எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#வெந்தழல்_நயனங்கள்!

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#வெந்தழல்_நயனங்கள்!

முன் ஜென்மம், அதை தொடர்ந்து வரும் காதல், துரோகம், வஞ்சம் எல்லாம் சேர்ந்த கதை🤩🤩🤩🤩

நல்ல அழுத்தமான கதைக்களம்….

ஆதி, பெற்றோர் கிட்ட ஏற்பட்ட சின்ன மனகசப்பால் அவ பாட்டி தாத்தா கூட இருக்கா…கூடவே அவளோட ப்ரெண்ட் கீர்த்தி….

ரெண்டு பேரும் அங்க இருந்து, தொல்பொருள் ஆராய்ச்சி செய்யற வேலைக்கு போறாங்க…..

சில காலமா, அவள் கண்டு எடுக்கற பொருள்கள், அவளின் முன் ஜென்ம நினைவுகளை கனவுகளா கொண்டு வருது….

அதை பத்தி பெருசா அவளும் கண்டுக்கல(ரைட்டர் கண்டுக்க விடல)…..

இங்க இப்படி இருக்க, இவளோட இரட்டை நவிக்கும் சில நினைவுகள்……

வெளிநாட்டில் மனநல மருத்துவம் படிக்கரா…..

இவர்களை போலவே உதய்க்கும் இப்படி பட்ட கனவுகள் வருது, அது அவன் மன அமைதியை குழைப்பதாகவும் இருக்க…..

அவனே சிறந்த மனநல மருத்துவன் தான்…..

கனவுகளின் தாக்கத்தால் முன் ஜென்மம் அறிய நேருது அவனின் குருவான வீர் மூலமாக…..

அதை நவியும் அறிய, அவளின் கனவுகளுக்கான விடைகள் அங்கே……

முன் ஜென்மம் அறியவும், இப்போது அவர்களை சுத்தி இருக்கும் சிலந்தி வலையும் தெரிய வர…..

என்ன செய்தார்கள்??????

ஆதி, ரொம்பவும் எமோஷனலி கனெக்ட் ஆன பொண்ணு…..இவ கேரக்டரை அப்படியே விட்டுட்டது போல இருக்கு…..

நவி, இவளும் அவியும் வர சீன் எல்லாம் செம்ம, அதுவும் அந்த குளிர் மோகினி....பங்கம்😆😆😆😆….

உதி, மனநல மருத்துவனா இருந்தும் மன அமைதி இல்லையே(எப்படி இருக்கும்😉😉😉😉)……

அக்னி, இவன் பாவம், செகண்ட் ஹீரோ இவனுக்கும் அவளோ முக்கியத்துவம் தரல ரைட்டர்🥺🥺🥺🥺🥺

மகிழையன், சரியான மண்டு இவர்😬😬😬😬😬, பரிதி தன் தந்தை போல இருக்க கூடாதுனு நல்ல மனிதனா வளர்த்த அவருக்கு கூட இருந்தது எல்லாம் விஷ ஜந்துக்கள் அப்படினு தெரியாம போச்சி……

இளந்திரையன், மகி அரசர் ஆவது நல்லது செய்தார் ஆன இவர்??????

அவர் அவருக்கு அவர்கள் செய்தது நியாயமாக தான் தெரியும்……

இதால், ஏதும் அறியாமல் பாதிக்க பட்டது ஆழினி தான்…..அவளுக்காக முடிவு தான் ரொம்ப கஷ்டமாக இருந்தது……

ரைட்டர் அவளுக்கு அப்பவும் நீங்க நியாயம் செய்யல…..

சுய நலத்தால் இதழா செய்தது எல்லாம் ஒண்ணுமே இல்லையா?????

இந்த பரிதி, எடுப்பார் கைபிள்ளை…..

அனல், இவனும் பாவம் தான் ஆழி போல…..

அப்ப அதிக துன்பம் அனுபவித்தது அனல் & ஆழி தான் ஒரு தவறும் செய்யாம…..

அரசன இருந்து பரிதி செய்தது??????

இப்பயும் அவங்க ரெண்டு பேரையும் அப்படியே ஒப்புக்கு வெச்சிகிட்டிங்க🤧🤧🤧🤧🤧

முக்கியமா, அவளோ பல வருடம் வஞ்சம் வைத்து பழி வாங்கியவர்களுக்கு இவளோ சின்ன தண்டனையா???????

இன்னும் ஆதி அக்னி பார்ட் எழுதி இருக்கலாம் ரைட்டர்……

வொய் திஸ் ஓர வஞ்சனை???????

கதை flow நல்லா இருந்தது, இன்னும் எபிஸ் கொடுத்து இருக்கலாம்….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி💐💐💐💐💐💐
 
Top