எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

KK - 4

subasini

Moderator
களவு - 4வீட்டிற்கு வந்த ருத்ரன் அங்கே மாயாவதியும் தன் தந்தையும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பது பார்த்ததும் , அவன் சினம் அதன் எல்லையைக் கடக்க , அதை வார்த்தைகள் கொண்டு அங்கே பதிவேற்றினான்." மத்தவங்க உணர்வுகளை எப்பவுமே புரிந்து கொள்ளாமல் ஏன் இப்படி இருக்கீங்க? இரண்டு பேரும் " என்றவனின் வார்த்தைகள் தந்த அர்த்தம் புரியாது விழித்தாள் அவனை வளர்த்தவள்." என்ன பேசுறோம் தெரிந்துத் தான் பேசறியா? , எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராகப் பேசிப் பழகு " என்று கடுமை மாறாமல் கூறினார் நீலகண்டேஷ்வரன்..." உங்க இரண்டு பேர் நட்பிற்குக் கிடைத்த பரிசு, நான் என்று இந்த ஊரே பேசுது , அதை ஆமோதிப்பது போல் இருக்கிறது உங்கள் இருவரின் செயல்" என்றான் கண்கள் சிவக்க...

இந்த மாதிரியான வார்த்தைகளை ருத்ரனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை இருவரும்...மாயாவதியின் அண்ணன் தனசேகரன், ருத்ரனின் பிறப்பைப் பற்றி அவதூறாகப் பேசியதை அறிந்து, நீலக்கண்டேஷ்வரன் கொடுத்த பதிலை நினைத்தால் இன்றும் உடல் நடுங்கும் தனசேகரனுக்கு. கொடுக்கிறது.நல்லவனுக்கு மட்டுமே நல்லவன் இந்த நீலகண்டேஷ்வரன்.

அதற்குப் பின் வந்த வருடங்கள் ஹாஸ்டல் வாசம் ஆனது ருத்ரனின் வாழ்க்கை.எப்பொழுதுமே நிதானம் இழக்காத ருத்ரனின் சிதறிய இந்த வார்த்தைகள் எல்லாம் மாயாவதியை நேரடியாகத் தாக்கியது."ரொம்ப நல்லா இருக்கு ருத்ரன், நீ எங்களைப் புரிந்து கொண்ட விதம், ம்ம் பரவாயில்லை ஆனால்... எந்தப் பெண்ணையும் எப்பொழுதும் தவறாக நீ பேசாதே... உன் உயரத்திற்கு அழகல்ல" என்றவள் ... . நண்பனின் மகனைத் தன் மகனாய் வளர்த்தி, பாசம் வைத்தவளுக்கு இந்த வார்த்தைகளைத் தாங்க முடியாமல் கண்களில் பிறந்த கண்ணீரைத் துடைத்தப்படி "இனி நான் இங்க வரமாட்டேன்... நான் பார்க்க வந்தது உன்னைத்தான்... உனக்குப் பிடிக்கவில்லை என்றால் இனி அந்தச் செயலை நான் செய்ய மாட்டேன், அப்பறம் நீ எங்க இரண்டு பேரைப் பத்திக் கவலைப் படாதே, ஏன்னென்றால் இந்தக் கேள்விக்குப் பதில் என் கணவருக்குத் தான் கொடுக்கக் கடமைப் பட்டு இருக்கேன்... என் பிள்ளையாக இருந்தாலும் உனக்கு அதில் உரிமை இல்லை" எனக் கம்பீரமாக நான் உன்னை வளர்த்தவள் என்று நிமிர்ந்து நின்றாள்.அதில் அவர்கள் உறவிற்கான நேர்மை ருத்ரனுக்குப் புலப்பட்டது.

தன் கோபத்தால் சிதறடித்த வார்த்தைகள் எப்படித் திரும்ப எடுப்பான்..." யாகவார் ஆகினும் ” என்ற வள்ளுவனின் வாக்கு அவனுக்கு நினைவுக்கு வந்தது.இந்தச் சூழலில் என்ன செய்ய என அறியாது அவன் சிலை என நின்றான்.

"மாயாவதி வா , உன்னை நான் கொண்டு போய் விடறேன்" என்று நல்ல நண்பனாகத் தோள் தாங்கினார் நீலகண்டேஷ்வரன்.

"இல்ல ஈஷ்வர் நான் போயிக்கிறேன்” என்றவளை

“நீ எதுவும்ம் பேசக்கூடாது, அமைதியாக உக்காரு" என்றவன் தன் அலைப்பேசியில் அவள் கணவனுக்கு அழைத்தார்."ஹாலோ நரேன், ஈஷ்வர் பேசறேன், கொஞ்சம் வருத்ததில இருக்கா மாயாவதி, நீ என் வீட்டிற்கு வர முடியாமா?.

எதிர் முனையில் இருக்கும் நரேன் என்ன கேட்டாரோ“இல்லை நான் அவளைக் கொண்டு போய் விடறேன் சொன்னால், உங்க பொண்டாட்டிச் சொல்லறதைக் கேட்டால் தானே" என்றார் நீலக்கண்டேஷ்வரன்.அதற்கு நரேனோ,

"இல்லை நீங்களே அவளைப் பார்த்துக்கோங்க... நான் வர லேட் நைட் ஆகும், அவள் ருத்ரனைப் பார்க்கனும் தானே என்னிடம் சொல்லிட்டு அங்கே வந்த, ஏன் அவன் ஊரில் இல்லையா? " என்ற நரேன் வார்த்தைகள் ருத்ரனை வதைத்தது...தன் தவறை உணர்ந்த ருத்ரன் மெதுவாக மாயாவதி அமர்ந்து இருக்கும் சோபாவின் அருகில் வந்து, அவள் கால்களுக்குக் கீழே அமர்ந்தவன் தன்னை வளர்தியவளின் மடியில் தலைச் சாய்ந்து படுத்த படி "சாரி மாயாம்மா ஏதோ கோவத்தில்" என்று முடிக்காமல் அவள் முகத்தைப் பார்த்தவனின் கண்கள் கோவைபழமெனச் சிவந்திருந்தது...அவன் தலையைப் பாசமாகக் கோதிய மாயாவதி "எப்பவுமே சந்தோஷமாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி, வார்த்தைகள் எதுவும் இல்லாத மௌனம் தான் ருத்ரன் சிறந்த வழி, அதற்குப் பின் நாம இப்படி வருத்த படத் தேவை இருக்காது,கோபம் கூட அழகான உணர்வு, நம்முடைய கோபம் என்றும் மதிக்கப்படனும், எல்லா விசியத்திற்கும் கோவப்பட்டால் அதற்கு மதிப்பு இருக்காது.கோபத்தினால் எந்த ஓரு விஷயமும் சரி பண்ண முடியாது, எல்லாத்தையும் இருக்கும் இடம் அறியாமல் அழித்து விடும்...

கோபமும், பொறுமையின்மையும் தான் புரிதலுக்கான முதல் எதிரி என்பதை மறந்திறாத ருத்ரன்...உன் அப்பாவைப் பார், அவர் பேச வேண்டிய இடத்தில் மட்டும் தான் பேசுவார், தேவையில்லாமல் எந்த வார்த்தையும் விட மாட்டார்.புரியாமல் இருப்பவரிடம் அமைதியாக இருந்து அவர்களே புரிந்துக் கொள்ளட்டும் என ஒதுங்கிடுவார், என்ன அது ரொம்ப நீண்ட நெடிய வருடங்கள் ஆகப் போயிருச்சு" என்று தன் நண்பனின் தவறைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை நீலகண்டேஷ்வரனின் தோழி..“இரண்டு பேரும் பேசிட்டு இருங்க நான் சாப்பிட எதாவது ரெடிப் பண்ணறேன்” என்று சமையலறை உள்ளே சென்ற அரைமணி நேரத்தில் உண்பதிற்கு டிப்பனோடு வந்தார் ஈஷ்வர்...அந்த நேரத்தில் வாயிலில் அழைப்பு மணி அடிக்க யாரென்று பார்க்கச் சென்ற ருத்ரனுக்கு அதிர்ச்சித் தான். அங்கே மாயாவதியின் கணவன் கைகளில் உணவுப் பொதியோடு நின்றிருந்தார்...அவரை உள்ளே விட்டுப் பின்னால் வந்தான் ருத்ரன் ...நரேனைப் பார்த்த ஈஷ்வர் "என்ன நரேன் வர லேட் ஆகும் சொன்னமாதிரி இருந்தது" எனக் கேட்க..." ஆமாம் சொன்னேன், ஆனால் என்னோட உயிர் இங்கே என்னைக் காணாமல் தவிகின்றாள் என்று காதல் பட்சிச் சொல்லிச்சா, அது தான் பறந்து வந்தேன்" என்று காதல் வசனம் பேசிய கணவனை முறைத்தாள் மாயாவதி..."என்ன நரேன் பேரப் பசங்க வீட்டில் இருக்காங்க, இன்னும் இப்படிப் பேசறீங்க " என்றவளின் தோளில் கைப்போட்டபடி"கல்யாணம் ஆகிப் பேரன் பேத்தி எடுத்த பின்னும் மனைவியைக் காதலிப்பது தவறில்லை டியர், அடுத்தவன் மனைவியைக் காதலிப்பது தான் தவறு என்றவனின் தோளில் அடித்தாள் அவன் மனையாள்...இவர்களின் புரிதலையும், காதலையும் தன் தந்தையுடனான நட்பையும் கண்டு பிரம்மித்துப் போனான் ருத்ரேஷ்வரன்...

"நரேன் நிறுத்துடா உன்னோட ஜொள்ள, இப்பவும் காதல் வசனம் பேசியே கவுக்கறடா நீ" எனக் கேலிச் செய்தப்படி வந்தார் ஈஷ்வர் ...

"மாயாவதி மயங்கிறாதே, வேலை இருக்கு என்று சொன்னவன், இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கான், அப்போ ஏதோ சரியில்லை ... என்ன விசாரி ஃபர்ஸ்ட், இப்ப நான் ஒரு நாட்டாமை மோட் வந்திட்டேன் " என ஈஷ்வரும் அவரைக் கலாய்த்தார்...இப்போது புரிந்தது ருத்ரனுக்கு, ஏன் அப்பா தைரியமாகச் சில விஷயங்கள் கடந்து வருகிறார் என்று...இந்த அளவுக்குப் புரிதலும் அன்பும் கிடைத்தால் எத்தனை கஷ்டங்களையும் கடந்து வர முடியும் தான்...அங்கே எந்தப் பேச்சு இல்லாமல் நடப்பதைப் பார்த்தபடி உணவு உண்டான் ருத்ரன்...நரேனோ, உங்களிடம் சொன்னாளா மாயாவதி? ஈஷ்வர். என்ற அவர் கேள்விக்கு, என்ன என்று தந்தையும் மகனும் அவர்களைப் பார்த்தனர்.

“நாங்க, பசங்களிடமே செல்ல முடிவு எடுத்து இருக்கோம் ஈஷ்வர், அதுதான் இங்க இருக்கும் தொழில்களெல்லாம் செட்டில் பண்ணத்தான் கொஞ்சம் நாட்களாகப் பிஸியாக இருக்கேன். எங்க வயதானக் காலம் பேரப்பிள்ளைகளோடு கழிக்கத்தான் ஆசைப்படறோம்” என்றான் நரேன்.“ரொம்பச் சந்தோஷமான விஷயம் இது. நல்ல முடிவை எடுத்து இருக்கீங்க” என்றார் ஈஷ்வர்.

இது சொல்லத்தான் வந்தேன் என்றாள் மாயாவதி. அதன் பின்னர் அவர்களின் உணவு முடிந்ததும் தங்கள் வீட்டிற்குச் சென்றனர் நரேன் தம்பதியர்...

தந்தையிடம் எந்த விதப் பேச்சும் இல்லாமல் தன் அறைக்குச் சென்று படுக்கையில் வீழ்ந்தான் ருத்ரன்...தன் சமநிலைத் தவறிப்போகக் காரணமானச் சூழலை, சிந்தித்த படிப் படுத்திருந்தவனுக்குத் அறை வாயிலில் தந்தையின் நிழல் வருவது தெரிந்ததும் உறங்கியது போல் விழி முடினான்...மெல்லப் படுக்கையின் அருகே வந்த ஈஷ்வர், மகனின் அருகில் படுத்தார்... கடந்து வந்த இத்தனை வருடங்களில் தந்தையின் இந்தச் செயல் அனைத்தும் அத்துப்படி, இருந்த போதும் இன்று தன் பொறுமையை இழந்து, முதல் முறைத் தன்னை வளர்த்தியவள் முன்னே தலைக்குனிந்து நின்றுவிட்டான்...தனிமையின் வலியைக் கடந்து வரவும், தன் கருத்த கடந்த காலம் தந்துச் சென்ற காயத்திற்கும் மகனின் அருகாமை மருந்தாகியது அவருக்கு...

நம்பிக்கையை

வாழ்ந்த வாழ்க்கையில் உணராமல்

சிதறிச்சென்ற சொல்லினால் மரணித்த

காதலை மீட்டெடுக்கும் காலம்

கடந்துவிட்டதை வலியோடு

உணரும் பொழுது இரு

துளி நீர்ச் சூடாக நனைத்து

சென்றது நீலக்கண்டேஷ்வரனின் கன்னத்தை.மெல்ல மகனின் அருகாமை அவரை நிலைப்படுத்தியது.

அவனைத் தொந்தரவு செய்யாமல் அவன் அருகில் படுத்தவர் சிறிது நேரம் அவன் முகத்தையே பார்த்தார், ஒரு புன்னகை இதழில் தோன்ற மெல்லக் கண்களை மூடி உறக்கத்திற்குச் சென்றார்.அருகே துன்பங்களை மறந்து ஆழ்ந்து உறங்கும் தந்தையின் மனதைப் புரிந்துக் கொண்டவனுக்கு இன்றைய தினம் அவர் மனதை இந்த அளவுக்கு வேதனைப் படுத்தி இருக்கக் கூடாது எனத் தோன்றியது.இந்தக் கண் மண்ணுத் தெரியாமல் வரும் கோவத்தைக் கண்ட்ரோல் பண்ணனும் ருத்ரன் என மனதில் சபதம் எடுத்தவன் தந்தையின் அன்பில் மெல்லக் கண் அயர்ந்தான்.

என்றும் மனிதனைப் புதியதாக உணர வைக்கும் இந்தக் காலை வேளையில், தன் நேற்றைய கசடுகளை மனதில் இருந்து களைந்துப் புதிய பிறப்பாகக் கண் விழித்தான் ருத்ரன்.தன் அருகில் தந்தையைக் காணாது எழுந்தவன் மனதில் 'முதலில் அவரிடம் போய் மன்னிப்பைக் கேட்கனும்' என்று நினைத்தான். தன் காலைக் கடமைகளை முடித்தவன் அவரைக் காண வந்தான்.

வரவேற்பறையில் ஒரு கையில் காபிக் கோப்பையோடு, மற்றொரு கையில் செய்தித்தாள் வைத்து அன்றைய செய்திக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்...அவர் அருகே வந்து அமந்தவன் அவர் தோளில் சாய்ந்தப் படி "சாரி அப்பா, நான் நேற்று அப்படிப் பேசி இருக்கக் கூடாது, ஆனால் அதற்குக் காரணம் நான் இல்லை, உங்க செல்ல மகன் தான் காரணம், என்று நேற்றைய தினம் நடந்த சம்பவங்கள் கூறினான். அவன் தவறாக நடந்துக்கொண்டான் என்பதற்காக, அவனை விட்டுவிட்டு உங்களிடம் வந்து என் கோபத்தைக் காட்டியது தவறுதான்" என்றவன் மீண்டும் தன் மன்னிப்பைக் கேட்டான் ருத்ரன்.மகன் சொன்னதை எல்லாம் கேட்டவருக்கு இதழ்களில் ஒரு புன்னகை வந்து அமர, அவன் சொன்னது மாயாவை இல்லை, நம்ம நாலுப் பேரைத் தான், ஆனால் அவனுக்கு அவன் பேசிய வார்த்தைகளின் கணம் புரிய வில்லை ருத்ரா, நீ அப்படி இல்லை அவனை விடப் வயதில் பெரியவன், அது மட்டும் இல்லாமல் நீ வளர்ந்து வரும் ஒரு கம்பெனியின் முதலாளி என்பதை மறக்காதே" என்றார்..." ஒரு தொழிலதிபருக்குத் தேவையான முக்கியமான பண்பு என்ன தெரியுமா? நம் எதிரில் இருப்பவன் எண்ணங்களுக்கு ஏற்றது போல், நமது செயல் இருக்கக் கூடாது ... வலிக்க வேண்டும் என்று தாக்குபவனிடம் வலியைக் காட்டினால், அவன் வென்றதை நாமே உறுதிச் செய்தது போல் ஆகிவிடும். வலிச்சாலும் அதை வெளிக் காட்டாமல் இருக்கனும் புரியுதா" என அறிவுரைக் கூறியத் தந்தையின் கூற்றில் சரியென்று தலையை அசைத்தவன் "நீங்க சொன்னது சரித்தான் அப்பா, ஆனால் காதலிலும் ,பாசத்திலும் நீ அடித்தது வலிக்கிறது என்பதைப் பதிவுச் செய்தால் தான், நமக்கான வலி நிவாரணிக் கிடைக்கும்" தாயிடம் உன் செயல் எனக்கு வலிக்கிறது என்று சொல்லியிருக்கனும் எனத் தந்தைக்கு அறிவுரை வழங்கினான் மைந்தன்..."அதற்கு முன் காதலில் பொறுமையும் நம்பிக்கையும் வேணும் டா" என அவனுக்குத் தந்தை என நிரூப்பித்தார்...தந்தையின் மனவேதனையை உணர்தவனுக்கு அம்மாவின் மேல் சினம் பிறந்தது... ஏன் இவ்வளவு அழுத்தும் அவங்களுக்கு, அப்படி என்ன தான் கோபம் இருந்தாலும், பல வருடம் வாழ்ந்தப் பாசமும் காதலும் இல்லாமலா இருக்கும், அவங்களை நேரில் பார்த்தால் கேட்கனும் என்று மனதில் நினைத்தான்...தாயைக் கண்டதும் தந்தைக்கு ஜால்டரா அடிக்கும் மனம், அப்படியே தாயின் பக்கம் திரும்பி விடும் என்று அறியவில்லை ருத்ரன்.இதைப் பற்றிய எந்த விஷயமும் தந்தையிடம் வெளிபடையாகப் பேச விரும்பவில்லை ருத்ரேஷ்வரன்...அமைதியாகத் தன்னருகே அமர்ந்திருந்த மகனைப் பார்த்து "ருத்ரா எனக்கு ஒரு ஃபேவர் பண்ணுவியா" எனக் கேட்டத் தந்தையிடம்...

" சொல்லுங்க" என்று அவரையே பார்த்தான்...

"இன்னைக்கு 'ஆகாஷக்கங்கா கன்ஸ்ட்ரக்ஷன்' நீ போகனும்" என்றவரை வியப்பாகப் பார்த்தவன்.

"கண்டிப்பாக நான் போகனுமா? " என்ற ருத்ரன் கேள்விக்கு ... “ ஆமாம் நீ தான் போகனும்" என்றார்.மெல்ல அவரிடம் "ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தைரியம் ஆகாது மிஸ்டர் ஈஸ்வர் " எனறவனை முறைத்தார் அவன் அப்பா ..."அவங்க என்னைய பார்த்தால் என்ன ஆகும்? எனக் கேட்டவனிடம்..."அது தான் சொல்லறேன், உன்னைப் பார்த்ததும் அவங்களுக்கு என்ன ஆகும் நமக்குத் தெரியனுமா? வேண்டாமா? என்று புன்னகைத்தார் நீலக்காண்டேஷவரன் ."பெரிசா என்ன ஆகும், என்னயைக் கழுத்த பிடிச்சு வெளியே தள்ளுவாங்க" என்றவன்..."இந்த அம்மாவும் பையனும் என்னை விட்டால் கொன்றுப் புதைத்து விடுவார்கள். அவர்களின் பீபி ஏத்த வேண்டும் என்றால், நான் அவர்கள் முன் சென்றாலே போதும் போலையே " என்றவனின் வார்த்தைகளில் கேலி இல்லை, வேதனை மட்டுமே இருந்தது.

" அப்படி என்னப்பா, பண்ணீங்கத் தம்பியோடு இவ்வளவு காலமும் தனியாக இருக்காங்க. அம்மாவின் கோபத்திற்குக் காரணத்தைத் தான் சொல்லுங்களேன்" என்றவனை வலியோடு பார்த்தத் தந்தையிடம், எதுவும் கேட்க மனமில்லாமல் “ சரி நீங்க சொல்வதைப் பண்ணறேன்” என்றான் ருத்ரன்."ஆனாலும் சுத்தி வளைக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன் நீங்க ஆரம்பத்திலேயே பேசி இருக்கலாம்"...என்ற மகனின் முதிர்ச்சியான வார்த்தைகளில் தன்னவளின் நினைவு வந்தது நீலக்கண்டேஷ்வரனுக்கு."உன்னுடைய இந்த மெஞ்சூரிட்டி, உன் அம்மாவுக்கு இப்பவும் இல்லை ருத்ரா" என்றவர் "தொழிலில் வெற்றிப்பெற்ற நான், திருமண வாழ்க்கையில் கேவலமாகத் தோற்றுவிட்டேன், உனக்குச் சொன்னால் புரியாது"... என்றார்தோல்வியிலும் அவரது காதலே முதன்மையாக இருந்தது. காதலின் மற்றொரு அர்த்தம் புரிதல் தான் என்பதில் அசையாது நம்பிக்கைக் கொண்டிருந்தார் இந்த இரும்பு மனிதன். தன் மனைவியைப் பற்றிய நினைவுகளில் அவருக்கு இதழில் புன்னகை வந்து அமர்ந்தது.

அதே உணர்வில் "நீ போய் அவங்களைப் பாரு, அப்பறம் நடப்பதைத் தெரிந்துக் கொள்" என்றவர் அவன் கைகளில் தன்னவளுக்குப் பிடித்தமான பூக்களைக் கொண்டு உருவாக்கியச் பூச்செண்டைக் கொடுத்து, "அவங்களுக்கு இன்று பிறந்தநாள் ருத்ரா, இந்த வருடம் உன்னுடைய விஷ் கண்டிப்பாக அவங்களுக்குக் கிடைக்கனும்” என்றார் அழுத்ததோடு.அவரை அர்த்தப் புன்னகையோடு பார்த்தவன் "ஏதோ ப்ளான் பண்ணறீங்க மட்டும் நல்லாவே தெரியுது, நீங்க நினைக்கிறது எல்லாம் எப்பவும் சரியாக நடக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது" என்றவன் மேலும்

" நீங்க சொன்னதைச் செய்கிறேன், ஆனால் எனக்கு இன்றைக்கு முக்கியமான மீட்டிங் வேற இருக்கே!" என்றவனை முறைத்தார்..." உன்னுடைய ஸ்செடியூல்ட் எனக்கு எப்பவுமே அப்டூடேட் தான்ட, நான் சொன்னதைச் செய்” என்றார்.“ அனாலும் நீங்க என்னோட பி ஏ இப்படிக் கையில் போட்டுக்கொண்டு, எல்லா ரகசியமும் தெரிஞ்சக்கூடாது சொல்லிட்டேன், அதுக்குப் பதிலாக உங்க செல்லப் பிள்ளை என்ன பண்ணறான் தெரிஞ்சுக்கோங்க” என்றவனை முறைத்தபடி ” போடா அவனே ஒரு குழந்தை ” என்றவரைப் பாரத்து “ நீங்க அப்படியே நம்பீட்டு இருங்கள்” என்று சொன்னவன் அதன் பின் அவரிடம் பேசியது எல்லாம் தங்கள் தொழில் பற்றி விஷயம் மட்டுமே... தங்கள் காலை உணவை முடித்தவன் தன் தந்தையிடம் விடைப்பெற்றுச் செல்லும் போது தான் அவரைக் கவனித்தான் "ஆமா நீங்க இப்ப எல்லாம் சரியாக உங்க தொழிலில் கவனம் செலுத்துவது இல்லை போலையே" எனப் புருவம் உயர்த்தியவனைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தார் ஈஷ்வர்."ஆமாண்டா இந்தக் கட்டுமானத் துறையில் நீ இப்போது ராஜாவாக வலம் வந்திட்டு இருக்கே, உனக்குக் கீழே பார்த்தா என்னோட ஈஸ்வர் கன்ஸ்டர்க்ஷன் தான் இருக்கிறது, அடுத்தப் பத்தாவது இடத்தில் ஆகாஷகங்கா கன்ஸ்டர்க்ஷன் இடம் பிடிச்சு இருக்கு, இந்தத் தொழில் உலகத்தில் மத்தவங்களுக்கு இடம் தரணும் டா" என்று மறைமுகமாகத் தன் தொழில் துறையில், மெதுவாக ஒதுங்கப் போவதாக இருந்தது அவருடைய அறிவிப்பு.“இருந்தாலும் நம்முடைய தொழில் என்பது, நம்ம மட்டுமே இல்லையேப்பா, நம்மளை நம்பி எவ்வளவு குடும்பம் இருக்கிறது என்பதையும் நீங்க யோசிக்கனும்” என்றான் அவரின் மகன்.“புரியுது அதற்கு நான் பல யோசனை வைத்திருந்தேன், ஆனால் நீ தான் எனக்கு உதவி செய்ய மாட்டேன் சொல்லிவிட்டாயே " எனத் தந்தையின் அடையாளம் வேண்டாம் என்று, தொழிலில் தனக்கான புதிய பாதை அமைத்து வெற்றிப் பெற்றவனிடம், 'நீ நிராகரித்ததில் வருத்தம் இருக்கிறது' எனப் பதிவு செய்தார் அவனிடம்..."அப்பா உங்க வெற்றியின் அடையாளம் என்னை விட இன்னொருத்தனுக்குத் தான் ரொம்பத் தேவை, இன்னும் கொஞ்ச நாளில் அவனுக்குப் படிப்பு முடிஞ்சுரும், டிரைனிங்கு நம்முடைய கம்பெனிக்கு வர மாதிரி ஏற்பாடுப் பண்ணறேன் மத்தெல்லாம் நீங்க தான் சரி பண்ணனும் , அம்மாவிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் வராமல், அவனுக்கு என்னைப் பத்தி எதுவும் தெரியக்கூடாது, நான் என்ன சொல்ல வரேன் புரியுதா உங்களுக்கு?" என்ற ருத்ரனின் பாசம் புரியத் தான் செய்தது...என்ன இருந்த போதும் ருத்ரன் மேல் அவனுக்கு இருக்கும் பொறாமை, அவனை ஒன்றும் இல்லாததாக மாற்றிக்கொண்டு இருப்பதை, உறவுகளுக்குப் புரியும் போது காலம் கடந்திருக்கும்...காலம் எல்லாம் நிகழ்வுக்கும் தன்னிடம் பதில் வைத்திருக்கும்...

தன் தந்தையின் சொல்லுக்கு இணங்க, தன்னைப் பெற்றவளைக் காணப் போகிறான் ருத்ரேஷ்வரன்.தனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து 'கங்கா' தான் தன்னோட அம்மா என்பதைத் தந்தை மற்றும் மாயாவதியின் நட்பில் இருக்கும் நேர்மையில் புரிந்துக் கொண்டவன், இன்று வரை அதைத் தன் தந்தையிடம் அவன் கேட்டதில்லை...அவர் மனதில் எப்போது இந்தப் பிரச்சினைச் சரி பண்ணுவாரோ, அப்போது நடக்கட்டும் என்று தந்தையைப் போலப் பொறுமைக் காத்தான் ருத்ரேஷ்வரன்...சிறிய வயதில் பார்த்தத் தாயைப் பல வருடங்களுக்குப் பின் காணப் போகிறான், அவள் தன்னைப் பெற்றவள் என்று உண்மையை உணர்ந்தப் பின் காணப்போகும் முதல் சந்திப்பு, எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் பதட்டமும் மனதில் இருந்த போதும், எதையும் வெளிக் காட்டாமல் தன் கம்பீரம் எங்கும் குறையாமல் தாயின் இருப்பிடம் நோக்கிப் பயணித்தான்.தன்னைக் கண்டதும் அவர் மனதில் என்ன தோன்றும், பழையபடிக் குரோதத்தோடு அந்நியப் பார்வைப் பார்பாரா இல்லை, அந்தப் பார்வையில் தாயன்பிற்கு ஆனத் தேடல் இருக்குமா? எனப் பல வித எண்ணங்களில் அவன் கார் ஆகாஷகங்கா கன்ஸ்டர்க்ஷன் முன் நின்றது.இந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லாம் நீலகண்டேஷ்வரனின் நம்பிக்கைப் பாத்திரமானவர்கள் என்பதால் ருத்ரனுக்கும் அவருக்கான மரியாதைக் கிட்டியது. பார்க்கிங்ல் காரை நிறுத்தியவன் தாயைக் காண அவள் அலுவலக அறையை நோக்கி நிமிர்வோடு நடந்தான்.தொடரும் ...
 
Last edited:
Top