எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கானல் நீரில் காகித ஓடம்

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK90
#கானல்நீரில்காகிதஓடம்!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
சைதன்யா... சக்தி கொண்ட ஒரு நீலக் கல்லை கையில் வைத்துக் கொண்டு அதை உரியவரிடம் சேர்ப்பதற்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறாள்.. அந்தக் கல்லுக்கு உரியவனான அகத்தியனிடம் சேர்ப்பிக்கிறாள் அந்த கல்லை...பின்பே நமக்கு தெரிகிறது அவள் மனிதி அல்ல அருவம் என்று.. கார்த்திக்.. அகத்தியனின் உயிர் நண்பன்.. எல்லா சூழ்நிலையிலும் நண்பனுக்கு ஆபத்து வரும்போதும் அவனை விட்டு அகலாமல் இருக்கிறான்🥰 பேயிடம் அடி வாங்கி அலறுவதெல்லாம் வேற லெவல் 😀😂 அந்த அபூர்வ கல் அகத்தியனிடம் வந்ததற்கான காரணம் என்ன என்று..அவர்கள் முன் ஜென்ம வாழ்வில் அதற்கான பதில் இருக்கிறது.. அருவமாக இருக்கும் சைதன்யாவை இந்த வாழ்விலேயே அகத்தியன் சேர்ந்தானா.. சேர முடிந்ததா என்பது கதையில்... விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை.. நிறைய இடங்களில் சிரித்துக் கொண்டே படித்தேன் வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி👏👏 நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🥰
Good luck 🥰 🌹 💐
 
Top