எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

KK - 2

subasini

Moderator
களவு – 2

பிள்ளையின் பிடிவாதம் பெற்றவர்களின் ஊடலைச் சிதைப்பதாக இருந்தது... வாழ்க்கையின் அழகிய பரிணாமத்தை உருவாக்கினான் ருத்ரேஷ்வரன்.தன்னைப் பத்து மாதம் சுமந்துப் பெற்றவள் கங்கா என்று அறிந்தத் தருணம் , தன் மூத்த மகன் உயிரொடு இருக்கிறான் என்ற உண்மை அறியாமல், அவனின் நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு வேதனையில் தவிக்கும் தாயைத் தான் முதன் முதலில் கண்டான் ருத்ரன்.அவளிடம் போய் நான் தான் உங்கள் மகன் என்று சொல்லத் துடித்த மனதை அடக்கினான். 'தன் வார்த்தைகள் மேல் தாயவளுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால்' என்ற பயமே அவனைத் தடுத்தது.அன்றே அவன் மனதில் நினைத்ததைச் செய்திருந்தால் அவனுடைய வாழ்க்கையில் பல துன்பங்கள் நேராமல் தடுத்து இருக்கலாம்.தந்தையைப் போல உரித்துப் பிறந்திருக்கும் பிள்ளையின் தாய் யார் என்பது தான் கங்காவுக்குப் பிரச்சினை என்பது ருத்ரனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.தன் தாய் உயிரோடு இருந்த போதும் தன்னை மாயாவதி வளர்க்கக் காரணம் என்ன ? தான் கங்காவின் மகன் என்ற உண்மை அவருக்குத் தெரியாமல் இருக்கக் காரணம் என்ன ? தம்பிக்குத் தன் மேல் கட்டுக்கடங்காத கோபம் எதனால் எனப் பல கேள்வி அவன் மனதில் இருந்தது தான் , அதைச் சரி செய்ய வேண்டியது தன் தந்தையின் கடமை என்று நினைத்து, தனக்குத் தெரிந்த உண்மை வெளிச் சொல்லாமல் அமைதியாகத் தன் தாயைக் கண்டால் போதும் என நினைத்தான்.ஆனால் அவன் தாய்க்கு அது போதவில்லை போலும் ‌.ருத்ரன் தான் பெற்ற மகன் என்ற அறிந்த நொடி முதல் அவனைத் தன்னோடு வைத்துக்கொள்ளத் துடிக்கும் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல், இன்று இதோ காளி அவதாரம் எடுத்துத் தன் கணவன் முன் நின்றுக் கொண்டிருக்கிறாள்.உடுத்தியிருக்கும் பருத்தியால் நெய்தப் புடவையை மடிப்பே இல்லாமல் தன் தோளில் இட்டப் படி, முந்தானையை இடுப்பில் சொருகி இருந்த அழகும், செந்நிலவினை எடுத்து இட்ட வட்டப் பொட்டு அவள் நெற்றியை அழங்கரிக்க, சினத்தில் முகம் தனலெனச் சிவக்கத் தன் முன் நிற்கும் கங்காவைப் பார்தால் , இருபத்தி ஐந்து வயது மக்களின் தாய் என்று சொன்னால் நம்ப முடியாது, அழகியென நின்றிருக்கும் மனைவியைப் பார்த்துக் கொண்டிருக்கும் தந்தையின் நிலையைக் கண்டு மனதில் சிரித்த படி ‘சிங்கம் சாஞ்சிருச்சு’ என முனு முனுத்தப்படித் தன் குரலைச் சொருமி அவரை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தான் ருத்ரன்.இத்தனை அடிகள் காரணம் பல கட்டுக்குள் உடலில் இருந்த போதும், காயங்கள் மெய்தீண்டி அவனை வதைத்த போதும், தன்னை உயிராகக் கருதும் பெற்றவர்கள் இணைந்த இந்த நிகழ்வின் ஆனந்தம் அவன் உடலில் ஒரு புதிய சக்தியை உருவாக்கி இருந்தது என்பது தான் உண்மை.மகனின் மனநிலையோ மகிழ்ச்சியில் ஆராவரிக்க , தந்தையோ தன் மனைவியைச் சாந்தப்படுத்த முயன்று தோற்றிக்கொண்டிருந்தார்."கங்கா, நாம இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம் வா வீட்டிற்குப் போய்ப் பேசலாம், நாம் இப்போ இருப்பது அவசரப் பிரிவில், இங்கே ரொம்ப நேரம் இருக்க முடியாது "

என அவளை அங்கிருந்து நகர்த்த முயன்றார் நீலகண்டேஷ்வரன். கணவனின் நியாயம் எதுவும் அவளுக்கு மனதில் பதியவில்லை.மகன் தனியாக இருப்பது மட்டுமே மனதில் இருக்க ருத்ரனைக் கவனிக்க யாருமே இல்லையே என அவரைப் பார்த்துத் தவித்தவளை "இங்க நர்ஸ் அண்ட் அட்டெண்டர் இருப்பாங்க, அதுவும் இல்லாமல் அவன் யார் என்று இன்னேரம் தெரிந்து இருக்கும், அதனால நீ பயபட வேண்டாம் ” என்றவர் மேலும் “ நாம் இங்கே ரொம்ப நேரம் இருக்க அனுமதி இல்லை " என்றவனை அவள் பார்த்தப் பார்வையிலேயே அவர் வார்த்தைகள் தொண்டையில் சிக்கியது ‘அந்த நீலகண்டனின் தொண்டையில் சிக்கிய ஆலகால விஷத்தைப் போல’... " ஒஹோ, இந்த ஆஸ்பெடல் முதலாளியின் மனைவியைத் தடுக்கும் அளவிற்கு, இங்கே யாருக்குத் தைரியம் ” என்று நிற்கும் மனைவியின் அழகில் சொக்கித் தான் போனான் கங்காவின் ஈஸ்வர்."அப்படி இல்லை கங்கா, நாமலே ரூல்ஸ் மீறனா அப்பறம் எங்கேயும் தவறைத் தட்டிக் கேட்க முடியாமல் போய் விடும் " என்றவர் , "நாம நமக்குத் தந்திருக்கும் ரூமில் போய்ப் பேசலாம் வாம்மா , எனக்கு உன்னிடம் நிறையப் பேசனும் " என்பவரின் வார்த்தைகள் எதுவும் காதில் வாங்காமல்"அப்போது அவனை ஐ சி யூ வில் இருந்து மாற்றுங்கள் " என்று தன் பிடியிலேயே இருத்தாள் கங்கா .தன் தாயின் பிடிவாதமான இந்த வார்த்தைகள் கேட்ட ருத்ரன் மனதில் சிரித்தான் , பின்னர் மெல்ல வார்த்தைகள் கோர்த்தான் வலியினூடே"எனக்கும் நிறையப் பேசனும் ,அதனால நீங்க என்னை ரூம் மாத்தரது தான் பெட்டர், அப்பறம் உங்க சண்டையை வெளியே போய் வைத்துக்கொள்ளுங்கள் எனக்குத் தூக்கம் வருது , உங்க சத்தத்தில் தூங்க முடியல " என்று மெதுவாகச் சொன்னாலும் அதில் இருந்த அவன் கேலியில் அவனை முறைத்தாள் அவனைப் பெற்றவள்...'அப்படியே அப்பனோட திமிருடன் பிறந்து இருக்கான் பாரு' என்று கணவனையும் சேர்த்துத் தீட்டித் தீர்த்தாள்.அதில் மீண்டும் தன் மகனைப் பாவமாகப் பார்த்து வைத்தார் நீலகண்டேஷ்வரன், அவரின் அந்தப் பார்வையில் ‘ கொஞ்சம் அமைதியாக இரேன் டா ’ என்ற வார்த்தைகள் புதைந்து இருப்பதை நன்றாக உணர முடிந்தது ருத்ரனுக்கு.தந்தையை நோக்கி மெதுவாகத் தன் கண் சிமிட்டினான் அந்தக் குறும்புகாரன்.அதில் கோவம் தலைக்கேற மகனை முறைத்தபடித் தன்னவளிடம்

" கங்கா ப்ளீஸ் மா " என்ற அவர் குரலில் மகனின் மேல் இருந்த சினத்தைத் தன்னவளிடம் காட்ட முடியாத தன் இயலாமையில் , ஒரு வித வலி அவர் குரலில் இருந்ததை உணர்ந்தனர் அம்மாவும் பிள்ளையும்.தன் தந்தையின் இந்த முகம் புதியதாக இருக்க அவன் அசந்து போனான் என்றால் , மனைவியோ தன்னவனின் குரலின் பேதத்தில், அவர் முகத்தைப் பார்த்தே வேதினையை உணர்ந்தவள், ஈஷ்வரின் கைகளை இறுகப் பிடித்தாள்.

கணவனின் துயரம் படிந்தக் கண்கள், பல கதைகள் அவளுக்குச் சொல்ல அவர் கையைப் பிடித்து "என்ன ஆச்சுங்க, எதாவது பெரிய பிரச்சினையா?" எனக் கேட்டப் படி அவர் கைகளில் அழுத்தம் தந்தாள்.அவள் கண்களையே பார்த்தபடியே "ஆம்" எனத் தலை ஆட்டிய கணவனின் கைகளைப் பிடித்தவளை, தங்களுக்கு என ஒதுக்கிய ரூம்மிற்கு அழைத்துச் சென்றார் நீலகண்டேஷ்வரன்.பல வருடங்களாகப் பிரிந்து இருந்தாலும் இன்றும் அவர்களின் காதல் வாழ்க்கையில் உள்ள புரிதலில் அசந்துத் தான் போனான் ருத்ரேஷ்வரன்.ஆரம்பிக்கும் முன்னே கலைந்துப் போன மேகமாக , தன்னோட காதல் கண் முன்னே கடந்து சென்று விட்டது என்று எண்ணியவனின் மூடிய இமைகளுக்குள்ளே பெண்ணொருத்தியின் விழிகளில் காதல் அருவியென வீழ்வதை உணர முடிந்தது ருத்ரனுக்கு.உலகிலேயே மிகப்பெரிய கொடுமை ஒர் ஆணுக்கு என்னவென்றால், தன் காதலி என்று நினைக்கும் பெண் முன் அவமானத்தோடு தலைக் குனிந்து நிற்பது தான் என்பதை மிகுந்த வலியோடு உணர்ந்தத் தருணங்கள் அவனை வாட்டியது.

காதலி என்று நினைத்தவள் வேறொருவனைக் கட்டிய போது கூட அவன் மனம் இந்த அளவுக்கு வருத்த படவில்லை.அதற்கு அவன் காதல் என்று எண்ணிய உணர்வினைப் பொய் எனக் கூறி விட முடியாது. அவனைப் பொருத்த வரை உண்மையான காதல் தான்.ஆனால் அவன் மட்டும் உண்மையாக இருந்து எந்தப் பயனும் இல்லையே. கடந்து செல்வது தானே வாழ்க்கை.அடுத்தவன் மனைவி அவள் ஆனால், அவள் தான் தன் காதலி என்று மனமோ ஏற்க மறுக்கிறது. மாற்றான் மனைவி என்றதால் தான் இந்தக் குழப்பமாக இருக்கலாம், அப்படி அவளைப் பற்றிய சிந்தனைக் கூடத் தன் ஆண்மைக்கு இதழுக்காகவும் எண்ணினான் ருத்ரேஷ்வரன்.மெல்லத் தன் நினைவில் இருந்து மீண்டவன் தன் பெற்றவர்களைப் பார்க்க, நீலகண்டேஷ்வரன் தன்னவளைத் தங்களுக்கு எனக் கொடுத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.தன்னைத் தனி அறைக்கு அழைத்து வந்தும் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கும் தன் கணவனின் செயலில் முதல் முறையாக ஒரு பயபந்து உருண்டது. கணவனின் தோளை மெல்லத் தொட்ட அவளைத் திரும்பிப் பார்த்த நீலகண்டேஷ்வரன் இல்லை இது.தைரியமும் துணிவும் இழந்து வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு பயந்த, தோற்கப் பிறந்தவன் போலக் காட்சித் தந்தக் கணவனின் நிலையை ஏற்க முடியாமல்," என்ன நடந்ததுங்க? நீங்க ஏன் இப்படி இடுஞ்சுப் போய் இருக்கீங்க? இது விபத்துத் தானே! என் பையன் இதை எல்லாம் அழகாகக் கடந்து வந்துருவான் , அந்தத் தைரியம் அவனுக்கு இருக்கு " என்று தன் மகனின் தைரியத்தை மெச்சிப் பேசிய மனைவியை ஒர் இயலாமைப் பார்வைப் பார்த்தார் அவளின் ஈஸ்வர்.எதற்கும் கலங்காத நீலகண்டேஷ்வரனே கலங்கிய நிலையில் " என்ன சொல்லக் கங்கா " என்றவரிடம்" இன்னேரம் நீங்க விசாரிச்சு இருப்பீங்க இல்லையா , இது விபத்துத் தானே " என்றவளை இல்லை எனத் தலை ஆட்டி மறுத்தார் ஈஸ்வர்."அப்போ ருத்ரனுக்கு நடந்தது விபத்து இல்லை என்றால்" இதற்கு மேலக் கேட்கப் பயந்து , கேள்வி கேட்காமல் அவர் கண்களையே பயத்தோடு பார்த்தார் அதில் அவனுக்கான ஆபத்திற்குக் காரணம் யார் என்ற கேள்வித் தொக்கி நின்றது.

அவளின் கைகளைத் தன் கைகளில் வைத்துப் படி " நம்ம ஆளுங்களை வச்சு நல்லா விசாரித்து விட்டேன் கங்கா "." இது திட்டம் போட்டு அவனைக் கொலைச் செய்ய முயற்சிப் பண்ணி இருக்காங்க"" இதற்கு நம்ம ஆளுங்களையே பயன் படுத்தி இருக்காங்க" என்றவர்

அவளையே ஆழ்ந்து நோக்கினார்." இவ்வளவு கண்டுபிடிச்ச நீங்க ' அது யாரு ' என்று இன்னேரம் கண்டு பிடித்திருப்பீங்கள் தானே" என்றவளை நோக்கிய நீலகண்டேஷ்வரனின் கண்கள் கலங்கிச் சிவந்திருந்ததோ.எதற்கும் அஞ்சாமல் வலைய வரும் தன்னவனின் இந்தத் தோற்றமே ஏதோ தான் கேட்க விரும்பாத விஷயம் கேட்கப் போகும் உணர்வை ஏற்படுத்தியது.அவளை விட்டுத் தள்ளி நின்றவர் தன் கைகளை இறுக்கியபடி அமைதியாக நின்றார் இதை எப்படித் தன்னவளிடம் அவர் கூறுவார்.

தங்கள் காதல் போரில் பாதிக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை, இந்த நிலைக்கு வர நாம் தான் காரணம் என எப்படி அவர் வாயால் கூறுவார்.தன்னவளின் பொறுமையின்மையும் கோவமும் தான் இந்த நிலைக்குக் காரணம் எனக் கங்காவின் மேல் உயிரையே வைத்திருக்கும் அவர் எப்படிச் சுட்டிக்காட்டுவார்.இப்போதும் அவர் மனைவி தன் பொறுமையின்மைக் காட்டினாள் வார்த்தைகளில்.

" உங்க தொழில் எதிரியா? ஓ அப்பவும் நினைச்சேன், யாருக்கும் பயன்படாமல் நீங்கள் செய்யும் செயல் தான் என் பையனை இப்படிப் படுக்க வைத்திருக்கிறது " என்று இன்றும் தன் கணவனை நம்பாமல் வார்த்தைகளை வீசினாள்.நியாபபடி வேறு யாராக இருந்தாலும் அவர் சினத்தால் தன் நெற்றிக் கண்ணைத் திறந்திருக்க வேண்டும் .தன்னவளின் மேல் இன்றும் அவருக்கு இருக்கும் காதலும், மையலும் அவரை அமைதிப் படுத்தியது." கங்கா நீ உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக இரு நான் சொன்னா உன்னால் தாங்க முடியுமா? முடியாதுடி. இந்த வேதனையின் வலியை உன்னால் தாங்க முடியாது " என்றவரைப் புரியாமல் பார்த்தாள் அவரின் இதயதுடிப்புக்குச் சொந்தக்காரி." நீங்க இப்படிப் பேசிட்டே இருக்காமல் என்ன நடந்தது என்று என்னிடம் சொல்லப் போறீங்களா இல்லையா " என்ற மொழியில் அவளின் பொறுமை அறையின் கதவைக் கடந்தது."உனக்கு எல்லாமே புரியும் படிச் சொல்லறேன் அமைதியாக இரும்மா " என்றவர் , டாக்டர் தன்னிடம் கூறியதும் , விபத்திற்குக் காரணமும், இதையெல்லாம் செய்தது யார்? என்பதும் இந்த இரண்டு நாளில் விசாரித்துத் தெரிந்து கொண்ட உண்மைஅணைத்தும் அவருக்கு உவப்பானதாக இல்லை. அதனால் தான் தன்னவளை வரவழைத்தார் ஈஷ்வர்.கணவன் கூறியச் செய்தியில் உள்ளே இருப்பவன் வாழ்க்கையை இழந்து எல்லா வகையிலும் தோற்றுப் போய்ப் படுத்து இருக்கின்றான். அதற்குக் காரணம் அவனுடைய தம்பி ப்ரனவ் என்கிற ப்ரனவேஷ்வரன் என்று அறிந்ததும் , இத்தனை நேரம் தன்னுள் இருந்த தைரியம் வற்றிப் போய் உடலில் பலமில்லாமல் மயங்கிய கங்காவைத் தன் கைகளில் தாங்கினார் நீலகண்டேஷ்வரன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இரண்டு கைகளில் தன் மனைவி தவழ்கிறாள் , ஆனால் அது ரசிக்கும் மனநிலையில் சூழல் இல்லை.தன்னவளை அணைத்தபடி" கங்கா ... கங்கா ..." எனக் கன்னங்களைத் தட்டியவர் அவளை அப்படியே அங்கிருக்கும் படுக்கையில் கிடத்தி , அருகில் இருக்கும் பாட்டிலில் உள்ள நீரை எடுத்து அவள் முகத்தில் மென்மையாகத் துடைத்து விட்டார்.நீர்த் தெளித்தால் அவள் பட்டுக் கன்னம் வலிக்குமோ எனப் பயந்த அந்தக் கணவனின் காதல் இந்தச் சூழலிலும் குறையவில்லை.மெல்லக் கண் திறந்த கங்கா ஈஸ்வரை இடையோடு கட்டிப் பிடித்தவாறே " நான் எவ்வளவு பெரிய தப்புப் பண்ணிட்டேங்க " எனப் பெருங்குரலெடுத்து அழுதவளைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் வயிற்றோடு சேர்த்து அணைத்தார்.அவர் கண்களிலும் மெல்லிய நீரின் படலம் தன்னவளின் துயரம் கண்டு." எவ்வளவு பெரிய தவறைச் செய்திருக்கிறேன், என் பிள்ளைகள் வாழ்க்கைச் சீரழிய

நானே காரணமாக இருந்தது இருக்கிறேனே " எனப் புலம்புவதை அவள் நிறுத்தவில்லை.

"நம்மளோட வாழ்க்கையை மட்டுமே யோசிட்டே இருந்துட்டேன், நம் பிள்ளைகளைப் பற்றி யோசிக்கவே இல்லை ஈஸ்வர் ""ஒரு வேளை பெண் குழந்தைப் பிறந்து இருந்தா நான் இப்படிப் பண்ணி இருக்க மாட்டேனோ என்னமோ " என அவள் மனதில் தோன்றிய எல்லா எண்ணங்களை இங்கே பதிவு செய்து கொண்டிருந்தாள்.

ப்ரனவ் இப்படிப் பண்ண மாட்டான் ஈஸ்வர் அவனுக்கு ருத்ரன் தான் அண்ணா இன்னேரம் தெரிந்து இருக்கனும் நினைக்கிறேன்" என்றவளை மெல்லப் புருவம் சுருங்கிப் பார்த்த அவள் கணவன் அவள் என்ன சொல்ல வருகிறாள் ... எனப் புரிந்ததும்"டி என் ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வீட்டிலத் தான் இருக்கிறதா? கங்கா, உனக்கும் ருத்ரனுக்கும் மத்தவங்க உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள முடியவே முடியாதா? " என்ற கணவனின் குரலிலும், அவன் விளிச்சொல்லிலும் அவன் சினம் புரியத் தான் செய்தது."அந்த ரிப்போர்ட் பற்றிய தகவல்" என்று வார்த்தைகள் இழுத்தவாறே அவரைப் பார்த்தவளிடம்,"என்னை மீறிக் உங்க வாழ்க்கையில் எதுவுமே நடக்காதுக் கங்கா" என்ற கணவனை வேதனையோடு பார்த்தாள் கங்கா. " நீங்க செய்தக் காரியத்தில் நான் எப்படி உணருவேன், அதன் விளைவு என்னை எந்த அளவுக்குக் காயப்படுத்தும் என்ற எண்ணம் அம்மா , பையன் இரண்டு பேருக்கும் இல்லை , என்னிடம் சம்மதம் கேட்கனும் உனக்குத் தோன்றவில்லையா?” என்ற அவர் கேள்விக்கான பதில் தன்னிடம் இல்லாமல் தடுமாறிவளிடம் மீண்டும், "அவனை விடு நான் உன்னிடமே கேட்கறேன், என் வலி உனக்குப் புரியவே இல்லையா " என்ற கணவனின் கேள்விக்கு மௌனமே பதிலாகியது கங்காவிற்கு.

" என்ன என்ன வேலையெல்லாம் பண்ணி இருக்கீங்க அம்மாவும் பையனும் " என்ற அவரின் வார்த்தைகள் எந்த மாதிரியான உணர்வில் வெளி வந்தது எனத் தெரியவில்லை கங்காவுக்கு." என்னைப் பற்றிய கவலை உங்க மூன்று பேருக்கும் இல்லை அப்படித்தானே, நானும் மனுசன் தானம்மா ... எனக்கும் வலிக்கும் ” என்றவர்," அவன் நம்பப் பையன் தான் என்பதை நம்ப உனக்கு இந்த டெஸ்ட் தேவைப் படுது அப்படித் தானே கங்கா , என் மேல் உனக்கு நம்பிக்கையே இல்லாமல், என்ன வாழ்க்கை டி வாழ்ந்த " என்றவரின் குரலில் பயந்துத் தான் போனாள் கங்கா.“ அவனைப் பார்த்துமா உனக்கு இந்தச் சந்தேகம்” என்றவரின் வார்த்தைகளில் இருந்த உஷ்னம், எதிரியிடத்துப் பேசும் நீலக்கண்டேஷ்வரனை நன்றாகக் உணர முடிந்தது கங்காவற்கு.“என் பையனுக்குச் சந்தேகம் தீர்க்க இந்த டெஸ்ட் தேவைப்படவில்லை, அவன் அம்மாக்குத் தேவைப்படுது என்று அவனுக்கு நல்லாவே தெரியும்... உனக்குத் தெரியுமா அது?" என்றவரிடன்

சினத்தோடு "நான் தான் அவன் அம்மா என்று நீங்களே அவனிடம் சொல்லனும் எதிர்பார்த்தேன் " என்றவளை முறைக்க முயன்று தோற்றான் இந்தக் கணவன்..." உனக்கு அவனின் அப்பா மேல் சந்தேகம் இருந்ததால், நான் வாய்த் திறக்கவில்லை " என்றவரின் வார்த்தைகளில் ' நீ என்னை நம்பி இருக்கனும் ' என்ற செய்தி இருந்தது..." இந்தத் தவறு தான் இன்று என் பிள்ளைகளை எதிரியாக நிறுத்தி இருக்கு " என்றவனின் வலி நிறைந்த வார்த்தைகள் அவளையும் பாதித்தது." ப்ரனவிடம் நாம் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் கங்கா " ...

என்ற கணவனின் கூற்றில் நிதர்சனம் உறைக்க

" அவனை நீங்கள் அழைத்துப் பேசுங்கள் "...

"இங்கேயே வைத்து எல்லாக் குழப்பத்தையும் சரிப்பண்ணி, ஒரு முடிவுக்கு வருவோம்" என்றவளை ஆழ்ந்த ஒரு பார்வைப் பார்த்தார் நீலகண்டேஷ்வரன்.தீர்க்கமாகக் கம்பீரமான குரலில் " ப்ரனவேஷ்வரனுக்கு எதிராக எல்லாத் தடயங்களும் என்னிடம் இருக்கு, அதை ருத்ரனிடம் கொடுத்து விடுவேன், அவன் என்ன முடிவு எடுத்தாலும் நீயும் ப்ரனவேஷ்வரனும் கட்டுப்படனும் " என்ற கணவனின் இந்த அவதாரத்தில் பயந்தாள் கங்கா.தன் முன் இப்போ பேசிக்கொண்டிருப்பது, பல வருடங்களுக்கு முன் ருத்ரேஷ்வரனைத் தங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்ததை எதிர்த்து நம்பிக்கை இல்லாமல் தான் போராடியப் போது , தங்கள் மகனுக்காகத் தன் காதல் மனைவியின் பிரிவு ஏற்று அவளை விட்டுப் பிரிந்து வாழ முடிவெடுத்த நீலகண்டேஷ்வரனாகத் தான் தெரிந்தான் அவளின் ஈஸ்வர்....

அவளுக்குப் புரியத் தான் செய்தது...தன் செல்லப் பிள்ளை எத்தனை பெரிய காரியத்தைச் செய்து இருக்கிறான். சிறிதும் கூட மனசாட்சி இல்லாமல் தன் உடன் பிறந்தவன் வாழ்க்கையைச் சின்னப் பின்னமாகச் சீரழித்து இருக்கிறான் என்ற வேதனையே அவளைக் கொன்றது." நீங்கள் அவனை அழைத்துப் பேசுங்க , முதலில் அவனை இங்கே வரச் சொல்லுங்க " என்றவளின் முடிவு நன்றாகப் புரிந்தது அவளின் நீலகண்டேஷ்வரனுக்கு.பொறாமைக் குணம் காதலர்களுக்கிடையே அழகு என்றால் , அதுவே உறவுகளிடையே பல அனர்த்தங்களை உருவாக்கி விடும்.சூர்ப்பணகையின் பொறாமைக் குணம் , சுயலாபத்திற்கான ஆசையும் தான் பெரிய சாம்ராஜ்யத்தை அழித்தது.அவளின் பொறாமைக் குணம் தான் மற்றவர் வாழ்க்கையையும் பாதித்து , எல்லாம் இழக்க வைத்துக் கடைசியில் உயிர் இழப்புகள் பல ஏற்பட்டது . ஆனால் இந்த ப்ரனேஷ்வரனின் பொறாமை எத்தகையது என்பதை அவன் மனம் மட்டுமே அறியும் ரகசியம் அன்றோ...இத்தனை காலம் பிரிந்து இருந்த பெற்றவர்களின் இந்த இணக்கமான சூழ்நிலை இந்த இரண்டாவது மகனால் எந்த நிலைக்கு அவர்கள் உறவை கொண்டு செல்லும் என அறியாதுக் காலத்தின் மேல் உள்ள நம்பிக்கையில் ப்ரனேஷ்வரனுக்கு அழைத்தார் தன் கைப்பேசியில்.கையில் இருக்கும் அலைப்பேசியில் வந்த அழைப்பைப் பார்த்த ப்ரனேஷ்வரனுக்கு, அழைப்பது தன் தந்தை என்பதை அறிந்ததும் ஓரளவிற்குப் புரிந்தது, அவர் ஏன் அழைக்கிறார் என்று , ஆனால் அவர் எந்த அளவுக்குத் தெரிந்து கொண்டு அழைக்கிறார் என்று அவனுக்கு அறிய வேண்டியதாக இருந்தது.சட்டென்று மனதில் 'இந்த அம்மா எங்க' என்ற கேள்வியும் அவனைக் குடைய மெல்ல அழைப்பை ஏற்றான்.தந்தையின் குரலில் எந்த வித உணர்வையும் கண்டு பிடிக்க முடியாமல் தினறினான்.அந்த அளவுக்கு அழுத்தமான தன் தந்தையின் குணம் அவனைக் கிலிப் பிடிக்கச் செய்தது, ஆனாலும் அவன் அறிவிற்கு எட்டவில்லை போலும், ருத்ரனுக்கு அவர் கொடுக்கும் பாசமும், நேசமும் தன் மேல் இல்லை என்ற ஆத்திரம் அவன் கண்ணை மறைக்க, தான் செய்தது சரியெனவே அவன் மனதிற்குப் பட்டது." ப்ரனவ் , லைனில் இருக்கியா ?" என்றவரின் குரலில் எப்பொழுதும் போல இன்றும் அவனுக்குப் பாசமும் பயமும் வந்தது. அவரின் கம்பீரத்தில் ' என் அப்பா' என்று மனதில் நினைத்தவன்" ம்ம் சொல்லுங்க" என்றான்." நானும் கங்காவும் நம்ம ஆஸ்பெடலில் தான் இருக்கோம் , நீ இப்போவே இங்கே வரனும் " என்றார்.

'அம்மா' என்று எண்ணியவனை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது அவரின் குரலில் இருக்கும் கட்டளை ... தந்தையின் உத்தரவில் இந்தச் சமுகத்தில் அவருக்கான உயரமும், அதன் ஆளுமையும் உணர்ந்தான் அவரின் சிறிய மகன் ப்ரனேஷ்வரன்..." ம்ம் வரேன் " என்றவன் வேறெதுவும் கூறாது அழைப்பைத் துண்டித்தான்.மெல்லக் கண்களை மூடியவனின் இமைகளுக்குள்ளே கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் அவன் மனகண்ணில் பதிந்தக் காட்சி அப்படியே விரிந்தது.சிறிய பையனாகத் தாயின் கை விரல்களைப் பிடித்தபடி ப்ரனவ் நிற்க , தன் தாய் நிதானமில்லாமல் உணர்வுகளின் உச்சத்தில் தந்தையிடம் வார்த்தைகள் கொண்டு போர்ப் புரிந்துக்கொண்டிருந்தாள்.நிராயுதபாணியாகத் தன் மனைவியின் முன் ப்ரனவை விட வயதில் மூத்த சிறுவனோடு நின்றிருந்தார் அவன் ‘அப்பா ’ ...அன்று அவர் கண்களில் கண்டப் பாவனை ப்ரனவுக்குப் புரியவில்லை... இன்று எல்லாம் புரிந்தது அவனுக்கு.தந்தை தன்னவளை இரைஞ்சியது ‘ புரிந்துக் கொள்ளேன் ’ என்பது தான் அன்றைய அவரின் உணர்வாக இருந்தது.காலம் கடந்து எல்லாம் புரிந்தும் தெரிந்தும் என்ன செய்யவது , நடந்த எதையும் மாற்றி அமைக்கவோ அதன் பாதிப்பைத் தடுக்கவோ முடியாது என்பதை வலியோடு உணர்ந்தான் ப்ரனேஷ்வரன்.உறவில் உண்டான பிளவின்

விரிசல்களை ஒட்டலாம்...மனதில் உண்டான காயங்களை

காதலால் ஆறலாம் ...வேண்டிய பொழுதுத் கிடைக்காத

அரவணைப்பின் வென்மை

இப்பொழுதுக்கிட்டுவதால் மனம்

அமைதியடையுமா ?

தொடரும்...
 
Top