எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் விமர்சனம்

நறுமுகைத் தளத்தின் போட்டிக் கதை NNK54 ன் வர்ணங்கள் எனது பார்வையில். சுபா தன் அம்மாவின் மருத்துவ செலவுகளுக்காக அவள் அப்பா வாங்கிய கடனுக்காக மனநிலை பாதிக்கப்பட்ட ஜெயந்தனை திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. ஜெயந்தன் குணமாகிவிட்டால் அவனை விட்டு விலகிவிட வேண்டும் என்ற நிபந்தனையினால் அவன் குணமாக அவளைப் பற்றி அவன் தெரிந்துக் கொள்ளும் முன்பே அவனது பெற்றோர் அவளை அவளது அம்மா உடன் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

அவர்களது மகள் தியா அவளுக்குள் இருப்பதை அவர்களுக்கு தெரிவிக்காமல் படித்து வேலைக்கு சென்று அம்மா மற்றும் மகள் தியாவை ஒற்றை பெற்றோராக வளர்க்கிறாள். அவளை மறுமணம் செய்து கொள்ள அம்மா வற்புறுத்தினாலும் ஜெயன் மேல் உள்ள காதல் அதை மறுக்க வைக்கிறது. நினைவில்லா நிலையில் அவளுடன் பழகியிருந்தாலும் ஜெயனுக்கு அவன் உள்ளுணர்வு அவள் மீது இருப்பதால் அவன் பெற்றோர் அவனுக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சி செய்தாலும் அவனை மறுக்க வைக்கிறது.

சுபாவின் ஜெயன் மீதான காதல் ஜெயனின் உள்ளுணர்வும் இருவரை இணைந்து வாழ வைத்ததா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். இலங்கை எழுத்தாளர் கதையை நல்ல நடையில் தந்திருக்கிறார். வாழ்த்துகள்.
 
Top