நேரம் நான் நைட் வீட்டுக்கு வரலன்னு டென்ஷன் ஆகி தேடிட்டு இருப்பா..." என வருத்தத்துடன் கூறவும் ஏதோ யோசித்த பிரணவ், "உனக்கு யாரு நான் இங்க தான் இருப்பேன்னு சொன்னாங்க?" எனக் கேட்டான்.

"ஆகாஷ் அண்ணா தான்..." என்ற அனுபல்லவியின் பதிலில் புன்னகைத்த பிரணவ், "அப்போ விடு... டென்ஷன் ஆகாதே... அவன் பார்த்துப்பான் உன் ஃப்ரெண்ட... நீ குளிச்சிட்டு வா... நாம ரெண்டு பேரும் போய் உன் அத்தையையும் மாமாவையும் பார்த்துட்டு வரலாம்... அப்படியே அவங்களுக்கு அவங்க மருமகளையும் இன்ட்ரூ பண்ணலாம்..." என்றான்.

பிரணவ் கூறிய விதத்திலேயே அவன் மனம் மாறி விட்டதை உணர்ந்த அனுபல்லவிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அனுபல்லவி, "முதல்ல நீங்க போய் குளிச்சிட்டு வாங்க..‌. நான் எதுக்கும் சாருக்கு கால் பண்ணி அவளை சமாதானப்படுத்துறேன்..." என்கவும் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்ட பிரணவ், "பெங்களூர்ல தண்ணி பஞ்சமாம்... பேசாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா குளிச்சி தண்ணிய மிச்சம் வைக்கலாமே..." என்றான் அப்பாவியாக.

இடுப்பில் கை வைத்து அனுபல்லவி அவனை ஏகத்துக்கும் முறைக்கவும், "ஓக்கே ஓக்கே... நோ டென்ஷன் பேபி... நாட்டுக்கு நல்லது பண்ண நினைச்சேன்... பரவால்ல... கல்யாணத்துக்கு அப்புறம் பண்ணிக்கலாம்..." என்றவாறு எழுந்து குளியலறை நோக்கி நடந்தான் பிரணவ்.

பிரணவ் செல்லவும் புன்னகைத்த அனுபல்லவி, "சரியான கேடி என் பிரணவ்..." எனச் செல்லமாக அவனைத் திட்டி விட்டு தன் கைப்பேசியைத் தேடி எடுத்து சாருமதிக்கு அழைப்பு விடுத்தாள்.

திடீரென ஏதோ விழும் சத்தம் கேட்கவும் பதறி அவசரமாக சென்று பார்க்க, பேச்சு மூச்சற்று மயங்கிக் கிடந்த பிரணவ்வைக் கண்டு அதிர்ந்தாள் அனுபல்லவி.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 20

தன் தோழிக்கு அழைக்க முயற்சித்துக் கொண்டிருந்த அனுபல்லவி திடீரென ஏதோ சத்தம் கேட்கவும் பதறிச் சென்று பார்க்க, குளியல் அறை செல்லும் வழியில் பேச்சு மூச்சற்று விழுந்து கிடந்த பிரணவ்வைக் கண்டு அதிர்ந்தாள்.

மறு நொடியே தன்னிலை அடைந்து அவசரமாக பிரணவ்விடம் ஓடிய அனுபல்லவி அவன் தலையை தன் மடியில் ஏந்தி, "பி...பிரணவ்... பிரணவ்... என்னாச்சு உங்களுக்கு?" என அவனின் கன்னத்தைத் தட்டினாள் பதட்டமாக.

ஆனால் அவனிடம் இருந்து எந்த அசைவும் வராமல் போகவும் கண் கலங்கிய அனுபல்லவி, "பி‌...பிரணவ்... எனக்கு பயமா இருக்கு... கண்ணைத் திறந்து பாருங்க... ப்ளீஸ்..." எனக் கெஞ்சினாள்.

முகத்தில் தண்ணீர் தெளித்தும் பிரணவ் எழாமல் போகவும் பயந்தவள் உடனே ஆகாஷிற்கு அழைத்து தகவல் தெரிவித்தாள்.

பத்து நிமிடத்தில் அங்கு வந்த ஆகாஷ் அனுபல்லவியுடன் சேர்ந்து உடனே பிரணவ்வை அவன் விபத்துக்குள்ளான நேரம் சேர்த்த மருத்துவமனையில் சேர்த்தான்.

பிரணவ்விற்கு சிகிச்சை நடக்கும் அறைக்கு வெளியே அனுபல்லவி பதட்டமாக நின்றிருக்க, ஆகாஷும் அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்டு சங்கடப்படுத்தவில்லை.

சற்று நேரத்தில் அங்கு வந்த மருத்துவரிடம் ஓடிய அனுபல்லவி, "டாக்டர்... பிரணவ்வுக்கு என்னாச்சு? சொல்லுங்க டாக்டர்... அவர் நல்லா இருக்காரா?" எனப் பதட்டமாகக் கேட்கவும், "நீங்க யார் அவருக்கு?" எனக் கேட்டார் மருத்துவர்.

அனுபல்லவி, "நா...நான்..." என என்ன கூறுவது எனத் தெரியாமல் தடுமாற, "அவர் எங்க பாஸ் டாக்டர்... நல்லா தான் இருந்தார்... திடீர்னு மயக்கம் போட்டு விழுந்து இருக்கார்... அப்போ இவங்க தான் பாஸ் கூட இருந்தாங்க..." என்றான் ஆகாஷ்.

மருத்துவர், "யாரு சொன்னது அவர் நல்லா தான் இருந்தார்னு?" என மருத்துவர் கேட்கவும் இருவருமே அதிர்ந்தனர்.

"எ...என்ன சொல்றீங்க டாக்டர்? அவருக்கு என்னாச்சு?" எனக் கேட்டாள் அனுபல்லவி கண்ணீருடன்.

மருத்துவர், "அவருக்கு ஆக்சிடன்ட் ஆனப்போ நான் அவரை ஒரு வாரம் அப்சர்வேஷன்ல இருந்துட்டு டிஸ்சார்ஜ் ஆக சொன்னேன் இல்லையா? ஆனா அவர் தான் பிடிவாதம் பிடிச்சி அன்னைக்கே டிஸ்சார்ஜ் ஆகினார்... அந்த ஆக்சிடன்ட்ல அவரோட தலை பலமா அடிபட்டிருக்கு... ஆனா அன்னைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தப்போ அவரோட தலைல எந்த பிரச்சினையும் காட்டல... அதுக்கு அப்புறம் அவரோட மூளைல இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கு... அதனால இப்போ அவரோட மூளைல ப்ளட் க்லாட் ஒன்னு இருக்கு... அது அவரோட உயிருக்கே ஆபத்தா முடியும்... அதுக்கான அறிகுறிகள் அவருக்கு வெளிப்பட்டு இருக்குமே... நீங்க எப்படி அதைக் கவனிக்காம விட்டீங்க?" என்றார்.

மருத்துவர் கூறிய செய்தியில் அனுபல்லவிக்கு உலகமே இருண்டு போய் தன் சுழற்சியை நிறுத்தியது போல் இருந்தது. அதிர்ச்சியில் பேச்சே எழவில்லை.

ஆகாஷுக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியாக இருந்தது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டவன், "அவருக்கு அடிக்கடி தலைவலி வரும் டாக்டர்... அந்த நேரம் எல்லாம் வலில ரொம்ப துடிப்பார்... ஹாஸ்பிடல் கூப்பிட்டாலும் வர மாட்டார்... டேப்லெட் போட்டுட்டு அமைதியா இருப்பார்..." என்கவும் தான் அனுபல்லவிக்கும் அது பற்றிய நினைவு வந்தது.

தான் தன்னவனை சரியாகக் கவனிக்கவில்லையோ என மனம் வருந்தினாள் அனுபல்லவி.

மருத்துவர், "டேப்லெட் போட்டதனால தான் உங்க யாருக்குமே அதோட தீவிரம் புரியல... டேப்லெட் போட்டதும் வலி குறையும்... பட் மூளைல அந்த இரத்தக்கசிவு நிற்காது... அது தான் இப்போ அவர் இந்த நிலமைல இருக்க காரணம்..." என்கவும்,

"அ... அவரைக் குணப்படுத்தலாம் தானே டாக்டர்..." என அனுபல்லவி கண்ணீருடன் கேட்டாள்.

"உடனே அந்த ப்ளட் க்லாட்ட ஆப்பரேஷன் பண்ணி நீக்கணும்... அவர் இப்போ இருக்குறதே டேஞ்சர் ஸ்டேஜ் தான்... அந்த ப்ளட் க்லாட்ட ரிமூவ் பண்ணலன்னா அவரோட உயிருக்கு உத்தரவாதம் இல்ல..." என மருத்துவர் கூறவும்,

"அப்போ உடனே பிரணவ்வுக்கு ஆப்பரேஷன் பண்ணி அதை ரிமூவ் பண்ணுங்க டாக்டர்..." என்றாள் அனுபல்லவி அவசரமாக.

மருத்துவர், "அதுல தான் ஒரு ப்ராப்ளம் இருக்கு..." என்கவும் அனுபல்லவியும் ஆகாஷும் அவரைக் குழப்பமாக நோக்க,

"இந்த ஆப்பரேஷன் பண்ணா மேக்சிமம் அவர் அவரோட பழைய ஞாபகங்களை இழக்க வாய்ப்பு இருக்கு... டென் பர்சன்ட் தான் எதுவும் நடக்காம இருக்க சான்ஸ் இருக்கு..." என இடியை இறக்கினார் மருத்துவர்.

ஆகாஷும் அதிர்ந்து போய் நிற்க, "அதனால முதல்ல அவரோட ஃபேமிலிய வர சொல்லுங்க... அவங்க சம்மதம் இருந்தா தான் இந்த ஆப்பரேஷன் பண்ணலாம்... எதுவானாலும் சீக்கிரம் பண்ண பாருங்க... நாம லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் அவரோட உயிருக்கு ஆபத்து..." என்று விட்டு சென்றார் மருத்துவர்.

அவர் சென்றதும் அனுபல்லவி அங்கிருந்து கதிரையில் இடிந்து போய் அமர, அவளைக் கலக்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு பிரணவ்வின் பெற்றோருக்கு தகவல் கூறச் சென்றான்.

'என் பிரணவ் என்னை மறந்துடுவானா?' என்ற எண்ணம் தோன்றவும் அனுபல்லவியின் இதயத்தை யாரோ கூரிய வாளால் அறுப்பது போல் வலித்தது.

அனுபல்லவி, "இல்ல... அவன் என் பிரணவ்... அவன் எப்படி என்னை மறப்பான்?" எனத் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டவளுக்கு நேற்றைய இரவில் நடந்த கூடல் ஞாபகம் வேறு நெஞ்சைப் பிழிந்தது.

கண்ணீர் வேறு அவளின் அனுமதி இன்றி கன்னத்தைத் தாண்டி வடிய, திடீரென தன் தோளில் பதிந்த கரத்தில் திடுக்கிட்டு யார் என்று திரும்பிப் பார்த்தாள்.

சாருமதி தான் தன் தோழியை வருத்தமாகப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

அனுபல்லவி இருக்கும் மனநிலையைப் புரிந்து கொண்ட ஆகாஷ் தன்னவளுக்கு அழைத்து பிரணவ்வின் நிலையை மட்டும் கூறி அனுபல்லவியும் இங்கு தான் இருப்பதாக தெரிவித்தான்.

அனுபல்லவி எதற்காக மருத்துவமனையில் இருக்கிறாள் எனச் சாருமதி பதறவும் தானே அனைத்தையும் விளக்கமாகப் பிறகு கூறுவதாகக் கூறிய ஆகாஷ் அனுபல்லவியிடம் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம் எனக் கண்டிப்பாகக் கூறினான்.

சாருமதியும் நிலைமையை உணர்ந்து உடனே மருத்துவமனைக்கு கிளம்பி வந்தவள் உடைந்து போய் அமர்ந்திருந்த அனுபல்லவியைக் கண்டு அதிர்ந்தாள்.

காரணம் அறியாவிடிலும் தோழியின் மனவருத்தம் அவளையும் தொற்றிக் கொண்டது.

"சாரு..." என அனுபல்லவி தோழியை அணைத்துக்கொள்ள, "நைட் நீ வர லேட் ஆகும்னு சொன்னதும் நான் தூங்கிட்டேன்... காலைல எழுந்து பார்க்கும் போது கூட நீ வீட்டுக்கு வந்து இருக்கல...‌ உனக்கு கால் பண்ணணும்னு நினைச்சப்போ‌ தான் ஆகாஷ் கால் பண்ணி விஷயத்த சொன்னார்... கவலைப்படாதே... நம்ம சார்க்கு எதுவும் ஆகாது..." என்றாள் சாருமதி.

சற்று நேரத்திலேயே மூர்த்தியும் லக்ஷ்மியும் ஆகாஷுடன் மருத்துவமனைக்கு வந்தனர்.

"டாக்டர்... என் பையனுக்கு என்னாச்சு? இவங்க என்ன என்னவோ சொல்றாங்க... என் பையன் நல்லா இருக்கான்ல..." என லக்ஷ்மி பதட்டமாகக் கேட்க,

"அவரோட மூளைல இரத்தக்கசிவு ஏற்பட்டு ப்ளட் க்லாட் உருவாகி இருக்கு... அதை உடனே ஆப்பரேஷன் பண்ணி ரிமூவ் பண்ணலன்னா அவரோட உயிருக்கு ஆபத்தா முடியும்... பட் இந்த ஆப்பரேஷன் சக்சஸா முடிஞ்சாலும் அவருக்கு பழைய ஞாபகங்கள் இருக்குமான்னு சந்தேகம் தான்..." என மருத்துவர் கூறவும் தலையில் அடித்துக்கொண்டு கதறினார் லக்ஷ்மி.

மனைவியை சாமாதானப்படுத்துவதா இல்லை மகனின் நிலையை எண்ணி வருந்துவதா என மூர்த்தி ஒரு பக்கம் கலங்கினார்.

சாருமதியை அணைத்துக்கொண்டு அனுபல்லவியும் கண்ணீர் வடிக்க, "டாக்டர்... பழைய ஞாபகங்கள் இருக்காதுன்னா மொத்தமாவே எந்த ஞாபகங்களும் இருக்காதா? இல்ல குறிப்பிட்ட பீரியட்ல நடந்த சம்பவங்கள் ஞாபகத்துல இருக்காதா?" என மருத்துவரிடம் கேட்டான் ஆகாஷ்.

அனுபல்லவியும் மருத்துவரின் பதிலை எதிர்ப்பார்த்து அவரின் முகம் நோக்க, "அதை எங்களால எக்சேக்டா சொல்ல முடியாது... சில பேர் மொத்த ஞாபகத்தையும் இழந்துடுவாங்க... இன்னும் சில பேர் ரீசன்ட்டா ஆர் குறிப்பிட்ட பீரியடுக்குள்ள நடந்த சம்பவங்களை இழந்துடுவாங்க... சில சமயம் எல்லா விஷயமும் ஞாபகத்துல இருக்கவும் வாய்ப்பு இருக்கு... பட் அதுக்கு வாய்ப்பு கம்மி..." என்றார் மருத்துவர்.

அனுபல்லவி, 'என்னை மறந்துடுவீங்களா பிரணவ்?' என மனதில் தன்னவனிடம் கண்ணீருடன் கேட்டாள்.

சில நிமிட யோசனைக்குப் பின் மூர்த்தி, "ஆப்பரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க டாக்டர்..." என்கவும் மருத்துவர் சரி எனத் தலையசைத்து விட்டு சென்றார்.

லக்ஷ்மி, "ஏங்க... ஆப்பரேஷனுக்கு அப்புறம் நம்ம பையன் நம்மள மறந்துடுவானாங்க?" என வருத்தமாகக் கேட்கவும் மனைவியை ஆறுதலாக அணைத்துக்கொண்ட மூர்த்தி, "பயப்படாதே லக்ஷ்மி... அவன் நம்ம பையன்... நம்மள எப்படி மறப்பான்? அப்படியே மறந்தாலும் நாம அவனுக்கு அம்மா அப்பா இல்லன்னு ஆகிடுவோமா?" எனக் கேட்டார்.

அடுத்த ஒரு மணி நேரத்திலேயே பிரணவ்விற்கு அறுவை சிகிச்சை ஆரம்பமானது.

சிகிச்சை ஆரம்பம் ஆனதிலிருந்து அனுபல்லவி கண்களை மூடி கடவுளிடம் தன்னவனுக்காக பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.

லக்ஷ்மியும் மூர்த்தியும் இருந்த மனநிலையில் தம் மகனுக்காக இங்கு ஒரு ஜீவன் வருந்திக் கொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை.

சாருமதிக்கு கூட அனுபல்லவி ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள் எனப் புரியவில்லை.

ஆகாஷ் அவளிடம் எதுவும் கேட்கக் கூடாது எனக் கூறி இருந்ததால் அமைதியாக இருந்தாள்.

பல மணி நேர போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர் வெளியே வர, "டாக்டர்... என்னாச்சு? என் பையன் நல்லா இருக்கானா?" எனக் கேட்டார் லக்ஷ்மி பதட்டமாக.

அவரைப் பார்த்து புன்னகைத்த மருத்துவர், "ஆப்பரேஷன் சக்சஸ்... கவலைப்படாதீங்க..." என்க, "நாங்க போய் பிரணவ்வ பார்க்கலாமா?" எனக் கேட்டார் மூர்த்தி.

மருத்துவர், "தலைல சர்ஜரி பண்ணி இருக்குறதால இப்பவே போய் பார்க்க முடியாது... கொஞ்சம் நேரத்துக்கு அப்புறம் வார்டுக்கு மாத்துவோம்... அப்போ போய் பாருங்க... அவர் கண்ணு முழிக்க எப்படியும் இருபத்தி நான்கு மணி நேரம் எடுக்கும்... அதுக்கப்புறம் தான் எங்களால எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும்... கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க..." என்று விட்டு சென்றார்.

அனுபல்லவி அதன் பிறகு தான் நிம்மதியாக மூச்சு விட்டாள்.

இருந்தாலும் தன்னவனுக்கு தன்னை நினைவில் இருக்குமா என்று கவலையாக இருந்தது.

சில மணி நேரத்தில் பிரணவ்வை வார்டுக்கு மாற்றியதும் மூர்த்தியும் லக்ஷ்மியும் சென்று அவனைப் பார்த்து விட்டு வந்தனர்.

அனுபல்லவி இருந்த இடத்திலேயே அமர்ந்து இருந்தாள்.

ஆகாஷ், "சேர்... மேடம்... நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க... ரொம்ப நேரமா இங்கயே இருக்கீங்க... அதான் டாக்டர் சொன்னாரே பாஸ் கண்ணு முழிக்க எப்படியும் ஒரு நாள் ஆகும்னு... அதுவரை நீங்க இங்க இருந்து என்ன பண்ண போறீங்க? இங்க எல்லாம் நான் பார்த்துக்குறேன்..." என்றான்.

லக்ஷ்மி மறுக்க, "லக்ஷ்மி... அதான் ஆகாஷ் சொல்றான்ல... நீயே நோயாளி... டேப்லெட் வேற போடணும்... நாம கொஞ்சம் நேரம் கழிச்சி வரலாம்..." என மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார் மூர்த்தி.

அவர்கள் இருவரும் சென்றதும் அனுபல்லவி சாருமதியின் மடியில் தலை வைத்து படுத்திருக்க, அவர்களை நோக்கி சென்றான் ஆகாஷ்.

"மதி... அனு காலைல இருந்து எதுவுமே சாப்பிடல... நைட் ஆகிடுச்சு... நீ கேன்டீன் போய் அவங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா... அப்படியே நீயும் சாப்பிடு... நீ முன்னாடி போ... சின்ன வேலை ஒன்னு இருக்கு... அதை முடிச்சிட்டு நானும் வரேன்..." என ஆகாஷ் கூறவும் எதுவும் கூறாது கேன்டீன் சென்றாள் சாருமதி.

கண்கள் வீங்கி அழுது சிவந்த முகத்துடன் அமர்ந்திருந்த அனுபல்லவியை வருத்தமாக நோக்கிய ஆகாஷ், "அனு... நீங்க உள்ள போய் பாஸைப் பாருங்க... மதி இப்பவே வர மாட்டா... நான் பார்த்துக்குறேன்... அதான் ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சதே... வருத்தப்பட வேண்டாம்... பாஸ் நல்லா இருப்பார்..." என ஆறுதல் அளிக்கவும் அவனை நன்றியுடன் ஏறிட்டாள் அனுபல்லவி.

நிஜமாகவே அவளுக்காகத் தான் ஆகாஷ் அனைவரையுமே அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

எல்லாரும் இருந்தால் நிச்சயம் அனுபல்லவியால் பிரணவ்வைப் பார்க்க இயலாது என்பதை அறிவான் அவன்.

சுற்றியும் மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் பிரணவ் படுத்திருக்க, பிரணவ்வின் இதயத்துடிப்பு வீதத்தை அளக்கும் மானிட்டரில் இருந்து எழுந்த மெல்லிய ஓசை மட்டும் அவ் அறையில் எழுந்தது.

கதவைத் திறந்து கொண்டு அவ் அறையினுள் நுழைந்த அனுபல்லவி தன்னவன் இருந்த நிலையைக் கண்டு கண் கலங்கினாள்.

பிரணவ்வின் அருகில் அமர்ந்த அனுபல்லவி அவனின் கரத்தை எடுத்து தன் கரத்தினுள் வைத்துக்கொண்டு தன்னவனின் முகத்தை நோக்கியவாறு அவனின் நெஞ்சில் தலை சாய்த்தாள்.

அனுபல்லவி, "நான் உங்கள சரியா பார்த்துக்கல பிரணவ்... அதனால தான் நீங்க இந்த நிலமைல இருக்கீங்க..." என்றாள் கண்ணீருடன்.

"டாக்டர் சொன்னார் நீங்க கண்ணு முழிச்சா பழையது எல்லாம் மறந்துடுவீங்களாம்... அப்போ என்னைக் கூட மறந்துடுவீங்களா? உங்க பல்லவிய... இல்ல இல்ல... உங்க பவிய மறந்துடுவீங்களா?" எனக் கேட்டவளின் மனதில் எழுந்த வலியை அவளால் தாங்க முடியவில்லை.

அனுபல்லவி, "ஏன் பிரணவ் இப்படி பண்ணீங்க? உங்களுக்கு தலைவலி வரும் போதெல்லாம் நான் கேட்டேன் தானே என்னாச்சுன்னு? சொல்லி இருக்கலாம்ல... எதுக்கு உங்க வலிய உங்களுக்குள்ள மறைச்சீங்க? நீங்க என்னை மறந்துடுவீங்களா? நம்ம காதல மறந்துடுவீங்களா? வருஷக் கணக்கான ஞாபகங்களையே இழக்க வாய்ப்பு இருக்குறதா டாக்டர் சொல்றாங்க... நேத்து வந்தவ நான்... என்னை எப்படி?" என்றவளின் உதட்டில் விரக்திப் புன்னகை.

அனுபல்லவியின் கண்ணீர் பிரணவ் அணிந்திருந்த மருத்துவமனை ஆடையையே நனைத்து விட்டது.

"நைட்டு நடந்தது எல்லாம் கனவு போல இருக்குங்க... அந்த நினைவைக் கூட நம்மளால சுகமா அனுபவிக்க முடியல... அதுக்குள்ள நீங்க இப்படி..." என அழுதாள் அனுபல்லவி.

அனுபல்லவி, "உங்க கிட்ட நிறைய விஷயங்கள் சொல்ல இருக்கு பிரணவ்... என்னைப் பத்தி நீங்க தெரிஞ்சிக்க நிறைய விஷயங்கள் இருக்கு... அதெல்லாம் தெரிஞ்சா நீங்க என்னை ஏத்துப்பீங்களான்னு முன்னாடி பயமா இருந்தது... என் பிரணவ் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு... எங்க காதல் மேல நம்பிக்கை இருக்கு... ஆனா உங்களுக்கு என்னையே ஞாபகம் இல்லாம போனா என்ன பண்ணுவேன் பிரணவ்?" எனக் கேட்டாள்.

சில நிமிடங்கள் பிரணவ்வை அணைத்தவாறு கண்ணீர் வடித்த அனுபல்லவி தன் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தவள் தன்னவனின் காய்ந்து போய் மூடிக் கிடந்த இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

அவளின் கண்ணீர் பிரணவ்வின் கன்னத்தில் விழுந்து அவனின் செவி வழியே இறங்கியது.

தன் இதழ்களைத் தன்னவனிடமிருந்து பிரித்த அனுபல்லவி பிரணவ்வின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு மனமே இன்றி அவனின் கரத்தை விடுவித்து விட்டு அவ் அறையில் இருந்து அழுதுகொண்டே வெளியேறினாள்.

அனுபல்லவி பிரணவ்வின் கரத்தை விடுவித்து விட்டு செல்லவும் அவனின் மூடியிருந்த விழிகள் கண்ணீரை உகுத்தன.

************************************

"ஆகாஷ்... இங்க என்ன தான் நடக்குது? அனு எப்படி பிரணவ் சார் கூட? நைட் அவ எங்க போனா? பிரணவ் சாருக்கு ஒன்னுன்னா இவ ஏன் இந்த அளவுக்கு துடிக்கிறா? தயவு செஞ்சி எதையும் மறைக்காம சொல்லுங்க... எனக்கு தலையே வெடிக்க போகுது..." எனத் தன் முன் அமர்ந்து காஃபியைக் குடித்துக் கொண்டிருந்த ஆகாஷிடம் கத்தினாள் சாருமதி.

சாருமதியின் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்த ஆகாஷ், "மதி... எதுக்கு டென்ஷன் ஆகும்? கூல் குட்டச்சி பேபி..." என்றான் புன்னகையுடன்.

பல நாட்கள் கழித்து அவனின் அழைப்பு சாருமதியின் இதயத்தை மயிலிறகால் வருடினாலும் தன் தோழியைப் பற்றி அறிந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளுக்குள் எழுந்த சந்தோஷத்தை ஆகாஷிற்கு காட்டாது மறைத்தவள் அவனை அழுத்தமாக நோக்கினாள்.

பெருமூச்சு விட்ட ஆகாஷ், "அவங்களுக்குள்ள என்ன இருக்குன்னு அவங்களா சொன்னா மட்டும் தான் தெரியும் மதி... ஆனா ஒன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும்... இவங்க ரெண்டு பேர்லயும் ஒருத்தரோட நிம்மதியும் சந்தோஷமும் மற்றவர் கிட்ட தான் இருக்கு..." என்றான் அமைதியாக.

அவனை அதிர்ச்சியாக பார்த்த சாருமதி, "ரெண்டு பேரும் லவ் பண்ணுறாங்களா?" எனக் கேட்டாள் அதிர்வாய்.

"தெரியல... அவங்க சொன்னா தான் உண்டு... நீ இப்போ அனு கிட்ட எதையும் கேட்காதே... ரொம்ப அப்சட்டா இருக்காங்க... நிச்சயம் உன் கிட்ட எதையும் மறைக்கமாட்டாங்க... சொல்லுவாங்க கண்டிப்பா... அவங்க மேல கோவப்படாதே..." என்றான் ஆகாஷ்.

பின் இருவரும் அனுபல்லவிக்கு உணவை வாங்கிக்கொண்டு கிளம்பினர்.

பிரணவ் இருந்த அறைக்கு வெளியே இருக்கையில் வாடிப் போய் அமர்ந்திருந்த அனுபல்லவி வேண்டாம் என்று மறுத்தும் அவளின் உடல் நிலையைக் கருதி வலுக்கட்டாயமாக ஒரு குவளை பாலை மட்டும் குடிக்க வைத்தாள் சாருமதி.

அன்று இரவும் ஆகாஷ் எவ்வளவு கூறியும் கேட்காது மருத்துவமனையிலேயே தங்கி விட்டாள் அனுபல்லவி.

வேறு வழியின்றி சாருமதியும் தன் தோழிக்கு துணையாக மருத்துவமனையில் தங்கினாள்.

அவர்கள் இருவருக்கும் துணையாக ஆகாஷ் இருந்தான்.

சரியாக மருத்துவர் கூறிய இருபத்தி நான்கு மணி நேரத்தில் மூடியிருந்த விழிகளைக் கஷ்டப்பட்டுப் பிரித்தான் பிரணவ்.

தலை 'விண்... விண்...' என்று வலிக்க, பார்வை கூட மங்கலாகத் தெரிந்தது.

அவன் கண் விழித்த செய்தியை அங்கு இருந்த நர்ஸ் மருத்துவரிடம் கூறவும் அவர் வந்து பிரணவ்வைப் பரிசோதித்து விட்டு அவன் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டான் என உறுதி அளித்தார்.

மூர்த்தி, லக்ஷ்மி, ஆகாஷ் மூவரும் பிரணவ்வின் அருகில் நின்றிருக்க, அவர்களை விட்டு சற்றுத் தள்ளி அனுபல்லவியும் சாருமதியும் நின்றிருந்தனர்.

பிரணவ் கண் விழித்த பின்னர் தான் அனுபல்லவிக்கு இவ்வளவு நேரமும் சென்றிருந்த உயிர் திரும்ப வந்தது.

மருத்துவர், "நீங்க யாருன்னு ஞாபகம் இருக்கா?" என சுற்றும் முற்றும் கேள்வியாகப் பார்த்த பிரணவ்விடம் கேட்கவும், "பி...பிரணவ்... பிரணவ் ராஜ்..." என்றான் மெல்லிய குரலில்.

பின் மூர்த்தியையும் லக்ஷ்மியையும் காட்டி, "இவங்க யாருன்னு தெரியுதா?" என மருத்துவர் கேட்கவும் தன் வலப் பக்கம் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட தன் பெற்றோரைப் பார்த்து, "எ...ன்னோட அ...அப்பா... அம்...அம்மா..." என்றான் பிரணவ்.

மறு நொடியே, "பிரணவ்... ஏங்க... என் பையனுக்கு நம்மள ஞாபகம் இருக்குங்க... அவன் அம்மாவ அவனுக்கு ஞாபகம் இருக்கு..." என மூர்த்தியின் தோளில் சாய்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் லக்ஷ்மி.

மூர்த்தியும் புன்னகைத்தவாறு கண்ணீருடன் ஆம் எனத் தலையசைத்தார்.

அவர்களுக்கு அருகில் நின்ற ஆகாஷின் மீது பார்வையைப் பதித்த பிரணவ், "எ...எனக்கு... என்...னாச்சு ஆ...காஷ்?" எனக் கேட்டான் மெல்லிய குரலில்.

தன்னை அவனுக்கு ஞாபகம் இருப்பதில் மகிழ்ந்த ஆகாஷ், "பாஸ்... பாஸ் நிஜமாவே உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா?" எனக் கண்ணீருடன் கேட்கவும் கஷ்டப்பட்டு ஆம் எனத் தலை அசைத்தான் பிரணவ்.

பிரணவ்வின் பார்வை மெதுவாக ஆகாஷைத் தாண்டி சற்றுத் தள்ளி நின்றிருந்த தோழிகள் மீது பதியவும் அனுபல்லவியின் இதயம் இரு மடங்கு வேகத்தில் துடித்தது.

ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த கரத்தை மெதுவாகத் தூக்கி அனுபல்லவியின் பக்கம் பிரணவ் காட்டவும் அவர்களைத் திரும்பிப் பார்த்த மருத்துவர், "அவங்க யாருன்னு தெரியுமா மிஸ்டர் பிரணவ்?" எனக் கேட்கவும் அனுபல்லவி பிரணவ்வின் முகத்தை ஆவலுடன் நோக்க, "யா...யாரு?" என்ற பிரணவ்வின் கேள்வியில் மொத்தமாக உடைந்து விட்டாள் அனுபல்லவி.

தன் வலியை மறைக்க சாருமதியின் கரத்தை அழுத்த, அதிலேயே தோழியின் வலியை உணர்ந்தாள் சாருமதி.

ஆகாஷ் ஏதோ கூற வர, அதற்குள், "உன் கம்பனி ஸ்டாஃப்ஸ் பா..." என்றார் மூர்த்தி.

திடீரென பிரணவ் முகத்தை சுருக்கவும், "தலை இன்னும் ரொம்ப வலிக்கிதா பிரணவ்?" என மருத்துவர் கேட்கவும், "லை...ட்டா..." என்றான்.

மருத்துவர், "ஆப்பரேஷன் பண்ணதனால அப்படி இருக்கலாம்... கொஞ்சம் நாள்ல சரி ஆகிடும்... நவ் யூ ஆர் பர்ஃபக்ட்லி ஆல் ரைட் பிரணவ்... பேஷன்ட்டை டிஸ்டர்ப் பண்ணாதீங்க... கொஞ்சம் நேரம் இருந்துட்டு எல்லாரும் வெளியே போங்க... மிஸ்டர் மூர்த்தி... நீங்க கொஞ்சம் என் கூட வாங்க... பேசணும்..." என்று விட்டு வெளியேற, அவரைத் தொடர்ந்து மூர்த்தியும் லக்ஷ்மியும் வெளியேறினர்.

அனுபல்லவி சாருமதியுடன் சேர்ந்து அங்கேயே ஒரு ஓரமாக நிற்க, சில நொடி அமைதிக்குப் பின் ஆகாஷைப் பார்த்து, "தா...தாரா எ...எங்க? அ...வளு...க்கு ஆர்...யான் கூட என்...கேஜ்மென்ட்னு அ...அபி சொன்...னானே..." என்கவும் சிதாராவைப் பற்றித் தெரிந்த ஆகாஷும் அனுபல்லவியும் ஏகத்துக்கும் அதிர்ந்தனர்.

சிதாராவுக்கு நிச்சயம் என்று கேள்விப்பட்டது வரை தான் பிரணவ்விற்கு ஞாபகம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அனுபல்லவிக்கு இவ்வளவு நேரமும் வெளி வரத் துடித்த கண்ணீர் அவளையும் மீறி வெளிப்பட்டு விட்டது.

தன்னவனுக்கு தன்னை சுத்தமாக நினைவில் இல்லை என்பதைத் தாங்க முடியாத அனுபல்லவி அவ் அறையில் இருந்து வெளியே ஓட, "உங்க பையனுக்கு ரீச்ன்ட்டா நடந்த சம்பவங்கள் தான் மறந்து போய் இருக்கு... கொஞ்சம் கொஞ்சமா அந்த நினைவுகள் திரும்ப வரலாம்... ஏன் வராமலும் கூட போகலாம்... எதையும் உறுதியாக சொல்ல முடியாது... பட் நீங்களா அவருக்கு எதையும் ஞாபகப்படுத்த போக வேணாம்... அவர் ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணி பழைய ஞாபகத்த மீட்க நினைச்சா அவரோட உயிருக்கு ஆபத்தாகலாம்..." என மருத்துவர் கூறியது அனுபல்லவியின் செவியில் விழவும் மேலும் அதிர்ந்தாள்.

அனுபல்லவியைத் தொடர்ந்து வெளியே வந்த சாருமதியும் மருத்துவர் கூறியதைக் கேட்டு அதிர்ந்தாள்.

பிரணவ்வின் கேள்வியில் ஆகாஷ் அதிர்ச்சியாக அவனைப் பார்க்க, "சொ...ல்லுங்க ஆ...ஆகாஷ்..." எனப் பிரணவ் மீண்டும் கேட்கவும், "அ..அது பாஸ்... சி...சிதாரா மேடமுக்கு ஆர்யான் சார் கூட மேரேஜ் முடிஞ்சு சிக்ஸ் மந்த் ஆகுது..." எனத் தயக்கமாகக் கூறினான் ஆகாஷ்.

அதனைக் கேட்டு பிரணவ் எந்த அதிர்வையும் காட்டாது, "ஓஹ்... சரி..." என்று மட்டும் கூறி விட்டு அமைதி ஆகினான்.

"நீங்க ரெஸ்ட் எடுங்க பாஸ்... நான் அப்புறம் வரேன்..." என்று கூறி விட்டு வெளியேறிய ஆகாஷிற்கும் மருத்துவர் கூறியது காதில் விழுந்தது.

மருத்துவர் கூறிய செய்தியில் மனமுடைந்த அனுபல்லவி, "சாரு... நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்..." என்று விட்டு ரெஸ்ட் ரூம் வந்தவள் கதறி அழுதாள்.

"என்னை உங்களுக்கு தெரியலயா பிரணவ்? உங்க பவிய மறந்துட்டீங்களா?" எனக் கண்ணீர் வடித்தவளின் கைப்பேசி வெகுநேரமாக அலற, திரையில் காட்டிய பெயரைக் குழப்பமாகப் பார்த்துக்கொண்டு அழைப்பை ஏற்ற அனுபல்லவி மறு முனையில் கூறிய செய்தியில் அதிர்ந்து, "நா... நான் உடேன வரேன்..." என்று அழைப்பைத் துண்டித்து விட்டு சாருமதியிடம் கூட கூறாது உடனே மருத்துவமனையில் இருந்து கிளம்பினாள்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 21

ஐந்து வருடங்களுக்கு பிறகு...

"அன்னைக்கு தான் அனுவ கடைசியா பார்த்தது... அப்புறம் பார்க்கவே இல்ல... அவ எங்க போனா? என்ன ஆனா? எப்படி இருக்கா? ஏன்? உயிரோட இருக்காளான்னு கூட தெரியல..." என சாருமதி தன் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு மாலதியிடம் கூற,

மாலதி, "என்ன சாரு சொல்ற? நான் சடன்னா மேரேஜ் ஆகி ஜாப்ப ரிசைன் பண்ணிட்டு வெளியூர் போனதால எனக்கு எதுவும் தெரியல... உங்க ரெண்டு பேரையும் மீட் பண்ணலாம்னு வந்தா இப்போ நீ சொல்ற நியூஸ் எல்லாம் அதிர்ச்சியா இருக்கு... அதுக்கு அப்புறம் அனுவ எங்கயும் தேடலயா டி?" எனக் கேட்டாள் வருத்தமாக.

கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்த சாருமதி, "அது எப்படி மாலு தேடாம இருப்போம்? ஆகாஷ் அவருக்கு தெரிஞ்ச வழியில எல்லாம் தேடினார்... நானும் தேடினேன்... கடைசியில போலீஸ் கம்ப்ளைன் கொடுப்போம்னு நினைக்கும் போது எனக்கு அனு கால் பண்ணா... நான் நல்லா இருக்கேன்... எந்தப் பிரச்சினையும் இல்ல... என்னைத் தேட வேணாம்னு சொல்லிட்டு உடனே கட் பண்ணிட்டா..." என்றாள்.

அவர்கள் இருவரும் கம்பனி கஃபடேரியாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பிரணவ்வுடன் ஏதோ பேசிவாறு அங்கு வந்தாள் அர்ச்சனா.

அர்ச்சனா சாருமதியைக் கண்டதும் வேண்டுமென்றே பிரணவ்வை நன்றாக உரசிக்கொண்டு பேச, அதனைக் கண்டு பல்லைக் கடித்தபடி வேறு பக்கம் திரும்பினாள் சாருமதி.

அர்ச்சனா பேசப் பேச அவளுக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்த பிரணவ் அவள் தன்னை நெருங்கவும் அவசரமாகத் தள்ளி நின்று அவளை ஒரு பார்வை பார்த்தான் அழுத்தமாக.

அதில் அர்ச்சனாவிற்கு உள்ளுக்குள் திக் என்றிருந்தாலும் அதனைக் காட்டிக் கொள்ளாது, "என்ன பிரணவ் நீங்க? உங்கள கட்டிக்க போற பொண்ணு நான்... இப்படி தள்ளி தள்ளி போறீங்க..." எனப் பொய்யாகச் சிணுங்க,

"கட்டிக்க போற பொண்ணுன்னு இல்ல... யாரா இருந்தாலும் என் அனுமதி இல்லாம என் ப்ரைவசிக்குள்ள என்ட்ரி ஆக முடியாது... மைன்ட் இட்... எனக்கு இம்பார்ட்டன்ட் மீட்டிங் ஒன்னு அட்டன்ட் பண்ண இருக்கு... நான் கிளம்புறேன்..." என எச்சரிக்கை குரலில் கூறி விட்டு அங்கிருந்து சென்றான் பிரணவ்.

பிரணவ் அவ்வாறு கூறவும் ஆத்திரத்தில் பல்லைக் கடித்த அர்ச்சனா சாருமதியையும் மாலதியையும் முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.

மாலதி, "இந்த லூசு எப்படி டி சார் கூட?" எனக் குழப்பமாகக் கேட்கவும் பெருமூச்சு விட்ட சாருமதி, "எல்லாம் சாரோட மறதிய யூஸ் பண்ணி பிரயோஜனம் எடுத்துக்கிட்டா... பிரணவ் சார் வீட்டுல என்ன நாடகம் ஆடினான்னே தெரியல... மூர்த்தி சார் ஒரு நாள் வந்து பிரணவ் சாரை கட்டிக்க போற பொண்ணுன்னு இவளை இன்ட்ரூ பண்ணிட்டு போனார்..." என்றாள்.

"எனக்கு என்னவோ இதுல பிரணவ் சாருக்கு உடன்பாடு இல்லன்னு நினைக்கிறேன் சாரு... அவரோட முகத்த பார்த்தாலே தெரியுது..." என மாலதி கூறவும், "எப்படி இருந்தா என்ன? அவர் அர்ச்சனாவ தான் கல்யாணம் பண்ணிக்க போறார்... என் அனுவே இல்ல இப்போ... இவங்க எப்படி போனா எனக்கென்ன?" என்றாள் சாருமதி சலிப்பாக.

மாலதி, "ம்ம்ம் ஓக்கே டி... நீ எதையும் மைன்ட்ல போட்டு குழப்பிக்காதே... எவ்ரித்திங் வில் பீ ஓக்கே... ரொம்ப லேட் ஆகிடுச்சு... அவர் வேற கால் பண்றார்... இன்னொரு நாளைக்கு மீட் பண்ணலாம்... கண்டிப்பா வீட்டுக்கு வா... நான் கிளம்புறேன்..." என விடை பெற்றுச் செல்லவும் தோழியின் நினைவில் தலையைப் பிடித்தபடி அமர்ந்தாள் சாருமதி.

திடீரென தன் அருகில் ஏதோ சத்தம் கேட்கவும் சாருமதி தலையை உயர்த்திப் பார்க்க, கன்னத்தில் கை வைத்து அவளையே கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.

சாருமதி புருவம் உயர்த்தி என்ன எனக் கேட்க, அவளின் கரத்தை எடுத்து தன் கரத்துக்குள் வைத்துக் கொண்ட ஆகாஷ், "அனு பத்தி திங்க் பண்ணுறியா?" என வருத்தமாகக் கேட்க, அவன் தோளில் தலை சாய்த்த சாருமதி, "ஃபைவ் இயர்ஸ் ஆகிடுச்சு அனு போய்... ஜாப் ஜாய்ன் பண்ண நாள்ல இருந்து ஒன்னாவே இருந்தோம்... அவ இல்லாம ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றேன் ஆகாஷ்..." எனக் கண்ணீர் வடித்தாள்.

ஆகாஷ், "மதி... அழாதே டா... அனு எங்க இருந்தாலும் நல்லா இருப்பா... கூடிய சீக்கிரம் அவளே நம்மள தேடி வருவா..." என சமாதானப்படுத்தியவன், "அப்புறம் மதி... அம்மா கால் பண்ணி இருந்தாங்க... எப்போ அவங்க மருமகள காட்டுவேன்? எப்போ கல்யாணம் பண்ணிக்க போறேன்னு கேட்டாங்க..." என்றான் புன்னகையுடன்.

அவனின் தோளில் சாய்ந்து கொண்டே தலையை உயர்த்திப் பார்த்த சாருமதி, "நீங்க என்ன சொன்னீங்க?" என்க,

"நீங்களே நல்ல பொண்ணா பாருங்கம்மா... பொண்ணு பாருங்க... சில பேரைப் போல ரௌடிய பார்க்க வேணாம்னு சொன்னேன்..." என்றான் ஆகாஷ் புன்னகையுடன்.

உடனே அவனை விட்டு விலகிய சாருமதி, "நான் உனக்கு ரௌடியா பனை மரம்? ரௌடி என்ன செய்யும் தெரியுமா?" எனக் கேட்டு விட்டு ஆகாஷின் கரத்தைக் கடிக்க, "ஆஹ்... விடு டி... விடு டி குட்டச்சி... வலிக்கிது... பேபி விடு... நான் சும்மா பொய் சொன்னேன்..." எனக் கத்தினான்.

சாருமதி, "அந்தப் பயம் இருக்கணும்..." எனக் கேலியாகக் கூறவும் ஆகாஷ் அவளைப் பொய்யாக முறைக்க, சாருமதி புன்னகைக்கவும் பதிலுக்கு புன்னகைத்த ஆகாஷ், "ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதே... ரௌடி... இவ்வளவு அழகான எனக்கே எனக்கான குட்டச்சி பேபி இருக்கும் போது நான் எப்படி வேற பொண்ணைப் பார்ப்பேன்? லூசு... சீக்கிரமா அவங்க மருமகளை கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்... அனு வந்ததுக்கு அப்புறம் தான் நமக்கு கல்யாணம் மதி..." என்றான் தன்னவளை அணைத்து காதலுடன்.

சாருமதி, "உங்கள ரொம்ப வெய்ட் பண்ண வைக்கிறேனா ஆகாஷ்?" என வருத்தமாகக் கேட்க, "இதுல என்ன மதி இருக்கு? உன் லைஃப்ல அனு எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியாதா? உனக்கு முக்கியமானவங்க எனக்கும் முக்கியமானவங்க தானே... அதுவும் இல்லாம அனு எனக்கு தங்கச்சி மாதிரி... அவ இல்லாம நம்ம கல்யாணம் எப்படி நடக்கும்? நீ வேணா பாரு குட்டச்சி... நம்ம அனு தான் உனக்கு நாத்தனார் முடிச்சு போட்டு நம்ம கல்யாணத்த நடத்தி வைப்பா... அது வரைக்கும் நாம ஜாலியா லவ் பண்ணலாம்..." என்றான் ஆகாஷ் புன்னகையுடன்.

"ஐ லவ் யூ ஆகாஷ்... ஐம் சோ லக்கி டு ஹேவ் யூ இன் மை லைஃப்..." எனத் தன்னவனைக் காதலுடன் அணைத்துக் கொண்டாள் சாருமதி.

************************************

நள்ளிரவைக் கடந்தும் பிரணவ்வை உறக்கம் தழுவாமல் இருக்க, பால்கனியில் அமர்ந்து பௌர்ணமி நிலமை வெறித்துக் கொண்டிருந்தான்.

மனம் வேறு அமைதியின்றி தவித்தது. கூடவே அனைவரும் இருந்தும் யாரையோ காண பிரணவ்வின் மனம் ஏங்கித் தவித்தது.

இது இன்று நேற்று தோன்றும் உணர்வல்ல. கடந்த ஐந்து வருடங்களாவே அவனின் மனம் எதையோ எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது.

அது என்னவென்று தெரிந்தால் கூட எங்கிருந்தாலும் தேடிக் கண்டு பிடித்து விடலாம். ஆனால் இங்கோ தான் எதை எதிர்ப்பார்க்கிறோம் என்றே தெரியாத நிலை.

அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததில் இருந்து அவனின் பெற்றோர் பிரணவ்வின் மீது பாசத்தை அள்ளித் தெளித்தனர்.

அதிலும் லக்ஷ்மி பிஸ்னஸை ஒதுக்கி வைத்து விட்டு மகனின் நலனில் மட்டுமே கண்ணாக இருக்கிறார்.

திடீரென இவர்களுக்கு என்னவாயிற்று எனப் பிரணவ்வும் யோசிக்காத நாள் இல்லை.

ஆனால் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு தனக்கு வேண்டிய அன்பைத் தன் பெற்றோர் வழங்கும் போது எதற்கு அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று அத்தோடு விட்டு விட்டான்.

இருந்தும் மனதில் எழும் அந்த ஏக்கம் மட்டும் இன்று வரை தீரவே இல்லை.

பிரணவ்வின் மனம் ஒரு வித வெறுமையைத் தத்தெடுத்து இருந்தது.

அப்படி தோன்றும் நேரம் எல்லாம் நேரத்தைக் கூடப் பார்க்காது உடனே தன் பீச் ஹவுஸிற்கு கிளம்பிச் சென்று விடுவான்.

இன்றும் யாரிடமும் கூறாது உடனே பீச் ஹவுஸ் கிளம்பிச் சென்றவன் நிலவை வெறித்தபடி இந்த ஐந்து வருடங்களில் நடந்தவற்றைப் பற்றி எண்ணிப் பார்த்தான்.

பலவித எண்ணங்களில் சிக்கித் தவித்தவனின் கண்கள் தூக்கத்தில் சொக்க, பால்கனியிலேயே படுத்து விட்டான்.

மறுநாள் விடிந்ததுமே கண் விழித்த பிரணவ் தன்னைக் காணாது தாய் வருந்துவார் என உடனே வீட்டுக்கு கிளம்பிச் சென்றான்.

ஹாலில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த மூர்த்தி, "எங்கப்பா போய்ட்ட காலைலயே?" எனக் கேட்கவும், "எங்கேயும் இல்லப்பா... சும்மா தான்..." என்றவாறு அவருக்கு அருகில் அமர்ந்தான்.

கணவனுக்கும் மகனுக்கும் காஃபி கலந்து எடுத்து வந்த லக்ஷ்மி இருவருக்கும் கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு அமர்ந்தார்.

பிரணவ் அமைதியாக காஃபியைப் பருக, "பிரணவ் கண்ணா... உனக்கும் வயசு போய்ட்டே இருக்கு... நாங்களும் வயசாகிட்டோம்... எப்போ கண்ணா கல்யாணம் பண்ணிக்க போற? என் மருமகள் அர்ச்சனாவும் பாவம்... அப்பா அம்மா இல்லாத பொண்ணு... சீக்கிரம் அவளை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாப்பா..." என்றார் லக்ஷ்மி.

அர்ச்சனாவின் பெயரைக் கேட்டதும் முகம் சுருக்கிய பிரணவ்வின் மனம் வேறு எதையோ எதிர்ப்பார்க்க, தாயின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

மூர்த்தி, "பிரணவ்... அம்மா உன் கிட்ட தான் கேட்குறாங்க..." என்கவும் தன்னிலை அடைந்த பிரணவ், "ஆஹ்... கொஞ்சம் நாள் போகட்டும் மா... இப்பவே என்ன அவசரம்?" எனக் கேட்டான்

லக்ஷ்மி, "அஞ்சி வருஷமா இதையே தான் பா நீ சொல்லிட்டு இருக்க... நாங்களும் உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வெச்சி பேத்தி பேரனுங்கள பார்க்க வேணாமா?" என வருத்தமாகக் கேட்கவும் பிரணவ் பதில் கூறாது அமைதியாக இருந்தான்.

"ஏன் பிரணவ்? உனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லையா? இல்ல வேற யாரையாவது காதலிக்கிறியா?" என மூர்த்தி குழப்பமாகக் கேட்கவும் பிரணவ்வின் இதயம் வேகமாகத் துடித்தது.

"என்னங்க நீங்க பேசிட்டு இருக்கீங்க? நம்ம பையனும் அர்ச்சனா பொண்ணும் ரொம்ப நாளா காதலிக்கிறதா சொன்னாங்களே... இப்போ போய் இப்படி கேட்குறீங்க..." என லக்ஷ்மி கணவனைக் கடிந்து கொள்ள, தன்னையும் அர்ச்சனாவையும் சேர்த்து வைத்து தாய் பேசியதை ஏனோ பிரணவ்வின் மனம் விரும்பவில்லை.

ஆனால் தான் ஏதாவது கூறி தாயின் மனம் வருத்தப்படும் என்பதற்காக அமைதியாக இருந்தான்.

மூர்த்தி, "சரி அதை விடு லக்ஷ்மி... இன்னும் கொஞ்சம் நாள் டைம் கொடு பிரணவ்வுக்கு... அர்ச்சனா தான் நம்ம வீட்டுக்கு மருமகள்னு முடிவெடுத்துட்டோம்... கொஞ்சம் நாள் பொறுக்குறதுல எதுவும் ஆகப் போறதில்ல..." என மனைவியிடம் கூறியவர் பிரணவ்விடம் திரும்பி,

"அப்புறம் பிரணவ்... பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் பத்தி தெரியும்ல... இந்தியா மட்டும் இல்லாம வேர்ல்ட்லயே நம்பர் வன் இடத்துல இருக்குற கம்பனி... அவங்க புதுசா ப்ராஜெக்ட் ஒன்னு ரெடி பண்ணி இருக்காங்க... அவங்க ஃபேக்டரில வர்க் பண்ற வசதி வாய்ப்பு குறைந்த ஐநூறு பேருக்கு அவங்க செலவுல வீடு கட்டி கொடுக்க நினைக்கிறாங்க... இந்த ப்ராஜெக்ட் மட்டும் நம்ம கம்பனிக்கு கிடைச்சா நம்ம கம்பனி பெயர் இந்தியா மட்டும் இல்லாம வேர்ல்ட் லெவல்ல ஃபேமஸ் ஆகும்..." என்றார்.

பிரணவ், "ஓக்கே பா... நான் என்ன பண்ணணும்?" எனத் தந்தையிடம் கேட்க, "டூ டேய்ஸ்ல பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி இந்தியா வராங்க... அவங்கள மீட் பண்ண அப்பாய்ன்மென்ட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்... சோ நீ நாளைக்கே கிளம்பி ஹைதரபாத் போகணும்... அங்க தான் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் மெய்ன் ப்ராஞ்ச் இருக்கு... எப்படியாவது எத்தனை நாள் போனாலும் அவங்கள மீட் பண்ணி இந்த ப்ராஜெக்ட்ட நம்ம கம்பனிக்கு வாங்கி எடுக்குறது உன்னோட பொறுப்பு பிரணவ்..." என்றார் மூர்த்தி.

பிரணவ் சரி எனத் தலையசைக்க, "எதுக்குங்க அவ்வளவு தூரம் பிரணவ்வ தனியா அனுப்புறீங்க? ஆப்பரேஷன் எல்லாம் முடிஞ்சி இப்போ தான் கொஞ்சம் நல்லா இருக்கான்... அதுக்குள்ள நீங்க..." என லக்ஷ்மி குறைப்பட்டார்.

"மா... எதுக்கு ஃபீல் பண்ணுறீங்க? அதான் இப்போ நான் நல்லா இருக்கேனே... அதுவும் இல்லாம ஆகாஷும் என் கூட வரப் போறான்... எனக்கு ஒன்னும் இல்லம்மா..." என்றான் பிரணவ் லக்ஷ்மியை அணைத்துக்கொண்டு புன்னகையுடன்.

மூர்த்தி ஹைதரபாத் போகக் கூறியதில் இருந்து பிரணவ்வின் மனம் காரணமே இன்றி மகிழ்ச்சி அடைந்தது.

அவனின் இதயம் வேறு வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

லக்ஷ்மி, "அப்போ ஒரு கன்டிஷன்... அதுக்கு சம்மதிச்சா தான் நான் பிரணவ்வ ஹைதரபாத் போக அலோ பண்ணுவேன்..." எனப் புதிர் போடவும் தந்தையும் மகனும் அவரைக் கேள்வியாக நோக்கினர்.

"என் மருமகளையும் பிரணவ் கூட கூட்டிட்டுப் போகணும்..." என லக்ஷ்மி கூறவும், "அவ எதுக்கு மா அங்க? நான் என்ன ஊரை சுத்திப் பார்க்கவா போறேன்? கம்பனி விஷயமா போறேன்..." என்றான் பிரணவ் சலிப்பாக.

மூர்த்தி எதுவும் கூறாது அமைதியாக இருக்க, "எனக்கு அதெல்லாம் தெரியாது... அர்ச்சனாவையும் உன் கூட ஹைதரபாத் கூட்டிட்டுப் போகணும்... இல்லன்னா நீயும் போக வேணாம்..." என்றார் லக்ஷ்மி முடிவாக.

பிரணவ், "மா... என்னம்மா?" என ஏதோ கூற வர, "பிரணவ்... அதான் அம்மா சொல்றாங்களே... அர்ச்சனாவும் உன் கூட வரட்டும்... அதுவும் இல்லாம அர்ச்சனா உன் ஆஃபீஸ்ல தானே வர்க் பண்றா... அவ வந்தா உனக்கும் ஹெல்ப்பா இருக்கும்... ஆகாஷும் உன் கூட இருப்பான்ல... சோ எந்தப் பிரச்சினையும் இல்ல... முக்கியமா உனக்கு அர்ச்சனாவைக் காதலிச்ச எந்த ஞாபகமும் இல்லன்னு சொல்ற... ஒருவேளை இந்தப் பயணத்தால அந்த ஞாபகங்கள் கூட திரும்ப வர வாய்ப்பு இருக்குல்ல... அதனால போய்ட்டு வாங்க..." என மூர்த்தி கூறவும் மனமே இன்றி சம்மதித்தான் பிரணவ்.

மறுநாள் காலையிலேயே பிரணவ், ஆகாஷ், அர்ச்சனா மூவருமே விமானத்தில் ஹைதரபாத் பறந்தனர்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 22

சரியாக ஒன்றரை மணி நேரத்தில் ஹைதராபாத்தை அடைந்தது விமானம்.

பிரணவ், ஆகாஷ், அர்ச்சனா மூவரும் செக்கிங் முடித்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் முதலில் ஓய்வெடுப்பதற்காக ஒரு ஹோட்டலை அடைந்தனர்.

பிரணவ், "ஆகாஷ்... ரெண்டு ரூம் மட்டும் புக் பண்ணுங்க... போதும்..." என்கவும் ஆகாஷ் அவனைப் புரியாமல் பார்க்க, அர்ச்சனாவோ வானில் பறக்காத குறை.

பிரணவ் கூறி விட்டதால் ஆகாஷ் வேறு வழியின்றி அவன் கூறியபடியே இரண்டு அறைகளை புக் செய்து சாவிகளை வாங்கி வந்தான்.

அதனைப் பிரணவ்விடம் நீட்டவும் வாங்கிக்கொண்ட பிரணவ் ஒன்றை அர்ச்சனாவிடம் கொடுத்தவன் ஆகாஷிடம் திரும்பி, "நீங்க என் கூட ஸ்டே பண்ணுங்க ஆகாஷ்... ப்ராஜெக்ட் விஷயமா கொஞ்சம் டிஸ்கஸ் பண்ண வேண்டி இருக்கு..." என்கவும் அர்ச்சனாவிற்கு புஸ் என்றானது.

ஆகாஷ், 'ப்ராஜெக்ட் பத்தி பேச ஒரே ரூம்ல தங்கணுமா என்ன?' என யோசித்தவன் அர்ச்சனாவின் முகம் போன போக்கைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, "ஓக்கே பாஸ்..." என்றான் புன்னகையுடன்.

அர்ச்சனா கோபத்தில் அங்கிருந்து விருட்டென சென்று விட, பிரணவ்வும் ஆகாஷும் தமக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றனர்.

ஆகாஷ், "பாஸ்... ப்ரேக் ஃபாஸ்ட் ரூமுக்கே ஆர்டர் பண்ணவா? ஆர் போய் சாப்பிடலாமா?" என்க, "இங்கயே கொண்டு வர சொல்லுங்க ஆகாஷ்..." எனப் பிரணவ் கூறவும் அதன் படி செய்தான் ஆகாஷ்.

பிரணவ், "பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி நாளைக்கு எத்தனை மணிக்கு இந்தியா வராங்க?" எனக் கேட்கவும், "நாளைக்கு மார்னிங் எய்ட் போல வந்துடுவாங்க பாஸ்... த்ரூவா அவங்க கம்பனிக்கு தான் வராங்க... அப்பாய்ன்மென்ட் கேட்டு இருக்கேன்... இன்னைக்கு பதில் சொல்லுவாங்க..." என்றான் ஆகாஷ்.

இருவரும் வேலை விஷயமாக பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்து விட, இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடித்த பிரணவ், "நான் மறந்து போன பீரியட்ல என் லைஃப்ல ஏதாவது முக்கியமான விஷயம் நடந்ததா ஆகாஷ்? நீங்க ஏதாவது சொல்லாம விட்டுட்டீங்களா?" எனத் திடீரென கேட்கவும் ஆகாஷிற்கு அதிர்ச்சியில் புறை ஏறியது.

"மெதுவா மெதுவா ஆகாஷ்... ஏன் ஷாக் ஆகுறீங்க? இந்தாங்க இந்தத் தண்ணீரை குடிங்க..." என பிரணவ் நீர்க் குவளையை நீட்டவும் அதனை அவசரமாக வாங்கிய ஆகாஷ் ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.

அனுபல்லவி சம்பந்தமான விடயங்களையும் பிரணவ்வின் பெற்றோர் பற்றிய விடயத்தையும் தவிர்த்து மற்ற அனைத்து விபரங்களையும் பிரணவ்விற்கு கூறி இருந்தனர்.

பிரணவ்வின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு அனுபல்லவி பற்றிய எந்த விடயங்களையும் ஆகாஷ் அவனுக்கு நினைவுபடுத்த முயலவில்லை.

இப்போது பிரணவ்வே கேட்டதால் பேசாமல் அனுபல்லவியைப் பற்றிக் கூறி விடலாம் என நினைத்து ஆகாஷ் வாய் திறக்க, பிரணவ் மாத்திரை போடுவதைக் கண்டு, 'இல்ல... நான் ஏதாவது சொல்லி பாஸ் அதைப் பத்தி தெரிஞ்சிக்க ஸ்ட்ரெய்ன் பண்ணா அவரோட உயிருக்கு ஆபத்தாகும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க... அவரா தெரிஞ்சிக்கும் போது எல்லாம் தெரிய வரட்டும்...' என முடிவெடுத்தான்.

பிரணவ், "என்ன ஆகாஷ் அமைதியா இருக்கீங்க? ஏதாவது சொல்ல இருக்கா?" எனக் கேட்கவும், "இ...இல்ல பாஸ்... எதுவும் முக்கியமான விஷயம் நடக்கல... எல்லாமே சொல்லிட்டேன்..." என்றான் ஆகாஷ் அவசரமாக.

"ம்ம்ம்..." என முகம் வாடிய பிரணவ் அத்துடன் அமைதியாகி விட, அவர்களின் அறைக் கதவு தட்டப்பட்டது.

ஆகாஷ் சென்று கதவைத் திறக்க, வாசலில் அர்ச்சனா நின்றிருந்தாள்.

ஆகாஷைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த அர்ச்சனா, "பிரணவ்... நாளைக்கு தானே பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டிய மீட் பண்ணணும்... சோ நாம ரெண்டு பேரும் இன்னைக்கு கொஞ்சம் ஊர சுத்தி பார்க்கலாமா? நாம ரெண்டு பேரும் தனியா வெளிய போய் ரொம்ப நாளாச்சு..." என முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கூறவும் ஆகாஷ் அதனைக் கேட்டு ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

பிரணவ் நிச்சயம் மறுத்து விடுவான் என ஆகாஷ் எதிர்ப்பார்க்க, அவனோ எதுவும் கூறாமல் சம்மதிக்கவும் ஆகாஷ் அதிர, அர்ச்சனாவோ வாயெல்லாம் பல்லாகக் காணப்பட்டாள்.

அர்ச்சனா தம்மைப் பற்றி கூறிய எதுவும் பிரணவ்விற்கு நினைவு இல்லாததால் ஏதாவது பழைய விடயங்கள் நினைவு வருமா என்று பார்க்கத் தான் அவளுடன் செல்ல பிரணவ் சம்மதித்தான்.

அவனின் பெற்றோர் கூட அதற்காகத் தானே அர்ச்சனாவை அவனுடன் அனுப்பி வைத்தனர்.

இருவரும் ஹோட்டலில் இருந்து வெளியேறியதும் அர்ச்சனா பிரணவ்வின் கரத்துடன் தன் கரத்தைக் கோர்த்துக் கொள்ள, பிரணவ்விற்கோ தீச்சுட்டார் போல் இருந்தது.

இருந்தும் தன் கரத்தை விலக்காமல் பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தான்.

ஆனால் அவனின் மனமோ, 'காதலித்த பெண் தொட்டும் ஏன் தனக்கு அருவருப்பாக இருக்கிறது?' எனக் கேள்வி கேட்டது.

அர்ச்சனாவிற்கு அதுவே சாதகம் ஆகிப் போக, அவனை இன்னும் நெருங்கிக் கொண்டு சுற்றினாள்.

அர்ச்சனா அழைத்துச் செல்லும் இடம் எல்லாம் வேறு வழியின்றி சென்ற பிரணவ் ஓய்வில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த அர்ச்சனாவிற்கு வெறும் ம்ம்ம் கொட்டினான் பதிலாக.

அவை ஒன்றையும் அர்ச்சனா பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை.

பிரணவ் அமைதியாக இருப்பதால் அவன் தன் பக்கம் சரிய ஆரம்பித்து விட்டான் என நினைத்து ஏதோ பெரிதாக சாதித்து விட்டது போல் மகிழ்ச்சியாக இருந்தாள்.

இருவரும் ஊர் சுற்றி முடிந்து மாலையில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு மீண்டும் சென்றனர்.

மறுநாள் காலையிலேயே பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி. ஐ சந்திக்கச் செல்லத் தயார் ஆகினான் பிரணவ்.

ஏதோ ஒரு பாடலை ஹம்மிங் செய்தபடி மிகவும் உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருந்தவனை விசித்திரமாகப் பார்த்த ஆகாஷ், "பாஸ்... ஆர் யூ ஓக்கே?" எனக் கேட்டான் புரியாமல்.

"எ...எனக்கு என்ன? ஐம் ஓக்கே ஆகாஷ்... ஏன்? என்னாச்சு?" எனப் பிரணவ் தடுமாறவும், "இல்ல பாஸ்... காலைல இருந்து ரொம்ப குஷியா இருக்கீங்க போல... பாட்டு விசில்னு ஹோப்பியா இருக்கீங்க... ரொம்ப வருஷம் கழிச்சு நீங்க இவ்வளவு ஹேப்பியா மனசு விட்டு சிரிச்சு பார்க்குறேன்..." என்றான் ஆகாஷ் புன்னகையுடன்.

பதிலுக்கு புன்னகைத்த பிரணவ், "எனக்கும் தெரியல ஆகாஷ்... பட் சம்திங் ஸ்பெஷலா ஃபீல் பண்ணுறேன் இன்னைக்கு..." என்றான் பிரணவ் தலையைக் கோதி விட்டபடி.

ஆகாஷ், "ஒருவேளை இந்த ப்ராஜெக்ட் நம்ம கம்பனிக்கு தான் கிடைக்க போகுதோ... அதனால இப்படி ஃபீல் ஆகுதா இருக்குமோ?" எனக் கேட்கவும் தோளைக் குலுக்கிய பிரணவ், "தெரியல... சான்ஸ் இருக்கு... பாசிடிவ்வா திங்க் பண்ணலாம்..." என்றான் புன்னகையுடன்.

அவனின் சந்தோஷ மனநிலையைக் கெடுப்பது போலவே அனுமதி கூட வாங்காது உரிமையாய் அவ் அறைக்குள் நுழைந்தாள் அர்ச்சனா.

அவளைக் கண்டு கடுப்பான பிரணவ், "டோன்ட் யூ ஹேவ் எனி மெனர்ஸ் அர்ச்சனா? இப்படி தான் பர்மிஷன் கூட கேட்காம ஒருத்தரோட ரூமுக்குள்ள என்ட்ரி ஆகுவியா?" எனக் கேட்டான் கோபமாக.

அர்ச்சனா, "நான் உங்க ஃபியூச்சர் வைஃப் பிரணவ்... உங்க ரூமுக்கு வர நான் யாரோட பர்மிஷன் கேட்கணும்?" எனக் கேட்டாள் புரியாமல்.

"என் கிட்ட கேட்கணும்... இன்னும் நமக்கு கல்யாணம் ஆகலயே... அதனால தயவு செஞ்சி டிஸ்டான்ஸ் மெய்ன்டெய்ன் பண்ணு... மோர் ஓவர் இது என் ரூம் மட்டும் இல்ல... ஆகாஷும் என் கூட தான் ஸ்டே பண்ணி இருக்கார்... ரெண்டு பசங்க இருக்குற இடத்துல எப்படி நடந்துக்கணும்னு ஃபர்ஸ்ட் கத்துக்கோ... நவ் கெட் அவுட் ஃப்ரம் ஹியர் என்ட் வெய்ட் ஃபார் அஸ் இன் அவுட் சைட்..." எனப் பிரணவ் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, கோபமாக அங்கிருந்து வெளியேறினாள் அர்ச்சனா.

நேற்று பிரணவ் அவளை எதுவும் கூறாது அமைதியாக இருந்ததால் அவன் தன் பக்கம் விழுந்து விட்டதாக எண்ணி இன்னும் அவனை தன் வசப்படுத்தவே அனுமதி கூட வாங்காது உரிமையாய் வந்தாள் அர்ச்சனா.

ஆனால் பிரணவ்வோ அவளை மூக்குடைத்து அனுப்பி விட்டான்.

அதனைக் கண்டு ஆகாஷ் உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டான்.

பிரணவ், "ஷிட்... மூடயே ஸ்பாய்ல் பண்ணிட்டா... இரிட்டேட்டிங் இடியட்... இவளை எல்லாம் எப்படி தான் நான் லவ் பண்ணேனோ?" எனக் கடுகடுக்க, "பாஸ்... பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி இந்தியா ரீச் ஆகிட்டாங்க..‌." என அவனைத் திசை திருப்பினான் ஆகாஷ்.

************************************

பல அடுக்கு மாடிகளைக் கொண்ட வெளிநாட்டு கம்பனிகளைப் போன்று கண்ணைக் கவரும் விதத்தில் இருந்த பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் கம்பனி பரபரப்பாகக் காணப்பட்டது.

ஒரு சிறிய குறை இருந்தால் கூட தம் எம்டியிடம் இருந்து ஏகத்துக்கும் திட்டு விழும் என்பதை அனைத்து ஊழியர்களும் புரிந்து வைத்திருந்தனர்.

கம்பனியில் அவர் கால் எடுத்து வைத்ததில் இருந்தே தன் பீ.ஏவிடம் சின்னச் சின்ன குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டி திட்டிக் கொண்டிருந்தார்.

பிரணவ் ஆகாஷ் மற்றும் அர்ச்சனாவுடன் எம்.டி. ஐ சந்திக்க பல மணி நேரமாகக் காத்திருந்தான்.

அர்ச்சனா, "இன்னும் எவ்வளவு நேரம் தான் வெய்ட் பண்ணுறது? நாங்க இங்க வந்து ஆல்மோஸ்ட் த்ரீ ஹவர்ஸ் ஆகிடுச்சு..." என்றாள் கடுப்பாக.

ஆகாஷ், "அவங்கள சந்திக்க நமக்கு நேத்து அப்பாய்ன்மென்ட் கிடைக்கல... பட் மூர்த்தி சார் எப்படியாவது அவங்கள மீட் பண்ணி இந்த ப்ராஜெக்ட்ட நம்ம கம்பனிக்கு வாங்கிட்டு வர சொன்னாங்க..." என்றான் விளக்கமாக.

"அதுக்காக இவ்வளவு இறங்கி போகணுமா நாம? அதான் மீட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்களே... இன்னும் எதுக்காக நாம இங்க வெய்ட் பண்ணணும்?" என அர்ச்சனா கோபமாகக் கேட்க, ஆகாஷ் எதுவும் கூறாது அமைதியாக இருந்தான்.

பிரணவ்வோ இவை எதையுமே கண்டுகொள்ளாமல் முகத்தில் புன்னகையுடன் எம்.டியின் அறையையே ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தான்.

ஒரு வழியாக ஐந்து மணி நேர காத்திருக்குப் பின் எம்.டியின் பீ.ஏ வந்து மூவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

பிரணவ் முதல் ஆளாக உள் நுழைந்தவன் எம்.டியின் இருக்கையில் யாரையும் காணாது முகம் வாட, அவனைத் தொடர்ந்து வந்த ஆகாஷும் அர்ச்சனாவும் அந்தக் கேபினைப் பார்வையால் அலசினர்.

"மேடம் இப்போ வந்துடுவாங்க... நீங்க கொஞ்சம் நேரம் வெய்ட் பண்ணுங்க சார்..." என்று விட்டு அந்த பீ.ஏ சென்று விட, 'மேடமா?' என ஆகாஷும், 'இவ்வளவு நேரமா வெய்ட் பண்ணது பத்தலயா? இன்னும் வெய்ட் பண்ணணுமா?' என அர்ச்சனாவும் ஒரே சமயம் எண்ணினர்.

அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த பிரணவ்வின் இதயம் ஏனோ வழமையை விட பல மடங்கு வேகமாகத் துடித்தது.

பெருமூச்சு விட்டபடி தன் நெஞ்சை நீவி விட்டவனைக் கலக்கமாகப் பார்த்த ஆகாஷ், "பாஸ் என்னாச்சு?" எனக் கேட்டான் பதட்டமாக.

"நத்திங் ஆகாஷ்... ஜஸ்ட்..." என்ற பிரணவ் ஏதோ சத்தம கேட்டுத் திரும்பிப் பார்க்க, அவனைத் தொடர்ந்து சத்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்த்த ஆகாஷ் மற்றும் அர்ச்சனா அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டனர்.

அந்த அறையின் ஒரு பக்கம் இருந்த கதவு ஒன்றைத் திறந்து கொண்டு ஐந்து வருடங்களுக்கு முன் பார்த்தவளா இவள் என யோசிக்கும் வண்ணம் நடை, உடை, பாவனை அனைத்திலும் தனக்கே உரிய கம்பீரத்துடன் சாதாரண ஒப்பனையில் அதிக வேலைப்பாடற்ற சில்க் சேலை ஒன்றை அணிந்து கழுத்தில் பொன் தாலி மின்ன, முகத்தில் மருந்துக்கும் புன்னகை இன்றி அவர்களை நோக்கி நடந்து வந்தாள் அனுபல்லவி.

அனுபல்லவியை அங்கு எதிர்ப்பார்க்காது ஆகாஷும் அர்ச்சனாவும் அதிர்ந்து நின்றிருக்க, பிரணவ்வோ காரணமே இன்றி அவளின் கழுத்தில் தொங்கிய தாலியையே வெறித்தான்.

"ஏன் நின்னுட்டு இருக்கீங்க? ப்ளீஸ் சிட் டவுன்..." என அனுபல்லவி முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசுவது போல் அந்நிய குரலில் கூறி இருக்கையைக் காட்டவும் அவளின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மூவரும் அமர்ந்தனர்.

அர்ச்சனா, 'சனியன் தொலஞ்சிட்டான்னு கொஞ்சம் காலம் நிம்மதியா இருந்தா திரும்ப வந்துட்டா... ச்சே...' என மனதில் கோபமாக எண்ணியவள் பிரணவ்வைத் திரும்பிப் பார்க்க, ஆகாஷும் பிரணவ்விடம் ஏதாவது மாற்றம் இருக்கிறதா எனத் திரும்பிப் பார்த்தான்.

பிரணவ்வின் பார்வை சென்ற திக்கை இருவரும் குழப்பமாகப் பார்க்க, அப்போது தான் அனுபல்லவியின் கழுத்தில் தொங்கிய பொன் தாலி அவர்களின் பார்வையில் பட்டது.

"அனு உனக்கு..." என ஆகாஷ் அதிர்ச்சியுடன் ஏதோ கூற வர, அவன் முன் கை நீட்டித் தடுத்த அனுபல்லவி, "ஆஃபீஸ் டைம்ல பர்சனல் மேட்டர் பேசுறது எனக்கு பிடிக்காது..." என்றாள் இறுகிய குரலில்.

சில நொடி அமைதிக்குப் பின் தொண்டையைச் செறுமிய அனுபல்லவி பேச்சைத் தொடங்கினாள்.

அதில் தன்னிலை அடைந்த பிரணவ் அவளின் முகம் நோக்க, அவனின் மனமோ, 'யார் இவங்க? ஏன் இவங்கள பார்த்தா எனக்குள்ள ஏதோ பண்ணுது... பட் அது என்னன்னு தான் புரியல...' எனக் கேள்வி எழுப்பியது.

வேறு சிந்தனையில் மூழ்கி இருந்த பிரணவ் ஆகாஷ் அனுபல்லவியை உரிமையாக அழைத்ததைக் கவனிக்கவில்லை.

அன்று ஆப்பரேஷனின் பின் சில நொடிகள் தூரத்தில் அனுபல்லவியைக் கண்டதால் பிரணவ்விற்கு அவளை நினைவில் இல்லை.

காலையில் இருந்த உற்சாகம் வடிந்து போய் அதன் காரணம் கூட புரியாது அமர்ந்து இருந்தான் பிரணவ்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 23

"சொல்லுங்க... என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்து இருக்கீங்க?" என அழுத்தமான குரலில் கேட்டாள் அனுபல்லவி.

அதில் தன்னிலை அடைந்த பிரணவ் ஆகாஷிற்கு கண் ஜாடை காட்ட, அதனைப் புரிந்து கொண்ட ஆகாஷ், "உங்க கம்பனி புதுசா ஒரு ப்ராஜெக்ட் பண்ண போறதா கேள்விப்பட்டோம்... எங்க எம்.எல். கான்ஸ்ட்ரக்ஷன்ஸ் கூட இந்தியால ஃபேமஸ் என்ட் டாப் ஃபைவ்ல இருக்கு... உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்... இது எங்க எம்.டி பிரணவ் ராஜ்... இந்த ப்ராஜெக்ட் எங்க கம்பனிக்கு கிடைச்சா அதை பெஸ்ட்டா பண்ணி கொடுக்க முடியும்னு நினைக்கிறோம்... இந்தப் பாட்னர்ஷிப்னால எங்க கம்பனியும் அடுத்த கட்டத்துக்கு போக முடியும்..." என விளக்கினான்.

ஆகாஷ் பேசிக் கொண்டிருக்க, பிரணவ்வின் பார்வையோ அனுபல்லவியின் முகத்திலேயே நிலைத்து இருந்தது.

ஆனால் அனுபல்லவியோ அது தன்னைக் கொஞ்சம் கூட பாதிக்கவில்லை என்பது போல் அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.

ஆகாஷ் விளக்கியதும் தன் இருக்கையில் கை கட்டி சாய்ந்து அமர்ந்து கொண்ட அனுபல்லவி, "ஹ்ம்ம்... பட் இந்த ப்ராஜெக்ட்டை யாருக்கு கொடுக்குறோமுங்குறதை வழமையை போலவே மீட்டிங் வெச்சி தானே முடிவு பண்ணுவோம்... அது கூட உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே... நெக்ஸ்ட் வீக் தானே அந்த மீட்டிங் இருக்கு... அப்படி இருக்கும் போது நீங்க இன்னைக்கே வந்து என்னை மீட் பண்ணி இந்த ப்ராஜெக்ட்ட உங்க கம்பனிக்கு கொடுக்க சொன்னா அது எந்த விதத்துல நியாயம்? நான் இதுக்கு சம்மதிப்பேன்னு நீங்க எப்படி எதிர்ப்பார்க்கலாம்?" என மிடுக்காகக் கேட்டாள்.

அனுபல்லவியின் குரலில் இருந்த அழுத்தமும் அவள் தனக்கே உரிய கம்பீரத்தில் பேசுவதும் ஆகாஷையே அடுத்த வார்த்தை பேசத் தயங்கச் செய்தது.

அர்ச்சனாவோ அனுபல்லவியின் கழுத்தில் இருந்த தாலியைக் கண்டு விட்டு இனிமேல் அவளால் தனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என உற்சாகமாக காணப்பட்டாள்.

பிரணவ், "அது தானே சிறந்த பிஸ்னஸ் மேனுக்கு அழகு..." என இவ்வளவு நேரமும் இருந்த அமைதியைக் கலைத்து அதே மிடுக்குடன் கூற, ஒற்றைப் புருவம் உயர்த்தி அவனைக் கேள்வியாய் நோக்கினாள் அனுபல்லவி.

இப்போது அனுபல்லவியைப் போலவே மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி சாய்ந்து அமர்ந்துகொண்ட பிரணவ், "நல்ல பிஸ்னஸ் மேனா இருக்க வெறும் அறிவு மட்டும் போதாதுன்னு நினைக்குறேன் மிஸ் பல்லவி... சாமர்த்தியமும் அவசியம்..." என்றான் இள நகையுடன்.

இருவரின் விழிகளுமே ஒரு நொடி நேருக்கு நேராய் சந்தித்தன‌.

அனுபல்லவியோ கண்களில் வெறுமையுடன் பிரணவ்வை நோக்க, பிரணவ்வோ அனுபல்லவியின் விழிகளில் எதையோ தேடி அது கிடைக்காது ஏமாந்து போனான்‌.

திடீரென கதவு திறக்கும் சத்தத்தில் இருவரும் தன்னிலை அடைந்து பார்வையை விலக்கினர்.

"அனு இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க? அங்க..." என ஏதோ கூறிக் கொண்டு வந்த பிரதாப் அங்கு நின்ற மூவரையும் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

பிரணவ் அனுபல்லவியை இவ்வளவு உரிமையாக அழைக்கும் அந்த ஆடவனை யார் எனும் விதமாக நோக்க, ஆகாஷும் அர்ச்சனாவும் பிரதாப்பை அங்கு கண்டு அதிர்ந்தனர்.

அர்ச்சனா, 'அப்போ இவன் தான் அனு புருஷனா? அதான் இவனோட கான்டாக்டே கிடைக்கல போல...' என எண்ணினாள்.

ஆகாஷ் பிரதாப்பைக் கண்டு ஆத்திரத்தில் நின்றிருந்தான்.

பிரணவ் மூலம் பிரதாப் செய்த அனைத்து காரியங்களும் ஆகாஷும் அறிந்ததே.

பிரணவ், ஆகாஷ், அர்ச்சனா என மூவரும் வெவ்வேறு சிந்தனையில் பிரதாப்பின் மீது பார்வையைப் பதித்திருக்க, பிரதாப்போ அனுபல்லவியைக் கேள்வியாக நோக்கினான்.

தொண்டையைக் கனைத்து அவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிய அனுபல்லவி, "நீங்க சொன்ன விஷயத்தைப் பத்தி நான் கொஞ்சம் யோசிக்கணும்... இந்த ப்ராஜெக்ட் யாருக்கு கொடுக்கணும்ங்குறத டிசைட் பண்ணிட்டு எதுவா இருந்தாலும் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுறோம்... இப்போ நீங்க கிளம்பலாம்..." என்றவள் அத்துடன் பேச்சு முடிந்ததாக அவ்விடம் விட்டுக் கிளம்பினாள்.

செல்லும் வழியில் குழப்பத்தில் நின்றிருந்த பிரதாப்பிடம், "நான் கார்ல வெய்ட் பண்ணுறேன்... சீக்கிரம் வந்து சேருங்க மாமா..." என்று விட்டு அனுபல்லவி வெளியேறி விட, அவள் பிரதாப்பை மாமா என் அழைத்தது காரணமே இல்லாமல் பிரணவ்வின் உள்ளத்தை வதைத்தது.

பிரணவ்வின் முன் பிரதாப்பை எதுவும் செய்ய முடியாத கோபத்தில் ஆகாஷ் பல்லைக் கடித்துக்கொண்டு நின்றிருக்க, அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல், "வாங்க ஆகாஷ் கிளம்பலாம்..." என்று ஆகாஷுடன் அங்கிருந்து வெளியேறினான் பிரணவ்.

அனைவரும் சென்றதும் தனியே நின்ற பிரதாப்பை நெருங்கிய அர்ச்சனா, "நீ தான் அனுவ கல்யாணம் பண்ணிக்கிட்டியா?" என உற்சாகமாக் கேட்க, பிரதாப் ஆம் எனத் தலையசைக்கவும், "அன்னைக்கு அனுவ என் வழியில இருந்து தூக்குறேன்னு சொல்லிட்டு வெச்சிட்ட..‌. அப்புறம் கொஞ்சம் நாள்ல அனுவயும் காணோம்... உன்னயும் காணோம்... பார்த்தா நீயே அனுவ கல்யாணம் பண்ணிக்கிட்ட போல... எப்படியோ எனக்கு இருந்த பெரிய தலைவலி ஒழிஞ்சது... இனிமே பிரணவ்வ யாராலயும் என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது..." என்றாள் அர்ச்சனா கண்கள் மின்ன.

பிரதாப், "இன்னும் நீ அப்போ பிரணவ்வ கல்யாணம் பண்ணிக்கலயா?" எனக் குழப்பமாகக் கேட்டான்.

"அந்தக் கொடுமைய ஏன் கேட்குற? அனுவும் போய்ட்டா... பிரணவ்வுக்கும் பழசு எல்லாம் மறந்திடுச்சு... சரின்னு ஒரு நாடகத்த போட்டு அவன் அப்பா அம்மாவ கரெக்ட் பண்ணேன்... சீக்கிரமா அவன கல்யாணம் பண்ணி மொத்த சொத்தையும் அனுபவிக்கலாம்னு பார்த்தா இந்தப் பிரணவ் இழுத்துட்டே இருக்கான்... இந்தத் தடவ ஊருக்குப் போனதும் முதல் வேலையா கல்யாணத்த நடத்தணும்... ஆமா... இந்த அனு எப்படி இவ்வளவு பெரிய கம்பனிக்கு எம்.டி ஆனா?" எனக் கேட்டாள் அர்ச்சனா.

பிரதாப் ஏதோ கூற வர, அதற்குள் அனுபல்லவி அவனுக்கு அழைத்திருந்தான்.

அதனை எடுத்துப் பார்த்தவன், "நான் உன் கிட்ட அப்புறம் பேசுறேன் அர்ச்சனா... இப்போ நான் அவசரமா போய் ஆகணும்..." என்ற பிரதாப் அர்ச்சனாவின் பதிலைக் கூட எதிர்ப்பாராது அங்கிருந்து சென்று விட்டான்.

பிரதாப் சென்றதும் தோளைக் குலுக்கிய அர்ச்சனா, "எப்படியோ இந்த அனு சேப்டர் க்ளோஸ்ட்... இந்த ப்ராஜெக்ட் எப்படியாவது பிரணவ்வுக்கு கிடைக்க விடாம பண்ணணும்... இல்லன்னா திரும்ப அந்த அனு எங்க லைஃப்ல இடைஞ்சலா வர சான்ஸ் இருக்கு... அதுக்கு பிரதாப் கிட்ட சொல்லி ஏதாவது பண்ணணும்..." எனத் தனக்கே கூறிக் கொண்டாள்.

கார் பின் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்த அனுபல்லவி கார்க் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கவும் மெதுவாக விழி திறந்தாள்.

ட்ரைவர் சீட்டில் ஏறி அமர்ந்த பிரதாப் அனுபல்லவியின் பக்கம் புன்னகையுடன் திரும்பி, "அனு நீ என்னை..." என ஏதோ கூற வர, அனுபல்லவி அவனை விழிகளாலேயே எரித்தாள்.

அதில் பிரதாப்பின் வாய் தன்னால் மூடிக்கொள்ள, எதுவும் பேசாது காரை இயக்கினான்.

பல வருடங்களாக தனக்குள் அடக்கி வைத்திருந்த மொத்த வலியும் பிரணவ்வை மீண்டும் கண்டதும் வெளியில் வரத் துடித்தன.

விழி மூடிப் சாய்ந்து இருந்தவளின் கன்னம் தாண்டி கண்ணீர் வழிந்தோட, நினைவுகளோ எங்கொங்கோ தறிகெட்டு ஓடின.

************************************

இங்கு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்த மூவரும் தம் அறையில் தஞ்சம் அடைந்தனர்.

பிரணவ் வந்ததுமே குளிக்கச் செல்வதாகக் கூறி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

ஷவரைத் திறந்து விட்டு அதன் கீழ் நின்றிருந்த பிரணவ்விற்கு ஏன் என்றே தெரியாமல் மனம் வாடியது.

பிரணவ், 'யார் அவ? இதுக்கு முன்னாடி நான் அவள பார்த்ததா கூட நினைவு இல்லயே... ஆனா ஏன் அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சதும் எனக்கு வலிக்கிறது?' என மனதில் தன்னையே கேட்டுக் கொண்டான்.

எவ்வளவு யோசித்தும் அனுபல்லவியைப் பற்றிய எந்த நினைவுமே அவனுக்கு எழவில்லை.

மாறாக தலைவலி வந்தது தான் மிச்சம்.

'ப்ச்... நான் தான் சும்மா கண்டதையும் யோசிக்கிறேன் போல... அவளுக்கும் எனக்கும் தான் எந்த சம்பந்தமும் இல்லயே... எனக்கு அவள முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஆகாஷ் கண்டிப்பா சொல்லி இருப்பான்... ஷ்ஷ்... இனிமே எதைப் பத்தியும் யோசிக்கக் கூடாது... வந்த வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் கிளம்புற வழிய பார்க்கணும்...' எனத் தன்னையே கடிந்து கொண்டான் பிரணவ்.

ஆகாஷோ பால்கனியில் நின்று சாருமதியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

"நிஜமா தான் மதி... அவ நம்ம அனுவே தான்... ஆனா மொத்தமா மாறிட்டா... என்னால நம்பவே முடியல... அவ கூட சரியா பேச கூட முடியல... முன்ன பின்ன தெரியாதவங்க போல எங்க கிட்ட நடந்துக்கிட்டா..." என ஆகாஷ் கூறவும் மறுபக்கம் அழைப்பில் இருந்த சாருமதி,

"ஏன் ஆகாஷ் அவ கூட பேசல? அவளுக்கு என்ன ஆச்சுன்னு கேட்க வேண்டியது தானே‌‌..." எனத் திட்டினாள்.

ஆகாஷ், "ப்ச் மதி... நான் என்ன வேணும்னா பேசல? அவ தான் என்னைப் பேசவே விடல... முன்னாடி இருந்த இனசன்ட் அனுபல்லவி இல்ல அவ... ஒரு மாதிரி... எனக்கு சொல்லத் தெரியல மதி..‌. நீயே அவள பார்த்தா ஷாக் ஆகுவ... அதுவும் இல்லாம அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு... கழுத்துல தாலியோட இருந்தா..." என்கவும் ஏகத்துக்கும் அதிர்ந்தாள் சாருமதி.

சாருமதி, "எ...என்ன ஆகாஷ் சொல்றீங்க? அ...அப்போ பிரணவ் சார்?" என அதிர்ச்சி மாறாமல் கேட்டாள்.

"ஆமா மதி... அனுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு... பாஸுக்கு தான் அனுவ சுத்தமா ஞாபகம் இல்லயே... இன்னைக்கு அனுவ பார்த்ததுக்கு அப்புறம் கூட அவர் கிட்ட எந்த ஒரு மாற்றமும் இருக்கல... அதான் அனுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சே... இனிமே பாஸுக்கு அனு பத்தி நினைவு வந்தா என்ன? வரலன்னா என்ன?" என்றான் ஆகாஷ் கசந்த புன்னகையுடன்.

சில நொடிகள் மௌனமாக இருந்த சாருமதி, "அனு யாரைக் கல்யாணம் பண்ணி இருக்கான்னு தெரிஞ்சிதா?" எனக் கேள்வியாய் நிறுத்த, "தெரியல... ஆனா அந்தப் பிரதாப் அவ கூட தான் இருந்தான்... அவனைத் தான் கல்யாணம் பண்ணி இருக்கான்னு நினைக்கிறேன்..." என்றான் கோபமாக ஆகாஷ்.

சாருமதி, "அந்தக் கேடு கெட்டவனையா அனு கல்யாணம் பண்ணி இருக்கா? அவளுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா? நான் உடனே கிளம்பி ஹைதரபாத் வரேன்... அவள நேரா பார்த்து நல்லா நாலு கேட்கணும்... என்ன தைரியம் இருந்தா அவ பெஸ்ட் ஃப்ரெண்ட் என் கிட்ட கூட சொல்லாம இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருப்பா..." என ஆத்திரப்பட்டாள்.

ஆகாஷ், "வேணாம் மதி... அவ எங்க யாரு கூடவும் பேச விரும்பல... முதல்ல நான் எப்படியாவது அவ கூட பேசி எல்லாம் தெரிஞ்சிக்க பார்க்குறேன்... அப்புறம் நீ வா..." என்றவன் பிரணவ் வரும் அரவம் கேட்டு, "சரி மதி... பாஸ் வந்துட்டார்... நான் உன் கூட அப்புறம் பேசுறேன்... பாய்... லவ் யூ..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

பால்கனியில் இருந்து அறைக்குள் நுழைந்தவனைத் தலையைத் துவட்டியபடி பிரணவ் கேள்வியாக நோக்க, "மதி கூட பேசிட்டு இருந்தேன் சார்..." எனப் பதிலளித்தான் ஆகாஷ்.

"ம்ம்ம்..." என்று விட்டு பிரணவ் தலையைத் துவட்ட, "பாஸ்... லஞ்ச் ஆர்டர் பண்ணட்டுமா?" எனக் கேட்டான் ஆகாஷ்.

மறுப்பாகத் தலையசைத்த பிரணவ், "வேணாம் ஆகாஷ்... நீங்க கீழ போய் சாப்பிட்டுட்டு வாங்க... எனக்கு எதுவும் வேணாம்... ஒரு டூ ஹவர்ஸ் என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்... முக்கியமா யாரை சொல்றேன்னு புரிஞ்சிருக்கும்..." என்கவும் புரிந்ததாகத் தலையசைத்து விட்டு வெளியேறினான் ஆகாஷ்.

ஆகாஷ் சென்றதும் கட்டிலில் விழுந்த பிரணவ்விற்கு மீண்டும் அனுபல்லவியின் நினைவே எழ, தூக்க மாத்திரை ஒன்றைக் குடித்து விட்டு உறங்கினான்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 24

மறுநாள் விடிந்ததுமே பிரணவ் மற்றும் ஆகாஷ் தங்கியிருந்த அறைக் கதவைத் தட்டினாள் அர்ச்சனா.

ஆகாஷ் சலிப்புடன் சென்று கதவைத் திறக்கவும் அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த அர்ச்சனா அப்போது தான் குளித்து உடை மாற்றி விட்டு வந்த பிரணவ்விடம், "அதான் அந்தப் ப்ராஜெக்ட் யாருக்கு கொடுக்குறாங்கன்னு மீட்டிங் வெச்சி டிசைட் பண்ணுறதா சொல்லிட்டாங்களே... இன்னும் ஏன் நாம இங்கயே இருக்கோம்? கிளம்பலாம் தானே..." என்றாள்.

எங்கு இங்கு இருந்தால் மீண்டும் பிரணவ் அனுபல்லவியை சந்திக்க நேரிட்டு அதனால் பிரணவ்வின் பழைய நினைவுகள் வந்து விடுமோ என்ற பயம் அவளுக்கு.

"யாரும் உன்ன எங்க கூட வான்னு கட்டாயப்படுத்தல... நீயா தான் வந்த... போறதுன்னாலும் தாராளமா போ... ஐ டோன்ட் கேர்..." என்றான் பிரணவ் அழுத்தமாக.

ஆகாஷின் முன் பிரணவ் தன்னை அவமானப்படுத்தியதில் முகம் சிறுத்த அர்ச்சனா அதனை வெளிக்காட்டாது மறைத்தாள்.

பின் போலிப் புன்னகையை முகத்தில் ஏந்தி, "அ...அது இல்ல பிரணவ்... அவங்க எப்படி பேசினாங்கன்னு பார்த்தேல்ல... பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் அளவுக்கு இல்லன்னாலும் நம்ம கம்பனியும் டாப் ஃபைவ்ல தான் இருக்கு... ஆனா அவங்க நம்மள மதிக்காம எப்படி திமிரா பேசினாங்க? நாம எதுக்கு அவங்க கிட்ட அடி பணிஞ்சி போகணும்?" எனக் கேட்டாள் அர்ச்சனா.

"அவ அவனுக்கு அவனவன் கவலை..." என நக்கலாக முணுமுணுத்தான் ஆகாஷ்.

ஆகாஷைத் திரும்பி அர்ச்சனா முறைத்து வைக்க, "இங்க யாரும் திமிரா நடந்துக்கவும் இல்ல... அடி பணிஞ்சி போகவும் இல்ல... இதுக்கு தான் பிஸ்னஸ் மைன்ட் வேணும்ங்குறது... உன்ன எல்லாம் எப்படி தான் வேலைக்கு சேர்த்தேனோ? இதுல காதல் வேறயாம்..." என்றான் பிரணவ் கடுப்பாக.

அர்ச்சனா இடைமறித்து ஏதோ கூற வர, "இங்க பாரு அர்ச்சனா... இந்த ப்ராஜெக்ட் எங்க கம்பனிக்கு ரொம்ப முக்கியமானது... அதுக்காக நான் எந்த எல்லைக்கும் இறங்கி போவேன்... உனக்கு இங்க இருக்க பிடிக்கலனா தயவு செஞ்சி போயிடு... நான் நிம்மதியா இருப்பேன்... ஆகாஷ்... உடனே இவளுக்கு பெங்களூர் கிளம்ப டிக்கெட் புக் பண்ணு..." என உத்தரவிட்டான் பிரணவ்.

ஆகாஷ் கைப்பேசியை எடுக்கவும், "இ...இல்ல இல்ல... நான் போகல... இங்கயே இருக்கேன்... நம்ம கம்பனிக்காக தானே... கொ.. கொஞ்சம் இறங்கி போறதுல தப்பில்ல..." என்றாள் அர்ச்சனா சமாளிப்பாக.

அர்ச்சனா அங்கிருந்து சென்று விடவும் ஆகாஷிடம் திரும்பிய பிரணவ், "நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்... ஏதாவது அர்ஜென்ட்டா இருந்தா மட்டும் கால் பண்ணுங்க..." என்கவும், "நானும் கூட வரட்டா பாஸ்?" எனக் கேட்டான் ஆகாஷ்.

பிரணவ் பார்த்த பார்வையில் கப்சிப் என வாயை மூடிக்கொண்ட ஆகாஷ், "நீங்க போய்ட்டு வாங்க பாஸ்... இங்க நான் சமாளிக்கிறேன்..." என்றான் அவசரமாக.

பிரணவ் அங்கிருந்து கிளம்பியதும் ஆகாஷ் அனுபல்லவியின் அலுவலகத்திற்கு அழைத்து ஏதோ விசாரித்தான்.

அவனுக்கு தேவையான பதில் கிடைத்ததும் ஆகாஷின் முகத்தில் புன்னகை குடி கொண்டது.

உடனே தன்னவளுக்கு அழைத்து ஏதோ கூறினான்.

இங்கு பிரணவ்வோ ஹைதரபாத்தில் இருந்த புகழ் பெற்ற பார்க் ஒன்றிற்கு வந்திருந்தான்.

ஒரு ஓரமாக இருந்த கல் பெஞ்ச் ஒன்றில் கண்களை மூடி அமர்ந்த பிரணவ் முதன் முறை அக் காரியத்தை செய்தான்.

தாயின் கட்டளையின் பெயரில் தான் மறந்த நினைவுகளை மீட்க இந்த ஐந்து வருடங்களும் முயலாதவன் ஏதோ ஒன்றை எதிர்ப்பார்த்து தன் நினைவடுக்குகளைத் துலாவினான்.

முன்பெல்லாம் போல் அல்லாது அனுபல்லவியைப் பார்த்ததில் இருந்து அவனின் மனம் அவனிடம் ஏதோ கூற முயலுவதாக உணர்ந்தான்.

ஆனால் அது என்னவென்று தான் அவனுக்குப் புரியவில்லை.

தான் இழந்த ஏதோ ஒன்று இங்கு இருப்பதாக உணர்ந்தான் பிரணவ்.

தான் காதலித்ததாகக் கூறப்படும் அர்ச்சனாவைக் காணும் போது வராத உணர்வு அனுபல்லவியைக் காணும் போது அவனுள் எழுந்தது.

ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணைப் பற்றி தான் இவ்வாறு உணர்வது சரியா தவறா என்று எல்லாம் அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் தான் தொலைத்த ஏதோ ஒன்று நிச்சயமாக இங்கிருப்பதாக நம்பினான்.

எவ்வளவு தான் யோசித்தும் அவனின் நினைவடுக்குகளில் சேமிக்கப்பட்டிருந்த எதுவும் அவன் நினைவில் வரவில்லை.

மாறாக தலைவலி வந்தது தான் மிச்சம்.

இதற்கு மேல் முயற்சித்தால் அன்னை பயப்படுவது போல் ஏதாவது நடந்து விடும் எனப் புரிந்துகொண்ட பிரணவ் மெதுவாக விழிகளைத் திறந்து பார்த்தான்.

அதேநேரம் அவனுக்கு முன்னே சில அடிகள் தூரத்தில் ஒரு ஆண் குழந்தை பிரணவ் இருந்த திசையைப் பார்த்து, "அப்பா..." என தன் மழலைக் குரலில் மகிழ்ச்சியாக அழைத்தவாறு அவனை நோக்கி ஓடி வந்தது.

ஒரு நொடி பிரணவ்வின் உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கியது.

மயிர்க்கால்கள் எல்லாம் பரவசத்தில் எழுந்து நின்றன.

பிரணவ்விற்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு.

ஆனால் அதே நேரம் பிரணவ்வின் பின்னால் இருந்து அந்தக் குழந்தையை நோக்கி நடந்த ஒரு ஆடவன், "எங்க பாப்பா போன அதுக்குள்ள?" என்றவாறு அக் குழந்தையைத் தூக்கிக் கொண்டான்.

ஏதோ ஒரு ஏமாற்றம் பிரணவ்வின் நெஞ்சில் எழுந்து அவனை வதைத்தது.

தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை.

அதைப் பற்றி யோசிக்கும் முன்னே, "பிரணவ்... இங்க தான் இருக்கீங்களா?" என்றபடி அவன் முன் வந்து நின்றாள் அர்ச்சனா.

அர்ச்சனாவைக் கண்டதும் எழுந்த ஆத்திரத்தை அடக்க தன் முடியை அழுத்திக் கோதிய பிரணவ், "நீ இங்க என்ன பண்ணுற?" என்றான் எரிச்சலாக.

"நீங்க தனியா எங்கயோ கிளம்பி போறதைப் பார்த்தேன்... அதான் உங்க கூட வரலாமேன்னு வந்தேன்... அதுக்குள்ள நீங்க கிளம்பிட்டீங்க... அதான் உங்கள ஃபாலோ பண்ணி வந்தேன்..." என்றாள் அர்ச்சனா புன்னகையுடன்.

அவள் உரிமையாகப் பேசும் ஒவ்வொரு முறையும் கன்னத்தில் 'பளார்' என அறையத் துடிக்கும் தன் கரத்தை இறுக்கி மூடிக் கொண்ட பிரணவ், "கொஞ்சம் நேரம் கூட என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா? ச்சே..." எனக் கடிந்து கொண்டு விட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பினான்.

அர்ச்சனாவும் அவனைப் பின் தொடர்ந்து அவசரமாக ஓடினாள்.

************************************

வாடிய கொடியாய் கட்டிலில் மருத்துவ உபகரணங்களுக்கு நடுவே படுத்துக் கிடந்தவரின் தலையைக் கோதி விட்டு அவருக்கு மெதுவாக கூழைப் பருக்கினாள் அனுபல்லவி.

அவரின் விழிகள் அனுபல்லவியின் முகத்தைப் பார்த்து கண்ணீர் சிந்த, உதடுகளோ ஏதோ கூற முயன்று அசைந்தன.

அவரின் விழி நீரைத் துடைத்து விட்ட அனுபல்லவி, "அதான் நான் உங்க கூட இருக்கேன்லப்பா... எதை நினைச்சும் கவலைப்படாதீங்க..." என்றாள் வரவழைத்த புன்னகையுடன்.

மறுப்பாகத் தலையசைத்தவரோ, "நீ...நீ... என்...என்...னால..." என ஏதோ கூற முயன்றார்.

அனுபல்லவி, "ஷ்ஷ்ஷ்... அதான் சொன்னேனே... எதுவும் பேசாதீங்க... எல்லாம் மறந்துடுங்க... எனக்குன்னு நீங்க இருக்கீங்களே... அது போதும்... நான் சந்தோஷமா தான் இருக்கேன்..." என்கவும், "அ...அம்மா... அம்மா..." என அவர் கண்ணீர் வடிக்கவும் தன்னையும் மீறி கண்ணீர் வடித்தாள் அனுபல்லவி.

"அவங்க வாழ்க்கை அவ்வளவு தான் பா... பிறந்ததிலிருந்து எந்த சந்தோஷமும் அனுபவிக்காமலே போய் சேரணும்னு அவங்க விதி போல... நீங்க காரணம் இல்லப்பா..." என்றாள் அனுபல்லவி சமாதானமாக.

அப்போது சரியாக பிரதாப் அவ் அறைக்குள் தயக்கமாக நுழையவும், "இ...இவன்... இவன்..." என ஆவேசமாக எழ முயன்றவரை, "அப்பா... அமைதியா இருங்க தயவு செஞ்சி..." என லேசாக அனுபல்லவி அதட்டவும் அவர் முகம் வாடினார்.

பெருமூச்சு விட்ட அனுபல்லவி தந்தையின் கரத்தைப் பற்றி, "அப்பா... அதான் தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிக்கிறாங்களே... அதுக்காக மாமா பண்ணது சரின்னு சொல்லல... அவருக்கு நான் கொடுத்து இருக்குற தண்டனையே போதும்... நீங்க எதையும் நினைச்சி வருத்தப்படாதீங்க... உங்கள இந்த நிலமைக்கு கொண்டு வந்தவங்கள நிச்சயம் நான் சும்மா விட மாட்டேன்..." என்றாள் உறுதியாய்.

அத்துடன் அமைதியானவருக்கு தேவையான மருந்தைக் கொடுக்கவும் அவர் உறங்கி விட, அறை வாயிலில் தயக்கமாக நின்றிருந்த பிரதாப்பை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் அனுபல்லவி.

************************************

அனுபல்லவி தன் அலுவலக அறையில் அமர்ந்து ஏதோ கோப்புகளை புரட்டிக் கொண்டிருக்க, புயல் வேகத்தில் அங்கு நுழைந்தான் பிரணவ்.

கோபமாக தன் இருக்கையை விட்டு எழுந்த அனுபல்லவி, "மிஸ்டர் பிரணவ்... கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லயா? இப்படி தான் பர்மிஷன் வாங்காம ஒருத்தரோட கேபின் உள்ள நுழைவீங்களா?" எனக் கேட்டாள் பல்லைக் கடித்துக்கொண்டு.

இதழில் கேலி நகையோட அனுபல்லவியின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்த பிரணவ், "எனக்கு மேனர்ஸ் இல்லன்னே வெச்சிக்கலாம்... ஆனா பல்லவி மேடமுக்கு நேர்மைன்னா என்னன்னு தெரியுமா? இல்ல நேர்மைக்கு எத்தனை எழுத்துன்னு கூட தெரியாததனால தான் ஜஸ்ட் ப்ராஜெக்ட் லீடரா இருந்தவங்க அஞ்சி வருஷத்துக்குள்ள ஒரு கம்பனிக்கே எம்.டி ஆகி இருக்கீங்களா?" எனக் கேட்டான் திமிருடன்.

ஒரு நொடி பிரணவ்விற்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டதோ என அனுபல்லவியின் முகம் மாற, மறு நொடியே அதனைப் பிரணவ்விற்கு காட்டாது மறைத்தவள் அதே திமிருடன், "ஓஹ்... உங்க கம்பனில வர்க் பண்ணி உங்க கிட்ட கை ஏந்தி சம்பளம் வாங்கிட்டு இருந்தவ இப்போ உங்கள விட உயர்ந்த இடத்துல இருக்குறதனால பிரணவ் சாருக்கு பொறாமையா இருக்கு போல..." என்றாள் எள்ளலுடன்.

நொடி நேரம் என்றாலும் அனுபல்லவியின் முகத்தில் வந்து சென்ற மாற்றத்தை அவதானித்து விட்டான் பிரணவ்.

அவளின் திமிர் கலந்த பேச்சை வெகுவாக ரசித்த பிரணவ் அனுபல்லவியின் முகத்தை ரசனையுடன் நோக்கினான்.

பிரணவ்வின் பார்வையில் தடுமாறிய அனுபல்லவி அவசரமாக தண்ணீரைக் குடித்து தன்னை சமன்படுத்திக்கொள்ள, பிரணவ்வின் பார்வை மெதுவாக அவளின் முகத்தை விட்டு கீழிறங்கி அவளின் கழுத்தில் தொங்கிய பொன் தாலியில் நிலைத்து நின்றது.

மறு நொடியே பிரணவ்வின் தாடை இறுக, அனுபல்லவியை ஆத்திரத்துடன் நோக்கியவன், "என்ன தைரியம் இருந்தா எங்க கிட்ட ப்ராஜெக்ட்டை யாருக்கு தரணும்னு யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு எங்க கம்பனிக்கு எதிரா வேலை பார்க்குற கம்பனிக்கு கொடுக்க ரகசியமா டீல் பேசி இருப்ப?" எனக் கேட்டான் பல்லைக் கடித்துக்கொண்டு.

பிரணவ்வின் பேச்சில் குழம்பிய அனுபல்லவி ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவனைத் திமிருடன் நோக்கி விட்டு, "உன் கம்பனிக்கு இந்த ப்ராஜெக்ட்டை கொடுக்க விரும்பலன்னு அர்த்தம்..." என்றவள், "என் இடத்துக்கே வந்து என்னையே மரியாதை இல்லாம பேசுறீங்க... மரியாதை கொடுத்தா மட்டும் தான் மரியாதை திரும்ப கிடைக்கும்..." என்றாள் அழுத்தமாக.

அவளை ரசனையாக நோக்கிய பிரணவ் தன் இருக்கையை விட்டு எழுந்து அனுபல்லவியை நோக்கிக் குனிந்தான்.

அதில் தடுமாறி அனுபல்லவி இருக்கையின் பின்னே சாய, "உரிமை உள்ள இடத்துல மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன் மிஸ் ப....ல்லவி..." என இழுத்துக் கூறியவன் மேலும் குனியவும் அனுபல்லவியின் விழிகள் தன்னால் மூடிக் கொண்டன‌.

வெகுநேரம் கழித்தும் எதுவும் நடக்காததால் அனுபல்லவி மெதுவாக இமைகளைத் திறக்க, அவளையே குறும்புப் புன்னகையுடன் மார்பின் குறுக்கே கை கட்டி பார்த்துக் கொண்டிருந்தான் பிரணவ்.

இவ்வளவு நடந்தும் பிரணவ்வின் அருகாமையில் தடுமாறும் தன் மனதை வறுத்தெடுத்த அனுபல்லவி பிரணவ்வை ஏகத்துக்கும் முறைத்தாள்.

பிரணவ், "எனக்கு சொந்தமான பொருளை என் கிட்டயே எப்படி வர வைக்கணும்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்... அதுக்காக எந்த எல்லைக்கும் போவேன்.‌‌.." என்றவனை அனுபல்லவி பயத்துடன் ஏறிட, "ப்ராஜெக்ட் பத்தி சொன்னேன் மிஸ் பல்லவி..." எனக் குறு நகையுடன் கூறிய பிரணவ் வந்த வேகத்திலேயே அங்கிருந்து கிளம்பினான்.

அவன் சென்று வெகுநேரம் கழிந்தும் திடீரென பிரணவ் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறான் என்ற பயத்தில் இதயம் பல மடங்கு வேகமாகத் துடிக்க அமர்ந்திருந்தாள் அனுபல்லவி.

அப்போது தான் பிரணவ் கூறிய விடயம் நினைவு வந்து ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவள் உடனே பிரதாப்பிற்கு அழைத்து தன்னை சந்திக்கக் கூறினாள்.

பிரதாப் அங்கு வரவும், "யார் கிட்ட கேட்டு எனக்கு தெரியாம மிஸ்டர் தர்மராஜோட கம்பனி கூட டீல் பேசினீங்க?" எனக் கேட்டாள் அனுபல்லவி கோபமாக.

"அனு அது..." என ஏதோ கூற வந்த பிரதாப்பின் முன் கை நீட்டி தடுத்தவள், "இது என் கம்பனி... உங்க லிமிட்டோட இருந்துக்கோங்க... அதை விட்டு இப்படி ஏதாவது பண்ண நினைச்சீங்கன்னா தண்டனை கடுமையா இருக்கும்..." என எச்சரித்த அனுபல்லவி, "என்ன? திரும்ப நான் பிரணவ்வை பார்த்ததும் மனசு மாறிடுவேனோன்னு பயந்து இப்படி பண்ணுறீங்களா?" எனக் கேட்டாள் நக்கலாக.

பிரதாப்பின் தலை ஆம் என மேலும் கீழும் ஆட, அவனை நோக்கி கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்த அனுபல்லவி, "அதுக்கு தான் வழியே இல்லாம பண்ணிட்டீங்களே..." என்றவள் தன் கழுத்தில் தொங்கிய தாலியைக் குனிந்து நோக்கினாள்.

பிரதாப்பின் முகம் குற்ற உணர்வில் வாட, வெறுமையுடன் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த அனுபல்லவி, "உங்க கிட்ட கெஞ்சி கேட்குறேன் மாமா... தயவு செஞ்சி இதுக்கு மேலயும் என்னை உயிரோட வதைக்காதீங்க..." என்றாள் கண்ணீருடன்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 25

அடுத்து வந்த நான்கு நாட்களும் பிரணவ் ஆகாஷை விட்டு விட்டு தனியாக பல முறை எங்கோ கிளம்பிச் சென்றான்.

இயன்றளவு அர்ச்சனா எதையும் அறியாமல் பார்த்துக் கொண்டான்.

இடையில் ஒரு நாள் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் கம்பனியில் ப்ராஜெக்ட்டை யாருக்கு வழங்குவது பற்றிய மீட்டிங்கும் நடந்தது.

ஒரு பார்ட்டி போல் வைத்து அனைத்து சக நிறுவனங்களையும் அழைத்து ப்ராஜெக்ட் பற்றி கூற முடிவெடுத்தாள் அனுபல்லவி.

அதன்படி மறுநாள் அந்தப் பார்ட்டி நடக்க இருந்தது.

பிரணவ் இரவு குளியலறையில் குளித்துக் கொண்டிருக்க, அவர்கள் தங்கியிருந்த அறைக் கதவு வேகமாகத் தட்டப்பட்டது.

அர்ச்சனாவாகத் தான் இருக்கும் என்று சலிப்புடன் சென்று கதவைத் திறந்த ஆகாஷ் அங்கு சாருமதியை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை.

"மதி... நீ இங்க என்ன பண்ணுற?" என அதிர்ச்சியுடன் கேட்டான் ஆகாஷ்.

"அனு இங்க தான் இருக்கான்னு நீ சொல்லிட்ட... என்னால அவள பார்க்காம அங்க நிம்மதியாவே இருக்க முடியல..." என்றாள் சாருமதி வருத்தமாக.

ஆகாஷ், "நான் தான் உன்ன நான் சொல்லும் வரை வர வேணாம்னு சொன்னேன்ல..." எனக் கோபமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, "யாரு ஆகாஷ்?" எனக் கேட்டவாறு தலையைத் துவட்டியபடி வந்தான் பிரணவ்.

"பாஸ் அது..." என ஆகாஷ் தயங்கும் போதே சாருமதியைக் கண்டு கொண்ட பிரணவ், "நீங்க எப்போ வந்தீங்க சாருமதி?" எனக் கேட்டான்.

ஆகாஷ் வாய் திறக்க முன் தானே முந்திக்கொண்ட சாருமதி, "என் ஃப்ரெண்ட் ஒருத்திய மீட் பண்ண வந்தேன் சார்... பார்த்து ரொம்ப வருஷமாச்சு... அப்படியே ஆகாஷையும் பார்த்துட்டு போலாம்னு தான் இங்க வந்தேன்..." எனப் பதிலளித்தாள்.

ஆகாஷ் அவளை ஏகத்துக்கும் முறைக்க, "ஓஹ்..." என்று மட்டும் கூறினான் பிரணவ்.

சாருமதி, "சார்... இஃப் யூ டோன்ட் மைன்ட் ஆகாஷை கொஞ்சம் நேரத்துக்கு என் கூட கூட்டிட்டு போகட்டுமா?" என அனுமதி கேட்கவும், "என் கிட்ட எதுக்கு பர்மிஷன் கேட்குறீங்க சாருமதி? உங்க பாய் ஃப்ரெண்ட்... நீங்க எங்க வேணாலும் கூட்டிட்டு போகலாம்..." என்றான் பிரணவ்.

உடனே, "தேங்க்ஸ் சார்..." என்று விட்டு ஆகாஷை அங்கிருந்து இழுத்துக்கொண்டு வெளியே நடந்தாள் சாருமதி.

ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் சாருமதியின் கரத்தை உதறிய ஆகாஷ், "என்ன பண்ண போற மதி நீ? அதுவும் இந்த ராத்திரில? எங்க போறோம் நாம?" எனக் கேட்டான் கோபமாக.

"ஆஹ்... உன்ன ரேப் பண்ண போறேன்..." என்ற சாருமதியின் பதிலில் ஆகாஷின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, "த்தூ... மூஞ்ச பாரு... கேட்குறான் பாரு கேள்வி... வேற எங்க? அனுவ பார்க்க தான் போறோம்..." என்றாள் சாருமதி.

ஆகாஷ், "உன் கிட்ட அனு வீட்டு அட்ரஸ் கிடைச்சிடுச்சுன்னு சொன்னது தப்பா போச்சு..." எனத் தலையில் அடித்துக்கொண்டான்.

அவனை முறைத்த சாருமதி ஆகாஷை விட்டு தனியே சென்று ஆட்டோ பிடித்தாள்.

"ஹேய் இரு டி நானும் வரேன்..." எனக் கத்திய ஆகாஷ் அவசரமாகச் சென்று சாருமதியைத் தொடர்ந்து ஆட்டோவில் ஏறினான்.

ஆகாஷும் சாருமதியும் அனுபல்லவியின் வீட்டை அடையவும் வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு வாயை பிளந்தாள் சாருமதி.

"ஆகாஷ்... நீங்க சொன்னப்போ கூட நான் நம்பல... ஆனா இவ்வளவு பெரிய வீட்டுல நம்ம அனுவா?" என சாருமதி ஆச்சர்யப்பட்டாள்.

"அவ்வளவு பெரிய கம்பனிக்கு எம்.டியா இருக்கா... இந்த வீடெல்லாம் எம் மாத்திரம்?" என்றான் ஆகாஷ் நக்கலாக.

இவர்கள் இங்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்த செக்கியூரிட்டி டிவைஸில் இவர்கள் வந்ததைப் பார்த்து விட்ட அனுபல்லவி அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.

அதுவும் பல வருடங்கள் கழித்து தன் உயிர்த் தோழியைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவளை அணைத்துக்கொள்ளக் கட்டளை இட்டது மனம்.

இருந்தும் அவளால் அதனை செய்ய இயலவில்லை.

"நான் அவங்கள உள்ள வர சொல்லிட்டு வரேன்..." என பிரதாப் செல்லப் பார்க்கவும், "வேணாம் இருங்க மாமா..." என அவனைத் தடுத்த அனுபல்லவி வாட்ச்மேனிற்கு அழைத்து அவர்களை உள்ளே விட வேண்டாம் என்றும் ஏதாவது கூறி உடனே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைக்கவும் எனவும் கட்டளை இட்டாள்.

ஆகாஷ் வாட்ச்மேனிடம் சென்று அனுபல்லவியைக் காண வேண்டும் என்று கூற, "மேடம் வீட்டுல இல்ல... அவங்க ஹஸ்பன்ட் கூட வெளிய போய் இருக்காங்க..." என மறுத்தார் வாட்ச்மேன்.

அனுபல்லவி வீட்டில் இல்லை. அதுவும் கணவனுடன் வெளியே சென்றிருக்கிறாள் என்று கூறவும் முகம் வாடிய சாருமதி, "அண்ணா... அது... அனு ஹஸ்பன்ட்னு சொன்னீங்களே... அது... பிரதாப்பா அவர் பெயர்?" என வாட்ச்மேனிடம் கேட்டாள் அவர் இல்லை என்று கூற வேண்டும் என எதிர்ப்பார்த்தபடி.

ஆகாஷும் அதே கேள்வியுடன் வாட்ச்மேனின் முகம் நோக்க, "ஆமாங்கம்மா... சார் பெயர் பிரதாப் தான்..." என வாட்ச்மேன் கூறவும் வேறு எதுவும் கூறாது இருவருமே அங்கிருந்து கிளம்பினர்.

வெளியே நடப்பதை ஒன்று விடாமல் செக்கியூரிட்டி டிவைஸ் மூலம் பார்த்துக் கொண்டிருந்த அனுபல்லவியின் விழிகளோ கண்ணீரை சிந்தின.

"அவங்க போனதுக்கு அப்புறம் இப்படி அழுறதுக்கு பேசாம அவங்க கூட போய் பேசி இருக்கலாம்ல..." என பிரதாப் முணுமுணுக்க, அது அனுபல்லவியின் காதில் தெளிவாகவே விழுந்தது.

சட்டெனத் திரும்பி பிரதாப்பை முறைத்தவள், "எந்த மூஞ்சோட போய் அவங்க முன்னாடி நிற்க சொல்றீங்க?" என ஆத்திரத்துடன் கேட்டு விட்டு விருட்டென அங்கிருந்து சென்று விட்டாள்.

************************************

மறுநாள் மாலை பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, பிரணவ் மிகவும் உற்சாகமாக அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான்.

"பாஸ்... ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல... ப்ராஜெக்ட் நம்ம கம்பனிக்கு கிடைக்கணும்னு ஏதாவது தகிடுதனம் பண்ணிட்டீங்களா என்ன?" எனக் கேட்டான் ஆகாஷ் சந்தேகமாக.

அவனைப் பார்த்து புன்னகைத்த பிரணவ், "என்ன ஆகாஷ் இப்படி கேட்டுட்டீங்க? என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது?" எனக் கேட்கவும், "பார்த்தா அப்படி தெரியல... ஆனா பண்ணுற காரியம் எல்லாம் அப்படி தானே இருக்கு... எந்த நேரத்துல என்ன பண்ணுவீங்கன்னு கெஸ் பண்ணவே முடியாது..." என முணுமுணுத்தான் ஆகாஷ்.

பிரணவ், "ஏதாவது சொன்னீங்களா ஆகாஷ்?" எனக் கேட்கவும், "இ...இல்ல பாஸ்... ஒன்னுமில்ல... நான் சும்மா தனியா உளறுறேன்..." என்றான் ஆகாஷ் அவசரமாக.

"அது சரி... ஆமா சாருமதி ஊருக்கு கிளம்பிட்டாங்களா? அவ ஃப்ரெண்ட பார்த்தீங்களா?" எனக் கேட்டான் பிரணவ் தன் கோர்ட்டை அணிந்தபடி.

ஆகாஷ், "இல்ல பாஸ்... அவ ஃப்ரெண்ட் நாங்க போகும் போது அவங்க ஹஸ்பன்ட் கூட வெளியே போய் இருந்தாங்க... அதான் மீட் பண்ண கிடைக்கல... மதியும் இதே ஹோட்டல்ல தான் தங்கி இருக்கா... எப்படியும் பார்ட்டி முடிஞ்சி கிளம்பிடுவோம் தானே... அதான் எங்க கூடவே போக இருக்க சொன்னேன்..." என்றான்.

"ஓஹ்... பார்ட்டி முடிஞ்சதும் நீங்க கிளம்பிடுவீங்களா? ஹ்ம்ம்... அதுவும் நல்லதுக்கு தான்..." என்ற பிரணவ்வின் கூற்றில் குழம்பிய ஆகாஷ், "அப்போ நீங்க வரலயா பாஸ் எங்க கூட?" எனக் கேட்டான் புரியாமல்.

பதிலுக்கு மந்தகாசப் புன்னகை ஒன்றை சிந்திய பிரணவ் அறைக் கதவு தட்டப்படவும் அவனே சென்று கதவைத் திறந்தான்‌.

அர்ச்சனா முழங்கால் வரை மட்டுமே இருந்த பளிச்சென மின்னும் மார்டன் ட்ரெஸ் அணிந்து பார்ட்டிக்கு செல்லத் தயாராகி நின்றிருந்தாள்.

அவளின் உடையைக் கண்டு ஆகாஷ் முகம் சுழிக்க, பிரணவ்வோ அர்ச்சனாவின் தோளில் கை போட்டு, "போலாமா?" எனக் கேட்டான் புன்னகையுடன்.

ஆகாஷ் அதிர்ச்சியில் கண்களை அகல விரிக்க, அர்ச்சனாவோ வாயெல்லாம் பல்லாக பிரணவ்வை மேலும் நெருங்கி நின்று, "போலாம் பேபி..." என்றாள் கண்கள் மின்ன.

"ஆகாஷ்... சீக்கிரமா பார்ட்டிக்கு வந்துடுங்க... கூடவே உங்க ஃபியான்சியையும் கூட்டிட்டே வாங்க..." என்ற பிரணவ் அர்ச்சனாவை அழைத்துக்கொண்டு முன்னே நடக்க, "என்ன ஆகாஷ் நடக்குது இங்க?" என்ற சாருமதியின் குரலில் தன்னிலை அடைந்தான் ஆகாஷ்.

ஆகாஷுடன் ஏதோ பேச வந்த சாருமதி பிரணவ் அர்ச்சனாவின் தோளில் கரம் போட்டு செல்வதைக் கண்டு ஆகாஷைப் போலவே அதிர்ச்சி அடைந்தாள்.

சாருமதியின் குரலில் தன்னிலை அடைந்த ஆகாஷ், "ஹ்ம்ம்... என்ன பண்ணுறது? அனுவே வேற கல்யாணம் பண்ணிட்டா... இவருக்கு அர்ச்சனா தான்னு இருந்திருக்கு போல... அதை விடு மதி... சீக்கிரம் நீயும் பார்ட்டிக்கு கிளம்பு... அங்க போனா உனக்கு அனுவ மீட் பண்ண முடியும்... இன்னைக்கு விட்டா திரும்ப அவள பார்க்க முடியாம போயிடும்..." என்றான்.

அவனைப் புரியாமல் பார்த்த சாருமதி, "ஏன் இன்னைக்கு விட்டா பார்க்க முடியாது?" எனக் கேட்டாள்.

ஆகாஷ், "அவ அஞ்சி வருஷம் கழிச்சி இந்தியா வந்து இருக்குறதே இந்தியால இருக்குற பிஸ்னஸை இங்க யாருக்கோ ஹேன்ட் ஓவர் பண்ணிட்டு ஃபாரின்ல பிஸ்னஸை கவனிக்கிற ஐடியால தான்... இன்னைக்கு பார்ட்டி அதைப் பத்தி இன்ஃபார்ம் பண்ணவும் சேர்த்து தான்... பாஸ் கிட்ட இன்னும் இதைப் பத்தி சொல்லல..." என்றான்.

************************************

ஆடல், பாடல், கொண்டாட்டம் என பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் தலைமை அலுவலகத்தின் பார்ட்டி பிரம்மாண்டமாக நடை பெற்றுக் கொண்டிருந்தது.

அனுபல்லவியின் பார்வை மட்டும் கண்களில் கோபம் மின்ன ஒரு இடத்தை வெறித்திருந்தது.

அங்கு ஒரு கையில் மதுக் குவளையுடன் மறு கையால் அர்ச்சனாவை வளைத்தபடி ஆடிக் கொண்டிருந்தான் பிரணவ்.

அதனைக் காணக் காண அனுபல்லவியின் முகம் கோபத்தில் சிவக்க, கண்களோ கலங்கின.

சில வருடங்களுக்கு முன் இதே போல் ஒரு பார்ட்டியில் தானும் அவனும் ஒன்றாகக் கலந்து கொண்டதும் அன்று தன் காதலை அவனிடம் பகிர்ந்து கொண்டதும் நினைவுக்கு வந்து அனுபல்லவியை வாட்டியது.

ஓரக் கண்ணால் அனுபல்லவியைப் பார்த்த பிரணவ் அவளின் பார்வை தம் மீது இருப்பதைக் கண்டதும் அர்ச்சனாவை மேலும் நெருங்கி நின்று கொண்டான்.

திடீரென முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு கையில் ஒரு குளிர்பானக் குவளையை எடுத்த அனுபல்லவி நேராக பிரணவ்வை நோக்கி வரவும் பிரணவ்வின் விழிகள் குழப்பத்தைத்‌ தத்தெடுத்தன.

அர்ச்சனாவோ பிரணவ்வின் நெருக்கம் தந்த மயக்கமும் லேசாக ஏறியிருந்த போதையும் சேர்ந்து பாட்டுக்கு ஏற்றவாறு ஆடிக் கொண்டிருந்தாள்.

அனுபல்லவி அவர்களை நோக்கி நடந்தவள் அவர்களைத் தாண்டி திரும்புவது போல் திரும்பி கால் தடுக்கி விழப் போவது போல் அர்ச்சனாவின் உடையில் தன் கையில் இருந்த குளிர்பானத்தைக் கொட்டி விட்டாள்.

பிரணவ் உதடு மடித்து சிரிக்க, "அச்சோ... சாரி சாரிங்க... தெரியாம கால் தடுக்கிடுச்சி..." என்றாள் அனுபல்லவி மன்னிப்பு வேண்டும் குரலில்.

"இடியட்... கண்ணு தெரியலயா? என் ட்ரெஸ்ஸ இப்படி ஸ்பாய்ல் பண்ணிட்டியே... ச்சே... அறிவிருக்கா?" என அர்ச்சனா திட்ட, "அர்ச்சனா..." என்ற பிரணவ்வின் கடுமையான குரலில், "பாருங்க பிரணவ்... வேணும்னே ஜூஸை என் மேல கொட்டிட்டா..." எனக் குற்றப் பத்திரிகை வாசித்தாள் அர்ச்சனா.

"அதான் அவங்க தெரியாம பண்ணிட்டாங்கன்னு சொல்றாங்களே... நீ பண்ண மாட்டியா? போ... போய் அதை வாஷ் பண்ணிட்டு வா..." என பிரணவ் கடுமையாகக் கூறவும் அனுபல்லவியை முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அர்ச்சனா.

அர்ச்சனா செல்லவும் அனுபல்லவியும் அங்கிருந்து நகரப் பார்க்க, அவளின் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் பிரணவ்.

அதனை எதிர்ப்பார்க்காத அனுபல்லவி பிரணவ்வின் மீது வந்து மோத, "என்ன பல்லவி மேடம்? எதுக்காக இப்படி பண்ணீங்க?" எனக் கேட்டான் பிரணவ் புன்னகையுடன்.

"அ...அது... அதான் சென்னேனே தெரியாம கொட்டிடுச்சுன்னு..." என அனுபல்லவி எங்கோ பார்த்தபடி கூறினாள்.

"ஓஹ்....." என இழுத்த பிரணவ்வின் பார்வை அனுபல்லவியின் முகத்தை ரசனையுடன் நோக்க, அப்போது தான் அவனின் பிடியில் தான் இருப்பதைப் புரிந்து கொண்ட அனுபல்லவி பிரணவ்வை விட்டு வேகமாக விலகினாள்.

பிரணவ் இன்னுமே தன் பார்வையை மாற்றாமல் இருக்க, "என் அனுமதி இல்லாம என்னைத் தொடாதீங்க மிஸ்டர் பிரணவ்..." என விரல் நீட்டி எச்சரித்த அனுபல்லவி அங்கிருந்து வேகமாகக் கிளம்பினாள்.

பிரணவ்விடமிருந்து விலகி வேகமாக வந்த அனுபல்லவி திடீரென யார் மீதோ மோதவும், "சாரி சாரி..." என மன்னிப்பு வேண்டியபடி தலையை உயர்த்த, அவளைத் தீயாக முறைத்தபடி நின்றிருந்தாள் சாருமதி.

"சாரு..." என்ற அனுபல்லவியின் வாயில் இருந்து காற்று தான் வெளி வந்தது.

அனுபல்லவியின் கையைப் பிடித்து அவளை அங்கிருந்து சற்று தள்ளி இழுத்துச் சென்ற சாருமதி அனுபல்லவியின் கரத்தை விடுவிக்கவும் "சாரு..." என அனுபல்லவி மகிழ்ச்சியாக அழைக்க, மறு நொடியே அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் சாருமதி.

கன்னத்தில் கை வைத்து கண்ணீருடன் தன்னைப் பார்த்து புன்னகைத்த அனுபல்லவியை பாய்ந்து அணைத்துக் கொண்டாள் சாருமதி.

"சாரி சாரு‌‌..." என அனுபல்லவி கண்ணீர் வடிக்க, அவளை விட்டு விலகியவள், "பெஸ்ட்டி... பெஸ்ட்டின்னு என்னைப் பெயருக்கு தான் சொன்னேல்ல நீ..." எனக் கேட்டாள் சாருமதி பதிலுக்கு கண்ணீருடன்.

அனுபல்லவி மறுப்பாகத் தலையசைக்க, "அப்போ ஏன் என் கிட்ட கூட சொல்லாம வந்துட்ட? இதெல்லாம் எப்படி? யார் அனு நீ? இது தான் நீயா? இது நீன்னா எங்க கூட இருந்த அனு யாரு?" எனக் கேட்டாள் சாருமதி புரியாமல்.

"உன் கிட்ட வேணும்னு மறைக்கல டி... என் சூழ்நிலை அப்படி... ஏதேதோ ஆகிடுச்சு... நான் உன் கிட்ட எல்லாமே தெளிவா சொல்றேன்..." என்றாள் அனுபல்லவி.

சாருமதி, "இனியும் உன்ன விட முடியாது... ஆகாஷ் சொன்னான் நீ அவங்க கூட பேச கூட விருப்பப்படலன்னு... எங்க என்னைப் பார்த்தாலும் அதையே தான் நீ சொல்லுவன்னு நினைச்சேன்..." என்க,

"அவங்களும் நீயும் ஒன்னா?" எனக் கேட்டாள் அனுபல்லவி வருத்தமாக.

"அவங்களும் நானும் ஒன்னில்ல சரி... அப்போ பிரணவ் சாரும் அந்த அவங்களுக்குள்ள தான் வராரா?" எனக் கேட்டாள் சாருமதி புருவம் சுருக்கி.

பெருமூச்சு விட்ட அனுபல்லவி, "அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே... அதுவும் இல்லாம அவருக்கு தான் என்னை சுத்தமா ஞாபகம் இல்லயே... என்னைப் பத்தி தெரிஞ்சி இனிமே அவர் என்ன பண்ண போறார்? அர்ச்சனா கூட அவர் சந்தோஷமா இருக்கட்டும்..." என்றாள் கசந்த புன்னகையுடன்.

சாருமதி, "நிஜமாவே உனக்கு கொஞ்சம் கூட வருத்தமா இல்லையா அனு?" எனக் கேட்டாள் கவலையாக.

அனுபல்லவி, "நான் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் சாரு? எல்லாமே என் கை மீறி போயிடுச்சு... இது தான் இனிமே என் லைஃப்னு நான் ஏத்துக்கிட்டு ரொம்ப நாளாச்சு..." என்றவளின் கண்கள் கண்ணீரை உகுத்தன.

சாருமதி, "சரி அதை விடு... நான் நிஜமாவே உனக்கு ஃப்ரெண்ட்னா தயவு செஞ்சி இப்பவே நடந்த எல்லாத்தையும் சொல்லு..." என்றாள் உறுதியாக.

அனுபல்லவி மேலோட்டமாக தன்னைப் பற்றிக் கூறவும் அதிர்ச்சி அடைந்தாள் சாருமதி.

"என்ன டி சொல்ற? என்னால நம்பவே முடியல... இப்படி எல்லாமா மனுஷனுங்க இருப்பாங்க?" எனக் கேட்டாள் சாருமதி கோபமாக.

அனுபல்லவி, "இருக்காங்களே... அதனால தானே நான் இன்னைக்கு எனக்கு பிடிச்ச எல்லாரையும் விட்டு விலகி இந்த நிலமைல இருக்கேன்..." எனக் கண் கலங்கினாள்.

"ஆனா நீ என் கிட்ட கூட சொல்லாம கல்யாணம் பண்ணது தான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அனு..." எனச் சாருமதி கூறவும் தலை குனிந்தாள் அனுபல்லவி.

அப்போது சரியாக, "மேம்... அனவுன்ஸ்மன்ட் பண்ணுற டைம் சரி..." என அனுபல்லவியின் பீ.ஏ வந்து கூறவும் தன் கண்களைத் துடைத்துக்கொண்ட அனுபல்லவி, "சாரு... ப்ளீஸ் உன் கிட்ட கெஞ்சி கேட்குறேன்... நான் சொன்ன எதையும் யார் கிட்டயும் சொல்லாதே... எனக்காக இதை மட்டும் பண்ணு..." என்று விட்டு சென்றாள்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 26

"குட் ஈவ்னிங் எவ்ரிவன்... நைஸ் டு மீட் யூ ஆல் ஹியர்..." என அனுபல்லவி மைக்கில் பேச ஆரம்பிக்கும் போதே அவ் அரங்கம் முழுவதும் கரகோஷங்களால் நிரம்பி வழிந்தன.

சாருமதிக்கு தன் தோழியை எண்ணி பெருமையாக இருந்தது.

பிரணவ்வும் அனுபல்லவியை மெச்சுதலாகப் பார்க்க, அர்ச்சனாவிற்கோ பொறாமைத் தீ கொழுந்து விட்டெரிந்தது.

"ஓக்கே காய்ஸ்... ரொம்ப இழுக்காம நேரா விஷயத்துக்கு வரேன்... எதுக்காக இந்த பார்ட்டி அரேன்ஜ் பண்ணி இருக்கேன்னு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும்... பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் ஃபேக்டரில வர்க் பண்ணுற வசதி குறைந்த நூறு பேரோட குடும்பத்துக்கு வீடு கட்டி கொடுத்து அவங்களுக்கு தேவையான அடிப்படை வசதி எல்லாம் பண்ணி கொடுக்கலாம்னு திட்டம் இட்டிருக்கோம்... முன்னாடியே ஒவ்வொரு வருஷமும் நம்ம கம்பனி சார்பா வசதி இல்லாதவங்களுக்கு இதெல்லாம் பண்ணி கொடுத்துட்டு தான் இருந்தோம்... பட் லாஸ்ட் ஃபைவ் இயர்ஸா சில பிரச்சினைகளால அதைப் பண்ண முடியல..." என அனுபல்லவி கூறும் போதே குழப்பத்தில் பிரணவ்வின் புருவங்கள் முடிச்சிட்டன.

மேலும் தொடர்ந்த அனுபல்லவி, "பட் இனியும் தாமதிக்காம இந்த ப்ராஜெக்டை திரும்ப ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்... ஏதோ வீடு கட்டி கொடுக்குறோம்னு இல்லாம எல்லாமே தரம் வாய்ந்ததா இருக்கணும்னு விரும்புறேன்... அன்னைக்கே மீட்டிங் வெச்சி எல்லார் கூடவும் பேசிட்டேன்... என்ட் தனிப்பட்ட விதத்துலயும் வெளிய விசாரிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்... இந்த வருஷத்துக்கான ப்ராஜெக்டை எம்.எல்.க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸுக்கு கொடுக்கலாம்னு இருக்கோம்..." என்கவும் பிரணவ்வின் இதழ்கள் விரிய, அனைவரும் அவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பிரணவ் மேடைக்குச் செல்லவும், "கங்கிரேட்ஸ் மிஸ்டர் பிரணவ்..." எனத் தன் கரத்தை அவன் முன் நீட்டினாள் அனுபல்லவி.

மென் முறுவலுடன் அவளின் கரத்தைப் பற்றிய பிரணவ், "தேங்க் யூ மிஸ் பல்லவி..." என்றவன் அனுபல்லவியின் கரத்தை விடாது அவளின் விழிகளையே ஆழ நோக்கினான்.

அவனின் பார்வையோ, 'இனிமே நாம ரெண்டு பேரும் ஒன்னா தான் வர்க் பண்ணணும்...' எனும் விதமாக இருந்தது.

அனுபல்லவிக்கு தான் அனைவரும் பார்க்கிறார்கள் என சங்கடமாக இருக்க, ஒரு புன்னகையுடனே தன் கரத்தை இழுத்துக்கொண்டாள்.

ப்ராஜெக்ட் பற்றி மேலும் சில நிமிடங்கள் பேசிய அனுபல்லவி, "அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்..." என்கவும் அனைவரும் அவளின் முகம் நோக்கினர்.

சிலர் ஏற்கனவே அவள் என்ன கூறப் போகிறாள் என அறிந்திருந்தனர்.

அனுபல்லவி, "இந்த பார்ட்டிய அரேன்ஜ் பண்ணினதுக்கு இன்னொரு முக்கியமான ரீசன் இருக்கு..." என்றவள் சில நொடி அமைதிக்குப் பின், "உங்க எல்லாருக்கும் தெரியும் லாஸ்ட் ஃபைவ் இயர்ஸா நான் ஃபாரின்ல இருந்து தான் கம்பனிய மேனேஜ் பண்ணிட்டு இருந்தேன்... அங்க இருக்குற நம்ம கம்பனி கூட என் பொறுப்புல தான் இருக்கு... சோ இந்தியால இருக்குற நம்ம கம்பனிய இனிமே இவர் தான் மேனேஜ் பண்ண போறார்... அதுக்காக மொத்தமா இங்க கம்பனீஸ நான் பார்த்துக்க மாட்டேன்னு இல்ல... பட் மெய்னா இவர் தான் இனி பார்க்க போறார்..." என பிரதாப்பைக் காட்டினாள்.

பிரணவ் அதிர்ச்சியாக அனுபல்லவியை நோக்க, 'திரும்ப உன்ன சந்திக்குற எந்த சூழ்நிலைக்கும் நான் இடம் தர மாட்டேன் பிரணவ்...' என மனதினுள் நினைத்துக் கொண்டாள் அனுபல்லவி.

'அடடா... அர்ச்சனா... உன் காட்டுல மழை தான்... எனக்கு இருந்த ஒரே தொல்லையும் ஒழிஞ்சது... இனிமே பிரணவ் எனக்கு மட்டும் தான் சொந்தம்... பிரணவ்வோட மொத்த சொத்தையும் அனுபவிக்க போறது இந்த அர்ச்சனா தான்...' என விஷமமாக நினைத்துக் கொண்டாள் அர்ச்சனா.

பின் சில பிஸ்னஸ் பேச்சுகளுடன் பார்ட்டி முடிவடைந்தது.

அனுபல்லவி தன் அலுவலக அறையில் இருந்த ஜன்னல் வழியாக மண்ணை முத்தமிடும் மழைத் துளிகளை ரசித்துக் கொண்டிருந்தாள்.

திடீரென அவளின் முதுகில் பட்ட நன்றாக பழக்கப்பட்ட சூடான மூச்சுக் காற்றில் வேகமாகத் திரும்பிய அனுபல்லவி கால் தடுக்கி கீழே விழப் போக, அவள் விழாமல் தாங்கிய பிரணவ்வின் கரம் அனுபல்லவி அணிந்திருந்த சேலையைத் தாண்டி அவள் வயிற்றில் அழுத்தமாக பதிந்தது.

அனுபல்லவியின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, பிரணவ்வின் முகமோ பல வித உணர்ச்சிகளைக் காட்டியது.

பிரணவ்வின் கரம் அனுபல்லவியின் வயிற்றைத் தடவ, சட்டென அவனைத் தள்ளி விட்டாள் அனுபல்லவி.

அதே நேரம் ஆகாஷும் பிரதாப்பும் அங்கு வந்தனர்.

அனுபல்லவியின் கோபமான முகத்தையும் பிரணவ்வின் உணர்வுகளைத் தொலைத்த பார்வையையும் புரியாமல் பார்த்த ஆகாஷ், "என்னாச்சு?" எனக் கேட்டான்.

அவனின் கேள்விக்கு பதிலளிக்காத அனுபல்லவி, "எதுக்காக இவங்க இப்போ வந்திருக்காங்க மாமா?" எனக் கேட்டாள் பிரதாப்பிடம்.

பிரதாப் ஏதோ கூற வாய் திறக்க, "ஆகாஷ்... வாங்க கிளம்பலாம்... இனிமே நமக்கு இங்க வேலை இல்ல... பெங்களூர் போக டிக்கெட் புக் பண்ணுங்க..." என அழுத்தமாகக் கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

ஆகாஷும் பிரணவ்வைத் தொடர்ந்து வெளியேறி விட, தலையைப் பற்றிக் கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தாள் அனுபல்லவி.

"அனு..." என்ற பிரதாப்பின் குரலில், "இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியல மாமா... ரொம்ப கஷ்டமா இருக்கு... நாளைக்கே நான் கிளம்ப ஏற்பாடு பண்ணுங்க..." என்றாள் உடைந்த குரலில்.

"நாளைக்கே நீ கிளம்ப முடியாது அனு... ஆகாஷ் இப்போ தான் பேசினார்... கம்பனி ஃபார்மாலட்டீஸ் படி அவங்க கம்பனி சார்பாவும் ப்ராஜெக்ட் சைன் பண்ண நாம பெங்களூர் போகணும்..." என்றான் பிரதாப்.

"நீங்க போக வேண்டியது தானே...‌ நான் எதுக்கு?" எனக் கேட்டாள் அனுபல்லவி புரியாமல்.

பிரதாப், "எனக்கும் நீ அங்க போறது பிடிக்கல தான்... ஆனா என்ன பண்றது? கம்பனிய நான் பொறுப்பேற்றாலும் நீ தான் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி‌... சோ நீ தான் போய் எல்லாம் பார்த்து சைன் பண்ணணும்..." என்றான் எங்கோ பார்த்தபடி.

எதுவும் கூறாது பெருமூச்சு விட்டாள் அனுபல்லவி.

தாம் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்ததில் இருந்து பிரணவ் சிடு சிடு என்றே இருந்தான்.

ஆகாஷிற்கு அவனிடம் பேசவே பயமாக இருந்தது.

ஒரு பக்கம் என்ன நடந்தது என்ற கேள்வி அவனின் மண்டையைக் குடைந்தது.

"பாஸ்..." என்ற ஆகாஷின் குரலில் ஏதோ சிந்தனையில் மூழ்கிக் கிடந்த பிரணவ் தன்னிலை அடைந்து ஆகாஷைக் கேள்வியாக நோக்கினான்.

ஆகாஷ், "பெங்களூருக்கு உடனே எந்த ஃப்ளைட்டும் இல்ல... நாளைக்கு நைட் தான் டிக்கெட் கிடைச்சிருக்கு..." என்றான் தயக்கமாக.

பிரணவ்வோ அவனுக்கு பதிலளிக்காது கட்டிலில் படுத்தவன் கண்களை மூடி உறங்க ஆரம்பித்தான்.

ஆனால் அவன் மனதிலோ ஏதேதோ குழப்பங்கள்.

************************************

மறுநாள் காலை ஆகாஷிடம் கூட கூறாது அனுபல்லவியை சந்திக்க வந்திருந்தாள் சாருமதி.

"சாரு... வா வா... வந்து உட்கார்..." என அனுபல்லவி புன்னகையுடன் அவளை வரவேற்க, "நான் உட்காருறது இருக்கட்டும்... நீ ஏன் சடன்னா இப்படி ஒரு முடிவெடுத்த? ஆல்ரெடி ஃபைவ் இயர்ஸ் நீ எங்க இருக்க? என்ன பண்ணுற? எதுவுமே தெரியாம இருந்துட்டோம்... இப்போ திரும்ப ஃபாரின் போறேன்னு சொல்ற... அதுவும் அங்க செட்டல் ஆகுறேன்னு வேற சொல்ற... நீ ஏன் பிரச்சினைய பார்த்து பயந்து ஓட நினைக்கிற? அதான் எல்லாம் சோல்வ் ஆகிடுச்சுல்ல... இன்னும் ஏன் நீ எங்கள விட்டு போகணும்னு நினைக்கிற?" எனக் கேட்டாள் சாருமதி ஆற்றாமையில்.

"நான் எங்க போனாலும் இனிமே உன் கூட கான்டாக்ட்ல தான் இருப்பேன் சாரு..." என்றாள் அனுபல்லவி தயக்கமாக.

சாருமதி, "நீ என் கிட்ட சொன்ன விஷயம் தவிர வேற ஏதாவது என் கிட்ட மறைக்கிறியா அனு?" எனக் கேட்டாள் அழுத்தமாக.

ஒரு நொடி அவளை அதிர்வுடன் ஏறிட்ட அனுபல்லவி மறு நொடியே அதனை மறைத்து புன்னகையுடன், "இ...இல்ல சாரு... என்னோட பாஸ்ட் எல்லாம் சொல்லிட்டேன்... இ..இதுக்கு மேல உன் கிட்ட மறைக்க என்ன இருக்கு?" என்றாள் சமாளிப்பாக.

"அப்போ இங்கயே இருக்க வேண்டியது தானே... எதுக்காக எல்லாத்தையும் விட்டு போகணும்னு நினைக்கிற?" என்ற சாருமதியின் கேள்விக்கு பெருமூச்சு விட்ட அனுபல்லவி, "ரொம்ப கஷ்டப்பட்டு இந்த வாழ்க்கைய நான் ஏத்துக்கிட்டு இருக்கேன்... திரும்ப திரும்ப பிரணவ்வ பார்க்கும் போது நான் பழையபடி உடைஞ்சி போயிடுறேன்..." என்றாள் கண்ணீருடன்.

அவளின் கரத்தை ஆதரவாகப் பிடித்த சாருமதி, "அனு... பிரணவ் சார் உன் லைஃப்ல முடிஞ்சி போன சேப்டர்... அவருக்கு உன்ன சுத்தமா ஞாபகம் இல்ல... உனக்கும் வேற ஒருத்தர் கூட கல்யாணம் ஆகிடுச்சு... எப்பவோ நடந்த விஷயத்துக்காக நீ ஏன் இன்னும் ஃபீல் பண்ணுற? அவருக்கும் அர்ச்சனாவுக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுது... உங்க ரெண்டு பேரோட பாதையும் ஃபைவ் இயர்ஸ் முன்னாடியே வேற வேறயா பிரிஞ்சிடுச்சு... அப்படியே அவருக்கு உன் ஞாபகம் வந்தாலும் எந்த யூஸும் இல்ல... நீங்க ரெண்டு பேரும் இனிமே சேர முடியாது... அப்படி இருக்குறப்போ எதுக்காக வீணா பயந்து எங்கள விட்டு தள்ளி போக பாக்குற?" எனக் கேட்டாள்.

'யார் என்ன சொன்னாலும் பிரணவ்வோட நினைவுகள் என்னைக்கும் என்னை விட்டு போகாது... அது சுகமான நரக வேதனை... பிரணவ்வுக்கு நான் பொருத்தமானவ இல்ல... அதனால தான் அந்தக் கடவுளே எங்கள பிரிச்சிட்டார் போல...' என வருத்தமாக எண்ணிக் கொண்டாள் அனுபல்லவி.

அனுபல்லவி, "நான் எங்க எப்படி இருந்தாலும் நீ என் பெஸ்ட் ஃப்ரெண்ட் தான்... உனக்கு ஒன்னுன்னா முதல் ஆளா நான் ஓடி வருவேன்... பட் என்னால இங்க இருக்க முடியாது சாரு... பிரணவ் லைஃப்ல என்னால எந்த பிரச்சினையும் வரத நான் விரும்பல... ட்ரை டு அன்டர்ஸ்டேன்ட் மீ..." என்றாள் கெஞ்சலாக.

************************************

"என்னடா நான் பெத்த மகனே... இன்னைக்கு தான் உனக்கு இந்த அப்பனையும் ஆத்தாளையும் பார்க்க வழி தெரிஞ்சதா?" எனக் கேட்டார் பிரதாப்பின் தந்தை சுந்தர்.

"அவனுக்கு எங்கங்க நம்ம ஞாபகம் இருக்க போகுது? அதான் ஒத்த ஆளா மொத்த சொத்தையும் அனுபவிக்கிறான்ல..." என்றார் பிரதாப்பின் தாய் ஜெயந்தி நக்கலாக.

கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு அவர்கள் இருவரும் இருந்த சிறையைப் பார்த்தவன், "ஜெயிலுக்கு வந்தும் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கூட திருந்தவே இல்லல்ல... ச்சே..." என்றான் பிரதாப் ஆத்திரத்துடன்.

"சும்மா நல்லவன் போல பேசாதே டா... நீயும் தானே நாங்க பண்ண எல்லாத்துக்கும் ஒத்து ஊதின..." எனக் கேட்டார் சுந்தர் பதிலுக்கு.

பிரதாப், "ஆமா... அது சின்ன வயசுல இருந்தே நீங்க சொன்னத எல்லாம் உண்மைனு நம்பினேன்... ஆனா என்னோட அம்மா அப்பா மாமாவுக்கு இவ்வளவு பெரிய அநியாயத்தை செஞ்சி இருப்பாங்கன்னு நினைக்கல... உங்களால இன்னைக்கு மாமா முன்னாடியும் அனு முன்னாடியும் நானும் குற்றவாளியா நிற்கிறேன்..." என்றான் வருத்தமாக.

அவனின் பெற்றோரோ பிரதாப்பின் பேச்சில் உதட்டை சுழிக்க, அதனைக் கண்டு கொள்ளாதவன், "இது தான் நான் உங்கள பார்க்க வர கடைசி தடவ... சும்மா சும்மா ஜெயிலர் கிட்ட என் பையனை பார்க்கணும் பையனை பார்க்கணும்னு சண்டை போடாதீங்க... இனிமே எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... இனியாவது திருந்துற வழியா பாருங்க... ஒருவேளை அனு உங்கள மன்னிச்சா அதுக்கப்புறம் நான் யோசிக்கிறேன் உங்கள மன்னிக்கலாமா வேணாமான்னு... இப்போ நான் தனி ஆள் இல்ல... என்னை நம்பி அனு இருக்கா... எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு... வீணா என்னை சீண்டிப் பார்க்க நினைக்காதீங்க..." என்ற பிரதாப் அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.

************************************

ஹோட்டல் அறையில் அடைந்து கிடக்க மனமின்றி இன்றும் அதே பார்க்கில் வந்து கல் பெஞ்ச்சில் படுத்து தீவிர சிந்தனையில் இருந்தான் பிரணவ்.

அன்று போலவே இன்றும் "அப்பா..." என ஒரு குழந்தையின் உற்சாகமான குரல் கேட்கவும் மெல்ல கண் விழித்துப் பார்த்தவன் அன்று இருந்த அதே குழந்தை பிரணவ்வைப் பார்த்து புன்னகைத்தபடி நின்றது.

அதன் குரலில் மெய் சிலிர்த்தவன் அக் குழந்தையை நோக்கி புன்னகையுடன் அடி எடுத்து வைக்க, பிரணவ்விற்கு முன்னே அவனைத் தாண்டி நடந்த ஒரு ஆடவன் அக் குழந்தையைத் தூக்கினான்.

"அப்பா வரும் வரைக்கும் கொஞ்சம் வெய்ட் பண்ண முடியாதா? அப்படி என்ன அவசரம்?" என அவ் ஆடவன் அக் குழந்தையிடம் கேட்கவும் அக் குழந்தையோ அவனுக்கு பதிலளிக்காது இடுப்பில் கையூன்றி அவனை முறைத்தது.

ஏதோ பழக்கப்பட்ட குரலில் பிரணவ் புருவம் உயர்த்தி அவ் ஆடவன் திரும்பும் வரை காத்திருக்க, குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரும்பிய பிரதாப்பைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான் பிரணவ்.

பிரணவ்வை அங்கே எதிர்ப்பார்க்காத பிரதாப்பும் ஒரு நொடி அதிர்ந்தவன், "நீங்க..." என ஏதோ கூற வர, "இது உங்க குழந்தையா?" எனக் கேட்டான் பிரணவ் அக் குழந்தையின் மீது பார்வையைப் பதித்தபடி.

"ஆமா... என் குழந்தை தான்..." என பிரதாப் பதிலளிக்கவும், "அ...அம்மா?" எனக் கேட்டான் பிரணவ் தயக்கமாக.

பிரதாப் பதிலளிக்க எடுத்த இடைவெளியில் பிரணவ்வின் மனம் காரணமே இன்றி இரு மடங்கு வேகத்தில் துடித்தது.

"அனு தான்... என்னோடதும் அனுவோடதும் குழந்தை... பெயர் பிரஜன்..." எனப் பிரதாப் கண்கள் மின்ன புன்னகையுடன் கூறவும் பிரணவ்வின் மனம் சுக்குநூறாக உடைந்தது.

அதன் காரணம் எதுவும் அவன் அறியவில்லை.

"சரி அப்போ நாங்க கிளம்புறோம்... அனு எங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பா..." எனப் பிரதாப் கூறவும் அவனின் கரத்தில் இருந்த குழந்தை பிரதாப்பை முறைத்து விட்டு பிரணவ்வைப் பார்த்து புன்னகைத்தது.

அப் பார்வை பிரணவ்வை ஏதோ செய்ய, குழந்தையின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

பின் பிரதாப் தன் குழந்தையை அழைத்துக்கொண்டு அங்கிருந்து செல்லவும் பிரணவ் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 27

"அம்மா..." எனக் கூச்சலிட்டுக் கொண்டு வந்த மகனைத் தூக்கி ஆரத் தழுவி முத்தமிட்டாள் அனுபல்லவி.

அனுபல்லவி, "பிரஜு கண்ணா வந்துட்டீங்களா?" எனக் கேட்டாள் பாசமாக.

அவள் கழுத்தில் மாலையாக கரங்களைக் கோர்த்த பிரஜன், "ஆமா அம்மா... பிரஜுக்கு இங்க பிடிக்கவே இல்ல... நம்ம வீட்டுல இருக்கும் போது நீங்க பிரஜு கூடவே இருப்பீங்க... ஆனா இங்க வந்ததுல இருந்து என்னை கேர் டேக்கர் கிட்ட விடுறீங்க... ஐ மிஸ் யூ மா..." என்றான் மழலைக் குரலில் தேம்பியபடி.

பிரஜன் அவ்வாறு கூறவும் பிரணவ் தன் கடந்த காலம் பற்றி தன்னிடம் கூறியது தான் அவளுக்கு நினைவு வந்து கண்கள் கலங்கின.

"இனிமே அம்மா உன்ன கேர் டேக்கர் கிட்ட விட மாட்டேன்... ஓக்கேயா? நாம இப்போ பெங்களூர் போய்ட்டு அங்க இருந்து சிங்கப்பூர் போயிடுவோம்... திரும்ப இங்க வர மாட்டோம்..." என்றாள் அனுபல்லவி புன்னகையுடன்.

"ஹை... ஜாலி ஜாலி... வீட்டுக்கு போக போறோம்... ஆனா..." என அனுபல்லவியிடம் இருந்து இறங்கி துள்ளிக் குதித்த பிரஜனின் முகம் மறு நொடியே வாடி ஏதோ கூற வர, அதற்குள் பிரதாப் அங்கே வரவும் அவனைக் கண்டு கோபத்தில் முகத்தைத் திருப்பினான் பிரஜன்.

அவனின் கோபத்தைக் கண்டு பிரதாப்பிற்கு தாங்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.

எங்கு சிரித்தால் தன் செல்லக் குழந்தையின் கோபம் அதிகரித்து விடுமோ என்று சோகமாக இருப்பது போல் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான் பிரதாப்.

அதனைக் கண்டு உதட்டைச் சுழித்த பிரஜன், "அம்மா... நாம மட்டும் தனியா சிங்கப்பூர் போலாம்... வேற யார் கூடவும் நான் பேச மாட்டேன்..." என மழலை மொழியில் தன் கோபத்தை வெளிப்படுத்திய பிரஜன் பிரதாப்பை முறைத்துக் கொண்டே அங்கிருந்து ஓடி விட்டான்.

இருவரையும் புரியாமல் நோக்கிய அனுபல்லவி, "என்னாச்சு? எதுக்கு பிரஜன் உங்க கூட கோவமா இருக்கான்?" எனக் கேட்டாள்.

"அ..அது... ஒன்னும் இல்ல அனு... சும்மா தான்... அவன் கேட்ட டாய் ஒன்ன வாங்கி கொடுக்கல... அதான் கோவமா இருக்கான்... நான் அவன சமாதானப்படுத்துறேன்..‌." என்றான் பிரதாப் சமாளிப்பாக.

"ம்ம்ம்..." என்று மட்டும் கூறிய அனுபல்லவி சிங்கப்பூர் செல்ல தன் உடமைகளை அடுக்கி வைக்க, "கண்டிப்பா அங்க போயே ஆகணுமா அனு?" எனத் தயக்கமாகக் கேட்டான் பிரதாப்.

அவனைப் பாராமலே, "என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல..." என்றாள் அனுபல்லவி.

பிரதாப், "ஈவ்னிங் ஃப்ளைட்ல பெங்களூர் கிளம்பலாம்... சிங்கப்பூர் போக இன்னைக்கு நைட் ஃப்ளைட் புக் பண்ணி இருக்கேன்..." என்றவன் அங்கிருந்து செல்லவும் தந்தையின் அறைக்குள் நுழைந்தாள் அனுபல்லவி.

"அப்பா..." என உறங்கிக் கொண்டிருந்தவரின் தலையை வருடவும் அவர் கண் விழிக்க, "நாளைக்கே சிங்கப்பூர் கிளம்புறோம் பா... திரும்ப இங்க வரதா ஐடியா இல்ல...‌ அங்க உங்களுக்கு ட்ரீட்மெண்ட்டுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்... உங்கள இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவங்கள வெளியவே வர முடியாதபடி பண்ணிட்டேன்... இப்போ உங்களுக்கு சந்தோஷமா ப்பா?" எனக் கேட்டாள் அனுபல்லவி புன்னகையுடன்.

"ஆ... ஆனா‌... நீ... நீ..." என ஏதோ கூற முயன்றவரின் கண்கள் கலங்கின.

கசந்த புன்னகையுடன் அதனைத் துடைத்து விட்ட அனுபல்லவி, "எனக்குன்னு இனிமே ஒன்னும் இல்லப்பா... இனிமே வாழ போற வாழ்க்கை என் பிரஜனுக்காக மட்டும் தான்..." என்றாள் எங்கோ வெறித்தபடி.

************************************

"பிரணவ் கண்ணா... வந்துட்டியாப்பா? ட்ராவல் எல்லாம் எப்படி இருந்தது?" எனக் கேட்டார் லக்ஷ்மி புன்னகையுடன்.

"ஃபைன் மா..." என்ற பிரணவ்வின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை.

"கங்கிரேட்ஸ் மை சன்... எனக்கு தெரியும் நீ கண்டிப்பா இந்த ப்ராஜெக்ட்ட நம்ம கம்பனிக்கு வாங்கிடுவேன்னு..." என்றார் மூர்த்தி பிரணவ்வை அணைத்து.

"ஆமா... என் மருமகள் எங்க? நேரா நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல..." என லக்ஷ்மி கேட்கவும், "ப்ச்... அவ வீட்டுக்கு போய்ட்டா... எப்படியும் கொஞ்ச நேரத்துல இங்க தானே வரப் போறா..." எனச் சலிப்பாகக் கூறிய பிரணவ்,

"அப்பா‌.‌.. இன்னைக்கு ஈவ்னிங் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி. ப்ராஜெக்ட் சைன் பண்ண நம்ம கம்பனி வராங்க... நீங்களும் அம்மாவும் கூட வாங்க..." என்றான்.

மூர்த்தி, "நீ தானேப்பா இப்போ கம்பனிய பார்த்துக்குற... நானும் அம்மாவும் எதுக்கு?" எனக் கேட்டார் புரியாமல்.

பிரணவ், "இதுக்கு முன்னாடி அம்மாவும் நீங்களும் தானே பிஸ்னஸை கவனிச்சீங்க... அதுவும் இல்லாம அம்மாவுக்கு பிஸ்னஸ்னா ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும்... இனிமே அவங்களும் பழையபடி பிஸ்னஸை பார்த்துக்கட்டும்... ரொம்ப பெரிய கான்ட்ராக் சைன் பண்ண போறோம்... இந்த ப்ராஜெக்ட் சக்சஸ்ஃபுல்லா முடிஞ்சா நம்ம கம்பனி பெயர் உலகம் ஃபுல்லா ஃபேமஸ் ஆகும்... சோ இந்த நல்ல காரியம் உங்க ரெண்டு பேர் ஆசிர்வாதத்தோட ஆரம்பிக்க விரும்புறேன்..." என்கவும் அவர்களால் மறுக்க இயலவில்லை.

மாலை மூர்த்தி, லக்ஷ்மி, பிரணவ் மூவரும் தம் அலுவலகத்தில் அனுபல்லவி வரும் வரை காத்திருந்தனர்.

அதே நேரம் அர்ச்சனா அங்கு வர, "நீ எதுக்கு இங்க வந்த? இம்பார்ட்டன்ட் மீட்டிங் நடக்க போறது தெரியும்ல..." எனக் கேட்டான் பிரணவ் கடுமையாக.

"அவள ஏன் பா திட்டுற? என் மருமகளுக்கு இல்லாத உரிமையா? அவ தானே இனிமே உன் கூட சேர்ந்து நம்ம பிஸ்னஸ் எல்லாம் கவனிச்சிக்க போறா..." என லக்ஷ்மி கூறவும் அர்ச்சனாவிற்கு குளு குளு என்றிருந்தது.

பிரணவ்வோ எதுவும் கூற முடியாமல் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

சரியாக ஆகாஷ் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர, அவனைத் தொடர்ந்து தனக்கே உரிய கம்பீரத்துடன் மிடுக்காக நடந்து வந்தாள் அனுபல்லவி.

பிரதாப்பும் அனுபல்லவியுடன் ஜோடியாக வந்திருப்பதைக் கண்டு பிரணவ்வின் கண்கள் சிவந்தன.

அனுபல்லவியை இதற்கு முன்னர் தம் கம்பனியில் கண்டுள்ளதால் மூர்த்தியும் லக்ஷ்மியும் அதிர்ந்து, "இது..." என ஏதோ கூற வர, "இவ தான் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி அத்தை... அப்புறம் இது அவ புருஷன் பிரதாப்..." என்றாள் அர்ச்சனா முந்திக்கொண்டு.

அவளுக்கு அனுபல்லவியின் முன் பிரணவ் மீது தனக்கு இருந்த உரிமையைக் காட்ட வேண்டிய தேவை இருந்தது.

அதனால் தான் அனைவரையும் முந்திக்கொண்டு பதிலளித்தாள்.

அனுபல்லவி அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.

பிரணவ், "அவங்க ஒரு பெரிய கம்பனியோட எம்.டி... முதல்ல அடுத்தவங்களுக்கு எப்படி மரியாதை தரணும்னு கத்துக்கோ..." என்றான் அர்ச்சனாவிடம் கடுமையாக.

அனுபல்லவியின் இதழ்கள் இப்போது ஏளனமாக வளைந்தன.

தன்னை அனுபல்லவியின் முன் பிரணவ் அவமானப்படுத்திய கோபத்தில் அனுபல்லவியை முறைத்தாள் அர்ச்சனா.

"உட்காருங்க ரெண்டு பேரும்... பட் மிஸ்டர் பல்லவன் தானே அந்த கம்பனி எம்.டி..." எனக் கேட்டார் மூர்த்தி புரியாமல்.

"பல்லவனோட ஒரே பொண்ணு தான் நான்... அனுபல்லவி..." என்றாள் இருக்கையில் வாகாக அமர்ந்தபடி.

லக்ஷ்மியோ அனுபல்லவி வந்ததில் இருந்து அவளையே பார்வையால் அளந்து கொண்டிருந்தார்.

"நாம நேரா விஷயத்துக்கு வரலாமா? ஈவ்னிங் ஃப்ளைட்ல நாங்க கிளம்பணும்..." என்றான் பிரதாப் பட்டென்று.

பல்லைக் கடித்த பிரணவ் அனுபல்லவியின் முன் ஒரு கோப்பைத் தூக்கிப் போட்டான்.

அனுபல்லவி எதுவும் கூறாமல் அக் கோப்பைப் படித்து விட்டு கையொப்பமிட முனைய, "அம்மா..." எனக் கத்திக்கொண்டு அவ் அறைக்குள் நுழைந்தான் பிரஜன்.

அவனைத் தொடர்ந்து ஓடி வந்த நடுத்தர வயது ஒருவர், "சாரி சார்... சாரி மேடம்... தம்பி எவ்வளவு சொல்லியும் கேட்காம திடீர்னு கார்ல இருந்து இறங்கி ஓடி வந்துட்டார்..." என்றார் தயக்கமாக.

பிரஜனை அங்கு கண்டதும் அனுபல்லவியின் உடல் நடுங்க, இதயம் இரு மடங்கு வேகத்தில் துடித்தது.

அதே சமயம், "என்னங்க... இந்தப் பையன் நம்ம பிரணவ் சின்ன வயசுல இருந்தது போலவே இருக்கான்ல..." என்றார் லக்ஷ்மி தன்னை மறந்து.

பயத்தில் எச்சில் விழுங்கிய அனுபல்லவி அவசரமாக பிரஜனை நெருங்கி, "பிரஜு... அம்மா உன்ன கார்ல தானே வெய்ட் பண்ண சொன்னேன்‌... நீ எதுக்கு இங்க வந்த? போ... ட்ரைவர் அங்கிள் கூட போய் கார்ல வெய்ட் பண்ணு..." என்றாள் கடுமையாக.

அன்னையின் கோபத்தில் முகம் வாடிய பாலகன் அனுபல்லவியிடம் இருந்து விலகி ஓடிச் சென்று பிரணவ்வின் கால்களைக் கட்டிக் கொண்டது.

அனைவரும் குழந்தையைப் புரியாமல் நோக்க, "ஏன் பா நீங்க பிரஜுவ பார்க்க வரல? பிரஜுவ பார்க்ல பார்த்தும் ஏன் பேசல? பிரஜுக்கு ரொம்ப சேட் ஆகிடுச்சு... ஏன் நீங்க பிரஜுவ தூக்கல?" என வருத்தமாகக் கேட்ட பிரஜன் தன் தாயைப் பார்த்து, "பிரஜு குட் பாயா கார்ல தான் வெய்ட் பண்ணேன் மா... அப்போ தான் இந்த பிள்டிங்குக்கு வெளிய அப்பாவோட ஃபோட்டோ பெரிசா மாட்டி இருக்குறதைப் பார்த்ததும் ஓடி வந்தேன்..." என்றான் கண்கள் பளிச்சிட.

பிரஜனின் கேள்வியில் பிரணவ்வின் உள்ளம் உலைக்களமாய் கொதித்தது.

பிரஜன் முன்னரே பிரணவ்வை சந்தித்ததாகக் கூறவும் பிரதாப்பைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள் அனுபல்லவி.

பிரணவ் குழந்தைக்கு பதிலளிக்காது அமைதியாக இருக்க, "ஹேய்... யாரைப் பார்த்து நீ அப்பான்னு சொல்ற? அதோ நிக்கிறான் உன் அப்பா..." என பிரதாப்பைக் கை காட்டி அர்ச்சனா கடுமையாகக் கூறவும் குழந்தை பயந்து பிரணவ்வின் பின்னால் ஒளிந்து கொண்டது.

அர்ச்சனா குழந்தையைக் கடிந்து கொள்ளவும் பிரணவ் அவளை விழிகளாலேயே சுட்டெரிக்க, கப்சிப் என வாயை மூடிக் கொண்டாள் அர்ச்சனா.

இவ்வளவு நேரமும் உடல் நடுங்க நின்று கொண்டிருந்த அனுபல்லவி தன் முன்னே தன் மகனை அர்ச்சனா திட்டவும் ஆவேசமானவள் அர்ச்சனாவை முறைத்து விட்டு பிரஜனை தன்னை நோக்கி இழுத்தாள் கோபமாக.

பிரஜனோ பிரணவ்வை இறுக்கிக் கட்டிக்கொள்ள, "பிரஜு... இப்போ அம்மா கிட்ட வரப் போறியா இல்லையா?" எனக் கோபமாகக் கேட்டபடி பிரஜனை மீண்டும் இழுத்தாள் அனுபல்லவி.

அனுபல்லவியின் கரத்தை பற்றிய பிரணவ் அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, "அப்பா உங்க அம்மா கூட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு... அது வரைக்கும் அங்கிள் கூட போய் வெளிய விளையாடுறியா?" எனப் பிரஜனிடம் குனிந்து புன்னகையுடன் கேட்கவும், "ஓக்கே ப்பா..." என்றான் பிரஜன் புன்னகையுடன்.

பிரணவ் அனுபல்லவியின் கார் ட்ரைவரைத் திரும்பிப் பார்க்கவும் அவர் பிரஜனை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.

அனுபல்லவி பிரணவ் பிடித்திருந்த தன் கரத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் கரத்தை விட்ட பிரணவ், "இப்போ சொல்லு... ஏன் இப்படி எல்லாம் பண்ணுற?" எனக் கேட்டான் அழுத்தமாக.

அனுபல்லவியோ எதுவும் கூறாது தலை குனிந்து நின்றிருக்க, "உன்ன தான் கேட்குறேன்... வாயைத் திறந்து பதில் சொல்லு பல்லவி..." என அவளின் தோளைப் பற்றி உலுக்கி ஆவேசமாகக் கேட்டான் பிரணவ்.

அப்போதும் அனுபல்லவி அமைதியாக இருக்க, "பிரணவ்... என்ன பண்ணிட்டு இருக்க நீ? அவ புருஷன் முன்னாடியே இப்படி நடந்துக்குற..." எனக் கடிந்து கொண்டார் மூர்த்தி.

"யாருக்கு யாரு புருஷன்? இதோ இவரா?" எனப் பிரதாப்பைக் காட்டிக் கேட்ட பிரணவ், "நீ தான் இவ புருஷனா? சொல்லு? நீ தான் பிரஜனோட அப்பாவா?" எனக் கேட்டான் பிரதாப்பிடம் கடுமையாக.

பிரதாப் அமைதியாக இருக்க, "பிரணவ்... ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குற? அதுவும் அர்ச்சனா முன்னாடியே... அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்? அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட அவன் முன்னாடியே இப்படி நடந்துக்கலாமா?" எனக் கேட்டார் லக்ஷ்மியும் கோபமாக.

அனுபல்லவியின் அருகில் சென்ற பிரணவ், "யாரு அடுத்தவன் பொண்டாட்டி? நான் என் பொண்டாட்டி கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கேன்... நான் தொட்டு தாலி கட்டின பொண்டாட்டி கிட்ட..." என ஆவேசமாகக் கூறியவன் அனுபல்லவியின் கழுத்தில் தொங்கிய தாலியைத் தூக்கிக் காட்டவும் அனுபல்லவி, பிரதாப் தவிர அனைவருமே அதிர்ந்தனர்.

அர்ச்சனா, "பி... பிரணவ்... பொய் சொல்லாதீங்க... நானும் நீங்களும் தான் காதலிச்சோம்... நமக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் நடக்க போகுது... பிரதாப் தான் அனு புருஷன்..." என்கவும், "ஏய்..." எனக் கத்தி விரல் நீட்டி எச்சரித்த பிரணவ், "எனக்கு பழசு மறந்ததைப் பயன்படுத்தி நீ இதுவரை போட்ட நாடகம் எல்லாம் போதும்... உன்ன நான் அப்புறம் கவனிச்சுக்குறேன்... இப்போ நான் என் பொண்டாட்டி கிட்ட கேட்க வேண்டிய கேள்வி நிறைய இருக்கு..." என்றான் அழுத்தமாக.

பிரணவ் கூறிய செய்தியில் லக்ஷ்மியும் மூர்த்தியும் அதிர்ந்து அர்ச்சனாவை நோக்கினர்.

'இவனுக்கு எப்போ பழசு ஞாபகம் வந்தது?' என அர்ச்சனா யோசித்துக் கொண்டிருக்க, "பாஸ்... உங்களுக்கும் அனுவுக்கும் எப்போ கல்யாணம் ஆச்சு?" எனக் கேட்டான் இவ்வளவு நேரமும் அதிர்ச்சியில் நின்றிருந்த ஆகாஷ்.

பிரணவ் அனுபல்லவியை அழுத்தமாக நோக்க, அனுபல்லவியும் கலங்கிய கண்களுடன் அவனைத் தான் நோக்கிக் கொண்டிருந்தாள்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 28

மென் பஞ்சு மெத்தையில் தன்னவளை மெதுவாக கிடத்திய பிரணவ் அவள் மேல் படர்ந்து கழுத்தில் முகத்தைப் புதைத்தான்.

அனுபல்லவி, "பி...பிரணவ்..." எனத் தயக்கமாக அழைக்கவும், "பவி... நி...நிஜமாவே உனக்கு சம்மதமா?" என அவளின் கண்களைப் பார்த்து கேட்ட பிரணவ்வின் கண்களில் தெரிந்த ஏக்கம் அனுபல்லவியின் கன்னத்தை வெட்கத்தில் சிவக்கச் செய்து முகத்தில் மென் முறுவல் தோன்றச் செய்தது.

அனுபல்லவியின் முகமே அவளின் பதிலைக் கூறவும் மகிழ்ந்த பிரணவ் மறு நொடியே தன்னவளை முத்தங்களால் அர்ச்சிக்கத் தொடங்கினான்.

சில நிமிடங்களில் திடீரென அனுபல்லவியை விட்டு விலகிய பிரணவ்வைப் புரியாமல் பார்த்த அனுபல்லவி, "எ... என்னாச்சு?" எனக் கேட்டாள் தயக்கமாக.

‌அவளின் கேள்விக்கு பதிலளிக்காது எழுந்து கொண்ட பிரணவ் அவ் அறையில் இருந்த கப்போர்டைத் திறந்து எதையோ எடுத்து‌ வந்தான்.

அனுபல்லவியின் அருகே வந்தவன் அவளை கைப் பிடித்து எழுப்பி அவ் வீட்டில் இருந்த ஒரு பூஜை அறைக்கு அழைத்துச் சென்றான்‌.

அனுபல்லவி அவனின் செயல்களை புரியாமல் நோக்க, பிரணவ் தன் இடக் கரத்தால் அவளின் கரத்தைப் பற்றியவன் தன் வலக் கரத்தை விரித்தான்.

அவனின் உள்ளங்கையில் மின்னிய பொன் தாலியை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அனுபல்லவி.

"உன் கிட்ட ப்ரபோஸ் பண்ணும் போது இதைக் கொடுத்து தான் பண்ணணும்னு ஆசை ஆசையா ரெடி பண்ணேன் பவி... ஆனா அன்னைக்கு பார்ட்டில நடந்த பிரச்சினையால அதுக்கு வாய்ப்பு இல்லாம போயிடுச்சு... இப்போ தான் அதுக்கு சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு..." என பிரணவ் கூறவும் அனுபல்லவி அவனைக் கலங்கிய கண்களுடன் நோக்கினாள்.

பிரணவ், "மனசு ரொம்ப அடிச்சிக்கிது பவி... ஏதோ தப்பா நடக்க போறது போல..." என வருத்தமாகக் கூறவும் அவனின் கரத்தை அழுத்திய அனுபல்லவி, "எதுவும் நடக்காது பிரணவ்... என்ன நடந்தாலும் உங்களுக்காக நான் இருப்பேன்..." என்றாள் ஆறுதலாய்.

"பவி... ஐ நீட் யூ பேட்லி..." எனப் பிரணவ் கூறவும் அனுபல்லவியின் காது மடல் சிவக்க, "பட் என்னால உன்ன யாரும் தப்பா பேசிட கூடாது..." எனப் பிரணவ் கூறவும் அவனைப் புரியாமல் நோக்கினாள் அனுபல்லவி.

"எனக்குன்னு யாரும் இல்லயே... என் மேல யாருக்கும் நிஜமான அக்கறை இல்லயே... காதலிக்க நான் தகுதியானவன் தானா? இப்படி பல எண்ணங்களோட நான் இருக்கும் போது தான் நீ என் வாழ்க்கைல வந்த... உனக்காக நான் இருப்பேன்னு நம்பிக்கை தந்த... அதே போல இருக்க... நீ என் லைஃப்ல கிடைச்ச மிகப் பெரிய வரம்... என்னோட தேவதை... இந்த தேவதை எனக்கே எனக்கா என் கடைசி மூச்சு வரை இருக்கணும்னு விரும்புறேன்..." என்ற பிரணவ் தன் கரத்தில் இருந்த தாலியை அனுபல்லவியின் கழுத்தின் அருகே கொண்டு செல்ல, அனுபல்லவியோ தன்னவனையே அதிர்ச்சியுடன் நோக்கினாள்.

"சபை கூட்டி, மந்திரம் சொல்லி, எல்லாரோட ஆசிர்வாதத்தோடும் உன் கழுத்துல மூணு முடிச்சிட்டு ஊரறிய உன்ன என் மனைவியா ஏத்துக்கணும்னு தான் எனக்கும் ஆசை... ஆனா இப்போ இந்த தாலியைக் கட்ட சொல்லி தான் என் மனசு சொல்லுது... உன் விஷயத்துல இது வரைக்கும் நான் என் மனசு சொல்றத மட்டும் தான் கேட்டு இருக்கேன்... இப்பவும் அதையே செய்ய விரும்புறேன்..." என்ற பிரணவ் அனுபல்லவியின் முகத்தை சம்மதத்தை எதிர்ப்பார்த்து நோக்க, இதழ்கள் புன்முறுவல் பூக்க கண்களை மூடி சம்மதமாக தலை குனிந்து நின்றாள் அனுபல்லவி.

மறு நொடியே புன்னகையுடன் தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரி பாதி ஆக்கிக் கொண்டான் பிரணவ்.

கண்கள் மகிழ்ச்சியில் கண்ணீரை சிந்த, கண்களில் காதலும் மகிழ்ச்சியும் போட்டி போட, இருவரின் விழிகளும் தம் இணைகளுடன் சங்கமித்தன.

பிரணவ் தன்னவளின் முகத்தை ஏந்தி அவளின் நுதலில் தன் காதல் சின்னத்தைப் பதிக்க, "லவ் யூ பிரணவ்..." என அவனை அணைத்துக் கொண்டாள் அனுபல்லவி.

பதிலுக்கு தன்னவளை இறுக்கி அணைத்த பிரணவ், "ஐ லவ் யூ பவி..." என முதல் முறை வார்த்தையாலும் தன் காதலை வெளிப்படுத்தினான்.

"ரொம்ப சீக்கிரமா சொல்லிட்டீங்க..." என அனுபல்லவி அவனின் அணைப்பில் இருந்து விடுபடாமலே குறைபட, "வெறும் வார்த்தையால சொல்லுறத விட என் காதலை ஒவ்வொரு பார்வையிலும் செயலிலும் உன்ன உணர வைக்க நினைச்சேன்... ஆனா என் பொண்டாட்டியோட மனசுல இருக்குற குறை எனக்கு தெரியாதா? எத்தனை தடவ நான் லவ் யூ சொல்லலன்னு ஃபீல் பண்ணி இருப்ப..." என்றான் பிரணவ் தன்னவளை சரியாகக் கணித்து.

அவனின் நெஞ்சில் முகம் புதைத்த அனுபல்லவி, "நீங்க பொண்டாட்டின்னு சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க... இனிமே நான் பெருமையா சொல்லிக்கலாம் நான் தான் பிரணவ் ராஜோட வைஃப்னு..." என்றாள் கண்கள் மின்ன.

"ம்ஹ்ம்..." என அனுபல்லவியைத் தன்னிடம் இருந்து விலக்கிய பிரணவ், "எனக்கு தான் பவியோட புருஷன்னு சொல்லிக்க பெருமையா இருக்கு..." என்றான் காதலுடன்.

அனுபல்லவியின் இதழ்கள் விரிய, அதனை ஆசை தீர ரசித்தவன் அனுபல்லவியின் இடையைப் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, "பொண்டாட்டின்னு சொன்னா பிடிச்சிருக்குன்னு சொல்ற... பொண்டாட்டியோட கடமைய செய்ய மாட்டியா அப்போ?" எனக் கேட்டான் பிரணவ் குறும்பாக.

பிரணவ்வின் கண்களில் இருந்த குறும்பை அ
கவதானிக்காத அனுபல்லவி, "என்ன கடமை? டெய்லி உங்களுக்கு சமைச்சு போடணுமா?" எனக் கேட்டாள் புரியாமல்.

அவளின் நெற்றியோடு நெற்றி முட்டிய பிரணவ், "அட மக்குப் பொண்டாட்டி... புருஷனுக்கு சமைச்சு கொடுக்குறது தான் பொண்டாட்டியோட கடமையா? அதுக்கு எதுக்கு பொண்டாட்டி? நான் பேசாம வேலைக்காரியே வெச்சிருப்பேனே... இது வேற டிப்பார்ட்மென்ட்..." என்றவன் அனுபல்லவியின் காதில், "இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் ஆச்சு... அதனால இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்..." எனக் கிசுகிசுக்கவும் அனுபல்லவியின் முகம் செவ்வானமாய் சிவந்தது.

"என்ன பதிலையே காணோம்?" என தன் மீசையால் அனுபல்லவியின் கழுத்து வளைவில் குறுகுறுப்பு ஊட்டியபடி பிரணவ் கேட்கவும் கூச்சத்தில் நெளிந்த அனுபல்லவி, "போங்க பிரணவ்..." என்று விட்டு அதற்கு எதிராய் அவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

அதனை சம்மதமாக ஏற்ற பிரணவ் அனுபல்லவியைப் பூக்குவியலைப் போல் தன் கரத்தில் ஏந்திச் சென்று மஞ்சத்தில் கிடத்தினான்.

அனுபல்லவி விழிகளைத் திறவாமல் இருக்க, "பவி... ஓப்பன் யுவர் ஐஸ்..." எனப் பிரணவ் கட்டளையிட, அவளோ மறுப்பாகத் தலையசைத்தாள்.

"சரி அப்போ நான் கிளம்புறேன்... உனக்கு இஷ்டம் இல்லை போல..." எனப் பொய்யாகக் கூறவும் சட்டென விழிகளைத் திறந்த அனுபல்லவி, "எனக்கு ஓக்கே பிரணவ்..." என்றாள் பதட்டமாக.

மென் புன்னகை பூத்த பிரணவ் பதட்டத்தைத் தத்தெடுத்து இருந்த அனுபல்லவியின் விழிகளில் மெதுவாக இதழ் பதிக்கவும் அனுபல்லவியின் விழிகள் மீண்டும் நாணத்தில் மூடிக்கொள்ள, தன்னவளின் இதழ்த் தேன் பருகி இல்லறத்தை நல்லறமாகத் துவங்கி வைத்தான் பிரணவ்.

************************************

ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு பிரணவ்வின் அலுவலக அறை அமைதியாக இருந்தது.

அனுபல்லவி மற்றும் பிரணவ்வின் திருமணச் செய்தி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.

வெகுநேரம் தலை குனிந்து நின்றிருந்த அனுபல்லவி, "மாமா... நாம கிளம்பலாம்... ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு..." எனக் கதவை நோக்கி நடக்க, "நான் இன்னும் பேசி முடிக்கல..." என்றான் பிரணவ் அழுத்தமாக.

ஒரு நொடி அவனின் குரலில் நின்ற அனுபல்லவி மீண்டும் கதவை நோக்கி நடக்க, "இன்னும் ஒரு அடி எடுத்து வெச்சாலும் அதுக்கு அப்புறம் நடக்குறதே வேற..." என்றான் பிரணவ் பல்லைக் கடித்துக்கொண்டு.

அனுபல்லவியோ அவனின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாது மேலும் முன்னேறவும் இரண்டே எட்டில் அவளை நெருங்கி, "சொல்லிட்டே இருக்கேன்... கொஞ்சம் கூட கண்டுக்காம போற..." என்று விட்டு அனுபல்லவியின் கரத்தைப் பிடித்து இழுத்து அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் பிரணவ்.

பிரணவ்வின் அடியில் அனுபல்லவி தள்ளிச் சென்று விழுக, உதட்டோரம் கிழிந்து இரத்தம் வடிந்தது.

"டேய்..." "பிரணவ்" "பாஸ்" என்ற அதிர்ச்சியான குரல்கள் ஒரே நேரத்தில் அறையில் ஒலித்தன.

கீழே விழுந்து கிடந்த மனைவியின் கரத்தை அழுத்தப் பற்றித் தூக்கிய பிரணவ், "எனக்கு தானே பழசு மறந்து போச்சு... உனக்கு என்ன டி வந்தது? சொல்லு... உனக்கு என் கிட்ட சொல்லி இருக்க முடியும்ல... என்ன தைரியத்துல நீ என் பையனையும் என் கிட்ட இருந்து பிரிச்சு அவன அப்பா பாசத்துக்காக ஏங்க விட்டிருப்ப?" எனக் கேட்டான் ஆவேசமாய்.

"பிரணவ்... அனு மேல எந்தத் தப்பும் இல்ல... என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன்..." எனப் பிரதாப் குறுக்கிட, அவனைத் திரும்பி எரிப்பது போல் பார்த்த பிரணவ், "நான் என் பொண்டாட்டி கிட்ட பேசிட்டு இருக்கேன்..." என்றான் அழுத்தமாய்.

பின் மீண்டும் அனுபல்லவியிடம் திரும்பி, "சொல்லு டி... ஏன் இன்னும் அமைதியா இருக்க? என்ன மனசுல வெச்சிட்டு இதெல்லாம் பண்ண? உன் முழு சம்மதத்தோட தானே உன் கழுத்துல இந்தத் தாலிய கட்டினேன்..." என அவளைப் போட்டு உலுக்கினான்.

அனைவரும் பார்வையாளர்களாக வாய் மூடி அமைதியாக இருக்க, அனுபல்லவி குனிந்த தலை நிமிரவே இல்லை.

ஆனால் கண்ணீர் மட்டும் அவளின் அனுமதியே இன்றி வழிந்தது.

"ஓக்கே... நீ பதில் சொல்ல மாட்டேல்ல... நானே உனக்கு முக்கியம் இல்லாதப்போ நான் கட்டின தாலி மட்டும் எதுக்கு டி?" எனக் கோபமாக கேட்ட பிரணவ் அனுபல்லவியின் கழுத்தின் தொங்கிய தாலியில் கை வைத்து இழுக்க முயல, சட்டென பிரணவ்வின் கரத்தைப் பற்றித் தடுத்த அனுபல்லவி மறுப்பாகத் தலையசைத்து அவனைக் கெஞ்சலாகப் பார்த்தாள் கண்ணீருடன்.

தன்னவளின் கண்களில் இருந்த வலி பிரணவ்வை ஏதோ செய்ய, மறு நொடியே அனுபல்லவியை விட்டு விலகியவன் தலையை அழுத்தக் கோதி தன்னை சமன் செய்ய முயன்றான்‌.

பின் பெருமூச்சு விட்டவன் ஆகாஷிடம் திரும்பி, "ஆகாஷ்... நான் என் பையன கூட்டிட்டு என் வீட்டுக்கு கிளம்புறேன்... அவளுக்கு என் மேல தான் காதல் இல்ல... அட்லீஸ்ட் பையன் மேலயாச்சும் கொஞ்சமாவது பாசம் இருந்தா அங்க வர சொல்லு... ஆனா என் பையன இனி ஒரு நிமிஷம் கூட என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது..." என அழுத்தமாகக் கூறிய பிரணவ் அங்கிருந்து சென்று விட, அதிர்ச்சிக்கு மேல் ஏற்பட்ட அதிர்ச்சியில் அனுபல்லவியை ஒரு பார்வை பார்த்து விட்டு பிரணவ்வைப் பின் தொடர்ந்தனர் மூர்த்தி மற்றும் லக்ஷ்மி.

பிரணவ்விற்கு பழைய நினைவுகள் மீண்டதில் அவர்கள் இருவரின் மனதிலும் வேறு ஒரு பயம் எழுந்திருந்தது.

பிரணவ் நினைவுகளை இழக்கும் முன் தாம் அவனைப் பெற்றவர்கள் இல்லை என்ற உண்மை தெரிந்து அவன் கோபப்பட்டு அங்கிருந்து சென்று தான் அனைத்தும் நடந்திருந்தது‌.

இப்போது மீண்டும் பழைய நினைவுகள் திரும்பியதில் எங்கு தம்மை வெறுத்து விடுவானோ எனப் பயந்தனர் இருவரும்.

அவர்கள் சென்றதும் அனுபல்லவியை முறைத்த அர்ச்சனா, "அத்த... மாமா..." எனக் கத்திக்கொண்டு அவர்களைத் தொடர்ந்து ஓடினாள்.

அனைவரும் சென்ற பின்னும் அனுபல்லவி குனிந்த தலை நிமிராமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க, "இதை எனக்கு சொல்ல உரிமை இருக்கா இல்லையான்னு தெரியல... நீங்க என்னை எப்படி பார்த்தீங்களோ எனக்கு தெரியாது... மதிக்கு நீங்க ஃப்ரெண்ட் அப்படிங்கிறத தாண்டி நான் உங்கள என் கூடப் பிறக்காத தங்கச்சியா தான் பார்த்தேன்... உங்க அளவுக்கு எனக்கு என் பாஸும் முக்கியம்... நீங்க ஒருவேளை இங்கயே இருந்திருந்தா நானே பாஸ் கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி இருப்பேன்... ஆனா நீங்க சொல்லாம கொள்ளாம போனதுக்கு அப்புறம் அவருக்கு பழைய ஞாபகங்கள் வந்து என் பல்லவி எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்... அதனால தான் எதையும் சொல்லல...

அவருக்கு உங்க நினைவுகள் வேணா மறந்து இருக்கலாம்... ஆனா இந்த அஞ்சி வருஷமா எதைத் தேடுறேன்னே தெரியாம தான் தொலைச்ச எதையோ ஒன்ன தேடி எங்க எங்கயோ அலைஞ்சிட்டு தான் இருந்தார்... வெளிய சொல்லவும் முடியாம யார் கிட்ட கேட்குறதுன்னும் தெரியாம என்னன்னே தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டார்... ஹைதரபாத்துக்கு போறோம்னு சொன்னதும் தான் நான் அவர் முகத்துல அந்த பழைய சிரிப்ப பார்த்தேன்... அது எதனாலன்னு எல்லாம் எனக்கு தெரியல... அவரோட மூளை தான் உங்கள பத்தின நினைவுகள மறந்ததே தவிர அவர் மனசுல எப்பவும் நீங்க மட்டும் தான் இருந்தீங்க...

அர்ச்சனா அவங்க ரெண்டு பேரும் தான் காதலிக்கிறதா சாரையும் மேடமையும் நம்ப வெச்சி பாஸ் கிட்ட சொன்னப்போ கூட காதலின்னு சொல்லப்பட்டவள கூட அவர் தன்னை நெருங்க விடல... வெளிய சொல்லலன்னாலும் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்வளவு அன்பா இருந்தீங்கன்னு நானே பல தடவ உணர்ந்து இருக்கேன்... உங்களோட இந்த அமைதிக்கு பின்னால நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு தெரியும்... பட் அதைத் தெரிஞ்சிக்குற உரிமை பாஸுக்கு இருக்கு...

நான் சொல்ல எதுவும் இல்ல... யோசிச்சு நடந்துக்கோங்க... இனியாவது பாஸை கஷ்டப்படுத்தாதீங்க... மனசுளவுல அவர் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கார்... அதனால தான் இவ்வளவு ஆத்திரம்... ஆனா ஒரு அண்ணனா என் தங்கச்சி வாழ்க்கை நல்லா அமையணும்னு ஆசைப்பட்டு கேட்குறேன்... எதுவா இருந்தாலும் பாஸ் கூட பேசி தீர்த்துக்கோங்க... ரெண்டு பேரும் இனிமேலாவது ஒன்னா சந்தோஷமா வாழுங்க..." என்று விட்டு அங்கிருந்து சென்றான் ஆகாஷ்.

ஆகாஷ் சென்றதும் அனுபல்லவி தலையில் அடித்துக்கொண்டு கதற, "அனு... ப்ளீஸ்... அழாதே... வா நாம பிரணவ் வீட்டுக்கு போகலாம்... நீ இந்த நிலமைல இருக்க நானும் ஒரு விதத்துல காரணம்... நானே பிரணவ் கிட்ட எல்லா உண்மையையும் சொல்றேன்... நான் பண்ண தப்புக்கு பிராயச்சித்தம் தேட ஒரு வழி கிடைச்சிருக்கு... தயவு செஞ்சி எனக்கு ஒரு வாய்ப்பு கொடு..." எனக் கேட்டான் பிரதாப்.

சில நிமிடங்கள் கண்ணீர் விட்ட அனுபல்லவி ஏதோ ஒரு முடிவுடன் நிமிர்ந்து தன் கண்களை அழுத்தத் துடைத்துக்கொண்டு, "வாங்க மாமா கிளம்பலாம்..." என வெளியேறினாள்.

அனுபல்லவி எங்கு செல்லப் போகிறாள் எனப் புரியாமலே அவளைப் பின் தொடர்ந்தான் பிரதாப்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 29

தந்தையின் கட்டளைக்கு இணங்க பார்க்கில் ட்ரைவருடன் விளையாடிக்கொண்டிருந்த பிரஜன் அங்கு பிரணவ் வருவதைக் கண்டதும், "அப்பா..." எனத் துள்ளிக் குதித்தபடி ஓடிச் சென்று பிரணவ்வை அணைத்துக் கொண்டான்.

தன்னை வந்து கட்டிக் கொண்ட மகனை புன்னகையுடன் தூக்கிக் கொண்ட பிரணவ் பிரஜனின் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தான்.

பிரணவ்வின் கண்கள் ஆனந்தத்தில் லேசாகக் கலங்க, தன் குட்டிக் கரங்களால் அதனைத் துடைத்து விட்ட பிரஜன், "என்னாச்சு அப்பா? ஏன் அழுறீங்க? பிரஜு ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?" எனக் கேட்டான் வருத்தமாக.

உடனே மறுப்பாகத் தலையசைத்த பிரணவ் குழந்தையை அணைத்துக்கொண்டு, "இது ஹேப்பி டியர்ஸ் கண்ணா... அப்பா பிரஜுவ பார்த்ததால வந்தது..." என்றவன் மீண்டும் தன் உயிரணுவில் ஜனித்த மகனை ஆசை தீர முத்தமிட்டான்.

"பிரஜு அப்பா கூட நம்ம வீட்டுக்கு போலாமா?" எனக் கேட்டான் பிரணவ்.

உடனே தன் வெண் பற்கள் தெரியச் சிரித்த பிரஜன் சம்மதமாய்த் தலையசைத்து விட்டு, "பட் அம்மா பிரஜுவ காணோம்னு தேடுவாங்களே... அப்புறம் அம்மா அழுவாங்க..." என்றான் உடனே வருத்தமாக.

"உங்க அம்மா தேட மாட்டாங்க கண்ணா... பிரஜுவும் அப்பாவும் முன்னாடி போலாம்... அம்மா பின்னாடியே வருவாங்க... ஓக்கேயா?" எனப் பிரணவ் கேட்கவும் பிரஜன் சரி எனத் தலையசைக்கவும் அவனை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு கிளம்பினான்.

வீடு செல்லும் வழி எங்கிலும் ஏதேதோ பேசிக்கொண்டு வந்தான் பிரஜன்.

தன் குறும்புத்தனங்கள், தாயுடன் கழித்த நிமிடங்கள் என தனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நடந்த அனைத்தையும் தந்தையிடம் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டான் பிரஜன்.

பிரஜன் பேசுபவற்றை ஆசை பொங்க பார்த்த பிரணவ்வின் மனமோ மிகுந்த வேதனை அடைந்தது.

'எத்தனை சந்தோஷங்களைத் தான் இழந்திருக்கிறேன்? தன் மகனின் குட்டிக் குட்டிக் குறும்புகளை எல்லாம் பார்க்காமல் அவனின் கூடவே இருந்து வளர்க்க முடியாமல் போன துரதிஷ்டசாலி ஆகி விட்டேனே...' எனப் பிரணவ்வின் மனம் கதறியது.

பிரஜனின் பேச்சிலே தந்தைப் பாசத்துக்கு அவன் எவ்வளவு ஏங்கி இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட பிரணவ்விற்கு மொத்த கோபமும் அனுபல்லவியின் பக்கம் திரும்பியது.

'தனக்கும் தன் மகனுக்கும் எவ்வளவு பெரிய அநீதியை இழைத்து விட்டாள்' எனப் பிரணவ்வின் உள்ளம் கொதித்தது.

மனம் ஒரு பக்கம் தன்னவள் காரணம் இன்றி இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டாள் என அடித்துக் கூறினாலும் மூளை அதை ஏற்க மறுத்தது.

எத்தனை காரணங்கள் கூறினாலும் தான் இழந்தது இழந்தது தானே. அதை மீண்டும் மீட்க முடியுமா என்ன?

சில நிமிடங்களில் வீட்டை அடைந்ததும் பிரணவ் தன் புதல்வனைத் தூக்கிக் கொண்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தான்.

"வாவ்... இனிமே நாம இந்த வீட்டுல தான் இருக்க போறோமா ப்பா?" எனக் கேட்டான் பிரஜன் ஆவலாக.

"ஆமாடா... என் பிரஜு இனிமே அப்பா கூட இந்த வீட்டுல தான் இருக்க போறான்... இங்க பிரஜுவுக்கு தாத்தா பாட்டி எல்லாம் இருக்காங்க..." எனப் பிரணவ் கூறவும், "ஹை.. ஜாலி... ஜாலி..." எனக் கை தட்டிச் சிரித்தான் பிரஜன்.

பின் திடீரென ஏதோ நினைவு வந்தவனாக, "அப்போ அம்மா?" எனப் பிரஜன் யோசனையாக கேட்கவும், "அம்மாவும் தான்... அப்பா... அம்மா... பிரஜு... எல்லாரும் ஒன்னா இருக்க போறோம்..." எனப் பிரணவ் பதிலளிக்கவும், "தேங்க்ஸ் பா..." என்று பிரஜன் பிரணவ்வின் கன்னத்தில் முத்தமிட்டான்.

பிரணவ் வீட்டை அடைந்து சில நிமிடங்களிலேயே மூர்த்தியும் லக்ஷ்மியும் வீட்டுக்கு வந்து விட, அவர்களைத் தொடர்ந்து அர்ச்சனாவும் அங்கு வந்திருந்தாள்.

அவர்களைப் பிரஜன் வாசலில் பார்த்ததும் பிரணவ்வின் காலின் பின்னே ஒளிந்து கொண்டான்.

பிரஜனைத் தூக்கிக் கொண்டு மகன் நினைவு தெரிந்ததால் மீண்டும் என்ன கூறுவானோ எனப் பயத்துடன் நின்று கொண்டிருந்த லக்ஷ்மி மற்றும் மூர்த்தியை நோக்கிச் சென்ற பிரணவ், "பிரஜு... இவங்க தான் உன்னோட தாத்தா பாட்டி... என்னோட அப்பா அம்மா... அவங்க கிட்ட போய் பேசு..." என மகனிடம் கூறுவது போல் தன் பெற்றோரின் மனதில் இருந்த பயத்தை நீக்கவும் இருவருமே மகிழ்ந்தனர்.

பிரணவ் கூறவும் அவனிடம் இருந்து இறங்கி லக்ஷ்மியை நோக்கி நடந்த பிரஜன், "பா...பாட்டி..." எனத் தயக்கமாக அழைக்கவும் அவனை வாரி அணைத்து முத்தமிட்ட லக்ஷ்மி, "என் செல்லம்... அப்படியே என் பிரணவ் போலவே இருக்கப்பா... என்னங்க... நம்ம பேரன பாருங்க..." என உணர்ச்சி வசப்பட்டார்.

மூர்த்தியும் புன்னகையுடன் தன் பேரனை அணைத்து முத்தமிட, "பிரஜுவயும் பிரஜு அம்மாவையும் இங்க அப்பா கூடவே இருக்க பர்மிஷன் தருவீங்களா?" எனக் கேட்டான் பிரஜன் தயக்கமாக.

"எதுக்கு கண்ணா அனுமதி எல்லாம் கேட்டுக்கிட்டு? உனக்கு இல்லாத உரிமையா? இது உன் அப்பா வீடு... நீ தான் இந்த வீட்டோட வாரிசு... நீயும் உங்க அம்மாவும் தாராளமா இங்க தங்கலாம்... பாட்டி என் குட்டிக் கண்ணனுக்கு பிடிச்சதை எல்லாம் சமைச்சு தரேன்... நைட் தூங்கும் போது கதை சொல்றேன்..." என்றார் லக்ஷ்மி புன்னகையுடன்.

அதனைக் கேட்டு புன்னகைத்த பிரஜன் அவர்களுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டான்.

அதே நேரம், "பிரணவ்..." என அழைத்தபடி வந்த அர்ச்சனாவை அனைவரும் துச்சமாக நோக்க, "ஆகாஷ்... பிரஜுவ கூட்டிட்டு உள்ள போங்க‌‌..." என அப்போது தான் அங்கு வந்த ஆகாஷிடம் பிரணவ் கூறவும் ஆகாஷ் பிரஜனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

அவர்கள் சென்றதும், "கழுத்த பிடிச்சு வெளிய துரத்த உன்ன தொடுறதை கூட விரும்பல நான்... நீயாவே போயிடு இங்க இருந்து... இல்ல அசிங்கப்படுவ..." என எச்சரித்தான் பிரணவ்.

அர்ச்சனா, "இல்ல பிரணவ் நான் நிஜமாவே உங்கள..." என ஏதோ கூற வரவும் ஆத்திரத்தில் பல்லைக் கடித்த பிரணவ் அர்ச்சனாவின் கழுத்தைப் பற்றி வெளியே தள்ள, அந் நேரம் பிரதாப்புடன் அங்கு வந்த அனுபல்லவியின் காலடியில் சரியாக சென்று விழுந்தாள் அர்ச்சனா.

அனுபல்லவி அதிர்ச்சியுடன் அர்ச்சனாவின் கையைப் பிடித்து எழுப்ப முயல, அவளோ அனுபல்லவியின் கரத்தைத் தட்டி விட்டு தானாகவே எழுந்து நின்று அனுபல்லவியை முறைத்தாள்.

"எல்லாம் உன்னால தான்... நீ எதுக்கு டி திரும்ப வந்த? இந்த அஞ்சி வருஷமும் நான் எவ்வளவு நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருந்தேன் தெரியுமா? நீ வந்ததும் எல்லாம் நாசமா போச்சு... போனவ அப்படியே தொலைஞ்சி போயிருக்க வேண்டியது தானே... நான் பிரணவ்வ எவ்வளவு காதலிக்கிறேன்னு தெரியுமா? உன்னால தான் அவர் இப்போ என்னை வீட்ட விட்டே துரத்துறார்... உன்ன நான் சும்மா விட மாட்டேன் டி..." என ஆவேசமாகக் கூறிய அர்ச்சனா அனுபல்லவியை அடிக்கக் கை ஓங்க, அவளின் கரத்தை அழுத்தப் பற்றி தடுத்தது ஒரு கரம்.

தன்னைத் தடுத்தது யார் எனத் திரும்பிப் பார்த்த அர்ச்சனா அங்கு கார்த்திக்கை சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை.

ஐந்து வருடங்களில் ஆளே மாறிப் போய் இருந்தான்.

அடர்ந்த தாடி முகத்தின் பாதியை மறைந்திருக்க, ஒழுங்காக கத்தரிக்கப்படாத முடியும் சிவந்திருந்த கண்களும் என வித்தியாசமான தோற்றத்தில் இருந்தான் கார்த்திக்.

"கா... கார்த்திக்..." என அர்ச்சனா அதிர்ச்சியுடன் அழைக்க, "இது உனக்கான இடம் இல்ல அர்ச்சு..." என்றான் கார்த்திக் எப்போதும் போல் கனிவான குரலில்.

ஆனால் அதனைக் கேட்கும் மனநிலையில் தான் அர்ச்சனா இருக்கவில்லை.

கார்த்திக்கின் பிடியில் இருந்து தன் கரத்தை உருவிய அர்ச்சனா அதே கோபத்துடன், "அதை நீ எப்படி சொல்லலாம்? நான் தான் இந்த வீட்டோட மருமக..." என்கவும் கண்களை மூடித் திறந்து தன்னை சமன்படுத்திக்கொண்ட கார்த்திக், "இன்னொருத்தியோட புருஷனுக்கு ஆசைப்படுறத விட கேவலமான ஒன்னு இந்த உலகத்துலயே இல்ல... அதுவும் அவங்களுக்கு குழந்தை வேற இருக்கு..." என்றான் அமைதியாக.

"இவ எங்கயோ கண்டவன் கூட ஊரு மேஞ்சி புள்ளய பெத்துக்கிட்டு வந்து இப்போ சொத்துக்காக அதைப் பிரணவ்வோட புள்ளன்னு சொன்னா நாங்க நம்பணுமா? இப்படி ஒரு பொழப்புக்கு இவ பிச்சை எடுக்கலாம்..." என அர்ச்சனா நாக்கில் நரம்பில்லாமல் பேசிய அடுத்த நொடியே அவளின் கன்னங்கள் தீயாய் எரிந்தன.

தன்னவளைப் பற்றித் தவறாகப் பேசவும் பிரணவ் அர்ச்சனாவை நோக்கி ஆத்திரமாக அடி எடுத்து வைக்க, அதற்குள் கார்த்திக்கே அவளை அறைந்திருந்தான்.

அர்ச்சனா கார்த்திக்கை அதிர்ச்சியாக நோக்க, அவள் மறுக்க மறுக்க அவளின் கைப் பற்றி அங்கிருந்து இழுத்துச் சென்றான் கார்த்திக்.

அவர்கள் சென்றதும் பிரணவ்வும் வீட்டிற்குள் செல்ல அடி எடுத்து வைக்க, "என் பையன அனுப்பி வைங்க..." என்றாள் அனுபல்லவி அழுத்தமாக.

ஏளனச் சிரிப்புடன் அவளை நோக்கித் திரும்பிய பிரணவ், "அவன் என் பையன்... என் பையன் என் கூட தான் இருப்பான்... எங்கேயும் போக மாட்டான்... உனக்கு உன் பையன் வேணும்னா நீயும் இந்த வீட்டுல தான் இருந்தாகணும்..." என்றான்.

அனுபல்லவி, "அவன பத்து மாசம் சுமந்து பெத்தவ நான்... அவன் பிறந்ததுல இருந்தே நான் அவன தனியா தான் வளர்க்குறேன்... இனியும் என்னால என் பையன வளர்க்க முடியும்... எனக்கு தான் அவன் மேல எல்லா உரிமையும் இருக்கு..." என்றாள் முயன்று வரவழைத்த குரலில்.

"யாரு உனக்கு என் பையன தனியா வளர்க்க சொன்னாங்க? அப்பா நான் உயிரோட இருக்கும் போது என் பையன என் கண்ணுலயே காட்டாம எடுத்துட்டு போய் வளர்த்துட்டு இப்போ வந்து உரிமைய பத்தி பேசுறியா?" எனக் கேட்டான் பிரணவ் எள்ளலாக.

"ப்ளீஸ் பிரஜுவ என் கூட அனுப்புங்க... என்னால அவன் இல்லாம இருக்க முடியாது... நாங்க ரெண்டு பேரும் எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போயிடுறோம்... இனிமே உங்க லைஃப்ல குறுக்கிட மாட்டோம் நாங்க..." எனக் கேட்டாள் அனுபல்லவி இம்முறை கெஞ்சலாக.

கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்த பிரணவ், "இப்போ கூட உனக்கு நான் வேணாம்ல... உன் பையன் மட்டும் தான் வேணும்... காதல் அது இதுன்னு சொன்னது எல்லாமே பொய்... அப்படி தானே... கடைசியில எல்லாரைப் போலவும் நான் அன்புக்காக ஏங்கினதை நீயும் உன் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கிட்டேல்ல..." எனக் கேட்டான் வருத்தம் தோய்ந்த குரலில்.

பிரணவ்வின் வார்த்தைகளில் அனுபல்லவியின் கண்கள் கலங்க, எதுவுமே கூறாது அமைதியாக இருந்தாள்.

பெருமூச்சு விட்ட பிரணவ், "சரி... உனக்கு நான் தான் வேணாம்ல... நான் உன் கழுத்துல கட்டின தாலிய இந்த நிமிஷமே கழட்டி கொடுத்துட்டு இங்க இருந்து போயிடு... ஆனா ஒன்ன மட்டும் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ... என் பையன என்னை விட்டு நான் எங்கேயும் அனுப்ப மாட்டேன்... இதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... என் பையனுக்கு நீ தான் அம்மாங்குறதையும் இதோட மறந்துட வேண்டியது தான்... தாலிய கழட்டி கொடு..." என அழுத்தமாகக் கூறியவன் அனுபல்லவியிடம் தாலியை வாங்க கரத்தை நீட்டினான்.

கலங்கிய கண்களுடன் மறுப்பாகத் தலையசைத்த அனுபல்லவி தன் தாலியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, "ப்ளீஸ் பிரணவ்... என்னைப் புரிஞ்சிக்கோங்க... என்னால நீங்க சொல்ற எதையும் பண்ண முடியாது..." எனக் கெஞ்சினாள்.

"நான் ஏன் டி உன்ன புரிஞ்சிக்கணும்? நீ என்னைப் புரிஞ்சிக்கிட்டியா? என் காதல புரிஞ்சிக்கிட்டியா? ஒவ்வொரு நிமிஷமும் நான் எவ்வளவு வேதனைய அனுபவிக்கிறேன்னு புரியுதா உனக்கு?" என ஆவேசமாகக் கேட்ட பிரணவ் எவ்வளவு அடக்கியும் அவனையும் மீறி கண்ணீர் வெளிப்பட்டு விட்டது.

"உங்களுக்காக நான் இருக்கேன்... உங்களுக்காக நான் இருப்பேன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லிட்டு இப்போ என்னை உயிரோட கொன்னுட்டு போக போறேல்ல பவி..." என உடைந்து அழுதான் பிரணவ்.

பிரணவ் மனம் உடைந்து அழவும் அவனுடன் சேர்ந்து கண்ணீர் விட்டாள் அனுபல்லவி.

தன்னவனைத் தெரிந்தே நோகடிக்கிறோம் என அவளின் மனம் தவியாய்த் தவித்தது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினையில் தாம் தலையிட விரும்பாமல் ஒதுங்கி நின்ற மூர்த்திக்கும் லக்ஷ்மிக்கும் கூட தம் மகன் இப்படி உடைந்து போய் அழுவதைப் பார்த்து மனம் வேதனை அடைந்தது.

சில நிமிடங்கள் அழுகையில் கரைந்த அனுபல்லவி தன் கண்களைத் துடைத்துக்கொண்டு நேராக லக்ஷ்மியிடம் சென்றவள், "ஒரு தாசியோட பொண்ணு உங்க மருமகளா இருக்குறது உங்களுக்கு சந்தோஷமா இருக்கா?" எனக் கேட்டாள் அழுத்தமாக.

அவளின் கேள்வியில் பிரணவ் உட்பட அனைவருமே அதிர, லக்ஷ்மியின் முகம் மாறியதைக் கண்டு அனுபல்லவியின் முகத்தில் வேதனையின் சாயலுடன் கூடிய கசந்த புன்னகை ஒன்று உதித்தது.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 30

ஹைதரபாத்தில் இருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு இடத்தில் தாசிகளுக்கெனவே இருந்த ஒரு குடியிருப்பில் வாழ்ந்தவர் அனுஷியா.

தன் பதினாறு வயதில் ஒரு விபத்தில் பெற்றோரை இழந்து குடும்ப உறவுகளால் ஒதுக்கப்பட்டு எதுவுமே இன்றி அநாதையாக வந்து சேர்ந்தவரை அரவணைத்தது அக் குடியிருப்பில் வாழும் தாசிகள் தான்‌.

அங்கிருந்த அனைவரும் விதியாலும் சதியாலும் தாசிகளாக மாறியவர்களே.

ஆகையால் தம்மைப் போல் அனுஷியா மாறி விடக் கூடாது என்பதற்காகவே கயவர்களின் பார்வையில் இருந்து முடிந்தளவு அவளை மறைத்து வைத்தனர்.

இவ்வாறிருக்க அனுஷியா தன் இருபதுகளின் தொடக்கத்தில் காலடி எடுத்து வைக்க, அக் குடியிருப்பின் நிர்வாகியின் பார்வையில் விழுந்தாள் அனுஷியா.

இதுவரை எப்படியோ அவருக்கு தெரியாமல் தான் மற்ற தாசிகள் அனுஷியாவை அங்கே தங்க வைத்திருந்தனர்.

நிர்வாகியின் பார்வையில் விழுந்தால் நிச்சயம் அனுஷியாவையும் அவர் தம்மைப் போலவே மாற்றி விடுவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.

எப்படியோ இதனை அறிந்து விட்ட நிர்வாகி சத்யன் கேவலமாக ஒரு திட்டத்தைத் திட்டினார்.

"இந்தப் பொண்ணுக்கும் என் பொண்ணு வயசு தான் இருக்கும்... அதனால இந்தப் பொண்ணு இங்கயே பாதுகாப்பா இருக்கட்டும்... ஆனா இனிமே இப்படி எனக்குத் தெரியாம திருட்டுத்தனம் பண்ணாம இருங்க..." என மற்ற தாசிகளைப் பொய்யாக மிரட்டி விட்டுச் சென்றார்.

அன்றிலிருந்து அனுஷியா அங்கேயே அடைந்து கிடக்காமல் ஏதாவது வேலை கிடைக்குமா எனத் தேடி அலைய, அவள் செல்லும் இடம் எல்லாம் அவள் தாசிகளுடன் வசிப்பதால் அவளைக் கேவலமாகப் பார்த்தும் வார்த்தைகளால் வதைத்தும் வந்தனர்.

மனமுடைந்து திரும்பும் அனுஷியாவிற்கு அங்கிருந்த தாசிகள் தான்‌ ஆறுதலாக இருந்தனர்.

அனுஷியா மூலம் நல்ல வருவாயை ஈட்ட எண்ணிய நிர்வாகி அதற்குத் தகுந்த வாய்ப்பை எதிர்ப்பார்த்துக் காத்திருக்க, அச் சந்தர்ப்பமும் கிடைத்தது.

அன்று வழமை போலவே வேலை தேடி அலைந்த அனுஷியாவின் கைப்பேசிக்கு அழைத்தார் நிர்வாகி.

அவசரமாக அழைப்பை ஏற்ற அனுஷியா, "சொல்லுங்க ஐயா..." என்க, "அம்மாடி அனுஷியா... நம்ம மாலினி இருக்காளே... அவளுக்கு சின்ன பிரச்சினை ஆகிடுச்சு மா..." என்றார் சத்யன்.

அனுஷியாவை அங்கு அழைத்து வந்து அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்ததே மாலினி தான்.

அவளுக்கு என்னவோ ஏதோவென பதறிய அனுஷியா, "அக்காவுக்கு என்னாச்சு ஐயா?" எனக் கேட்டாள் பதட்டமாக.

சத்யன், "வழமையா வர கஸ்டமர் இல்லாம இன்னைக்கு புது கஸ்டமர் ஒன்ன பார்க்க அந்தப் பொண்ணு போயிருக்கா... போன இடத்துல கொஞ்சம் பிரச்சினை போல... நான் வேற வேலை விஷயமா வெளிய வந்திருக்கேன்... மத்ததுங்க எல்லாரும் கஸ்டமர பார்க்க போயிருக்காங்க... அவங்கள டிஸ்டர்ப் பண்ண முடியாது... அதான் மா உன் கிட்ட சொல்றேன்... கொஞ்சம் நீ போய் பார்த்து அந்தப் பொண்ண கூட்டிட்டு வர முடியுமாம்மா?" எனக் கேட்டார்.

மாலினிக்கு பிரச்சினை என்றதும் எதைப் பற்றியும் யோசிக்காத அனுஷியா, "அட்ரஸ சொல்லுங்க ஐயா... நான் உடனே போறேன்..." என்றாள்.

அதன்படி சத்யன் அனுப்பிய முகவரிக்கு சென்று பார்க்க, அதுவோ ஏதோ லாட்ஜ் போல் இருந்தது.

அதனைப் பற்றி யோசிக்காதவள் உள்ளே சென்று சத்யன் கூறிய அறை எண்ணைத் தேடிச் சென்றாள்.

மூடியிருந்த கதவை வேகமாகத் திறந்தவள் கண்டது என்னவோ இருட்டாக இருந்த அறையைத் தான்.

வேகமாக அறை விளக்கை ஒளிர விட்டவள், "அக்கா... எங்க இருக்கீங்க?" எனக் குரல் கொடுத்தபடி முன்னேற அவளைப் பின்னிருந்து அணைத்தது ஒரு உருவம்.

"ஏய்... யாரு நீ? விடு என்னை... அக்கா..." என அனுஷியா பயத்தில் கத்த, "செம்ம ******* ஆ இருக்க பேபி..." என்றது ஒரு ஆண் குரல்.

அவனிடமிருந்து இருந்து வந்த மது வாடையில் அனுஷியாவிற்கு வாந்தி வருவது போல் இருந்தது.

"ச்சீ..." என வேகமாக அக் கயவனைத் தள்ளி விட்ட அனுஷியா கதவைத் திறக்க முயல, அதுவோ பூட்டப்பட்டிருந்தது.

அனுஷியா அதனைத் திறக்க முயற்சிக்கும் போதே அவளின் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்த கயவன், "எங்க பேபி தப்பிக்க போற? உன்ன போக விடுறதுக்கா அந்தாளுக்கு அம்புட்டு பணத்த அள்ளி அள்ளி கொடுத்தேன்..." என்றவன் அனுஷியாவை முத்தமிட நெருங்க, தன்னைத் திட்டமிட்டு இங்கு அனுப்பி உள்ளனர் என்பதைப் புரிந்து கொண்டவள் அக் கயவனிடமிருந்து தப்பிப்பதற்காக தன்னை முத்தமிட நெருங்கியவனின் முகத்தில் காரி உமிழ்ந்தாள்.

அதில் ஒரு நொடி அவனின் பிடி இளக, அதனைப் பயன்படுத்தி தப்பிக்க முயற்சித்தாள் அனுஷியா.

ஆனால் அவள் காரி உமிழ்ந்ததில் வெறியான கயவன் அனுஷியாவின் உடையைப் பற்றி இழுக்க, அவனின் பிடியில் அனுஷியா அணிந்திருந்த ஆடையின் கைப்பகுதி கிழிந்தது.

அவமானத்தில் அனுஷியாவின் விழிகள் கண்ணீரை சுரக்க, ஆடை கிழிந்த பகுதியில் பார்வையைப் பதித்த கயவனின் கண்கள் அவளை அடைய வெறியடைந்தன‌.

"ப்ளீஸ் என்னை விட்டுரு..." என அனுஷியா கண்ணீருடன் கெஞ்ச, அதனைக் கண்டு கொள்ளாதவனோ அனுஷியாவை வலுக்கட்டாயமாக கட்டிலில் தள்ளி விட்டு அவள் மீது படர்ந்து தன் ஆசையைத் தீர்க்க முயன்றான்.

அக் கயவனின் தொடுதலில் அனுஷியாவிற்கு நெருப்பில் வேகுவது போல் உணர்ந்தவள் அவனிடமிருந்து தப்பிக்கப் போராட, அக் கயவனின் உடல் பலத்திற்கு முன் அனுஷியாவின் கரங்களின் பலம் ஒன்றுமே இல்லாதது போல் இருந்தது.

இருந்தும் தன்னைக் காத்துக்கொள்ளப் போராடியவளின் பார்வையில் பட்டது கட்டிலின் அருகில் இருந்த மேசையில் இருந்த பூச்சாடி.

தன் கரத்தை நீட்டி பெரும்பாடு பட்டு அதனை எடுத்த அனுஷியா தன் மீது இருந்தவனின் தலையில் ஓங்கி அடிக்க, ஏற்கனவே போதையில் இருந்தவனின் பிடி விடுபட்டது.

அவனிடமிருந்து தப்பித்து அனுஷியா வெளியே ஓட, தன்னிலை அடைந்த கயவனும் அவளைப் பின்னால் துரத்தினான்.

தன் கற்பைக் காத்துக்கொள்ள வேகமாக ஓடியவள் அக் கயவன் அவளை விடாது துரத்தவும் அவன் காணும் முன் அவசரமாக ஒரு அறைக்குள் நுழைந்து பூட்டிக் கொண்டாள்.

நீண்ட மூச்சுகளை இழுத்து விட்டவள் மெதுவாக அவ் அறை விளக்கை ஒளிர விட்டதும் கண்ட காட்சியில் அனுஷியாவின் இதயம் ஒரு நொடி இயங்க மறுத்தது.

அவ் அறையின் திறந்திருந்த ஜன்னலின் மீது ஒரு கையில் மதுக் கிண்ணத்துடன் ஏறி நின்றிருந்த ஒருவன் அங்கிருந்து பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயல, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அனுஷியா வேகமாக அவனின் கையைப் பிடித்து கீழே இழுக்கவும் நிலை தடுமாறி அனுஷியாவின் மீதே விழுந்தார் பல்லவன்.

அனுஷியாவோ பல்லவனின் நெருக்கத்தில் அதிர்ச்சியில் இருக்க, "எதுக்காக என்னைக் காப்பாத்தின?" எனக் கேட்டார் பல்லவன் போதை மயக்கத்தில்.

அவசரமாக அவரிடமிருந்து விலகிய அனுஷியா அங்கிருந்து செல்லப் பார்க்க, "ஏன் என்னை காப்பாத்தின? நான் சாகணும்... சாகணும்..." என உலறியவாறே எழுந்து மீண்டும் ஜன்னல் பக்கம் நடக்க, தான் சென்ற பின் மீண்டும் அவர் ஏதாவது செய்து கொள்வாரோ என்ற பயத்திலும் அறைக்கு வெளியே இருந்த கயவனிடமிருந்து தப்பிக்கவும் சற்று நேரம் அங்கேயே இருக்க முடிவு செய்தார் அனுஷியா.

ஆனால் அவரின் மனமோ பல்லவனை அந் நிலையில் தனியே விட்டு செல்ல ஒப்புக்கொள்ளவில்லை.

ஜன்னல் பக்கம் நடந்த பல்லவனின் கரத்தைப் பற்றி நிறுத்திய அனுஷியா, "ஏன் உங்களுக்கு வாழ பிடிக்கல?" எனக் கேட்டாள் தயக்கமாக.

அவளின் கேள்வியே அவளுக்கு அபத்தமாகத் தோன்றியது.

தான் ஏன் சம்பந்தமே இல்லாமல் இவ் ஆடவனுக்காக வருந்துகிறோம் என மனசாட்சி வேறு கேள்வி எழுப்பியது.

அனுஷியாவின் கேள்வியில் அப்போது தான் அவளை உற்று நோக்கினார் பல்லவன்.

பின் ஒரு கசந்த புன்னகையுடன், "எல்லாம் இருக்கு... ஆனா ஒன்னுமே இல்ல..." என்ற பல்லவன் மதுக் கிண்ணத்தை வாயில் சரித்தார்.

பல்லவனின் பதிலில் அனுஷியாவின் மண்டை தான் குழம்பியது.

போதையில் இருப்பவரிடம் எதுவும் கேட்டுப் பயனில்லை எனப் புரிந்து கொண்ட அனுஷியா வேறு எதுவும் கேட்காது கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்.

சில நொடிகளில் அவளின் அருகில் வந்தமர்ந்த பல்லவன், "பணம் மட்டும் இருந்து போதுமா? வாழ்க்கைல சந்தோஷமும் நிம்மதியும் இருக்கிறவன் தான் உண்மையான பணக்காரன்..." என்றார்.

உள்ளே இறங்கிய மதுவின் காரணமாக மனதில் உள்ளவை அனைத்தும் வெளி வந்தன.

அனுஷியா அவர் கூறுவதை செவிமடுக்க, "என் தங்கச்சி... சின்ன வயசுல இருந்து அவ தான் எனக்கு எல்லாமே... அவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்து பண்ணேன்... அவ காதலிச்சாங்குற ஒரே காரணத்துக்காக கொஞ்சம் கூட வசதியே இல்லாத, எந்த வேலைக்கும் போகாதவன கல்யாணம் பண்ணி வீட்டோட மாப்பிள்ளையா வெச்சேன்... ஆனா அவ என்னடான்னா எப்பப்பாரு அவ புருஷன் பணம் கேட்டான்னு என் கிட்ட வந்து நிப்பா... நானும் தங்கச்சி தானேன்னு அள்ளி அள்ளி கொடுத்தா அவ புருஷன் ஊதாரித்தனமா செலவு பண்றான்... அதனால இனிமே பணம் தர முடியாதுன்னு சொன்னேன்... அப்பவாச்சும் அவனுக்கு பொறுப்பு வரும்னு நம்பிக்கைல தான்... ஆனா என் தங்கச்சி பணம் தர மாட்டேன்னு சொன்னதும் என்னையே எதிர்த்து பேசுறா... அவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்த பண்ண என்னையே தப்பா பேசுறா... வாழ்க்கையே வெறுத்து போச்சு..." என்றவர் அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் அவளின் கரத்தைப் பற்றி, "என் கவலை புரியுதா உனக்கு?" எனக் கேட்டார் அவளின் முகம் நோக்கி.

அனுஷியாவின் தலை தானாக ஆம் என ஆடவும் மெலிதாகப் புன்னகைத்த பல்லவன் அனுஷியாவின் மடியில் தலை வைத்துப் படுக்க, அனுஷியாவோ அதனை சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை.

அவசரமாக பல்லவனைத் தன்னிடம் இருந்து விலக்க முயல, "நீயும் என்னை விட்டுப் போகப் போறியா?" எனக் கேட்டார் பல்லவன் கண்ணீருடன்.

பல்லவனின் விழி நீர் அனுஷியாவை ஏதோ செய்ய, தன் முயற்சியைக் கை விட்டாள்.

அதன் பின் பல்லவன் தன் மனம் விட்டு ஏதேதோ பேச, விடியும் வரை அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் அனுஷியா.

பேசியவாறே பல்லவன் உறங்கி விட, அனுஷியாவும் தன்னையும் மீறி உறங்கி விட்டாள்.

கதிரவனின் ஒளிக்கீற்று கண்ணில் படவும் முதலில் கண் விழித்த பல்லவன் தன் அருகில் இருந்த பெண்ணைக் கண்டதும் திடுக்கிட்டார்.

அனுஷியாவும் உறக்கம் கலைந்து எழுந்து விட, "சாரி சாரி நான்..." எனப் பல்லவன் பதட்டமாக ஏதோ கூற முயன்றார்.

"நைட் நீங்க தற்கொலை பண்ணிக்க பார்த்தீங்க... அதான் நான்..." என அனுஷியா தடுமாறவும் தான் பல்லவனுக்கு அனைத்தும் நினைவுக்கு வந்தது.

"நீங்க எப்படி இங்க?" எனப் பல்லவன் குழப்பமாகக் கேட்கவும் தான் எவ்வாறு அங்கு வந்து மாட்டிக் கொண்டேன் என விளக்கினாள் அனுஷியா.

பல்லவன், "நா...நான்... நான் ஏதாவது உங்க கிட்ட தப்பா..." எனத் தயங்க, அவர் என்ன கேட்க வருகிறார் எனப் புரிந்து கொண்டவள், "அப்படி எதுவும் இல்ல... நீங்க உங்க மனசுல இருந்த கவலை எல்லாம் சொன்னீங்க..." என்கவும் பல்லவனின் முகத்தில் கசந்த புன்னகை.

சில நொடிகள் அமைதி காத்த அனுஷியா, "அ...அந்தப் பொறுக்கி இன்னும் வெளிய தான் இருக்கானோன்னு பயமா இருக்கு... என்னை கொஞ்சம் உங்க கூட வெளிய கூட்டிட்டு போறீங்களா?" எனக் கேட்டாள் தயக்கமாக.

சரி எனச் சம்மதித்த பல்லவனும் தன்னுடன் வந்த பெண் போல் அனுஷியாவை வெளியே அழைத்துச் செல்ல, சுற்றி இருந்தவர்களின் பார்வை அனுஷியாவைக் குறுகுறுவென மொய்த்தன.

அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அனுஷியாவிற்கு மிகுந்த அவமானமாக இருந்தது.

லாட்ஜை விட்டு வெளியே வந்ததும், "நான் உங்கள உங்க வீட்டுல ட்ராப் பண்ணவா?" எனக் கேட்டார் பல்லவன்.

தான் வாழும் இடத்தைப் பற்றி அறிந்து கொண்டால் நிச்சயம் பல்லவன் தன்னைத் தவறாக எண்ணுவார் என அவரின் உதவியை மறுத்து விட்டாள் அனுஷியா.

"தேங்க்ஸ்..." என்று மட்டும் கூறி விட்டு அங்கிருந்து சில அடிகள் நடந்த அனுஷியா மீண்டும் பல்லவனிடம் திரும்பி வந்து, "பிரச்சினையோ கவலையோ வந்தா தற்கொலை பண்ணிக்குறது தான் முடிவுன்னா இந்த உலகத்துல யாருமே உயிரோட இருக்க மாட்டாங்க... உங்கள விட கஷ்டத்த அனுபவிக்கிறவங்களும் இங்க இருக்காங்க... அவங்க எல்லாரும் அதை எதிர்த்து போராடிட்டு தான் வாழ்ந்துட்டு இருக்காங்க... உங்க பிரச்சினைக்கான தீர்வ யோசிங்க... ஆனா அது நிச்சயம் தற்கொலையா இருக்காது..." என்று விட்டு சென்றாள்.

அனுஷியாவின் தலை மறையும் வரை மென் புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த பல்லவனின் மனம் அனுஷியாவின் வார்த்தைகளில் இதமாக உணர்ந்தது.

தான் தங்கியிருந்த குடியிருப்புக்கு வந்த அனுஷியாவோ மாலினியிடம் நடந்த அனைத்தையும் கூறி கண்ணீர் வடிக்க, "அனு... இனிமேலும் நீ இங்க இருக்குறது பாதுகாப்பு இல்ல... எங்க வாழ்க்கை தான் இப்படி ஆகிடுச்சு... நீயாவது நல்லா இருக்கணும்... உன்ன என் சொந்த தங்கச்சா தான் நான் பார்க்குறேன்... இதுல கொஞ்சம் பணம் இருக்கு... இதை எடுத்துக்கிட்டு இந்த ஊரை விட்டு எங்கயாவது தூரமா போயிடு... ஏதாவது ஹாஸ்டல்ல தங்கிக்கோ... உனக்கு கண்டிப்பா ஏதாவது வேலை கிடைக்கும்... உனக்கு ஏதாவது தேவைன்னா என் நம்பருக்கு கால் பண்ணு... ஆனா இனிமே இங்க மட்டும் இருக்காதே... அந்த சத்யன் மோசமான ஆளு... எனக்கு அப்பவே அந்த ஆள் மேல சந்தேகமா இருந்தது... நீ இங்க இருந்தா நிச்சயம் அவன் உன்னையும் இந்த நரகத்துல தள்ளாம விட மாட்டான்..." என்றாள் மாலினி.

மாலினியின் கூற்றில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்ட அனுஷியா வேறு வழியின்றி மாலினி கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு மறுநாளே அங்கிருந்து கிளம்பினாள்.

சத்யன் கண்ணில் பட்டு விடக் கூடாது என வேக வேகமாக பேரூந்து நிலையத்தை நோக்கி ஓடியவளை வழி மறித்தான் அன்று லாட்ஜில் அவளின் கற்பைக் களவாட நினைத்த கயவன்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 31

தன்னை வழி மறித்து நின்ற கயவனை அனுஷியா அதிர்ச்சியுடன் நோக்க, ஒரு கையால் சிகரெட்டை வாயில் வைத்து ஊதித் தள்ளியபடி உதடு சுழித்து ஏளனச் சிரிப்புடன் அனுஷியாவை நோக்கி நடந்து வந்தான் அக் கயவன்.

சத்யன் கண்ணில் பட்டு விடக் கூடாது என்பதற்காக ஆள் நடமாட்டம் அற்ற பாதையைத் தேர்ந்தெடுத்து ஓடி வந்த தன் முட்டாள்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள் அனுஷியா.

"என்ன பேபி? நேத்து தப்பிச்சது போல இன்னைக்கும் தப்பிச்சிடலாம்னு பார்க்குறியா?" எனக் கேட்டவாறு அனுஷியாவின் கரத்தை வலுக்கட்டாயமாக பற்றி, சிகரெட் புகையை அனுஷியாவின் முகத்தில் ஊதியவன், "என்னவோ பெரிய உத்தமி போல சீன் போடுற... ஆஃப்டரோல் கேவலமான ******* நீ..." என வார்த்தைகளில் விஷத்தைக் கக்கினான்.

இதுநாள் வரையிலும் இப்படி ஒரு வார்த்தையை யாரிடமும் கேட்காத அனுஷியாவிற்கு அக் கயவனின் பேச்சில் கண்கள் கலங்கின.

"நா...நான் நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு இல்ல... ப்ளீஸ் என்னை விட்டுருங்க..." எனக் கெஞ்சினாள் அனுஷியா.

ஆனால் அக் காமுகனோ அனுஷியாவின் கெஞ்சலை செவிமடுக்காது அவளை முத்தமிட நெருங்கினான்.

தன் மானத்தை காப்பாற்றுவதற்காக மற்ற கையால் அனுஷியா அக் கயவனைத் தள்ளி விட முயற்சிக்க, அவனோ அனுஷியாவே எதிர்ப்பாராத சமயம் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

அனுஷியா வலி தாங்காமல் கீழே விழ, அவளின் உதடு கிழிந்து இரத்தம் வருவதை ஆசை தீர ரசித்த அக் கயவன் அனுஷியாவை நெருங்கி அவளின் உதட்டில் இருந்து வழிந்த இரத்தத்தை ஒரு விரலால் துடைத்து தன் நாவில் வைத்து ருசித்தான்.

அனுஷியா அவனை அருவருப்புடன் நோக்க, "உன் ப்ளெட்ட டேஸ்ட் பண்ணிட்டேன்... உன்ன டேஸ்ட் பண்ண வேணாமா பேபி?" என இகழ்ச்சியுடன் கூறிய கயவன் சட்டென அனுஷியாவின் மீது மொத்தமாய் படர்ந்து அவளை அடைய முயன்றான்.

தன் மொத்த பலத்தை உபயோகித்து அனுஷியா அவனிடம் இருந்து விடுபடப் போராட, ஏற்கனவே மனதளவில் பலவீனமாய் இருந்தவளின் முயற்சி அனைத்தும் வீணானது.

இறுதியில் அவளின் உடலை மறைத்திருந்த உடையையும் அக் கயவன் விலக்க முயல, 'இதுக்கு நீ என்னைப் பெத்தவங்களோட என்னையும் கொன்னிருக்கலாம் கடவுளே...' என மனதில் எண்ணியவளின் விழிகள் கண்ணீரை சிந்தின.

திடீரென தன் மேல் இருந்த கனமான சுமை விலகவும் மெல்ல இமை திறந்து நோக்கிய அனுஷியா கண்டது தன்னை கற்பழிக்க முயற்சித்தவனை முன் தினம் தான் காப்பாற்றியவன் அடித்துக் கொண்டிருப்பதைத் தான்.

காலையில் அனுஷியா கூறி விட்டுச் சென்றதை எண்ணியபடியே தன் வண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த பல்லவன் ஏதோ சிந்தனையில் அனுஷியாவின் நல்ல நேரமோ என்னவோ வழி மாறி வேறு வழியில் வண்டியை செலுத்தினான்.

சில நிமிடங்களில் சுயத்தை அடைந்த பல்லவன் தெரு ஓரமாய் யாரோ ஒருவன் ஒரு பெண்ணிடம் அத்துமீற முயற்சிப்பதை நொடியில் புரிந்து கொண்டு உடனே வண்டியை விட்டு இறங்கி அவ்விடம் நோக்கி ஓட, இரவு தன்னைக் காப்பாற்றிய தேவதையிடம் அக் கயவன் தவறாக நடக்க முயற்சிப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றான்.

நொடியும் தாமதிக்காது அக் கயவனின் கழுத்தைப் பிடித்து இழுத்து அவன் எதிர்த்தாக்குதல் நடத்த முன்னரே முகத்தில் பல குத்துகள் விட்டு அடி பிண்ணி எடுத்தான்.

அனுஷியா மெது மெதுவாக மயக்க நிலைக்கு செல்ல, அவளிடம் ஓடிய பல்லவன் தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி அனுஷியாவிற்கு அணிவித்தவன், "ஹலோ... மேடம்... மேடம்... இங்க பாருங்க..." என அவளின் கன்னத்தில் தட்டினான்.

ஆனால் அனுஷியாவோ கண்களில் கண்ணீருடன் பல்லவனை நன்றிப் பார்வை பார்த்துவிட்டு மயங்கி விடவும் மறு நொடியே அவளைத் தன் கரங்களில் ஏந்திச் சென்று வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் பல்லவன்.

இங்கு பல்லவனிடம் அடி வாங்கிய கயவனோ அவர்கள் இருவரையும் வஞ்சத்துடன் வெறித்து விட்டு, "என்னையே அடிச்சிட்டேல்ல... உங்கள சும்மா விட மாட்டேன்... நான் யாருன்னு காட்டுறேன்..." என சூளுரைத்தவன் யாருக்கோ கைப்பேசியில் அழைத்து பேசினான்.

மருத்துவமனையில் அனுஷியாவைப் பரிசோதித்த மருத்துவர், "மிஸ்டர் பல்லவன்... சரியான நேரத்துல போய் நீங்க அவங்கள காப்பாத்தி இருக்கீங்க... அவங்களுக்கு பிஷிக்கலா எந்த அப்பியூஸும் நடக்கல... மென்டலி வீக்கா இருக்காங்க... அதனால தான் மயங்கிட்டாங்க... கொஞ்சம் நேரத்துல கான்ஷியஸ் வந்துடும்... வார்டுக்கு மாத்தினதும் நீங்க போய் பார்க்கலாம்..." என்கவும், "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்..." என்றான் பல்லவன்.

பல்லவன் கீழே சென்று அனுஷியாவிற்கான மருந்தை வாங்கி வர, "சார்... நீங்க கூட்டிட்டு வந்த பொண்ணுக்கு கான்ஷியஸ் வந்திடுச்சு... பட் ட்ரிப்ஸ் எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு பயங்கரமா கத்தி அழுதுட்டு இருக்காங்க... நாங்க எவ்வளவு சமாதானப்படுத்த ட்ரை பண்ணியும் எங்களால முடியல..." என்ற மறு நொடியே அனுஷியா இருந்த அறைக்கு ஓடினான் பல்லவன்.

"வராதீங்க... வராதீங்க... யாரும் என் பக்கத்துல வராதீங்க... எனக்கு பயமா இருக்கு... அம்மா... என்னையும் உங்க கிட்ட கூட்டிப் போங்கம்மா..." எனக் தலையில் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள் அனுஷியா.

அனுஷியாவின் கரங்களைப் பிடித்து தடுத்த பல்லவன், "ஹேய் ஹேய்... காம் டவுன்... காம் டவுன் மா... நத்திங் டு வொர்ரி... உனக்கு எதுவும் ஆகல..." என்கவும் தான் அவனின் முகத்தை ஏறிட்டாள் அனுஷியா.

பல்லவனைக் கண்டதும் தான் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து உள்ளோம் என்பதை நினைத்துப் பார்க்கவும் பயத்தில் அனுஷியாவின் உடல் சிலிர்த்தது.

அவளின் பயத்தைப் புரிந்து கொண்ட பல்லவன் தன் அழுத்தத்தை அதிகரிக்க, சட்டென அவனிடம் இருந்து விலகிய அனுஷியா, "எனக்கு பிடிக்கல... வேணாம்... என்னால இந்த உலகத்துல ஒரே பொண்ணா அநாதையா தனியா சமாளிக்க முடியல... அம்மா... அப்பா... என்னையும் உங்க கூட கூட்டிப் போங்க..." என பழையபடி அழ ஆரம்பித்தாள்.

பல்லவன் எவ்வளவு முயற்சித்தும் அனுஷியா சமாதானம் அடையாமல் போகவும், "ஷட்டப்... ஷ்ஷ்ஷ்..." எனச் சத்தமிட்டான் பல்லவன்.

அதில் பயந்து அனுஷியா சட்டென அமைதியாகி விட, மெலிதாகப் புன்னகைத்த பல்லவன், "சாரி... உன் நேம் என்ன?" எனக் கேட்டான்.

"அ...அனுஷியா..." எனப் பயம் விலகாமலே அனுஷியா பதிலளிக்க, "ம்ம்ம்... அனு... நைஸ் நேம்... பயந்துட்டியா? சாரி... உன்னை அமைதிப்படுத்த எனக்கு வேற வழி தெரியல..." என்றான் பல்லவன்.

அனுஷியா பதிலளிக்காது இருக்கவும், "ஆஹ்... என்னைப் பத்தி எதுவும் சொல்லலல்ல நான்... ஐம் பல்லவன்... உனக்கு யாரும் இல்ல அநாதைன்னு சொன்ன... எனக்கு எல்லாரும் இருந்தும் நானும் அநாதை தான்..." என்றவன் அவள் முன் நட்புக் கரம் நீட்ட, தயக்கமாக பதிலுக்கு கை குலுக்கினாள் அனுஷியா.

"ஆமா... ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? உங்களுக்கு இல்லையா?" எனப் பல்லவன் கேட்கவும் அவனைக் குழப்பமாக ஏறிட்டாள் அனுஷியா.

பல்லவன், "இல்ல... மார்னிங் எனக்கு அட்வைஸ் பண்ணீங்க... இப்போ நீங்களே வாழ பிடிக்கலன்னு சொல்றீங்க..." என்கவும் தலை குனிந்தவாறு கண்ணீர் சிந்தினாள் அனுஷியா.

ஒரு விரலால் அனுஷியாவின் தாடையைப் பற்றி தன் முகம் காண வைத்த பல்லவன், "அனுஷியா... நீங்க சொன்னதையே தான் நான் உங்களுக்கு திரும்ப சொல்றேன்... பிரச்சினைன்னு வந்தா உயிர விடுறது தான் வழின்னா இந்த உலகத்துல மனுஷங்களே இருக்க மாட்டாங்க... உங்க வலி எனக்கு புரியிது... பட் எல்லா விஷயத்தையும் பாசிடிவ்வா பாருங்க... இப்போ எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து நீங்க தப்பி இருக்கீங்க... ஒரு வேளை நான் அந்த இடத்துக்கு வராம போய் இருந்தேன்னா என்ன நடந்து இருக்கும்? நான் ஏன் ரோங் ரூட்ல வரணும்? நீங்க ஏன் சரியா என் கண்ணுல படணும்? எல்லாத்துக்குமே ஏதோ காரணம் நிச்சயம் இருக்கும்... ஒரு பொண்ணா தனி மனுஷியா இந்த உலகத்துல உங்களால சமாளிக்க முடியாதுன்னு சொன்னீங்க... அது தப்பு... பொண்ணா இருந்தா யாரையாவது நம்பி தான் இருக்கணுமா? ஏன் ஒரு பொண்ணால சொந்த கால்ல நிற்க முடியாதா? முடியும்... நீங்க சாதிக்க வேண்டியது இந்த உலகத்துல எவ்வளவோ இருக்கு... அதுக்காக தான் என் மூலமா கடவுள் அந்த இடத்துல உங்கள காப்பாத்த வெச்சிருக்கார்..." என்றான்.

"என்னால என்ன பண்ண முடியும்? உங்களுக்கு என்னைப் பத்தி எதுவுமே தெரியாது... அதனால தான் இப்படி சொல்றீங்க..." என்ற அனுஷியா தன்னைப் பற்றி அனைத்தையும் கூறி விட்டு பல்லவனின் முகம் நோக்க, அவனோ அதே புன்னகையுடன் அவளை நோக்கிக் கொண்டிருந்தான்.

"ப்ச்... இவ்வளவு தான் விஷயமா? இதுல உங்க தப்பு என்ன இருக்கு? நீங்க ஒன்னும் வேணும்னு அங்க போகலயே... சந்தர்ப்ப சூழ்நிலையால அந்த இடத்துல மாட்டிக்கிட்டீங்க... மாட்டிக்கிட்டீங்கன்னும் சொல்ல முடியாது... தன்னோட நிலைமை உங்களுக்கு வரக் கூடாதுன்னு அங்க இருந்தவங்க உங்கள கவனமா பார்த்துக்கிட்டாங்க... அவங்க கூட தப்பானவங்க கிடையாது... உங்களுக்கு கிடைச்ச வாய்ப்பு கூட அவங்களுக்கு கிடைக்கல... பட் அது கூட நிரந்தரம் இல்ல... உங்களால அவங்க வாழ்க்கைய மாற்ற முடியும்... அவங்களாலயும் வெளி உலகத்துல தலை நிமிர்ந்து வாழ முடியும்... அதை நடத்தணும்னா முதல்ல நீங்க தன்னம்பிக்கையோட இருக்கணும்... முடியுமா?" எனக் கேட்டான் பல்லவன்.

அனுஷியா ஆம் எனத் தலையசைக்கவும், "தெட்ஸ் மை கேர்ள்..." என்றான் பல்லவன் புன்னகையுடன்.

"பட் நான் இன்னும் காலேஜை கூட கம்ப்ளீட் பண்ணலயே... என்னால என்ன பண்ண முடியும்?" எனக் கேட்டாள் அனுஷியா வருத்தமாக.

பல்லவன், "எல்லாமே முடியும்... திங்க் பாசிட்டிவ்... அதுக்கு முன்னாடி நீங்க ஹெல்த்தியா இருக்கணும்... ஃபர்ஸ்ட் இந்த ஃப்ரூட்ஸை சாப்பிடுங்க..." என்றவன் ஒரு தோடம்பழத்தை எடுத்து தோலுரித்து அனுஷியாவிடம் நீட்டினான்.

அதனை வாங்கிய அனுஷியா, "தேங்க்ஸ்..." என்க, "இன்னும் என்ன தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு... நீங்க என் உயிரை காப்பாத்தி இருக்கீங்க... அதுக்காக நான் இதைக் கூட பண்ணலன்னா எப்படி?" எனப் பல்லவன் கேட்கவும் அனுஷியா புன்னகைக்க, அப் புன்னகையில் தன்னையே தொலைத்தான் பல்லவன்.

_____________________________________________________

"ஹேமா... நடக்குற எதுவுமே நல்லா இல்ல... இப்படியே போனா உன் அண்ணன் மொத்த சொத்தையும் ஏதாவது அநாதை ஆசிரமத்துக்கு எழுதி வெச்சிடுவான்... அப்புறம் நம்ம நடு ரோட்டுல பிச்சை எடுக்க வேண்டியது தான்..." என கிஷோர் தன் மனைவியைக் கடிந்து கொண்டான்.

"அது எப்படி கிஷோர் முடியும்? அந்த சொத்துல எனக்கும் பங்கு இருக்கு... ஆனா இந்த மொத்த சொத்தையும் அடையணும்னா அதுக்கு ஒரே வழி எங்க அண்ணனுக்கு உங்க தங்கச்சிய கட்டி வெச்சி அவ மூலமா சொத்த எங்க பெயருக்கு மாத்திக்கிறது தான்..." என மனசாட்சியே இன்றி பேசினாள் ஹேமா.

_____________________________________________________

"என்ன சொல்ற? நீ ஏன் அவள தப்பிக்க விட்ட? யாரோ அவள காப்பாத்தினதா வேற சொல்ற... இப்போ அவ யார் கிட்டயாவது வாய திறந்த நம்ம டோட்டல் பிஸ்னஸும் லாஸ் ஆகிடும்... ச்சே..." என எதிர் முனையில் இருந்தவனை வறுத்தெடுத்தார் சத்யன்.

"அப்படி எல்லாம் எதுவும் நடக்காது... அவ வாய திறக்காம இருக்க என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும்... நீங்க கவலைப்படாதீங்க... அவன் என்னையே அடிச்சிட்டான்... இதுக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்..." என்றான் வன்மமாய்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 32

"இது யார் வீடு?" எனப் பல்லவனுடன் சேர்ந்து அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றுக்கு வந்த அனுஷியா சுற்றும் முற்றும் பார்த்தவாறு வினவினாள்.

"வெல்கம் ஹோம்... இது என் வீடு தான்..."எனப் புன்னகையுடன் பதிலளித்தான் பல்லவன்.

அனுஷியா, "அ...அது... உங்க வீட்டுல உங்கள தவிற யாரும் இல்லையா?" எனத் தயக்கமாகக் கேட்கவும், அவளின் கேள்வியின் காரணம் அறிந்தவன், "இருக்காங்க... ஆனா இந்த வீட்டுல இல்ல... வேற வீடு இருக்கு..." என்றான் பல்லவன்.

"என்னை ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்து விடுறீங்களா? என் கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு... அதை வெச்சி நான் ஏதாவது வேலைக்கு சேர்ந்து அதுல கிடைக்கிற பணத்துல படிக்கிறேன்..." என அனுஷியா கூறவும் புன்னகைத்த பல்லவன்,

"நான் உங்கள ஏதாவது பண்ணிடுவேன்னு பயப்படுறீங்களா?" எனக் கேட்டவனின் குரலில் லேசாக வருத்தம் எட்டிப் பார்த்தது.

"அச்சோ அப்படி எல்லாம் இல்லைங்க..." என உடனடியாக மறுத்த அனுஷியா, "எ...என்ன இருந்தாலும் கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணும் பையனும் தனியா இருந்தா இந்த உலகம் தப்பா தானே பேசும்... அதுவும் இல்லாம எனக்கு இந்த பேச்சு ஒன்னும் புதுசு இல்ல... பழக்கப்பட்டது... ஆனா நீங்க வாழ வேண்டியவர்... உங்களுக்கு மனைவியா வரப் போறவங்களுக்கு இது பிரச்சினையா அமையலாம்ல..." என்றாள் தயக்கமாக.

பல்லவன், "கல்யாணமா? என் வாழ்க்கைலயா?" எனக் கசந்த புன்னகையுடன் கேட்டவன், "நீங்க மட்டும் நேத்து கொஞ்சம் லேட் ஆகி இருந்தீங்கன்னா நான் இன்னைக்கு உங்க முன்னாடி உயிரோட நிட்டுட்டு இருந்திருக்க மாட்டேன்... வாழ்க்கையே வெறுத்து போய் இருக்கேன்..." எனப் பெருமூச்சு விட்டான்.

அனுஷியா இதற்கு என்ன பதிலளிக்க எனத் தெரியாமல் அமைதியாக இருக்கவும், "என் கதை எதுக்கு? உங்கள படிக்க வைக்கிற மொத்தப் பொறுப்பும் இனிமே என்னோடது... அப்புறம் இன்னொரு விஷயம்... இந்த வீட்டுல தங்க நீங்க எதுக்கும் தயங்க வேண்டியது இல்ல... நான் இங்க இருக்க மாட்டேன்... உங்களுக்கு துணையா நான் ஒருத்தங்கள ஏற்பாடு பண்ணி இருக்கேன்... இன்னும் கொஞ்சம் நேரத்துல அவங்க வந்துடுவாங்க... வீட்டு வேலை எல்லாம் அவங்களே பார்த்துப்பாங்க... உங்களுக்கு என்ன வேணும்னாலும் அவங்க கிட்ட தயங்காம கேளுங்க..." எனப் பல்லவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே வாசல் அழைப்பு மணி ஒலித்தது.

"அவங்க வந்துட்டாங்க போல..." என்றவாறு பல்லவன் சென்று கதவைத் திறக்கவும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி உள்ளே வந்தார்.

"அனுஷியா... இவங்க தான் ஜெயாக்கா... இனிமே இவங்க உங்க கூட இருந்து உங்களுக்கு தேவையான எல்லாம் பண்ணிக் கொடுப்பாங்க... ஜெயாக்கா... இவங்க அனுஷியா... கொஞ்சம் பயந்த சுபாவம்... பார்த்துக்கோங்க..." என இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான் பல்லவன்.

"இதை நீங்க சொல்லணுமா தம்பி? எனக்காக எவ்வளவு பண்ணி இருக்கீங்க நீங்க... முதல் தடவை என்னை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைச்சி இருக்கீங்க... என் பொண்ண போல பார்த்துப்பேன்... நீங்க கவலையே படாதீங்க..." என ஜெயா கூறவும் அனுஷியாவின் விழிகள் ஈரமாகின.

தாய்ப் பாசம் இன்றி வளர்ந்தவளுக்கு முதல் முறை தன்னையும் ஒருவர் மகள் போல என்று கூறவும் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

"தேங்க்ஸ் மா... அம்மான்னு கூப்பிடலாம்ல..." எனக் கேட்டாள் அனுஷியா தயக்கமாக.

"அதுக்கென்ன கண்ணு... நீ தாராளமா என்னை அம்மான்னு கூப்பிட்டுக்கோ... நீயும் எனக்கு பொண்ணு தான்..." என்றார் ஜெயா.

"சரி அனுஷியா... அப்போ உனக்கு..." என ஏதோ கூற வந்த பல்லவன், "சாரி... அவசரத்துல உனக்குன்னு வந்திடுச்சு..." என்க, "பரவால்ல... நான் உங்கள விட சின்ன பொண்ணு தான்..." என்றாள் அனுஷியா.

லேசாகப் புன்னகைத்த பல்லவன், "உனக்கு காலேஜ் போக தேவையான திங்க்ஸ், இன்னும் என்ன என்ன வேணுமோ அதை எல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு கொடு... நான் அப்புறமா வரும் போது எடுத்துட்டு வரேன்..." என்றான்.

முன் பின் அறியாத ஒருவன் தனக்காக இத்தனையும் செய்வதை எண்ணும் போது அனுஷியாவின் மனம் கனத்தது.

"சாரி... உங்களுக்கு ரொம்ப கஷ்டத்தை தரேன்... நான் வேலைக்கு சேர்ந்ததும் உங்க பணத்த எல்லாம் திருப்பி கொடுத்துடுறேன்..." என்றாள் அனுஷியா.

"அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்... இப்போ உன்னோட முழுக் கவனமும் படிப்புல மட்டும் தான் இருக்கணும்..." என்றான் பல்லவன் புன்னகையுடன்.

பின் அனுஷியாவிற்கு தேவையான அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவன் சில மணி நேரத்திலேயே அனுஷியா கேட்டதற்கும் மேலதிகமாக வாங்கி வந்து குவித்தான்.

அன்று முழுவதும் அங்கே இருந்து அனுஷியாவிற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தவன் ஜெயாவின் கையால் நீண்ட நாட்களுக்கு பின் திருப்தியாக உண்டு விட்டு தன் வீட்டுக்கு கிளம்பினான்.

***************************************

கிஷோரும் ஹேமாவும் ஹாலில் கோபமாக அமர்ந்து இருக்க, கார் சாவியை ஒரு விரலில் சுற்றியவாறு விசிலடித்தபடி முகத்தில் என்றும் இல்லாத புன்னகையுடன் வீட்டுக்குள் நுழைந்த பல்லவனை இருவரும் சந்தேகமாக நோக்கினர்.

ஆனால் பல்லவனோ அப்படி இருவர் அவன் கருத்திலேயே பதியாதது போல் அவர்களைத் தாண்டி தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டான்.

நேராக குளியலறைக்குள் நுழையப் பார்த்தவன் இடையில் இருந்த கண்ணாடியில் தன்னையே ஒரு தரம் நோட்டம் விட்டான்.

'என்ன ஒரு நாளும் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருக்க?' என்ற மனசாட்சியின் கேள்விக்கு, "ஏன்? நான் சந்தோஷமா இருந்தா உனக்கு பொறுக்காதே..." எனக் கடிந்து கொண்டான் பல்லவன்.

'எதுக்காக அந்தப் பொண்ணுக்காக இவ்வளவும் பண்ணுற? இத்தனைக்கும் அந்தப் பொண்ண உனக்கு நேத்து தான் தெரியும்...' என்றது மனசாட்சி சந்தேகமாக.

"அது... ஆஹ்... இந்த வீட்டுல இருக்குற பணப் பேய்ங்களுக்கு தண்டத்துக்கும் பணத்தை செலவு பண்ணுறதுக்கு பதிலா ஒரு பொண்ணை படிக்க வைச்சா கொஞ்சம் நன்மையாவது கிடைக்கும்‌..." என்றான் பல்லவன் பதிலுக்கு.

மனசாட்சி மீண்டும் ஏதோ சந்தேகமாகக் கேட்க வர, "என்ன நீ ரொம்ப தான் கேள்வி கேட்குற?" என மனசாட்சியைக் கடிந்து கொண்டான்.

திடீரென அறைக் கதவு தட்டப்படவும் தன்னிலை மீண்ட பல்லவன் சென்று கதவைத் திறக்க, பல்லவனைத் தாண்டி ஓடிச் சென்று கட்டிலில் ஏறி நின்று அவனின் உயரத்துக்கு முறைத்தான் ஐந்து வயதேயான பிரதாப்.

பல்லவனுக்கு இந்த வீட்டில் பிடித்த ஒரே விடயம் இந்த குழந்தை மட்டும் தான். எந்தக் கள்ளங்கபடமும் சிறுவனின் பேச்சில் பல சமயம் தன் கவலைகளை மறந்துள்ளான் பல்லவன். ஆனால் அவனின் தங்கைக்கு அது கூட பொறுக்காது இப்பொழுதெல்லாம் பிரதாப்பை பல்லவனிடம் செல்ல விடுவதில்லை.

"டேய் வாண்டு... என்னாச்சு? எதுக்காக மாமாவ முறைச்சிட்டு இருக்க?" எனப் புன்னகையுடன் கேட்ட பல்லவனுக்கு அப்போது தெரியவில்லை இந்த சிறுவனின் மனதிலும் அவனின் பெற்றோர்கள் நஞ்சை விதைக்கப் போகிறார்கள் என்று.

"நீங்க வானதி அத்தைய கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?" எனக் கேட்டான் பெரிய மனிதன் போல.

அவனின் கேள்வியில் ஒரு நொடி அதிர்ச்சியை வெளிப்படுத்திய பல்லவன், "யாரு கண்ணா உனக்கு இப்படி சொன்னாங்க?" எனக் கேட்டான்.

"அப்பாவும் அம்மாவும் பேசிக்கிட்டாங்க... நான் கேட்டேன்..." என்ற பிரதாப் உடனே கட்டிலை விட்டு இறங்கி வந்து பல்லவனின் காலைக் கட்டிக்கொண்டு, "வானதி அத்தைய கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா... அவங்க ரொம்ப மோசம்... என்னை அடிப்பாங்க..." என்றான் வருத்தமாக.

அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்ட பல்லவன், "என் வாண்டு சொல்லி நான் கேட்காம இருக்க போறேனா? மாமா உங்க வானதி அத்தைய கல்யாணம் பண்ணிக்கல... உனக்காக மாமா ரொம்ப அழகான, அன்பான, உன் கூட டெய்லி விளையாடக் கூடிய ஒரு அத்தைய கூட்டிட்டு வரேன்..." என்றவனுக்கு அவனை அறியாமலே அவனின் மனக் கண்ணில் அனுஷியாவின் முகம் தோன்றி மறைந்தது.

"ஹே... ஜாலி... ஜாலி..." எனப் பிரதாப் உற்சாகமாக பல்லவனின் மடியில் இருந்தபடியே குதிக்க, "ஷ்ஷ்ஷ்..." என அவனின் வாய் மேல் விரல் வைத்து தடுத்த பல்லவன்,

"மாமா உனக்கு விளையாட அத்தைய கூட்டிட்டு வரணும்னா நீ இதைப் பத்தி யார் கிட்டயும் சொல்லக் கூடாது... முக்கியமா உன் அம்மா அப்பா கிட்ட..." என்கவும் வாயை அழுத்தமாக மூடி லாக் போடுவது போல் சைகை காட்டி சிரித்தான் பிரதாப்.

***************************************

நாட்கள் அதன் போக்கில் வேகமாக செல்ல, பல்லவனின் உதவியால் தன் படிப்பை நல்லபடியாக தொடர்ந்தாள் அனுஷியா.

அடிக்கடி வீட்டிற்கு சென்று அனுஷியாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்த விரும்பாதவன் இடையிடையே சென்று அவளுக்கு தேவையானவற்றை கேட்டு செய்து கொடுத்தான்.

அனுஷியாவின் மனதிலோ பல்லவன் மீது தனி மரியாதை ஒன்று உருவாகி இருந்தது.

அதே சமயம் சத்யனின் ஆட்களோ அனுஷியாவை யாரின் கவனத்தையும் ஈர்க்காதவாறு ரகசியமாக வலை வீசித் தேடிக் கொண்டிருந்தனர்.

இடைப்பட்ட நாட்களில் ஹேமாவும் ஒவ்வொரு விதமாக பல்லவனின் மனதை மாற்றி தனது நாத்தனாரை அவனுக்கு மணமுடித்து வைக்க திட்டமிட்டும் எதற்குமே பல்லவன் மசியவில்லை.

அன்று மனைவியுடன் தீவிரமாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்த கிஷோருக்கு ஒரு அழைப்பு வந்தது.

மறுமுனையில் கூறப்பட்ட செய்தியில் ஏகத்துக்கும் அதிர்ந்தான் அவன்.

"என்னாச்சுங்க? ஏதாவது ப்ராப்ளமா?" என்ற ஹேமாவின் கேள்விக்கு, "உன் அண்ணன் எவளுக்கோ தண்டமா செலவு பண்ணிட்டு இருக்கானாம்... போற போக்க பார்த்தா நம்ம ப்ளேன் எதுவும் சக்சஸ் ஆகாது போல..." என்றான் கிஷோர் பல்லைக் கடித்துக் கொண்டு.

ஹேமா, "என்னங்க சொல்றீங்க? யார் அவ?" எனக் கேட்டாள் பதிலுக்கு கோபமாக.

"தெரியல ஹேமா... விசாரிச்சு பார்க்குறேன்..." என்ற கிஷோர் யாருக்கோ அழைத்து ஏதோ கூற, சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு கிடைத்த தகவலில் இருவரின் முகத்திலும் விஷமச் சிரிப்பொன்று உதித்தது.

***************************************

அன்று அனுஷியா கல்லூரியில் இருந்து வரும்போது ஹாலில் தலையை அழுத்தமாகப் பற்றியபடி சோஃபாவில் அமர்ந்து இருந்தான் பல்லவன்.

அதே நேரம் கையில் காஃபியுடன் வந்த ஜெயா, "இந்தாங்க தம்பி சுக்கு காஃபி... தலைவலிக்கு நல்லா இருக்கும்..." என்றவாறு அதனைப் பல்லவனிடம் கொடுக்க, "தேங்க்ஸ் கா..." என அதனை வாங்கியவன் அப்போது தான் வாசலில் நின்றிருந்த அனுஷியாவைக் கவனித்தான்.

"என்னாச்சு அனுஷியா? ஏன் அங்கயே நின்னுட்ட?" எனப் பல்லவன் கேட்கவும் தான் உள்ளே வந்தவள், "இல்ல இப்போ தான் வந்தேன்..." என்றாள்.

காஃபியை ஒரு மிடறு குடித்தவன், "காலேஜ் எல்லாம் எப்படி போகுது? எந்தப் பிரச்சினையும் இல்லல்ல..." எனக் கேட்டான் பல்லவன்.

"இல்லைங்க... எல்லாம் ஓக்கே தான்... இதெல்லாத்துக்கும் சேர்த்து நான் எப்படி உங்களுக்கு கைமாறு பண்ண போறேன்னே தெரியல..." என்றவளின் கண்கள் கலங்கின.

பல்லவன், "ஹேய்... எதுக்குமா கைமாறு அது இதுன்னு பேசிட்டு இருக்க? நான் இந்த நிமிஷம் உயிரோட இருக்க காரணமே நீ தான்..." எனக் கூறவும் அனுஷியா ஏதோ கூற வர, அதற்குள் அங்கு வந்த ஜெயா, "சரி சரி போதும் ரெண்டு பேரும் பேசினது... வாங்க சாப்பிடலாம்... இன்னைக்கு தம்பிக்கு பிடிச்ச மீன் குழம்பு பண்ணி இருக்கேன்...." என்றார்.

அதனைக் கேட்டதும், "நிஜமாவாக்கா? அப்போ இன்னைக்கு ஒரு வெட்டு தான்... அனு... நீயும் இப்பவே சாப்பிடு... அப்புறம் நான் மிச்சம் வைக்கலன்னு சொல்லக் கூடாது... அக்கா நீங்களும் சாப்பிடுங்க..." என உற்சாகமாக கூறியவன் டைனிங் டேபிளில் முதல் ஆளாக சென்று அமர்ந்தான்.

பல்லவனின் முகத்தில் இருந்த புன்னகையைக் கண்டதும் அனுஷியாவின் முகமும் மலர்ந்தது.

மூவரும் சாப்பிட்டுக்கொண்டே பேச, பல்லவனின் முயற்சியால் அனுஷியாவும் தன் கூட்டை விட்டு வெளியே வந்து எந்தத் தயக்கமும் இன்றி பேசத் தொடங்கினாள்.

அனுஷியா தன்னை மறந்து ஜெயாவிடம் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, அவளையே கண் எடுக்காமல் நோக்கினான் பல்லவன்.

இவ்வளவு நேரமும் அவனின் மனதில் இருந்த கவலைகள் அனைத்தையும் அவளின் புன்னகையில் மறக்கத் தொடங்கினான்.

***************************************

மறுநாள் பல்லவன் வீட்டிற்கு கூட செல்லாது தன் ஆஃபீஸிலேயே தீவிர சிந்தனையில் அமர்ந்திருக்க, அவனின் கைப்பேசி விடாமல் ஒலி எழுப்பியது.

சலிப்புடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் மறு முனையில் ஜெயா, "தம்பி... அனுஷியா பாப்பா இன்னும் வீட்டுக்கு வரல தம்பி... வழமையா காலேஜ் முடிஞ்சதும் இந் நேரம் நேரா வீட்டுக்கு வந்திருப்பா... அப்படியே ஏதாவது வேலையா இருந்தாலும் என் கிட்ட கால் பண்ணி சொல்லிடுவா... ஆனா இன்னைக்கு இம்புட்டு நேரம் ஆகியும் வீட்டுக்கு வரல தம்பி... ஃபோன் வேற ஸ்விட்ச் ஆஃப்னு வருது..." என்றார் பதட்டமாக.

"அக்கா... நீங்க டென்ஷன் ஆகாம இருங்க... நான் அவ எங்கன்னு பார்த்து கூட்டிட்டு வரேன்... நீங்க அவ ஃப்ரெண்ட்ஸ் நம்பர் ஏதாவது இருந்தா எனக்கு அனுப்பி வைங்க..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்த பல்லவன், 'எங்க போய்ட்ட ஷியா?' என மனதுக்குள் பதட்டமாகக் கேட்டவன் அனுஷியாவைத் தேடி விரைந்தான்.

அதே நேரம் ஒரு பாழடைந்த வீட்டில் இருட்டறையில் கை கால்கள் எல்லாம் கட்டப்பட்டு வாயைத் துணியால் மூடி உடலில் ஒட்டுத் துணி கூட இன்றி தரையில் மயங்கிக் கிடந்தாள் அனுஷியா.

அவளின் நெற்றியில் லேசாக இரத்தக்கறை படிந்து இருந்தது.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 33

அன்று ஏதோ முக்கியமான ஸ்டாஃப் மீட்டிங் என்று கூறி கல்லூரி சற்று முன் கூட்டியே விடப்பட்டது.

காலையில் ஜெயா சமையலுக்கு தேவையான சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறியது நினைவு வரவும் வீடு செல்ல முன் நேராக கடைக்குச் சென்று அதனை வாங்கி வரலாம் என்று கிளம்பினாள் அனுஷியா.

கடையில் இருந்து வெளியே வந்தவள் தூரத்தில் மாலதியிடம் ஒருவன் வாக்குவாதம் செய்வதைக் கண்டு அவசரமாக அங்கு ஓட, அதே நேரம் மாலதியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவனோ அவளை அடிக்க கை ஓங்கினான்.

அனுஷியா குறுக்காக வந்து நிற்கவும் அவள் கன்னத்தில் அடி விழ, "அனு..." எனப் பதறினாள் மாலதி.

திடீரென குறுக்காக வந்து அடி வாங்கியவளையே மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தான் அந்த ஆடவன்.

அனுஷியா, "அக்கா... என்னாச்சு கா? யார் இவர்? எதுக்காக உன் கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கார் இவர்?" எனக் கேட்டாள் மாலதியிடம் புரியாமல்.

"ஆஹ்... உங்க அக்கா என் கிட்ட ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தா... அதுவும் ஒரு மாசத்துல திருப்பி தரதா சொல்லி..‌. ஆறு மாசம் ஆகியும் இன்னும் பணம் வரல... கால் பண்ணி கேட்டாலும் சரியான பதில் சொல்லல... அதான் நானே என் பணத்த வாங்க தேடி வந்திருக்கேன்... வட்டியோட சேர்த்து இப்போ மொத்தமா ஒரு லட்சம் ஆகிடுச்சு... ஒழுங்கு மரியாதையா இப்பவே என் பணத்த எடுத்து வை... இல்லன்னா அசிங்கம் ஆகிடும்... உன்ன போல ******களுக்கு பணம் தந்ததே பெரிசு... இதுல என்னையே ஏமாத்த பார்க்குறியா நீ?" என்றான் அந்த ஆடவன்.

அவனின் பதிலில் அதிர்ந்த அனுஷியா மாலதியை அதிர்ச்சியுடன் நோக்க, "எனக்கு ஒரு வாரம் மட்டும் டைம் கொடுங்க... ப்ளீஸ்... கண்டிப்பா உங்க பணத்த திருப்பி கொடுத்துடுறேன்..." எனக் கையெடுத்து கெஞ்சினாள் மாலதி கண்ணீருடன்.

"சரியா ஒரு வாரத்துல பணம் என் கைக்கு வந்தாகணும்... இல்ல நடக்குறதே வேற... சொல்லிட்டேன்..." என மிரட்டி விட்டு அவர்களை விட்டு சற்று தள்ளி சென்றவன் தன் கைப்பேசியை எடுத்து ஏதோ தேட, அவன் தேடியது கிடைக்கவும் இதழ்களில் ஒரு இகழ்ச்சிப் புன்னகை தோன்றியது.

"எதுக்குக்கா அந்த ஆள் கிட்ட பணம் வாங்கின? என்னாச்சுக்கா?" என்ற அனுஷியாவின் கேள்விக்கு பதிலளிக்காமல் மௌனமாக கண்ணீர் சிந்தினாள் மாலதி.

"என் படிப்புக்காகவா?" எனக் கேட்டாள் அனுஷியா சந்தேகமாக.

மாலதியின் மௌனமே அவளுக்கான பதிலை வழங்கி விட, "சாரி க்கா... என்னால உனக்கு ரொம்ப கஷ்டம்... நான் எல்லாம் பிறந்ததே சாபம்... எல்லாருக்கும் பாரமா இருக்கேன் நான்..." என மாலதியை அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தாள் அனுஷியா.

அவளின் தலையை வருடி விட்ட மாலதி, "அனும்மா... இங்க பாரு... நீ யாருக்கும் பாரமா இல்ல... முதல்ல அதை புரிஞ்சிக்கோ... என்னை அக்கான்னு வாய் நிறைய கூப்பிடுறது எல்லாம் வெறும் பேச்சுக்கா?" எனக் கேட்கவும் உடனே மறுப்பாக தலையசைத்தவளிடம்,

"என் தங்கச்சிக்காக நான் இதைக் கூட பண்ண மாட்டேனா? எனக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கல... ஆனா‌ நீ படிச்சி பெரிய ஆளா வரணும்... அப்போ தான் இந்த அக்காக்கு பெருமை... புரிஞ்சுதா?" எனக் கேட்டாள் மாலதி.

அனுஷியா ஆம் எனத் தலையசைக்க, "சரி சொல்லு... நீ இப்போ எங்க இருக்க? உனக்கு அந்த சத்யனால எந்தப் பிரச்சினையும் வரலைல..." என மாலதி கேட்கவும் சில நொடிகள் அமைதி காத்த அனுஷியா இதுவரை நடந்த அனைத்தையும் மறைக்காமல் கூறினாள்‌.

"நீ சொல்றதை பார்க்கும் போது அவர் நல்லவரா தான் தெரியுறார்... இருந்தாலும் நீ பார்த்து சூதானமா இருந்துக்கோ... சொந்தக்காரங்களையே நம்ப முடியாத காலம் இது... யாரோ மூணாவது மனுஷன் இவர்... பார்த்து பத்திரமா இரு... சரி லேட் ஆகிடுச்சு... நீ பார்த்து போய்ட்டு வா... இந்தப் பண மேட்டரை நான் பார்த்துக்குறேன்... நீ இது எதையும் யோசிச்சி வருத்தப்படாதே..." என மாலதி கூறவும் மனமேயின்றி விடை பெற்றுச் சென்றாள் அனுஷியா.

அனுஷியா சற்றுத் தூரம் சென்று விடவும் மறு பக்கம் திரும்பி கலங்கி இருந்த கண்களைத் துடைத்த மாலதி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விடாமல் இறுமினாள்.

'சாரி அனு... என்னால உன் கிட்ட உண்மைய சொல்ல முடியல...' என்றாள் மனதுக்குள்.

இங்கு அனுஷியாவோ ஏதாவது செய்து மாலதி வாங்கிய கடனை அடைக்க உதவி செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டு மனம் போன போக்கில் நடக்க, அவளின் முன் வேகமாக வந்து நின்ற ஒரு வேன் கண் இமைக்கும் நொடிப் பொழுதில் அனுஷியாவை அதில் ஏற்றிக் கொண்டு பறந்தது.

"ஏய்... யாருடா நீங்க? விடுங்க டா... யார் நீங்க? எதுக்காக என்னைக் கடத்திட்டு போறீங்க?" என இரு பக்கமும் அவளைப் பிடித்து வைத்துக்கொண்டு இருந்தவர்களிடமிருந்து தப்பிக்க திமிற, முன் சீட்டில் இருந்த ஒருவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து, "அமைதியா இருக்கலன்னா நடக்குறதே வேற..." என்று மிரட்டினான்.

அனுஷியா பதிலுக்கு ஏதோ கூற வரவும் அதற்குள் முன் சீட்டில் இருந்தவன் அனுஷியாவின் அருகில் இருந்தவனிடம் கண்ணைக் காட்ட, அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் மயக்க மருந்து அடங்கிய ஊசியை அவள் கழுத்தில் இறக்கி இருந்தான் அவன்.

மறு நொடியே அனுஷியா மயங்கி விட, "பாஸ்..‌. ஆப்பரேஷன் சக்சஸ்... நீங்க சொன்ன இடத்துக்கு தான் வந்துட்டு இருக்கோம்..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

மீண்டும் அனுஷியா மயக்கம் தெளிந்து கண் விழிக்கும் போது இருந்தது ஒரு இருட்டறைக்குள் தான்.

அவளின் கை கால்கள் கட்டப்பட்டு வாயைத் துணியால் கட்டி இருந்தனர்.

"ம்ம் ம்ம்.... ம்ம்ம்ம்... ம்ம்..." என அனுஷியா கட்டை அவிழ்க்கப் போராட, அவளை அடைத்து வைத்திருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது.

"என் கண்ணுலயே மண்ணைத் தூவி ஏமாத்த பார்த்தியா பேபி?" என்ற குரலில் அனுஷியா சத்தம் வந்த திசையை அதிர்ச்சியுடன் நோக்க, அங்கு விஷமச் சிரிப்புடன் அவளை நோக்கி வந்தான் அந்தக் கயவன்.

பயத்தில் அனுஷியாவின் முகம் வெளிறிப் போக, அவளின் வாயில் இருந்த துணியை எடுத்தவுடன், "நீ... நீ... எ.. எதுக்காக என்னைக் கடத்திட்டு வந்த?" என அனுஷியா பயத்துடன் கேட்கவும் பேய்ச் சிரிப்பு சிரித்தவன், "உன்னை சும்மா வெச்சிருக்கவா அவ்வளவு கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்திருக்கோம்... வேற எதுக்கு? இதுக்காக தான்..." என்றவன் அனுஷியாவின் முகத்தை ஒரு விரலால் வருடினான்.

அனுஷியாவிற்கு அருவருப்பில் உடல் கூச, "ப்ளீஸ் என்னை எதுவும் செஞ்சிடாதே... என்னை விட்டுடு..." என கண்ணீருடன் இறைஞ்சினாள்.

"அது எப்படி பேபி விட முடியும்? நான் நினைச்சதை நடத்திக் காட்ட வேண்டாமா?" எனக் கேட்டவன் அனுஷியாவின் நெஞ்சில் கை வைக்கப் போக, தன்னைக் காத்துக்கொள்ள அவனின் முகத்தில் காரி உமிழ்ந்தாள் அனுஷியா.

அதில் ஆத்திரம் உச்சிக்கு ஏறவும் அக் கயவன் அனுஷியாவின் கன்னத்தில் ஓங்கி அறைய, உதடு கிழிந்து இரத்தம் வடிந்தது.

"என்னை விட்டுடு... வேணாம்..." என அனுஷியா கெஞ்ச, அதனைக் கண்டு கொள்ளாதவன், "உனக்கு எம்புட்டு தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ? இனி யார் நினைச்சாலும் உனக்கு என் கிட்ட இருந்து தப்ப முடியாது டி..." என்றவன் அவளின் உடையில் கை வைத்து இழுக்க, அனுஷியாவின் உடை கிழிந்து அவளின் பெண்மை அவனுக்கு காட்சிப் பொருள் ஆகியது.

இந்த நொடியே தன் உயிர் போய் விடக் கூடாதா என வேண்டியவள் அவமானத்தில் கண்ணீர் சிந்தினாள்.

அவளின் கை கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் அவளால் தன்னைக் காத்துக்கொள்ள எதுவும் செய்ய முடியவில்லை.

உடலைக் குறுக்கி சுவரோடு சாய்ந்து அமர்ந்தவள், "விட்டுடு ப்ளீஸ்..." எனக் கெஞ்சினாள்.

அவளைக் கண்களாலே துகில் உறிந்தவன் அனுஷியாவின் தலை முடியைப் பற்றி இழுத்து அவளை முத்தமிட முயன்றான்.

அனுஷியாவோ கட்டப்பட்டிருந்த கால்களாலே அவனை உதைத்து தள்ள முயன்றாள்.

ஆனால் அதிலிருந்து லாவகமாக தப்பித்தவன் மீண்டும் அவளுக்கு அறைய, முழுதாக மயக்கமடைந்தாள் அனுஷியா.

அதனைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டவன் அனுஷியாவின் உடைகளை முற்றாகக் கலைத்து விட்டு அவளின் பெண்மையைக் களவாட முயல, பட்டென அவ் அறைக் கதவு திறக்கப்பட்டது.

"டேய் ராகேஷ்... என்ன காரியம் டா பண்ண போன? உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா?" எனக் கோபமாகக் கேட்டபடி உள்ளே வந்தார் சத்யன்.

அவரைப் பார்த்து முறைத்த ராகேஷ், "நான் யூஸ் பண்ணி முடிச்சதும் நீ யூஸ் பண்ணிக்கோ... அதுக்கு எதுக்கு இவ்வளவு சீன்? இப்போ என் மூட மாத்தாம கிளம்புயா..." என்றான் ஒரு மாதிரி குரலில்.

அவனை அனுஷியாவிடமிருந்து இழுத்து விலக்கிய சத்யன், "இந்தப் பொண்ணால நமக்கு எம்புட்டு லாபம் கிடைக்க இருக்குதுன்னு தெரியுமா உனக்கு?" எனக் கேட்டார் ஆத்திரமாக.

ராகேஷ் அவரைக் குழப்பமாக நோக்க, "ஆமா... ஃபாரின் கஸ்டமர் ஒருத்தனுக்கு ஃப்ரெஷ் பீஸ் அஞ்சி நாளைக்கே அனுப்பி ஆகணும்... ஆல்ரெடி நாழு பேர் ரெடி... இவ தான் அஞ்சாவது பீஸ்... அந்தாளு ரொம்ப மோசமானவன்... இவ மட்டும் ஃப்ரெஷ் பீஸ் இல்லன்னு தெரிஞ்சா எங்க தலையை தனியா எடுத்துடுவான்... ஒழுங்கா இந்தப் பொண்ண விட்டுட்டு வெளிய வந்துடு... உன்னால எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு..." என்று விட்டு சத்யன் வெளியேற, அனுஷியாவைத் திரும்பி ஒரு பார்வை பார்த்த ராகேஷ் 'ஷிட்...' எனத் தரையைக் காலால் உதைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

***************************************

ஜெயா அழைப்பைத் துண்டித்ததும் பித்துப் பிடித்தவன் அனுஷியாவை எல்லா இடத்திலும் தேடி அலைந்தான் பல்லவன்.

எங்கு தேடியும் அனுஷியா கிடைக்காமல் போக, அவனின் மனதில் பயப் பந்து உருள ஆரம்பித்தது.

அப்போது தான் அவனுக்கு அனுஷியாவிற்கு புது கைப்பேசி வாங்கிக் கொடுக்கும் போது எதற்கும் இருக்கட்டும் என்று அவளின் பாதுகாப்புக்கு ஜீ.பி.ஸ் கனெக்ட் செய்து தன் கைப்பேசியுடன் இணைத்தது நினைவு வந்தது.

இவ்வளவு நேரமும் இருந்த பதட்டத்தில் பல்லவனுக்கு இவ் விடயம் மறந்து இருந்தது.

உடனே தன் கைப்பேசியை எடுத்து அனுஷியா இருக்கும் இடத்தைத் தேட, அதில் காட்டிய இடத்திற்கு கிளம்பினான் பல்லவன்.

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த கிளைச் சாலையில் கைப்பேசி காட்டிய இடத்தை நோக்கி நடந்தவனுக்கு அவ் இடத்தைப் பார்க்கும் போதே மனதில் அச்சம் சூழ்ந்தது.

ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அனுஷியாவின் கைப்பேசி இருக்கும் இடத்தைக் காட்ட, சுற்றும் முற்றும் பார்த்த பல்லவனின் பார்வையில் பட்டது ஒரு பாழடைந்த வீடு.

வெளியே விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, வீட்டின் உள்ளிருந்து ஒரு மெல்லிய வெளிச்சம் வந்தது.

அதனை வைத்து அங்கு ஆட்கள் இருப்பதை உறுதி செய்தவன் அவ் வீட்டை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்து விட்டு, திடீரென என்ன நினைத்தானோ தன் காவல் துறை நண்பன் ஒருவனுக்கு அழைத்து விஷயத்தை கூறி அவ் இடத்துக்கு வரவழைத்தான்.

காவல் துறையினர் அங்கு வந்து சேர எடுத்த அரை மணி நேரமும் பல்லவனுக்கு பல யுகங்கள் போல் இருந்தது.

தனக்குத் தெரிந்த அத்தனை தெய்வத்திடமும் அனுஷியாவிற்கு எதுவும் நடந்து விடக் கூடாது என வேண்டிக் கொண்டவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.

அது பல்லவனுக்கு அனுஷியா மேல் எழுந்திருந்த காதல்.

அதற்குள் காவல் துறையினர் வந்து விட, உள்ளே இருப்பவர்களுக்கு சந்தேகம் வராதபடி அவ் இடத்தை காவல் துறையினர் முற்றுகையிட்டனர்.

சத்யனும் ராகேஷும் தீவிரமாக ஏதோ பேசியபடி இருக்க, திடீரென காவல் துறையினர் உள்ளே நுழையவும் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தவர்கள் பின் வாசல் வழியாக தப்பிக்க முயல, சுற்றிலும் காவல் துறையினர் வந்து அவர்களைப் பிடித்தனர்.

பல்லவன் அனுஷியாவைத் தேடிச் செல்ல, பூட்டியிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் தன்னவள் இருந்த நிலையைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான்.

அவசரமாக தன் சட்டையைக் கழட்டி அனுஷியாவிற்கு அணிவித்த பல்லவன் அவளின் கட்டுகளை அவிழ்த்து விட்டு தன்னவளை வாரி அணைத்து, "அனு... அனுஷியா... ஷியா... இங்க பாரு... உனக்கு எதுவும் ஆகல... நான் வந்துட்டேன்... ப்ளீஸ் டி... கண்ணைத் திறந்து பாரும்மா..." எனக் கண்ணீர் வடித்தான்.

அனுஷியாவிடம் ஒரு அசைவும் இல்லாது போகவும் அவளைக் கரங்களில் ஏந்தியவன் அவசரமாக அங்கிருந்து வெளியேறினான்.

அதற்குள் காவல் துறையினர் சத்யன், ராகேஷ் உட்பட அவர்களின் ஆட்களை கைது செய்திருந்தனர்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 34

மருத்துவமனையில் அனுஷியாவை சேர்த்த பல்லவனுக்கு அவள் கண் விழிக்கும் வரைக்கும் உடலில் உயிர் இருக்கவில்லை.

மருத்துவர் வந்து அனுஷியா கண் விழித்து விட்டாள் என்று கூறவும் தான் அவனுக்கு உயிரே வந்தது.

"டாக்டர் அனுஷியாவுக்கு?" எனப் பல்லவன் தயங்க, அவன் என்ன கேட்க வருகிறான் எனப் புரிந்து கொண்ட மருத்துவர், "டோன்ட் வொர்ரி மிஸ்டர் பல்லவன். யுவர் வைஃப் இஸ் பர்ஃபக்ட்லி ஆல் ரைட். கரெக்டான டைமுக்கு நீங்க அவங்கள போய் காப்பாத்தி இருக்கீங்க. யாரும் அவங்க மேல கை வைக்கல." என்றவர் அவனின் தோளில் தட்டித் தந்து விட்டு சென்றார்.

அனுஷியாவை மருத்துவமனையில் சேர்க்கும் போது தன் மனைவி என்றே பதிந்து இருந்தான் பல்லவன்.

மருத்துவர் சென்றதும் அனுஷியா இருந்த அறைக்குள் பல்லவன் வேகமாக நுழைய, அனுஷியாவோ தலையில் சிறிய கட்டுடன் விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்தாள்.

பல்லவன் உள்ளே வரவும் அனுஷியா எழ முயற்சிக்க, அவசரமாக அவளின் முதுகில் கை வைத்து சாய்வாக அமர வைத்தான் பல்லவன்.

அனுஷியாவின் முகம் உணர்விழந்து காணப்பட, "அனு..." எனப் பல்லவன் அழைக்கவும், "ஏன் எனக்கு மட்டும் இப்படி?" எனக் கேட்ட அனுஷியாவின் குரலில் அவ்வளவு வெறுமை.

"ஷியா..." எனக் கலங்கிய கண்களுடன் தன்னவளைப் பாய்ந்து அணைத்துக் கொண்ட பல்லவனின் மார்பில் முகம் புதைத்து இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகையை கொட்டித் தீர்த்தாள் அனுஷியா.

"ஷ்ஷ்ஷ்... அழாதே ஷியா. ஒன்னும் ஆகல. அதான் நான் வந்துட்டேன்ல." எனத் தன்னவளின் தலையை வருடியபடி கூறினான் பல்லவன்.

"எனக்கு பயமா இருக்கு. அ...அவன் என்னை... என்னை... இங்கெல்லாம் தொட்டான். எ...எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்தது. செத்துடணும் போல இருந்தது." எனக் கதறியபடி அனுஷியா தன் நெஞ்சைத் தொட்டுக் கூறவும் பல்லவனின் அணைப்பு மேலும் இறுகியது.

அனுஷியாவுடன் சேர்ந்து கண்ணீர் வடித்த பல்லவனுக்கு அக் காமுகன்களை அடித்துக் கொல்லும் அளவுக்கு வெறி வந்தது.

சில கணங்கள் பல்லவனின் மார்பிலேயே அழுது கரைந்த அனுஷியா அதன் பின் தான் அவள் இருக்கும் நிலை உணர்ந்து சட்டென அவனிடமிருந்து விலகி, "சாரி... சாரி..." என்றாள்.

இவ்வளவு நேரமும் தன் கையில் இருந்த புதையல் திடீரென தன் கை விட்டுப் போன உணர்வு பல்லவனுக்கு.

ஆனால் அனுஷியாவை சங்கடப்படுத்த விரும்பாதவன், "நான் போய் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வரேன்..." என்றவன் அனுஷியாவின் பதிலைக் கூட எதிர்ப்பாராது அங்கிருந்து வெளியேறினான்.

கால் மணி நேரம் கடந்து கையில் உணவுடன் பல்லவன் வந்த போது அனுஷியா உறங்கி இருக்க, அவளின் அருகே இருக்கையைப் போட்டு அமர்ந்து தன்னவளின் முகத்தையே வெறித்தான்.

அதே நேரம் அவனின் கைப்பேசிக்கு காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வரவும் அழைப்பை ஏற்றுப் பேசியவன் மறு முனையில் கூறப்பட்ட செய்தியில் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

"நான் இப்போவே வரேன்..." என்ற பல்லவன் ஒரு நர்ஸிடம் அனுஷியா எழுந்ததும் சாப்பிட வைக்கக் கூறி விட்டு அவசரமாக காவல் நிலையம் சென்றான்.

அங்கு அவனின் சகோதரியும் அவளின் கணவனும் ஒரு பெஞ்ச்சில் அமர வைக்கப்பட்டிருக்க, நேராக சென்று கிஷோரின் சட்டையைப் பிடித்து, "ஏன் டா இப்படி பண்ண? சொல்லுடா..." எனக் கர்ஜித்தான் பல்லவன்.

கிஷோரோ பல்லவனை இளக்காரமாக நோக்க, பல்லவனுக்கு ஆத்திரம் தலைக்கேறி அவனைப் போட்டு அடித்தான்.

"அண்ணா... விடுண்ணா அவர... அவர் எந்தத் தப்பும் பண்ணல..." எனத் தடுக்க வந்த ஹேமாவை அவன் கண்டுகொள்ளவே இல்லை.

பின் இரண்டு காவலர்கள் வந்து தான் பல்லவனை கிஷோரிடமிருந்து பிரித்தனர்.

"சார்... இது போலீஸ் ஸ்டேஷன். இங்க வந்தும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க. அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்?" எனத் திட்டினார் இன்ஸ்பெக்டர்.

"யோவ்... நீ தான் அந்த சத்யனுக்கு அந்தப் பொண்ண தூக்க சொன்னதா சொல்றான்." எனக் கிஷோரிடம் கேட்ட இன்ஸ்பெக்டரிடம், "ஆதாரம் இருக்கா சார்? வெறும் வாயால சொன்னதை வெச்சி எப்படி என்னை அரெஸ்ட் பண்ணலாம்?" எனக் கேட்டான் கிஷோர் நக்கலாக.

"பொய் சார். அந்தாளு தான் என்னை வந்து சந்திச்சு பணம் எல்லாம் கொடுத்து அந்தப் பொண்ண தூக்க சொன்னான்." என சிறையினுள் இருந்து கத்தினான் சத்யன்.

"இன்ஸ்பெக்டர் சார்... அவன் யாருன்னே எனக்கு தெரியாது. இதுக்கு முன்னாடி நான் அவன பார்த்தது கூட கிடையாது. ஒரு வாரமா வேலை விஷயமா வெளியூருக்கு போய்ட்டு இன்னைக்கு காலைல தான் நான் வீட்டுக்கு வந்ததே. அதுக்கான அத்தனை ஆதாரமும் இருக்கு. வேணும்னா விசாரிச்சு பாருங்க." என்றான் கிஷோர் உறுதியாக.

நன்றாக விசாரித்துப் பார்த்த இன்ஸ்பெக்டரும் கிஷோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததாலும் அவன் கூறியதற்கு ஆதாரம் இருந்ததாலும் அவனை விடுவித்தனர்.

ஆனால் பல்லவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது கிஷோர் தான் இதற்கு காரணம் என்று.

கிஷோரும் ஹேமாவும் காவல் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல, அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற பல்லவன் கிஷோரின் சட்டையைப் பிடித்து, "நீ தான் அனுவ கடத்த சொல்லி இருப்பன்னு எனக்கு உறுதியா தெரியும் டா. திரும்ப ஒரு தடவை அனு மேல கைய வெச்சன்னு தெரிஞ்சா தங்கச்சி புருஷன்னு கூட பார்க்க மாட்டேன். கொன்னுடுவேன்." என மிரட்டினான்.

_______________________________________________

மறுநாளே அனுஷியாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல, பல்லவனோ அவளை விட்டு எங்கும் நகராமல் இருந்தான்.

அனுஷியாவே, "நீங்க கிளம்புங்க. எனக்கு ஒன்னும் இல்ல. நான் இப்போ நல்லா இருக்கேன். ஏதாவது தேவைன்னா ஜெயாம்மா பார்த்துப்பாங்க." என்க, "ஏன் நான் பார்த்துக்க கூடாதா?" எனக் கேட்டு அவளின் வாயை மூடச் செய்வான் பல்லவன்.

ஆரம்பத்தில் பல்லவனின் கவனிப்பு அனுஷியாவிற்கு சங்கடமாக இருந்தாலும் அடுத்து வந்த நாட்களில் அதனை விரும்பியே ஏற்றாள்.

பல்லவன் கொஞ்சம் கொஞ்சமாக அனுஷியாவின் மனதில் நுழைய ஆரம்பிக்க, அனுஷியா அதனை உணர்ந்ததும் ஏகத்துக்கும் அதிர்ந்தாள்.

'என்ன பண்ணிட்டு இருக்கேன் நான்? எவ்வளவு உயரத்துல இருக்குறவர் அவர். நான் சாக்கடை. நான் அவருக்கு கொஞ்சம் கூட பொருந்த மாட்டேன். இப்படி எல்லாம் நான் நினைக்கிறதே தப்பு. என்னைப் பொறுத்தவரை அவர் கடவுள். என்னோட இரட்சகன். கடவுள் மேல பக்தி வைக்கலாம். அதுக்காக உரிமை கொண்டாட முடியாது.' எனத் தன் மனதுக்கு கடிவாளம் இட்ட அனுஷியா அடுத்து வந்த நாட்களில் பல்லவனிடமிருந்து விலக ஆரம்பித்தாள்.

முதலில் அதனை சாதாரணமாக எண்ணிய பல்லவன் அதன் பின் தான் வித்தியாசத்தை உணர்ந்தான்.

அனுஷியா விலக விலக பல்லவனுக்கு அவள் மீதிருந்த காதல் அதிகரித்ததே ஒழிய, குறையவில்லை.

அதற்குள் அனுஷியாவின் படிப்பும் முடிந்தது.

அதே நேரம் பல்லவனின் அனுமதி இன்றியே அவனுக்கும் கிஷோரின் தங்கை வானதிக்குமான திருமண ஏற்பாடு விரைவாக நடந்து கொண்டிருந்தது.

இவை எதையும் அறியாத பல்லவனோ அனுஷியாவின் விலகலுக்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தான்.

அதற்கு சரியான சந்தர்ப்பமாக அன்று ஜெயா வேலைக்கு வராமல் போகவும் அனுஷியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.

இதை அறியாத பல்லவன் வழமை போலவே வீட்டுக்கு வர, அவனை வரவேற்று அமர வைத்தாள் அனுஷியா.

இருவருக்குமே அங்கு நிலவிய அமைதியும் அத் தனிமையும் ஏதேதோ உணர்வுகளைத் தந்தது.

"ம்ம்ம்... ஜெயாக்கா எங்க? நீ மட்டும் தனியா இருக்க." என மௌனத்தைக் கலைத்தான் பல்லவன்.

"அம்மா இன்னைக்கு அவங்க குலதெய்வக் கோயிலுக்கு போறதா சொன்னாங்க. அதான் வரல. நான் போய் உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்." என அங்கிருந்து அவசரமாகச் சென்றாள் அனுஷியா.

சில நிமிடங்களில் அனுஷியா கொண்டு வந்த காஃபியை பல்லவன் பருகிக் கொண்டிருக்க, "நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்." என அனுஷியா கூறவும், "ம்ம்ம்... குட் ஐடியா. எங்க கம்பனிலயே நீ வந்து ஜாய்ன் பண்ணிக்கலாம்." என்றான் பல்லவன்.

மறுப்பாகத் தலையசைத்த அனுஷியா, "இல்ல. நானே ரெண்டு மூணு கம்பெனில ஜாபுக்கு அப்ளை பண்ணி இருக்கேன். நாளைக்கு கூட ஒரு கம்பனில இன்டர்வியூவுக்கு வர சொல்லி இருக்காங்க." என்றாள்.

பல்லவன் அதனைக் கேட்டு அமைதியாக இருக்க, "நான் வேலைக்கு போய்ட்டு இத்தனை நாள் உங்களுக்கு என்னால ஆன செலவுகளை சீக்கிரம் அடைச்சிடுவேன்." என அனுஷியா கூறவும் அவளை வெட்டும் பார்வை பார்த்தான் பல்லவன்.

அவனின் பார்வை அனுஷியாவுக்கு உள்ளே குளிரைப் பரப்ப, "கம் அகைன்." என்றான் பல்லவன் அழுத்தமாக.

"இதுக்கு மேலயும் நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல. இதுவரைக்கும் சம்பந்தமே இல்லாத எனக்காக நீங்க பண்ணினது எல்லாமே அதிகம். இனிமேலும் உங்களுக்கு தொந்தரவா இருக்க விரும்பல நான். நீங்களும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுங்க. என்னைப் போல ஒருத்தி கூட உங்களுக்கு பழக்கம் இருக்குன்னு உங்க மனைவிக்கு தெரிஞ்சா அது உங்களுக்கு தான் அசிங்கமா இருக்கும்." என்றாள் அனுஷியா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

"அதுக்கு அப்புறம் என்ன பண்ணுறதா ஐடியா?" எனக் கேட்டான் பல்லவன் இறுகிய குரலில்.

"மாலதி அக்காவ கூட்டிக்கிட்டு யாருக்கும் தெரியாத ஒரு இடத்துக்கு போயிடுவேன்." என அனுஷியா கூறவும் சட்டென எழுந்த பல்லவன் அனுஷியாவிடம் ஒரு வார்த்தை கூறாது வீட்டிலிருந்து வெளியேறினான்.

பல்லவன் சென்று விடவும் தொப் என கீழே அமர்ந்த அனுஷியாவின் கண்கள் கண்ணீரை சொரிந்தன.

தன் காதலை நேரடியாக பல்லவன் அனுஷியாவிடம் வெளிப்படுத்தாவிடினும் அவனின் பார்வையும் செயலுமே அவனின் காதலை அனுஷியாவிடம் எடுத்துரைக்க, அதனைப் புரிந்து கொள்ள முடியாத அளவு முட்டாள் இல்லையே அவள்.

'நீங்க சொந்தபந்தங்களோட சந்தோஷமா இருக்கணும் பல்லவன். என்னைப் போல ஒரு அநாதை அதுவும் சாக்கடை உங்களுக்கு வேணாம்.' என்றாள் அனுஷியா மனதுக்குள்.

அன்று முழுவதும் எங்கெங்கோ சுற்றி விட்டு மறுநாள் காலையில் பல நாட்கள் கழித்து தன் வீட்டுக்கு வந்த பல்லவனுக்கு அங்கிருந்த சூழ்நிலை வித்தியாசமாகப் பட்டது.

வீடு முழுவதும் அலங்கரிக்கப்பட்டு என்றும் இல்லாத திருநாளாக சொந்தபந்தங்களால் நிறைந்திருந்தது.

அதே நேரம் பல்லவனைத் தேடி வந்த ஹேமா அவனிடம் ஒரு கவரை வழங்கவும் அவளைக் குழப்பமாக நோக்கினான் பல்லவன்.

"இந்த ட்ரெஸ்ஸ போட்டு ரெடியாகுண்ணா. இன்னைக்கு உனக்கும் வானதிக்கும் நிச்சயதார்த்தம்." எனக் குண்டைத் தூக்கிப் போட்டாள் ஹேமா.

தன் கையில் இருந்த கவரைத் தூக்கி சுவற்றில் அடித்த பல்லவன், "என்ன இதெல்லாம் ஹேமா? நான் என்ன பொம்மையா நீ சொல்றது எல்லாத்துக்கும் தலை ஆட்ட?" எனக் கேட்டான் கோபமாக.

அவனிடம் எதிர்த்துப் பேசிப் பயனிருக்காது எனப் புரிந்து கொண்ட ஹேமா தன் அடுத்த ஆயுதமாக கண்ணீரை எடுத்துக்கொண்டாள்.

பல்லவன் எதிர்ப்பார்க்காத நேரம் அவனின் காலில் விழுந்த ஹேமா, "உன் தங்கச்சிக்கு வாழ்க்கை பிச்சை போடுண்ணா... இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கலன்னா என் புகுந்த வீட்டுக்காரங்க என் புருஷன என்னை விட்டுப் பிரிச்சிடுவாங்க. அப்புறம் காலத்துக்கும் நான் வாழாவெட்டியா தான் அண்ணா இருக்கணும். அப்படி ஒன்னு மட்டும் நடந்தா நான் உயிரோடயே இருக்க மாட்டேன்..." எனக் கதறினாள்.

முன்பானால் ஹேமாவின் கண்ணீரையும் நாடகத்தையும் கண்டு ஏமாந்திருப்பான் பல்லவன்.

ஆனால் இப்போது தான் அவனுக்கு அனைவரின் சுயரூபமும் தெளிவாகத் தெரியுமே.

தன் காலைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருந்த ஹேமாவை உதறித் தள்ளிய பல்லவன் வந்த வேகத்திலேயே அங்கிருந்து கிளம்பவும் கோபத்தில் பல்லைக் கடித்தாள் ஹேமா.

அதே நேரம் ஹேமாவைத் தேடி வந்த கிஷோரிடம் நடந்த அனைத்தையும் ஹேமா கூற, "எங்க போயிட போறான்? இங்க தானே வந்தாகணும். என்ன நடந்தாலும் குறித்த முகூர்த்தத்துல வானதிக்கும் அவனுக்கும் கல்யாணம் நடந்தே தீரும்." என்றான் கிஷோர் ஆவேசமாக.

_______________________________________________

இன்டர்வியூவை நல்ல விதமாக முடித்துக்கொண்டு வெறியே வந்த அனுஷியா டாக்சி ஒன்றைப் பிடிக்க கை நீட்ட, அவளின் முன் சீறிப் பாய்ந்து வந்து நின்றது ஒரு கார்.

அனுஷியா ஒரு நொடி அதிர்ந்து நிற்க, உள்ளே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த பல்லவனோ அவளுக்காக கதவைத் திறந்து விட்டு அமைதியாக இருந்தான்.

அவனை அவமதிக்க மனமின்றி பல்லவன் கூறாமலே புரிந்து கொண்ட அனுஷியா அமைதியாக காரில் ஏறிக் கொள்ளவும் காரை இயக்கினான் பல்லவன்.

"எங்க போறோம்?" என்ற அனுஷியாவின் கேள்விக்கு பதிலளிக்காது காரின் வேகத்தை பல்லவன் நன்றாகவே அதிகரிக்கவும் பயத்தில் கண்களை இறுக்கி மூடிய அனுஷியா தன்னையும் மீறி பல்லவனின் கரத்தைப் பற்றி, "ப்ளீஸ்... கொஞ்சம் மெதுவா போங்க..." என்றாள் கெஞ்சலாக.

அதன் பின்னர் தான் தன்னவளின் முகத்தில் இருந்த பயத்தைக் கண்ட பல்லவன், "சாரி..." என்று வேகத்தைக் குறைத்தான்.

அதன் பிறகு அனுஷியாவால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

சற்று தூரம் வந்ததும் ஒரு கடற்கரையில் காரை நிறுத்திய பல்லவன் தானும் இறங்கி அனுஷியா இறங்குவதற்காக கதவைத் திறந்து விட்டான்.

"எதுக்கு இங்க வந்திருக்கோம்?" எனக் குழப்பமாகக் கேட்டவளின் கரத்தை சட்டெனப் பற்றி, "என்னைக் கல்யாணம் பண்ணிக்குறியா ஷியா?" எனக் கேட்ட பல்லவனின் குரல் கரகரத்தது.

அவனை அதிர்ச்சியுடன் நோக்கிய அனுஷியா தன் கரத்தை வேகமாகப் பிரித்து, "எ...என்ன சொல்றீங்க?" எனக் கேட்டாள்.

"ஷியா... நான் இப்படி கேட்குறதால நீ என்னைத் தப்பா நினைக்கலாம். ஆனா எனக்கு வேற வழி இல்ல." என்றவன் வீட்டில் தனக்கு ஏற்பாடு செய்யப்படும் கட்டாயத் திருமணத்தைப் பற்றிக் கூறியவன், "ப்ளீஸ் ஷியா. எனக்கு இந்த ஹெல்ப் பண்ணு... என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது..." என்றவனின் கண்கள் வேறு ஒன்று கூற, அதனைத் தெளிவாக உணர்ந்தாள் அனுஷியா.

"நான்...நான் எப்படி? நான் ஒரு அநாதை... உங்கள போய் நான்..." எனத் தயங்கினாள் அனுஷியா.

காதல் என்று போய் நின்றால் எங்கு அவள் தன்னைத் தவறாக எண்ணி விடுவாளோ என்று தான் தன் சூழ்நிலையைக் காரணம் காட்டி திருமணம் செய்யக் கேட்டான்.

ஆனால் அனுஷியாவின் தயக்கத்தையும் அவளின் விலகலுக்கான காரணத்தையும் கணித்தவனுக்கு அதற்கு மேல் தன் காதலை மறைக்க முடியவில்லை.

அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் அவளைப் பாய்ந்து அணைத்துக் கொண்ட பல்லவன், "ஐ லவ் யூ ஷியா... ஐ லவ் யூ... எதுக்காகவும் யாருக்காகவும் உன்ன என்னால இழக்க முடியாது. நீ வந்ததுக்கு அப்புறம் தான் இருட்டிப் போய் இருந்த என் வாழ்க்கைல வெளிச்சம் வந்தது. என்னோட கடைசி மூச்சு வரைக்கும் நீ என் கூட இருக்கணும் ஷியா..." என்றான் கண் கலங்க.

பல்லவன் நேரடியாகவே தன் காதலை வெளிப்படுத்தி விடவும் இத்தனை நாட்களாக அவனைப் பிரிய நினைத்துப் போராடிய அனுஷியாவின் மனம் தன்னால் அவனை விட்டுப் பிரிந்து வாழ முடியாது என்பதைப் புரிந்து கொண்டது.

இத்தனை நாட்களாக தான் அநாதை என்றும் தனக்கென யாரும் இல்லை என்றும் எண்ணியவளுக்கு எல்லாமுமாக பல்லவன் வந்து சேரவும் ஆனந்தக் கண்ணீருடன் பதிலுக்கு பல்லவனை இறுக்கி அணைத்தாள் அனுஷியா.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 35

அனுஷியாயின் அணைப்பே பல்லவனுக்கு அவள் தன் மீது வைத்திருந்த காதலை உணர்த்த, பல்லவன் வானில் பறக்காத குறை தான்.

ஏதோ ஒரு நினைவில் பல்லவனை அணைத்துக் கொண்ட அனுஷியா தன்னிலை அடைந்தவளாக சட்டென பல்லவனை விட்டு விலக, இவ்வளவு நேரமும் இருந்த இனிமை நீங்கி அவளைக் குழப்பத்துடன் நோக்கினான் பல்லவன்.

"நா...நான்... இ...இது...‌ இது... வேணாம். சரி வராது. நான் உ... உங்களுக்கு தகுதியானவ கிடையாது." எனும் போதே அனுஷியாவின் குரல் கரகரத்தது.

தன்னவளின் பயம் உணர்ந்த பல்லவன் அனுஷியாவின் முகத்தை தன் கரங்களில் ஏந்தி, "ஷியா..." என்றவாறு அவளின் விழிகளை ஆழ்ந்து நோக்க, அக் குரலுக்கு கட்டுப்பட்டவளாக பல்லவனின் விழிகளை சந்தித்த அனுஷியாவிற்கு சுற்றம் மறந்தது.

கண்களிலேயே காதலை தேக்கி வைத்திருந்தான் பல்லவன்.

அனுஷியா விழி அகற்றாமல் பல்லவனையே நோக்க, "ஷியா... இதை நல்லா உன் மனசுல போட்டுக்க. இந்த உலகத்துலயே... ஏன்... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த உலகத்துலயே உன்ன விட எனக்கு தகுதியானவ யாருமே கிடையாது. நீ உன்னையே தாழ்வா நினைச்சிக்காதே. சாக்கடைல விழுந்தாலும் வைரத்தோட மதிப்பு மாறாது. என்னோட ஷியா அந்த வைரத்தையும் மிஞ்சினவள். யாருக்காகவும், எந்த சூழ்நிலையிலும் நான் உன் மேல வெச்ச காதல் ஒரு துளி கூட குறையாது. இப்போ பிடிச்ச இந்த கையை என் கடைசி மூச்சு வரை விட மாட்டேன். புரிஞ்சதா?" எனப் பல்லவன் கேட்கவும் அனுஷியாவின் தானாகவே மேலும் கீழும் ஆடியது.

மறு நொடியே அனுஷியாவின் முகம் முழுவதும் முத்தத்தால் அர்ச்சித்தான் பல்லவன்.

மெதுவாக அனுஷியாவின் இதழ்களை நெருங்கிய பல்லவனின் இதழ்கள் தன்னவளின் சம்மதத்தை வேண்டி அவளின் விழிகளை நோக்க, அதிலிருந்த காதலில் கட்டுண்டவளாக இமைகளை மூடினாள் அனுஷியா.

தன்னவளின் சம்மதம் கிடைத்த மறு நொடியே அனுஷியாவின் இதழ்களை பல்லவனின் இதழ்களுக்குள் சிறைப்பட்டன.

சில நொடிகள் நீடித்த அவ் இதழ்களின் சங்கமம் அனுஷியா மூச்சு வாங்க சிரமப்படவும் மனமேயின்றி அவளின் இதழ்களுக்கு விடுதலை கொடுத்து முற்றுப் பெற வைத்தான் பல்லவன்.

தன்னவனின் முகம் நோக்க வெட்கித்தவளாக செவ்வானமாய் சிவந்திருந்த முகத்தை பல்லவனின் மார்பில் முகம் புதைத்து மறைத்தாள் அனுஷியா.

பதிலுக்கு தன்னவளை இறுக அணைத்துக் கொண்ட பல்லவன், "ஷியா... ஊரறிய மேள தாளத்தோட உன் கழுத்துல மூணு முடிச்சிட்டு உன்ன என் மனைவியா ஏற்கணும்னு தான் எனக்கு ஆசை. ஆனா இப்போ நிலைமை நமக்கு சாதகமா இல்ல. உன்ன பிரிஞ்சி இருக்குற ஒவ்வொரு நொடியுமே என் மனசு உனக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு தவியாய் தவிக்குது. என்னை சுத்தியும் நிறைய சதி நடக்குது. அதெல்லாம் இப்போ என்னால உன் கிட்ட விளக்கமா சொல்ல முடியாது. வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பா சொல்றேன். ஆனா எந்த காரணத்துக்கும் நான் உன்ன கை விட மாட்டேன்னு நீ நம்பணும். கேட்குறேன்னு தப்பா நினைக்காதே ஷியா. எனக்கு வேற வழி இல்ல. இப்போவே கோயில்ல சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கலாமா? இந்த பிரச்சினை எல்லாம் முடிஞ்சதும் க்ரேன்டா ரிசப்ஷன் வெச்சு செலிப்ரேட் பண்ணலாம். உனக்கு சம்மதமா?" எனக் கேட்டான்.

"உங்கள நம்பாம நான் யாரை நம்ப போறேன். உங்க கூட இருக்குறதே எனக்கு போதும்." என்றாள் அனுஷியா ஒரு நொடி கூட யோசிக்காது.

உடனே காலம் தாழ்த்தாது தனக்கு நம்பிக்கையான ஒருவர் மூலம் அன்றே கோயிலில் யாருமறியாது ரகசியமாக திருமண ஏற்பாட்டை செய்தான் பல்லவன்.

அனுஷியா மாலதியிடம் மட்டும் நிலைமையை எடுத்துக் கூற, ஏற்கனவே அனுஷியா பல்லவன் பற்றி கூறி இருப்பதாலும் ஊரில் அவனுக்கு இருந்த நற்பெயரை மாலதி ஏற்கனவே அறிந்திருந்ததாலும் முழு மனதாக அவளின் திருமணத்துக்கு சம்மத்தைத் தெரிவித்தாள்.

அனுஷியாவிற்கு நல் வாழ்வு அமைவதில் மாலதிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

தனக்கு தாயுமானவளாக இருப்பவளின் சம்மதம் கிடைத்த பிறகு அனுஷியா மனதில் இருந்த சிறிய குறையும் நீங்கியது.

அன்றே கோயிலில் எளிமையாக அக்னி சாட்சியாக அனுஷியாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னில் சரிபாதி ஆக்கிக் கொண்டான் பல்லவன்.

உடனே திருமணத்தையும் பதிவு செய்தவன் தன்னவளை அழைத்துக் கொண்டு தன் வீடு நோக்கி புறப்பட்டான்.

_______________________________________________

பல்லவனின் வீடு கூட்டத்தால் நிரம்பி வழிய, ஹேமாவும் கிஷோருமோ கோபத்தில் கிளம்பிச் சென்ற பல்லவன் திரும்பி வரும் வரை காத்திருந்தனர்.

ஹேமாவுக்கு அவ்வளவு நம்பிக்கை தன் சகோதரன் தனக்காக வேண்டி நிச்சயம் வீடு திரும்புவான் என்று.

ஆனால் அவளின் நம்பிக்கையைப் பொய்யாக்குவது போல் தன்னவளின் கரம் பிடித்து மாலையும் கழுத்துமாக பல்லவன் வந்து நிற்கவும் ஹேமாவும் கிஷோரும் ஏகத்துக்கும் அதிர்ந்தனர்.

பல்லவனின் வீட்டில் கூடியிருந்த சொந்தபந்தங்களைக் காணும் போது அனுஷியாவிற்கு இவ்வளவு நேரமும் இருந்த சந்தோஷ மனநிலை மாறி ஒரு வித பயம் பீடித்துக் கொண்டது.

தன் கரத்தை சுற்றி வளைத்து பிடித்திருந்தவளின் கரம் தந்த அழுத்தமே பல்லவனுக்கு தன்னவளின் பயத்தை உணர்த்த, அனுஷியாவின் தோளை சுற்றி அணைத்தவாறு அவளுடன் உள்ளே நுழைந்தான்.

சொந்தபந்தங்கள் தமக்குள் ஒவ்வொரு விதமாக முணுமுணுக்க ஆரம்பிக்க, இவ்வளவு நேரமும் அதிர்ச்சியில் உறைந்திருந்த ஹேமாவும் கிஷோரும் தன்னிலை அடைந்தனர்.

தான் ஒரு திட்டம் போட்டு வைத்திருக்க, அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கும் விதமாக பல்லவன் அனுஷியாவைத் திருமணம் செய்து கொண்டு வரவும் இத் திடீர் திருப்பத்தை எதிர்ப்பார்க்காத கிஷோர் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

பல்லவன் அனுஷியாவை விரும்புவதை ஏற்கனவே ஊகித்திருந்த கிஷோர் அவன் இவ்வளவு சீக்கிரம் திருமணம் வரை செல்வான் என்பதை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை.

ஹேமாவோ வேகமாக பல்லவனை நெருங்கி, "அண்ணா... என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க?" என பல்லவனின் சட்டையைப் பற்றிக் கேட்டாள் ஆவேசமாக.

பட்டென அவளின் கரங்களை வேகமாகத் தட்டி விட்ட பல்லவன், "இப்போ தான் சரியான காரியம் பண்ணி இருக்கேன்." என்றான் அழுத்தமாக.

தன் சகோதரன் தன்னை எதிர்த்துப் பேசுவான் என்று எதிர்ப்பார்க்காத ஹேமா அதிர்ச்சியில் பேச்சிழந்து நிற்க, "என் தங்கச்சி வாழ்க்கைய தட்டிப் பறிக்க பார்க்கிறாயா நீ?" என்ற கிஷோரோ ஆவேசமாக அனுஷியாவை நெருங்கி அவளை அறையக் கை ஓங்கினான்.

அனுஷியா பயந்து பல்லவனின் முதுகின் பின்னால் மறைந்துகொள்ள, அதற்குள் கிஷோரை இழுத்து கீழே தள்ளி விட்டான் பல்லவன்.

ஹேமா அவசரமாக கீழே விழுந்து கிடந்த கணவனிடம் ஓட, "ஆம்பளையா இருந்தா என் கிட்ட மோது. என் பொண்டாட்டி மேல கை வைக்க நினைச்ச... தொலைச்சிடுவேன். ஏற்கனவே உன் ஆளுங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு மறந்திருக்க மாட்ட. மைன்ட் இட்.‌‌.." கிஷோரின் முகத்தின் முன் விரல் நீட்டி எச்சரித்தான் பல்லவன்.

கூடியிருந்த கூட்டம் தமக்குள் ஒவ்வொரு விதமாக பேசத் தொடங்க, "இங்க எந்த நிச்சயதார்த்தமும் நடக்கப் போறதில்ல. வந்திருக்குறவங்க எங்கள மனசால ஆசிர்வாதம் பண்ணிட்டு கிளம்புங்க." எனப் பல்லவன் அழுத்தமாகக் கூறவும் ஒவ்வொரு தமக்குள் முணுமுணுத்தவாறு கிளம்பினர்.

பின் மனைவியின் பக்கம் திரும்பிய பல்லவன், "ஷியா.‌‌.. சாரி.‌.‌. முதல் நாளே ஏதேதோ பிரச்சினை. இந்த வீட்டுல நம்மள ஆரத்தி எடுத்து வரவேற்க யாரும் கிடையாது. அதனால் நீயே வலது கால எடுத்து வெச்சி உள்ள வா‌." என்றான் புன்னகையுடன்.

உள்ளுக்குள் எதிர்க்காலத்தை எண்ணி அச்சம் இருந்தாலும் பல்லவனின் துணை இருந்தால் எதனையும் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் தன்னவனின் கரம் பற்றி வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் அனுஷியா.

இருவரும் சேர்ந்து பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்த பின் அங்கிருந்த மற்றவர்களைக் கருத்தில் கொள்ளாது தன்னவளை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றான் பல்லவன்.

இவ்வளவு நேரமும் நடந்தவற்றை கண்களில் வன்மத்தை தேக்கி வைத்து நோக்கினாள் கிஷோரின் தங்கை வானதி.

அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே பல்லவனின் அழகிலும் அவனின் சொத்திலும் மோகம் அதிகம்.

திடீரென எங்கிருந்தோ வந்த ஒருத்தி தான் கட்டி வைத்திருந்த கனவுக் கோட்டையைத் தகர்த்து எறியவும் அவளின் மீது வஞ்சத்தை வளர்த்தாள் வானதி.

கிஷோரும் ஹேமாவும் அடுத்து என்ன செய்து பல்லவனின் சொத்தை அபகரிக்கலாம் என அப்போதிருந்தே திட்டமிட ஆரம்பித்தனர்.

இதனை அறியாத பல்லவனோ, "வெல்கம் மை க்வின்." என அறைக் கதவைத் திறந்து மனைவியைப் புன்னகையுடன் வரவேற்றான்.

அனுஷியா முகம்கொள்ளாப் புன்னகையுடன் அறையினுள் நுழைய, கதவைத் தாழிட்ட பல்லவன் அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் அவளை சட்டென தன் கரங்களில் ஏந்தினான்.

"எ...என்ன பண்ணுறீங்க? இ... இறக்கி விடுங்க. ப்ளீஸ்..." என அனுஷியா வெட்கமும் பயமும் கலந்து கூற, "நோ வே... நான் இன்னைக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு தெரியுமா ஷியா? உன்னை இப்படியே என் கைலயே வெச்சி ராணி மாதிரி பார்த்துக்கணும்." என்றான் பல்லவன்.

அனுஷியா கண்கள் கலங்க தன்னவனை விழி அகற்றாது நோக்க, "ஹேய் என்னாச்சுடா?" என அனுஷியாவை அவசரமாக கட்டிலில் அமர்த்தியவாறு கேட்ட பல்லவன் தன் பெருவிரலால் அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

பதிலேதும் கூறாமல் அவனின் மார்பில் முகம் புதைத்த அனுஷியா, "உங்களுக்கு தெரியுமா? என் வாழ்க்கைல காதல், கல்யாணம், கணவன் இதெல்லாம் வரும்னு நான் கனவுல கூட எதிர்ப்பார்க்கல. ஒவ்வொரு நிமிஷமும் என் கற்ப எப்படி என்னை சுத்தி இருந்த காமப் பிசாசுங்க கிட்ட இருந்து காப்பாத்திக்கிறதுன்னு மட்டும் தான் என்னோட எண்ணமா இருந்தது. ஆனா சில சமயம் என்னையும் மீறி என்னால என் வயசு மத்த பொண்ணுங்க போல ஒரு சாதாரண வாழ்க்கைய வாழ முடியாதான்னு ஏக்கம் வரும். அப்புறம் நான் வாழுறதே பெரிய விஷயம் அப்படிங்கிற எண்ணம் வந்து எல்லா ஆசையையும் எனக்குள்ள பூட்டிக்குவேன். ஒன்னு தெரியுமா? எனக்காக மாலதி அக்கா நிறைய பண்ணி இருக்காங்க. அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சி கொடுக்கணும்னு மட்டும் தான் எனக்கான ஆசையா இருந்தது. ஆனா நானே எதிர்ப்பார்க்காத விதமா ஆபத்பாந்தவனா என் வாழ்க்கைல நீங்க வந்தீங்க. எனக்கான எல்லாமுமா மாறினீங்க. அன்பு, பாசம், காதல், அரவணைப்பு, பாதுகாப்பு இப்படி எல்லாத்தையும் மொத்தமா கொடுத்தீங்க. நான் உங்களுக்கு தகுதியானவளான்னு எனக்குத் தெரியல. ஆனா என்னோட கடைசி மூச்சு வரைக்கும் என்னைக் கல்யாணம் பண்ணினதுக்காக நீங்க வருத்தப்படும் படி நடக்க மாட்டேன்." என்றவளின் கண்ணீர் பல்லவனின் சட்டையை நனைத்தது.

புன்னகையுடன் தன்னவளை இறுக்கி அணைத்த பல்லவன் சில நொடிகள் அனுஷியாவைத் தன்னை விட்டு விலக்கினான்.

அனுஷியா அவனைக் குழப்பமாக நோக்க, அவளுக்கு வலிக்காதவாறு நெற்றியில் லேசாக இரண்டு விரல்களால் சொட்டியவன், "என் மக்கு பொண்டாட்டி. முதல்ல நீ எனக்கு தகுதியானவ கிடையாதுங்குற எண்ணத்தை உன் மனசுல இருந்து தூக்கி போடு. உன்னை விட எனக்கு தகுதியானவ இந்த உலகத்துல யாரும் கிடையாது. அடுத்த விஷயம் நீ எனக்காக எதுவும் பண்ணவே அவசியம் இல்ல. எப்பவும் போல சாதாரணமா இரு. நீ என் கூட இருந்தாலே எனக்கு அது போதும் கண்மணி. இந்த உலகமே என்னை எதிர்த்தாலும் எனக்கு கவலை இல்ல. நான் மடி சாய நீ இருந்தா போதும். பிகாஸ் ஐ லவ் யூ சோ மச்." எனப் பல்லவன் கூறவும், "ஐ லவ் யூ டூ." என்றாள் அனுஷியா புன்னகையுடன்.

"சரி ஷியா... நீ சீக்கிரம் போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா. கப்போர்ட்ல உனக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் இருக்கு. நாம டின்னருக்கு வெளிய போகலாம்." எனப் பல்லவன் கூறவும் சரி எனத் தலையசைத்த அனுஷியா எழுந்து செல்ல, பெருமூச்சுடன் விட்டத்தை வெறித்தவாறு கட்டிலில் தலை சாய்ந்த பல்லவனுக்கு அடுத்து என்ன என்ற ஒரு பெரிய கேள்வி எழுந்தது.

இங்கு கிஷோரின் அறையில் கிஷோர் மற்றும் ஹேமாவுடன் சேர்ந்து கிஷோரின் மொத்தக் குடும்பமும் குழுமி இருந்தனர்.

"அண்ணா... நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. எனக்கு பல்லவன் வேணும். ஒரு அநாதை தாசி கிட்ட நான் தோத்து போகக் கூடாது." என்றாள் வானதி கோபமாக.

"ஆமா கிஷோர். இத்தனை வருஷமா அவன் உங்க ரெண்டு பேர் பேச்சை மீறி எதுவுமே பண்ணல. முதல் தடவையா நம்மள மீறி ஒரு அநாதைய கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கான். இதை இப்படியே விட்டா அந்த தாசிக்கே மொத்த சொத்தையும் எழுதி வெச்சிடுவான்." என்றார் கிஷோரின் தாய்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 36

சற்று நேரத்திற்கு முன்பு முகத்தில் இருந்த மகிழ்ச்சி எங்கோ சென்று மறைய, இருவரின் மனமும் வெவ்வேறு மனநிலைகளில் இருந்தன.

அனுஷியாவின் மனமோ ஹேமாவின் சுடு சொற்களில் காயப்பட்டு ரணமாகிக் கிடக்க, பல்லவனின் மனமோ உலைக்களமாய் கொதித்தது.

கார் ஒரு உயர்தர ஹோட்டலில் முன் நிற்கவும் தன்னிலை அடைந்த அனுஷியா இருளைக் கிழித்து வெளிச்சம் பரப்பிய விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஹோட்டலை சுற்றும் முற்றும் நோக்க, காரில் இருந்து இறங்கிய பல்லவன் மறு பக்கம் வந்து தன்னவள் இறங்குவதற்காக கதவைத் திறந்து விட்டான்.

அதில் இவ்வளவு நேரமும் இருந்த மன சுணக்கம் மறைய, அனுஷியாவின் முகத்தில் லேசாக புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

பல்லவன் நீட்டியிருந்த கரத்தைப் பற்றி கீழறங்கிய அனுஷியா தன்னவனைப் பார்த்து புன்னகைக்க, அவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்த‌ பல்லவன், "ஷியா... எதைப் பத்தியும் நினைச்சி கவலைப்படாதே. நான் எப்போவும் உன் கூட இருப்பேன்." என்றான்.

பதிலுக்கு புன்னகைத்த அனுஷியாவின் கரம் பற்றி ஹோட்டலின் உள்ளே அழைத்துச் சென்றான் பல்லவன்.

வெளியில் இருந்த விளக்குகளின் வெளிச்சத்துக்கு மாறாக உள்ளே எங்கும் மெழுகுவர்த்தியின் பிரகாசம் பரவி இருக்க, ஒரே ரம்மியமாக இருந்தது அச் சூழல்.

ஆனால் அனுஷியாவையும் பல்லவனையும் தவிர அங்கு யாருமே இருக்காமல் போக, "என்ன யாரையும் காணோம்? அவ்வளவு மோசமாவா இருக்கும் இந்த ஹோட்டல் சாப்பாடு?" எனக் கேட்டாள் அனுஷியா குழப்பமாக.

அதனைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்த பல்லவன், "ஷியா... நீ இன்னும் வளரணும்." என்கவும் அவனைப் பொய்யாக முறைத்தாள் அனுஷியா.

"ஓக்கே ஓக்கே கூல். இது நமக்கான நேரம். நமக்கு மட்டுமேயான நேரம். கேன்டில் லைட் டின்னர். நீயும் நானும் மட்டும்..." எனப் பல்லவன் கூறவும் அனுஷியாவின் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை.

இருவரும் தம் பால்ய நினைவுகள், ஆசைகள், எதிப்பார்ப்புகள், கல்லூரிக் கதைகள் என நேரம் செல்வதே அறியாது மனம் திறந்து ஏதேதோ பேசிக்கொண்டு உணவை முடித்தனர்.

சில மணி நேரங்கள் கழித்து ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இருவரின் மனமும் பல நாட்கள் கழித்து நிறைந்து இருந்தது.

அதே மகிழ்ச்சியுடன் அனுஷியாவை அழைத்துக் கொண்டு சென்று காரை நிறுத்திய இடத்தைக் கண்டு அனுபல்லவிக்கு ஆனந்த அதிர்ச்சி.

"இங்க ஏன்ங்க வந்திருக்கோம்?" எனக் கேட்டாள் அனுஷியா இத்தனை நாட்கள் பல்லவன் அவளைத் தங்க வைத்திருந்த வீட்டைப் பார்த்தவாறே.

"வா சொல்றேன்." என அவளின் கைப் பிடித்து அழைத்துச் சென்ற பல்லவன் காலிங் பெல்லை அழுத்த, சில நொடிகள் கழித்து கையில் ஆரத்தி தட்டுடன் கதவைத் திறந்தார் ஜெயா.

"அம்மா..." என அனுஷியா ஆனந்தக் கண்ணீர் விட, "இரண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க ஆரத்தி எடுக்க." என ஜெயா கூறவும் பல்லவன் அனுஷியாவின் தோளில் கரம் போட்டு அவளை நெருங்கி நிற்க, இருவருக்கும் ஆரத்தி சுற்றி வரவேற்றார் ஜெயா.

அப்போது தான் அனுஷியாவிற்கு மனதில் இருந்த பெரும் குறை அகன்று நிம்மதியாக இருந்தது.

"இரண்டு பேரும் வலது காலை எடுத்து வெச்சி உள்ள போங்க. நான் இதைக் கொட்டிட்டு வரேன்." என்ற ஜெயா அங்கிருந்து செல்ல, கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வீட்டினுள் நுழைந்தனர்.

ஆரத்தியைக் கொட்டி விட்டு உள்ளே வந்த ஜெயா அனுஷியாவை பூஜை அறையில் விளக்கேற்ற வைத்து விட்டு இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்தார்.

பின் தன்னால் முடிந்த அளவு சின்னச் சின்ன சம்பிரதாயங்களை நிறைவேற்ற, அனுஷியாவிற்கு தன் உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க இயலாத நிலை.

முகத்தில் புதுமணப்பெண்ணுக்கே உரிய பொழிவு தோன்ற, மனைவியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைக் கண்ட பின் தான் பல்லவனின் மனமும் குளிர்ந்தது.

ஜெயாவை அணைத்துக் கொண்ட அனுஷியா, "ரொம்ப நன்றிம்மா. இதுக்கெல்லாம் உங்களுக்கு எப்படி கைம்மாறு பண்ண போறேன்னே தெரியல." என்க, "என்னை அம்மான்னு தானே கூப்பிடுற. அம்மாவுக்கு போய் யாராவது நன்றி சொல்லுவாங்களா?" எனக் கேட்டார் புன்னகையுடன்.

"நீங்க ஊருக்கு போய் இருந்தீங்களே. எப்போ வந்தீங்க?" எனக் கேட்ட அனுஷியாவிற்கு, "இன்னைக்கு சாயந்திரம் தான் வந்தேன் மா. தம்பி கால் பண்ணி விஷயத்த சொன்னதும் எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. ஏதோ என்னால முடிஞ்சதை எல்லாம் பண்ணேன். இப்போ தான் எனக்கு திருப்தியா இருக்கு." என்றார் ஜெயா.

மறுப்பாகத் தலையசைத்த அனுஷியா, "இல்லம்மா... எனக்கு ஒரு அம்மா இருந்தா இதெல்லாம் பட்டி இருப்பாங்களான்னு தெரியல. ஆனா நீங்க இவ்வளவு பண்ணி இருக்குறதே பெரிய விஷயம்." என்றாள் கண்கள் கலங்க.

பதிலுக்கு பாசமாக அவளின் தலையை வருடி விட்ட ஜெயா, "சரி சரி போதும் டா கண்ணா. ரெண்டு பேரும் டயர்டா இருப்பீங்க. போய் ரெஸ்ட் எடுங்க." என்கவும் கணவன் மனைவி இருவரும் மாடி ஏறி தம் அறைக்குச் சென்றனர்.

பல்லவனுக்கு முன்னால் சென்று கதவைத் திறந்த அனுஷியா அதிர்ந்து அறை வாயிலிலேயே நிற்க, அவளைத் தொடர்ந்து வந்த பல்லவன், "என்னாச்சு ஷியா? ஏன் நின்னுட்ட?" எனக் குழப்பமாகக் கேட்டவாறே அறையினுள் பார்வையைப் பதித்தவனுக்கும் அதிர்ச்சி.

முதலிரவுக்காக அவ் அறை முழு அலங்காரத்தில் இருக்க, முதலில் அதிர்ந்த பல்லவனின் மனதிலும் காதல் கணவனுக்கே உரிய ஆசை எழ, மனைவியின் முகத்தை காதலுடன் ஏறிட்டான்.

அனுஷியாவோ இன்னும் அதிர்ச்சி மாறாமல் நிற்க, அதனைக் கண்டுகொண்ட பல்லவன் எங்கு தன்னவளுக்கு பிடிக்கவில்லையோ என நினைத்து லேசாக மனம் வாடியவன், "ஷியா... டோன்ட் வொரி. எனக்கு நீ என் பக்கத்துல இருந்தாலே போதும். இதெல்லாம் உடனே நடக்கணும்னு அவசியம் இல்ல. நான் ஜெயாக்கா கிட்ட சொல்றேன் இதெல்லாம் க்ளீன் பண்ண சொல்லி..." என்றவாறு கிளம்ப முயன்றான்.

அப்போது தான் தன்னிலை அடைந்த அனுஷியா சட்டென தன்னவனின் கரம் பற்ற, தன் முகத்தை சீர்ப்படுத்திக் கொண்டு மனைவியின் முகத்தைக் கேள்வியாக ஏறிட்டான் பல்லவன்.

பல்லவன் எவ்வளவு முயன்றும் அவனின் கண்களில் தெரிந்த தவிப்பையும் ஆசையையும் கண்டுகொண்ட அனுஷியா அவன் மார்பில் சாய்ந்து, "இ... இருக்கட்டும்." என்றாள் தாங்கியவாறு.

சட்டென அவளைத் தன்னை விட்டு விலக்கிய‌ பல்லவன், "ஷியா... நிஜமா தான் சொல்றியா?" எனக் கேட்டான்.

வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைப்பதற்காக மீண்டும் தன்னவனின் மார்பிலேயே தஞ்சம் அடைந்த அனுஷியாவை வாகாக அணைத்துக்கொண்ட பல்லவன், "எனக்காக சொல்றியா ஷியா? நிஜமா எனக்கு நீ பக்கத்துல இருந்தாவே போதும். வேற எதுவுமே எனக்கு முக்கியம் இல்ல. இந்தக் கல்யாணம் வேணா அவசர அவசரமா நடந்து இருக்கலாம். மற்றது எல்லாம் மெதுவா நடக்கட்டும். உனக்கும் இதெல்லாம் ஏத்துக்க டைம் வேணும்ல." என்றான்.

ஆனால் அவனுக்கு பதிலளிக்காத அனுஷியாவோ பல்லவனின் மார்பில் இன்னும் அழுத்தமாக முகம் புதைத்து தன் சம்மதத்தை தெரிவிக்க, அதற்கு மேல் பல்லவனாலும் தன் உணர்வுகளை அடக்க முடியவில்லை.

அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் அவளை சட்டென கரங்களில் ஏந்திக்கொண்ட பல்லவன் அறையினுள் நுழைந்து கதவைத் தாழிட்டான்.

தன்னவனின் கழுத்தில் மாலையாகக் கரங்களை கோர்த்த அனுஷியா மறந்தும் அவன் விழிகளை நோக்கவில்லை.

வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை.

"ஷியா..." என பல்லவன் காதல் முழுவதையும் குரலில் தேக்கி வைத்து அழைக்க, "ம்ம்ம்..." என்ற பதில் மட்டும் தான் வந்தது அனுஷியாவிடம் இருந்து.

"ஷியா... என் கண்ணைப் பாரு." எனப் பல்லவன் கூறவும் தயக்கமாக அனுஷியா அவனின் விழிகளை ஏறிட, மறு நொடியே அவளின் இதழ்கள் பல்லவனின் இதழ்களுக்குள் சிறைப்பட்டன.

அவனுக்கு வாகாக இசைந்து கொடுத்தாள் அனுஷியா.

சில நிமிடங்கள் நீடித்த இதழ் முத்தத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக மனைவியைக் கைகளில் ஏந்தியவாறே மஞ்சத்திற்கு கொண்டு சென்று அனுஷியாவை அதன் மேல் கிடத்திய பல்லவன் தன்னவளின் விழிகளை நோக்க, விழிகளை அழுந்த மூடி தன் சம்மதத்தைத் தெரிவித்தாள் அனுஷியா.

அதன் பின் அங்கே அரங்கேறியது ஒரு அழகிய காதல் சங்கமம்.

அனுஷியா மற்றும் பல்லவனின் இல்லறம் நல்லறமாகத் தொடங்கி இருவரும் ஈருயிர் ஓருடலாக இணைய, இங்கு பல்லவனின் வீட்டிலோ அவர்கள் இருவரையும் பிரிப்பதற்காக தீட்டப்பட்டது மிகப் பெரிய சதித் திட்டம்.

_______________________________________________

அதன் பின் வந்த நாட்களில் அனுஷியா தன் இல்லற வாழ்வுடன் சேர்த்து கல்லூரிப் படிப்பையும் தொடர, பல்லவனும் தன் வியாபாரத்தை மேலும் விருத்தியாக்குவதில் ஈடுபட்டான்.

காதலுடன் சேர்த்து புரிந்துணர்வும் இருவருக்கிடையே இருந்ததால் அவர்களின் வாழ்வில் எந்தப் பிரச்சினையும் வரவில்லை.

மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்தனர்.

பல்லவனின் அனுமதியுடன் மாலதியை பல முறை தன் வீட்டிற்கு அழைத்தாள் அனுஷியா.

ஆனால் மாலதியோ அதனை உறுதியாக மறுத்தாள். அவளின் மனம் உணர்ந்து அனுஷியாவும் அவளைக் கட்டாயப்படுத்தவில்லை.

அனுஷியா தன் கல்லூரிப் படிப்பையும் முடிக்க, சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு வேலையில் சேர்வதாகக் கூறி விட்டாள் அனுஷியா. அவளின் முடிவில் பல்லவன் தலையிடவில்லை.

இடைக்கிடையே பல்லவன் ஏதாவது தேவைக்கு மட்டும் தன் வீட்டுக்குச் சென்று வந்தாலும் அனுஷியாவை முதல் நாளுக்குப் பின் அங்கு அழைத்துச் செல்லவில்லை.

இத்தனை நாட்கள் ஆகியும் ஹேமா மற்றும் கிஷோர் அமைதியாக இருப்பது பல்லவனின் மனதை உறுத்தினாலும் அவர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லாத அளவுக்கு நன்மை என் நினைத்து அமைதியாக இருந்தான்.

ஆனால் அவனின் எண்ணம் முற்று முழுவதும் தவறு என அவனுக்கு உணர்த்த விதியும் சதியும் வெகுவாகக் காத்திருந்தது.

பிரதாப் தான் அடிக்கடி அத்தையைக் காண வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அனுஷியாவிற்கும் பிரதாப்பைக் காண ஆசையாக இருந்தாலும் ஹேமாவின் பேச்சுக்குப் பயந்து தன் ஆசையை பல்லவனிடம் கூட வெளிப்படுத்தவில்லை.

ஆனால் அனுஷியாவின் ஒவ்வொரு அசைவையும் நன்றாக அறிந்து வைத்திருந்த பல்லவனுக்கு அவளின் மனம் புரிந்தது.

நேரே பிரதாப்பின் ப்ளே ஸ்கூலுக்குச் சென்றவன் அவனின் பொறுப்பாசிரியரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் பல்லவன்.

பிரதாப்பின் பெற்றோரை விட பல்லவனே அதிகமான சந்தர்ப்பங்களில் பிரதாப்பை ப்ளே ஸ்கூலுக்கு அழைத்து வருவதால் பொறுப்பாசிரியரும் பல்லவனுக்கு தடை விதிக்கவில்லை.

"அத்தை..." என ஓடி வந்து தன் காலைக் கட்டிக்கொண்ட பிரதாப்பைக் கண்டதும் அனுஷியாவின் முகம் நிறைவாய் மலர்ந்தது.

கண்களில் காதல் பொங்கி வழிய தன்னவனை ஏறிட்ட அனுஷியாவிற்கு கண்களை மூடித் திறந்து தான் என்றும் அவனவளுக்காக இருக்கிறேன் என உணர்த்தினான் பல்லவன்.

"பிரதாப் கண்ணா... உனக்கு சாப்பிட என்ன பண்ணி தரட்டும்? இன்னைக்கு நீ என்ன கேட்டாலும் பண்ணி தரலாம்னு இருக்கேன்." எனக் கேட்டாள் அனுஷியா.

"ஹை... ஜாலி... அத்தை எனக்கு கேசரின்னா ரொம்ப பிடிக்கும். கேசரி பண்ணிக் கொடுக்குறீங்களா?" எனக் கேட்ட பிரதாப்பிற்கு சம்மதமாகத் தலையசைத்தாள் அனுஷியா.

மனைவியைக் குறும்பாக நோக்கிய பல்லவன், "என்ன மேடம்? ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல. எங்களுக்கு இந்த ஆஃபர் எல்லாம் இல்லையா? உனக்கு கஷ்டம்னா சொல்லு. நான் என் வழில ஆஃபர எடுத்துக்குறேன்." எனக் கண்ணடித்தான்.

அவனின் தோளில் விளையாட்டாக அடித்த அனுஷியா, "ப்ச்..‌. சின்ன பையன பக்கத்துல வெச்சிட்டு என்ன பேசுறீங்க நீங்க? அதுவும் இல்லாம உங்களுக்கு இல்லாத ஆஃபரா? ஆனா நான் இதை விட பெரிய ஆஃபரா வெச்சிருக்கேன் உங்களுக்கு." எனப் புதிர் போட்டாள்.

பல்லவன் அவளைக் கேள்வியாக நோக்க, "அப்புறம் சொல்றேன். முதல்ல என் பிரதாப்புக்கு பிடிச்ச கேசரி பண்ணிக் கொண்டு வரேன்." என்றவாறு எழுந்து சமையலறைக்குச் சென்றாள் அனுஷியா.

பல்லவன் குளித்து உடை மாற்றி வர தம் அறைக்குச் செல்ல, அவன் வருவதற்கு முன் கேசரியை செய்து முடித்த அனுஷியா பல்லவனுக்கு பிடித்த பாயாசத்தையும் செய்தாள்.

கேசரியைக் கண்டதும் பிரதாப் உற்சாகமாக, "பிரதாப் கண்ணா... நீங்க கேசரி சாப்பிட்டுட்டு இருங்க. நான் உனக்கு கார்ட்டூன் போட்டு தரேன். அத்தை சீக்கிரம் வரேன். அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடலாம்." என அனுஷியா கூறவும் சமத்தாக அமர்ந்து கேசரியை சாப்பிட்டான் பிரதாப்.

கணவனுக்கு பிடித்த பாயாசத்தை ஒரு சிறிய கோப்பையில் எடுத்துக் கொண்டு மாடியேறிய அனுஷியா பல்லவன் வரும் வரை பால்கனியில் காத்திருந்தாள்.

சில நிமிடங்கள் கழித்து குளியலறையில் இருந்து வெளியே வந்த பல்லவன் பால்கனியில் தன்னை மறந்து நின்ற அனுஷியாவைப் பின்னிருந்து அணைத்து, "என்ன பொண்டாட்டி? எனக்கு அப்படி என்ன பெரிய ஆஃபர் வெச்சிருக்கீங்க?" எனக் கேட்டவாறு அவனின் மூக்கினால் அனுஷியாவின் கழுத்தில் குறுகுறுப்பூட்டினான்.

வெட்கத்தில் நெளிந்த அனுஷியா பல்லவனின் புறம் திரும்பி தான் கொண்டு வந்த பாயாசத்தை அவனிடம் நீட்ட, கண்கள் மின்ன அதனை வாங்கிப் பருகிய பல்லவன் அனுஷியாவிற்கும் ஊட்டியவாறு, "என்ன சஸ்பன்ஸ் எல்லாம் பலமா இருக்கு? எனக்கு பிடிச்ச பாயாசம் வேற." எனக் கேட்டவனின் முகத்தில் புன்னகை.

பல்லவன் பாயாசத்தை குடித்து முடிக்கும் வரை காத்திருந்த அனுஷியா அவன் முன் தன் கரத்தை நீட்ட, மூடியிருந்த உள்ளங்கையைக் குழப்பமாக நோக்கினான் பல்லவன்.

அனுஷியா புன்னகையுடன் அதனைக் கண் காட்ட, அனுஷியாவின் விரல்களைப் பிரித்துப் பார்த்த பல்லவனுக்கு ஆனந்த அதிர்ச்சி.

அனுஷியாவின் கரத்தில் இரட்டை கோடிட்ட ப்ரெக்னன்சி கிட் இருக்க, அதனைத் தன் கையில் எடுத்த பல்லவன், "நி...நிஜமாவா?" எனக் கேட்டான் நம்ப முடியாமல்.

ஆம் எனத் தலையசைத்த அனுஷியா, "நேத்து தான் கன்ஃபார்ம் பண்ணேன்." என்ற மறு நொடியே, "யா ஹூ..." எனக் கூக்குரல் இட்டவாறு அனுஷியாவைத் தூக்கிச் சுற்றினான் பல்லவன்.

"அச்சோ... என்னங்க... போதும்... போதும்... விடுங்க. பாப்பா இருக்கு வயித்துல." என அனுஷியா பதட்டமாகக் கூறவும் அவளைக் கீழே இறக்கி விட்ட பல்லவன், "ஹே சாரி..‌. சாரி டா... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ஷியா. நான் அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்." என்றவன் தன்னவளின் முகம் முழுவதும் முத்தமிட்டான்.

"பிரதாப் கீழே தனியா இருக்கான். வாங்க போலாம்." என்ற அனுஷியா பல்லவனுடன் ஹாலுக்குச் சென்றான்.

கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த பிரதாப்பைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்ட பல்லவன் மனைவியையும் தன் கை வளைவில் வைத்துக் கொண்டு, "பிரதாப்... உனக்கு தனியா விளையாட போர் அடிக்கலயா?" எனக் கேட்டான்.

"போர் அடிக்கிது மாமா... வீட்டுல என் கூட விளையாட யாருமே இல்ல. ஆனா இங்க அப்படி இல்ல. அத்தை சொன்னாங்க என் கூட விளையாட வரேன்னு. ஆமா தானே அத்த?" என்ற பிரதாப் அனுஷியாவை நோக்க, "ஆமாடா பிக் பாய். நாம நிறைய கேம்ஸ் விளையாடலாம்." என்றாள் அனுஷியா.

"டோய்ஸ் வெச்சே எவ்வளவு நாள் விளையாடுவ பிரதாப்? உனக்கு ஒன்னு தெரியுமா? உங்க அத்தை உனக்கு விளையாடவே கூடிய சீக்கிரம் ஒரு தம்பி பாப்பாவோ தங்கச்சி பாப்பாவோ கொண்டு வரப் போறாங்க. அப்புறம் நீ அவங்க கூடவே விளையாடலாம்." என்றான் பல்லவன்.

கண்கள் பளிச்சிட, "நிஜமாவா அத்தை?" எனப் பிரதாப் கேட்கவும் அனுஷியாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

பின் சிறிது நேரம் கணவன் மனைவி இருவரும் பிரதாப்புடன் விளையாடி விட்டு பல்லவன் அவனை அழைத்துச் சென்று வீட்டில் விட்டான்.

அனுஷியாவிற்கு பிரதாப்பை அனுப்ப மனமே இல்லை. இருந்தும் வேறு வழியின்றி அனுப்பி வைத்தாள்.

தன் வீட்டுக்குச் சென்ற பிரதாப்போ அத்தைக்கு குட்டிப் பாப்பா வரப் போவதாக தாயிடம் உளறி வைக்க, தம் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதை எண்ணி விஷமச் சிரிப்பை உதிர்த்தாள் ஹேமா.

பிரதாப்பை வீட்டில் விட்ட பின் அனுஷியாவிற்கு பிடித்த உணவு வகைகளை வாங்கிக் கொண்டு வீடு வந்த பல்லவன் அதன் பின் அனுஷியாவை ஒரு வேலையும் செய்ய விடவில்லை.

அனுஷியா கர்ப்பமாக இருப்பதை அறிந்த ஜெயா அவளுக்குப் பிடித்தவை எல்லாம் சமைத்து தன் கையாலேயே ஊட்டி விட்டார்.

தனக்கு யாரும் இல்லை என்ற குறை அனுஷியாவிற்கு வராமல் இருக்க பல்லவன் அவளைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்கினான்.

இருவரும் சேர்ந்து தம் குழந்தையைப் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் பல கனவுகள் காண, ஆனால் விதியோ அவளுக்கு ஒரு இருண்ட எதிர்காலத்தை என்றோ எழுதி வைத்து விட்டதை அறியாமல் போயினர் இருவரும்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 37

நாட்கள் வேகமாக உருண்டோடி மாதங்களாகப் பறக்க, அனுஷியாவின் பிரசவ நாளும் நெருங்கியது.

தினமும் இரவு மனைவியின் வயிற்றில் தலை சாய்த்து வயிற்றில் உள்ள குழந்தையுடன் பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தான் பல்லவன்.

தந்தையின் குரல் கேட்டாலே வயிற்றில் இருக்கும் குழந்தை தாயின் வயிற்றில் எட்டி உதைத்து தன் இருப்பை வெளிப்படுத்தும்.

அந்த நொடியில் இல் உலகையே சாதித்த மகிழ்ச்சியை அடைவர் கணவன் மனைவி இருவரும்.

முதல் முறை வயிற்றில் குழந்தையின் அசைவை உணர்ந்த போது பல்லவன் அழுதே விட்டான்.

வழமை போல அனுஷியாவின் வயிற்றில் முத்தமிட்டு குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தவன் மனைவியின் வயிற்றில் தலை சாய்க்க, கணப்பொழுதில் சிறு அசைவு தோன்றி மறைந்தது.

பல்லவன் அதிர்ச்சியுடன் மனைவியை நோக்கி, "ஷி...ஷியா..." என்க, "குழந்தை அசையுதுங்க." என்றாள் அனுஷியா கண்ணீருடன்.

பல்லவன் அவசரமாக அனுஷியாவின் வயிற்றில் கரம் வைத்துப் பார்க்க, எந்த அசைவும் இல்லை.

"பாப்பா கூட பேசுங்க." என அனுஷியா கூறவும் மனைவியின் வயிற்றில் கரம் பதித்தவாறே, "பாப்பா... அப்பா பேசுறேன்." எனப் பல்லவன் கூறிய மறு நொடியே மீண்டும் குழந்தையிடம் அசைவு.

உடனே கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க, "ஷியா... நம்ம குழந்தை... என்னைத் தெரியுது." என்றான் பல்லவன் புன்னகையுடன்.

ஆமோதிப்பாகத் தலையசைத்த அனுஷியாவின் கண்களிலும் கண்ணீர்.

அவ்வாறே அவர்கள் நாட்கள் கடக்க, அனுஷியாவிற்கு பிரசவத்திற்கு குறித்து தந்த நாளுக்கு ஒரு வாரம் முன்பே உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு அடி வயிற்றில் 'சுளீர்' என ஒரு வலி.

சில நிமிடங்களிலேயே வலி அதிகமாக, ஏற்கனவே ஜெயா என்ன செய்ய வேண்டும் என்று எல்லாம் இருவருக்கும் அறிவுறுத்தி இருந்ததால் விரைவாக செயற்பட்டான் பல்லவன்.

அனுஷியாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் அவளைப் பரிசோதித்த மருத்துவர் இன்னும் நன்றாக வலி வர வேண்டும் என்றும் குழந்தை பிரசவிக்க சில மணி நேரங்கள் ஆகும் என்றும் கூறினார்.

பல்லவனுக்கோ மனைவியின் கதறல் மட்டும் தான் மனதில் இருந்தது.

வேறு எதைப் பற்றியும் சிந்திக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.

"இல்ல டாக்டர். அவ ரொம்ப வலில கஷ்டப்படுறா. ஆப்பரேஷன் பண்ணியாவது குழந்தைய வெளிய எடுங்க. அவ கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியல." என்றான் பல்லவன் பதட்டமாக.

"என்ன மிஸ்டர் புரியாம பேசுறீங்க? உங்க வைஃப் மேல நீங்க வெச்சிருக்குற பாசம் புரியுது எனக்கு. அதுக்காக நீங்க சொல்றத போல எல்லாம் ஆப்பரேஷன் பண்ண முடியாது. இப்ப ஆப்பரேஷனுக்கு எடுத்தா தாய், சேய் ரெண்டு பேருக்குமே ஆபத்து. கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கோங்க. அவங்களுக்கு வலி அதிகமானதும் கூப்பிடுங்க." எனச் சற்று கடுமையாகக் கூறி விட்டு அங்கிருந்து அகன்றார் மருத்துவர்.

அவரும் இது போல் எத்தனை கேஸ்களைப் பார்த்திருப்பார்.

அனுஷியாவிற்கோ வலி வருவதும் போவதுமாக இருக்க, பல்லவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அவனால் முடிந்திருந்தால் மனைவியின் வலியை தனக்குக் கொடுக்குமாறு கடவுளிடம் கெஞ்சி இருப்பான்.

"ஷியாம்மா... கொஞ்சம் பொறுத்துக்கோடா." எனப் பல்லவன் கெஞ்ச, "முடியலங்க. ரொம்ப வலிக்கிது." என்றாள் அனுஷியா வலியில் பல்லைக் கடித்துக் கொண்டு.

அதனைக் கேட்டு பல்லவனின் கண்கள் கலங்க, அவனின் வேதனையைப் புரிந்து கொண்ட அனுஷியா முடிந்தளவு தன் வலியை முகத்தில் காட்டாது பொறுத்தாள்.

பல்லவன் அனுஷியாவின் தலையை வருடி விட்டவாறு அவளின் அருகிலேயே நிற்க, அவனின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்ட அனுஷியா, "எனக்குப் பயமா இருக்குங்க. எனக்கு உங்க கூட ரொம்ப காலம் வாழணும். ஒருவேளை நான் குழந்தை பிறக்கும் போது செத்துப் போய்ட்டேன்னா என்னங்க பண்ணுறது? நம்ம பாப்பாவ பத்திரமா பார்த்துப்பீங்களா?" எனக் கேட்கவும், "அனுஷியா..." எனச் சத்தமிட்டான் பல்லவன்.

மனதில் இருந்த பயமும் ஹார்மோன்களின் மாற்றமுமே அனுஷியாவை அவ்வாறு கேட்க வைத்தது.

"அறைஞ்சேன்னு வை. என்ன பேச்சு டி பேசுற? உனக்கு ஒன்னும் ஆகாது. நீ, நான், நம்ம பாப்பா எல்லாம் ஒன்னா சந்தோஷமா இருக்க தான் போறோம்." எனக் கோபமாகக் கூறிய பல்லவன், "நான் சுயநலமா இருந்தாலும் பரவால்ல. அப்படி மட்டும் ஏதாவது ஆச்சு. நானும் அடுத்த நிமிஷமே உன் கூட வந்துடுவேன்." என்றான் தழுதழுத்த குரலில்.

ஆனால் இருவருமே அறியவில்லை காலம் அவர்கள் இருவருக்கும் வைத்திருந்த சோதனைகளை.

அனுஷியா அவசரமாக தன் கரத்தால் அவனின் வாயை மூட, "ப்ளீஸ் ஷியாம்மா... இப்படி எல்லாம் பேசி என்னைக் கஷ்டப்படுத்தாதே. எனக்குன்னு இருக்குறது நீயும் நமக்கு பிறக்க போற குழந்தையும் தான்." எனக் கண்ணீருடன் கூறிய பல்லவன் அனுஷியாவைப் பக்கவாட்டாக அணைத்துக்கொள்ள, அவனின் முதுகை வருடி விட்டாள் அனுஷியா.

அனுஷியாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக வலி இருந்ததை விட அதிகரித்துக்கொண்டே செல்ல, அவளுடன் ஏதேதோ பேசியவாறு அவளின் வலியை மறக்கச் செய்ய முயன்றான் பல்லவன்.

சில மணி நேரங்கள் கழித்து விடியலை நெருங்கிக் கொண்டிருந்த நேரம், "என்னங்க... மாலதி அக்காவ வர சொல்றீங்களா?" எனக் கேட்டாள் அனுஷியா.

அவள் எதற்காகக் கேட்கிறாள் எனப் புரிந்து கொண்ட பல்லவன் உடனே மாலதிக்கு அழைத்து தகவல் தெரிவிக்க, அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தாள் அவள்.

"அனும்மா... ரொம்ப வலிக்கிதாடா?" எனப் பரிவாகக் கேட்ட மாலதியைப் பார்த்து முறுவலித்த அனுஷியா, "இன்னும் அவ்வளவா வலி வரலக்கா. அதை விடுங்க. நீங்க ஏன் இவ்வளவு இளைச்சி போய் இருக்கீங்க? சரியா சாப்பிடுறது இல்லையா?" எனக் கேட்டாள்.

அனுஷியாவின் கேள்வியில் பதட்டமடைந்த மாலதி மறு நொடியே அதனை யாருக்கும் தெரியாதவாறு மறைத்து, "வயசாகுதுல்ல அனு. வேற ஒன்னும் இல்ல." என சமாளித்தாள்.

பதிலுக்கு ஏதோ கேட்க வந்த அனுஷியாவின் முகம் சட்டென மாற, "ஆஹ்..." என அலறினாள் வலியில்.

"ஷியா... ஷியா... என்னாச்சு?" எனப் பதட்டமாகக் கேட்ட பல்லவனின் கரத்தைப் பற்றிக் கொண்ட அனுஷியாவிற்கு வலியில் வார்த்தைகள் வர மறுத்தன.

"கொஞ்சம் பொறுத்துக்கோடா... நான் டாக்டர கூப்பிடுறேன்." என்ற பல்லவனின் கரத்தை விடவே இல்லை அவள்.

"நீங்க இருங்க தம்பி. நான் கூட்டிட்டு வரேன்." என்று விட்டு கிளம்பிய மாலதி சற்று நேரத்தில் மருத்துவருடன் வர, அனுஷியாவைப் பரிசோதித்த மருத்துவர், "அவங்களுக்கு வலி வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் நேரத்துல குழந்தை பிறந்துடும். நீங்க ரெண்டு பேரும் வெளிய இருங்க." என்றார்.

மாலதி உடனே வெளியே சென்று விட, "இல்ல டாக்டர். நான் என் வைஃப் கூடவே இருக்கேன். ப்ளீஸ்..." என்க, "இல்ல பல்லவன்... நீங்க இருக்குற நிலைமைல நீங்க எங்களயும் எங்க வேலைய செய்ய விட மாட்டீங்க. ப்ளீஸ் நிலைமைய புரிஞ்சி வெளிய போங்க. டைம் போக போக ரொம்ப ரிஸ்க் ஆகுது.' என்றார் மருத்துவர்.

பல்லவனுக்கு தன்னவளை விட்டுச் செல்ல மனமே இல்லை.

முகம் களை இழந்து, கண்கள் கலங்க நின்றவனைப் பார்க்கும் போது அனுஷியாவின் மனமும் வேதனை கொண்டது.

"அவர் இருக்கட்டும் டாக்டர். ப்ளீஸ்..." என வலியில் பல்லைக் கடித்துக் கொண்டு அனுஷியா கெஞ்ச, அதன் பின் மருத்துவரும் பல்லவனை எதுவும் கூறவில்லை.

சற்று நேரத்திலேயே அனுஷியாவின் "அம்மா..." என்ற அலறலுடன் தொடர்ந்து 'வீல்...' என்ற சத்தத்துடன் தன் தந்தையை உரித்து வைத்தது போல் பிறந்தாள் பல்லவன் மற்றும் அனுஷியாவின் தவப் புதல்வி அனுபல்லவி.

மருத்துவர் காட்டியை குழந்தையை தன் கண்களில் நிரப்பிக் கொண்டு மயக்கத்திற்கு சென்றாள் அனுஷியா.

குழந்தையை மறந்து, "டாக்டர்..." எனப் பல்லவன் பதற, "டோன்ட் வொரி பல்லவன். சாதாரண மயக்கம் தான். கொஞ்சம் நேரத்துல கண்ணு முழிச்சிடுவாங்க." என்ற மருத்துவர் தாதி தந்த குழந்தையை அவனிடம் நீட்டினார்.

குழந்தையைக் கையில் வாங்காமல் எட்ட நின்று குழந்தையை ரசித்த பல்லவன், "கொஞ்சம் இருங்க டாக்டர். வரேன்." என்றவன் அவசரமாக வெளியே சென்று மாலதியை அழைத்துக் கொண்டு வந்தான்.

தன் வளர்ப்பு மகளுக்கு என்னவோ ஏதோவென்ற பதட்டத்தில் பல்லவனுடன் வந்த மாலதி மருத்துவரின் கரத்தில் இருந்த பூக்குவியலைக் கண்டு கண்கள் கலங்கி நிற்க, "வாங்கிக்கோங்கக்கா..." என்றான் பல்லவன்.

"நா...நானா?" என மாலதி தயக்கமாகக் கேட்க, "ஆமாக்கா. வாங்கிக்கோங்க. உங்க பொண்ணோட விருப்பம்." என்றான் பல்லவன் புன்னகையுடன்.

கரங்கள் நடுங்க குழந்தையைக் கையில் வாங்கிய மாலதிக்கு கண்கள் குளமாகின.

எந்தப் பெண்ணுக்கும் தான் ஒரு பெண் என்ற நிறைவைக் கொடுக்கும் தாய்மை.

அது சிலருக்கு கிட்டா விட்டாலும் அவர்களையும் சேர்த்து பெண்ணாகப் பிறந்த அனைவருக்குள்ளும் தாய்மை என்ற உணர்வு நிச்சயம் இருக்கும்.

மாலதிக்கு அப் பாக்கியம் தன் வளர்ப்பு மகளால் கிட்டியது.

மாலதியின் முகத்தில் இந்த நிறைவைக் காணத் தானே அனுஷியாவும் ஆசைப்பட்டாள்.

மாலதியின் கரத்தில் குழந்தையைக் கொடுத்த பல்லவன் தன்னவள் கண் விழிக்கும் வரை அவளை விட்டு விலகவே இல்லை.

அனுஷியாவை நார்மல் வார்டுக்கு மாற்றி சற்று நேரத்தில் கண் விழித்தவளின் அருகே அமர்ந்திருந்த பல்லவன், "ஷியா..." என்றவாறு தன்னவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதிக்க, "ரொம்ப பயந்துட்டீங்களா?" எனக் கேட்டாள் அனுஷியா புன்னகையுடன்.

அவளைப் போலியாக முறைத்த பல்லவன், "ரொம்பவே..." என்றான் நா தழுதழுக்க கண்ணீருடன்.

தன்னவனின் முகத்தைப் பரிவாக வருடிய அனுஷியா, "அதான் வந்துட்டேன்ல. இனிமே நோ அழுகாச்சி." என்றவாறு பல்லவனின் கண்களைத் துடைத்து விட்டான்.

அதே நேரம் மாலதி குழந்தையைத் தூக்கிக்கொண்டு வர, அனுஷியாவின் கண்கள் பிரகாசித்தன.

"அனும்மா... ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா நான். அந்தக் கடவுள் இந்த நிமிஷம் என்னோட உயிரைப் பறிச்சாலும் சந்தோஷமா கண்ண மூடுவேன்." என்றாள் மாலதி தன்னை‌ மறந்து.

"அக்கா..." என பல்லவனும் அனுஷியாவும் ஒருசேரப் பதற, தன்னிலை அடைந்த மாலதி, "நெருப்புன்னு சொன்னா நாக்கு சுட்டுடாது அனு. அட மறந்தே போய்ட்டேன். குழந்தைய பிடிம்மா. எனக்கு இவள கைய விட்டு இறக்கி இவள பிரிஞ்சி இருக்க மனசே இல்லடா. அப்படியே தம்பிய உரிச்சி வெச்சிருக்கா. ஆனா கண்ணு மட்டும் எங்க அனு போல." என்றவாறு குழந்தையை நீட்டினாள்.

மாலதி நீட்டிய குழந்தையைக் கையில் வாங்கிய அனுஷியா, "எதுக்கு பிரிஞ்சிருக்கணும்? எங்க கூடவே இருக்கலாம்ல." என்கவும் மாலதியின்‌ முகம் மாறியது.

"குழந்தைய பாரும்மா. ரோஜாப்பூ போல இருக்கா." என மாலதி பேச்சை மாற்றவும் கணவன் மனைவி இருவரின் கவனமும் குழந்தையிடம் திரும்பியது.

"என்னங்க... நம்ம குழந்தை. உங்கள போலவே இருக்கா பாருங்க." என்றாள் அனுஷியா கண்கள் கலங்க.

காதல், கணவன், குடும்பம் என எதனைப் பற்றியும் யோசித்திராதவளின் வாழ்வில் புயலென நுழைந்து காதலை அள்ளிக் கொடுத்து தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துத் தந்து பெண்ணாய் நிறைவாய் உணர வைத்தவனையே காதலுடன் நோக்கினாள் அனுஷியா.

தன்னவளின் மடியில் இருந்த குழந்தையின் முகத்தை வருடிய பல்லவன், "தேங்க்ஸ் ஷியாம்மா..." என்றவாறு குழந்தையின் காலில் முத்தமிட, தந்தையின் முகத்தில் எட்டி உதைத்த சேயின் முகம் உறக்கத்திலும் மலர்ந்தது.

அதனைக் காணவும் அவ்வளவு நிறைவாய் இருந்தது இருவருக்கும்.

கணவன் மனைவிக்கு தனிமையைக் கொடுத்து விட்டு மாலதி வெளியே சென்று விட, "நான் தான்ங்க தேங்க்ஸ் சொல்லணும். ஐ லவ் யூங்க... ஐ லவ் யூ சோ மச். நீங்க புருஷனா கிடைக்க போன ஜென்மத்துல நான் ஏதோ பெரிய புண்ணியம் பண்ணி இருக்கணும்." என அனுஷியா கூறவும் பல்லவனின் முகத்தில் ஆனந்த அதிர்ச்சி.

திருமணத்தன்று முதல் நாள் அனுஷியா தன் காதலை வார்த்தைகளால் கூறிய பின் இது வரை வார்த்தைகளால் கூறியதே கிடையாது.

பல்லவன் பல முறை கெஞ்சிக் கேட்டும் தம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளில் மட்டும் தான் கூறுவேன் என உறுதியாக மறுத்து விட்டாள் அனுஷியா.

பல்லவனும் அதன் பிறகு அனுஷியாவை வற்புறுத்தவில்லை.

வார்த்தைகளால் வெளிப்படுத்தாவிடினும் ஒவ்வொரு நொடியும் தன் காதலை தன்னவனுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தாள் அனுஷியா.

"ஐ லவ் யூ டூ டி பொண்டாட்டி. என் வாழ்க்கையில வரமா வந்த தேவதை நீ. எனக்கு கிடைச்ச பொக்கிஷம்." என்ற பல்லவன் தன்னவளின் இதழ்களை சில நொடிகள் சிறை பிடித்து விடுவிக்க, பெண்ணவளின் கன்னங்கள் வெட்கச் சதுப்பைப் பூசிக் கொண்டன.

தன்னை மட்டும் விடுத்து தாயும் தந்தையும் கொஞ்சிக் கொள்வது பொறுக்காது தன் பிஞ்சுக் கால்களால் எட்டி உதைத்து தன் இருப்பை வெளிப்படுத்தினாள் அவர்களின் தவப் புதல்வி.

அதில் வாய் விட்டு சிரித்த பல்லவன் குழந்தையுடன் சேர்த்து மனைவியை அணைத்துக்கொள்ள, "சரியான அப்பா பொண்ணு போல. இப்பவே எனக்கு போட்டியா வந்துட்டா. கொஞ்ச நேரம் என் புருஷன் கூட ரொமான்ஸ் பண்ண விட மாட்டேங்குறா." எனப் போலியாக அலுத்துக் கொண்டாள் அனுஷியா.

முகத்தில் பெரிய புன்னகையுடன் மனைவியையும் குழந்தையையும் அணைத்திருந்த பல்லவன் இனி தம் வாழ்வில் வசந்தம் மட்டுமே வீசும் என எண்ண, விதியோ அவனைப் பார்த்து கேலியாகச் சிரித்தது.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 38

சுகப் பிரசவம் என்பதால் மறுநாளே அனுஷியாவை டிஸ்சார்ஜ் செய்ய, தன் மனைவி மற்றும் குழந்தை சகிதம் தம் வீட்டுக்குச் சென்றான் பல்லவன்.

மாலதியை அனுஷியா எவ்வளவோ அழைத்தும் அவள் வர மறுத்து விட்டாள்.

ஜெயா மூவருக்கும் சேர்த்து ஆரத்தி சுற்றி வரவேற்க, ஒரு கரத்தில் குழந்தையை ஏந்தி மற்ற கரத்தை கணவனின் கரத்துடன் கோர்த்தவாறு வீட்டினுள் நுழைந்த அனுஷியாவின் மனம் அவ்வளவு நிறைவாக இருந்தது.

பல்லவன் ஆஃபீஸுக்கு லீவ் போட்டு விட்டு முழு நேரமும் மனைவி மற்றும் குழந்தையுடனே இருந்து விட, அவனின் பொறுப்புகள் அதிகம் ஆகி விட்டது என்பதை உணர்த்திய அனுஷியா பல்லவனை கெஞ்சிக் கொஞ்சி, உருட்டி மிரட்டி வேலைக்கு அனுப்பி வைத்தாள்.

ஆஃபீஸுக்குச் சென்றாலும் மனம் முழுவதும் மனைவியிடமும் குழந்தையிடமுமே இருக்க, ஜெயாவை அவர்களின் முழு நேர உதவிக்கு நியமித்து விட்ட, ஏனைய வேலைகளை செய்ய வேறு ஒரு வேலைக்காரியை நியமித்தான் பல்லவன்.

வேலை விட்டு வந்ததுமே குழந்தையுடன் அமர்ந்து விடுவான் பல்லவன்.

தன் செல்ல மகளின் பொக்கை வாய் சிரிப்புக்கே மயங்கி விடுபவன் மனைவியைக் காதலில் முக்குளிக்க வைத்தான்.

ஒரு நல்ல நாளில் தனக்கு மிக நெருக்கமானவர்களை மாத்திரம் அழைத்து சிறியதாக குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவை நடத்தியவன் தன்னவளுடன் சேர்ந்து இருவரின் பெயரும் வருவது போல் தம் மகளுக்கு அனுபல்லவி எனப் பெயரின் சூட்டினான்.

நாட்கள் உருண்டோட அனுபல்லவியோ டேட்ஸ் லிட்டில் ப்ரின்சஸ் ஆக வேகமாக வளர்ந்தாள்.

இடையில் ஓரிரு தடவை பிரதாப்பை அழைத்து வந்து அனுபல்லவியைக் காட்ட, சிறு குழந்தையைக் கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான் அவன்.

அனுபல்லவிக்கு இரண்டு வயது பூர்த்தி அடைந்த நிலையில் அன்று விடுமுறை தினமாக இருக்க, ஹாலில் மகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான் பல்லவன்.

அனுஷியா ஜெயாவுடன் சேர்ந்து சமையல் வேலைகளில் ஈடுபட்டிருக்க, காலிங் பெல் சத்தம் கேட்டது.

பல்லவன் குழந்தையுடன் இருப்பதால் அனுஷியாவே சென்று கதவைத் திறக்க, வாசலில் பிரதாப்புடன் தலைவிரி கோலமாக நின்றிருந்த ஹேமா, "அண்ணி... என்னை மன்னிச்சிருங்க." என சட்டென அனுஷியாவின் காலில் விழவும் கணவனும் மனைவியும் ஒருசேர அதிர்ந்தனர்.

பிரதாப்போ வந்ததும் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் ஓடி விட, முதலில் தன்னிலை அடைந்த அனுஷியா, "என்ன பண்ணுறீங்க அண்ணி? எழுந்திருங்க முதல்ல. எதுக்கு என் கால்ல எல்லாம் விழுந்துக்கிட்டு?" எனப் பதட்டமாகக் கூறியவள் ஹேமாவின் தோள் பற்றி அவளை எழுப்பி நிறுத்தினாள்.

பல்லவனோ குழப்பத்தில் கண்கள் சுருங்க நடப்பதை வேடிக்கை பார்க்க, "இந்தப் பாவிய மன்னிச்சிருங்க அண்ணி. உங்க நல்ல மனசு புரியாம ஏதேதோ பேசிட்டேன்." என்று கண்ணீர் வடித்தாள் ஹேமா.

ஜெயா பிரதாப்பையும் அனுபல்லவியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட, அனுஷியா ஹேமாவையும் பல்லவனையும் மாறி மாறிப் பார்த்தவாறு சங்கடமாக நின்றாள்.

"விடுங்க அண்ணி. நான் எதையும் மனசுல வெச்சிக்கல." என அனுஷியா தயக்கமாகக் கூறவும், "நீங்க இப்படி தான் சொல்லுவீங்க அண்ணி. அது உங்க நல்ல மனசு. உங்கள தப்பா பேசின எனக்கு நல்லா வேணும் அண்ணி. அதுக்கு தான் நான் அனுபவிக்கிறேன்." என்ற ஹேமா பல்லவனிடம் சென்று, "அண்ணா... உங்கள புரிஞ்சிக்காம தப்பு பண்ணிட்டேன் ணா. என்னை மன்னிச்சிருங்க." என அவனின் காலைக் கட்டிக் கொண்டு கதற, பல்லவனோ தங்கையை அழுத்தமாக நோக்கியவாறு அசையாமல் நின்றிருந்தான்.

என்ன தான் தங்கையாக இருந்தாலும் தன்னை மட்டுமே நம்பி வந்த தன்னவளை பேசிய பேச்சுக்களை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அனுஷியா கண்களால் கணவனிடம் கெஞ்ச, என்ன இருந்தாலும் தான் பார்த்துப் பார்த்து வளர்த்த தங்கை ஆயிற்றே.

அவள் இவ்வாறு தன் காலில் விழுந்து கெஞ்சுவதைக் காண சகிக்காமல் ஹேமாவின் தோள் பற்றி எழுப்பி விட்ட பல்லவன், "விடு ஹேமா. நடந்து முடிஞ்சத யாராலயும் மாத்த முடியாது." என்க, தேம்பித் தேம்பி அழுத ஹேமா, "யார் பேச்சையோ கேட்டு சொத்துக்கு ஆசைப்பட்டு என் அண்ணன தப்பா நடத்தினதுக்கும் அண்ணிய பத்தி தப்பு தப்பா பேசினதுக்கும் சேர்த்து அந்தக் கடவுள் எனக்கு சரியான தண்டனைய கொடுத்தாட்டார் ணா." என அழுதாள்.

அவளைக் குழப்பமாக நோக்கிய பல்லவன், "என்னாச்சு?" எனக் கேட்டவனுக்கு ஹேமாவை முழுதாக நம்பவும் மனசாட்சி இடமளிக்கவில்லை.

"நீங்க வானதிய கல்யாணம் பண்ணாம போகவும் அந்தக் கோவத்துல அத்தையும் மாமாவும் என் வீட்டுக்காரர் கிட்ட கோவமா நடந்துக்க, எல்லா கோவத்தையும் அவர் என் மேல காட்டத் தொடங்கிட்டார். நானும் ஆரம்பத்துல எல்லாம் சகிச்சிட்டு போனேன் சாதாரணமா. ஆனா சொத்து கிடைக்காதோங்குற பயத்துல அவங்க கிஷோர ஏதேதோ சொல்லி ஏத்தி விட்டுட்டாங்க. அவ்வளவு இருந்தும் நீங்க கூட என்னை அடிச்சதில்ல. ஆனா அவர் டெய்லி குடிச்சிட்டு வந்து என்னைப் போட்டு அடி அடின்னு அடிப்பார்." என ஹேமா கண்ணீருடன் கூறவும் பல்லவன் ஆத்திரத்தில் பல்லைக் கடிக்க, அனுஷியாவோ அதிர்ந்தாள்.

"அவன சும்மா விட்டியா? என் கிட்ட அப்போவே சொல்லி இருக்கலாமே." எனக் கேட்டான் பல்லவன் கோபமாக.

"காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு பிரச்சினைன்னு வந்து நிற்க என் ஈகோ தடுத்துச்சு ணா. ஆனா கிஷோரோட அட்டூழியம் அதிகமாயிட்டே போச்சு." என்ற ஹேமா தன் சேலையை முழங்கால் வரை உயர்த்திக் காட்ட, அவளின் முழங்காலுக்கு கீழே நீளமாக இருந்த சூடு பட்ட தழும்பைக் கண்டு அதிர்ந்தான் பல்லவன்.

என்ன தான் கோபம் இருந்தாலும் தங்கைக்கு ஒன்று என்றதும் துடித்துப் போன பல்லவனின் கண்கள் கலங்க, அனுஷியாவும் அதிர்ந்து நின்றிருந்தாள்.

"நேத்தும் குடிச்சிட்டு வரவும் எனக்கு கோவம் வந்து ஏன் இப்படி பண்ணுறீங்க கிஷோர்னு மட்டும் தான் கேட்டேன். அதுக்கு சொத்த எழுதி வாங்கிட்டு வர துப்பில்ல. அவரையே எதிர்த்து கேள்வி கேட்குறேன்னு என்னை போட்டு அடிச்சிட்டு சூடு வெச்சிட்டார் ணா. வலி தாங்க முடியாம அங்கயே மயங்கி கேட்க நாதியில்லாம கிடந்தேன். காலைல மயக்கம் தெளிஞ்சதும் இதுக்கு மேல முடியாதுன்னு புள்ளய தூக்கிட்டு ஓடி வந்துட்டேன் ணா." எனக் கதறினாள் ஹேமா.

அனுஷியா அவசரமாக தன் நாத்தனாருக்கு தண்ணீரை கொண்டு வந்து நீட்ட, அதனை வாங்கிக் குடித்த ஹேமாவோ, "தயவு செஞ்சு இந்தப் பாவிய மன்னிச்சிருங்க அண்ணி. என்னை மன்னிச்சிருங்க ண்ணா. உங்களுக்கு பண்ண பாவம் தான் என்னை விடாம துரத்துது." எனக் கதறிய தங்கையை அணைத்து தலையை வருடி விட்ட பல்லவன், "அழாதே ஹேமா. நான் பார்த்துக்குறேன் எல்லாம். அந்த நாய போலீஸ்ல பிடிச்சு கொடுத்து முட்டிக்கு முட்டி தட்டி அவன கம்பி எண்ண வைக்கிறேன்." என்றான் கோபமாக.

சட்டென தன் சகோதரனை விட்டு விலகிய ஹேமா, "தயவு செஞ்சி அப்படி மட்டும் பண்ணிடாதே ண்ணா." எனக் கண்ணீருடன் கையேந்த, அவளை ஏன் எனும் விதமாக புருவம் உயர்த்தி குழப்பமாக நோக்கினான் பல்லவன்.

"அ...அ...அவன்..‌. நான் போலீஸ் கிட்ட போனா என் பையனோட பிறப்பையே சந்தி சிரிக்க வெச்சிடுவேன்னு சொல்லி இருக்கான் ணா. பிரதாப் தனக்கு பிறக்கலன்னும் நான் ஊர் மேஞ்சி யாருக்கோ பெத்துக்கிட்டேன்னும் சொல்லிடுவானாம்." என ஹேமா கண்ணீர் வடிக்கவும் அதிர்ந்த பல்லவன், "அவன் சொன்னா அது உண்மை ஆகிடுமா? அதான் DNA டெஸ்ட் இருக்கே." என்றான் கோபமாக.

"இல்லண்ணா... வேணாம். என் கற்ப பத்தி ஊரார் தப்பா பேசினா கூட பரவால்ல. பொறுத்து போவேன். ஆனா என் பையனோட பிறப்ப யாரும் தப்பா பேசிட்டாங்கன்னா அந்த நிமிஷமே நான் செத்துடுவேன் ணா." என ஹேமா கூறவும் பல்லவன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிற்க, அவனருகில் வந்த அனுஷியாவோ பல்லவனின் கரத்தை அழுத்தி கண்களால் ஆறுதல் கூறினாள்.

"சரி அப்போ அவன சும்மா விட சொல்றியா?" எனக் கேட்ட பல்லவன் நினைத்திருந்தால் சொத்தைக் காரணம் காட்டி தங்கையைக் கொடுமைப்படுத்தியவனுக்கு முன்பானால் தங்கையின் நலனுக்காக யோசிக்காமல் மொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்திருப்பான்.

ஆனால் இப்போதோ அவனுக்கென மனைவி, குழந்தை என் வந்து விட்ட பிறகு அவ்வாறு செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை.

"வேற வழி இல்லண்ணா. இதுக்கு மேல என்னால அவன் கூட போய் வாழ முடியாது. நான் உங்க கூடவே இருந்துடுறேன். ஆனா என்ன இருந்தாலும் நான் காதலிச்சு கல்யாணம் பண்ணவன். என்ன தான் அவன் என்னைக் கொடுமைப்படுத்தினாலும் பதிலுக்கு என்னால திரும்ப அவன தண்டிக்க என் மனசு இடம் கொடுக்க மாட்டேங்குது ண்ணா. நான் காதலிச்சவன் வேணா தப்பா இருக்கலாம். ஆனா என் காதல் தப்பில்லயே. அது அப்படியே தானே இருக்கு." எனக் கதறினாள் ஹேமா.

காதலித்து திருமணம் செய்த அனுஷியாவிற்கும் பல்லவனுக்கும் ஹேமாவின் மனம் புரிந்தாலும் தங்கை மீதிருந்த பாசம் அவனுக்கு கிஷோரை சும்மா விட இடம் கொடுக்கவில்லை.

இருந்தும் ஹேமாவின் வார்த்தைக்காக அமைதி காத்தான் பல்லவன்.

ஹேமா இன்னுமே அழுது கொண்டிருக்க, "ஷியாம்மா... ஹேமாவ கூட்டிட்டு போய் நம்ம கெஸ்ட் ரூம்ல விடு. அப்படியே ஜெயாக்கா கிட்ட சொல்லி அவளுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்க சொல்லு. நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்." என்ற பல்லவன் வெளியேற முயல, "அண்ணா..." எனப் பதட்டமாக அழைத்தவளை திரும்பி அழுத்தமாகப் பார்த்தவன், "உனக்காக அவன சும்மா விடுறேன்." என்று விட்டு வெளியேறவும் தான் ஹேமாவுக்கு நிம்மதியாக இருந்தது.

அனுஷிய் காட்டிய அறையில் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்த ஹேமா சில மணி நேரங்கள் கழித்து வெளியே வர, ஹாலில் பல்லவனும் அனுஷியாவும் ஏதோ சிரித்துப் பேசியவாறு இருக்க, அவர்களுக்கு அருகில் பிரதாப் அனுபல்லவிக்கு ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பதைக் கண்டவளுக்கு முகத்தில் சொல்ல முடியாத உணர்வுகள் வந்து போனது.

உடனே முகத்தை சீராக வைத்துக் கொண்டு அவர்களை நோக்கிச் சென்ற ஹேமா, "அட... மருமகளே... வாங்க வாங்க அத்தை கிட்ட." என விளையாடிக் கொண்டிருந்த அனுபல்லவியை தூக்கிக் கொஞ்ச, ஹேமாவை முதல் முறை பார்ப்பதால் பயத்தில் வீரிட்டு அழுதாள் அனுபல்லவி.

"உங்கள இதுக்கு முன்னாடி பார்த்து இல்லாததால பயந்துட்டான்னு நினைக்கிறேன் அண்ணி. கொஞ்சம் நாள்ல பழகிடுவா." என அனுஷியா தயக்கமாகக் கூற, தங்கையின் கரத்தில் இருந்து மகளை வாங்கிக் கொண்ட பல்லவன், "பல்லவி குட்டிக்கு என்னாச்சு? ஏன் அழுறீங்க? அப்பாவ பாருங்க. அப்பாவ பாருங்க. ஒன்னும் இல்லடா. என் ப்ரின்சஸ் தானே. அழக் கூடாது." எனச் செல்லம் கொஞ்சி சமாதானம் செய்ய முயன்றான்.

ஒருவாறு அனுபல்லவியின் அழுகை ஓரளவு மட்டுப்பட, அவளையும் பிரதாப்பையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றான் பல்லவன்.

ஹேமா வாசலையே பார்த்துக் கொண்டிருக்க, ஒரு சிறிய கவரைக் கொண்டு வந்து ஹேமாவிடம் நீட்டிய அனுஷியா, "அ...அது வந்து அண்ணி... அவர் மருந்து கொண்டு வந்து கொடுத்தார். உங்க காயத்துக்கு பூசிக்கோங்க. சீக்கிரம் காயம் ஆறிடும்." என்க, அதனை வாங்காது சோஃபாவில் அமர்ந்து காலை டீப்பாயின் மேல் தூக்கி வைத்தவள் அனுஷியாவிற்கு கண்களால் தன் காலைக் காட்டினாள்.

அனுஷியா ஹேமாவை அதிர்ச்சியும் குழப்பமுமாக நோக்க, "நீங்களே பூசி விடுறீங்களா அண்ணி?" எனக் கேட்டாள் ஹேமா புன்னகையுடன்.

அனுஷியா தயங்க, சட்டென முகத்தை மாற்றி சோகமாவ வைத்துக் கொண்ட ஹேமா, "பிடிக்கலன்னா பரவால்ல அண்ணி. இருக்கட்டும் விடுங்க. நானே பூசிக்கிறேன்." என்கவும், "இ...இல்ல அண்ணி. நானே பூசி விடுறேன். இதுல என்ன இருக்கு?" எனக் கேட்ட அனுஷியா கீழே அமர்ந்து ஹேமாவின் காலைப் பிடித்து காயத்துக்கு மருந்து பூசி விடத் தொடங்கினாள்.

மேலே அமர்ந்திருந்த ஹேமாவோ அனுஷியாவை வெறித்தவாறு, 'என் காலுக்கு கீழ இருக்க தான் டி உனக்கு தகுதி இருக்கு. அதை விட்டுட்டு எனக்கு சமமா உட்கார நினைச்சா விட்டுடுவேனா?' என்றாள் மனதுக்குள் வன்மமாக.

அனுஷியா மருந்தைப் பூசி விட்டு எழவும் சட்டென முகத்தை மாற்றிக் கொண்ட ஹேமா அனுஷியாவின் கையைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக்கொள்ள, அனுஷியாவிற்கோ பெரும் சங்கடம்.

ஆனால் தான் ஏதாவது கூறி ஹேமாவின் மனம் நொந்தால் தன்னவனுக்கும் வருத்தமளிக்கும் என்பதால் அமைதி காத்தாள்.

"அண்ணி...‌ நீங்க நிஜமாவே என்னை மன்னிச்சிட்டீங்களா? நான் இங்க இருக்குறது உங்களுக்கு பிடிக்கலயா?" எனக் கேட்டாள் ஹேமா.

உடனே மறுப்பாகத் தலையசைத்த அனுஷியா, "ஐயோ அப்படி எல்லாம் இல்ல அண்ணி. நீங்க எவ்வளவு நாள் வேணா இங்க இருக்கலாம். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. இது உங்க அண்ணன் வீடு. உங்களுக்கு இல்லாத உரிமையா?" எனக் கேட்டாள் வெள்ளந்தியாக.

ஹேமா அனுஷியாவின் பதிலில் குரூரமாகப் புன்னகைக்க, அதே நேரம் அவசர அவசரமாக வீட்டினுள் நுழைந்த பல்லவனோ அனுஷியாவை நெருங்கி, "ஷியா... ஷியா... இங்க பாரு. பல்லவி என்ன சொல்றான்னு கேளு." என்றான் கண்கள் பளிச்சிட.

பிரதாப்பும் புன்னகையுடன் நின்றிருக்க, "என்னாச்சுங்க? எதுக்கு இவ்வளவு எக்சைட்டா இருக்கீங்க?" எனக் கேட்ட, ஹேமாவும் அதே கேள்வியுடன் சகோதரனை நோக்கினாள்.

"பல்லவி குட்டி... எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்.‌ என்ன சொன்னீங்க?" என அனுபல்லவியுடன் கண்கள் பளிச்சிடக் கேட்க, "ப்...பா... பா... ப்...பா..." என்று விட்டு அனுபல்லவி சிரிக்க, அனுஷியாவின் கண்கள் கலங்கின.

அவசரமாக மகளைக் கையில் வாங்கி முகம் முழுவதும் முத்தமிட்ட அனுஷியா, "என்னங்க... நம்ம பொண்ணு பேசுறா. அம்மா சொல்லு. அம்மா சொல்லு." என்றாள் ஆசையாக.

ஆனால் அனுபல்லவியோ, "ப்...பா... ப்பா... பா..." என்றே திரும்பத் திரும்பச் சொல்ல, "என் பொண்ணுக்கு அவ அப்பா மேல தான் பாசம் அதிகமாம். அப்புறம் தான் அம்மா எல்லாம்." என்றவன் மகளைச் செல்லம் கொஞ்சினாள்.

கணவனைப் போலியாக முறைத்துப் பார்த்த அனுஷியாவிற்கும் மகளுக்கு தன்னவன் மேல் பாசம் அதிகம் என்பது பெருமிதத்தைத் தான் தந்தது.

அடுத்து வந்த நாட்களில் அவர்களின் வாழ்க்கை என்றும் போல காதலுடன் மகிழ்ச்சியுடனும் செல்ல, ஹேமாவோ பல்லவனுக்கு முன்பு, "நீங்க இருங்க அண்ணி குழந்தையோட. நான் எல்லாம் பார்த்துக்குறேன்." என்று அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய, பல்லவன் இல்லாத சமயம் அனுஷியாவிடம் அன்பு எனும் ஆயுதத்தைக் கொண்டு நன்றாக வேலை வாங்கினாள்.

பல்லவனோ தங்கை திருந்து விட்டதில் நிம்மதியாக இருக்க, அனுஷியாவிற்கு ஹேமாவின் நடவடிக்கைகள் மனம் உறுத்த வித்தியாசமாகப்பட்டாலும் அனைத்தும் தன் பிரம்மையாக இருக்கும் என்றும் தன்னவனுக்காகவும் அவ் எண்ணத்தைத் தட்டிக் கழித்தாள்.

ஆனால் அது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணர்த்தும் காலமும் விரைவாகவே வந்து சேர்ந்தது.

பல்லவனுக்கு ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட, மனைவியையும் குழந்தையையும் பிரிந்து செல்ல மனம் இன்றிக் காணப்பட்டான்.

அனுஷியாவிற்கும் முதல் முறை கணவனைப் பிரிந்து இருக்கப் போவது வருத்தம் அளித்தாலும் அவனது பொறுப்புக்களையும் கடமைகளையும் எண்ணி தன் மனதை சமாதானப்படுத்தினாள்.

ஹேமா தான் அவள் பார்த்துக் கொள்வதாக பல்லவனுக்கு ஆறுதல் கூற, ஏதோ ஒன்று மனதை அழுத்த, மனைவிக்கும் மகளுக்கும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து விட்டு மனமேயின்றி கிளம்பத் தயாரானான்.

விமான நிலையத்தில் வைத்து மனைவியையும் மகளையும் முத்தத்தால் குளிப்பாட்டிய பல்லவன் விமானத்துக்கான அழைப்பு வரவும் தன்னவளின் இதழில் அழுத்தமாக இதழ் பதித்து விலகினான்.

அனுஷியா கண்ணீருடன் நிற்க, அனுபல்லவிக்கு என்ன புரிந்ததோ அவளும் தந்தையை போக விடாது அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.

இருவரையும் சேர்த்து சில நொடிகள் அணைத்து விடுவித்த பல்லவன் அது தான் அவர்களின் இறுதி சந்திப்பு என்பதை அறியாமல் மனைவியையும் மகளையும் கண்களில் நிரப்பிக் கொண்டு கண்ணீருடன் அவர்களுக்கு விடை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 39

ப்ராஜெக்ட் விஷயமாக வெளிநாட்டுக்குச் சென்ற பல்லவன் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியுடனும் மகளுடனும் வீடியோ காலில் பேசி விடுவான்.

முடியாத பட்சத்தில் சாதாரண அழைப்பிலாவது அவர்களின் குரலைக் கேட்காவிட்டால் அவனுக்கு அன்றைய நாளே ஓடாது.

தினமும் இருவரிடமும் பேசி விடுவான்.

அனுஷியாவிற்கும் கூட அப்படி தான்.

அனுபல்லவியோ அதற்கும் மேல். தந்தையின் குரலைக் கேட்டாலே போதும். "ப்பா... பா‌‌..." என உற்சாகமாகி விடுவாள்.

அதனைக் கேட்கும் போது பல்லவனுக்கு கை கால் ஓடாது. மகளைக் கைகளில் அள்ளிக் கொஞ்ச மனம் வெகுவாய்த் துடிக்கும்.

அடுத்து வந்த ஒரு வாரமும் அவ்வாறே கடந்தது.

இன்னும் மூன்று நாட்களில் ப்ராஜெக்டை முடித்துக் கொண்டு கிளம்ப இருப்பதால் மனைவிக்கும் மகளுக்கும் மனதிற்குப் பிடித்ததை எல்லாம் வாங்கிக் குவித்தான் பல்லவன்.

அதிசயத்திலும் அதிசயமாக இந்த ஒரு வாரமும் ஹேமா அனுஷியாவிடம் சாதாரணமாகவே நடந்து கொண்டாள்.

ஜெயா தன் மருமகளுக்கு உடம்பு முடியாதிருப்பதாகக் கூறி அவசரமாக ஊருக்குக் கிளம்ப, அனுஷியாவிற்கு ஏனோ அவரை அனுப்பவே மனம் இல்லை.

இருந்தும் அவருக்கும் குடும்பம், உறவுகள் என இருப்பதால் சம்பளத்துடன் சேர்த்து மேலும் கொஞ்சம் பணம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தாள் அனுஷியா.

அன்றும் இரவு பல்லவனுடன் பேசி விட்டு அனுபல்லவியைத் தூக்கிக் கொண்டு தன் அறைக்கு உறங்கச் சென்ற அனுஷியாவை கண்களில் வன்மத்துடன் வெறித்தாள் ஹேமா.

மறுநாள் அனுஷியா பல்லவனுக்கு அழைக்க முயற்சிக்க, பல்லவனோ அழைப்பை ஏற்கவே இல்லை.

ஏதாவது வேலையாக இருப்பான் என எண்ணிய அனுஷியா வேலை முடிந்ததும் பல்லவன் தனக்கு அழைப்பான் எனக் காத்திருக்க, பல்லவனோ அனுஷியாவைத் தொடர்பு கொள்ளவே இல்லை.

மறுநாளும் அவ்வாறே நடக்க, அனுஷியாவிற்கு மனம் ஏதோ போல இருந்தது.

சோஃபாவில் கால் நீட்டிப் படுத்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஹேமாவிடம் சென்ற அனுஷியா, "அண்ணி..." என அழைக்க, அவளை சுட்டெரிப்பது போல் நோக்கினாள் ஹேமா.

ஹேமாவின் பார்வையில் அச்சம் கொண்ட அனுஷியாவிற்கு வார்த்தைகள் வராது போக, ஹேமா அவளையே அழுத்தமாக நோக்கிக் கொண்டிருக்கவும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "அ...அது... அவர் ரெண்டு நாளா கால் பண்ணவே இல்ல. நான் கால் பண்ணாலும் ரீச் ஆகல. எ...எனக்கு பயமா இருக்கு." என்றாள் அனுஷியா.

அவளை ஏளனமாக நோக்கிய ஹேமா, "உன்ன விட பெட்டரா யாராவது கிடைச்சிருக்கும் அவனுக்கு. எத்தனை நாளைக்கு தான் சாக்கடை கூட குப்பை கொட்டுறது? அவனோட தகுதிக்கும் தராதரத்துக்கும் ஏத்தது போல வாழ வேணாமா?" என அனுஷியாவின் மனதில் நெருப்பை வாரி இறைத்தாள்.

"அண்ணி..." என அனுஷியா பதற, சட்டென எழுந்து நின்ற ஹேமா அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் அவளின் கன்னத்தில் அறையவும் அதிர்ந்து போய் நின்றாள் அனுஷியா.

"யாருக்கு யாரு டி அண்ணி? ******** நீ. நான் உனக்கு அண்ணியா?" எனக் கேட்டு மறு கன்னத்திலும் ஓங்கி அறைய, தன்னிலை இழந்து கீழே விழுந்த அனுஷியாவின் இதழ் கிழிந்து இரத்தம் கசிந்தது.

பிரதாப் ப்ளே ஸ்கூல் சென்றிருக்க, அனுபல்லவியோ ஹாலில் தனியாக விளையாட்டு சாமான்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

ஹேமா அறைந்து அனுஷியா கீழே விழுவதைக் கண்ட குழந்தைக்கு என்ன புரிந்ததோ, "ம்...மா... ம்...மா... ம்மா..." என அழைத்தவாறு தாயிடம் தவழ்ந்து வர முயன்றது.

முதல் முறை குழந்தை தன்னை 'அம்மா' என்று அழைப்பதைக் கேட்டுக் கூட மகிழ முடியாத நிலையில் இருந்தாள் அனுஷியா.

கீழே விழுந்து கிடந்தவளின் தலையை முடியைப் பற்றித் தூக்கிய ஹேமா அனுஷியா வலியில் துடிக்கவும் தன் பிடியை இறுக்கினாள்.

"என்ன நினைச்ச நீ? ஒரு ****** நீ. வசதியான ஒருத்தனுக்கு வலை விரிச்சு உன் முந்தானைக்குள்ள போட்டுக்கிட்டா எல்லாம் மாறிடுமா என்ன? வெட்கமே இல்லாம அவன் சொத்த முழுசா அனுபவிக்க பார்க்குற." எனக் கேட்டாள் ஹேமா கோபமாக.

"இப்படி எல்லாம் பேசாதீங்க அண்ணி." என்றாள் அனுஷியா கதறலாக.

"திரும்ப திரும்ப அண்ணி சொல்ற." என்ற ஹேமா மீண்டும் அனுஷியாவை அறைய, அனுஷியாவோ தன் வலியையும் மறந்து தன்னவனுக்கு என்னவோ என்று தான் பதறினாள்.

அதே நேரம் வீட்டினுள் நுழைந்த கிஷோரைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தாள் அனுஷியா.

அனுபல்லவியோ புது ஆட்களைக் கண்டு பயத்தில் வீரிட்டு அழத் தொடங்கினாள்.

"என்ன பேபி? நான் வர முன்னாடியே ஆரம்பிச்சிட்ட?" என இளக்காரமாகக் கேட்ட கிஷோர் அனுஷியாவை மேலிருந்து கீழாக பார்வையால் அலச, அனுஷியாவிற்கு அவனின் பார்வையில் உடலெல்லாம் அருவருப்பில் எரிந்தது.

கிஷோரைக் கண்டு அனுஷியா முகத்தைச் சுளிக்கவும் அவளை ஏளனமாக நோக்கிய கிஷோர், "என்ன டி பெரிய பத்தினி தெய்வம் போல சீன் போடுற? என் மச்சானுக்கு முன்னாடியே பல பேருக்கு முந்தானை விரிச்சவள் தானே நீ." என்றான்.

தன் கணவன் கூறியதைக் கேட்டு ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் ஹேமா அவ்விடமே அதிரச் சிரிக்க, கூனிக் குறுகி‌ நின்றாள் அனுஷியா.

"என்னை விடுங்க ப்ளீஸ். அ...அவர் கூட நான் பேசணும்." எனக் கெஞ்சினாள் அனுஷியா.

"பேசலாமே. அதுக்கென்ன? பட் அதுக்கு முன்னாடி நாம கொஞ்சம் பேச வேண்டி இருக்கு." என்ற கிஷோரின் பார்வை அழுது கொண்டிருந்த அனுபல்லவியிடம் செல்ல, "என் குழந்தைய எதுவும் பண்ணிடாதீங்க ப்ளீஸ். உங்க கால்ல விழுந்து கேட்குறேன்." என்ற அனுஷியா ஹேமாவின் பிடியிலிருந்து தப்பிக்க முயல, அவள அனுஷியாவை விடுவதாக இல்லை.

உதவிக்குக் கூட யாரும் இன்றி கலங்கித் தவித்தாள் அனுஷியா.

அனுபல்லவியை நோக்கிச் சென்ற கிஷோர் அழுது கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி கையில் எடுக்க, அனுபல்லவியின் அழுகை அதிகமானது.

"ஹேய் குட்டி... இங்க பாரு... மாமாவ பாரு." என்ற கிஷோரின் கரத்தில் இருந்து விடுபடப் போராடிய அனுபல்லவி அனுஷியாவின் பக்கம் இரு கரங்களையும் நீட்டி அழுதாள்.

குழந்தையின் கதறலில் தாயுள்ளம் துடிக்க, மனசாட்சியே அற்ற அம் மிருகங்களுக்கோ குதூகலமாக இருந்தது.

அனுபல்லவியுடன் சோஃபாவில் அமர்ந்த கிஷோர், "உன் புருஷன பார்க்கணுமா?" எனக் கேட்டான் அனுஷியாவிடம்.

அனுஷியா அவசரமாக ஆம் எனத் தலையசைக்க, "ஹஹா... அது என்ன அவ்வளவு ஈசியா? அப்போ நீ நாங்க சொல்றத கேட்கணும்." என்கவும், "நீங்க என்ன சொன்னாலும் செய்றேன். நான் அவர பார்க்கணும். அவருக்கு என்னாச்சு?" எனக் கேட்டாள் அனுஷியா பதட்டமாக.

"ஏன்? புருஷன பார்க்காம இருக்க முடியலயா? அவ்வளவு ******* ஆ இருக்கா?" என கிஷோர் நாக்கில் நரம்பில்லாமல் பேச, அனுஷியாவின் பார்வையோ குழந்தையிடமே இருந்தது.

"முதல்ல இந்த அழுது சீன் போடுறது எல்லாத்தையும் நிறுத்து. உனக்கு உன் புருஷன பார்க்கணும்னா நாங்க சொல்றத நீ செய்யணும்." என ஹேமா கூறவும் அமைதி அடைந்த அனுஷியா அவளைக் கேள்வியாக நோக்க, "எங்க அண்ணன விட்டு நீ மொத்தமா விலகி போய்டணும்." என குண்டைத் தூக்கிப் போட்டாள் ஹேமா.

ஹேமா கூறியதைக் கேட்கும் போதே அனுஷியாவிற்கு தன் இதயத்தை யாரோ கிழித்தெடுப்பது போல் வலித்தது.

அவளால் தன்னவனை விட்டு இருக்க முடியுமா? தன்னவனால் தான் தன்னைப் பிரிந்து இருக்க முடியுமா?

அது பற்றி யோசிக்கும் போதே அனுஷியாவின் இதயம் வேலை நிறுத்தம் செய்வது போல் இருந்தது.

அனுஷியா மறுப்பாகத் தலையசைக்கவும் இகழ்ச்சியாகப் புன்னகைத்த கிஷோர் தன் கைப்பேசியில் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து அனுஷியாவிடம் காட்ட, அதில் உடல் முழுவதும் கட்டுகளுடன் சுய நினைவின்றி மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் படுத்திருந்த பல்லவனைக் கண்டு அதிர்ந்தாள் அனுஷியா.

"என்னங்க..." என அனுஷியா கதற, கைப்பேசியை அணைத்து வைத்த கிஷோர், "நான் ஒரே ஒரு கால் போட்டா போதும். ஏற்கனவே தொங்கிட்டு இருக்குற உன் புருஷனோட உசுரு சட்டுன்னு போயிரும்." என்றான்.

"வேண்டாம். என் புருஷன எதுவும் பண்ணிடாதீங்க. உங்க கிட்ட கெஞ்சி கேட்குறேன். எங்கள விட்டுடுங்க. ப்ளீஸ்..." எனக் கெஞ்சியவளை துச்சமாகப் பார்த்தனர் இருவரும்.

"எவ்வளவு ப்ளேன் போட்டு என் தங்கச்சிய அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சி சொத்து முழுக்க எங்க பெயர்ல எழுதி வாங்கிக்கலாம்னு பார்த்தா அவன் என்னடான்னா ஒரு சாக்கடைய கல்யாணம் பண்ணிட்டு நிற்குறான். அவ்வளவு ஈஸியா விட்டுடுவோமா? இப்போ கூட ஒன்னும் பிரச்சினை இல்ல. நீயும் நீ பெத்து போட்டதும் அவன விட்டுப் போய்ட்டீங்கன்னா அதுக்கப்புறம் அவன நாங்க பார்த்துப்போம். அவன கல்யாணம் பண்ணிக்க என் தங்கச்சி இருக்கா. பாதில வந்தவ தானே நீ. கொஞ்சம் நாள்ல அவனும் உன்ன மறந்துடுவான்." என்றான் கிஷோர் வன்மமாக.

ஆனால் அனுஷியாவிற்குத் தெரியும் தன்னவன் எந்த சூழ்நிலையிலும் தன்னை மறக்கவும் மாட்டான், கைவிடவும் மாட்டான் என்று.

கிஷோர் கண்ணைக் காட்டவும் அனுஷியாவை விட்ட ஹேமா உள்ளே சென்று சில பேப்பர்ஸுடன் வர, அதனைக் குழப்பமாக நோக்கினாள் அனுஷியா.

"என்னன்னு தெரியலயா? டிவோர்ஸ் பேப்பர்." என ஹேமா கூறவும் அனுஷியாவின் உலகம் நழுவிக் காலின் கீழே விழுவது போல் உணர்ந்தாள்.

"நீ மட்டும் இதுக்கு சம்மதிக்கலன்னா..." என இழுத்த கிஷோர் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கையடக்கக் கத்தியை எடுத்துக் காட்டினான்.

அனுஷியா அதிர்ந்து நோக்க, கிஷோரோ அதனை அனுபல்லவியின் அருகே கொண்டு சென்றான்.

"ஐயோ என் குழந்தை. வேண்டாம் ப்ளீஸ். உ..உங்களுக்கு சொத்து தானே வேணும். அவர் கிட்ட நான் பேசி வாங்கி தரேன். நாங்க எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போயிடுறோம். எங்கள விட்டுடுங்க. ப்ளீஸ் அண்ணி." என ஹேமாவின் காலைப் பிடித்துக் கெஞ்சினாள்.

"நீயும் உன் புள்ளயும் இருந்தா அவன் நாங்க சொல்றத கேட்க மாட்டான். அவன எப்படி எங்க வழிக்கு கொண்டு வரணும்னு எங்களுக்குத் தெரியும். மரியாதையா கையெழுத்த போடு. இல்ல குடும்பத்தோட மேல அனுப்பி வெச்சிடுவேன்." என மிரட்டினான் கிஷோர்.

குழந்தை அனுபல்லவியோ அழுது அழுதே சோர்வுற்று இருந்தாள்.

அழக் கூட திராணியற்று தாயைப் பார்த்து தேம்ப, அவளுக்கு மிக நெருக்கமாக கிஷோர் பிடித்திருந்த கத்தியைக் கண்டு அனுஷியாவின் சர்வமும் நடுங்கியது.

டீப்பாயின் மீதி விவாகரத்துப் பத்திரங்களை வைத்த ஹேமா அனுஷியாவின் கரத்தில் பேனாவைத் திணிக்க, அதனை வாங்கியவளின் கரங்கள் நடுங்கின.

"இன்னும் என்ன யோசிக்கிற? சீக்கிரம் போடு. இல்ல உன் கண்ணு முன்னாடியே உன் குழந்தை உசுரு போயிடும்." என்ற கிஷோர் கத்தியை அனுபல்லவியின் கழுத்துக்கு அருகே கொண்டு செல்ல, "வே...வேணாம். நான் போடுறேன்." என்றாள் அனுஷியா அவசரமாக.

அதனைக் கேட்டு ஹேமா மற்றும் கிஷோரின் முகத்தில் ஒரு குரூரப் புன்னகை உதயமானது.

"இங்க கையெழுத்துப் போட்டுத் தந்துட்டு ஏதாவது ஒரு வழியில உன் புருஷன கான்டாக்ட் பண்ணி ஏதாவது தகிடுதத்தம் பண்ணணும்னு நினைச்ச... உன் புருஷன மொத்தமா மேல அனுப்பி வெச்சிடுவேன்." என்றான் கிஷோர் மிரட்டலாக.

கண்கள் கண்ணீர் மழை பொழிய, 'என்னை மன்னிச்சிடுங்க பல்லவன். எ... எனக்கு வேற வழி தெரியல. நீங்களும் நம்ம குழந்தையும் எனக்கு உயிரோட வேணும்.' என மனதால் தன்னவனிடம் மன்னிப்புக் கேட்ட அனுஷியா விவாகரத்துப் பத்திரங்களில் கையெழுத்து இட்டாள்.

வெற்றிக் களிப்பில் இருந்த கிஷோர், "ப்ச்..‌. எங்களுக்கு வேண்டியது கிடைச்சிடுச்சு. ஆனா... எங்கள இவ்வளவு அலைய விட்ட உங்கள சும்மா விட முடியுமா?" எனக் கேட்டான் விஷமமாக.

அனுஷியா அதிர, "ஆமா... யாரை முதல்ல போட்டுத் தள்ளுறது? உன்ன அனுப்பிட்டு கூடவே உன் பொண்ண அனுப்பட்டுமா? இல்ல... உன் கண்ணு முன்னாடியே நீ துடிக்கத் துடிக்க உன் பொண்ண கொன்னுட்டு அவளுக்கு துணையா உன்ன அனுப்பட்டுமா? எங்களுக்காக கையெழுத்தே போட்டுத் தந்துட்டாய். அதனால ஏதோ போனா போகட்டும்னு இந்தச் சாய்ச மட்டும் உன் கிட்டயே விடுறேன். சீக்கிரம் முடிவு பண்ணு. உனக்கு பத்து செக்கன் தான் டைம்." என்ற கிஷோர் பத்து, ஒன்பது என எண்ணத் தொடங்க, இளக்காரமாகப் புன்னகைத்தபடி அனுஷியாவை நோக்கினாள் ஹேமா.

நிச்சயம் இவர்கள் சொன்னதை செய்து விடுவார்கள் என்பதை உணர்ந்த அனுஷியாவிற்கு கணவனையும் பிரிந்து விட்டு தம் காதலுக்கு கிடைத்த பரிசான குழந்தையையும் இழப்பதற்கு மனம் இல்லை.

ஏதாவது செய்து தானும் தப்பித்து குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்று அவசர அவசரமாக சிந்தித்து ஒரு முடிவெடுத்த அனுஷியா நெஞ்சுறுதியுடன் எழுந்து நின்று கிஷோரையும் ஹேமாவையும் அழுத்தமாக ஏறிட்டாள்.

"என்ன? அதுக்குள்ள முடிவு பண்ணிட்டியா? சரி சொல்லு. இருந்தாலும் சாகப் போற நிலமைல கூட உன் திமிரு கொஞ்சம் கூட குறையல இல்ல." எனக் கேட்டான் கிஷோர்.

கிஷோர் கத்தி இருந்த கரத்தைக் கீழிறக்கி தாம் நினைத்தது நடந்து விட்ட திருப்தியில் இருக்க, அவன் எதிர்ப்பார்க்காத சமயம் சட்டென கிஷோரின் கரத்தில் இருந்த கத்தியை பறித்து ஆபத்துக்குப் பாவம் இல்லை என அவனின் வயிற்றிலேயே இறக்கினாள்.

இதனை எதிர்ப்பார்க்காது நின்றிருந்த கிஷோரோ வலியில் அனுபல்லவியைக் கீழே விட, அவசரமாக குழந்தையைப் பாய்ந்து பிடித்தாள் அனுஷியா.

இத் திடீர்த் திருப்பத்தை எதிர்ப்பார்க்காது அதிர்ச்சியில் நின்றிருந்த சில நொடிகளில் ஹேமா தன்னிலை அடைந்து அனுஷியாவை நோக்கி ஆக்ரோஷத்துடன் வர முயல, டீப்பாயின் மீதிருந்த விவாகரத்துப் பத்திரங்களைக் கையில் எடுத்த அனுஷியா டீப்பாயை ஹேமாவின் மீது தள்ளி விட்டாள்.

உறுதியான மரத்தினால் செய்யப்பட்ட அந்த டீப்பாயின் பாரத்தால் ஹேமாவிற்கு கால்களைக் கூட அசைக்க முடியாதிருந்தது.

சிறிய கையடக்கக் கத்தி என்பதால் கத்தி கிஷோரின் வயிற்றில் ஆழமாக இறங்காவிட்டாலும் இரத்தம் அதிகமாக வெளியேறத் தொடங்கியது.

அனுஷியா அங்கிருந்து தப்பிக்க முயலவும் தன் வலியைக் கூட பொருட்படுத்தாத கிஷோர் அவளைப் பிடித்து விடும் நோக்கில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அவளை நெருங்க, பதட்டமடைந்த அனுஷியா அவனின் ஆண்மையில் உதைத்து விடவும் அவ்விடத்திலேயே சுருண்டு விழுந்தான் கிஷோர்.

இது எல்லாமே சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்திருந்தது.

பலமுறை பல்லவன் அனுஷியாவிற்கு தந்திருந்த மன தைரியத்தினால் தான் அவளால் அவ்வாறு செயற்பட முடிந்தது.

அழுது கொண்டிருந்த குழந்தையைச் சமாதானப்படுத்தக் கூட நேரமின்றி அனுபல்லவியை தூக்கிக் கொண்டு கையில் விவாகரத்துப் பத்திரங்களுடன் அவசரமாக வீட்டில் இருந்து வெளியேறினாள் அனுஷியா.

இடையில் ப்ளே ஸ்கூலில் இருந்து ட்ரைவருடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிரதாப் அவளை 'அத்தை... அத்தை...' என அழைத்தது எதுவும் அவளின் கருத்தில் பதியவில்லை.

வீட்டிற்கு வந்த பிரதாப் வயிற்றில் இருந்து இரத்தம் கசிய சுருண்டு விழுந்திருந்த தந்தையையும் தன் மீதிருந்த டீப்பாயை அகற்ற முயற்சித்துக் கொண்டிருந்த தாயையும் கண்டு ஓரளவு புரிந்து கொள்ளும் வயதில் இருந்த சிறுவனோ கையில் குழந்தையுடன் ஓடிய அத்தையை நினைவு கூர்ந்து நிலைமையை வேறு விதமாகப் புரிந்து கொண்டான்.

அது தான் பிரதாப்பிற்கு அனுஷியா மீது எழுந்த முதல் தவறான அபிப்ராயம்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 40

ப்ராஜெக்ட் முடிந்து இன்னும் மூன்று நாட்களில் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லவிருந்த பல்லவன் மனைவிக்கும் மகளுக்கும் பிடித்தவற்றை எல்லாம் வாங்கிக் குவித்தான்.

ஆனால் பல்லவன் எதிர்ப்பார்த்ததற்கு மாறாக மறுநாளே ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிவடைய, காதல் மனைவியையும் ஆசை மகளையும் பார்க்கும் ஆவலில் அனுஷியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அவளிடம் கூறாமலேயே மறுநாள் இந்தியா கிளம்ப டிக்கெட் புக் செய்தான்.

மறுநாள் இந்தியா வந்திறங்கி ஒரு டாக்சி பிடித்து வீட்டிற்கு கிளம்பிய பல்லவனின் மனமெங்கும் தன்னவளின் நினைவே.

தன்னைக் கண்டதும் தன்னவளின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளைக் காணும் ஆவலில் இருந்தவன் சென்று கொண்டிருந்த டாக்சி திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு லாரி மூலம் அடித்துத் தூக்கப்பட்டது.

மறு நொடியே அவ் இடத்தில் கூட்டம் அலைமோத, போலீஸாரும் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர்.

டாக்சி ட்ரைவர் அங்கேயே இறந்து விட, பல்லவன் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டான்.

மயக்கத்திற்குச் செல்லும் போது கூட அனுஷியாவின் முகம் தான் அவன் மனக் கண்ணில் வந்து போனது.

லாரி ட்ரைவர் சரியாக ப்ரேக் பிடிக்கவில்லை எனத் தானாகவே வந்து சரண்டர் ஆகி விட, அவ் வழக்கு அத்துடன் முடிந்தது.

ஆனால் அது திட்டமிடப்பட்ட விபத்து என்பதை அவர்கள் அறியவில்லை.

கிஷோர் தான் தன் ஆட்கள் மூலம் பல்லவனை முழு நேரமும் கண்காணித்து சரியாக ஆள் வைத்து அவ் விபத்தை ஏற்படுத்தினான்.

அந்த லாரி ட்ரைவர் கூட கிஷோரின் ஆள் தான்.

தானாகவே சரண்டரானால் தண்டனை குறைவு என்பதால் தான் அந்த ஏற்பாடு.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பல்லவன் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சுய நினைவின்றிக் கிடந்தான்.

அதன் பின்னர் தான் கிஷோர் அனுஷியாவை மிரட்ட அவள் வீட்டிற்கே சென்றது.

ஆனால் அவன் எதிர்ப்பாராத விதமாக அனுஷியா தப்பித்து விட, அங்கு வந்த பிரதாப் மூலம் ட்ரைவரை வரவழைத்து இருவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அவர்களிடமிருந்து தப்பித்த அனுஷியா குழந்தையையும் தூக்கிக் கொண்டு சற்றுத் தூரம் ஓடி வந்து மூச்சு வாங்கினாள்.

அவளுக்கு உலகமே இருண்டு விட்டது போல் இருந்தது.

தன்னவனுக்கு என்ன ஆனதோ என மனம் ஒரு பக்கம் பதற, பிஞ்சுக் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு எங்கு செல்வது, அடுத்து என்ன செய்வது என்றே அவளுக்குப் புரியவில்லை.

அப்போது தான் மாலதியின் நினைவு வர, அங்கிருந்த கடை வியாபாரி ஒருவரிடம் கைப்பேசியை வாங்கி மாலதிக்கு அழைத்து தகவல் தெரிவித்தாள்.

சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த மாலதி, "அனு... என்னாச்சு?" எனக் கேட்டாள் பதட்டமாக.

அனுஷியா நடந்தவற்றைக் கூறவும் ஆத்திரம் அடைந்த மாலதி, "நீ அவங்கள சும்மாவா விட்ட? வா உடனே போலீஸ்ல கம்ப்ளைன் பண்ணலாம் கா." என்றாள்.

மறுப்பாகத் தலையசைத்த அனுஷியா, "இல்லக்கா. வேண்டாம். எனக்குப் பயமா இருக்கு. அவங்க என் பொண்ண கொன்னுடுவாங்க. எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல. ஆ..ஆனா அவருக்கோ என் பொண்ணுக்கோ எதுவும் ஆகக் கூடாது." என்றாள் கண்ணீருடன்.

"அதுக்காக அவங்கள சும்மா விட சொல்றியா? அவங்க திரும்ப உன்ன தேடி வந்தா என்ன பண்ணுறது?" எனக் கேட்டாள் மாலதி கோபமாக.

"வேண்டாம் கா. ப்ளீஸ்... புரிஞ்சிக்கோங்க. என் குழந்தை மட்டும் தான் எங்க காதலுக்கு சாட்சியா மிச்சம் இருக்கு. அவளையும் இழக்க விரும்பல நான். எ...எனக்கு அவர் வரும் வரை இருக்கு ஒரு இடம் மட்டும் ஏற்பாடு பண்ணி தாங்க. அ...அவருக்கு என்ன ஆச்சோ தெ...தெரியல. ஹா...ஹாஸ்பிடல்ல இருக்காரு. எனக்கு பயமா இருக்குக்கா. யார் கிட்ட உதவி கேட்குறதுன்னே தெரியல." எனக் கதறினாள் அனுஷியா.

"சரி சரி அழாதே அனு. ஏதாவது பண்ணலாம். உன் புருஷனுக்கு எதுவும் ஆகாது. அவர் நல்லா இருப்பாரு. நான் உயிரோட இருக்கும் வரைக்கும் உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்." என்றாள் மாலதி வேறு வழியின்றி.

அனுஷியா மாலதியின் தோளில் சாய்ந்து கதற, அவளை அணைத்து தலையை வருடி விட்ட மாலதி, "அனு... முதல்ல அழுகைய நிறுத்து. அழுதா எதுவும் நடக்க போறதில்ல. இது நீ தைரியமா இருக்க வேண்டிய நேரம். முதல்ல வா நீ என் கூட. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்து என்ன பண்ணுறதுன்னு யோசிக்கலாம்." என்றவள் இருவரையும் அழைத்துக் கொண்டு தான் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றாள்.

சத்யனைக் கைது செய்த பின் அவர்கள் அனைவரும் விடுதலையடைய, ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வேலைகளை செய்து பிழைப்பை நடத்தினர்.

மாலதியின் வீட்டுக்கு வந்த அனுஷியா வீட்டை விட்டு வெளியே எங்குமே செல்லவில்லை.

தன்னவன் இல்லாமல் தனியே குழந்தையுடன் எங்கும் செல்லவும் அவளுக்குப் பயமாக இருந்தது.

மாலதி தான் அனுஷியாவிற்கு இருந்த ஒரே ஆறுதலும் துணையும்.

தனக்குத் தெரிந்த ஆட்கள் மூலம் மாலதி தான் பல்லவனைப் பற்றி அறிய பலவாறாக முயற்சி செய்தாள்.

இருந்தும் பலன் என்னன்னவோ பூச்சியம் தான்.

ஏனெனில் கிஷோர் அவ்வளவு தெளிவாக பல்லவன் பற்றிய தகவல்கள் வெளியே வராது காத்தான்.

தன் காயத்துக்கு சிகிச்சை பெற்றுக் கொண்ட கிஷோர் தன் அடியாட்களிடம் கூறி அனுஷியாவைத் தேடச் சொல்லிக் கட்டளையிட, அவர்கள் எங்கு தேடியும் அனுஷியா பற்றிய தகவல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

அனுஷியாவின் நல்ல நேரத்திற்கு மாலதி பற்றி கிஷோர் அறியவில்லை.

கிஷோரும் ஹேமாவும் வீடு திரும்பியதும் பிரதாப் அனுஷியா பற்றிக் கேட்க, "அந்த சாக்கடைய அத்தைன்னு சொல்லாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்." என்றாள் ஹேமா கோபமாக.

தாயின் கோபத்தில் பயத்தில் நடுங்கிய பிரதாப், "அ...அவங்க தான் அப்பாவ கத்தியால குத்தினாங்களா?" எனக் கேட்கவும் அதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஹேமா உடனே முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, "ஆமாடா கண்ணா. அவ தான் உங்க அப்பாவ கத்தியால குத்தினா. என்னையும் அடிச்சிப் போட்டா. எல்லாம் சொத்துக்காக. உங்க மாமாவ கூட ஏதோ பண்ணிட்டா கண்ணா. எங்க அண்ணனுக்கு என்ன ஆச்சோ தெரியல." என நீலிக் கண்ணீர் வடித்தவளுக்கு நன்றாகவே தெரியும் பிரதாப் பல்லவன் மீது வைத்திருக்கும் பாசம் பற்றி.

அன்றிலிருந்து அனுஷியாவை வெறுத்தான் பிரதாப். ஹேமாவும் அதனை அதிகரிக்கும் விதமாகவே அவனிடம் கட்டுக் கதைகளைக் கூற, சிறுவன் பிரதாப்பும் தாயின் பேச்சை அவ்வாறே நம்பினான்.

அன்று வீட்டுக்கு வந்த கிஷோரின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

"என்னாச்சுங்க? ஏன் கோவமா இருக்கீங்க? அந்த அனுஷியா பத்தி ஏதாவது தெரிஞ்சதா?" எனக் கேட்டாள் ஹேமா.

"நாம நினைச்சது ஒன்னு. நடக்குறது ஒன்னா இருக்கு ஹேமா. இனிமே அந்த அனுஷியாவால நமக்கு ஒரு லாபமும் கிடையாது. அவ திரும்பி வராத அளவுக்கு நல்லது தான்‌." என்ற கிஷோரை ஹேமா குழப்பமாக ஏறிட, "ஹாஸ்பிடல்ல இருந்து கால் வந்தது. உங்க அண்ணன் கோமாவுக்கு போய்ட்டானாம். திரும்ப எப்போ கான்ஷியஸ் வரும்னே தெரியலயாம். வருமான்னே சந்தேகமாம்." என்றான் கிஷோர் கோபமாக.

அதனைக் கேட்டு ஹேமா அதிர, "அவன் கண்ணு முழிச்சதும் அவன் பொண்டாட்டி, புள்ளய வெச்சி அவன மிரட்டி சொத்த எழுதி வாங்கலாம்னு பார்த்தா நம்ம ப்ளேன் இப்படி சொதப்பிடுச்சே." எனக் கிஷோர் கோபமாகக் கூறவும் ஏதோ சிந்தித்த ஹேமாவுக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது.

"இந்த சொத்த பூரா அனுபவிக்க என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு." என வன்மத்துடன் கூறிய ஹேமா தனது திட்டத்தைக் கூற, அதனைக் கேட்டு கிஷோரின் முகத்திலும் குரூரச் சிரிப்பு.

அதன்படி மறுநாளே அனைத்து பத்திரிகைகள், சமூகவலைத்தளங்கள், செய்திகள் என்பவற்றில் வந்த செய்தியைப் பார்த்து மாலதியின் வீட்டில் தன்னவன் நிச்சயம் வருவான் என நம்பிக் காத்திருந்த அனுஷியாவிற்கு மிகப் பெரிய அதிர்ச்சி.

அங்கேயே சுயநினைவின்றி விழுந்தவளைத் தாங்கிப் பிடித்த மாலதியின் கண்களிலும் கண்ணீர் குளம் கட்டியது.

குழந்தை அனுபல்லவியும் காரணமே இன்றி வீரிட்டு அழ, மாலதிக்கு அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை.

அனுஷியாவிற்கு அவ்வளவு அதிர்ச்சி அளித்த செய்தி யாதெனில், 'பிரபல தொழிலதிபர் மற்றும் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் ஸ்தாபகர் சாலை விபத்தில் மரணம்.' என்பதே.

ஹேமாவின் திட்டப்படி ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பல்லவனுக்குப் பதிலாக ஒரு இறந்த அனாதைப் பிணமொன்றுக்கு பல்லவனின் உடைமைகளை அணிவித்து பல்லவன் இறந்து விட்டதாக வெளியுலகுக்கு தெரியப்படுத்தினர்.

இனிமேலும் பல்லவனை மருத்துவமனையில் வைத்திருந்தால் ஆபத்து என யாருக்கும் தெரியாத வண்ணம் ஒரு வீட்டில் பல்லவனை அடைத்து வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

விபத்தில் பல்லவனின் முகம் சிதைந்திருப்பதாக மருத்துவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் மூலம் போலீஸாரை நம்ப வைத்தனர்.

அதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.

சில நிமிடங்கள் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த அனுஷியா தன்னவனை எண்ணிக் கதறி அழுதாள்.

"அக்கா... அவர் என்னைத் தனியா விட்டுட்டுப் போய்ட்டார் கா. இனி எனக்கு யாருக்காக இருக்கா? என்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்னு சொன்னாரே. இப்போ என்னை திரும்ப அநாதை ஆக்கிட்டாரேக்கா." எனக் கதறினாள் அனுஷியா.

மாலதி அவளை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் அனுஷியாவை சமாதானப்படுத்த முடியவில்லை.

தாயின் அழுகையைக் கண்டு அனுபல்லவியும் ஒரு பக்கம் அழ, மாலதிக்கு செய்வதறியாத நிலை.

அனுஷியா பசி, தூக்கம் மறந்து தன்னவனின் நினைவில் கண்ணீர் வடிக்க, மாலதி தான் அனுபல்லவியைக் கவனித்துக் கொண்டாள்.

"அனு... உனக்காக இல்லன்னாலும் குழந்தைக்காகவாவது நீ நல்லா இருக்கணும். குழந்தைய பாரு. சரியா சாப்பிடுறது கூட இல்ல. அந்தக் குழந்தைக்கு இப்போ மிச்சம் இருக்குறது அம்மா மட்டும் தான். உன்ன போலவே குழந்தையையும் அநாதையா விட்டுட்டுப் போகப் போறியா?" என மாலதி சற்றுக் கடுமையாகக் கேட்கவும் அது ஓரளவு வேலை செய்தது.

குழந்தைக்காக தன்னை சமன் செய்து கொண்ட அனுஷியா அனுபல்லவியை வாரி அணைத்து முத்தமிட, பல நாள் கழித்து தாயின் அரவணைப்பில் குழந்தை அனுஷியாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதது.

அனுபல்லவியைக் காணும் போதெல்லாம் அவளிடமிருந்த கணவனின் சாயலில் மனம் உடைந்து போனாள் அனுஷியா.

சுமங்கலிக் கோலத்தில் அனுஷியாவைத் காணும் போது மாலதியின் உள்ளமோ நிதர்சனத்தை எண்ணி கண்ணீர் விட்டது.

வேறு வழியின்றி அனுஷியாவிடம் தாலியைக் கழட்டக் கூற, அனுஷியாவின் மனம் ஏனோ அதற்கு இடமளிக்கவில்லை.

தாலியைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்ட அனுஷியா, "அக்கா... அதை மட்டும் பண்ண சொல்லாதீங்க. இ..இந்தத் தாலி என் கிட்ட இருக்கும் போது அவர் என் கூடவே இருக்குறதா நான் உணருறேன் கா. அ...அவர் எங்கேயும் போகல. என் கூட தான் இருக்கார்." என்றாள் கண்கள் கலங்க.

அதற்கு மேல் மாலதிக்கும் அவளை வற்புறுத்த மனம் வரவில்லை.

"அக்கா... இ..இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியல க்கா. இந்த ஊருல இருக்குற ஒவ்வொரு நொடியும் அவர் கூட வாழ்ந்த நினைவு மட்டும் தான் கா வருது. எதைப் பார்த்தாலும் அவரோட நினைவு தான். இப்படியே இருந்தா என் குழந்தைய என்னால சரியா பார்த்துக்க முடியாதுக்கா. அவர் என் கூட இல்லன்னாலும் எங்க காதலும் எங்க காதலோட சாட்சியான இந்தக் குழந்தையும் என்னோட இருக்கு. நான் அவர் பொண்ண அவர் ஆசைப்பட்டது போல வளர்த்துக் காட்டணும் கா." என்றாள் அனுஷியா.

அதன்படியே யாருக்கும் சந்தேகம் வராதவாறு மாலதி மற்றும் அனுபல்லவியுடன் அனுஷியா தன்னவனின் நினைவுகளை சுமந்துகொண்டு மும்பை கிளம்பினாள்.

பல்லவனுக்குப் பதிலாக அவ் அநாதைப் பிணத்துக்கே இறுதிக் கிரியைகள் நடைபெற, அதன் போது ஹேமா கதறிய கதறலில் இறுதிக் கிரியைக்கு வந்திருந்த அனைவரும் அவளுக்கு தன் சகோதரன் மீதிருந்த பாசத்தில் கண் கலங்கினர்.

பிரதாப்பும் தன் ஆசை மாமன் இறக்கக் காரணம் அனுஷியா தான் என்ற தவறான புரிதலில் அனுஷியா மீது வெறுப்பை வளர்த்தான்.

ஆனால் இறுதிக் கிரியைகள் முடிந்த நிலையில் மறுநாள் ஹேமாவும் கிஷோரும் எதிர்ப்பாராத வண்ணம் அங்கு சமூகம் தந்தார் பல்லவனின் வக்கீல் அசோகன்.

"வாங்க சார். உட்காருங்க. என்ன விஷயமா வந்திருக்கீங்க? நீங்க ஊர்ல இல்லன்னு உங்க அசிஸ்டன்ட் சொன்னார். எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீங்க. அண்ணன் இப்படி பாதில எங்கள விட்டுப் போயிடுவார்னு நான் கனவுல கூட நினைக்கல." என்றாள் ஹேமா கண்ணீருடன்.

"வெரி சாரி. உங்க இழப்பு ரொம்ப பெரிசு தான். நானுமே இதை எதிர்ப்பார்க்கல. இன்னைக்கு காலைல தான் வந்தேன்." என்றார் அசோகன்.

"ஹ்ம்ம்... என்ன பண்ணுறது சார். புருஷன் இறந்த சோகத்துல எங்க மச்சானோட பொண்டாட்டியும் பொண்ணும் யாருக்கும் சொல்லாம எங்கேயோ போய்ட்டாங்க. நாங்களும் அவங்கள தேட எவ்வளவோ முயற்சி பண்ணோம். ஒரு பிரயோஜனமும் இல்ல. பாதில வந்தவங்க பாதில போய்ட்டாங்க. இப்போ அவரோட பிஸ்னஸ எல்லாம் நாங்க தான் பார்த்துக்கணும். இத்தனை நாள் மச்சானோட சப்போர்ட்ல எல்லாம் நடந்துச்சு. இப்போ அவர் இல்லாம என்ன பண்ண போறேனோ?" எனப் பெருமூச்சு விட்ட கிஷோர் வராத கண்ணீரைத் துடைத்தபடி இனி தான் மட்டும் தான் அனைத்துக்கும் பொறுப்பு என சொல்லாமல் சொன்னான்.

"என்ன? பல்லவனோட வைஃபையும் பொண்ணையும் காணோமா? பல்லவனோட வைஃப் கூட பேசுறதுக்காக தான் நான் வந்ததே." என்றார் அசோகன் அதிர்ச்சியாக.

"அவ கூட என்ன பேச வேண்டி இருக்கு?" எனக் கேட்டாள் ஹேமா தன்னை மறந்து கோபமாக.

அசோகன் அவளை சந்தேகமாக நோக்க, கிஷோர் பார்வையாலேயே மனைவியை அடக்கினான்.

"என்னாச்சு சார்? என்ன விஷயமா பேச வந்திருக்கீங்க?" எனக் கேட்டான் குழப்பமாக.

தன் கைப்பையில் இருந்து ஒரு ஃபைலை எடுத்து மேசை மீது வைத்த அசோகனை கணவனும் மனைவியும் குழப்பமாக நோக்க, "பல்லவன் சில மாசஙகளுக்கு முன்னாடியே உயில் எழுதி வெச்சிட்டார். நான் காரணம் கேட்டேன் எதுக்காக இவ்வளவு அவசரமா எழுதுறீங்கன்னு? அவர் சிரிச்சிட்டே எப்படியும் ஒரு நாளைக்கு தேவைப்படத் தானே போகுதுன்னு சொன்னார். ஆனா அதுக்கு இவ்வளவு சீக்கிரமா தேவை வரும்னு நான் நினைக்கல." என்றவரின் கண்கள் கலங்கின.

அவர் கூறியதைக் கேட்டு ஹேமா மற்றும் கிஷோர் இருவரும் ஏகத்துக்கும் அதிர்ந்தனர்.

அசோகன் தந்த உயிலை எடுத்துப் படித்த கிஷோரின் முகம் கோபத்தில் சிவந்தது.

ஹேமா கணவனைக் குழப்பமாக நோக்க, "பல்லவனோட சொத்து முழுவதையும் அவரோட பொண்ணு அனுபல்லவி பெயர்ல எழுதி இருக்கார் பல்லவன். அவர் பொண்ணோட பதினெட்டு வயசு பூர்த்தியாகும் வரை அந்த சொத்து எல்லாத்துக்கும் பொறுப்பு அவரோட மனைவி அனுஷியா. ஆனா அவங்களால கூட அந்த சொத்த அனுபவிக்க முடியுமே தவிர விற்கவோ, கை மாற்றவோ முடியாது. அப்படி விற்குறதாவோ, கை மாற்றுவதாவோ இருந்தா அது அவங்க பொண்ணுக்கு இருபது வயசு பூர்த்தியாகினதுக்கு அப்புறம் முழு விருப்பத்தோட அவங்க கையெழுத்தும் அவங்க கணவனோட கையெழுத்தும் இருந்தா மட்டுமே முடியும். இப்போ பல்லவனோட மனைவியும் மகளும் இங்க இல்லாத பட்சத்துல பல்லவனோட வக்கீலா, அவரோட சாட்சிதாரரா தற்காலிகமான பொறுப்புதாரிகளா மட்டும் என்னால நியமிக்கலாம். அப்படி இருந்தாலும் முன்னாடி சொன்னது போல அந்த சொத்துக்கள உங்களால அனுபவிக்க முடியுமே தவிர விற்கவோ, கை மாற்றவோ முடியாது. அதுக்கு மேல என்னால எதுவும் பண்ண முடியாது. சீக்கிரமா பல்லவனோட மனைவியையும் குழந்தையையும் கண்டு பிடிக்க பாருங்க. நான் வரேன்." என்ற அசோகன் அங்கிருந்து கிளம்பினார்.

ஹேமா அவர் கூறிய தகவலில் அதிர்ந்து நின்றிருக்க, கிஷோரோ தன் கையில் இருந்த உயிலின் பிரதியை தூக்கி சுவற்றில் எறிந்தான் ஆக்ரோஷமாக.

"பல்லவன்..." எனக் கிஷோர் ஆத்திர மிகுதியில் கத்த, தன்னிலை அடைந்த ஹேமா, "இப்போ என்னங்க பண்ணுறது?" எனக் கேட்டாள்.

மறு நொடியே பாய்ந்து சென்று அவளின் கழுத்தைப் பற்றிய கிஷோர், "என்ன பண்ணுறதா? என்ன பண்ணுறதுன்னா கேட்குற? போய் சாவு டி. உன் அண்ணன் பண்ணி வெச்சிருக்குற காரியத்துக்கு எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டு நிற்குறதுக்கு பதிலா சாகலாம்." என்றான் கோபம் கொப்பளிக்க.

மூச்சுக்குத் தடுமாறி அவனைத் தள்ளி விட்ட ஹேமாவோ தன் கழுத்தைப் பற்றியபடி இறுமினாள்.

கிஷோர் இன்னுமே கோபம் குறையாது நின்றிருக்க, "அறிவிருக்காயா உனக்கு? என்னைக் கொன்னுட்டா எல்லாம் சரி ஆகும். உனக்காக தான் என் அண்ணனையே எதிர்த்தேன் நான். என் மேலயே கை வைக்கிறியா நீ?" எனக் கேட்டாள் பதிலுக்கு கோபமாக.

நீண்ட மூச்சுகளை விட்டு தன்னை சமன் செய்து கொண்ட கிஷோர், "வேற என்ன தான் டி பண்ணுறது? சொத்து முழுக்க நம்ம கைல இருந்தும் அதை வெச்சி ஒன்னுமே பண்ண முடியாதபடி பண்ணிட்டான் அந்தப் பல்லவன்." என்றான் கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு.

"பொறுமையா இருங்க கிஷோர். இப்போதைக்கு சொத்து நம்ம கைல தான். அதுவரைக்கும் நமக்கு லாபம் தான். நம்மள கேள்வி கேட்க தான் யாரும் இல்லையே. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அந்த அனுஷியாவையும் அவ பொண்ணையும் கண்டு பிடிக்கணும்." என்றாள் ஹேமா வன்மமாக.

"ஹ்ம்ம்... நீ சொல்றதும் சரி தான் ஹேமா. ஆத்திரம் கண்ணை மறைச்சிடுச்சு. அதான் வக்கீல் தெளிவா சொல்லிட்டாரே எது பண்ணுறதா இருந்தாலும் பல்லவனோட பொண்ணுக்கு இருபது வயசு பூர்த்தியானதுக்கு அப்புறம் தான் பண்ண முடியும்னு. நம்ம கிட்ட நிறையவே டைம் இருக்கு. இந்தத் தடவை ப்ளேன் சொதப்பவே கூடாது. அவசரப்பட்டு இப்போவே ஏதாவது பண்ணப் போனால் அந்த அனுஷியா சுதாகரிச்சு ஈசியா தப்பிச்சிடுவா. கொஞ்சம் காலம் போகட்டும். அவ எல்லாம் மறந்து சாதாரணமா வெளிய சுத்த ஆரம்பிக்கட்டும். நம்ம பையனும் வளரட்டும். அப்புறம் நம்ம பிரதாப்புக்கு பல்லவனோட பொண்ண கல்யாணம் பண்ணி வெச்சி சொத்து பூரா நம்ம பெயர்ல மாத்திக்கலாம். அதுவரைக்கும் இந்த மொத்த சொத்துக்கும் நாம தான் ராஜா, ராணி எல்லாமே..." எனக் கற்பனைக் கோட்டைகளைக் கட்டியவாறு கூறிய கிஷோர் அவ் இடமே அதிரச் சிரிக்க, அவனுக்குத் துணையாகச் சிரித்தாள் அவன் மனைவி ஹேமா.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 41

நாட்கள் மாதங்களாகி வருடங்களாக உருண்டோட, அதன் போக்கில் வேகமாக வளர்ந்தாள் அனுபல்லவி.

அனுஷியா தன் சான்றிதழ்களைக் கையோடு கொண்டு வராததால் அவளுக்கு படித்த படிப்புக்கு ஏற்ப வேலையைத் தேடிக் கொள்ள முடியாதிருந்தும் வலைத்தளம் மூலம் ஒரு சில சான்றிதழ்களை பணம் கட்டி பெற்றுக் கொண்டு ஒரு கம்பியூட்டர் சென்டரில் வேலைக்கு சேர்ந்தாள்.

ஓரளவு போதுமான அளவு சம்பளம் கிடைத்தாலும் தன் ஓய்வு நேரங்களில் கிடைக்கும் வேலைகள் அனைத்தையும் பார்த்து அனுபல்லவியை வளர்த்தாள்.

அரச பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அனுபல்லவி படிப்பில் எப்போதும் கெட்டிக்காரி என்பதால் வகுப்பில் முன்னிலையிலேயே இருந்தாள்.

அதனாலேயே அனுபல்லவியால் அனுஷியாவிற்கு அவ்வளவு செலவுகள் ஏற்படவில்லை.

ஆனால் அவளின் வயதுடைய மற்ற பெண் பிள்ளைகளைப் போல் தன் மகளால் விரும்பியவாறு உடுத்தி, உண்டு மகிழ முடியாதது அனுஷியாவின் மனதில் பெரும் குறையாக இருந்தது.

அனுபல்லவியோ தன் தாயைப் போல் கிடைத்ததை வைத்து மகிழக் கூடியவள்.

இதுவரை ஒரு நாள் கூட தாயிடம் குறை என்று சென்று நின்றதில்லை.

தாயினால் முடிந்தால் தனக்காக செய்வாள் தானே என்ற எண்ணத்தில் சாதாரணமாக எழும் சின்னச் சின்ன ஆசைகளைக் கூட தனக்குள் போட்டு புதைத்துக் கொள்வாள் அனுபல்லவி.

அனுஷியாவிற்கு தான் தன்னவன் இருந்திருந்தால் தம் மகளை இளவரசி போல் வளர்த்திருப்பாளே என்ற எண்ணம் அடிக்கடி எழுந்து மனதை வாட்டும்.

தாயின் முகத்தை வைத்தே அனுஷியாவைப் புரிந்துகொள்ளும் அனுபல்லவியோ உடனே தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு மௌனமாய் ஆறுதல் அளிப்பாள்.

மும்பைக்கு வந்த புதிதில் இரண்டு வயதான அனுபல்லவி ஆரம்பத்தில், 'ப்பா... ப்பா...' எனத் தந்தையைக் கேட்பாள்.

வாசலில் ஏதாவது சத்தம் கேட்டால் போதும் 'ப்பா...' என்ற வண்ணம் தவழ்ந்து கொண்டே வாசலுக்குச் செல்வாள்.

அந் நேரமெல்லாம் தன் குழந்தையை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு மௌனமாய் கண்ணீர் வடிப்பாள் அனுஷியா.

அவளின் மனமோ தன்னவன் உயிரோடு இல்லை என்பதை ஏற்கவே இல்லை.

எங்கோ நலமாக இருக்கிறான் எண்ணம் தான் அனுஷியாவிற்கு.

பின் ஓரளவு நினைவு தெரிந்த பின் தந்தையைத் தேடாவிட்டாலும் பள்ளி செல்ல ஆரம்பித்த பின் அங்கு மற்ற பிள்ளைகள் தம் தந்தையுடன் வருவதையும் போவதையும் பார்க்கும் போது அனுபல்லவியின் மனம் தந்தையின் அருகாமைக்கு ஏங்கும்.

முதல் முறை அனுஷியாவிடம் வந்து ஏன் தனக்கு மட்டும் தந்தை இல்லை என்று அனுபல்லவி கேட்ட போது அதற்குப் பதலளிக்காது அவளை அணைத்துக் கொண்டு அனுஷியா கதறிய கதறலில் அதன் பின் அனுஷியாவிடம் அவள் தந்தையைப் பற்றிக் கேட்டதே இல்லை.

அவ்வளவு சிறு வயதில் கூட தாயின் முகம் கவலையில் சுருங்குவதை விரும்பவில்லை அனுபல்லவி.

அனுபல்லவி ஓரளவு வளர்ந்த பின் அவளின் முகத்தில் தெரியும் ஏக்கத்தை வைத்தே தன் மகள் தந்தையின் அருகாமைக்கு ஏங்குகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட அனுஷியா அனுபல்லவியிடம் பல்லவனைப் பற்றிக் கூறினாள்.

அவன் தன்னைக் கரம் பிடித்த கதையை மகளிடம் கூறும் போது அனுஷியாவின் முகத்தில் அவ்வளவு பெருமிதம்.

ஒரு விபத்தில் பல்லவன் இறந்து விட்டான் என்று கூறிய அனுஷியா முழுக் கதையையும் கூறாது பல்லவனின் குடும்பத்துக்கு தம்மைப் பிடிக்கவில்லை என்றும் அதனால் தனியாக வந்து விட்டோம் என்று மட்டும் கூறினாள்.

தான் தாலியைக் காட்டாது வைத்திருப்பதன் காரணத்தைக் கூறியவளை அணைத்துக் கொண்ட அனுபல்லவி, "அப்பா எங்க கூட தான் மா இருக்கார். இதோ இங்க." என தன் நெஞ்சையும் அனுஷியாவின் நெஞ்சையும் தொட்டுக் காட்ட, அனுஷியாவின் கண்கள் கலங்கின.

வருடங்கள் செல்லச் செல்ல வயது கூடினாலும் அனுஷியாவின் அழகோ குறையவே இல்லை.

அனுபல்லவியுடன் சென்றால் அவளின் சகோதரி என்றே அனுஷியாவை எண்ணுவர்.

அதனாலேயே சில காமுகர்ளின் பார்வை அனுஷியா மீது விழும்.

முடிந்தமட்டும் அவர்களிடம் இருந்து தப்பிப்பவளுக்கு அவளின் கழுத்தில் இருந்த பல்லவன் கட்டிய தாலியும் மாலதியும் மட்டுமே பாதுகாப்பு.

இடைப்பட்ட காலத்தில் மாலதி அடிக்கடி சுகவீனமுற, ஆரம்பத்தில் வயது காரணமாக என சாதாரணமாக எண்ணிய அனுஷியாவிற்கு அதன் பின் மாலதியின் நடவடிக்கைகளில் சந்தேகம் வரப் பெற்று அவளிடம் விசாரித்தாள்.

இதற்கு மேலும் மறைக்க முடியாது தனக்கு இரத்தப் புற்றுநோய் இருக்கிறது என்பதையும் இப்போது இறுதிப்படியில் இருக்கிறதாகவும் மாலதி கூறவும் மனம் உடைந்து நின்றாள் அனுஷியா.

அதன் பின் வந்த நாட்களில் மாலதிக்கு புற்றுநோய் முற்றிப் போய் கட்டிலோடு ஆனாள்.

அனுஷியா தான் அவளது அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட உதவி புரிந்தாள்.

அனுபல்லவி ப்ளஸ் டூ படிக்கும் போது ஒருநாள் மாலதியின் உயிர் இம் மண்ணை விட்டு நீங்கி விண்ணுலகம் பயணித்தது.

அன்று அனுஷியா கதறிய கதறல் முழு ஊருக்குமே கேட்டிருக்கும்.

அனுபல்லவியும் தாயை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்க, இருந்த ஒரே சொந்தமும் பாதுகாப்பும் போய் நிராதரவாக நின்றாள் அனுஷியா.

மாலதியின் மரணத்தில் களிப்படைந்த பல காமுகர்களோ வெளிப்படையாகவே அனுஷியா மீதும் அனுபல்லவியின் தம் பார்வையைப் படர விட, அனுஷியாவுக்கு தனி ஒருத்தியாக நின்று வயதுப் பெண்ணை வளர்ப்பது பெரும் சவாலாக இருந்தது.

ப்ளஸ் டூ இல் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற அனுபல்லவி அருகில் இருந்த ஒரு கல்லூரியிலேயே வணிகப் பிரிவில் சேர்ந்தாள்.

அவர்களின் வாழ்க்கை எந்தவொரு முன்னேற்றமும் இன்றி எப்போதும் போல் கடந்தது.

இவ்வாறே வருடங்கள் ஓட அனுபல்லவி கல்லூரி கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரம் ஒருநாள் அனுபல்லவியும் அனுஷியாவும் சேர்ந்து பல நாட்கள் கழித்து வெளியே சென்றிருந்தனர்.

இருவரும் சேர்ந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய நேரம் இரு சோடி விழிகள் அவர்களை வன்மத்துடன் வெறித்தன.

மறுநாள் இருவருக்கும் விடுமுறையாக இருக்க, மாலையில் வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்கவும் அனுஷியா தான் சென்று கதவைத் திறந்தாள்.

அவர்களின் வீட்டு வாசலில் நின்றிருந்த ஆறடி ஆண்மகனை அனுஷியா குழப்பமாக நோக்க, "அத்தை..." என்றான் எதிரில் இருந்தவன்.

அனுஷியாவிற்கு அவ் ஆடவனின் முகம் லேசாகப் பழக்கப்பட்டது போல் தோன்ற, திடீரென அவன் 'அத்தை' என்கவும், "பிரதாப் கண்ணா..." என்றாள் அனுஷியா ஆனந்த அதிர்ச்சியுடன்.

முன்தினம் அவர்களை வெறித்த ஒரு சோடி விழிகளுக்குச் சொந்தக்காரன் பிரதாப் தான்.

படிப்பை முடித்து விட்டு தந்தையின் தொழிலை எடுத்து நடத்திக் கொண்டிருந்தவன் வேலை விஷயமாக மும்பை வந்திருக்க, அவனின் பார்வை வட்டத்துக்குள் விழுந்தாள் அனுஷியா.

பல வருடங்கள் கழித்து அனுஷியாவைக் கண்டவனுக்கு இத்தனை வருடங்களாக அவனின் தாய் போதித்தவை தான் நினைவுக்கு வந்தன.

கூடவே பல்லவனின் மரணமும்.

பிரதாப்பைக் கண்டு முதலில் ஆனந்த அதிர்ச்சி அடைந்த அனுஷியா மறு நொடியே பதட்டமாக பிரதாப்பைத் தாண்டி சுற்றும் முற்றும் தேடியவள், "நீ...நீ... தனியாவா வந்த?" எனக் கேட்டாள் அவசரமாக.

பிரதாப் ஆம் எனத் தலையசைக்கவும் அவசரமாக அவனின் கைப் பிடித்து வீட்டினுள் அழைத்துச் சென்று கதவை சாத்திய அனுஷியா, "பிரதாப் கண்ணா... அ...அது... நாங்க இங்க இருக்குறது உன் அப்பா, அம்மாவுக்கு தெரியுமா?" எனக் கேட்டாள் பதட்டமாகக்.

பிரதாப் இல்லை என்று இட வலமாகத் தலையசைக்கவும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அனுஷியா, "தயவு செஞ்சு அவங்க கிட்ட சொல்லிடாதே கண்ணா." என்றாள் கெஞ்சலாக.

பிரதாப் சரி எனத் தலையசைக்கவும் அவனின் தலையைப் பரிவுடன் வருடிய அனுஷியா, "எவ்வளவு வளர்ந்துட்ட. அடையாளமே தெரியல." என்றாள் கண்கள் கலங்க.

பிரதாப் அனுஷியாவின் முகத்தையே நோக்க, "அட நான் ஒருத்தி. முதல் தடவை வீட்டுக்கு வந்த பிள்ளைக்கு ஒன்னும் சாப்பிட கொடுக்காம பேசிட்டு இருக்கேன்." என்ற அனுஷியா உள்ளே பார்த்து, "பல்லவி..." எனக் குரல் கொடுத்த மறு நிமிடமே, "இதோ வந்துட்டேன் மா." என்றவாறு வந்து நின்றாள் அனுபல்லவி.

அனுபல்லவி வரவும், "யாருன்னு தெரியுதா கண்ணா? நம்ம பல்லவி தான். காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறா. பல்லவி. இது தான் உங்க அத்தை பையன் பிரதாப். சின்ன வயசுல நீங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் விளையாடுவீங்க." என இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தாள்.

அனுபல்லவி பிரதாப்பைப் பார்த்து தயக்கமாகப் புன்னகைக்க, பிரதாப்போ அனுபல்லவியை கண்கள் சுருக்கி அழுத்தமாக நோக்கினாள்.

ஏனோ பிரதாப்பின் பார்வை அனுபல்லவிக்கு உள்ளுக்குள் அச்சத்தைப் பரப்ப, அதனை வெளியே காட்டாது மறைத்தாள்.

"பல்லவி... பிரதாப் கூட பேசிட்டு இரு. நான் இப்போ வந்திடுறேன்." என அனுஷியா உள்ளே செல்ல, அனுபல்லவி செய்வதறியாது கைகளைப் பிசைந்து கொண்டு அங்கேயே நின்றாள்.

அனுபல்லவியைக் காணவும் போது பிரதாப்பிற்கு தாயின் வார்த்தைகள் தான் காதில் ஒலித்தன.

'பிரதாப்... அந்த அனுஷியா உங்க மாமாவ ஏமாத்தி சொத்தெல்லாம் அவ பெயருக்கும் அவ பொண்ணு பெயருக்கும் மாத்திக்கிட்டா. அதெல்லாம் எங்களுக்கு சேர வேண்டியது. உங்க அப்பா இந்த கம்பனிக்காக எவ்வளவு உழைச்சார், உழைக்கிறார்னு உனக்கு நல்லாவே தெரியும். ஆனா அவருக்கு இந்தக் கம்பனில சொந்தமா ஒரு இடமும் இல்ல. அந்த அனுஷியாவும் அவ பொண்ணும் எப்போ வந்தாலும் உங்க அப்பாவ அந்தக் கம்பனில இருந்து துரத்திடுவா. உனக்கே தெரியும் உங்க அப்பாவுக்கு அந்தக் கம்பனி தான் எல்லாமே. அது போக எங்க எல்லாரையும் கூட அவ நடுத்தெருவுக்கு கொண்டு வந்துடுவா. அப்படி மட்டும் நடக்கவே கூடாது. அதுக்கு நீ அந்த அனுபல்லவிய கல்யாணம் பண்ணிக்கணும். அப்போ தான் சொத்து பூரா நமக்கு வரும்.' என்பதை அடிக்கடி கூறி பிரதாப்பின் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்திருந்தாள் ஹேமா.

அங்கு மௌனமே ஆட்சி புரிய, கையில் காஃபியுடன் வந்த அனுஷியா அதனைப் பிரதாப்பிடம் நீட்டினாள்.

அமைதியாக அதனை வாங்கிப் பருகிய பிரதாப்பிடம், "கண்டிப்பா சாப்பிட்டு தான் போகணும் கண்ணா." என அனுஷியா அன்புக் கட்டளை இட, பிரதாப்பிற்கோ அவை எல்லாமே வெறும் நடிப்பாகத் தான் தோன்றியது.

முயன்று வரவழைத்த புன்னகையுடன், "இல்லை அத்தை. ஒரு வேலை விஷயமா வந்தேன். கண்டிப்பா இன்னொரு நாளைக்கு வரேன். இனிமே அடிக்கடி சந்திக்கலாம்." என்ற பிரதாப்பின் பார்வை அனுபல்லவியிடம் வன்மத்துடன் பதிந்து மீண்டது.

முதலில் இருவரையும் தம் இடத்திற்கு வரவழைக்க ஒரு திட்டத்தைப் போட்ட பின் தான் தன் பெற்றோரிடம் இவர்களைப் பற்றிக் கூற வேண்டும் என முடிவெடுத்த பிரதாப் அதற்கான வேலைகளில் ஈடுபட்டான்.

பிரதாப் வந்து சென்ற பின் அனுஷியாவின் முகத்தில் பல நாட்கள் கழித்து ஒரு பிரகாசம் தெரிய, "அவர உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா அம்மா?" எனக் கேட்டாள் அனுபல்லவி.

"ம்ம்ம்... அந்தக் குடும்பத்துல உங்க அப்பாவுக்கு அப்புறம் என் மேல உண்மையான பாசத்த வெச்சிருந்த ஒரே ஜீவன். அவங்க அம்மா எவ்வளவு திட்டினாலும் அடிச்சாலும் என்னைப் பார்த்ததும் அத்தைன்னு ஓடி வந்து என் காலை கட்டிக்குவான்." என்ற அனுஷியாவிற்கு அந்த நாட்களின் நினைவில் முகம் மலர்ந்தது.

"அப்போ ஏன் மா எல்லாத்தையும் போட்டுட்டு மொழி தெரியாத ஒரு ஊருக்கு வந்தீங்க?" என அனுபல்லவி கேட்கவும் அனுஷியா ஊரை விட்டு ஓடி வரக் காரணமாக இருந்த நிகழ்வு நினைவுக்கு வந்து உடலெல்லாம் வியர்வை பூத்தது.

"அம்மா... அம்மா... என்னாச்சு ம்மா? சொல்ல பிடிக்கலன்னா விடுங்க." என்றாள் அனுபல்லவி பதட்டமாக.

அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்து தன்னை சமன் செய்து கொண்ட அனுஷியா, "பல்லவி. இப்போ உனக்கு எல்லாமே புரிஞ்சிக்குற பக்குவம் வந்திடுச்சு. இதுக்கு மேல நான் உன் கிட்ட மறைச்சி பிரயோஜனம் இல்ல. நான் இல்லன்னாலும் இந்த விஷயம் உன் மனசுல இருக்கணும்." என்றவள் அனுபல்லவியிடம் கிஷோர் மற்றும் ஹேமா பற்றி அனைத்தையும் கூறினாள்.

அதனைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள் அனுபல்லவி.

தனக்காக தன் தாய் எவ்வளவு போராடி இருக்கிறாள் என்பதை அறிந்த அனுபல்லவியின் கண்கள் குளமாகின.

தாயின் மார்பில் தலை சாய்த்து கண்ணீர் வடித்த அனுபல்லவி, "எனக்காக தான் இவ்வளவு கஷ்டப்பட்டீங்களாம்மா?" எனக் கேட்கவும் புன்னகைத்த அனுஷியா, "உனக்காக தான். ஆனா அதை விட முக்கியமா உங்க அப்பாவுக்கும் எனக்குமான காதலுக்கு கிடைச்ச பரிசு நீ. அவர இழந்தது போல உன்னையும் என்னால இழக்க முடியாது டா. பல்லவி... இதை மட்டும் மனசுல வெச்சிக்கோ. எந்த சூழ்நிலையிலும் அவங்க முன்னாடி போய் நின்னுடாதே. அவங்க எல்லாம் மனுஷ ரூபத்துல இருக்குற மிருகங்கள். சொத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவாங்க. பிரதாப் நல்லவன் தான். ஆனா நாம யாருக்கும் தொந்தரவா இருக்கக் கூடாதுடா." என்றாள்.

அனுபல்லவி சரி எனத் தலையசைக்கவும், "பல்லவி... ஒருவேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீ அநாதை ஆகிடுவடா. எனக்கு அதை நினைச்சா தான் டா பயமா இருக்கு." என்றாள் அனுஷியா கண்கள் கலங்க.

"இப்படி எல்லாம் பேசாதீங்க மா. உங்களுக்கு எதுவும் ஆகாது. நான் வேலைக்கு போய் சம்பாதிச்சு உங்கள நல்லா பார்த்துப்பேன்." என்றாள் அனுபல்லவி.

"நெருப்புன்னு சொன்னா நாக்கு சுட்டுடாது பல்லவி. ஆனா என்னைக்கா இருந்தாலும் நம்ம உயிர் போக தான் போகுது. அதுக்கு முன்னாடி உன்ன ஒரு நல்ல பையன் கைல பிடிச்சு கொடுக்கணும்டா." என்றாள் அனுஷியா அனுபல்லவியின் முகத்தை வருடி விட்டவாறு.

அனுபல்லவி அமைதியாக கேட்டுக் கொண்டிருக்க, "ஆனா ஒன்னு பல்லவி. நான் இல்லாத காலத்துல பாசமுங்குற முகமூடிய போட்டுக்கிட்டு அவங்க உன்ன தேடி வந்தாலும் வரலாம். ஆனா எந்தவொரு சூழ்நிலையிலும் நீ அவங்கள நம்பக் கூடாது டா." என்றாள் அனுஷியா அழுத்தமாக.

இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்த நேரம் அனுபல்லவி தாயின் மடியிலேயே உறங்கியிருக்க, அவளை எழுப்பி இரவு உணவை ஊட்டி விட்டு அறைக்குத் தூங்க அனுப்பினாள் அனுஷியா.

பின் தன் வேலைகளை முடித்து வீட்டை ஒதுங்க வைத்து முடிப்பதற்குள் நன்றாகவே இருட்டி விட, உறங்குவதற்காக அறைக்குள் நுழையப் போன அனுஷியா யாரோ வாசல் கதவைப் படபட எனத் தட்டவும் அதிர்ந்தாள்.

நேரத்தைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் பதைபதைக்க, நேரம் செல்லச் செல்ல விடாது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

என்ன நினைத்தாளோ அனுபல்லவி உறங்கும் அறையை தாழிட்டு சாவியைக் கையில் எடுத்த அனுஷியா மெதுவாக சென்று கதவைத் திறக்க, வாசலில் முழு போதையுடன் நின்றிருந்த சத்யனைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தாள்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 42

வாசலில் முழுப் போதையுடன் நின்றிருந்த சத்யனைக் கண்டு சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்திருந்த அனுஷியா தன்னிலை அடைந்து வேகமாகக் கதவை சாத்த முயன்றாள்.

ஆனால் அதற்குள் அவளைத் தள்ளிக் கொண்டு வீட்டினுள் நுழைந்து கதவைத் தாழிட்டு இருந்தான் சத்யன்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து விடுதலை ஆகி இருந்தான் அவன்.

இத்தனை வருடங்கள் சிறையில் இருந்தும் அவனுக்கு அனுஷியா மீதிருந்த வன்மம் குறையவே இல்லை.

அனுஷியாவை வெறித்த மற்றைய சோடி விழிகளுக்குச் சொந்தக்காரன் சத்யன் தான்.

வயதாகி விட்டதால் தலை முடி நரைத்து, சிறையில் இருந்ததால் பார்க்கவே பயங்கரமான தோற்றத்தில் இருந்தவனுக்கு பெண்ணாசை மட்டும் குறையவே இல்லை.

எதிர்ப்பாராத விதமாக அனுஷியாவைக் கண்டவனுக்கு உடனே அவளைப் பழி வாங்கி விடும் வெறி ஏற்பட்டது.

"என்ன டி? எதிர்ப்பார்க்கலயா என்னை இங்க?" எனக் கேட்டான் சத்யா கையில் இருந்த மதுக் கிண்ணத்தை வாயில் சரித்தபடி.

"ம...மரியாதையா வெளிய போயிடு. இல்லன்னா கத்தி ஊர கூட்டிடுவேன்." என்றாள் அனுஷியா தன் பயத்தை மறைத்து மிரட்டலாக.

உடனே அவ் அறையே அதிரச் சிரித்த சத்யனோ, "முன்னாடியா இருந்தா இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயந்து இருப்பேன் டி. ஆனா நீ என்னை ஜெயிலுக்கு அனுப்பினதுக்கு அப்புறம் நான் அங்க அனுபவிச்ச சித்திரவதைக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னும் இல்ல டி. என்ன நினைச்ச நீ? நான் அப்படியே உன்ன சும்மா விட்டுடுவேன்னா? ஆமா... எங்க அந்த ********* சிறுக்கி? அவ இருந்த தைரியத்துல தானே நீ அவ்வளவு ஆட்டம் போட்ட. அப்புறம் ஒருத்தன் இருந்தானே ஹீரோவாட்டம். எங்க அவன்? உன்ன நல்லா யூஸ் பண்ணிட்டு தூக்கிப் போட்டுட்டு போய்ட்டானா? பரவால்ல பேபி. அதுக்கு தான் நான் இருக்கேனே." என விஷமமாகக் கூறியபடி அனுஷியாவை நெருங்க, அவனை சட்டெனத் தள்ளிவிட்டாள் அனுஷியா.

போதையில் இருந்த சத்யன் நிலை தடுமாறி கீழே விழ, அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அனுஷியா தன் கைப்பேசியை எடுத்து காவல் நிலையத்துக்கு தொடர்பு கொள்ள முயன்றாள்.

அதற்குள் தடுமாறிக் கொண்டே எழுந்த சத்யன் அனுஷியாவை நெருங்கி அவளின் முடியைப் பற்றி இழுத்து அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டான்.

"அம்மா..." என்ற அலறலுடன் கீழே விழுந்த அனுஷியாவின் சத்தத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அனுபல்லவி சட்டென கண் விழித்தாள்.

"அம்மா..." எனப் பதட்டமாக அழைத்தவாறு அறைக் கதவைத் திறக்க முயல, அதுவோ வெளிப் பக்கமாகப் பூட்டிக் கிடந்தது.

"அம்மா... என்னாச்சு மா? கதவைத் திறங்க." எனக் கத்தினாள் அனுபல்லவி.

அனுபல்லவியின் குரலைக் கேட்டு அனுஷியா அதிர, சத்யனின் முகத்திலோ ஒரு குரூரச் சிரிப்பு.

"உன் பொண்ணா?" எனக் கேட்ட சத்யனின் பார்வை அறைப் பக்கம் திரும்பியது.

வெகுநேரம் கதவைத் தட்டியும் யாரும் திறக்காமல் போகவும் ஹாலை நோக்கி இருந்த அவ் அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்த அனுபல்லவி அங்கு நின்றிருந்த வயதான ஆடவனைக் கண்டு அதிர்ந்தாள்.

கீழே விழுந்து தலையில் அடிபட்டுக் கிடந்த தாயைக் கண்டு பதறிய அனுபல்லவி, "அம்மா..." என அலற, "உள்ள போ பல்லவி. நான் பார்த்துக்குறேன்." என்றாள் அனுஷியா கெஞ்சலாக.

"பரவால்லயே. உன் பொண்ணும் உன்ன போலவே டக்கர் ஃபிகரா இருக்கா. உன் கதைய முடிச்சிட்டு அவள பார்க்குறேன்." என விஷமமாகக் கூறிய சத்யன் தட்டுத் தடுமாறி எழ முயற்சித்த அனுஷியாவை மீண்டும் தள்ளி விட்டு அவள் மீது வெறித்தனமாகப் படர்ந்தான்.

அனுஷியா தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தள்ளி விட முயல, ஆனால் தலையில் அடிபட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவை இழந்து கொண்டிருந்தாள் அனுஷியா.

"ஐயோ அம்மா. டேய்... விடுடா எங்க அம்மா. அம்மா... எனக்குப் பயமா இருக்கு மா. கதவைத் திறங்க." எனக் கதறிய அனுபல்லவி அறைக் கதவை உடைக்க முயன்றாள்.

ஆனால் அக் கதவோ அசைய மறுத்தது.

"வெ...ளிய வராதே பல்...லவி. ப்ளீஸ்..." என ஈனக் குரலில் முனங்கிய அனுஷியா அந் நிலையில் கூட சத்யனிடமிருந்து தப்பிக்க போராடினாள்.

முழுப் போதையில் இருந்தவனுக்கு அனுஷியாவின் மீதிருந்த வெறி அதிகரிக்க, மனசாட்சியே இன்றி அனுஷியாவின் உடைகளைக் களைந்து அவள் கதறக் கதற அனுஷியாவின் கற்பை சூறையாடத் தொடங்கினான்.

"விடுடா டேய்... ஐயோ... நான் என்ன பண்ணுவேன்? அம்மா..." எனக் கதறிய அனுபல்லவி அவசரமாகத் தன் கைப்பேசியைத் தேட, அதுவோ சார்ஜ் இன்றி உயிரை விட்டிருந்தது.

கைப்பேசியைத் தூக்கி வீசிய அனுபல்லவி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து தாயைக் காக்க முடியாத நிலையை எண்ணி அடுத்து என்ன செய்வது என்று கூட தெரியாது தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

"கடவுளே... உனக்கு மனசாட்சியே இல்லையா? எங்க அம்மா என்ன பாவம் பண்ணாங்க? ஏன் அவங்கள மட்டும் இப்படி தண்டிக்கிற? அம்மா..." எனக் கதறினாள் அனுபல்லவி.

ஆனால் அந் நள்ளிரவு நேரம் வெளியேயும் ஆள் நடமாட்டம் இன்றி இருக்க, அனுபல்லவியின் கதறல் யாரையும் சென்றடையவில்லை.

முழுதாக மயக்கத்திற்கு சென்றிருந்த அனுஷியாவை தன் ஆசை தீர சூரையாடிய சத்யனுக்கு அப்போதும் கூட அவள் மீதிருந்த ஆத்திரம் அடங்கவில்லை.

அனுபல்லவியின் கண் எதிரேயே அவளின் தாய்க்கு ஏற்பட்ட நிலைமையைக் கண்டு இரத்தக் கண்ணீர் வடித்தாள் அனுபல்லவி.

அரை உயிராய்க் கிடந்த அனுஷியாவின் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தவனின் காதில் அனுபல்லவியின் கதறல் குரல் கேட்க, வன்மமாய்ப் புன்னகைத்தவன் போதையுடனே நடந்து சென்று அறைக் கதவைத் திறக்க முயன்றான்.

ஆனால் சாவி இல்லாதிருந்ததால் அவனால் அறைக் கதவைத் திறக்க முடியாதிருக்க, "ஏய் பொண்ணு... கதவைத் திற டி." என உளறியபடி கதவைப் படபட எனத் தட்டினான்.

சத்யனின் குரல் கேட்டு பயத்தில் இதயம் வேகமாகத் துடிக்க சுவற்றோடு ஒன்றிக் கண்களை மூடிக் கொண்ட அனுபல்லவிக்கு கண்களைத் திறந்து பார்க்கவே பயமாக இருந்தது.

"அம்மா... வாங்கம்மா... பயமா இருக்கும்மா. அம்மா..." என அனுபல்லவியின் இதழ்களோ அச்சத்தில் முணுமுணுத்துக் கொண்டே இருந்தன.

ஒரு பக்கம் தாய்க்கு என்ன ஆனதோ என்ற அச்சம் சூழ, பேதையவளோ நிராதரவாக நின்றாள்.

போதையில் சத்யன் கதவை இடித்துத் திறக்க முயன்ற சமயம் அவனின் பின்னிருந்து இரும்பு உலக்கையால் அவன் மண்டையில் அனுஷியா அடிக்கவும் தலை வெடித்து இரத்தம் பீச்சிட அவ் இடத்திலேயே மாண்டு வீழ்ந்தான் அக் கிழட்டு காமுகன்.

உடலெல்லாம் காயங்களுடன் சீர்குலைந்து அரை உயிராய் கிடந்த அனுஷியாவின் மனக் கண்ணில் அனுபல்லவி 'அம்மா... அம்மா...' என அழைப்பது போல் தோன்றிக் கொண்டே இருக்க, கடினப்பட்டுக் கண் விழித்தவள் கண்டது அனுபல்லவி இருந்த அறைக் கதவை உடைக்க முயன்று கொண்டிருந்த சத்யனைத் தான்.

உடனே அனுஷியாவிற்கு எங்கிருந்து தான் அத்தனை பலம் வந்ததோ, கைகளை ஊன்றி எழுந்து நின்றவள் சத்தம் வராமல் மெல்ல மெல்ல சமையலறைக்குச் சென்று இரும்பு உலக்கையை எடுத்து வந்து நொடி நேரம் கூட யோசிக்காமல் சத்யனின் நடு மண்டையிலேயே அடித்தாள் அனுஷியா.

சத்யன் இறந்ததைக் கண்ட அனுஷியாவின் முகத்தில் ஒரு வெற்றிக் களிப்பு வந்து போனது.

ஆனால் உடற் காயங்களுடன் சேர்த்து தலை வேறு விண் விண் என்று வலித்தவளுக்கு அவளின் நிலை நன்றாகவே புரிந்தது.

கஷ்டப்பட்டு சாவியைத் தேடி எடுத்து அறைக் கதவைத் திறந்த அனுஷியா கேட்டது, "வேணாம்... கிட்ட வராதே. என்னை விட்டுடு. ப்ளீஸ். ஒன்னும் பண்ணிடாதே என்னை. அம்மா... அம்மா... வாங்கம்மா. பயமா இருக்கு..." என்ற அனுபல்லவியின் கதறல் தான்.

கண் மூடி சுவற்றோடு ஒன்றி இருந்த அனுபல்லவியை நோக்கி காலடிகள் மிக நெருக்கமாக கேட்கக் கேட்க, இதயம் இரு மடங்கு வேகத்தில் துடித்தது.

"வேணாம் ப்ளீஸ். விட்டுடு. கிட்ட வராதே." எனக் கெஞ்சினாள் அனுபல்லவி.

திடீரென, "பல்லவி..." என்ற தாயின் குரல் கேட்கவும் சட்டென விழிகளைத் திறந்தவளின் மீதே உடல் வலிமை இழந்து சாய்ந்தாள் அனுஷியா.

"அம்மா..." என அனுபல்லவி பதற, பாதி திறந்திருந்த கண்கள் கொண்டு மகளின் முகத்தில் பார்வையைப் பதித்தவாறு இரத்தம் தோய்ந்த விரல்களால் அனுபல்லவியின் முகத்தை வருடிய அனுஷியா, "அம்...மாவ மன்னிச்...சிடுடா செல்லம். நா...னும் உன்...ன தனியா அ..அநாதையா விட்...டுட்டுப் போகப் போறேன்." என்றாள் திக்கித் திணறி.

"இல்லம்மா... உங்களுக்கு ஒன்னும் ஆகாது. வாங்க ஹாஸ்பிடல் போகலாம். எனக்கு உங்கள விட்டா யாரு இருக்காங்க?" என அனுஷியாவைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி கதறினாள் அனுபல்லவி.

அனுஷியாவை அணைத்திருந்த அனுபல்வவியின் கரங்களில் ஏதோ பிசுபிசுப்பாக இருக்கவும் குனிந்து கீழே பார்க்க, அனுஷியாவின் தலையில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

"ஐயோ இரத்தம்... எனக்குப் பயமா இருக்கு மா. வாங்க ஹாஸ்பிடல் போகலாம். என்னைத் தனியா விட்டுட்டுப் போயிடாதீங்க." எனக் கண்ணீர் வடித்தாள் அனுபல்லவி.

அனுஷியாவின் விழிகள் ஈரமாக, "இல்லம்மா. இதுக்கு மேல இந்த உயிர் தாங்காது டா. உ...உங்க அப்பா போனதுக்கு அப்புறம் அவர் கூடவே நானும் போய் இருப்...பேன். ஆனா உனக்காக மட்டும் தான் இ...ந்த உயிர கைல பிடிச்சிக்கிட்டு இருந்தேன். ஆ...ஆனா இப்...போ உன் அப்பாவுக்காக மட்டும் கட்டிக் காத்த என்...னோட கற்பு இப்படி சீரழிஞ்சதுக்கு அப்புறமும் என்னால என் பொண்...ணு முன்னாடி நிம்..மதியா இருக்க முடியாதுடா. அம்மா சுயநலமா இருக்கே...ன்னு அம்மாவ வெறுத்துடாதே கண்ணு. நா...னும் அப்பாவும் உ... உனக்கு என்னைக்கும் து...ணையா இருப்போம் டா. நா... நான் கண்ண மூட மு...ன்னாடி உன்ன ஒரு நல்லவன் கை...ல சேர்க்கணும்னு நினைச்...சேன் டா. அது முடியாம போயிடுச்சு டா. ஆனா... எனக்கு நம்...பிக்கை இருக்கு. என் செல்லத்த கைப் பிடிக்க போற ரா...ராஜ குமாரன் கூ...டிய சீக்கிரமே உன்...னைத் தேடி வருவான். அ...வன பார்த்ததுமே உன் மனசு சொல்லும் இ..இவன் தான் எனக்...கானவன்னு. பல்லவி ம்மா... இந்த உலகம் ரொம்...ப மோசமானது டா. யாரையும்... கண்மூடித்தனமா நம்பிடாதே. மு...முக்கியமா உன் அத்...தை ஃபேமிலி கண்...ல படாம இரு. உ...உனக்கு துணைக்கு யாரும் இல்லைன்னு நினைக்காதே. உ...உன் கிட்ட உ...ன்னோட படிப்பு இருக்கு. அது... உனக்...கு கடைசி வரை துணையா வரும். ஒரு பொண்...ணுக்கு பலமே அவளோட படிப்பு தான். உங்க அப்...பா இருந்திருந்தா உன்...ன இ...ளவரசி மாதிரி பார்த்து இரு...ப்பார். ஆனா இந்...தப் பாவி வயித்துல பிறந்துட்ட நீ. என்...னால உனக்கு படிப்பை மட்டும் தான் கொடுக்க முடி...ஞ்சது. அது உனக்கு துணை இருக்கும் டா. அம்...மாவ மன்னிச்சிடு டா. அம்மா உன் மேல... உசுரையே வெச்சிருக்கேன் டா தங்கம். எப்...பவும் நல்லா இரு." என்றவாறு அனுபல்லவியின் தலையை வருடி விட்ட அனுஷியாவின் கரம் அப்படியே தொய்ந்து கீழே விழுந்தது.

தம் காதலின் பரிசை தன் விழிகளுக்குள் நிரப்பியவாறு தன் மகளின் மடியிலேயே இன்னுயிரை நீத்தாள் அனுஷியா.

"அம்மா..." என்ற அனுபல்வவியின் கதறல் அச் சுவர்களில் எதிரொலித்தது.

"அம்மா... எழுந்திரிங்கம்மா. ப்ளீஸ் மா. என்னை தனியா விடவே மாட்டீங்களே. இப்போ நான் தனியா இருக்கேன் மா. யாருமே இல்ல எனக்கு. வாங்கம்மா. இல்லன்னா என்னையும் உங்களோட கூட்டிட்டுப் போயிடுங்கம்மா. நீங்க இல்லாம நான் எப்படிம்மா இருப்பேன்? எனக்கு என்ன பண்ணுறதுன்னு கூட தெரியல." எனக் கதறினாள் அனுஷியா.

வெகுநேரம் தாயை அணைத்துக் கொண்டு கதறியவளுக்கு அதன் பின்னர் தான் நிதர்சனம் உறைத்தது.

அடுத்து என்ன செய்வது என யோசித்த அனுபல்லவிக்கு ஹாலில் இருந்த சத்யனின் இறந்த உடல் வேறு பீதியைக் கிளப்பியது.

எங்கு அவன் மீண்டும் எழுந்து வந்து விடுவானோ எனப் பயந்த அனுபல்லவி அனுஷியாவை மெதுவாகக் கீழே கிடத்தி விட்டு ஒரு போர்வையை எடுத்து வந்து அவளை சுற்றிப் போர்த்தி விட்டாள்.

மரணித்த பின்னும் கூட தன் தாய்க்கு நடந்த அவலத்தை அனைவரும் அறிந்து தாய்க்கு கலங்கம் ஏற்படும் என்ற எண்ணமே அனுபல்லவியைக் கலங்கடித்தது.

இருந்தும் போலீஸிடம் உண்மையை மறைக்க முடியாதே.

மனதைக் கல்லாக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவள் சற்றுத் தள்ளி இருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டினாள்.

வெகுநேரம் கழித்து கதவைத் திறந்த ஒரு வயதான பெண்மணி அனுபல்லவியை அடையாளம் கண்டு அவளிடம் விபரம் கேட்க, சுருக்கமாக அவளிடம் நிலைமையைக் கூறிய அனுபல்லவிக்கு கண்ணீரை அடக்குவதே பெரும்பாடாக இருந்தது.

அப் பெண்மணியோ அனுஷியாவிற்கு நடந்த கொடுமையைக் கேட்டு அதிர்ந்தவர் அனுபல்லவியை அணைத்துக் கொண்டு கண் கலங்கினார்.

பல வருடங்களாக ஒரே இடத்தில் வசிப்பதால் அவர்களுக்குள் ஓரளவு பழக்கம் இருந்தது.

அதுவும் அனுஷியா மூலம் அவளைப் பற்றி தெரிந்து கொண்டவருக்கு சிறு வயதிலேயே கணவனை இழந்து குழந்தையுடன் தனியாகத் தவிப்பவளின் மீது பாசம் அதிகம்.

அதுவும் அனுஷியாவின் கள்ளமில்லாச் சிரிப்பும் அனைவருடனும் பழகும் விதமே அந்த ஊரில் அனுஷியாவிற்கு ஒரு நன்மதிப்பை வழங்கி இருந்தது.

சற்று நேரத்திலேயே அனுபல்வவியின் வீட்டை போலீஸ், மீடியா, மக்கள் எனச் சுற்றி வளைத்தனர்.

அனுபல்லவியிடம் விபரம் கேட்டு அறிந்து கொண்ட போலீஸ் இரு உடல்களையும் பிரேத பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின் மேலதிக விசாரணைகளுக்காக அனுபல்லவியை காவல் நிலையம் அழைத்துச் செல்ல, அவளுக்குத் துணையாகச் சென்றார் பக்கத்து வீட்டுப் பெண்மணி.

எல்லாம் முடியும் போது விடிந்திருந்தது.

எல்லா செய்திகளிலும் அனுஷியா பற்றிய தகவல் தான் ஓடிக்கொண்டு இருந்தது.

அனுபல்லவிக்கோ அவளின் தாயை எண்ணி அழக் கூட நேரமற்று விசாரணை விசாரணை என கேள்விகளால் அவளைக் கூறு போட்டனர்.

தொலைக்காட்சியில் கூறிய செய்தியைக் கேட்ட ஹேமாவும் கிஷோரும் அதிர்ந்தனர்.

அனுஷியாவின் கொடிய மரணம் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

உடனே பிரதாப்பும் அங்கு இருப்பதால் அவனுக்கு அழைத்துத் தகவல் தெரிவிக்க, அப்போது தான் பிரதாப்பும் விஷயத்தைக் கேள்வியுற்று இருந்தான்.

எவ்வளவு தான் அனுஷியா மீது வெறுப்பு கொட்டிக் கிடந்தாலும் அவளின் மரணம் அவனுக்கு வலியைத் தந்தது.

அதுவும் அப்படி ஒரு கொடூர மரணம் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டாம் என அவனின் ஆழ் மனம் கூக்குரல் இட்டது.

அதே நேரம் தான் ஹேமா அவனுக்கு அழைத்து அனுஷியாவின் மரணத்தை சாக்காக வைத்து அனுபல்லவியை அவனோடு அழைத்து வரக் கட்டளை இட்டான்.

கூடவே அவள் அடிக்கடி கூறும் வார்த்தைகளைக் கூறி பிரதாப்பின் மனதில் தான் வளர்த்து விட்ட வெறுப்பையும் புதுப்பிக்க, அது சரியாக பிரதாப்பிடம் வேலை செய்தது.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 43

காலையிலேயே காவல் நிலையத்துக்கு சென்றவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, அவன் அனுபல்லவியின் உறவுக்காரர் தான் என்பதை அவளிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட போலீஸுடன் பேசி அன்றே அனுஷியாவின் உடலை வாங்கினான்.

பிரதாப் தான் அனுபல்லவி பற்றிய தகவல்கள் செய்திகளில் வராமல் பார்த்துக் கொண்டான்.

அது பற்றி அறிந்த அனுபல்லவிக்கு பிரதாப்பின் செயல் நிம்மதியைத் தந்தாலும் ஏனோ அவனை முழுவதுமாக நம்ப மனம் ஒப்பவில்லை.

அதற்குக் காரணம் அடிக்கடி அவள் மீது பதியும் பிரதாப்பின் வெறுப்பான பார்வை ஆகும்.

பல முறை அதனை கண்டுகொண்டும், உணர்ந்தும் இருக்கிறாள் அனுபல்லவி.

அனுஷியாவின் உடலை அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குக் கொண்டு வந்து இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.

பிரதாப் தான் அனைத்தையும் முன் நின்று செய்தான்.

அனுபல்லவியிடம் நற்பெயர் வாங்குவதற்காகத் தான் அவ்வாறு செய்வதாக தன்னையே பிரதாப் சமாதானம் செய்து கொண்டாலும் அவனின் உள் மனத்திற்குத் தெரியும் அனுஷியா மீது ஆழ் மனதில் இருந்த பாசம் தான் காரணம் என்று.

ஆனால் அதனை ஏற்கத் தான் அவனுக்கு மனம் வரவில்லை.

அந்தளவுக்கு பிரதாப்பை மூளைச்சலவை செய்து வைத்திருந்தனர் அவனது பெற்றோர்.

இறுதியாக அனுஷியாவின் உடலை கொண்டு செல்ல முயன்ற போது அனுபல்லவி தன் தாயின் உயிரற்ற உடலைக் கட்டிக் கொண்டு கதறிய கதறலில் பிரதாப்பின் இரும்பு மனமே இளகியது.

ஒருவாறு அவளை சமாதானப்படுத்தி அனுஷியாவின் உடலை எடுத்து சொல்ல, அனுபல்லவி தன் கையாலேயே தாய்க்கு கொள்ளி வைத்தாள்.

கொழுந்து விட்டெரியும் நெருப்பை வெறித்த வண்ணம் நின்றிருந்த அனுபல்லவியை அந் நொடியே தனிமையின் கொடுமை ஆட்டுவிக்க ஆரம்பித்தது.

ஒரு வாரம் கடந்திருக்க, பக்கத்து வீட்டுப் பெண்மணி அனுபல்லவியுடனே தங்கி அவளுக்கு தேவையானதை எல்லாம் பார்த்துப் பார்த்து செய்து விட்டு துணைக்கும் நின்றாள்.

இடைக்கிடையே பிரதாப் வந்து அனுபல்லவியைப் பார்த்து விட்டுப் போவான்.

அவனுக்கு அனுபல்லவியை எவ்வாறு அழைத்துச் செல்வது என்று யோசிப்பதற்கே நேரம் வேண்டிக் கிடந்தது.

அதுவுமில்லாமல் அவனுக்கு அனுபல்லவியுடன் ஏனோ சாதாரணமாக உரையாடவே முடியவில்லை.

தாயின் வார்த்தைகள் மட்டும் தான் அவளைக் காணும் போதெல்லாம் அவனுக்கு நினைவுக்கு வரும்.

எங்கு தன்னையும் மீறி தன் நோக்கத்தை அவளுக்கு தெரியப்படுத்தி விட்டால் அனுபல்லவி தன்னுடன் வர மறுத்து விடுவாள் என்று பயந்தான்.

அதன்படியே அன்று காலை அனுபல்லவிக்குத் துணையாக நிற்கும் பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கு ஏதோ அவசர வேலை என்று வெளியே சென்றிருக்க, அங்கு வந்தான் பிரதாப்.

அனுஷியாவின் புகைப்படத்தின் அருகே தரையோடு சாய்ந்து கிடந்தவளின் அருகே சென்று குரலை செறுமினான்.

கண் மூடிக் கிடந்த அனுபல்லவியோ தன் தாயுடன் வேறொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, பிரதாப்பின் வருகையை அவள் உணரவில்லை.

"அனு... அனு..." என பிரதாப் அழைக்க, அனுபல்லவி பதலளிக்காது போகவும், "அனு..." என்றான் பிரதாப் சற்று அதட்டலான குரலில்.

அதில் பதறிக் கண் விழித்தவளின் அருகே முகம் இறுக நின்றிருந்தான் பிரதாப்.

ஏனோ அவனைக் காணும் போதெல்லாம் அனுஷியா அவனின் பெற்றோரைப் பற்றிக் கூறியவைகள் தான் அனுபல்லவிக்கு நினைவுக்கு வந்தன.

பிரதாப்பைப் பற்றி அனுஷியா நல்ல விதமாகக் கூறி இருந்தாலும் அனுபல்லவியின் உள் மனம் அதற்கு மாறாகக் கூறியது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே ஒரு சம்பவம் முன் தினம் நடந்தது.

முன் தினம் அனுபல்லவியைப் பார்க்க வந்த பிரதாப் அவளிடம் சாதாரணமாக நலம் விசாரித்து விட்டுக் கிளம்ப, அவன் தன் பர்ஸை மறந்து அங்கேயே விட்டுப் போயிருந்தான்.

அதனைக் கண்ட அனுபல்லவி உடனே அதனை பிரதாப்பிடம் வழங்குவதற்காக அவசரமாக வெளியே ஓட, அங்கு வாசலில் சற்றுத் தள்ளி நின்றிருந்த பிரதாப் யாருடனோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்க, அவனின் வார்த்தைகள் அனுஷியாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

"நீங்க ஒன்னும் கவலைப்பட வேணாம் மா. எல்லாம் நம்ம திட்டப்படியே நிச்சயம் நடக்கும். நாளைக்கே நான் அவள என்னோட கூட்டி வரேன். நீங்க கோயில்ல சிம்பிளா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. எங்க கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண அடுத்த நிமிஷமே அவ கையெழுத்த வாங்கி மொத்த சொத்தையும் நம்ம பெயருக்கு மாத்திக் கொள்ளலாம். அப்புறம் அவ அம்மா நம்ம குடும்பத்துக்கு செஞ்ச அநியாயம் எல்லாத்துக்கும் சேர்த்து அவங்க பொண்ணுக்கு நரகம்னா என்னன்னு நான் காட்டுறேன்." என்றான் பிரதாப் வன்மமாக.

அவ் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றிருந்த அனுபல்லவிக்கு அனுஷியா அவனைப் பற்றி எவ்வளவு நல்ல விதமாக எண்ணி இருந்தாள் என்ற நினைவு கண்ணீரை வரவழைத்தது.

அனுஷியாவின் நம்பிக்கையைப் பொய்யாக்கி விட்டானே.

அதுவும் பெற்றோருடன் சேர்த்து என்ன அழகாகத் திட்டம் போடுகிறான் என் நினைத்த அனுபல்லவி பிரதாப்பை அடியோடு வெறுத்தாள்.

மறு நொடியே அச் சொத்துக்கள் தனக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இக் கயவர்களின் கையை சென்றடையக் கூடாது என முடிவு செய்தாள் அனுபல்லவி.

பிரதாப் பார்க்கும் முன்னே சத்தம் காட்டாது வந்த வழியே உள்ளே சென்றாள் அனுபல்லவி.

ஹேமாவுடன் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்த பிரதாப் அப்போது தான் பர்ஸை மறந்து உள்ளேயே வைத்து விட்டு வந்ததை உணர்ந்து மீண்டும் உள்ளே சென்றான்.

பர்ஸை இருந்த இடத்திலேயே வைத்த அனுபல்லவி அனுஷியாவின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.

அவளைத் திருப்பி ஒரு பார்வை பார்த்த பிரதாப் தன் பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

முகம் இறுக நின்றிருந்த பிரதாப்பையே அனுபல்லவி குழப்பமாக நோக்கவும் தன் முகத்தை சீராக வைத்துக்கொண்ட பிரதாப், "உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வை. ஊருக்கு போகணும்." என்றான்.

அதனைக் கேட்டு அனுபல்லவி அதிர்ந்து மறுப்பாக ஏதோ கூற முயல, "உன்ன இங்க தனியா விட்டுட்டுப் போக முடியாது என்னால. அங்க உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. நீ இங்க தனியா இருந்து கஷ்டப்பட அவசியம் இல்ல. அத்தை இருந்திருந்தா அவங்களையும் என் கூட கூட்டிப் போற முடிவுல தான் இருந்தேன்." என வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் பேசினான் பிரதாப்.

அனுஷியா அவனை வரவேற்ற விதத்தில் அவள் அனுபல்லவியிடம் தன் பெற்றோரைப் பற்றி தவறாக எதுவும் திரித்துக் கதை கட்டி இருக்க மாட்டாள் என எண்ணி விட்டான் அவன்.

ஆனால் அவன் அறியவில்லை அனுஷியா தன் மகளிடம் திரித்த கதை இல்லாமல் உண்மைகள் அனைத்தையும் கூறி விட்டாள் என்று.

பிரதாப்பின் வாய் ஒன்று கூறினாலும் அவனின் கண்கள் அனுபல்லவியைப் பார்க்கும் போது வெறுப்பை அப்பட்டமாகக் காட்டுவதை உணர்ந்த அனுபல்லவி அவன் வழியிலேயே சென்று அவனை மடக்க முடிவு செய்தாள்.

அனுபல்லவி உடனே சரி எனத் தலையசைக்க, அதனை பிரதாப் கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்கவில்லை.

"சரி மாமா. காலேஜ்ல என் சர்டிபிகேட் எல்லாம் வாங்க வேண்டி இருக்கு. நான் போய் அதை வாங்கிட்டு வந்ததுக்கு அப்புறம் எல்லாம் எடுத்து வைக்கிறேன்." என்றாள் அனுபல்லவி.

அது தான் அனுபல்லவி இவ்வளவு கோர்வையாக பிரதாப்பிடம் பேசியது.

அதிகம் கஷ்டப்படாமல் தன் காரியம் நடப்பதை எண்ணி மர்மமாகப் புன்னகைத்தான் பிரதாப்.

பின் அவன், "சரி நானும் உன் கூட காலேஜுக்கு வரேன். போற வழியில அப்படியே எடுத்துட்டு போயிடலாம்." என்க,

"இல்ல மாமா. என் ஃப்ரெண்ட் வரேன்னு சொன்னா. நான் அவ கூட போய்ட்டு சீக்கிரம் வந்துடுவேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்?" எனக் கேட்டாள் அனுபல்லவி.

அதற்கு மேல் அவளை வற்புறுத்தினால் எங்கு அவளுக்கு சந்தேகம் வந்து விடுமோ என எண்ணியவன், "சரி அப்போ. நீ எல்லா வேலையையும் முடிச்சிட்டு உன் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி வை. எனக்கும் வெளிய கொஞ்சம் வேலை இருக்கு. நான் அதெல்லாம் முடிச்சிட்டு நாளைக்கு உன்ன கூட்டிட்டுப் போக வரேன்." என்று விட்டுக் கிளம்பினான் பிரதாப்.

அவன் அங்கிருந்து செல்லவும் தான் அனுபல்லவிக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

உடனே அடுத்து அடுத்து செய்ய வேண்டிய அனைத்தையும் திட்டமிட்டவள் யார் யாருக்கோ கைப்பேசியில் அழைத்துப் பேசினாள்.

அன்றே தன் தோழி ஒருத்தியுடன் கல்லூரிக்குச் சென்று தன் சான்றிதழ்களை வாங்கிய அனுபல்லவி அவளின் துணைக்கு வந்த பக்கத்து வீட்டுப் பெண்மணியை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு உடைமைகளை எடுத்து வைத்தாள்.

சரியாக இரவானதும் வெளியே ஆள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள் யாருக்கும் தெரியாது இரவோடு இரவாக பேரூந்தில் பெங்களூர் கிளம்பினாள்.

அவளின் நம்பத் தகுந்த கல்லூரித் தோழன் ஒருவன் தான் அவளுக்கு பெங்களூரில் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொடுத்தது.

மறுநாள் காலையிலேயே அனுபல்லவியைத் தேடி வந்த பிரதாப் பூட்டியிருந்த வீட்டைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான்.

பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் விசாரிக்க, அவருக்கும் தெரியாது என்று கூறி விடவே கோபத்தில் பல்லைக் கடித்தான் பிரதாப்.

அனுபல்லவியின் கல்லூரியில் சென்று விசாரிக்க, நேற்று காலையே வந்து சான்றிதழ்களை எடுத்துப் போய் விட்டதாகக் கூறினர்.

பிரதாப்பிற்கு அனுபல்லவியின் நண்பர்கள் யாரையும் தெரியாததால் அவர்களிடமும் விசாரிக்க முடியாமல் போனது.

இருந்தும் அவனுக்குத் தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப் பார்க்க, எங்குமே அனுபல்லவி கிடைக்கவில்லை.

உடனே விஷயத்தைக் கூற ஹேமாவுக்கு அழைக்க, அழைப்பை ஏற்ற மறு நொடியே அவள், "பிரதாப் கண்ணா... வந்துட்டீங்களா? அந்த அனு உன் கூட தான் இருக்காளா? இங்க நானும் அப்பாவும் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டோம். இனிமே நமக்கு விடிவு காலம் தான். சொத்த நம்ம பெயருக்கு மாத்தினதும் அந்த அனுவ உண்டு இல்லன்னு பண்ணணும். அவ அம்மா எப்படி எல்லாம் எங்களுக்கு துரோகம் செஞ்சிட்டா. என் அண்ணன் அநியாயமா சாகவும் அவ தான் காரணம். அவளோட ராசி தான் எல்லாம்." என பேசிக் கொண்டே செல்ல, "கொஞ்சம் நான் பேசுறத்த கேளுங்க ம்மா." எனக் கத்தினான் பிரதாப்.

ஹேமா உடனே அமைதியாகி விட, "அந்த அனு அவ அம்மாவ போலவே எங்க கண்ல மண்ண தூவிட்டு தப்பிச்சு போய்ட்டா. ஓடுகாலி கழுதை. எல்லா இடத்துலயும் தேடி பார்த்துட்டேன். எங்கேயுமே அவ இல்ல." என்றான் பிரதாப் கடுப்பாக.

"என்ன பிரதாப் சொல்ற? அவ தப்பிச்சுட்டாளா? நீ எப்படி அவள தப்பிக்க விட்ட? அவ கூடவே இருந்து இருக்கலாமே. போச்சு. எல்லாமே போச்சு. இந்தத் தடவையும் அந்த அனுஷியா தான் ஜெய்ச்சா. உன்னால ஒரு விஷயத்த கூட உருப்படியா பண்ண முடியாதா? நீ எல்லாம் ஆம்பளன்னு சொல்லிக்திட்டு..." என வாய்க்கு வந்தவாறு கோபமாகப் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தாள் ஹேமா.

பிரதாப்போ எல்லாவற்றிற்கும் காரணம் அனுபல்லவி தான் என்று அவள் மீது மேலும் மேலும் வன்மத்தை வளர்த்தான்.

அதன் பின் வந்த நாட்களிலும் அனுபல்லவியைத் தேடுவதை அவன் விடவே இல்லை.

பெங்களூர் வந்த அனுபல்லவி அவளின் நண்பன் கூறிய விடுதியில் தங்கி வேலை தேடினாள்.

பிரணவ்வின் கம்பனியில் அனுபல்லவியின் திறமைக்கு இலகுவாகவே வேலை கிடைத்து விட, அந்த சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க முடியாது தனிமை அவளை வாட்டியது.

ஆனால் ஒரே நல்ல விடயமாக‌ அனுபல்லவிக்கு சாருமதியின் நட்பு கிடைக்க, இருவருமே சில நாட்களிலேயே நெருங்கிய நண்பர்கள் ஆகினர்.

சாருமதி அவளின் தந்தைக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் வாடகைக்கு இருப்பது தெரிய, அனுபல்லவியும் பாதி வாடகையைக் கொடுத்து அவளுடனேயே தங்கிக் கொண்டாள்.

ஆனால் ஒவ்வொரு வருடமும் அனுஷியா மரணித்த தினத்தில் மட்டும் யாரிடமும் பேசாமல் அறையே கதியென தனியாக அழுவாள்.

சாருமதி எவ்வளவோ கேட்டும் அதன் காரணத்தைக் கூறவில்லை அனுபல்லவி.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 44

பெங்களூரில் அனுபல்லவியின் வாழ்க்கை சாதாரணமாகக் கடக்க, மூன்று வருடங்கள் சென்ற நிலையில் தான் அவள் பிரணவ்வைச் சந்தித்தாள்.

ஆனால் எதிர்ப்பாராத விதமாக பிரதாப்பும் அவளின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து விட, பிரணவ்வின் உதவியால் அவனிடமிருந்து தப்பித்தான்.

அதன் பின் ஏதேதோ நிகழ்வுகள் நடந்து விட, இறுதியில் பிரணவ் பழைய நினைவுகளை இழந்து அனுபல்லவியைப் பற்றியும் மறந்து மருத்துவமனையில் இருந்த போது தன்னவனை எண்ணித் தனியே கதறியவளின் அழைப்பேசிக்கு ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

யார் என்ற குழப்பத்துடன் அதனை ஏற்ற அனுபல்லவி, "அனு... வீடியா கால் வா." என்று விட்டு பிரதாப் அழைப்பைத் துண்டித்து விட, தயக்கமாக வீடியோ காலை ஆன் பண்ணியவள் முடி எல்லாம் நரைத்து படுக்கையில் கிடந்தவரைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தாள் அனுபல்லவி.

ஏனெனில் அங்கு உறங்கிக் கொண்டிருந்தது வேறு யாருமல்ல. அவளின் ஆருயிர்த் தந்தை பல்லவன்.

இறந்து விட்டார் என நினைத்துக் கொண்டிருந்தவர் கண் முன்னே உயிரோடு இருக்க, அனுபல்லவியின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.

எதிர் முனையில் பேசிய பிரதாப், "உடனே நான் அனுப்புற அட்ரஸுக்கு வா அனு." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தேன்.

மறு நொடியே பிரணவ்வைக கூட மறந்து விட்டு பிரதாப் அனுப்பிய முகவரிக்கு விரைவாகச் சென்றாள்.

நகரத்துக்கு உள்ளே இருந்த ஒரு குறுக்குப் பாதையில் ஆள் நடமாட்டம் அற்ற ஒரு இடத்தில் அக் கட்டிடம் அமைந்திருக்க, மனம் ஒரு பக்கம் பயத்தில் படபடக்க, தந்தையைக் காணும் ஆவலில் எதைப் பற்றியும் யோசிக்காமல் உள்ளே சென்றாள் அனுபல்லவி.

பிரதாப் ஹாலில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க, அனுபல்லவியைக் கண்டவன் ஒரு அறைப் பக்கம் கை காட்டினான்.

உடனே அங்கு ஓடிய அனுபல்லவி கட்டிலில் முடி எல்லாம் நரைத்து, மெலிந்து போய், தோல் எல்லாம் சுருங்கி, முகம் களையிழந்து பல்லவனைக் கண்டு, "அப்பா..." என்ற கதறலுடன் பல்லவனிடம் ஓடினாள்.

பல்லவனோ ஆழ்ந்த மயக்கத்தில் இருக்க, அவனின் கையைப் பிடித்து அருகில் அமர்ந்த அனுபல்லவியின் கண்கள் விடாது கண்ணீரை சிந்தின.

"அப்பா..." என அனுபல்லவி கண்ணீருடன் அழைக்க, பல்லவனிடமோ பதில் இல்லை.

"அப்பா... நீ... நீங்க உயிரோட தான் இருக்...கீங்களா? ஏன்ப்பா அப்போ இ... இத்தனை வருஷமா என்னையும் அம்மாவையும் தேடி வரல?" எனக் கேட்டாள் அனுபல்லவி திக்கித் திணறி.

பல்லவனைக் கண்டதும் அனுபல்லவிக்கு தாய் தனியே அனுபவித்த கஷ்டங்கள் தான் நினைவுக்கு வந்தன.

தந்தை இருந்திருந்தால் தாய்க்கு அந் நிலைமை வந்திருக்குமா? என எண்ணும் போதே அனுபல்லவியின் உள்ளம் குமுறி அழுதது.

ஆனால் இவற்றுக்கு காரணமானவர்களை எண்ணும் போது அவளுக்கு அவர்களைக் கொன்று போடும் அளவுக்கு கோபம் வந்தது.

அதே கோபத்துடன் அறைக்கு வெளியே அமர்ந்திருந்த பிரதாப்பிடம் சென்ற அனுபல்லவி அவனின் சட்டைக் காலரை ஆவேசத்துடன் பற்றி, "ஏன் டா இப்படி பண்ண? சொல்லு டா. ஏன் டா இப்படி பண்ண? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? அப்படி என்ன தான் டா பணத்து மேல மோகம்? சொத்து சொத்துன்னு அதுக்கே அலையுறீங்க? அதை விட மனுஷனோட உணர்வுகள் முக்கியம் இல்லையா? உயிரோட இருக்குற மனுஷன இறந்ததா ஊருக்கு காட்டி இப்படி பண்ணி வெச்சிருக்கியே பாவி. நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா? அப்பா இல்லாம நானும் என் அம்மாவும் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? அப்பா மட்டும் எங்க கூட இருந்திருந்தா என் அம்மாக்கு அந்த நிலைமை வந்திருக்குமா? இது எல்லாத்துக்கும் காரணம் யாரு? நீயும் உன்னோட குடும்பமும் தான்." என்றாள் ஆக்ரோஷமாக.

அனுபல்லவியின் கேள்வியில் கண்ணீருடன் நின்றிருந்த பிரதாப்போ, "எனக்கும் தெரியாது அனு. சத்தியமா தெரியாது. அவங்க என்னையும் ஏமாத்திட்டாங்க. இருபத்தி இரண்டு வருஷமா மாமா கோமாவுல இருந்து இருக்கார். நேத்து தான் கண் முழிச்சு இருக்கார். எதேச்சையோ தான் எனக்கே தெரிய வந்தது." என்றவன் நடந்ததைக் கூற ஆரம்பித்தான்.

முன் தினம் ஆஃபீஸில் சற்று சீக்கிரமாகவே வேலை முடியவும் பிரதாப் வீட்டிற்கு வர, அவன் வந்த நேரம் வீட்டில் யாரும் இருக்கவில்லை.

எங்காவது சென்றிருப்பார்கள் என எண்ணிக் கொண்டு மாடி ஏறியவன் அவன் காதில் விழுந்த செய்தியில் அடுத்த அடி எடுத்து வைக்காமல் உறைந்து நின்றான்.

"யாருங்க கால் பண்ணாங்க? எதுக்கு இப்போ இவ்வளவு பதட்டமா இருக்கீங்க? எங்க போய்ட்டு இருக்கீங்க?" எனக் கேட்ட ஹேமாவிற்கு, "நம்ம பழைய குடோன் வீட்டுக்கு போறேன். உன் அண்ணன் கோமால இருந்து எழுந்திருச்சிட்டானாம். டாக்டர் கால் பண்ணி இருந்தாங்க. கண் முழிச்சு கொஞ்ச நேரத்துலயே மயங்கிட்டானாம். திரும்ப எழுந்திரிச்சதும் கத்தி பிரச்சினை பண்ணி இருக்கான் போல. டாக்டர் உடனே மயக்க ஊசி போட்டு இருக்காங்க. கோமால இருந்து எழுந்திருச்சதால அவன் உடம்புல அவ்வளவா சக்தி இல்ல. நான் போய் பார்த்துட்டு வரேன். அவன் உயிரோட எங்க கிட்ட இருந்தா தான் அந்தப் பல்லவன வெச்சி அவன் பொண்ண வரவெச்சி மிரட்டி சொத்த நம்ம பெயருக்கு எழுதி வாங்கலாம். அப்புறம் அப்பனையும் பொண்ணையும் ஒன்னா மேல அனுப்பிடலாம்." என்றான் கிஷோர் வன்மமாக.

"சரி நானும் வரேன். அவன நல்லா நாக்க பிடுங்குற மாதிரி நாழு கேள்வி கேட்கணும். சொந்த தங்கச்சி எனக்கு ஒரு பைசா இல்லாம மொத்தத்தையும் அந்த ஓடுகாலி கழுதைக்கு எழுதி வெச்சிருக்கான்." என்றாள் ஹேமா கோபமாக.

பின் இருவரும் சேர்ந்து கிளம்ப, அவர்கள் பார்க்காதவாறு மறைந்து நின்று கொண்டான் பிரதாப்.

அவர்களின் கார் கிளம்பி சற்று நேரத்தில் தன் காரில் அவர்களைப் பின் தொடர்ந்த பிரதாப் இருவரும் காரை விட்டு இறங்கி உள்ளே சென்றதும் அவனும் உள்ளே சென்று மறைவாக நின்று நடப்பவற்றைக் கவனிக்கத் தொடங்கினான்.

அந்த நேரம் பல்லவன் மயக்கம் தெளிந்து காணப்பட, ஆனால் அந்த டாக்டர் அடித்த ஊசியால் அவனால் அசைய முடியாதிருந்தது.

ஹேமாவையும் கிஷோரையும் அடையாளம் கண்டு கொண்ட பல்லவன், "ஹேமா... எ...துக்கு என்னை அடை...ச்சி வெச்சிருக்க? என் பொண்...டாட்டியும் புள்ளையும் எங்க?" எனக் கேட்டான் கோபமாக.

"அட... என் அருமை அண்ணனுக்கு என்னை நல்லா தெரியுதே." என நக்கலாகக் கூறிய ஹேமா, "அப்போ என்ன ****க்கு சொத்த உன் பொண்ணு பெயர்ல எழுதி வெச்சிருக்க?" எனக் கேட்டாள் ஆவேசமாக.

"அது எ...ன் சொத்து. அதை நான் யாருக்கு வே...ணும்னாலும் எழுதி கொடுப்பேன். அதைக் கேட்...க உனக்கு எந்த உ...ரிமையும் இல்ல." என்றான் பல்லவன் கோபமாக.

அவனுக்கு பேசுவதே சிரமமாக இருந்தது.

"ஓஹோ... அவ்வளவு திமிரு. அப்போ உனக்கு உன் பொண்டாட்டியும் பொண்ணும் வேணாம் போல." என ஹேமா கேட்கவும் பல்லவனின் முகத்தில் பதட்டம் குடிகொண்டது.

"என் ஷியா எங்க? பல்லவி எங்க? அ...அவங்கள என்ன பண்ண? அடைச்சி வெச்சிருக்கியா? ம...ரியாதையா அவங்கள விட்டுடு." எனப் பதட்டமாகக் கேட்ட பல்லவன் தன் கை கால்களை அசைக்க முயல, பலன் என்னவோ பூச்சியம் தான்.

அவனின் முயற்சியைக் கண்டு அவ் அறையே அதிரச் சிரித்தனர் கிஷோர் மற்றும் ஹேமா.

"என்ன? அசைய முடியலயா? நீ கோமால இருந்து வேணா கண் முழிச்சி இருக்கலாம். ஆனா உன்னால எங்கள மீறி ஒரு துரும்ப கூட அசைக்க முடியாது. ஏன் னா எங்க ட்ரீட்மெண்ட் அப்படி. அப்புறம் இன்னொரு விஷயம் தெரியுமா மச்சான்? இந்த ஊர் உலகத்தை பொறுத்தவரைக்கும், ஏன் உன் காதல் மனைவிக்கும் பொண்ணுக்கும் கூட இருபத்தி இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கார் ஆக்சிடன்ட்ல நீ இறந்துட்ட. உனக்கு காரியம் கூட பண்ணிட்டோம். எப்படின்னு பார்க்குறாயா? ஒரு அநாதை பிணத்த நீன்னு நம்ப வெச்சி எங்க வேலைய முடிச்சிட்டோம்." என்றான் கிஷோர் இளக்காரமாக.

அதனைக் கேட்டு அதிர்ந்த பல்லவனின் மனமெங்கும் மனைவியின் நினைவே.

'இருபத்தி இரண்டு வருடங்களாக கோமாவில் உள்ளோமா? நான் இறந்து விட்டேன் என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனரா? நான் இல்லாமல் என் மனைவியும் மகளும் என்ன பாடுபட்டிருப்பர்? இப் பணப் பேய்களிடம் எப்படி நிம்மதியாக இருந்து இருப்பர்?' என எண்ணியவனின் கண்கள் கலங்கின.

அதனைக் கண்டு ஹேமா, கிஷோர் இருவருக்குமே மனம் குளிர்ந்தது.

பின் கிஷோர் மருத்துவருக்குக் கண் காட்டவும் அவர் மயக்க மருந்து கொண்ட ஊசியை பல்லவனுக்கு செலுத்த, 'ஷியா...' என்றவாறு மயக்கத்திற்கு சென்றான் பல்லவன்.

"உன் அக்கவுன்ட்டுக்கு பணம் கரெக்ட் டைமுக்கு வந்துடும். இவன் நமக்கு ரொம்ப முக்கியம். என்ன நடந்தாலும் இவன் தப்பிச்சிட கூடாது. எதுக்கும் இவன கட்டியே வை. கூடிய சீக்கிரமே உன் வேலை முடிஞ்சிடும். இந்தப் பல்லவனையும் மொத்தமா அனுப்பி வெச்சிடலாம்." என்று விட்டுக் கிளம்பினர் இருவரும்.

அவர்கள் செல்லும் வரை மறைந்து நின்ற பிரதாப் கிஷோரின் கார் அங்கிருந்து செல்லவும் வெளியே வந்தான்.

அவனின் கண்கள் சிவந்து கலங்கிப் போயிருந்தன.

எவ்வளவு பெரிய துரோகம்? என்னையும் அவர்களின் பாவத்தில் பங்கேற்க வைத்து விட்டனரே என எண்ணிய பிரதாப்பிற்கு தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது.

கள்ளங்கபடமின்றி தன் மீது அன்பைப் பொழிந்த அத்தையைக் கூட சந்தேகப்பட்டு வெறுத்து விட்டேனே என பிரதாப்பின் மனம் குமுறி அழுதது.

சில நொடிகள் கழித்து தன்னை சமன் செய்து கொண்டவனின் பார்வையில் பட்டது அங்கிருந்த ஒரு உடைந்த கதிரை.

அதன் காலை கழட்டி எடுத்த பிரதாப் பல்லவனை அடைத்து வைத்திருந்த அறைக்குள் புயலாக நுழைய, அவனை அங்கு எதிர்ப்பார்க்காத அம் மருத்துவரோ அதிர்ந்து நின்றான்.

நொடி நேரம் கூட யோசிக்காது அவனைப் போட்டுப் புரட்டி எடுத்தான் பிரதாப்.

"ஏன் டா நாயே? நீ எல்லாம் ஒரு டாக்டரா? உசுர காப்பாத்துற வேலை பார்க்க வேண்டிய நீயே இப்படி ஒரு உசுர துடிக்க வைக்கிறியே. வெட்கமா இல்லையா உனக்கு?" எனக் கேட்டவாறு அடித்த பிரதாப் அம் மருத்துவர் அடி தாங்காது மயக்கத்திற்குச் செல்லவும் தான் அவனை விட்டான்.

கிஷோர் கூறியதற்கு இணங்க அம் மருத்துவர் பல்லவனின் கை கால்களைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டி வைத்திருக்க, பல்லவனின் கட்டுக்களைப் பிரித்த பிரதாப் அக் கயிற்றினாலேயே அம் மருத்துவனைக் கட்டினான்.

எதற்க்கும் இருக்கட்டும் என்று மயக்க மருந்து கொண்ட ஊசியை எடுத்து அம் மருத்துவனுக்குச் செலுத்தினான் பிரதாப்.

பின் அவசரமாக பல்லவனிடம் சென்றவன், "மாமா... மாமா..." என உலுக்க பல்லவனிடம் அசைவில்லை.

லேசாகப் பயம் எட்டிப் பார்க்க, பல்லவனின் நெஞ்சில் காதை வைத்துக் கேட்க, இதயம் சீராகத் துடித்துக் கொண்டிருக்கவும் தான் பிரதாப்புக்கு நிம்மதியாக இருந்தது.

அன்று இரவு முழுவதும் அங்கேயே தங்கி அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான் பிரதாப்.

விடிந்ததுமே அனுபல்லவிக்கு அழைத்து விபரம் தெரிவித்து விட்டான்.

அனுபல்லவியிடம் நடந்தவற்றைக் கூறிய பிரதாப், "அவங்க இப்படி பண்ணுவாங்கன்னு சத்தியமா நான் நினைக்கல அனு. உனக்கு தெரியுமா அத்தைன்னா எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு. ஆனா அவங்களயே எனக்கு வெறுக்க வெசசிட்டாங்க என்னைப் பெத்த ரெண்டு பேருமே. எனக்கு மட்டும் முன்னாடியே எல்லா உண்மையும் தெரிஞ்சிருந்தா அத்தைக்கு அந்த நிலைமை வந்திருக்காது. இதெல்லாத்துக்கும் நானும் ஒரு காரணம். மாமா கண் விழிச்சதும் அத்தைய பத்தி கேட்டா நான் என்னன்னு சொல்லுவேன்?" என்றவன் தலையில் அடித்துக் கொண்டு கதறினான்.

பிரதாப்பின் வார்த்தைகளில் அனுபல்லவியுமே அங்கேயே மடங்கி அமர்ந்து கண்ணீர் வடித்தாள்.

சில நிமிடங்களில் தன்னை சமன் செய்து கொண்ட பிரதாப், "அனு... நீ மாமா கூட இரு. நான் பண்ண தப்புக்கு நானே பிராயச்சித்தம் தேடி ஆகணும். இதுக்கு மேலேயும் அவங்க ரெண்டு பேரையும் சும்மா விட்டா உனக்கும் மாமாவுக்கும் தான் ஆபத்து." என்றவன் ஏதோ முடிவெடுத்தவனாக அங்கிருந்து கிளம்பிச் செல்ல, அனுபல்லவி தன் தந்தை கண் விழிக்கும் வரை அவர் அருகிலேயே அமர்ந்தாள்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 45

இரவெல்லாம் பிரதாப்பிற்கு பல முறை அழைத்தும் அவன் அழைப்பை ஏற்காமல் போகவும் அவன் வரும் வரை வாசலிலேயே காத்திருந்தனர் அவனின் பெற்றோர்.

வெகு நேரம் கழித்து பிரதாப் வீட்டினுள் நுழைய, "பிரதாப்... வந்துட்டியா? நைட் எல்லாம் எங்கப்பா போன? வீட்டுக்கு கூட வரல. ஆஃபீஸுக்கு கால் பண்ணி கேட்டப்போ நீ முன்னாடியே போய்ட்டதா சொன்னாங்க." என்றாள் ஹேமா.

பிரதாப்போ மௌனமாக ஹேமாவின் முகத்தை வெறிக்க, "பிரதாப்... நீ இனிமே அந்த அனுபல்லவி விஷயத்த பத்தி யோசிக்க அவசியம் இல்ல. வர்க்ல கன்சன்ட்ரேட் பண்ணு. நானும் அம்மாவும் அந்த ஓடுகாலிக் கழுதைய பார்த்துக்குறோம். அவள எப்படி நம்ம வழிக்கு கொண்டு வரதுன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்." என்றான் கிஷோர் விஷமப் புன்னகையுடன்.

ஹேமாவும் கணவனுடன் சேர்ந்து விஷமமாகப் புன்னகைக்க, பிரதாப் மௌனமாக நடப்பதை வேடிக்கை பார்த்தான்.

அதே நேரம் வாசலில் சைரன் ஒலி கேட்கவும் கிஷோரும் ஹேமாவும் குழப்பமாக ஒருவரையொருவர் நோக்க, இப்போது பிரதாப்பின் முகத்தில் விஷமப் புன்னகை.

சில நொடிகளில் நான்கைந்து காவலர்கள் சட்டென வீட்டினுள் நுழையவும் இருவருமே அதிர்ந்தனர்.

உள்ளே வந்த ஏ.சி.பி. அபிஷேக்கோ சக காவலர்களிடம், "அரெஸ்ட் தெம்." என்ற மறு நொடியே கிஷோர் மற்றும் ஹேமாவின் கைகளில் விலங்கிடப்பட்டது.

"சார்... என்ன பண்ணுறீங்க? எதுக்கு எங்கள அரெஸ்ட் பண்ணுறீங்க?" எனக் கேட்டான் கிஷோர் அதிர்ச்சியாக.

"இன்னும் கொஞ்சம் நேரத்துல எல்லாமே புரியும்." எனக் கிஷோரிடம் கூறிய அபிஷேக், "அவங்கள கூட்டிட்டு வாங்க." என ஒரு காவல் அதிகாரியிடம் கூற, கோபமாக உள்ளே வந்தாள் அனுபல்லவி.

பிரதாப் சென்று சற்று நேரத்திலேயே கண் விழித்து விட்டான் பல்லவன்.

தந்தை கண் விழித்து விட்டதைக் கண்டு அனுபல்லவி ஆனந்தக் கண்ணீர் வடிக்க, தன் மறு உருவமாக இருந்த மகளை அடையாளம் காண முடியாமல் போகுமா அப் பாசக்காரத் தந்தைக்கு?

"ப...பல்லவி?" எனக் கண்ணீருடன் பல்லவன் கேட்கவும் அவனின் கரத்தைப் பற்றிக் கொண்டு ஆம் எனத் தலையசைத்த அனுபல்லவி மறு நொடியே இத்தனை நாட்கள் நெஞ்சை அடைத்து வைத்திருந்த துக்கம் தாளாமல், "அப்பா..." எனப் பல்லவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு கதறினாள்.

அனுபல்லவியுடன் சேர்ந்து கண்ணீரில் கரைந்த பல்லவனுக்கோ தன் மகளைத் தொட்டு உணரக் கூட கரங்களை அசைக்க முடியவில்லை.

இத்தனை வருடங்கள் அவனுக்கு செலுத்திய மருந்தின் காரணமாக கழுத்துக்குக் கீழே எல்லாம் மரத்துப் போனது போல் இருந்தது.

"ப...பல்லவி... என் ஷியா... உன் அம்மா... அவ எங்க? அ...வளுக்கு தெரியுமா நான் உயி...ரோட இருக்குறது. பாவம் ஷியா. நா...ன் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா. அ...வள பார்க்கணும் போல இருக்குடா. அ... ம்மா கிட்ட கூட்டிட்டுப் போறியா?" எனக் கேட்டான் பல்லவன் திக்கித் திணறி.

அனுபல்லவியோ தந்தைக்கு என்ன பதில் அளிக்க எனத் தெரியாது மௌனமாகக் கண்ணீர் வடிக்க, அதே நேரம் அங்கு ஒரு போலீஸ் வண்டியும் அம்பியுலன்ஸும் வரவும் அவர்களின் பேச்சு தடைப்பட்டது.

உள்ளே வந்த அபிஷேக், "யூ ஆர் சேஃப் நவ் சார்." என்றான் பல்லவனிடம்.

பின் அங்கு ஒரு ஓரமாக கட்டி வைக்கப்பட்டு மயக்கத்தில் இருந்த மருத்துவனை கைது செய்து விட்டு பல்லவனை அம்பியுலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உள்ளே வந்த அனுபல்லவியைக் கண்டு கிஷோர், ஹேமா இருவரும் ஏகத்துக்கும் அதிர்ந்தனர்.

"உயிரோடு இருக்குறவர இறந்துட்டார்னு போலி ஆதாரங்கள காட்டி போலீஸையும் ஊரையும் ஏமாற்றினதுக்காகவும் இருபத்தி இரண்டு வருஷமா மிஸ்டர் பல்லவன அடைச்சி வெச்சி அவருக்கு போதிய சிகிச்சை கொடுக்காததாலும் அவரோட மனைவி மற்றும் பொண்ணை கொலை செய்ய முயற்சித்ததுக்காவும் உங்க யெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணுறோம்." என்றான் அபிஷேக் அழுத்தமாக.

"என்ன சார் சொல்றீங்க? இவ பொய் சொல்றா. எங்க அண்ணன் நிஜமாவே இறந்துட்டார். சொத்துக்காக இவ இப்படி எல்லாம் பண்ணுறா. இவள முதல்ல அரெஸ்ட் பண்ணுங்க சார்." எனக் கோபமாகக் கத்தினாள்.

அறுபல்லவி அவளைத் துச்சமாக நோக்க, "போதும் மா உங்க ரெண்டு பேரும் இத்தனை நாள் போட்ட நாடகம். நிறுத்துங்க எல்லாத்தையும்." எனக் கத்தினான் பிரதாப் கோபமாக.

ஹேமா அதிர்ச்சியாக மகனை நோக்க, "நீங்க ரெண்டு பேரும் இத்தனை நாள் போட்ட நாடகத்துக்கு கண்ணால் பார்த்த சாட்சியே நான் தான். நீங்க அடைச்சி வெச்சிருந்த இடத்துல இருந்து மாமாவ காப்பாத்திட்டோம். உங்களுக்கு ஹெல்ப் பண்ண டாக்டரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவனோட லைசன்ஸையும் பறிச்சிட்டாங்க. உங்களுக்கு எதிரா எல்லா ஆதாரமும் பலமா இருக்கு. இன்னும் எதுக்காக இந்த நாடகம்?" எனக் கேட்டான் பிரதாப் கோபமாக.

"பிரதாப் நாங்க..." எனக் கிஷோர் ஏதோ கூற வர, "போதும் பா. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க. உங்க ரெண்டு பேரையும் அப்பா அம்மான்னு சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு. வெட்கமே இல்லாம சொத்துக்காக சொந்த அண்ணனுக்கே இப்படி ஒரு அநியாயத்த பண்ணி இருக்கீங்களே ம்மா. உங்க பழி, பாவத்துக்கு என்னையும் கூட கூட்டு சேர்க்க பார்த்தீங்க. இந்த நிமிஷம் எனக்கு என்னை நினைச்சே வெறுப்பா இருக்கு." எனக் கோபமாகக் கூறிய பிரதாப்பின் குரல் இறுதியில் உடைந்தது.

பின் அவர்களைக் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் செல்ல, அங்கேயே மடிந்தமர்ந்து உடைந்து அழுதான் பிரதாப்.

அனுபல்லவிக்கே அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

அவளால் அவனின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பிரதாப்பின் அருகே சென்ற அனுபல்லவி அவனின் தோளில் கை வைத்து, "மாமா..." எனத் தயக்கமாக அழைக்க, அவளின் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்ட பிரதாப், "என்னை மன்னிச்சிடு அனு. சத்தியமா எனக்கு எதுவுமே தெரியாது. அத்தை உயிரோடு இருந்திருந்தா என்னை எவ்வளவு கேவலமா நினைச்சிருப்பாங்க? என்னை அடியோட வெறுத்து இருப்பாங்க. உன்ன கூட ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்ல அனு. எனக்கு எல்லாம் மன்னிப்பே கிடையாது. பாவி நான். பாவி." எனத் தலையில் அடித்துக் கொண்டு கதறினான்.

அவசரமாக அவனின் கரங்களைப் பிடித்துக் கொண்ட அனுபல்லவி, "விடுங்க மாமா. நடந்தது நடந்து முடிஞ்சிடுச்சு. இதுக்கு மேல அதைப் பத்தி பேசினாலும் எதுவும் மாறப் போறது கிடையாது. நீங்க உங்க தப்ப உணர்ந்துட்டீங்களே. அதுவே போதும் மாமா. அம்மா இருந்தா கூட உங்கள புரிஞ்சிட்டு இருந்திருப்பாங்க. ஏன்னா அவங்களுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். அழாதீங்க. ப்ளீஸ்." என்றாள் வருத்தமாக.

பிரதாப் ஓரளவு சமாதானம் ஆனதும் இருவருமே பல்லவனைப் பார்க்க, மருத்துவமனைக்குக் கிளம்பினர்.

ஹேமாவையும் கிஷோரையும் அன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருந்ததால் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது.

பல்லவனைப் பரிசோதித்த மருத்துவர் பல்லவனின் உடலுக்குள் செலுத்தி இருந்த மருந்தின் வீரியம் அதிகம் என்பதால் தான் அவனுக்கு கழுத்துக்குக் கீழே வேலை நிறுத்தம் செய்திருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து பல்லவனுக்குச் சிகிச்சை அளித்தும் கைகளை மட்டுமே ஓரளவுக்கு அசைக்க முடிந்தது. கால்களை அசைக்க முடியவில்லை.

அதனால் கட்டிலோடு ஆனான் பல்லவன்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்த பின் அனுபல்லவி தான் அவனின் தேவைகளை எல்லாம் பார்த்துப் பார்த்து நிறைவேற்றினாள்.

பல்லவன் அனுஷியாவைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் அவனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஏதேதோ கூறிச் சமாளித்த அனுபல்லவியால் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாது போக, தயங்கித் தயங்கி அனுஷியா பற்றிய உண்மையைப் பல்லவனிடம் தெரிவித்தாள்.

அதனைக் கேட்டு அதிர்ந்த பல்லவனோ, "ஷியா..." என அவ் இடமே அதிரக் கதறினான்.

அனுபல்லவியால் தந்தையைச் சமாதானப்படுத்தவே முடியவில்லை.

"ஷியா... ஐயோ... அந்தக் கடவுளுக்கு மனசாட்சியே இல்லையா? இப்படி நடக்கக் கூடாதுன்னு தானே அந்தப் படுபாவி கண்ணுல படாம முதல் தடவை அவளைக் காப்பாத்தி என் கூடவே வெச்சிக்கிட்டேன். கடைசியில என்னால என் ஷியாவ காப்பாத்த முடியலயே. உங்க அம்மா நான் இல்லாம எப்படி துடிச்சுப் போய் இருப்பா பல்லவி? ஐயோ... இதுக்கு நான் அந்த ஆக்சிடன்ட்லயே இறந்து போயிருக்கலாமே. என் ஷியா இல்லாத உலகத்துல நான் இருந்து என்ன பிரயோஜனம்?" எனத் தலையில் அடித்துக் கொண்டு கதறினான் பல்லவன்.

அனுபல்லவியும் அவனுடன் சேர்ந்து கண்ணீர் வடிக்க, திடீரென நெஞ்சைப் பற்றிக் கொண்டு மயங்கினான் பல்லவன்.

அதனைக் கண்ட அனுபல்லவி பிரதாப்பிற்கு அழைத்துத் தகவல் தெரிவிக்க, அவன் வந்ததும் பல்லவனை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக மருத்துவர் கூறவும் அதிர்ச்சியில் உறைந்தாள் அனுபல்லவி.

பல்லவனின் உடல்நிலை காரணமாக மீண்டும் ஒரு தடவை அட்டாக் வந்தால் அவனின் உயிருக்கே ஆபத்தாக அமையும் என்றார் மருத்துவர்.

மயக்கத்தில் இருந்து கண் விழித்த பல்லவனோ மனைவியை எண்ணி மீண்டும் கண்ணீர் வடிக்க, "அப்போ என் மேல உங்களுக்குப் பாசம் இல்லையா ப்பா? அம்மாவ போல நீங்களும் பாதியிலேயே விட்டுட்டு போகப் போறேன்னு சொல்றீங்க. என்னை அநாதையா விட்டுட்டுப் போறதுக்குப் பதிலா என்னையும் உங்க கூட கூட்டிட்டுப் போயிடுங்க. இப்படி யாரும் இல்லாம இருக்குறத விட அது எவ்வளவோ மேல்." என்றாள் அனுபல்லவி கண்ணீருடன்.

அதன் பின் தான் பல்லவனுக்குத் தன் தவறு புரிந்தது.

அனுபல்லவியின் தலையை வருடி விட்ட பல்லவன், "அப்பாவ மன்னிச்சிடுடா செல்லம். நீ அநாதை இல்லடா. உனக்கு அப்பா நான் இருக்கேன் டா. உங்க அம்மா எனக்குள்ள வாழுறாங்க. உனக்கு அம்மா, அப்பா எல்லாமே இனி இந்த அப்பா தான்." என்கவும் அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு கதறினாள் அனுபல்லவி.

ஆனால் ஹார்ட் அட்டாக் வந்த பின் பல்லவன் முற்றாகவே உடைந்து போய் விட்டான்.

சதா நேரமும் தன்னவளின் நினைவிலேயே காலத்தைக் கழித்தான் பல்லவன்.

அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் அனுபல்லவி.

பிரதாப்பிடம் எவ்வளோ கூறியும் அவன் கம்பனியைப் பொறுப்பேற்க மறுத்து விட்டான்.

பின் பல்லவனின் கட்டளையில் அனுபல்லவியே அனைத்தையும் பொறுப்பேற்க, அவளுக்கு உதவியாக இருந்தான் பிரதாப்.

தந்தை பற்றிய கவலையில் மூழ்கிக் கிடந்த அனுபல்லவிக்கு வேறு யாரின் நினைவுமே எழவில்லை.

இந் நிலையில் தான் அடிக்கடி மயக்கமும் வாந்தியும் எனத் தடுமாறினாள் அனுபல்லவி.

அதன் பின் தான் இத்தனை நாட்களாக அவளின் உடைக்குள் மறைத்து வைத்திருந்த தாலியின் நினைவு எழ, அதனைக் கையில் எடுத்துப் பார்த்தவளின் மறு கை தன்னால் வயிற்றைப் பற்றிக் கொண்டது.

அப் சமயம் பார்த்து பல்லவனை சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக் கொண்டு அனுபல்லவியைக் காண வந்த பிரதாப்பும் பல்லவனும் அவளின் கழுத்தில் தொங்கிய தாலியைக் கண்டு அதிர்ந்தனர்.

பிரதாப்போ உள்ளுக்குள் உடைந்து விட்டான்.

தன் மாமாவின் மகள் என்பதையும் தாண்டி அவனுக்கு அனுபல்லவியைப் பிடித்திருந்தது.

ஆரம்பத்தில் அவளைத் தவறாக எண்ணிக் கொண்டு வெறுத்தாலும் உள்ளுக்குள் அவள் மீதிருந்த பிரியம் அப்படியே தான் இருந்தது.

"அனு..." என பிரதாப் அதிர்ச்சியாக அழைக்க, திடுக்கிட்டுத் திரும்பிய அனுபல்லவியின் முகம் கலங்கிப் போய் இருந்தது.

அனுபல்லவியின் கழுத்தில் இருந்த தாலியைக் கண்டு பல்லவனுக்குமே அதிர்ச்சியாக இருந்தாலும் மகளின் களையிழந்த முகம் அவனுக்கு வருத்தத்தை அளித்தது.

"என்ன அனு இது தாலி? நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கிட்ட?" என்ற பிரதாப்பின் கேள்விக்கு பதிலளிக்காது தந்தையின் முகத்தைக் கலக்கமாக நோக்கினாள் அனுபல்லவி.

எங்கு தந்தை தன்னைத் தவறாக எண்ணி விடுவாரோ என்ற பயம் தாங்கிய மகளின் பார்வையில் மனம் நொந்த பல்லவன், "பல்லவிம்மா..." என்கவும் அதற்காகவே காத்திருந்தது போல ஓடி வந்து தந்தையின் மடியில் தலை வைத்துக் கதறினாள் அனுபல்லவி.

"எ...என்னை மன்னிச்சிடுங்க ப்பா. சத்தியமா நான் மறைக்கணும்னு நினைக்கல. எனக்கு உங்கள தவிர வேற எதுவுமே கண்ணுக்கு தெரியலப்பா." என்றாள் அனுபல்லவி கண்ணீருடன்.

மகளின் தலையைப் பரிவாக வருடி விட்ட பல்லவன், "மாப்பிள்ளை எங்கம்மா இருக்கார்?" எனக் கேட்கவும், "அவருக்கு என்னோட ஞாபகமே இல்லப்பா." என்ற அனுபல்லவியின் குரல் கமறியது.

அதனைக் கேட்டு பிரதாப்பும் பல்லவனும் அதிர, பிரணவ்வைப் பற்றி அனைத்தையும் கூறிய அனுபல்லவி ஒரு இக்கட்டான வேலையில் திடீரென இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என்று மட்டும் கூறினாள்.

அத்துடன் பிரணவ்வின் விபத்தையும் தற்போது அவன் தன்னைப் பற்றிய நினைவுகளை இழந்து விட்டான் எனக் கூறவும் இருவருக்குமே என்ன கூறுவதென்றே தெரியவில்லை.

பல்லவன் தான் மகளின் வாழ்க்கை பாழாகி விடுமோ எனப் பயந்தான்.

"அனு... நான் வேணா பிரணவ் கூட பேசவா?" எனத் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பிரதாப் கேட்கவும் உடனே மறுப்பாகத் தலையசைத்த அனுபல்லவி, "அந்தத் தப்ப மட்டும் தயவு செஞ்சி பண்ணிடாதீங்க மாமா. வலுக்கட்டாயமா அவருக்கு பழைய நினைவுகள கொண்ட உன் வர முயற்சித்தா அவரோட உயிருக்கே ஆபத்தா முடியும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க." என்றாள் வருத்தமாக.

"அதுக்காக இப்படியே இருக்கப் போறியா டா?" எனக் கேட்ட பல்லவனைப் பார்த்து கசப்பாகப் புன்னகைத்த அனுபல்லவி, "எனக்கு தான் நீங்க இருக்கீங்களேப்பா. அதுவும் இல்லாம என்னைப் பத்தி தெரிஞ்சா அவர் வீட்டுல நிச்சயம் என்னை ஏத்துக்க மாட்டாங்க. அவர் என் கூட இல்லன்னாலும் அவர் நல்லா இருந்தாலே போதும் எனக்கு." என்றவள் சில நொடிகள் மௌனித்து விட்டு, "அ...அது போக... அவரோட நினைவா, எங்களோட காதலோட பரிசா எனக்குள்ள அவரோட உயிர் வளருது. அதுவே போதும் எனக்கு நான் உயிர்ப்பா இருக்குறதுக்கு." என்றாள் வலியுடன் கூடிய புன்னகையுடன்.

பிரதாப்பிற்கும் பல்லவனுக்கும் அதனைக் கேட்டு மீண்டும் அதிர்ச்சி.

ஆனால் அனுபல்லவி இவ்வளவு கூறிய பின்னும் அவளை வற்புறுத்த இருவருக்குமே மனம் வரவில்லை.

பின் அனுபல்லவி தன் பழைய சிம்மை உடைத்துப் போட்டு அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டாள்.

பிரணவ்வின் நினைவு எழும் போதெல்லாம் தன் மணி வயிற்றில் வளரும் தன்னவனின் உயிருடன் பேசுவாள்.

பல்லவனும் அடிக்கடி சுகவீனமுற, அவனைக் கவனிப்பதிலேயே அனுபல்வவியின் நாட்கள் கடந்தன.

நாட்கள் கடந்து மாதங்களாக உருண்டோட, பிரணவ்வின் வாரிசு இவ் உலகில் காலடி எடுத்து வைத்தான்.

பிரஜன் பிறந்த பின் மூவரின் வாழ்விலும் ஒரு பற்றுகோல் வந்தது போல் இருந்தது.

குழந்தையுடன் சேர்ந்து மூவருமே குழந்தை ஆகிப் போயினர்.

இங்கிருந்தால் பிரணவ்வின் நினைவு அடிக்கடி எழுவதால் இந்தியாவில் பிஸ்னஸை பிரதாப்பின் பொறுப்பில் விட்டு விட்டு பிரதாப் எவ்வளவோ கூறியும் கேட்காது தந்தையையும் மகனையும் அழைத்துக் கொண்டு சிங்கப்பூர் கிளம்பினாள் அனுபல்லவி.

பிரதாப் அடிக்கடி சென்று பிரஜனைப் பார்த்து விட்டு வருவான்.

அவனுக்கு ஏனோ பிரஜனின் மீது அலாதிப் பிரியம்.

அது தன் மனம் கவர்ந்தவளின் வயிற்றில் உதித்த குழந்தை என்பதாலோ என்னவோ பிரஜனைத் தன் பிள்ளையாகவே எண்ணினான்.

பிரஜனுக்கு ஓரளவு நினைவு தெரிந்த பின் அவன் அனுபல்லவியிடம் தந்தையைப் பற்றிக் கேட்க, அவளோ அவனுக்கு தாய் மட்டும் தான் எனக் கூறி அப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பாள்.

தன் சக வயது நண்பர்களுடன் விளையாடும் போது பிரஜனுக்கு தந்தையைப் பற்றிய ஏக்கம் எழும்.

அனுபல்லவியிடம் கேட்டால் அவளோ பிரஜனை அடக்க குரலை உயர்த்த, உடனே தாத்தாவிடம் ஓடிச் சென்று புகார் வாசிப்பான்.

அந்த நேரம் பல்லவன் மகளை வருத்தமாக நோக்க, அவளோ யாரிடம் முகம் கொடுக்க மாட்டாள்.

பிரதாப் வந்ததும் தாயைப் பற்றிக் குற்றப் பத்திரிகை வாசிக்க, பிரஜனை வெளியே அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி அவன் விரும்பியதை வாங்கிக் கொடுத்து அவனை சமாதானம் செய்வான் பிரதாப்.

பல முறை பிரதாப் பிரஜனிடம் தன்னை அப்பா என அழைக்கக் கூற, அவனோ அனுபல்லவி தனக்கு தந்தை இல்லை எனக் கூறியதைக் கூறி மறுத்து விட்டான் பிரஜன்.

ஆனால் வெளியுலகுக்கு அனுபல்லவியைத் தன் மனைவியாகவும் பிரஜனைத் தன் மனைவியாகவும் பிரதாப் அறிமுகப்படுத்தி இருக்க, அதனை அறிந்து ஆத்திரம் தலைக்கேறிய அனுபல்லவி பிரதாப்புடன் சண்டை இட்டாள்.

"கழுத்துல தாலியோட, ஒரு பையனையும் வெச்சிக்கிட்டு தனியா இருக்குற பொண்ண ஊர் தப்பா பேசுவாங்க அனு‌." எனப் பிரதாப் தயக்கமாகக் கூறவும், "அதுக்காக எனக்கு வாழ்க்கைப் பிச்சை போடுறீங்களா?" எனக் கேட்டாள் அனுபல்லவி கோபமாக.

அவ் வார்த்தைகளில் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதாப், "ஏன்னா நான் உன்ன காதலிக்கிறேன். பிரணவ் உன் வாழ்க்கைல வர முன்னாடி இருந்தே உன்ன காதலிக்கிறேன். என் அப்பா, அம்மா பேச்சைக் கேட்டு உன் மேல கோவமா இருந்தாலும் என் ஆள் மனசுல உனக்கான காதல் அப்படியே தான் இருந்தது. நான் மட்டும் அவங்கள நம்பி அந்தத் தப்ப பண்ணாம இருந்திருந்தா இன்னைக்கு அந்தப் பிரணவ் இருக்குற இடத்துல நான் இருந்திருப்பேன்." எனக் கத்தினான் தன்னையும் மீறி.

பிரதாப்பின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருப்பதை அறிந்து கொண்ட அனுபல்லவி அன்றிலிருந்து பிரதாப்பிடம் பேசுவதையே நிறுத்தினாள்.

அனுபல்லவி அவனுடன் பேசாமல் இருக்கவும் தான் பிரதாப்பிற்கே தான் எந்தளவு சுயநலமாக இருக்கிறோம் என்பதே உறைத்தது.

இருந்தும் அவனுக்கு அனுபல்லவியை இழக்க மனமில்லை.

பலமுறை அனுபல்லவியிடம் மன்னிப்புக் கேட்டு அவளுடன் பேச முயற்சித்தும் அனுபல்லவியோ அவனைக் கண்டு கொள்ளவே இல்லை.

ஒரு நாள் அனுபல்லவி தன் திருமண நாளில் அறைக்குள் அடைந்து கிடந்து பிரணவ்வின் புகைப்படத்தை அணைத்துக் கொண்டு அழ, அது பிரஜனின் பார்வையில் விழுந்தது.

ஓரளவு புத்தி சாதுர்யமான சிறுவனோ தாய் கூறாமலே தனக்கும் அப் புகைப்படத்தில் இருப்பவனுக்கும் இருக்கும் முகப் பொருத்தத்தை வைத்து அவன் தன் தந்தை என அறிந்து கொண்டான்.

அந்த வாரம் பிரதாப் சிங்கப்பூர் வந்த சமயம் தாய்க்குத் தெரியாமல் ரகசியமாக அப் புகைப்படத்தை எடுத்துச் சென்று பிரதாப்பிடம் காட்டித் தன் தந்தையிடம் அழைத்துச் செல்லப் பிரஜன் கேட்கவும் அதிர்ந்தான் பிரதாப்.

"பிரஜன்... அம்மா மேல அப்போ உனக்கு பாசம் இல்லையா? இத்தனை வருஷமா அம்மா தானே உன்ன வளர்த்தாங்க. இப்போ நீ அப்பா கிட்ட போகணும்னு சொன்னா அம்மா வருத்தப்பட மாட்டாங்களா?" எனக் கேட்ட பிரதாப்பிற்கு எங்கு அனுபல்லவியை இழந்து விடுவோமோ என்ற பயம் எட்டிப் பார்த்தது.

என்றாவது ஒரு நாள் அனுபல்லவி பிரணவ்வை மறந்து தன்னை ஏற்றுக்கொள்வான் என நம்பிக் கொண்டிருந்தான் பிரதாப்.

பிரதாப்பின் கேள்வியில் பிரஜனின் முகம் வாடி விட, அதனைக் காண மனம் பொறுக்காத பிரதாப் வேறு வழியின்றி, "சரி அப்போ ஒரு டீல். நெக்ஸ்ட் மந்த் பிஸ்னஸ் விஷயமா நாம எல்லாரும் இந்தியா போறோம். அங்க வெச்சி முடிஞ்சா நான் உனக்கு உன் அப்பாவ காட்டுறேன். ஆனா உங்க அப்பாவுக்கு இப்போ கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதனால நீ அவர் பையன்னு அவருக்கு தெரியாது. நீயும் சொல்லக் கூடாது. அவர் கூட பேச ட்ரை பண்ணக் கூடாது. அம்மா கிட்டயும் எதுவும் சொல்லக் கூடாது. ஓக்கேயா?" எனக் கேட்கவும், "டீல்..." எனத் துள்ளிக் குதித்தான் பிரஜன்.

அதன் பின் தான் அனைவரும் இந்தியா கிளம்பிச் சென்றது.

ஹைதராபாத்தில் தம் கம்பனிக்கு வந்து பார்த்த அனுபல்லவி அங்கு கூட அனைவரும் தன்னைப் பிரதாப்பின் மனைவியாகப் பார்ப்பதைக் கண்டு கோபம் கொண்டாள்.

ஆனால் தான் மறுத்து ஏதாவது கூறினால் பிரதாப்பிற்கு சங்கடமாக இருக்கும் என்பதாலும் அவள் சில நாட்களுக்கு மட்டுமே இந்தியாவில் இருப்பதாலும் அமைதியாக இருந்தாள்.

அனுபல்லவி இந்தியா வந்து ஒரு வாரம் கடந்த நிலையில் அவளுக்குக் கிடைத்த செய்தியில் ஏகத்துக்கும் அதிர்ந்தாள் அவள்.

அது என்னவென்றால் உடல்நிலை சரியில்லை என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்த்த கிஷோர் அங்கிருந்து தப்பித்து விட்டான் என்பதே.

உடனே பல்லவனுக்கு விஷயத்தைக் கூறிய அனுபல்லவி நிலைமையைப் பற்றி விசாரிக்க காவல்நிலையம் சென்று சற்று நேரத்தில் இங்கு பல்லவனைத் தேடி பழி தீர்க்க வந்தான் கிஷோர்.

வீட்டில் பல்லவனும் பிரஜனும் தனியாக இருந்தது கிஷோருக்குச் சாதகம் ஆகிப் போனது.

கிஷோரை அங்கு எதிர்ப்பார்க்காத பல்லவன் அதிர, பிரஜனோ பயந்து பல்லவனில் மடியில் அமர்ந்து அவனை அணைத்துக் கொண்டான்‌.

தன்னை இந் நிலைக்குத் தள்ளிய அனுபல்லவியைப் பழி தீர்க்க அவளின் மகனைக் கொல்ல முடிவு செய்து பிரஜனை நோக்கி கத்தியை எடுத்துக் கொண்டு முன்னேறிய கிஷோர் கத்தியை பிரஜன் மீது இறக்க முயற்சிக்க, பல்லவன் பிரஜனை மறைக்க முயற்சித்ததால் கத்தி பல்லவனின் முதுகில் இறங்கியது.

கத்தியை உருவி மீண்டும் பிரஜனைக் குத்த முற்பட்ட நொடியில் கிஷோரின் தோளில் ஒரு குண்டு பாயவும் அங்கேயே விழுந்தான் அவன்.

போலீஸிடம் இருந்து தப்பித்த கிஷோர் நிச்சயம் பல்லவனைத் தேடித் தான் வருவான் என எதிர்ப்பார்த்த ஏ.சி.பி அபிஷேக் தான் சரியான நேரத்துக்கு வந்து பல்லவனையும் பிரஜனையும் காப்பாற்றியது.

முதுகில் கத்தி குத்துப்பட்டதால் இரத்தம் அதிகமாக வெளியேறி பல்லவன் மயங்க, கிஷோரைக் கைது செய்து விட்டு உடனே பல்லவனை மருத்துவமனையில் சேர்த்து அனுபல்லவிக்குத் தகவல் தெரிவித்தான் அபிஷேக்.

விஷயம் அறிந்து மருத்துவமனைக்கு ஓடி வந்த அனுபல்லவி பல்லவனை அனுமதித்திருந்த அறைக்கு வெளியே பிரஜனை அணைத்துக் கொண்டு கலங்கிப் போய் அமர்ந்திருந்த பிரதாப்பைக் கண்டு தந்தைக்கு என்னவோ எனப் பயந்தாள்.

"மாமா... அப்பாவுக்கு என்னாச்சு? அவர் எப்படி இருக்கார்?" எனப் பதட்டமாகக் கேட்ட அனுபல்லவியிடம், "ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு அனு. பயப்படும்படி ஒன்னும் இல்லன்னு தான் நினைக்கிறேன். கத்தி அவ்வளவு ஆழமா இறங்கல." எனப் பிரதாப் கூறவும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

பல்லவன் கண் விழித்ததும் மூவரும் சென்று அவனைப் பார்த்தனர்.

மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் துவண்டு போய் இருந்த தந்தையை அணைத்துக் கொண்டு அனுபல்லவி கண்ணீர் விட, அவளை சமாதானம் செய்வதற்குள் பல்லவனுக்குப் போதும் போதும் என்று ஆகி விட்டது.

இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து பல்லவனை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

"என்னை மன்னிச்சிடு அனு. என்னை மன்னிச்சிடுங்க மாமா." எனப் பிரதாப் திடீரெனக் கேட்கவும் அனுபல்லவியும் பல்லவனும் அவனைக் குழப்பமாக நோக்க, "அப்பா ஹாஸ்பிடல்ல இருக்குறது எனக்கு முன்னாடியே தெரியும். அவர் அங்கிருந்து தப்பிச்சதும் முதல்ல எனக்கு தான் கால் பண்ணாரு. மாமாவ பார்த்து அவர் கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு சொல்லவும் நான் தான் மாமா இருக்குற இடத்த சொன்னேன். அதுவும் அவரே போலீஸ்ல சரண்டர் ஆகிடுவேன்னு சொன்னார். திரும்பவும் அவர நம்பி பெரிய தப்பு பண்ணிட்டேன்." என்றான் பிரதாப் தயக்கமாக.

அனுபல்லவி கோபமாக ஏதோ கூற வர, அவளைத் தடுத்த பல்லவன், "பிரதாப்..." என அழைக்கவும் பிரதாப் பல்லவனின் அருகில் வர, யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் பல்லவன்.

பிரதாப் தலை குனிந்து நின்றிருக்க, "ஒரு தடவை தப்பு பண்ணா தெரியாம பண்ணிட்டன்னு விடலாம். ஆனா உன் அப்பன பத்தி தெரிஞ்சும் அவன் தப்பிச்சத பத்தி நீ எங்க கிட்ட மறைச்சிருக்க. உன் அப்பாவாலயும் அம்மாவாலயும் தான் நான் என் பொண்டாட்டிய இழந்தேன். என் பொண்ணு அநாதையா நின்னா. எனக்கு ஒன்னுன்னா நான் பொறுத்துப் போவேன். ஆனா என்னை சார்ந்தவங்களுக்கு ஒன்னுன்னா சும்மா இருக்க மாட்டேன். கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா என் பேரனோட நிலைமை என்ன?" எனப் பல்லவன் கூறும் போதே அவனின் குரல் நடுங்கியது.

அனுபல்லவிக்கும் அதனை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

அதனால் தான் பல்லவனுக்கு பிரதாப் மீது அவ்வளவு கோபம்.

பிரதாப் இன்னுமே தலை குனிந்து நின்றிருக்க, "போதும். இதுக்கு அப்புறம் என் கண்ணு முன்னாடியே வராதே. உன் குடும்பத்தால நான் இழந்தது போதும். இதுக்கு மேல எதையும் இழக்க எனக்கு சக்தி இல்ல." என்றான் பல்லவன் கோபமாக.

"மாமா நான்..." என ஏதோ கூற வந்த பிரதாப்பை இடையிட்ட பல்லவன், "பல்லவிம்மா இவனப் போக சொல்லு இங்க இருந்து." எனக் கத்தினான் கோபமாக.

மறு நொடியே பல்லவனுக்கு மூச்சு வாங்க, "அப்பா... அப்பா... டென்ஷன் ஆகாதீங்க. ப்ளீஸ்..." என பல்லவனுக்குக் குடிக்கத் தண்ணீரைக் கொடுத்தாள் அனுபல்லவி.

பின் திரும்பி பிரதாப்பை அழுத்தமாக நோக்க, மனமுடைந்து அங்கிருந்து கிளம்பினான் பிரதாப்.

பிரதாப்பைக் காணாது பிரஜன் அடிக்கடி அவனைப் பற்றிக் கேட்க, வேறு வழியின்றி மகனுக்காக பிரதாப்பை வீட்டுக்கு வரவழைத்தாள் அனுபல்லவி.

ஆனாலும் அவனிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை அவள்.

பல்லவனுக்கும் பிரதாப்பைக் காணும் போது கிஷோர் பிரஜனைக் கொல்ல முயன்ற காட்சி நினைவுக்கு வர, பல்லவனின் கோபம் குறைய மறுத்தது.

ஆனால் ஏனோ தொடர்ந்தும் பல்லவனால் தன் கோபத்தைத் தொடர முடியவில்லை.

என்ன இருந்தாலும் தான் தூக்கி வளர்த்த மருமகன் அல்லவா?

இவ்வாறிருக்கும் போது தான் பிரதாப்பே எதிர்ப்பார்க்காதது பிரணவ்வே தம்மைத் தேடி வருவான் என்று.

அதுவும் பிரணவ்வுக்கு நினைவு திரும்பி பிரஜனையும் அனுபல்லவியையும் தன்னோடு அழைத்துச் செல்வானோ எனப் பயந்தவன் பிஸ்னஸ் விஷயமாக வந்திருந்தவர்களிடம் அனுபல்லவியைத் தன் மனைவி போல் காட்டிக் கொண்டான்.

அதுவே அனுபல்லவிக்கு பிரதாப் மீது கோபத்தை அதிகரித்தது.

பிரதாப் பிரஜனை அழைத்துக் கொண்டு பார்க் சென்றிருந்த வேலை அவனுக்கு ஒரு அழைப்பு வரவும் பிரஜனை அங்கே விளையாட விட்டு விட்டு சற்றுத் தள்ளி நின்று அழைப்பை ஏற்று பேசினான்.

ஆனால் அங்கு பிரணவ்வும் இருப்பான் என அவன் எதிர்ப்பார்க்கவில்லை.

அதுவும் பிரஜன் 'அப்பா' என அழைத்தவாறு பிரணவ்விடம் செல்லவும் அவசரமாக சென்று பிரஜனைத் தூக்கி தன்னைப் பிரஜனின் தந்தை எனப் பிரணவ்விடம் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அதனால் தான் பிரஜன் அவன் மீது கோபமாக இருந்தது எல்லாம்.

அதன் பின் ஏதேதோ நிகழ்வுகள் நடந்து பிரணவ்வுக்கு நினைவு திரும்பி அனுபல்லவியைத் தன்னுடன் அழைத்தான்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 46

அனுபல்லவியின் கடந்தகாலத்தை அவளின் வாயாலேயே கேட்டதும் அவ் இடத்தில் பெரும் மௌனம் நிலவியது.

பிரஜனை ஆகாஷ் வெளியே அழைத்துச் சென்றிருக்க, மூர்த்தி, லக்ஷ்மி, பிரதாப், பிரணவ், அனுபல்லவி மட்டுமே அங்கிருந்தனர்.

அனுபல்லவியை இழப்பது பிரதாப்பின் மனதை அறுத்தாலும் பிரஜனின் மகிழ்ச்சியைப் பார்க்கும் போது தான் தன் சுயநலம் புரிந்தது.

பிரணவ்விற்கு தன்னவள் அனுபவித்த வலிகளை அவள் சொல்லியே கேட்கும் போது அவ் வலியை அவனும் அனுபவித்தது போல் உணர்ந்தான்.

கண்கள் கலங்க தன்னவளின் முகத்தை வெறித்துக் கொண்டிருந்தவனுக்கு ஏனோ அவள் தன்னை விட்டு விலகிச் சென்றதை மட்டும் அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அவள் தன் கண் பார்வையில் இருந்திருந்தால் என்றோ தனக்கு நினைவுகள் திரும்பி இருக்கலாம் என எண்ணினான் பிரணவ்.

அனுபல்லவி மடியில் கோர்த்திருங்க தன் கரங்களில் பார்வையைப் பதித்திருக்க, இவ்வளவு நேரமும் கலவையான உணர்வுகளில் சிக்கித் தவித்திருந்த லக்ஷ்மி நீண்ட பெருமூச்சுடன் தன் அருகில் அமர்ந்திருந்த கணவனைக் கேள்வியாக ஏறிட்டார்.

மூர்த்தி தன் கண்களை மூடித் திறந்து தன் பதிலைத் தெரிவித்ததும் புன்னகையுடன் அனுபல்லவி அருகே சென்ற லக்ஷ்மி அனுபல்லவியின் தாடையைப் பற்றி அவளின் தலையை நிமிர்த்தி தன்னைக் காணச் செய்தார்.

கண்ணீர் பார்வையை மங்கலாக்கி இருக்க, லக்ஷ்மியை ஏறிட்ட அனுபல்லவியின் தலையை வருடி விட்ட லக்ஷ்மி, "அனு...இதுல எந்த இடத்துல டா உன் தப்பு இருக்கு?" எனக் கேட்டார்.

அனுபல்லவி தயக்கமும் குழப்பமுமாக மௌனமாக இருக்க, "ஒரு தாசியா இருந்தா கூட இன்னொருத்தருக்கு அவங்கள பத்தி பேச எந்த உரிமையும் கிடையாது. ஏன்னா யாரும் விரும்பி அந்த நிலமைக்கு போக மாட்டாங்க. சூழ்நிலை எல்லாருக்கும் ஒரே போல இருக்குறதில்ல. ஒரு குழந்தை நல்ல வழிலயோ, இல்ல தப்பான வழியிலயோ பிறந்தாலும் அந்தக் குழந்தை பிறக்கும் போது கடவுளோட குழந்தையா தான் பிறக்குறாங்க. அங்க அந்தக் குழந்தையோட தப்பு எதுவுமே இல்ல. இங்க நீ ஒரு தப்புமே பண்ணல. ஏன்? உன் அம்மா மேல கூட தப்பு இல்ல. நீ, உன் அம்மா, அப்பா எல்லாருமே விதியின் சதியில மாட்டின கைப்பாவைகள் தான்."

"கட்டினவன் கூட இல்லாம ஒரு பொண்ணு தன்னோட குழந்தைய தனியா வளர்க்குறது லேசிப்பட்ட காரியம் இல்ல. ஒரு பொண்ணா உங்க அம்மாவுக்கு நடந்தது ரொம்ப பெரிய அநியாயம். யாருக்கும் அந்த நிலைமை வரக் கூடாது. உயிரோடு இருக்குற காலம் வரை கஷ்டப்பட்ட உன்னோட அம்மாக்கு இறந்ததுக்கு அப்புறமும் அவங்க ஆன்மா சாந்தியடையாம இருக்குறத அவங்க பொண்ணா நீ விரும்புறாயா?"

அப்பா இல்லாம வளருறது எவ்வளவு கஷ்டம்னு உனக்கு நல்லாவே தெரியும். அப்போ ஏன் மா தெரிஞ்சே அந்தக் கஷ்டத்த உன் பையனுக்கும் கொடுக்க நினைக்கிற? உன் அப்பா, அம்மா பட்ட கஷ்டம் எல்லாம் உன்னோடயும் தொடர்ந்தது போல உனக்கு அப்புறம் உன் பையனும் அது போல கஷ்டப்படலாமா அனு? உன்ன பத்தி நாங்க தப்பா நினைச்சிடுவோமோன்னு நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லம்மா. எங்க ரெண்டு பேரையும் பொறுத்தவரை எங்க வீட்டுக்கு வரப் போற மருமகள் எங்க பையனுக்கு பிடிச்சிருந்தா மட்டும் போதும். அந்தப் பொண்ணோட பேக்ரவுன்ட் எதுவுமே அவசியம் கிடையாது. நாங்க தான் கண்கூடா பார்க்குறோமே பிரணவ் உன் மேல வெச்சிருக்குற காதல. இதுக்கப்புறமும் நாங்க உன்ன மறுப்போமா? உனக்கு அம்மா இல்லன்னு என்னைக்கும் நீ ஃபீல் பண்ணாதே டா. உனக்கு அம்மாவா நான் இருப்பேன்." என லக்ஷ்மி கூறியதும் அவரை அணைத்துக் கொண்டு கதறினாள் அனுபல்லவி.

தன்னவளின் கண்ணீர் மனதை வாட்டினாலும் அவள் தன்னைப் பிரிய நினைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாத பிரணவ் சில நொடிகள் தன்னவளின் முகத்தையே வெறித்தவன் சட்டென அங்கிருந்து வெளியேறினான்.

வாசல் வரை சென்றவனின் பார்வை பிரதாப்பை அழுத்தமாக நோக்க, அவனின் பார்வையில் என்ன புரிந்ததோ பிரதாப்பும் பிரணவ்வைப் பின் தொடர்ந்தான்.

பிரணவ் அவ்வாறு செல்லவும் கலங்கிய கண்களுடன் அவனையே பார்த்திருக்க, அதனைக் கண்டு கொள்ளாது கிளம்பினான் பிரணவ்.

"அவன் கிடக்குறான் விடும்மா நீ. கோவம் போனதும் உன் கிட்ட தான் ஓடி வரப் போறான். உன் மேல ரொம்ப அன்ப வெச்சிட்டான். அதனால தான் நீ அவன விலகி போக நினைச்சத பிரணவ்வால ஏத்துக்க முடியல. ஆனா யாரோ ஒருத்தி சொன்னத நம்பிட்டு ஒரு அம்மாவா நான் கூட என் புள்ளய புரிஞ்சிக்கலன்னு நினைக்கும் போது மனசுக்கு கஷ்டமா இருக்கு." எனக் கண் கலங்கினார் லக்ஷ்மி.

"அஞ்சி வருஷமா அவன் முகத்துல நிஜமான சந்தோஷத்த பார்க்கவே இல்ல நான். முகத்துல உயிர்ப்பில்லாம சுத்திட்டு இருந்தான். நான் தான் ஆப்பரேஷன் பண்ணதனால அப்படி இருக்கான்னு நினைச்சிட்டேன்." என லக்ஷ்மி கவலையாகக் கூற, "விடு லக்ஷ்மி. முடிஞ்சு போன விஷயத்த பத்தி பேசி எந்தப் பிரயோஜனமும் இல்ல. நமக்கு மட்டும் தெரியுமா என்ன இப்படி எல்லாம் நடந்திருக்கும்னு? இந்த ஆகாஷ் பையன் வேற எதுவும் சொல்லல." என்றார் மூர்த்தி.

_______________________________________________

பிரணவ்வைத் தொடர்ந்து வந்த பிரதாப் அவன் காருக்கு அருகில் எங்கோ வெறித்தபடி நின்றிருப்பதைக் கண்டு அவனருகே சென்றான்.

"பிரணவ்..." என பிரதாப் தயக்கமாக அழைக்கவும், "வந்து கார்ல ஏறு. மாமாவ பார்க்கணும் நான்." என்றவன் ஓட்டுனர் இருக்கையில் அமர, அவனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்த பிரதாப் பல்லவனைத் தங்க வைத்திருந்த ஹோட்டலுக்கு வழியைக் கூறினான்.

அவர்கள் இருவரும் வரும் போது பல்லவன் உறங்கிக் கொண்டிருக்க, "நீங்க பேசிட்டு இருங்க. நான் வெளிய இருக்கேன்." என்று விட்டு அவ் அறையில் இருந்து வெளியேறினான் பிரதாப்.

அரவம் கேட்டு கண் விழித்த பல்லவன் பிரணவ்வைக் குழப்பமாக நோக்க, "ஐம் பிரணவ்." எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் பிரணவ்.

உடனே பல்லவனின் கண்கள் மின்ன, பிரணவ்விடம் ஏதோ கூற விழைந்தவர் அவனுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லையோ என்று எண்ணி உடனே முகம் வாடி மௌனம் காத்தார்.

"பல்லவி இப்போ என் வீட்டுல தான் இருக்கா." எனப் பிரணவ் கூறவும் புரியாது முழித்த பல்லவன், "என் பையனும்..." என்ற பிரணவ்வின் வார்த்தையில் முகம் மலர்ந்தார்.

உடனே கட்டிலில் இருந்து எழுந்து அமர முயல, பல்லவனுக்கு உதவி செய்தான் பிரணவ்.

பிரணவ்வின் கரத்தைப் பற்றிக் கொண்ட பல்லவன், "உ...உங்களுக்கு எல்லாம் ஞாபகம் வந்திடுச்சா மாப்பிள்ளை?" எனக் கேட்டார் ஆர்வமாக.

ஒரு கசந்த புன்னகையை சிந்த விட்ட பிரணவ், "உங்க பொண்ணுக்கு அது தான் விருப்பம் போல மாமா. அதனால தானே என் பையன என் கிட்ட இருந்து இத்தனை வருஷம் பிரிச்சு வெச்சிருந்தா." என்றான் வலி நிறைந்த குரலில்.

"அப்படி இல்ல மாப்பிள்ளை. நான் சொல்லி என் பொண்ண நீங்க புரிஞ்சிக்கணும்னு இல்ல. உங்களுக்கே பல்லவி மனச பத்தி ரொம்ப நல்லாவே தெரியும். அவ யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டா. உங்கள பிரிஞ்சி இருக்க கூட ஏதாவது காரணம் இருக்கும். ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசுங்க. எல்லாம் சரியாப் போயிடும். ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்றேன். என் பொண்ணு ஒன்னும் உங்கள பிரிஞ்சி சந்தோஷமா இருக்கல." என்றார் பல்லவன்.

பிரணவ்விற்கும் அது புரியாமல் இல்லை. இருந்தும் ஏதோ ஒன்று அவனின் கோபத்தை இழுத்துப் பிடித்தது.

"உடம்புக்கு எப்படி இருக்கு மாமா இப்போ?" எனப் பிரணவ் பேச்சை மாற்ற, அதனைப் புரிந்து கொண்ட பல்லவனும், "உடம்பு வலிய விட மன வலி தான் மாப்பிள்ளை அதிகம். என் பொண்ணுக்காக தான் இன்னும் இந்த உசுர கைல பிடிச்சு வெச்சிட்டு இருக்கேன். ஆனா அதான் நீங்க இப்போ வந்துட்டீங்களே. இனிமே நிம்மதியா கண்ண மூடுவேன்." என்றவரின் கண்கள் தன்னவளின் நினைவில் கலங்கின.

பல்லவனின் கரத்தை ஆறுதலாக அழுத்திய பிரணவ், "மாமா... உங்க இழப்பு ரொம்பவே பெரிசு. வெறும் வார்த்தைகளால ஆறுதல் சொல்லி அதைப் போக்க முடியாது. ஆனா நீங்க இப்படி அத்தைய நினைச்சி கஷ்டப்படுறத அத்தை விரும்புவாங்களா? உடல் ரெண்டும் தான் பிரிஞ்சி இருக்குறதே தவிர உங்க ரெண்டு பேரோட காதலுக்கு அழிவில்ல. அது எப்போவும் உங்க கூடவே இருக்கும். பல்லவிக்கு பிறந்த வீட்டு உறவுன்னு இருக்குறது நீங்க மட்டும் தான். உங்க பொண்ணு வருத்தப்படுறது உங்களுக்கும் அத்தைக்கும் சந்தோஷத்த தருமா மாமா? இல்லவே இல்ல. உங்க கிட்ட காட்டிக்கலன்னாலும் நீங்க இப்படி பெட்டோட இருக்குறது அவளுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். எந்த நோய்க்கும் பெஸ்ட் மெடிசின் நம்ம மனசு தான். மனசு ஆரோக்கியமா இருந்தா எதையும் சாதிக்கலாம்." என்றான்.

பல்லவன் புன்னகையுடன் சரி எனத் தலையசைத்தார்.

சற்று நேரம் பல்லவனுடன் பேசிக் கொண்டு இருந்து விட்டு பிரதாப்புடன் கிளம்பினான் பிரணவ்.

செல்லும் வழியில் ஆகாஷையும் பிரஜனையும் பார்க்கில் இருந்து அழைத்துக் கொண்டனர்.

ஆகாஷ் வண்டியை ஓட்ட, பக்கத்து இருக்கையில் பிரதாப் அமர்ந்தான்.

பிரஜனும் பிரணவ்வும் பின் இருக்கையில் அமர்ந்துகொள்ள, பிரஜனோ வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தான்.

வார்த்தைக்கு வார்த்தை 'அப்பா...' என்ற வண்ணம் பிரஜன் இருக்க, பிரணவ்வின் நெஞ்சம் குமுறி அழுதது தன் மகனின் தந்தைக்கான ஏக்கத்தைப் புரிந்து கொண்டு.

பிரதாப்போ குற்றவுணர்ச்சியில் வாடினான்.

"அப்பா... இனிமே ஃப்ரெண்ட்ஸ் கிட்ட நீங்க தான் என் அப்பான்னு உங்க இன்ட்ரூ பண்ணலாம்ல. அந்த ஜான் இருக்கானே... அவன் எனக்கு அப்பா இல்லன்னு எல்லார் கிட்டயும் சொல்லி வெச்சிருக்கான். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க. அவங்க பேரன்ட்ஸ் என்னை சிம்பதியா பார்த்தாங்க. எனக்கு பிடிக்கவே இல்ல." என்கவும் பிரணவ்வின் நெஞ்சில் 'சுருக்' என்று ஏதோ தைத்தது.

பிரஜனை வாரி அணைத்துக் கொண்ட பிரணவ், "இனிமே என் பையன யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அதான் அப்பா வந்துட்டேன்ல. ரியல் ஃப்ரெண்ட்ஸ் ஒருநாளும் உன்ன ஹர்ட் பண்ண மாட்டாங்கடா. இங்க உனக்கு நிறைய புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. அவங்க கூட நீ விளையாடலாம்." என்றவனின் பார்வை முன் இருக்கையில் அமர்ந்திருந்த பிரதாப்பின் மீது கோபமாகப் படிய, ஃப்ரன்ட் மிரர் வழியாக அதனைக் கண்ட பிரதாப்பிற்கு திக் என்றானது.

சற்று நேரத்தில் அனைவரும் பிரணவ்வின் வீட்டை அடைய, அனுபல்லவி ஹாலிலேயே அமர்ந்து இருந்தாள்.

தாயை அங்கு கண்டதும் உற்சாகம் அடைந்த பிரஜன், "அம்மா..." என்றவாறு ஓடிச் சென்று அனுபல்லவியை அணைத்துக் கொண்டான்.

"அம்மா... அப்பா சொன்னாங்க நாம இனிமே அப்பா கூட தான் இருக்கப் போறோம்னு. தாத்தா, பாட்டி எல்லாருமே இருப்பாங்களாம். எனக்கு புது ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாடலாமாம். அம்மா... ப்ளீஸ் மா... நாம சிங்கப்பூர் போக வேணாம்மா." என அனுபல்லவியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கெஞ்சினான் பிரஜன்.

அனுபல்லவியின் பார்வை தன்னவனின் மீது ஏக்கமாகப் படிய, பிரணவ்வும் அவளின் பதிலுக்காக அவளையே அழுத்தமாக நோக்கினான்.

"அம்மா... சொல்லுங்கம்மா..." என்ற பிரஜனின் குரலில் தன்னிலை அடைந்த அனுபல்லவி வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், "ச...சரிடா கண்ணா... உன் இஷ்டம் போலவே அ...அப்பா கூட இருக்கலாம்." என்றவளின் குரல் கமறியது.

அப்போது தான் பிரணவ் தன்னையும் மீறி ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

"ஹை ஜாலி... ஜாலி..." என அங்கேயே துள்ளிக் குதித்தான் பிரஜன்.

"அனு... அப்போ நான் கிளம்புறேன். மாமா தனியா இருப்பார். நீ மாமாவ பத்தி கவலைப் படாதே. நான் பார்த்துக்குறேன்." எனப் பிரதாப் கூறவும் அனுபல்லவி சம்மதமாகத் தலையசைக்க, பிரணவ்விடம் பார்வையால் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் பிரதாப்.

"அப்போ நானும் போய்ட்டு வரேன் பாஸ். என் ஆளு கிட்ட பேசி கல்யாணத்துக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணணும்." என வாயெல்லாம் பல்லாகக் கூறிய ஆகாஷின் கழுத்தில் கையைப் போட்டு லேசாக அழுத்திய பிரணவ், "எங்க சார் ஓடுறீங்க? நாம இன்னும் பேச வேண்டியது நிறைய இருக்கே..." என்றவாறு ஆகாஷை வெளியே இழுத்துச் சென்றான்.

அனுபல்லவியோ தன்னவனின் ஒற்றை விழி மொழியை யாசித்து பிரணவ்வை நோக்க, அவனோ அதன் பின் அனுபல்லவியைக் கண்டு கொள்ளவே இல்லை.

பிரணவ் வெளியே இழுத்துச் சென்ற ஆகாஷோ, "பாஸ்... பாஸ்... விடுங்க பாஸ்... மூச்சு முட்டுது. இன்னும் என் கல்யாணத்துக்கே டேட் ஃபிக்ஸ் பண்ணல. அதுக்குள்ள கருமாதிக்கு டேட் ஃபிக்ஸ் பண்ண வெச்சிடாதீங்க." என அலறினான்.

தோட்டத்துக்கு வந்ததும் பிரணவ் தன் பிடியை விலக்க, அவசரமாக கழுத்தை நீவியபடி ஆசுவாசம் அடைந்தான் ஆகாஷ்.

சில நொடிகள் கழித்து பிரணவ்வின் பக்கம் பார்வையைத் திருப்பியவனின் குலை நடுங்கியது.

சுட்டெரிக்கும் விழிகளுடன் ஆகாஷை நோக்கிக் கொண்டிருந்தான் பிரணவ்.

"ஈ... பாஸ்... ரொம்ப சைட் அடிக்காதீங்க. எனக்கு வெக்கம் கமிங்." என ஆகாஷ் இளிக்க, "அடிங்..." என்றவாறு பிரணவ் அவனை அடிக்கக் கை ஓங்கினான்.

ஆகாஷ் சட்டென பயத்தில் கண்களை மூடவும் தன் கையைக் கீழே இறக்கினான் பிரணவ்.

"ஏன் ஆகாஷ் நீ கூட என் கிட்ட எல்லாத்தையும் மறைச்ச? உன்ன நான் ஜஸ்ட் ஒரு எம்ப்ளாயி போலவா ட்ரீட் பண்ணேன்?" என பிரணவ் வேதனையுடன் கேட்கவும், "ஐயோ பாஸ்..." எனப் பதறினான் ஆகாஷ்.

பிரணவ்வின் முகத்தில் இழைந்தோடிய துக்கத்தைக் காணப் பொறுக்காத ஆகாஷ், "சாரி பாஸ். நான் வேணும்னு உங்க கிட்ட எதையும் மறைக்கல. எனக்கே உறுதியா தெரியாத ஒன்ன பத்தி நான் எப்படி உங்க கிட்ட சொல்ல முடியும்? அது போக டாக்டர் வேற உங்களுக்கு பழச ஞாபகப்படுத்தினா உங்க உயிருக்கே ஆபத்துன்னு சொல்லிட்டாங்க. எ...எனக்கு எல்லாத்தையும் விட உங்க உயிர் தான் முக்கியமாப்பட்டது." என்றவனின் கண்களும் கலங்கின.

சில நொடிகள் அங்கு பலத்த மௌனம் நிலவ, "நான் பண்ண தப்புக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன் பாஸ். எ...என்னை வேலைய விட்டு தூக்கினாலும் கூட..." என்ற ஆகாஷிற்கு அதனைக் கூறும் போது நெஞ்சை ஏதோ பெரிய பாரம் அழுத்தியது.

ஆகாஷை அழுத்தமாகப் பார்த்த பிரணவ், "என் கிட்ட இருந்து அவ்வளவு ஈஸியா தப்பிச்சிடலாம்னு நினைச்சியா?" எனக் கேட்கவும் ஆகாஷ், "பாஸ்..." எனக் குழப்பமாக நோக்க, "சீக்கிரம் கல்யாண சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணு மேன்." என்றான் புன்னகையுடன்.

மறு நொடியே, "தேங்க் யூ பாஸ்... ஐ லவ் யூ சோ மச்..." என்றவாறு பிரணவ்வைப் பாய்ந்து அணைத்துக் கொண்ட ஆகாஷை கஷ்டப்பட்டு தன்னை விட்டு விலக்கிய பிரணவ், "போடா டேய்... இதெல்லாம் உன் குட்டச்சி கிட்ட வெச்சிக்கோ." எனப் பொய்க் கோபத்துடன் கூறவும் வெட்கப்பட்டுச் சிரித்தான் ஆகாஷ்.

அதனைக் கண்டு பிரணவ்வின் முகமும் தன்னால் மலர்ந்தது.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 47

பிரணவ்வின் வீட்டில் இருந்து அர்ச்சனாவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்த கார்த்திக் அவள் திமிறத் திமிற அவளின் வாயை அடைத்து கைகளைப் பின்னே கட்டி காருக்குள் அடைத்தான்.

அர்ச்சனா தன் கைக் கட்டை அவிழ்க்கப் போராட, கார்த்திக் கோபமாக வண்டியை ஓட்டிக் கொண்டு சென்று தன் வீட்டில் நிறுத்தினான்.

தன்னை சுட்டெரிக்கும் பார்வை பார்த்த அர்ச்சனாவை ஒரு பொருட்டாகவே கருதாது அவளை இழுத்துச் சென்று வீட்டுக்குள் தள்ளி கதவைத் தாழிட்டான் கார்த்திக்.

அர்ச்சனாவின் கைக் கட்டை கார்த்திக் அவிழ்த்த மறு நொடியே அவனின் கன்னத்தில் இடி என இறங்கியது அர்ச்சனாவின் கரம்.

கார்த்திக்கோ முகத்தில் எந்தவொரு சலனமும் இன்றி அர்ச்சனாவை வெறிக்க, அவன் சட்டைக் காலரை ஆவேசத்துடன் பற்றிய அர்ச்சனா, "என்னடா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல? எதுக்காக இப்படி எல்லாம் பண்ணுற? பிரணவ்வ நான் எவ்வளவு காதலிக்கிறேன்னு உனக்கு நல்லா தெரியும்ல. எதுக்காக என்னை வலுக்கட்டாயமா இழுத்துட்டு வந்த?" எனக் கேட்டாள் கோபமாக.

தன் சட்டையைப் பற்றி இருந்த அர்ச்சனாவின் கரங்களை விலக்கிய கார்த்திக்கோ அவளின் கேள்விக்குப் பதிலளிக்காது நேராக பூஜை அறையை நோக்கி நடந்தான்.

"உன் கிட்ட தான் டா பேசிட்டு இருக்கேன்." எனக் கத்திய அர்ச்சனா குழப்பமாகக் கார்த்திக்கைப் பின் தொடர, அவனோ கண் மூடிக் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தான்.

சில நொடிகள் பொறுத்துப் பார்த்த அர்ச்சனா கார்த்திக் அங்கிருந்து அசையாதிருக்கவும் நீண்ட பெருமூச்சுடன் கண்களை மூடி கடவுளிடம் தன் வேண்டுகோள்களை முன் வைத்தாள்.

திடீரென அவளின் கழுத்து பாரமாக, விழிகளைத் திறந்து குனிந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

அர்ச்சனாவின் கழுத்தில் தொங்கியது கார்த்திக் கட்டிய கனமான தாலிச் சரடு.

மறு நொடியே கார்த்திக்கை அதிர்ச்சியுடன் நோக்கியவாறு அவனின் கரங்களிலே மயங்கிச் சரிந்தாள் அர்ச்சனா.

அர்ச்சனா மீண்டும் கண் விழிக்கும் போது அவள் கட்டிலில் படுத்திருக்க, அவளின் கரத்தைப் பற்றி அதில் முகம் புதைத்து படுத்திருந்தான் கார்த்திக்.

பட்டென தன் கரத்தை அர்ச்சனா இழுத்துக் கொள்ளவும் கார்த்திக் கண் விழித்து அவளைக் குழப்பமாக நோக்கினான்.

தான் ஏதாவது கனவு கண்டு விட்டோமோ என எண்ணியவளின் கைகள் தானாக கழுத்தைத் தடவ, நிதர்சனம் அவளின் முகத்தில் அறைய, கண்கள் தன்னால் கலங்கியது.

"ஆஹ்..." என அர்ச்சனா தலையைப் பற்றியபடி கதற, "அர்ச்சு... அர்ச்சு... என்னாச்சு?" எனக் கேட்டான் கார்த்திக் பதட்டமாக.

அவனை வெறி கொண்டு தள்ளி விட்ட அர்ச்சனாவோ, "என்னாச்சா? இன்னும் என்னடா ஆகணும்? பாவி... பாவி... என் வாழ்க்கையையே அழிச்சிட்டியே. உன்ன ஃப்ரெண்டா நினைச்சத்துக்கு எனக்கு நல்ல செருப்படியா கொடுத்துட்ட." எனக் கதறினாள்.

"அர்ச்சு நான்..." எனத் தன்னிலை விளக்கம் அளிக்க வந்தவனை இடையிட்ட அர்ச்சனா, "போதும் கார்த்திக். இதுக்கு மேல நீ எதுவுமே சொல்ல அவசியம் இல்ல. என் ஆசை, கனவு எல்லாத்துலயும் மண் அள்ளிப் போட்டுட்டியே. இ...இனி நான்... நான்... எப்படி பிரணவ் முகத்த பார்ப்பேன்? எந்த மூஞ்ச வெச்சிக்கிட்டு அவன் முன்னால போய் நிற்பேன்? உன்ன நம்பினதுக்கு இப்படி பண்ணிட்டியே... ஏன் டா?" என முகத்தை மூடிக் கொண்டு கதறினாள் அர்ச்சனா.

"பிரணவ்... பிரணவ்... பிரணவ்... நம்ம ரெண்டு பேருக்கும் இடைல அவன் எப்படி வந்தான்?" எனத் திடீரென கார்த்திக் ஆக்ரோஷமாகக் கத்தவும் கார்த்திக் இத் திடீர் அவதாரத்தில் தன் கதறலை நிறுத்தி அதிர்ச்சியில் உறைந்தாள் அர்ச்சனா.

"சொல்லு டி. உன்னையும் உன் காதலையும் கால் தூசியா கூட மதிக்காதவன் பின்னாடியே போற. இத்தனை வருஷமா உன் கூடவே இருக்கேன். உன் பின்னாடி நாய் மாதிரி அலையிறேன். என் காதல ஒரு தடவை கூடவா நீ உணரல?" என்ற கார்த்திக்கின் கேள்வியில் அர்ச்சனாவிற்கு மேலும் அதிர்ச்சி.

அவன் தன் மீது அன்பாக இருப்பதை அவளும் அறிவாள்.

ஆனால் அதனை நட்பென்று எண்ணி இருந்தவங்களுக்கு இச் செய்தி புதிது.

"சின்ன வயசுல இருந்தே உனக்கு நான், எனக்கு நீன்னு தானே ஹோம்ல வளர்ந்தோம். நமக்குள்ள எப்போ பிரணவ் வந்தான்? உன் மேல கடலளவு காதல் இருந்தும் உனக்கு அந்தப் பிரணவ்வ தான் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதும் நான் என் காதல் நிறைவேறலன்னாலும் உன்னோட காதல் நிறைவேறணும்னு உனக்கு சப்போர்ட் பண்ணேன். அனு பிரணவ்வ விட்டு போனதும் நீ ஒரு நாடகமாடி பிரணவ் கூட இருந்த போது உனக்காக அனு திரும்பி வரக் கூடாதுன்னு கடவுள் கிட்ட கூட வேண்டிக்கிட்டேன். அதனால தான் எங்க உன் பக்கத்துல இருந்தா எனக்கே தெரியாம என் காதலுக்காக சுயநலமா யோசிச்சிடுவேனோன்னு பயத்துல தான் இந்த அஞ்சு வருஷமா வீடு, வேலை எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உன்ன மறக்க முடியாம உன்னோட நினைவுகளோட ஊர் ஊரா சுத்தினேன். ஆனா எப்போவும் உன்ன கண்காணிச்சிட்டு இருந்தேன் எந்த வழிலயாவது. ஆனா எப்போ பிரணவ்வுக்கும் அனுவுக்கும் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையே இருக்குன்னு தெரிஞ்சதோ இதுக்கப்புறமும் உன்னோட இந்த நாடகத்துக்கு துணையா நின்னா நீயும் பெரிய பாவி ஆகிடுவியோன்னு தான் திரும்பி வந்தேன். என் காதல் நிறைவேறலன்னாலும் உன் காதல் நிறைவேறணும்னு நினைச்சேன் நான். ஆனா உன் ஒருத்தியோட காதல் நிறைவேற இரண்டு பேரோட காதல் அழிஞ்சி போகவும் ஒரு சின்னப் பையன் அப்பா இல்லாம வளரவும் என்னால நினைக்க முடியல. ஏன்னா அப்பா, அம்மா இல்லாம அநாதையா வளருற கொடுமை என்னன்னு எங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப நல்லா தெரியும். அர்ச்சு... பிரணவ் போல என்னால உன்ன தங்கத் தட்டுல வெச்சி தாங்க இப்போதைக்கு முடியாது தான். ஆனா காலம் பூரா உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராம என்னால உன்ன தாங்க முடியும். பிரணவ்வ ஒருவேளை நீ கல்யாணம் பண்ணி இருந்தா நீ அந்த வீட்டுல இளவரசியா இருந்து இருக்கலாம். ஆனா என்னோட வாழ்க்கைல எனக்கும் இந்த வீட்டுக்கும் நீ தான் மகாராணி." எனக் கோபமாக ஆரம்பித்து வருத்தமாக முடித்தான் கார்த்திக்.

கார்த்திக்கின் பேச்சில் அர்ச்சனா வாயடைத்துப் போய் அமர்ந்து இருந்தாள்.

கூடவே கார்த்திக்கின் கலங்கி இருந்த கண்கள் அர்ச்சனாவின் இதயத்தை வெகுவாய்க் குடைந்தது.

என்ன இருந்தாலும் உற்ற தோழன் ஆயிற்றே.

சில நொடிகள் மௌனம் காத்த கார்த்திக் நீண்ட ஒரு பெருமூச்சின் பின், "உன் மனசுல இப்போ என்னைப் பத்தி நீ என்ன நினைச்சிட்டு இருக்கன்னு எனக்கு தெரியல. ஆனா இத்தனை நாளா உன் காதல் நிறைவேறணும்னு தான் ஆசைப்பட்டேன். இனி அப்படி கிடையாது. இது எனக்கு கடவுள் கொடுத்த வாய்ப்பா நான் பார்க்குறேன். நிச்சயம் என் காதல ஒரு நாள் நீ புரிஞ்சிக்குவ. புரிய வைப்பேன்." என அழுத்தமாகக் கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினான்.

கார்த்திக் சென்றதும் சிந்தனையில் ஆழ்ந்த அர்ச்சனாவிற்கு கார்த்திக்கின் காதல் ஏனோ காயம்பட்ட இதயத்தை மயிலிறகால் வருடுவது போல் இருந்தது.

ஆனால் இத்தனை வருடங்களாக நல்ல நண்பனாக எண்ணிக் கொண்டிருந்தவனை திடீரென காதலனாகவோ, கணவனாகவோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவளால்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

'கார்த்திக் கூறுவதும் சரி தானே. பிரணவ்வின் பின்னால் காதல் என்று அத்தனை வருடங்களாக சுற்றினாள். இருந்தும் நினைவுகள் மறந்த பின் கூட தன்னை அவன் ஏற்றுக் கொள்ளவில்லையே. அது போக பிரணவ்வின் மீது தனக்கு காதலை விட, சுயநலம் தானே அதிகம் இருந்தது. அவனின் செல்வச் செழிப்பு தானே அவன் மீது காதல் கொள்ளக் காரணமே. ஆனால் கார்த்திக் என்னவென்றால் தன்னை தனக்காகவே காதலிக்கிறான்.' என்ற எண்ணமே தித்திப்பாக இருந்தது அர்ச்சனாவிற்கு.

_______________________________________________

அன்று இரவு அனுபல்லவிக்கும் பிரஜனுக்கும் லக்ஷ்மி பிரணவ்வின் அறையைக் காட்டிக் கொடுக்க, மகனை உறங்க வைத்த அனுபல்லவி தன்னவனின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

ஆனால் நேரம் சென்றதே தவிர பிரணவ் வந்தபாடில்லை.

அனுபல்லவி தன்னை மறந்து உறங்கி விட, நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்த பிரணவ்விற்கு தன் அறையில் நுழையும் போதே அவனின் பார்வையில் விழுந்த தாயும் மகனும் மனதுக்கு இதமாக இருந்தது.

கூடவே ஒரு ஏக்கப் பெருமூச்சும்.

மறுநாள் காலையில் அனுபல்லவி கண் விழிக்கும் போது நேரம் எட்டைக் கடந்து இருந்தது.

பிரஜனையும் அருகே காணவில்லை.

முதல் நாளே இவ்வளவு தாமதாக எழுந்ததற்கு லக்ஷ்மி ஏதாவது கூறுவாரோ என்ற பயத்தில் அவசரமாக குளித்து உடை மாற்றி கீழே செல்ல, பிரஜனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார் லக்ஷ்மி.

"சாரி அத்தை‌ அது..." எனத் தயக்கத்துடன் ஏதோ கூற வந்தவளை இடையிட்ட லக்ஷ்மி, "ரொம்ப டயர்டா தூங்கிட்டு இருந்த மா நீ. அதனால தான் உன்ன எழுப்பல. பிரஜன நானே வாஷ் பண்ணி சாப்பாடு ஊட்டுறேன். நீ வந்து உட்காரு மா. நான் உனக்கு காஃபி கொண்டு வரேன்." என்கவும் அவரின் பாசத்தில் அனுபல்லவியின் கண்கள் கலங்கின.

உடனே தன்னை மீட்டுக் கொண்டவள், "பரவால்ல அத்த. நானே போட்டுக்குறேன். நீங்க இருங்க." என்ற அனுபல்லவியின் பார்வை தன்னவனைத் தேடி வீட்டை வலம் வந்தது.

ஆனால் பிரணவ்வோ அவளின் பார்வையில் விழவே இல்லை.

லக்ஷ்மியிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது.

அனுபல்லவி காலை உணவை முடித்த நேரம் சரியாக அவளின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

பிரதாப் தான் அழைத்திருந்தான்.

அழைப்பை ஏற்ற அனுபல்லவி, "சொல்லுங்க மாமா... அப்பா எப்படி இருக்கார்? நான் இப்போ அப்பாவ பார்க்க வரலாம்னு தான் இருந்தேன். நேத்து நடந்த பிரச்சினைல அப்பா கிட்ட கூட எதுவும் சொல்ல முடியல." என்றாள்.

மறு முனையில் பிரதாப்போ, "மாமாவ ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கோம் அனு." என்கவும் பதட்டமடைந்த அனுபல்லவி, "எ... என்னாச்சு மாமா அப்பாவுக்கு? எந்த ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கீங்க? நான் உடனே வரேன்." என்றாள்.

"அனு அனு... வெய்ட்... காம்டவுன். மாமாவுக்கு எதுவும் இல்ல. நீ பயப்படும்படி ஒன்னும் இல்ல. ட்ரீட்மெண்ட்டுக்கு தான் சேர்த்து இருக்கோம். நீ கிளம்பி VAV ஹாஸ்பிடல் வா. நான் மத்த டீட்டெய்ல்ஸ் சொல்றேன்." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான் பிரதாப்.

உடனே அனுபல்லவி பிரஜனை லக்ஷ்மியிடம் விட்டு விட்டு அவரிடம் கூறிக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினாள்.

அனுபல்லவி மருத்துவமனையை அடைந்த போது பிரதாப் யாருடனோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

அனுபல்லவியைக் கண்டதும் அழைப்பைத் துண்டித்து விட்டு அவளை நோக்கி வந்தவனிடம், "என்னாச்சு மாமா? ஏன் அப்பாவ ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கீங்க?" எனக் கேட்டாள் பதட்டமாக.

"அனு... முன்னாடியே சொல்லிட்டேன். ஜஸ்ட் ட்ரீட்மெண்ட்டுக்காக தான். இனிமே சிங்கப்பூர் போய் மாமாவுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க அவசியம் இல்ல. இங்கயே ட்ரீட்மெண்ட்ட கன்ட்னியூ பண்ணலாம்." என்றான் பிரதாப்.

அனுபல்லவி அவனைக் குழப்பமாக நோக்க, "பிரணவ் தான் மாமாவ ஹாஸ்பிடல் சேர்த்தார். மாமாவுக்கு சிங்கப்பூர்ல ட்ரீட்மெண்ட் பண்ண இருந்த டாக்டர் ஆன்டனி இன்னும் டூ டேய்ஸ்ல மாமாவுக்காக ஸ்பெஷலா இங்க வரார்." என பிரதாப் கூறவும் அனுபல்லவியின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் படர்ந்தன.

"பிரணவ் எங்க இருக்கார்?" என அனுபல்லவி கேட்கவும் தோளைக் குலுக்கிய பிரதாப், "தெரியல அனு. நேத்து வந்து மாமாவ மீட் பண்ணிட்டு போனார். நைட் எனக்கு கால் பண்ணி இந்த ஹாஸ்பிடல்ல மாமாவ அட்மிட் பண்ண சொல்லி டீட்டெய்ல்ஸ் எல்லாம் சொன்னார்." என்றான்.

பின் இருவரும் சேர்ந்து பல்லவனைக் காண அவர் இருந்த அறைக்குள் நுழைய, அப்போது தான் உறக்கம் கலைந்து எழுந்தார் பல்லவன்.

அனுபல்லவியைக் கண்டதும், "பல்லவி..." என பல்லவன் புன்னகையுடன் அழைக்க, அனுபல்லவிக்கு அவரிடம் எதுவும் தெரிவிக்காதது குற்றவுணர்வாக இருந்தது.

பல்லவனின் அருகில் அமர்ந்த அனுபல்லவி அவரின் கரத்தைப் பற்றி, "அப்பா சாரி... நான்..." எனத் தயக்கமாக ஏதோ கூற முயல, அவளின் கரத்தில் லேசாக அழுத்தம் கொடுத்த பல்லவன், "பல்லவிம்மா... நீ வருத்தப்பட இதுல எதுவும் இல்ல. மாப்பிள்ளை எல்லாமே சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷம். எங்க வாழ்க்கை தான் இப்படி ஆகிப் போச்சு. எங்களோட பொண்ணு வாழ்க்கையும் இப்படியே போயிடுமோன்னு ரொம்பப் பயந்துட்டேன் மா. இப்போ ஐம் பர்ஃபக்ட்லி ஃபைன்." என்றார்.

அதே சமயம் மருத்துவர் அங்கு வர, "அனு... திஸ் இஸ் டாக்டர் சித்தார்த். ஒன் ஆஃப் தி டாப் நியுரோ ஸ்பெஷலிஸ்ட் இனி இந்தியா. இவரும் டாக்டர் ஆன்டனியும் சேர்ந்து தான் மாமாவுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க இருக்காங்க." என்றான் பிரதாப்.

"ஹாய் மிஸ்டர் பல்லவன். ஆல் ஓக்கே? ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல." எனக் கேட்டார் மருத்துவர்.

"யெஸ் டாக்டர். திஸ் இஸ் மை டாட்டர் அனுபல்லவி." என அனுபல்லவியை மருத்துவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் பல்லவன்.

"ஹாய் அனுபல்லவி. நைஸ் டு மீட் யூ அன்ட் நைஸ் நேம்." என்றார் மருத்துவர் புன்னகையுடன்.

"தேங்க் யூ டாக்டர். நைஸ் டு மீட் யூ டூ. அப்பாவுக்கு எப்படி இப்போ?" எனக் கேட்டாள் அனுபல்லவி.

"டோன்ட் வொரி அனு... ஒரு சின்ன சர்ஜரி தான். அதுக்கு அப்புறம் உங்க அப்பா பழையபடியே எழுந்து நடமாடுவார். டூ டேய்ஸ்ல டாக்டர் ஆன்டனி வரார். அவர் வந்ததுமே சர்ஜரிய ஆரம்பிக்கலாம். அதுவரை பேசிக் டெஸ்ட்ஸ் அன்ட் யூசுவல் ட்ரீட்மென்ட்ஸ் நடக்கும். நம்ம மனசு நாம நல்லா தான் இருக்கோம்னு நினைச்சாலே பாதி நோய் குணமாகிடும்." என்றார் மருத்துவர்.

"சாரி அங்கிள். கொஞ்சம் லேட் ஆகிடுச்சு." என்றவாறு திடீரென அவ் அறைக்குள் நுழைந்தான் பிரணவ்.

அவனைக் கண்டதும் அனுபல்லவியின் முகம் பளிச்சிட, பிரணவ்வோ அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.

"ஹேய் யங் மேன். ஆஃப்டர் லாங் டைம்." என்றவாறு அவனை அணைத்துக் கொண்டார் மருத்துவர் சித்தார்த்.

"சாரி அங்கிள். கொஞ்சம் பர்சனல் வர்க்ஸ்ல பிஸியா இருந்தேன். அதனால தான் உங்கள நேரடியா மீட் பண்ணி பேச முடியல. அபிமன்யு எப்படி இருக்கான்? பார்த்து ரொம்ப நாளாச்சு." என்றான் பிரணவ்.

"அவனுக்கென்னப்பா? சிங்கிள் லைஃப்... செமயா என்ஜாய் பண்ணுறான். இங்க தான் ஒரு காலேஜ்ல ப்ரஃபசரா இருக்கான். ஆமா நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற? மூர்த்தி வேற ஃபீல் பண்ணிட்டு இருந்தான் நீ கல்யாணம் பண்ணிக்காம இருக்கன்னு." என சித்தார்த் கூறவும் பிரணவ்வின் பார்வை அனுபல்லவியிடம் திரும்பியது.

தன்னவளின் விழிகளில் இருந்த தவிப்பு பிரணவ்வின் மனதை லேசாகக் கரைக்க, "அங்கிள் அது... சாரி... எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சு. ஷீ இஸ் மை வைஃப் அனுபல்லவி. எங்களுக்கு நாழு வயசுல ஒரு பையன் இருக்கான்." என்கவும், "வாட்..." என அதிர்ந்தார் சித்தார்த்.

"ஆமா அங்கிள். இட்ஸ் அ லாங் ஸ்டோரி. கண்டிப்பா உங்க கிட்ட இன்னொரு நாளைக்கு சொல்றேன். அபிய வேற மீட் பண்ணணும். நீங்க சர்ஜரி பத்தி எல்லாம் சொல்லிட்டீங்களா?" எனப் பேச்சை மாற்றினான் பிரணவ்.

"அதை பத்தி தான் பா பேசிட்டு இருந்தோம்." என்ற சித்தார்த் மேலும் சிகிச்சை பற்றி அவர்களுக்கு விளக்கமளிக்க, அனுபல்லவியோ தன்னவனையே விழி அசைக்காமல் நோக்கினாள்.

அவளைக் கண்டும் காணாதது போல் இருந்தான் பிரணவ்.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 48

பல்லவனுக்கு முக்கியமான சில மருத்துவ பரிசோதனைகள் முடித்து விடவும் அவர் உறங்கி விட, பிரதாப் அனுபல்லவியை வீட்டுக்குச் செல்லக் கூறினான்.

பிரணவ் ஏற்கனவே ஏதோ மீட்டிங் என்று கிளம்பிச் சென்றிருக்க, அனுபல்லவிக்கோ வீட்டில் தனிமை வாட்டியது.

பிரணவ்வின் அருகாமைக்கு அவளின் மனம் வெகுவாக ஏங்க, அவனின் நினைவில் சிக்கித் தவிப்பதை விட தந்தையின் அருகில் இருப்பது மனதுக்கு சற்று இதமாக இருந்தது.

சில மணி நேரங்கள் கழித்து வீடு சென்றவளை வரவேற்றது அவளின் ஆருயிர்த் தோழியின் குரல்.

"சாரு..." என ஆவலாக அழைத்துக் கொண்டு அனுபல்லவி வீட்டினுள் நுழைய, அவளைக் கண்டதும் கண்கள் பளிச்சிடத் திரும்பிய சாருமதி சட்டென ஏதோ நினைவு வந்தவளாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அனுபல்லவிக்கு தோழியின் புறக்கணிப்பு வலியைக் கொடுக்க, சாருமதியின் அருகே அமர்ந்து அவளின் கரத்தைப் பற்றிக் கொண்ட அனுபல்லவி, "நீயும் என் கூட பேச மாட்டியா?" எனக் கேட்டாள் வலி நிறைந்த குரலில்.

அவளின் கேள்வியே சாருமதிக்கு பிரணவ்வின் விலகலை தெளிவாகக் கூற, தானும் அவளைக் கஷ்டப்படுத்தக் கூடாது என அனுபல்லவியை பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.

அவ்வளவு தான். மறு நொடியே இத்தனை நாட்களும் உள்ளுக்குள் பூட்டி வைத்திருந்த மொத்த பாரத்தையும் வெளியே கொட்டி விடுவது போல் சாருமதியை அணைத்துக் கொண்டு நெஞ்சம் உடைந்து கதறி அழுதாள் அனுபல்லவி.

பிரஜன் ஆகாஷுடன் வெளியே சென்றிருக்க, சாருமதியுடன் பேசிக் கொண்டிருந்த லக்ஷ்மி தோழிகள் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார்.

"ஷ்ஷ்ஷ்... அனு... போதும் விடு. அதான் எல்லாம் சரி ஆகிடுச்சுல்ல." என்றவாறு சாருமதி அனுபல்லவியின் முதுகை வருடி விட, "உங்க எல்லாரையும் நான் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல." என மேலும் அழுதாள் அனுபல்லவி.

"ப்ச்... அனு... நீயும் தானே ஹர்ட் ஆன. நீ ஒன்னும் ஆசைப்பட்டு அப்படி பண்ணலயே. எல்லாம் சூழ்நிலை தான். ஆனா என் கிட்ட மட்டுமாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்னு தான் எனக்கு ஆதங்கமா இருந்தது. உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு ரொம்ப பயந்துட்டோம்." எனும் போதே சாருமதியின் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் வடிந்தது.

"சாரி டி..." என அனுபல்லவி அழ, "விடு... அழாதே. நான் உன்ன மன்னிச்சிட்டேன். நீ இப்போ மன்னிப்பு கேட்க வேண்டியது பிரணவ் சார் கிட்ட தான். ஆகாஷ் சொல்லி இருக்காரு. அவருக்கு உன்ன பத்தின நினைவுகள் எதுவும் இல்லன்னாலும் அடிக்கடி எதையோ தேடி எங்கயாவது கிளம்பி போய்டுவார்னு. அவரும் இந்த அஞ்சி வருஷமா ஒன்னும் சந்தோஷமா இருக்கல.' என்றாள் சாருமதி.

சாருமதியை விட்டு விலகிய அனுபல்லவி, "அவர் என் மூஞ்ச கூட பார்க்க மாட்டேங்குறார் சாரு. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு." என்றாள் வேதனைக் குரலில்.

"மனசு விட்டு பேசினா தான் எந்தப் பிரச்சினையா இருந்தாலும் முடிவுக்கு வரும் அனு. யாராவது ஒருத்தர் ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து தான் ஆகணும். இல்லன்னா உங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்குற இந்த சின்ன நூலளவு இடைவெளி ரொம்ப அதிகமாகும். முன்னாடின்னா நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான். ஆனா இப்போ உங்களுக்குன்னு உங்கள நம்பி உங்க பையன் இருக்கான். பெரியவங்க நீங்க ரெண்டு பேரும் பண்ண தப்பால அந்தச் சின்ன பையன் ஆல்ரெடி நிறைய அனுபவிச்சிட்டான். இனிமேலாச்சும் அவன் அம்மா அப்பா குடும்பம்னு சந்தோஷமா இருக்கட்டும்." என்ற சாருமதியிடம் சரி எனத் தலையசைத்த அனுபல்லவி, "அ...அவர் என்னை வெ...வெறுத்துட்டாரோன்னு பயமா இருக்கு சாரு." என்றாள் கண்ணீருடன்.

சாருமதி பதிலுக்கு ஏதோ கூற வர, அதற்குள் பிரஜன், "அம்மா..." எனக் கத்திக் கொண்டு ஓடி வரவும் இருவரின் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.

அப்போது தான் கதவின் நிலையில் சாய்ந்து மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு அனுபல்லவியையே அழுத்தமாக நோக்கிக் கொண்டிருந்த பிரணவ்வைக் கண்ட அனுபல்லவிக்கு திக் என்றானது.

அவனின் பார்வையே அவன் வந்து வெகுநேரம் ஆகி விட்டது என்பதை அவளுக்கு எடுத்துரைக்க, அனுபல்லவியின் நா மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.

பிரணவ்வோ அவளைக் குற்றம் சாட்டும் பார்வை பார்க்க, அனுபல்லவியோ பார்வையாலே அவனிடம் மன்னிப்பை யாசித்தாள்.

"ஹாய் சார்..." என்ற சாருமதியின் குரலில் இருவரும் தன்னிலை அடைய, பிரணவ் சிறிய தலையசைப்புடன் சாருமதியை வரவேற்றாள்.

"பாஸ்... தேங்க் யூ பாஸ்... நீங்க மட்டும் இல்லன்னா அந்த எம்டன் அவர் பொண்ண கட்டிக் கொடுக்க சம்மதிச்சு இருக்கவே மாட்டாரு." என ஆகாஷ் பிரணவ்வின் கரங்களைப் பிடித்து நன்றி தெரிவிக்க, பிரணவ்வோ அவனைப் பார்த்து வாயை மூடி சிரித்தான்.

"என்னாச்சு பாஸ்? ஏன் சிரிக்கிறீங்க?" எனக் கேட்ட ஆகாஷ் பிரணவ்வின் பார்வை சென்ற திக்கை நோக்க, அங்கு ஆகாஷை முறைத்தவாறு கொலைவெறியோடு நின்றிருந்தாள் சாருமதி.

"அவசரப்பட்டு வாயை விட்டுட்டியே குமாரு..." எனத் தன்னையே கடிந்து கொண்ட ஆகாஷ் சாருமதியைப் பார்த்து கழித்து வைக்க, "என் அப்பா உனக்கு எம்டனா நெட்ட கொக்கு?" எனக் கேட்டாள் கோபமாக.

அவசரமாக சாருமதியை நெருங்கிய ஆகாஷ், "அச்சோ இல்ல பேபி. நம்ம மாமாவ போய் யாராவது அப்படி சொல்லுவாங்களா? உன் பக்கத்து வீட்டுக்காரங்க தான் மாமாவ பத்தி அப்படி சொன்னாங்க பேபி. அதான் ஒரு ஃப்ளோல வந்திடுச்சு." என்றான் பாவமாக.

"அப்படிங்களா சார்? அந்தப் பக்கத்து வீட்டுக்காரங்க எம்டன் மகள பத்தி எதுவும் சொல்லல்லயா?" என சாருமதி இடுப்பில் கை வைத்துக் கேட்கவும், "அது ஒரு பஜாரி..." என்றான் ஆகாஷ் சட்டென.

அதனைக் கேட்டு சுற்றியிருந்தவர்கள் வாய் விட்டுச் சிரிக்க, அப்போது தான் அவன் கூறியதன் அர்த்தம் உணர்ந்த ஆகாஷ் ஸ்லோ மோஷனில் திரும்பி தன்னவளை நோக்கினான்.

கண்களில் கோபச் சுவாலை வீச ஆகாஷை சுட்டெரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த சாருமதியின் சட்டென நெடுஞ்சான் கிடையாக விழுந்த ஆகாஷ் சாருமதியின் கால்களைப் பற்றிக் கொண்டு, "சாரி சாரி சாரி குட்டச்சி. என் செல்லம்ல. வாய் தவறி வந்திடுச்சு." எனக் கெஞ்சினான்.

ஆகாஷின் செயலில் அனைவரும் அடக்கமாட்டாமல் சிரிக்க, சாருமதிக்கும் சிரிப்பை அடக்குவது பெரும்பாடாகிப் போனது.

அவனின் காதைப் பிடித்து எழுப்பி விட்ட சாருமதி ஆகாஷின் காதைத் திருகி, "மகனே இன்னைக்கு உன்ன பாவம் பார்த்து மன்னிச்சு விடுறேன். ஆனா இனிமே தான் நீ பார்க்க போற எம்டன் மகள் யாருன்னு." என்றான் போலிக் கோபத்துடன்.

"தங்கள் கட்டளையே சாசனம் தாயே..." என ஆகாஷ் வலியில் முகத்தை சுருக்கிக் கொண்டு கூற, அதற்கு மேல் முடியாமல் வாய் விட்டுச் சிரித்தாள் சாருமதி.

அதன் பின் தான் ஆகாஷிற்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

ஆகாஷ் சாருமதியின் வீட்டிற்கு பெண் கேட்டுப் போக, கலாச்சாரத்தில் ஊறிப் போயிருந்த அவளின் தந்தையோ இவர்களின் காதலுக்கு மறுப்புத் தெரிவிக்கவும் பிரணவ் தான் அவரிடம் பேசி அவர் மனதை மாற்றி இருந்தார்.

ஆனால் பிரணவ் சாருமதியின் தந்தையிடம் பேசியிருந்த பேரம் தான் அவர் சம்மதிக்க காரணம் என்று அவர்கள் அறியவில்லை.

சரியாக ஒரு மாதத்தில் திருமணம் என நிச்சயிக்கப்பட்டு இருக்க, பிரணவ்விடமும் அனுபல்லவியிடமும் அவர்களே தம் திருமணத்தை முன் நின்று நடத்தி வைக்க வேண்டும் என அன்புக் கட்டளை இட்டு விட்டு ஆகாஷும் சாருமதியும் அங்கிருந்து கிளம்பினர்.

அவர்கள் சென்றதும் லக்ஷ்மி பிரஜனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட, கணவனும் மனைவியும் மட்டும் அங்கு தனித்து விடப்பட்டனர்.

"பிரணவ் அது..." என அனுபல்லவி ஏதோ கூற முயன்ற போதே அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காது சட்டென வீட்டில் இருந்து வெளியேறினான் பிரணவ்.

பிரணவ்வின் செய்கையில் அனுபல்லவியின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

அடுத்து வந்த இரண்டு நாட்களுமே பிரணவ் அனுபல்லவியை சந்திக்காது கண்ணாமூச்சி ஆட, சரியாக மூன்றாம் நாள் பல்லவனுக்கான சிகிச்சை தொடங்கியது.

லக்ஷ்மியும் மூர்த்தியும் அனுபல்லவிக்கு துணையாக மருத்துவமனை செல்ல, பிரஜனை சாருமதியிடம் விட்டனர்.

அனுபல்லவி பல முறை பிரணவ்வின் கைப்பேசிக்கு அழைத்தும் அவளின் அழைப்புகள் எதுவும் ஏற்கப்படவில்லை.

அவளின் மனம் முழுவதும் ஒரு வெறுமை படர்ந்தது.

சுற்றியும் அவளுக்காக இத்தனை பேர் இருந்தும் ஏனோ தன்னவனின் அருகாமைக்கு அனுபல்லவியின் மனம் வெகுவாக ஏங்கியது.

ஏனென்றால் டாக்டர் சித்தார்த் இவ் அறுவை சிகிச்சை சிறிய ஒன்றாக இருந்தாலும் வாழ்வா சாவா நிலை தான் என்றும் சிகிச்சை வெற்றி பெற்றால் அதன் பின் எந்தப் பிரச்சனையும் இல்லை, மாறாக சிகிச்சை தோல்வியில் முடிந்தால் அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் தெளிவாகவே கூறி இருந்தார்.

பல வருடங்கள் கழித்து கிடைத்த தந்தையின் அரவணைப்பை அனுபல்லவியால் முழுதாக அனுபவிக்க முடியவில்லை.

அனுபல்லவியின் கலங்கிய நிலையைக் கண்டு ஒரு ஓரமாக பிரதாப்பும் வேதனையுடன் நின்றிருந்தான்.

அவளின் இந் நிலைக்கு ஒரு வகையில் தானும் காரணம் தானே என்ற எண்ணமே பிரதாப்பை உயிருடன் வதைத்தது.

பல்லவனின் சர்ஜரி தொடங்கி சில மணித்துளிகள் கடக்க, அனுபல்லவியோ தன் தந்தையை நினைத்து கலங்கிப் போய் உள்ளங்கைகளில் முகத்தை புதைத்து அமர்ந்து இருந்தாள்.

திடீரென அவளின் தோளைச் சுற்றி ஒரு கரம் படரவும் அதற்காகவே காத்திருந்தது போல் அக் கரத்துக்கு சொந்தக்காரனின் மார்பில் முகத்தைப் புதைத்து வெளியே கேட்காதவாறு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

அனுபல்லவியை அணைத்திருந்த பிரணவ் மறு கரத்தால் தன்னவளின் தலையை வருடி, "மாமாவுக்கு ஒன்னும் இல்ல அனு. மைனர் சர்ஜரி தான். சீக்கிரம் ரெகவர் ஆகிடுவார்." என ஆறுதல் அளித்தான்.

ஆனால் அனுபல்லவிக்கு அவன் கூறிய ஆறுதல் மனதில் பதிந்ததோ இல்லையோ அவனின் 'அனு' என்ற அழைப்பு தெளிவாகவே உரைத்தது.

ஏனென்றால் அவளின் தாய்க்கு அடுத்ததாக அவளைப் பல்லவி என அழைத்தது அவன் தான்.

அதுவும் அவர்களுக்கே உரிய பொழுதுகளில் பிரணவ்வின் பிரத்தியேகமான 'பவி' என்ற அழைப்பு கூட காணாமல் போய் இருந்தது.

அதுவே தன்னவனின் விலகலை அனுபல்லவிக்கு எடுத்துரைக்க, அவளின் அழுகை மேலும் அதிகம் ஆகியது.

தந்தையை இழந்து விடுவோமோ என இவ்வளவு நேரமும் கலக்கத்தில் இருந்தவள் இப்போது தன்னவனையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் அழுகை பொங்க, தன்னவனின் மார்பில் அழுத்தமாக முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

தந்தையை எண்ணி கண்ணீர் வடிக்கிறாள் என நினைத்த பிரணவ்வோ, "அதான் சொல்றேன்ல அனு மாமா..." என ஏதோ கூற வந்தவனின் பேச்சு பாதியிலேயே நின்றது அவனை விட்டு சட்டென விலகி அனுபல்லவி பார்த்த வலி நிறைந்த பார்வையில்.

அதன் காரணம் புரிந்தவனுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை. ஏதோ ஒரு இடைவெளி. அனுபல்லவியிடம் இருந்து ஏதோ ஒன்றை அவன் மனம் எதிர்ப்பார்த்தது.

எதுவும் பேசாது அனுபல்லவியின் பின் கழுத்தைப் பிடித்து இழுத்து அவள் முகத்தை மீண்டும் தன் மார்பில் வைத்து அழுத்தவும் இம்முறை அனுபல்லவியின் கரங்கள் தன்னவனைச் சுற்றிக் கட்டிக் கொண்டு மௌனக் கண்ணீர் வடித்தாள்.

பிரணவ்வின் நெஞ்சில் வெம்மை பரவ, தன்னவள் அழுகிறாள் எனப் புரிந்தவனின் கண்களும் லேசாகக் கலங்கின.

அவ்வாறே சில மணித்துளிகள் கடக்க, அனுபல்லவிக்கு இத்தனை நாட்கள் வராத உறக்கம் தன்னவனின் அருகாமையில் வர, பிரணவ்வின் மார்பில் சாய்ந்தவாறே கண்ணயர்ந்தாள்.

சரியாக இரண்டு மணி நேரத்தில் பல்லவனின் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர் சித்தார்த்துடன் மருத்துவர் ஆன்டனியும் வெளியே வர, அவ் அரவத்தில் கண் விழித்த அனுபல்லவி அவசரமாக அவர்களை நெருங்கி, "டாக்டர் அப்பாவுக்கு இப்போ எப்படி? அவருக்கு ஒன்னும் இல்லல்ல. அவர் நல்லா இருக்கார் தானே." எனக் கேட்டாள் பதட்டமாக.

சித்தார்த்தும் ஆன்டனியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, சுற்றி இருந்தவர்களின் இதயத்துடிப்பு எகிறியது.

அனுபல்லவியோ விட்டால் அழுது விடுவேன் என்பது போல் இருக்க, அவளின் அருகே வந்து பக்கவாட்டாக அவளை அணைத்துக் கொண்டான் பிரணவ்.

பிரணவ் கண்களாலேயே சித்தார்த்திடம் என்னவென்று கேட்க, அவனைப் பார்த்து குறுஞ்சிரிப்பு சிரித்த சித்தார்த், "ஆப்பரேஷன் சக்சஸ்... உங்க அப்பா கூடிய சீக்கிரமே பழையபடி எழுந்து நடமாடுவார்." என்கவுமே அனைவருக்கும் போன உயிர் திரும்ப வந்தது.

"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்... ரொம்ப தேங்க்ஸ். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. அப்பாவ நாங்க பார்க்கலாமா?" என்றாள் அனுபல்லவி ஆனந்தக் கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டபடி.

"ஒரு டாக்டரா இது எங்களோட கடமை. நீங்க அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். இன்னும் கொஞ்சம் நேரத்துல பல்லவன வார்டுக்கு மாத்திடுவோம். அப்புறம் நீங்க போய் பார்க்கலாம். ஒரு ஒன் வீக் ஹாஸ்பிடல்லயே ஆப்சர்வேஷன்ல இருக்கட்டும். அப்புறம் எங்க ஃபிசியோதெரபிஸ்ட் பல்லவனுக்கு கொஞ்சம் எக்சர்சைஸ் சொல்லி கொடுப்பார். ஒரு ஒன் மந்த்துக்கு அதெல்லாம் தொடர்ந்து ஃபாலோ பண்ணா பல்லவன் பழையபடி எழுந்து நடமாடுவார்." என்று விட்டு அங்கிருந்து அகன்றார் சித்தார்த்.

அனுபல்லவி இன்னும் பிரணவ்வின் அணைப்பிலேயே இருக்க, பிரணவ்வின் கைப்பேசி ஒலி எழுப்பவும் சட்டென அவனை விட்டு விலகினாள் அனுபல்லவி.

அனுபல்லவியின் விலகலில் சிறு குழந்தையிடம் இருந்து மிட்டாயைப் பறித்தது போல் பிரணவ்வின் மனம் சுணங்கியது.

அடுத்து வந்த ஒரு வாரமும் அனுபல்லவியின் நேரம் மருத்துவமனையிலேயே கழிய, பிரணவ் அடிக்கடி வந்து மனையாளுக்கு துணையாக மருத்துவமனையில் நின்றான்.

ஒட்டிக்கொண்டு பேசாவிடிலும் பார்வையாலும் தன் இருப்பாலுமே தன்னவளுக்கு ஆறுதல் அளித்தான் பிரணவ்.

அதற்கு மேல் ஏனோ அவளை நெருங்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

சரியாக ஒரு வாரம் கழித்து பல்லவனை டிஸ்சார்ஜ் செய்து தம் வீட்டுக்கே அழைத்து வந்தான் பிரணவ்.

பல்லவன் எவ்வளவோ மறுத்தும் கணவனும் மனைவியும் அவர் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை.

வேறு வழியின்றி சம்மதித்த பல்லவனுக்கும் பேரனைப் பிரிந்து இருப்பது கஷ்டமாகத்தான் இருந்தது.

பிரதாப்பை எவ்வளவோ அழைத்தும் அவன் உறுதியாகவே மறுத்து விட்டான்.

இன்னும் சில நாட்களில் சிங்கப்பூர் சென்று அங்கிருக்கும் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் கிளையை தானே பொறுப்பெடுப்பதாகக் கூறியவனுக்கு மீண்டும் இந்தியா வரும் எண்ணமே இல்லை.

பல்லவன் வீட்டுக்கு வந்ததில் அனுபல்லவியை விட பிரஜனுக்குத் அதிக கொண்டாட்டம்.

மருத்துவமனையில் ஃபிசியோதெரபிஸ்ட் தந்த பயிற்சியில் பல்லவனால் ஓரளவு நன்றாகவே இப்போது கை கால்களை அசைக்க முடியுமாக இருந்தது.

தந்தையை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்த அனுபல்லவி மருத்துவமனையில் வைத்து பிரணவ் தன்னிடம் நடந்து கொண்டதை வைத்து அவன் தன்னை மன்னித்து விட்டான் என எண்ணி இருக்க, அந்தோ பரிதாபம் மீண்டும் அவளுடன் கண்ணாமூச்சி ஆடினான் பிரணவ்.

அனுபல்லவியும் பிரஜனும் உறங்கிய பின் வீட்டுக்கு வருபவன் அனுபல்லவி எழுந்திருக்க முன்னே கிளம்பி சென்று விடுவான்.

சில சமயம் வீட்டுக்கே வராமல் கூட போவான்.

இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் பெரியவர்களின் பார்வையிலும் படாமல் இல்லை.

தந்தையின் முன் சிரித்த முகமாக இருந்தாலும் மகளின் மனதை அழுத்தும் பாரம் பல்லவனுக்குப் புரியாமல் இல்லை.

ஆனால் இது கணவனும் மனைவியும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினை என்பதால் அவராலும் எதுவும் செய்ய இயலவில்லை.
 

Nuha Maryam

Moderator
கண்ணீர் - அத்தியாயம் 49

சரியாக ஒரு மாதத்தில் பல்லவன் நன்றாகவே நடக்க ஆரம்பித்து விட, அனுபல்லவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஆனால் தன்னவனின் விலகலும் நிராகரிப்பும் தான் அவளை வருத்தியது.

ஆகாஷ் - சாருமதி திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே என்றிருக்க, இங்கோ கணவன் மனைவி இருவருக்கும் இடையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

பல்லவனை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்து சில நாட்களிலேயே அனுபல்லவி தன் தொழிலை பெங்களூருக்கே மாற்றிக்கொண்டு வேலைக்குச் செல்லத் தொடங்கினாள்.

அதனால் அவளுக்கு பிரணவ்வை சந்திக்கும் வாய்ப்பு நன்றாகவே குறைந்தது.

பிரதாப்பும் சிங்கப்பூர் சென்று செட்டில் ஆகி விட்டான்.

என்ன தான் அனுபல்லவியைப் பிரணவ் புறக்கணித்தாலும் ஒரு தந்தையாய் தன் கடமையை அவன் மறக்கவில்லை.

தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிரஜனுடன் நேரம் செலவழித்து, அவனுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கிக் கொடுத்து, அவனின் ஆசைப்படியே இருசக்கர வண்டியில் ஊரை சுற்றுவான்.

மாலை வீட்டுக்கு வரும் தாயிடம் பிரஜன் அன்று நடந்ததை எல்லாம் ஒப்புவிக்க, அனுபல்லவியின் மனதில் ஏக்கம் அதிகரித்தது.

பிரஜனுக்கு ஐந்து வயதை நெருங்குவதால் அவனை ப்ரீ ஸ்கூலில் சேர்த்து விட, கணவனும் மனைவியும் பார்த்துக்கொள்வதே அரிதாகிப் போனது.

இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நாளும் விரைவிலேயே வந்தது.

அன்று பிரணவ் தன் ஆஃபீஸில் வேலையாக இருக்க, அவனைப் பார்க்க வந்தார் மூர்த்தி.

"அப்பா... என்னப்பா திடீர்னு வந்து இருக்கீங்க? என்ன விஷயம்? அம்மா நல்லா இருக்காங்க தானே." எனக் கேட்டான் பிரணவ் பதட்டமாக.

அவனுக்குப் பதில் கூறாமல் வாகாக அவனுக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்த மூர்த்தியோ, "என்ன பண்ணுறதுப்பா? சொந்தப் பையன பார்க்கவே இப்போ அப்பாய்ன்மென்ட் வாங்கி தான் பார்க்க வேண்டி இருக்கு. வீட்டுல தன்னையே நினைச்சி வயசான அப்பா, அம்மா இருக்காங்குறதே என் புள்ளைக்கு மறந்து போச்சு." என்றார் நக்கலாக.

"அப்பா..." என தயக்கமாக அழைத்தவனின் நெஞ்சில் குற்றவுணர்ச்சி.

"நானும் என் பொண்டாட்டியும் வயசானவங்க. பார்க்க வேண்டியது எல்லாம் பார்த்து வாழ்ந்து முடிச்சிட்டோம். என்ன ஒரே குறை எங்க பையன் பொண்டாட்டி புள்ளன்னு சந்தோஷமா இருக்குறத பார்க்குற கொடுப்பினை எங்களுக்கு இல்ல போல. ஆனா என் பேரன் என்ன தப்பு பண்ணான்? பிறந்ததுல இருந்து அப்படி என்ன அனுபவிச்சுட்டான்? முன்னாடி அப்பா யார்னே அவனுக்கு தெரியாது. இப்போ தெரியும். அவ்வளவு தான் வித்தியாசம்." என சிறிது இடைவெளி விட்டார் மூர்த்தி.

"சாரி ப்பா..." எனத் தலை குனிந்த பிரணவ்விடம், "இல்ல பிரணவ். நான் பேசி முடிச்சிடுறேன். இன்னைக்கு நான் பேசலன்னா பின்னாடி ரொம்ப வருத்தப்படுவேன். நீ சொல்லுவ பிரஜனுக்கு அப்பாவா உன்னோட கடமைய செஞ்சிட்டு தான் இருக்கன்னு... ஆனா ஜஸ்ட் ஆசைப்பட்ட பொருள வாங்கிக் கொடுக்குறதுலயும் ஊர சுத்தி காட்டுறதுலயும் ஒரு அப்பாவோட கடமை நிறைய இருக்கு. நானும் உன்னோட அம்மாவும் பண்ண அதே தப்ப எங்க பையன் தன்னோட பையனுக்கு பண்ணக் கூடாதுன்னு நினைக்கிறோம் நாங்க. ஏன்னா அதனால நாங்க இழந்தது ரொம்பவே அதிகம்." என்ற மூர்த்தியின் குரல் கரகரத்தது.

"அப்பா..." எனக் கலங்கிய கண்களுடன் மூர்த்தியின் கரத்தை அழுத்திய பிரணவ்விற்கு பேச நா எழவில்லை.

தந்தை கூறுவது மறுக்க முடியாத உண்மை தானே.

சிறு வயதில் பெற்றோரின் அன்பிற்காக ஏங்கி, அது கிடைக்காமல் போய் தடம் மாறிச் சென்று இழந்தவைகள் ஏராளம் இருக்க, அதே வலியை தன் உயிரணுவில் ஜனித்த மகவுக்கும் கொடுக்க நினைப்பானா அவன்?

"காலைல என்ன ஆச்சுன்னு தெரியுமா பிரணவ்? அதனால தான் நான் இன்னைக்கு உன் கூட பேச வந்திருக்கேன்." என்ற மூர்த்தியின் குரலில் பிரணவ் தந்தையின் முகத்தை கேள்வியாக ஏறிட்டான்.

காலையில் அனுபல்லவி பிரஜனை ப்ரீ ஸ்கூல் செல்ல தயார்ப்படுத்தி காலை உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள்.

மூர்த்தி, லக்ஷ்மி, பல்லவன் மூவருமே அங்கு தான் இருந்தனர் தத்தம் வேலைகளைப் பார்த்தபடி.

"அம்மா... அப்பாவும் நீங்களும் டிவைஸ் பண்ண போறீங்களா?" எனத் திடீரென கேட்கவும் சுற்றி இருந்தவர்களுக்கு அதிர்ச்சி என்றால் அனுபல்லவியின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.

டிவோர்ஸ் என்ற வார்த்தையை சரியாகக் கூறத் தெரியாமல் சிறுவன் டிவைஸ என்றிருக்க, ஆனால் பெரியவர்களுக்கோ அவன் என்ன கேட்க வருகிறான் எனத் தெளிவாகவே புரிந்தது.

"அம்மா சொல்லுங்க..." என பிரஜன் கெஞ்சவும் தன்னிலை அடைந்த அனுபல்லவி, "பிரஜன்... எங்க இருந்து இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசக் கத்துக்கிட்ட? யாரு உன் கிட்ட அப்படி சொன்னாங்க?" எனக் கேட்டாள் அனுபல்லவி சற்று அதட்டலாக.

"என் ஃப்ரெண்ட் மனோஜ் தான் சொன்னான். அவனோட அம்மாவும் அப்பாவும் கூட திடீர்னு பேசாம விட்டுட்டாங்களாம். அப்புறம் அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டு டிவைஸ் வாங்கிட்டாங்களாம். மனோஜோட அம்மா மனோஜ அவங்க அப்பா கிட்டயே விட்டுட்டு யார் கூடவோ போய்ட்டாங்களாம். இப்போ மனோஜோட அப்பா ஒரு பேட் சித்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து இருக்காங்களாம். அந்த பேட் சித்தி மனோஜ அடிப்பாங்களாம், திட்டுவாங்களாம். மனோஜ் டெய்லி ஸ்கூல் வந்து அழுவான்." என்ற பிரஜன், "நீங்களும் அப்பாவும் கூட டிவைஸ் பண்ணுவீங்களா? மனோஜ் அம்மா மாதிரி நீங்களும் என்னை அப்பா கிட்ட தனியா விட்டுட்டு போய்டுவீங்களா? அப்பா பேட் சித்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு வருவாங்களா? அப்பாவோட ஆஃபீஸ்ல பிரஜுவ தள்ளி விட்ட ஆன்ட்டி போல... பிரஜு அம்மா கூடயே வந்துடுறேன் மா. எனக்கு பயமா இருக்கு." என்ற சிறுவனின் முகமே வெளுத்துப் போனது.

பிரஜனின் பேச்சில் பத்து மாதம் சுமந்து பெற்றவளின் நெஞ்சில் நீர் வற்ற, மகனை வாரி அணைத்துக் கொண்ட அனுபல்லவி, "இல்லடா கண்ணா. இல்ல... அம்மா உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன். எங்கேயும் போக மாட்டேன். என் பிரஜு கூடவே தான் இருப்பேன்." என்றாள் கண்ணீருடன்.

பிரஜனின் பேச்சில் பெரியவர்களின் கண்களும் கலங்கியது.

ஆனால் அவர்களால் மட்டும் என்ன செய்து விட முடியும்.

அனுபல்லவி அவ்வாறு கூறவும் அனுபல்லவியை இறுக்கி அணைத்துக் கொண்ட பிரஜன், "பிரஜுவுக்கு அப்பாவும் வேணும்." என்றான் குரல் கமற.

மகனின் ஏக்கம் அனுபல்லவிக்கு தெளிவாகவே புரிந்தது.

பிரஜன் வெறும் தாய்ப் பாசத்துக்கோ தந்தையின் பாசத்துக்கோ ஏங்கவில்லை.

மாறாக பெற்றோரின் அன்பு தனக்கு ஒருசேர கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறான்.

மகனின் கேள்விக்கு அனுபல்லவிக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை.

தன் வாழ்க்கையை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, எதை நம்பி பிரஜனிடம் வாக்கு கொடுக்க முடியும்?

அதுவும் பிரஜன் கூறியது போல் தன்னவனை வேறு ஒரு பெண்ணுடன் நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

தன் அணைப்பை இருக்கிய அனுபல்லவி, "அ...அப்பா எப்போவும் நம்ம கூட தான் கண்ணா இருப்பார். பிரஜு இனிமே இப்படி எல்லாம் பேசக் கூடாது." என்றவளுக்கு சுற்றி இருந்தவர்களின் முகம் நோக்கவே உள்ளம் குறுகியது.

சட்டென பிரஜனையும் தூங்கிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள்.

மகளின் வேதனையைக் கண்டு பல்லவனின் முகம் வேதனையில் சுருங்கியது.

அவரின் கரத்தைப் பற்றிய மூர்த்தி, "நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சம்பந்தி. பிரணவ் கூட நான் பேசுறேன்‌. எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்." என்க, பல்லவனின் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.

லக்ஷ்மியோ முந்தானையால் வாயை மூடி கண்ணீர் வடித்தார்.

தந்தை கூறிய செய்தியில் பிரணவ்வின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

தன்னவளுக்கு தண்டனை அளிப்பதாக எண்ணி தன் மகனுக்கும் பெரிய அநியாயம் செய்து விட்டேனே.

முதலில் தன்னவளுக்கு தண்டனை கொடுக்க தனக்கு என்ன உரிமை இருக்கிறது?

காதலை வெளிப்படுத்தி சில நாட்களிலேயே அவளை மொத்தமாக ஆட்கொண்டு, அதன் இனிமை நெஞ்சை விட்டு மறைய முன்னே தன்னவளின் நினைவுகளை மொத்தமாக இழந்து விட்டவன் மீது அனுபல்லவிக்கு எவ்வாறு நம்பிக்கை வரும்?

அந்த நம்பிக்கையை முதலில் தான் அவளுக்கு கொடுத்தோமா? என்ற கேள்வியே பிரணவ்விற்கு பூதாகரமாக எழுந்தது.

பிரணவ் தனக்குள் ழ்ந்த யோசனையில் இருக்க, இருக்கையை விட்டு எழுந்த மூர்த்தி, "பிரணவ்... இதுக்கு மேல நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல. இத்தனை வருஷ வாழ்க்கைல நீ இழந்தது அதிகம். ஆனா கை கிட்ட பொக்கிஷத்த வெச்சிக்கிட்டு ஒரு சின்ன மனஸ்தாபத்தால அதை தவற விட்டுட்டன்னா வாழ்க்கை பூரா நீ கஷ்டப்படுவ. உன்ன சுத்தி இருக்குறவங்களும் கஷ்டப்படுவாங்க. எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சு முடிவெடு. உனக்காக ஒரு அழகான வாழ்க்கை காத்துட்டு இருக்கு. அதை மிஸ் பண்ணிடாதே." என அவனின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

தனக்குள் ஏதேதோ சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்த பிரணவ் மாலை ஆனதும் அன்று சற்று நேரத்துடனே வீட்டுக்கு செல்லலாம் என நினைக்க, வழமைக்கு மாறாக அவனுக்கு வேலை மலை போல் குவிந்தது.

இரவு வெகுநேரம் கழித்து வீடு சென்றவனை வரவேற்றது அவனுக்காக ஹாலில் உறங்காமல் காத்திருந்த லக்ஷ்மி தான்.

"என்னம்மா இன்னும் முழிச்சிட்டு இருக்கீங்க? உங்கள தான் டைமுக்கு தூங்கணும்னு டாக்டர் சொல்லி இருக்கார்ல." என சிறந்த தனையனாக தாயைக் கண்டித்தான் பிரணவ்.

"அதுக்கில்லப்பா... காலைல நடந்தது எல்லாம் அப்பா சொல்லி இருப்பார்ல. அனு அப்போ போய் ரூம பூட்டிக்கிட்டது. சாப்பிட கூப்பிட்டும் வரல. பிரஜன மட்டும் அனுப்பி வெச்சா. பையன் எங்க ரூம்ல தூங்குறான். அனு தான் காலைல இருந்தே ஒரு வாய் சாப்பிடாம இருக்கா." என்றார் லக்ஷ்மி கவலையாக.

பிரணவ்விற்கு குற்றவுணர்ச்சி அதிகரித்துக் கொண்டே சென்றது எல்லாம் தன்னால் தானே என்று.

தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போல் இருக்க, பேசுவதே கடினமாக இருந்தது.

"நீ...ங்க போய் தூங்குங்கம்மா. நா...நான்... நான் பார்த்துக்குறேன்." என்றவன் அதற்கு மேல் காத்திருக்காது தாயின் முகத்தைக் கூடப் பார்க்காது அவசரமாக மாடி ஏறி தன் அறைக்குச் சென்றான்.

பிரணவ் அறையினுள் நுழையும் போது விளக்குகள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

கட்டிலில் ஒரு ஓரமாக கால்களை சுருட்டிக் கொண்டு படுத்திருந்த அனுபல்லவியின் வரி வடிவம் ஜன்னல் வழியே வந்த மெல்லிய ஒளியில் தெளிவாகவே தெரிய, பிரணவ்வின் இதழ்கள் தன்னால் விரிந்தன.

ஆனால் மறு நொடியே தந்தையின் வார்தைகள் நினைவுக்கு வந்து மனம் வாடினான்.

அனுபல்லவி உறங்கிக் கொண்டிருந்ததால் குளித்து உடை மாற்றி வந்து அவளுடன் பேசலாம் என்று தன்னவளுக்கு தொந்தரவாக இருக்கும் என்று எண்ணி விளக்கைக் கூடப் போடாது மாற்றுடையை எடுத்துக் கொண்டு நேராக குளியலறைக்குள் நுழைந்தான் பிரணவ்.

சற்று நேரத்தில் குளித்து உடை மாற்றி வெளியே வந்த பிரணவ் அறை விளக்கை ஒளிர்விக்க, கட்டிலில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு சாய்ந்தமர்ந்து அவனையே வெறித்துக் கொண்டிருந்த அனுபல்லவியைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான்.

முடியெல்லாம் கலைந்து, அழுததற்கு சாட்சியாக கண்கள் இரத்தச் சிவப்பாகி, கன்னங்களில் இருந்த காய்ந்து போன கண்ணீர்த் தடங்கள் என வாடிப் போய் கிடந்தவளைக் கண்டு தன்னையே கடிந்து கொண்ட பிரணவ் மறு நொடியே எதுவும் யோசிக்காது அனுபல்லவியை நெருங்கி அவளின் முகத்தை தன் உள்ளங்கைகளுக்குள் தாங்கி, "பல்லவி..." என்றான் கலங்கிய குரலில்.

தன் முகத்தை ஏந்தி இருந்த பிரணவ்வின் கரங்களையும் அவனையும் மாற்றி மாற்றிப் பார்த்த அனுபல்லவி, "பல்லவி?" எனக் கேட்டாள் கசந்த புன்னகையுடன்.

அவள் எதனைக் குறிப்பிடுகிறாள் எனப் புரிந்து கொண்ட பிரணவ்விற்கு அடுத்து என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

மெதுவாக பிரணவ்வின் கரங்களை விலக்கி விட்ட அனுபல்லவி முகத்தை அழுந்தத் தேய்த்து விட்டு பிரணவ்வின் முகத்தை அழுத்தமாக நோக்கினாள்.

பிரணவ்வும் தன்னவளின் வாடிய தோற்றத்தையே விழி அசைக்காமல் கலங்கிய கண்களுடன் நோக்கிக் கொண்டிருக்க, "என்னை அ...அப்படியே போ...க விட்டிருக்கலாம்ல. எ...எதுக்காக இப்படி? உ...உங்க கூட இல்லன்னாலும் உங்க...ளோட வாழ்ந்த அந்த ஒரு நாளே எ...னக்கு ஒரு யுகத்துக்கு உங்க கூட கழி...ச்ச இனிமையான நினைவுகளோட மட்டும் வா...ழ போதுமானது. ஆ...னா இப்போ... என்...னை இப்படி பிடிச்சி வெ...ச்சிக்கிட்டு உ...ங்க பக்கத்துல இருந்தும் உங்கள நெ...ருங்க கூட முடியாத தண்டனைய த...ரீங்க. ஏன் பிரணவ்? என...க்கு வ...லிக்கிது... இங்க..." எனத் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டிய அனுபல்லவிக்கு எவ்வளவோ முயற்சித்தும் அவளின் குரல் உடைவதைத் தடுக்க முடியவில்லை.

கன்னங்களில் கண்ணீர் ஆறாகப் பெருகி ஓட, அழுகையில் முகம் சிவந்து உதடு துடிக்க தன்னைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தவளின் கேள்விக்கு பதிலாக அனுபல்லவியைப் பாய்ந்து அணைத்துக் கொண்ட பிரணவ், "சாரி டி... சாரி... எல்லாம் என் தப்பு தான். நான் அப்படி பண்ணி இருக்கக் கூடாது. என் கஷ்டத்த பத்தி மட்டும் தான் யோசிச்சேன். நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பன்னு நான் யோசிச்சு பார்க்கல." என்றவனின் கண்ணீர் அனுபல்லவியின் தலையில் விழுந்தது.

ஆனால் அனுபல்லவியோ அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிந்து, "தயவு செஞ்சி எ...ன்னை விட்டுடுங்க. நானும் என் பையனும் உ...ங்க வாழ்க்கைல இருந்தே போயிடுறோம். ப்ளீஸ். எ...என்னால முடியல... சத்தியமா... நான் போயிடுறேன்." எனக் கையெடுத்துக் கும்பிட்டபடி கதறினாள் அனுபல்லவி.

அனுபல்லவியின் வார்த்தைகளில் முற்றிலும் நொறுங்கிப் போனான் பிரணவ்.

கட்டிலில் அமர்ந்து இருந்தவளின் முன் சட்டென மண்டியிட்டு தரையில் அமர்ந்தவன் அனுபல்லவியின் கரங்களை எடுத்து தன் உள்ளங்கைகளுக்குள் புதைத்துக் கொண்டு, "இ...இந்த ஒரு வார்த்தை தான் டி என்னை உன் கிட்ட நெருங்க முடியாம தடுக்குது." எனக் கண்ணீருடன் கூறவும் அவனைக் குழப்பமாக ஏறிட்டாள் அனுபல்லவி.

"ஏன் டி திரும்ப திரும்ப விட்டு போயிடுறேன் விட்டு போயிடுறேன்னே சொல்ற. என்ன நடந்தாலும் என் கூட இருப்பன்னு எல்லாம் சொன்ன. எல்லாம் வாய் வார்த்தை தானா? அந்த அஞ்சி வருஷத்த கூட நான் விட்டுடுறேன். ஆனா எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்து உன்ன என் கூட வாழ கூப்பிட்ட அப்புறம் கூட நீ என்னை விட்டு போக நினைச்சியே. அதைத் தான் என்னால ஏத்துக்கவே முடியல. ஏன் நீ நம்ம காதல தக்க வெச்சிக்க ஒரு முயற்சியுமே எடுக்கல?இதோ இப்போ கூட அதையே தான் சொல்ற. ஏன் பவி? என் காதல் உன்னைப் பொறுத்தவரை ஒன்னுமே இல்லையா? ஒ...ஒருவேளை சி...சிதாராவ ஏமாத்தினது போல உ...ன்னையும் ஏமாத்திடுவேன்னு நினைச்சியா?" எனக் கேட்ட பிரணவ்வின் விழிகள் சிந்திய கண்ணீர் அனுபல்லவியின் கரங்களில் பட்டுத் தெறிக்க, சட்டென தன் கரத்தால் அவனின் வாயை மூடி மறுப்பாகத் தலையசைத்தாள்.

தன் வாய் மீது இருந்த அனுபல்லவியின் கரத்தை விலக்கிய பிரணவ், "அ...அந்த நம்பிக்கைய நான் உனக்கு தரலன்னு நினைக்கும் போது எனக்கும் இங்க வலிக்கிது டி." என்றான் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி.

மறு நொடியே பிரணவ்வின் மார்பில் சாய்ந்து கதறினாள் அனுபல்லவி.

பிரணவ்வும் தன்னவளுடன் சேர்ந்து கண்ணீர் வடிக்க, "எ...எனக்குப் பயமா இருந்ததுங்க. எ...என்னோட தகுதி என்னன்னு எனக்குத் தெரியும். உங்க உண்மையான அடையாளம் என்னன்னு தெரியாம இருக்கும் போது உங்க மேல எனக்கு வந்த காதல் எனக்கு தப்பா தெரியல. ஆ...ஆனா நீங்க தான் மூர்த்தி சார் பையன்னு தெரிஞ்சதும் நா...நான் உங்க முன்னாடி ரொம்ப தாழ்ந்து போய்ட்டது போல ஃபீல் பண்ணேன். நீங்...க எவ்வளவோ உயரத்துல இருக்கீங்க. ஆ...னா என் பிறப்பே எ...எல்லாருக்கும் பேசுபொருளா இருக்கும் போது உங்க கூட நான் நடந்தா உங்க...ளுக்கும் அசிங்கமா இருக்கும்னு தோணிச்சு. அ...அதனால தான் அன்னைக்கு உங்க கிட்ட எல்லா உண்மையையும் சொல்லலாம்னு வந்தேன். ஆ...ஆனா அதுக்குள்ள எ...என்னென்னவோ ஆகிப் போச்சி." என்றவளின் முதுகை ஆறுதலாக வருடி விட்ட பிரணவ், "நீ எப்படி பவி எனக்கு தகுதி இல்லாம போவ? உ...உண்மைய சொல்லணும்னா நான் தான் உனக்கு எந்த விதத்துலயும் தகுதி இல்லாதவன்." என்றான் குரல் தழுதழுக்க.

பிரணவ்வை விட்டு விலகி தலை குனிந்து அமர்ந்த அனுபல்லவி, "இ... இன்னும் ஒரு காரணம் இருக்கு." என்றாள் தயக்கமாக.

பிரணவ் அனுபல்லவியை குழப்பமாக நோக்க, "அ...அந்த ஆக்சிடன்ட்ல உ...உங்களுக்கு..." என அனுபல்லவி கூறும் போதே பிரணவ்வின் பார்வை கூர்மை ஆகியது.

அவனின் அழுத்தமான பார்வையில் அனுபல்லவிக்கு பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டது.

"உங்கள நான் தப்பா நினைக்கல." என அவசரமாகக் கூறிய அனுபல்லவி, "நம்ம காதலுக்கோ, நம்ம கல்யாணத்துக்கோ நம்ம ரெண்டு பேரையும் தவிர சாட்சி யாருமே கிடையாது. அ...அப்படி இருக்குறப்ப... எ...என்னைப் பத்தியும் என் அம்...மா பத்தியுமே இந்த சமூகம் தப்பா பேசும் போது உ...உங்க வீ...ட்டுல எ...என்... இல்ல நம்ம... பையன பத்தியும் யா...ராவது தப்...பா பேசிட்டா என்னால அதைத் தாங்கி...க்க முடியும்னு தோணல. அ...அதனால தான் உங்கள விட்டு மொத்தமா விலகி போய்டணும்னு நினைச்சேன்." என்றவள் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.

அனுபல்லவி அவ்வாறு கூறவும் பிரணவ்விற்கு கோபம் தலைக்கேறியது.

ஆனால் மறு நொடியே அவளின் பேச்சில் இருந்த நியாயம் அவனை மௌனியாக்கியது.

ஒருவேளை தனக்கு மட்டும் நினைவுகள் திரும்பி இருக்காவிட்டால் தன் தாயே நிச்சயம் தன்னவளைத் தவறாகத் தானே எண்ணி இருப்பார்.

அதுவும் அவனின் தாய் அவ்வாறு எண்ணாவிட்டாலும் அர்ச்சனா அவ்வாறு எண்ண வைத்து இருப்பாளே.

நீண்ட பெருமூச்சை வெளியிட்ட பிரணவ் அனுபல்லவியை அமைதியாக நோக்க, "ஆ...னா இப்போ அது எல்லாத்தையும் விட உங்களோட வி...லகல தான் தாங்கிக்க முடியல. எ...ங்க நீங்...க என்னை மொ...மொத்தமா வெ...றுத்துட்டீங்களோன்னு ப...யமா இருந்துச்சு. என்...னால உ...ங்கள வேற ஒரு பொ...ண்ணு கூட நினைச்சி கூட பார்க்க முடியல. இ...ன்னைக்கு காலைல பிரஜு கே...ட்ட கேள்வியில ச...சத்...தியமா செ...த்துடணும் போல இருந்துச்சு." எனப் பிரணவ்வின் முகத்தைப் பார்க்காது தலை குனிந்த வண்ணம் விம்மியவளை தன் மடி மீது அமர்த்திக் கொண்டான் பிரணவ்.

அனுபல்லவியின் விம்மல் மெல்ல மெல்ல கதறலாக மாற, காற்று கூட புகாத வண்ணம் அவளைத் தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான் பிரணவ்.

அழுதுக் கொண்டே பிரணவ்வின் மார்பில் தன் மென் கரங்களால் மாறி மாறிக் குத்திய அனுபல்லவி, "ஏன் என்னை மட்டும் மறந்தீங்க? ஏன் என்னோட நினைவு உங்களுக்கு கொஞ்சம் கூட வரல? ஏன் டா? ஏன்? அது ஏன் என்னை மட்டும் மறந்தீங்க?" எனக் கேட்டுக் கேட்டு குத்தினாள்.

அனுபல்லவியின் கரங்கள் தந்த வலியை விட அவளின் கேள்விகள் பிரணவ்வின் இதயத்தை முள்ளாய்த் தைத்தது.

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல பவிம்மா. எல்லாத் தப்புக்கும் ஆரம்பப் புள்ளி நான் தான். முடிஞ்சா உன் பிரணவ்வ மன்னிச்சிடு டி. ஐம் சாரி..." என்றான் பிரணவ் கண்ணீருடன்.

அவனின் மார்பில் சாய்ந்து மறுப்பாகத் தலையசைத்த அனுபல்லவி, "இ...இல்ல. எல்லாம் என் தப்பு தான். நான் உங்கள விட்டுப் போய் இருக்கக் கூடாது. சாரி..." என்க, அவளின் முகமெங்கும் ஒரு இடம் விடாமல் முத்தமிட்ட பிரணவ், "இல்ல... நான் தான் சாரி." என்றவாறு ஒவ்வொரு முத்தத்துக்குப் பின்னும் மன்னிப்புக் கேட்க, சில நிமிடங்களுக்கு மாறி மாறி இருவருமே மன்னிப்புப் படலம் நடத்தினர்.

சற்று நேரத்தில் அனுபல்லவியின் கண்கள் தூக்கத்திலும் அயர்விலும் சொருக, அனுபல்லவியை மார்பில் கிடத்திக் கொண்டு தரையில் சாய்ந்த பிரணவ், "போதும் பவி அழுதது. நாம ரெண்டு பேரும் நம்ம வாழ்க்கைல நிறைய இழந்துட்டோம். நிறையவே வலிகளைக் கடந்துட்டோம். நிறைய ஏமாற்றங்கள சந்திச்சிட்டோம். இதுவே கடைசியா இருக்கட்டும். இந்த பிரணவ்வோட உடல், உயிர், ஆன்மா எல்லாமே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவனோட பவிக்கு மட்டும் தான். உன்ன தவிர எனக்கு யாருமே பெஸ்ட் கிடையாது. நான் உன் மேல வெச்சிருக்குற காதல் வெறும் மூணு வார்த்தைல சொல்லிட முடியாது. உயிர் போற கடைசி நொடி வரை வாழ்ந்து காட்டுறேன்." என்கவும் அனுபல்லவியின் இதழ்கள் தன்னால் விரிய, நித்ராதேவி இருவரையும் சில நொடிகளில் அரவணைத்துக் கொண்டாள்.
 
Status
Not open for further replies.
Top