எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதகனின் சித்தராங்கி - கதை உருவான விதம்

NNK-30

Moderator
#கதை_உருவான_விதம்

#காதகனின்_சித்தராங்கி, “transmigrating into novel” கான்சப்ட்டை சார்ந்தது. அதாவது டைம் ட்ராவல், warewolf, vampire போல. இந்தக் கதையின் கான்செப்ட், கதை எழுதும் நாயகனோ அல்லது நாயகியோ யாரோ ஒருவர் கதைக்குள் சென்றுவிடுவர்.

இதுபோல் ஆங்கிலத்தில் 700க்கும் மேற்பட்ட கதைகள் வந்து இருக்கின்றன. ஆங்கில பேன்டசி நாவல்கள் படிப்பவர்களுக்குத் தெரியும் 1980களிலே இது போன்ற கான்செப்ட் நாவல்கள் வந்துவிட்டது என்று.

அது மட்டும் இல்லது W two Worlds(kdrama 2016), The Romance of rose and tiger(cdrama2020), the story of kunning palace(cdrama2023) இவை எல்லாம் எனக்குத் தெரிந்த இந்த கான்செப்டை சேர்ந்த டிராமா வகைகள்.

“நாவல்கள் படிப்பது மட்டும் அல்லாது அதன் உள்ளையே சென்று விட விரும்புகின்றேன்” என்ற முகநூலில் வந்த வாக்கியத்தில் கவரப்பட்டேன். அதுமட்டும் அல்லாது மேலே நான் சொல்லிய டிராமா அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தவை அதில் The Romance of rose and tiger(cdrama2020) என்ற டிராமா பார்க்கும் போது காதகனின் சித்தராங்கி கதை என் மனதில் தோன்றியது உண்மை.

உடனே அந்த கான்செப்ட்டை எடுத்துக் கொண்டு, அனைவருக்கும் பிடித்த ஆண்ட்டி ஹீரோ உண்மையில் எப்படி இருப்பான் என்று எழுதினேன். அதனுடன் கிரைம் கலந்து காதகனின் சித்தராங்கி உருவானது.

கதையின் நாயகனைக் கொ*ன்று அதை மறைத்தும் வைக்க, வித்தியாசமாக யோசிக்க வேண்டியதாகிற்று அது தான் அந்த கொத்தமல்லி மேட்டர். இதனால் இரண்டு நாட்கள் விடாத தலைவலி வேறு.

முதலில் வாசகர்கள் அனைவரிடமும் மன்னிப்பை கேட்கின்றேன் ஏனென்றால் இது ஆண்ட்டி ஹீரோ நாவல் என்று உங்களை நம்ப வைத்ததற்கு. இது முழுவதுமாக கிரைம் கதை மட்டுமே!

கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், மறக்காமல் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் டோலிஸ்.


(பின்குறிப்பு : காதகனின் சித்தராங்கி கதை படித்தவர்களுக்கு சிறிது ஏமாற்றமாக இருக்கலாம். ஏனென்றால் நான் ஆண்ட்டி ஹீரோ என்று சொல்லி கிரைம் கதையை எழுதிவிட்டேனே!. அதனால் போட்டி முடிந்ததும், நறுமுகை தளத்தில் இதே கான்செப்டில் காதல் கதை எழுதுகிறேன். அதற்கும் உங்களது ஆதரவு தேவை டோலிஸ்)
 
Top