எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்திவானச் செந்தூரமே

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK78
#அந்திவானச்செந்தூரமே !
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
ரமணா அதிிரன் செந்தூரா வானதி பீர்முகமது பிரஜின் நதியா திலகா மெஹரின் இவர்களின் பெற்றோர் என பெரிய கூட்டம் இருக்கிறது கதையில்... ஆனால் விறுவிறுப்பாக நகர்ந்தது கதை 🥰👏 அதிரன் மற்றும் ரமணாவின் தந்தையர்கள் இருவரும் உருவாக்கிய மசாலா கம்பெனியில் நல்ல நிலையில் நடந்து கொண்டிருக்க.. ஒரு பிரச்சனையில் சண்டையிட்டு பிரிந்து விடுகிறார்கள்.. அதிரன் நடத்தும் மசாலா கம்பெனியில் கலப்படம் ஏற்பட்டு பிசினஸில் தொய்வு ஏற்படுகிறது.. இதற்கிடையில் அவன் கம்பெனியில் ஒரு தற்கொலையும் நடக்கிறது கலப்படம் செய்து சதி செய்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கிறான் ஆதிரன்.. சில நண்பர்கள் உதவியுடன்.. இரு தந்தையர்களும் பிரிந்ததற்கான சூழ்ச்சியும் யார் செய்தார்கள் என்பதை ரமணன் மற்றும் அதிரன். சேர்ந்தே கண்டுபிடிக்கிறார்கள்.. இதற்கிடையில் ரமணாவிற்கு ஒரு அழகான காதலும் மலர்கிறது 🥰 செந்தூரா தன்னை உருவ கேலி செய்பவர்களை வெளுத்து வாங்குகிறாள் 👏👏👏 நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நடக்கும் குளறுபடிகளை கண்டுபிடிக்கும் விதம் அருமை 🥰 ரமணாவின் கதாபாத்திர வடிவமைப்பு சூப்பர்👏🥰விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰🌹💐
 
Top