எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

KK - 8

subasini

Moderator
களவு - 8

ருத்ரனின் கைகளில் கார் பறந்தது அந்தத் தார் ரோட்டில், எங்கே செல்லுகிறோம் என்று திக்குத் தெரியாமல் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒடியது அந்தச் சாலையில்.

மனமோ எரிமலைக் குழப்பின் லாவா போல் உள்ளுக்குள்ளே குமறியது , எப்பொழுது வெளியே வரலாம் எனச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டே இருந்தது ...

அந்நேரம் அவன் எதிரில் யாராவது வந்திருந்தால் மரணம் என்பது சிரமமின்றிக் கிடைத்திருக்கும்....

அந்த அளவிற்கு நிதானம் இழந்து சினத்தால் ஆட்கொள்ளப்பட்டான். என்ன செய்ய எனத் தெரியாமல் தவித்தான்...

தன்னைச் சுற்றி ஒளிந்திருக்கும் ரகசியத்தைத் தேடும் போது, கண்களைக் கட்டி விட்டது போன்ற உணர்வு அவனை வதைத்தது...

தன் உள்ளுணர்வோ அந்தக் கடிதத்தில் தனக்கான காதல் ஜீவனோடு இருக்கிறது என்று பறைச் சாற்றியது...

இத்தனை காலமும் எந்தச் சலனமும் இல்லாமல் பல பெண்களின் கண் அசைவைக் கடந்து வந்த, என்னையும் காதல் தாக்கியது என்றால், அதில் வெற்றிப் பெறாமல் கேவலமாகத் தோற்றிப் போய்விட்டேனே என்ற வலி உருகுலைக்கச் செய்தது அவனை.

காதல் தோல்வியை விட அவள் தம்பியின் காதலியின் மேல் தனக்கு ஈர்ப்பு வந்து விட்டதோ! என்ற எண்ணமே , மிகப்பெரிய அவமானமாக இருந்தது அவனுக்கு.

சின்னப் பெண் தன்னைப் பார்த்து ஏளனமாகக் கூறிய விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்ற போதும் , அவளை மரியாதை இல்லாமல் பேசிய தன் கோபத்தின் மேல் கோபம் கொண்டான் ருத்ரன்...

‘என்னவெல்லாம் பேசி விட்டேன்’ என்று வருந்தியபோதும், பதிலுக்குப் பதில் பேசும் அவள் துடுக்குத் தனமான கோபத்தை இந்த ப்ரனவ் எப்படிக் கையாளப் போகிறான் என்று தம்பிக்காக வருத்தப்பட்டான், இவ்வளவு வலியிலும்.

யாரோ ஒருத்தி என் அம்மாவை, செத்துப்போய்ட்டாங்க என்று சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, எதுவும் பண்ண முடியாத தன் நிலையை எண்ணியதும், இதுக்கெல்லாம் காரணமானத் தந்தையின் மேல் அவன் சினம் திரும்பியது.

அவரை இப்போது நேரில் கண்டு இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முடிவெடுத்தவன், காரை வேகமாக வீடு நோக்கி விட்டான்.

சிந்தனை வேறாக இருக்க, கவனம் வாகனம் ஓட்டுவதில் இருந்து மின்னலெனத் திசைத் திரும்பியதினால் ஏற்பட்ட விபத்தில், மயிரிழையில் உயிர் தப்பினான் ருத்ரன்.

எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்கத் தவறியவன், அந்த நொடி இடிக்க வந்து கண்டைனரை நேருக்கு நேர் மோத வேண்டிய சூழலைத் தடுக்கத் தன் வாகனத்தின் வேகத்தைக் குறைக்காமலேயே திருப்பியதால் , அது ரோட்டில் இருந்து விலகிச் சாலையோரம் இருந்த மரத்தில் மோத ருத்ரனுக்குக் கால்களில் நல்ல அடிப்பட்டது.


அவன் உடலில் எந்த அடியும் படாமல் உயிரைக் காக்கும் காற்றுப்பைத் தன் மடியில் அவனைத் தாக்கியது. வண்டியின் வேகத்தின் விளைவாக அவனுக்கு நெற்றியில் அடிப்பட்டுக் குருதி அவன் முகத்தில் வழிய அவனின் திடமான மனதினால் மயக்கம் வரவில்லை...

எதிரே வந்த கன்டைனரின் ட்ரைவர் தன் வாகனதை ஓரங்கட்டி விபத்தில் பாதித்த காரின் அருகை வந்து பார்க்கையில், நெற்றப்பொட்டில் காயத்தால் வழியும் குருதியோடு நிதானமாகத் தன் கால்களை இருக்கையில் இருந்து எடுக்க முயன்றக் கொண்டிருந்த ருத்ரனைத் தான் பார்த்தார்.


என்ன மனிதன் இவன், கொஞ்சம் கூட வலியை உணராமல் இரத்தத்தைக் கண்டு பதட்டம் இல்லாமல், அவனின் தைரியம் கண்டு அவருக்கு ஆச்சரியம் தான்..

சட்டென்று சூழல் மனதில் உரைக்க அவனைக் காப்பாற்ற முயன்றார்...

மெதுவாக அவனைக் காரில் இருந்து வெளியே வர உதவினார். மெல்ல அவனிடம்,

"சார், தவறாக நினைக்க வேண்டாம் நான் சரியாகத் தான் வந்தேன்" என்றவர் மேலும் தயங்கியவாறே, "உங்களுக்கு நல்ல அடிப்பட்டு இருக்கு, முதலில் நாம் மருத்துவமணைக்குப் போகலாம், நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்" என்றார்.

மிகவும் நல்ல மனம் படைத்த மனிதன் போல என்று நினைத்த ருத்ரன், மெல்ல வலியில் சிரித்தபடியே " நான் தான் சார், தப்பா ட்ரைவ் பண்ணி வந்தேன் சாரி, நீங்க போங்க நான் பார்த்தக் கொள்கிறேன்" என்றான்.


அவனின் அழுத்தமும் தைரியமும் அவரை வியக்க வைத்தது. அவன் போகச்சொல்லியும் அவரால் போக முடியவில்லை, மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதே!


கண் முன் ஒருத்தன் வலியில் போராடிக்கொண்டிருக்கும் போது, அவனைக் கண்டுக்கொள்ளாமல் போக அவருக்கு மனம் கேட்க வில்லை. சுயநலத்தோடு வேகமாகச் செல்லும் இந்த உலகத்தில், நல்ல எண்ணத்தின் காரணம் ருத்ரனுக்கு உதவ முன் வந்தார்...


"வாங்கப் போகலாம் சார் , நான் ஆம்புலன்ஸிற்குப் போன் பண்ணறேன், என்னால் இப்படி விட்டுட்டுப் போக முடியாது. எனத் தன் அலைபேசியை எடுத்து அழைப்பை விடுக்க முயன்றவரைத் தடுத்தான் ருத்ரன்.


காரில் இருக்கும் தன் ஃபோனை எடுத்துத் தருமாறுக் கூறியபடி மெல்லக் கீழே காலை நீட்டியபடி அமர்ந்தான்.


அவன் வலதுக் காலில் அடிப்பட்டு இருந்தது. அந்நேரம் அவனது மனம் தந்தையைத் தான் தேடியது, உடனே அவருக்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

ருத்ரனின் சொல் கேட்ட அந்த ட்ரைவர், காரில் உள்ள ஃபோனை எடுத்துக் கொடுத்து அவன் அருகில் நின்றான்...
தன் அலைபேசியை வாங்கியவன் தந்தைக்கு அழைத்தான்.. முதல் ரிங்கிலேயே எடுத்தவர் "ஹலோ" என்றதும்...


" அப்பா... என்ற அவன் குரலில் இருக்கும் நடுக்கம் கண்டு, "என்ன ருத்ரா அடிப்பட்டு இருக்கா" எனக் கேட்டார் நீலகணடேஷ்வரன்.

சொல்லாமல் தன் வலியை உணர்ந்தத் தந்தையின் பாசத்தில், அவன் கோபம் கூட இந்த நொடி மறந்து போனது.... சிரித்தபடி "ஒரு சின்ன விபத்து" என்றவன், எங்கே இருக்கிறேன் என்ற தகவலை அவருக்குக் கூறி, வேகமாக வரச் சொன்னான்...


அரை மணிநேரம் பயணத் தூரத்தில் தான் நீலகண்டேஸ்வரன் இருந்தார்... தொழில் சார்ந்த சந்திப்பில் தன் தொழில் துறை நண்பர்களோடு விருந்தில் கலந்து கொண்டிருந்த சமயத்தில் தான் ருத்ரனின் அழைப்பு...


"இன்னும் கொஞ்சம் நேரத்தில் அங்கே இருப்பேன் ருத்ரா" என்றவர் வேறெதுவும் கேட்கவில்லை...

அவன் கார் ஓட்டும் திறமையை நன்கறிந்த நீலகண்டேஷ்வரனுக்கு மனதில் ஏதோ அபாயச் சங்கு அடித்தது.


எப்போதும் எந்தச் சூழலிலும் தன் கவனமும், நிதானமும் தவறாத பெரிய மகனின் இந்த விபத்து அவர் மூளையின் ஓரத்தில், வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என அரைக்கூவலிட்டது...

அதைத் தட்டிக்கழிக்கத் தான் அவரால் முடியவில்லை ...


வாகனத்தை வேகமாக ஒட்டி மகன் தகவல் அனுப்பிய இடத்திற்கு வந்து சேர்ந்தார்... எதிர்பார்த்த நேரத்தைக் காட்டிலும் வேகமாக வந்திருந்தார் அவன் மேல் உயிரையே வைத்திருக்கும் நீலகண்டேஷ்வரன். தந்தையைக் கண்டதும் மனதில் ஒரு நிம்மதிப் பரவியது உண்மைத் தான்... அதை அவன் கோபம் உணர மறுத்தது...


மகனின் அருகே இருக்கும் புதிய மனிதனைக் கண்டு புருவம் உயர்த்திக் கண்கள் இடுங்கி அவர் பார்த்தப் பார்வையில், அவருடைய ஆளுமையை உணர்ந்த அந்தக் கன்டைனர் ட்ரைவர் தன்னை அறிமுகம் படுத்திய பின், நடந்த விபத்தில் தன் மேல் எந்தத் தவறுமில்லை என்று ரத்தினக் சுருக்கமாகச் சொல்லி ருத்ரனைத் தூக்க உதவும் நோக்குடன் வந்ததார்.


ஒரு கைக் கொண்டு அவனைத் தடுத்தவர், மகன் எழுந்து நிற்பதற்கு உதவியவர், அவன் உடல் பலம் முழுவதையும் தன் மேல் தாங்கி, மெல்ல அவனைத் தன் காரின் பின் இருக்கையில் நன்றாக அமர வைத்து ட்ரைவரிடம் தன் கார்ட் கொடுத்தவர், மின்னல் என்று வார்த்தையை உண்மை ஆக்குவது போல் பறந்தார், தன் மகனையும் அழைத்துத் மருத்துவமனைக்கு.


அங்கே ஒ டியில் இருந்த டாக்டர் வந்து அவனுக்கு மருத்துவம் பார்க்க.. அவ்வளவு வலியிலும் அசறாது அமர்ந்து இருக்கும் மகனையே பார்த்தார் நீலகணடேஷ்வரன்...


அருகே இருக்கும் டாக்டர் புதியவன் என்பதால், உரையாடலைத் தங்களுக்கு என்று ஒதுக்கப்படும் அறையில் வைத்துக் கொள்ளலாம் என இருவருக்குமே மனதில் தோன்றியது.


அவனுக்கு வேண்டிய மருந்துக் கொடுத்துக் காலில் பெரிய கட்டோடு தனக்கெனத் தந்த அறையில் படுத்திருந்தான் ருத்ரன்.


அவனையும் ஈஷ்வரையயும் தவிர யாருமில்லை என்றதும் தன் மகனை நோக்கி “அப்படி என்ன வேகம் உனக்கு வண்டி ஓட்டும் போது, கவனம் சிதறிப் போகும் அளவுக்கு என்ன டா நடந்தது, ஒரு நிமிஷம் என் உயிரே போச்சு. நீ என்னடா என்றால் ரொம்பக் கூலா இருக்க”...


“எங்க டாக்டர் காலில் ஸ்டீல் வைக்கனும் சொல்லு வாங்கலோ என்று பயத்துட்டேன்" என விடாமல் அவனைக் கடிந்தவரை முயன்ற மட்டும் முறைத்தான் ருத்ரன்.


ருத்ரனின் முகத்தில் உடல் வலியை விட வேறு ஏதோ அவனைப் போட்டு வதைக்கிறது என்று உணர்ந்தார் நீலகண்டேஷ்வரன். அவன் அருகில் வந்து அமர்ந்து, "என்ன பிரச்சினை ருத்ரன்" என்று சரியாக அவன் மனநிலை உணர்ந்துக் கேள்விக் கேட்டார்...

எப்பொழுது இந்தக் கேள்வியைக் கேட்பார் எனக் காத்திருந்த ருத்ரன் பொங்கியெழுந்து விட்டான்.

"எந்தப் பிரச்சனையைச் சொல்லச் சொல்லுறீங்க, இவ்வளவு வருஷமும் அம்மாவின் அன்பும், அரவணைப்பும் இல்லாமல் வாழ்ந்ததையா?, என் அம்மாவின் வேதனையைத் தீர்க்க வழித் தெரியாமல் தவிக்கும் மனசையா, இல்லை அவங்களைப் பத்தி என்னிடம் வந்து தவறாகப் பேசறவங்க வாயை அடைக்க முடியாமல் இருக்கும் கையாலாகாத நிலையையா எதைச் சொல்லட்டும். தொழில் சாம்ராஜ்யத்தை அழகாக நிர்மாணித்த எனக்கு, சொந்த வாழ்க்கையைச் சரி பண்ண முடியாது சூழலை உருவாக்கி வச்சு இருக்கும், உங்க கடந்த காலத்தைப் பற்றியா...


இதையெல்லாம் கேட்க முடியாத என் இயலாமையைப் பத்தியா, எந்தச் சூழ்நிலையிலும் உங்களைக் காயப் படுத்தாம, எப்படி அம்மாவை என் கூட வச்சிருக்கனும் தெரியாமல் தினறிட்டு இருக்கேனே, அதைச் சொல்லச் சொல்றீங்களா” ... என்றவனின் கட்டுகடங்காத கோவத்தின் எச்சமாய் நின்ற மௌனம் வலியால் ஓலமிட்டது...

மேலும் அமைதியைத் தகர்த்தவன், " என் முகத்தைப் பார்த்து ' இவன் என் மகன் தானா' என்ற குழப்பமுமு், வேதனையும் அவங்களைக் கொல்லாமல் கொல்லுது, அதை வேடிக்கைப் பார்க்கும் கையாலாகாதப் பிள்ளையா நான் ஏன் உயிரோட இருக்கனுமாப்பா" என்றவன், தன் இடக் கையைக் காற்றில் அசைத்து "பெரிய தொழிலதிபனா இருந்து என்ன பிரயோஜனம், எங்க அம்மாவின் கண்களில் இருக்கும் வலியும் வேதனையும் , நான் நினைச்ச ஒரு செகண்ட் தான் ஒரே செகண்ட், ஆனா உங்க மனசையும் என்னால் வலிக்க வைக்க முடியாதே! .... என்றவன், "அவங்க எதிர்பார்ப்பையும் செய்ய முடியாத, இந்தச் சூழ்நிலையை இந்தச் செகண்ட் வெறுக்கிறேன்"... என்றவன் தன் கைகளால் முகத்தை அழுந்த துடைத்த படி,


"உங்க இரண்டு பேருக்கும் இடையே என்ன பிரச்சினை நான் கேட்க மாட்டேன்...‌ இரண்டு பேரில் யார் கோபத்திலும் வேதனையிலும் நியாயம் இருக்கிறது என்று அறிய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை… எனக்கு அம்மா நம்ம கூட இருக்கனும், அதை நீங்க தான் முடிவுப் பண்ணனும், ஆனா இனி மேல் என்னால் உங்க இரண்டு பேரையும் இப்படித் தனித் தனியாக இருக்க விட முடியாது... எனக்கு என் அம்மாக்கு நியாயம் வேண்டும்" என அவன் மனதில் இருக்கும் எல்லா வலியும், ஆசையும் வார்த்தைகளாகத் தந்தையின் முன் கொட்டினான்.


நீலகண்டேஷ்ரனுக்கு, மகனின் வார்த்தைகளையெல்லாம் கேட்டதும்,முதன் முறையாகத் தவறு செய்து விட்டோமோ! என்ற எண்ணம் மனதில் உருவானது.


மேலும் ருத்ரன் தன் தந்தையை நோக்கி அழுத்தமான வார்த்தைகள் கொண்டு மெதுவாக, "உங்களோட சினத்தின் முன்னாடிக் காதல் மட்டும் இல்லை, எங்க அம்மா அவங்கக் கேரக்டரையும் இழந்து இருக்காங்க” என்ற மகனின் வார்த்தைகளின் வீரியத்தில் "ருத்ரேஷ்வரன்" என்று கர்ஜித்தவரைப் பார்த்து,

“இந்த நிலைக்கு என்ன அம்மாவை நிற்க வைத்த உங்கள நான் என்ன பண்ணனும் சொல்லுங்கப்பா" என்ற சிங்கமெனச் சிலிர்த்து நிற்கும் மகனின் இந்த அவதாரம் கண்டு அப்படியே சிலையென நின்றார் நீலகண்டேஷ்வரன்.


தந்தை மகனின் வார்த்தைகளின் போரை எதிர்பாராத விதமாகக் கேட்க வேண்டிய சூழலுக்குத் தள்ளபட்ட ருத்ரனுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் பிராசாத்...


ப்ரனேஷ்வரனின் நண்பனின் அண்ணனாகிப் போனது ருதர்னின் கெட்ட நேரமா என்று அறியவில்லை... இதையெல்லாம் கேட்டப் பிரசாத் என்ன பண்ண எனத் தெரியாமல் அறைக்கு வந்து ப்ரனவை அழைத்து இருந்தான்..‌.

தங்கள் சொந்தம் மருத்துவமணையில் பிரசாத்தை வேலையில் அமர்த்துவதால் எதாவது பயன் உண்டாகும் என்று நினைத்தவன், கங்காவின் உதவியோடு சுமித்ராவின் சிபாரிசில் பிரசாத்தை வேலைக்குச் சேர்த்தி விட்டான். வேலைக்குச் சேரும் போது நீலக்கண்டேஷ்வரன் அங்கே வந்தால், தனக்கு அறிவிற்குமாறு கூறியிருந்தான்.ப்ரனவ் கூறியது நினைவில் வர, அவனுக்கு அழைத்த பிரசாத், நடந்த அனைத்தையும் தெளிவாகக் கூறினான். அனைத்தும் கேட்ட ப்ரனவ் பிரசாதிடம், தன் திட்டத்தின் முதல் அடியை எடுத்து வைத்தான் ப்ரனவ்...


"பிரசாத், எனக்கு ஒர் உதவிப் பண்ணுவீங்களா? " என்று கேட்டான் ப்ரனவ்.

"என்ன ப்ரனவ், உதவி என்று ரொம்ப ஃபார்முலாக் கேட்கற, இதைச் செய் என்றால் செஞ்சுட்டுப் போறேன் , இந்த வேலையே உன்னோட தயவில் தான் கிடைத்தது, அந்த நன்றியை மறப்பேனா?" என்றான் ப்ரனவின் எண்ணம் அறியாது...


ப்ரனவ், கேட்ட உதவயை அறிந்ததும் பயந்து போனான் பிரசாத்...


"வேண்டாம் ப்ரனவ் , பின்னாடி எதாவது பெரிய பிரச்சினை வரும்" என்றான்.


"அதை நான் பார்த்துக் கொள்கிறேன், நீ நான் சொல்வதை மட்டுமே செய், நீ பண்ணப் போகும் இந்தக் காரியம் பல பேர் வாழ்கையில் பல புதிர்களை அவிழ்க்கும்" என்ற பிரசாத்திற்குத் தைரியம் கொடுத்தான்.


நல்லது நடக்கக் கொஞ்சம் பாதை மாற்றிப் பயணிப்பதில் தவறில்லை, என்று நன்றிக்கடனைத் தீர்க்க, தன் தொழிலின் தர்மத்தை உடைத்தான் பிரசாத்.

இதை எதுவும் அறியாத ருத்ரன் , நீலகண்டேஷ்வரனிடம் “ இனி நீங்கள் தான் முடிவு எடுக்கனும் அப்பா” என்றான்.

எந்த முடிவாக இருந்தாலும் நான் நினைப்பது தான் நடக்க வேண்டும் என்ற தொனி அவன் குரலில் இருந்தது. முதல் முறையாகத் குடும்பத்தின் முடிவுகள் எடுக்கும் நிலைக்கு மகன் வளர்ந்துவிட்டான் என்று உணர்ந்தார்.


மகனின் வேதனையும், அவன் எடுத்த தீர்மானமும் புரிந்தது ஈஷ்வருக்கு. தன் மேல் நம்பிக்கை இல்லாமல் இன்று வரை தன்னை ஒதிக்கி வாழும் மனைவியிடம் மனம் திறக்க அவருக்கு விருப்பம் இல்லை.

இப்போது வரை தன்னைத் தேடி வராத அவளிடம் , தன் காதலையும்,பாசத்தையும் அவளுக்குப் புரிய வைக்க அவரின் ஈகோ இடம் கொடுக்க வில்லை.

என்ன தான் காதல், மனதில் நிறைந்துத் தழும்பினாலும், அவளின் இந்த அலட்சியம் மற்றும் தன்னைக் காண வராது இருக்கும் வைராக்கியமும் அவளை நேரில் போய்ச் சந்திக்க விடாமல் அவரைத் தடுத்தது.

தன் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமல், இத்தனை காலமும் கண் முன்னே வராமல் இருக்கும் மனைவியைப் பிரிந்து வாழும் இந்தத் தவ வாழ்க்கை, ஒரு நொடியில் தவறாகப் பேசிய மகனைச் சினமின்றி வேதனையோடு பார்த்தார் நீலகண்டேஷ்வரன்...

அவர் பார்வையில் இவ்வளவு காலம் என்னோட இருந்த உனக்கு என் மனமும் அதில் இருக்கும் வேதனையும் புரியவில்லையா, இத்தனை வருஷம் மாரிலும் தோளிலும் வளர்த்திய, என் பாசம் அவள் வயிற்றில் தவழ்ந்த, பத்து மாதத்தின் முன் தோற்றுவிட்டதே! என்ற அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அம்மாவிற்கும், மகனுக்கும் இடையே நல்ல ஆரோக்கியமான அன்புக் கண்டு நிம்மதி ஏற்பட்ட போதும், மீண்டும் எங்கோ தோற்றுப்போன உணர்வைத் தவிர்க் முடியவில்லை.

வாழ்க்கையில் தனித்து விடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரின் முகத்தில் வந்து போன உணர்வுகளிலும், அவரின் மௌனமும் ருத்ரனை நிதானத்திற்குத் திருப்பியது.

ஒரு முறை அம்மாவை நேரில் பார்த்ததும் இந்த அளவுக்கு வரும் பாசமும் நேசமும், என் மேல் இல்லையா? எனப் பார்வையிலேயே உணர்த்தினாரோ!

மெல்ல... "என்னடா, ஒரு மணி நேரம் செலவழித்து இருப்பாயா உன் அம்மாவோட? அவளை நேரில் பார்த்தப் பின் உனக்கு வேற எதுவும் பெரிசாப் படவில்லை அப்படித் தானே"...


"இருபத்தைந்து வருடம் உன்னை மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்தி, உன் வாழ்க்கையில் நிழல் போல உன்னோட பயணித்து , உன் வெற்றியைக் கண்டு மகிழ்ந்து, வாழ்க்கையில் இது போதும் என உனக்காக வாழ்ந்த என் வலியும் வேதனையும் உனக்குப் புரியவில்லை".


"என்ன இருந்தாலும் இருபத்தைந்து வருடம் நான் கொட்டி வளர்த்தப் பாசம், பத்து மாதமே கருவறையில் வைத்துச் சுமந்து, என் உயிரை ஒரு ஜீவனாக உருவாக்கித் தந்த இந்தத் தொப்புள் கொடி உறவு ஜெயிச்சுருச்சு " என்றவர். "உன் உணர்வுகளை நான் புரிந்து கொண்டேன் ஆனால் எனக்கும் மனசு இருக்குடா"...


"நான் மிகவும் தைரியமான மனிதன் தான், ஆனால் எனக்குள்ளே பாசம் , காதல் எல்லாம் இருக்குடா, நான் மனுஷன் தான் கல்லு இல்லை, நான் உயிரோட இருக்கிறதே உங்களுக்காகத் தான் "... என்றவர், “ அவள் என் கூடத் தான்டா இல்லை”... ஆனா என்றவர் மார்பைத் தொட்டுக்காட்டிய படி இருக்கையில் அமர்ந்தார்.


தளர்ந்துப் போய் அமரந்த, தந்தையைப் பார்த்துப் பதறிப் போனான் ருத்ரன்.

அவன் பார்க்காத ஒரு புதிய மனிதனாக உணர்வுகளின் மொத்த உருவமாகத் தன் முன் உடைந்துப் போய் அமர்ந்திருக்கும் தந்தையைக் கண்டு தன் மேலே கோவம் வந்தது ருத்ரனுக்கு...


தன் உடல் நிலை மனதில் கொள்ளாமல் வேகமாக எழுந்தவன், தன் அடிப்பட்ட காலைக் கவனிக்காதுத் தந்தையின் அருகில் வந்தவன், அவரை அணைத்த படி "சாரிப்பா, சாரி... நான் ஏதோ வேதனையில் பேசிட்டேன் ... இப்படிப் பேசியிருக்கக் கூடாது ... அம்மாவப் பத்தித் தப்பாப் பேசியதும் , கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டேன் , ரியலிச் சாரி" என்று அவரை இறுக அணைத்து இருந்தான்...

மெல்லச் சுயம் பெற்ற நீலகண்டேஷ்வரன் தன் மகனின் செயலில் பதறியபடி..


"ருத்ரா எழுந்திரு முதலில் , காலைப் பாரு வலிக்கும்" என்றவர், அவனைக் கைத்தாங்கலாக வந்து படுக்கையில் படுக்க வைத்து நர்ஸை அழைத்தார். அவன் தன் கையில் போட்டிருக்கும் ஐவி ஊசியை இழுத்ததால் அங்கிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது... வெளியே அமர்ந்திருந்த செவிலிப்பெண் வந்து அவன் கையில் வரும் குருதியை நிறுத்த ஆக வேண்டிய பணியைச் செய்தப் பின் மீண்டும் ட்ரிப்ஸ் போட்டவள்...


"காலுக்கு அதிகம் வேலைக் குடுக்கக் கூடாது , அப்பறம் சரியாக டைம் எடுக்கும் சார் " என்று மென்மையாகக் கண்டித்ததைப்பார்த்தச் சிரித்த ஈஷ்வர் "நானும் அதைத் தான் சொன்னேன்ம்மா, அவன் கேட்கவில்லை " என்றார்..


அவள் சென்றதும் அவன் அருகே அமர்ந்துவர் "இப்படி உணர்ச்சி வசப்படாதே ருத்ரா " என்றவர் ... மாயாவதியை அழைத்து ருதர்னுக்கு நடந்த விபத்தைப் பற்றிய தகவல்கள் சொன்னார்...


"மாயாம்மா வந்தா ரொம்ப எமோஷனல் ஆகி அழுவாங்க, ஏன் அப்பா இப்படிப் பண்ணறீங்க" என்றவன் அமைதியாகப் படுத்தான். "எனக்குத் தூக்கம் வருது "என்று...கண்களை முடி உறங்கும் மகனையே பார்த்தவருக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது...

என்ன தான் பாசம் , நேசம் இருந்தாலும் தாய்ப் பாசத்திற்கு முன் எதுவும் நிற்காது என்று மனதில் உணர்ந்தார்... 'இனி எப்படி ருத்ரனை எதிர்கொள்ளப் போகிறாள் கங்கா' என்ற எண்ணம் தோன்றியதும் ஒரு புன்னகை அவர் இதழில் பிறந்தது..


இதற்காகக் தானே அவளைப் பார்க்க அனுப்பிவைத்தேன், அதை மறந்துட்டான் அவள் பிள்ளையல்லவா, அது தான் மிகவும் சுலபமாக மறதி வருது என்றவரின் முகத்தில் வந்த கேலிப் புன்னகையை அம்மாவும் பிள்ளையும் நல்ல வேலைப் பார்க்கவில்லை... ...


எல்லாத் துன்பங்களையும் வருங்காலம் சரி செய்யும் என்ற நீலக்கண்டேஷ்வரனின் நம்பிக்கையை, பதம் பார்க்கத் தயாராகி இருக்கும் இளையமகனை, தடுக்க யாருமில்லை..


தொடரும்....
 
Last edited:
Top