எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#நாட்பூத்த_நன்மலர்…..

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#நாட்பூத்த_நன்மலர்…..

வாழ்வின் எதார்த்த நிகழ்வுகளை சொல்லும் கதை….

செழியன், அப்பா இருந்த வரை அவரிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்து விட்டு….

அவர் கோமாவில் இருக்கும் போது ஒரு ஒரு செயலிலும் அவரை நினைப்பது, அவரின் தோல்களில் சாய ஏங்குவது என நல்ல படித்த, சரியான வேலை இல்ல இளைஞன்…..

பேசதற்கு காரணம், பிடிக்காதது அல்ல….அது மரியாதை கலந்த பயம்……

இப்பவும், பெரும்பாலான வீடுகளில் இப்படி அப்பா பையன்களை பார்க்கலாம்....

மதி, ஆணும் பெண்ணும் சேர்ந்து காதல் தான் பண்ணனும்னு இல்ல….அது தூய நட்பா கூட இருக்கலாம்…..

அந்த அழகிய நட்பு செழியணுக்கு கிடைச்சி இருக்கு மதி வழியாக…..

சிறு களங்கம் இல்லா நட்பு, இருவரின் உறவுகளால் கூட ஏற்று கொள்ளப்பட்ட நட்பு…..

கபிலன், தேவை இல்லாம வாய் விட்டு அருமையான வாழ்க்கையை இழந்துட்டு இப்ப வருத்தப்பட்டு ஒரு யூசும் இல்ல…..

மதியை அப்படி சொல்ல எப்படி தான் மனசு வந்ததோ இவனுக்கு….

வேல்விழி, சரியான வழிகாட்டல் இல்லாமல், காதல் தான் அனைத்தும் என எல்லாரையும் உதரிட்டி போன பெண் அவளோட வாழ்க்கை துணையை இழந்து நிற்கர வயிற்றில் பிள்ளையோடு…..

மனோ, பிள்ளை ஓட வாழ்க்கை துணையை இழந்துட்டு நிற்கிறான்…..

பரிதி, சுபா…. டாக்டர்ஸ்சா இருந்து குழந்தை இன்மையால் வாடும் தம்பதி…..

இவர்கள் எல்லாரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தில் கஷ்ட படராங்க…..

அனைவரையும் இணைக்கும் பாலமாக இவர்களின் நட்பு.....

அடுத்து இவங்க வாழ்க்கையில் என்ன என்ன நடந்தது என்பது தான் கதை…..

எதர்த்தமா கதை நகர்ந்த விதம் சூப்பர்…..

இன்னும் கொஞ்சம் கிர்ஸ்பா சொல்லி இருந்து இருக்கலாம் கதையை …..

கொஞ்சமே கொஞ்சம் லகா இருந்த ஃபீல் எனக்கு….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Top