எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சாய சஞ்சலே

zeenath

Active member
#நறுமுகைநிலாகாலம்_02
#NNK14
#சாயசஞ்சலே!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
1950 களில் நடக்கிறது கதை..
மிராசுதார் சுந்தரம்.. நெல் வயலும் தென்னந் தோப்பும் அதோடு தங்கத்தை உருக்கி நகை செய்பவர்.. செல்வந்தர்... இவருக்கு சேவகம் செய்ய வேலையாட்களாக சில மக்கள்.. இவர் மனைவி பர்வதம்.. மகன் வேதாச்சலம்.. அயல்நாடு சென்று படித்து வந்தவன் அங்குள்ள பழக்க வழக்கங்களையும் கற்று மது மாது என சுற்றிக் கொண்டிருக்கிறான்.. இதற்கிடையில் யானை மதம் கொண்டு சுந்தரத்தை மிதிக்க வருவதும் நெல் மூட்டைகள் நெருப்பில் சாம்பல் ஆவதும் புயல் காற்றால் நெற்கதிர்கள் நாசமடைவதும் என பெரும் அழிவு ஏற்படுகிறது... அதை சரி செய்ய ஜோசியரிடம் போக அங்கு பரிகாரமாக அக்ரஹாரத்து பெண் ஒருவரை மணந்தால் அவள் மூலம் வாரிசு வந்தால் தோஷம் தீரும் என கூறியதால் ஜானகியை திருமணம் செய்ய மகனிடம் கேட்க அவன் முடியாது என்கிறான்.. மகனின் மறுப்பால் தந்தையே அவளை திருமணம் செய்ய முடிவெடுக்க இறுதி நேரத்தில் மகன் மனம் முடித்துக் கொள்கிறான்,... பிடிக்காத திருமணத்தால் அனைவரையும் வெறுக்கும் ஜானகி அவளும் தன் பங்கிற்கு சில பாதகங்களை ஏற்படுத்துகிறாள் அந்த குடும்பத்திற்கு... கணவன் மீது கோபம் கொண்டு வெறுப்பில் இருந்தாலும் அவன் கூறும் சில காரணங்கள் இவளுக்கு ஏற்புடையதாக இல்லாமல் அவன் மீது சந்தேகம் கொள்கிறாள் அவன் நல்லவனா கெட்டவனா என்று... இவளின் சந்தேகம் தீர்ந்ததா குழப்பத்திற்கான காரணம் விதியா சதியா என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏
Good luck 🥰🌹💐
 
Top