எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விழி முதல் மொழி வரை

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
NNK48
#விழிமுதல்மொழிவரை
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
வாவ் வாவ் வாவ் 🥰👏👏
அருமையான கதை
நிறுதிவாசன் வாய் பேச முடியாத காது கேட்காத ஹீரோ... அன்பும் பாசமும் எதிலும் வேகமும் கொண்டவன்.. நிதன்யா... எதிலும் பதட்டமில்லாதவள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவள்.. இவளும் நிறுவும் ஒரே அப்பார்ட்மெண்டில் குடியிருக்கிறார்கள்.. அதில் படிக்கட்டில் ஏறி வரும்போது ஒருவருக்கொருவர் பார்த்து பிடித்து விடுகிறது.. ஆனாலும் தன்னிலை நினைத்து தன் காதலை மறைத்துக் கொள்கிறான் நிருதி... பெண் அவளுக்கு இவன் நிலை தெரிந்து வெகு அதிர்ச்சி.. காதலா தன் குடும்பமா என இரு வேறு மன நிலைகளில் அலசி ஆராய்ந்து காதலே முதன்மை பெற்ற அவனுக்காக அவனிடமே போராடி அவன் சம்மதம் பெற்று பின்பு பெற்றோர்களின் சம்மதமும் பெற்று திருமணம் முடித்துக் கொள்கிறாள்.. குடும்பத்தார் பயந்தது போன்று ஒலி இல்லாத அவன் வாழ்வோடு இவள் ஒன்றி வாழ்ந்தாளா என்பது கதையில்... தீரஜ் அருமையான கதாபாத்திரம் குறும்புடன் கலகலப்பாக குடும்பத்தை வைத்துக் கொள்கிறான் 🥰👏
பார்க்கவ் ஜனனி திவாகர் மகதி சரண் தாத்தா பாட்டி அம்மா அப்பா மாமா அத்தை என பெரிய குடும்பம் அனைவரும் நல் உள்ளங்களே.. 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏🌹
Good luck 🥰🌹💐
 
Top