எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வெந்தழல் நயனங்கள்

santhinagaraj

Well-known member
வெந்தழல் நயனங்கள்

விமர்சனம்

இது ஒரு முன் ஜென்ம கதை.

ஆத்தியா நவ்யா ரெண்டு பேரும் ட்வின்ஸ் ஆதியா தொல்லியல் துறையில் தாத்தா வீட்டில் தங்கி வேலை செய்து கொண்டிருக்கிறாள் அம்மா அப்பா தங்கை என குடும்பத்துடன் மீது ஒட்டுதல் இல்லாமல்.இருக்கிறாள் இவள் வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் பழங்கால பொருட்களை பார்க்கும் போதும் கனவிலும் சில காட்சிகள் அவளுக்கு தோன்றுகின்றது.

நவ்யா ஜாலியன் டைப் ஒலையில் உளவியல் படிப்பு படிக்கிற அதே துறையில் இருக்கும் உதயகரன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது உதயகுரன் ஒரு பெஸ்ட் இப்னு தெரபிஸ்ட் சிறந்த உளவியலனான உதய்க்கு கனவில் ஒரு பெண் அவன் கண் முன்னாடி வாள் கொண்டு தன்னைத்தானே குத்திக்கொண்டு இறந்துவிடும் காட்சிகள் தோன்றுகிறது

ஆத்யா ஏன் குடும்பத்தின் மீது ஒட்டுதல் இல்லாமல் இருக்கிறாள்.?
ஆத்யா உதய் கனவுகளுகாண பதிலாக முன் ஜென்ம நினைவுகளே புகுத்தி ரொம்ப விறுவிறுப்பாக கதையை கொண்டு போய் இருக்காங்க.

அழுத்தமான காட்சிகளுக்கிடையே கீர்த்தனா, அவிராவோட ஜாலியான பேச்சுக்கள் ரசிக்கும் படியா இருந்தது.

கவிநிலவன், அமைரா, இழையினி இவர்களுடைய கேரக்டர்கள் ரொம்ப நல்லா இருந்தது.

ஆழினிக்கு நடந்த கொடுமையை படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது.

உதய் கனவுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஹிப்னோ தெரபிஸ்ட் மூலம் அவனோட முன் ஜென்மத்தை பற்றி தெரிந்து கொள்கிறான்.
ஆனால் ஆத்யா அவளோட கனவுகளைப் பற்றி எப்படி தெரிந்து கொள்கிறாள் அவளுக்கு முன் ஜென்ம நினைவு வந்துதான்னு சொல்லவே இல்ல. அக்னி ருத்ரன் ஆத்யா காட்சிகள் இன்னும் கொஞ்சம் வச்சு இருக்கலாம். அவங்க ரெண்டு பேருக்கான முன் என்று நினைவுகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கலாம்.

இளம்பரிதி மகிழயன் குணத்தை பற்றி கடைசி வரை தெரிஞ்சிக்கவே இல்ல. அதே மாதிரி மகிழழகிக்கும் கணவனோட உண்மை முகம் தெரியாமலேயே போயிடுச்சு. இவற்றையெல்லாம் இன்னும் கொஞ்சம் தெளிவாக கொடுத்திருந்தால் அதை இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

எழுத்து நடை ரொம்ப அருமையாக இருந்தது 👌👌

வாழ்த்துக்கள் 💐💐
 
Top