எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நாட்பூத்த நன்மலர்

santhinagaraj

Well-known member
நாட்பூத்த நன்மலர்

விமர்சனம்.

ரொம்பவும் எதார்த்தமான ஒரு பீல் குட் ஸ்டோரி.

முதல்ல எழுத்தாளருக்கு ஒரு பெரிய பாராட்டுக்கள்👏👏👏
ஒரு குறுநாவல்ல இவ்வளவு காட்ட முடியுமா என்று யோசிக்கிற அளவுக்கு காட்டி இருக்காங்க.

மருதசெழியன், தந்தை கோமாவிற்கு சென்று விட குடும்ப பாரம் இவன் தலையில் விழ வேலையும் இல்லாமல் அடுத்து என்ன செய்வது என்ற கவலையோடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் போது தனது தோழியான மதியை சந்திக்கிறான். இவர்களைச் சுற்றி கதை நகர்கிறது.

மதி டெபுடி கலெக்டர் உயர் பதவியில் இருந்தாலும் இவளோட கணவன் கபிலனோட இவ வாழ்க்கை நிலை சரியில்ல இருவருக்கும் டைவர்ஸ் கேஸ் நிலுவையில் இருக்கு இவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா.

செழியனோட அப்பாவுக்கு ட்ரீட்மென்ட் பார்க்கும் மருத்துவன் இவனோட மனைவி சுபா இருவருக்கும் குழந்தை இல்லை, இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு

மனோ செழியனோட நண்பன் தனது மனைவியை இழந்து ஐந்து வயது மகனோட இருப்பவன்.

வேல்விழி தனது காதல் கணவனை இழந்து தவிக்கிறவ. வேல்விழி தனது காதலுக்கு சுயநலமா இவை எடுக்கும் ஒரு முடிவு மூன்று குடும்பங்களில் பெரிய பிரச்சனை ஏற்படுத்துகிறது.

வறுமை, பணம், பதவி, நல்ல தொழில் எல்லாம் இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கு.
ஒவ்வொருத்தரும் தங்களோட பிரச்சனையை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதை ரொம்ப அருமையா எதார்த்தமா சொல்லி இருக்காங்க ரைட்டர்.

செழியன், மதி, மனோ இவங்களோட நட்பு ரொம்ப அருமை.👌👌
இளவரசி செழியன் மெல்லிய காதல் நல்லா இருந்தது 👌👌

மதியோட அம்மா நடத்தும் நிறைவகம் அங்கு உள்ள முதியவர்களின் உணர்வுகளை எடுத்துக்காட்டி பெற்றவர்களை ஒதுக்கி வைக்கும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லும் விதமாக ரொம்ப நிறைவாக இருந்தது 👏👏

எல்லா கேரக்டர்களையும் ஒருவரோடு ஒருவர் பிணைத்து ஒவ்வொரு உறவும் எவ்வளவு முக்கியமானது என்றும் நமக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நம்மை சுற்றி இருக்கும் நம்மளோட நட்புகள் நல்லா இருக்கணும்னு நினைக்கிற உண்மையான நட்பயும், ஒருத்தர் சுயநலமாக எடுக்க முடிவு அடுத்தவங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் காலம் பதில் அளிக்கும் என்பதையும் ரொம்ப அருமையாக விளக்கி இருக்காங்க.

அருமையான எழுத்து நடை வாழ்க்கை பாடதை கற்றுக் கொடுக்கும் ஒரு அருமையான கதை சூப்பர்👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top