chitrasaraswathi
Member
நறுமுகைத் தளத்தின் போட்டிக் கதை NNK13 ன் மைனரு மனசுல மச்சினி எனது பார்வையில். கவியின் குடும்பம் அம்மா அரும்பு மற்றும் அப்பா சீனி. அரும்புவின் பெரியப்பா காலமாகிவிட இரு குடும்பங்களுக்கும் பகை இருந்தாலும் சுபா குடும்பம் அங்கு செல்ல பெரியப்பாவின் பேரன் சோழா இவர்களின் வருகையை எதிர்க்கிறான். கவியின் அப்பா அவளுக்கு வெளியில் மாப்பிள்ளை பார்க்க சோழா தாங்கள் இருவரும் கணவன் மனைவி என்று அறிவிக்கிறான். இருவரின் குடும்ப பகைக்கு காரணம் என்ன திருமணம் நடந்திருந்தாலும் இருவரின் பிரிவுக்கான காரணம் என்ன இருவரும் பகையை மீறி வாழ முடிந்ததா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். வாழ்த்துகள்.