எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள்

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#வர்ணங்கள்

தலைப்பு தான் முதலில் ஈர்த்தது, அடுத்து கதைக்களம்…..

சுபா, தன் ஆறு வயசு பெண் குழந்தை & அவ அம்மா கூட சிங்கப்பூர்ல கட்டுமான கம்பனியில் வேலையில் இருக்கா…..

நல்ல வேலை, கண்ணுக்கு நிறைவான பிள்ளைனு இருந்தும் ஏதோ ஒரு சோகம்…..

அது கணவனை எண்ணி…..

அளவில்லா காதல் இருந்தாலும், சேர்ந்து வாழ முடியா சூழல்…..

பள்ளி படிப்பை முடிச்சி இருந்த சிறுமி சுபாக்கு, பெற்றோர் கழுத்தில் கத்திய வெச்சி திருமணம்…..

அதுவும் மனநல சரி இல்லா ஜெயந்தன் ஓட……

மனநலம் சரி இல்லைனா, சில சம்பவங்களால் மனநல பாதிக்க பட்டு இருக்கு…..

சுபாவின் வெகுளி பேச்சில், எதிர்பார்பில்ல அன்பில் அவனும் சுய நினைவு அடைய….

அச்சமயம், இனி நீ தேவை இல்லைனு விரட்டி அடிக்க படற அவனின் பெற்றோரால்……

அவர்கள் செய்த ஒரே நல்லது, சொந்தக்காலில் நிற்க படிப்பை தந்தது தான்…..

ஜெயன், சரியான பின்னால் அவனின் நினைவுகளை ஆக்கிரமிக்கும் கனவு கண்ணியாய் சுபா……

சில பல நேச நினைவுகள்…..தெளிவில்லை முகம்…..

இவர்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன??????

சுபா, கட்டாயத்தில் கல்யாணம் செய்தாலும் அவளோட அளவில்லா நேசம் தான் ஜெயனை பழைய நிலைக்கு மீட்டு வருது….

தன்னம்பிக்கையாய் நிமிர்ந்து நின்றது சூப்பர்…..

ஜெயன், உணர்வுகளின் வழியே உணரும் சுபாவின் நேசம், வெறும் தெளிவில்லா நினைவுகலாய்…..

யாருனு தெரியும் முன்பே அவனின் உரிமை உணர்வு செம்ம கியூட்….

தியா, சுபாவின் பெண்….ஜெயனுக்கும் தியாக்கு வரும் பாண்டிங் செம்ம…..

எழுத்து பிழைகள் பாருங்க ரைட்டர் நிறைய இருக்கு…..

கதைக்களம் எனக்கு ரொம்பவே பிடிச்சது, இன்னும் ஜெயன் சுபா பத்தி எழுதி இருக்கலாம்னு தோணுது…..

சாயா கதையை குறைச்சிட்டு இவங்களை பத்தி, அவங்க பாஸ்ட் லைஃப் அப்படினு இன்னும் சொல்லி இருக்கலாம்னு தோணுது…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Top