எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன் மிட்டாய் காதலி

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK53
#தேன்மிட்டாய்காதலி
நறுமுகைத் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
சுதா ராணி.. தைரியமான துடுக்கான பெண்... ஆனால் எதையும் ஆராயாமல் வார்த்தைகளாகட்டும் செயலாகட்டும் முதலில் செய்து விட்டு பின்பு அதன் சாதக பாதகங்களை ஆராய்வாள்... பின்பு அதற்கு வருத்தப்பட்டு சரி செய்யவும் முயல்வாள்.. அப்படி ஒரு தவறுதலான புரிதலில் பிரசிடெண்ட் மகன் திவாகரை இவள் அறைய அங்கு ஆரம்பம் ஆகிறது இருவருக்கும் சண்டை.. திவாகர் நல்லவன்... பெண் அவள் அடித்ததில் கோபம் கொண்டு அவளுக்கு கட்டாய தாலி கட்ட அவளோ அதை அறுத்து அவன் முகத்தில் விட்டறிந்து செல்கிறாள்... இது பஞ்சாயத்து ஆகிறது சுதா ராணியின் தந்தையும் அண்ணன்கள் இருவரும் அவளுக்கு ஆதரவாக திவாகரின் மேல் கடும் கோபத்தில் இருக்க.. திவாகரின் தந்தை நியாயவாதியாக நடந்து கொள்கிறார்... பஞ்சாயத்தில் முடிவுப்படி நான்கு வருடங்கள் காத்திருக்க அந்த நான்கு வருடங்களில் பெண் அவள் கோபத்தை சரி செய்து காதலால் அவள் கை பிடித்தானா திவாகர் என்பது கதையில்... இதற்கிடையில் நாட்டில் குண்டு வைக்க சிலர் முயல்கிறார்கள் அதை தடுக்க சிலர் முற்படுகிறார்கள்... இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் சில வார்த்தைகளை எழுத்தாளர் பயன்படுத்தியிருக்கிறார் அது பாராட்டுக்குரியது தான் ஆனால் அந்த வார்த்தைகள் எங்கு சரியாக வர வேண்டும் என்பதை யாரிடமேனும் கேட்டு பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
மாஷா அல்லாஹ் என்பதன் பொருள்
இறைவன் விரும்பியது..
அதாவது கடவுள் படைத்த அழகான ஒன்றைப் புகழ்வது. நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது இந்த வார்த்தையை உபயோகிக்க வேண்டும்.. அந்த வார்த்தை சில இடங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது... 😔
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதையை நீங்கள் வெற்றி பெறும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 🥰
Good luck 🥰💐🌹
 
Top