எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் தேனாக மோத

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK70
#தீராதகாதல்தேனாகமோத!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
வாவ் அருமையான கதை 👏🥰
இதயசந்திரவர்மன்.. அசிஸ்டன்ட் கமிஷனர்.. இவனின் மனம் கவர்ந்தவள மிருணாளினி.. குத்து பட்டு வரும் சந்திரனுக்கு.. ஒன்றுமில்லை இதய் என்று கூறும் பெண் அவளின் மீது சொல்ல முடியாத உணர்வும் காதலும் ஏற்படுகிறது அந்த மயக்க நிலையிலும்.. ஆபத்து நிலையில் இருக்கும்போதும் பெண் அவளிடம் வம்பு செய்வது அழகு 🥰😀 மனம் நிறைய காதல் இருந்தாலும் சந்திரனின் காதலை மறுக்கிறாள் மிருணா 😔 ஏன் என்பதும் அதற்கான பிளாஷ்பேக்கும் கதையில்... பாவம் இவளின் அம்மா பழி ஓரிடம் பாவம் ஓரிடம் 😔 இவள் தந்தையின் மீது அளவு கடந்த கோபம் வருகிறது 😡
மருத்துவரான மிருணாளினி சிகிச்சை அளித்த சிறுவன் இறந்ததால் இவள் மீது வழக்கு பாயும் நிலை.. அதை சந்திரன் மிக விரைவாக கண்டுபிடிக்கிறான்... பின்பு அரசியல் கடத்தலை கண்டுபிடிக்க செல்லும் சந்திரன் எதிரிகளால் கடத்தப்படுகிறான்.. ஒரு விபத்தில் கோமாவுக்கு செல்கிறாள் மிருணா.. கோமாவில் இருந்து குணமாகி வரும் போது கர்ப்பமாக இருக்கிறாள் 😔 இதற்கு காரணம் யார் இப்படி பல ட்விஸ்டுகளை கொண்டுள்ளது கதை ..
ஸ்வேதா மிருணாளினி நட்பு அழகு 🥰 விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏
Good luck 🥰 🌹 💐
என்னால் லிங்க் ஷேர் செய்ய முடியவில்லை யாராவது ஷேர் செய்தால் நன்று 🥰
 
Top