எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மைனரு மனசுல மச்சினி

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK13 -
#மைனருமனசுலமச்சினி!
இரு குடும்பத்தின் பகை.. குடும்பத்தின் மூத்த உறுப்பினரான தாத்தாவின் மரணம்..
சீனி மற்றும் அரும்பு அவர்களின் மகள் சங்கவி.. அரும்புக்கு இறந்தது பெரியப்பா சீனிக்கு தாய் மாமன்..
சோழன்.. இவனின் தந்தை வழி தாத்தா தான் இறந்தது.. துக்க வீட்டிற்கு வரும் கவியின் குடும்பத்தை தடுத்து நிறுத்துகிறான் சோழன் அதிகபட்ச வெறுப்போடு..
அங்கேயே கவிக்கும் சோழனுக்கும் முட்டிக் கொள்கிறது சண்டை.. சாங்கியம் செய்யும் நேரத்தில் அதிரடியாக தாங்கள் இருவரும் கணவன் மனைவி ஒரு வருடமாக சேர்ந்து வாழ்கிறோம் என்கிறான் சோழன் கவியின் கையைப் பிடித்துக் கொண்டு.. அதிர்ச்சி அடைபவர்களிடம் ஆம் என்று ஒப்புக்கொள்ளும் கவி அவனிடமிருந்து விவாகரத்தை கோருகிறாள்.. தன்னோடு ஆறு மாதம் வாழ்ந்தால் விவாகரத்து தருவதாக கூறுகிறான் சோழன்.. ஒப்புக்கொண்டு வரும் கவி அவனுக்கு அதிகப்பட்ச தொல்லைகளை தருகிறாள்.. தன் மனதில் நிறைந்து விட்ட மச்சினியை பிரிய முடிவெடுத்தானா சோழன்.. குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுக்கு என்ன காரணம் பிரிய நினைப்பவர்கள் சேர்ந்தார்களா என்பது கதையில்.. அரும்பு கேரக்டர் அருமை 🥰👏 மாங்காய் பறிக்க போய் சீனிக்கு தலையில் அடிபடுவதெல்லாம் வேற லெவல் 😀 விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🥰
Good luck 🥰🌹💐
 
Top