எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

KK -3

subasini

Moderator
களவு - 3தந்தையின் அழைப்பை ஏற்றுப் பேசிய பின் தன் வீட்டின் வரவேற்புவறையில் உள்ள இருக்கையில் வந்து அமர்ந்தவன், தலையைப் பின்னுக்கு வைத்துக் கண்களை மூடியதில் கடந்த காலத்தில் நினைவுகளின் சுவடுகள் மின்னலென வந்து வந்து போனது.ப்ரனவின் மனதில் ஆழமாக அவனைப் பாதித்த கடந்த காலத்திற்குப் பயணமானான்.தன்னுடைய சிறிய வயதில் அம்மாவின் கைகளைப் பிடித்து நின்றிருந்த ப்ரனவிற்கு அறிய வில்லை, தன் தந்தையை அவன் பிரிந்து செல்கிறான் என்று, அது புரிந்ததும் அவனுக்கு மனதில் இனி அவரைக் காண முடியாது என்பது மட்டுமே.சிறு பிள்ளைகளின் உலகில் ஒரு மிட்டாய்க் கிடைக்கவில்லை என்றால், அதுதான் மிகப்பெரிய துயரமாக மனதில் தோன்றும்.அவர்களுக்கான உலகில் அவர்களுடன் நாம் பயணிக்கும் போது தான் அது புரியும். பெற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் வரும் வலிகளையும், வேதனைகளையும் பிள்ளைகள் முன் நிறுத்திப் பார்த்தோமேயானால், பல குழந்தைகளின் மழலையர்ப் பருவம் பாதிக்கப் படாமல் பாதுக்காக்கலாம். இதை யாரும் உணருவது இல்லை என்பது தான் உண்மை.

இங்குக் கங்காவின் கோபமும் பொறுமையின்மையும் தான் தன் இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கையைச் சிதைத்து விட்டது.சினத்தால் சிவந்த முகமும் , அழுது அழுதுத் துடுக்கென மிளகாய் போன்ற நாசியும் எதையாவது செய்ய வேண்டும் என்ற கங்காவின் வேகமும் ப்ரனவால் உணர முடிந்தது ...இந்தத் துயரத்திலும் எந்த உணர்வும் இன்றி நின்றிருந்த ருத்ரன் தான் இந்த நிலைக்குக் காரணம் என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது. அதுவே அவன் மேல் ஒரு பகைமை உணர்வை உருவாக்கியது.பொதுவாகப் பிடிக்காதுச் சம்பவம் நடக்கக் காரணமான நபர்களை வெறுப்பது இயற்கை அல்லாவா, அவன் சிறிய மனதிலும் அந்த எண்ணங்கள் தான் அரங்கேறியது.அவனைக் கைகளில் பிடித்த தந்தையின் கைகள் ஏன் என்னை எடுக்கவில்லை என்ற துயரம் அவன் மனதில் ரணத்தை உருவாக்கியது. அந்த நொடியில் உலகின் மிகப்பெரிய துயரமாக அந்தப் பிஞ்சு மனதில் பதிந்தது.எதற்காகவோ வாதிட்டுக் கொண்டிருக்கும் தாயைச் சமாதானம் செய்ய முயலாமல் அவரிடம் எதையோ புரிய வைக்கப் போராடும் தந்தையின் பிம்பமும் , அதை ஏற்காமல் என்னைய ஏமாற்றி விட்டிங்க எனக் குரலை உயர்த்திக் கூற , அதற்கு அந்தச் சிறுவனைப் பார்த்து எதையோ புரிய வைக்க முயலும் அவருக்கு, அதற்கான சந்தர்பத்தைத் தர மனமில்லாமல் வீடு விட்டு வெளி வந்த அந்த நிகழ்வு, அவன் மனதில் பசுமையாகப் பதிந்து இருந்தது.அதன் தாக்கமும் வலியும் இன்றும் தன் இதயத்தில் ஓரம் இருப்பதை அவன் உணர்ந்தான்.மெல்ல மார்பைத் தடவியவன் மனதில் தனக்குக் கிட்டாத தந்தையின் அன்பை இந்த ருத்ரன் தட்டிப் பிடிங்கியது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தான் இருக்கும் தன் தந்தையின் மடியில் அவன் என்ற எண்ணமே அவனை உயிரோடு கொன்றது.அதைச் சிறுவயதில் இருந்தே சகிக்கும் ப்ரனவ், தன் தாயின் மனம் இன்று சில காலங்கள் ஆக ருத்ரனிடம் கொஞ்சம் சாய்வது, அவனுக்குத் தெரியாமல் போனது தான் அந்தோ பரிதாபம்.இந்த நொடித் தன் தாயின் மடியை எதிர்நோக்கியது இந்த வளர்ந்தக் குழந்தை.வேகமாகத் தன் தாயின் அறையை நோக்கிச் சென்றவன் அவள் படுக்கையில் படுத்து, தாயின் வாசத்தைக் கண்களை மூடி உணர முயன்றவனை, தேடி வந்தாள் அவன் காதல் மனைவி தன்யா.அவளை அவன் உயிர் உருகிக் காதலித்துத் திருமணம் செய்துக்கொண்டான். அதற்காக அவன் எந்த எல்லைக்கும் சென்றான்.அவனைப் பாசத்தோடு அவள் பார்க்க அந்தப் பார்வையில் அவன் காதலைத் தேடித் தோற்றுத் தான் போனான், அவன் இருக்கும் மனநிலையில் 'இருப்பது கூட இல்லாதது' போலத் தோன்றியது."என்ன ப்ரனவ் இங்க வந்த படுத்து இருக்கீங்க " என்றவளின் வார்த்தைகளில் நினைவுக்கு வந்தவன் ஒன்றும் இல்லை எனத் தலையை ஆட்டினான்.மெல்ல அவளிடம் " அப்பாவைப் பார்க்கப் போகனும் தன்யா, என் கூட வருவாயா ? " என்று கூறியவன் அவள் மேடிட்ட வயிற்றைத் தான் பார்த்தான்.கணவனின் வார்த்தைகள் கேட்டவள், "என்ன தீடிரென்று, அத்தையும் ரொம்ப நேரமாகக் காணவில்லை " என்றவளைப் பார்த்து " அவங்களும் அங்க தான் இருக்காங்க " என்றான்.

கணவனின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தவள், "எதாவது பிரச்சனையா ப்ரனவ் , நீங்க எதாவது" என வார்த்தைகள் அவள் முடிக்கும் முன்னே "அங்கே போனால் தெரிஞ்சிரும்" என்றவன்... மேலும் " நீ போய்த் தயாராகு, நாமும் போகனும் " என்றவன் பார்வையில் படுக்கைக்கு அருகில் இருக்கும் மேசையின் மேல் வீற்றிருந்த கவரின் மேல் அவன் கவனம் சென்றது.அந்தக் கவரில் எழுதி இருந்த எழுத்துகள், உள்ளத்தின் அடியாழம் வரை சென்று, ஒரு பிரளயத்தை ஏற்படுத்தியதில் கைகள் நடுங்க அதை எடுத்துப் பார்த்தான். அந்தக் கவரில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் கண்கள் இருட்டியது. மனதில் எங்கையோ நான் தவறு செய்துவிட்டேன் என்ற உள்ளுணர்வு முதல் முறையாக ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.கொஞ்சம் நேரம் அதையே பார்த்தவன் தயக்கத்தை விடுத்து அதைப் பிரித்துப் பார்த்தான். அந்த நொடி நரகம் என்பது என்ன ? எப்படி இருக்கும் ? எனப் புரிந்தது அவனுக்கு. கடந்து காலங்களில் தான் செய்த அனர்த்தங்கள் எல்லாம் வரிசைக் கட்டி முன் நின்று அவனைப் பார்த்து எக்காலமிட்டுச் சிரித்தது. இந்த நொடி மரணித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்கிய நேரம் அவன் மனைவி அருகில் வந்தாள்.அவளைப் பார்த்தும் மீண்டும் அவன் மனம் எவ்வளவு ' பெரிய பாவங்களைச் செய்து இருக்கிறேன் ஆண்டவா ' என வேதனையின் வலியில் துடித்த மார்பைப் பிடித்துக் கண்களில் நீர் வழிய அமர்ந்தவனின் செயலில் , அவனைக் காண வந்த தன்யாவோ பயந்துப் போனாள் தன் கணவனின் நிலையைக் கண்டு.

" ப்ரனவ் , என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கீங்க ? எதாவது இருந்தாலும் சொல்லுங்க , உங்க இந்த நிலையைப் பார்க்க எனக்குப் பயமாக இருக்கிறது " என்றாள் தன்யா.அவன் காதல் மனைவி தன்யா. அவன் காதல் அந்த மழை நீரைவிடத் தூய்மை ஆனது அவனுக்கு மட்டும் தான் தெரியும்... அதை இனி வரும் காலங்களில் அவள் புரிந்துக் கொள்வாளா? என்பது தான் ப்ரனவின் கேள்வி ... என்ன சொல்ல எனத் தெரியாமல் தன்னவளிடமே அவன் சரணடைந்தான்.அவளை இறுக்கக் கட்டிப்பிடித்தவன் “தன்யா, ரொம்பப் பெரிய பாவம் பண்ணிட்டேன் ” ஒரு வயது வந்த ஆண்மகன் என்பதை மறந்து அவளிடம் கதறினான். ஆண் என்ற அகங்காரம், ஆணவம் , பொறாமை எல்லாம் சுக்கு நூறாக உடைந்துப் போக மனைவியின் முன் அழுக்கான தன் மறு பக்கத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கினான் இந்த ப்ரனேஷ்வரன்."நான் ரொம்பப் பெரிய பாவம் பண்ணிட்டேன்டி , அதுவும் எந்தத் தவறும் செய்தாவங்களுக்குத் தண்டனைக் குடுத்துட்டேன்டி , இதை எங்கே போய்ச் சரி பண்ணுவேன்” என்று அழுதவனை எப்படித் தேற்ற என அறியாமல் தினறினாள் தன்யா.அவனைத் தன் மடியில் இருந்து நிமிர்த்தி அவன் கண்களைத் துடித்து விட்டவள்." ப்ரனவ் , எதுவாக இருந்தாலும் தெளிவாகச் சொல்லுங்க, கண்டிப்பாக உங்க பக்கம் நியாயம் இருக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு " என்றவளை இயலாமையோடு பார்த்தான் அவள் கணவன்."அதில் பாதித்தது நீயும் தான்" என்றவனைப் புரியாமல் பார்த்தாள்." நான் ஆரம்பத்தில் இருந்து எல்லாம் சொன்னால் தான் உனக்குப் புரியும் " என்றவன் தங்கள் குடும்பம் பிரிந்தக் கதையை அவளிடம் சொல்லத் தொடங்கினான்." எங்க அப்பா பத்தி உனக்குத் தெரியும் தானே . தி க்ரேட் நீலக்கண்டேஷ்வரன் " என்று தன் தந்தை பற்றிய அவன் வார்த்தைகளில் ஒரு கர்வம் இருந்ததை உணர்ந்தவளின் இதழ்களில் மென்னகை வந்தமர்ந்தது."என்ன காரணம் தெரியாது நான் சின்ன வயசா இருக்கும் போது , ஒரு நாள் வியாபாரம் நோக்கம் வெளியூர்ச் சென்றவர், திரும்பி வந்தவர் தன்னோடு இந்த ருத்ரேஷ்வரனைக் கூட்டி வந்தார். அம்மாவிடம் இனி அவன் நம்ம கூடத் தான் இருப்பான் என்று கூறினார்.அவன் தான் ருத்ரன் , மாயாவதி ஆன்டி வீட்டில் கொஞ்சம் காலம் வளர்ந்தான். இந்த விஷயம் எனக்குக் தெரிய வந்தது . எனக்குத் தெரிந்து அவனுக்கு அதிகம் ஹாஸ்டல் வாழ்க்கைத் தான். அதுவும் எனக்குத் தப்பாகத் தான் தெரிந்தது.இந்த நிலையில் தான் அப்பாவிடம் அம்மா,பிரச்சினைப் பண்ணி இருக்காங்க, அவன் யார் பையன் என்று கேள்விக் கேட்டுச் சண்டை எல்லாம் போட்டாங்க ... அவன் பார்க்க அப்படியே அப்பாவைப் போலவே இருப்பான் , நானே நிறையத் தடவைக் கவனிச்சு இருக்கேன் ... மாயா ஆன்டி அண்ட் அப்பா நட்பில் அவங்களுக்குச் சந்தேகம் வந்ததால் தான், இந்தப் பிரச்சனை என்று நான் தவறாகக் கணக்குப் பண்ணிட்டேன்... இப்ப வரை என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியாது... ஆனால் அந்த டைம் அப்பா எவ்வளவு கெஞ்சினாரு, ஆனால் எந்தக் காரணம் கொண்டும் வீட்டை விட்டுப் போகும் அம்மாவைத் தடுக்க மட்டும் அவர் வரவே இல்லை.நானும் அம்மாவும் வீட்டை விட்டு வரும் போது அவர் அவனைத் தான் கெட்டியாகப் பிடித்திருந்தார். என்னால் அதைத் தாங்கவே முடியலை" என்று இன்றும் அதற்கு வேதனைப் பட்டான் இந்த ப்ரனேஷ்வரன்.உன் விரல் பிடித்து

நடக்க நான் ஏங்கிட ...

என் இடத்தில் வேறொருவன் என்ற

எண்ணமே வாட்டியது...

தந்தையின் மீசையை முறுக்கி

விட துடிக்கும் மனதின்

ஆசையை நிறைவேற்றிட

இனி ஏது வாய்ப்பு.

தந்தைக்காக தவிக்கும் என்னை

கைகளில் ஏந்தியவரின்

கம்பீரத்தின் அடையாளத்தை

என் பிஞ்சு விரல்களால்

முறுக்கி விளையாடவதெல்லாம்

கனவாகிப்போனதே!!

தந்தையின் அரவணைப்புப் பாசம், வழிநடத்தல் இப்படி ஒரு மகனுக்கு உரிய எல்லா ஏக்கங்களையும் மனதில் வைத்துப் போராடும் வளர்ந்தக் குழந்தையாகத் தன் முன் நிற்கும் கணவனை எப்படி ஆறுதல் தர என்று தெரியவில்லை தன்யாவிற்கு...மேலும் அவனுடைய கடந்த காலத்திற்கு இருவருமாகப் பயணித்தனர்...

“ என்னுடைய ஏழாம் வகுப்புப் படிக்கும் தருணம் அது தன்யா” என்றவன் தன் பள்ளி நாட்களில் நடந்ததைப் பகிர்ந்தான்..

" அவன் படிக்கும் ஸ்கூலில் தான் நானும் படித்தேன்...

அவன் படிப்பதில் மிகவும் கெட்டிக்காரன்... எங்க ஸ்கூலில் ருத்ரேஷ்வரன் சொன்னா எல்லா டிச்சருக்கும் பிடிக்கும். எல்லாவற்றிலும் அவன் சிறந்தவனாகத் திகழ்ந்தான்... அவனுடைய இந்த நிலைப் பார்த்து, நானும் அவனைப் போல என்னையும் சிறந்தவனாக உருவாக்கிக்கிட்டேன் ...

அவன் நிழல் போலத் தொடர்ந்தேன், என்ன படிக்கிறான் அதையெல்லாம் நானும் படிச்சேன், ஏன் என்று அப்போது தெரியலை ஆனால் இப்போது தெளிவாகப் புரியுது...

அவன் காலேஜ் சேர்ந்ததும் நானும் அதே காலேஜில் தான் படிக்கனும் முடிவு செய்தேன்.

அவனுக்கு எனக்கு நிறைய ஒற்றுமைகள் இருந்தது அதை நான் கவனிக்கவில்லை. ஆனால் இந்த நொடி ஏன் என்று புரியுது" ... என்றவனை ஆழ்ந்துப் பார்த்தாள் அவன் மனைவி.அவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் எனக் குழம்பிப் போனாள்...'ருத்ரனை எதிரி என்கிறானா இல்லை, அவன் குடும்பத்தைப் பிரித்தவன் என்ற பகையைத் தீர்க்க நினைக்கிறானா! பொறாமையில் இவ்வளவும் செய்தானா? எனக் குழம்பியவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.ருத்ரன் அவன் மனதில் எப்போதும் ஏதோ ஒரு வகையில் இடம் பிடித்தது இருக்கிறான். இல்லை என்றால் அவனைத் தன்னுடைய வாழ்க்கையில் இந்த அளவுக்கு ஒருவன் பின்பற்றுவானா!... இவன் தான் இந்த உறவை பகையாக மனதில் பதித்து இருக்கின்றான்.

'யாராவது தன்னுடைய எதிரயை இப்படி ஐடியலாகப் பின் பற்றுவாங்களா ' என்ற கேள்வி மனதில் வந்ததும் தன்னவனின் எண்ணங்களைப் பார்த்துச் சிரிப்புத் தான் வந்தது. மேலும் அவன் சொல்லவதைக் கேட்கலானாள்.அதே நேரம் மருத்துவமனையில் தன்னுடைய பெற்றோர்கள் சென்றதும் தன் வாழ்க்கையில் நடந்த எல்லாத்தையும் அசைப்போட்டான் ருத்ரன்... அவனுக்கு ப்ரனேவேஷ்வரனை நினைக்கும் போது ஒரு வித விரக்திப் புன்னகை இதழில் தோன்றியது... தன் உடன்பிறந்தவன் தன்னை எதிரியாக வதைக்கிறான் மனதளவில்.சிறு வயதில் இருந்தே ப்ரனேஷ்வரன் தன் பின்னே பயணிக்க அதில் பாசமும் தேடலையும் உணர்ந்தான்... தன் பின்னே வருபவன் தன் உடன்பிறந்தவன் என்பதை அறிந்தப் பின்னர் அவனுக்கு எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து ஒரு நல்ல அண்ணனாக இருக்க முயன்றான்... இதை எதுவும் புரிந்து கொள்ள வில்லை அந்த மடையன் என்ற கோபம் தன் தம்பியின் மேல் இருந்தது ருத்ரனுக்கு.

தன்னுடைய காதலைக் கூட அவனுக்காக விட்டுக்கொடுத்து நிற்கிறானே என்று தன் இடது புற மார்பைத் தடவினான் வேதனையில் ...உண்மையை வெளியில் சொல்லாமல் தன் வரட்டு ஈகோவால், எவ்வளவு அனர்த்தங்களை உண்டாகியிருக்கிறது என்ற தந்தை மேல் கட்டுக்கடங்காத கோபம் துளிர்த்தது அவன் மனதில் ...அன்று ப்ரனேஷ்வரனின் கல்லூரியின் இறுதி வருடம் .தன் காலேஜில் தன்யாவும் அவள் உயிர் தோழி யாத்ராவும் படித்தனர். தங்கள் கல்லூரியில் பகுதி நேரம் பாடம் எடுக்க வரும் பேராசிரியர் பற்றிய பேச்சுப் போய்க்கொண்டு இருந்தது."தன்யா, உனக்குத் தெரியுமா? நமக்கு வகுப்பு எடுக்க வரும் சார் யார் என்று?, அவரை எனக்கு நன்றாகவே தெரியும் " என்ற தன் அகன்ற மான் போன்ற விழிகளின் இமைகளை விரித்து இதழ்களால் இல்லாமல் விழிகளால் சிரித்தால் அந்தக் கண்ணழகி யாத்ரா..."எனக்குத் தெரியாமல் யாருடி அது " என்று கேட்டத் தோழியிடம் "அவர் மாயாவதி அத்தையின் பையன் ருத்ரேஷ்வரன் " என்றாள்...

"அப்படியா ? அவர் எப்படி ? நமக்குப் பாடம் எடுக்க வருகிறார் என்று சொல்லற, நமக்குச் செட் ஆகுமா?" என்றாள் தன்யா."ஐயோ, அவர் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி, தான், நாம் சத்தமில்லாமல் இருந்துக்கனும்" என்றாள்.ழதோழிகள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே வந்தான் ப்ரனவ்.அவர்கள் மூவரிடமும் நல்ல நட்பு இருந்தது. அவனோட அந்த நட்பே தன்யாவின் மேல் இருக்கும் காதல் தான் காரணம்."என்ன ஜூனியர் , என்ன ஓரே அரட்டைக் கச்சேரி போல" என்று கேலிச் செய்தான்."அதெல்லாம் ஒன்றுமில்லை சீனியர்" என்ற யாத்ராவை முறைத்தான் ப்ரனவ்."அது தான் நீ பேசனும் தானே கேட்கிறார். நீ தான் பேசறது... ஆர்வத்தில நான் பேசி அவரிடம் முறைப்பை வாங்கிக் கட்டுக் கொள்வது என் வேலையாகிருச்சுடி " என்று தன்யாவின் காதில் கிசுகிசுத்தாள் யாத்ரா.'என்ன' என்று பார்வையால் கேட்டவனிடம் இன்றைக்குப் புதிய ஸ்டாஃப் வராங்க, அதைப் பற்றித் தான் பேசிட்டு இருந்தோம்" . என்றாள் தன்யா."யார் வராங்க?" என்ற கேள்விக்கு, "ருத்ரேஷ்வரன்" வேகமாகப் பதில் அளித்தாள் யாத்ரா."ரொம்ப ஆர்வமாக இருக்கீங்க போல, உங்களைப் பார்த்தால், படிக்கறதில் இந்த ஆர்வம் இல்லை போலையே" என்று கேலிச் செய்தவனிடம்.

" ருத்ரன் சார் ரொம்ப அமைதி , ஆனால் அவங்களுக்குக் கோவம் வந்தால் கட்டுப்படுத்த முடியாது .... இப்பவும் சில முக்கிய முடிவுகள் எடுக்க மாயாவதி அத்தையைத் தான் கூப்பிடுவாறு " என்றவளின் வார்த்தைகளில் முகத்தில் அப்பட்டமான பிடித்தமின்மையைக் காட்டினான் ப்ரனவ். அவளுக்குத் தெரியவில்லை வரும் காலத்தில் ருத்ரனின் கோபத்திற்கு முன் தான் பலியாகப் போவது. " சரி வா நம்ம க்ளாஸுக்குப் போவோம் " எனத் தோழிகள் இருவரும் தங்கள் வகுப்பிற்குச் சென்றனர். அந்த நேரம் அவர்களுக்குப் பாடம் எடுக்க வகுப்பறைக்குள் நுழைந்தான் ருத்ரேஷ்வரன்.அவனின் அழகில் வகுப்பில் இருந்து பெண்கள் அனைவரும் அவனைப் பார்த்துச் சைட் அடிக்க, யாத்ரா அவனைப் பிரம்பிப்போடு பார்த்தாள். அவள் பார்வையில் ஆர்வம் இருந்ததைத் தன்யா, கவனிக்கத் தவறவில்லை.யாரிடம் எந்த வம்பிற்கும் போகாமல் தன் லட்சியத்தை அடையத் தனி ஒருவனாகப் போராடும் ருத்ரனின் கம்பீரமான தோற்றம், அவனை வெறுக்கும் நண்பர்களுக்கு அவன் அகம்பாவம் பிடித்த மனிதனாகக் காட்டியது...தன் வாழ்க்கையில் அவன் எதிர்க்கொண்ட பல அவமானம் மற்றும் தன் முதுக்குப் பின்னாடிப் தன் பிறப்பைப் பற்றிய தவறான வார்த்தைகள் கேட்டு வளர்ந்ததால் என்னமோ அவன் உள்ளுக்குள்ளே இறுகிப் போயிருந்தான்...இறுகிய இந்த இரும்பு மனம் படைத்த அவனைத் தன் மென்மையான குணம் கொண்டு அவனை ஆளப் பிறந்தவள் தான் இந்த யாத்ரா.

இந்த நொடி அவளுக்கே தெரியாது என்றால், ருத்ரனோ அவள் நினைவுக் கூட இல்லாமல் இருக்கிறான் என்பது தான் விந்தையிலும் விந்தை...தன் கடமையே கண்ணாகப் பாடம் நடத்தியவன், சிறந்த ஆசிரியனாக அவர்களுக்கான வீட்டுப் பாடங்களைக் கொடுத்தவன், யாரையும் கவனியாதுத் தனக்கான அடுத்த வேலைக்குச் சென்றான்.அவன் படித்துப் பட்டம் வாங்கி வெளியே சென்ற போதும் இவனைப் போன்ற சிறந்த மாணவர்களை விடாது அவர்கள் திறமையும் அறிவுத்திறனையும் தங்கள் அடுத்த வரும் மாணவர்களுக்கு எடுத்துக் காட்டாக, வாரத்தில் இரு நாட்கள் பாடம் எடுக்க அழைத்திருந்தது இந்தக் கல்லூரி நிர்வாகம்.அதில் முன் நிற்பது நம் நாயகன் தான்.அவனுடைய தொழிலில் எப்பொழுதும் பிஸியாக இருந்த போதும், தன் ஆசிரியரும் குருவும் ஆன ராமநாதன் சொல்லிற்கு மறு பேச்சில்லாமல் இங்கு வந்து பாடம் எடுக்கிறான்.NGR construction... இது தான் அவன் தொழில் கூடம்...

அதில் அவன் கூடப் படித்து வேலைக் கிடைக்காமல் தினறிய நண்பர்கள் வைத்துத் தொடங்கியது. இரண்டு வருடத்தில் அவன் கடுமையான உழைப்பும் தைரியமும் தான், அவன் தொழிலின் அசுர வளர்ச்சி.தன் தந்தையின் தொழிலை அவன் பார்ப்பான் என்ற அவர் கனவைத் தயவுத் தாட்சண்யம் இன்றிக் கலைத்தான் அவருடைய மகன். அவனுக்கான தொழிலை அவனே நிர்மானித்து , அதில் தனக்கான பெயரைச் செதுக்கினான்.தொழிலில் அவன் முன்னேறிச் சென்றதில் அவன் தந்தையையே பின்னுக்குத் தள்ளியிருந்தான்.

அவனின் இந்த வளர்ச்சி அவருக்குப் பெருமையை மட்டுமே தந்தது ... என்றும் முதலாவது இடத்தில் இருந்த நீலக்கண்டேஷ்வரன், தன் மகனால் இரண்டாவது இடத்திற்கு வந்தார் , அதை நினைத்து மனதில் அவருக்கு ஆனந்தம் மட்டுமே...

இவன் வளர்ச்சியில் பாதித்தது ஈஷ்வரின் மறைமுகமாக ஆதரவில் தொழில் நடத்தும் கங்காவிற்குத் தான்.மிகப்பெரிய அளவில் தொழில் நடத்தினாலும் அதில் ஈஷ்வரின் தலையீடு இருக்கும் ... அவள் அண்ணன் உயிரோடு இருக்கும் வரை இந்த விஷயம் கங்காவுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டார் என்றால் இப்போது அவள்

காரியதரிசியும் ஈஷ்வரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ராஜன் தான். இன்று வரை இந்த உண்மையை யாரும் அறியாமல் பாதுகாக்கின்றனர். ஆனால் தந்தைக்குப் பாடம் சொல்லித் தரும் வித்தகனான ருத்ரன் கண்ணுக்கு எல்லாம் தெளிவாக விழுந்தது.ஒரு சிறந்த தொழில் அதிபன் தன்னைச் சார்ந்த உலகில் என்றும் மேம்மடுத்தி இருக்க வேண்டும் அல்லவா , நாளை என்பதைத் தீர்மானிக்கும் திறன் நம்மிடம் இருக்க வேண்டும்... அது தான் சிறந்த தலைவனாக வலம் வர நம்மை வழி நடத்தும் என்பதை, தன் தந்தையின் முலம் கற்றுத் தெளிந்து, அவருக்கே இப்பொழுதுப் பாடம் சொல்லித் தரும் வித்தகனான வளர்ந்திருந்தான் ருத்ரன்.தன் பாட வேளை முடிந்ததும் தன் காரை நோக்கி நடந்து வந்தான் ருத்ரேஈ்வரன். அங்கே காரிடோரில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ப்ரனவின் கண்கள் ருத்ரனின் கம்பீரத்தில் தன் தந்தையைக் கண்டவன், ருத்ரனின் தாய் யார் என்பதில் அவன் இதழ்களில் அலட்சியம் வந்து பிறந்தது ... தன்னருகே நின்றிருந்த தோழனிடம் , " டேய் உனக்கும் எனக்கும் எல்லாம் அம்மா அப்பா ஒன்னா ஒரே குடும்பமாகத் தானே இருப்பாங்க, ஆனால் சிலருக்கு அப்படி இல்லைடா அப்பா ஒரு குடும்பம் அம்மா இன்னொரு குடும்பமாக வாழறாங்க , ரொம்ப ஹைடெக் ப்மேலி டா உனக்குத் தெரியுமா ” எனத் தன் உடன் பிறந்தவன் என்று தெரியாமல் தன் தாயைத் தூற்றுகிறோம் என்று அறிவிற்குப் புரியாமல் தங்களின் வாழ்க்கைக்கு நியாயம் தேடினான் இந்த இளம் காளை. ஆம் இளங்காளைக்குத் தான் பயமறியாதே.இந்த வார்த்தைகள் ருத்ரன் தன் சிறு வயது முதலே கேட்டுப் பழகியதால் , தன் முகத்தில் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளே மரித்துப் போனான் ... என்னதான் இருந்தாலும் அவன் தன்னை விட வயதில் சிறியவன் , தன்னுடைய உடன் பிறந்தன் என்ற பாசம் அவனைத் தடுத்தது ... இந்தப் பாசம் தான் ப்ரனவிற்குப் பாதுகாப்பு வளையமாக இருந்தது.அவனிடத்தில் வேறொருவனாக இருந்திருந்தால் இன்னேரம் அவன் சுயநினைவு இழந்திருப்பான்... எந்த வித எதிர்வினையும் காட்டாமல் தன் கம்பீரமான பார்வையில் எந்த மாற்றமும் இல்லாமல் அவனைக் கடந்து சென்ற ருத்ரனைப் பார்த்துப் பிரம்மிப்பது ப்ரனவின் முறையாயிற்று. அவனும் அதில் கொஞ்சம் மயங்கித் தான் போனான்.மனதில் ருத்ரன் கேட்ட வார்த்தைகள் எல்லாம் அவனைச் சூறாவளியாகச் சுலட்டி அடைக்க அவன் கார் அவன் கைகளில் பறந்தது ...

வார்த்தைகளின் வலி

அதன் ஒலியில் இல்லை

உச்சரிக்கும் உறவின்

செயலில் உண்டாகும்...தொடரும்...
 
Top