எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மலடியின் மகளே

zeenath

Active member
நறுமுகை நிலாக்காலம்_02
#NNK19
#மலடியின் மகளே!
நறுமுகைத் தளத்தின் போட்டி கதைகள்..
சூரிய பிரகாஷ் காதலாக கைபிடித்த பெண் அவளின் மீது உயிராக இருக்கிறான் வெண்மதி யாரும் இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்த இவளும் ஆரம்பத்தில் அவனின் காதலை ஏற்காமல் தன் நிலையை நினைத்து அவனை தவிர்த்து வந்தவள் ஒரு இக்கட்டில் அவன் காதல் உணர்ந்து இவளும் காதலாக அவன் கை பிடிக்கிறாள்.. பெற்றோர் யாரும் இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்தவளை பிடிக்கவில்லை சூர்யாவின் அன்னை பார்வதிக்கு அதனால் எப்போதும் கரித்துக் கொண்டே இருக்கிறார் அவளை.. அவரோடு துணை சேர்ந்தது அவரின் மூத்த மருமகள் கவிதாவும் தான் வசதி வாய்ப்பில் வந்ததால் இவளை இளக்காரமாக பார்த்து குழந்தை இல்லாததை குறையாக கூறி தன் பிள்ளையையும் தொட விட மறுக்கிறாள்.. இப்படி மாமியாரிடமும் ஓரகத்தி இடமும் அடியும் பேச்சும் வாங்கும் வெண்மதியின் மீது தான் கோபம் வருகிறது 😡 வீட்டில் வேலை செய்யும் பெண் பவானி இவளுக்கு ஆறுதலாக இருக்கிறார்... அவர் மூலமே அனைத்தும் தெரிய வருகிறது சூர்யாவிற்கு.. தாயிடமும் அண்ணியிடமும் ருத்ர தாண்டவம் ஆடுகிறான் தன் மனைவியை இழிவாக பேசுபவர்களிடம் சபாஷ் 👏👏 சூர்யாவின் அண்ணன் சந்துரு அருமையான கதாபாத்திரம் நியாயவாதி மனைவியை கண்டிக்கும் இடங்கள் அனைத்தும் அருமை 👏👏 குழந்தை இல்லாமல் வரும் பெண்களின் ஏக்கங்களை புரிந்து கொண்டு மருத்துவ மனைகளும் சில மருத்துவர்களும் அதை எப்படி பணமாக பார்க்கிறார்கள் என்பதை அழகாக விவரித்திருக்கிறார் எழுத்தாளர் வாழ்த்துக்கள் 👏 விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ஆரம்பத்தில் கவிதாவின் பெயர் காயத்ரி என வருகிறது அதை கொஞ்சம் சரி செய்யுங்கள்..
Good luck 🥰💐 🌹
 
Top