எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK41
#அகத்திரைதிறவாயோ!
நறுமுககை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
மலரினியாழ்... ஆரம்ப கட்ட ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட பெண்.. ஏன் என்ற கேள்வி நிறைய இவளுக்கு ஆனால் அதற்கான பதில் சொல்வதற்கான ஆள் தான் இல்லை... குடும்பத்தில் இருப்பவர்களை இவளை வெறுத்து இவள் மீது அபாண்டமாக குற்றம் கூறி இவளை ஒதுக்கி வைக்க அவர்களிடமிருந்து இவள் ஒதுங்கி கொள்கிறாள் தனிமையை நாடி விரும்பியே.. இதற்கிடையில் சதீஷ் என்ற கயவனால் பல துன்பங்களுக்கும் ஆளாகிறாள் எப்படியோ பல பொய்களை கூறி அவனோடு நடக்கவிருந்த நிச்சயத்தில் இருந்து தப்பித்து தன் ஆசையான படிப்பை கற்க செல்கிறாள்.. அங்கு தேவதையாக இவளோடு நட்பாகிறாள் இலக்கியா..
இலக்கியாவின் அம்மாவும் இரண்டாவது அண்ணன் வாசுவும் இவள் மீது பாசமாக இருக்க ஏனோ முதல் பார்வையிலேயே தன்னை வசீகரிக்கும் இந்த பெண்ணின் மீது பெரும் கோபம் கொள்கிறான் இலக்கியாவின் மூத்த அண்ணன் ஆதித்ய நெடுமாறன்... மலராக இருக்கும் பெண் அவள் இனியாழாக மாறுகிறாள் நெடுமாறனுக்கு.. நெடுமரமாக மனதில் பதிந்து விட்டவன் மாறனாக மாறுகிறான் பெண் அவளுக்கும்.. இவளின் குறைபாடு அறிந்து என்ன செய்தான் நெடுமாறன்.. துன்பத்தை மட்டும் பார்த்து வளர்ந்த பெண் அவளுக்கு வரமாக வந்தானா அவளின் நெடுமரம் என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. மலரின் டைரி மனதை கனக்க செய்தது 😔
மலரின் அன்னை மற்றும் அக்கா சுயநலவாதிகள் 😡 நிலவன் சில தவறுகள் செய்தாலும் தங்கையின் மீது பாசமும் அக்கறையும் கொண்டவன் இவனின் மனைவி மஞ்சரி அருமையான கதாபாத்திரம் 🥰👏 சுவாரசியமாகும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🥰
Good luck 🥰🌹💐
 
Top