எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

Teaser

subasini

Moderator
ஒரு விஷயம் மறந்துட்ட , அவள் கல்யாணம் பண்ணறதே நம்ம ஆருயிர் தோழன் தான் என்பதை மறந்துறாத ”

என்றான் .

தன் சினத்தைக் கட்டுப்படுத்தியபடி .இப்படித் தன் சினத்தையும் , பிடித்தமின்னமையும் வெளிப்படுத்தும் நண்பனிடம்"எதுக்கு இந்தக் கோபம் உனக்கு , அவள் எனக்கு அத்தைப்பெண் மட்டுமல்ல, உன்னோட தங்கச்சி என்பதை மறந்து வார்த்தைகளை விடாதே சொல்லிட்டேன் , இந்தக் கல்யாணத்தில் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை..

அதே போல் அவங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை . அப்பறம் உனக்கு ஏன்டா இவ்வளவு கோபமும் டென்ஷனும். இது தேவையில்லாதது தருண் . இந்தக் கல்யாணம்‌ நடக்கனும் சொல்லப் போனால். உனக்குத் தான் எதுவும் புரியவில்லை" என்றான் ஆழ்ந்த அமைதியான குரலில்

அதன் பேதம் உணர்ந்தவன்."அவள் வேற ஒருத்தனைக் காதலிக்கிறேன் சொல்லி , இந்தக் கல்யாணம் நிறுத்தி இருந்தால் கூட எனக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது , வேண்டாம் சொன்னது கூட ஒகே தான் டா ,ஆனால் அதுக்கு ஒரு காரணம் சொன்னாப்பாரு அது தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கதிர் ".இதைக் கேட்டதும் " ஓ, அது தான் உனக்கு இவ்வளவு கோபமா ? " . என்றவாறே சத்தமாகச் சிரித்தான் கதிர் வேந்தன் ." விடுடா மச்சான் பார்த்துக்கலாம்" என்றவனை."எப்படி , கல்யாணம் பண்ணி ஹனிமூன் எங்கே போறாங்க என்பதையா " . என்ற தருணிண் குரலில் எரிச்சல் நிறைந்திருந்தது .அதைக் கேட்டதும் கதிருக்குத் பழைய நினைவுகள் மெல்ல ஆனந்த ராகம் மீட்டியதில் அவன் மனக்கண்ணில் 'கலைந்த உடையோடு‌, தன் உணர்வுகளை ஏற்க முடியாமல், கண்களில் நீரோடு தன்னிடம் போராடியவளின் உருவம் தோன்றியது.அவனிடம் எதிர்த்து அவள் போராடிய விதம் , அவனுக்கான கூடலின் அழைப்பாகத் தான் அவனுக்குத் தோன்றியது.ஒரு கட்டத்தில் அவளின் நிலையை உணர்ந்து இதழில் புன்னகையோடு அவளை விட்டவனிடம் அவள் கூறிச் சென்ற வார்த்தைகள் இன்னும் காதில் எதிரொலிக்கிறது.'இதற்குத் தானடி இத்தனை நாளாகக் காத்திருந்தேன் . இனி என்னிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்' என முணு முணுத்தவன் செயலில்."என்னடா , எதாவது ப்ளான் இருக்கோ கல்யாணத்தை நிறுத்த "என்றான் தருண் .இவன் வேற, என்று மனதில் நினைத்தவன் "ஏன்டா நீ " என்ற‌படி "நாம‌ நாளைக்குக்கிளம்பறோம் அவ்வளவுதான்" என்று பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் கதிர் வேந்தன் .மனதில் பல எண்ணங்களின் அலை மோத நாளைய விடியலுக்காகக் காத்திருந்தான்‌ நம் நாயகன் கதிர்வேந்தன்எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை உருவாக்குவது காதல் .அவனைப் புதிய மனிதனாக உருவாக்கியது அவளும், மனதில் அவளுக்கான காதலும் தான். அவளின் நினைவுகள் மனதில் வலம் வரவும் , குற்றாலச்சாரல் போல் தோன்றிய , சில்லென்ற உணர்வுகளை அனுபவித்தவாறே , தன் இடபக்க மார்பைத் தடவியவன் , ' என்னை நியாபகம் இருக்குமாடி உனக்கு ?, மறந்து இருக்க வாய்ப்பில்லை தான், நமக்குள் நடந்த விஷயம் அப்படி , இல்லை என்னிடம் சொன்னது போல அந்த விஷயத்தையும் மறந்து இருப்பியோ' என்று தனக்குள்ளே பல கேள்விகளைக் கேட்டவன் , பின் மெதுவாக ‌ அதற்கான பதிலாக , 'அதெப்படி மறப்பாய்' என்ற புன்னகையோடு படுக்கையில் அவள் நினைவுகளோடு புரண்டான். கண்களிலிருந்து உறக்கம் விலகிச்செல்ல, காதல் மயக்கம் அவனை ஆட்கொண்டது.
 
Last edited:
Top