எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

KK -6

subasini

Moderator
களவு - 6காதல் என்பது கனவு , கல்யாணம் என்பது வாழ்க்கை... காதலித்தவனையே கணவனாக வாழ்க்கைப் பயணத்தில் உடன் வருவது வரமல்லவா… அந்த வரம் கிடைக்கமா என்ற கேள்வி மனதில் எழும் போது ... 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் ஏது'தனசேகரனின் மகள் என்று அறிந்தால், தன் காதலை மறுத்து விடுவாரோ என்ற எண்ணமும், அவன் மேல் இருக்கும் பயமும் நெருங்க முடியாமல் தடுத்தது.‌‌மாயாவதி மகனைக் காணச் செல்வதை அறிந்தப் போதும் அவள் கூடச் செல்லவில்லை.

மனதில் இடம் பிடித்த பின்னரே அவன் முன் செல்ல எண்ணியவள், அதனை எப்படிச் செயல் படுத்துவது என்ற திட்டத்தை எல்லாம் வரிசைப் படுத்தினாள். அதை அடுத்த நாள் முதல் அமுலுக்குக் கொண்டு வர தீர்மானித்தாள்.அவனை நேருக்கு நேர்ப் பார்ப்பதில் அவளுக்கு எப்பொழுதும் பயம் தான். அவனைக் கண்டாலே அவள் சப்தநாடியும் உறைந்து அப்படியே சிலையென நின்று விடுவாள்.. "யாத்ரா நான் கோவிலுக்குப் போறேன் வருகிறாயா?" எனக் கேட்ட அத்தையிடம் இல்லை என மறுத்தவள் அறையில் போய்ச் சரணடைந்தாள்...அவளுக்குத் தன் காதலை எப்படி அவனிடம் கொண்டு செல்ல என ஆலோசிக்க வேண்டி இருந்தது ..."சரி நான் வர லேட் ஆகலாம், மாமா வந்தா டீ வைத்துக் கொடுத்துரு " என்றவள் அலைப்பேசியில் ருத்ரனுக்கு அழைத்து அவனை வருமாறுக் கூறியவர், கோவிலை நோக்கிப் பயணப்பட்டாள்...கோவிலில் பிராகாரத்தைச் சுற்றிச் சாமிச் தொழுதியயவள் பின் வந்து அமைதியாக அமர்ந்திருந்த மாயாவதிக்கு மனம் அமைதி இல்லாமல் தவித்தது.தன் உயிர் தோழனின் வாழ்க்கை இப்படித் துன்பத்தில் பயணிக்க, அதற்கு முடிவு இல்லாமல் போவதைக் கண்டு எப்பொழுதும் போன்று இறைவனிடம் முறையிட்டாள் மாயாவதி.அந்த இறைவனோ அவளைப் பார்த்துக் கேலியாக 'மனிதனின் ஈகோவிற்கு முன் நான் ஒன்றும் செய்ய இயலாது' எனக் கூறுவது போல் தோன்றியது.இப்படித் தன்னில் சிந்தித்து இருந்தவளின் சிந்தனைக் கலக்க வந்தான் வளர்ப்பு மகன் ருத்ரன் … அவன் வரும் அழகைக் கண்டவள் ருத்ரனுக்கும் யாத்ராவுக்கும் இடையே பொருத்தம் மனதில் நினைத்துப் பார்ததவளுக்கு

இது நடக்காது என்றதும் மனதில் வருத்தம் தான் வந்தது ...யாருக்கு யார் என்று அந்த இறைவனுக்குத் தான் தெரியும் என்று மனதை அமைதிப் படுத்தியவள் ருத்ரனைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்தினாள் ...மெல்ல அவள் அருகில் அமர்ந்த ருத்ரனிடம் போய்ச் சாமிக் கும்பிடு என்றதும் " நீங்க சாமிக் கும்பிட்டாச்சு இல்ல அதுவே போதும் , அவருக்கு எல்லா வழியிலும் அழுத்தம் குடுக்கக் கூடாது , ஆண்டவனே ஆனாலும் தட்டிக் குடுத்துத் தான் வேலை வாங்கனும் " எனக் கண் சிமிட்டும் மகனை முறைக்க முயன்றுத் தோற்றப்போனாள் மாயாவதி.

மாயாவதியின் முகத்தில் தோன்றியப் பாவனையில் கவரப்பட்ட ருத்ரன் அவள் நெற்றியில் தன் தலையை முட்டி விளையாடினான் ... அவன் விளையாடியதில் ருத்ரனின் நெற்றயில் அவள் திருநீறுக் கோடு அழகாகத் தன் தடத்தைப் பதித்தது...இந்த நிகழ்வைப் பார்த்தப் படி அங்கே வந்த கங்காவிற்குக் காலையில் தோன்றிய இன்பமும் ஆனந்தமும், இந்த நொடியில் வேரறுத்துக் காற்றில் பறந்து போன பட்டம் போல் காணமல் போனது ...அவள் அடிவயிற்றில் ஒருவிதமான வலி ஏற்பட அவளுடைய நடைத் தடைப்பெற்றது ... தூணைப் பிடித்த படி நின்றவளை முதல் முதலில் பார்த்தது ருத்ரன் தான்..."அம்மா" என்று அழைத்த படி அவள் அருகே வந்தவன் அவளைத் தன் தோள் வளைவில் நிறுத்தினான்...

அவனைத் தொடர்ந்து வந்த மாயாவதியும் கங்காவைப் பார்த்துப் புன்னகைத்தாள்...

ஓரளவிற்குச் சுயம் பெற்றவள் , நீலகண்டேஷ்வரன் மனைவியாகக் கம்பீரமாக மாயாவை எதிர் கொண்டு பதிலுக்குச் சிரித்தாள்...அப்பொழுது மாயாவின் அருகில் வந்த ருத்ரன் மாயாவதியிடம் "இன்னைக்கு அம்மாவோட பிறந்தநாள்" என்றான்.

" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கங்கேஷ்வர் " என்று ஆழ்ந்து நோக்கியபடி வாழ்த்துக் கூறிய மாயாவின் செயலில் தடுமாறியக் கங்காவின் கண்கள் சிவந்தது ...கன்னம் இந்த வயதிலும் சூடேறியது நாணத்தால் அதை அவதானித்தனர் ஒருவருக்கொருவர் புரிந்தது போல் கண்களில் சிரிக்க ருத்ரனும் மாயவும் தூரத்தில் ப்ரனவ் வருவது பார்த்ததும் " சரி நாங்கள் கிளம்பிறோம் " என்றனர்...அவன் இந்தச் சூழலில் தன்னைப் பார்த்தால் நன்றாக இருக்காது , அது மட்டும் இல்லாமல் கோவிலில் எந்த ரசபாசமும் வேண்டாம் எனத் தெளிவாக நினைத்தான் ருத்ரன் , அதனால் மாயாவதியை அழைத்து அங்கிருந்து சென்றான்...கங்காவோ செல்லும் ருதர்னின் கை மாயாவதியைத் தோளோடு அணைத்திருப்பதை அமைதியாகப் பார்த்தப் படித் தலையை மட்டும் அசைத்து விடைக் கொடுத்தாள்...தாய் நிற்பதைப் பார்த்த ப்ரனேஷ்வரன் வேகமாக வந்தான் ... கங்காவிடம் எதோ பேசியபடி மாயவும் ருத்ரனும் சென்றதும் , கண் கலங்க முகம் சிவக்க நிற்கும் தாயைப் பார்த்தவன் , தவறாக நினைத்துக் கொண்டான் மனதில்...அதனால் அவனுக்கு ருத்ரன் மேலும் மாயாவின் மேல் வன்மம் தோன்றியது ... எதுவுமே அறியாது ருத்ரன் மாயாவிடம்.."எதாவது பண்ணி உங்கள் நண்பனை இனி சரி பண்ணனும் , பாருங்க அம்மா ரொம்ப எமோஷனல் ஆக இருக்காங்க, அவங்கள ஈஸியாகப் புரிய வைக்கலாம், இவரு தான் ரொம்ப அவங்களக் கொடுமைப் பண்ணறாரு நினைக்கிறேன் " என்றவன் மேலும்" அவங்க முகம் பார்த்தீங்களா எவ்வளவு அழகாகச் சிவக்குது , ஆமா ஏன் கங்கேஷ்வர் சொன்னா இவ்வளவு எமோஷனல் ஆகறாங்க " என்றவனைப் பார்த்து முறைத்தாள் மாயாவதி..." அடேய் அடங்குடா , உன் அம்மாவைப் பார்த்ததும் இப்படி மாறிட்ட , இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் "" கங்கேஷ்வர்னு அவளை , ஈஷ்வர் மட்டும் தான் கூப்பிடுவான் , அவங்க ப்ரெசனல் , அவளைச் சமாதானம் படுத்த நீல் அடிக்கடிச் சொல்லுவான், நான் கேட்டு இருக்கிறேன் அது தான் கூப்பிட்டேன்"..

" ஈஷ்வரை மிஸ் பண்ணறாளா என்று தெரிஞ்சுக்க அப்படிக் கூப்பிட்டேன் , பாவம் ரொம்ப எமோட் ஆகிட்டா " என்றவள் மறக்காதுத் தன் நண்பனுக்கு ஆதரவுத் தந்தாள் மாயாவதி.

"ஈஷ்வர் எவ்வளவு தடவை அவளைப் புரிய வைக்க முயற்சி பண்ணினான் தெரியுமா ? அவ மசியவே இல்லை , உன்னைப் பார்த்ததும் தான் அவளுக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பிக்குது , இதுலையும் உங்கப்பா, தானே முயற்சிப் பண்ணி இருக்கான் என்பதை மறக்காதே" ..." உன் அப்பா தான் உன்னைக் கங்காவைப் பார்க்க அங்கே அனுப்பினான் நியாபகம் இருக்கட்டும், அப்பறம் நீயும் ஆரம்பத்தில் தவறாக நினைச்சுட்டு இருந்த , கொஞ்சம் விவரம் வந்ததும் உனக்கு எல்லாம் தெளிவாகப் புரியுது , எவிடென்ஸ் வச்சுக்கிட்டுச் சுத்துவதற்கு வாழ்க்கை என்ன சினிமா வாடா " என அழகாக வாழ்க்கையில் நம்பிக்கை என்பது உணரப் பட வேண்டியது என இந்தத் தொழிலதிபனுக்குப் புரிய வைத்தாள்." காதல் , பாசம் எல்லாம் புரிதல் தான் ருத்ரன் " என்றதும் அவனும் 'ஆமாம்' எனத் தலை அசைத்தபடி அவளை வீட்டில் விட்டவன் " உங்க காரை, ட்ரைவர் கொண்டு வருவாரு , நான் சொல்லிட்டேன் , அப்பறம் பார்கலாம் மாயாம்மா " என்றவன் தனக்கு வேலை இருப்பதாகக் கூறி

வீட்டின் உள்ளே கூட வராமல் சென்றான்.இதையெல்லாம் மேலே இருந்து பார்த்த யாத்ராவிற்கு உடல் நடுங்கியது. அவரைப் பார்த்தால் இப்படி உடம்பு நடுங்குதே ...' நான் எப்படி அவரிடம் ‘என் லவ்வைச் சொல்லி , காதலித்து , கல்யாணம் பண்ணி , ஒரு பேபிக்கு மம்மி ஆகி அப்பப்பா , யது பேபி யோசிக்கும் போதே இவ்வளவு கஷ்டமாகிருக்கே ... ம்கும் நீ மம்மி ஆகறது எல்லாம் ரொம்பக் கஷ்டம்’ எனத் தனக்குள் பேசியவள். நாளைக்கு என்ன ஆனாலும் சொல்லியே ஆகனும் என மனதில் சபதம் எடுத்தவள், “ஒரு தென்றல் புயலாகி வருதே,

காதல் கடிதம் கையில் ஏந்தி வருதே” எனப் பாடியப் படிப் பேப்பர் எடுத்து அவள் எழுதினாள் ஒரு கடிதம்.மார்கழிக் குளிர் இரவில்

ஈரக்காற்றையெல்லாம் வைரமென

பொதிந்துக் கிழக்கே வரும்

தன்னவனுக்காகக் காத்திருந்தாளாம்

புல் மேலே பனிதுளியாக...

கதிர்களால் தன்னவளைக் களவாடிக்

கொள்வானாம் ஆதவன், நீயும்

பருவமெய்தியப் பொழுதிலிருந்துக்

காதலோடு காத்திருக்கும்..

என்னைக் காதலோடு களவாடுவாயா?

பனித்துளியென நானும்

இதோ உன் yaara ...

என ஆங்கிலத்தில் தன் பெயரைக் குறிப்பிட்டு இருந்தாள் ...அதில் தன் புகைபடத்தில் இருந்து கண்களை வெட்டியவள், அதில் தன்னவனுக்கான காதல் தெரிந்ததை அவளால் உணர முடிந்தது ...அதை அவன் உணருவானா என்ற கேள்வியோடு , தன் கண்ணகளை மட்டுமே வெட்டி அந்தக் கடிதத்தில் ஒட்டியவள் ... அதை அழகான கவரில் வைத்தாள் அந்தக் கவரிலும் அவள் கை வண்ணம் இருந்தது..தன்னவனுக்காக அவளே செய்தது...இந்தப் புகைபடத்தை அழகாகப் பல கோணங்களில் எடுத்துத் தனக்குப் பரிசளித்த தன்யாவை இந்த நேரத்தில் மனதாரப் பாராடினாள் ... அவள் தான் தன்னை இந்த அளவுக்கு அழகாகப் படமெடுக்க முடியும் என்று மனதில் நினைத்ததும் புன்னகை ஒன்று பிறந்தது அவள் இதழ்களில் ...மிகுந்த மனதிருப்தியுடன் நாளைய பொழுதிற்காகக் காத்திருந்தாள் யாத்ரா. விடியல் என்பது என்றும் புதுமைகளின் பிறப்பிடம் ... இருண்ட வானில் தன் வர்ணஜாலங்களை நிகழ்தியபடிக் கிழக்கே உதித்தான் சூரியன்...

தன் அறையில் காலை வெயிலில் வெப்பம் உணர மெல்லக் கண் விழித்த யாத்ராக்கு இன்றைய நாளில் தன் காதலின் அடுத்தக் கட்டதிற்குப் பயணமாகும் நாள் என்பதால் வேகமாக எழுந்தவள் மிகவும் உற்சாகமாக இருந்தாள்...இன்றைக்குத் தன்னவனிடம் மனதைத் திறக்கப் போகிறாள் , அடையாளத்தை மறைத்துத் தன்னை மறைத்துத் தன் காதலை வெளிபடுத்த போகிறாள்...எப்பொழுதும் போலவே வகுப்பை முடித்தவன் தன் உடமைகளை ஒய்வறையில் வைக்கச் சென்ற போது அவன் மேசையின் மேல் ஒரு கவர் இருப்பதைக் கண்டவன், நெற்றிச் சுருங்கச் சுற்றி யாராவது இருக்கிறார்களா! எனப் பார்த்தவனுக்கு ஏமாற்றமே இருந்தது...யாருமே கண்களுக்குப் படவில்லை...யார் வைத்தார்கள் எனவும் அறியாது அதைத் தன் கைகளில் எடுத்தவன் தன் கார் இருக்கும் இடத்திற்கு வந்தவன் கார்க் கதவைத் திறந்து உள்ளே சென்று அமர்ந்தான்...தன் கைகளில் உள்ள கவரைப் பிரித்து அதில் இருக்கும் கடிதத்தை எடுத்துப் படித்தவனை ஈர்த்தது அதில் இருக்கும் ஒரு பெண்ணின் கண்கள் தான் .... மைத்தீட்டிய மான் விழியின் அழகு அவனைக் கொள்ளை அடித்தது என்னமோ உண்மை.இது போன்ற விளையாட்டுகள் கல்லூரியில் சகஜம் என்பதால் , சாதரணமாக் கடித்தைப் பிரித்தவன் அதில் இருக்கும் வரிகளைத் தன்னுள் கடத்தினான்..‌.ஒவ்வொரு வரிகளும் காதலைத் தமிழ் எழுத்துகளில் உயிர்ப்பித்திருந்தவளின் பெயரைப் படித்தவன் மெல்ல யாரா.. யாரது இந்த யாரா என யோசித்தவனுக்குக் கடிதத்தின் சொந்தக்காரியை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை ...அவள் மாயாவதியின் அண்ணன் மகள் ஆக இருப்பாள் என்ற எண்ணம் துளிக்கூட அவன் மனதில் வரவே இல்லை ... அவளைத் தன் சிறு வயதில் கண்டது ... அதன் பின் அவளைப் பற்றி எந்த நினைவும் இல்லை ... இப்படி ஒருத்தி இருக்கின்றாள் என்பது கூட அவனுக்கு நினைவில் இல்லை என்பது தான் உண்மையும் கூட ... அவனும் தான் என்ன செய்வான் ...கைகளில் உள்ள கடிதத்தைப் பார்த்தவனுக்கு யாராவது தன்னை ஏமாற்ற கூட இந்த வேலையைச் செய்து இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான். அந்தக் கடிதத்தைக் கவரில் போட்டுத் தன் காரில் பத்திரமாக எடுத்து வைத்தான்...அந்தக் கடிதத்தில் எழுதிய கவிதையின் வரிகளின் அர்த்தத்தில் ஒரு வசீகரமான புன்னகைப் பிறந்தது ... அதை அந்த மரத்தின் பின் நின்றுப் பார்த்த யாத்ராவிற்கு மனதில் ஒரு நம்பிக்கை ஒளிப் பிறந்தது...மிகவும் சந்தோஷமாக ஓடினாள் தன் வகுப்பறையை நோக்கி ...தன் தோழியின் ஆனந்தத்தில் அவள் முகத்தைப் பார்த்தபடி " என்ன யாத்ரா ஒரே ஹேப்பித் தான் போல " என்ற தன்யாவை இறுக்கக் கட்டிக் கொண்டாள் யாத்ரா..." வர வர நீ ஒன்னும் சரியில்லைடி , இரு கண்டு பிடிக்கிறேன் " என்றவள் அவளிடம்" ம்ம் கண்டு பிடிக் கண்டு பிடி" என அவளைக் கேலிச் செய்தவள்...

"கேண்டின் போய்க் காபிக் குடிக்கலாம் வா டி" எனத் தன் தோழியை இழுத்துக்கொண்டு போனாள்...தோழிகளிருவரையும் பார்த்துக்கொண்டிருந்த ப்ரனவின் கண்களில் தன்யாவிற்கான காதல் கனவு விரிந்தது...எப்பொழுதும் ஒரு மாய உலகத்தில் வலம் வரும் தோழி இன்று எதனால் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள் என அறிய அவளிடம் தன் விசாரணைத் தொடங்கினாள் தன்யா …" என்ன யாத்ரா , அத்தை வீட்டுக்கு வந்தாளே உன் முகம் டாலடிக்குது என்னடி ரகசியம் ... அத்தைப் பசங்க எல்லாம் கல்யாணம் ஆனவங்க ... அதனால இந்த ஆனந்ததுக்குக் காரணம் காதல் இல்லை , வேற என்ன காரணம் என்ற தன்யாவின் கேள்வியில் அவளை முறைத்த படி , தன்னை இந்த அளவுக்கு உணர்ந்து வைத்திருக்கும் தோழியிடம் மறைப்பது வேதனையைத் தந்தாலும் , எதாவது கேட்கனும் என்ற உளராதடி என்று போலியாகக் கோபத்தைத் தத்தெடுத்தாள்...மாயாவதியின் பிள்ளை என்றாலே ருத்ரனை மட்டுமே நினைவில் வலம் வரும் ப்ரனவிற்குதன்யாவின் வார்த்தைகள் கேட்டதும் அவள் ருத்ரனைப் பற்றி யாத்ராவிடம் கேட்கிறாள் என்று மனதில் சந்தேகம் தோன்றியதும் 'ஒரு வேளை தன்யா ருத்ரனைக் காதலிக்கறாளோ' என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் வேகமாகப் பரவியதும் , அப்போ என் காதல் என்ற கேள்வி அவன் இதயத்தில் யாரோ ஆணிக் கொண்டு அடித்த போன்ற வலியை உண்டாக்கியது...என்ன ஆனாலும் அவள் என்னுடையவள் என்று மனதில் நினைத்தவன் ருத்ரனின் மேலும் வளர்ந்த வெறுப்பு ஒரு கட்டத்தில் வன்மமாக மாறியது...தன்னைச் சுற்றிய எந்த விசயமும் அறியாத ருத்ரன் தன் தொழிலில் முன்னே பயணித்துக் கொண்டிருக்கும் பயணத்தில் இதையெல்லாம் அவனுக்குச் சிந்திக்கக் கூட நேரமில்லை...ருத்ரனுக்குத் தன் தாயின் நினைவுகள் தான் மனதில் ... தன் தந்தையுடன் அவளைச் சேர்த்துப் பிரிந்து இருக்கும் குடும்பதை இணைக்க அவன் என்ன செய்ய எனத் திட்டம் தீட்டினான் ... அதற்கு அவன் தேர்ந்தெடுத்து ப்ரனவ் மற்றும் நீல்கண்டேஷ்வரின் சந்திப்பபைத் தான்...இப்படிக் காலம் யாருக்கும் காத்திருக்காமல் பயணமாகப் பெண்கள் இருவரும் தங்கள் இளங்கலைப் பட்டம் பெற்றுக் கல்லூரி வாழ்க்கை முடிக்கும் தருவாயில் இருந்தனர்.தனக்குக் கெடுத் தந்த நாட்கள் முடிந்தப் போனது. மனதில் இனி ருத்ரனைப் பார்க்க முடியாது என மனதில் நினைத்து வருந்தியவளுக்குக் கிடைத்த செய்தியோ அவ்வளவு உவப்பானதாக இல்லை...

ஆம், தொடர்ந்து இவளின் கடிதத்தைப் பத்திரப் படுதியவனுக்கு ஒரு கட்டத்தில் அந்த மான்விழியாள் மேல் மையல் உண்டாகியது ‌..இது தனக்குப் பொருந்தாது என உணர்ந்தவன் கல்லூரிக்கு வந்த தனக்கு நேரம் இல்லாத காரணத்தால் இனிமேல் சிறப்பு வகுப்பு எடுக்க முடியாது என்று கல்லூரி மேலாளரிடம் கூறித் தன் வேலையை ராஜினாமாச் செய்தான்...தன் காதலை அவனிடம் கடைசியாகக் கூறலாம் எனக் காத்திருந்தவளின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டான் அவள் ருத்ரன்.இதை அறிந்ததும் மிகவும் சோர்ந்தப் போனாள் யாத்ரா.

வாழ்வின் கடைசிக்கட்டத்தில் இருப்பது போல் தோன்றியதும், மூச்சு முட்டுயது காதலின் வலியினால்... இந்தப் பாரம் மனதில் ஆழுத்திய துயரத்தின் விளைவுக் கண்ணீராய் வடிய , அவனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினாள் கொரியர் மூலம்...அந்தக் கடிதத்தில் அவனை நேரில் காண வேண்டும் என்றும் , அப்போது அவள் யாரென்பதும் அவனுக்குத் தெரியும் என்ற தகவலும் அதில் இருந்தது ...மழைத்துளியினுள் ஊடுருவிய

சூரியனாய் என்னுள் நீ

கலந்ததால் பிறக்கும்

வானவில்லாய் நம் காதலை

ஈன்றெடுக்க என்றும்

என்னுடையவனாக

என்னருகில் நீ வேண்டும்

உன் கரங்களில் மனைவியாய்

இந்த ஆயுள் முழுவதும் வாழ

உன்னுள் என்னை அனுமதிப்பாய் !!!காதலையும் , அவளின் மன ஆசையையும் அழகான வார்த்தைகள் முலம் எழுதி இருந்தாள் ...

கடித்தத்தைக் கையில் வைத்த படிக் கண்களை மூடியவனின் மனதில் , அந்த முகம் அறியாத பெண்ணின் வலியோ இல்லை காதலோ , எதுவோ ஒன்று மனதை ஈர்க்க அவளைக் காண முடிவெடுத்தவன்.

அவள் கூறிய உயர்த் தரக் காஃபேக்குச் செல்லப் பயணமானான்...

தன் காதலைப் பல கடிதங்கள் முலம் தூது அனுப்பியவளுக்கு , அவன் மனதில் தனக்கான காதலை அறிய வேண்டி இருந்தது.

இந்த நேரத்தில் தன் அத்தையின் வார்த்தைகள் வேறு அவளுக்கு நினைவுக்கு வந்து அவளைப் பயமுறுத்தியது.

தன் காதலை எழுத்துகளில் கோர்த்தப் போது இருந்த தைரியம் , நேரில் ருத்ரனின் முகம் பார்த்துச் சொல்லத் துணிவு இல்லை...தன்னவனின் உருவம் கண் முன் கொண்டு வந்தாளே நெஞ்சாக் கூடு பயத்தில் துடிப்பதை நிறுத்தி விடும் , இதில் எங்கே அவன் கண்கள் பார்த்துக் காதலைக் கூறவது .இருந்தாலும் அத்தைக்குக் கொடுத்த வாக்கைக் காக்க முடிவெடுத்தவள் ... அத்தையிடம் கூறியதை மனதில் நினைத்தவளுக்குச் சிரிப்புத் தான் வந்தது ... ‘பெரிய

இவ மாதிரி ஒரு மாசம் டைம் வேற அவங்களிடம் கேட்டு வச்சு இருக்கேன்...'சரியான லூசு தான்டி நீ ’ என்று தன்னைத் தானே மைண்ட் வாய்சில் திட்டிக்கொண்டாள்.ருத்ரனைத் தனியாகக் காணத் தைரியம் இல்லாமல் உயிர் தோழி தன்யாவைத் துணைக்கு அழைத்தப்படி அவனுக்குக் கொடுத்த காஃபே முகவரிக்குச் சென்றாள் யாத்ரா...எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வை அறியும் திறன் யாத்ராவுக்கு இருந்திருந்தால், தன்யாவைத் தவிர்த்திருப்பாளோ...அவள் கைகளில் ருத்ரனுக்கான கடிதம் எப்பொழுதும் போலப் பிரத்யேகமான கவரில் வைத்திருந்தாள் அதைப் பார்த்தே அவன் கண்டு கொள்வான் என்பது அவளுக்குள் ஒரு நம்பிக்கை ..அவனுக்குக் காத்திருந்த நேரம் அவர்களுக்கு அருகில் இருந்த அறையில் நண்பனுடன் ப்ரனவேஷ்வரன் வந்திருந்தான் அவன் தந்தையின் அலுவலகத்தில் தொழிலைக் கற்கப் போவதற்கான ட்ரீட் கொடுத்துக் கொண்டிருந்தான்...

அவனுக்கு அது மிகப்பெரிய கனவு , தந்தையுடன் நாள் முழுவதும், அதே போல் அவரைக் குருவாகக் கொண்டு தொழிலைக் கற்பதில் அவனுக்கு இருந்த ஆனந்தம் சொல்லில் அடங்காது...அதைத் தன் நண்பன் ராகுலிடம் பகிர்ந்தான் ப்ரனவ்..."என் வாழ்க்கையின் அடுத்தக்கட்டம் நீலகண்டேஷ்வரனிடம் இருந்து தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், ராகுல் எனக்கு அவர் தான் ரோல் மாடல்" என்ற ப்ரனவின் வார்த்தைகளில் எங்கும் அவர் தான் என் அப்பா என்று அடையாளம் இல்லை..அவன் மட்டும் இல்லை ருத்ரனும் தன் தந்தையின் அடையாளத்தை எங்கேயும் உபயோகிக்க மாட்டான் அது போல் தான் ப்ரனவ் இருந்தான்.அவனைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் கூட்டத்தில் யாரிடமும் அவன் இந்த விசயத்தைப் பகிர்வில்லை..அது தேவையில்லாமல் தன் குடும்பக் கதைகள் வெளிவரும் என்பதில் அண்ணனும், தம்பியும் தெளிவாக இருந்தனர்..ப்ரனவிற்கு ருத்ரன் மேல் பொறாமை இருந்த போதும் அவனுடைய நற்பெயருக்குக் கலங்கம் வருவதை விரும்பவில்லை என்பது உண்மை..தன் தந்தையின் அதே சாயலில் அவன் இருந்தது அதற்குக் காரணம் ஆக இருக்கலாம். தன் நண்பனுடன் வந்த ப்ரனவிற்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருப்பது தெரியாமல் நண்பனோடு சிரித்தபடிப் பேசிக்கொண்டு இருந்தான்.தொடரும்....
 
Top