எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என் காதல் தீரா

Nandhaki

Moderator
தீரா 🎻 01
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ...............

திணையில் தேனை குழைத்தெடுத்தது போல் ஒரு மதுரமான குரல் அந்த மழை பெய்து ஓய்ந்த மாலையில் காற்றில் பரவியது.


காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே


தேனீர் கோப்பையுடன் மாடி பல்கனியில் இருந்த அசோகன். தேனீர் கோப்பையை வைத்துவிட்டு சுவற்றில் சாய்ந்து கண்மூடி பாடலை ரசிக்க மனைவி யசோதா அருகே இருந்த இருக்கையில் கண் மூடி அமர்ந்தார்.

அலைபோல நினைவாக…
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே


அந்த மெட்டாலிக் சம்பல் வண்ண ப்ரோடோ சத்தமின்றி வழுக்கி கொண்டு வந்து அந்த வீட்டின் முன் வாசலில் நிற்க, அதிலிருந்து இறங்கியவன் உள்ளே செல்லாமல் அந்த வாகனத்தின் மேல் தலை சாய்த்து கண் மூடி பாடலை ரசித்தான்.

அந்த வீட்டில் வேலை செய்பவர்களும் அவரவர் வேலையை விட்டு அவள் பாடலை ரசித்து கொண்டிருந்தனர் .

அந்த குரலில் ஏதோ சோகம் இழையோட கையிலிருந்த வீணையை மீட்டி இடையில் சுருதி சேர்த்தாள் அவள்.

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ளே ஒரு வீணை ராகம் தேட
அன்புள்ள நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடதோ
கண்கள் எங்கும் நெஞ்சின் பாவம் மேலும் ஏற்றும்


கையில் வீணையுடன் திருமகளே கலைமகளாய் வந்து அமர்ந்தது போல் இருந்தவள் கண்களில் கண்ணீர் வழிந்து கன்னத்தை தாண்டி நாடியில் தற்கொலை செய்ததது.

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடதோ
வாழும்..... காலம்.... யாவும்.... இங்கே நெஞ்சம் தேடும்

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக…
சில்லென்று வீசும் மாலை நேர

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே......


பாடல் முடிந்தும் அதன் தாக்கம் என்னில் முடியவில்லை என்பது போல் வீணை இசை ரீங்காரமாய் ஒலிக்க, அனைவரும் அவரவர் வேலையை பார்க்க செல்ல அவன் மட்டும் அசையாது நின்றிருந்தான். ஆறரை அடி உயரத்தில் ஒற்றை நாடி சரீரம் உடல் பயிற்சியில் இறுகி இருக்க தலை கலைந்து முகம் சோர்வையும் களைப்பையும் குத்தகைக்கு எடுத்திருந்தது. அவனுடன் சேர்ந்து தூசி படிந்திருந்த அவன் வாகனமும் கூறியது இருவரும் நெடுந்தூர பயணத்தில் இருந்து வந்திருக்கின்றோம் என்று. அவன் தாமரை வடிவ அழகான கண்கள் மூடியிருக்க ப்ளாக் பாண்ட்டும் மஸ்கட் நிற டீ ஷர்ட் அணிந்து நின்றவன் கம்பீரம் அப்போதும் குறையாமல் இருந்தது.

சில நிமிடங்கள் கழிந்து கண் திறந்தவன் திரும்பி பார்க்க அவன் கண்களில் தென்பட்டாள் அவள். வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசுவதற்கு சில நேரம் தேனீர் அருந்த என கூடாரம் போல் நான்கு புறமும் திறந்த மண்டபம் கட்டியிருக்க அதில் வீணையுடன் அமர்ந்திருந்தாள்.

விரிந்திருந்த கூந்தல் நிலத்தில் புரள நீண்ட விரல்கள் வீணையின் தந்திகளுடன் விளையாட அப்போதும் அவள் குரலை போலவே இனிமையான இசை தவழ அமர்ந்திருந்தவள் முகம் சிரிப்பு என்பதையே மறந்திருந்தது. கடந்த இரண்டு வாரங்களாக இப்படி தான் இருக்கின்றாள். சரியாக சொல்ல போனால் கேரளா போய் வந்ததிலிருந்து. முதலில் அலட்சியமாக விட்டுவிட்டான். ஆனால் இந்த பயணத்தின் போது அறிந்த சில செய்திகளின் பின்னர் அவ்வாறு விட்டு விட முடியவில்லை.

பெருமூச்சு ஒன்றினை சத்தமின்றி விட்டவனுக்கு கேரளா போவதற்கு முன்னர் அவள் தன்னிடம் வந்து பேசியது நினைவிலாடியது.

🎻🎻🎻🎻🎻

அவர்கள் அறை மூன்றாக பிரிக்கப்பட்டு ஒருபுறம் அவளும் இன்னொரு புறம் அவள் பயன்படுத்தும் வகையில் இருக்க நடுவில் இருவருக்கும் பொதுவாக கட்டிலும் போடப்பட்டிருந்தது. கல்யாணமாகி இந்தக் கடைசி ஐந்து மாதங்களில் அவளை இருவருக்கும் பொதுவான அறையில் பார்த்ததே இல்லை. அன்று மடிகணனியில் அடுத்த நாள் மீட்டிங்கிற்கான தகவல்களை சரி பார்த்து கொண்டிருந்தவனிடம் வந்தவள் தயங்கி நின்றாள்.

என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தான்.

"இல்லை என்னுடன் நாளைக்கு மட்டும் கேரளா வரமுடியுமா? நடுங்கும் உதடுகளை கட்டுப்படுத்தியவாறே கேட்டாள். ஏனோ அன்று அவள் கலக்கம் சுமந்த முகமும் கண்களும் அவன் கண்ணில் படவேயில்லை. இல்லை இத்தனை நாளில் எதுவும் கேட்காதவள் இன்று ஏன் கேட்கின்றாள் என்றும் யோசிக்கவில்லை. அவன் உதடு ஏளனமாக வளைய "ஏன் இப்போது என்ன தேனிலவு போக வேண்டுமா?" கிண்டலாக கேட்டான்.

அன்று காலை தான் அவன் அம்மா யசோதா பிடித்து வைத்து வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார் "அவள் தனியாகவே இருக்கின்றாள் எங்காவது கூட்டி போ" என்று இவள் தான் ஊமைகோட்டான் போல் இருந்து கொண்டு என்னுடன் வரவும் மாட்டேன் என்று அடம் பிடித்து விட்டுஅம்மாவிடம் போட்டு கொடுத்துவிட்டாள் என்றே எண்ணினான். இப்போது வந்து கேரளா எனவும் விஷம் நிறைந்த குளவியாய் கொட்டிவிட்டான்."தேனிலவா..." மெலிதாய் விரக்தி நிறைந்த குரலில் முணுமுணுத்தாள். அதற்கு மேல் அவனிடம் என்ன பேச என்று கேட்ட மனதிற்கு மூளை மௌனத்தையே பதிலாக கொடுக்க எதுவும் வேறு பேசாமல் திரும்பிவிட்டாள். தன் அறைக்கு சென்றவள் பிரெஞ் விண்டோ வழியே வெளியே தெரிந்த வானத்து நிலவை வெறித்தவாறு நிலத்தில் அமர்ந்திருந்தாள்.சிறு வயதிலிருந்தே எத்தனையோ கஷ்டங்களில் வளர்ந்தவள் தான் ஆனால் இன்றைய நாளை தனியாக சமாளிக்க முடியாதது போல் தோன்றவே போய் கேட்டுவிட்டாள். அருகருகே இருந்தது ஏதோ ஒரு விதத்தில் அவன் உதவுவான் என்று இந்த மடமனம் நம்பிவிட்டது.ஆனால் இது நாள் வரை யார் தூணையும் இன்றி வாழ்கையை கடந்தது போல் இனியும் கடக்க வேண்டும். இல்லாவிட்டால் மூழ்கி போக வேண்டும். கண்களில் நீர் நிற்காமல் வழிய மிக மிக மெல்லிதாய் விசும்பினாள். சிறு வயதிலிருந்தே அவள் அழுதாள் சத்தம் கேட்காது மெல்லிய விசும்பல் அதுவும் கூட எல்லை கடந்த சோகத்தின் போது மட்டுமே இதுவரை ஒரே ஒரு தடவை தான் அப்படி அழுதாள்.வேலையை முடித்து படுத்தவனுக்கு உறக்கம் வர மறுத்தது. வேலையின் மும்முரத்தில் கவனிக்க மறந்த அவளின் தோற்றம் இப்போது கண் முன்னே வர எரிச்சலுடன் எழுந்தவன் அவள் அறைக்கு சென்றான். அவள் வந்த பின்னர் அந்த அறைக்கு சென்றதே இல்லை அதற்கு முன் ஜிம்மாக பயன்படுத்தினான்.திறந்து பார்க்க இருட்டாக இருக்க ஸ்விட்சை தட்டி வெளிச்சத்தை ஒளிரவிட்டான். சோபாவில் தலை சாய்த்துக் கீழே அமர்ந்திருந்தாள்."ஏன் கீழே இருக்கின்றாய்?" கேள்விக்கு பதிலின்றி போகவே கோபத்துடன் "கேட்டால் பதில் சொல்ல மாட்டாய்? அவளை திருப்ப போன கை பாதியில் நின்றது. கன்னத்தில் கண்ணீர் கோடுகளுடன் உறக்கத்திலும் விசும்பி கொண்டிருந்தாள்.

கன்னத்தில் தட்ட விசும்பல் அதிகமாகியது கைகளில் ஏந்தியவன் படுக்க வைக்க சுற்றும் முற்றும் பார்த்தான் எதுவும் இல்லை கட்டில் மெட்ரஸ் பாய் தலையணை கூட இல்லை. இவ்வளவு நாளும் எங்கே படுக்கின்றாள் கேள்வி மனதில் எழ குனிந்து கையில் இருப்பவளை பார்த்தன்.

"இம்சை" வாய்க்குள் முனகியவன் அப்படியே விட்டு செல்ல மனமின்றி வெளியே அவன் படுக்கும் கட்டிலில் படுக்க வைத்தான். கன்னத்தின் ஈரத்தை துடைக்க மீண்டும் ஈரமாகியது. நெற்றி சுளித்து பார்த்தவன் கண்களில் பட்டது நீர் ஊற்றுபட்டது போல் நனைந்திருந்த முன் பக்கம். நம்ப முடியாமல் தொட்டு பார்க்க அது நான் ஈரம்தான் என்றது. இப்படி ஈரமென்றால் எவ்வளவு நேரம் இப்படி அழுதாள் வெறுமே கேரளாவுக்கு போகவில்லை என்ற ஒரு காரணத்திற்காக இப்படியா அழுவது கோபம் தான் வந்தது அழுது சாதிக்க நினைக்கின்றாளா? அல்லது வேறு ஏதாவதா? எழுப்பி கேட்டாலும் பதில் சொல்லவாளா என்பது கேள்விக்குறிதான்.

சற்று பொறுத்து பார்த்தவன் அவள் விசும்பல் நிற்பது போல் தெரியவில்லை என்றதும் அவளை இழுத்து மார்பில் போட்டு தலையை வருடி கொடுத்தான். அதன் பிறகு கண்ணீர் சற்று மட்டுப்பட்டது நிற்கவில்லை. அப்படியே அவனும் அயர்ந்துவிட்டான்.

அடுத்த நாள் எழுந்து சோம்பல் முறித்தவனுக்கு ஏதோ குறைவது போல் தோன்றவே புருவம் சுழித்து யோசித்தவனுக்கு இரவு அவள் அழுதது நினைவில் வந்தது. சுற்றும் முற்றும் பார்க்க இல்லை. குளியலறை, மாடி தோட்டம், வீணை வாசிக்கும் மண்டபம் ஒரு இடத்திலும் இல்லை.

கடைசியாய் அவள் அறைக்கு சென்று பார்க்க வெறுமையாய் இருந்தது. ஏதோ தோன்ற அவளின் கபோர்டை திறந்து பார்த்தான். அதில் அவன் இத்தனை நாளும் வாங்கி கொடுத்த பொருட்கள் பத்திரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க அவள் வழமையாக அணியும் ஆடைகளில் சிலது மட்டும் குறைந்தது போல் இருந்தது. நேற்றைய அவள் நிலை கண்முன் வந்து செல்ல பதற்றம் தன்னாலே வந்து ஒட்டிக் கொண்டது.

வேகமாக கீழே இறங்கி வந்தவனிடம் அவன் அம்மா "ஆ... உன்னைத்தான் பார்த்து கொண்டிருந்தேன். நண்பி ஒருத்திக்கு விபத்து அதனால் கேரளா போவதாகவும் ஹாஸ்பிடலில் நிற்க வேண்டி இருக்கும் நேரம் கிடைக்கும் தானே அழைப்பதாகவும் கூறினாள்" தகவலை சொன்னவர் அவசரமாக தன் செயளாலருடன் சென்றுவிட்டார். .

🎻🎻🎻🎻🎻

அங்கிருந்து வந்த பின் அம்மாவிடம் என்ன பேசினாலோ தெரியவில்லை வந்த நாளில் இருந்து பின்னால் உள்ள தோட்ட வீட்டில் தான் தாங்கியிருந்தாள். அம்மாவிடம் கேட்டதற்கு “வேண்டுமானால் நீ போய் அவளுடன் இருந்து கொள், அவளை வர சொல்லி கஷ்டப்படுத்ததே” என்றுவிட்டார்

அவள் இருந்த இடத்தை நோக்கி நடந்தவன் அருகே சென்றதும் காலணியை கழட்டி உள்ளே சென்றான். அவனை கண்டதும் திரும்பி கண்ணீரை துடைத்தவள் “வேலங்கில் இருக்க நாற்காலி” என்று அழைக்க வேண்டாம் என்று தலையசைத்தவன் அவளருகே கீழே இருந்தான். இதயம் ஏனோ மெலிதாய் வலித்தது என்னிடம் கண்ணீரை மறைக்கின்றாள். ஏன்...

அதற்குள் “அம்மணி” என்று வேலன் வர அவன் முகத்தை பார்த்தவள் அதிலிருந்த களைப்பையும் சோர்வையும் பார்த்து விட்டு கூறினாள் “யூசும் சான்விச்சும் எடுத்திட்டு வாங்க அங்கிள்” என்றாள்.

"இரண்டு" என்றவன் தன் நீண்ட விரலினால் அவள் வீணையின் நரம்பை சுண்டிவிட்டான்.

“எனக்கு வேண்டாம்” உடனடியாக பதில் வந்தது.

நிமிர்ந்து அவளை பார்த்தவன் கோபத்துடன் கேட்டான் "சாப்பிடுறீயா இல்லையா?"ஒரு அசைவும் இன்றி குனிந்தவாறு அமர்ந்திருந்தவளை பார்த்து எழுந்த பெருமூச்சை சத்தமின்றி விட்டான். அவள் சிந்தனை மீண்டும் எங்கோ சென்றதை உணர்ந்தவன் "இதை எப்படி வாசிப்பது" அவள் மனதை திசை திருப்ப கேட்டான்.

ஒவ்வொரு தந்தியாக தட்டி சொன்னாள் "இது ஸ இது ரி, இதை மீட்டும் போது இங்கே அமத்தினால் இந்த சத்தம் வரும்...." வீணையை தூக்க "ஏன்" என்றவனிடம் தலைகீழாக வாசிக்க முடியாது இல்லை அதான்" என்றாள். வேலன் வரும் வரை அதை சொல்லி கொடுக்க வாசிக்கின்றேன் என்ற பெயரில் ஸ்வரம் அபஸ்வரமாய் வர "அதென்ன நீ வாசித்தால் மட்டும் நன்றாய் வருது" என்ற அவனின் சிறுபிள்ளைதனத்தில் அவள் இதழில் கீற்றாய் ஒரு முறுவலும் வந்தது

வேலன் யூஸை கொண்டு வர அவன் கையிலிருந்து வீணையை வாங்கியவள் தன் மடியில் வைத்து குடம் இருந்த இடத்தில் கையை வைத்து அதன் மீது கன்னம் வைத்து அதில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். முதல் தடவையாக அவள் அழகு அவன் உள்ளத்தை கொள்ளையிட அவள் தலையில் கை வைத்தான்.

ஆச்சரியத்துடன் கண் விரித்து பார்த்தவளிடம் "இது உனக்கு" சாப்பிடு என்று கண்ணாலேயே உத்தரவிட "இல்லை எனக்கு வேண்டாம் பசியில்லை" மறுத்தாள்.

"மேலே மாடியிலிருந்து அம்மாவும் அப்பாவும் பார்த்து கொண்டிருக்கின்றார்கள் இப்போது நீ சாப்பிடாவிட்டால் எனக்கு தான் மங்களம் விழும் என்னை காப்பாற்றவாவது சாப்பிடு" அவளோ விழித்தாள் 'நான் சாப்பிடவில்லை என்றால் இவனுக்கு ஏன் பேச்சு விழனும்' அதற்கும் மேல் எப்போதிருந்து என்னிடம் இப்படியெல்லாம் பேச ஆரம்பித்தான். அவன் முகமே சொன்னது சாப்பிடாமல் விடமாட்டான். சோர்வுடன் கூப்பிடு தூரத்தில் நின்ற வேலனை அழைத்தவள் வீணையை வணங்கி கூறினாள் "அங்கிள் இதை உள்ளே வைத்து விடுங்கள்".

அவர் எடுத்து சென்றதும் இருவரும் அமைதியாக உண்டு முடித்தனர். யூஸ் கிளாசை உள்ளங்கைகளில் வைத்து உருட்டியவாறே "நான் நாளைக்கு திரும்ப கேரளா போறேன்" சிறிய குரலில் கூறினாள். அவனருகே தன் துன்பம் குறைவதை உணர்ந்தவளுக்கு தவிப்பாய் இருந்தது. அவன் அருகாமை அவளுக்கு என்றும் நிரந்தரமில்லை. அதற்காக ஏங்குவது மடத்தனம் அவன் வந்தால் நன்றாக இருக்கு தான் ஆனால்.... மறுபடியும் மறுத்தால் தாங்கி கொள்ள முடியுமா தெரியவில்லை.

"ஹ்ம்" அதை தவிர எதுவும் சொல்லவில்லை குனிந்திருந்த முகத்தை ஆழ்ந்து பார்த்திருந்தான் வேறு எதுவும் சொல்கின்றாளா என்பது போல்.

அவனின் அமைதி அவளுக்கு அவன் வர விரும்பவில்லை என்பது போல் புரிந்தது. வழமையாக விருப்பமின்மையை இது போல் அமைதியாக இருந்து தானே புரிய வைப்பான். எழுந்த பெருமூச்சை சத்தமற்று விட்டாள்.

"நீங்கள் களைத்து போய் இருப்பீர்கள் உள்ளே போய் ப்ரஷ் ஆகுங்கள்"

ஒரு பக்க உதட்டால் மட்டும் சிரித்தவன் "வரும் போது இருந்தது இப்போது இல்லை" என்றவன் அப்படியே தலைக்கு கீழே கை கொடுத்து கால் மேல் கால் போட்டு படுத்துவிட்டான். அவளுக்கு மிக மிக அருகில்

"ஹா..." விழித்தாள். சும்மாவே மனம் அவனுக்காக ஏங்கி கொண்டிருக்க அவனின் இந்த நடவடிக்கையில் கிறுகிறுத்துவிட சட்டென எழுந்து நின்றவள் கையை பிடித்து இழுத்தான்.

அப்படியே அவன் மார்பில் மலர் கொடியாய் விழுந்தாள் அவள்.

வருவான்.....
 

Nandhaki

Moderator
தீரா🎻02

வாகனத்தின் ஏர் பிரெஷ்னேர் வாசத்துடன் அவனுக்கே உரித்தான வாசம் அவள் நாசியை நெருட, அவன் மேல் விழுந்த வேகத்தில் அவன் மார்பின் திண்மையை அவள் உணர அவள் மேனியின் மென்மையை அவன் உணர்ந்தான். அவசரமாக எழ முயன்றவளை அசையவிடாமல் இறுக்கியது அவன் வலுவான கரம். அவள் அவனிடமிருந்து விடுபட நெளிய அப்படியே கீழே தள்ளி அவள் மேல் கவிழ்ந்தவன் "சும்மா நெளியாம இருடி என்னென்னமோ செய்யுது"

"என்ன செய்யுது கௌதம்" கண்ணில் குழப்பம் படர கேட்டாள்.

"இப்படியே குழந்தை மாதிரி விழி, கடிச்சு வைக்கிறேன்" அவள் உதட்டை கடிப்பது போல் பாவ்லா செய்தான்.

"ஐயே... அது எச்சி" சிறு குழந்தையாய் முகம் சுளித்தாள்.

அவள் குழந்தைதனத்தில் சிரித்தவன் "உன் பாடு கஷ்டம்டா கௌதம்" தன்னை தானே ஆறுதல்படுத்தினான். அதற்கும் விழித்து கொண்டிருந்தவள் நெற்றியில் தன் நெற்றியால் முட்ட அவளோ அவனை வேற்று கிரகவாசியை போல் பார்த்து வைத்தாள். “என்ன இது எல்லோரும் பார்ப்பாங்க போகனும் விடுங்க” விடுபட நெளிந்தாள்.

ஒரு கால் மடித்து மல்லாந்து படுத்தவன் அவளை இழுத்து தன்மேல் போட்டு "ஒருவரும் நம்மை பார்க்கவும் முடியாது நாமும் எங்கேயும் போகவும் முடியாது சுற்றி பார்" என்றான். இருதரம் அவன மார்பில் புரண்டு திரும்பி திரும்பி பார்க்க துடித்த கைகளை அடக்கி தலையின் பின்னே கோர்த்தான்.

அவள் பாடும் போதே மாலை மயங்கி கொண்டிருந்தது. இப்போது பார்க்க சுற்றிலும் இருள் பரவி தூரத்தில் அந்திவானத்தில் சின்னஞ் சிறிதாய் சிகப்பு மட்டும் மிச்சம் இருந்தது. மீதி இடம் இருளில் மூழ்கி இருக்க லைட் கூட ஒளிரவில்லை. சத்தத்தை வைத்து மழை பெய்ததை உணர்ந்தவள் உடல் இறுக அவன் டீ ஷர்டை இறுக பிடித்தாள். அவர்கள் இருவருமே நிழலுருவமாய் தெரிந்தனர்.

சிறு வயதிலிருந்தே மழையும் இருளும் என்றால் பயம். அவள் வாழ்வில் நடந்த சில விரும்பாத நிகழ்வுகளின் போதெல்லாம் மழை தன் பங்களிப்பை செய்ய அவளுக்கு அது நிரந்தர பயமாகவே ஆகிவிட்டது. யாரும் 'பயப்படாதே' என ஆறுதல் கூறவும் இல்லை 'நானிருக்கின்றேன்' என்று அணைக்கவும் இல்லை எனவே இத்தனை காலம் தனியாகவே வாழ்ந்த போதும் பயம் மட்டும் மட்டுப்படவில்லை மாறாக அதிகரித்துவிட்டது. அது போன்ற சமயங்களில் கைகளால் உடலை இறுக கட்டிக் கொண்டு மூலையில் அமர்ந்துவிடுவாள். இது போன்ற நேரங்களில் விடிய விடிய உறங்காமல் விழித்து வெளிச்சம் வந்த பின் உறங்கிய நாட்கள் தான் அதிகம்.

அருகே ஒருவன் இருந்தாலும் பழகிய பழக்கம் மாறாது என்பது போல அவனை விட்டு விலகி கைகளை கட்டி தன்னை தானே குறுக்கி கொண்டாள்.

தன் மீதிருந்த அவளின் மலர் பாரம் குறைய சற்று எம்பி குனிந்து பார்த்தான். அருகே அவள் குறுகி படுத்திருப்பது வரி வடிவமாய் தெரிய "என்னாச்சு" என்றவனுக்கு பதிலில்லை. ஆனால் அவள் நடுங்குவது புரிய வேகமாக போன் லைட்டை ஒளிர செய்து பார்த்தான்.

குறுகி படுத்திருந்தவள் முகம் பயத்தை பிரதிபலிக்க நெற்றி சுருக்கியவன் 'மடையா இதை எப்படி மறந்தாய்?' தன்னை தானே திட்டியவாறே எழுந்து அமர்ந்து சிறிதும் யோசிக்காமல் சட்டென இழுத்து மடியில் போட்டு நெஞ்சோடு அணைத்து கொண்டான்.

"ஷ் பயப்பட கூடாது நான் இருக்கிறேன் இல்ல" ஒரு குழந்தைக்கு சொல்வது போல் சொல்ல அவளோ அவனுள் புதைந்து விடுவாள் போல் அவனுடன் ஒன்றினாள்.

"ஸ்ரீனிகா..." மென்மையாய் அவள் பெயரை காதுக்குள் அழைத்தான் "ஸ்ரீனி.."

"ஹ்ம்ம்"

"ஸ்ரீனி... நல்ல பொண்ணு தானே" குழந்தையிடம் பேசுவது போல் பேசினான்.

"ஹ்ம்ம்..."

"என்னிடம் பேசுவாங்க தானே.."

"எ எ என்ன பே பேச" பயத்தில் நாக்கு இறுகி போனது போல் வார்தை இடறியது.

"ஸ்ரீனி எப்ப கேரளா போக போறா?"

"நா நா நாளைக்கு" நடுங்கினாள்.

"சரி சரி நான் இங்கே தான் இருக்கிறன்" என்றவன் தலை தோள் கை என்று மென்மையாக வருடி கொடுத்தான். "எத்தனை மணிக்கு"

"நாலு.... மோர்னிங் நாலு மணிக்கு"

"ஹ்ம்ம் கேரளாவில் எங்கே போறா"

"ஹ்ம்ம் திருவனந்தபுரம்.." அவன் குரலில் என்ன மாயமோ அவனுடன் பேசப்பேச மெதுவே பயம் குறைந்தது. அவன் வருடலில் உடலில் ஏற்பட்ட இறுக்கம் தளர அவன் மென்மையான தொடுகையில் பயம் மாயமாவதை என்றும் போல் ஆச்சரியத்துடன் உணர்ந்தாள். அவன் இதய துடிப்பின் ஓசை மெல்லிய சங்கீதமாய் அவள் காதருகே ஒலிக்க பல நாட்களாக அவளை வெறுத்து நின்ற நித்திராதேவி அணைத்து கொள்ள மெதுவே உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

"எதுக்கு...."

பதிலின்றி போக குனிந்து பார்க்க சிப்பி இமைகள் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அந்த குளிரிலும் பயத்தில் குறு வியர்வை பூத்த நெற்றியை அவள் சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து துடைத்து விட்டான். குளிருக்கு இதமாக அவனோடு இன்னும் ஒன்றினாள். அவள் செய்கையில் புன்முறுவல் எழ சுற்றி பார்த்தவனுக்கு மழை விட சற்று நேரமாகும் போல் தோன்றவே அவளை எழுப்பி அழைத்து செல்ல கன்னத்தை தட்ட போனவன் கை பாதியில் நின்றது. போன் வெளிச்சத்தில் குழந்தை போல் உதடு பிதுக்கி உறங்கியவளை எழுப்ப மனம் வரவில்லை.

அவன் ஐ போனை எடுத்து பார்த்தான் அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மழை என்று போட்டிருக்க சிறிது யோசித்தவன் முழுதாக அவளை தூக்கி தன் மேல் போட்டு கொண்டான்.

அவளுக்கு மெத்தை மேல் படுத்து போல் குளிருக்கு இதமாக இருக்க புரள பார்க்க ஒரு கையால் விழுந்து விடாமல் பிடித்து கொண்டான். 'நான் சும்மா இருந்தாலும் இவள் இருக்க விட மாட்டாள் போலயே' மனதோடு புலம்பியவன் "சும்மா இருடி இம்சை... இல்ல நிலத்தில் தள்ளிவிடுவேன்" செல்லமாய் மிரட்டினான்.

🎻🎻🎻🎻🎻

அடுத்த நாள் காலை குருவியின் கீச்கீச் சத்தத்தில் எழுந்தவள் உதடுகளில் நீண்ட நாட்களின் பின்னர் புன்னகை பூத்திருந்தது. குளிருக்கு இதமாய் இருந்த கம்பளியை விட்டு வெளிவர மனமின்றி தலையணையை கட்டிக் கொண்டாள். ஆனால் வழமை போல் இல்லாமல் தலையணை திண்னெண்று இதமான கததப்புடன் இருக்க கண் திறக்க மனமின்றி தடவி பார்க்க முடி அகப்பட்டது. "ஐ கரடி பொம்மை" என்று சிரித்தாள். உன்னிடம் எப்போது கரடி பொம்மை இருந்தது அதுவும் இந்த சைசில் அப்பொழுது தான் விழித்த மூளை கேட்க சட்டென எழுந்து அமர்ந்தாள்.

கெளதம் சிரிப்பை அடக்கியபடி அவளையே பார்த்திருந்தான். அவளுக்கு முன்பாகவே எழுந்திருந்தவன் தன் மார்பில் குழந்தை போல் ஆழ்ந்து உறங்கும் அவளை எழுப்ப மனமின்றி படுத்திருந்தான். எத்தனை நாள் உறக்கமின்றி ஒரு ஆறுதல் வார்த்தைக்கு ஏங்கியிருந்தால் அப்படி சில கணங்களில் அடித்து போட்டது போல் உறங்கியிருப்பாள். அவள் தலையை வருடியவனுக்கு நேற்று அவளை கைகளில் அள்ளி வந்தது நினைவில் வந்தது.

🎻🎻🎻🎻🎻

சற்று நேரத்தில் மழை நிற்க ஷாலை அவள் தலையை சுற்றிப் போட்டவன் பூ போல கைகளில் அள்ளிக் கொண்டு தூறலில் நனையாமல் குழந்தையை தோளில் தூக்குவது போல் தன் கழுத்து வளைவில் அவள் முகத்தை வைத்து அங்கிருந்து சில நிமிட நடையில் இருந்த தோட்ட வீட்டிற்கு சென்றான். பின்னாலேயே வேலன் குடையையும் பிடித்து வந்தார்.

பெட்டில் விட்டு குளிக்க சென்றவன் சட்டையை இறுக பிடித்து "போக வேண்டாம்" சிணுங்கினாள். "பிரஷாகி வரேன்" என்றவன் மடியில் கன்னம் பிதுங்க இன்னும் ஒட்டிக் கொண்டாள். ஒருவாறு அவளிடமிருந்து விடுபட்டு குளித்து வந்தவன் கதவு தட்டும் சத்தம் கேட்கவே போய் திறந்தான்.

வேலன் தான் பால் கோப்பையுடன் நின்றார் "தம்பி பாப்பா காலையிலிருந்து எதுவும் சாப்பிட குடிக்கல... இன்று பார்த்து வள்ளியும் இல்லை... அவளாவது ஏதோ மிரட்டி ஒரு வாய் உள்ளே போகும் இதையாவது குடிக்க வையுங்கள்"

கௌதமன் இமை வெட்டாமல் அவரையே பார்த்திருந்தான்.

"நான் வயசானவன் ஏதோ எனக்கு சரி என்று பட்டதை சொல்றன். நேற்று தலைக்கு ஊத்தின பிள்ளை மூன்று நாளாக பச்சை பட்டினி உடம்பு என்னத்துக்கு ஆகும். வந்த பத்து மாதத்தில் பாதி உடம்பு தான் இருக்கு... அதுவும் இந்த பத்து நாளும் அழுதே கரையுது இந்த பெண்... " புலம்பியவாறே உள்ளே வந்து பாலை உள்ளே வைத்தவர் அவள் அறையை எட்டி பார்க்க அவள் உறங்குவதை பார்த்து "ஏதோ இன்றாவது தூங்குது இல்லாட்டி பேய் மாதிரில்ல தோட்டம் முழுக்க திரியும்" வாய்க்குள் புலம்பியபடி வெளியே சென்றார்.

பாலை எடுத்து வந்து உள்ளே வைத்தவன் சிலைபோல் உணர்ச்சியற்று கட்டிலில் அமர்ந்தான். மெத்தையில் அமர்ந்தால் கட்டிலின் சட்டத்தில் அமர்ந்ததை போல் இருந்தது. அவன் வீட்டின் வேலைக்காரர்களுக்கு கூட நல்ல மெத்தை உண்டு.

அசைவில் அவள் திரும்பி படுக்க அவளை பார்த்தான் முதல்முறை அவளை பார்த்த நினைவு வந்தது. குழந்தைத்தனமான சிரிப்புடன் புசுபுசுவென்று கன்னங்களும் கனவு நிறைந்த விழிகளுமாய் சற்று பூசினால் போல் இருந்தவள் இப்போது வெறும் எலும்பு கூடு மட்டும் தான் மிச்சம். அதிலும் இந்தப் பதின்னான்கு நாளில் இன்னும் பாதியாகியிருந்தாள். கட்டிலருகே இருந்த சிறு மேசையில் இருந்த பாலை பார்த்ததும் அவள் குடிக்க வேண்டுமென்று நினைவு வர அவளை எழுப்பினான். எழுந்தவள் அவன் மேல் விழுந்து விட்ட உறக்கத்தை தொடர்ந்தாள்.

"இந்த பாலை குடிம்மா.. ஸ்ரீனி" கன்னத்தை தட்டி எழுப்பினான்.

உறக்கத்தில் அரைக்கண் விழித்து பார்த்தவள் "ஐ நல்ல கனவு" சிரிப்புடன் மீண்டும் விழி மூடினாள்.

"எதும்மா நல்ல கனவு" பதில் தன் இதயத்தை குத்தி கிழிக்கும் என்று தெரிந்தே கேட்டான்.

"அதுவா கௌதம் என்னை காதலித்த கெளதம்" வேகமாக மறுத்து தலையாட்டி திருத்தினாள் "என்னை காதலித்தது போல் பொய்யாய் நடித்த கௌதம்.... இல்லையே அதுவும் இல்லை இல்லையா? அதுவும் என்னோட கற்பனைதானே" சிரித்தாள் அதில் உயிர்ப்பில்லை.

அவன் கண்களில் இருந்து வழிந்த ஒரு துளி கண்ணீர் அவள் கன்னத்தில் விழ "ஈரம்...." துடைத்தாள்.

சட்டென சுதாரித்தவன் "முதலில் இந்த பாலை குடி" அவளுடன் போராடி ஒரு கிளாஸ் பாலை அவள் வயிற்றினுள் அனுப்பி வைக்க அவளோ அரைகுறை உறக்கத்தில் கனவு என்று அவன் முகத்தையே ஆசையாய் பார்த்திருந்தாள்.

அவள் பார்வையை தாங்க முடியாமால் “இந்த கௌதம் நிஜமாகவே உன்னை காதலிக்கின்றான் தெரியுமா உனக்கு” இரு கன்னங்களையும் இறுக பிடித்து கேட்டான்.

சோபையாய் புன்னகைத்தவள் ஒற்றை வார்தையில் மறுத்தாள் "பொய்..." பின் அவளே தொடர்ந்தாள் “அவனுக்கு தேவையான ஏதோ என்னிடம் இருக்கு அன்று கூட சொன்னான்.... நான் தான் அதிர்ச்சியில் சரியா கவனிக்கல.... ஞாபகம் வரவே மாட்டேங்குது... ஏதோ மில் சம்பந்தமான சொத்து... பச்... நினைவில் இல்லை என்னிடம் தான் எதுவுமில்லையே... பின் எதுக்கு கல்யாணம்... நீ கேட்டு என் கனவில் வந்து சொல்லு.... என்னிடம் இருந்தால் அவனுக்கு கொடுத்துறான்” கொஞ்சலாய் கூறியவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“எதை கேட்டாலும் கொடுப்பாயா.....?” தொண்டை அடைக்க கேட்டான்.

"ஹ்ம் தெரிந்தால் கொடுத்துட்டு போயிறலாம்" ஆயாசத்துடன் கூறினாள்.

"கொடுத்தால் போய் விடுவாயா....?" ஏனோ அவன் குரல் கரகரத்தது.

"இல்லாவிட்டாலும் போக தானே வேனும்" வெறுமையாய் கூறினாள்.

சற்று நேரம் எதுவும் பேசாமல் அவள் தலையை வருடிக் கொண்டிருந்தான்.

கௌதமனுக்கு ஏதோ தோன்ற "இது உன் கனவு தானே அப்ப நீ எது வேண்டும் என்றாலும் நினைக்கலாம் தானே, இந்த கௌதம் நிஜமாகவே உன்னை காதலிக்கின்றான் தெரியுமா?" அவள் ஆழ்மனதில் பதியவைக்க முயன்றான்.

"கனவுக்கும் ஒரு எல்லையுண்டு இல்லையா... இதுவும் அவன் தான்..." அவள் குரல் மெதுவே தேய்ந்தது. 'கனவுக்கும் ஒரு எல்லையுண்டு மிஸ் ஸ்ரீனிகா' அவனது அதே வார்தை அவன் இதயத்தையே சில்லு சில்லாக நொறுக்கிவிட்டது.

இதயத்தின் வலியில் அவளை இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட "இந்த கனவும் வேண்டாம் நிஜத்தில் கஷ்டம்" சிணுங்கி விலகி படுத்தாள்.

கனவிற்கு கூட இறுகி போய் இருப்பவளை என்ன செய்ய என்று தெரியாமால் விழித்தான் கௌதம். தான் செய்த தவற்றின் பரிமாணம் எழுந்து நின்ற உயரத்தில் எப்படி சரி செய்ய என புரியாமல் கௌதம் அயர்ந்துவிட்டான். அதன்பின் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட கௌதம் சோர்ந்து போன அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

அவனருகே இருந்தவளை அணைத்துக் கொண்ட நித்திராதேவி அவனை திரும்பியும் பார்க்கமாட்டேன் என்று விட்டாள்.

🎻🎻🎻🎻🎻

அவளோ பயத்துடன் அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு பழக்கம் உறக்கத்தில் யார் எதை கேட்டாலும் உளறி விடுவாள். இரவு உறக்கத்தில் அவன் என்னவெல்லாம் கேட்டானோ எதையெல்லாம் உளறித் தொலைத்தாயோ என்று தெரியலையே அவள் மூளை கூற கௌதமை பார்த்து விழித்தாள்.

"என்ன பார்வை, அழகா இருக்கேனா?" கண்ணடித்தான் அவன். அவள் உறைந்து போய் நிற்க அவனே கேலியாக கேட்டான் "இதுதான் நீ நாலு மணிக்கு போகும் இலட்சணமா?" அதற்கும் விழித்து கொண்டு நின்றவளை பார்த்து "பன்னிரண்டு மணிக்கு பிளைட் இப்பவே நேரம் எட்டு முப்பது, சீக்கிரம் தயாராகு" விரட்டினான்.

அவளோ திரும்பி திரும்பி பார்த்தவாறு குளியலறைக்குச் சென்றாள்.

அடுத்த நாள் திருவனந்தபுரம் கடற்கரையில் இன்று உருகிய அவனே இறுகி மீண்டும் ருத்ரரூபம் கொள்ள வைத்த செயலை செய்தாள். அவள் செய்த செயலில் அதிர்ச்சியாகி ஓங்கி கன்னத்தில் அடித்தவன் அவனையும் மீறி கண்ணில் நீர் சுரக்க கேட்டான் "பொண்ணாடி நீ...." மேற்கொண்டு பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது.

வருவான்.....
 

Nandhaki

Moderator

தீரா 🎻03


அவள் உறைந்து போய் நிற்க அவனே கேலியாக கேட்டான் "இது தான் நீ நாலு மணிக்கு போகும் இலட்சணமா?" அதற்கும் விழித்து கொண்டு நின்றவளை பார்த்து "பன்னிரண்டு மணிக்கு பிளைட் இப்பவே நேரம் எட்டு முப்பது, சீக்கிரம் தயாராகு" விரட்டினான்.

அவளோ திரும்பி திரும்பி பார்த்தவாறு குளியலறைக்குச் சென்றாள். இவனுக்கு பேய் கீய் ஏதாவது பிடித்திருக்குமோ....

குளித்து சாதாரண ஜீன்ஸ் குர்தி அணிந்து வந்தவளை பார்த்து நெற்றி சுருக்கினான். ‘அவன் ஒன்றும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரன் இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் பெயர் குறித்து சொல்ல கூடியவர்களில் ஒருவன். அவன் மனைவிக்கு இந்த உடை பொருத்தமற்றதே. ஒரு நாளில் எதையும் மாற்ற முடியாது. ஆனால் அவளும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவள் தான். பின் ஏன்... இப்படி’ அவன் நினைவுகளை கலைத்தது தொலைபேசி.

"ஹலோ, ஆஹ் இரண்டு டிக்கெட் வேண்டும் கேரளா திருவனந்தபுரம் வீட்டுக்கு கொண்டு வந்திரு" மறுபக்கம் ஏதோ கேட்க "இல்ல மீட்டிங் கேன்சல் பண்ணிடு"

அருகே வந்து கையை பிசைந்தவாறு நின்ற ஸ்ரீனிகாவை பார்த்தவாறே "டிக்கெட்ஸ் வீட்டிற்கு கொண்டு வந்து தந்திரு" போனில் பேசி முடித்தவன் 'என்ன' என்பது போல் பார்த்தான்.

"இல்லை வந்து... அது... வந்து" இழுத்தாள்.

கையை காட்டியவாறு பார்த்திருந்தான் சொல்லி முடி என்பது போல்.

"அது வந்து நான் பஸ் இல்லாட்டி ட்ரைன்ல வரானே..."

"ஏன்" ஒற்றை சொல்லாக கேட்டான்.

‘நீ புக் பண்ற பிலைட்க்கு என்னோட ஒரு மாச சம்பளமே போயிருமே' மனம் புலம்ப 'பொய் சொல்லாதே அரை மாச சம்பளம்' மூளை திருத்தியது. 'ரெம்ப முக்கியம் தப்ப வழி சொல்லுவியா அத விட்டு' மனம் மூளையை திருப்பி திட்ட கௌதமின் குரல் இரண்டையும் அடக்கியது.

"ஏன் என்று கேட்டேன்"

"அ.. அது பயம் ஆஹ் பயம் தான் பயம்" காரணம் கண்டு பிடித்த சந்தோசத்தில் கூறினாள்.

"பயமா..." இழுத்தவன் சிறிது யோசனையின் பின் சொன்னான் "பஸ் சரி வராது ட்ரெயின் டிக்கெட் கிடைக்காது சரி காரில் போவோம்" முடிவாய் கூறினான்.

"எது காரா..." விழித்தாள் ஸ்ரீனிகா. 'இன்று உனக்கு சங்கு தாண்டி' மனம் கேலி செய்து சிரித்தது.

"இப்ப என்ன..." சிறு சலிப்புடன் கேட்டவனிடம் "இல்ல உங்களுக்கு மீட்டிங் இருக்கு... சொன்னீங்க இல்ல.." என்றாள்.

"அதை தள்ளி போட வேண்டியது தான்" சாதாரணாமாக பதிலளித்தான்.

"இல்ல நீங்க பிலைட்ல.... இல்ல மீட்டிங் போங்க நான் ஆறுதலா பஸ்ல வாரானே"

அவளை ஊன்றி பார்த்தவன் "பிளைட் பயமா? இல்லை.... என்னுடன் வர விருப்பமில்லையா?" நேரடியாகவே கேட்டான்.

வேகமாக தலையசைத்தாள் "இல்ல அப்படி இல்ல....." என்னவென்று சொல்லுவாள் எனது சம்பளத்திற்கு பஸ் அல்லது ட்ரைனில் போவது தான் கட்டுப்படியாகும் என்று. விழித்து கொண்டு நின்றவளை பார்த்து "சீக்கிரம் தயாராகு" என்றவன் குளிக்க சென்றான்.

🎻🎻🎻🎻🎻

விமானத்தில் ஏறி சிறிது நேரத்திலேயே அவன் மேல் சாய்ந்து உறங்கிவிட்டாள். திரும்பி பார்த்தவன் சிறுமுறுவலுடன் அவள் உறங்க வசதியாக சரிந்து கொடுக்க அவன் தோளின் பின்புறத்தில் கன்னம் பதித்து உறங்க புன்னகையுடன் கையில் இருந்த கோப்பை ஆராய்ந்தான். அங்கும் இங்கும் சென்ற விமான பணிப்பெண் பார்வையாலேயே ஸ்ரீனிகாவை பஸ்பமாக்கி கொண்டிருந்தாள்.

உறக்கம் கலைந்தவள் சுற்றி பார்க்க அவன் தோளில் சாய்ந்திருப்பது புரிய சட்டென நிமிர்ந்து நேராய் அமர்ந்தாள். அவள் அருகே அமர்ந்து கையிலிருந்த பைலை கவனமாக பார்த்து கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு செல்லும் காரியம் நினைவு வர கண்ணில் நீர் வழிந்தது. இவன் அருகே இருந்தால் எந்த தாங்க முடியாத துன்பமும் தூசாய் போகிறது. ஆனால் இது நிரந்தரமற்றது. அவன் தோளில் சாய்ந்து கொள்ள ஏங்கிய மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள் கண்களை வேகமாக துடைத்தாள்.

கடைக் கண்ணால் அனைத்தையும் அவதானித்தவன் "எழும்பிவிட்டாயா? சரியான கும்பகர்ணிதான் திருவனந்தபுரத்தில் எங்கு போகின்றாய்? எதையும் கவனிக்காதது போல் சாதாரணமாக கேட்டான்.

"அம்மா இருந்த..." அவள் பதிலளித்து முடிப்பதற்குள் விமான தரையிறங்கும் அறிவிப்பு வரவும் சரியாக இருக்கவே சீட் பெல்ட் போட்டு இறங்க தாயாரானார்கள். தன் லக்கேஜை எடுத்து அவளை பார்க்க முதுகில் மாட்டும் சிறு தோள் பையுடன் மட்டும் நின்றவள் போனில் எதையோ பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் தோளுக்கு மேலாக பார்த்தவன் சினத்தில் சிவந்து பல்லை கடித்தான். "நீ என்னை என்ன நினைத்து கொண்டிருக்கின்றாய்?" சினத்தை அடக்கிய குரலில் கேட்டவனை பார்த்து விழித்தாள்.

அவனை பற்றி என்னன்னாவோ நினைத்தாள் ஆரம்பத்தில் காதலன், பின் கணவன் இப்போதோ....

"என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?"

"கேப் புக் பண்ணுறன்" என்றாள்.

"எதற்கு.."

"எல்லோரும் எதற்கு புக் பண்ணுவார்கள் போகத்தான்"

"அது தான் ஏன் என்கின்றேன் கூட்டி வந்தவனுக்கு கார் அரேஞ் பண்ணத் தெரியாதா?"

அவளோ விழித்தாள். மூளை மனதிடம் விசாரித்தது ‘உன் முன் நிற்பவன் உன் கணவன் தானே,’ மனமோ ‘அவன் மாறிவிட்டானா? என்னை நேசிக்கின்றானா?’ என ஆவலுடன் நோக்க மூளையோ ‘அவன் மாறவில்லை இது ஆள் மாறாட்டம் யாரென்று விசாரி!’ என்றது.

நீண்ட மூச்சை வெளியேற்றி தன்னை நிதானித்தவன் "நீ ஓர் ஆணியும் புடுங்க வேணாம் பேசாமல் என்னுடன் வா" முன்னே செல்ல முயல தயங்கி நின்றாள். இப்போது என்ன என்பது போல் பார்த்தான்.

“அ அது ப பணம் இப்போ தர முடியாது... கொஞ்சம் இறுக்கம்...” தயங்க பர்ஸை எடுத்து பேங்க் கார்டை அவளிடம் நீட்ட சட்டென இரண்டடி பின்னே சென்றாள்.

"இல்ல என்னிடம் இருக்கு ஆனால் சில காரியங்களுக்கு பணம் தேவைப்படுது. அதான் நெக்ஸ்ட் மான்ந் கண்டிப்பா தந்திருவன்" வேகமாக யாரோ மூன்றாம் நபரிடம் கூறுவது போல் கூறினாள். அதற்குள் அவள் முகம் கன்றிவிட்டது பேசாமல் அன்று போல் நான்கு மணிக்கே எழுந்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லை.

அவள் கூற்றின் காரணத்தை புரிந்து கொண்டவன் அவள் கன்றிய முகத்தை பார்த்து உதட்டை கடித்து வேறுபுறம் திரும்பினான். சிறுகுரலில் “நீ பணம் எதுவும் தர தேவையில்லை வா” என்றவன் கையிலிருந்த பேங்க் கார்டை அவள் கையை பிடித்து உள்ளங்கையில் அழுத்தி வைத்தவன் “இதை நீயே வைத்திரு” அழுத்தமான மறுக்க முடியாத குரலில் கூறினான். அந்த குரல் அவளுக்கு தெரியும் மறுக்க முடியாதது. மறுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

பட்டாம்பூச்சியாய் இமை தட்டி விழித்தாள் ஸ்ரீனிகா. இப்போது மூளை சொல்வதை அவள் நம்ப தொடங்கினாள். முன்னே நிற்பவன் அவள் கணவன் இல்லை… இருக்கவே முடியாது.

பிரீஸ் ஆகி நின்றவள் நெற்றியில் சுண்டியவன் "என்ன?" என்றவனிடம் "நீங்கள்.... நீங்கள் தானே" சந்தேகத்துடன் கேட்க கன்றிய முகத்துடன் "நான் நானே தான் வா" என்று அவள் போலவே சொல்லி காட்டியவன் முன்னே நடந்தான்.

மீண்டும் முன்னே ஓடி வந்து நின்றவளை பார்த்து "இப்போது என்ன?" என்றான்.

"இல்ல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு திங்ஸ் வாங்கனும்"

"சரி வாங்குவோம். வா ஹோட்டல் போய் பிரெஷ் ஆகி போவோம்" என்றவனிடம் தயக்கத்துடன் மறுத்து தலையசைத்தாள். "நான் முன்பு இங்கேயிருந்த வீட்டிற்கு போகின்றேன்" மெதுவாய் ஆனால் உறுதியாய் கூறினாள்.

அவளையே ஆழ்ந்து பார்த்தான் கௌதம்.

வருவான்.....
 

Nandhaki

Moderator
தீரா 🎻 04

சிறிது நேரம் அவளையே ஆழ்ந்து பார்த்த கௌதம் "சரி வா போவோம்" என்றான்.

வெளியே சென்று காத்திருந்த காரில் ஏறியவன் திரும்பி பார்த்தான் 'போக வேண்டிய இடத்தை சொல்லு' என்பது போல். திருவனந்தபுரம் நகரினை விட்டு சற்று தூரத்தில் இருந்த விலாசத்தை கூறினாள்.

ஒரு மணி நேர பயணத்தில் இடத்தை அடைய நன்றி சொல்லி இறங்கியவளுடன் அவனும் இறங்கினான்.

"இது தான் என் வீடு" அவள் ‘என் வீடு’ என்று சொன்னதில் திரும்பி பார்த்தவன் அவள் கண்களில் தென்பட்ட சோகத்தை கண்டு நெற்றி சுருக்கினான் 'அப்படி என்ன நடந்திருக்கும்...' சில நாட்களுக்கு முன்னே தான் அவளை பற்றி ஆராய தொடங்கி இருக்க கிடைத்த தகவல்கள் எல்லாம் புதிராகவே இருந்தன. அவள் வெளியுலகிற்கு உருவாக்கி வைத்திருக்கும் மாய பிம்பத்திற்கும் அவளது உண்மையான நிலைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

நேற்று தான் அவன் ஏற்பாடு செய்திருந்த டிடெக்ட்டிவ் அடுத்தாக கேரளாவில் படித்தது பற்றி ஆராய்வதாக கூறி இருந்தார். பார்த்தால் அவளே இங்கே அழைத்து வந்ததும் இல்லமால் என் வீடு என்று சொல்வதில் இருந்த உரிமையும் அதில் இழையோடி இருந்த சோகமும் அவனை என்னவோ செய்தது. அவர்கள் சென்னையில் இருக்கும் வீட்டினை இவ்வாறு உரிமையுடன் ஒரு தரம் கூட சொல்லவில்லையே.

அவன் கண்கள் வீட்டை அளவெடுத்தது. கேரள பாணியில் அமைந்த நாற்சார மாடிவீடு, சுற்றிலும் வாழை மா பலா தென்னை என சோலைகள் நடுவே அமைந்திருந்தது. சற்று நகரத்தை விட்டு தொலைவில் இருந்ததால் காணியும் பெரிதாகவே இருக்க மொட்டை மாடியின் மேலே கூரை அமைக்கப்பட்டு அதன் கீழ் ஊஞ்சல் இருந்தது. அதோடு முன்னே நின்ற மா மரத்திலும் ஒரு ஊஞ்சல் கட்டப்பட்டிருந்தது. என் உரிமைக்காரன் அருகே இல்லை என்பதை கூறுவது போல் குறிப்பிட்ட இடத்தை தவிர மீதி இடங்களில் சருகுகள் சேர்ந்து குப்பையாக இருந்தது.

"அழகான வீடு, எனக்கு பிடித்திருக்கு" சிறுமுறுவலுடன் கூறினான் கௌதம். அவள் புன்னகையுடன் பார்க்க காரிலிருந்து அவனது லக்கேஜையும் இறக்கினான் கௌதம். "காரை இங்கேயே பார்க் பண்ணலாம் தானே" அவன் கேட்க இவள் விழித்தாள்.

"நீங்கள் இங்கேயா தங்க போறீங்க?"

"ஹ்ம் ஏன் இவ்வளவு பெரிய வீட்டில் எனக்கு ஒரு இடம் தர மாட்டாயா?"

"அப்படியில்லை உங்களுக்கு ஹொட்டேல் போல வசதி இருக்காது..." இழுத்தாள்.

"அதை நானல்லவா சொல்ல வேண்டும்" என்று திரும்பி தன்னுடன் வந்திருந்த செக்யூரிட்டி அஜானை பார்த்து "அஜான் நீ.." என்றவனை இடைமறித்தாள் ஸ்ரீனிகா "அவரும் இங்கேயே இருக்கலாம் இடம் இருக்கு".

"குட்" என்றவன் கேட்டை பார்க்க, அது பூட்டி இருந்தது. "திறப்பு" என்று கையை நீட்டவும் "மோளே" குரலில் மூவரும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள்.

"எப்போலா மகளே வந்தது" அவர் கேட்டவாறு அருகே வர "சௌபர்ணிகா அம்மாயி, கேசவ அத்தேரையில்லு சுகமானு" அவள் பக்கத்து வீட்டு ஆண்டியும் அவரது மகனையும் சுகம் விசாரித்தாள்.

"அஜா... அத்தேரையில்லு என்றால் என்ன அர்த்தம்" தீவிரமாக கேட்டான்.

"எனக்கு மலையாளம் அவ்வளவா தெரியாது பாஸ்" கழன்று கொண்டான் அஜா. அவனுக்கு தெரிந்த வரையில் அத்தை, அத்தான் என அழைக்கிறாள் என்பது புரிய விளக்கி கூறி யார் வாங்கி கட்டி கொள்வது அதுதான் தெரியாது என்று கழன்று கொண்டான்.

கௌதம் கேசவனை மேலிருந்து கீழாக அளவெடுக்க அருகே வந்த கேசவன் "ஞான் கேசவன், சேட்டா ஞிங்களுடே பேரு..." கை கொடுக்க நீட்டினான். கௌதமோ பாக்கெட்டினுள் விட்ட கையை எடுக்காமல் எதிரி போல் அவனை முறைத்தவாறு "கிருஷ்ணா கௌதம் கிருஷ்ணா" பெயரை மட்டும் கூறினான். அதற்குள் ஸ்ரீனிகாவே கேசவன் கையை பிடித்தவாறு இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

"கேசவன் இவர் என் கணவர் கௌதம் கிருஷ்ணா, கௌதம் இது கேசவன், தமிழ் தெரியும், என்னோடோ பிராண்ட் காலேஜ் மேட்" கேசவன் புஜத்தை பிடித்த அவள் கையையே பார்த்து கொண்டிருந்தான் கௌதம். என்னவென்றே புரியாமல் உள்ளே எதுவோ எரிந்தது.

"ஸ்ரீகுட்டியோட பறையவே ஞான் தமிழ் படித்தது" மலையாள வாடை கலந்த அவன் தமிழ் அழகாகவே இருந்தது. ஆனால் கௌதமிற்கோ அது நாராசமாக இருந்தது. "குட்டி கிட்டி என்றா பல்லை தட்டி கையில் கொடுத்துருவன் ராஸ்கல்" அடி குரலில் வாய்க்குள் முணுமுணுத்தான்.

அதற்குள் அந்த அம்மாள் "ஞிங்கள் ஸ்ரீகுட்டியோட பார்த்தவோ(கணவன்)..." என்று ஆரம்பிக்க ஸ்ரீனிகா "அம்மாயி தக்கோள் (திறப்பு) எவிடே" கேட்கவே அவள் கையில் கேட் திறப்பை கொடுத்தார் அவர்.

பாஸின் நிலை தெளிவாக அஜாவுக்கு புரிய "மேடம் இது மட்டும் தானா உங்கள் பாக், திறப்பு எங்கே?" என்று கேட்டு ஸ்ரீனிகாவை தன் பக்கம் அழைத்தான். திறப்பை அவனிடம் கொடுத்தவள் "காரை உள்ளே விடுங்கள் அஜா...." என்றாள். அவர்கள் இருவரிடமும் திரும்பி "குளித்து பிரஷ் ஆகி வந்து சந்திக்கிறேன்" விடைபெற்றாள்.

வீட்டு கதவையும் திறந்து உள்ளே செல்ல உள்ளே தரையில் மாபிள் பதித்து பளிச்சென துடைக்கப்பட்டு இருக்கவே "யார் இங்கே பராமரிப்பது" கேட்டான்.

"அம்மாயி, கேசவ அத்தேரையில்லு தான், முதல்ல ஒரு தமிழ் குடும்பம் இருந்தது. சில நாட்களுக்கு முன் இடமாற்றம் கிடைத்து போய் விட்டார்கள்" எழுந்த பெருமூச்சை சத்தமற்று விட்டவள் உள்ளே செல்ல அவள் கையை பிடித்தவாறு வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தான் கௌதம்.

நன்றி நிறைந்த கண்களால் நோக்கினாள் அவனை, தனியாக இந்த வெறுமையைச் சந்தித்திருக்க முடியாது அவளால். குனிந்து பார்த்தவன் "என்னம்மா..." என்றதுதான் தாமதம். மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க மார்போடு அணைத்து கொண்டான். "ஏன்டாம்மா... ஏன் என்றுதான் சொல்லேன் மனம் கொஞ்சம் ஆறும்..." எந்த கேள்விக்கும் பதிலில்லை. சத்தமின்றி கண்ணீர் மட்டும் வழிந்தது.

தலையையும் முதுகையும் வருடி கொடுத்தவாறு இருந்தான். கொஞ்சம் அழுது ஓய்வாள் என்று ஆனால் அவன் சட்டை மேலும் நனைந்து கொண்டே இருக்க உதடு கடித்தவன் "நேற்றிலிருந்து உன்னுடன் சேர்ந்து நானும் கொலை பட்டினி இங்கே ஏதாவது சாப்பிட கிடைக்குமா?" பாவம் போல் கேட்டான். அவன் யோசனை வேலை செய்ய தன்னை சமாளித்து "சாரி... உங்களையும் டிஸ்டர்ப் பண்ணிட்டேன். இங்கே சமைக்க முடியாது. அம்மாயி கொண்டு வருவாங்க நீங்க பிரஷ் ஆகி வாங்க" மெல்லிய குரலில் கூறியவள் முகம் கன்றி போய் இருந்தது.

சில கணங்கள் அவளை பார்த்தவன், சட்டென கன்றி சிவந்த அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான். அதிர்ந்து கண்கள் வட்டமாய் விரிய மென்மையாக இருந்த அவன் கண்களையும் முகத்தையும் பார்த்தவளிடம் "இன்னொரு தரம் என்னிடம் சாரி கேட்டால் இதுதான் தண்டனை" என்று மென்னகை புரிந்தவன் அப்போதும் கன்னத்தில் படிந்திருந்த நீரை பெருவிரலால் துடைத்து "முதலில் நீ போய் பிரஷ் ஆகி வா" என்று அனுப்பி வைத்தான்.

அவள் செல்லவே அவன் முகம் தீவிரத்தை தத்தெடுக்க போனை எடுத்து ஒரு இலக்கத்தை அழுத்தினான் "இன்னும் எவ்வளவு நாள் எடுப்பீர்கள்? ஒரு சாதாரண பொண்ணை பற்றிய தகவல்கள் சேகரிக்க இவ்வளவு நேரமா?"

"இல்ல சார் அவங்க பாஸ்ட்ல ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு அதான் நன்றாக தகவல் தெரிந்த ஒருவரும் மேடத்தை பற்றி சொல்றங்க இல்லை" என்றார் அந்த டிடக்டிவ் வசந்த்.

"மிஸ்டர் வசந்த், உங்களால முடியும் என்றுதான் இந்த ப்ரொஜெக்ட்ட உங்களிடம் தந்தேன் கொஞ்சம் அவசரம் குறைந்தது பதினைந்து நாட்களுக்கு முன் என்ன நடந்தது என்ற தகவலாவது வேண்டும். நாளை பத்து மணி வரை தான் உங்களுக்கு நேரம்" உத்தரவாய் இட்டவன் போனை அருகே போட்டுவிட்டு கால்முட்டியில் கைமுட்டியை ஊன்றி கரங்களை கோர்த்தவன் அமைதியின்றி அலைந்த இதயத்தை நிலைப்படுத்த முயன்றான்.

எதையோ மறைக்கின்றாள்.... போன தடவை கேரளா போய் வந்ததிலிருந்து அழுதே கரைகின்றாள். கேட்டால் பதிலில்லை. அவன் பாணியில் அவர்கள் நிறுவனத்திற்கு வேலை செய்யும் டிடக்டிவ்வை வைத்து அறிய முயன்றால் அது கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல் வெளிவரும் உண்மைகளில் விதிர்விதிர்த்து போனான். கட்டிய மனைவியை டிடக்டிவ் வைத்து விசாரிப்பதை அவமரியாதையாக தான் நினைத்தான் ஆனால் அதற்காக அவளை அப்படியே அழுது சாக விடமுடியாதே.

சட்டென ஞாபகம் வர வசந்திற்கு அழைத்து "வசந்த இங்கே" என்று அவர்கள் இருந்த வீட்டு விலாசத்தை கொடுத்தவன் "சௌபர்ணிகா கேசவன் என்று அம்மாவும் மகனும் அவர்களிடம் சற்று விசாரியுங்கள் ஏதாவது கிடைக்கும்". என்றான். எதிர் முனையின் அமைதியில் "ஏன் என்னாச்சு..." விசாரித்தான்.

"இல்ல சார் மேடத்தோட எந்த ஆவணத்திலும் இந்த இடமே இல்லை, ஏதோ ஒரு இடம் எனக்கு தொடர்பு படுத்த முடியாமல் ப்ளாங்கா இருக்குன்னு யோசிச்சன் அதான்" என்றவர் சிறு இடைவெளி விட்டு தொடர்ந்தார் "இப்போ நான் நிற்கும் இடத்திலிருந்து அங்கே வருவதற்குள் இருட்டிடும் சார். மோர்னிங் முதல் வேலையா இதை விசாரிக்கின்றேன் சார்" அதோடு தொடர்பை துண்டித்த கௌதம் அப்படியே சாய்ந்து கண்மூடி அமர்ந்திருக்க முகத்தில் நீர் துளிகள் விழுந்து அவன் சிந்தையை கலைத்தது.

கண் திறந்து பார்க்க மனையாள் தான் குளித்து முழங்கால் வரை தொளதொளவென த்ரீ குவாட்டரும் மேலே டீ ஷிர்ட்டும் அணிந்து தலையை துவட்டி கொண்டிருந்தாள். அவன் மேல் தண்ணீர் பட்டதை பார்த்ததும் அவளையறியாமலே "சாரி கவனிக்கவில்லை" என்று விட்டு அருகேயிருந்த சோபாவில் அமர போனவளை தன் மடியில் இழுத்து போட்டான் கௌதமன்.

"என்.. என்ன.." என்று விழித்தவள் கழுத்தில் ஒட்டியிருந்த முடிகளை நுனிவிரலால் பட்டும்படாமலும் நீக்கி அவளுள் மின்சாரத்தை ஓடவிட்டுக் கேட்டான் "நான் என்ன சொன்னேன்?"

'முருகா இவனுக்கு இதுவே தொழிலாக போயிட்டு, எப்ப பாரு எதையாவது எக்கு தப்பா கேட்பது இவன் ஆயிரம் சொன்னான் இதில் நான் எதை சொல்ல' மனதில் அவள் முருகனிடம் முறையிட கண்கள் வழமையான தன் பணியை செய்து வைத்தது. விழி விரித்து பார்த்தாள்.

அவன் அருகே நெருங்க "குளிக்கலை..." ஏதோ ஒரு காரணத்தை சொல்லி வைக்க மனம் மூளையை காறி துப்பியது 'ச்சீ இதெல்லாம் ஒரு ரீசன்'.

அவளை பார்த்தவன் "தென் குளித்து வந்தால் அனைத்துக்கும் ஓகே தானே" என்று குறும்பாக கேட்க, என்ன கேட்கிறான் என்று புரியாவிட்டாலும் எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தாள். உள்ளே கிளர்ந்த உணர்ச்சியில் கண்கள் நிறம் மாற அவளை எழுப்பியவன் எழுப்பிய வேகத்திலேயே கன்னத்தில் முத்தமிட்டு உள்ளே சென்றுவிட கையை கன்னத்தில் வைத்து ப்ரீஸ் ஆகி நின்றாள்.

குளித்து முடித்து ட்ராக் பாண்ட் டீஷிர்ட் அணிந்து ஒருகையால் தலை ஈரத்தை துவட்டியாவாறே மறுகையில் போனுமாய் வந்தவன் “ஸ்ரீனி போன் சார்ஜ் போடனும் எங்கே...” எனவும் கதவின் அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருக்கவே போன் சார்ஜ் செய்யும் இடத்தை கை காட்டியவள் கதவை திறந்தாள்.

“அம்மாயி... அதில் வாங்குக (உள்ளே வாங்க, எதாவது பிழை இருந்தால் மன்னிச்ச்சு)” உள்ளே அழைத்தாள். அவருடன் வந்த வேலையாளிடம் கையோடு கொண்டு வந்திருந்த உணவை உள்ளே வைக்குமாறு பணித்தவர் கௌதமை முறைத்து கொண்டே இருந்தார்.

வரவேற்பாக கரம் குவித்த கௌதம் 'என்ன' என்பது போல் ஸ்ரீனிகாவை பார்த்து வைத்தான். சங்கடமாய் சிரித்தவள் அம்மாயியை தள்ளிக் கொண்டு சென்றுவிட்டாள். ‘இவர்கள் ஏன் என்னை முறைக்கிறார்கள்?’ கௌதம் யோசித்துக் கொண்டிருந்தான்.

அவரை அனுப்பிவிட்டு திரும்பி வந்த ஸ்ரீனிகா சாப்பாட்டு மேஜையை காட்டி "சாப்பிடுங்கள்" என்றவள் உள்ளே செல்ல முயல "நீ சாப்பிடவில்லை?." குழப்பமாய் கேட்டான்.

அவளோ அவனை விட குழப்பமாய் பார்த்தாள். அவனிருக்கும் போது டைனிங் டேபிள் பக்கத்தில் போனாலே சாமியாடுவான். இன்றானால் சாப்பிடவில்லையா என்று கேட்கிறான். விமானநிலையத்தில் வைத்தும்... ஆனால் இங்கேதான் நடிப்பதைப் பார்க்க யாருமே இல்லையே, ஆளில்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆத்துறான் யோசனையுடன் அவன் முகத்தைப் பார்க்க அவன் முகம் காது மடல் வரை சிவந்துவிட்டிருந்தது.

அவள் முகத்தை பாராதது போல் "நீயும் வா" என்று அவளை இழுத்து சென்று இருத்த “பரவாயில்ல நான் அப்புறம்...” என்றவளை கணக்கிலேயே எடுக்காமல் உணவை ஆராய வழமையான சோறு கறியுடன் புட்டு, பயறு பலாப்பழமும் இருந்தது. அவளை திரும்பி பார்க்க "எனக்கு புட்டு பலாப்பழம் பிடிக்கும்" பதிலளித்தாள்.

"நானும் ட்ரை பண்ணவா?" கேட்டான்.

"உங்களுக்கு ஆஸ்மா எதுவும் இல்லையே..." சிறிது யோசித்தவள் "சாப்பிடலாம்" எடுத்து வைத்தாள், அப்போதும் தயங்கவே அவனும் உணவைத் தொடாது கையை கட்டி கொண்டு அமர்ந்தான். வேறு வழியின்றி அவளும் தனக்கான உணவை எடுத்தாள். நன்றாகவே இருக்க இருவரும் சேர்ந்து ஒரு பிடி பிடித்தார்கள்.

சாப்பிட்டு விட்டு வரவும் சூரியன் அஸ்தமிக்கும் பொழுது வர வெளியே மா மரத்தில் கட்டிய ஊஞ்சலில் வந்து அமர்ந்தவள் அருகே வந்து நின்றான் கௌதம். ‘என்ன’ என்பது போல் பார்க்க அவளருகே இருந்த இடத்தைக் கண்ணால் காட்டினான். சிறிது தயங்கினாலும் அவனுக்கும் இடம் விட அருகே அமர்ந்து அவளிடம் மெதுவாய் பேச்சு கொடுத்தான்.

சிறுவயதில் நடந்த சம்பவங்களை கூற கேட்டு சிரித்தான் அவன். ஒரு தடவை தோழியின் ஸ்கூல் பாக்கை இன்னொருத்தியின் பெரிய ஸ்கூல் பாக்கினுள் ஒழித்து வைத்து தேட விட்ட கதையை சுவைபட கூறினாள். அதன் பின் காலேஜில் கேசவன் முதுகில் ‘என்னை பார் என் அழகை பார்’ என்று கழுதை படத்தை ஒட்டியது என்று அவளிடம் சொல்வதற்கு ஒரு தொகை இருந்தது.

இருவர் தாராளமாக அமர கூடிய கதிரை போன்ற அமைப்புடைய அந்த ஊஞ்சலில் ஒரு காலை மடித்து அவள் பின்னால் கையை ஊன்றி பக்கவாட்டில் அவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தான் கௌதம். மறு காலை ஊன்றி அவ்வப்போது ஊஞ்சலை ஆட்டிக் கொண்டிருந்தான். மணமான புதுதில் சில காலம் இப்படி அவளை சிரித்து பார்த்திருக்கின்றான். அதன் பின்...

பேசியவாறே மெதுவே அவன் மார்பில் சாய்ந்து பாதி உறக்கத்திற்கு சென்றவளிடம் கேட்டான். "உன் அம்மாவை பற்றி எதுவும் சொல்லவில்லையே?"

பனி நீரை முகத்தில் வீசியடித்தது போல் எழுந்தாள்.

வருவான்.....
 

Nandhaki

Moderator
தீரா 🎻 05

பேசியவாறே மெதுவே அவன் மார்பில் சாய்ந்து அரை உறக்கத்திற்கு சென்றவளிடம் கேட்டான் "உன் அம்மாவை பற்றி எதுவும் சொல்லவில்லையே?" பனிநீரை முகத்தில் விசிறி அடித்தது போல் எழும்பி நின்றாள்.

அவளை பற்றி அவன் அறியாதது ஒன்று அது அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது எழுப்பி யார் எதை பற்றி கேட்டாலும் உளறிவிடுவாள். அவள் முழுமையான உறக்கத்திற்கு சென்றிருந்தாள் அன்றே அனைத்தும் சொல்லியிருப்பாள். பின்னாளில் வந்த எந்த பிரச்சனையும் இல்லாமலே போயிருக்கும் ஆனால் அந்த கேள்வியே அவளை அத்தனை நேர கனவிலிருந்து எழுப்பியிருந்தது.

"என்ன?" எழுந்தவளை கேள்வியுடன் பார்த்தான் கௌதம்.

"இல்லை இரவு நேரம் பனி விழும் உள்ளே செல்வோம்" அவனைப் பார்க்காமல் நிலத்தை பார்த்தவாறு கூறினாள்.

உதட்டை கடித்தவாறு அவளைப் பார்த்தவன் "சரி" மறு பேச்சின்றி சென்றான்.

அவனுக்கு படுக்க அறையை காட்டியவள் மெத்தையை சரி செய்து போர்வையையும் கொடுத்து ஏசியை அளவாகவிட்டாள். அவன் விடும் அதே அளவுக்கு. தண்ணீர் கூஜாவில் நீர் உள்ளதா என சரி பார்தாள். அனைத்தையும் அமைதியாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கை கட்டி வேடிக்கை பார்த்திருந்தவன், அவள் வெளியே செல்லவே கேட்டான் "எங்கே போகின்றாய்?”

"வெளியே சோபாவில்.... உறக்கம் வரவில்லை அது தான்..."

"புது இடம் தனியாக படுத்தால் எனக்கு உறக்கம் வராது" அப்பாவியாய் கூறினான்.

அவளோ விழித்தாள். சின்ன குழந்தையா என்ன இவன்... தனியாக படுக்க பயப்படுவதற்கு. என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து புன்னகையை அடக்கியவன் "சொல்லு ஸ்ரீனி எங்கே உறங்க போகிறாய்?" கேட்டான்.

அப்போதும் அமைதியாக நின்றவள், கையை பிடித்து இழுக்க அவனருகில் வந்து விழுந்தாள்.

"பேசாமல் உறங்கு" என்றவன் முதல் நாள் உறக்கமின்மையோடு சேர்த்து முந்தைய நாள் பயணத்தின் அலுப்பு மிச்சமிருக்க அருகே படுத்ததுமே உறங்கி விட்டான். இன்று அவளுக்குதான் ஏதோதோ நினைவுகள் அலைக்கழிக்க உறக்கம் கண்ணாமூச்சி விளையாடியது.

🎻🎻🎻🎻🎻

கௌதம் அடுத்த நாள் காலை எழும்பிய போது ஸ்ரீனிகா அருகில் இல்லை. எங்கே என்று தேட ஜீன்ஸ் டாப் அணிந்து வெளியில் செல்ல தயாராக நின்றாள். மணிகூட்டினை பார்க்க அது நேரம் ஐந்து என்றது.

"இந்த நேரம் எங்கே போகிறாய்?" உள்ளங்கையால் முகத்தை அழுத்தி துடைத்தவாறே கேட்டான்.

தீடிரென கேட்ட அவன் குரலில் துள்ளி திரும்பியவள், அவனை கண்டதும் நெஞ்சில் ஆசுவாசமாய் கைவைத்தாள். "சந்தைக்கு போகனும்" பதிலளித்தாள்.

"இந்நேரமா... திறந்திருக்குமா..... " என்றார் கேள்விக்கு பதிலாய் தலையசைத்தவளிடம் "ஓர் பத்து நிமிடம் நானும் வருகிறேன்" அவள் பதிலை எதிர்பாரமால் குளிக்க சென்றான்.

அவன் குளித்து ட்ராக் பாண்ட் டிஷிர்ட் ஷூ சகிதம் உடை மாற்றி வர கையில் பூஸ்டுடன் நின்றாள். "சாரி பூஸ்ட் தான் இருக்கு குடித்துவிட்டே வாருங்கள்" கையில் கொடுத்துவிட்டு வெளியே செல்ல மறித்து கேட்டான் "நீ எங்கே போகிறாய்...?"

"ஊஞ்சலுக்கு..." என்றவளிடம் "நானும் வருகின்றேன்" என்று அவளுடன் செல்ல அவன் நெற்றியில் கைவைத்து பார்த்தாள். ஏதாவது காய்ச்சல் வந்திருக்குமோ... அவள் கைகளின் கீழ் கண்களை மட்டும் தாழ்த்தி அவளை பார்த்தவன் "போவோம் வா" என்றான்.

இருள் பிரிந்தும் பிரியாத அமைதி நிறைந்த அதிகாலையில் குளித்த பிரஷ்னன்ஸுடன் சிலுசிலுவென்ற காற்றில் சூடானபானம் அருந்தும் சுகமே தனி. அதை அனுபவித்தால் மட்டுமே புரியும். கௌதமுக்கு ஒவ்வொரு நாளும் இது போல் அவளுடன் அருந்த ஆசை வந்தது. திரும்பி மனையாளை பார்த்தான். ஏனோ இன்று எப்படியும் அவளை பற்றிய சில மர்ம முடிச்சுகளாவது அவிழும் என்று தோன்றியது.

சந்தைக்குள் காலடி வைக்க அவன் கண் முன் விரித்தது இன்னொரு உலகம், அந்த சந்தை முழுதும் ஆட்கள் நிறைந்திருக்க வருவோரும் போவோருமாக சுறுசுறுப்பையே குத்தகைக்கு எடுத்தது போல் இருந்தது. அந்த அதிகாலையிலேயே இப்படி ஒரு சுறுசுறுப்புடன் சந்தை இருக்கும் என அவன் நினைக்கவே இல்லை. ஒரு நாளும் அதி காலையில் போனதும் இல்லை. அவன் முகத்தை பார்த்துவிட்டு "இப்போ கொஞ்சம் கூட்டம் குறைஞ்சிட்டு இல்லாவிட்டால் இங்கு நடக்கவே முடியாது" என்றாள்.

"இது கூட்டம் குறைவா....." சுற்றி பார்த்தான். ஒரு பக்கம் வண்டியில் சமான் ஏற்றுவதும் அதற்கு கூலி பேசுவதும் என்றால் மறு பக்கம் இறக்குவதற்கு பேரம் பேசினார்கள். பார்கிங்கிலிருந்து ஒருவன் வாகனத்தை எடுக்க இன்னொருவன் அதற்கு குறுக்கேவிட்டான். அவன் ஹிந்தியில் திட்டினான் இவன் மராத்தியில் பேசினான். அந்த உழைக்கும் கூட்டத்தின் நடுவிலும் ஒருவன் அதிஷ்டலாப சீட்டு விற்றான். இன்னொருவன் புத்திசாலித்தனமாய் தேநீர் விற்றான். நிலத்தில் காலின் கீழ் மரக்கறி பழங்கள் நசுங்கி கிடந்தன.

மகளிர் காதணி கழட்டி பறவை விரட்டியதாக பா எழுதிய புலவர் இதை பார்த்தால் என்னவென்று எழுதியிருப்பாரே....

அந்த சத்தத்தில் ஒருவருடன் ஒருவர் எப்படி பேசி கொள்கின்றார்கள் என்று யோசித்தான். திரும்பி மனைவியை பார்க்க அவன் பார்வை உணர்ந்து கண்ணால் கேட்டாள் 'என்ன'.

அருகே குனிந்து "ல்ல சத்தமா இருக்கே எப்படி பேசி கொள்கின்றார்கள்." என்றவனிடம் "நாம் எப்படி பேசி கொள்கின்றோம் அப்படியே தான் அவர்களும்" என்று பதிலளிக்க பேசுவதற்கு வசதியாக அவனை நெருங்கி நின்ற மனைவியை பார்த்து "நாம் அடிக்கடி இங்கே வந்து பேசி கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்" என்றான்.

அவன் கூறியது புரியாமல் "என்ன" என்றவளிடம் அப்பாவியாய் "ஒன்றுமில்லை" என்றான். அவள் வாங்கிய காய்கறி வகைகளை பார்த்து அந்த கடைக்காரர் "யாருக்கு குழந்தை..." என்றார். மெல்லிய சோகம் கலந்த புன்னகையுடன் "அம்மா..." என்றாள்.

அந்த இடத்திற்கே ஒட்டாமல் வருவோர் போவோர் மேல் இடிபடாமல் நெளிந்து விலகி கொண்டு கால் ஷூவில் ஒட்டியிருந்த கழிவுகளை காலை தூக்கி பார்த்தவனை பார்த்து "பார்த்தாவா குட்டி..." என கேட்க ஆமோதித்தவாறே திரும்பி அவன் அலப்பறையை பார்த்த ஸ்ரீனிக்கும் சிரிப்புக்கு வந்தது. நீண்ட நாளிற்கு பின் மனைவியின் உண்மையான சிரிப்பை பார்த்து அவள் கணவனும் புன்னகைத்தான்.

இடையில் அஜா அவர்கள் பையை வாங்கி கொண்டு போய் காரில் வைத்து வர அப்படியே பாத்திர கடையில் சில தாம்பளங்களும் வாங்கி கொண்டு வெளியே வந்தார்கள்.

காரில் வந்து அமர்ந்தவன் கேட்டான் "இனி எங்கே...?" ஒரு டெக்ஸ்ட்டைல் பெயரையும் தெருவின் பெயரையும் கூறி அங்கே விட சொன்னாள். சாதாரண மக்கள் வந்து போவது போன்ற அளவான கடை அது மணி எட்டு முப்பது என்று காட்ட அப்போது தான் கடை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

அவர்களை காரிலேயே விட்டுவிட்டு அவள் மட்டும் செல்ல முதலாளி அறிமுகம் ஆனவர் போல் அவளிடம் பேசியவர் ஒரு பெரிய பையை எடுத்து அவள் கையில் கொடுக்க அதற்கான பணத்தை கொடுத்து வாங்கினாள்.

அடுத்ததாக ஆசிரமத்திற்கு விட சொன்னாள். அங்கும் போய் பணம் மட்டும் செலுத்தி வந்தவளையே சிறிது நேரம் பார்த்திருந்தவன் கேட்டான் "என்ன விஷேசம் இன்று...". ஓர் கணம் ரத்தமின்றி முகம் வெளுத்தவள் ஒன்றுமில்லை என்பது போல் தலையை அசைத்து வைத்தாள்.

"அடுத்தது எங்கே" ஏனோ அவன் குரல் வெறுமையாக இருப்பது போல் தோன்ற "வீட்டிற்கு" மெல்லிய குரலில் கூறினாள்.

அஜா மறு பேச்சின்றி காரை ஸ்டார்ட் செய்தான். அதற்குள் கௌதம் போன் இசைக்க எடுத்து காதில் வைத்தவன் "குட் மோர்னிங் வசந்த், சொல்லுங்கள்" மறுபுறம் என்ன சொன்னார்களோ "சரி வீட்டிற்கு அருகே உள்ள கஃபே ஷாப்பில் காத்திருங்கள் வருகின்றேன்" அழைப்பை துண்டித்தான்.

"அஜா வீட்டிற்கு அருகே உள்ள கஃபே அருகே நிறுத்து ஒரு அவசர மீட்டிங் முடித்து வருகின்றேன்" அவனுக்கு ஏதோ நெருடலாக இருந்தது.

வீட்டின் உள்ளே அஹாமஸ்த்தாய் எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கு....

இன்று வாங்கிய பொருட்கள்....

தாம்பாள தட்டு...

உடைகள்.... ஏதோ சரியில்லை.

பெருவிரலால் நெற்றி கீறியவன் “ஸ்ரீனிகா...." காவை சற்று இழுத்து அழைத்த விதமே அலாதியாய் இருந்தது, கிட்டத்தட்ட பத்து நாட்களின் பின் அவள் முழுபெயர் சொல்லி அழைத்தான் "அந்த இல்லத்துக்கு மதிய உணவா ஏற்பாடு செய்து இருக்கிறாய்?”.

ஆச்சரியத்துடன் பார்த்தாள் "உங்களுக்கு எப்படி தெரியும்" கார் நிற்கவே நெற்றியை தேய்த்தவன் கேட்டான் "நீ என்னிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" பெரிய கண்களை விரித்து பார்த்தவளின் அமைதியே பதிலாக இருக்க இறங்கினான். மறு பக்கத்தால் அவளும் இறங்கியவள் தயங்கி நின்றாள். 'என்ன' என்பது போல் பார்த்தவனிடம் "ல்ல நீங்க வர முடியு...... ஒன்றுமில்லை" அவள் கண்களில் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு.

கௌதமை கண்டுவிட்டு அருகே வந்த அந்த டிடக்டிவ் வசந்த் அவளையே பார்த்தார். அவள் கண்ணில் என்ன கண்டரோ "இன்னும் ஒரு மணி நேரத்தில் வருவார் போய் தயாராகுங்கள்" என்றார். அவளோ திரும்பி கணவனை பார்க்க அவனோ வெறுமே 'போ' என்பது போல் தலையசைத்தான்.

டிடக்டிவ் வசந்த் காரில் ஏறிய அவளையே கண்வெட்டாமல் பார்த்தார்.

அனைத்தையும் தயார் செய்தவள் நேரத்தை பார்க்க மணி ஒன்பது முப்பது என்றது. இப்போது கிளம்பினால் தான் அங்கே குறைந்தது பத்து பதினொன்றுக்கு முன் போய் சேர முடியும்.

பொருட்களை அவள் எடுத்து வைத்திருந்த விதத்தை பார்க்க அஜாவுக்கு அடிவயிறு கலங்கியது. அவள் மொபைலில் இருந்து அழைக்க பிசி என்று வரவே அழைப்பை துண்டிக்கின்றான் என்பது புரிந்தது. அஜாவும் எடுக்க அதே தான் பலன். இதற்கு முன்னும் இப்படி தானே இருந்தான்.

கடந்த சில தினங்களாக இருந்த மாற்றம் கண்டு அவனும் சந்தோஷப்பட்டான். ஓர் நல்ல பெண்ணின் வாழ்கை சரியாகிவிட்டது என்று ஆனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது போலும்.

"போவோம்" என்றவள் நீண்ட மூச்சை வெளியிட்டாள். அவன் இங்கு வந்தது எதிர்பாராத ஒன்று அவனுக்காக ஏங்குவது மடத்தனம் என்று மூளை சொன்னாலும் மனம் ஏற்க மறுத்தது. அவன் வந்திருக்கவிட்டால் தனியாக தானே அனைத்தையும் செய்திருக்க வேண்டும் தனக்கு தானே சமாதானம் செய்தவள் உள்ளே சென்று எடுத்து வந்ததை பார்த்த அஜாவின் முகம் விழுந்துவிட்டது

🎻🎻🎻🎻🎻

அசைவின்றி இறுகி போய் அமர்ந்திருந்தான் கௌதம். அவன் போன் கடந்த பத்து நிமிடமாக அடித்து அடித்து ஓய்ந்தேவிட்டது.

ஒரு போட்டவை மேஜையில் வைத்து ஒரு விரலால் அவன் பக்கம் நகர்த்திய வசந்த் “இது மேடத்தோட உண்மையான அம்மா... இப்போது...” என்று நிறுத்தக் கேட்டான் "அப்படியானால் என் சந்தேகம்... சரியா?” அவர் பார்வை சொன்ன சேதி அவனை தூக்கிவாரி போட்டது போல் ஆனது.

"பாவி..." அவன் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

"இப்போது அவர்களுக்கு நீங்கள் தேவை முதலில் அங்கே போங்கள்" என்றார் வசந்த். அப்போதும் அசையாமல் இருக்க "அவர்கள் உங்களிடம் செல்லும்படியும் நீங்கள் நடந்து கொள்ளவில்லை இல்லையா?" அவர் கேள்வியில் அடி வாங்கியது போல் பார்த்தான்.

"மை பாய்... எந்த கோபத்தையும் சாதிக்கும் தருணம் இதுவல்ல சீக்கிரம் புறப்பட்டு மேன்" கையில் ஒரு பார்சலையும் திணித்தார்.

🎻🎻🎻🎻🎻

பூணூலை ஐயர் கையிலிருந்து ஒரு கரம் வாங்கிக் கொள்ள யாரென பார்க்க குனிந்து பூணுலை வலது புற தோளில் போட்டு கொண்டிருந்தான் கௌதம் கிருஷ்ணா.

வருவான்.....
 

Nandhaki

Moderator

தீரா 🎻 06

வர்கல பாபநாசம் கடற்கரை....

கடற்கரை தனியாக இருந்தாலே அழகு மனதை கொள்ளை கொள்ளும் செங்குத்தான மலைகளுக்கு அருகே இருந்தால் சொல்லவா வேண்டும்.

கேரளாவின் இந்த பீச் இந்துக்களின் இறுதி கிரியைகளுக்கு பெயர் போனது. அதோடு இங்கே உள்ள கடலில் குளித்தால் பாவங்கள் அற்று போகும் என்பது நம்பிக்கை. அருகில் உள்ள குன்றின் மீது ஜனர்தனனாக கோவில் கொண்டுள்ளார். எம் பெருமான் அரங்கநாதன்.

அப்போது நேரம் பத்து பத்தரையாக இருக்கவே காலை பூசைக்கு வந்த அடியார்கள் சென்று விட, மதிய பூசைக்கு இன்னும் நேரமிருக்க கூட்டம் குறைவாகவே இருந்தது. அதோடு தாழ் அமுக்கம் காரணமாக புயல் எச்சரிக்கை விட பட்டிருக்க கடல் அலையும் சிறிது உக்கிரமாகவே இருந்தது.

அந்த பீச்சின் கரையில் சேலை முந்தானை காற்றில் பறக்க போனை பார்த்து கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா வேண்டாம் வரமாட்டன் என்ற தன் மூளையிடம் கெஞ்சி மன்றாடி கடைசியாக ஒரே ஒரு தரம் என்று கௌதமுக்கு அழைத்தாள் ஸ்ரீனிகா. ரிங் போனதே தவிர பதிலில்லை. இனியும் தாமதிக்க முடியாது. வறண்ட புன்னகையின் பின் துக்கத்துடன் அவமானத்தையும் சேர்த்து விழுங்கயவளாய் போனை அஜாவிடம் கொடுத்து விட்டு ஐயரை நோக்கி சென்றாள்.

"குழந்த தனியாவா வந்தே பெரியவா யாரும் வரலையா..." அவர் கேள்விக்கும் வறண்ட புன்னகையே அவளிடம் பதிலாக இருந்தது. அஜாவுக்கு அதற்கு மேல் பொறுக்க முடியாமல் 'நான் செய்கின்றேன்' என்று அருகே செல்ல முயல ஸ்ரீனிகாவின் போன் அடித்தது. கௌதம் தான் "பாஸ் இப்பதான் போன் தந்துட்டு ஐயரிடம் போறாங்க" என்றான்.

"வந்துவிட்டேன் நீ எங்கே?" இரத்தின சுருக்கமாக கேட்டான். இடத்தை சொல்ல ஐம்பதடி தொலைவில் நின்றான்.

"நாம் தொடங்குவோம்...." அவருடன் பீச் மணலில் அமர்ந்தாள். பொருட்களை எல்லாம் சரி பார்த்து தண்ணீர் தெளித்து ஏதோ மந்திரங்கள் சொன்னவர் தர்ப்பையையும் பூணுலையும் எடுத்தார். குனிந்திருந்த ஸ்ரீனிகா கண்ணை துடைத்து விட்டு வாங்குவதற்குள் பூணூலை ஐயர் கையிலிருந்து ஒரு கரம் வாங்கிக் கொள்ள யாரென நிமிர்ந்து பார்க்க சற்று குனிந்து நின்று பூணுலை வலது புற தோளில் போட்டு கொண்டிருந்தான் கௌதம் கிருஷ்ணா.

கண்ணை வட்டமாய் விரித்து அவனையே பார்த்திருக்க வேட்டி கட்டி வெறும் மேலுடன் பூணுலையும் அணிந்து அவளருகே அமர்ந்தான் கௌதம். முன்னே ஸ்ரீனிகாவையே அச்சு வார்த்தது போல் ஒரு பெண்மணி ஒருவரின் படம், அதன் அருகே வெள்ளை துணி சுற்றி கட்டப்பட்ட செம்பு என அனைத்தும் தயாராக இருக்க கிரியைகளை ஆரம்பித்தார் ஐயர்.

படத்திலிருந்து பெண்மணியை ஒரு கணம் அதிர்ச்சியில் கண்கள் விரிய பார்த்தவன் ஐயர் சொல்வதை செய்ய தொடங்கினான். தந்தையின் பெயரை சொல்லவும் மறுத்துவிட்டாள். அனைத்து காரியங்களும் முடிய சாம்பலை கொண்டு போய் கடலில் கரைத்து முழுக்கு போட்டு வர சொல்லவே இருவரும் எழுந்தனர்.

அவள் செம்பையும் அவன் தாம்பாளத்தையும் எடுத்துச் சென்று இடைவரை உள்ள நீரில் நின்று முதலில் தாம்பாளத்தில் உள்ளதை கடலில் விட்டு பின்னர் சாம்பலை இருவரும் சேர்ந்து சிறிது சிறிதாக கடலில் கொட்டினார்கள்.

கடைசியாக கையிலிருந்து நழுவிய செம்பு தொப் என கடலில் விழுந்து அலையில் மிதந்து சென்றது. அவள் அம்மாவின் கடைசி அடையாளமும் காற்றிலும் நீரிலும் கலந்து மறைந்தது.

கண்களில் நீர் வழிய அலைகளில் மிதந்து சென்ற செம்பையே பார்த்து இருந்தவள் உடைந்து போய் இரு கைகளாலும் வாய் பொத்தி அழ திரும்பி பார்த்த அவன் கண்களிலும் நீர் நிரம்பியிருந்தது. அவளை இழுத்து நெஞ்சோடு அணைத்து கொண்டான்.

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க


முதல் முறை துன்பத்தில் சாய்ந்து கொள்ள தோள் கிடைத்ததோ இல்லை அனைத்தும் தனியாக தாங்கி தாங்கி கடைசியாக அன்னையின் இழப்பை தாங்க திடம் போனதோ... வாழ்கையில் முதல் முறையாக வாய்விட்டு அழுதாள். "அம்மா...." தாய்ப் பசு தேடும் கன்றின் கதறலாய் ஒலித்தது. "ஸ்ரீனி...." அவளை இன்னும் தன்னோடு இறுக்கி கொண்டான் அவன்.பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

கடல் தொடு ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன !
அண்ணாந்து வானத்தை பார்த்து வாய் வழி காற்றினை ஊதி தன் சோகத்தை அடக்கியவன் மனைவியை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினான்.

வருவான்....

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்
அவன் நெஞ்சில் கை பதித்து நிமிர்ந்து அவன் கண்களினை நோக்கியவள் அவன் கண்ணில் தேங்கி நின்ற நீரில் இன்னும் உடைந்தாள். "கெளதம் அம்மா...." உதட்டை கடித்து தன் அழுகையை விழுங்கி மேலும் கீழுமாக தலையாட்டி கைகளில் அவள் முகத்தை ஏந்தியவன் பெருவிரலால் கண்ணீரை துடைத்தான்.

திரும்பி கடலில் மூழ்கி கொண்டிருந்த செம்பை பார்த்தவள் அழுகை பொங்கி உடல் குலுங்க அவன் கழுத்தில் நெற்றி பதித்து விசும்பினாள்.

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்


உதட்டை கடித்து தன்னை சமாளித்தவன், அவள் இருக்கும் நிலையில் தனியாக கடலில் முழுகவிட்டால் கடலுடனே மூழ்கி போய்விடுவாள் என்பது புரிய அவள் முதுகை தன் நெஞ்சோடு வைத்து பின்னிருந்து அணைத்தவன் "முழுகு ஸ்ரீனி” அவள் முக்கை பொத்தி பிடித்தவன் தன்னோடு சேர்த்து கொண்டு கடலினுள் மூழ்கினான். பொம்மையை போல் அவன் நெஞ்சில் சாய்ந்தவாறு அரைவாசி மூழ்கியிருந்த செம்பை பார்த்தவாறே உள்ளே சென்றவள் வெளியே வந்த போது செம்பு முழுவதுமாக மூழ்கி கண்ணில் இருந்து மறைந்திருந்தது.

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்மூன்று தரம் மூழ்கியவன் அவளையும் அழைத்து கொண்டு கடலை விட்டு வெளியே வந்தான்.

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க !
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க !
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!


கரையில் மண்டியிட்டு அமர்ந்தவள் கடற்கரையின் ஈர மண்ணை கைகளால் இறுக பிடித்தாள். அம்மாவை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டாள். முழுதுமாக நிறைவேற முன் பறித்து கொண் விதியை நோவாளா? இல்லை இந்த நிலையில் நிறுத்திய சொந்தங்களை நோவாளா?

நெற்றி மண்ணில் பட அப்படியே முன்னால் விழுந்தாள். தன் தாய்க்கு செய்யும் கடைசி மாரியதை போல...

ஐயரை பார்த்த கெளதம் "ஸ்ரீனி...." எழுப்ப முயல "வேண்டாம் அம்பி குழந்த கொஞ்சம் அழட்டும் விடுங்கோ... நான் வைட் பன்றன். அன்று அம்மாவுக்கு கொள்ளி வைக்கிறப்போ பார்த்தேன் கல்லு மாதிரில்ல நின்னாள், இந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகிருமோ என்று பயந்தேன் நல்லதா போச்சு இந்த வாட்டி நீங்களும் வந்தேள்"

ஐயர் சொன்ன தகவலில் மொத்தமும் அதிர்ந்து போய் அவளை வெறித்து பார்த்தான் கெளதம். பாதகத்தி ஒரு வார்தை.... ஒரு வார்தை சொல்ல முடியாத அளவுக்கு அன்னியமாகி விட்டேனா....

அன்று வந்து என்னுடன் வர முடியுமா? என்று கேட்டதும் தான் கூறிய பதிலும் அசந்தர்ப்பமாய் ஞாபகம் வந்து தொலைத்தது.

இதயத்தில் கத்தியால் குத்தியது போல் வலித்தது. அவனே இழுத்து கொண்ட நிலைமை தான் இருந்தும் மனம் பொறுக்கமால் வலித்தது. எதுவும் பேசாமல் முதுகை வருடிக் கொடுக்க அப்படியே அவன் புறம் சாய புரிந்தது மயங்கிவிட்டாள்.

அஜா அதற்குள் நீர் எடுத்து வர வாங்கி தெளித்து கன்னத்தில் தட்டினான். இமை திறந்தவள் எழும்பிய வேகத்தில் கடலை நோக்கி ஓட போக இழுத்து ஓங்கி அறைவிட்டான் கெளதமன்.

வாருவான்....
 

Nandhaki

Moderator

தீரா 🎻 07


அழகின் புகலிடமாய் இருந்த கேரளாவின் கோவளம் பீச்.......

அதன் அருகே அமைந்திருந்தது அந்த கெஸ்ட் ஹவுஸ்.

கடலுக்கு மிக அருகில் அமைந்திருந்த அந்த வீட்டின் முன்னே நீச்சல் குளம் அதன் பின் புல்வெளி, புல்வெளியை தாண்டி கடற்கரை பின் கடல் என்று, வீட்டிலிருந்து பார்த்தாலே கடல் தெரியும்.

தலை முழுகி ஈர தலையை துடைத்தவாறே வந்த ஸ்ரீனிகா வெளியே எட்டிப் பார்த்தாள். அதே இடத்தில் அசையாத சிலை போல் நின்று கொண்டிருந்தான் கௌதம்.

கட்டியிருந்த வேஷ்டி கடற்கரை காற்றில் படபடக்க சால்வையினை உயர்த்தி தோளினை சுற்றி போர்த்தி மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கடலின் அலைகளை வெறித்து பார்த்தவாறு நின்றான் அவன், கெளதம். கடற்கரையில் கடமை முடித்து வந்ததில் இருந்து அங்கேதான் நிற்கின்றான். சிறிது நேரத்திக்கு முன் நடந்தது கண் முன் நிழலாடியது.

🎻 🎻 🎻 🎻 🎻

மயக்கம் தெளிந்து எழுந்தவள் கடலை பார்க்க, அவள் அம்மா அங்கே நிற்பது போல் தோன்ற "அம்மா...." என்று கடலை நோக்கி ஓட முயல, இழுத்து பிடித்தான் கௌதம் "ஸ்ரீனி சொல்வதை கேள், அங்கே யாருமில்லை....". அவளுக்கோ தன் அன்னை அங்கு பூரண அழகுடன் கடலின் மேல் நின்றவாறு கை நீட்டி அழைப்பதை போல் இருக்கவே இவனை உதறி அன்னையிடம் செல்ல துடித்தாள்.

திடீரென இருட்டி கொண்டு வந்த கடலை பார்த்தவனுக்கு இன்று தாழ் அமுக்கம் என்று காலையில் ஏதோ செய்தியில் கேட்ட ஞாபகம் வந்தது. அவள் கண்களை பார்த்த கௌதமிற்கு புரிந்தது சுயநிலையில் இல்லை. எப்படி சொல்லியும் அழைத்தும் சுயத்திற்கு திரும்பாமல் இருக்க ஓங்கி கன்னத்தில் ஓர் அறைவிட்டான்.

விழி விரித்து பார்த்தபடி நின்றவளை பார்க்க மனம் சுட்டது "என்னடா.... ஏன்... அங்கு யாருமில்லை....." கையை உயர்த்த ஓரடி பின்னால் சென்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

சற்று முன் அவன் அவளருகே வந்து அமர்ந்ததிலிருந்து அவள் அவளாக இல்லை, அவள் வாணாளில் இது போல் அழுததும் இல்லை. ஏற்கனவே தெரிந்தது தான் அவனருகில்தான் உடைக்கின்றாள், தன் உணர்வுகளை கொட்டுகின்றாள். அவனிடம் அனைத்தையும் சொல்லி அழத்தான் உள்ளம் ஆசை கொண்டது. ஆனால் அவன் விட்ட அறையில் விழித்து கொண்ட மூளை இதற்கு முன் சொன்ன போது என்ன நடந்தது என்று ஞாபகப்படுத்தி கொள் என்றது.

வராத புன்னகையை வலிந்து வரவைத்தவள் "சாரி" மெல்லிய குரலில் வாய்க்குள் மன்னிப்பு கேட்டாள். அவனுக்கு புரிந்தது மீண்டும் தன் கூட்டுக்குள் நத்தையாய் சுருண்டுவிட்டாள். ஆயாசத்துடன் மூச்சுவிட்டான்.

திரும்பி ஐயரை பார்த்தவள் "மன்னித்து கொள்ளுங்கள்" உதட்டில் மட்டுமே ஒரு மன்னிப்பு வேண்டும் மெல்லிய முறுவல் கோடாய் "வாங்க..." இருவரையும் அழைத்தவள் ஈர சேலை இடங் கொடுத்த வரை வேகமாக நடந்தாள்.

ஐயருக்கோ ஆச்சரியமாய் இருந்தது சற்று முன் அருகே வருபவன் கைகளில் சிறு குழந்தையாய் அழுதவள் இவள்தானா என்று, சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

பன்னிரண்டு ஐயர் வந்திருக்க அனைவருக்கும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த தாம்பாளத்தை எடுத்து கொடுத்தாள். அதில் மேலதிகமாக ஒரு செட் உடையும் ஒரு பணக்கட்டும் அதிகமாக இருக்கவே கணவனை பார்த்தாள். அவன் முகம் உணர்வுகளை தொலைத்து இறுகியிருந்தது.

அனைத்தும் முடியவும் இருவர் உள்ளத்திலும் அடித்து கொண்டிருந்த புயலை போல் வெளியிலும் அடிக்க தொடங்கியது. ஏற்கனவே சூழலில் ஏற்பட்ட மாற்றம் பார்த்து தான் அவள் அழுவதை தடுக்க முயற்சித்தான். அடித்த காற்று ஆளையே தூக்கி செல்லும் போலிருந்தது. அதோடு ஈர உடை வேறு, ஊதல் காற்று வீசியது போல் நடுங்கத் தொடங்கியது.

ஸ்ரீனிகா நிற்க முடியாமல் நடுங்க சட்டென மனைவியை கைகளுக்குள் கொண்டு வந்தவன் "அஜா..." அவன் அழைப்பில் அருகே வந்தவன் "ரெடி பாஸ்" என்றான். தானம் பெற்ற ஐயர் அனைவருக்கும் ஏற்பாடு செய்திருந்த டாக்ஸியை கை காட்டினான் அஜா.

ஏற்கனவே புயல் அறிவித்தல் விடப்பட்டதினாலும் நன்பகலாய் இருக்கவும் கடற்கரையில் பெரிதாக கூட்டம் இருக்கவில்லை. வேகமாக காரை நோக்கி நடக்க அவன் வேகத்திற்கு ஈர சேலையுடன் நடக்க முடியாமல் தடுமாறினாள் ஸ்ரீனிகா. திரும்பி பார்த்தவன் அவளை கைகளில் அள்ளி கொண்டான்.

அவளை காரில் விட்டவன் சால்வையை கழட்டி பிழிந்து உதறி உள்ளே இருந்தவளிடம் கொடுத்தான் "இப்போதைக்கு இதனால் துடை". அவனும் உள்ளே ஏறினான். டிரைவிங் சீட்டில் வந்து அமர்ந்த அஜா திரும்பி நடுங்கி கொண்டிருந்த ஸ்ரீனிகாவை பார்த்தவன் "நாங்க அங்கே போக முடியாது பாஸ், மரம் முறிந்து விழுந்து ட்ராபிக் எப்படியும் மூன்று நான்கு மணித்தியாலம் எடுக்கும்" என்றான்.

"கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்க்கு விடு" என்றான் கௌதம்.

"உ உ உடைகள்" ஸ்ரீனிகாவுக்கு குளிரில் வார்தை தந்தியடித்தது.

திரும்பி பார்த்தவன் "ஏற்பாடு செய்கின்றேன்" என்றான்.

"பாஸ் ஜோனும் மனைவியும் அங்கே தான் நிற்கின்றார்கள் விஜியிடம் அனுப்பி விட சொல்லவா?" கேட்டான் அஜா.

"ம்ம் சரி, இன்று அங்கேயே நின்று நாளை அவர்களை வரச்சொல்" போனை எடுத்து "நான் லிஸ்ட் ஒன்று அனுப்பி இருக்கின்றேன், அதில் இருப்பது அனைத்தும் இன்னும் பத்து நிமிடத்தில் கெஸ்ட் ஹவுஸ்க்கு வரனும்" அழைப்பை துண்டித்தான்.

அப்போதும் நடுங்கியவளை பார்த்து "அஜா ஏசியை ஆப் பன்னு" என்றவன் காரில் கழட்டி வைத்திருந்த தன் ஷர்ட்டை எடுத்து அவள் தோளின் மேல் போர்த்தி விட்டவன் அருகே நெருங்கி அமர்ந்து தன்னோடு அணைத்து கொண்டான். அவன் முடி நிறைந்த வெற்று மார்பில் கன்னம் பதிய கூச்சத்துடன் நெளிந்து விலக முயன்றாள். அசைய முடியாது பிடித்தவன் அழுத்தமாய் பார்த்து வைக்க அதற்கு மேல் அமைதியாய் இருந்தாள்.

நிமிடங்கள் கழிய ஏதோ வித்தியாசமாய் இருக்கே என்று அவளுள் யோசித்து கொண்டிருந்தவளுக்கு அது உறைத்தது. அவன் உடல் அனலாய் கொதித்தது. சட்டென விலகி கழுத்தை தொட்டு பார்த்தவள் சூடாக இருந்தது. ஒரு கையை அவன் நெற்றியிலும் மறு கையை தன் நெற்றியிலும் வைத்து பார்க்க அவன் உடல் தன்னை விட பலமடங்கு சூடாக இருப்பது புரிந்தது.

அவசர அவசரமாக கையிலிருந்த சால்வையால் அவன் தலையில் உள்ள ஈரத்தை துவட்டினாள்.

அவள் அலப்பறையை பார்த்தவன் முகம் சற்றே இளகியது. "ஏட்டா, பார்மசி கிளினிக் எதிலாவது நிறுத்துங்கள் மருந்து எடுத்து செல்வோம்" என்றவளை தடுத்து கூறினான் "இல்லை முதல்ல கெஸ்ட் ஹவுஸ் போவோம்".

"இல்லை பார்மசி போவோம்" அவனை எரிச்சலுடன் பார்த்தாள். என்றாவது சொல்வழி கேட்கும் பழக்கம் இருக்கா மனம் தாளித்தது.

"கெஸ்ட் ஹவுஸ் பக்கத்திலேயே பார்மசி இருக்கு அங்கேயே வேண்டுவோம்" அஜா முடித்து வைத்தான்.

கெஸ்ட் ஹவுசில் போய் இறங்க ஏற்கனவே ஒருவன் கையில் பெரிய பையுடன் மோட்டார் பைக்குடன் காத்திருந்தான். அவர்களை இறக்கிய அதே வேகத்தில் அஜா காரை திருப்பி சென்றான். அவனிடமிருந்து வாங்கிய பையை ஸ்ரீனிகாவிடம் கொடுத்தவன் "மாடியில் வலது புறமுள்ள முதலாவது அறை, ஹீட்டர் போட்டு குளி, சீக்கிரம்" விரட்டினான்.

"நீங்கள்..." தயங்கவே "நீ வந்ததும் நான் போகிறேன்" முற்று புள்ளி வைத்தான் கௌதம்.

அவள் சென்றதும் அங்கே நின்றவனிடம் "ஏன் பைக்" வினவினான்.

"இல்ல சார் அஜாதான் பைக் வேணும் என்றான். புயல் மழை காரை விட பைக்கில் போவது ஈசி"

மாடிக்கு சென்றவள் பல்கனி வழியே அருகே உள்ள பார்மசியில் அஜா மருந்து வேண்டுவதை பார்த்தவள் பையை அப்படியே வைத்துவிட்டு கீழே வந்தாள். திறந்த கிச்சின் ஹால் ஒரு அறை மட்டுமே கீழே இருந்தது. கிச்சின் சென்றவள் மெல்லிய சூட்டில் நீர் எடுத்து வரவும் அஜா மருந்துடன் வரவும் சரியாக இருக்கவே மருந்தை வேண்டி கொண்டு கௌதம் எங்கே என்று தேடினாள்.

நீச்சல் குளத்தின் அருகே இருந்த புல்வெளியில் நின்று கடலை வெறித்து பார்த்து கொண்டிருந்தன். முன்னே சென்று நின்றவள் உள்ளங்கையை நீட்டினாள். 'என்ன' என்பது போல் பார்த்தவன் அவள் இன்னும் ஈர உடையுடன் நிற்கவே முறைத்தான். அவள் கையிலிருந்த மருந்து அஜாவின் வேலை என்பது புரிய எங்கே அவன் என்று தேட அவனோ புதிதாய் வந்தவன் பைக்கில் எப்போதோ எஸ்கேப் ஆகியிருந்தான்.

அடிக்கும் காற்றில் நடுங்கியவளை பார்த்தவன் மறு பேச்சின்றி விழுங்கினான். “இப்ப போய் குளி” குரலுடன் சேர்ந்து அவனும் ஏனோ இறுகி இருக்க திரும்பி திரும்பி பார்த்தவாறே சென்றாள்.

குளித்து வந்து பையை திறந்து பார்த்தாள். அவளுக்கு தேவையான அனைத்து உடைகளும் ஐந்து செட் இருந்தது. ஒரு த்ரீ குவாட்டரை எடுத்து அணிந்தவள் தலையை துவட்டியவாறு வெளியே வந்து கௌதமை தேடினாள்.

வீட்டினுள் இல்லை, வெளியே பார்க்க அடிக்கும் காற்றில் அசையாமல் மரம் போல் நின்றிருந்தான்.

🎻 🎻 🎻 🎻 🎻

லேசாக மலை வேறு தூற தொடங்க உள்ளே வரும் சிந்தையின்றி நின்றவனை கவலையுடன் நோக்கினாள் ஸ்ரீனிகா. இடையில் யாரோ உணவையும் கொண்டு வந்து வைத்திருந்தனர்.

சற்றும் முற்றும் பார்க்க குடை இருந்தது. அதை எடுத்துட்டு விரித்து பிடித்தவள் அவனருகே மீண்டும் சென்றாள். மேலே போர்த்தியிருந்த சால்வை நுனியை பிடித்து இழுத்தாள் "உள்ளே வாருங்கள், ப்ளீஸ்".

அவள் கையையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன் இறுகிய குரலில் "நான் கோபத்தில் இருக்கின்றேன் இங்கிருந்து போயிரு....." என்றான்.

"சரி உள்ளே வந்து கோபப்படுங்கள், ஜுரம் மழை வேறு துறுது" பயமும் கவலையுமாய் வானத்தை பார்த்தாள்.

"நீ அழைத்தால் நான் எதுக்கு வரணும்" சட்டென திரும்பி அவனை பார்த்தாள். அந்த குரல்... அதில் இருந்தது என்ன வலியா... ஆனால் அதைப்பற்றி யோசிக்க முடியாமல் மழை... "ப்ளீஸ் சொன்னால் கேளுங்கள், உடம்பு கொதிக்குது" கெஞ்சினாள்.

அவள் கழுத்தை பிடித்துவிட்டான் "பொண்ணாடி நீ... இப்ப வந்து இப்படி கெஞ்சற, அன்று ஒரு வார்தை.... ஒரு வார்தை சொன்னியாடி.. எல்லாத்தையும் தனிய வந்து செய்தவ தானே நீ, இப்ப என்ன வந்திச்சு... நான் எப்படி போன உனக்கு என்ன போடி இங்கிருந்து..." அவளை உதறி அவனுக்கு உயர்த்தி பிடித்திருந்த குடையையும் தட்டிவிட்டான்.

"என்னை புருஷனா இல்லை மனுஷனா கூட மதிக்கல இல்ல நீ... யாரோ ஒருத்தருக்கு இப்படி நடந்தாலே விட்டுட்டு போக மாட்டேன். ஆனா நீ... போடி" என்றான் கலங்கிய குரலில்.

விக்கித்து போய் நின்றாள் ஸ்ரீனிகா.

சொல்லவில்லை என்பதற்காகவா இவ்வளவு கோபம். என்னை இரண்டு அடி அடித்தாலும் பரவாயில்லை இந்த மழையிலும் ஊதல் காற்றிலும் நின்று ஏன் தன்னை தானே வருத்தி கொள்கின்றான். இவன்தானே நான் நெருங்கும் போதெல்லாம் வார்தைகளால் விலக்கியது. அன்றும் இப்படித் தானே.. ஆனால் அதை பற்றி பேசும் தருணம் இதுவல்ல...

மணி இரண்டிலிருந்து மூன்றிக்குள் தான் இருக்கும் ஆனால் பின்னேரம் ஆறு மணி போல் இருட்ட, இதுவரை லேசாக தூறி கொண்டிருந்த மழை திடிரென்று பெரிதாக கொட்ட தொடங்கியது. அதை கவனித்தவள் "சரி அதற்கு உள்ளே வந்து உங்கள் சண்டையை போடுங்கள். ஏன் உங்களை நீங்களே இப்படி வருத்துகிறீர்கள்...?" அழுகை வரும் போல் இருந்தது. அதோடு மழை, இருட்டு வேறு பயமாகவும் இருந்தது.

அடித்த காற்றில் குடை கையில் நிற்பேனா என்று மல்லு கட்ட மழை துளி காற்றோடு சுழன்று அடிக்க குடை பிடித்தாலும் பயனில்லை என்பது போல் இருந்தது.

அவன் கண்களில் வழிந்த நீர் துளிகள் மழை துளிகளோடு கலக்கவே ஸ்ரீனிகாவிற்கு அவன் அழுததே தெரியவில்லை.

கடைசி போராட்டமாக குடை வெற்றிகரமாக அவள் கையை விட்டு பறக்கவே "நீ உள்ளே போ" என்றான். அடித்து கொண்டிருந்த காற்றில் 'ஊ' என்ற சத்தமே பெரிதாய் கேட்க பேசும் சத்தம் கேட்கவே முடியவில்லை. இருந்தும் அவன் உதட்டசைவில் புரிந்து கொண்டவள் உறுதியாய் மறுத்து தலையசைத்தாள்.

"நீங்கள் வந்தால் தான் போவேன்"

கடலோடு மழை பொழிய காற்று சுழன்றடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தவாறு நின்றனர்.

வருவான்.....
 

Nandhaki

Moderator

தீரா 🎻 08


வெளியே அடித்த புயலை விட அவன் மனதில் அடித்த புயலே அதிகமாக இருந்தது. அவனுக்கு கடற்கரையிலிருந்து வந்ததிலிருந்து மனசு ஆறவே இல்லை.

இப்படி செய்துவிட்டாலே கடைசியில் என்னை வெறுத்தேவிட்டாளா.......

அது தான் ஒரு வார்தை சொல்லவில்லையா...

என்னை விட ஏழு எட்டு வருடம் இளையவள் சிறு பெண்... எப்படி இதை தனியாக செய்ய துணிந்தால்.... ஐயர் வாய் தவறி சொல்லியிருக்கவிட்டால் இந்த ஜென்மத்தில் வாய் திறந்திருக்க மாட்டாள்.

சொல்லாததில் அவனுக்கு அவள் மேல் கோபம் தான் ஆனால் அதைவிட அதிக கோபமும் வெறுப்பும் தன் மீதே வந்தது. வசந்த் கேட்ட கேள்வியில் அடி வாங்கிய மனம் இன்னும் குற்ற உணர்ச்சியில் குறுகியது. உண்மைதானோ அவள் சொல்லும்படி நான் நடக்கவில்லை தானே...

முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டி கொள்ளவில்லை. ஆனால் அவள் தனியாக அவள் அம்மாவிற்கு இறுதி கிரியை அனைத்தையும் செய்தாள் என்ற செய்தி அவனை உள்ளிருந்து கொன்றது. எல்லாவற்றையும் விட அவள் அன்று தன்னுடன் வர சொல்லி கேட்டதும் அதற்கு தான் சொன்ன பதிலும் நினைவுக்கு வரும் போதெல்லாம் அவனுக்கு தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது.

அவள் முகத்தை பார்க்க பார்க்க அவன் மனசாட்சி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் உள்ளே நெருப்பாய் கனன்றான். வெளியே பெய்த மழையால் கூட அதை அணைக்க முடியவில்லை. அதுதான் உள்ளே செல்லாமல் வெளியே நின்றுவிட்டான்.

கடைசி போராட்டமாக குடை வெற்றிகரமாக அவள் கையை விட்டு பறக்கவே "நீ உள்ளே போ" என்றான்.

அடித்து கொண்டிருந்த காற்றின் 'ஊஊ' என்ற சத்தமும் கடலின் இரைச்சலும்மே பெரிதாய் கேட்க அருகே இருந்து பேசும் சத்தம் கூட கேட்க முடியவில்லை. இருந்தும் அவன் உதட்டசைவில் புரிந்து கொண்டவள் உறுதியாய் மறுத்து தலையசைத்தாள்.

"நீங்கள் வந்தால் தான் போவேன்"

கடலோடு மழை பொழிய காற்று சுழன்றடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தவாறு நின்றனர்.

ஓர் ஐந்து நிமிடத்திற்கு மேல் ஸ்ரீனிகாவினால் தாக்கு பிடிக்க முடியவில்லை. மழை என்றாலே பயம் அவளுக்கு போதாக்குறைக்கு புயல் இருள் வேறு. அப்படியே குந்தி அமர்ந்தவள் முழங்காலை சுற்றி கையை கட்டி கொண்டாள்.

இப்போது தான் குளித்து வந்திருந்தாள் திரும்பவும் முழுதுமாக நனைந்துவிட்டாள்.

சற்று நேரம் பொறுத்து பார்த்தான் கௌதம் மழையின் மீதான அவள் பயம் அவன் அறிந்தது தானே. சிறிது நேரம் கழித்து போய் விடுவாள் என்றுதான் நினைத்தான். பயத்தில் நடுங்க தொடங்கியவள் முகத்தை முழங்காலில் புதைத்து நடுங்கிய கரங்களை கெட்டியாக கட்டி கொண்டாள்.

இன்னும் விட்டால் கைகால் வெட்டி இழுக்கும் போலிருக்கவே "இம்சைடி நீ..." சட்டென குனிந்து அவளை தூக்கி கொண்டு உள்ளே சென்றான். கடற்கரை என்பதாலும் புயலும் மழையும் சேரவும் முன்னால் இரண்டடி தூரத்துக்கு மேல் பாதை தெரியவேயில்லை.

திடீரென அந்தரத்தில் எழும்ப பயத்தில் கத்த போனவள் கணவன் தான் தூக்கினான் என்று அறிந்ததும் நிம்மதியாக மூச்சுவிட்டாள்.

அடை மழையாக பெய்த மழையில் இருவருமே தொப்பலாக நனைந்துவிட்டிருந்தனர். அவன் கழுத்தை சுற்றி கை போட்டவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். வழமையாக காற்றில் அலையும் சிகை நெற்றியில் ஒட்டி அவனுக்கு தனி அழகை கொடுத்தது. மழையினுடே கூர்ந்து பார்த்த கண்களின் அழகில் என்றும் போல் இன்றும் வீழ்ந்தாள். அனாசயமாக அவளை தூக்கி வைத்திருந்த கரங்களின் உறுதியும் தோளை சுற்றியிருந்த கையின் கீழ் உணர்ந்த அவன் தோளின் வலுவும் அவன் ஜிம்மில் செலவழிக்கும் நேரம் வீணல்ல என்பதை அவளுக்கு புரிய வைத்தது.

அவன் கையில் தூக்கி வைத்திருக்க தீடிரென மழையின் மேல் பயம் போய்விட்டது போல் இருந்தது. அந்த நொடியை ரசித்து அனுபவித்தாள்.

'என்ன பட்பட்டென்று தூக்குறான் அவ்வளவு வெயிட் இல்லாமலா இருக்கிறோம்' மைண்ட் வாய்ஸ் கேட்டு வைத்தது. அவள் மனதுள் பேசியது அவனுக்கு கேட்டது போல் "என்ன?" என்றான்.

"இல்ல நான் பாரமில்லையா... நினைத்ததும் பட்பட்டென்று தூக்குறீங்க" இரு கால்களையும் ஆட்டியவாறே கேட்டாள்.

ஓர் தரம் அவளை பார்த்தவன் அவளை நிலத்தில் இறக்கிவிட்டான்.

"பரவல்ல... தூக்கிட்டே வாங்க... நல்ல இருக்கு" குஷியில் சொல்லிவிட்டாள்.

"ஹ்ம்ம்" புருவத்தை தூக்கினான்.

"ல்ல நான்... ஐயோ மானம் போச்சு" வாய்க்குள் முனங்கி சிவந்த முகத்தை திருப்பினாள்.

"கையை தா.." என்றான் காற்றை மீறி சத்தமாக. கையை கொடுத்தவாறே என்னவென்று பார்க்க குரோட்டன் பூச்செடிகள் வளர்ப்பதற்காக கட்டியிருந்த சிறு மதிலை தாண்டி கொண்டிருந்தான். மழையால் தண்ணீர் வெள்ளம் போல் ஓட நீச்சல் குளம் எது தரை எது என்று புரியவில்லை. அது தான் அந்த பாதையை தவிர்த்து இந்த பக்கமாக வந்தான்.

ஈர வேட்டியுடன் அவளையும் தூக்கி கொண்டு தாண்ட முடியவில்லை. முதலில் அவளை இறக்கியவன் பின் வேட்டியை முட்டி வரை மடித்து கட்டிக் கொண்டு தாண்டி வந்தான்.

கை அவன் பிடியில் இருக்க சுற்றி பெய்த மழையையே தீவிரமாக ரசிப்பது போல் நடித்தவளை பார்த்து மெல்ல சிரித்தவன் கையை கழுத்தை சுற்றி போட்டு அப்படியே மீண்டும் தூக்கிவிட்டான்.

"இல்லை, வேண்டாம்..."

"பரவாயில்லை நல்லாதானே இருக்கு" அவளை போலவே சொல்லி காட்டினான். இருவருக்கும் இடையேயான நெருக்கத்தில் திடீரென இருவரின் மனநிலையும் மாறியிருந்தது.

அருகே இருந்த மின்விளக்கின் வெளிச்சத்தில் குறும்பு மின்னிய அவன் கண்களும் முகமும் தெரிய "அச்சோ மானம் போச்சு" என்று அவன் தோளிலேயே முகம் புதைத்தாள். அவன் உடல் சிரிப்பில் குலுங்க நிமிர்ந்து முறைத்தவள் கண்கள் மலர்ந்தது.

கேட்டில் இருந்து வீட்டை நோக்கி கார் செல்லும் பாதையில் அவன் நடந்து கொண்டிருந்தான். ஐந்தடிக்கு ஒரு மின்விளக்கு இருக்க ஓரளவு வெளிச்சம் இருக்கவே அவன் சிரித்த கோபத்தில் நிமிர்ந்தவளுக்கு சிரிப்பில் மலர்ந்த அவன் முகம் தெரிய அதை கண்கள் மலர நோக்கினாள்.

எத்தனை காலமாயிற்று இவன் என்னிடம் இப்படி சிரித்து.

அவள் பார்வையில் நெற்றியில் நெற்றி வைத்தவன் "என்னடி" என்றான்.

போர்டிகோவிற்கு வந்திருக்க சட்டென துள்ளி இறங்கினாள். அவன் கையை பிடித்து வேகமாக இழுத்து செல்ல "பார்த்து மாபிள் தரை வழுக்கும்" என்றான் எரிச்சலுடன். அவனுக்கோ அழகான தருணத்தை கெடுத்துவிட்டாளே என்று இருந்தது.

நேரே மேலிருந்த அறைக்கு இழுத்துச் சென்றவள் வாஷ் ரூமை கைகாட்டி "போங்கள்" என்றாள்.

"இல்லை நீ போ" பதிலுக்கு கூறவே முறைத்தவள் "சொல்ல சொல்ல கேட்காமல் மழைக்குள் நின்று உடம்பு தனாலாய் சுடுது, போய் தலை முழுகுங்கள் சீக்கிரம்" துரத்திவிட்டாள்.

உள்ளே சென்றதும் தான் அவன் நிலை அவனுக்கே உறைத்தது. இதுவரையும் மனைவியின் நினைவு மனதை அலைக்கழிக்க தன்னிலை உணராது நின்றவனுக்கு மனம் மட்டுமில்லாமல் உடலும் கொதி நிலையில் இருப்பது புரிந்தது அதோடு நடுக்கமும் சேர்ந்து கொண்டது. எப்படியோ சமாளித்து முழுகி வெளியே வந்தான்.

அவன் உடைகளை எடுத்து வைத்தவள் அருகே இருந்த அறையில் குட்டியாய் ஒரு குளியல் போட்டு உடை மாற்றி தலையை துடைத்தாவாறே கீழே சென்று கிச்சினுள் பார்த்தாள் சூடாக கொடுக்க ஏதாவது உள்ளதா என்று.

வெளியே வந்தவன் கட்டிலில் இருந்த உடைகளை அணிந்து தலையை துவட்டினால் உடலில் சத்தே இல்லாதது போல் கை நடுங்கியது. ஸ்ரீனிகா எங்கே தேட வேண்டுமென்று மனம் சொன்னாலும் இப்போது உடல் ஒத்துழைக்க மறுத்தது.

சில வேளை வேறு அறையில் உறங்க சென்றுவிட்டாளோ....

உடல் அடித்தது போட்டது போல் வலித்தது. தன்னை சமாளித்து வெளியே வந்தவன் கீழே சத்தம் கேட்கவே எட்டி பார்த்தான். அவள்தான் கீழே கிச்சனில் ஏதோ உருட்டிக் கொண்டிருந்தாள். மெதுவே மாடியில் இறங்கி வந்து, கிச்சனில் நின்றவளை பார்க்கும் வகையில் சோபாவில் அமர்ந்தான். முன் வாசல் கதவு திறந்திருக்க அது வழியே வந்த ஊதல் காற்றில் தேகம் இன்னும் நடுங்கியது.

அவன் வந்ததை பார்த்தவள் வேகமாக அருகே வந்தாள் "இப்ப எப்படி இருக்கு" நெற்றியில் கை வைத்தவள் தலை காயாது ஈரமாக இருக்கவே கையில் இருந்த டவலை வாங்கி வேகமாக துடைத்தாள் "பால் சுட வைச்சிருக்கேன் அதோட புளி கஞ்சியும் ரெடியாகுது." அவனிடம் சொன்னவள் "அஜாண்ணா அந்த ஹேர் ட்ரையார் எங்க இருக்கு" கேட்டாள்.

வாய் கசந்து வழிய சிறு குழந்தையாய் "எனக்கு பால் வேண்டாம்" என்றவன் "அஜா எப்ப வந்தான்" விசாரித்தான்

"சற்று முன்தான்... ஏன் பால் வேண்டாம்."

"வாய் கசக்குது" அப்படியே அவள் வயிற்றில் சோர்வாய் தலை சாய்த்தான். ஒரு கணம் அசையாது நின்றவள் "தங்கச்சி ஹேர் ட்ரையர்" என்ற அஜாவின் குரலில் தன்னை மீட்டெடுத்தத்தாள்.

ஹேர் ட்ரையரை அஜாவிடமிருந்து வாங்கியவள் அவனை சோபாவில் சாய்ந்த வாக்கில் இருத்தி விட்டு அதை பிளாக்கில் மாட்டினாள். "அஜாண்ணா, மைக்ரோவேவில் பால் இருக்கு, அதை பாருங்கள். அப்படியே காஸ் அடுப்பை கொஞ்சம் குறைச்சு விடுங்கோ ப்ளீஸ்" என்றாள்.

பாஸ் நிலையை பார்த்த அஜாவுக்கு கவலையாக தான் இருந்தது. ஆனால் பேச்சுக்கு கூட டாக்டரை அழைத்து வரவா என்று கேட்கவில்லை ஏனெனில் வெளியே அடித்த புயல் அப்படி இருந்தது. காற்றே நூறு கிலோமீட்டரில் வீசிக் கொண்டிருந்தது. புயல் கரை கடக்கும் வரை யாரையும் கடற்கரை பக்கம் செல்லவோ அல்லது வீட்டை விட்டு வெளியேறவே வேண்டாம் என்று கேரளா அரசு அறிவித்து இருந்தது.

அவசரம் என்று அம்புலன்ஸ்க்கு அழைக்கலாம் ஆனாலும் வீட்டிலிருப்பது பாதுகாப்பு. எப்போது எங்கே மரம் முறியும் எங்கே மண் சரிவு ஏற்படும் என்று தெரியாது. கிட்டத்தட்ட மத்தியானம் ஆரம்பித்த மழை இப்போது பின்னேரம் ஆகியும் இதுவரை நிற்காததோடு இன்னும் அதிகமாகி இருந்தது.

புயல் நாளை காலை பத்து மணிக்கு பின்புதான் கரை கடக்கும் அதுவரை பலத்த காற்று வீசும் என்றும் அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆப்பிரிக்காவின் மலைகளில் இருந்து வீசும் காற்று அராபிய கடலின் வெப்பத்தை பெரிதும் தனித்து விடுவதால் வங்களா விரிகுடா அளவிற்கு இங்கு புயல் உருவாவதில்லை. ஆனலும் புயலும் மழையும் தமிழ்நாட்டில் வீசுவதை விட இங்கே வீசுவது ஆபத்து அதிகம். பெரும்பாலும் மலை பகுதி என்பதால் காற்று மலையில் மோதி வீரியம் குறைந்தாலும் மழையினால் மண் சரிவிற்கும் மரம் விழுவதற்குமான அபாயம் அதிகம்.

அவன் நடுங்குவதை பார்த்து முன் கதவை சாற்றியவள் ஹேர் ட்ரையரால் தலையை காய வைத்தாள். அவள் விரல்கள் அவன் கேசத்தினுள் கோதி கொடுக்க விண்ணென்று தெறித்த தலை வலிக்கு இதமாக இருந்தது. கண் மூடி அந்த இதத்தை அனுபவித்தான்.வேகமாய் மேலே சென்று தலையனை ஒன்றையும் கம்பளி ஒன்றையும் எடுத்து வந்து தலைக்கு அணைவாக வைத்து கம்பளியை அவன் மேல் போட்டு போர்த்திவிட்டாள். பாலை எடுத்து வர "வேண்டாம்” முகத்தை திருப்பினான்.

"சிறு குழந்தையா நீங்கள், மஞ்சள் பேப்பர் பச்சை கற்பூரம் எல்லாம் போட்டிருக்கன் குமட்டாது குடியுங்கள்" கண்டித்தாள். கசந்த வாய்க்கு குடிக்க பரவயில்லமல் இருக்கவே எப்படியோ ஓரு டம்ளர் பாலை முழுவதுமாக குடித்து முடித்துவிட்டான்.

சோபாவில் சாய்ந்து படுக்க "மேலே போய் படுங்களேன்" என்றவளிடம் "நீயும் வா' என்றான் அவன்.

"ச்சு.. சின்ன குழந்தையா நீங்கள் கஞ்சி வைக்கனும் இங்கே ஹீட்டரரும் இல்லை"

"கஞ்சி வேணாம்"

"அப்ப மருந்து எப்படி போடுறது"

"மருந்து ஏது....."

அனைத்துக்கும் எதிர் பேச்சு.... இவனை...

"உங்கள் பேமிலி டாக்டருடன் போனில் பேசினேன். மருந்தை போனில் அனுப்பினார். நான் அஜாண்ணாவுக்கு அனுப்பினேன். அஜாண்ணா பார்மசியில் வாங்கி வந்தார். தகவல் போதுமா..?"

"ஹ்ம் போதும் போதும்" என்றவன் நன்றாக சாய்ந்து படுத்தான். மனமோ 'உங்கள் பேமிலி டாக்டர்' என்றதில் சுற்றியது.இதற்கு என்ன அர்த்தம் இவள் என் குடும்பத்தில் ஒருத்தி இல்லையா.....பேசியதை பார்த்தல் வேண்டுமென்று சொல்லி காட்டியதை போல் இல்லை. வெகு இயல்பாக மூன்றாம் நபர் போல்......நீ வேறு நான் வேறு என்று புரிந்தது போல்....இல்லை ஒரு தடவை கூட குடும்பத்தில் ஒருத்தியாக உணரவில்லையா....இல்லை நான் உணர விடவில்லையா...... புருவ சுழிப்புடன் கண் மூடி சாய்ந்தான்.அவன் அருகே அமர்ந்தவள் எலக்ட்ரிக் தெர்மா மீட்டர் வைத்து பார்த்தாள். வெப்ப நிலை நூற்றியிரண்டு என்றது. கவலையுடன் பார்த்தவாறே சென்று கஞ்சியை தயார் செய்தாள்.கஞ்சி வைத்து முடித்து பார்க்க அசதியில் அவன் சோபாவிலேயே உறங்கி விட்டிருந்தான். எழுப்புவோமா என்று யோசித்தவள் பின் வேண்டாம் என்று விட்டுவிட்டாள். நேரம் ஆறு முப்பது என்று போன் காட்ட அவனுக்கு எதிரே உள்ள சோபாவில் அமர்ந்தாள்.மீண்டும் மழையும் தனிமையும் இத்தனை நேரம் எங்கோ போயிருந்த பயம் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது.
 

Nandhaki

Moderator

தீரா 🎻09

இதுவரை நேரமும் அவனை பார்ப்பதில் நேரம் ஓட மழையை பற்றி சற்று மறந்திருந்தாள். அவனருகே பயம் அருகே கூட வரவில்லை. இப்போது அனைத்தும் முடித்து சும்மா இருக்க பயமும் வந்து ஒட்டிக் கொண்டது. மெல்ல எழுந்து சென்று ஜன்னல் வழியே எட்டி பார்க்க எரிந்து கொண்டிருந்த மின் விளக்கின் உதவியில் தரை முழுதும் வெள்ளக்காடாக இருந்தது தெரிந்தது. மின்விளக்கின் அருகே மட்டும் வட்டமாய் மழை துளிகள் தென்பட அது அடர்த்தியாகவும் இருக்கவே இப்போதைக்கு விடாது போல் இருந்தது. கடல் தென்பட்ட இடத்தில் அந்தகாரமாக கருப்பு மட்டுமே தெரிந்தது. மின்விளக்கின் கம்பம் சாமியாடுவது போல் ஆடிக்கொண்டிருந்தது எப்போது மலையேறி கீழே விழுமோ தெரியவில்லை. சிலவேளை அப்படி விழுந்தால் மின்சாரம் தடைப்படவும் வாய்ப்பு உள்ளது.

மீண்டும் கிச்சினுள் சென்று தீப்பெட்டியும் மெழுகுதிரியையும் தேடி எடுத்து வந்தாள். சோபாவில் காலை தூக்கி வைத்து முட்டியை கைகளால் கட்டி அதில் கன்னம் பதித்து எவ்வளவு நேரம் இருந்தாளோ கணவனின் "ஸ்ரீனி.." என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தாள்.

கௌதம் எழும்பியிருந்தான் "இங்கே வா" என்றான். அவன் உறங்குவதற்காக டிம்மாக போட்டிருந்த மின்விளக்கை உயிர்ப்பித்தவள் அருகே செல்ல சோபாவில் இடம் விட்டு எழுந்து அமர்ந்து அவளையும் கம்பளிக்குள் இழுத்து கொண்டான்.

அவன் மேல் விழுந்தவள் விலக முடியாதபடி பிடித்திருக்கவே டீ ஷர்ட் பட்டனை இரு விரலால் திருகியவாறே விழித்தாள். அவன் கண்களில் தென்பட்ட சோர்விலும் காய்ச்சலிலும் "கஞ்சி குடிப்போமே..." கெஞ்சலாய் கேட்டாள்.

அவளையே சிறிது நேரம் பார்த்தவன் "சரி" என்றான்.

புளிப்பாக இருந்த புளிக்கஞ்சி காய்ச்சல் வாய்க்கு இதமாக இருக்கவே இரண்டாம் தரம் கொடுத்ததையும் குடித்துவிட்டான். மருந்தையும் குடித்தவன் மீண்டும் சோபாவில் அமர 'என்ன' என்பது போல் பார்த்தாள்.

"நீ சாப்பிடவில்லை..." சுட்டி காட்டினான்.

"நீங்க போங்க அஜாண்ணாக்கு கொடுத்துட்டு வாரான்..." இழுத்தாள்.

"பரவாயில்ல வெயிட் பண்ணுறன்" என்றவன் போனை எடுத்து பார்த்தான். ஒரு மணி நேரம் உறங்கி எழுந்து சாப்பிட்டதில் எனர்ஜி கிடைத்தது போல் இருந்தது. தொழில் தொடர்பாக சில அழைப்புகளை மேற்கொண்டவன் அஜாவுக்கு கொடுத்து விட்டு விழித்தபடி இருந்தவளை பார்த்து போனில் "ஒரு நிமிடம்" என்று மியூட்டில் போட்டவன் கேட்டான் "சாப்பிடவில்லை..."

"இதோ" என்று எழுந்து உள்ளே சென்றவளை நெற்றி சுருக்கி பார்த்தவன் "ஐ வில் கால் யூ லேட்டர்" என்றவாறே பின்னால் சென்றான்.

தேநீரை கொதிக்க வைத்து பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தவள் ஏதோ தோன்ற திரும்பி பார்த்தாள். கௌதம் மார்புக்கு குறுக்கே கை கட்டி அவளை முறைத்தபடி நின்றான். கையும் களவுமாய் பிடிபட்ட குழந்தையாய் விழித்து கொண்டு நின்ற ஸ்ரீனிகா அசடு வழிய சிரித்தாள்.

அதிகாலை ஐந்து மணிக்கு குடித்த பூஸ்ட், அதன் பிறகு நடந்தவற்றில் மதிய உணவும் இல்லை தண்ணீர் கூட அருந்தவில்லை.

'என்ன இது' என்பது போல் அழுத்தமாய் பார்த்து வைத்தான்.

"அது... எனக்கு புளிக்கஞ்சி பிடிக்காது.... ஒரே புளி" மூக்கை சுருக்கி வாய்க்குள் முனகினாள்.

அவள் வேறு எதுவும் செய்ய நேரமில்லை என்பது புரிந்தது "பரவாயில்ல இன்று மட்டும் குடி" அழுத்தமாய் சொன்னான்.

"உனக்கு நல்லா வேணும் ஸ்ரீகுட்டி, இவனுக்கு பாவம் பார்த்து காய்ச்சல் வாய்க்கு புளிக்கஞ்சி வைச்ச இல்ல, நல்ல இனிப்பு போட்டு கொடுத்திருக்கனும்.... அப்ப தெரியும்" மீண்டும் வாய்க்குள் முனகினாள்.

அவள் கூறியது தெளிவாக கேட்டும் கேட்காதது போல் வினவினான் "என்ன...?"

"ஒன்றுமில்லையே" தலையை உருட்டினாள்.

"குடி" என்றான்.

"சரி குடிக்....கிறேன் நீங்க போங்க" அவனோ அசையும் வழியை காணோம். முன்னால் மாபிள் கிண்ணத்தில் இருந்த கஞ்சியை எடுத்தவள் ஒரே மூச்சில் குடித்து ‘தொப்’ என்று கீழே வைத்தவள் "ஸாத்யாகாரன் விட்டுக் கொடுக்கில்லா" திரும்பி நின்று மலையாளத்தில் வாய்க்குள் திட்டினாள்.

“ஸ்ரீ குட்டி எந்தா பறைஞ்சு..” காதருகே கேட்ட அவன் குரலில் துள்ளி திரும்பியவள் “மலையாளம் அறியுமோ?” ஆச்சரியத்துடன் கேட்டாள். அவள் பேசிய மலையாளத்தை ரசித்து பார்த்தவன் சிறுநகையுடன் "குறைச்சு குறைச்சு அறியும்" பதிலளித்தான்.

‘அச்சச்சோ இது தெரியாம நீ வேற அப்பப்போ மலையாளத்தில் திட்டியிருக்கேடி அப்பெல்லாம் தெரிஞ்சு இருக்குமோ....' மைன்ட் வாய்ஸ்சில் யோசிக்க "நீ திட்டினதால தான் படிச்சேன்" நெற்றியில் சுண்டினான்.

நெற்றியை தடவியாவாறே அவனை தவிர அங்கிருந்த அனைத்தையும் பார்த்தவள் தன்னை தானே திட்டி கொண்டாள் 'என்னடி உன் மைண்ட் வாய்ஸ் இவ்வளவு கேவலமா வெளியில் எல்லாம் கேக்குது'.

"வா போகலாம்" ஹாலுக்கு வந்தவன் கதவை திறந்து வெளிய பார்த்தான். கீழ் படி வரை தண்ணீர் வந்திருந்தது. இரவு முழுதும் மழை பொழிந்தால் வீட்டினுள்ளேயும் தண்ணீர் வரலாம். "அஜா இரவு வெள்ளம் உள்ளே வந்தால் மேலே உள்ள அறைக்கு போ, திங்க்ஸ் அப்படியே இருக்கட்டும் விடு, விடிந்ததும் பார்க்கலாம் இரவு எங்கும் வெளியில் செல்ல வேண்டாம்" உத்தரவாய் இட்டான்.

"சரி பாஸ்" என்றவனிடம் இரண்டு மெழுகுதிரிகளையும் சார்ஜ்ர் லைட்டையும் கொடுத்தாள் ஸ்ரீனிகா "இரவு பவர் கட் ஆனாலும் உதவும்".

"ஜெனெரேட்டர் இருக்கு தானே" கௌதமின் கேள்விக்கு "சிலவேளை மழைக்கு ஸ்டார்ட் ஆகாட்டி அதுதான் ஒரு முன் ஏற்பாடு" என்றாள். உதட்டுக்குள் சிறுமுறுவலுடன் தலையசைத்தான். அவளின் மழையோடு இருட்டு பயம் அவன் அறிந்ததுதானே.

🎻🎻🎻🎻 🎻

உறக்கம் கலைந்து எழுந்த ஸ்ரீனிகா போனை எடுத்து நேரத்தை பார்த்தாள் நேரம் நள்ளிரவு பன்னிரண்டு என்று காட்டியது. வெளியே இன்னும் கும்பவர்ஷமாய் மழை பொழிந்து கொண்டிருக்க அவ்வப்போது வந்த இடி மின்னலில் அறைக்குள் பிளாஷ் அடித்தது போல் இருந்தது. கடலின் இரைச்சலும் காற்றின் ஊளை சத்தமும் மழை சத்தத்துடன் சேர்ந்து ஒலிக்க ஸ்ரீனிகாவுக்கு அந்த சத்தமே விநோதமாய் இருந்தது.

ஆனால் அந்த சத்தத்திற்கா எழும்பினாள். இல்லையே... சாதாரணமாய் உறங்கியே இருக்கமாட்டாள். சுற்றிலும் இருளாய் இருப்பது புரிய கடைசியில் பவர் கட்டே ஆகிவிட்டது. சில நேரம் மின்சார துறையினரே விபத்துகளை தவிர்ப்பதற்கு இவ்வாறு செய்வது உண்டு.

போன் லைட்டின் உதவியோடு சார்ஜ்ர் லைட்டை ஒளிர விட்டவள் "ஸ்ரீ.... ஸ்ரீனி..." என்ற குரலில் பயத்தில் உறைந்து போய் நின்றாள்.

மீண்டும் ஒலித்து "ஸ்ரீனி...." கட்டில் அருகே இருந்து வரவே துடித்த இதயத்தை கையில் பிடித்து சார்ஜ்ர் லைட்டை உயர்த்தி பிடித்தவாறு அருகே சென்றாள். அவள் கட்டிலில் யாரோ படுத்திருந்தார்கள்.

கம்பளியை விலக்கி பார்த்தாள். கெளதம், அவள் கணவன் இவன் எப்படி என் அறையில்..... ஒரே கட்டிலில்... சட்டென குனிந்து பார்த்தாள். ஆடை அணிந்த மேனிக்கே இருந்தது. காற்றை கற்றையாக ஊதி தொப்பென கட்டிலில் அமர்ந்தாள். குழப்பமாய் இருந்து. எங்கே இருக்கிறோம்.

யோசிக்க அன்னையின் இழப்பு, கேரளா வந்தது, பின் புயல் மழை அனைத்தும் கோர்வையாக ஞாபகம் வந்தது. அப்படியே கெளதமின் காய்ச்சலும். உறக்கத்தில் உடலை முறுக்கி அருகே உருண்டு வந்தவன் அவள் மடியில் முகம் புதைத்தான். ஐஸ் கட்டியை தூக்கி மடியில் வைத்தது போல் இருந்தது. அவன் கேசத்தை கோதி கொடுக்க தண்ணீர் ஊற்றியது போல் நனைந்திருந்தது.

வேகமாக சார்ஜர் லைட்டை முழு வோல்டேஜில் எரியவிட்டாள்.

அவனை பார்க்க புரிந்து ஜன்னி கண்டுவிட்டது. காய்ச்சலோ என்ன காரணமோ அவன் மேல் முழுதும் வியர்த்து இருக்க குளிரில் நடுங்கி கொண்டிருந்தான். "ஸ்ரீனி..." அவன் அழைத்ததில் தான் எழும்பியிருந்தாள். சமயத்திற்கு மின்சாரம் போனதில் ஏசி ஹீட்டர் எதுவும் பாவிக்க முடியவில்லை.

அவள் எழுந்து செல்ல கைகளால் தேடி அவள் ஆடையை பற்றினான் "ஸ்ரீ...ஸ்ரீனி... போ போக..... பிளீ..."

"கீழே போய் வெந்நீர் எடுத்து வாரேன்" குழந்தைக்கு சொல்வது போல் சொன்னவள் கீழே சென்றாள்.

காஸ் அடுப்பில் நீரை கொதிக்க வைத்து பாத்திரத்தில் எடுத்து வந்தாள். சிறு டவலால் அவனை துடைத்து ஓடிகொலன் பவுடர் போட்டு உடைகளை மாற்றினாள். நனைந்திருந்த கம்பளி போர்வையையும் மாற்றினாள்.

அவள் இதையெல்லாம் செய்யும் போது அவன் காய்ச்சலில் ஏதோ பிதற்றிக் கொண்டிருந்தான்.

"ஸ்ரீனி... வெறு.... க்கதே... போ....கா" காய்ச்சலின் காரணம் வெறுமே நனைந்தது இல்லையோ...

என்ன உற்று கேட்டும் அவன் என்ன சொல்கின்றான் என்று புரியவில்லை. ஜுரத்தில் ஏதோ பிதற்றுகின்றான் போல் என நினைத்தவள் நள்ளிரவு என்றும் பாராது அவன் பேமிலி மருத்துவருக்கு போனை போட்டாள்.

அவரிடம் அவன் நிலையை எடுத்து கூற, அவர் சொன்னதை கேட்டு சங்கடத்துடன் உதட்டை கடித்தவள் கவனமாக கேட்டவாறே ஜன்னலை லேசாக திறந்து வெளியே எட்டிப் பார்க்க காற்றின் வேகம் கூடியிருந்தது. இப்போதைக்கு வெளியே செல்வது ஆபத்தை விலைக்கு வாங்குவது போன்றது. சிறிது நேரம் யோசித்தவள் தலையை மடியில் தூக்கி வைத்து சில மாத்திரைகளை புகட்டினாள்.

அவன் மனம் தேடியது கிடைத்ததோ.... இல்லை தேகத்தின் குளிருக்கு அவளின் மேனி வெப்பம் இதமாக இருந்ததோ வயிற்றில் முகம் புதைத்தான்.

விரல்களால் அவன் கேசம் அளைய "ஸ்ரீ.....னி" இன்னும் அவளுள் புதைத்தான். ஒரு கணம் அசையாமல் இருந்தவள் மூளை விழித்து கொண்டு கூறியது 'ஜுர வேகத்தில் இருக்கின்றான் விலகு' என்று, வேகமாக அவனை விட்டு விலக முயற்சித்தாள்.

"போ...கா... தே..." ஜுரத்தின் தீவிரத்துடன் அவள் விலகுவது மனதிற்கு பிடிக்காமல் அவளை பற்றி இழுத்தான். ஒரே இழுவையில் அவனருகே விழுந்தவளை தன் கீழ் கொண்டு வந்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

"கெளதம் வேண்டாம்..." அவனை தள்ள முயன்றாள். ரட்சாச கனம் கனத்தான். "டேய் கெளதம் கிருஷ்ணா... வேண்டாம் சொன்னால் கேளடா" அவள் வார்தையில் சட்டென நிமிர்ந்து முகம் பார்த்தான். ஜுரத்தில் சிவந்திருந்த கண்கள் அவளிடம் எதையோ எதிர்பார்த்து ஏங்கின.

"என்னை பிடிக்கலையா....? வெறுத்திட்டியா...." பாவமாய் கேட்டான்.

அடி வாங்கிய சிறு குழந்தை போல் அவன் கேட்க அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவனுக்கு அண்ணா என்று ஒருவன் இருந்தாலும் பிரதானமாக தொழிலை ஆளுவது அவன்தான். அவன் எடுக்கும் முடிவிற்கு அனைவரும் மறு பேச்சின்றி உடன்படுவார்கள் அப்படிபட்டவன் தன்னிடம் கெஞ்சியது ஏனோ பிடிக்கவில்லை. அது சுய நினைவில்லாத போதும் "அப்படி இல்லை இப்போ நீங்க சுய நினைவில் இல்ல" எப்படி சொல்வது.... எப்படி அவனுக்கு புரிய வைப்பது தெரியாமல் விழித்தாள்.

"உனக்கு பிடிக்கல இல்ல போ..." உதட்டை பிதுக்கி சிறு குழந்தை போல் கோபம் கொண்டு விலகி படுத்தான்.

அவளோ விழித்தாள், இப்போது இப்படி சொல்லும் இவன் ஜுரம் விட்டு நினைவு வந்ததும் என்னை மயக்கினாயா என்று கேட்டாலும் கேட்பான். யாருக்கு தெரியும்.

"அம்மா.... இவள் என்னை பிடிக்கல சொல்றாள்..." அங்கில்லாத அம்மாவிடம் முறைப்பாடு செய்தான். "அத்... அத்தை.... இவளுக்கு என்ன பிடிக்கல சொல்றா பா.. பா... பாருங்க உங்... உ... உங்க செல்ல புஜி குட்டி பிடிக்... ஹிக்....கலையாம்"

விழி வெளியே விழுந்துவிடும் போல் இருந்தது. அவனது கம்பீரம் என்ன இப்போது கஞ்சா அடித்தவன் போல் புலம்புவது என்ன. ஜன்னி வந்தால் இப்படியெல்லாமா நடப்பார்கள். ‘முன்ன பின்ன ஜன்னி வந்த ஆட்களை பார்த்தால் தானே’ மூளை பரிகாசம் செய்தது.

"யாரு செல்ல புஜி குட்டி..?" அவன் எண்ணங்களை திசை திருப்ப விசாரித்தாள்.

சட்டென திரும்பி படுத்து அவள் மூக்கை விரலால் தட்டியவன் "நான்தான்... புஜி குட்டி..." அசடு வழிய சிரித்தான்.

"அத்தை யாரு...." இப்போது ஆர்வமாக விசாரித்தாள்.

மூளை காறி துப்பியது 'இதேல்லாம் இப்ப ரொம்ப தேவை பாரு' அதை துடைத்து ஓர் ஓரமாய் போட்டவள் ‘கொஞ்சம் சும்மா இரு இது எல்லாம் வரலாற்று நிகழ்வு திரும்ப கிடைக்காது அச்சோ இப்ப பார்த்து கரண்ட் கட்டாகி போச்சே ச்சே....

இதை மட்டும் போன்ல ரெகார்ட் பண்ணியிருந்த இதோட வல்யுவே வேறடி....

"எ எ... ன் அத் அத்தை உன்னோட.... அம்மா... எனக்கு தெரியாது... அவங்க தான் உன்னோட அம்மா என்று" கண்ணோரம் கோடாய் நீர் வழிந்தது.

அவன் பேசுவது புரியாமல் விழித்தாள். என்றைக்கு புரிந்தது இன்று புரிய...

திடீரென எழுந்தான் "நான் போய் கூட்டி வருகிறேன்"

"யாரை" அவனை பிடித்து வைத்து கேட்டாள்.

"அத்தையை...."

"என் அம்மாவையா...?" அதிர்ச்சியுடன் கேட்டாள்.

"ம்ம் அவர்களைத்தான்..."

"எப்படி?" அதிர்ச்சி விலகாமல் கேட்டாள்.

"முடியாதே.... சாரிப்பா நா தோத்துட்டன்...." சோர்ந்து விழுந்தவன் உடல் மறுபடியும் மோசமாக நடுங்க தொடங்கியது.

"இல்லப்பா நான் தோற்க முடியாது... நெவர் உங்களுக்கு கொடுத்த பிரமிஸ்... நான் எப்படியாவது அவர்களை அழைத்து...." வெறி பிடித்தவன் போல் வெளியே செல்ல முயன்றவனை இறுக அணைத்து கொண்டாள். இந்த புயல் மழையில் எங்காவது ஓடி போனால் எங்கே போய் யார் தேடுவது.

அவள் அணைப்பில் குழந்தையாய் அடங்கியவன் அவள் தோளில் முகம் புதைத்து கரகரத்த குரலில் சொன்னான் "சாரி, நான் முதலே வந்து இருக்கனும்"

என்ன ஏது ஒன்றும் புரியவில்லை அவளுக்கு தலையில் தடவி ஆறுதல் அளித்தாள் “இல்ல பரவாயில்ல இப்ப வந்தீங்களே அதுவே போதும்” அவனைப் படுக்க வைத்தாள்.

இருவருக்கும் சேர்த்து கம்பளியால் போர்த்தவள் அவன் நடுக்கம் நிற்க தன் உடல் வெப்பத்தை கடத்த மூளை செய்த எச்சரிக்கையை மீறி அவனருகே படுத்தாள்.

அவன் நடுக்கத்திற்கு இதமாய் இருந்ததோ இல்லை ஆழ் மனதின் தேடலே அவளாக இருந்ததோ அவளுடன் நெருங்கி படுத்தவன் மெதுவே அவளை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து தன் தேடலை தொடங்கியிருந்தான்.

(அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நான் சொல்லவில்லை. வாலிப கவிஞர் வாலியின் இந்த பாடல் சொல்லும், இந்த அளவு விரசம் இல்லாமால் விரகம் எழுத வருமா என்று தெரியவில்லை.... வரவே வராது வாலி எங்கே நான் எங்கே)

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

நான் மெய் மறந்து மாற
ஒர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்

கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்....

நாடி எங்கும் ஏ....தோ
நாத வெள்ளம் ஓடும்.....
ஆனாலும் என்ன தா...கம்

மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ - வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டில்- இட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் - நான்

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் - கலந்தாட....
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட- தியானம்....
ஆழ் நிலையில் அரங்கேற....

காலம் என்ற தேரே....
ஆடிடாமல் நில்லு
இக் கணத்தை போலே....
இன்பம் எது சொல்லு...
காண்பவை யாவும்

சொர்க்கமே தான்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும்
தூரம்......

வாருவான்.....
 

Nandhaki

Moderator

தீரா🎻10


முன்னே பரந்து விரிந்திருந்த அரபிக் கடலின் மேற்புறமிருந்த கருமை நிறம் குறைந்திருந்தது. ஆனால் இன்னும் அலைகளின் உரம் குறைந்திருக்கவில்லை. காலை பத்து மணிக்கு கரை கடந்த புயல் தன்னால் முடிந்த சேதராமாக சில வீடுகளை இல்லாமல் செய்தது உடன் மரங்களை சாய்த்து மழையால் மண் சரிவு என தான் போன வழியெல்லாம் தடங்களை பதித்து கைவரிசையை காட்டி சென்றிருந்தது. அதன் எச்சமாய் அங்கங்கே மொட்டடையாய் சில மரங்கள், சரிந்து விழுந்திருந்த சில மரங்கள், எங்கிருந்தோ வந்து விழுந்திருந்த கூரை தகரங்கள், ஆட்டோவின் மேல் பக்க லெதர் துணிகள் என ஏதோதோ பொருட்களை எங்கெங்கிருந்தோ தூக்கி வந்து வீசியிருந்தது. தூரத்தில் மலையிருந்து வழிந்த மழை நீர் வாய்க்கால் கட்டி கடலில் இணைந்து கொண்டிருந்தது.

கடலை பார்த்தபடி இருந்த அந்த வீட்டின் மேல் மாடியின் கைப்பிடி சுவரோடு ஓட்டி சிறு மேஜை போட்டிருக்க அதன் விளிம்பில் அமர்ந்து காலை கீழே தொங்கவிட்டு அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா. கீழே குனிந்து குதிகாலை சேர்த்து முன் பாதத்தை விரித்து அந்த இடைவெளியில் பார்த்தாள். முழங்கால் வரை நீர் நிற்கும் போலிருந்தது. நள்ளிரவே வீட்டினுள் நீர் வந்திருந்தது. சுற்றிலும் வெள்ள காடாய் இருக்க, அஜா ஒரு ரெயின் கோட்டை தலையில் மாட்டி கொண்டு மதிலின் ஓரம் ஏதோ செய்து கொண்டிருந்தான்.

மழை இன்னும் நின்றபாடில்லை லேசாக பெய்து கொண்டிருந்தது. காலை முன்னும் பின்னும் ஆட்டி நீட்டி மழை நீரின் சில்லிப்பை உள்வாங்கியவள் முகம் மலர்ந்தே இருந்தது.

ஸ்ரீனிகா காலை எழுந்து குளித்து வெளியே வந்த போது புயல் உச்சத்தை தொட்டிருந்தது. மாடியின் பல்கனியில் நின்று பார்க்க புயலின் நாட்டியம் அழகாய் தெரிந்தாலும் நீண்ட நேரம் நின்று பார்க்க முடியவில்லை. காற்று அள்ளி வந்த தூசுதுணிக்கைகள் ஊசி போல் மேனியில் குத்த, அப்போதும் பெய்து கொண்டிருந்த மழையின் சாரல் வேறு அடிக்க இறங்கி கீழே சென்றாள்.

கணுக்கால் வரை நீரில் நின்றவாறே ஒரு கறி சாதம் என சமையல் முடித்தவள் மேலே சென்று கௌதமை பார்க்க அப்போதும் உறங்கி கொண்டிருந்தான். நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்து பார்க்க உறக்கத்திலும் அவனை உணர்ந்தவனாய் அவள் கையை பிடித்து தலையணைக்கு கன்னத்திற்கும் நடுவில் வைத்து கொண்டு லேசாக மலர்ந்த புன்னகையுடன் உறக்கத்தை தொடர்ந்தான்.

ஒரு கணம் பயந்து மூச்சை இழுத்து பிடித்தவள் அவன் உறங்குகின்றான் என்றதும் நிம்மதியாய் வெளியேவிட்டாள். மறு கரத்தால் அவன் கேசம் கோதியவளுக்கு இரவு நிகழ்ந்தது நினைவில் வர கன்னம் அழகாய் சிவந்தது.

வீழும் இருவர்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு என்ற குரலுக்கு அமைவாக இருவரும் காற்றுக்கும் வழியின்றி இறுக தழுவிய கணங்கள் கண் முன்னே வந்து போக அவள் முகம் குங்குமமாய் சிவந்தது.

🎻🎻🎻🎻 🎻

நேற்று அவனருகே அவன் உடலை வெப்பமேற்ற படுத்தவளை அணைத்து உதடுகளை அவன் ஆளுகையில் எடுத்ததும், அவள் பெயரையே மந்திரம் போல் உச்சரித்ததும், அவளில் அவன் உதடுகள் செய்த மாயமும், அவளிடம் புதைந்து தன்னை முற்றும் தொலைந்த போது காதருகே ஸ்ரீனிஇ.. என அவள் பெயரை தாபமாய் அழைத்த தருணம்....

அவள் தோளில் அவன் அடையாளம்....

அப்படியே சங்க தமிழ் கூறும் பெண்ணின் அவயவத்தில் ஆடவர் நகத்தினாற் பதிக்கும் அர்த்தசந்திரன், மண்டலம், புலிநகம், மயூரபதம், முயலடி, உற்பலம் என ஆறு வகை அடையாளத்தையும் ஒரே நாளில் கொடுத்திருந்தான். கூடலின் பின் நடுக்கம் நின்று உறங்கிய போதும் ஜுரத்தில் அனத்தி கொண்டே இருந்தான் கௌதம். அவன் தலை கோதிய ஸ்ரீனிகா மெல்லிய குரலில் பாட தொடங்கினாள்.

(இது லதா மங்கேஸ்கர் பாடிய பாடல் முடிந்தால் கேட்டுப் பாருங்கள்)

சோஜா சந்த ராஜா சோஜா
ஜல் ஸப்னோமே ஜல்
நீந் கி பரியான் பேகென்கி ஆயீ பைரோன் மைன் பயல்|
துஜுக்கோ ஆபநே நரம் பரோன் பர் லேக்கர் ஜயங்கி
சோனே காய்க் தேஸ் ஹை ஜிஸ்கி சாய் கரயேகி

டர்ட்டி ஸே குச் தூர் கஹின் சாத் ஸமுன்டர் பர்
ஆகாஷ் கே பீச் ஹை சப்னோ கா சன்சார்
வோ சமீன் ஹை பியர் கி வஹான் செர்ப் பியர் ஹை
மேரே சந்த் ஜா வஹான் தேரே இந்துசார் ஹை...


கீழ் ஸ்தாயியில் காதருகே ஒலித்த அந்த தாலாட்டில் அவன் அனத்தல்கள் குறைந்து ஆழ் துயிலுக்கு செல்ல அவளும் மெதுவே உறக்கத்தை தழுவினாள்.

காலை நேரம் கழித்தே எழுந்த போதும் அவன் எழுந்திருக்கவில்லை. நல்லவேளை என நினைத்தவள் அவன் உடலின் சூட்டை பரிசோதித்து பார்த்தவளுக்கு திருப்தியாக இருக்க வெந்நீரில் அவன் உடல் துடைத்து உடை மாற்றிவிட்டாள்.

🎻🎻🎻🎻 🎻

கையை மெதுவே விடுவிக்க புருவம் சுழித்து அசைந்தான் ஆனால் எழும்பவில்லை. 'இப்படி உறங்குகின்றான் கும்பகர்ணனுக்கு தம்பியா இருப்பானோ...' மனம் கவுண்டர் கொடுக்க மெதுவே வெளியே வந்து மாடியின் மதில் சுவரில் ஏறி அமர்ந்தாள்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இது வரை ஒரு அசைவும் இல்லை. மருந்தும் கொடுக்கனும் போய் எழுப்புவோமா வேண்டாமா என மனம் பட்டி மன்றம் நடத்த சிறிது நேரம் சுற்றுப்புறம் மறந்து இருந்தாள்.

"ஏன் மதில் திண்டில் ஏறி இருக்கின்றாய் விழுந்துவிட்டால்..." ஒரு குரல் காதருகே கடிந்து கொண்டது. திடிரெனக் கேட்ட குரலில் திடுக்கிட்டு துள்ளி விழ பார்த்தவள் முன்னே நிலத்தில் தான் விழ போகின்றேன் என பயந்து கண்களை இறுக மூட கடினாமாய் மெல்லிய வெப்பத்துடனான எதன் மீதோ மோதினாள்.

குனிந்து பார்க்க கீழே விழ விடாமல் கெளதமின் வலிய கரம் இடையை பிடித்திருக்க அவன் மார்பின் மீது பின்புறமாக சாய்ந்து இருந்தாள்.

லாவகமாக இறக்கிவிட்டவன் அவள் வழவழத்த இடையில் பதிந்த கையை எடுக்க முடியாமல் திணற எங்கிருந்து வந்தது என தெரியாமல் அவளை ஏதேதோ செய்யத் துடித்த எண்ணங்களை தூண்டிய மனதை அடக்கும் வழி தெரியாமல் திகைத்து நின்றான் கெளதம்.

ஸ்ரீனிகா அவன் மனைவிதான் ஆனால் இது நாள் வரை அவன் மனம் இது போல் கட்டு மீறி தடம் புரளவில்லையே. சில நேரங்களில் அவளிடம் தடுமாறியது உண்டுதான், ஆனால் இந்த அளவிற்கு இல்லையே. அவனை மேலும் சோதிப்பது போல் மெல்லிய நாண சிவப்புடன் ஏதோ சொல்வதற்கு வாய் திறந்தாள் ஸ்ரீனிகா "கெளதம்.."

அவளை உதறி திரும்பி நின்றவன் "உனக்கு கொஞ்சமாவது அறிவில்லை.... உன் மனதில் என்ன தான் நினைத்து கொண்டிருக்கிறாய்?" வழமை போல் தன் உணர்வுகளை அடக்க அவளிடமே காய்ந்தான்.

அவளுக்கு முதலில் தயக்கமாய் இருந்தது. நேற்றைய இரவை பற்றி அவனிடம் பேசுவோமா வேண்டாமா என. ஏதாவது ஏறுக்கு மாறாய் சொல்லிவிட்டான் என்றால் அதை அவளால் தாங்கி கொள்ள முடியாது. மிகுந்த தயக்கத்தி்ன் பின்தான் அவனிடம் சொல்வதற்கு முடிவெடுத்தாள்.

அவன் உதறலிலும், கடுமையான குரலிலும், முகம் திருப்பிய செயலிலும் அடியுண்ட மனம் சட்டென விழிகளில் நீரை சிந்தவிட்டது. அவன் குரலின் கடுமையில் அவளையும் அறியாது இரண்டடி பின்னே நகர்ந்துவிட்டாள். இதற்கு மேல் அவனே கேட்டாலும் வாய் திறக்க மாட்டாள்.

விறைத்திருந்த அவன் பரந்த முதுகை பார்த்தவள் மூளை சொல்லியது இந்த உதறல், வெறுப்பு ஒரு நாளும் மாற போவதில்லை. இதை சொல்லியும் பயனில்லை. அன்று போல் இன்றும் ஏதாவது பேசுவான். கன்னத்தில் வழிந்த நீரை துடைத்தவள் "சாரி பின்னால் மேசை இருந்தது அதான்.... உடை மாற்றி சாப்பிட வாருங்கள்" மெதுவான குரலில் கூறினாள்.

அவள் குரலில் இருந்த பேதம் புரிய, நிஜமாகவே நெற்றியில் அறைந்து கொண்டவன் "இல்லம்மா இப்படி திண்டில் ஏறி இருக்கிறாய்? விழுந்து வைத்தால்...." திரும்பியவன் காற்றிடம் தான் பேசிக் கொண்டிருந்தான்.

உடை கூட மாற்றாமல் அப்படியே வெறும் மேலுடனும் ட்ராக் பாண்ட்டுடனும் வேகமாக கீழே இறங்கி வந்தான் கௌதம். சாப்பாடு எடுத்து வைத்து கொண்டிருந்தவள் அவன் வந்த வேகத்தை பார்த்து குரல் கொடுத்தாள் "கவனம் கீழே ஈரம்." கடைசி படியில் நிதானித்தவன் அவளருகே வந்தான்.

"ஸ்ரீனிஇ.... நான் மேல... அது.... வந்து" கோர்வையாக கூற முடியாமல் முதன் முறையாக தடுமாற்றம் அவனில் தடுமாறி விழுந்தது.

அவன் முழுதாக சொல்லி முடிப்பதற்குள் உள்ளே வந்த அஜா “பாஸ் இப்ப உங்களுக்கு ஓகேவா” விசாரித்தான் “நேற்று பயந்துட்டேன் நல்லவேளை மேடம் பேமிலி டாக்டரிடம் பேசி மருந்தை எனக்கு மெசேஜ் செய்தாங்க” அவளையும் புகழ்ந்தான்.

"இவரும் பிரஷ் ஆகி சாப்பிட வாங்க" நிமிர்ந்து பார்க்காமல் அழைத்தாள் ஸ்ரீனிகா.

அவனோ குனிந்திருந்த அவள் முகத்தையே பார்த்திருந்தான். ஓர் இரண்டு நாட்களாக தான் நத்தை கூட்டை விட்டு வருவது போல் கொஞ்சம் பேசினாள். இப்போது மீண்டும் சுருண்டு விட்டாளோ... தன் வாயிலேயே ஒன்று போட வேண்டும் போல் இருந்து. இப்போது எதுவும் பேசுவதற்கில்லை. மெதுவே மாடியேறி சென்றுவிட்டான்.

குளித்து பிரெஷ் ஆகி கீழே வந்த போது ஸ்ரீனிகா அந்த இடம் முழுவதையும் மோப் போட்டு துடைத்து கொண்டிருந்தாள். அவள் துடைப்பதைப் பார்த்து முகம் சுழித்தவன் "அஜா..." சத்தமாக அழைத்தான் .

அவன் சத்தத்தில் வேகமாக வந்து ஈரத்தில் வழுக்கி விழப் பார்த்தவனுக்கு கை கொடுத்து நிறுத்திய ஸ்ரீனிகா கண்ணை விரித்து கௌதமை பார்த்தாள் "வன்னு இல்ல கோபகுலநாயக" வாய்க்குள் முனங்கினாள்.

அஜாவின் தாத்தா பாட்டி மலையாளி எனவே அவனுக்கு நன்றாகவே மலையாளம் தெரியும் அதோடு அவனின் தங்கச்சி மேடம் அடிக்கடி மலையாளத்தில் பாஸுக்கு பூசை வைப்பதும் தெரியும். என்றும் போல் இன்றும் புரிந்தது 'வந்திட்டாருல்ல கோபக்காரன்' திட்டுகின்றாள் என்று, வழமை போல் சிரிப்பும் வந்த தொலைக்க கஷ்டப்பட்டு அடக்கி அப்பாவியாய் நின்று "பாஸ்" என்றான்.

கௌதமுக்கு தெளிவாகவே விளங்கியது அவள் தன்னை தான் ஏதோ சொல்கின்றாள். இந்த அஜா குரங்கும் அவளுடன் சேர்ந்து பல்டியடிக்கின்றான். முதலில் வந்த வேலை என்று நினைத்தவன் சோபாவில் அமர்ந்தது போனை கையில் சுழற்றியவாறு "வீட்டு வேலைக்கு ஆட்கள் வர சொல்லி சொன்னனே என்னவாயிற்று" கேட்டான்.

அஜா விழித்தான் "பாஸ் இப்ப தோணில தான் வரனும்"

"ஏன் என்னாச்சு"

“சுத்தி வர தொடை வரை தண்ணி அதோட இரண்டு பக்கமும் மண் சரிவு ரோட் ப்ளோக் மோர்னிங் வீட்டுக்குள்ளயும் தண்ணி வந்திட்டு மேடம் தான் சொன்னாங்க பக்கத்தில் உள்ளவர்களை கேளுங்கள் எல்லோருக்கும் சிரமம் தானே வருவார்கள் என்று நானும் கேட்டேன் அவர்களும் வந்தார்கள். எல்லோரும் சேர்த்து வாய்க்கால் வெட்டி விட்டுருக்கோம். இன்று மழை பெய்யாவிட்டால் நாளைக்குள் வெள்ளம் வடிந்துவிடும்” என்றான்.

"இன்று மழை பெய்யுமா..." அவன் இழுக்க அஜா விழித்தான்.

"அவன் என்ன செக்யூரிட்டி ஏஜென்சி நடத்துறான... வானிலை அறிவிப்பு மையம் நடத்துறான..." வாய்க்குள் முனகி ஸ்ரீனிகாவின் மனம் கவுண்டர் கொடுக்க அஜாவுக்கு உதவிக்கு வந்தாள் "எட்டா போய் குளிச்சு பிரெஷ் ஆகி வாங்க இருவருக்கும் காலை உணவும் இல்லை சீக்கிரம்" விரட்டினாள்.

கௌதமிடம் திரும்பி "சாப்பிடலாம் வாங்க" என்றாள்.

"சமைக்க பொருட்கள் ஏது?" வினவினான்.

'ஆரம்பிச்சிட்டாருல்ல கேள்வியை திருவிளையாடல் நாகேஷ் தோத்தார்'

"மருந்து வாங்க சொல்லும் போது அதையும் வாங்க சொன்னாங்க மேடம்" அவன் அறைக்கு சென்றவாறே பதிலளித்தான் அஜா.

அவனை முறைத்தவள் கௌதமிடம் திரும்ப "இருப்பது மூவர் அவனும் வரட்டும்" என்றான். "எட்டா..." ஸ்ரீனிகா அழைக்க திரும்பி "பத்தே நிமிடத்தில் வந்திருவன் தாயே" என்று குனிந்து ஒரு கும்பிடு போட்டு விட்டுச் சென்றான்.

உதடு தாண்டதா புன்னகையுடன் மோப் போட்டு முடித்தவளை பார்த்து கொண்டிருந்த கௌதம் முகம் யோசனையை தத்தெடுத்ததது. இவர்கள் இருவரிடையே நல்லதொரு ஸ்நேக பூர்வமான பந்தம் உருவாகியிருந்தது. ஆனால் எங்கே.... எப்போது..... அவன் அவர்களை தவறாக நினைக்கவில்லை. ஆனால் அவளுடன் ஒரு ஆண் எந்த விதத்திலும் பந்தத்தை உருவாக்குவது இலகுவான காரியமில்லை.

மோப் போட்டபடி அவனருகே வர அவளை பார்த்தவாறே கால்களை தூக்கி சோபாவில் வைத்துக் கொண்டான்.

நான் உருவாக்க தவறிய பந்தத்தை ஒரு சகோதரனாய் அவன் எவ்வாறு உருவாக்கி கொண்டான். அவள் வரைந்த கோட்டை தாண்டி சென்ற ஆண்கள் சிலரே. நான் கோட்டை தாண்டி சென்றேனா இல்லை அழித்து சென்றேனா தன்னை தானே கேட்டு கொண்டான்.

அதற்குள் அவனை அழைத்தது ஞாபகம் வர "எட்டா" வாய்க்குள் சொல்லி பார்த்தவன் "அது என்ன எட்ட கிட்ட" அவளை தேட கிச்சினுள் கைகழுவி கொண்டிருந்தாள். அஜாவுக்கு 'முப்பது நிமிடம் கழித்து வெளியே தலை காட்டு' என்று மெசேஜ் போட்டவன் அவளருகே சென்றான். கைகழுவி திரும்பியவள் பின்னால் நெருக்கத்தில் நின்ற கௌதமின் மேல் மோத பார்த்து சுதாரித்து நின்றாள்.

வருவான்....

அந்த ஹிந்தி பாடலின் மொழிபெயர்ப்பு என்னால் முடிந்தவரை செய்திருக்கின்றேன்

(தூங்கு நிலவே ராஜா தூங்கு

செல் கனவுலகு செல்

காலில் கொலுசணிந்து வரும் நித்திரையின் தேவதைகள்

பட்டு சிறகுகளில் தூக்கி செல்வார்கள்

தங்கம் போன்ற உலகிற் உன்னை அழைத்து செல்வார்கள்

உலகம் தாண்டி தூரமாக ஏழ் கடலும் தாண்டி

ஆகாயத்தின் பின்னே கனவுகளின் உலகிற்கு

அன்பின் உலகம் அது அங்கே அன்பு மட்டுமே

என் நிலவே செல் அங்கே உனக்காக காத்திருக்கின்றார்கள்

செர்க்கத்தில் மின்னும் தேவதைகள் அவர்கள் விருந்தினாராய்

நீ பேசும்தேவதை கதைகளை தேவதைகள் கூற

உன்னுடன் ஆடிவிளையாட)

முடிந்த வரை மொழிபெயர்ப்பை சரியாக செய்திருக்கின்றேன், இது மிஷன் காஸ்மீர் படத்தில் லதா மங்கேஸ்கர் பாடிய பாடல், அருமையான பாடல்.
 

Nandhaki

Moderator

தீரா🎻11


"அது என்ன எட்டா கிட்டா"

அவளோ விழித்தாள் திரும்பிக் காபர்ட்டை பார்த்தவள் "எட்டுமே என் உயரத்துக்குச் சரியாதானே இருக்கு" என்றாள் குழப்பத்துடன்.

நெற்றியில் சுண்டியவன் "அதில்லை, அஜாவை எப்படி கூப்பிட்டாய்?" கேட்டான்.

"ஓஹ் அதுவா..." என்று விலக போனவளை, அவளருகே சுவரில் கையை ஊன்றி மறித்தான்.

மீன் போல் வாயை 'ஓ' வடிவில் திறந்து அவன் கை நீளத்திற்கும் பார்த்தவள் அவனை திரும்பிப் பார்த்தாள். மறுபக்கம் திரும்ப அங்கேயும் அவன்கை இருக்கவே கீழாக குனிந்து தப்ப முயல கையை கீழே இறக்கினான். நிமிர்ந்து "ஹிஹிஹிஹ்" அசட்டு சிரிப்பொன்றை அவிழ்த்துவிட்டவள் நானே பாவம் என்பது போல் பார்த்து வைக்க "பதில் சொன்னால் விடுறன்" புன்னகைத்தான்.

"எட்டாது கிட்டாது எல்லாம் இல்ல, ஏட்டா என்றால் தமிழில் அண்ணா என்று அர்த்தம்" பதில் சொன்ன வேகத்தில் போக திரும்பியவள் கையை எடுக்காமல் இருக்க மிரண்ட மானாய் பார்த்தாள்.

"ஏன் மேடம் தமிழ்ல பேசமாட்டிங்களோ....?" அவள் மிரண்ட பார்வையில் 'கொல்றாளே' அஞ்சான் சூர்யாவாட்டம் மனதினுள் புலம்பியவன் "இன்னும் இருக்கு" என்றான் கெத்தாக. ‘என்ன’ என்பது போல் பார்த்து வைத்தாள்.

கண்களில் குறும்பு மின்ன அவளைப் பார்த்தவன் "கோப...குல....நாயக...." இடைவெளி விட்டு ராகமிழுத்துக் கூறினான்.

"போச்சு போச்சு இன்று நான் செத்தேன்" வாய்க்குள்முனகினாள்.

"ஹ்ம்ம்..." அவனுக்கு தெளிவாக கேட்டாலும் கேட்காதது போல் காதை அவள் வாய் அருகே கொண்டுவந்தான்.

"கோ.........ரன்"

"கேக்கல.... கொஞ்சம் சத்தமா சொல்றது" வேண்டுமென்றே சீண்டினான்.

"கோப..காரன்..." அந்த குட்டி இடம் அனுமதித்த வரைஅவனிடமிருந்து திரும்பி நின்றாள்.

"உன்னிடம் அப்படி கோபமாகவா நடந்து கொண்டேன்" முகத்தில் யோசனை சிதறல்களுடன் கேட்டான். அவளோ திரும்பி அவன் வலது முட்டியின் முன்புறத்தில் இருந்த மச்சத்தை தீவிரமாய் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

"என்ன..." அவள் எதை பார்க்கின்றாள் என்று தெரிந்திருந்தே கேட்டான்.

"இல்லை.... நீங்க இரட்டையரா... இல்லை ஒரேமாதிரி உள்ள ... அவர்களுக்குதான் ஒரே மாதிரி மச்சம் இருக்குமாம்..." அவள் பேச்சு அவளுக்கே முட்டாள்தனமாக பட்டது ஆனால் கண்ணுக்கு முன் நடப்பதை மூளை நம்பமறுத்தது.

அவளையே சிறிது நேரம் ஆழ்ந்து பார்த்தான். அவன் பார்வையில் குழம்பி போய் பார்வையை திருப்பிக் கொண்டாள் ஸ்ரீனிகா. "கணவனை மலையாளத்தில் எப்படி அழைப்பார்கள்?" அவள் திரும்பியிருந்த முகத்தை பார்த்தவாறே ஆழ்ந்த குரலில் கேட்டான்.

சட்டென திரும்பி அவனை பார்த்து விட்டு அதே வேகத்தில் பார்வையை தாழ்த்தினாள்.

ஒரு கணம் கண் வழியே இதயத்திற்கு மின்சாரம் பாய்ந்து போல் இருக்க "ஹாப்ப்பா...." என்றான். என்ன என்பது போல் நிமிர்த்து பார்த்தவளை "அதைவிடு... மலையாளத்தில் எப்படி அழைப்பார்கள், சொல்லு" அதிலேயே பிடிவாதமாக நின்றான்.

அவள் போட்டிருந்த டீஷிர்டின் முனையை கையில் வைத்துச் சுற்றியவாறே முனங்கினாள் "சேட்டா....".

"ஸ்ரீனிஇ.... நிமிர்ந்து என்னை பார்" அந்த குரலில் என்ன இருந்தது கெஞ்சல் கொஞ்சம் கொஞ்சல் கொஞ்சம்.

அவன் குரலில் நிமிர்த்து பார்த்தவள் கண்களை தன் கண்களால் கௌவிக் கொண்டான். "சொல்லு..." என்றான் அதே குரலில்.

அவன் கண்ணை பார்த்தவாறே "சேட்டா..." என்றாள். நொடியில் மாறிய அவன் பார்வையில் விழி விரித்தாள். 'ஆத்தி.... இது நேற்று பார்த்த பார்வையில்லை' அவளுக்கு அவன் பார்வையை இனம் காணத் தெரியவில்லை. ஆனால் நேற்று மெல்லிய வெளிச்சத்தின் மத்தியில் மந்திரம் போல் தன் பெயரை உச்சரிக்கையில் இதே பார்வைதான் என்பது வரை புரிந்தது.

"போ..." பாதி மயக்கமும் பாதி பயமுமாய் பார்த்திருந்தவளை அவன் குரல் கலைத்தது. அவளிடமிருந்து ஓரடி விலகி கைகளை மார்புக்கு குறுக்கே காட்டியிருந்தான். அவனை பார்த்தவாறே, அவன் மீது படமால் கவனமாக விலகி சென்றாள்.

அவன் உணர்ச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்திக் கொண்டான் என்பது அவனுக்கே புரியவில்லை. மயக்கத்துடன் அவள் கண்களில் பயத்தைப் பார்த்த போது உள்ளே வலித்தது. என்னிடமே பயம் கொள்ள வைத்துவிட்டேனே ச்சே, இதற்கு முன் பயந்த போதெல்லாம் என்னை நாடியவள் கடைசியில் என்னைப் பார்த்தே அச்சம் கொள்கின்றாள். போதக் குறைக்கு கன்னாபின்ன என்று எண்ணங்களின் ஓட்டம் வேறு.

சோறு இருந்த பாத்திரத்தை எடுத்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு வந்து பார்க்க கிச்சின் சிங்கிள் முகத்தைத் தண்ணியடித்துக் கழுவிக் கொண்டிருந்தான். எதுவும் பேசாமல் டவலை கொடுக்க வாங்கி அழுத்தி துடைத்தவாறே அவள் முகத்தைக் கூட பார்க்காமல் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டான்.

அவள் யோசனை எங்கெங்கோ ஓடியது. கால நேரமின்றி சாணக்கியரின் வாசகம் நினைவுக்கு வந்து தொலைத்தது. ‘வழமைக்கு விரோதமான எதுவும் சந்தேகத்துக்குரியது.’ மூளையின் சந்தேகத்திற்கு பதிலின்றி மனமோ அமைதியாய் இருந்தது. இதுவே சில காலத்திற்கு முன்னானால் இன்னேரம் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்திருக்கும். இன்றோ வாங்கிக் கட்டிக் கொண்ட அடியில் அமைதியாகவே இருந்தது.

போய் டைனிங் டேபிளில் அமர்த்தவனுக்குப் புரியவேயில்லை ஏன் தன் உணர்வுகள் கட்டவிழ்த்து ஆடுகின்றன என்று. அவளிடம் தோன்றும் எண்ணங்கள் தவறென்றோ வேண்டாம் என்றோ நினைக்கவில்லை. ஆனால் அதை காட்டும் தருணம் இதுவல்ல என்றே எண்ணினான். ஏற்கனவே பயந்து நத்தை போல் சுருளுகின்றாள். தான் எதாவது செய்ய போய் இன்னும் மோசமாக போய்விட்டால் என்ன செய்வது என்றே பயந்தான்.

ஏதோ தட் என்ற சத்தத்தில் சிந்தை கலைய திரும்பிப் பார்த்தான். கை நிறைய பாத்திரங்களுடன் நின்றாள் ஸ்ரீனிகா. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வந்ததில் டம்ளர் விழுந்த சத்தம். அருகே சென்று "கூப்பிடுவதற்கென்ன..." லேசாய் கடிந்தவன் அவள் கையிலிருந்து எடுத்து மேஜையில் வைத்தான்.

அவளோ வேற்றுகிரகவாசியை போல் பார்த்து வைத்தாள்.

அஜாவும் வர சாம்பார் பொரியலுடன் உணவை முடித்த போது மணி இரண்டைத் தாண்டியிருந்தது. ஆனால் மீண்டும் நன்றாக மழை பிடித்துக் கொண்டது. ரெயின் கோட் குடையுடன் அஜாவையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றவன் சுற்றிலும் பார்த்துவிட்டு "பெரிய அளவில் மண் சரிவு அபாயம் இல்லையென்றாலும், மழை தொடர்ந்து பொழிந்தால், மணல் பிரதேசம்.... மண்ணரிப்பு வெள்ளத்தினால் வீடு இடிந்து விழும் அபாயம் உண்டு" என்ற கௌதம் சுற்றி வர இருந்த ஐந்து வீட்டையும் பார்க்க அஜா பதிலளித்தான் "மொத்தமாக ஒரு பதினைந்து பேர்".

"அஜா...., அநேகமாக அனைவரும் நம்மை போல் தங்க வந்தவர்களாக தான் இருப்பார்கள். அவர்கள் வந்தால் அவர்களையும் அழைத்து செல்வோம். நாளை பின்னேரத்தினுள் நாம் சென்று விட வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளையும் கவனி, முடியுமானால் நடந்து செல்வோம் இல்லாவிட்டால் தோணி இரண்டில் ஒன்றை ஏற்பாடு செய், வெளிநிலவரம் விசாரித்தாயா? சென்னை செல்ல முடியுமா?"

பாஸ் சொன்னதன் அர்த்தம் அவனுக்கும் தெளிவாக புரிந்தது. இப்படியே வெள்ளம் பாய்ந்தால் வீடு இடிந்து விழும் ஆபயாமும் உண்டு. ஸ்ரீனிகாவை பயமுறுத்த விரும்பாமல் தான் அவன் இது பற்றி வாய் திறக்கவில்லை “புயல் கடந்ததால் நாளை விமானம் செல்கின்றது. வேண்டுமானால் இரவு ஹொட்டேல் அறையில் தங்கி விமான நிலையம் செல்ல முடியும், ஏற்கனவே புக் செய்த அறை தயாராக இருக்கின்றது” என்றான்அஜா.

யோசனையுடன் தலையசைத்தவன் திரும்பிப் பார்க்க அவன் பார்வையில் விழுந்தாள் கேட்வாசலில் வந்து நின்ற ஸ்ரீனிகா.

அவளைச் சினத்துடன் பார்த்தவன் வேகமாக நெருங்கிசென்றான். முட்டி வரை சென்ற வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லாமலிருக்க கேட்டை இறுக பிடித்து கொண்டுக் நின்றவளை நெருங்கி முறைத்தான் கௌதம். அவனை திருப்பி முறைத்தாள்அவள்.

"சொல் வழி கேட்பதில்லை" கணவன் மனைவி இருவரும் கோரஸாக கேட்டனர்.

"ஆள் இருக்கிற சைசில் வெள்ளத்தில் வந்து நிற்கிறா" வாய்க்குள் முணுமுணுத்தான்.

"நேற்று முழுக்க சொல்ல சொல்ல கேட்காமல் மழையில் நனைந்து ஜுரம் இப்ப எதுக்கு திரும்ப நனைந்தது போன ஜுரத்தை திரும்பி வாங்கவா?" வாய்க்குள் முனகினாள் அவள்.

இருவரையும் மாறிமாறி பார்த்த அஜா "நாளை எங்களுடன் அவர்களும் வருகின்றார்களா என்று பக்கத்து வீட்டில் கேட்டு வருகின்றேன்" என்று ஓடிவிட்டான்.

அவள் முறைத்து கொண்டு நின்றது அவனுக்கு தன் தங்கையின் நாலரை ஐந்து வயது மகள் நிலாவை போல் தோன்ற “ஏன் அதான் வைத்தியம் பார்க்க டக்டாரம்மா இருக்கிறீங்களே, பிறகு என்ன” அவளைச் சீண்டினான்.

“நான் டாக்டர் இல்ல சட்.... ஆர்ர்ஹ்ஹ்” சொல்லிக்

கொண்டிருந்தவள் திடீரென அந்தரத்தில் எழும்பக் கத்திவிட்டாள். பேசி கொண்டிருக்கும் போதே சட்டெனெ குனிந்து அவளை தூக்கியிருந்தான் கௌதம்.

“வேண்டாம் உடம்பு அலட்டினால் ஜுரம் திரும்ப வந்திரும்” கையை காலை ஆட்டி மறுத்தாள். ஒரு கணம் நின்றவன் "காலுக்கு கீழே வெள்ளம், என் கையிலிருந்து கதகளி ஆடினால் இருவரும் சேர்ந்தே விழ வேண்டி வரும் ஜாக்கிரதை" எச்சரித்தான்.

உதட்டைச் சுளித்தவள் அதன் பின் வீட்டினுள் இறக்கிவிடும் வரை அவன் கழுத்தை வளைத்து பிடிக்காமல் தன் மார்பின் முன் கோர்த்து அமைதியாய் இருந்தவள் அவளை கீழே இறக்கி விட்டு ரெயின் கோட் கழட்டியதும் டவல் கொண்டு வந்து கொடுத்து குடிக்க சுடுநீர் வைத்தாள்.

அவன் ஈர உடை மாற்றி வர மருந்துகளை எடுத்து வந்தவள் தெர்மாமீட்டர் வைத்து அவன் வெப்ப நிலையை சரி பார்த்தாள். நேற்று சிவப்பு நிறத்தில் காட்டியது இன்று மஞ்சள் நிறத்தில் அழுவது போன்ற படத்துடன் வெப்பத்தை காட்ட மெல்லிய காய்ச்சலே இருந்தது.

"நேற்று இருந்தத்திற்கு இன்று குறைந்துவிட்டது" தனக்குத்தானே சொன்னவள் அவன் வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் குளிரில் நடுங்குவது கண்டு காபி போட்டு எடுத்து வர உள்ளே சென்றாள் ஸ்ரீனிகா.

டீப்போவில் இருந்த வெப்பமானியை ஜென்ம விரோதி போல் முறைத்தவன் தூக்கி எறிய உள்ளே வந்த அஜா அதைப் பிடித்து கொண்டு ‘இந்த தெர்மோமீட்டர் என்ன பாவம் செய்தது’ விழித்தான் அதை பார்த்த கெளதம் "மறைத்துவை" சத்தமின்றி வாயசைத்தான். திரும்பி வந்த ஸ்ரீனிகாவைப் பார்த்து விட்டு சட்டென அதை ஜீன்ஸ் போக்கெட்டினுள் போட்டான் அஜா.

ஒரு கப் தேநீரை அஜாவிடம் கொடுக்க அவன் இல்லாத ஆளுடன் போன் பேசியவாறே வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான்.

கௌதமுக்கு மருந்தை கொடுத்து விட்டு மீதத்தை எடுத்துப் பத்திரப்படுத்தியவள் நிலத்திலும் சுற்றும் முற்றும் எதையோ தேடினாள். அவள் தேடுவதைப் பார்த்து வந்த சிரிப்பை உதட்டோரம் அடக்கியபடி எதுவும் தெரியாதது போல் கேட்டான் "என்ன தேடுகின்றாய்?"

"அதுவா அந்த தெர்மாமீட்டர் இங்கே தான் வைத்தேன்" தேடியபடி பதிலளித்தாள்.

"அது எதுக்கு இப்போ"

"ச்சு.. ஜுரம் எப்படிப் பார்ப்பது.."

"தொட்டுப் பார்" காபி கப்பை மேசையில் வைத்தவன் சாவதானமாக சொன்னான்.

"ஆஹ்" நிமிர்ந்து அவனை பார்த்தவளுக்கு காலையில் அவன் உதறிவிட்டதை அவள் மனதின் விருப்பமின்றி மூளை ஞாபகப்படுத்தியது. எதுவும் பேசாமல் மீண்டும் தேடி விட்டு "கிச்சினுள் வைத்து விட்டேன் போல" என்றவாறு போக திரும்பியவள் கையை பிடித்து இழுக்க மொத்தமாய் அவன் மேல் வந்து விழுந்தாள்.

கண் விரித்து பார்க்க ஒருகையை தலையின் கீழ் கொடுத்து மறுகையால் அவள் இடையை வளைத்தவன், நெஞ்சில் கையூன்றி எழும்ப முயன்றவளை அசையவிடாமல் பிடித்தவாறே அவள் கண்களை பார்த்து "சாரி..." என்றான். ஜுரத்துடனான அவன் உடல் வெப்பத்துடன் அவனின் மெல்லிய பாரத்தையும் மீண்டும் உணர்ந்தவள் "எஎ... என்ன எ... எதுக்கு" தடுமாறினாள்.

"காலையில் நான் வேறு யோசனையில் இருந்தேன். சாரி ஐ டிடின் மீன் இட்" மன்னிப்புக் கேட்டான்.

இவ்வளவு இலகுவாக மன்னிப்புக கேட்பான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. மெல்லிய அதிர்ச்சி ஆச்சரியம் ஆராய்ச்சி என அனைத்தும் கலந்து பார்த்திருந்தவள் அவனின் "ஸ்ரீனி...." தயங்கிய குரலில் இமை தட்டிவிழித்தாள்.

"ஓஹ்... அதுவா... பரவாயில்ல... நான் ஏதும் நினைக்கவில்லை" மெதுவே நெளிந்தவள் அவனிடமிருந்து விலக முயல, ஆழ்ந்து பார்த்து விட்டு மெதுவே அவளிடமிருந்து விலகினான். 'என்ன பார்வை இது எப்ப பார்த்தாலும் இப்படியே பார்க்கின்றான், விட்டால் பார்வையாலேயே தூளை போட்டுவிடுவான் போலிருக்கே’ மனம் யோசிக்க ‘பார்த்து பிடரியில் ஓட்டை விழுந்திரும்’ மூளை பரிகசித்தது. வேகமாக தள்ளி அமர்ந்தாள்.

அவளுடன் எழுந்து அமர்ந்து அவளருகே முகத்தை நீட்ட 'என்ன' என்பது போல் பார்த்தாள் ஸ்ரீனிகா. "அதான் மன்னிப்பு கேட்டுடன் இல்ல" என்றவனை 'அதுக்கு' என்பது போல் பார்த்தது வைக்க "ஜுரம் இருக்கா தொட்டுபார்" என்றான்.

அப்போதும் தயங்கி போய் பார்த்திருக்க அவன் கண்களில் சிறிதாய் ஒரு வலி. “அப்ப சாரி அக்செப்ட் பண்ணல இல்ல” அவன் குரல் ஏதோ போல் இருந்தது.

"இல்ல அப்படிலாம் இல்ல" வாய் சொன்னாலும் மூளையோ எதிராய் யோசித்துகொண்டிருந்தது 'ஏன் திடீரென்று வித்தியாசமாய் நடக்கின்றான்? வழமைக்கு விரோதமான எதுவும் சந்தேகத்துக்குரியது. மூளை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்த அடி வாங்கிய மனமோ மூளையை எதிர்த்து எதுவும் பேச முடியாது மௌனித்து நின்றது.

அவன் கண்களில் தென்பட்ட பிடிவாதத்தில் விடமாட்டான் என்பது புரிய, இழுபடவே மாட்டேன் என்ற உதட்டை வலிந்து இழுத்து புன்னகைத்தவள் பட்டும்படாமலும் தொட்டுப் பார்த்தாள்.

அவள் பயந்தவள் தான் ஆனலும் ரோஷக்காரி. அதோடு அவளின் மனம் கூறியது மீண்டும் மீண்டும் காயப்படாதே... இதற்கு மேல் தாங்கும் சக்தி என்னிடம் இல்லை.. மூளையிடமிருந்து எப்போதும் ஒரு எச்சரிக்கை உணர்வு அவனிடமிருந்து தள்ளி இரு என்று.

உதட்டை கடித்தவாறே எழுந்து சென்றவளை பார்த்திருந்தவனை கலைத்தது அவனது தொலைபேசியின் சத்தம். எடுத்து பேசியவன் "புரியுது இம்போர்டன்ட் தான் ஆனா மீட்டிங் அட்டென்ட் பண்ண முடியாது யாதவ். லப் எதுவும் இல்லை போன் மட்டும்தான்" நெற்றியை தேய்த்தான்.

அவன் தொலைபேசியில் பேசியதை கேட்டவள் மேலே ஏறி செல்ல, அவளையே இமைக்காது சில வினாடி பார்த்தவன் குனிந்து "எப்படியும் நாளை...." என்றவன் கண் முன் நீண்டது அந்த கருப்பு நிற மடிக்கணினி. நிமிர்ந்து பார்க்க ஸ்ரீனிகா தான்.

மறு பேச்சு ஏதுமின்றி "ஓகே யாதவ் வி கேன் காரியோன் தி மீட்டிங்" என்றான்.

அவன் மீட்டிங்கில் ஆழ்ந்து போக வாரந்தாவில் இருந்த சோபாவில் முழங்காலை கட்டிக் கொண்டு அமர்ந்து கம்பளியால் உடலை போர்த்திக் கொண்டு சிறிது நேரம் மழையையே பார்த்துக் கொண்டிருந்தாள். இங்கே அதிக காலம் இருக்க முடியாது என்பது புரிந்தது. ஆனால் அவளுக்கு இங்கிருந்து செல்லவே மனமில்லை. இது போல் அவனுடனான கணங்கள் அவளுக்கு பொக்கிஷம்....

மழையை பார்க்க பார்க்க மூளை ஏதோதோ ஞாபகங்களினை நினைவுபடுத்த, மனமோ அவன் நெஞ்சினில் தஞ்சம் கொள்ள ஏங்கியது. மருத்துவர் கூறியதை நினைவு கூர்ந்தவள் மனதை திசைதிருப்பும் பொருட்டு ஃபோனில் பைப் கேமை எடுத்து வைத்து விளையாடத் தொடங்கினாள்.

🎻🎻🎻🎻🎻

வானமே இரண்டாய் பிளந்தது போன்ற அந்த இடிச் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தான் கௌதம். மழை இன்னும் கொட்டிக் கொண்டிருந்தது. அவன் எப்போது உறங்கினான் என்று யோசிக்க அருகே சிறு மேஜையில் திறந்த படி இருந்த மடிக்கணினியை பார்க்க ஞாபகம் வந்தது. மீட்டிங் முடித்து ஸ்ரீனியையும் அழைத்துக் கொண்டு மேலே வந்தவன் அது சம்பந்தபட்ட பைல்ககளை சரி பார்த்தது கொண்டிருந்தவாறே மருந்தின் வேகத்தில் அப்படியே உறங்கிவிட்டிருந்தான். போனை எடுத்தது பார்க்க மணி ஒன்று என்றது.

ஏதோ வித்தியாசமாய் உணந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க கட்டில் சோபா இரண்டிலும் ஸ்ரீனிகா இல்லை.

வருவான்.....
 

Nandhaki

Moderator
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள
 

Nandhaki

Moderator

தீரா 🎻12

ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க கட்டில் சோபா இரண்டிலும் ஸ்ரீனிகா இல்லை.

தேடிப் பார்க்க அறையிலேயே இல்லை. எழும்பும் போது மேலே போர்த்தியிருந்த போர்வையை பார்த்தவனுக்கு அவளின் வேலை என்பது புரிந்தது. வெளியே கேட்ட இடி சத்தத்தில் வேகமாக எழுந்து வெளியே வந்தான்.

அவன் எதிர் பார்த்தது போலவே மாடிப் படியில் தன்னை குறுக்கி கொண்டு அமர்ந்திருந்தாள் ஸ்ரீனிகா. அவள் முதுகின் அசைவில் அழுகின்றாள் என்பது புரிய ஒரு கணம் நின்றவன் அப்போது வெளியே வந்த அஜாவிடம் "அஜா எனக்கு சுடுநீரில் நனைத்த டவலும் ஒரு கப் பாலும் சூடாக்கி கொண்டு வா" உத்தரவிட்டவன் வேகமாக தடதடவென படிகளில் இறங்கி அவளை அடைந்தான்.

அவளோ சுற்றம் மறந்து தன்னுள் ஒடுங்கியிருந்தாள். அருகே அமர்ந்தவன் அவளை மடியில் இழுத்து போட்டு முதுகு தலை என்று தடவி கொடுத்தவன் "ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ரீனி... ஸ்ரீனிம்மா.. பயப்பட கூடாது.... ஷ்ஷ்ஷ்.... நானிருக்கின்றேன் இல்லையா.... ஓகே" மென்மையாய் குனிந்து அவள் காதினுள் முணுமுணுக்க அவளோ அவனிடம் ஒன்றி கொண்டாள். அவள் கன்னம் பிடித்து முகத்தை உயர்த்தி பார்க்க கண்ணீர் வழிந்து வீங்கி போய் இருந்தது.

இன்னும் ஒரு படி கீழே இறங்கி அருகே அமர்ந்தவன் "ஏண்டி... ஏன் இப்படி தனியா வந்திருந்து..." ஆற்றாமையோடு கேட்டவன் நெஞ்சோடு அனைத்து கொண்டான்.

அஜா பால் டவல் இரண்டையும் கொண்டு வந்து வைக்க சுடுநீரில் நனைத்த டவலை எடுத்து முகத்தை அழுத்தி துடைத்தான். அவளோ மறுபடியும் அவன் மார்பில் புதைய "இந்த பாலை மட்டும் கொஞ்சமா குடிம்மா" கெஞ்சலாய் கேட்டான்.

அவளுக்கோ அவன் முடி நிறைந்த மார்பு கன்னத்தில் மூட்டிய குறுகுறுப்பு மனதிற்கு இதமாய் இருந்தது. தனக்கு இதமாய் இருந்த இடத்தை விட்டு வெளியே வர மனமின்றி சுணங்கிய மனதிற்கு உண்மை உறைக்க நிமிர்ந்து விலகி அமர்ந்தாள்.

“கொஞ்சமா குடி.... இல்லை நானே வேறு விதத்தில் குடிக்க வைப்பேன்” செல்லமாய் மிரட்டினான்.

“ல்ல ல்ல குடிக்கிறேன்” நல்ல பிள்ளையாய் வாங்கி குடித்தாள். அவள் தலையை வருடிவிட்டவன் "ஏண்டா?" மென்மையாய் கேட்டான்.

கையிலிருந்த டம்ளரை இரு கைகளுக்கு நடுவில் வைத்து உருட்டியவள் மெல்ல கூறினாள் "அம்மா.....". இதை எப்படி மறந்தேன் என்பது போல் உதட்டை கடித்தான் கெளதம். அருகே இருந்த சிறு காகித கப்பல்களை பார்த்தவனுக்கு இன்று காலை வசந்த் அனுப்பிய படம் நினைவுக்கு வந்தது.

அதில் அத்தையின் மடியில் அவள் குறுக்கே கவிழ்ந்து படுத்திருக்க மழையில் அமர்ந்து கப்பல் விட்டுக் கொண்டிருந்தனர். ஓவியம் போலிருந்த அந்த படத்திலிருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை அவனுக்கு. அந்த படத்தில் இருந்த ஸ்ரீனிகாவிற்கு இருபது வயது இருக்கும். இரு புறமும் புஷ் புஷ் என்று கன்னமும், கண்களில் மின்னிய மகிழ்ச்சியும், உதட்டில் ஒட்டி வைத்திருந்த புன்னகையும் முக்கியமாய் இப்போது காணாமலே போயிருந்த அவளின் கன்னகுழி... அந்த படத்தை பார்க்கும் போதுதான் அவனுக்கு இன்னும் தெளிவாக புரிந்தது அவனை திருமணம் செய்த பின் இப்படி ஒரு சந்தோசம் அவள் முகத்தில் வரவே இல்லை.

சிலவேளை அவளை அப்படி பார்த்திருந்தால் அன்றே அடையாளம் கண்டிருப்பனோ!

கீழே பார்க்க அடுத்த படிவரை வெள்ளம் நின்றது. கீழ் பகுதிக்கு செல்லும் மின்சாரம் அனைத்தையும் கவனமாக நிறுத்தியிருந்தான் அஜா. அதோடு அங்கங்கே சார்ஜ்ர் லைட்டையும் போட்டிருந்தான் அஜா.

வீட்டினுள் முழங்காலுக்கு சற்று மேல் வரை தண்ணீர் நிற்கும் போலிருந்தது. அதோடு அஜாவின் புண்ணியத்தில் வோல்டஜ் குறைத்தது அங்கங்கே வைக்கப்பட்டிருந்த சார்ஜ்ர் லைட்டின் வெளிச்சத்தில் ஏரியில் இரவில் ஏற்றி வைத்த மெழுகுதிரிகள் போல் இருந்தது. சில்லென்ற குளிருடன் வெளியே கேட்ட மழை சத்தம் மடியில் ஸ்ரீனிகா என்று கௌதமுக்கு அந்த இடமே மாய லோகம் போல் தோற்றமளித்தது.

காகித கப்பலை கையில் எடுத்து வைத்து சிறிது நேரம் பார்த்தவன் மடியில் சாய்ந்திருந்த அவளிடம் கொடுத்தான். அவள் என்னவென்று பார்க்க தண்ணீரை கண்களால் காட்டினான்.

இருவருமே சேர்ந்து கப்பல் விட தொடங்கினார்கள். ஒன்றின் பின் ஒன்றாக சென்ற கப்பலுக்கு கையால் தண்ணீரை அலைந்து அலையை உருவாக்க அது வேகமாக மிதந்து சென்றதை பார்த்து மென்மையாய் சிரித்தாள் ஸ்ரீனிகா. அவள் புன்னகையை சந்தோசத்துடன் ரசித்துப் பார்த்து கொண்டிருந்தான் கௌதம். ஒரு கப்பல் திறந்திருந்த வாசல் கதவை தாண்ட “ஐ” என்று இருந்த இடத்திலேயே துள்ளினாள். மறு கப்பல் கடந்து செல்ல முன் கௌதம் காகிதத்தை உருண்டையாக்கி அடிக்க முயல அது இன்னும் வேகமாக கடந்தது. கண்ணீருடன் குழந்தையாய் கைகொட்டி சிரித்தாள்.

"எனக்கு மழை பயம் என்றே அம்மா என்னுடன் இது போல் கப்பல் போகும் போது தடுத்து விளையாடுவார்கள், தெரியுமா.....?" என்றாள்

"ஹ்ம்ம்..." அவளாகவே ஒரு வழியாய் திறக்கின்றாள் சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தான்.

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள் "இன்னொரு கொஞ்ச நாள் இருந்திருக்கலாம் தானே, அவர்களை நான் இன்னும் நல்லா பார்த்திருப்பேன். என்னுடைய வாழ்கை செட்டில் என்றதும் போய்ட்டாங்க.... நான் உண்மையை அப்போதே சொல்லி இருந்தால் உயிரோட இருந்திருப்பா இல்லையா.... நான் ஒரு வருடம் கழித்து சொல்வோம் என்று......" அவள் தலையை வருடியவன் கை ஒரு கணம் அந்தரத்தில் நின்று பின் அசைந்தது.

கௌதமோ ஏன்... என்ன ஒரு வருடம்.... யோசித்து கொண்டிருந்தவனை மடியை நனைத்த கண்ணீர் நடப்புக்கு கொண்டு வர "ஸ்ரீனிஇ...." அழுத்தமாய் அழைத்தான்.

"ஹ்ம்ம்..."

“உன்...” உன் அம்மாவிற்கு என்று சொல்ல வந்து பின் "அத்தைக்கு உன்னை பிடிக்கும் தானே" என்றார் கேட்டான்.

"ஹ்ம்ம்.."

"நீ இப்படி தனியாக வந்திருந்து அழுதால் அவர்கள் ஆன்மா வருந்தாது..."

"........"

"மனதிற்கு ரொம்ப கஷ்டம் தான் இல்லை என்று சொல்ல மாட்டேன் ஆனா இப்படி அனா... யாரும் இல்லாதது போல் தனியாக வந்திருக்காதே சரியா?" அனாதை போல் என்று சொல்ல வந்து பாதியில் விழுங்கி கொண்டான்.

அவள் யோசனை கவனமெல்லாம் கணவன் பேச்சில் இல்லை. 'இப்போது அவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்குமா? நான் சொன்ன பொய்களும் புரிந்திருக்குமா? மன்னிச்சிருங்க அம்மா' மானசீகமாய் மன்னிப்பு கேட்டாள். ‘அவர்களுக்கு உன்னை தெரியும் இல்லையா அதனால் அவர்கள் புரிந்து கொள்வார்கள்’ தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டாள்.

கணங்கள் கனமாய் கடந்து செல்ல அமைதியை கீறியது அவன் குரல் "ஸ்ரீனி...." நிமிர்ந்து பார்த்த அழகில் அப்படியே அள்ளி கொள்ள உள்ளம் பரபரத்தது. அப்படியே குனிந்து அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான். திகைத்து போய் அண்ணாந்து பார்த்திருந்தவளை ஒரு புருவம் தூக்கி குறும்புடன் பார்த்தவன் அவள் இதழ்களை ஒரு விரலால் தட்டி கேட்டான் "இங்கும் வேண்டுமா?"

அவளையும் அறியாமல் ஆம் என்பது போல் தலையசைத்தாள். அவன் "ஹ்ம்ம்...." என்று சற்று குனிய வெட்கி அவன் மார்பில் முகம் புதைத்தாள். மெல்லிய சிரிப்புடன் அவள் பின் தலையை தாங்கி கண் மூடி உச்சியில் நாடி பதித்தான்.

சிறிது நேரத்தில் அவள் உடல் தளர்வது புரிய குனிந்து பார்க்க உறங்கி இருந்தாள்.

🎻🎻🎻🎻🎻

சாப்பாட்டு மேஜையில் அவள் லப்பை வைத்து வேலை செய்து கொண்டிருந்தவள் கண்கள் அடிக்கடி வாசலையே பார்த்து கொண்டிருந்தன. நேரம் நடுநிசி தாண்டியிருக்க இன்னும் வந்திருக்கவில்லை அவளது மணாளன். இன்றோடு கேரளாவில் இருந்து வந்து இரண்டு வாரமாகிவிட்டது. கடைசியாய் கிளம்பி வந்தது நினைவுக்கு வந்தது. கிட்டதட்ட அது கடத்தல்.

🎻🎻🎻🎻🎻

புரண்டு படுத்தவளுக்கு அமுங்கி கொடுத்த மெத்தை இதமாக இருக்கவே இன்னும் அதில் கன்னத்தை அழுத்தினாள். ஆனால் யாரோ அவள் அழகான உறக்கத்தை கெடுக்க கங்கணம் கட்டியது போல் அவள் கன்னத்தை வலிக்காமல் கிள்ளினார்.

"கொஞ்ச நேரம் ப்ளீஸ்..." சிணுங்கினாள்

"சாப்பிட்டு படுக்கலாம் மணி இரன்டு...."

வெடுக்கென எழுந்ததில் முன்னே இருந்தவன் நெற்றியில் நெற்றியோடு முட்டிக் கொண்டாள். ஆவென்று நெற்றி தடவி பார்த்தவளை தானும் தடவியவாறு பார்த்திருந்தான் கௌதம். சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு தங்கள் தங்கியிருந்த வீடு இதில்லை என புரிய குழப்பத்துடன் பார்த்தாள். "எங்கே இருக்கின்றோம்...?" அவனையே கேட்டாள். அவனோ "என்னாச்சு எதாவது கனவு கினவு கண்டாயா...?" அப்பாவியாய் விசாரித்தான்.பெட்டிலிருந்து இறங்கி அருகே இருந்த கதவை திறக்க அது பல்கனி. வெளியே சென்று பார்க்க கண் முன்னே விரிந்தது சென்னை வீட்டின் தோட்டம். மீண்டும் உள்ளே வந்தவள் தன் உடையை குனிந்து பார்த்தாள் நேற்று போட்ட அதே உடைதான். தலையை சொறிந்தவாறு கேட்டாள் " இங்கே எப்படி வந்தோம்?"

பொங்கி வந்த சிரிப்பை உதட்டுக்குள் ஓளித்தவன் "நாம் எங்கே போனோம்?" திருப்பி கேட்டான்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்த குழப்பத்தில் விழித்து கொண்டு நின்றவளை பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு "ஏதாவது கனவு கண்டாயா....?" அக்கறையுடன் கேட்டான். "வீட்டிற்குள் தண்ணி வந்ததே...?" என்றவள் எல்லாம் குழப்பமாக இருக்க முதலில் தண்ணியடித்து முகம் கழுவ நினைத்தவள் "மாற்றுடை எங்கே?" கேட்டாள்.

வாயை திறந்தால் சிரித்து விடுவோம் என்ற பயத்தில் கையால் சோபாவில் இருந்த பையை காட்டினான். அவனை பார்க்க ட்ராக் பண்ட் டீ ஷிர்ட்டுடன் நின்றான். அதில் இருந்து த்ரீ குவாட்டர் டவல் எடுத்தவள் வாஷ் ரூமை தேட அதற்கும் அவன் கையையே காட்டினான். அவள் உள்ளே செல்லும் வரை காத்திருந்தவன் போல் வாய் விட்டு சத்தமாக சிரித்தான்.

உள்ளே சென்று கண்ணாடி முன் நின்றவள் பிம்பத்தை பார்த்து கேட்டாள் "நிஜமாகவே கனவு தான் கண்டாயா?" பல் தீட்ட பிரஷை எடுத்தவள் ஏதோ தோன்ற சட்டென வலது புற தோளின் ஆடையை நீக்கி பார்த்தாள். அவன் கொடுத்த அடையாளம் சிரித்தது. பல்லை கடித்தவாறே "இவனை..." என்று கதவை திறக்க கேட்ட சிரிப்பு சத்தத்தில் மீண்டும் மூடி விட்டு அதிலேயே நெற்றியை முட்டி கொண்டு நின்றாள். வெளியே சிரிப்பு சத்தம் இன்னும் பலமாக கேட்டது.

குளித்து பிரஷ் ஆகி வந்தவள் கையை மார்புக்கு குறுக்கே கட்டியபடி தொப்பென்று சோபாவில் அமர அவனோ மீண்டும் சத்தமாகவே சிரிக்கத் தொடங்கினான். முகம் சிவக்க தலை குனிந்தாள். சிரித்தவாறே அவளருகே ஒரு காலை மடித்து அமர்ந்தவன் "ஸ்ரீனி... ஸ்ரீனி" என்று பெயரை இரண்டு தரம் சொல்லி தலையை ஆட்டிவிட்டான்.

"ஏன்...?" கேட்டாள்.

"அதுவா நீ குழம்பி நின்றது ரெம்ப கீயூட்ட இருந்திச்சு அதான்" ரசனையுடன் கூறினான்.

"எப்படி இங்கே வந்தேன்?" ஆர்வமாய் கேட்டாள்.

"அங்கே வீட்டிற்குள் வெள்ளம், நான் தோனியை வைத்து காலையில் வெளியே வருவோம் என்று தான் பார்த்தேன். ஆனால் அதற்குள் இங்கே அலுவலகத்தில் சின்ன தீ விபத்து வந்தே ஆக வேண்டிய கட்டாயம் அதான் கவர்மெண்ட் ஹெலியை வைச்சு பக்கத்தில் இருப்பவர்களை அனுப்பிவிட்டு பிரைவேட் ஹெலியை ஹையர் செய்தேன். வந்து உன்னை எழுப்பினால் என் கையையும் பிடித்து வைத்து உறங்கினாய். எழுப்ப மனமில்லை" என்று சொல்லி கொண்டிருக்க நாக்கை கடித்தாள் ஸ்ரீனிகா.

அவள் செயலில் புன்னகைத்தவன் "மொட்டை மாடியில் நின்ற ஹெலிக்கு உன்னை தூக்கிட்டு வந்தேன். அப்புறம் இங்கே மொட்டை மாடியில் இருக்கும் ஹெலி பாட்டில் இருந்து இந்த அறைக்கு தூக்கி வந்தேன். இது தான் நீ இங்கே வந்த கதை. ஆஹ் நாம் வந்த போது ரூம் கிளீன் பண்ணல அதால கெஸ்ட் ரூமில் படுக்க வைத்தேன் இனி போகலாம்" என்றான்.

எந்த காரணத்திற்காகவும் அவனில்லாமல் அவன் அறைக்குள் யாரும் நுழைய கூடாது என்பது உத்தரவு. அவனில்லாமல் அவள் மட்டும் இருக்கும் நாட்களில் அவள் இருக்கும் போது வந்து செய்து போவார்கள். மணமாகி வந்ததில் இருந்து இருவரும் இல்லாமல் போன நாள் இந்த சில நாட்கள் தான்.

"அப்ப அது கனவில்லையா...?" என்றவள் "எத்தனை மணிக்கு வந்தோம்" என்றார் கேட்டாள்.

"விடிய எட்டு மணி இருக்கும். என்ன கனவு?" என்றவனிடம் "அதுவா... ஹெலியில் பறந்தது போல்.... ஹிஹிஹி" அசடு வழிய சிரித்தாள். இப்படியா தூங்கி வழிவாய் மனம் காறி துப்பியது.

"சரி சாப்பிடு.." என்று கூறவும் போன் அடிக்கவும் சரியாய் இருக்க எடுத்து பேசினான் "சரி வருகின்றேன்" என்றவன் ஸ்ரீனிகாவிடம் திரும்ப "இது இருவருக்கும் தாராளாமாய் போதும் சாப்பிட்டு விட்டு போங்கள்" என்றாள்.

அவனுக்கு எடுத்து வைத்தவள் கேட்டாள் "விபத்தினால் சேதம் அதிகமா....?"

"இல்லை அனைத்தும் இன்சூரன்ஸ் செய்தது அதனால் இழப்பு என்று அதிகமாக எதுவும் இல்லை அப்படியே விட்டால் சில ஏற்றுமதிக்கான நேரம் பிந்திவிடும் அதனால் நஷ்டமாக கூடும். இரு வாரம் மேலதிக நேர வேலை பார்க்க வேண்டி வரும்" என்றவாறு வேகமாக சாப்பிட்டுவிட்டு சென்றுவிட்டான்.

🎻🎻🎻🎻🎻

‘அவசரப்படாதே’ என்று எச்சரித்த மூளையை அலட்சியம் செய்து ‘மாறிவிட்டான் இல்லையா?’ மனம் கூறியது. ‘மீட்டிங் அனைத்தும் விட்டுவிட்டு என்னுடன் கேராள வந்தான். நேற்று இரவு கூட என்னைத் தேடி வந்து...’ சப்பைக் கட்டுகட்டிய மனதிற்கு நினவுபடுத்தியது மூளை அதற்கு முதல் நாள்தான் உன்னை உதறித் தள்ளிவிட்டான்’.

‘அதற்குதான் மன்னிப்புக் கேட்டுவிட்டனே’.

‘இத்தனை பட்டும் திருந்துதா பார், இன்னொரு தரம் வலிக்குது என்று வா அப்போது தெரியும். ஏதாவது காரணம் இருக்கும். முட்டாள்தனமாய் முடிவேடுக்கதே’ மூளை எச்சரித்தது. அப்படியெல்லாம் இல்லை மூளையின் எச்சரிக்கையை தூக்கி மூலையில் போட்டவள் மனம் அன்று முழுவதும் லேசாய் இருந்தது. தோட்டத்தில் துள்ளலுடன் நடை பழகியவளை, வள்ளியும் வேலனும் சந்தோசமாய் பார்த்தனர்.

கௌதமின் கார் வழுக்கிக் கொண்டு வந்து நிற்க அதிலிருந்து இறங்கியவன் முகம் களைத்து சோர்ந்திருந்தது. காலையில் சாப்பிட்டுப் போனவன் தான் திரும்பி வரும்வரை ஒரு இடத்தில் அமரவில்லை. இப்போது கூட அவன் சோர்ந்த முகத்தையும் உடலில் இருந்து வந்த வெப்பத்தையும் பார்த்து விட்டு ஜிஎம் தான் மீதியை தான் பார்த்துக் கொள்வதாக கூறி அனுப்பி வைத்தார்.

வீடு வந்தவன் காதில் அமுத கீதமாய் ஒலித்தது அவள் கானம்.

நேரம் நடுநிசியை நெருங்கும் போலிருக்க பாலாய் பொழிந்த முழுநிலவு, நாசியை நெருடும் அப்போதுதான் மலர்ந்த மல்லிகையின் மனம், தேவ கீதமாய் அவள் குரல் என அந்த இடமே தேவலோகமாய் இருந்தது. செயற்கை நீருற்றின் அருகே முகம் கொள்ளாத புன்னகையுடன் அமர்ந்திருந்த ஸ்ரீனிகா தண்ணீரைத் தெளித்து விளையாடியவாறே பாட அவள் குரல் அந்தத் தோட்டத்தை நிறைத்தது.

ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன

ஜீவன் உன்னோடு தான்

தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட

தேவன் என்னோடு.....தான்சிட்அவுட்டில் இருந்த சோபா போன்ற ஊஞ்சலில் அமர்ந்தவன் கைகள் இரண்டையும் விரித்து தலையைப் பின்னே சாய்த்து, கண்மூடி அவள் குரலில் கரைந்தான்.நீல வான் கூட நிறம் மாறிப் போகும்

நேசம் நிறம் மாறு.....மா

கால காலங்கள் போனாலும் என்ன

காதல் தடம் மா...றுமா

ஓயாமல் உன்னைக் கொஞ்.....சும்

ஊதாப்......பூ வண்ணம்பாடியவாறே திரும்ப கண்களில்பட்டான் மணவாளன். நிலவெளியில் களைத்து சோர்ந்திருந்த முகத்தைப் பார்த்தவள் அருகே வந்து நெற்றியை தொட்டுப் பார்க்க லேசாய் வெப்பமாய் இன்னும் காய்ச்சல் இருந்தது. போவதற்கு முன் பின்னாலிருந்து அஜா சைகை காட்டினான் ‘இன்னும் சாப்பிடவில்லை’. தலையாட்டிவிட்டு உள்ளே போகத் திரும்பியவளிடம் அசைவை உணர்ந்து சட்டென இழுத்து அருகே இருத்தி ஒரு கையால் தோளோடு அணைத்தவன் கண்ணைத் திறக்காமலே “இப்படியே இரு அது போதும்” என்றான்.

“ஏட்டா”அவளோ நெளிந்தாள்.

“ஏட்டா இல்ல சேட்டா” திருத்தினான்.

“ச்சு...” அவன் கையில் லேசாய் அடித்தவள் “அதில்ல.. பின்னால் அஜா ஏட்டா, இருவரும் இருங்கள் குடிக்க ஏதாவது கொண்டு வருகின்றேன்” என்று எழுந்து உள்ளே சென்றாள்.

🎻🎻🎻🎻🎻

பிரெஷ் ஆகி வந்தவனுக்கு உணவை எடுத்து வைத்து அவனுக்கு பரிமாறி உண்பதை பார்த்து விட்டு மேலே வந்தவள் உள்ளம் துள்ளியது. மகிழ்ச்சியில் உறக்கம் வர மாட்டேன் என்று தள்ளி நின்றுவிட்டது.

“உறங்கவில்லை” அவன் கேட்க “மதியம் நன்றாக உறங்கிவிட்டேன். நீங்கள் படுங்கள் சில கேஸ் வேலைகள் இருக்கு” என்றாள் துள்ளலுடன். உறக்கம் தான் வரவில்லை சிறு வேலையாவது செய்வோம் லப்பையும் எடுத்து கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.

அவள் துள்ளல் குரலில் புன்னகைத்தவன் “சீக்கிரம் படு” என்றதோடு களைப்பிலும் அசதியிலும் உடனேயே கண்ணயர்ந்துவிட்டான்.

லப்பைத் திறக்க அதில் கௌதமின் மெயிலும் வாட்ஸ் ஆப்பும் திறந்தேயிருந்தது. ‘இது அவனது மெயில், அவன் அனுமதியின்றி பார்ப்பது இங்கிதமில்லை’ மூளை எச்சரிக்க ஒரு கணம் கண் மூடி யோசித்தவள் ‘அஹ், புருஷன் பொண்டட்டிக்குள்ள என்ன இங்கிதம் வேண்டி கிடக்கு’ என்ற ஒரு அலட்சியப் பாவனையுடன் தலையை வெட்டியவாறே பார்த்தவள் கண்களில் நீர் நிரம்பியது. வாய் "அனைத்திற்கும் இது தான் காரணமா....?" என்று கேட்டது.

‘இன்னும் எத்தனை தரம் தான் அவனை நம்புவாய்? ஆனால் உன்னைப் போல் முட்டாளை எத்தனை தரம் வேண்டுமானாலும் ஏமாற்றலாம்’ இரக்கமே இன்றி மனதை கேலி செய்தது மூளை.

ஏமாற்றம் கூரிய முனையால் இதயத்தை குத்தி கிழித்தது.


 

Nandhaki

Moderator

தீரா 🎻 13

வெளியே விசில் சத்தம் கேட்க கிச்சின் அருகே இருந்த சிசிடிவி டிஸ்பிலேயை திரும்பி பார்த்தாள் ஸ்ரீனிகா. கௌதம்தான் காரிலிருந்து இறங்கி கொண்டிருந்தான்.

உள்ளே வரும் போதே வாசம் அவனை ஈர்க்க பார்த்தால் டைனிங் டேபிள் மீது ஆவி பறக்க சாப்பாடு தயாராக இருந்தது. விபத்தினால் ஏற்பட்ட வேலைகளுடன் ஏற்றுமதி செய்ய வேண்டிய மேலதிக ஷிபிட் வேலையும் நடக்கவே அதை பார்ப்பது என்று அங்கும் இங்கும் பறக்கவே அவனுக்கு நேரம் சரியாக இருக்க இந்த இரு வாரமும் இரவில் டைனிங் டேபிள் மீது இருக்கும் உணவு தான் அவனுக்கு எனர்ஜி கொடுத்த கொண்டிருந்தது.

சுற்றி பார்த்தான், கிச்சினுள்ளும் எட்டி பார்த்தான். ஒருவரையும் காணவில்லை. ஸ்ரீனியா தனக்குள் யோசித்தவன் கை கடிகாரத்தை கழட்டியவாறே வேகமாக மாடியேறி அவள் அறையை தள்ளி பார்த்தான் இன்றும் பூட்டியிருந்தது.

மெல்ல சினமேற வாஷ்ரூம் போய் பிரஷ் ஆகி வந்தான். வேலன் போன் செய்து கூறிவிட்டான் இன்று சின்னம்மா சாப்பிடவே இல்லை என்று. இப்போதெல்லாம் வேலன் தான் ஸ்பை. ஸ்ரீனிகா வீட்டில் செய்வது அனைத்தையும் கூறிவிடுவான். கடந்த இரு வாரமாக நான்கு மணி நேரம் உறங்குவதற்காக மட்டுமே வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தான். கேரளாவில் இருந்து வந்ததில் இருந்து நின்று பேசக்கூட நேரமின்றி ஓடி கொண்டிருக்க இவளின் கண்ணாமூச்சி அவனை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அம்மாவும் அப்பாவும் அவர்கள் இன்னொரு நிறுவனமான கார்மெண்ர்ஸ் சார்பில் பாரிஸ் போயிருந்தார்கள். அண்ணா ராகவனும் அண்ணி சீதாவும் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் ஆட்டோ மொபைல் நிறுவனத்திற்கு இயந்திரங்கள் கொள்வனவு செய்ய ஜெர்மனிக்கு சென்றிருந்தார்கள். தங்கை நதியா அமெரிக்காவில் இருக்கும் கணவன் சுரேஷின் அப்பாவுக்கு ஒரு அறுவை சிகிச்சை என்று நிலாகுட்டி என்று அழைக்கும் மகள் அனுஷாவை இங்கேயே விட்டு சென்றுவிட்டாள்.

இப்போது வீட்டில் இருப்பது நிலாக்குட்டியும் அண்ணாவின் மகன் அனுதீப்பும் அவளும் மட்டுமே. அவர்கள் அறை 'ட' வடிவில் அமைந்திருந்தது. அவனது தனியறைக்கு அருகே சிறு தோட்டம் போல் அமைத்து மேலே கண்ணாடி கூரை போட்டு ஊஞ்சலும் போடப்பட்டிருக்க அதன் மீதி ட வடிவில் வளைந்து இரு அறைகளுக்கும் பல்கனியாக அமைந்திருந்தது. தோட்டம் அமைத்த வேலை அனைத்தும் ஸ்ரீனிகாவின் வேலை தான். பிரென்ச் விண்டோ வழியாக உள்ளே சென்று பார்த்தான். உள்ளே யாருமில்லை உள்ளிருந்து கதவின் கொண்டியை திறந்தவன் தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

எங்கே போயிருப்பாள் யோசனையுடன் காரிடரில் நடக்க குழந்தைகள் இருவரினதும் அறையிலிருந்து சத்தம் வந்தது. உள்ளே செல்ல "த்தை பாப்பா யானா தொத்திச்சு...." அழுதவாறே ஸ்ரீனிகாவின் மேல் தவளை போல் அப்பியிருந்தாள் நிலா.

"என் தங்க கட்டி பாப்பாவா யானா தொத்திச்சா? நாம யானையை அடிச்சுறலாம் ஹ்ம்" தோளில் போட்டு தட்டி கொடுத்தாள். "பாப்பாக்கு பசிக்குதா..... பூஸ்ட் குடிப்போமா?" இரவு சாப்பிடவில்லை பசியில் படுத்ததே கனவும் உறக்கமின்மையும் புரிந்தே கேட்டாள்.

கதவை திறந்து உள்ளே வந்தவன் மருமகளை பார்த்ததும் புன்னகைத்தான். ஸ்ரீனிகாவின் பின்னாலிருந்து நிலாவின் பின்னந்தலையை வருடியவாறு கேட்டான் "நிலப்பொண்ணு ஏன் அழுறாங்க... மாமாட்ட வாரீங்களா?"

"ஹ்ம் வேனாம் த்தை ஸ்ரீம்மா வ்வ்னும்..." என்றவாறு ஸ்ரீனிகா கழுத்தை கட்டி கொண்டாள். கௌதமனுக்கு ஆச்சரியமாய் இருந்தது நிலா தானா இது. இவர்கள் குரலில் அனுதீப்பும் விழித்து "சித்தப்பா... என்று வந்த அவன் இடையை கட்டிக் கொண்டான் "இப்பெல்லாம் என்னோட வெள்ளைடவே வர்றதில்ல.... க்ராண்ட்மா நீங்க வெள்ளத்தில் சிக்கினதாக சொன்னார்கள் யூ ஓகே" பெரிய மனிதனாய் விசாரித்தான். அவன் சித்தப்பாவின் வாரிசு குணத்திலும் சரி உருவத்திலும் சரி.

"ஹ்ம் அங்கேயே இருந்திருந்தா உன் சித்தி என்னை இன்னும் நல்ல கவனிச்சிருப்பா, நமக்கு எங்கே அதுக்கு எல்லாம் கொடுப்பினை" அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் போலியாய் பெருமூச்சு விட்டு அலுத்து கொண்டான். திரும்பி களைத்துச் சோர்ந்திருந்த அவன் முகம் பார்த்தவளுக்கு நொடியில் புரிந்தது அவன் இன்னும் சாப்பிடவில்லை.

"தீப் இன்னும் சித்தப்பா சாப்பிடவில்லை நான் சொன்னேன் இல்லையா இந்த வாரம் முழுவதும் வேலை அதிகம் என்று. இப்ப என்ன சாப்பிடும் போது பேசினால் போச்சு அழைத்து போவோம் சரியா" அவள் கேட்க சமர்த்தாய் தலையாட்டினான் தீப் என்று அழைக்கப்படும் அனுதீப். கௌதமுக்கோ சிறு சிறு விடயத்திற்கும் பிடிவாதம் பிடிக்கும் தீப்பும் நிலாவுமா இது என்றிருந்தது.

"நிலா பாப்பா சாப்பிடாமல் படுத்தா இல்லையா அதான் யாணை வந்திச்சு இனி சமத்தா சாப்பிடுவீங்க தானே" செல்லம் கொஞ்சினாலும் குரலில் மெல்லிய கண்டிப்பு கலந்தே இருந்தது.

நிலவை டைனிங் டேபிளில் இருத்தி விட்டு பூஸ்ட் கரைக்க உள்ளே செல்ல இருக்கையிலிருந்து வழுக்கி கொண்டு கீழே இறங்கி ஸ்ரீனிகா பின்னால் சென்றாள் நிலா. நிலாவை பார்த்து சிரித்தவன் "நாமும் போவோமா?" தீப்பிடம் கேட்க "போவோம்" என்று தலையை உருட்டினான் தீப்.

ஸ்ரீனிகாவின் த்ரீ குவாட்டரின் முனையை பிடித்து கொண்டிருந்த நிலாவையும் தூக்கி கொண்டு கிச்சின் இருந்த மேடை மீது ஏறி அமர்ந்தவன் ஒரு கையால் தீப்பை தூக்கி மேடையில் இருத்த அவன் சித்தப்பாவின் கையை தொட்டு பார்த்தான். உடனே கையை மடித்து தசையை முறுக்கி காட்டினான் கௌதம். அதை தொட்டு பார்த்து விட்டு தானும் அது போல் செய்து காட்ட இவர்களின் விளையாட்டை கண்டும் காணாமலும் பார்த்து கொண்டே தன் வேலையை செய்தாள் ஸ்ரீனிகா.

அவன் மடியில் அமர்ந்து நெஞ்சில் சாய்ந்திருந்த நிலா அவள் அத்தையை வம்புக்கிழுத்தாள். "த்தை ..த்தை" மூவரையும் பார்த்தவள் சிரித்தவாறே "வாறன் இப்ப விளையாட்டு" செல்லமாய் மிரட்டினாள். கௌதம் நெஞ்சில் சாய்ந்திருந்த நிலா தன் சிறு கைகளை நீட்டி அழைத்தாள் "த்தை வா..." அருகே செல்ல கழுத்தை சுற்றி கைகளை போட்டு அழுத்தமாய் கன்னத்தில் முத்தமிட்டாள்.

உடனே அருகே இருந்த தீப் "ஸ்ரீம்மா நானும்.." என்று அவனும் முத்தமிட சிறு முறுவலுடன் பார்த்திருந்த கௌதம் "அப்ப நானும்" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அப்பாவி போல் இறங்கி டைனிங் டேபிளை நோக்கி நடந்தான். கன்னத்தை பிடித்தபடி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க இரண்டு வாண்டுகளும் வாயை பொத்தி கொண்டு சிரித்தார்கள்.

தீப்புக்கு கையில் கொடுத்து விட்டு டைனிங் டேபிளில் அருகே நின்றாவாறே நிலாவுக்கு பூஸ்ட்டை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து கொண்டிருந்தவளை கையை கட்டி கொண்டு அமர்ந்து பார்த்திருந்தான் கௌதம்.

"சாப்பிடல...." அவனையும் மேசையில் இருந்த உணவையும் பார்த்தவள் "உங்களுக்கு பிடிக்கலையா...? வேறு ஏதாவது நான்.... செய்.... தர....?” பாதியில் விழுங்கி “வள்ளியை வர சொல்லவா?" தயக்கத்துடன் தான் கேட்டாள். திரும்பவும் எதையாவது போட்டு உடைப்பானோ!

அவளின் தயக்கத்தையே யோசனையுடன் பார்த்தவன் "பசிக்குது நல்லா பசிக்குது சாப்பாடும் பிரச்சனை இல்லை"

"பின்னே..." மலையாள வாடையுடன் கேள்வியாய் நோக்கினாள்.

"நீ சாப்பிட்டியா..." கேட்டவனுக்கு "ஓ... சாப்பிட்டேனே இதோ இந்த டேபிளில் இருந்து தான்" கூசாமல் புளுகினாள். சினமேற தலையாட்டியவன் எழுந்து சிசிடிவி டிஸ்பிலே அருகே சென்றான். அதை விரல்களால் தொட்டு இயக்கியவாறே கேட்டான் "எத்தனை மணிக்கு..."

"ஹான்..."

"எத்தனை மணிக்கு சாப்பிட்டாய் என்று கேட்டேன்" சிசிடிவியில் செக் செய்ய கேட்கின்றான் என்பது புரிய சட்டென எழுந்து நின்றாள். அவள் சாப்பிட்டால் தானே நேரத்தை சொல்ல முடியும். விழித்து கொண்டு நின்றவள் மனம் கவுண்டர் கொடுத்தது ‘எதை எதை சிசிடிவியில் செக் செய்வது என்று விவஸ்தை இல்லை’

சிசிடிவியில் அவன் உள்ளே வரும் நேரம் அவசரமாக டைனிங் டேபிளில் இருந்து எழுந்து சென்ற காட்சி படமாக ஓடிக் கொண்டிருந்தது. அதை பார்க்கும் அவனை பார்த்தவாறே கையை பிசைந்து கொண்டு நின்றவளை நோக்கி மீண்டும் கேட்டான் "என்ன நேரம்..."

"நேரமெல்லாம் பார்த்தா சாப்பிடுவார்கள்..." சமாளிக்க ஏதோ சொன்னாள்.

ஒரு கணம் ஆழ்ந்து நோக்கியவன் "சரி ஈவினிங் பைவ்ல இருந்து பார்ப்போம்..." என்றவனை பார்த்து விழித்தாள் ஸ்ரீனிகா. அவன் நாற்காலியை திருப்பி போட்டு அமர அருகே சென்று இரு கையையும் சேர்த்து பிசைந்தவாறே இழுத்தாள் "அது வந்து....."

"நானும் நீயும் வந்து ரெம்ப நேரம் விஷயத்தை சொல்" என்றான்.

"நான் சாப்பிடல..." சிறு குரலில் கூறினாள். நெற்றியில் சிறிதாய் வியர்வை முத்துகள்.

"தெரியும்" என்றவனை அதிர்ச்சியுடன் நோக்க எழுந்து "வா வந்து சாப்பிடு" சாவதானமாக அழைத்தான். "நான் அப்புறம் சாப்பிடுறேன். இப்ப நீங்க சாப்பிடுங்க" என்றவளை "இப்பவே மணி ஒன்று பிறகு என்றால் எப்ப" என்றவாறு நெற்றி சுருக்கி பார்த்தான். எதற்கோ பயந்து தயங்குவது போல் தோன்ற அவனுக்கு அது ஞாபகம் வந்தது.

🎻🎻🎻🎻🎻

கல்யாணமான சில நாட்கள் கழித்து அது நடந்தது. அதி காலையிலேயே எழுந்து சமைத்து வைத்து அவனுடன் சேர்ந்து உணவுண்ணும் ஆர்வத்தில் டைனிங் டேபிளில் அவனருகே அமர டேபிளில் இருந்த அத்தனை கண்ணாடி பொருட்களும் அவள் செய்த உணவுடன் சேர்ந்து தரையில் விழுந்து சிதறியது. சினந்து நின்றவன் மீதியாய் இருந்த கண்ணாடி ஜக்கையும் தரையில் ஓங்கி அடித்தான்.

"ஏமாத்தி கல்யாணம் செய்தவளுக்கு எல்லாம் என் அருகே இருந்து சாப்பிடும் அருகதை இல்லை. இன்னொரு தரம் உன்னை டைனிங் டேபிளில் பார்த்தேன்...." ருத்தரானாய் சிவந்த கண்களுடன் நின்றவனை பார்க்க அதிரிலின் சுரப்பி அவள் கட்டளையின்றி சுரந்து வேலையை காட்ட நடுக்கத்துடன் நின்றவள் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

அப்போதும் மனம் கவுண்டர் கொடுத்தது 'இவனுக்கெல்லாம் யாரும்மா கௌதம் என்று பெயர் வைத்தது பேசாம ருத்ரன் என்று வைச்சிருக்கலாம், கோபகுலனயாக' அவன் கோபத்தையும் ரசித்தாள்.

🎻🎻🎻🎻🎻

"கீ...." என்று கத்தியவாறே ஓடிய நிலாவின் சத்தம் இருவரையும் நிகழ் காலத்திற்கு இழுத்து வர பூஸ்ட்டை எடுத்துக் கொண்டு அவள் பின்னே ஓடினாள் "சாப்பிடுங்கள் வருகின்றேன்" என்ற வார்தையோடு.

அவனுக்கு அவ்வளவு நேரமிருந்த பசி பறந்துவிட்டிருந்தது. கலங்கி சிவந்த கண்களுடன் திரும்பி பார்க்க ஹாலில் நிலாவை பிடித்து வைத்து பூஸ்ட் கொடுக்க தீப் அவளது தோளில் சாய்ந்து நின்றிருந்தான். குடித்ததும் தீப்பை வர சொல்லியவாறே நிலாவை தூக்கி சென்றாள். தீப் சோபாவிலேயே படுக்க அவனை தூக்கி கொண்டு பின்னே சென்றான் கௌதம்.

இருவரையும் படுக்க வைக்க நிலா அவள் அருகே படுத்த மாமன் நெஞ்சில் ஏறி படுத்தாள். அவனோ தலைக்கு கீழ் கை கொடுத்து விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்தான் உண்ணவில்லை என்பது புரிய இதயத்தில் ஏதோ செய்தது. பசியோடு தான் வந்தான் இப்போது வெறும் வயிற்றோடு படுத்ததை பார்க்க ஸ்ரீனிகாவிற்கு மனம் பொறுக்கவில்லை.

கீழே சென்று இருவருக்கும் உணவும் பாலும் எடுத்தது வர அவள் மூளை அவளை திட்டி தீர்த்தது. 'உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடி அவன் பட்டினி கிடந்த என்ன இல்லாட்டி உனக்கென்ன இப்ப என்ன ஹேர்க்கு போற' என்று காய்ந்த மூளைக்கு மனம் காரமாக திருப்பி கொடுத்தது 'உன் யோசனைப்படி தான் இங்கிருந்து போகப் போறோம். அதுவரை என்னை டிஸ்டர்ப் பண்ணாத உனக்கு காதல் என்றால் என்னவென்று எப்போதுமே புரியாது.... இங்கிருந்து போகும் முடிவில் எந்த மாற்றமும் வராது பிறகு என்ன'

'யாரு நீ இதை ஒரு நூறு தரம் சொல்லியிருப்பியா?' ஏளனம் செய்தது மூளை. இரண்டு தட்டுகளில் சாப்பாடும் பாலும் எடுத்து வந்தவள் கட்டிலருகே வந்து நின்று மெதுவாய் கேட்டாள் "சாப்பிட்டு படுங்கள். காலையில் இருந்து வேலை.... களைத்திருப்பீர்கள்"

கண் விழியை மட்டும் திருப்பி அவனை பார்த்தான். இரு கையிலும் தட்டுடன் நின்றவளை மறுக்க மனமின்றி குனிந்து மார்பில் படுத்திருந்த நிலாவின் உச்சியில் முத்தமிட்டவன் "மாமா மில்க் குடிச்சிட்டு வாரேன்" என்று எழுந்து வந்தான்.

பால் கிளாசை எடுத்து தன் அருகே வைத்தவள் "சாப்பிட்டால் தான் பால்" என்றாள். அவளுடன் சண்டை போடும் மனநிலையிலும் இல்லை உண்ணும் மனநிலையிலும் இல்லை. இடியப்பமும் தேங்காய் பாலும் கறியும் இருந்தது. இரவு நேரம் பாரமில்லாத உணவாக இருக்கவே ஐந்து என்று ஆரம்பித்தவனுக்கு பசி புரிய இருப்பதில் நிறுத்தினான். கீழே சென்று கைகழுவி வந்தவன் சிறிது நேரம் பல்கனியில் நின்று வானத்தைப் பார்த்து கொண்டிருந்தான்.

திரும்பி வந்த ஸ்ரீனிகா இரண்டு வண்டுகளும் உறங்குவதற்கு பதிலாக தலைமுடியை இழுத்து விளையாடி கொண்டிருப்பதை பார்த்தது நெற்றியில் தட்டிக் கொண்டாள். நடுவில் படுத்து இருவரையும் பிரித்து தன் மேல் போட்டு கொண்டு அவர்களுக்காக தான் வழமையாக பாடும் தாலாட்டை பாட தொடங்கினாள்.

சோஜா சந்த ராஜா சோஜா

ஜல் ஸப்னோமே ஜல்

நீந் கி பரியான் பேகென்கி ஆயீ பைரோன் மைன் பயல்|

துஜுக்கோ ஆபநே நரம் பரோன் பர் லேக்கர் ஜயங்கி

சோனே காய்க் தேஸ் ஹை ஜிஸ்கி சாய் கரயேகிவெளியே நின்றவனுக்கு மெல்லிய சத்தத்தில் அவள் கீதம் கேட்க அவன் ஆழ்மனம் அன்று நடந்த நிகழ்வுகளை மீட்டெடுக்க முயன்றது. ஏதேதோ கற்பனைகள் கண்முன் தோன்றி மறைய வியர்த்து விறுவிறுத்து போனான். குறு வியர்வை படிந்த நெற்றியுடன் சேர்த்து முகத்தையும் அழுத்தி துடைத்து நிதானத்துக்கு வரவும் அவளின் தாலாட்டு முடியவும் சரியாக இருந்தது.உள்ளே வந்தவன் கட்டிலருகே நின்று உறங்கும் அவளையே நெடுநேரம் பார்த்திருந்தான்.
 

Nandhaki

Moderator

தீரா🎻14

அடுத்த நாள் அதிகாலையே சமயலறையில் அவசர அவசரமாக சமையலை செய்து கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா. நேற்று அவன் போய்விட்டதாக நினைத்து குழந்தைகளுடன் படுத்தால் இன்றைய பொழுது விடிந்தது அவன் கைகளில்.

எழுந்ததும் விழுந்தடித்துக் கொண்டு கீழே வந்துவிட்டாள். வாண்டுகள் இருவருக்கும் அவளது புட்டும் பயறும் செய்து வெல்லம் சேர்த்து கொடுத்தால் காலை உணவு சத்தாகவும் பிரச்சனை இன்றியும் போய் விடும். அதோடு நேற்றே இருவரும் உத்தரவு போட்டுவிட்டார்கள் புட்டும் பயறும் தான் வேண்டும் என்று.

சமையலை முடித்தவள் இருவருக்கும் பாலில் பூஸ்ட் கலந்து ஆத்தியவாறே “எங்கே இன்னும் காணோம்” வாசலை எட்டி பார்த்தாள், வள்ளி வருகின்றாரா என்று.

பின்னால் ஏதோ சத்தம் கேட்க "வள்ளி சாருக்கு இந்த காபி..... என்றவாறு திரும்பிய ஸ்ரீனிகா கிச்சன் சுவரில் சாய்ந்து கையை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு நின்ற கௌதமை கண்டு விழித்தாள்.

அப்போது தான் உறக்கத்திலிருந்து எழும்பியிருக்க கலைந்த தலையும் தூக்கம் வழிந்த கண்களுமாய் நின்றான். “வள்ளி இன்று லேட்டாய் பத்து மணிக்கு பிறகு தான் வருவாள்” என்றான் கள்வன். அவன் தானே இப்போது வந்த வள்ளியை திருப்பி அனுப்பியது.

"என்னிடம் எதுவும் சொல்லவில்லையே" வாய்க்குள் முனங்கினாள் ஸ்ரீனிகா. காபி போடுவதற்கு தேவையான பாத்திரங்களையும் பாலையும் அவன் புறம் நகர்த்தினாள்.

அவளையும் பாத்திரத்தையும் ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன் "நீ போட்டு தர மாட்டாயா?" கேட்டான். அவள் காபியை குடித்தே மாதக் கணக்கு ஆகிவிட்டது. இன்னும் சரியாக சொல்வதானால் காபி குடித்தே மாதக் கணக்கு. குடித்தால் அவள் போடும் காபி, இல்லையா காபியே வேண்டாம் என்ற முடிவில் இருந்தான்.

சுட்டு விரலால் தன்னைத் தானே சுட்டிக்காட்டி "நான்" என்று உறுதிப்படுத்திக் கொண்டாள்.

அவள் பாவனையில் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு ஆமோதிப்பாய் தலையாட்டினான் கௌதம்.

"அழகான கப் இதையும் உடைக்க வேண்டுமா?" வாய்க்குள் முணுமுணுத்தாள்.

கௌதம் ஏதோ சொல்ல வாய் எடுப்பதற்குள் "த்தை.... சித்தி.... என்ற இளங் குரல்களுடன் தனது டெடி பியரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு கண்ணை கசக்கி கொண்டு நிலாவும் அவள் பின்னாலேயே தீப்பும் இறங்கி வந்தார்கள்.

"ரெண்டு பேரும் எழுந்து விட்டீர்களா குட்மார்னிங்" இருவருக்கும் காலை வணக்கம் வைத்தாள் ஸ்ரீனிகா. அவள் அருகே வந்தவர்களிடம் குனிந்து ஆளுக்கு ஒரு கப்பை கையில் கொடுத்தாள்.

அவர்களுக்கு என்று போடப்பட்டிருந்த குட்டி மேஜையில் போய் இருந்த நிலா சிணுங்கினாள் "த்தை பீதிங் பத்தில் வனும்"

குட்டி மேஜை அருகே அமர்ந்த ஸ்ரீனிகா பீடிங் பத்தலை கொடுத்து விட்டு கண்டிப்புடன் கேட்டாள் "நான் என்ன சொல்லி இருக்கின்றேன் மார்னிங்கில் அழக்கூடாது எங்கே குட் மோர்னிங் சொல்லுங்கள் இருவரும்"

இருவரும் அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டு கோரசாக "குட் மார்னிங் ஸ்ரீம்மா" என்றனர். பதிலுக்கு அவர்கள் குண்டு கன்னங்களில் முத்தமிட்டவள் "குட் மார்னிங்" என்றாள்.

பார்த்துக் கொண்டிருந்த கௌதம் புருவத்தை நெற்றிக்கு உயர்த்தி இறக்கி "ஸ்ரீனி" அவனுக்கு காபி போடப் போனவளை ஒற்றை விரல் காட்டி அழைத்தான். "இங்கே வா" அருகே வந்தவளின் கன்னத்தில் முத்தமிட்டு "குட் மார்னிங்...." என்றான்.

முத்தமிட்ட கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியில் நின்ற ஸ்ரீனிகாவை பார்த்து குறும்பாய் புன்னகைத்து "காபி..... கிடைக்குமா?" ராகமாய் கேட்க வேகமாக தலையை உருட்டி விட்டு காபி போட போனவளை பார்த்து "எங்களுக்கு எல்லாம் குட் மார்னிங் கிடையாதா?" என்று குறும்பாக கேட்டான்.

"குட் மார்னிங் குட் மார்னிங்" என இருதரம் அவசரமாக பதில் அளித்தவள் கைகள் காபியை கலந்தது.

அவள் அருகில் இருந்த மேடையில் ஏறி இருந்தவன் "அப்படியானால் எங்களுக்கு இங்கே கிடையாதா?" என்று கன்னத்தை காட்டி கேட்டான். ஸ்ரீனிகா கையில் இருந்த கரண்டி நழுவி கீழே விழுந்து 'னாங்' என்று ஒலியெழுப்பியது. அவளுக்கோ மூச்சடைத்து போனது.

ஓடி வந்து மாமாவின் காலை தட்டி "தூக்கு தூக்கு" என்ற நிலவை தூக்கி மடியில் இருத்தி அவளை பார்த்தான். நிலா அவன் கழுத்தை கட்டிக் கொண்டு தோளில் சாய்ந்தாள்.

"காபி" நடுங்கும் கரங்களுடன் தந்தவளை சிறு ஏமாற்றத்துடனும் வேதனையுடனும் பார்த்தவன் வேறு எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டான்.

அவள் தனது காபியை எடுத்துக் கொண்டு தீப்புடன் சிறு மேஜை அருகே நிலத்தில் அமர்ந்தாள். கௌதமும் சென்று அவள் அருகே அமர "நிலம்.... குளிர்... டைனிங்..." என வாய்க்குள் முனங்கினாள். சிறுவர்களுக்கு சிறு நாற்காலி இருந்தது.

"ஹ்ம்ம்" என்றவனிடம் ஒன்றுமில்லை என்பது போல் வேகமாக தலை அசைத்தவள் இரு வாண்டுகளும் “ஸ்ரீம்மா” என்று ஆரம்பிக்க இருவரையும் பார்த்து "கொஞ்சம் தான் தருவேன்" என்ற நிபந்தனையுடன் தனது தேநீரில் இருவருக்கும் இரண்டு வாய் கொடுத்து தான் குடிக்க போக "எனக்கு கிடையாதா?" கேட்டவன் குரல் ஏதோ போல் இருந்தது.

விழி விரித்துப் பார்த்தவளிடம் "பரவாயில்லை ஒவ்வொன்றாக போவோம் ஆனால் குட் மார்னிங் ஒவ்வொரு நாளும் வேண்டும்" என்று நிபந்தனை விதித்தவனையே 'பே' என்று பார்த்தாள் ஸ்ரீனிகா.

அதன் பின் குழந்தைகளின் சத்தத்தை தவிர அமைதியே நிலவியது. குழந்தைகளை கவனிக்கும் ஆயாவிடம் அவர்களை ஒப்படைத்து பள்ளிக்கு தயார்படுத்த சொன்னாள். "உங்களுடன் தான் குளிப்போம்" என அடம் பிடித்த இருவரையும் "அத்தைக்கு இன்று வேலை இருக்குடா தங்கம்" எனக் கூறி சமாளித்தாள்.

கௌதமுக்கு ஒரு அதிகாலை பொழுது இத்தனை அழகாக விடிய கூடும் என்பது இன்று தான் புரிந்தது. செல்லும் குழந்தைகளே பார்த்திருந்து "எத்தனை நாளாக நடக்கிறது?" கேட்டவனை ஸ்ரீனிகா குழப்பத்துடன் பார்க்க "இதுபோல் காலை தேநீர் அருந்துவது எத்தனை நாளாக நடக்கிறது" என்று திருப்பி தெளிவாகக் கேட்டான்.

"வந்த நாளிலிருந்து" வாய்க்குள் முனங்கினாள் ஸ்ரீனிகா.

"நிறைய மிஸ் பண்ணிட்டேன் இல்ல" குரலில் வருத்தத்தமே நிறைந்திருந்தது.

அவளோ மன்னிப்பை இரைஞ்சும் அவன் கண்களை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவள் குனிந்திருந்த தலையையே மனமுடைந்து பார்த்தவன் "சரி அதற்கும் சேர்த்து ஈடு கட்டி சரி செய்து விடுவோம்" என்றான்.

🎻🎻🎻🎻🎻பிளாக் ஜீன்ஸ் வைட் ஷர்ட் கையில் கோட் சகிதம் வெளியில் செல்ல தயாராகி வந்தவளை ஆச்சரியத்துடனும் சிறிது ஏமாற்றத்துடனும் பார்த்தான் கௌதம். அவள் இன்று வீட்டில் இருப்பாள் என நினைத்தான்.

கைப்பையை எடுத்தவாறே சாதாரண ஜீன்ஸ் டி-ஷர்ட் உடன் வந்த கௌதமை பார்த்து ஏதோ கேட்க வாயெடுத்தவள் விழுங்கினாள்.

"தூரமா... நான் ட்ராப் பண்ணவா?" கௌதம் கேட்க வெடுக்கென்று தலையை திருப்பி பார்த்து ரகசிய குரலில் கேட்டாள் "உங்கள் அம்மா அப்பா வந்துட்டாங்களா?" இல்லை என்று சொல்ல வந்தவன் ஆம் என்று தலையாட்டி வைத்தான். 'உங்கள் அம்மா அப்பாவா ரொம்ப கஷ்டப்படனும் போல இருக்கே ஜிகே' மனதினுள் நினைத்து கொண்டான்.

கேரளாவில் இருக்கும் போதே முடிவு எடுத்துவிட்டான் அவளுடன் நேரம் செலவழிக்க வேண்டும் அவள் வாய் மொழியாகவே உண்மையை அறிய வேண்டமென்றும். ஆனால் அவன் கஷ்டகாலம் கம்பெனி விபத்து பின் அது தொடர்பான வேலை என்று இழுத்துவிட்டது.

காலை தரையில் உதைத்து "ச்சு.. இவர்களை யார் இப்போது வர சொன்னது" எரிச்சலுடன் மொழிந்தவள் அவன் கேட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து திருதிருவென மிரண்டு விழித்தாள். அவனோ கையை கட்டி தலை சாய்த்து பார்த்து கொண்டிருந்தான்.

அசடு வழிய சிரித்து சமாளித்தாள் "இன்று கம்பெனி போகவில்லை".

"உன் அத்தை மாமா வருகின்றார்கள். உன்னை ஏர்போர்ட் அழைத்து வர சொன்னாங்க வா" என்றான். வருகின்றாயா என்று கூட கேட்கவில்லை அவனுக்கு தெரியும் வரமாட்டாள் வரும் விதமாக அவன் நடந்து கொள்ளவில்லையே.

கௌதம் அழைப்பான் என்று எதிர்பார்க்காத ஸ்ரீனிகா "இல்லை இன்று லேண்ட் ஆபீசில் வேலை இருக்கிறது. அதோடு காலேஜ் போகணும் அண்ணாவிடமும் போக வேண்டும் இன்று இல்லாவிட்டால் ஒரு மாதம் கழித்து தான் அவனிடம் பேச முடியும்" என்று தயங்கினாள்.

"இப்போது எங்கே போகிறாய்?"

"அண்ணா வீட்டுக்கு..."

"சரி வா" என்று முன்னே நடந்தவனை பார்த்து 'பே' என்று விழித்தாள். தோளில் வழிந்து விழுந்த கைப்பையை மாட்டியவாறே ஓடிச் சென்று முன்னே நின்றவளை கண்டு குறுநகை கொண்டான். "இப்போது என்ன"

"உங்களுக்கு ஏர்போர்ட் போகனுமே..."

"அது ஒரு மணிக்கு"

"எனக்கு இன்று வேறு வேலையும் இருக்கே"

"எனக்கு இன்று வேறு எந்த வேலையும் இல்லை"

"ஓ... வீட்டிற்க்கு சொல்லனும் இல்லையா திடிரென்று போய் நின்றால் எப்படி"

"நான் சாரதா அத்தையிடம் சொல்லிவிட்டேன்"

இப்போது என்ன சொல்ல போகிறாய் என்பது போல் பார்த்திருந்தான்.

இமை தட்டி விழித்தாள் ஸ்ரீனிகா. என்ன எந்த பக்கம் போனாலும் கேட் போடுறான். இப்ப என்ன செய்ய நகத்தை கடித்து துப்பினாள். 'சாரிடி ஸ்ரீனி விட்டால் நீ நத்தை போல் சுருண்டு விடுவாய் எனக்கு வேற வழி தெரியல' மனதில் மன்னிப்பு கேட்டான். வெளிப்படையாகவே கேட்க ஆசைதான் மன்னிக்க முடியாது போடா என்றுவிட்டால் என்ன செய்வது. அதுதான் சிறிது சிறிதாக அவளை நெருங்க முயற்சிக்கின்றான். அவள் அப்பா அம்மாவை ஏமாற்றிவிட்டார் என்பதற்காக அப்பாவின் பெயரை இனிஷியலாக கூட பயன்படுத்தாதவள் மன்னிப்பாளா.....

மன்னிக்கும் வரை விடவும் மாட்டேன்....

இன்னும் மூன்று நாளில் அவள் பற்றி ஆதியோடந்தமாக கூறுவதாக வசந்த் சொல்லியிருந்தார். இதுவரை அறிந்ததிலேயே அவன் தலை சுற்றி போய் இருந்தான். இனி என்னன்னே வருமோ...

"அண்ணா மெசேஜ் பண்ணியிருந்தான். இன்று சந்திக்க முடியாதாம். மறந்தே போய்ட்டேன் ஹையோ ஹையோ" அவன் தோளில் தட்டி சிரித்தவள் அவன் அசையாத பார்வையில் நிறுத்தினாள்.

"பேசு" என்று அவன் போனை கொடுக்க "ஹலோ மாப்பிள்ளை" என்று அண்ணனின் குரல் ஸ்பீக்கரில் கேட்க திருடனுக்கு தேள் கொட்டியது போல் முழித்தாள். மாப்பிள்ளையா? ‘இவர்கள் எப்போது அறிமுகம் ஆனார்கள்’ மூளை கேட்க ‘நீ மூளையா நான் மூளையா மனம் சண்டைக்கு வந்தது’

'பேசு' கண்ணால் காட்டினான்.

அப்படியே பரத நாட்டிய திலகம் மனதினுள் கரித்து கொட்டியவள் ஸ்பீக்கரை ஆப் செய்து "அண்ணன் தங்கைக்குள் ஆயிரம் இருக்கும் அதையெல்லாம் உங்கள் முன் பேசமுடியாது" கெத்தாக சொல்லி அவனிடமிருந்து தள்ளி சென்று பேசிவிட்டு திருப்பி கொண்டு வந்து கொடுத்தாள். "அண்ணாவுக்கு வேலை இருக்காம் எப்போது நேரம் கிடைக்கும் என்று பிறகு சொல்கின்றானாம் நான் வருகின்றேன்" கிட்ட தட்ட ஓடினாள்.

அதே வேகத்தில் திரும்பி அவன் நெஞ்சில் மோதி நின்றவளுக்கு நடந்தது புரிய சில நொடிகள் எடுத்தது. கையை பிடித்து நிறுத்திய வேகத்தில் அவன் மேலேயே வந்து மோதியிருந்தாள்.

"உனக்கு என்ன பிரச்சனை அண்ணா நிற்கமாட்டானா, இல்லை நான் வருவது விருப்பமில்லையா?" கிடுக்கு பிடி போட்டான்.

பெரிய டீலா நோடீல அங்கர் எப்ப பாரு இரண்டில் ஒன்று கேட்பது "இரண்டும் இல்லை" என்றாள் எரிச்சலுடன். "எனக்கு அங்கே செல்ல விருப்பம் இல்லை".

அவனோ எரிந்து விழும் அவளை புன்னகையுடன் பார்த்திருந்தான். அவனுக்கு வேண்டியதும் அதுதானே. கூட்டு புழுபோல் தன்னை சுற்றி கூடு கட்டி உள்ளுக்குள் இறுகி போய் இருக்கும் உணர்வுகளை அவளிடமிருந்து வெளிக் கொணர வேண்டும். வெளியே அனைவரிடமும் நடிக்கும் இந்த முகம் அவனுக்கு வேண்டாம். அவனுக்கு வேண்டியது உள்ளே பாதுகாப்புணர்வின்றி இன்றி தவிக்கும் அந்த குழந்தை. அன்று கடற்கரையில் அழுத போதுதான் புரிந்தது. அனைவரிடமும் நடித்து கொண்டிருக்கின்றாள். எத்தனை நாளைக்கு முடியும். ஒரேடியாக அமுக்கி வைத்து ஒருநாள் வெடித்து விடும்.

''சரி நீ போய் வேலைகளை முடித்து வா" சந்தோசமாய் ஓட போனவள் முடியாமல் பிடித்திருந்த அவன் கைகளை பார்க்க "நான் காரில் வைட் பண்ணுறன்" உதட்டை இழுத்து பிடித்து சிரித்து வைத்தான்.

தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள் ஒரு தரம் சுற்றி பார்த்தவள் "அண்ணா அண்ணி வந்துட்டாங்களா?" ரகசிய குரலில் கேட்டாள். உதட்டை கடித்து அவளையே பார்த்தவன் மெதுவே தலையசைத்தான் இல்லை என்பது போல். "அப்ப நதியா சுரேஷ் அண்ணா வந்திட்டாங்களா? அவரின் அப்பாவிற்கு இப்போது பரவாயில்லையா?".

அடுத்து வருவதை பூரணமாக அறிந்தவன் தொண்டையில் அடைத்ததை விழுங்கி கொண்டு அதற்கும் இல்லை என்று தலையசைத்தான். "ஒருவரும் தான் இல்லையே பின் ஏன் நடிக்க வேண்டும்?" கேள்வி இதயத்தில் ஈட்டியாய் பாய்ந்தது.

அவள் முகம் பார்க்க முடியாமல் வேறு புறம் திரும்பியவன் "வா, சொல்கின்றேன்" என்றவாறு முன்னே நடந்தவன் பின்னே சென்றவளுக்கு இன்றைக்கு திட்டமிட்ட எந்த வேலையையும் செய்ய முடியும் போல் தோன்றவில்லை.

மேலே பார்த்து "முருகா என்னடா இது" வாய்க்குள் முருகனை திட்டியவாறே பலியாடு போல் சென்றாள். காரில் ஏற யோசித்தவளை கை முட்டிக்கு மேல் பிடித்து முன் சீட்டில் அமர வைத்து காரை எடுத்தான்.

"சோ இன்று என்ன என்ன வேலைகள்"

"அதுதான் இப்பொழுது சொன்னனே"

"அதைவிட வேறு ஏதாவது..."

"இப்போதைக்கு அதே முடியாது போலிருக்கு" வாய்க்குள் முனகினாள்

வீதியில் முன் சென்ற காரை முந்தி லாவகமாக ஸ்ட்யரிங்கை திருப்பியவாறே அவளை பார்த்து "சோ என்னை முதலில் எங்கே சந்தித்தாய்?" என்றான்.

'பைத்தியம்மாடா நீ' என்பது போல் பார்த்து வைத்தாள் ஸ்ரீனிகா. அவள் பார்வை புரிந்தவன் "பார்ப்பதற்கும் சந்திப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை சட்டத்தரணி அம்மாவிற்கு நான் சொல்ல தேவையில்லை" கேலியாகவே கூறினான்.

லேசாய் அதிர்ந்து போனது தவிர அவளில் எந்த மாற்றமும் இல்லை.

காரை ஓரம் கட்டி நிறுத்த "இதுக்கு நான் ஸ்கூட்டியிலேயே போய் இருப்பன் ஆட்டோ செலவு தண்டம்" முனகியவாறு காரை திறக்க முயல 'டக்' என்ற மெல்லிய ஒலியுடன் சேப் லாக் விழுந்தது.

நேர் எதிரே வெறித்திருந்த அவன் முகம் பார்த்தவள் பயத்தை விழுங்கி "என்ன" என்றாள்.

"என்னை முதலில் எங்கே பார்த்தாய்?" அதே கேள்வியை திருப்பி கேட்டான்.

அவள் அமைதியை தொடர "எனக்கு உன்னுடன் இந்த காரினுள் எவ்வளவு நேரமானாலும் இருக்க சம்மதம்" பதில் வரும் வரை விடமாட்டான் என்பது புரிந்தது.

"என் சீனியர் அலுவலகத்திற்கு நீங்கள் வந்த போது" வாய்க்குள் முனகினாள்.

அவன் கை நீள அடிக்க போகின்றானா? என்பது போல் சற்று பின்னே சென்று என்னவென்று பார்க்க கையில் அவன் போன் இருந்தது. டிஸ்பிலேயில் அவள் படத்துடன். கையில் வாங்கி பார்க்க அது அவள் படம் தான் கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு முன் எடுத்தது.

வாயை மூடி திறந்தவளுக்கு சத்தமே வரவில்லை. நெரித்த புருவமும் நேர் எதிரே பார்த்த முகமுமாய் அசைவின்றி அதே போல் இருந்தவன் கேட்டான் "இப்போது சொல் என்னை முதன் முதலில் எங்கே பார்த்தாய்?"

தலை குனிந்தவள் மெதுவே கூறினாள் "உங்கள் வீட்டில்"

இருவருக்குமே நினைவு பின்னோக்கி சென்றது.
 

Nandhaki

Moderator

தீரா🎻 15

ஸ்ரீனிகாவும் அவள் அம்மா ஸ்ரீமதியுமாய் அவ்வீட்டினுள் நுழைந்தார்கள். ஸ்ரீமதிக்கு இங்கு வருவதில் பெரும் தயக்கம் என்னவென்று சொல்லி கொண்டு வருவார். வெறும் சில நாள் பழக்கம் மட்டுமே.

அசோகனின் அப்பா சந்திரனும் ஸ்ரீமதியின் அப்பா மித்திரனும் அண்ணன் தம்பி. அசோகன் வெளிநாடு சென்றிருந்த நேரம் மித்திரன் வேறு மாநில பெண்ணை திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்கள். அசோகன் திரும்பி வந்து நடந்ததை அறிந்து மித்திரனை தேடிய போது அவர் தமிழ்நாட்டை விட்டே வெளியேறி இருந்தார்.

சந்திரனும் விடமால் தேடிக் கொண்டே இருந்தார். ஆனால் பலன் தான் பூஜ்யமாக இருந்தது. வட நாட்டிற்கு குடும்பமாக சுற்றுலா சென்றிருந்த போது அங்கு தேயிலை ஏற்றுமதி மாநாட்டிற்கு வந்திருந்த மித்திரனாய் பார்த்து பாய்ந்து கட்டிக் கொண்டார். சொல்லாமல் விட்டு சென்றதற்காக கோபித்தும் கொண்டார்.

தன் மகன் அசோகனை அறிமுகப்படுத்தி அப்போது பதினேழு வயதின் விளிம்பில் இருந்த ஸ்ரீமதியை தங்கை என மகனுக்கு அறிமுகப்படுத்தினார். அசோகனுக்கு அப்போது தான் இரண்டாவது மகன் கௌதம் பிறந்து இருந்தான். தனிப்பிள்ளையாக இருந்த அசோகனுக்கு குறும்பும் அன்பும் நிறைந்த ஸ்ரீமதியை பிடித்து போக தன்னுடன் அழைத்து செல்லவே தயாராய் இருந்தார்.

"சித்தப்பா" என்று வாய் நிறைய அழைத்து உறவு கொண்டாடிய அசோகனை அவருக்கும் பிடித்து போகவே படிப்பு முடிந்ததும் அழைத்து வருகின்றேன் என்று மித்திரன் வாக்கு கொடுத்தார். அதன் பின்னரே தமிழ்நாடு திரும்பினார் அசோகன். ஸ்ரீமதியின் படிப்பு காரணமாக தமிழ்நாடு வராத போதும் சந்திரனும் மித்திரனும் வருடத்திற்கு ஒரு முறையாவது டில்லியில் சந்தித்தது கொண்டார்கள்.

ஆனால் ஸ்ரீமதியின் வாழ்கையில் யாரும் எதிர்பாராத வண்ணம் ராஜாராம் என்ற பெயரில் திருப்பத்தை ஏற்படுத்தியது விதி.

தேயிலை கொள்வனவு செய்ய வந்த இடத்தில் ஸ்ரீமதியின் குறும்பிலும் அழகிலும் மயங்கி அவளை திருமணம் செய்து கொண்டார் ராஜாராம். அவரின் தேவை தீர்ந்ததும் தமிழ்நாடு சென்று வீட்டில் பேசி அழைத்து வருவதாக கூறி சென்றார். மித்திரனுக்கும் பிறக்கும் போதே தாயை இழந்த தன் பெண் தமிழ்நாட்டில் வாழ செல்வது ஆழ்மனதில் திருப்தியாக இருக்கவே அதிகளவில் சந்தேகமின்றி ராஜாராமை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு திரும்பிய ராஜாராம் போன் சிம்மை மாற்றியதோடு ஸ்ரீமதியையும் மறந்து போனார்.

சில மாதங்களாகியும் வராத ராஜாராமை பற்றி விசாரிக்க அவர் கொடுத்த அனைத்து விபரங்களும் போலி. அதற்குள் எல்லாம் கைமீறி ஸ்ரீமதி ஸ்ரீனிகாவை வயிற்றில் ஐந்து மாத கருவாக சுமந்து கொண்டிருந்தாள். குழந்தையும் பிறந்து ஸ்ரீனிகாவின் ஆறாவது பிறந்த நாளின் பின்தான் ராஜாராமை பற்றிய அனைத்து விபரங்களையும் அறிந்து கொண்டார்.

ஒருவாறு தமிழ்நாடு வந்து ராஜாராமை பற்றி விசாரித்த மித்திரன் அவருக்கு மணமாகி குழந்தைகளும் உண்டு என்பதை அறிந்து நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்தவர் சந்திரனை அழைக்க அந்நேரம் பார்த்து அவர் ஊரில் இல்லை அசோகன் தான் வந்தார். ஸ்ரீமதி, ஸ்ரீ உன் பொறுப்பு" என்று அதற்காவே உயிரை பிடித்து வைத்தது போல் உயிரை விட்டிருந்தார்.

மித்திரனின் மரணம் சந்திரனையும் பாதிக்க வெளிநாட்டிலிருந்து வந்தவர் சில நாட்களில் தம்பியை தேடி அவரும் விண்ணுலகம் போய்விட ஸ்ரீமதியை எங்கே எப்படி தேட என்று புரியாமல் நின்றார் அசோகன்.

ஏனெனில் மித்திரனை அசோகன் சந்தித்தது எல்லாம் டெல்லியில் மட்டுமே ஏனோ மித்திரன் அவர்களை அசாமிற்கு அழைக்கவும் இல்லை. அவர்களும் அங்கு போவதில் ஆர்வம் காட்டவில்லை. அதோடு சீக்கிரம் அனைத்தையும் விற்றுவிட்டு தமிழ் நாட்டோடு வந்து விடும் யோசனையில் இருந்தார். அதுவே அவர்களுக்கு எதிராய் நிற்க என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார் அசோகன்.

ஒரு புறம் தீடிரென அப்பா இறந்ததில் வளர்ந்து வந்த கம்பெனியின் வேலைகள் மறுபுறம் அசாமில் எங்கிருந்து எப்படி வந்தார் என்றே தெரியாமல் மித்திரனின் வேண்டுகோள். ஆனாலும் விடாது ஸ்ரீமதியை தேடி கொண்டே இருந்தார். இன்றைய அளவுக்கு தொலை தொடர்பாடல் வளர்ந்திராத காலம். தன் மகன்களிடமும் கூற கௌதம் வாக்கே கொடுத்திருந்தான். "எப்படியாவது அத்தையை தேடி கண்டு பிடித்து உங்கள் முன் நிறுத்துகின்றேன்" என்று.

கௌதமும் தேடிக் கொண்டுதான் இருந்தான். ஸ்ரீனிகாவின் அம்மாவின் படத்தை கடற்கரையில் பார்க்கும் வரை.....

ஸ்ரீனிகாவை வாசல் வரை அழைத்து வந்த ஸ்ரீமதி அவள் தயங்கியதை பார்த்து அங்கேயே நிற்க கூறி தான் மட்டுமாக உள்ளே சென்றார்.

வாசலுக்கு அருகே இருந்த மல்லிகை பந்தலின் அருகே நின்ற ஸ்ரீனிகா தன் குண்டு கண்களால் சுற்றிப் பார்த்தாள். அழகான வீடு என நினைத்தவள் சிந்தையை கலைத்தது அருகே கேட்ட குரல்கள்.

"அண்ணா வேணாம்..... தலை சுத்துது" சிறுமியை கைகளில் ஏந்தி சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.

அவளைவிட ஓரிரண்டு வயது சிரியவளாய் இருக்க கூடிய குமரி பருவத்தை எட்டி பிடித்த கொண்டிருந்த சிறுமி அவன் இறக்கிவிட்டதும் தலையை பிடித்து கொண்டு தள்ளாடினாள். தன் மேல் சாய்த்து கொண்டவன் "யூ ஓகே" அன்புடன் தலையை வருடிவிட்டான். அவளோ மாங்காயை காட்டி "அண்ணா... வேணும்" மெல்லிய சிணுங்கலாய் கேட்க ஒல்லியாய் நெடுநெடுவென்று வளர்ந்திருந்த அவன் ஒரே ஜம்பில் ஆய்ந்து கொடுத்தான்.

கையில் வாங்கி கொண்டு கிளுக்கி சிரித்தவாறே உள்ளே ஓடினாள் உப்பு தூள் போட்டு சாப்பிட. “பார்த்து கவனம் தியா விழுந்து விட போகிறாய்” அவள் பின்னால் வந்தவன் மல்லி கொடியின் கீழ் பூத்த தாமரையாய் நின்ற அவளை பார்த்தான்.

பதினாறு வயதின் விளிம்பில் நின்றவள் பயண களைப்பிலும் இடையில் நடந்த சில நிகழ்வுகளாலும் சற்றே வாடி தெரிந்தாள் மற்றபடிக்கு வயதுக்குரிய செழுமையுடன் ஒரு தடவை பார்த்தால் கண்டிப்பாக கன்னத்தை கிள்ளி பார்க்க தூண்டும் அழகுடன் இருந்தாள். குண்டு கன்னங்களும் வட இந்தியர்களுக்கு உரிய மா நிறத்துடன் தமிழ் நாட்டின் சிவப்பு நிறமும் கலந்து தமாரை வண்ணத்தில் இருந்தாள். இடை வரை நீண்டு வளர்ந்த சுருள் முடியுடன் பிறைநிலா நெற்றி நீண்ட விழிகள் கூர் நாசி இரண்டு பன்களுக்கு நடுவே ரோஜா இதழை ஓட்ட வைத்தது போல் இதழ்கள் வட்ட முகம் என அழகின் இருப்பிடமாக இருந்தாள்.

அவனையுமறியாமல் அவளை ஆர்வத்துடன் நோக்கினான் கௌதம். இத்தனை காலம் பெண்களை தூசு போல் தட்டி கடந்து சென்றவனுக்கு அவளை அப்படி கடந்து செல்ல முடியவில்லை. அருகே சென்றவன் "யார் நீ.. ஐ மீன் நீங்கள்".

அவள் குண்டு கண்களை இன்னும் விரித்து அவனை பார்த்தாள். அவளுக்கு தமிழ் புரியும் ஆனால் பேச வராது. தன்னை யார் என்று கேட்கிறான் என்பது புரிந்தது. ஆனால் எப்படி பதில் சொல்வது என புரியாமல் வீட்டை கைகாட்டி "அம்மா..." என்றாள்.

"ஓ... அம்மா உள்ளே இருக்கின்றார்களா?" என்று கேட்க வேகமாக ஆமோதித்து தலையாட்டினாள். "சரி அப்படியானால் உள்ளே வா" புன்னகையுடன் அழைத்தான். உடனே மறுத்து தலையாட்டினாள். "அம்மா...". சிறு சிரிப்புடன் ஒருபுறம் தலை சாய்த்து பார்த்தவன் "உனக்கு அம்மாவை தவிர வேறு எதுவும் தெரியாதா?" கை நீட்டி "கௌதம்" தன்னை தானே அறிமுகப்படுத்தினான்.

தன் பெயரை சொல்லி கை கொடுத்தாள் "ஸ்ரீனி...." முழுதாக சொல்வதற்குள் அவளின் கையை பிடித்து இழுத்து சென்றார் ஸ்ரீமதி. அவர் இழுத்த இழுப்புக்கு சென்றவள் திரும்பி பார்த்து அவனை பார்த்து சிரித்து கையாட்டி விடைபெற்றாள்.

அவன் தனக்குள் சொல்லி பார்த்தான் “ஸ்ரீனி...” முழுப்பெயர் அதுவல்ல என்று புரிந்தது.

🎻🎻🎻🎻🎻

"உனக்கு எத்தனை நாளாக தெரியும்?"

"உங்களை திரும்ப என் சீனியர் அலுவலகத்தில் பார்த்த நாளில் இருந்து"

"ஏன் சொல்லவில்லை?" தவித்து போய் கேட்டான்.

கசந்த முறுவலுடன் "சொல்லியிருந்தால்...." நிறுத்தி இடைவெளி விட்டு கேட்டாள் "நம்பியிருப்பீர்களா?"

ஓங்கி முகத்தில் அடி வாங்கியது போல் பார்த்தன் கௌதம்.

அவன் கேள்வி உள்ளத்தின் அடிவாரத்தில் புதைத்த நினைவுகளை தட்டி எழுப்ப சட்டென குனிந்து இறுக தலையை பிடித்து கொண்டவள் நடுங்கும் கரங்களால் அவசர அவசரமாக கைப் பையிலிருந்து மருந்தினை எடுத்து தண்ணீருடன் வாயில் போட்டாள்.

"தலை வலிக்குது வீட்டிற்கு போவோம்" வலியுடன் முனக சட்டென அருகே சரிந்து அவள் தலையை கையால் தங்கி "யூ ஓகே... என்னாச்சுடி..." பதறினான். அவனின் ப்ரடோ சர்வீஸ் கொடுத்திருக்க இன்று வீட்டில் நின்ற அல்டோவை எடுத்து வந்தது நல்லதாய் போக தலைவலியில் புழுவாய் துடித்தவளை இழுத்து மடிமேல் போட்டு அவள் தலையை வயிற்றோடு அழுத்திக் கொண்டான்.

"டாக்டரிடம் போவோமா..?" பதற்றமாய் கேட்டான். அவள் துடிப்பதை பார்க்க கௌதமிற்கு கை, கை விரல், குரல் கூட நடுங்கியது.

"வேண்டா வீ.....ட்......" சொல்ல முடியாமல் புழுவாய் துடித்தாள்.

"சொன்ன கேளு ஸ்ரீனி..." அவன் கையை இறுக பிடித்து மறுப்பாய் தலையாட்டினாள் "ல்ல வழ.. வரு..."

ஒரு கையால் அவள் தலையை வயிற்றோடு அழுத்தி வருடியவாறே மறு கையால் ஸ்டேரிங் வீலை லாவகமாய் சுற்றி காரை வீட்டை நோக்கி செலுத்தினான். வீட்டை அடைந்த போது அவன் கை அழுத்தத்திலும் வருடலிலும் அனத்தால் குறைந்து அரை மயக்கத்தில் இருந்தாள் ஸ்ரீனிகா.

அப்படியே தூக்கி சென்று கட்டிலில் கிடத்த அவளோ தலைவலியில் இன்னும் அனத்தி கொண்டே இருந்தாள். கௌதமிற்கு இது சாதாரண தலைவலி போல் தோன்றவில்லை. அவர்களுக்கு வழமையாக வரும் மருத்துவரும் அவன் நண்பனுமான சரணுக்கு தொடர்பு கொண்டு "டேய் எங்கே நிற்கின்றாய் உடனே வரமுடியுமா? இங்கே ஸ்ரீனி தலைவலியில் துடிக்கிறாள்" கேட்டவனுக்கு பதிலாக "உன் வீட்டிற்கு முன் தான் நிற்கின்றேன் உள்ளே வாரேன்” என்றான் சரண். "தங் காட் சீக்கிரம் வா"

சரண் வந்ததும் அவனை பரிசோதிக்க விட்டு குறுக்கும் நெடுக்குமாக அறையை அளந்து கொண்டிருந்தான் கௌதம். பிரஷர் ஹார்ட் பீட் அனைத்தும் பரிசோதித்தவன் ஸ்ரீனிகாவின் கன்னம் தட்டி எழுப்பினான் "ஸ்ரீனிகா... ஸ்ரீனிகா... நான் பேசுறது கேட்குதா?" மீண்டும் தட்டினான்.

பெருவிரலால் நெற்றி கீறியவன் "என்னாச்சுடா?" என்றவாறு மறுபுறம் அமர்ந்தான்.

"ஸ்ரீனி..." அவன் ஒரு அழைப்பில் பதிலத்தாள் "ஹ்ம்ம்..." அவள் பதிலில் நிமிர்ந்து நண்பன் முகம் பார்க்க "ஏதாவது மருந்து போட்டாளா? ஷி இஸ் ஆல்ரைட் நொவ்" என்று நண்பன் தோள் தட்டினான். "தலைவலி வந்த உடனே ஏதோ ஒரு மருந்து போட்டாள். என்ன மருந்து என்று தெரியல" ஏனோ டென்ஸனாக தென்பட்டான்.

"பயப்பட ஒன்றுமில்லை அந்த மருந்தால் தான் உறக்கம். மற்றபடி எதுவும் பிரச்சனை இல்லை. ஹஸ்பிடல் அழைத்து வா ஒரு சிடிஸ்கேன் செய்து பார்த்திருவோம்" புன்னகைக்க வள்ளி இருவருக்கும் காபியுடன் உள்ளே வந்தாள். திரும்பி சென்றவளிடம் "பூஸ்ட் கலந்து ஒரு கப் பாலும் வேண்டும்" என்றான் கௌதம்.

அவனையே கூர்ந்து பார்த்த சரண் "எப்போது" என்றான்.

ஆயாசமாய் தலையசைத்தவன் "எட்டு மாதம் இப்போது என்னை எதுவும் கேட்காதே" என்றான். நண்பன் சென்றதும் அவள் அருகே அமர்ந்து பாலை குடிக்க வைத்தவன் நினைவுகள் மீண்டும் அவளை சந்தித்த தினத்தை நோக்கிச் சென்றது.

🎻🎻🎻🎻🎻

ஸ்ரீனிகாவின் கையை இழுத்து செல்வதை பார்த்து கொண்டிருந்த கெளதம் அவர்கள் கண்ணை விட்டு மறையவும் அருகேயிருந்த பைக்கை உதைத்து கிளப்பி வெளியே வந்தவன் அவர்கள் ஆட்டோவை மறித்து ஏறி செல்வதை பார்த்து அவர்களை பின் தொடர்ந்தான். சிக்னலில் ஆட்டோவை தவறவிட்டவன் மீண்டும் பின்தொடர்ந்தான். அவள் ஒரு மாலில் இறங்கவே அந்த மாலினை புன்னகையுடன் பார்த்தான்.

பைக்கை விட்டு உள்ளே செல்வதற்குள் மீண்டும் மயமாய் மறைந்தவளை தேடிக் கொண்டு உள்ளே செல்ல வழியில் ஓரிருவர் வணக்கம் வைக்க சிறு கையசைவில் ஏற்றவன் கண்கள் அவளையே தேடிச் சலித்தது. லிப்டில் ஏறுவதைப் கவனித்தவன் வெளியே தெரிந்த இலக்கத்தைப் பார்த்து அந்த தளத்திற்கு விரைந்தான்.

யாரையோ தேடியவாறே பின் பக்கமாய் நடந்தவளின் பின் புன்னகையுடன் நின்றான் கௌதம்.

யார் மீதோ மோதி நிற்க திரும்பி தோளுக்கு மேலாக பார்த்தவள் முகம் பூவாய் மலர்ந்தது. பூங்கொத்தாய் தன் மீது மோதியவளின் தோள்களைப் பற்றி நிறுத்தி கண்களில் சந்தோஷம் மின்ன அவளையே பார்த்தான்.

அப்படியே அவளை அருகே இருந்த தூணோடு சேர்த்து நிறுத்தி அவள் உயரத்துக்கு குனிந்தவன் "என்ன பாதியில் விட்டு வந்துவிட்டாய்?" குறும்பு மின்ன கேட்டவன் மனமோ அவள் இன்னும் குழந்தை என்பதை கண்டு கொண்டு சற்றே சுணங்கியது.

அவளோ யாரையோ தீவிரமாய் தேடினாள். "வேறு யாரும் வந்தார்களா?" அவளுடன் சேர்ந்து அவனும் தேட ‘இல்லை’ என்று வேகமாக மறுத்தவள் முன்னே இருந்தவனிடம் கவனத்தை செலுத்தினாள்.

அவனோ புருவத்தை உயர்த்தி முகத்தையும் மேல் நோக்கி அசைக்க குண்டு கண்களை இன்னும் பெரிதாக்கி அவனை பார்த்தாள். "ஓ உனக்கு தமிழ் தெரியாது இல்ல" என்றவனை தடுத்து கூறினாள் "ஐ கன் அண்டர்ஸ்டன்ட் தமிழ், பட் கன்ட் டாக் ஃபுளுவன்லி"

"ஓ... அப்ப சீக்கிரம் தமிழ்ல பேச பழகிடு" என்றவனை 'ஏன்' என்பது போல் பார்த்து வைக்க "அப்போது தானே இருவரும் பேசலாம்" கண்ணடிக்க என்ன உணர்வு என்று புரியாத போதும் பிடித்து தொலைக்க மேலும் கீழுமாக தலையை ஆட்டி வைத்தாள்.

"சீக்கிரம் வளர்ந்துரடி" அவன் சொல்ல, அவன் நெஞ்சிற்கும் கீழே நின்ற தன் உயரத்தை பார்த்து உதட்டை பிதுக்க அவள் கன்னம் கிள்ளினான். சட்டென கையை தட்டிவிட்டாள் ஸ்ரீனிகா.

"ஒகே ஒகே தொடல" என்றவன் கைகளை உயர்த்தி "சோ எங்கே படிக்கின்றாய்? உன் முழு பெயர் என்ன? வீடு எங்கே?" வேகமாய் கேட்டவனுக்கு பதில் சொல்ல வாயெடுத்தவளுக்கு 'உன்னை பற்றிய விபரங்களை அறிமுகமில்லாத யாருக்கும் சொல்ல கூடாது' அம்மாவின் எச்சரிக்கை ஞாபகம் வர மறுத்து தலையாட்டியவள் திரும்பி உடைகளை ஆராய்ந்தாள்.

சொல்வதற்கு வந்து திரும்பியவளை யோசனையுடன் பார்த்தவன் "ஏன் என்னிடம் சொல்ல கூடாதா?" சிறு மனதங்காலகவே கேட்கவே சிறிது யோசித்து "யூ ஆர் எ ஸ்ரேஞ்சர்" குழந்தைத்தனமாக கூறியவளை புன்னகையுடன் பார்த்து "என்னை பார்த்தால் பயமாக இருக்கிறதா?" கேட்டவனுக்கு பதிலாக இல்லை என்று தலையசைத்தாள்.

உண்மையில் அவனருகே அவள் பயம் எங்கே போனது என்றே தெரியவில்லை. புன்னகையுடன் ஏறெடுத்து அவனை பார்க்க "எல்லாத்துக்கும் சூரனை போல் தலையாட்டு" அவள் தலையை பிடித்து ஆட்டி விட்டான். அவன் பார்வை ஏதோ மாற்றங்களை மனதிலும் உடலிலும் ஏற்படுத்த அவனிடமிருந்து பார்வையை பிரித்து அருகே இருந்த உடைகளில் செலுத்தினாள். கரடி பொம்மை போட்ட டீ ஷர்ட் கண்ணில் பட அதை எடுத்து மேலே வைத்து அப்படியும் இப்படியும் திருப்பி கண்ணாடியில் பார்த்தவள் கண்ணாடியில் தெரிந்த அவனையும் பார்த்தாள்.

இரு விரல் சேர்த்து சூப்பர் என்று கை காட்டியவன் ஃபோன் அடிக்க ஒரு நிமிடம் என்று கண்ணாடியில் சைகை செய்தவன் அவளை கண்ணாடியில் பார்த்தவாறே அதற்கு காது கொடுத்தான். அவன் அப்பாதான் அழைத்திருந்தார். "உன் அத்தை ஸ்ரீமதி பற்றி ஒரு தகவல் கிடைத்து இருக்கு உடனே வா"என்றார்.

"யா அப்பா" என்றவன் அவசரமாக அவளை தோளில் பிடித்து தன் பக்கமாய் திருப்பினான். "அப்பா கூப்பிடுறார் அவசரமாய் போக வேண்டும்" அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே முகம் அந்தி தமரையாய் கூம்பிவிட்டது. அவன் டீ ஷிர்டை கொத்தாக பிடித்தவள் கையை அழுத்தி கொடுத்தான்.

"பிளீஸ் நானே உன்னை தேடி வருவேன் ஒகே" அவள் கையிலிருந்த டீ ஷர்ட்டின் விலையை பார்த்தவன் தன் வல்லட்டை திறந்து பணத்தை எடுத்து கையில் வைக்க வேண்டாம் என்பது போல் மறுத்து தலையாட்ட அவள் உதட்டில் கை வைத்து "இது என் முதல் கிஃப்ட் மறுத்து எதுவும் சொல்ல கூடாது" அழுத்தமாய் கூறியவன் வாடியிருந்த அவள் முகத்தை கையில் ஏந்தி "நான்..." ஏதோ சொல்ல வந்து முடியாமல் தடுமாறி "என்னை மன்னிச்சிடு" என்றவாறே அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்து அங்கிருந்து வேகமாய் வந்துவிட்டான்.

கடை வாசலைத் தாண்டும் முன் திரும்பிப் பார்க்க, அவள் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டிருந்தார் சாரதா. புன்னகையுடன் இருவரையும் மனதில் பதிய வைத்துக் கொண்டவன் வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

அத்தை தென்பட்டதாக கூறிய இடத்திற்கு சென்று தேடித் பார்த்த போது அவர் அங்கிருந்து சென்றிருந்தார். அதன் பின் என்ன முயற்சித்தும் ட்றேஸ் செய்ய முடியவில்லை. அன்று அவன் வீட்டில் வைத்து ஸ்ரீமதி வந்த வேகத்தில் ஸ்ரீனிகாவை இழுத்துச் சென்றதில் அவனால் அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அன்றே பார்த்திருந்தால் எத்தனையோ விபரீதங்களைத் தடுத்திருப்பானே.
 

Nandhaki

Moderator

தீரா🎻16

சோபாவில் அமர்ந்து ஸ்ரீனிகாவையே பார்த்துக் கொண்டு இருந்தவன் நினைவுகளை கலைத்தது போன் சத்தம். எடுத்துப் பார்க்க யாதவ் தான் அழைத்திருந்தான்.

“யாதவ், நாளை, நாளை மறுநாள் இரண்டு நாளும் உள்ள மீட்டிங் கன்சல் பண்ணிடு, நான் அலுவலகம் வர மாட்டேன். அப்படியே அஜாவை அப்பா அம்மாவை கூட்டி வர அனுப்பிவிடு” என்றவன் பதிலுக்காக கூட காத்திராமல் போனை கட் செய்து விட்டு அவள் அருகே வந்தான்.

அப்போதும் வலியில் முனகியவள் தலையை இதமாய் பிடித்துவிட அவனை நெருங்கிப் படுத்தாள். அவன் நினைவுகளோ கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து மீண்டும் அவளை சந்திக்க நேர்ந்ததை நோக்கிச் சென்றது.

🎻🎻🎻🎻🎻

அண்ணா..... என்று துள்ளி குதித்தவாறு வந்து நின்றாள் வீட்டின் கடைக்குட்டி, அவனது அருமை தங்கை நதியா. மீட்டிங் முடிந்து அப்போதுதான் உள்ளே வந்தவன் அவளை ஒரு தரம் தூக்கிச் சுற்றிவிட்டு அழைத்தான் "தியா.." அழைப்பிலேயே பாசம் சொட்டியது. "வா வா உள்ளே வா இரு" என்று இருக்கையை காட்டியவாறு தன் நாற்காலியில் அமார்ந்தவன் "என்ன அம்மையார் இன்று இந்த பக்கம் என்ன விசேஷம் என்று" கேட்டான் கௌதம்.

நேரடியாகவே விடயத்துக்கு வந்தாள் "எனக்கு ஒரு டீல் முடிக்க முடியல" கன்னத்தில் கை வைத்தாள் நதியா.

அவள் அலப்பறையில் புன்னகைத்தான். "முடிச்சிட்டா போச்சு என்னவென்று சொல்லு செய்திடுவோம்" குரலிலேயே அவனிடம் அவளுக்கான சலுகை தெரிந்தது. "கோயமுத்தூரில் சுரேஷின் இரண்டு மில்லுக்கும் நடுவில் ஒரு மில் உள்ளது அந்த மில்லை விலைக்கு வாங்க வேண்டும்" என்றாள் நதியா.

"வேண்டிடுவோம்..... பண பிரச்சனையா? அல்லது ஏதாவது பேங்கில் லோன் பிரச்சனையா?" என்று கேட்டான் கௌதம். "அதெல்லாம் பிரச்சனை இல்லை அந்த மில் ஒரு பெண்ணின் பெயரில் உள்ளது. அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகும் முன் மில்லை விற்க முடியாது அதுதான் பிரச்சனை" என்றாள்.

"சரி அப்படியானால் கல்யாணம் செய்து வைத்தால் சரிதானே" இலகுவாக சொன்னான் கௌதம் ஏதோ எதிரில் இருக்கும் கடையில் லட்டு வாங்கி வா என்பது போல்.

"அது அத்தனை எளிதாக இல்லையே அண்ணா" என்று கன்னத்தில் கை வைத்தாள் நதியா.

"உன் அண்ணன் வாழ்வில் முடியாது என்ற வார்தை இருக்கின்றதா என்ன?" ஒற்றை புருவம் தூக்கி கேட்டான். "எப்படியோ அந்த மில்லை வாங்கினால் போதும். சுரேஷின் தொழில் போட்டியாளர் மிஸ்டர் ஆலன் அதை வாங்க முயசிக்கின்றார். இல்லாவிட்டால் இந்த மில் இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை" என்ற தங்கையின் அருகே வந்து தலையில் கை வைத்தவன் "வாங்கி விட்டாய் என்று நினைத்துக் கொள்" என்றான்.

"ஏதாவது எக்கு தப்பாக பண்ணி வைக்காதே" என்று செல்லமாக மிரட்டி விட்டே சென்றாள்.

அசிஸ்டன்ட் யாதவை அழைத்து "யாதவ் நதியாவிடம் கேட்டு அவள் சொன்ன அந்த மில் தொடர்பான அனைத்து தகவல்களும் இன்னும் ஐந்து மணி நேரத்தில் எனக்கு வேண்டும்" என்றான். நான்கு மணி நேரத்திலேயே அனைத்து தகவல்களுடன் வந்து நின்றான் யாதவ். மூச்சை பிடித்து கொண்டு விபரத்தை கொட்டினான்.

"இந்த மில் ஸ்ரீனிகா என்ற பெண்ணின் பெயரில் உள்ளது பிரபல தொழிலதிபர் ராஜாராமின் மகள். அந்த பெண்ணிற்கும் தந்தைக்கும் ஏதோ ஒத்து வரவில்லை அதனால் அந்தப் பெண் கேரளாவில் படித்து அங்கேயே இருக்கிறாள். வீட்டிற்கு வருவதே இல்லை வந்தாலும் உடனே சென்றுவிடுவாள். திருவனந்தபுறத்தில் பிரபல சட்டத்தரணியான கேசவன் நாயரிடம் ஜூனியராக பணி புரிகிறாள்”.

கௌதம் ஒரு புருவம் உயர்த்தி பார்க்க "அவரே தான்" என்றவன் தொடர்ந்தான்.

"இது தொழிலதிபர் ராஜராமின் அப்பாவின் சொத்து இதை வாங்குவது என்றால் அவரது மற்ற பிள்ளைகளின் கையெழுத்தும் இருக்க வேண்டும். அவருக்கு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஆக இன்னும் இரண்டு பிள்ளைகள். அவரது தாத்தா பாட்டி ஏன் இந்த சொத்தை இந்த ஒரு பெண்ணுக்கு மட்டும் எழுதினார்கள் என்று தெரியவில்லை" என்றான்.

"அந்தப் பெண் சொத்தை விற்க மறுக்கிறாளா?" யோசனையோடு கேட்டான் கெளதம்.

"விசாரித்தவரையில் அப்படி எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த பெண்ணே நினைத்தாலும் விற்க முடியாத சூழ்நிலை அந்த சொத்தை விற்பதற்கு அவள் திருமணமாகி இருக்க வேண்டும் என அவர்களது தாத்தா பாட்டி உயில் எழுதி வைத்திருக்கின்றார்கள். உயில் பற்றிய மீதி விபரங்கள் நாளை வரும்" என்றான்.

சிறிது நேரம் மூடி யோசித்தவன் "ஒரு மேட்ரிமோனி சைட் பெயர் சொல்லு" என்று கேட்ட பாசை பார்த்து கோழி முழுங்கிய திருடன் போல் விழித்த யாதவ் "அதிலும் ஒரு சிக்கல் உள்ளது" என்று தயங்க 'என்ன' என்பது போல் பார்த்தவனுக்கு "அந்த பெண்ணிற்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அதை விட அந்த எண்ணத்தில் வரும் ஆண்களை இலகுவில் அருகில் விடுவதும் இல்லை" என்று பதிலளித்தான்.

"இன்ட்ரஸ்டிங்" என்றவன் "யாரையாவது அனுப்பி அவளை லவ் பண்ண வைக்க ஏற்பாடு செய்" என்றான். இதுக்கு ஏண்டா நான் எம்பிஏ படிச்சேன் மனத்துக்குள் புலம்பியவாறே சென்றான் யாதவ். மகராசி எப்ப வந்தாலும் இந்த மாதிரி வேலைக்குள் மாட்டி விடுறதே இவளுக்கு வேலை.

அடுத்த நாள் கன்பிரன்ஷ் மீட்டிங்கில் இருந்த கௌதமிடம் "பாஸ்...." கத்தியவாறே வந்த யாதவை கண்டிப்புடன் நோக்கினான் கெளதம். "அதை விடுங்கள் பாஸ் அந்த பெண் ஸ்ரீனிகா திருமணம் செய்ய போகிறாள்" என்று அந்த முழு அலுவலகத்துக்கும் கேட்கும் வண்ணம் அறிவித்தான்.

அழைப்பை துண்டித்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்து முன்னும் பின்னுமாய் லேசாக ஆடியவன் "நல்லது தானே"என்றான்.

"அது சுரேஷின் போட்டி கம்பனி அல்பேர்ட் ஆலன் ஏற்பாடு செய்த ஆள்" பரிதாபமாக கூறினான். "அதோடு ஆள் யார் என்ன என்பது அந்த பெண் ஸ்ரீனிகாவிற்கும் தெரியாது. அந்த பெண்ணிற்கு இந்த மில் கையை விட்டு போனால் போதும் என்ற எண்ணம் கேட்டால் சும்மாவே தந்துவிடுவாள் போல் இருக்கு."

சுழல் நாற்காலியில் அமர்ந்து பின் சாய்ந்து கண் மூடி சிந்தனையில் ஆழ்ந்தவன் "அந்த ஆளை மடக்கு அதற்கு பதிலாக நம்மாள் ஒருவனை அந்த இடத்திற்கு தயார் செய்" என்றான்.

"அது முடியாது சார்" என்றான் யாதவ்.

கேட்டு கேள்வி இல்லமால் மறுத்தவனை 'ஏன்' என்பது போல் பார்த்ததற்கு "ஆலன் தான் அந்த நபர்" சங்கடமாய் கூறினான்.

"ஆலன் இப்போது எங்கே?"

"சுவிஸ் போய் இருக்கின்றார்"

"எப்போது ரிட்டன்?"

“இன்னும் பதினான்கு நாட்களில்...”

‘இன்ரஸ்டிங்... அப்படி என்ன அந்த பெண் ஸ்பெஷல் கல்யாணமே செய்ய மாட்டேன் என்றவன் இப்படி ஒரு திருமணத்திற்கு சம்மதித்தான்' தனக்குள் எண்ணி கொண்டவன் "கேரளாவிற்கு டிக்கெட் புக் செய்" என்றான் கெளதம்.

🎻🎻🎻🎻🎻

அழகிய கேரளா....

ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்த கெளதம், கருப்பு காற்சட்டை வெள்ளை நிற போலோ நெக் டீஷர்ட், கூலர் சகிதம் ஒரு தடவை சுற்றி பார்க்க வந்து சேர்ந்தான் அஜா ஒரு "குட் மார்னிங் பாஸ்" உடன்

"ஏண்டா எப்ப பாரு காங் லீடர் மாதிரி பாஸ் பாஸ்" மெலிதாய் எரிந்து விழுந்தான்.

"அப்படியே பழகிட்டு பாஸ்" லக்கேஜை வாங்கியவன் பார்க் செய்திருந்த காரை நோக்கி நடக்க குறுக்கே தலையாட்டி விட்டு பின்னே சென்றான் கௌதம்.

முன் இருக்கையில் அமர்ந்தவன் "திருவனந்தபுரம் கேசவன் நாயர் ஆபீஸ்" என்றான்.

இவனின் நல்ல காலம் கேரளாவில் இவர்கள் கம்பனி சம்மந்தமான லீகல் வேலைகள் அனைத்தும் பார்ப்பது அவர்தான். இத்தனை நாளில் அவரது அலுவலகத்தில் சந்தித்ததில்லை. இருவரும் வெளியிடத்திலேயே சந்தித்துக் கொண்டார்கள்.

அவர் அலுவலகத்திற்கு சென்றால் அன்று பார்த்து அலுவலகத்தில் கேசவன் நாயர் இல்லை ஏதோ வேலை விடயமாக வெளியில் சென்று இருந்தார். அவனுக்கும் அது வசதியாகவே இருந்தது. அவன்தான் கேசவன் நாயரை சந்திக்க வரவில்லையே. அவனை அறிந்த கேசவன் நாயரின் உதவியாளர் கேசவன் நாயரின் அறையிலேயே அமர வைத்து விட்டு அவனுக்கு சாய் வாங்குவதாக கூறி வெளியே சென்றிருந்தான்.

வாஸ்துக்கோ அல்லது அழகுக்கோ தெரியவில்லை. அவர் அலுவலக அறையில் அவர் இருக்கைக்கு பின்னால் ஒரு பெரிய கண்ணாடி ஒன்று பொருத்தி இருந்தார். அவர் மேஜையில் அமர்ந்து போனை பார்த்து கொண்டிருந்தவன் பின்னால் கதவு திறக்கும் சத்தத்தை கேட்டு நிமிர கண்ணாடியில் தெரிந்த உருவத்தை பார்த்து மயங்கி போய் நின்றான்.

அவன் கண்ணில் முதலில் பட்டது அவளது அந்த குண்டு கண்கள் தான்.

அன்று ஏதோ விசேஷம் போல் கரும்பச்சை நிற அனார்கலி சுடிதார் அணிந்து முழுகிய தலையை விரித்து அதன் நடுவில் மல்லிகை சரத்தை சிறிதாய் வைத்திருக்க அவளது நீண்ட கூந்தல் இடையையும் தாண்டி முழங்காலை தொட்டு விடும் போல் இருந்தது. அவளது நிறம் வெள்ளையையும் சிவப்பையும் கலந்து செய்தது போல் ஒரு வித தாமரை வண்ணதில் இருக்க அந்த கரும்பச்சை நிற சுடிதார் அவள் நிறத்தை தூக்கி காட்டியது. கழுத்தில் மிகமிக மெல்லிய சங்கிலி, கையில் தோல் கடிகாரம் நெற்றியில் திலகத்தின் கீழ் கேரளா மக்களுக்கு உரிய மஞ்சளில் ஒரு கீற்று என மிகமிக சாதாரணமாக இருந்தவள் அவன் மனதை நொடியில் கொள்ளை கொண்டு விட்டாள். அவன் இதயம் சொன்னது நான் இத்தனை நாள் காத்திருந்தது இவளுக்காக தான் என்று.

அவன் மேற்கொண்டு என்ன செய்திருப்பானோ அதற்குள் உள்ளே வந்த கேசவன் நாயரின் உதவியாளர் "ஸ்ரீனிகா சாரினை கானான் வன்னிட்டுண்டு, தமிழனானு" என மலையாளத்தில் கூறினார்.

"ஸ்ரீனிகா" என்ற அந்த அழைப்பில் அவள் யார் என புரிய நொடியில் அவன் உணர்வுகள் அத்தனையும் இதயத்துள் பூட்டியவன் கண்ணாடியில் அவளை அளந்தான்.

ஐந்தரை அடி உயரத்தில் சற்றே மெலிந்த தேகத்துடன் நின்றவள் குண்டு கண்கள் மட்டுமே பத்து வருடத்திற்கு முன் தேடி களைத்த ஒரு முகத்தை ஞாபகப்படுத்த இதயத்தோடு மூளையும் குழம்பியது.

இந்த பத்து வருடங்களில் முதல் ஓரு வருடம் அவன் போகும் இடமெல்லாம் அவளை தேடினான். அந்த குண்டு கண்களும் கன்னங்களும் அதில் விழும் குழியும் எங்காவது தென்படுமா என்று மனம் ரகசியமாக அவளை தேடி கொண்டே இருக்கும்.

அதன் பின் லண்டனில் எம்பிஏ படித்து வந்த பின்னர் முன்பு போல் தேடவில்லை என்றாலும் எந்த பெண்ணிலும் ஏனோ ஈர்ப்பு தோன்றவில்லை. அவன் அம்மா திருமண பேச்சை எடுக்கும் போதெல்லாம் அன்று அவள் தன்னை பார்த்து சிரித்ததும் கன்னத்தில் விழுந்த அந்த குழியும் அம்மாவுடன் செல்லும் போது திரும்பி கையாட்டிவிட்டு சென்றதும், கன்னத்தில் முத்தமிட்டதுமே கண் முன் நிழலாட ஏதேதோ சொல்லி கல்யாண பேச்சை இத்தனை காலமும் சற்று தள்ளி போட்டிருந்தான். ஒரு தொழிலதிபனாக, அவனுக்கே அவன் செயல் சிறுபிள்ளைதனமாக தான்பட்டது. ஒரே ஒரு நாள் சந்தித்து பெயர் கூட முழுமையாக தெரியாத ஒருத்தி எங்கே இருக்கின்றாள் என்பது கூட தெரியாது. அவளை நினைத்து திருமணத்தை தள்ளி போடுவது விடலை பையன் போல் நடப்பது புரிந்தாலும் அவனால் அதை முற்று முழுதாக தவிர்க்க முடியவில்லை.

எந்த பெண்ணை பார்க்கும் போதும் இது போல் மனம் தடுமாறவும்மில்லை... அந்த ஸ்ரீனி நினைவு வரவில்லை. அதே நேரம் பெயரில் உள்ள பொருத்தத்தையும் மூளை குறிப்பெடுக்க லேசாக நெற்றியில் வியர்த்தது.

வந்தவள் இன்னும் அவனை சரியாக கவனிக்காமல் உதவியாளரிடம் விசாரிக்க இவனோ அவளையே வைத்த விழி எடுக்காது கூலரின் மறைவில் பார்த்திருந்தான் “சாரே இன்னு எவ்விடையானு” என அவரிடம் விசாரித்தாள்.

"இங்கிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் காணி பிரச்சினை, ஏக்கர் கணக்கில் காணி ஏதோ அளக்க வேண்டுமாம் சேவியர் உடன் போயிருக்கின்றார்" என மலையாளத்தில் பதிலளித்த உதவியாளன் "ஸ்ரீ குட்டி இன்னு வளர சுந்தரமாயிட்டு உண்டு என்னை விவாஹம் களிக்கமோ?" மெல்லிய கிண்டலுடன் அவளை பார்வையால் விழுங்கியவாறே கேட்டு வெளியே செல்ல ஏன் என்னவென்றே தெரியாமல் இங்கே ஒருவன் நெருப்பின்றி எரிமலையாய் கொதித்தான்.

அவன் கேள்விக்கு அழுத்தமான மெல்லிய புன்னகையை பதிலாய் தந்தவளை பார்க்க இவனுக்கு இதயம் லயம் தப்பியது.

இன்று கேசவன் நாயர் வெளியே சென்று விட அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஜூனியர்ஸ் நீதிமன்றம் சென்றுவிட்டனர். அலுவலகத்தில் இன்று அவள் மட்டும் தான் அவனை கவனிக்க வேண்டிய பொறுப்பும் அவளிடம் தான்.

"சார் இன்று கேசவன் ஐயா தூர இடம் போய் இருக்கின்றார். மற்ற சீனியார் கோர்ட்ஸ் போய்ட்டாங்க, என்ன விடயம் என்று சொன்னால் முடிந்தால் நான் செய்து தருவேன் இல்லையா கேசவன் சாரிடம் கேட்டு என்ன செய்யலாம் என்று சொல்கின்றேன்" தான் கொண்டு வந்திருந்த பைல்களை அருகில் இருந்த கப்போர்டில் அடுக்கியவாறே மலையாள வாடையுடன் கடகடவென பேசியவளை கூலரின் பின் ரசித்திருந்த கெளதம் தன்னை மறந்து "நீதான் தான் வேணும்" என்றிருந்தான்.

கோபத்துடன் திரும்ப 'அய்யய்யோ இவளுக்கு தமிழ் தெரியுமில்லை' என்று மூளை எச்சரிக்க சட்டென ஃபோனை எடுத்து காதில் வைத்து யாரிடமோ பேசுவது போல "இல்ல நீ தான் வேணும் என்று சொல்லி ஏதாவது சமாளி" லைனே இல்லாத ஃபோனில் டீ ஆத்தினான்.

கோபத்துடன் திரும்பிய ஸ்ரீனிகாவின் கண்கள் அவன் முகத்தை கண்டதும் மகிழ்ச்சியில் இன்னும் பெரிதாய் விரிந்தது. செவ்விதழ் சத்தமின்றி உச்சரித்தது "சேட்டா.."
 

Nandhaki

Moderator

தீரா🎻18

'ஹாஸ்பிடலில் யாரை சந்திக்க போகின்றாய்?' என்று கேட்க ஆசைதான் இருந்தாலும் முதல் நாளே ஓரளவுக்கு மேல் போவது நல்லது இல்லை என்று தோன்றவே விட்டு விட்டான்.

அங்கே நின்று அவன் விதிதேவன் சிரித்தான். அன்றே கேட்டிருந்தால் பல உண்மைகளை எப்போதோ அறிந்திருப்பான். பின்னொரு நாள் மருத்துவமனையில் ஸ்ரீனிகா உயிரை எப்படி காப்பது என்று தெரியாமல் நின்றிக்க மாட்டான்.

இறங்க போனவள் தன் கை இன்னும் அவன் கையில் இருக்க சங்கடமாய் பார்த்தாள். ஏனோ அவளின் பயம் அவனுக்கு வருத்தத்தை கொடுக்க தன் கைக்குள் இருந்த அவள் கையை தட்டிக் கொடுத்தவன் கண் மூடி திறந்து மென்னகையுடன் "நான் பார்த்துக் கொள்கின்றேன்" என்றான். அவன் புன்னகையில் உதட்டில் தானாக மலர்ந்த சிறு புன்னகையுடன் இறங்கிச் சென்றவளை ஹாஸ்பிடல் கட்டிடத்தினுல் மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவள் கண் மறைந்ததும் யாதவிற்கு அழைத்தவன் "அவன் பெயர் என்ன?" அடியும் நுனியும் இல்லமால் கேட்க "யார் பெயர் பாஸ்? குழம்பி போய் கேட்டான் யாதவ். தீடீரென அகமஸ்தாக போன் செய்து அவன் பெயர் என்ன என்றால் யார் பெயரை சொல்வான்

“ஸ்ரீனிகாவை காதலிக்க யாரையாவது ஏற்பாடு செய்தாயா?” குரலில் அனல் எழ கேட்க அங்கே போனை கீழே போட்டு விழும் முன் மீண்டும் பிடித்தவன் “பாஸ்... நீங்கதானே ஏற்பாடு செய்ய சொன்னீங்க” அழுவது போல் கேட்டான்.

பொறுமையற்ற பெருமூச்சை விட்டவன் "ஸ்ரீனிகாவை காதலிக்க ஏற்பாடு செய்தவன் பெயர் என்ன?" பல்லை கடித்து கொண்டு கேட்டான்.

"குமரன் நாயர்"

"இனி நான் பார்த்துக் கொள்கின்றேன் அவன் தேவையில்லை அவனை சும்மா இருக்கச் சொல்லு இல்லை பாலூற்ற வேண்டி வரும்" என்றவன் அப்படியே சீட்டில் சரிந்து அமர்ந்தான். பாசை முன் பக்க கண்ணாடி வழியே ஆச்சரியமாய் பார்த்து கொண்டிருந்தான் அஜா. முதல் முறையாக ஒரு பெண்ணுக்காக தவிக்கின்றான்.

அவன் என்ன செய்து கொண்டிருக்கின்றான் என்பது அவனுக்கே புரியவில்லை. அவன் இங்கு வந்த காரணம் என்ன செய்து கொண்டிருக்கும் வேலை என்ன. இங்கு வந்தது அவளிடம் பேசி எப்படியாவது அந்த மில்லினை தான் வாங்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவன் அதை தவிர அனைத்தையும் செய்து கொண்டிருந்தான்.

அங்கே யாதவ் புலம்பி தள்ளியவாறே குமரனுக்கு ஃபோன் போட்டான். “இவரே ஆள் ஏற்பாடு செய் என்று சொல்லுவாராம் பின் வேண்டாம் என்பாராம் நான் கேட்பேன் அவளை காதலிக்கிறவன் கேட்பானா?”

🎻🎻🎻🎻🎻

அடுத்த நாள் வேக நடையுடன் அலுவலகம் வந்தவன் அவளிடம் ஒரு அறிமுகப் புன்னகையை சிந்தி விட்டு நேரடியாக கேசவன் நாயரை சந்தித்தான். "ஸ்ரீனிகாவை இன்னும் சில நாட்களுக்கு என்னுடன் அனுப்பி வைக்க முடியுமா? இன்னும் சில ஒப்பந்தங்களை பற்றி ஆராய வேண்டும்" என நேரடியாகவே அவரிடமே கேட்டான்.

பதிலாய் இன்டர்கமில் ஸ்ரீனிகாவை உள்ளே அழைத்தவர் "மிஸ்டர் கௌதம் கிருஷ்ணாவுக்கு இன்னும் சில ஒப்பந்தங்களை சரி பார்க்க வேண்டுமாம். அவை தமிழில் இருப்பதால் உன்னை அழைக்கிறார் போய் வருகிறாயா? மலையாளத்தில் கேட்டார்.

அவள் தயங்கவே "நம்பகமான ஆள்தான்" மலையாளத்தில் சொல்லவே மறுத்து தலையசைத்தாள்

"அதில்லை சாறே இவருடன் போவதில் பிரச்சனை இல்லை. நான் சென்னை போகனும் ஒரு வாரம் லீவு" என்றவளை யோசனையாக பார்த்தார். இவள் இது போல் அடிக்கடி விடுமுறை எடுப்பவள் இல்லை. கெளதம் புரியாமல் பார்த்து கொண்டிருந்தான்.

கெளதமிடம் திரும்பி கேட்டார் "ஷி இஸ் இன் லீவ் ஃபார் எ வீக். ஷால் ஐ அரென்ஜ் சம்வன் எல்ஸ்"

"ஏன் என்னாச்சு" ஸ்ரீனிகாவிடம் கேட்டவன் குரலே ஒரு மாதிரி இருந்தது.

அவள் மௌனமாய் நிற்க "ஏன் என்னாச்சும்மா நேற்று கூட ஓகேயதனே இருந்தாய்? ஏன் திடீரென்று சென்னை பயணம்" அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு தொண்டை அடைத்து கொண்டது. அவள் அமைதியில் எழுந்த பெருமூச்சை சத்தமின்றி விட்டவன் "சரி இன்று வர முடியும் தானே" கேட்டான். அவளிடம் தனியாகத்தான் பேச வேண்டும்.

எது வித தயக்கம் இன்றி சம்மதித்தவளை சிறு குறுகுறுப்புடன் நோக்கினாலும் புன்னகையுடனே அனுப்பி வைத்தார். அவள் வேலையில் கெட்டிக்காரி என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இது போல வேற்று ஆண்களுடன் வெளியே செல்வதற்கு இதுவரை சம்மதித்ததே இல்லை எதையாவது சொல்லி மாட்டேன் என்று சாதித்து விடுவாள். ஆனால் இன்று கௌதமுடன் போவதற்கு எதுவித தயக்கமும் இன்றி சம்மதித்தது அவருள் ஏதோ எண்ணங்களை உருவாக்க எதுவரை போகின்றது என்று பார்ப்போம் என அமைதியாக இருந்தார்.

இன்று காரை கௌதமே எடுத்து வந்திருக்க அவன் அருகில் அமர்ந்திருந்தவள் போன் அடிக்க அதை அனைத்து மடியில் போட்டவள் தலையை பிடித்தாள்.

திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன் காரை ஓரமாக நிறுத்தினான் சிறிது நேரம் கழித்து தான் கார் நின்றதை உணர்ந்தவள் சுற்றிப் பார்க்க கையை கட்டிக் கொண்டு அவளையே பார்த்திருந்தான் கௌதம். அவனை 'என்ன' என்பது போல் பார்க்க "அதைத்தான் நானும் கேட்கிறேன் என்ன?" என்று கேட்டான் கௌதம்.

அவனருகே வாய் திறந்தால் அழுது விடுவோம் என்று பயந்தவள் அவனையே வைத்த விழி அகலாது பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு நேற்றே புரிந்துவிட்டது இவன் அருகில் தன் மனம் கலங்கி தடுமாறுகின்றது. காரணம் அவளுக்கு தெரிந்தே இருந்தாலும் எதிர் காலமே இல்லாத இந்த காதலை மனதில் வளர்ப்பது சரியாக படவில்லை. வாழ்கை இன்னும் எவ்வளவு தூரமோ.... என்னன்ன துன்பமோ யாரறிவார்? அத்தனைக்கும் அருகில் இருப்பவன் வரவா முடியுமா? மனம் யாரையாவது எதிர் பார்த்து சாய தொடங்கினால் பின் அதை நேராக நிறுத்தி வைப்பது கடினம். அதைதான் அவள் அனுபவத்தில் தெரிந்து வைத்திருக்கின்றாளே.

"பெரிதாக ஒன்றுமில்லை வேலை டென்டின் அவ்வளவு தான்" முயன்று சாதாரண குரலில் கூறிவிட்டாள்.

இன்று ஒரு நாள் கிடைக்கும் ஆறுதலுக்காக நிதமும் ஏங்க வேண்டியிருக்கும் நிர்தாட்சண்யமாகா மறுத்துவிட்டாள். கௌதமும் ஒரே ஒரு நாள் பழக்கத்தில் அவள் மனதில் உள்ளது அனைத்தையும் சொல்வாள் என்று நினைக்கவில்லை. ஆனாலும் இப்படி ஒதுக்குவாள் என்பதையும் அவன் எதிர் பார்க்கவில்லை.

‘இன்டர்ஸ்டிங்’ மனதினுள் நினைத்தவன் காரை ஸ்டார்ட் செய்தவாறு "என்ன திடீர் சென்னை பயணம். ஆலன் பார்த்த மாப்பிள்ளை பிடித்துவிட்டதா?" ஏனோ அவளின் சென்னை பயணம் பற்றி தெரிந்தே ஆக வேண்டும் போல் ஓர் உந்துதல்.

ஒரு கணம் அவள் முட்டை கண்ணை விரித்து ஏன் இந்த கொலை வெறி என்ப போல் பார்த்தவள் "அதெல்லாம் ஒன்றுமில்லை" என்றாள்.

"அப்படியானால் வீட்டில் வரன் பார்த்திருக்கின்றார்களா?" ஏனோ அவனால் அவள் விடயத்தில் நாகரீகம் கருதி ஒதுங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. "இன்று அனைவருக்கும் என்ன நடந்தது? எல்லோரும் ஏன் திருமணத்தைப் பற்றி பேசுகின்றீர்கள்?" எரிச்சலுடன் கேட்டாள் ஸ்ரீனிகா.

"வேறு யார் பேசியது?

"கேசவன் ஐயா"

"என்ன கேட்டார்?"

"கல்யா.... இப்போ அதை தெரிந்து என்ன செய்ய போகின்றீர்கள்?"

"ஒன்றுமில்லை" என்றவன் காரை நிறுத்த திரும்பி பார்த்தவள் கண்களில்பட்டது கஃபே.

"வா.." ஒற்றை சொல்லோடு இறங்கினான்.

அவளுக்குமே தலைவலியில் ஒரு காஃபி குடித்தாள் நன்றாயிருக்கும் போல் தோன்றவே இறங்கினாள். உள்ள சென்றவன் அவளுக்காக கதவை பிடித்து வைத்திருக்க, சங்கடமான சிறு புன்னகையுடன் ஏற்று உள்ளே சென்றவள் உள்ளங்கை வியர்த்தது. இது எங்கே போய் முடிய போகின்றதோ?

மூன்றாவது மாடியில் வெளியே வேடிக்கை பார்க்க கூடிய இடத்தில் ரூம் போல் அமைந்திருந்த ஒரு இடத்தை நோக்கி கையால் சைகை செய்தான். ஒரு தரம் விழியால் மட்டுமாக அந்த இடத்தை அளந்தவள் ‘நைஸ் பிளேஸ்’ மனதினுள் நினைத்து கொண்டாள்.

சோபா போன்ற இருக்கை, நடுவே காபி டேபிள் என நட்சத்திர தரத்தில் இருந்தது. இருக்கையை கை காட்டி அவள் அமர்ந்ததும் முன்னால் அமர்ந்தான். தலை சாய்த்து பார்த்து "நீங்கள் லண்டனிலா படித்தீர்கள்?" அவள் கேட்பதன் காரணம் புரிந்து உதடு பிரியாமல் முறுவலித்தவன் வந்த வெயிட்டரிடம் "டூ காஃபி" என்றான்.

வெளியே வேடிக்கை பார்த்த அவளையே சற்று நேரம் மௌனமாய் பார்த்திருந்தவன் "சோ..." என்ற வார்தையில் அவனை கேள்வியாய் நோக்க "கொஞ்சம் பேசுவோமா?" கேட்டான்.

"எதைப்பற்றி" இவனும் திருமணத்தை பற்றி பேச போகின்றானா.. என்ற எண்ணம் எழ அது ஆலனோ சுரேஷே பேசிய போது எழுந்த எரிச்சல் போல் இல்லாமல் இனம் புரியாத உணர்வில் இதயம் மெல்லிதாய் படபடத்தது.

"உனக்கு..." ஒரு கணம் இடைவெளி விட்டு "என்னை விட சிறியவள் உன்னை என்று அழைப்பதில் ஆட்சேபனை இல்லை தானே" சற்று முன்புறமாக குனிந்து கேட்க இல்லை என்பது போல் தலையாட்டி வைத்தாள்.

"உனக்கு இந்த மில் தலையிடி இல்லையா?" அவள் முன்னே அனைத்து வைத்திருந்த போனை கண்கள் பார்க்க கேட்டான். சட்டென உதட்டை பிதுக்கி முகம் சோகமாக மாற ஆமோதித்தவளை பார்க்க பூனை குட்டி போல் இருக்க அவன் முகத்தில் முறுவல் அரும்பியது.

"அதை யாருக்கு விற்பதாக முடிவு செய்து இருக்கின்றாய்?" பரிதாபமாய் பார்த்தாள். அவள் அமைதியாகவே இருக்க "விற்கதானே போகின்றாய்?" ஒற்றை புருவம் உயர்த்தினான் "ஏன் ஆலனுக்குத்தான் விற்க வேண்டும் என்று ஏதாவது எண்ணமா?" அவன் குரலை அவளால் இனம் பிரிக்க முடியவில்லை.

"இப்போது பிரச்சனை யாருக்கு விற்பது என்பது இல்லை. யாரை கல்யா....." இடையில் நிறுத்தி "யாருக்கு விற்பதாய் இருந்தாலும் உயிலின்படி நான் கல்யாணம் செய்து கணவரும் கையெழுத்து போட வேண்டும்" ஆயாசமாய் சொன்னாள். கடந்த இரண்டு மாதத்தில் எத்தனை பேரிடம் எத்தனை தரம் கூறினாள் என்ற கணக்கே மறந்துவிட்டது.

"எப்போதுவது திருமணம் செய்து தானே ஆக வேண்டும்" கேட்டவனிடம் "எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை" என்றாள் வறண்ட குரலில். நிமிர்ந்து பார்க்க அவள் முகமும் உணர்ச்சிகளை தொலைத்து வறண்டு இருந்தது நொடியில். தலையை குலுக்கி தன்னை மீட்டு வந்தவள் "இதற்கு ஒருவழி இருக்கு அது சரி வருமா என்று தெரியவில்லை. சென்னை போனால் தான் தெரியும்" யோசனையுடன் கூறினாள்.

"சரி விற்பதாய் இருந்தால் யாருக்கு விற்பதாக யோசனை" கேட்டவனுக்கு பதிலாய் "சுரேஷ் ஏட்டவிற்குத் தான்" தயக்கமின்றி பதிலளித்திருந்தாள். பயந்தவள் தான் ஆனாலும் அவள் சட்டத்தரணி. பயத்தை வெளிகாட்டி கொள்வது மிகமிக குறைவு. ஏனென்றால் இந்த உலகம் பயப்படுவது தெரிந்தால் இன்னும் ஏறி மிதிக்கும் என்பதை அனுபவபூர்வமாக அறிந்து வைத்திருந்தாள். எப்படியோ தில்லாக சமாளித்து வீட்டினுள் சென்று அழுது தீர்க்கும் ரகம். தினமும் நீதிமன்றில் குற்றவாளிகள் நடுவே சுற்றுபவள். ஓர் வாரத்திற்கு முன் சந்தித்த ஆலனை முதல் பார்வையிலேயே இனம் கண்டுவிட்டாள். எப்படி வெட்டி விடுவது என்று தெரியாமல் தான் விழித்து கொண்டிருந்தாள்.

"கொஞ்சம் பெர்சோனலாய் பேசுவோமா?" என்றவனை புரியாமல் பார்க்க "முதலில் நான் சொல்வதை முழுதாய் கேள். அதன் பின்பு யோசித்து முடிவு சொல்" அவள் கண்களையே பார்த்து கொண்டு கூறினான். வெயிட்டர் காஃபி கொண்டு வர ஒன்றை அவனுக்கு நகர்த்தியவள் 'சொல்லுங்கள்' என்பது போல் பார்த்தாள்.

"கல்யாண ஒப்பந்தம் ஒன்று செய்வோமா?" ஏதோ பிக்னிக் போவோமா என்பதை போல் கேட்க அவள் வாயில் இருந்த காஃபி ஒரு பக்கத்தால் வழிந்தது.

"யாருக்கும் யாருக்கும்" என வினவ சிரிப்பை அடக்கியபடி "எனக்கும் உனக்கும் தான்" என்றான். இவன் சொன்னதைதான் நான் கேட்டேனா என்ற சந்தேகத்துடன் பார்க்க "சந்தேகப்படாதே நீ சரியாக தான் கேட்டாய்" என்றான் மெல்லிய கேலியோடு.

அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க "பொறு சிலது நான் சொல்லி விடுகின்றேன். அதன்பின் நீ உன் முடிவை சொல்லலாம்" என்றவனை இன்னும் அதிர்ச்சி மாறாமல் பார்த்திருக்க "பத்து வருடத்திற்கு முன் நான் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவள் முழுப்பெயர் தெரியாது. உன் பெயரில் பாதி ஸ்ரீனி.. அதை சொல்லும் போதே அவன் முகத்தில் அப்படி ஒரு பரவசம்.

ஸ்ரீனிகாவின் கண்கள் இன்னும் விரிந்து அவனையே உள்ளித்து விடும் போல் இருந்தது. அவள் கண்களில் விழ துடித்த மனதை கட்டி வைத்தவன் "அவளை இன்னும் தேடி கொண்டிருக்கின்றேன். கிடைக்கவில்லை ஒரு நாள் கண்டு கொள்வேன் என்று ஒரு நம்பிக்கை" நிறுத்தி மூச்சு விட அப்படியானால் என்னை ஏன் ஒப்பந்த அடிப்படையில் மணக்க கேட்கின்றான். நான் தானே அது..... சிந்தனை சிதறல்களாலகா யோசனை ஓட அவனே அதற்கு பதிலையும் கூறினான்.

"எனக்கு அந்த ஸ்ரீனியை தவிர வேறு யாரையும் மணக்க இஷ்டமில்லை. வீட்டில் அம்மா என் பேச்சை கேளாமலே பெண் பார்க்க தொடங்கிவிட்டார். இப்படியே விட்டால் அம்மா என் கையை காலை கட்டியாவது திருமணம் செய்து வைத்துவிடுவார்" என்ற அவன் பேச்சில் அவன் கை கால் கட்டப்பட்டு மணவறையில் இருப்பது போல் கற்பனை வர சட்டென சிரித்துவிட்டாள்.

அவள் கண்ணிலிருந்தே எண்ணத்தை படித்தவன் "உன்னை" என்று அவள் தலையை பிடித்து ஆட்டியவன் "உனக்கு அவசரமாக திருமணம் என்ற ஒரு பெயர் வேண்டும். எனக்கு அம்மாவிடமிருந்து தப்பிக்க வேண்டும். இது ஒர நல்ல வழி என்பது என் எண்ணம்" நிறுத்தி அவன் முகம் பார்த்தவன் "நன்றாக யோசி அதன் பின் முடிவெடு அவசரம் இல்லை. இப்போதே சொல்ல வேண்டும் என்பதும் இல்லை." என்றான்.

அவன் சொல்லவும் கண்களை மூடியவள் தன் உணர்வுகளை தானே வகை பிரிக்க முடியாமல் தடுமாறினாள். இத்தனை வருடங்களாக என்னை தான் நினைத்து கொண்டிருக்கின்றானா? இதயத்தில் ஊற்றாய் மகிழ்ச்சி பொங்கியது. அதே நேரம் செல்லமாய் சுனங்கியது. இவனை பார்த்ததும் நான் அடையாளம் கண்டுவிட்டேன் இவனுக்கு என்னை தெரியவில்லையா? ஸ்ரீனி என்ற பெயரில் கூட சந்தேகம் வரவில்லையா? ஒப்பந்த திருமணமா வேணும்? இருங்கள் காதை முறுக்கி வைக்கின்றேன் என மனதினுள் நினைத்தவள் அது வேறு ஒரு ஸ்ரீனியாக இருந்ததால் தன் சந்தேகத்தை கேட்டாள்.

"ரொம்ப நாள் பழக்கமோ...?" அவன் பார்வையில் காதோரம் முடி ஒதுக்கி பார்வை ஒரு புறம் சாய "இல்லை பெர்சனலா பேசலாம் என்று சொன்னீர்களா....?" இழுத்தாள்.

தலை சாய்த்து சுவாரசியமாக பார்த்தவன் "இல்லை ரொம்ப நாள் பழக்கம் எல்லாம் இல்லை ஒரே ஒரு நாள் தான் பார்த்தேன் ஆனால் இன்று வரை மறக்க முடியவில்லை" என்றான்.

"அவளை பார்த்தல் எப்படி அடையாளம் தெரிந்து கொள்வீர்கள்?" இதயம் படபடக்க ஆர்வமாய் கேட்டாள்.

முகம் மிக மென்மையுற "தெரியல..... அவளுக்கு நிலா போல் வட்ட முகம்.... அவள் கன்னத்தில் இங்கே" அவன் கன்னத்தின் மேற் புறத்தை சுட்டு விரலால் தொட்டு காட்டியவன் "அவளுக்கு கன்னக்குழி விழும்....” அவன் சொல்ல கடந்த இரண்டு வருடமாய் எங்கோ தொலைந்து விட்ட அந்த குழியை விரல் நுனியால் தேடினாள்.

அவன் சொல்லிக் கொண்டிருந்தான் “அவளை பார்த்ததும்.. அது..... அவள்தான் என்று தெரியும் என்று நினைக்கின்றேன். உனக்கு தேவைபட்டால் எப்போது வேண்டுமானாலும் மீசுவல் டிவோர்ஸ்க்கு தருவேன். எனக்கு அவசரமில்லை அவளை தேடி பிடித்த பின்னர் எனக்கு டிவோர்ஸ் தந்தால் போதும்" என்றான்.

அப்படியானால் என்னை தெரியவில்லையா? என்றால் என்னை காதலிக்கவில்லை என்று அர்த்தமா? எப்படி அடையாளம் தெரியாமல் போகும் பிளாஸ்டிக் சர்ஜரியா செய்து வைத்திருக்கிறேன். திடீரெனெ ஏமாற்றம் ஊசியாய் இதயத்தை குத்த சட்டென எழுந்தாள் "வாஷ்ரூம் போக வேண்டும்" தெளிவில்லாமல் முணுமுணுத்து விட்டு வேகமாய் வெளியே சென்றாள். அவனோ தன் ஸ்ரீனியின் நினைவில் அவள் முகமாற்றங்களை கூட கவனிக்க மறந்து மூழ்கியிருந்தான்.
 

Nandhaki

Moderator

தீரா🎻19

உண்மை என்னவென்றால் ஸ்ரீனிகா கௌதம் வீட்டிற்கு வந்த போது அவளுக்கு பதினைந்து வயது முடிந்து பதினாறு வயது தொடங்கியிருந்தது. அவள் பெண்ணாக மலர்ந்தது அதன் பின்னரே. கௌதம் வீட்டுக்கு வந்த போது அவள் பால்சதை மாறாத குழந்தை முகத்துடனே இருந்தாள்.

அதன் பின் எல்லா பெண்களுக்கும் போல் பருவமடைந்ததும் அவளது கன்னத்து எலும்புககள் மாற அவளின் முகமும் பெரியளவில் மாறிவிட்டிருந்தது.

அடுத்த இரண்டு வருடத்தில் சடசடவென உடலில் ஏற்பட மாற்றங்களுடன் அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களுடன், தொடர்சியான ஹொஸ்டல் வாசம், இரண்டும் கெட்டான் பருவத்தில் அடுத்தவர் கேலிப் பேச்சு, அதை அம்மாவிடம் சொல்லாமல் மறைத்து தனக்குள்ளேயே வைத்து மருகியது, சிறு வயதில் ஏற்பட்ட பயம் அதற்குரிய சிகிச்சையின்றி அப்படியே வளர்ந்தது இவற்றால் ஏற்பட்ட மனதின் உளைச்சலும் சேர அவளுக்கு மீண்டும் அந்த பூசினால் போல் உடல்வாகும் அந்த குண்டு கன்னம் வைக்கவும் இல்லை. கன்னங்கள் ஒட்டிப் போனதில் அவள் வட்ட முகமும் தொலைந்திருந்து. அவள் திருமணம் முடியும் வரை பூசினால் போல் உடலையும் அவள் குழி விழும் குண்டு கன்னத்தை மீண்டும் ஒருவரும் பார்க்கவும் இல்லை.

அவள் பெண்ணாக மலர்ந்து இரண்டு வருடங்கள் கழித்து பார்த்தவர்கள் அவளை அடையாளம் காண சிரமப்பட்டது உண்மையே. அவளை சில வருடம் கழித்து பார்த்த அவளது சித்தி சாரதா கூட அடையாளம் காண திணறிவிட்டிருந்தார். அந்த அளவு மெலிந்து உரு மாறி போயிருந்தாள்.

வாஷ்ரூம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போக எதிரே கண்ணாடி தென்பட அருகே சென்று தீவிரமாய் தன் முகத்தை கண்ணாடியில் ஆராய்ந்தாள். அதில் திருப்தியின்றி நாடியில் இரு விரல் வைத்து அவ் விரல்களால் இருபுறமும் முகத்தை திருப்பி திருப்பி பார்த்தாள். 'அந்தக் கன்னம் மட்டும் தான் இல்லை, ஏன் இவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை' மனதினுள் யோசித்தவள் தலையை உலுக்கி விட்டு முகத்தில் நன்றாக தண்ணி அடித்து கழுவி விட்டு திரும்பி சென்றாள்.

இன்னும் அவன் ஸ்ரீனி நினைவிலேயே இருப்பதைப் பார்த்து "க்கும்" தொண்டையை கணைத்தாள். மெல்லிய திடுக்கிடலுடன் திரும்பியவன் முன் சூடான காஃபியுடன் ஸ்ரீனிகா இருந்தாள்.

காபி கப்பின் வட்டத்தை விரலால் தடவியவாறு "எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும் சென்னை போய் வந்த பின் உங்களுக்கு எனது முடிவை சொல்லலாமா?" என கேட்டாள்.

"நிச்சயமாய்..." என்றவன் "எப்போது சென்னை போகிறாய்? சென்னையில் வைத்தே கூட உனது முடிவை சொல்லலாம்" என்றான்.

அவள் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க "நான் சென்னைவாசிம்மா... தெரியும் தானே" கிண்டலாக கூறினான்.

“அப்படியானால் இங்கே” என்று ஆச்சரியமாய் கேட்டவளுக்கு பதிலாக “இங்கே ஆற்றங்கரைகளுக்கு அருகில் சில ஹோட்டல்களும் ஆறுகளில் சில போட் ஹவுஸ் கப்பல்களும் இருக்கு. அவை தொடர்பாக பார்ப்பதற்காக அடிக்கடி வந்து போவேன்" என்றான்.

"ஓ...." என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இந்த திடீர் அமைதியில் ஏதோ போல் உணர்ந்தவன் "எப்போது சென்னை போகிறாய்?" கேட்டான்.

"இன்றிரவு அல்லது நாளை காலை இன்னும் பஸ் புக் பண்ணல" ஏதோ சிந்தனையுடன் கூற யோசனையுடன் அவளை நோக்கியவன் "நாளை காலை ஒன்பது மணி ஃப்ளைட் வர முடியுமா?" ஏதோ சொல்ல எடுத்தவளிடம் "அங்கேயும் சில ஒப்பந்தங்களை பார்க்க வேண்டி இருக்கின்றது. அதற்கான அலவன்ஸ் ஆக வைத்து கொள்ளலாம்" இலகுவாக முடித்துக் கொண்டான்.

🎻🎻🎻🎻🎻

அந்த மருத்துவமனையின் ஐந்தாவது மாடியின் அறையில் அமர்ந்திருந்தாள் ஸ்ரீனிகா. முன்னே படுக்கையில் இருந்தவரையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தவள் கண்களில் இருந்து நீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.

கட்டிலில் எலும்பும் தோலுமாய் படுத்திருந்தார் ஸ்ரீமதி. அவர் அழகையும் தன்னம்பிக்கை நிறைந்த சிரிப்பினையும் நோய் காவு கொண்டிருந்தது. நேரத்திற்கு உறங்குவார் விழிப்பார். கையை அழுத்தி பிடித்தால் வலியில் முகம் சுளிப்பார். எப்போதாவது ஸ்ரீனிகாவை அடையாளம் கண்டு புன்னகைப்பார். மொத்தமே பத்து தரம் ஸ்ரீனிகாவை அடையாளம் கண்டிருப்பார். இதோ விபத்து நடந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகின்றது. நம்பிக்கையுடன் காத்திருக்கின்றாள் அம்மா பழைய அம்மாவாக எழுந்து வருவார் என்று.

அன்று தாத்தாவின் ஆசையை மறுக்க முடியவில்லை அவளால். அதிலும் அம்மா மகளின் தன்மான உணர்சியை மதித்து முற்று முழுதாக சுய சம்பாத்தியத்தில் உருவாக்கிய மில்லை கொடுத்தது உண்மையில் அவள் மனதை தொட்டிருந்தது. எனவே மில்லை தானே வைத்திருந்து அதிலிருந்து வரும் முழு வருமானத்தையும் கஷ்டப்பட்ட குழந்தைகளின் படிப்பு செலவிற்கு உதவுவோம் என்று தான் நினைத்தாள். ஆனால் யாருமில்லாதா தனியான பெண் என்ற எண்ணத்தில் தொழில் போட்டியில் அந்த மில்லை தொட்டு வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறி போனாள்.

அவர் கையை பிடித்து கன்னத்தில் வைத்து அழுத்தி கொண்டவள் “என்னால முடியல அம்மா போறவன் வாறவன் எல்லாம் மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று வாரான். அந்த மில்லை நான் என்ன செய்ய?” கண்ணீர் கோடாய் இறங்கி அவர் கையை நனைத்தது.

அவள் கண்ணீர் கையை நனைக்க அவரிடம் அசைவு தெரிந்தது. அவள் கையை இறுக பிடித்தவர் சிரமப்பட்டு தொண்டையை அசைத்து "ஸ்ரீம்மா, தைரியம்" மெதுவே கூறினார். கண்ணில் நீர் வழிய வேகமாக தலையட்டியவள் "அம்மா உங்கள் மருமகன் என்னை கல்யாணம் செய்ய கேட்டார்" அவர் நினைவு போகும் முன் அவசரமாக கூறினாள்.

அவர் கண்களில் ஆத்மார்த்த திருப்தி தென்பட தலையில் மிக கஷ்டபட்டு கைவைத்தார். ஆசீர்வதிப்பது போல். அதிக உணர்ச்சி வசப்பட திடீரென்று பிட்ஸ் வந்துவிட்டிருந்தது. வேகமாக எமர்ஜென்சி பெல்லை அடித்தாள். மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்து உறங்க வைத்து விட்டு அவளிடம் வந்தார். அவரும் பார்த்து கொண்டு தான் இருக்கின்றார். இந்த சிறு பெண் படும் பாட்டை.

"யூ நோ இட்ஸ் லூசிங் கேம்" என்றவருக்கு பதிலாய் தெரியும் என்று ஆமோதித்தவள் "எனக்கு வெடிங்... நினைவு வரும் போது சொல்லணும் என்று நினைத்தேன் சொல்லிட்டேன்" எந்த உணர்ச்சியும் இன்றி கூறியவளின் மனதில் கொந்தளிக்கும் உணர்வுகள் புரிய தோளில் தட்டிக் கொடுத்தார். "அந்த விபத்தில் அவர்களுடைய நரம்பு மண்டலம் மோசமாக சிதைந்து போய்விட்டது. அதுதான் அவர்களால் மீண்டு வர முடியாமல் இருக்கிறது" ஒரு கணம் இடைவெளி விட்டவர் "விரும்பினால் கருணை...." அவள் திகைத்த பார்வையில் பாதியில் நிறுத்தியவர் "அவர்கள் நரம்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டு வருகின்றது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் சிதைவு வீதம் அதிகமாக உள்ளது." மெதுவே கூறினார் "அதிகம் ஆறு மாதம் தான்"

புரிந்து கொண்டதாய் தலையாட்டி வைத்தாள். அதே நேரம் நிம்மதியாய் உணர்ந்தாள். நினைவு வந்த போது தன் திருமணத்தை பற்றி சொன்னது ஏதோ ஒரு விதத்தில் அவருக்கு மனதில் அமைதியை கொடுத்திருக்கும் என நினைத்தவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு "இப்போது பார்க்கலாமா?" என்றவளை ஆதுராமாய் பார்த்தவர் போ என்பது போல் கையசைத்து சென்றார்.

ஸ்ரீமதியின் அருகே சென்று அமர்ந்தவள் கையை பிடித்துக் கொண்டு 'அம்மா நான் தைரியமாக இருப்பேன். கல்யாணமும் செய்ய போறேன் இனி என்னை பற்றி கவலைப் பட வேண்டாம், நீ... நீங்... நீங்கள் எதை பற்றிய கவலையும் இன்றி அமைதியாக உறங்குங்கள்" சில கணங்கள் உதட்டை கடித்து தன்னை நிலைப்படுத்தியவள் "என் மகளாக வாங்க. இப்போது நான் பாட்டு பாடுகின்றேன் நீங்கள் உறங்குங்கள்” இப்படித்தான் அவருக்கு புரிகிறதோ இல்லையோ அவள் பேசிக் கொண்டே இருப்பாள்.

அவள் சிறுவயதில் தன்னை உறங்க வைக்க ஸ்ரீமதி பாடும் பாடலினை எப்போதுமே அவரருகே பாடிவிட்டே செல்வாள். தத்தாவுக்கும் இந்த பாடல் பிடிக்கும் என்று பாடுவார். அவளுக்குத்தான் தமிழ் பேசுவதில் சிரமம். ஸ்ரீமதி சரளமாகவே பேசுவதுடன் நன்றாக பாடவும் செய்வார். சங்கிதத்தில் அவளின் குரு அம்மாதான்.

பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

பாட்டுத்தான் தாலாட்டுதான்
கேட்க கூடும் என நாளும்
வாடினால் போராடினால்
வண்ண தோகை நெடுங்காலம்

தாய் முகம் தரிசனம் தரும் நாளிது
சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது
பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது

ஓ ஓ ஓ ... மயக்கத்தில் மனம் சேர்ந்தது

பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ

யார் மகள் இப் பூ மகள்
ஏது இனி இந்த கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே
வாழும் இனி இந்த குருவி

பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
நாளெலாம் தளிர் விடும் இந்த பூவனம்
வானம் பூமி வாழ்த்தும்
வாடை காற்றும் போற்றும்(2)

ஓ.. ஓ.. ஓ.. ஓ.. புதுக்கதை அரங்கேறிடும்

பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

மெல்லிய குரலில் இனிமையாய் பாட ஸ்ரீமதியின் முகத்தில் புருவ சுளிப்பு நீங்கி அமைதி ஏற்பட ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார். அவர் கையை பற்றி அதில் கன்னத்தை வைத்தவாறே உறங்கி போனாள் ஸ்ரீனிகா.

🎻🎻🎻🎻🎻

கடிகாரத்தை பார்க்க மணி ஏழு ஐம்பது என்று காட்டியது. காலை எட்டு மணி அளவில் வருவதாக கூறிய ஸ்ரீனிகா இன்னும் வந்திருக்கவில்லை. விமானம் புறப்படுவதற்கு இன்னும் அரை மணி நேரமே இருக்க போனை எடுத்து அவளுக்கு அழைத்தான். உடனே பதில் அளித்தவள் "உள்ளே வந்துட்டேன் செக் இன் முடித்துவிட்டேன். உங்களை பார்த்துட்டன் வாரன்" கேள்வி கேட்பதற்கு முதல் தேவையான பதில்களை சொல்லியவாறு அவன் அருகில் வந்து நின்றாள்.

"வாவ்" மெலிதாய் வாய்க்குள் கூறியவன் "லெட்ஸ் கோ" என்றவாறு விமானத்தை நோக்கி நடந்தான். "சீட் அருகருகேவா இல்லை தூரமா?" அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்தவாறே கேட்டாள். "அருகருகே தான் ஏன்?" கேள்வியாய் புருவத்தை உயர்த்தினான்.

"இல்ல விமானம் மேலெழும் போது பயம் அதுதான் கேட்டேன்" மெலிதாய் அசடு வழிந்தாள்.

"இன்னும் என்னவெல்லாம் பயம்" கேட்டவனுக்கு பதிலாய் "இடி மழை இருட்டு, அது தெனாலி கமல் மாதிரி ஒரு லிஸ்ட் இருக்கு" சிரித்தவளை பார்த்து "அத்தனையா....?" என்று புருவம் உயர்த்தினான்.

"ஹ்ம்ம் சிலது எனக்கே சிரிப்பாக இருக்கும்" பேசியவாறு இருவரும் விமானத்தில் உள்ளே ஏறி அவர்கள் இருக்கையை தேடி அமர்ந்தனர்.

"பயப்பட கூட பயப்படுவேன்"

"இன்ட்ரஸ்டிங்..."

சீட் பெல்ட் போடுமாறு அறிவிப்பு வர ஸீட் பெல்டை போட்டுவிட்டு கண்களை மூடி அவன் கையை இறுக பிடித்துக் கொண்டாள். கையைப் பிடித்துக் கொண்டு இருந்தவளை குனிந்து நோக்க உள்ளுனர்வு எதையோ ஞாபகப்படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. கௌதம் அதை என்னவென்று கண்டு கொள்ள முடியாமல் தவித்தான்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவளை நோக்கி திரும்பி "என்னுடன் வீட்டிற்கு வருகிறாயா?" கேட்டான்.

"இல்லை, இன்று வேண்டாம். என்னோட ப்ரெண்ட் வர சொல்லியிருக்கேன். கொஞ்சம் வேலை இருக்கு, சந்திப்போம்" கை கொடுத்து விலகி சென்றவளை பார்வையால் பின் தொடர்ந்தான். அங்கே ஒருவன் அவளை கண்டதும் தூக்கி ஒரு தரம் சுற்றி இறக்கிவிட்டான். அவனைப் பார்த்ததில் ஸ்ரீனிகாவின் முகத்தில் ஆச்சரியம் வெளிப்படையாக தெரிய அவள் தோளில் கை போட்டு அழைத்துச் சென்றான். அவளும் புன்னகையுடன் அவனுடன் இணைந்து நடந்தாள்.

இங்கே இவனுக்கு அண்ட சண்டம் எல்லாம் பற்றிக் கொள்ள கை முஷ்டியாய் இறுகியது.

"நீங்க எப்படி இங்கே வசந்தை தானே வர சொன்னேன்.... சோ நீங்க சுகமா? சாரதாம்மா சுகமா? ஸ்ரீநிஷா என்ன செய்கிறாள்? படிப்பு முடிந்துவிட்டதா? திரும்பி வந்துட்டாளா? இன்றா நாளையா தாத்தா பாட்டியின் நினைவு நாள்?" கேள்வி மேல் கேள்வி கேட்டவளை பார்த்தவன் "இன்னும் ஒரு வார்த்தை மிஸ்ஸிங் அதையும் சேர்த்து கேட்டால் பதில் சொல்லுறேன்." இலகுவாக கூறியவாறே ஸ்டியரிங்கை திருப்பினான்.

உதட்டை சுழித்து தலையை வெட்டி திருப்பியவள் அடைய வேண்டிய இடத்தை அடைந்தும் வட்டமடித்தவனை பார்த்து முட்டை கண்ணால் முறைத்தவள் "இப்ப நீ உள்ளே போக போறியா இல்லையா?"

"நீ அந்த வார்த்தை சொன்ன மறு நிமிடம் உள்ளே தான்" உதட்டை இழுத்து வைத்து சிரித்தான்.

"ஓஹ் அப்படியா, சரிடா அண்ணா உள்ளே போவோம்டா"

காரை வீட்டினுள் திருப்பியவாறே சத்தமாய் சிரித்தவன் " யூ மீன் டா"

"ஆமாண்டா டால்டா"

"அஹ் ட்ரிபிள் டா" நெஞ்சில் கை வைத்தான். மெலிதாய் சிரித்தவாறே கதவை திறந்து இறங்கியவளை வரவேற்றார் சாரதா. "அம்மா எப்படி...?" என்றவருக்கு உதடு பிரியா புன்னகையை பதிலாய் கொடுத்தாள்.

அவர்களுடன் சிறிது நேரம் பேசியவள் “கிளைன்ட் கால் எடுப்பார்கள். அதோட பிளாட்டுக்கு புதிதாக வாடகைக்கு வர கேட்டிருந்தார்கள், இன்னும் இரண்டு மணி நேரத்தில் அங்கே வருவார்கள். அவர்களையும் பார்த்து பேச வேண்டும் சோ நான் போக வேண்டும்” என்று விடைபெற்று சென்னையில் ஸ்ரீமதி வாங்கியிருந்த வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

சாரதாவும் தடுக்கவில்லை. என்னதான் தன்னிடம் அன்பாக பழகினாலும் அம்மாவும் மகளும் ராஜாராமின் நிழல் விழும் இடத்தில் கூட இருக்க விரும்புவதில்லை என்று தெரிந்தே வைத்திருந்தார். இந்த இருபத்தி ஆறு வருடத்தில் அவர் திருந்தியிருப்பது சாரதாவுக்கு புரிந்தது. ஆனால் ஸ்ரீனிகாவின் இழப்பு பெரியது. சிலவேளை ஸ்ரீமதியின் வாழ்கையில் ராஜாராம் தலையிடாமல் இருந்திருந்தால், ஸ்ரீனிகா ஸ்ரீநிஷாவை விட நன்றாக, ஒரு சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி போல் இருந்திருப்பாள். அவர்கள் வாழ்கை இத்தனை மோசமாக திசை திரும்பி இருக்காது, மருத்துவமனையில் கழிந்திருக்காது.

சில ரணங்களை காலமும் ஆற்ற முடியாதோ என்று தான் எண்ண தோன்றியது. ஏனெனில் இன்று வரை ஸ்ரீனிகா முதல்லெழுத்தாக அம்மாவின் பெயரை தான் பயன்படுத்துகின்றாள். ஸ்ரீமதி நினைத்தது போல் அந்த பையனை மணமுடித்து வைத்து அதன் பின் இப்படி ஏதாவது நடந்திருந்தால் அவள் நிலை மாறியிருக்குமோ... அந்த பையன் யாரென்று ஸ்ரீமதி சாரதாவிடம் சொல்லவில்லை வெறுமே ஸ்ரீனிகா விரும்பும் பையன் என்று சொல்லி வைத்திருந்தார். அதை பற்றி ஏன் விசாரிக்காமல் போனேன் என்று சாரதா எண்ணாத நாளில்லை. ஸ்ரீனிகாவிடம் லேசாக விசாரித்து பார்த்தார். புன்னகை மட்டுமே பதிலாய் கிடைத்தது.

🎻🎻🎻🎻🎻

வீட்டிற்கு வந்து பிரஷ் ஆகி ஹாலில் அமர்ந்த ஸ்ரீனிகாவிற்கு அம்மாவின் நினைவு மேலெழ அதனுடன் சேர்ந்து அவர் சொன்ன அறிவுரையும் சேர்ந்தே நினைவு வந்தது. ‘துன்பம் ஒரு போதும் உன்னை அமிழ்த்த விட கூடாது. அது போன்ற நேரங்களில் மனதை வேறு காரியங்களில் செலுத்து’.

"அம்மா சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கு தானே இப்போ உனக்கு முன்னால் இருக்கிற பிரச்சினை பார்" தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டாள். இப்போது அவள் முன் உள்ள பிரச்சனை இரண்டு, ஒன்று மில் அடுத்தது கல்யாணம். எல்லாவற்றையும் விட இந்த திருமணத்தை பற்றி யோசிக்க வேண்டும்.

அவனை மணப்பதில் இஷ்டம் தான் அந்த வகையில் பிரச்சனை இல்லை. அவனுக்குதான் நான் யாரென்று தெரியவில்லை. அவனிடம் சொல்லிவிடுவோமா.... யோசித்தவள் சிறு ஈகோவும் குறும்பும் தலை தூக்க திருமணம் முடிந்த பின்னரே சொல்லுவோம் என்று முடிவெடுத்தாள். தன் முடிவை நினைக்க அவளுக்கே சிரிப்பாக இருந்தது. அப்படியானால் அவனை கல்யாணம் பண்ணிக் கொள்ள உனக்கு இஷ்டம் என்று சொல் மூளை மனதை கேலி செய்தது. திரும்பி அருகே இருந்த கண்ணாடியில் சிவந்த முகத்தை பார்த்தவள் கைகளால் மூடி கொண்டாள்.

அந்த மில்லை விற்பதானல் நிச்சயமாக சுரேஷுக்கு தான் விற்பதாக முடிவு செய்து விட்டாள். ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே வருடத்தில் ஒரு பத்து குழந்தைகளின் படிப்பு செலவை அந்த மில்லின் சார்பில் ஏற்க வேண்டும். ஆனால் இதை அவள் கட்டாயபடுத்தி கேட்க முடியாது அவளுக்கு புரிந்தே இருந்தது.

கௌதமை திருமணம் செய்து அவன் உதவி செய்வதாக இருந்தால் நிச்சயமாக மில்லை அவளே நடத்தி அதில் வரும் முழு வருமானத்தையும் கொண்டு ஒரு டிரஸ்ட் அமைத்து அதன் மூலம் கஷ்டப்பட்ட மாணவர்களின் படிப்பு செலவுக்கு பயன்படுத்த முடியும்.

அவள் உயர்ந்த நோக்கத்திற்கு கெளதம் உதவி செய்வானா இல்லை காலம் ஸ்ரீனிகாவின் காயத்தை கௌதமை வைத்து இன்னும் ரணமாக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

Nandhaki

Moderator

தீரா🎻20

இத்தனை இலகுவாக நொடியில் முடிவெடுத்து விடுவாள் என்று தன்னையே அவளால் நம்ப முடியவில்லை. இப்போது முடிவை அவனிடம் சொல்ல வேண்டும் எப்படி, நேற்று யோசிக்க நேரம் வேண்டுமென்றவள் இன்று போய் சம்மதம் சொல்ல தயங்கினாள்.

அவன் உதவி செய்வதாக இருந்தால் அந்த மில்லை நடத்தி அதில் வரும் முழு வருமானத்தையும் பயன்படுத்தி தாத்தா அம்மாவின் பெயரில் டிரஸ்ட் ஒன்றை நிறுவ வேண்டும்.

அவனிடம் நான்தான் அவனின் ஸ்ரீனி என்று கூறும் போது என்ன சொல்வான். அவன் முகம் எப்படி சந்தோசத்தில் மலரும் என பலவித கற்பனைகள் எழ நீண்ட காலத்தின் பின் கண்களில் கனவு மிதக்க உறக்கம் தழுவியது.

🎻🎻🎻🎻🎻

அடுத்த நாள் எழுந்தவள் உற்சாகமாய் உணர்ந்தாள். இன்றிலிருந்து ஏழாவது நாள் அவளுக்கு மிக மிக முக்கியமான தினம்... அவள் பிறந்த நாள் மட்டுமில்லை. அவனை சந்தித்த நாள், அவள் பெண்ணாக மலர்ந்த நாள். கடந்த சில வருடங்களில் உறக்கம் விட்டு எழும்பும் போது பிறந்த நாள் என்பது மறந்ததுண்டு. ஆனால் அவனை சந்தித்த நாள் என்பது ஒரு தரம் கூட மறந்ததில்லை. திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கட்டும். நான் யார் என்பதை அன்றே சொல்லிவிடுவோம் என நினைத்தவளாய் எழுந்து வேலைகளை பார்க்க தயாரானாள்.

அந்த வீடு வாடகைக்கு கேட்டவர்களை சந்தித்து ஒப்பந்தம் எழுதி அவர்கள் இன்னும் பதின்னான்கு நாட்களின் பின்னர் வருவதாக கூற, மாடியை எப்போதும் வாடகைக்கு விடுவதில்லை. தான் இங்கு வந்தால் தங்க இடம் வேண்டும் என்று கூற அதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

அடுத்ததாக மூன்று நான்கு மருத்துவமனைகளுக்கு சென்று தன் அம்மா சம்பந்தப்பட்ட கோப்புகளை கொடுத்து அங்கே வைத்து பராமரிக்க முடியுமா? அதற்கான செலவு விபரங்களை பற்றி கேட்டறிந்தாள். அதன் பின் தாத்தாவின் சட்டத்தரணியிடம் சென்றாள். அவரிடம் அந்த உயில் தொடர்பாக மேலதிக விபரங்களை கேட்டு கொண்டவள் ஏனோ தன் திருமண விடயத்தை சாரதாம்மாவிடம் தெரிவிக்கமால் இருக்க மனம் வரவில்லை. டாக்ஸியை எடுத்துக் கொண்டு அங்கு சென்றாள்.

அன்பாகவே வரவேற்றவர் இன்று எப்படியாவது அந்த பையன் தெடர்பான விபரம் வாங்கி விட வேண்டும் என்று நினைத்து கொண்டவராய் மெல்ல பேச்சு கொடுக்க நினைக்க அவர் கைபேசி தொல்லை பேசியாக சத்தமிட்டது. ஏர்போர்ட்டில் இருந்து வரும் போது ஓர் விபத்தில் சிக்கிய ஸ்ரீநிஷா மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக கிடைத்த தகவலில் ஸ்ரீராமுக்கு போன் மூலம் தகவல் சொல்லி இருவருமே மருத்துவமனை விரைந்தார்கள்.

ஸ்ரீநிஷாவுக்கு பெரிதாக காயம் இல்லை என்றாலும் இரண்டு நாள் கண்காணிப்பில் வைத்து பரிசோதனைகளை மேற் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

அன்றும் அடுத்த நாள் முழுவதும் அவர்களுடனே இருக்க கௌதமை சந்திப்பதாக கூறியது நினைவில் இருந்தாலும் ஒரு வாரத்தினுள் முடிவு சொல்வதாக கூறி இருக்கவே அவனுக்கு அறிவிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அன்று இரவே பரிசோதனை மூலம் மூளையில் ரத்தம் கட்டியாக இருப்பதாக கூற உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் கட்டி இருக்கும் இடம் ஆபத்தானதாக இருந்தாலும் ஊசி மூலம் சிகிச்சை செய்யக் கூடிய இடத்திலேயே இருப்பதால் உடனடியாக செய்தால் ஆபத்தில்லை எனக் கூற லண்டனில் அவளுடன் மருத்துவம் படித்தவர்கள் உடனே அங்கே வரும்படி அழைத்தார்கள்.

இரண்டு வாரத்தின் பின்னர் பயணம் செய்யலாம் என மருத்துவர்கள் கூறி விட முதலில் ஸ்ரீராமும் ராஜாராமும் சென்று அவர்கள் வருவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க பின்னர் சாரதாவும் ஸ்ரீநிஷாவும் செல்வதாகவும் தீர்மானித்தார்கள். ஸ்ரீனிகா அன்றிரவு சாரதாவுடனேயே தங்கினாள். நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு போன் அடிக்க எடுத்து பார்த்தால் சுரேஷ் 'என்ன இந்த நேரத்தில்' என்று நினைத்தவள் காதுக்கு கொடுக்க அவசரமாக கேட்டான் "இப்போது நீ எங்கே இருக்கின்றாய்?"

என்னவென்று புரியாத போதும் "மருத்துவமனையில்" என்று அதன் பெயரை கூறினாள்.

"உன்னுடன் யார் இருக்கின்றார்கள்?" அவன் குரலில் இருந்த கவலை புரிய "அண்ணா.. சிறு வயத்திலிருந்தே எனக்கு துணை நான்தான் என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்" கேட்டாள்.

"அந்த ஆலன் உன்னை தூக்கி செல்ல பிளான் என்று தகவல் வந்தது" தயக்கத்துடன் கூறினான். என்னால் தானே சிறு பெண்ணுக்கு அனைத்து பிரச்சனையும் என்ற குற்றவுணர்சியுடன் ஒலித்தது அவன் குரல்.

"தூக்கி சென்று....." ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"அவனே கல்யாணம் செய்து கொள்ள போகிறானாம். வேறு யாரும் செய்து சொத்தை தர மாட்டேன் என்று மறுத்தால் என்ன செய்வது என்ற பயம் என்று கேள்விப்பட்டேன்" என்றான்.

நெற்றியிலே அறைந்து கொண்டாள் ஸ்ரீனிகா. அவள் தவறு தான் அன்று ஆலனுடன் பேசும் போது விட்ட வார்தை. "இப்போது உன் பாதுக்காப்பு முக்கியம். என் மனைவியின் வீடு சென்னையில் தான் இருக்கு. பாதுகாப்பானது. அவள் அம்மா அப்பா எல்லோரும் இருப்பார்கள் வேண்டுமானால் நீ அங்கே தங்கி கொள்ள ஏற்பாடு செய்யட்டுமா?" உண்மையான அக்கறையுடன் கேட்க யார் என்ன என்று தெரியாமல் போக தயக்கமாய் இருந்தது. அவளுக்குத் தான் கௌதமிற்கும் சுரேஷிற்கும் இடையேயான உறவே தெரியாதே.

"தற்போது பாதுகாப்பில் எந்த பிரச்சனையும் இல்லை நான் உங்களுக்கு காலையில் அழைக்கின்றேன்" ஆயாசமாய் இருக்க களைத்து போய் கூறியவள் அப்படியே கண்மூடி சுவரில் தலை சாய்த்து அமர்ந்துவிட்டாள். இன்னும் எத்தனை பேரிடமிருந்து தான் ஓடுவது. இப்போதெல்லாம் பணம் சொத்து என்றாலே காத தூரம் ஓட வேண்டும் போல் இருந்தது. ஒருவருக்கு கூட அவள் மனது ஒரு பொருட்டில்லையா?

கண்ணின் ஓரம் ஒரு துளி வழிய மனம் அவளுக்கு ஆறுதலாய் ஒரே ஒரு பெயரை கூறியது 'கௌதம்'.

🎻🎻🎻🎻🎻

அடுத்த நாள் காலை சாராதாவிடம் குளித்து பிரெஷ் ஆகி சில வேலைகளை முடித்து வருவதாக கூறியவள் வீட்டிற்கு சென்று பிரெஷ் ஆகி கௌதமுக்கு போன் எடுத்தாள்.

டிராக் பான்ட் மட்டும் அணிந்து வெற்று மார்புடன் விரிந்த தோளும் பெண்களை போல் குறுகிய இடையும் ஒட்டிய வயிறுமாய் வியர்வையில் உடல் பளபளக்க ஜிம் டிரேட் மில்லில் ஓடியவன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்க கண் போனையே அடிக்கடி பார்த்து கொண்டிருந்தது.

அவனுக்குமே ஆலன் தொடர்பாக தகவல் கிடைத்திருக்க சுரேஷையும் அறிய செய்திருந்தான். கடந்த இரண்டு நாட்களாக அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. அவளை தொடர்பு கொள்ள போன் நம்பரை தவிர அவனிடம் வேறு தொடர்பும் இல்லை அன்று ஏர்போர்ட்டில் அழைத்து சென்றவன் முகத்தை கூட சரியாக பார்க்கவில்லை. எங்கே போய் தேடுவது என்று யோசித்தவன் அவள் மொபைலுக்கு அழைக்க பதிலில்லை.

ஓர் ஆறுதலாய் ஆலன் இன்னும் அவளை கடத்தவில்லை என்பது நிச்சயம் அப்படி ஏதாவது நடந்தால் உடனே அவனுக்கு தகவல் வரும்படி ஏற்பாடு செய்திருந்தான். இன்றும் அவளை தொடர்பு கொள்ள முடியாவிட்டால் டிடெக்ட்டிவை அழைத்து அவளை கண்டு பிடிக்க சொல்வோம் என்று நினைத்து கொண்டிருக்க அவன் போன் சத்தமிட ஒரு ரிங் போவதற்கு முன்னயே பதிலளித்தவன் பொரிய தொடங்கினான்.

"போன் என்ற ஒன்றை ஏன் வைத்திருக்கிறாய்? போனில் அழைத்தால் ஆன்செர் பண்ணனும் தெரியமா மிஸ் ஸ்ரீனிகா? எங்கே போயிருந்தாய்? கொஞ்சமாவது அறிவு இருக்கா?" ஓடிக் கொண்டே திட்டியதில் மூச்சு வாங்க அருகே இருந்த ஜிம்பாலில் கால் முட்டியில் கையூன்றி அமர்ந்தான்.

அவன் கோபத்தில் இத்தனை நேரம் மனதை அரித்து ஏதோ ஓர் உணர்வு அகன்று இதம் பரவுவதை உணர்ந்தவள் "ஹோச்பிடலில் இருந்தேன் அதான் போன் சைலண்ட்ல..." லேசாய் சிணுங்கினாள்.

சட்டென எழுந்து "ஏன் என்னாச்சு?" அவசரரமாய் விசாரித்தவாறே அருகே இருந்த டீ ஷிர்ட்டை எடுத்து அணிந்து கொண்டே கேட்டான் "இப்போது எங்கே நிற்கின்றாய்?"

"ஒரு விபத்து"

"எங்கே எப்போது" கார் கீயை எடுத்தவன் கீழே இறங்கினான்.

"எனக்கில்லை...."

"எங்கே" அழுத்தமாய் ஒலித்தது அவன் குரல்.

"மவுண்ட் ரோடு போற...."

"நீ எங்கே" பொறுமையற்ற மூச்சுடன் இடையிட்டான்.

கஃபேயின் பெயர் சொல்ல அது அவன் வீட்டிலிருந்து அடுத்த தெருவில் இருந்தது. வேகமாக வந்தவன் கண்ணில், எதிரே மோட்டார் பைக்கே சாவியை விரலில் சுழட்டியவாறே வந்த அஜா பட சாவியை பறித்தவன் "என்னோடு வா" என்று பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

அவனுக்கு ஒரு ஹெல்மட்டை மாட்டிய அஜா பின்னால் ஏறி தானும் ஒன்றை போட்டவாறே கேட்டான் "எங்கே போறோம் பாஸ்"

"கஃபே"

"ஏன் வீட்டில் யாரும் இல்லையா?"

அக்சிலேட்டரை முறுக்கியவாறே கேட்டான் "இருக்கிறாங்க ஏன் கேட்கிறாய்?"

"இல்ல ஒரு காபி கூடவா தரல"

"பேசாம மூடிட்டு வாடா"

கஃபேயின் முன் நிறுத்தியவன் "பார்க் பண்ணு" வேகமாக உள்ளே ஓடியவனை வியப்புடன் பார்த்த அஜா பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றான். காலையில் ஜிம் முடித்து குளிக்காமல் கீழேயே வராத கெளதம் இன்று வியர்வை வழிய கஃபேயினுல் செல்ல இது சரியில்லையே என்று அவன் பின்னாலேயே சென்றான் அஜா.

கஃபே உள்ளே சென்ற கௌதம் கண்களால் அலச கார்னரில் தலையை கையால் தாங்கியபடி அமர்ந்திருந்தாள் ஸ்ரீனிகா. வேகமாக அருகே செல்ல ஏதோ உணர்வு உந்த திரும்பியவள் அவனை கண்டு எழுந்து நிற்க அவன் கண்களோ அவளை மேலிருந்து கீழாக அலசியது. அவள் தோளை பிடித்து இரு பக்கமும் திருப்பி பார்த்தான். எங்காவது அடிபட்டு காயம் ஏதாவது உள்ளதா என்பது போல். அவளுக்கு எதுமில்லை என்ற பின்னரே அருகே இருந்த நாற்காலியில் சரிந்தவன் அவளை முறைத்தான்.

"இந்த போனை தூக்கி கடல்ல போடு" எரிச்சலுடன் கூறினான்.

"அதான் சொன்னனே..." வாய்க்குள் முனகினாள்.

"இப்ப மட்டும் அம்மணி எதுக்கு எடுத்தீங்க?" அப்போதும் சிறு கோபத்துடன் கேட்க பயந்து போய் சொல்லவா வேண்டாமா என்று விழித்தாள் ஸ்ரீனிகா.

"என்ன?" அதட்டினான்.

"இல்ல அந்த ஆலன் என்.... என்னை.." என்று தடுமாறினாள்.

"இந்த கௌதம் கிருஷ்ணாவின் மணப் பெண்ணை தொட தைரியம் இருக்கா அவனுக்கு" சர்வ அலட்சியமாய் கேட்டான் கௌதம்.

அவன் கேட்ட விதத்தில் மயங்கியவள் அப்போதுதான் அவனை சரியாக பார்த்தாள். வியர்வையில் கேசம் நெற்றியில் ஒட்டியிருக்க அப்போதும் சில துளிகள் காதருகே வழிய மெல்லிய தாடியுடன் வெள்ளை டீ ஷர்ட் நனைந்து உடலுடன் ஒட்டி கட்டுக் கோப்பான உடலை வெளிப்படுத்த, அவன் நீண்ட தாமரை விழிகளில் தென்பட்ட அலட்சியம், தைரியம், மெல்லிய ஆணவம் என அனைத்தையும் ரசித்தவள் விழுங்குவது போல் பார்த்து விட்டு சட்டென பார்வையை தாழ்த்தினாள். இன்றில்லை அவனை பார்த்த அதே தினம் அதே இடத்தில் வைத்தே சொல்ல வேண்டும்.

அவள் பார்வையை தழைக்க "ஓ... நீ இன்னும் உன் முடிவை சொல்லல இல்லையா?" யோசனையுடன் கேட்டான். ‘இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டுமோ....?’ யோசனை ஓட அவளே அதைத் தடுத்தாள்.

கன்னத்தில் மெல்லிய செம்மையுடன் "எனக்கு சம்மதம்" என்றாள்.

சட்டென நேராய் அமர்ந்தவன் "என்ன சொன்னாய்?" ஆச்சரியத்துடன் சிறு கூவலாய் கேட்டான்.

அவள் மெல்லிய நாணத்துடன் புன்னகைக்க மேஜையில் கையூன்றி சற்று குனிந்து அவள் முகம் பார்க்க முயன்றான். அவன் செயலில் இன்னும் முகம் சிவக்க தரையில் கட்டை விரலை அழுத்தி சமாளித்தாள். நாண புன்னகையுடன் சிவந்திருந்த அவள் முகம் பார்த்தவனுக்கு தானாய் புன்னகை மலர இன்னெதென்று புரியாத ஓர் உணர்வுடன் அவளையே பார்த்திருந்தான்.

"டொம்..."

ஏதோ கனமான பொருள் கீழே விழுந்ததில் நடப்புக்கு திரும்பிய இருவரும் சுற்றும் முற்றும் பார்க்க பூஜை வேளை மனித குரங்காக அஜா சிலை போல் நின்றான்.

உள்ளே வந்த அஜா கையிலிருந்த ஹெல்மட் நழுவி கீழே விழுந்தது கூட தெரியாமல் கௌதமையே ஆவென்று திறந்த வாய் மூடாமல் பார்த்து கொண்டிருந்தவனுக்கு தான் காண்பது கனவா இல்லையா என்ற குழப்பம் வர அருகே சென்ற வெயிட்டரை தடுத்து நிறுத்தினான்.

அழகான தருணத்தை கலைத்துவிட்டானே என்று முறைக்க, அவனோ அருகே நின்ற வெயிட்டரை பார்த்து "என்னை அடி" என்றான்.

‘லூசடா நீ’ என்பது போல் பார்க்க "கிள்ள முடியாது கிள்ளுவதற்கு தசை இல்லை அடி" என்றான்.

"அஜா..." கடித்த பற்களிடையே உறும, கீழே கிடந்த ஹெல்மட்டை தூக்கி கொண்டு அருகே வந்தவனை அருகே இருந்த இன்னொரு மேஜையில் அமரும்படி சைகை செய்தவன் "சோ, நம் திருமணத்தை எங்கே வைத்து கொள்ளலாம்?" சாதாரணமாக கேட்க அஜாதான் ஆடிப் போய்விட்டிருந்தான். இதயத்தை நீவி கொண்டு "பாஸ் சின்ன இதயம்... தாங்காது" மெதுவே முனகினான்.

ஸ்ரீனிகாவோ இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. மகிழ்ச்சியில் அவளுக்கு தலைகால் கூட புரியவில்லை. கண்கள் கூட லேசாய் பனித்திருந்தது. எத்தனை வருட தவம்... ஏக்கமாகவும் இருந்தது இந்த சந்தோசத்தை பகிர கூட அருகே யாருமில்லையே. சாரதாம்மாவிடம் கூறலாம் ஆனால் இப்போது உள்ள நிலைமையே வேறில்லையா?

ஒரு முறைப்பில் அஜாவை அடக்கிய கௌதம் மீண்டும் கேட்டான் "எப்போது"

"உடனடியாகவா...?"

"ஏன் உன் தரப்பில் இருந்து யாரிடமும் அனுமதி வேண்டுமா?" புருவத்தை உயர்த்தினான். அவன் அறிந்த வரையில் அப்படி எதுவும் இல்லையே...

உள்ளே எழுந்த வருத்தத்தை மறைத்து இல்லை என்று தலையாட்டினாள். சாரதாம்மா அம்மாயி கேசவன் அத்தரேயில்லு இருக்கின்றார்கள் தான். சாரதாம்மா தற்போது வர கூடிய நிலையில் இல்லை. அம்மாயி, கேசவன் இருவரும் துபாய் சென்றிருந்தனர். இவளையும் வர சொல்லி கேட்டார்கள் தான் இவள்தான் மறுத்துவிட்டாள். நல்லவேளை இல்லாவிட்டால் இவனை சந்தித்திருக்க முடியாது.

"பின்..."

"உங்கள் அம்மா அப்பா..." அவளுக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கின்றது இது வெறும் ஒப்பந்த கல்யாணம் ஆனாலும் திருமணம் செய்துவிட்டு அவரவர் பாட்டில் செல்ல முடியாது இல்லையா? அதோடு அவளை பொறுத்தமட்டில் வாணாள் முழுமைக்கானது.

"இந்த திருமணத்திற்கு அவர்கள் அனுமதி தேவையில்லை" அலட்சியமாக கூற அஜாவுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

"திருமணத்தை கேரளாவில் வைத்து கொள்வோமா?" என்று கேட்க "இன்டரெஸ்டிங் அண்ட் நைஸ் ஐடியா எனக்கும் வசதி. இங்கே என்றால் எப்படியும் பரவிவிடும்" என்றவனை பார்த்து சந்தோஷமாகவே சிரித்தாள். அவள்தான் அவனிடம் சொல்லிவிடுவாளே பின் அதற்காக அவன் தானே வருத்தப்பட வேண்டும். என்னை தெரியல இல்லையா? கொஞ்சம் படட்டும் சிறு செல்ல கோபத்துடன் உதட்டை சுழித்தவாறே நினைக்க அதுவரை அவள் முகம் பார்த்து கொண்டிருந்த கௌதம் பார்வை சில கணங்கள் அவள் இதழ்களில் நிலைக்க சட்டென பார்வையை வேறு புறம் திருப்பினான்.

"திருமணம் முடிந்ததும் நான் இங்கே வரவா? இல்லை கேரளவிலேயே தங்கி விடவா? தலை சாய்த்து கேட்டாள். அவன் மனதின் மூலையில் எங்கோ சிறு ஆசையிருந்தாலும் தன்னுடன் அழைத்து செல்வான் என மனம் கூற அதை நம்பி கேட்டாள்.

மெலிதாய் முறைத்தவன் "கடைசியில் என் தலையிலேயே கை வைக்கிறாயே... நீ வராவிட்டால் என் திருமணத்தை நிறுத்துவது எப்படி?" கேட்க அஜாவே என்னடா எலி இந்த பக்கம் போகுதே என்று பார்த்தேன். அது காரணமா தான் போகுது என்று மனதில் நினைத்தவாறு கௌதமை பார்த்தான்.

"தாலி கூரை..." தயங்கியவாறே கேட்டவளை பார்த்து யோசித்தவன் "இன்று நீ ப்ரீயா.." என்று கேட்டான். "இன்று திரும்ப மருத்துவமனை போக வேண்டும்." என்றாள். இன்று நாள் அத்தனை நல்லமில்லை நாளையானால் நல்ல நாள் எப்படியும் இந்த திருமணம் நல்ல விதத்தில் தான் முடியும். பெரிதாய் நடக்கின்றதோ இல்லை சாதாரணாமாய் நடக்கின்றதோ நாள் பார்த்தே நடக்க வேண்டும் என்று விரும்பினாள். அதோடு அவனிடம் சொன்னால் இப்போது இருக்கும் அவன் மனநிலைக்கு அபசகுனமாய் ஏதாவது சொல்லிவிடுவான். அதுதான் மருத்துவமனை என்றுவிட்டாள்.

சில கணங்கள் மௌனத்தில் கழிய தயங்கியவாறே ஆவல் நிறைந்த கண்களுடன் "வரும் புதன் கிழமை நீங்கள் பிரீயா?" அன்று தான் அவனை சந்தித்த நாள் அன்றே அவனிடம் சொல்ல வேண்டும் போல் ஒரு எண்ணம்.

விதிதேவனோ அவளை பார்த்து சிரித்தான்.

வருவான்....
 

Nandhaki

Moderator

தீரா🎻21


ஓர் கணம் தயங்கியவள் கேட்டாள் "வரும் புதன் கிழமை நீங்கள் பிரீயா?" அன்று தான் அவனை சந்தித்த நாள் அன்றே அவனிடம் சொல்லிவிடுவோம் என்று நினைத்து கொண்டாள்.

"சரி அன்றே வைத்து கொள்வோம்"

"எதை"

"திருமணத்தை தான் வேறு எதை"

சற்று யோசித்தவள் சிரிப்புடனேயே தலையாட்டினாள்.

"சோ நாளை மோர்னிங் ஷாப்பிங் போகலாம் தானே" அவன் கேட்க தலையை ஆட்டியவளை பார்த்து "அப்படியே ஈவ்னிங் கொஞ்சம் லீகல் வேலை இருக்கு அதையும் முடித்து தர முடியும் தானே" என்று அவள் முகம் பார்த்தான்.

அதற்கும் தலையாட்ட சிரித்தவாறே எழுந்தவன் அருகில் சென்று "எல்லாத்துக்கும் சூரன் மாதிரி தலையாட்டு கழன்று விழுந்திற போகுது" என்றவனை பார்த்து கண்கள் மின்ன பார்த்திருந்தாள். அன்று சொன்ன அதே வார்த்தைகள் ஒரு அட்சரம் கூட மறக்கவில்லையே....

என்ன கண் அசைவில் கேட்டவனிடம் "செய்திருவோம்" என்ற ஸ்ரீனிகா முகம் விகாசிக்க தலை சாய்த்து சிரிக்க ஒரு கணம் பதினாறு வயதி ஸ்ரீனி அவன் கண்களில் வந்து சென்றாள்.

தலையை உலுக்கி நினைவை அகற்றியவன் தன்னையறியாமலே அவள் தலையில் கை வைத்து செல்லமாய் ஆட்டிவிட்டு "போன் பண்ண அன்செர் பண்ணு மனுஷன தவிக்க விடாதே! சரியா?" சற்று நெருங்கினால் அங்கங்கள் தொட்டு விடும் தூரத்தில் நிற்க குனிந்து அவள் முகம் பார்த்தவன் உலகம் மறந்து நிற்க அவனில், அவன் வாசத்தில் தன்னை தொலைத்து நின்றாள் பாவை. கையிலிருந்த போன் அதிர நடப்புக்கு வந்தவன் விடை பெற்றான் "நாளை சந்திப்போம்".

மருத்துவமனை சென்றவள் ஸ்ரீநிஷாவை பார்க்க மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ராஜாராம் உள்ளே வர வெளியேறியவளையே வருத்தத்துடன் பார்த்து கொண்டிருந்தார். அவரை யாரும் வரவேற்கவுமில்லை போ என்றும் சொல்லவில்லை. அவளின் அனைத்து துன்பத்திற்கும் தான் காரணமாக இருக்கும் போது மன்னிப்பு என்ற ஒன்றை கேட்க கூட முடியவில்லை அவரால். சிறிய மகளின் தலையை வருடி அவள் முகம் பார்த்தவருக்கு ஒன்று புரிந்தது கடவுள் ரெம்பவுமே நியாயவாதி.

வெளியே போட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்த ஸ்ரீனிகா மனதினுள் சாரதாம்மாவிடம் சொல்வதா? வேண்டாமா? என்று பட்டிமன்றம் நடத்தினாலும் அவரிடம் சொல்லாமல் செய்ய முடியவில்லை. தன் கணவர் தன்னை இவள் அம்மாவிற்காக ஏமாற்றினார் என்று தெரிந்தும் எதுவித எதிர்பார்ப்பும் இன்றி இன்றுவரை தன்னிடம் அன்பு செலுத்தும் ஓர் ஜீவன். ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவள் எதிரில் வீட்டிற்கு சென்று பிரெஷ் ஆகி வந்து கொண்டிருந்தார்.

உள்ளே சென்று மகளை பார்த்து வெளியே வந்தவரிடம் செல்ல அந்நிலையிலும் "என்னம்மா என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்றவரைக் காண கண் பனித்தது. ஓர் தாய் எப்போதும் எல்லோருக்கும் தாய்தானோ....

தலையாட்டியவளை அழைத்து கொண்டு வெளியே சிறு தோட்டத்தில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தார். "சொல்லம்மா" என்றவரிடம் அனைத்தையும் கூறிவிட்டாள். மில் தொடர்பான பிரச்சனை, அதனால் ஆலனின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம், கடைசியாய் கௌதமை சந்தித்ததை கன்னங்களில் செம்மையுடன் கூற "அந்த பையனாடா" ஆர்வமாய் கேட்டவரை குழப்பத்துடன் பார்த்தாள் ஸ்ரீனிகா.

"எந்த பையன்"

"நீ அம்மாவிடம் சொல்லி இருந்தாயே"

"அம்மா அது பற்றி உங்களிடம் பேசினாரா?" ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"தாத்தாவின் அந்தரட்டிக்கு வந்திருந்த போது, அந்த பையனின் அம்மா அப்பாவிடம் பேச போவதாக கூறினார். அப்படியே இங்கே, தமிழ்நாடு வந்து விடுவதாகவும் ஆனால்..." சற்று நேரம் அமைதியாய் இருந்தவர் "முழு விபரங்களை வந்து கூறுவதாக சொல்லி சென்றாள். விபத்தின் பின் அந்த பையன் யார் என்று தெரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன் என்னால் முடியவில்லை. உன்னிடம் கேட்டு உன் மனதையும் சிதற விட்டு விட கூடாது என்றுதான் யோசித்தேன். மறைமுகமாக கேட்டு கூட பார்த்தேன், சரியான அமுக்குனி.." செல்லமாய் தலையில் தட்டியவர் தொடர்ந்தார் "ஆனால் உன் அம்மாவின் ஆசீர்வாதம் நீ நினைத்தபடியே நடக்கின்றது" சந்தோசமாய் கூறி அவள் நெற்றியில் முத்தமிட அதை ஒரு ஜோடி கண்கள் வெறுப்புடன் நோக்கியது.

ஸ்ரீனிகாவிற்கு நல்லவேளை சாரதாம்மாவிடம் பேசினோம் என்று இருந்தது. அம்மாவின் ஆசையும் இதேதான் என்று தெரிய மனது நிறைந்த சந்தோசத்தில் கண்ணீல் மெல்லிய நீர் படலத்துடன் புன்னகைத்தாள்.

"திருமணத்தை கொஞ்சம் தள்ளி வைக்க கூடாதா? நானும் வந்து அனைத்தும் செய்வேனே" ஆதங்கத்துடன் கேட்டார். அனைத்தையும் சொன்னவள் கௌதமுக்கு தன்னை பற்றி தெரியாது என்பதையே அல்லது இருவருக்கும் இடையே ஒப்பந்தம் இருப்பதையோ கூறவில்லை. ஏனோ அவனை யாரும் தவறாக நினைப்பதும் பிடிக்கவுமில்லை. எப்படியும் தான் யார் என்று தெரியும் போது அனைத்தும் சரியாகி விடும் அப்போது அவனை யாரும் தவறாக பேசிவிட கூடாது.

"பரவாயில்லை சாரதாம்மா அவருக்கு வெளி நாட்டு வேலைகள் அதிகம் இப்போது விட்டால் அடுத்த ஒரு வருடத்திற்கு நேரமே கிடைக்காதாம் அதான் திருமணத்தை முடித்துவிட்டு வரவேற்பை பெரிதாய் வைக்க வேண்டும் என்று பிளான்" ஒருவாறு சமாளித்தாள். இன்று தொடங்கும் இந்த சமாளிப்புகள் வாணாள் முழுதும் தொடரும் என்று தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே முற்றுப் புள்ளி வைத்திருப்பாளோ.

🎻🎻🎻🎻🎻

தன் முன்னால் கடை ஊழியர் எடுத்து போட்ட சேலைகளை பார்த்து தலை சுற்றிப் போய் நின்றாள் ஸ்ரீனிகா. இதற்கு முன் இது போல் கல்யாண சேலைகளை பார்த்ததே இல்லை இது போன்ற நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பங்களும் அவளுக்கு அமையவில்லை. ஹாஸ்டல் வாசத்தின் போதும் சரி பின்னாளில் அம்மாவுடனான குறுகிய பொற்காலத்தின் போதும் சரி அவள் பெரிதாக சேலை அணிந்து இல்லை. அப்படியே அணிய வேண்டி வந்ததும் சாதாரண பட்டு சேலைகளே. அவற்றையும் பெரும்பாலும் ஸ்ரீமதியே வாங்கி வைத்திருப்பார்.

ஸ்ரீராமின் திருமணத்தின் போது கூட அம்மாவை பார்க்க வேண்டும் என்று தவிர்த்துவிட்டாள். அங்கே சென்றால் வரும் ஆயிரம் கேள்வியை சமாளிப்பதை விட தவிர்த்து விடுவது சுலபம் என்று போகாதிருந்து விட்டாள். இப்போதோ எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் விழித்தவள் திரும்பி போனுடன் அமர்ந்திருந்தவனை பார்த்தாள். ஷாப்பிங் அழைத்து வந்தவன் ஏதோ அலுவலக அழைப்பு வர “நீயே பார்த்து எடு” என்று விட்டு போனுடன் அமர்ந்துவிட்டான்.

அவளின் திணறலை இனம் கண்ட கடை ஊழியர் "லவ் மேரேஜம்மா..." என்று கேட்கவே பொதுவாக தலையாட்டி வைத்தாள்.

"இப்போது நிறைய வண்ணத்தில் வந்தாலும் பொதுவாக அடர் மெரூன் அல்லது சிவப்பில் எடுப்பார்கள், டிசைன் உடல் முழுவதும் கொடி பூ கனி இருக்கும்படி பார்ப்பார்கள். உங்களுக்கு எதை கட்டட்டும்" என்று கேட்கவே அனுபவஸ்தர் சொல்லும் போது கேட்டுக் கொள்வோம் என நினைத்தவளாய் "நீங்கள் சொல்வது போலவே காட்டுங்கள்" என்றுவிட்டாள்.

அவர் சேலையை எடுத்து போட இடையிடையே திரும்பி பார்த்தவள் மனமோ 'உனக்கு எதுக்குடி இந்த வெட்டி பந்தா பேசாமல் இப்போதே சொல்லிவிடுவோமா இது போல் தருணங்கள் திருப்பி கிடைப்பதிலையே' புலம்பி தள்ளியது.

எப்படியோ மூச்சுப் பிடித்து அதிக விலை இல்லாமல் அழகாய் ஒரு சேலையை தேர்வு செய்து விட்டிருந்தாள்.

போன் கதை பேசி முடித்து நிமிர்ந்தவன் கண்ணில் பட்டது அவளது நீண்ட அடர்த்தியான பின்னல் போட்டு இருந்த கேசம். அந்த முடியின் அழகில் மயங்கி அருகே வந்தவன் ஒரு விரலை பின்னலின் நெளிவுகளில் ஓடவிட்டு கேட்டான் "இதற்கு நீ என்ன போடுகின்றாய்?"

திடீரென காதருகே கேட்ட குரலில் துள்ளித் திரும்பியவள் கௌதமை பார்த்து ஆறுதலாய் நெஞ்சில் கை வைத்தாள். "நீங்களா நான் பயந்தே போனேன், என்ன கேட்டீர்கள்?" திருப்பி கேட்டாள்.

"இல்ல இந்த முடிக்கு நீ என்ன போடுகின்றாய் இப்படி நீளமாக அடர்த்தியாக பார்த்ததே இல்லை" என்றவன் விரலும் விழிகளும் பின்னலை விட்டு வர மறுத்து சண்டித்தனம் செய்தது. பின்னலில் இருந்த அவன் விரலைப் பார்த்தவள் கூச்சத்துடன் "அது...." என்று திணறவே மெல்லிய சிரிப்புடன் கையை எடுத்தவன் "நீ சேலை எடுத்துவிட்டாயா?" விசாரித்தான்.

"ம்ம்" என்றவள் எடுத்து வைத்திருந்த சேலையை காட்டவே "அழகாய் இருக்கு" மனம் திறந்து பாராட்டினான். வசிஷ்டர் வாயால் விஸ்வாமித்திரர் பட்டம் பெற்றது போல் உணர்ந்தவள் சந்தோசத்தில் துள்ளி குதிக்காத குறை.

வேறு ஏதாவது எடுக்க வேண்டுமா என்று கேட்டவனிடம் இல்லை "சாரி பிளவுஸும் இங்கேயே தைத்து தருவதாக கூறி விட்டார்கள் ஈவினிங் வந்து கலெக்ட் பண்ணலாம் என்று சொன்னார்கள்" சிறிது யோசித்து "உங்களுக்கு எதுவும் எடுக்கத் தேவையில்லையா?" என்று கேட்டவளுக்கு பதிலாக "எனக்கென்ன ஜீன்ஸ் ஷர்ட் ஓகே தானே" இலகுவாய் கேட்டான்.

'இவனை...' மனதினுள் தாளித்தவள் "எனக்கு என்ன ஒரு பிரச்சனையும் இல்ல, உங்கள் அம்மா சந்தேகப்படமாட்டாரே" அப்பாவி போல் கேட்டாள்.

மறுபேச்சின்றி "பட்டு வேட்டி சட்டை தான் எடுக்க வேண்டும் அங்கே இருக்கு" என்று நகர்ந்தான்.

அடுத்ததாக அதே கட்டிடத்தின் மறு தளத்தில் இருந்த நகை கடைக்கு அழைத்து சென்றவனிடம் நேராகவே சொல்லிவிட்டாள் "எனக்கு தாலி எடுப்பது பற்றி எதுவும் தெரியாது" அவள் சொன்ன வேகத்தில் வாய்விட்டு சிரித்தவன் "அண்ணா தங்கைக்கு எடுத்த அனுபவம் இருக்கு நானே எடுக்கிறன்" அவன் சொன்ன பின்னர் தான் நிம்மதியாக மூச்சுவிட்டாள்.

அவர்கள் வழக்கத்தில் பயன்படுத்துவது போல் தாலியும் கொடியும் எடுத்தவன் கூடவே மோதிரத்தையும் பார்க்க அவனுக்கே தெரியாமல் அவன் விரல் அளவிற்கு ரகசியமாய் ஒரு மோதிரம் எடுத்து அதில் இருவர் பெயரையும் அடிக்கும்படி ஆர்டர் கொடுத்தாள். அவள் எடுத்தற்கு இணை போல் பெண்கள் அணியும் ஒரு மோதிரம் அவளை கவர அவள் எடுப்பதற்கு முன் அதை கௌதம் எடுத்திருந்தான். இரு விரல் நடுவே வைத்து அழகு பார்த்தவன் அவள் கையை பற்றி மோதிர விரலில் போட்டுவிட்டவன் அழகு பார்த்தவாறே ஆர்வத்துடன் கேட்டு நோக்கினான் "அவளுக்கும் அழகாய் அளவாய் இருக்கும் இல்லையா?" .

லேசாய் நீர் கோர்த்த கண்களும் முகத்தில் மெல்லிய புன்னகையின் சாயலுமாய் தலையசைத்தாள். அவர்களுக்கும் இரு மோதிரத்தை எடுத்தவன் "வேறு ஏதாவது வேண்டுமா?" கேட்க தலையசைத்து மறுத்தாள்.

தாலியை கொடியில் கோர்த்து தர அதை தன் முன்னால் தூக்கி பிடிக்க அதனூடே தெரிந்த ஸ்ரீனிகாவின் முகமும் அன்று மல்லிகை பந்தலின் முன் பார்த்த முகம் போல் தோன்றவே அவனுக்கு தூக்கிவாரி போட்டது. நான் தான் குழம்புகின்றேனா?, இல்லை திருமணம் என்பதால் இப்படியெல்லாம் நினைக்கின்றேனா?, ஏதோதே எண்ணங்கள் அலைக்கழிக்க "ஆஃபீஸ் போவோமா?" கேட்டான்.

"இப்படியேவா" கையிலிருந்த பொருட்களையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தாள். அவனும் கோட் சூட் இல்லமால் சாதாரணமாய் ஜீன்ஸ் டீ ஷர்ட் அணிந்திருந்தான். "இதை காரிலேயே வைத்து செல்வோம், இன்று மீட்டிங் என்று எதுவும் பெரிதாக இல்லை சோ"

அவன் அலுவகத்தினுள் செல்ல முன்னே எதிர் கொண்ட யாதவ் "பாஸ் அந்த மில்" என்று தொடங்கி கௌதமின் எச்சரிக்கை பார்வையில் பாதியிலேயே நிறுத்தியிருந்தான். ஸ்ரீனிகாவை நன்றாகவே அடையாளம் தெரிந்தது. அவன் தானே போட்டோவுடன் அனைத்து விபரங்களும் சேகரித்தது. வெறும் மில் சம்பந்தப்பட்ட விடயம் தானே என்று மேலோட்டமாய் விசாரித்தவன் தேவையென்று நினைத்த தகவல்களை மட்டுமே பாஸுக்கு வழங்கியிருந்தான். வழமையாகவே தகவல்களை வடிகட்டி கொடுப்பதுதான் என்பதால் பெரிதாக எதையும் நினைக்கவில்லை. அதோடு அதிகம் பேர் ஸ்ரீநிஷா ஸ்ரீனிகா இருவரும் இரட்டையர் என்றே நினைத்தனர்.

அதனால் கௌதமுக்கு அவள் ராஜாராம் சாரதாவின் மகள், அப்பாவுடன் சிறிய மனத்தாங்கல் என்பதை தவிர்த்து வேறு எதுவும் தெரியாமலே போய்விட்டது அதோடு சில மாதங்களுக்கு மட்டுமே திருமணம் செய்து விவாகரத்து செய்வதற்கு எதற்கு தேவையற்ற தலையிடி என்றும் நினைத்தான். அப்பா மகளுக்கிடையில் என்ன பிரச்சனை இருந்தால் அவனுக்கு என்ன? அவனுக்கு தேவை அம்மாவின் நச்சரிப்பிலிருந்து விடுதலை அடுத்து அந்த மில் தங்கைக்கு போய் சேர்வது அதற்கு மேல் யோசிக்கவில்லை. அத்துடன் அவன் அனுபவத்தில் ஸ்ரீனிகாவினால் வேறு எந்த பிரச்சனையும் வராது என்பதில் உறுதியாய் இருந்தான்.

கடையில் அவன் கண் முன் வந்த தோற்றத்தில் மனம் குழம்பியிருந்தவன் அதிகம் பேசவில்லை. ஆனால் அவளை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தவன் மனமோ 'சிலவேளை அந்த பெண் இவளாக இருக்குமோ?' என யோசிக்க மூளையோ 'அப்படி என்றால் அவளே சொல்லி இருப்பாள் இல்லையா? ஏற்கனவே நீ அவளிடம் சொல்லி இருக்கிறாய் தானே? ஆனால் அந்த கன்னக்குழி....' என்று திருப்பி கேட்டது. இதே சிந்தனையில் இருந்தவனை கலைத்தது அவள் குரல்.

"போவோமா?"

"ஹ்ம்... வேலை முடிந்துவிட்டதா? நேரத்தை பார்த்தான். மணி பின்னேரம் ஐந்தை நெருங்கி கொண்டிருந்தது. ஷாப்பிங் முடித்து மதியவேளை வந்தவர்கள். இத்தனை நேரமா இது பற்றிய யோசனையில் ஆழ்ந்திருந்தான். அவளை பார்க்க மீண்டும் மல்லிகை பந்தலின் கீழ் அவளை பார்த்த ஞாபகம் வர தலையை உதறி நடப்புக்கு வந்தவன் "போகலாம்..." கார் சாவியை எடுத்து முன்னே நடந்தான்.

அவன் முகம் இன்னுமும் குழப்பத்தை சுமந்திருந்தது.

"உங்களிடம் சற்று பேச வேண்டும்" அவனிடம் சொல்லி விடுவோம் எப்போது சொன்னால் என்ன என்று நினைத்தவளாய் கேட்டாள். ஆனால் விதி இடையே நின்று சிரித்தது.

"அவசரமா.... எனக்கு... மைண்ட் கொஞ்சம் டிஸ்டர்பா இருக்கு..." வழமையை விட நிதானமாக வார்தைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கூற "என்னாச்சு.." கவலையுடன் யோசிக்காமல் கேட்டிருந்தாள்.

நேர் எதிரே வெறித்தவாறு தலையசைத்தவன் "இல்ல சின்ன குழப்பம்..." சற்று இடைவெளி விட்டு கேட்டான் "நாளை பேசுவோமா?"

மறுபேச்சின்றி தலையாட்ட அவள் வசித்த வீட்டின் முன் இறக்கிவிட்டவன் "பிளைட் டிக்கெட்டினை மெசேஜ் செய்கின்றேன்" என்ற வார்த்தையுடன் ஸ்டியரிங்க் வீலை வளைத்து காரை திருப்பி கொண்டு சென்றுவிட்டான்.


வருவான்
 

Nandhaki

Moderator

தீரா🎻22


திருமண பதிவு புத்தகத்தில் கையெழுத்திட்டு புன்னகையுடன் நிமிர்ந்தாள் ஸ்ரீனிகா. அன்று இறக்கிவிட்டு சென்றவனை மறுபடி கேரளா வரும் போதுதான் மீண்டும் சந்தித்தாள்.

அவனது நீண்ட நாள் கனவு ப்ராஜெக்டான கார் டீலர்ஷிப் ஒப்பந்தம் தொடர்பாக வெளிநாட்டில் இருந்து வந்திருந்தவர்களோடு பேச்சு வார்தை நடக்க வீட்டிற்கு போக கூட நேரமின்றி இருந்தவன் ஸ்ரீனிகா பேசக் கேட்டதையே மறந்துவிட்டிருந்தான். தான் தேடும் பெண் ஸ்ரீனிகா தானா என்பதை கூட யோசிக்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தான்.

யாதவிடம் கூறி பிளைட் டிக்கெட்டை மட்டும் அனுப்பி வைத்தவன் சரியாக அந்த நேரத்திற்கு வந்து அவளுடன் இணைந்து கொண்டான். அவள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாபநாசம் ஜனார்த்தனன் கோவிலில் வைத்து திருமணத்தை பதிவு செய்து தாலியும் கட்டி முடித்தாகிவிட்டது. “ஏன் கோவிலில்...” என்று தயங்கியவனிடம் அவன் அம்மாவை காரணம் காட்டி தப்பிவிட்டாள்.

அவள் தாமரை நிற மேனியை மெரூன் வண்ண கூரை தழுவியிருக்க மணப் பெண்ணிற்கான அலங்காரம் எதுவுமின்றி சாதாரணமாய் இருந்த போதும் கழுத்தில் சூடியிருந்த மாலையும் புது தாலியும் புது மெருகை கொடுக்க உள்ளார்ந்த மகிழ்ச்சியில் அழகாய் ஜொலித்தாள்,.

கிடைத்த சிறு தனிமையில் “உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்...” பட்டு வேட்டி சட்டையில் அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் விட கம்பிரமாய் அழகாய் தென்பட்டவனை கண்களால் விழுங்கியவாறே கேட்டாள். ‘சொல்லு’ என்பது போல் பார்க்க அத்தனை சீக்கிரம் விடுவேனா என்பது போல் சிரித்தான் விதிதேவன்.

“பெண் குட்டி வரன் வரூ” ஐயர் அழைக்கவே திருமணம் தொடர்பாக மிஞ்சியிருந்த சடங்குகளை முடித்து கொண்டு வெளியே வந்தார்கள். அவன் வெளியே வருவதற்கே காத்திருந்தது போல் அவசர அழைப்பு என்று அஜா ஃபோனை கொடுத்தான்.

சற்று தள்ளி நின்று சில வார்த்தைகளுடன் போனில் பேச்சை முடித்தவன் உணர்ச்சியற்ற முகத்துடன் திரும்பி வந்து “அவசரமா சென்னை போகணும் ஈவ்னிங் ரெடியாய் இரு” கண் பார்க்கமால் கூறி முன்னே செல்ல அஜாவும் அவளும் பின்னேயே சென்றார்கள்.

“போகலாம்...” ஆர்வமும் தயக்கமும் போட்டியிட கேட்டாள் “என்னுடன் ஓர் இடத்திற்கு வர முடியுமா?” சிலவேளை அம்மாவிற்கு நினைவிருந்தால்....

“நேரமில்லை....” கண் பார்க்கமாலே மறுத்தவனின் மணிகட்டினை இருகையாலும் பிடித்தவாறே கொஞ்சும் குரலில் கேட்டாள் “ப்ளீஸ்.... ப்ளீஸ்....”

அவன் கையை பிடித்து கொண்டு கேட்டது சிறு குழந்தை போல் அவன் உள்ளத்தை கொள்ளையிட ஒரு கணம் இளகியவன் சட்டென கையை உதறி “இது வெறும் பொம்மை கல்யாணம்... நினைவு இருக்கு தானே” கடுமையான குரலில் கேட்டான். அவனை சந்தித்தது முதல் இப்படிக் கடுமையாய் நடந்து பார்க்காதவள் அதிர்ந்து போய் நிற்க, அதையும் சகித்து கொள்ள முடியாமல் “போவோம்” என்று முன்னால் நடந்தான்.

அவன் பின் ஓடி சென்றவள் “ச்சு அதில்ல...” தொடங்கியவளை இடை வெட்டியது அவன் இறுகிய குரல் “உன்னை எங்கே இறக்கி விட வேண்டும்”. சட்டென முகம் விழுந்து விட இறங்கிய குரலில் கூறினாள் “போகும் வழியில் சொல்கின்றேன்”.

உண்மையில் ‘போடா’ என்று போகத்தான் ஆசையாய் இருந்தது. ஆனால் கல்யாணமாகி கோவிலில் இருந்து போகும் போதே தனித்தனியாக போவதா என்ற எண்ணம் மட்டுமே அவளை தடுத்து நிறுத்தியது. வழமை போல் மருத்துவமனை அருகே இருவர் மாலையும் சேர்த்து எடுத்து கொண்டு இறங்கும் முன் மீண்டும் ஒரு முயற்சியாக “கௌத...” அழைத்து முடிப்பதற்குள் முகத்தை திருப்பினான் கௌதம். அவன் அலட்சியத்தில் கன்றி விட்ட முகத்தை மறைக்க போலியான ஒரு புன்னகையுடன் விடை பெற்று சென்றுவிட்டாள்.

ட்ரைவர் சீட்டில் இருந்த அஜா ‘ஏன்’ என்பது போல் பார்த்தான்.

தாலி கட்டிய கணத்திலிருந்து மனதில் எழும் எண்ணங்கள் அவன் வசமின்றி எங்கெங்கோ செல்ல என்ன செய்வது என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தான் கௌதம். சற்று முன் திருமணம் முடித்து வெளியே நின்று போன் பேசிக் கொண்டிருந்த போது நடந்தது வேறு அவனை இன்னும் குழப்பிவிட்டிருந்தது.

சற்று தள்ளி நின்று உரையாடியவன் பார்வை கண்ணாடியில் விழ தன்னை கண்களாலேயே களவடிக் கொண்டிருந்த ஸ்ரீனிகாவும் சேர்ந்து அவன் கண்ணில் விழுந்தாள். விட்டால் கண்களாலேயே அவனை விழுங்கி விடுவாள் போலிருந்தது. ஏற்கனவே அவன் வசமின்றி எண்ணங்கள் சிதறிக் கொண்டிருக்க, அவள் பார்வை அவற்றை விசிறி விடும் போல் இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் அவளை தள்ளி வைக்க அவளிடமே காய்ந்துவிட்டான்.

வீதியை கடந்து மருத்துவமனை நோக்கி செல்ல புருவம் முடிச்சிட பார்த்தவன் ‘இங்கு ஏன்...? ஆனால் இங்கே போகவா அழைத்தாள்?’ புருவச் சுழிப்புடன் தன்னையும் அறியாமல் காரை விட்டு இறங்கி அவளை பின் தொடர போக விதிதேவனின் விரல் சொடுக்கில் அவன் கையிலிருந்த போன் அலறியது. உனக்கு எது முக்கியமோ அதன் பின்னே போ என்பது போல்.

அந்த கார் டீலர்ஸ் தொடர்பாக வீடியோ மீட்டிங் கால் என்று யாதவ் தான் அழைத்திருந்தான். முன்புறம் ஏறி அமர்ந்தவன் மருத்துவமனை உள்ளே போகும் அவளை பார்த்தவாறே போகலாம் என்பது போல் கையால் சைகை செய்தான்.

🎻🎻🎻🎻🎻

“அம்மா இன்று என் கல்யாணம் நடந்தது. நீங்கள் இல்லை என்பதை விட வேறு குறை இல்லை. உங்கள் அண்ணாவின் மகன் இங்கே தான் இருந்தார். இப்போது தான் ஒரு அவசர அழைப்பு என்று போனார்.” உதட்டை சுழித்தவள் “இன்றே தமிழ் நாடு போயல்லோ ஏதோ அவசர மீட்டிங்காம். இந்த வீக்என்ட் வருவேன். அப்போது மாமா அத்தை பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகள் அனைவரையும் பற்றி சொல்றன். ஒகேவா... உங்களையும் தமிழ்நாடு கூட்டிட்டு போவோம் என்று தான் நினைத்தேன். ஆனா டாக்டர் சொல்றார் உங்கள் உடல்நிலை நீண்ட பயணத்தை தாங்கி கொள்ளும் வலு இல்லையாம்” கண்களில் நீர் வழிந்தது. எத்தனை ஆபத்துகளை கடந்தார்.

அவர் அருகே மெத்தையில் தலை வைத்தவள் “யோசிக்காதீங்க சனி ஞாயிறு நான் வந்திருவேன். அவர்.... கௌதமே சொல்லிட்டார். அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லையாம்.” வாய் வலிக்க வலிக்க ஏதோதோ பேசிக் கொண்டே இருந்தாள்.

ஸ்ரீமதி கண்ணிலிருந்து கோடாய் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

“அவருக்கும் என்னை ரெம்ப பிடிக்கும். என்னை தான் கல்யாணம் செய்யனும் என்று இத்தனை நாள் வந்த வரனையெல்லாம் ஏதேதோ சொல்லி தட்டி கொண்டே இருந்திருக்கின்றார். கல்யாண போட்டோவையும் மாலையும் இதில் மாட்டுறேன் நீங்கள் பாருங்கள். “ஆ... சொல்ல மறந்திட்டேன். அவர் பெயர் கௌதம் கிருஷ்ணா” பேசியவாறே அவர் முன் இருந்த சுவற்றில் மாலையையும் போட்டோவையும் மாட்டினாள்.

அவள் போன் அதிரவே எடுத்து பார்த்தால் அஜா “அஜா ஏட்டா பறயோ”

அவள் ‘ஏட்டா’வில் மெலிதாய் புன்னகைத்தவன் “ஏர்போர்டில் போகானாம்”

"ஆஹ் யான் வரு"

அஜா மட்டுமே வந்திருந்தான. கேள்வியாய் பார்க்க “பாஸ் கொஞ்சம் பிஸி” யோசனையாய் தலையாட்டியவள் விசாரித்தாள் “எத்தனை மணிக்கு”

“வழியில் அலுவலகத்தில் பாசை ஏற்றிக் கொண்டு நேரே அங்கே தான்” பதிலளித்தவன் அவள் கையிலிருந்த டிரவல்லிங் பாக்கை வேண்டி கார் டிக்கியினுள் வைத்து மூடினான்.

🎻🎻🎻🎻🎻

சென்னை விமான நிலையம்....

கௌதம் ரெஸ்ட் ரூம் சென்றிருக்க காத்திருப்போருக்கான இருக்கையில் அமர்ந்து யோசனையில் மூழ்கியிருந்தாள் ஸ்ரீனிகா. கௌதம் நடவடிக்கையில் வெளிப்படையாகவே தெரிந்த மாற்றம் அவளை குழப்பத்தில் ஆழ்த்தியது. விமானம் எழுப்பும் வரை கையை பிடிக்க அனுமதித்தவன் எழுந்ததும் உதறிவிட்டான் . நன்றாகத்தானே இருந்தான் பிறகு திடிரென என்ன நடந்தது. அவள் யோசைனையை கலைத்தது தொலைபேசி.

🎻🎻🎻🎻🎻

அதே விமான நிலையத்தின் இன்னொரு இடத்தில் கோபத்தில் முகம் சிவக்க அமர்ந்திருந்தாள் ஸ்ரீநிஷா. ஏர்போர்ட்டில் அம்மா தன்னை அம்போ என்று தனியே விட்டு அந்த ஸ்ரீனிகாவை பார்க்க போய்விட்டார் என்ற கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்தவள் கண்ணில்பட்டான் கௌதம்.

அவர்கள் இருவரும் உள்ளே செல்லத் தாயாராகிக் கொண்டிருந்த போதே விமானத்திலிருந்து இறங்கி வந்த கௌதம் ஸ்ரீனிகா சாராதாவின் கண்ணில்பட்டார்கள். அழைப்பதற்குள் தாண்டிப் போய்விடவே மகளை லக்கேஜை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அவர்களைத் தேடிச் சென்றார்.

திரும்பி அருகேயிருந்த பூட் சிட்டியின் கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தைப் பார்த்தவள் கபடமாக புன்னகைத்தாள். இன்னொருவர் நேசத்தைத் தட்டிப் பறித்தால் எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டுமில்லையா?

அவளைத் தாண்டிச் சென்ற கௌதமை அழைத்தாள் “ஜிகே....”

🎻🎻🎻🎻🎻

“ஹலோ சாரதாம்மா சொல்லுங்கள்”

“எங்கேம்மா..”

“சென்னை ஏர்போர்ட்”

“அந்த மெரூன் கூரையுடன் நீதானம்மா அது?”

“நீங்கள் எங்கே”

“உன் பின்னால்”

திரும்பி பார்த்தவள் புன்னகையுடன் அருகே சென்று வணங்கினாள். இன்று அவருக்கும் ஸ்ரீநிஷாவிற்கும் லண்டன் பிளைட். மனம் நிறைய ஆசிர்வதித்தார் “நல்லயிரும்மா...” அவள் பின்னால் பார்த்தவர் ஆவலாய் கேட்டார் “மாப்பிள்ளை எங்கே? அவரை பற்றி விசாரித்து விட்டேன் தங்கமான பையன் நேரில் சந்திக்க முயற்சி செய்தேன் முடியவில்லை” இத்தனை பிரச்சனையிலும் அவளுக்காக மெனக்கெட்டு விசாரித்தார் என்று சொல்ல லேசாய் கலங்கிய விழிகளுடன் ஏர்போர்ட்டினை துலாவினாள்.

“பிளைட் நேரமாகிவிட்டது அவரை நான் லண்டனில் இருந்து வந்ததும் சந்திக்கின்றேன் என்று சொல்லம்மா” அவசரமாய் விடைபெற்று சென்றார்.

“போகலாமா?” செல்லும் அவரையே பார்த்து கொண்டிருந்தவள் பின்னிருந்து கேட்ட குரலில் லேசாய் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். கல்லைப் போல் உணர்ச்சியற்ற முகத்துடன் நின்றிருந்தான் கௌதம். மெதுவாய் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

வீட்டிற்கு வந்து இறங்கியவள் கண்கள் முதலில் தேடிக் கண்டு கொண்டது அந்த மல்லிகை பந்தலை தான், பட்டுவிடவில்லை இன்னும் செழிப்பாய் நின்றது. உள்ளே செல்லாமல் முகம் நிறைந்த புன்னகையுடன் “உங்களை முதல் முறை இந்த பந்தல்...” ஏதோ சொல்ல வந்தவள் வார்தை பாதியில் நின்றது அவன் நடத்தையில். அவளுக்காக காத்திருக்க கூட இல்லாமல் வேக நடையுடன் உள்ளே சென்றிருந்தான் கௌதம்.

டிக்கியிலிருந்து டிரவல்லிங் பாக்கை எடுத்து வந்த அஜாவும் திகைத்து நிற்க அவமானத்தில் முகம் கன்ற நின்றாள் ஸ்ரீனிகா.

வேறு நேரமாய் இருந்தால் பைகளை ஹாலில் வைத்துவிட்டு திரும்பிவிடுவான். இன்று அப்படி செல்ல முடியாமல் தடுத்தது அடி வாங்கிய குழந்தை போலிருந்த அவள் முகம். “வாம்மா தங்கச்சி” அவன் அழைப்பில் திடுக்கிட்டு போய் பார்க்க சிறு முறுவலுடன் வாசலை கைகாட்டினான். அப்போதும் மறக்கமால், கவனத்தை ஈர்க்காமல் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றவளை பார்த்து சிரித்தது மூளை.

பைகளை மேலே தூக்கி கொண்டு வந்த அஜா கௌதமின் அறைக்கு முன் வந்து நின்று கதவை தட்ட திறந்தவன் புருவ நெரிப்புடன் “நீ ஏன்...?” கேட்கும் போதே புரிந்தது. இதற்கு முன் அவள் இந்த வீட்டிற்குள் வந்ததில்லை. வாசலிலேயே விட்டு வந்துவிட்டான். பெருவிரலால் நெற்றி கீறியவன் “நீ போ நான் பார்த்து கொள்கின்றேன்” என்றான் அஜாவிடம்.

“சாரி ஏதோ யோசனையில் வந்துவிட்டேன்” அவன் முகமே கூறியது கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை வெறுமே முகமனுக்காக கூறுன்கின்றான் என்று. “என்னுடன் வா” என்று முன்னே நடந்தவன் அவன் அறைக்கு அருகே இருந்த அறையை திறந்து “இதுதான் உன் அறை. அம்மா அப்பா வர இன்னும் ஐந்து நாட்கள் ஆகும் மீதியை நாளை பார்க்கலாம்” என்று திரும்பியவன் கையை பிடித்தவள் “உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டுமே” புன்னகையுடன் கூறினாள்.

அவளுக்கு தான் தெரியுமே தான் யாரென்று தெரியாமால் தான் இப்படி நடக்கின்றான். தெரிந்துவிட்டால்... தன் பாட்டில் சென்ற யோசனையை தடுத்தது இரு விரல்களை மட்டும் உபயோகித்து அவள் கையை தன் கையிலிருந்து பிரித்த விதம். ஏதோ தீண்ட தகாதவளை போல் நடத்த உள்ளுற மூண்ட சினத்துடன் அவன் கையை இறுக பிடித்தவள் குழப்பம் நிறைந்த முகத்துடன் கேட்டாள் “ஏன் என்ன ஆச்சு?” நேற்று வரை நன்றாக தானே இருந்தான். இப்போது என்னவானது?

சினத்தில் சிவந்த முகத்துடன் கையை வேகமாக உதற பயத்தில் இரண்டடி பின்னால் சென்ற ஸ்ரீனிகா ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் கண்களை விரித்து பார்த்து கொண்டிருந்தாள் என்னவாயிற்று இவனுக்கு.

“என்ன சொல்ல போகிறாய் நீதான் நான் தேடும் பெண் என்றா?” ஏளனமாய் கேட்டான்.

என்னவானது ஏதாவது தப்பாக நடந்து கொண்டேனா? திருமணம் முடிந்ததிலிருந்து இப்படி தான் நடக்கின்றான்... ஏன்? சொல்லவில்லை என்று கோபமா? ஆனால் எப்படி தெரியம்? சொல்வதற்கு வேறு யாருமில்லை. மனதினுள் ஆயிரமாயிரம் கேள்வி எழ தலை லேசாக வலிக்க தொடங்கியது.

ஸ்ரீனிகா புரியாமல் பார்க்க அவளின் அப்பாவித்தனமான முக பாவனையில் அவனுக்கு இன்னும் சினமேறியது. “ஆஹா... அற்புதமான நடிப்பு, யார் யாருக்கோ ஆஸ்கார் கொடுக்கின்றார்கள். உனக்கு தான் முதலில் கொடுக்க வேண்டும்” சீறியவனை பார்த்து காரணம் புரியாமல் விழித்தாள்.

“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? உன் தங்....... பெண்ணா நீ... சை” என்றுவிட்டான்.

அவன் ஏதேதோ பேச அதை கவனித்து கேட்கத் தான் முயற்சித்தாள். ஆனால் முடியவில்லை மூளை எதையும் கிரகிக்க மறுத்து பூமியோடு சேர்ந்து அதுவும் சுற்ற அப்படியே அருகே இருந்த சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

லேசாய் முணுக் என்ற தலைவலியுடன் ஏதோ மில் ஸ்ரீ... சுரேஷ் வார்த்தைகளில் பாதியை மூளை கிரகிக்க மீதி காற்றில் மறைந்தது. மூளை ஒரு இடத்தில் கவனத்தை குவிக்க மறுக்கவே அவள் பார்வை கைப்பையில் படிந்தது. தலைவலிக்கு உள்ள மாத்திரை எடுத்தே ஆக வேண்டும். ஆனால் கையை காலை அசைக்க கூட முடியவில்லை.

சத்தமின்றி இருக்க திரும்பி பார்த்தான் கௌதம். இருந்த இடத்திலிருந்து கைப்பையை எடுக்க கையை நீடியவள் கைகள் வெளிப்படையாகவே நடுங்கி கொண்டிருக்க நெற்றியில் வியர்வை முத்துகள். நெற்றி சுருக்கி பார்த்தவன் கைபையை எடுத்து நீட்ட தலைவலி டேப்லட்டை எடுத்து தண்ணீர் கூட இல்லமால் விழுங்கினாள். நீர் வழியும் கண்களால் அவனை பார்த்தவளுக்கு உலகம் மெதுவே இருட்டி கொண்டது.

வருவான்....
 

Nandhaki

Moderator

தீரா🎻23

கண்ணை திறக்க விடுவேனா என்று நின்ற தலைவலியை மீறி திறந்தவளுக்கு மெல்லிய வெளிச்சத்தில் அறை தெரிய, திருமணமானதும் கௌதம் வீட்டிற்கு வந்ததும் கடைசியாய் அறைக்கு வந்ததும் நினைவுக்கு வந்தது. அதன் பின் என்ன நடந்தது

சுற்றிப் பார்க்க சோபாவிலேயே படுத்திருப்பது புரிந்தது. சட்டென எழுந்து அமர்ந்தவள் உடனேயே “ஸ்ரீகுட்டி...” தன்னை தானே திட்டியவள் உதட்டை கடித்தவாறே தலையை பிடித்து கொண்டாள். திடிரென எழுந்து அமர்ந்ததில் தலைவலி உயிரை எடுத்தது. குனிந்து பார்க்க இன்னும் கூரைபட்டில் தான் இருந்தாள்.

ஒரு வழியாய் சுவிட்சை தேடி தட்டிவிட்டவள் புதிதாய் வெளிச்சம் மீண்டும் கண்ணை கூசி தலைவலியை கூட்ட கண்ணை மூடியவாறே சேலை பின்களை கழட்டி முந்தானையை நழுவவிட்டாள்.

“ஏஏய்..” என்ற கூச்சலில் முந்தானையை அள்ளி தோளில் போட்டவள் சுவரோடு திரும்பி நின்று யாரென பார்க்க அவள் மணவாளனே தான். எப்படி உள்ளே வந்தான் என்று நிமிர அவள் அறைக் கதவு அவள் முன்னே நின்று சிரித்தது. “கதவு இங்கே இருக்கு அப்புறம் எப்படி உள்ளே....” சுட்டு விரலால் நாடியை தட்ட “இங்கேயும் ஒரு கதவு இருக்கு” என்றான் அவன். அடிபாவி உன் மைன்ட் வாய்ஸை காக்கா தான் தூக்கணும் தன்னை தானே திட்டியவள் சேலை முந்தானையை சரி செய்து திரும்பினாள்.

“அது பொதுவான அறை அதற்கு மறுபுறம் இதே போல் இன்னொரு அறை எனக்கு, இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மா வந்துவிடுவார்கள் குளித்து அந்த அறைக்கு இந்த கதவு வழியாக வா” என்றவன் திரும்பி நின்று “இப்படியெல்லாம் என்னை மயக்க முடியாது சோ டோன்ட் ட்ரை தீஸ் சீப் டிரிக்ஸ்” ஏளனமாய் கூறி செல்ல அடைத்த கதவை முறைத்தாள் ஸ்ரீனிகா.

“மூஞ்சியும் முகரகட்டையும் இவர மயக்க நான் எதுக்கு கஷ்டபடனும்...” உதட்டை சுளித்தாள். மீண்டும் சேலையை அவிழ்க்க மீண்டும் கதவை திறந்தவன் “சாரி... சாரி... இன்னும் ஒன் ஹவர்ல அம்மா அப்பா வந்திருவாங்க... சீக்கிரம் வந்திரு..” அவள் பக்கம் திரும்பாமல் சொல்லி பூட்டி சென்றவன் மீண்டும் திறந்து அறைக்குள் வராமல் மறுபுறம் நின்றவாறே கூறினான் “வாஷ் ரூம் இரண்டு பக்க வழி பார்த்து க்ளோஸ் பண்ணு” என்றவனை இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

மறுபுறம் கதவை மூடியவனுக்கு இதய துடிப்பை கட்டுபடுத்துவதே பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. ஒரு கணம் மேகம் விலகிய நிலவாய் அவள் மூடி வைத்திருந்த அழகுகள் கண்ணில் பட தன் எண்ணம் சென்ற திசையை கட்டுபடுத்த முடியாமல் திணறிவிட்டான். அதுதான் என்னை மயக்க முடியாது என்று அவளுக்கு சொல்வது போல் தனக்கு தானே சொல்லிகொண்டான். கையை பார்க்க அது வெளிப்படையாகவே நடுங்கியது.

‘இத்தனை வருடம் பிரம்மச்சாரியத்தை உடலால் மட்டுமில்லை மனதாலும் கடைபிடித்தவன். இப்படி ஒரு ஏமாற்றுகாரியிடம் ஏலம் விடவா?’ என்று அவன் மனசாட்சி அவனை பார்த்து நகைத்தது. ‘சீச்சி.... கொஞ்சம் அசந்திருந்தால் உன்னையே ஏமாற்றி இருப்பாள். இவளிடமா நீ விழ வேண்டும்?’ தன்னை தானே கேள்வி கேட்டு கொண்ட கௌதம் அப்பா அம்மாவிடம் என்ன சொல்வது என கண்மூடி யோசித்து கொண்டிருந்தான்.

அதற்குள் ஸ்ரீனிகா குளித்து பிரெஷாகி அனர்கலி சுடிதார் ஒன்றினை அணிந்து வெளியே வந்தாள். முகம் சற்று வெளிறினால் போல் இருந்ததை தவிர பெரிதாக அவளில் எந்த மாற்றத்தையும் கௌதமினால் இனம் காண முடியவில்லை.

அந்த அறையை சுற்றி பார்த்தாள் விலாசமான அறைதான். ஒருபுறமாய் இருந்த கிங்சைஸ் கட்டில் அந்த அறையின் விலாசத்தில் சிறிதாய் தெரிந்தது. கட்டிலுக்கு நேர் எதிரே அழகிய வேலைபாடு அமைந்த டிரேசிங் டேபிள், மேலே சாண்டிலியர், சோபா, ரேக்ளைனர் என்று அறையின் ஒவ்வொரு பொருட்களின் நிறமும் மாபிள் தரையின் நிறமும் ஒன்றோடு ஒன்று ஒத்து அமைந்து என் உடமைக்காரன் ரசிகன் என்பதை அறிவித்தது. அறையோடு இணைந்து வெளியே ஒறுபுறம் மட்டும் கண்ணாடி கூரை போட்ட சிட்அவுட், குஷன் போட்ட ஊஞ்சல் முன்னே சிறு டிபோ.

“பார்த்து முடிந்துதா?” அவன் கேள்வியில் திடுக்கிட்டு போய் பார்த்தாள். முழங்காலை சற்று தாண்டிய பெர்முடாவுடன் டீ ஷர்ட் அணிந்திருந்தவன் அழகிய கண்களில் ஏதோ விலகல்..... என்னாச்சு இவனுக்கு திருமணத்திற்கு முன் வரை நன்றாகதானே பேசிக் கொண்டிருந்தான்.

உணர்ச்சியற்ற முகத்துடன் முன்னிருந்த சோபாவை கண்ணால் காட்டி “இரு” என்றான். “அம்மா அப்பா இருவரும் ஏர்போர்ட் வந்தாச்சு. அவர்கள் வர இன்னும் ஐந்து நாள் ஆகும் என்று நினைத்தேன். என்ன நடந்தது என்று தெரியால கொஞ்சம் முன்னாலேயே வாராங்க. சரி எப்போது வந்தாலும் எதிர் கொள்ள வேண்டியது தானே” அவன் சொல்ல சொல்ல ஸ்ரீனிகா தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

“அவர்களிடம் பாதி உண்மையை சொல்ல போகின்றேன்.” ‘என்ன’ என்பது போல் பார்த்தவளிடம் “ஆலன் பிரச்சனையால் தான் அவசரமாக திருமணம் செய்தது என்று புரிகின்றதா?” கேட்டு நிறுத்தினான். “அது மட்டுமில்லை நாம் சற்று நடிக்கவும் வேண்டும்” புரியாமல் தலை சாய்த்து பார்த்தவளை கண்டு அவன் மனம் அனுமதியின்றி அவள் புறம் சாய்ந்தது.

“முதல் ஒரு நான்கு மாதம் இருவரும் சந்தோசமாய் இருப்பது போல் நடிக்க வேண்டும் அடுத்த நான்கு மாதம் சண்டை போட்டு கொள்வது போல் பின் விவாகரத்து கேட்டு பிரிந்துவிடலாம். அப்போது எதுவித சந்தேகமும் வராது சரியா?” அனைத்தையும் கூறியவன், அவள் முகத்தை பார்க்க நெற்றி சுருக்கி யோசித்தவள் “அப்படியானால் உங்கள் காதலியை கண்டு பிடித்துவிடீர்களா?” கன்னங்களில் மெல்லிய செம்மையுடன் கேட்க சட்டென எழுந்தவன் அவளுக்கு முதுகு காட்டி நின்று “இதை பற்றி நீ பேசவது இதுவே கடைசியாக இருக்கட்டும்”

“ஆனால் அது நான்...” என்று தொடங்கியவளை இடைமறித்தான் “இட்ஸ் நோன் ஒப் யுவர் பிசினெஸ். உனக்கும் எனக்கும் இடையில் உள்ளது வெறும் ஒப்பந்தம் மட்டுமே. உன் பிரச்னைக்கு ஒரு தீர்வு. அதை நீ பார்த்துகொள். அதே போல் என் காதலியை கண்டு பிடிப்பதும் பிடிக்காததும் என் பிரச்சனை அதை பற்றி நீ கவலைப்பட தேவையில்லை நான் பார்த்து கொள்வேன்” என்றான் கடுமையான குரலில். சும்மாவே பயந்த சுபாவம் உடைய அவளை கடுமை நிறைந்த குரலும் விறைத்திருந்த முதுகும் முஷ்டியாய் இறுகி இருந்த கரங்களும் தூரத்திலேயே நிறுத்திவிட்டிருந்தது.

வாசல் வரை சென்றவன் சத்தமின்றி போகவே திரும்பிப் பார்த்தான். குழந்தையாய் மிரண்டு நின்றிந்தவளை பார்க்கவும் அவனுக்கே ஒரு மாதிரி இருக்க ‘இம்சை’ மனதினுள் திட்டியவன் “வரலயா...” கேட்டான்.

பதிலுக்கு “அ..” என்று விழித்தவளை பார்த்து மீண்டும் கேட்டான் “கீழே அம்மா அப்பா வந்திருப்பார்கள் நீ வரலயா?”

பதிலின்றி தலையசைத்தவள் சற்றே இளகியிருந்த அவன் முகத்தை பார்த்தவாறே அருகில் வந்து அவன் கை மணிக்கட்டினை இரு கைகளாலும் பிடித்தவாறே தயக்கத்துடன் கேட்டாள் “உங்களிடம் ஒன்று கேட்க வேண்டுமே?” தன் பெரிய கண்களை விரித்து கேட்க, அவன் கடைக்கண்ணில் கீழே இருந்து அம்மா அவர்களையே பார்ப்பது விழ அவள் கன்னத்தை மறு கையால் லேசாக தட்டியவன் புன்னகையுடன் கூறினான் “கேள்..”

“இல்ல நம் திருமணத்திற்கு முன் வரை நல்லாதானே இருந்தீங்க திடீரென்று என்ன ஆனது?” பதிலுக்காக நிமிர்ந்து பார்க்க மீண்டும் அவன் முகம் சினத்தில் சிவந்தது. நேற்று அத்தனை சொல்லியும் இன்று ஏதுமறியாதவள் போல் கேட்டவளை ஓங்கி அறையத்தான் மனம் வந்ததது. கீழே அம்மா பார்த்து கொண்டிருகின்றார் என்ற ஒரு எண்ணம் மட்டுமே அவனை நிறுத்தியது.

அவள் நாடியை அழுந்த பிடித்தவன் சினத்தை சிரிப்பில் மறைத்து கூறினான் “அதை பற்றி பிறகு பேசுவோம். இப்போது அம்மா அப்பாவை பார்ப்போமா?” பிடித்த இடம் வலிக்கவே தலையை மட்டும் வேகமாக ஆட்டி வைத்தாள்.

மாடியின் படி தொடங்கும் இடத்தில் நின்று அவள் கைகளை கோர்த்து தன்னுடன் அழைத்து சென்றான். அவள் பார்வையை அவன் முதுகு மறைக்கவே முன் இருந்தவர்களை தெரியவில்லை. தன்னருகே இழுத்து நிறுத்தி தயக்கத்துடன் “அப்பா....” என்று அழைக்க பக்கத்தில் நின்ற ஸ்ரீனிகா உற்சாகமாக “தாத்தா” என்றிருந்தாள்

கௌதம் அப்பா என்று அழைக்க நிமிர்ந்து பார்த்த ஸ்ரீனிகாவிற்கு மித்திரனின் சாயலில் இருந்த அவன் அப்பா அசோகனின் உருவத்தில் தன் தாத்தா மித்திரனே முன்னால் நிற்பது போல் இருக்கவே தன்னையுமறியாமல் தாத்தா என்று அழைத்திருந்தாள்.

“என்ன தாத்தாவா? என்னடா இதெல்லாம்? இதுதான் அந்த பாழாய் போன காரணமா?” குதித்தவரை கண்டு கௌதம் பின்னால் ஒளிந்தவள் இரு கையாளும் அவனின் முதுகு புறசட்டையை இறுக பற்றி கொண்டு பின்னிருந்து எட்டி பார்த்தாள்.

புதிதாய் வந்த மருமகளின் அழகிலும் குழந்தைதனத்திலும் புன்னகைத்த யசோதா “இங்கே வாம்மா” அன்பாய் தான் அழைத்தார். அவளோ படு வேகமாக மறுத்து தலையாட்டினாள்.

“காரணத்தை தான் நான் இன்னும் சொல்லவே இல்லையேப்பா”

“அதான் உன் மனைவியே சொல்லிட்டாளே...”

தோளுக்கு மேலாக தன் பின்னால் நின்றவளை பார்க்க அவள் மீண்டும் வேகமாக தலையாட்டினாள் “ஞான் ஒன்னும் பரஞ்ஞில்ல”

“தமிழ் பொண்ணு என்று சொன்னடா” மீண்டும் எகிறினார் அசோகன்.

“தமிழ் தான்ப்பா..”

“எந்த ஊர்ல இது தமிழ்...”

“ஸ்... அதில்லப்பா...”

“ஷப்பா.... கொஞ்சம் அமைதியாய் இருங்கள்” இடை புகுந்தார் யசோதா “முதலில் அவன் என்ன சொல்கின்றான் என்று கேளுங்கள் அப்புறம் பார்ப்போம்”

“அவள் தமிழ் பெண் தான் படிச்சது எல்லாம் கேரளா அதான் சிலவேளை மலையாளம் வரும்” அவள் விளக்கமளிக்க மீண்டும் எட்டி பார்த்து வேகமாக தலையாட்டிய ஸ்ரீனிகாவை கண்களால் மட்டுமாய் முறைக்கவே மீண்டும் அவன் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

யசோதாவுக்கு பார்த்ததுமே பிடித்துவிட்டது அவரது மருமகளை இருந்தாலும் இப்படி ஒருவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் செய்திருக்க வேண்டாம் என்று நினைத்தவாறே யோசனையுடன் மகனை நோக்கியாவர் “முதலில் இருவரும் இருங்கள்” சோபாவை காட்டியவர் “உன் காரணத்தை சொல்லப்பா...” என்றார்.

சிறிது தயங்கியவன் ஆலன் திட்டத்தையும் அவளை தூக்க முயன்றதையும் தான் அதை தடுத்து விட்டதையும் கூறியவன் கவனமாக சுரேஷின் பங்கினை மறைத்துவிட்டான். சுரேஷிற்கும் அவனுக்குமான உறவு முறை தெரியாத ஸ்ரீனிகா அதை பெரிதாக எடுக்கவுமில்லை. அவளுக்கு தன் மாமாவின் முகத்தில் இருந்த கோபம் தான் கண்ணில் தென்பட்டது. யசோதாவோ மகனின் முகத்தையே கூர்ந்து பார்த்தார். “இதுதான் பிரச்சனை என்றால் இந்த வீட்டில் கூட்டி வந்து விட்டால் போகிறது. திருமணத்தை ஆறுதலாய் முடித்திருக்கலாமே” ஒரு சிரிப்புடன் அதையே கேள்வியாக கேட்டார்.

அந்தக் கேள்வியுடன் அசோகன் கோபமாக எழ பயத்துடன் சற்று தள்ளி அமர்ந்தாள் ஸ்ரீனிகா. அவள் பயத்தை பார்த்து வாய்விட்டே சிரித்த யசோதா அவள் அருகில் சென்று அமர அசோகனோ கோபத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அங்கிருந்து சென்றார். அவர் பின்னாலேயே சென்றான் கௌதம்.

தன் பெரிய கண்களை இன்னும் விரித்து செல்லும் அவர்களையே பார்த்து கொண்டிருந்த ஸ்ரீனிகாவிடம் “என்னம்மா பயந்துவிட்டாயா?” என்றார் கேட்ட தன் அத்தையை வியப்புடன் பார்த்தாள்.

“உங்களுக்கு கோபம் இல்லையா?” ஆச்சரியத்துடன் கேட்க “இல்லையே...” என்றவரை கண்கள் வெளியே விழுந்துவிடும் போல் பார்த்தாள். “எனக்கு வேண்டியதும் இதுதானே” என்றவர் புன்னகையுடனே கூறினார் “என் அண்ணன் பெண்ணை நிச்சயம் செய்ய போறேன் என்று சொல்லும் போதே இப்படி ஒன்றை எதிர்பார்த்தேன் ஆனால் கல்யாணமே செய்து கொண்டு வாருவான் என்று நினைக்கல” சிறு வருத்தத்துடன் கூறியவரை கவலையாய் பார்த்தவள் தீடிரென்று கேட்டாள் “மாமா அவரை திட்டுவாரா?”.

கன்னத்தை நிமிண்டி “அக்கறைதான்” என்றவர் “அவர் மகனிடம் கோபமாக இருக்கும் அந்த கொடுமையை நீயே வந்து பாரம்மா” என்று அழைத்து சென்றார். தோட்டத்திற்கு போகும் வழியில் நின்ற தந்தையும் தனயனும் ஒருவரை ஓருவர் பார்த்து சிரித்து கொண்டிருந்தனர்.

“அந்த பெண்ணின் அம்மாவின் பெயர் என்ன?” அவசரமாய் கேட்டார்.

“சாராதா.. ஏன்பா”

“இல்ல கிட்ட தட்ட ஸ்ரீமதி ஜடை போல்... அதான்” இருவரிடமும் சில நொடிகள் கனத்த மௌனம் ஆட்சி செய்ய தலை குனிந்திருந்தவனிடம் எகிறினார். “ஏண்டா படுவா என்னிடம் என்ன சொன்னாய்? இப்ப என்ன செய்து வைத்திருக்கிறாய்? கல்யாணம் செய்வதாக சொல்லேயில்லையே”

“அப்பா மெதுவா அம்மாக்கு கேட்டிரும்” எட்டி பார்த்துவிட்டு “உண்மையாவே அதான்பா காரணம். அஹ் நீங்க கொஞ்சம் மருமகளோட கோபமா இருப்பது போல் கெத்து காட்டுங்கள் அப்போது தான் அம்மா நம்புவார்கள்” ரகசியாமாய் கூறவே பத்தடி தொலைவில் நின்ற ஸ்ரீனிகாவிற்கும் யாசோதவிற்கும் கேட்கவில்லை.

“எப்படி உன் அம்மாவை சமாளித்தேன் பார்த்தியா?” பெருமையாய் இல்லாத மீசையை முறுக்கி விட்ட தந்தையை “உங்கள் சகாசத்தை நீங்கள் தான் மெச்சவேண்டும்” என்று கிண்டல் செய்தான் மகன்.

“பார்த்தியா உன் புருசனும் என் புருஷனும் சேர்ந்து செய்யும் வேலையை” கேட்ட யசோதாவுடன் சேர்ந்து சுட்டு விரலால் பத்திரம் காட்டினாள் ஸ்ரீனிகா. கையில் இல்லாத தூசியை தட்டிய யசோதா “ஆனா இவர்களுக்கு நான் யாருன்னு தெரியல, எப்படி கிடுக்குப் பிடி போட்டேன் பார்த்தியா?” என்றவரை என்ன என்பது போல் பார்த்தவளுக்கு பதிலாய் “இன்னும் ஐந்து நாளில் நிச்சயத்தை வைத்துகொண்டு இப்படியா ஆறுதலாய் பறந்து வருவோம். சும்மா கொளுத்தி போட்டேன் நன்றாகவே வெடித்து நீ வந்தாய்” என்று கன்னம் வழித்து முத்தமிட்டு சென்றவரையே ஆவென்று வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா.

ஆத்தி அத்தையாம்மா எல்லோருக்கும் மேல்....

வருவான்.....

பெறுமதி மிக்க உங்களின் கருத்து மற்றும் விமர்சனத்திற்கு
 
Last edited:

Saranyakumar

Active member
பாவம் ஸ்ரீனி 😮‍💨அவள் அம்மாவிற்கு நடந்த விபத்து திட்டமிட்டு நடந்ததா ஸ்ரீனி தங்கைதான் கெளதமிடம் ஏதோ சொல்லிருப்பாள் போல கெளதம் ஸ்ரீனி வாழ்க்கைல விதி ரொம்பவே விளையாடியிருக்கு
 

Saranyakumar

Active member
கெளதமின் அப்பாவிற்கு ஸ்ரீனியை பார்த்தால் ஸ்ரீமதி ஜாடை தெரிந்திருக்கிறது கெளதம்தான் தேவையில்லாம பேசி அவன் தலைல அவனே மண்ணள்ளி போட்டுட்டான் அடுத்த பதிவுககு வெயிட்டிங்
 

Nandhaki

Moderator
பாவம் ஸ்ரீனி 😮‍💨அவள் அம்மாவிற்கு நடந்த விபத்து திட்டமிட்டு நடந்ததா ஸ்ரீனி தங்கைதான் கெளதமிடம் ஏதோ சொல்லிருப்பாள் போல கெளதம் ஸ்ரீனி வாழ்க்கைல விதி ரொம்பவே விளையாடியிருக்கு
thank you sis 😍😍😍
 

Nandhaki

Moderator
கெளதமின் அப்பாவிற்கு ஸ்ரீனியை பார்த்தால் ஸ்ரீமதி ஜாடை தெரிந்திருக்கிறது கெளதம்தான் தேவையில்லாம பேசி அவன் தலைல அவனே மண்ணள்ளி போட்டுட்டான் அடுத்த பதிவுககு வெயிட்டிங்
avan ithila mattuma mannai pottaan
 

Nandhaki

Moderator

தீரா 🎻 24

கைகளை முறுக்கி சோம்பல் முறித்து எழுந்தவள் தன் முன்னே இருந்த குட்டி விநாயகரை வணங்கினாள். மனமோ அம்மா கௌதம் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வழமை போல் வேண்டுதலை வைக்க எழுந்து உடல் பயிற்சி செய்து காலைக் கடன்களை முடிக்க சென்றாள்.

இன்றுடன் அவர்கள் திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. இந்த முப்பது நாட்களில் கௌதம் வீட்டிலிருந்த நாட்களை எண்ணினால் மொத்தமாய் பத்து நாள் இருக்காது. அசோகன் யசோதா இருவருமே அவன் திருமணத்தை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். ஒரு வரவேற்பு பாங்க்ஷன் போல் வைப்போம் என்று கேட்டு அலுத்துவிட்டார்கள். அவனோ பிடி கொடுக்காமல் அவனின் புது கம்பனி தொடர்பான வேளைகளில் மூழ்கி விட்டிருந்தான்.

இத்தனை நாட்களில் ஸ்ரீனிகா முருங்கை மரத்தில் ஏறும் வேதாளத்தை கட்டி வரும் விக்ரமாதித்தன் போல் அவனிடம் அவள் தான் அவன் தேடும் காதலி என்று சொல்ல முயன்று தோற்றேவிட்டாள். ஆனால் அங்கே அவள் பொழுதுகள் இனிமையாய் கழிய இனிய இரு நண்பர்கள் கிடைத்தார்கள். அது அந்த வீட்டின் குட்டி செல்வங்கள் அனுதீப், அனுஷா. அடிக்கடி தொழில் தொடர்பான பயணங்கள் செய்வதால் குழந்தைகளை அம்மாவிடமே விட்டிருந்தனர் நதியாவும் ராகவனும்.

அவள் அந்த வீட்டிற்கு வந்த அடுத்த நாள் பக்கத்து அறையில் பூகம்பம் வராத குறையாக ஒரே சத்தமாக இருக்க என்னவென்று எட்டிப் பார்த்தாள். இரண்டு குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்ய அந்த வீட்டில் வேலை செய்யும் வள்ளி என்ற நடுத்தர வயது பெண்ணும், ஒரு கம்பனியனும், அவர்கள் ஆயாவும் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இரு குழந்தைகளும் குளிக்க மறுத்து கிளுக்கி சிரித்தவாறே அவர்களுடன் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே சென்றவள் “ப்ரீஸ்...” என்றாள் சத்தமாய். ஓடிய இருவரும் அசையாது நின்று அவளையே பார்க்க முதலில் குட்டி பெண்ணை டப் செய்து “தண்ணீரில் விளையாடுவோமா?” என்று கேட்கவே இருவரும் ஒன்று போல் “எஸ்....” என்று கத்த அழைத்து கொண்டு குளிக்க கூட்டி சென்றாள். அவர்களுடன் பழகிய சிறிது நேரத்திலேயே புரிந்துவிட்டது. இயல்பில் நல்ல குழந்தைகள் பெரியவர்களின் கவனத்தை ஈர்க்கவே அனைத்து குளறுபடிகளையும் செய்கின்றார்கள் என்பது. அவர்களுடன் தானும் சிறு குழந்தையாய் விளையாடியவாறே அவர்களை பள்ளிக்கு தயார் செய்தாள்.

அன்று மேலிருந்து எந்த சத்தமும் வரவில்லையே என்னாச்சு என்று கவலையுடன் மேலே வந்த பாட்டிக்கு தன் இரண்டு பேரப் பிள்ளைகளும் சமத்தாய் பள்ளிக்கு தயாராகி வந்ததை பார்த்து மயக்கம் போடாத குறைதான். இந்த ஒரு மாதமும் காலையில் எழுந்து குழந்தைகளுடன் தானும் தயாராகி வேலைக்கு செல்லும் வழியில் அவர்களை பள்ளியில் விட்டு செல்வாள்.

இங்கே வந்ததுமே ஒரு பிரைவேட் கலோஜில் லெக்சர் வேலை ஒன்றினை சம்பாதித்தது கொண்டுவிட்டாள். இடையிடையே இங்கும் நீதிமன்றம் செல்லவே நல்ல வருமானமே. குழந்தைகளை தன் ஸ்கூட்டியிலேயே அழைத்து செல்ல, அவர்களுக்கும் தனியாக டிரைவருடன் காரில் போவதை விட அவளுடன் சென்று அவளுக்கு பாய் காட்டுவது பிடித்திருந்தது. அத்தையிடம் கூறி செக்யூரிட்டியை இன்னோரு பைக்கில் பின் தொடரும்படி ஏற்பாடு செய்திருந்தாள்.

அவள் வேலை முடித்து வந்ததும் அவர்கள் இருவரையும் அருகே உள்ள பூங்காவிற்கு அழைத்து செல்வாள். அங்கே ஆடி ஓடி களைத்து வரும் இருவரும் வீட்டு பாடம் செய்துவிட்டு களைப்பில் உறங்கிவிடுவார்கள். அவள் வந்த பின் அவர்கள் பிடிவாதம் அடம் அனைத்தும் குறைந்து படிப்பிலும் நல்ல முன்னேற்றம் தெரியவே குழந்தைகள் தொடர்பாக எதை செய்வதென்றாலும் அவளிடம் கலந்தாலோசித்து செய்ய தொடங்கினார் யசோதா.

அவள் குழந்தைகளை கையாண்ட விதத்தில் யசோதாவிற்கு அவள் விருப்பமான மருமகள் ஆகிப் போன போதும் அவள் கணவனிற்கு இன்னும் வேண்டாத மனைவியாகவே இருந்தாள்.

அன்றும் நேரமாகி வந்த கௌதமை பிடித்து வைத்த யசோதா “சரி கணவன் மனைவி இருவரும் தேனிலவாவது போய் வாருங்கள்” என்றதற்கு “இது லட்சிய ப்ராஜெக்ட் இதை முடித்து குறித்த பங்கினை மனைவிக்கு திருமணப் பரிசாக கொடுத்து அதன் சக்சாஸ் பார்டியில் வைத்து திருமணத்தை அறிவிக்கப் போகின்றேன்” ஒரே போடாக போட்டுவிட்டான். ஒரு மாதம் சொல்லி சொல்லி அலுத்து போய் போடா நீயும் உன் கல்யாணமும் என்று அவர்கள் இருவரும் சில நாட்கள் மகளுடன் இருந்து வருகின்றோம் என்று யுஎஸ் போய்விட்டார்கள். குழந்தைகளுக்கு விடுமுறையாக இருக்கவே இருவரையும் சேர்த்தே அழைத்து சென்றுவிட்டார்கள். ஆனால் உண்மையான காரணம் சரி கணவன் மனைவியாக தேனிலவு தான் போகவில்லை சின்னஞ்சிறுசுகள் வீட்டிலாவது சந்தோசமாய் இருக்கட்டும் என்று இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு நேற்று தான் சென்றார்கள். அவர்கள் சென்ற விமானம் இறங்கியதாக இன்னும் தகவல் வந்திருக்கவில்லை.

இன்று வள்ளியும் வேலனும் ஊரில் ஏதோ விசேஷம் என்று விடுமுறையில் சென்றிருக்க தானே சமையலை செய்வோம் என்று கீழே வந்தவள் கௌதம் எழுந்து தயாராகி வருவதற்குள் இந்த ஒரு மாதத்தில் அத்தை அவனுக்கு பிடித்தது என்று சொன்னதெல்லாம் சமைத்து வைத்து விட்டு அவன் வரக் காத்திருந்தாள்.

மாடியிலிருந்து வேகமாக இறங்கியவன் அருகே நின்ற அவளை கவனிக்காமல் போனில் எதையோ பார்த்தவாறே டைனிங் டேபிளில் அமர அவனுடன் சேர்ந்து உணவுண்ணும் ஆர்வத்தில் டைனிங் டேபிளில் அவனருகே அவளும் அமர்ந்தாள். மறு கணம் டேபிளில் இருந்த அத்தனை கண்ணாடி பொருட்களும் அவள் செய்த உணவுடன் சேர்ந்து தரையில் விழுந்து சிதறியது. சினந்து நின்றவன் மீதியாய் இருந்த கண்ணாடி ஜக்கையும் தரையில் ஓங்கி அடித்தான்.

"ஏமாற்றி கல்யாணம் செய்தவளுக்கு என் அருகே இருந்து சாப்பிடும் அருகதை இல்லை. இன்னொரு தரம் உன்னை டைனிங் டேபிளில் பார்த்தேன்...." ருத்தரானாய் சிவந்த கண்களுடன் நின்றவனை பார்க்க அதிரிலின் சுரப்பி அவள் கட்டளையின்றி சுரந்து வேலையை காட்ட நடுக்கத்துடன் நின்றவள் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

அப்போதும் அவள் மூளை கவுண்டர் கொடுத்தது 'இவனுக்கெல்லாம் ஏன் அத்தை கௌதம் என்று பெயர் வைத்தீர்கள் பேசாம ருத்ரன் என்று வைச்சிருக்கலாம்' வாய் தன் பாட்டில் முணுமுணுத்தது “கோபகுலனயாக, தொம்மாகாடு”

காலில் எரிவது போலிருக்க குனிந்து பார்த்தாள். சிதறிய கண்ணாடி துண்டு ஒன்று அவள் காலை பதம் பார்த்திருக்க சிவப்பு நிறத்தில் இரத்தம் குளம் கட்டியிருந்தது. நிமிர்ந்து அவன் எங்கே என்று பார்க்க வெளி வாசல் கதவை தாண்டி சென்று கொண்டிருந்தான்.

பெருமூச்சை விட்டவள் முதலுதவி பெட்டியை தேடி எடுத்து வந்து பஞ்சை வைத்து காலுக்கு கட்டு போட்டு விட்டு காலேஜுக்கு போன் செய்து இன்று வர முடியாது என்பதை தெரிவித்தாள். வலி உயிர் போகும் போல் இருக்க குனிந்து உடையை பார்த்தாள். கஷ்டப்பட்டு அவள் சமைத்த அத்தனையும் அவள் மேலேயே அபிசேகம் செய்திருந்தான் கௌதம். காலில் வெட்டுபட்டதை விட அவள் ஆசையாய் சமைத்ததை கீழே கொட்டியது வலித்தது. கண்களில் பொங்கிய நீரை துடைத்தவள் போனில் டாக்ஸி புக் செய்து விட்டு மேலே சென்று உடை மாற்றி வந்தாள்.

டாக்ஸி வருவதற்குள் அங்கே உடைந்து சிதறியிருந்த கண்ணாடி துண்டுகளை சேகரித்து டஸ்பினுள் போட்டவள் மனமோ அவன் வெறும் வயிற்றுடன் சென்றானே என யோசிக்க மூளை கேலி செய்ததது ‘அவன் உனக்கு அடிபட்டதை திரும்பிக் கூட பார்க்காமல் போகின்றான் அவன் பட்டினி கிடப்பான் என்று நீ வருந்துகின்றாய்’ மனமோ ‘சீச்சி அவன் பார்த்திருக்க மாட்டான்’ என்று சப்பை கட்டு கட்ட ‘என்னை நம்ப நீ இன்னும் பட வேண்டும்’ என்று அமைதியானது மூளை.

டாக்ஸி வரவே அருகே இருந்த கிளினிக் சென்று காலுக்கு இரண்டு தையலும் போட்டு மருந்து கட்டிக் கொண்டு வந்தாள். வாசலில் அவளுக்காகவே காத்திருந்த செக்யூரிட்டி கார்ட் “சார் வள்ளியை தேடினார்மா” கவனமாய் தனக்கு இடப்பட்ட கட்டளையை தான் புரிந்து கொண்ட விதத்தில் நிறைவேற்ற “சரி நான் சொல்கின்றேன்” என்று விட்டு உள்ளே சென்றாள்.

வள்ளி இல்லாததால் வலியை பொறுத்துக் கொண்டு அவளே அனைத்தையும் சுத்தம் செய்து முடித்தவளுக்கு களைப்பாய் இருந்தது. நேற்றும் அத்தை மாமா யுஎஸ் புறப்பட்ட அலைச்சலில் சரியாக சாப்பிடவில்லை காலையிலும் நேரத்திற்கு எழுந்து கௌதமுக்கு சமைக்கும் ஆர்வத்தில் உண்ணவில்லை. இப்போது கணிசமான ரத்தமும் வெளியேற தலையோடு உலகமும் சுற்றியது போலிருக்க சிறிது பாலை காய்ச்சி அதோடு சேர்த்து பெயின் கில்லர் ஒன்றினையும் போட்டவளுக்கு படுத்தால் போதுமென்று இருந்தது. அறைக்கு வந்து பார்க்க சோபா முழுதும் நிலா தீப்பின் புத்தக பைகள் பொருட்கள் என இருக்க அவற்றை கொண்டு போய் அவர்கள் அறையில் வைத்தவளுக்கு தலை சுற்றிக் கொண்டு வர அப்படியே மயங்கி சரிந்தாள்.

🎻🎻🎻🎻🎻

கௌதம் வீட்டிற்கு வந்த போது மணி இரவு பன்னிரெண்டை தொட்டிருந்தது. சட்டைப் பையில் போன் அதிர எடுத்து பார்த்தான். அவன் அம்மாதான் “கிருஷ்ணா நாங்கள் பாதுகாப்பாக இறங்கி தியா வீட்டிற்கு வந்துவிட்டோம். ஸ்ரீனிகா எங்கே?” என்று கேட்டவருக்கு “படுத்துவிட்டாள் எழுந்ததும் சொல்கின்றேன்” என்றான்.

“சரிப்பா இன்னும் ஒரு இரண்டு நாளைக்கு கொஞ்சம் நேரத்திற்கு வீட்டிற்கு வா” என்றார்.

“ஏனம்மா....? என்னாச்சு”

“வேலன் வள்ளி இருவரும் இல்லை. ஊரில் ஏதோ விசேஷம் என்று போயிருகிறாங்க. ஸ்ரீனி வீட்டில் தனியாக இருப்பாள் இல்லையா அதான்” விளக்கமளித்தவரிடம் அவசரமாய் கேட்டான் “இருவரும் எப்போது போனார்கள்?”

“அங்... அது நேற்றே போய்ட்டாங்க.. அஹ் இங்கே விருந்தினர்.. நான் பிறகு பேசுகின்றேன்” அதோடு யசோதா போனை வைத்து விட அதிர்ந்து போய் நின்றான் கௌதம். உண்மையில் காலையில் அவளுக்கு காயம்பட்டதை பார்த்துவிட்டான். ஒரு கணம் தயங்கி நின்றவன் நின்றால் இவளிடம் இளகி விடுவோம் என்று தோன்றவே வேகமாக சென்றுவிட்டான். அப்போதும் வெளியே நின்ற செக்யூரிட்டியிடம் “வள்ளியை ஸ்ரீனிகாவை போய் பார்க்க சொல்லு” என்று சொல்லிவிட்டே சென்றான். அவர்கள் இருவரும் நீண்ட காலமாய் இங்கேயே இருப்பவர்கள் மருத்துவரை வீட்டிற்கே அழைத்து தேவையானதை செய்வரர்கள் என்று நினைத்தே சென்றான். ஆனால் அவர்களே வீட்டில் இல்லையென்றால்....

அவனையறியாமலே டைனிங் டேபிள் அருகே வர அது சுத்தமாய் இருந்தது.

யோசனையுடன் மேலே ஏறினால் படியில் ரத்தம் காய்ந்து இருந்தது. கீழே உள்ளதை துடைத்தவள் அதை மறந்துவிட்டிருந்தாள். அந்த அடையாளத்தை பார்த்தவாறே செல்ல அவள் அறைக்கு சென்றது. அங்கிருந்து சற்றுப் புதிதாய் ரத்தகறை.... அது குழந்தைகளின் அறையை நோக்கி சென்றது. உள்ளே சென்று பார்க்க கால் வெளியே தொங்கி கொண்டிருக்க கட்டிலின் குறுக்கே படுத்து கிடந்தாள் ஸ்ரீனிகா. காலிலும் கீழேயும் சொட்டு சொட்டாய் வழிந்திருந்த ரத்தம் காய்ந்திருந்தது.

“மை காட்” நெற்றியை அழுந்த பிடித்தவன் அவசரமாய் அருகே அமர்ந்து கன்னத்தை தட்டினான் “ஸ்ரீனிகா... ஸ்ரீனி ஹேய் கண்ணை திறந்து பார்” அருகே இருந்த மேசை மீது இருந்த தண்ணீரையும் தெளித்துப் பார்த்தான். அவளிடம் அசைவில்லை என்றதும் நாடிக்கு கீழே கழுத்தில் இரு விரலால் அழுத்த சீரான நாடி துடிப்பு தெளிவாக தெரிந்தது. அவன் இதய துடிப்பு சீராக நிம்மதியாய் மூச்சுவிட்டான். காலை தொட்டு பார்க்க அது கொதித்தது கைகளில் தெரிந்தது.

🎻🎻🎻🎻🎻

மருத்துவர் காயத்தை பரிசோதிக்க அருகே நின்று பதட்டத்துடன் பார்த்து கொண்டிருந்தான் கௌதம். குதிகாலின் பக்கவாட்டில் ஒரு விரல் நீளத்திற்கு ஆழமாய் வெட்டுப்பட்டிருந்தது. தையல் போட்ட பின் வந்து வேலை செய்ததில் தசை கிழிந்திருக்க கண்ணால் பார்க்கவே வலிக்கும் போலிருந்தது கௌதமிற்கு. அவனுக்கு புரிந்தது வீட்டில் யாருமில்லை. தான் தட்டி கொட்டி சென்ற அனைத்தையும் சுத்தபடுத்தி தரைக்கும் மோப் போட்டு வேலை செய்திருக்கின்றாள். தையல் தசையை கிழித்துவிட்டது.

பஞ்சினால் துடைக்க தொட்டதற்கே அலறியடித்து எழுந்துவிட்டாள். வேகமாக அருகே அமர்ந்தவன் “ஸ்ஸ்ஸ்... ஸ்ரீனி... காயம் சீழ் பிடித்துவிடும்” ஆறுதலாய் தோளை அணைத்தான்.

“வலிக்குது” கண்களில் நீரோடு சிறு குழந்தை போல் கூறினாள். நெற்றியில் வியர்வை முத்து முத்தாய் பூத்திருக்க தன் கைகுட்டையால் மென்மையாய் ஒற்றி எடுத்தவன் மருத்துவரை பார்க்க அவர் காலில் எதையோ ஸ்ப்ரே செய்தார். கால் விறைப்பு நிலைக்கு செல்லவே வலி குறைய காலை எட்டி பார்க்க முயற்சித்தாள்.

“அதை பார்க்காதே படு” என்று படுக்க வைத்தான் கௌதமன்.

காயத்தை சுத்தபடுத்தி கட்டுப் போட்டு உறங்குவதற்கு ஒரு ஊசியையும் போட்டவர் “இன்றும் நாளையும் நன்றாக ரெஸ்ட் எடுக்கட்டும். இரண்டு நாளைக்கு ஒரு தரம் டிரெஸ்ஸிங் செய்ய வேண்டும்.” என்றவர் கௌதமை பார்க்க அவன் தலையசைத்தான்.

போட்ட ஊசிக்கு உறக்கம் கண்ணை சுற்ற மெல்ல தள்ளடியவாறே எழுந்து தன் அறையை நோக்கி மெதுவாய் கட்டில் சோபா என்று அங்கிருந்த பொருட்களை பிடித்தபடி நடந்தாள். மருத்துவரை அனுப்பி கதவை சாற்றி விட்டு உள்ளே வந்த கௌதம் அவளின் செயலில் பொறுமையற்ற மூச்சுடன் அருகே வந்து தூக்க திடிரென காற்றில் எழும்பியதில் பயத்தில் வீலென்று கத்தினாள்.

“இம்சைடி நீ” லேசாய் எரிந்து விழுந்தான் கௌதம். அரை குறை உறக்கத்தில் அவன் முகம் பார்த்தவள் “கௌதம்....” கிளுக்கி சிரித்தாள். “முதல் ஒல்லி கௌதம். இப்போ ஸ்ட்ரோங் கௌதம்” முழங்கையை மடக்கி முறுக்கி காட்டினாள். ‘என்ன சொல்கின்றாய்?’ என்பது போல் பார்த்தவன் பாதி முடியிருந்த கண்களை பார்த்து உறக்கத்தில் ஏதோ உளறுகின்றாள் போல் என்று நினைத்து கட்டிலில் படுக்க வைத்தான்.

அவன் கையை எடுத்து கன்னத்தின் அடியில் வைத்து கொண்டு உறக்கத்தை தொடர்ந்தவள் “என்னை உனக்கு தெரியல இல்ல” என்றவளிடமிருந்து கையை எடுக்க முயன்றால் முகத்தை சுருக்கி உதட்டை சுழித்தாள். அவனுக்கு தான் சோதனையாய் இருந்தது. அப்படியே திரும்பி அருகில் படுத்தான் “ஆனா நா... பார்த்... கண் பிடி....” அவள் குரல் மெதுவே தேய்ந்தது மறைய திரும்பி பார்க்க ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள்.

அவள் முகத்தில் விழுந்திருந்த கேச கற்றையை மறு கையால் மென்மையாக ஒதுக்கியவனுக்கு அவளிடம் தன் மனம் தடுமாறுவது தெளிவாகவே புரிந்தது.

இவள் மட்டும் ஏமாற்றமால் இருந்திருந்தால் அவள் மீது காதல் கூட வந்திருக்கும் ஆனால்.... இப்படி அப்பாவி போல் ஒரு முகத்தை வைத்து கொண்டு இவள் செய்த வேலை... இன்று ஒரு கோபத்தில் அனைத்தையும் தூக்கி அடித்துவிட்டானே தவிர இப்படி காயப்படுத்த நினைக்கவில்லை. அத்தனையும் விட அவள் காயம் இத்தனை தூரம் தன்னை பாதிக்கும் என்றும் நினைக்கவில்லை. தையல் கிழிந்திருந்த தசையை பார்த்த போது அவன் இதயமும் கிழிந்த உணர்வு அவனுக்கு பிடிக்கவேயில்லை.

அவள் முகத்தைப் பார்த்தவாறே மெதுவே கண்ணயர்ந்தான் கௌதம் கிருஷ்ணா.

வருவான்....
 

Nandhaki

Moderator
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் காதல் தீரன் அடுத்த அத்தியாயம்

உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கின்றேன் வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்.

முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
உங்களின் கருத்துகளை சொல்லிச் செல்லுங்கள்

 

Nandhaki

Moderator

தீரா 🎻 25

அடுத்த நாள் காலையில் கண் விழித்த ஸ்ரீனிகாவிற்கு நீண்ட வருடங்களுக்கு பின் பொழுது அழகாய் புலர்ந்தது. அவள் எதிரே ஆழ்ந்த துயிலில் இருந்த கௌதமின் முகம். அவன் கன்னத்தை மெதுவே தடவி கொடுத்தவள் மென்னகையுடன் எழுந்து கீழே சென்றாள். நேற்று காயத்தை பார்த்து அவன் துடித்தது நினைவில் வர உதட்டில் புன்னகை மலர்ந்தது. அரைகுறை நினைவானாலும் அவன் தவிப்பு அவளுக்கு தெளிவாக புரியவே செய்தது.

விந்தியவாறே படியிறங்கி வந்தவள் ஏதோ ஒரு விடயத்தில் தன்னை தவறாக புரிந்து கொண்டுவிட்டான். எப்படியாவது பேசி சரி செய்ய வேண்டும் என நினைத்தவாறு அவனுக்கு காஃபி போடத் தொடங்கினாள். அவளுக்குத் தேனீர் தான் பிடிக்கும், காபி போட தெரியாது. ஆனால் கௌதமிற்கு காஃபிதான் பிடிக்கும், அதனாலேயே அத்தையிடம் கேட்டு போட பழகியிருந்தாள்.

காபி வாசம் அந்த இடத்தையே நிறைத்திருந்தது.

வடி கட்டி மாபிள் கப்பில் ஊற்றிக் கொண்டிறுந்த போது உள்ளே வந்தான் கௌதம். அது தெர்மோ கப். சுடுநீரை ஊற்றும் போது மட்டும் அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும் படம் தெரியும். நேற்றுத் தான் வாங்கி வந்திருந்தாள். தான் சொல்வதைத்தான் காது கொடுத்து கேட்கிறான் இல்லை. இதையாவது கவனிக்கின்றான பார்ப்போம் என்று அதில் தன் சிறுவயது போட்டவை அச்சடித்திருந்தாள்.

“இங்கே என்ன செய்கின்றாய்?” என்ற குரலில் துள்ளித் திரும்பினாள்.

கௌதம்தான் “உன் கால் எப்படி இருக்கு” கேட்டவாறே குனிந்து பார்க்க ரத்தம் கசிந்திருந்தது. “உன்னை யார் இதையெல்லாம் செய்ய சொன்னது?” கோபத்தில் கையசைக்க அது அவள் கப்பில் பட்டு, அ`து கீழே விழுந்து சிதறியது. அதிலிருந்த அவள் போட்டோ மெதுவே மங்கியது. அவள் மனதில் இருந்த நம்பிக்கை...

பயத்தில் உறைந்து போய் நின்றவள் இமைதட்டி விழித்தாள். அப்படி என்ன வெறுப்பு என் மீது? அவனும் அதை தட்டி விட வேண்டும் என்று நினைக்கவில்லை. தற்செயலாக கை பட்டுவிட்டது. காயம் பட்ட காலுடன் வந்து நின்றாளே என்ற கரிசனையில் வந்த கோபம்.

அவளோ பயத்தில் உறைந்து போய் நின்றாள். இத்தனை நாளும் வெளியே ஏற்படும் பயங்களை வீட்டில் வைத்து அழுது போக்கிவிடுவாள். இப்போது வீட்டிலேயே பயப்படும் சூழ்நிலை எழவே என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள்.

மூளை கேள்வி கேட்க அதை வாய்விட்டே கேட்டாள் “அப்படி என்ன கோபம் என் மீது?”.

சட்டென மூண்ட சினத்துடன் ஒரே எட்டில் அருகே வந்தவன் தோளை அழுத்திப் பிடித்து “அது என்ன ராமாயணமா திரும்ப திரும்ப எத்தனை தரம் சொல்வது? உன்னை மாதிரி ஒரு சீட்டரை திருமணம் செய்தேன் பார். அதுதான் கோபம்” சினம் தணியாமல் உதறிச் சென்றான்.

அவன் உதறி தள்ளிவிட்டதில் ஓரடி பின் சென்று தன்னை சமாளித்தவள் வலியில் உதட்டைக் கடித்தாள்.

🎻🎻🎻🎻🎻

டிரேட் மில்லில் வேகமாக ஓடிக் கொண்டிருந்த கௌதமிற்கு சினம் அடங்க மறுத்தது. செய்வதெல்லாம் செய்துவிட்டு எதுவும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தது அவன் சினத்தை இன்னும் தூண்டியது. களைத்து போய் இறங்கி வியர்வையை துடைத்தவன் கரம் பாதியில் நிற்க மூளை நினைவுபடுத்தியது ‘இன்றும் வள்ளியும் வேலனும் இல்லை’.

வேகமாக படியிறங்கி கீழே வந்து பார்த்தவன் பின் தலையை கோதினான். நேற்றுப் போலவே இடம் சுத்தமாய் இருந்தது. “ஷிட்” காற்றில் கையை குத்தியவன் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த செலைனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

வீட்டோடு சேர்த்து தோட்டத்தை பார்த்தபடி இருக்கும் சிட் அவுட்டில் இருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்து இன்னொரு நாற்காலியில் காலைத் தூக்கி வைத்து நடுங்கும் விரல்களால் பன்டேஜை பிரித்துக் கொண்டிருந்தாள்.

"முட்டாளா நீ?" கையை பிடித்து தடுத்த கௌதம் சிறு மேடா ஒன்றை இழுத்து அதில் அமர்ந்து அவள் காலை தூக்கி தன் தொடையில் வைத்தான்.

அவன் உதறிவிட்டதில் காயத்தில் தட்டுபட்டு வந்த புதிய ரத்தமும் ஏற்கனவே போட்ட மருந்தும் கசிந்திருந்த இரத்தமுமாய் ஒட்டி போய் இருந்தது. அவன் காயத்தில் கை வைக்க வலியை எதிர்பார்த்து கண்களை இறுக முடிய ஸ்ரீனிகா காயத்தில் சில்லென்று ஏதோ பட ஆச்சரியத்துடன் கண் திறந்தாள்.

செலைனை ஊற்றி காயத்தை நனைத்தவன் மென்மையாய் அதன் கொட்டனை நீக்கி காயத்தை சுத்தம் செய்து கட்டுப் போட்டுவிட்டான்.

அவன் கட்டுப் போட கன்னத்தில் கையூன்றி அவனையே இமைக்காது பார்த்திருந்தாள் ஸ்ரீனிகா. முன் நெற்றியில் புரண்ட அவன் கேசம், நீண்ட புருவங்கள் காயத்தை பரிசோதிப்பதற்காக பாதி முடியிருந்த கண்கள், சதுர முகவாய், கூர் நாசி, பெண்களை போல் சிவந்த இதழ்கள், கன்னத்தில் அளவாய் அழகாய் வைத்திருந்த இருநாள் தாடி, ஜிம்மில் இருந்து வந்ததில் காதோரம் வழிந்த ஒரு துளி வியர்வை, நீண்ட அவன் விரல்கள், உடலோடு அங்கங்கே ஒட்டியிருந்த டீஷர்ட், அவள் பாதம் பதிந்திருந்த இடத்தின் திண்மை, என அணுஅணுவாய் அவனை ரசித்தாள். கடுமை நிறைந்த அவன் முகத்தை வைத்து என்ன நினைக்கிறான் என்று அவளால் கணிக்க முடியவில்லை. ஆனால் அவன் கரங்கள் மிகமிக மென்மையாய் அவள் காயத்தை சுத்தம் செய்து கட்டுப் போட்டதை உணர்ந்தாள்.

“இன்...” கட்டுப் போட்டு முடித்து ஏதோ சொல்ல நிமிர்ந்தவன் அவள் பார்வையில் தன்னை மறந்து மயங்கினான். ஒற்றை விரலால் அவன் கேசம் ஒதுக்கி விட கலைந்தவன் எழுந்து நின்றான்.

அவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. தன் மீது ஏனோ கோபமாக இருக்கின்றான். ஏதோ கோபத்தினால் தான் இப்படி நடக்கின்றான். இயல்பில் கெட்டவனில்லை.

“என் மீது என்ன கோபம் என்று தான் சொல்லுங்களேன்” அவன் மணிக்கட்டை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு கெஞ்சினால் போல் கேட்டாள். “ஏதோ கோபம் என்று மட்டும் தெரிகின்றது ஏனென்று புரியவில்லையே”

“அதுதான் அன்றே தெளிவாக சொன்னனே” உணர்ச்சியற்றுப் பதிலளித்தான்.

“அன்று எனக்கு இருந்த தலைவலியில் சரியாக புரியவில்லை ப்ளீஸ் தயவு செய்து ஒரே ஒருதரம் சொல்லுங்களேன்” இதைத் தெரிந்து கொள்ளாமல் சரி செய்ய முடியாதே.

ஒரு கணம் ஆழ்ந்து நோக்கியவன் “சரி நான் கேட்கும் ஒரு கேள்விக்கு உண்மையான பதில் சொல்லு” அவனை விழுங்கிவிடுவாள் போல் கண்களை விரித்து தலையாட்டினாள்.

“நீ என்னை திருமணம் செய்யம் போது, இந்த திருமணம் வெறும் ஒப்பந்தம் மட்டுமே நான் கேட்கும் போது விவாகரத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததா? இல்லையா?” அவள் கண்களை பார்த்துக் கேட்க, அவன் கண் பார்த்துப் பொய் சொல்ல முடியவில்லை. நிலம் நோக்கி ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

“வாயை திறந்து பதில் சொல்லு ஸ்ரீனி” அவள் நாடியை இறுகப் பற்றிக் கேட்டான். அவனுக்கே புரியவில்லை, அவளை ஸ்ரீனி என்று அழைப்பது.

“இல்லை” மெலிந்த குரலில் பதிலளித்தாள். உண்மையில் இந்தத் திருமணம் விவாகரத்தில் முடியாது என்று தானே நம்பினாள் இன்னமும் நம்புகின்றாள். “ஆனால் நான்தான் ஸ்ரீனி...” ஏதோ சொல்ல பிடித்திருந்த அவளை உதறித் தள்ளி நாற்காலியில் தொப்பென்று விழுந்தாள்.

முதுகு காட்டி நின்றவன் கை முஷ்டியாய் இறுக “சரி, அந்த மில்லை விற்க ஏற்பாடு செய்துவிட்டாயா?” அடக்கிய ஆத்திரத்துடன் கேட்டான். அதற்கும் “இல்லை, ஆலன்...” என்று வார்த்தையை முடிப்பதற்குள் திரும்பியவன் “அதுவும் ஏமாற்றுத் தான் இல்லையா? பணத்திற்காக எதுவும் செய்வாயா? சீ” என்றுவிட்டான்.

அவளுக்குமே கோபம் வர “என்ன பெரிய பணம் என்னிடம் இல்லாத பணமா?” பதிலுக்குச் சீறினாள்.

“வெறும் சில கோடிகள், என்னிடமிருந்து விவாகரத்து பெற்றால் வரும் பணத்திற்கு முன் வெறும் தூசி” பதிலடி கொடுத்தான் கௌதம்.

கசப்பாய் சிரித்தாள். “என் டீ...” எதையோ சொல்ல வந்தவள் வார்தையை விழுங்கி “யாருக்கு வேண்டும் உங்கள் பணம். வேண்டுமானால் எழுதித் தரட்டுமா?” எரிச்சலுடன் கேட்டாள். அவள் பெயரில் தாத்தா சிறு வயதில் போட்ட பணமே இப்போது கோடிக்கணக்கில் வருமே. அதை விட அவள் பெயரில் உள்ள டீ எஸ்டேட்களின் பெறுமதிக்கு வருமா? சாதாரணமாய் லீசிங் விட்டதற்கே மாதமாதம் வங்கியில் மில்லியன் கணக்கில் நிலுவை காட்டுகின்றது.

அத்தனை பணம் இல்லாமலா கோகுல் சர்மா அவர்களை அப்படி துரத்தினார். அத்தனையும் அவள் தாத்தாவும் பாட்டியும் உழைத்து சேர்த்த பணம். அதைவிட ராஜாராம் அம்மாவை விட்டு சென்ற பின்னர் தாத்தாவுக்கு என்ன தோன்றியதோ யாருக்கும் தெரியாமல் அவள் பெயரில் சில கோடியை பிக்ஸ் டேபோசிடில் போட்டு வைத்திருந்தார். அதன் வட்டியை ஸ்ரீமதியின் கணக்கிற்கு வரும்படி செய்திருக்க அதுவே அவர்களுக்கு இடர் காலத்தில் பெரிதும் உதவியது. அதுவும் ஸ்ரீமதி வேலைக்கு செல்ல தொடங்கிய பின்னர் அதில் கை வைத்ததே இல்லை. அவளின் கணக்கில் போய் சேமிப்பாய் சேர்ந்துள்ளது. போதாக்குறைக்கு கேரளாவிலும் சென்னையிலும் உள்ளே வீட்டின் வருமானம். அவள் வேலையே செய்யாமல் வரும் வட்டியை வைத்தே காலத்தை ஓட்ட கூடிய அளவு வருமானத்திற்கு குறைவில்லை. யாருக்கு வேண்டும் இவன் பணம் எரிச்சலுடன் நினைத்தாள்.

அம்மாவுக்கும் அவளுக்கும் எமனாய் வந்த அந்தப் பணத்தின் மீதுள்ள பயத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தரம் செக் எழுதி எதாவது இல்லத்திற்கு டோனோசனாக கொடுத்துவிடுவாள். இல்லையென்றால் படிக்கும் மாணவர்களுக்கு நிதியளித்து விடுவாள். இந்த பணத்தினால் தானே தாத்தா, வளர்ந்த ஊர், படித்த பள்ளி, நண்பர்கள் என அனைத்தையும் விட்டு சிறு வயதிலேயே அம்மாவையும் பிரிந்து ஹாஸ்டலில் வளர்ந்தது என்று அவள் சிறு வயதில் பட்ட துன்பம் அனைத்தும் சேர்ந்து பணம் என்றாலே கசந்து வழிந்து அவளை காத தூரம் ஓட வைக்க பணமோ அவளையே தேடி வந்து கொண்டிருந்தது.

“யாருக்கு வேண்டும். அதிலும் ஏதாவது திருகு தாளம் செய்தாலும் செய்வாய்”

“ஆனால் சுரேஷ் அண்ணா வேண்டாம் என்றுவிட்டாரே” காற்றிடம் தான் கூறிக் கொண்டிருந்தாள். அவளுக்கோ எரிச்சலாய் இருந்தது தான் என்ன சொல்கின்றேன் என்று கூட கேளாமல் என்ன பிடிவாதம் இது “ஸத்யாகாரன்” வாய்க்குள் முனகினாள்.

இங்கு வந்த இரண்டாம் நாளே சுரேஷிற்கு அழைத்து மில்லை விற்பது தொடர்பாக பேசினாள். அவளது கோரிக்கை ஒன்றாக மட்டுமே இருந்தது வருடத்தில் பத்து பிள்ளைகளின் முழுமையான படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போது திருப்பி முதலீடு செய்ய வேண்டிய தொகை வரிக் கழிவு போக மில்லில் இருந்து வரும் மொத்த லாபமுமே அது போன்ற குழந்தைகளுக்கு போய் கொண்டிருக்கின்றது. அவனோ “எனக்கு ஆலன் வாங்குவது தான் பிரச்சனையாக இருந்தது. இப்போது அவருக்கு விற்கவில்லை என்பதே போதும்” என்றுவிட்டிருந்தான் சுரேஷ். தன் மச்சான் சொல்லாமல் கொள்ளமால் கல்யாணம் செய்தான் என்ற போதே சந்தேகப்பட்டவன் அது ஸ்ரீனிகா தான் என்று அறிந்ததும் அவர்கள் இடையே பிரச்சனை வந்து விடக் கூடாது என நினைத்தே அப்படி சொல்லிவிட்டான். ஸ்ரீனிகாவோ அந்த மில்லை என்னதான் செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.

உண்மையில் சுரேஷிற்கு அவள் கௌதம் கிருஷ்ணாவை தான் திருமணம் செய்தாள் என்பது தெரியும். ஆனால் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. இப்போது தான் திருமணம் முடிந்திருக்கின்றது. இதனால் அவர்களிடையில் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்படுவதை விரும்பவில்லை. மனைவியிடம் கூட எதுவும் கூறவில்லை.

அங்கிருந்து வேகமாக சென்ற கௌதமிற்கு தன் மீதே ஆத்திரமாய் இருந்தது. இவள் நல்லவளாய் இருக்க வேண்டும் என்று தன் மனம் ஏன் விரும்புகின்றது என்ற அவனுக்கு காரணம் புரியமால் இல்லை. புரிந்தது உவப்பாயும் இல்லை. கோபத்தில் பஞ்ச் பக்கை பஞ்சர் பாக் ஆக்கிவிட்டான்.

🎻🎻🎻🎻🎻

அன்றைய கௌதமின் குற்றச்சாட்டின் பின் ஸ்ரீனிகா தான் யாரென்று சொல்வதற்கான முயற்சிகள் அத்தனையும் நிறுத்திவிட்டாள். உண்மையில் பயந்துவிட்டாள் நூற்றில் ஒரு வாய்ப்பாக தான் யாரென கூறி அதன் பின்பும் இப்படி ஒரு குற்றத்தை சுமத்தினால் அதை அவளால் தாங்கி கொள்ளவே முடியாது. அவளிடம் உள்ள ஒரே ஒரு நம்பிக்கை அத்தையின் வார்தைகள். இத்தனை காலம் திருமணத்திற்கு பிடி கொடுக்கமால் இருந்தவன் தன்னை பார்த்த பின்பு தான் திருமணம் ஒன்ற ஒன்றையே செய்தான். தான் யாரென்று அறியாத போதும். தேடித் திரிந்து அவனே கண்டு பிடித்து கடைசியாய் வரட்டும் அப்போது பார்த்து கொள்கின்றேன். மனதினுள் தாளித்து செல்ல அவள் விதிதேவன் மீண்டும் சிரித்தான்.

கௌதமிடம் தான் யாரென்பதை சொல்லவில்லையே தவிர அவனுக்காக அவள் செய்யும் எதையும் நிறுத்தவில்லை ஆனால் முன் போல் வெளிப்படையாக செய்யாமால் மறைமுகமாக செய்யத் தொடங்கினாள். காபி தயாரித்தால் அதை வள்ளி மூலம் அனுப்பினாள். அவன் குளிக்கும் போது அவனுக்குத் தேவையான ஆடைகளை எடுத்து வைத்தாள். அவனுக்குத் தெரியாமலே போனுக்கு சார்ஜ் போட்டு வைத்தாள்.

அவள் வந்த போது அசோகன் கோபப்பட்டதை பார்த்தவள் அதன் பின் பயத்தில் மாமாவின் அருகே கூட செல்லவில்லை. ஆனால் இந்த ஒரு மாதத்தில் அத்தையுடன் நல்ல ராசியாகியிருந்தாள். குளித்து வெளியே வந்த கௌதம் இனி போடுவதற்கு ஆடை தேட வேண்டுமே என்று அலுப்புடன் வந்தவன் சிறு ஹங்கரில் அவனுக்கு தேவையான ஆடை தொங்க அருகே இருந்த சிறு மேஜையில் கைக் கடிகாரம் முதல் அலுவலகம் கொண்டு செல்வதற்கான அனைத்தும் தயாராய் இருந்தது.

மெல்லிய ஆச்சரியத்துடன் தயாராகி கீழே வந்தால் டைனிங் டேபிளில் அவனுக்கான உணவு தயாராய் இருந்தது. அதுவும் அவனுக்கு பிடித்த விதத்தில். ஆச்சரியத்துடன் பார்த்தவன் “வள்ளிம்மா” அவன் பிறந்த காலத்திலிருந்தே கணவன் மனைவி இருவரும் அங்கே வேலை செய்வதால் அவர்களை மரியாதையாகவே அழைத்து பழகியிருந்தான் “ம்ம்ம்ம் சூப்பர், திடிரென்று உங்களுக்கு என்ன நடந்தது?” கேட்டவாறே உணவை முடித்தவன் வேலைக்கு செல்ல வெளியே வந்தாள் ஸ்ரீனிகா.

🎻🎻🎻🎻🎻

அன்று மாலையில் வேலை முடித்து வந்த கௌதமிற்கு அயர்வாய் இருக்க காபியை தோட்டத்திற்கு கொண்டு வர சொல்லி விட்டு உடை கூட மாற்றமால் சோர்ந்து போய் அமர்ந்திருந்தான். வள்ளி கொடுத்த காபியை வாயில் வைக்க வழமை போல் உயிர் வரை தித்தித்தது. கண் மூடி ரசித்து அருந்தியவன் செவிக்கும் விருந்தாய் ஒலித்தது அந்த கானம்.

கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தொய்வதும்
கண்ணா உன் கால் உறை உள்ளே என் கைகள் நான் தொய்ப்பதும்


கோடாய் மலர்ந்த புன்னகையுடன் கண்மூடி ரசித்திருந்தான் கௌதம். அத்தனை நேரமிருந்த ஏதோ ஒரு எரிச்சல் இருந்த இடம் தெரியாமல் விடைபெற்றிருந்தது.

உயிர் ஊர தேன் பாய்வதும்
உயிரோடு நான் தேய்வதும்
முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைக்கும் கோப்பைகளும்
தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே மூகாமிடும் கோபங்களும் ஓ...
தித்திக்குதே... தித்திக்குதே...

 
Top