எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள்

zeenath

Active member
#நறுமுகைநிலா காலம்_02
#NNK54
#வர்ணங்கள்!
தன் ஆறு வயது மகள் தியாவுடன் சிங்கப்பூரில் வாழ்கிறாள் சுபா தன் அன்னையுடன்..
மனதில் அவளின் கணவனுக்கான தேடல் அதிகம் பெண்ணுக்கு..
தந்தை பெற்ற கடனுக்காக இவளை தங்கள் புத்தி சுவாதீனம் இல்லாத மகனுக்கு திருமணம் முடித்து வைக்கிறார்கள் சுபாவின் கணவனின் பெற்றோர்.. பின்பு அவர்களே அந்தஸ்தின் காரணமாக இவளிடம் விவாகரத்து பத்திரத்தில் கையொப்பம் பெற்று சிங்கப்பூருக்கு வேண்டிய வசதிகளுடன் அனுப்பி வைக்கிறார்கள்.. ஏழ்மை நிலை சுபாவின் அன்னையாலும் எதுவும் பேச முடியாத நிலை.. சிங்கப்பூரில் தன் சொந்த முயற்சியால் தன் காலில் சுயமாக நிற்கிறாள் பெண்..
ஜெயந்தன்.. ஒரு துயரமான சம்பவத்திற்கு பின்பு புத்தி சுவாதீனம் இல்லாமல் இருக்கும் இவன் அதிலிருந்து மீண்டு வர,. குணமானவனின் மனதிற்குள் ஒரு பெண்ணிற்கான ஏக்கம் இவனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது..
இதற்கிடையில் இவனுக்கு திருமணம் முடிக்க இவன் பெற்றோர் முயற்சி செய்ய.. ஏனோ அதில் விருப்பமில்லாமல் தன் கனவு பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறான்.. தேடியவள் கிடைத்தாளா தன் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்தானா என்பதும் மனதில் நிலைத்து விட்ட காதல் கணவனுடன் சுபா சேர்ந்து வாழ்ந்தாளா.. இதற்கிடையில் இவளை திருமணம் முடிக்க பல முயற்சிகள் செய்யும் பிரணவ்வை எப்படி சமாளித்தாள் சுபா என்பதும் கதையில்..
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாக நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰🌹💐
 
Top