எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாலையிட்ட பந்தம்

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK100
#மாலையிட்டபந்தம்
நறுமுகை தளத்தின் போட்டி கதைகள்..
சத்தியமூர்த்தி வாஞ்சிநாதன் தாய் தந்தையர் இல்லாமல் அண்ணன் தம்பிகள் ஒருவருக்கு ஒருவர் துணையாக அன்பாவும் பாசமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.. அண்ணனுக்கு திருமணம் முடித்து வைக்க நினைக்கும் வாஞ்சிநாதன் அதற்கான ஏற்பாடுகளை செய்ய திருமணத்தன்று தன் மனம் விரும்பியவனுடன் சென்று விடுகிறாள் மணமகள்.. திருமணத்திற்கு வரும் மணமகளின் சித்தப்பா மகள் சத்தியவாணி திடீர் மணமகள் ஆகிறாள்.. பெற்றவர்களுக்காக ஒப்புக்கொண்டாலும் மனம் நிறைய கோபம் அவளுக்கு படிப்பில் சிறந்து விளங்குபவள் படிக்க வேண்டும் தன் குடும்பத்தை உயர்த்த வேண்டும் பொருளாதாரத்தில் என்ற லட்சியம் கொண்டவள்.. இவர்களின் வசதி வாய்ப்பைக் கண்டதாலும் திடீர் மணமகள் ஆனதாலும் ஆரம்பத்தில் கடுகாக பொறிபவள் அண்ணன் தம்பி இருவரும் இவள் மேல் கொண்டுள்ள அக்கறையால் போக போக அவர்களின் மீது இவளுக்கும் பாசம் ஏற்படுகிறது.. தன்னவனின் மீது காதலும்.. வாஞ்சிநாதன் தன் அண்ணியை அன்னையின் ஸ்தானத்தில் வைத்திருக்கிறான்.. இவனுக்கு மனைவியாகிறாள் ஆதிரை.. சத்தியவாணியின் தங்கை சத்தியமூர்த்திக்கு ஊரில் கிடைக்கும் மரியாதை தன் கணவனுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்து பிரச்சனையை ஏற்படுத்துகிறாள் குடும்பத்தில்.. இவளால் குடும்பம் உடையும் நிலை ஏற்படுகிறது.. சத்தியவாணி மற்றும் ஆதிரையின் பெற்றோர் யாருக்கு ஆதரவாக இருந்தார்கள்... என்ன ஆனது இவர்களின் வாழ்வு என்பது கதையில்.. சுவாரஸ்யமாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏
Good luck 🥰🌹💐
 
Top