எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள்

santhinagaraj

Well-known member
வர்ணங்கள்

விமர்சனம்

சுபாவுடைய அப்பா அவளோட அம்மாவின் மருத்துவ செலவிற்காக வாங்கும் கடனுக்காக மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயந்தனை கல்யாணம் செய்து கொள்கிறாள்.

ஜெயந்தனின் பெற்றோர் அவளின் கல்யாணத்துக்கு முன்னாடியே ஜெயந்தனுக்கு குணமாகிவிட்டால் அவனை விட்டு விலகி விட வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் கல்யாணம் செய்து வைக்கின்றனர். ஜெயந்தன் சுபாவுடைய அரவணைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வரும் நிலையில் முழுசாக குணமடைந்து அவளை உணரும் முன்னே ஜெயந்தனிடமிருந்து பிரித்து அவளை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுகின்றனர்.

கடனுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் சுபாவுக்கு ஜெயந்தன் மீது ஆழமான காதல்இருக்கு.சுபா வெளிநாட்டிற்கு சென்ற பிறகுதான் அவளுடைய வயிற்றில் குழந்தை இருப்பது பெரியோர்களே அதைப் பற்றி ஜெயந்தனோட பெற்றோருக்கு தெரியாமலேயே குழந்தை பெற்று வளர்த்து வருகிறாள்.

நினைவு இல்லாத நிலையில் சுபாவுடன் வாழ்ந்தாலும் அவனுடைய உள்ளுணர்வில் சுபா கலந்து இருக்கிறாள்.

இப்படி இருக்கிற நிலையில் சுபாவிற்கு பிரணவையும்,ஜெயந்தனுக்கும் சாயாவையும் அவங்கவங்க வீட்டில மறுமணம் செய்து வைக்க முயற்சி பண்றாங்க.
மறுமணம் முயற்சி என்ன ஆகிறது சுபாவிடம் காதலும் ஜெயந்தனோட உள்ளுணர்வும் அவர்களை இணைத்து இணைத்து வைக்கிறதா என்று கதையை ரொம்ப விறுவிறுப்பா நகர்கிறது.

சதீஷோட கேரக்டர் ரொம்ப நல்லா இருந்தது.

ஜெயந்தனோட அம்மா அப்பாவிற்கும் பிரணவிற்கும் அவங்களுடைய தப்பை புரிய வைத்து இருக்கலாம்.

நடுவுல ஜெயந்தன் சாயா ரெண்டு பேரு கல்யாண விஷயத்துல கொஞ்சம் தேங்கின மாதிரி இருந்த கதை கடைசில ரொம்ப வேகமா முடிச்சிட்ட மாதிரி இருந்தது இன்னும் கொஞ்சம் பொறுமையா தெளிவா குடுத்து இருந்தா நல்லா இருந்திருக்கும்

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top