#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK36
#நீதூரத்தில்நாணல்!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்...
கவிலயா.. தாய் தந்தை தம்பி என பாசமான குடும்பத்தில் இளவரசியாக வலம் வந்தவள் தந்தையின் திடீர் மறைவால் சுற்றம் இருப்பவர்களின் வேறு முகம் கண்டு அஞ்சினாலும் தைரியமாகவே வாழ்க்கையை எதிர்நோக்குகிறாள்.. கல்லூரி படிப்பில் இருக்கும் இவளுக்கு தன் தந்தையைப் போல பாசம் காட்ட கணவன் வருவான் என காத்திருப்பவளுக்கு அறிமுகமாகிறான் அவளின் ஜமாய்..
தாயை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி கைப்பிடிக்கிறாள் மனம் கவர்ந்தவனை.. ஆரம்ப கட்ட தொழிலால் சிரமப்படுபவன் அனைவரின் சம்மதத்தோடு திருமணம் முடிக்க வலியுறுத்த... அதைக் கேட்காமல் வீட்டை விட்டு வந்த தன்னவளின் மீது கோபம் கொள்கிறான் ஜிபு.. இப்படி சரிவர புரிதல் இல்லாமல் இருப்பவர்களுக்கு இடையில் ஏற்படுகிறது ஊடல்.. ஜிபு வின் தாய்க்கு இவர்கள் காதல் பிடிக்காமல் திருமணத்திற்கு பின்பு கொடுமைப்படுத்துகிறாள் மருமகளை
கணவனோடும் புரிதல் இல்லாமல் தனிமையில் பரிதவிக்கும் கவிலயா அவனை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்து பிரிந்தும் செல்கிறாள் வயிற்றுப் பிள்ளையோடு.. பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? விட்டு சென்ற மனைவியை கண்டுபிடித்தானா ஜீபு என்பது கதையில்.. பாட்டி அருமையான கதாபாத்திரம் 
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 

நிறைய எழுத்துப் பிழையும் வாக்கியப் பிழையும்...அது படிப்பதற்கு உண்டான சுவாரசியத்தை குறைக்கிறது.. சரிவர புரியாமல் இரு முறை படிக்க வேண்டிய நிலை
அதை கொஞ்சம் கவனத்தில் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
Good luck

#NNK36
#நீதூரத்தில்நாணல்!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்...
கவிலயா.. தாய் தந்தை தம்பி என பாசமான குடும்பத்தில் இளவரசியாக வலம் வந்தவள் தந்தையின் திடீர் மறைவால் சுற்றம் இருப்பவர்களின் வேறு முகம் கண்டு அஞ்சினாலும் தைரியமாகவே வாழ்க்கையை எதிர்நோக்குகிறாள்.. கல்லூரி படிப்பில் இருக்கும் இவளுக்கு தன் தந்தையைப் போல பாசம் காட்ட கணவன் வருவான் என காத்திருப்பவளுக்கு அறிமுகமாகிறான் அவளின் ஜமாய்..
தாயை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி கைப்பிடிக்கிறாள் மனம் கவர்ந்தவனை.. ஆரம்ப கட்ட தொழிலால் சிரமப்படுபவன் அனைவரின் சம்மதத்தோடு திருமணம் முடிக்க வலியுறுத்த... அதைக் கேட்காமல் வீட்டை விட்டு வந்த தன்னவளின் மீது கோபம் கொள்கிறான் ஜிபு.. இப்படி சரிவர புரிதல் இல்லாமல் இருப்பவர்களுக்கு இடையில் ஏற்படுகிறது ஊடல்.. ஜிபு வின் தாய்க்கு இவர்கள் காதல் பிடிக்காமல் திருமணத்திற்கு பின்பு கொடுமைப்படுத்துகிறாள் மருமகளை

நிறைய எழுத்துப் பிழையும் வாக்கியப் பிழையும்...அது படிப்பதற்கு உண்டான சுவாரசியத்தை குறைக்கிறது.. சரிவர புரியாமல் இரு முறை படிக்க வேண்டிய நிலை

Good luck

நீ தூரத்தில் நாணல் - கதை திரி
வணக்கம் . நான் உங்கள் நிலா கால போட்டியாளர் NNK 36 இது என்னுடைய புதிய முயற்சி ஏதாவது பிழைகள் இருப்பின் மன்னிக்கவும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் நண்பர்களே. ஜனவரி 1 முதல் அத்தியாயத்துடன் வருகிறேன். உங்கள் ஆதரவை எதிர்ப்பார்க்கும் உங்கள் NNK 36
www.narumugainovels.com