எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் not out

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK106
#காதல்notout!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்...
அச்சோ என்ன கதையை இப்படி முடிச்சிட்டீங்க 😔
கவிதா.. தாய் தந்தை இல்லாமல் அத்தையின் தயவில் வளர்ப்பவள்..
இவளின் நண்பன் 10 வயது நிதன்..
மனதில் கவலைகள் இருந்தாலும் அதை மறைத்து மகிழ்வாகவே வாழ்கிறாள்.. பார்த்தவுடனேயே விருப்பு வந்துவிடுகிறது இவளுக்கு சஞ்சீவின் மேல்.. அவன் பின் சென்று அவனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொல்லை செய்கிறாள்.. ஆரம்பத்தில் அவள் மீது கோபம் கொண்டாலும் போகப்போக விரும்ப ஆரம்பிக்கிறான் சஞ்சீவ்.. திடீரென ஒரு நாள் மாயமாக மறைந்து விடுகிறார்கள் கவிதா அவள் சென்ற பின்னே அவளின் மீது கொண்ட காதலை உணர்கிறான் சஞ்சீவ்.. அவளைத் தேடும் வேட்டை தொடர்கிறது அவனுக்கு.. இதற்கிடையில் ஒரு கில்லர் சிலரை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறான்.. கொலையாளியை கண்டுபிடிக்கும் வேலையில் டெபுட்டி கமிஷனர் கார்த்திக்... கொலை செய்வது யார் கொலைகாண காரணம் என்ன காணாமல் போன கவிதா என்ன ஆனாள் என்பது கதையில்.. விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏
Good luck 🥰🌹💐
 
Top