எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இடம்பகனின் இதி

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02 நறுமுகைநிலாகாலம்_02
#NNK22
#இடம்பகனின்இதி
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
இன்பா... குடியால் இறக்கும் இவன் இறந்த பின்பே தன் மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகளை நினைத்து மனம் வருந்துகிறான்.. அருவமாக இருந்து அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்த தன்னை அழைத்துச் செல்ல வந்த எமதூதனிடம் அனுமதி கேட்க அவரும் இரு மாதங்கள் அவன் பூமியில் இருக்க அனுமதித்து செல்கிறார்.. குடும்பமே பிரதானம் என்று இவன் மனைவி மற்றும் மகள்களை சற்று எட்டி நிறுத்த.. இறந்த பின்பே இவனுக்காக உண்மையில் வருந்துவது அந்த மனைவியும் இரு மகள்கள் மட்டுமே என புரிகிறது.. இவனின் உற்ற நண்பன் இன்ஷித்.. இவனின் தந்தையால் அவன் தாய்க்கு நடந்த கொடுமையால் திருமணத்தை வெறுத்து இருக்கும் இவன்.. தாலி கட்ட நேர்கிறது இன்பாவின் மனைவி இலஞ்சிதாவிற்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில்.. ஆனால் மனம் உவந்து பெண் அவளையும் இரு மகள்களையும் தன் பொறுப்பாக ஏற்றுக் கொள்கிறான்.. அருவமாக இருக்கும் இன்பாவும் மகிழ்ந்து அனைவரிடமிருந்தும் நெகிழ்வோடு விடைபெறுகிறான்... கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அனைத்து துயரங்களும் ஏற்படுகிறது இலஞ்சிதாவிற்கு.. தன் அழுத்தமான பார்வையால் மனைவியையும் தன் மூத்த மகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறான் இன்ஷித்.. மனைவியை இவன் சமாளிக்கும் விதம் அருமை 👏🥰
நிறைய குடும்ப உறுப்பினர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது.. பெயர்கள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தது 🥰 விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰 எழுத்து பிழைகளை குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
Good luck 🥰🌹
 
Top