எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வெய்யோனை அயறிய வெண்பனியே

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK01
#வெய்யோனை அயரியவெண்பனியே!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
கவியரசன்.. இதய ராணி..
அவளின் மல்லுவேட்டி மைனர் அவனின் ராங்கி சிலுப்பி
பெரிய குடும்பம் உறவு முறை திருமணம்.. தன் மனம் கவர்ந்தவளை அனைவர் முன்பும் அவளின் தந்தையிடம் திருமணம் செய்து தர கேட்கிறான் கனி.. மகளின் விருப்பம் அறிந்து சம்மதம் சொல்ல.. இடையில் குடும்பத்தில் மூத்த உறுப்பினரான ஆச்சியின் ஒரு செயலால் நிச்சயமான திருமணம் கேள்விக்குறியாகி இரு குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் போகிறது.. குடும்பத்தில் உள்ள ஒரு ஜோடிக்கு திருமணம் முடிக்க பெரியவர்கள் விருப்பம் கொள்ள ஒருவருக்கு மட்டும் விருப்பமிருந்து மற்றவருக்கு விருப்பமில்லாமல் பெரும் சச்சரவில் முடிகிறது... எப்படி வேண்டாம் எனக் கூறலாம் என்று.. ஒருவரின் விருப்பத்தை மட்டும் முன்னிறுத்தி ஒருவர் கோபம் கொள்ள... மற்றொருவரின் விருப்பத்தை ஏன் கணக்கில் கொள்ளவில்லை என மற்றொருவர் கோபம் கொள்ள காதல் இருந்தும் பிரிந்திருக்கிறார்கள் இருவரும்.. பிரிந்து மட்டுமே இருக்கிறார்கள்... ஒருவரை ஒருவர் பிரிய நினைக்கவில்லை.. 🥰 அனைத்தும் சரியாகி திருமணத்தில் முடிந்ததா என்பதை அழகாக கூறியிருக்கிறார் எழுத்தாளர்.. குடும்பத்தில் நடக்கும் சண்டையும் சச்சரவும் சமாதானமும் கோபமும் மன வருத்தமும் பாசமும் அவ்வளவு அழகு 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰🌹💐
 
Top