எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நினைவுகளை நே(யா)சிக்கிறேன்

santhinagaraj

Well-known member
நினைவுகளை நே(யா)சிக்கிறேன்

விமர்சனம்

பிரணந்திதா சின்ன வயதிலேயே கார் விபத்தில் தாய் தந்தையை இழந்து தாத்தாவின் அரவணத்தில் வளர்கிறால் அந்த விபத்தின் அதிர்ச்சியின் தாக்கத்தில் அடிக்கடி நினைவுகளை இழந்து விடுகிறாள். அவருடைய ஆழ்மனத்தில் பதியும் ஒரு சில நினைவுகளைத் தவிர மற்றவற்றை அடிக்கடி மறந்துவிடும் நிலையில் இருக்கும் அவளை அவளுடைய தாத்தா அவருடைய நண்பரின் பேரனான ருத்ரபிரணவனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்.

பிரணந்திதாவின் தாய்மாமா அவளுடைய சொத்துக்களை அடைய அவளை கொலை செய்ய திட்டமிடுகிறார். இதில் சிலரின் சூழ்ச்சியில் ருத்ரனை மறந்து விடுகிறாள்.

ருத்ரன் பிரணந்திதாவை அவளுடைய தாய்மாமனிம் இருந்து எப்படி காப்பாற்றி அவளுடைய நினைவுகளை மீட்டெடுக்கிறான் என்பதே மீதி கதை.

கதை கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது இன்னும் கொஞ்சம் தெளிவா கொடுத்து இருக்கலாம் எழுத்து நடையும் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.

பிரணவ் பெயர் ரொம்ப குழப்பமா இருந்தது. கில்லர் பிரணவ் யாரு அவளுக்கு நந்திதாவுக்கும் எண்ணத் தொடர்பு நந்திதாவோட பிரண்டும் அந்த கில்லர் பிரணவ் ரெண்டு ரெண்டு பேரும் ஒரே ஆளுன்னு ரொம்ப குழப்பமா இருந்துச்சு.

ரொம்ப விறுவிறுப்பான கதைக்களம் இன்னும் கொஞ்சம் தெளிவா கொடுத்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்

வாழ்த்துக்கள் 💐💐💐
 

NNK 101

Moderator
Thank you for your wonderful review and taking time for read my story
நிச்சயமா உங்கள் கருத்துகளை ஏற்று கொள்கின்றேன் போட்டி முடிஞ்சதும் திருப்பி எழுதும் போது இவற்றை கவனிக்கின்றேன்.
நான் ருத்ர பிரனவையும் நந்திதாவின் நண்பன் பிரனவையும் குழப்ப நினைத்தால் நீங்கள் கில்லருடன் குழம்பிவிட்டீர்களா இது அநியாயம் 🙈🙈🙈🙈
மீண்டும் நன்றிகளுடன் NNK101
 
Top