எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வெய்யோனை அயரிய வெண்பனியே

Asha Evander

Moderator
#Asha_Review
#வெய்யோனை_அயரிய_வெண்பனியே
#Nnk01

Such a Beautiful story 💕
கனியரசன்- இதயா

தொடக்கமே ரெண்டு பேரோட மோதல் தான்.. கனி அடிபட்டு இதய வேலை பார்க்குற ஹாஸ்பிடல் வரவும் அங்க அவளின் மௌனமான சண்டையும் இவனின் வார்த்தை சண்டையும்.

சிலுப்பி, ராங்கி ரைட்டர் நிறய செல்ல பெயர் எல்லாம் யோசிச்சு வச்சிருக்காங்க.. கனி அண்ட் இதயா குடும்பத்தில் கொஞ்சம் சண்டை அதனால் இவங்க காதலும் கல்யாணமும் நிச்சயத்தோட நின்னுடுச்சு.. இதயாவும் வீட்டில் அவங்க அண்ணா ரெண்டு பேர் கூட மூணாவது அண்ணனை காரணமா வச்சு பேசுறது கிடையாது..

அவங்க நிச்சயம் எதனால் நின்னு போச்சு? இதயா எதனால் அவ குடும்பத்தில் உள்ளவங்க மேல கோவமா இருக்கா? இதையெல்லாம் ரொம்ப அழகா கதையில் சொல்லியிருக்காங்க ரைட்டர்..

அமைதியும் அடாவடியும் சேர்ந்த காதல். எனக்கு வெற்றியை ரொம்ப பிடிச்சது. எல்லா இடத்திலும் அவன் சரியா இருந்தான். அடுத்தவங்க பிளாக்மெயில் பண்ணும் போது கூட அவனுக்காக அவனே போராடினான். ஆனா அந்த நேரத்தில் கனியின் முடிவு ரொம்ப கோவம் வந்துச்சு.. புரியாத முட்டாள் தனமா நடந்தது இன்னும் எரிச்சல்..

அழகான குடும்பம் அதை உணர்ந்து கொள்ளாமல் தன் நிலையிலேயே நின்ன ராஜியை பார்க்கும் போது ரைட்டருக்கு பெரிய பொங்கல் தான் வைக்க தோணுச்சு.. எழுதினது நீங்க தானே 🤣 விருப்பம் இல்லாத வாழ்க்கையை ஒருத்தங்க மேல திணிக்க கூடாதுன்னு அதுக்கு சொன்ன டயலாக் நல்லா இருந்தது.

அப்புறம் இதயா ராக்ஸ் சீன் செம 🤣 ன்னா அடி 🤣🤣 கண்டிப்பா அந்த அடி தேவை தான் அது தான் அடுத்து அந்த குடும்பத்தோட மதிப்பை பாசத்தை புரிய வச்சது..

கொஞ்சம் அதிகமா எமோஷனல் ஆன இடம் கனியின் அழுகை.. பாவமா போச்சு .. அதுவும் அவன் ஆறுதல் தேடின இடம், அவளின் ஆறுதல் .. அடுத்து அடி.. அந்த எப்பி மாஸ் 😍

அம்புஜம் பாட்டி மேல முதலில் ரொம்ப கோவம் ஆனா அப்புறம் மன்னிப்பு கேட்டதும் விட்டுட்டேன்..

அந்த பரிமளம் அண்ட் ராஜி, காவேரி ரொம்ப பண்ணிட்டாங்க.. அதுக்கே உங்களுக்கு பொங்கல் வைக்கணும் ரைட்டரே 😏

ரொம்ப அழகா சிம்பிளா ஒரு காதல் கதை.. ஸ்பெல்லிங் மிஸ்டேக் கொஞ்சம் இருந்தது படிக்கும் போது டிஸ்டர்ப் பண்ணிடுச்சு அண்ட் தட் "ஷ்".. பார்த்துக்கோங்க ரைட்டர் 🤣

அதை அழுத்தமா உச்சரிக்கும் போது அவ்வ் வித்தியாசமா ஃபீல் 🤣

எல்லா கேரக்டர் செம 😁

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டரே 😍
 
Top