எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என் நெஞ்சில் ராகம் எங்கே எங்கே

santhinagaraj

Well-known member
என் நெஞ்சில் ராகம் எங்கே எங்கே

விமர்சனம்

நல்ல ஒரு ஃபீல் குட் கிராமத்து கதை.

தங்கவேலு செந்தில் இருவரும் நண்பர்கள் இரண்டு பேருக்குமே ஒருவருக்கொருவர் சொல்லிக்க முடியாத அளவு ஒரு காதல் தோல்வி இருக்கு.

நிலவழகி வள்ளி சரசு மூவரும் நெருங்கிய தோழிகள் ரொம்பவும் அன்பாகவும் ஒருவருக்கொருவர் அனுசரனையாகவும் இருக்கிறாங்க.

சரசுவின் அம்மாவிற்கு நிலவழகி மீது ஏதோ ஒரு கோபம், ஊர் மக்களும் அவளை ஏனோ வேண்டாதவளாக பார்க்கிறார்கள்.

நிலவழகியின் நிலை இப்படி இருக்க ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பஞ்சாயத்தில் வைத்து பழியை ஏற்றுக் கொண்டு நிலவழகி கருத்து தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் தங்கவேலு.

தங்கவேலுவின் இந்த செயலால் சரஸ்வதிக்கு ஏற்பாடு ஆகும் கல்யாணம் தடைபடுமோ என்று கவலைப்படுகிறார் சரசுவின் அம்மா, அவரோட கவலைக்கு ஏற்ப கடைசி நிமிடத்தில் கல்யாணம் நின்று விடுகிறது.

நிலவழகியை ஏன் எல்லாரும் வேண்டாதவளாக பார்க்கிறார்கள்.? தங்கவேலு ஏன் பழியை ஏத்துக்கிட்டான்?நிலவழகி தங்கவேலு வாழ்க்கை எப்படி போகிறது?சரசு கல்யாணம் என்ன ஆகிறது? செந்திலில் ஒரு தலை காதல் ஜெயிக்கிறதா இல்லையா என்று கதை சுவாரசியத்தோடும் விறுவிறுப்போடும் நகர்கிறது.

அர்ஜுன் மோகன் அட்ராசிட்டி செம👏👏

பெருங்களின் வாழ்க்கைக்காக பாட்டிகள் போடும் திட்டம் சூப்பர் 👌👌

நிலா தங்கவேலு இருவருக்கும் இன்னும் கொஞ்சம் காதல் காட்சிகள் வச்சிருக்கலாம்.

முடிவு நிறைவாக இருந்தாலும் ரொம்ப விறுவிறுப்பா போய்கிட்டு இருந்தா கதையை சட்டுனு முடிஞ்ச மாதிரி இருந்தது.

வாழ்த்துக்கள் 💐💐💐

( அங்கங்க கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கு ஆரம்பத்துல சில இடங்களிலே யார் யார் கூட பேசுறாங்கன்னு கொஞ்சம் குழப்பமா இருக்கு அதெல்லாம் கொஞ்சம் சரி பண்ணிக்கோங்க )
 

NNK-104

Moderator
தேங்கி யூ சகி கடைசி டெட் லைன்ல முடிச்சது சொல்லுற விஷயத்தை சரியா சொல்லனும்னு தான் தோனிச்சு எழுத்து பிழைகள் பார்க்க முடியாம போயிடிச்சி சகி மறுபடியும் முடிஞ்சா பிழைகளை சரி பண்ணிடுறேன் சகி உங்களோட நீண்ட விமர்சனத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்
 
Top