எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணகியின் கோவலன்

santhinagaraj

Well-known member
கண்ணகியின் கோவலன்

விமர்சனம்

கதை என்ன மாதிரி இருக்கும்னு தலைப்பே சொல்லும்.

பெரிய பிசினஸ்மேன் வில்லியமோட ஒரே பையன் ஆரோன்.
என்னதான் ஆர் ஒன் பிசினஸில் ரொம்ப உயர்ந்து திறமையா இருந்தாலும் இவனோட குணம் சரியில்ல மது மாதுன்னு ரொம்ப ப்ளேபாயா கெட்ட பையனா இருக்கான்.

வில்லியம் ஆரோனாட குணம் தெரிந்து அவனை திருத்துவதற்காக அவங்க வீட்டை விட்டு வெளியேற்றி தன்னுடைய பெயர் படிப்பு வசதி எதையும் பயன்படுத்தாமல் இரண்டு மாசம் வெளியே இருந்துட்டு வா என்று அவரோட சொந்த கிராமத்துக்கு அனுப்பி வைக்கிறார்.

கண்ணகி ஆரோன் போகும் அதே கிராமத்தில் இருக்கும் ஒரு வாத்தியாரின் மகள் வாத்தியார் பொண்ணு மத்தியன்பதற்கு 100% பொருந்தி கிராமத்தில் சேட்டைகள் செய்யும் குறும்புக்காரி.

ஆரோன் அந்த கிராமத்தில் தன்னுடைய வசதிகளை துறந்து ரொம்ப கஷ்டப்படுகிறான். கண்ணகியின் தாய்மாமன் செய்யும் ஒரு செயலால் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஆரோன் கண்ணகி இருவருக்கும் கல்யாணம் ஆகிறது ஒரு மாதம் கண்ணையுடன் குடும்பம் நடத்தி விட்டு ஆறும் தன்னுடைய இரண்டு மாத கணக்கு முடித்து கண்ணையிடம் இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கிராமத்தில் விட்டுட்டு வந்து விடுகிறான். கண்ணகியின் வயிற்றில் அவனுடைய குழந்தை வளர்கிறது.

இதற்குப் பிறகு ஆரோன் கண்ணகி வாழ்க்கை என்ன ஆகிறது என்பது மீதி கதை

விட்டுட்டு போன ஆரோனிடம் எந்த கேள்வியும் கேட்காமல் மகளை அவனுடன் வாழ சொல்லும் கண்ணையும் அப்பா அம்மாவின் பேச்சு பிடிக்கல.

ஆரோன் அவனோட தவறை முழுசா உணராத மாதிரி இருந்தது. அந்த ரெண்டு மாத உழைப்பில் அவனோட குணத்தை கொஞ்சம் மாற்றி கண்ணகியோட பிரிவில அவனைக் கொஞ்சம் தவிக்க விட்டிருக்கலாம்

கண்ணகியோட உணர்வுகளை இன்னும் கொஞ்சம் நல்லா காட்டி இருக்கலாம் ஆரோனை கொஞ்சம் வெச்சு செஞ்சு இருக்கலாம்.

ஆரம்பத்தில் ரொம்ப நல்லா நகர்ந்துட்டு இருந்த கதை கடைசில ரொம்ப வேகமா நடந்த மாதிரி இருக்குது இன்னும் கொஞ்சம் பொறுமையா கொண்டு போய் இருக்கலாம்.

பெரிய பணக்காரராக இருந்தாலும் வில்லியமோட குணம் சூப்பர்.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top