எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் கர்மா- கதை திரி

காதல் கர்மா


அத்தியாயம் 1


“நீ ஒன்னும் பயப்படாத டி மீனு உனக்கு இது முதல் தடவையில்லை அப்படி தான் இருக்கும் போக போக சரி ஆகிடும்”

என்று தன் முன்னே கூறிக் கொண்டிருந்த காவ்யாவை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள் மீனு என்கிற மீனாட்சி ‘எப்படி இவளுக்கு இவ்வளவு பெரிய விஷயம் சாதாரணமாக தெரியுது’ என்று நினைத்து கொண்டிருந்தாள்.


“மீனு” என்று அவள் தோளை பிடித்து உலுக்கியவள் “கம் ஆன் சிட்டியில இதெல்லாம் நார்மல்” என்று கூற

“எனக்கு புரியுது இருந்தாலும் பயமா இருக்கு காவ்யா” என்று கண்கள் கலங்க மீனாட்சி கூறினாள்.


“உங்க அப்பா ஆப்ரேஷனுக்கு பணம் வேணும்ன்னு சொன்னல்ல ஜஸ்ட் ஒரு நாள் தான் உன் அக்கௌன்ட்க்கு அமௌன்ட் வந்துரும்

இதுல உனக்கு எந்த பிராப்ளமும் வராது அங்க வரவங்க எல்லாம் சொசைட்டில பெரிய ஆளுங்க இப்போ சொல்லு உனக்கு ஒகே வா என்னை நம்பு”


“சரி” என்றாள் ஒரு மனதாக மீனாட்சி

“குட் கேர்ள் நீ இங்கேயே இரு நான் போய் வார்ட்டன் கிட்ட சொல்லிட்டு வரேன்” என்று கூறி விட்டு காவ்யா விடுதி காப்பாளரின் அறைக்கு ஓடினாள்.


‘தான் செய்வது சரி தானா இதெல்லாம் அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்‌’ என்று தன் மனதில் போட்டு குழம்பிக் கொண்டு இருந்தாள் மீனாட்சி.


மீனாட்சி வயது 19 பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்து கொண்டிருக்கிறாள் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து நகரத்திற்க்கு படிக்க வந்திருக்கிறாள்

ஆறுமுகம்-கண்ணம்மா தம்பதியரின் மகள்

மீனாட்சிக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை இருக்கின்றனர்

தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவள் தாய் வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் குடும்பம் வறுமையில் வாட தனது கல்லூரி படிப்பிற்க்கு தானே பகுதி நேர வேலை பார்த்து படித்து கொண்டிருக்கிறாள்

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு

முன்பு அவள் தந்தையின் உடல்நிலை இன்னும் மோசமாகி விட அறுவை சிகிச்சை செய்தால் தான் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர் கூறிவிட்டார்

என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணம்மாவும் மீனாட்சியும் விழி பிதுங்கி நின்றுவிட்டனர்.


இருவரும் வெவ்வேறு இடங்களிலில் முயற்சி செய்தும் எங்கும் பணம் கிடைக்கவில்லை

இறுதியாக தன் தோழி காவ்யாவிடம் விஷயத்தை கூற அவள் அதற்க்கு வழி சொல்கிறேன் என்று ஒரு விஷயத்தை கூற அதை கேட்டவள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுவிட்டாள்.


அது என்னவென்றால்

இந்த கல்லூரியின் நிறுவனர் தன் கல்லூரியை மேம்படுத்த பெரிய பணக்காரர்களுக்கும் பிரபலங்களுக்கும் இந்த கல்லூரியில் இருந்து படிக்கும் பெண்களை அவர்களோடு சல்லாபம் செய்ய ஒரு இரவுக்கு என்று பணம் கொடுத்து அனுப்பி கொண்டிருக்கிறார் இதில் வரும்

பெண்கள் கஷ்டப்படுபவர்கள் மற்றும் பணத்திற்க்காக உல்லாசமாக செலவு செய்யாலாம் என்று வருபவர்கள் தான் அதிகம்.


காவ்யா இதே போன்று தன் செலவிற்க்காக முன்பு சென்றதாகவும்

நீயும் வருகிறாயா என்று மீனாட்சியிடம் கேட்டவுடன் அவள் தயங்கினாள் பின் தன் தந்தையின் மருத்துவ செலவிற்காக இறுதியாக ஒப்புக் கொண்டாள்.


என்ன தான் அவளிடம் சரி என்று கூறினாலும் தன் தாய் கல்லூரிக்கு செல்லும் முன் கூறிய அறிவுரை எல்லாம் நினைவுக்கு வந்தது மீனாட்சிக்கு


“பாப்பா நம்ம வீட்டிலையே நீ தான் முதல் தடவை காலேஜிக்கு போற நல்லா படி ஒழுக்கமா இருந்து அப்பா அம்மா பேர காப்பத்தனும்” என்று கூறி கண்ணம்மா கண்கள் கலங்க வழியனுப்பி வைத்தது நினைவுக்கு வந்தது இதையெல்லாம் அவள் யோசித்து கொண்டே அமர்ந்து இருக்க

மீண்டும் அறைக்கு ஓடி வந்த காவ்யா “நான் வார்டன் கிட்ட சொல்லிட்டேன் இந்த வீக்கென்ட் போகனும்” என்று கூறினாள்.


மீனாட்சி எதுவும் பேசாமல் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் தான் தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி அவளை கொன்றது.


காவ்யா மீனாட்சியின் அறை தோழி அந்த கல்லூரியிலேயே சரியான அலட்டல் பேர் வழி அவள் பெண்களிடம் பேசுவதை விட ஆண்களிடம் பேசுவது தான் அதிகம் தன் ஆடம்பர உடை மற்றும் ஒப்பனைக்காக இது போன்று தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறாள்

இப்போது மீனாட்சியையும் இதில் தள்ள பார்க்கிறாள்.


மீனாட்சியின் வாழ்க்கை என்னவாகுமோ..?


*********************************************


ஐந்து நட்சத்திர விடுதி


டிஸ்கோ என்ற பெயரில் இருட்டில் பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் தடவிக் கொண்டே நடனமாடிக் கொண்டே தனி அறையில் நடப்பதையெல்லாம் இங்கே செய்து கொண்டு மற்றவர்கள் பார்த்து கூசும்

அளவிற்க்கு அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி கொண்டிருந்தனர்

மது கிண்ணத்துடன் அரை போதையில் ஒரு சிலர் நின்று கொண்டிருக்க

அங்கே முக்கிய பிரபலங்களும்

செல்வந்தர்களும் ஒன்று கூடி இருந்தனர்.


அமைச்சர் மகனின் பிறந்த நாள் இன்று என்பதால் அனைவருக்கும் விருந்து மது,மாது என்று ஏற்பாடு செய்து இருந்தனர்.


அந்த நட்சத்திர விடுதியின் உள்ளே வேக நடையுடன் ஃபார்மல் ஷர்ட் ஜீன்ஸ் கோர்ட்டுடன் கம்பிரமாக வசிகரிக்கும் தோற்றத்துடன் ராஜ நடையுடன் உள்ளே நுழைந்தான் வம்சி கிருஷ்ணா.


ஒரு சிலரின் பார்வை வந்துட்டானா என்பது போலவும் வேறு சிலரின் பார்வை ஆச்சரியத்துடனும் அவனை உற்று நோக்கியது.


அங்கிருந்த பெண்களோ பலா பழத்தில ஈ மொய்ப்பதை போல அவனை சுற்றி நின்று கொண்டனர்.


இதையெல்லாம் பார்த்த அங்கிருந்த ஆண்கள் “மச்சக்காரன் டா இவனுக்கு மட்டும் எப்படி தான் ஊர்ல இருக்க அத்தனை அழகியும் வந்து சிக்குறாளுகளோ தெரியல” என்று ஒருவன் கூற

“அழகா இருக்கான் பரம்பரை பணக்காரன் வேற விடுவாளுகளா இவளுங்க அவனை ஏன் டா குறை சொல்லுறிங்க நமக்கு தான் எதுவும் கொடுத்து வைக்கல” என்றான் அவனை பார்த்து கொண்டே ஏக்கதத்துடன்.


“அவனை ஏன் டா அப்படி பார்க்குற அவனா நீ” என்று ஒருவன் கிண்டலடிக்க

அவனோ “டேய்” என்று அவனை அடிக்க போக இங்கே வம்சியால் ஒரு குட்டி கலாட்டா ஒன்று நடந்து கொண்டிருந்தது.


இதை எதையும் கண்டு கொள்ளாமல்

தன்னை பெண்களின் கண்கள் வட்டம் அடித்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் மது கிண்ணத்துடன் ஒரு அலட்சிய பார்வையுடன் அமர்ந்து கொண்டான் வம்சி.


வம்சி கிருஷ்ணா வயது 30 கிருஷ்ணா குருப்ஸ் ஆஃப் கம்பெனியின் ஒரே வாரிசு

பரம்பரை பணக்காரன் பிறக்கும் போதே கோடிக்கணக்கான சொத்துக்கு வாரிசாக பிறந்தவன்

இவன் பிறக்கும் போதே தாய் இறந்து விட தந்தையின் கண்டிப்பில் வளர்ந்தவன் வம்சியின் தாயை

கொன்றது அவன் தந்தை தான் என்ற பேச்சும் சமூகத்தில் உலாவிக் கொண்டு இருந்தது.


அதனாலையோ என்னவோ தன் தந்தை ‌சேதுராம கிருஷ்ணாவை அவனுக்கு சுத்தமாக பிடிக்காது‌

தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அயல்நாட்டில் முடித்துவிட்டு இங்கு வந்து தன் தொழிலை கவனித்துக் கொண்டு இருக்கிறான்.


திருமணத்தில் துளி அளவு கூட நாட்டம் இல்லாதவன்

ஏனெனில் தான் திருமணம் செய்து குழந்தை பெற்றாள் எங்கே தானும் தன் தந்தையை போன்று கொடூரனாக தான் இருப்போமா என்ற நினைப்பில் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான்.


அதற்காக அவனை ‌ராமன் என்றும் கூறி விட முடியாது தன் உடல் தேவைக்காக மட்டும் அவ்வப்போது

மங்கையரை நாடுபவன்

எப்போதும் ஒரு வித இறுக்கத்துடன் தான் இருப்பான் அதன் பின்னனி என்னவென்று அவன் மட்டுமே அறிவான்.


“வணக்கம் வம்சி சார்” என்று கூறிக் கொண்டே அமைச்சர் வேதாசலம் அவன் முன்னே அமர அவன் நட்பாக புன்னகைத்து விட்டு கையில் இருந்த மது கிண்ணத்தை அருந்தி கொண்டிருக்க “வம்சி சார் வர ஞாயிற்றுக்கிழமை கட்சி மாநாடு அவசியம் நீங்க வரனும்” என்று கூற

வம்சி அவரை யோசனையுடன் பார்த்தான் கையில் இருந்த மது கிண்ணத்தை மேஜையில் வைத்தான்

“இல்லை வேதாசலம் சார் அன்னைக்கு எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு என்னால வர முடியாது” என்று அவன் மறுக்க

“சார் நீங்க வரிங்கன்னு தலைவர் கிட்ட சொல்லிட்டேன் உங்களுக்கு தேவையான எல்லா ஏற்பாடும் கச்சிதமா பண்ணிக் கொடுத்துட்றேன்” என்க

“சரி நான் வர ட்ரை பண்றேன்”

“சார் எனக்காக கொஞ்சம் வர பாருங்க” என்று கூறிவிட்டு சென்றார்.அவர் எழுந்து சென்றவுடன் அதே இறுகிய முகத்துடன் மீண்டும் அமர்ந்து கொண்டான் வம்சி.


அமைச்சரின் அருகில் இருந்த அவரின் உதவியாளர் “தலைவரே இவரு வரலன்னா என்ன ஏன் அவரு கிட்ட கெஞ்சிட்டு இருக்கிங்க” என்க “யோவ் வர எலக்ஷனுக்கு ஸ்பான்சரே இவரு தான்

பெரிய ஆளு இவரை பகைச்சிக்கவே கூடாது பார்க்க தான் அமைதியா இருக்க மாறி இருக்கான் இவனுக்கு

எதிரா நின்னோம் ஒன்னு உயிர் இருக்காது இல்லையா உயிர் இருந்தும் நடைபிணமா தான் இருப்போம் மோசமானவன் எமகாதகன் ஒரமா வாயா அந்த ஆளு காதுல விழுந்துட போகுது” என்று அவரை தள்ளிக்கொண்டு சென்றார்.


மதுவை பருகி முடித்த வம்சி எழுந்து கழிவறைக்கு செல்ல நடந்து கொண்டிருக்கும் போது அவன் முன்னே வந்த அங்கே வேலை செய்யும் பணியாள் ஒருவன் அவன் மீது மோதிவிட்டான்

அவன் கையில் இருந்த ஜூஸ் பாட்டில்கள் அனைத்தும் வம்சி மீது கொட்டி விட்டது

உடனே தன் உடையை

பார்த்த வம்சிக்கு கோபம் பொங்கியது தனது பேன்ட் பாக்கெட்டின் பின்னே இருந்த தூப்பபாக்கியை எடுத்தவன் அந்த பணியாளரின் நெற்றியில் வைத்து சுட போக அங்கிருந்த அமைச்சர் ஓடி வந்து வம்சியை தடுத்து “சார் தெரியாம கொட்டிட்டான் அவனை விட்டுட்டுங்க

சார்” என்று கெஞ்ச அந்த பணியாள் பயத்தில் நடுங்கி அவன் காலில் விழுந்து விட போனா போகுது என்று அவனுக்கு உயிர் பிச்சை போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றான்.அந்த இடமே முன்பு இருந்த கொண்டாட்டம் எதுவும் இல்லாமல் நிசப்த அமைதியுடன் இருக்க அமைச்சரின் உதவியாளன்

அவனை ஆவென பார்த்து கொண்டே நின்றிருந்தான் ‘சட்டையில் ஜூஸ் கொட்டினதுக்கு போய் கொலை பண்ண பார்க்குறான்’ என்று மனதில் நினைத்து கொண்டான்.வம்சி எப்போதும் முன் கோபக்காரனே எதிரில் இருப்பவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்று கேட்க கூட அவகாசம் கொடுக்காமல் தன் கோபத்தின் வீரியத்தை காட்டி முடித்துவிட்டு தான் பேச வைப்பான்.


இப்படியாக ஞாயிற்றுக்கிழமையும் வந்தது வர மாட்டேன் என்று கூறிய வம்சி முதல் ஆளாக மாநாட்டிற்க்கு வந்திருக்க கட்சி கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.


அன்றைய இரவு வர ஐந்து நட்சத்திர விடுதியில் அனைவருக்கும் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது அனைவரும் மதுபோதையில் இருக்க வம்சி எவ்வளவு குடித்தும் நிதானத்துடன் இருந்தான் அனைவரும் பேசிக் கொண்டு இருக்க அமைச்சர் அன்றைய இரவை கழிக்க கல்லூரி ஒன்றில் இருந்து பெண்களை அழைத்து வந்திருக்க அதில் மீனாட்சி மற்றும் காவ்யாவும் வந்திருந்தனர்.


வம்சியை “சார்” என்று அழைத்து சென்ற வேதாசலம் அங்கிருந்த பெண்களை காட்டி “உங்களுக்காக தான்” என்று தலையை சொறிந்து கொண்டே கூற மது போதையில் கண்கள் இரண்டும் சிவந்து அமர்ந்து இருந்தவன் தன் எதிரே இருந்த பெண்களை பார்த்தான் அனைவரும் அரைகுறை ஆடையுடன் வந்திருக்க ஒருத்தி மட்டும் புடவையில் தன் இடை தெரிய

அதை சரி செய்து கொண்டே கஷ்டப்பட்டு நின்றிருந்தாள் அவள் இடையில் இருந்த கண்களை மேலே

கொண்டு சென்றவன் அவள் முகத்தை பார்க்க தலை குனிந்து நின்றிருந்தவளை பார்த்தான்

“திஸ் ஒன்” என்று அந்த பெண்ணை சுட்டி காட்ட “பொண்ணு ரூம் நம்பர் 101 சார் வருவாரு போய் வெயிட் பண்ணு” என்று அனுப்பி வைத்தான் வேதாசலம்.


அது வேறு யாரும் இல்லை மீனா என்கிற மீனாட்சியே தான்

அவள் சென்றவுடன் அங்கிருந்த அனைவரும் ஒவ்வொரு பெண்ணை

அழைத்து கொண்டு அறைக்கு சென்று விட

வேதாசலத்தின் உதவியாளனை அழைத்த வம்சி “ஏய் என்ன டா சரக்கு இது போதையே ஏறல என்னை ஏமாத்த பார்க்குறியா” என்க

வம்சியை பற்றி தெரிந்த அவன் பயத்துடன் “இல்லை சார் நல்ல சரக்கு தான்” என்றான் நடுங்கி கொண்டே

“எனக்கு இன்னும் நல்லா போதை ஏறனும்” என்று கூற

உடனே அவன் தன் பாக்கெட்டில் இருந்த போதை மாத்திரையை எடுத்து “இதை போட்டுக்கங்க சார் இன்னும் நல்லா ஏறும்” என்க அதை எடுத்து வாயில் போட்ட வம்சி முழு போதையுடன் மீனாட்சியின் வாழ்க்கையை பந்தாட சென்றான்.தொடரும்…..
 
Last edited:
அத்தியாயம் 2


வம்சியை பார்த்து கொண்டே நின்றிருந்த மீனாட்சிக்கு பதட்டம்

அதிகரித்து அவன் தன்னை கை காட்டுவான் என்று எதிர் பார்க்காதவள்

தடதடக்கும் இதயத்தோடு அறை எண் 101 தேடி கண்டுபிடித்து சென்றாள்

தயங்கி கொண்டே அந்த அறையின் உள்ளே செல்லாமல் வெளியே யோசனையுடன் நின்று கொண்டு இருக்க அவள் தோளில் யாரோ கை வைக்க அலறி அடித்து கொண்டு திரும்பினாள்.


அவளின் பதட்டத்தை பார்த்த காவ்யா “ஹேய் மீனு நான் தான்” என்று கூற “நீ தானா” என்றவள் நிம்மதி பெருமூச்சு விட “ஏய் இன்னைக்கு உன் கூட இருக்க போறவர் யார் தெரியுமா வம்சி கிருஷ்ணா

பெரிய பிஸ்னஸ் மேன் பணக்காரன் அதுவும் இல்லாமல்

அவரு இன்னும் சிங்கிள் தெரியுமா எனக்கு பாரு ஒரு கிழவன அனுப்பி வைச்சிருக்காங்க அந்த ஆளு நல்லா குடிச்சிட்டு தூங்கிட்டான்” என்று காவ்யா பேசிக் கொண்டே இருக்க “காவ்யா இதெல்லாம் தப்பு இல்லையா” என்று மீனாட்சி தயங்கி கொண்டே கேட்க

“இதில் என்ன டி இருக்கு நமக்கு காசு தேவை அவங்களுக்கு நாம தேவை கிவ்வன் அன்ட் டேக் பாலிசி மாறி தான் சரி நான் கிளம்புறேன் நேரமாச்சு யாராச்சும் வந்துட போறாங்க எதிரில் இருக்க ரூமில் தான் நான் இருக்கேன் டி” என்று கூறிவிட்டு காவ்யா செல்ல

மீனாட்சி ஒரு வழியாக மனதை திட படுத்திக் கொண்டு அறையின் உள்ளே சென்றாள்.


உள்ளே நுழைந்தவளுக்கு

ஏசியின் குளிர் நடுக்கம் கொடுக்க புடவையை இழுத்து போர்த்தி கொண்டு அமர்ந்து இருந்தாள் கை கால் எல்லாம் பயத்தில் உதறல் எடுக்க ஆரம்பித்தது பயந்து கொண்டே அங்கிருந்த சோஃபாவின் மூலையில் சென்று அமர்ந்து கொண்டாள்.


வம்சி முழு போதையில் வந்து கொண்டிருக்க வேதாசலத்தின் உதவியாளன் அவனை அழைத்து கொண்டு வந்து அறையின் வாசலில் விட்டான் “இந்த ரூம் தான் சார் போங்க எதுக்கும் செஃப்ட்டிக்கு வச்சிக்கோங்க” என்று பாதுகாப்பு பொருள் ஒன்றை கையில் கொடுத்து விட்டு சென்றான்

அவன் சென்றவுடன் கதவை வேகமாக திறந்து கொண்டு உள்ளே வந்தான் வம்சி.


தன் காலால் எட்டி உதைத்து கதவை சாற்றிவிட்டு திரும்ப

அவனை பார்த்த மீனாட்சியின் இதயம் வெளியே வந்து விழுந்துவிடும் அளவுக்கு படபடக்க ஆரம்பித்தது

தன் முன்னே வியர்வை வடிய பனைமரம் போல் நின்றவனை பார்த்தவள்‌

வெள்ளை நிற சட்டையின் மேலே இருந்த இரண்டு பட்டன்களும் திறந்து கிடைக்க படிக்கட்டு தேகத்துடன் தலைமுடியெல்லாம் கலைந்து முறுக்கு மீசையுடன் தன் முன்னே மாமிச மலை போல் ‌இருந்தவனை பார்த்தவளுக்கு பயம் வர ஆரம்பித்தது அவன் கண்களை பார்க்க கண்கள் இரண்டும் சிவந்து

புலி மானை வேட்டையாடும் முன் பார்க்குமே அதே பார்வையுடன்

அவளை அங்குலம் அங்குலமாக அளவெடுத்து கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு தன்னை அறியாமல் உடலில் நடுக்கம் வர ஆரம்பித்தது கதவை திறந்து ஓடி விடலாமா என்று நினைத்தாள்.


கதவை திறந்து கொண்டு ஓட பார்க்க அவளின் வெற்று இடையில் கை நுழைத்து தடுத்தவன் “எங்க டி போற” என்க

“நான் நான் நீங்க நினைக்கிற மாறி பொண்ணு இல்லைங்க என்னை மன்னிச்சிடுங்க நான் தெரியாம வந்துட்டேன் வெளியே போகனும்” என்று கூற

அவள் பேசும் எதுவும் அவன் காதில் விழவேயில்லை போதை தலைக்கேற அவள் வேண்டும் என்று உடலின் ஒவ்வொரு செல்லும் கூற

அவளை கொத்தாக தூக்கியவன் படுக்கையில் வீசி அவள் மேல் படர்ந்து தலையில் சூடி இருந்த மல்லி பூவை முகர்ந்தவனுக்கு

இன்னும் போதை ஏற அவளை ஆட் கொள்ள ஆரம்பித்தான்.


“வேண்டாம் வேண்டாம்” என்று அவள் கதற அதை எதையும் கண்டுகொள்ளாமல் அவள் இதழின் கீழ் இருந்த மச்சத்தில்

தன் முதல் இதழ் முத்திரையை பதித்தான்.


அவனிடமிருந்து விலக பார்த்தவளால் அவனை அசைக்க கூட முடியவில்லை தன் மேல் ஒரு பெரிய மணல் மூட்டை விழுந்ததை போல உணர்ந்தவள் மூச்சு விட சிரமப்பட்டாள்.
அவன் காரியமே கண்ணாக புடவையை பிடித்து இழுக்க அது அவன் கையோடு வந்துவிட்டது

அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்

எந்த ஆண்மகனும் அவளை தீண்டாத இடங்களில் அவன் கை தீண்ட அவளோ அதை பொறுக்க முடியாமல் அவனை தன் கை கொண்டு தடுக்க முயற்சிக்க அவன் தன் இரும்பு கரங்களால் அவள் கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி பிடித்து கொண்டான்

பின் தன் கையை விடுத்து இதழால் தீண்ட ஆரம்பித்தான்

அவனை தடுக்கும் பலம் அற்று கண்கள் கலங்க படுத்திருந்தவளை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையிட ஆரம்பித்தான் தலைவன்

அவளுக்கு மிகவும் நெருக்கமாகும் போது அவள் வலியில் கதற அவள் காதுகளில் தன் மீசை முடி உரச

“ஆர் யூ விர்ஜின் பேபி” என்க

அவள் பதில் எதுவும் கூறாமல் படுத்திருக்க

தன் வாழ்வில் பல பெண்களை ஆண்டவனுக்கு அவள் கன்னி தான் என்று ஒரு நொடியில் அறிந்து கொண்டான் ஏனோ போதையில் பாதுகாப்பை பற்றி யோசிக்க கூட மறந்திருந்தான் மது போதையா இல்லை மங்கையவள் போதையா ஏதோ ஒன்று அவனை ஆட்டுவிக்க மகுடிக்கு ஆடும் பாம்பை போல ஆடி கொண்டிருந்தான்.


அன்றைய இரவு முழுவதும் அவளுள் ஆட்சி புரிந்தவன் அவளிடம் தன் தடத்தை பதித்து விட்டு வாடிய மலராக அவளை கசக்கி எறிந்தான் விடியும் தருவாயில் அவளை விட்டு விலகி உறங்க ஆரம்பித்தான்.


இரவு முழுவதும் உறங்காததால் களைப்பில் மீனாட்சியும் உறங்கி

இருந்தாள் மறு நாள் காலை கண் விழிக்கும் போது போர்வைக்குள் தான் இருக்கும் நிலையை உணர்ந்தவள்

தன் அருகில் இருந்தவனை பார்த்தவளுக்கு தன்னை அறியாமல் அழுகை வர கழிவறைக்கு ஓடினாள் அங்கிருந்த ஷவரை திறந்தவளுக்கு

தண்ணீர் பட்டு உடலில் இருந்த தடங்கள் வேறு எரிச்சல் கொடுக்க கண்கள் கலங்க நின்றிருந்தாள் தன் மேல் ஏதோ அழுக்கு படிந்ததை போல் உணர்ந்தவளுக்கு எவ்வளவு நேரம் தண்ணீரில் நின்றும் அந்த அழுக்கு தன்னை விட்டு விலகாததை போல உணர்ந்தாள் ‘தன் வாழ்வில் திருமணம் என்ற ஒன்றை இனி நினைத்து கூட பார்க்க கூடாது’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.


‘எப்படியோ தந்தையின் மருத்துவ செலவிற்க்கு பணம் கிடைத்துவிடும்’ என்று நினைத்தவள் தன் வலியை எதையும் பொருட்படுத்தாமல்

குளித்து முடித்து வெளியே வந்தாள் இரவில் அவன் தூக்கி எறிந்த உடைகள் ஆங்காங்கே சிதறி கிடக்க அதையெல்லலாம் சேகரித்து எடுத்தவள்

புடவையை கட்டிக் கொண்டு இருக்க

படுக்கையில் வெற்று உடம்புடன் படுத்திருந்த வம்சி மெல்ல அசைந்தான் கண்களை திறந்து பார்க்க அங்கே தன் நீளக்கூந்தலை ஈரம் வடிய விரித்து விட்டு புடவை கட்டி கொண்டிருந்தவளை பார்த்தவன் ‘எவ்வளோ பெரிய முடி இந்த பொம்பளைங்க எப்படி தான் இதை மெயின்டேயின் பண்றாங்களோ’ என்று நினைத்தவன் படுக்கையில் இருந்து எழுந்தான்

சத்தம் கேட்டு திரும்பிய மீனாட்சி அவனை பார்க்க சங்கடப்பட்டு நின்றிருந்தாள்.


‘என்ன’ என்று நினைத்த வம்சி தன் உடலை பார்த்தவன் தான் இருக்கும் நிலையை உணர்ந்து

‘நைட் எல்லாம் இப்படி தான் இருந்தேன் ஏதோ பார்க்காததை பார்த்த மாறி சீன் போட்றா’ என்று நினைத்தவன்‌

கீழே கிடந்த டவலை எடுத்து கட்டிக் கொண்டு குளிக்க சென்றான்.


குளித்து முடித்து வெளியே வரும் வரை அவனுக்காக காத்திருந்த மீனாட்சியை பார்த்து “நீ இன்னுமா கிளம்பல?” என்க

“அப்போ நான் கிளம்பவாங்க” என்று அவள் கேட்க “ம்ம்” என்று பதில் கூறியவன் அவள் கதவின் அருகில் செல்லும் போது

“ஏய் யூ ஒரு நிமிஷம்” என்றவன் அங்கிருந்த ஒரு கட்டு பணத்தை எடுத்து அவள் கையில் கொடுக்க.


“எதுக்கு வேண்டாம்ங்க” என்க

“சும்மா படுக்க நான் என்ன உன்னை மாறி” என்று ஏதோ கூற வந்தவன்

இடைவெட்டி அவள் கையில் பணத்தை திணித்தான்

அவன் கூறியதை கேட்டவளுக்கு முகமே வாடிவிட்டது சோர்ந்து போய் வெளியே வர உடனே அவன் வேகமாக கதவடைத்தான்.


இரவெல்லாம் உறங்காததால் உடல் அசதியை கொடுக்க படுக்கையில் விழுந்தவன் அப்படியே உறங்கி போனான்

மீனாட்சியை அவன் தான் இருக்கும் பத்தில் ஒரு பெண்ணை போல நினைத்து கொண்டிருந்தான்

வம்சி ஒன்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை அவனுடைய இந்த நிம்மதியான உறக்கம் இன்னும் குறை காலத்திற்க்கு மட்டுமே என்பதை

காலம் அனைத்திற்கும் பதில் கூறும் அனைவரும் தங்கள் கர்ம பலன்களை அனுபவித்து தானே ஆக வேண்டும்.


கையில் பணத்தை வாங்கி கொண்டு வெளியே வந்த மீனாட்சிக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது

கண்ணை துடைத்து கொண்டவள் அழுது கொண்டே ஹாஸ்டலிற்க்கு சென்றாள் அவளுக்காக அறையில் காத்திருந்த காவ்யா “வந்துட்டியா உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்

எப்படி இருந்துச்சு உன்னோட பர்ஸ்ட் நைட்” என்று கண்ணடித்து கேட்க மீனாட்சி பதில் எதுவும் பேசாமல் இருக்க

அவளை மேல் இருந்து கீழ் வரை அளவெடுத்தவள் அவள் கழுத்து வளைவில் இருந்த தடத்தை பார்த்து “என்ன டி லவ் பைட்டா” என்க மீனாட்சி கோபத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டாள்.


அவள் அடித்த அதிர்ச்சியில் அவளை முறைத்து கொண்டே கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள் காவ்யா “நான் ஒன்னும் உன்னை மாறி கிடையாது பணத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ண” என்று அந்த அறையே அதிரும் படி அவள் கத்த

வம்சியிடம் காட்ட முடியாத கோபத்தை காவ்யாவிடம் காட்டி கொண்டு இருந்தாள்

“ஏய் சீ வாயை மூடு பெரிய பத்தினி வேஷம் போடாத இந்தா உனக்கு வர வேண்டிய காசு அதை கொடுக்க தான் வந்தேன்

நான் பணத்துக்காக படுத்தேன்னா நீயும் அதுக்காக தான் நேத்து போய்ட்டு வந்துருக்க பெரிய கண்ணகி இவள் போ டி” என்று கூறி அவளுக்கு சேர வேண்டிய பணத்தை அவள் முகத்தில் தூக்கி எறிந்துவிட்டு சென்றாள் காவ்யா.


அவள் சென்றவுடன் தரையில் அமர்ந்து ஓவென கதறி அழ ஆரம்பித்தாள் மீனாட்சி இந்தனை வருடம் காப்பாற்றி வந்த கற்பு தன்னை விட்டு கை மீறி போய்விட்டதே என்ற ஆதங்கம் அழுகையாய் வெளியே வர அழுது கொண்டே இருந்தாள் எவ்வளவு நேரம் அழுதிருப்பாளோ மதிய வேளையில் தன் அறை கதவு தட்டும் சத்தம் கேட்டு வெளியே சென்று பார்க்க பக்கத்து அறையில் இருக்கும் உமா வந்திருக்க.


“என்ன உமா?” என்று கேட்க

“உன்னை பார்க்க யாரோ வந்துருக்காங்க வார்டன் வர சொன்னாங்க” என்று கூறிவிட்டு

போக யாராக இருக்கும் என்று நினைத்து கொண்டே சென்றவள் அங்கே தனது சித்தப்பா நின்றிருப்பதை பார்த்தவளுக்கு

பதட்டம் அதிகரிக்க அவரிடம் ஓடி “என்ன சித்தப்பா” என்று பதறி கொண்டே கேட்க

“அப்பா” என்று ஏதோ கூற வர

“அப்பாவுக்கு என்னாச்சு சித்தப்பா” என்று கேட்க

“அப்பா இன்னைக்கு விடியற்காலையில் இறந்துட்டாரு மா அதான் உன்னை அழைச்சிட்டு போக வந்தேன்” என்று கண்கள் கலங்க கூறி முடித்தார்.


அதை கேட்டவளுக்கு தலையில் ஒரு இடியே விழுந்ததை போல உணர்ந்தவள் சொட்டு கண்ணீர் கூட விடாமல் பித்து பிடித்ததை போல நிற்க “மா மீனாட்சி” என்று அவளின் சித்தப்பா கூறிய எதுவும் அவள் காதில் விழவில்லை.


இந்த இரண்டு நாளில் எத்தனை வலியை தான் அவளும் தாங்குவாள் தன் தந்தையின் உயிருக்காக தன் கற்பையே துச்சமனே தூக்கி எறிந்தவள்

இன்று அந்த தந்தையே இல்லை எனும் போது என்ன செய்வாள்.


இவ்வளவு பெரிய வலியை பெண்ணவள் எப்படி தாங்குவாளோ….


தொடரும்…..
 
அத்தியாயம் 3


“அம்மா மீனாட்சி” என்று மீனாட்சியின்

சித்தப்பா கத்திக் கொண்டே இருக்க சுய நினைவற்று நின்று இருந்தவளுக்கு கண்கள் இருட்டி கொண்டு வர அப்படியே மயங்கி கீழே சரிந்தாள்.


விடுதி காப்பாளர் ஓடி வந்து அவளை பிடித்து கொள்ள அங்கிருந்த மாணவிகள் அனைவரும் உடனே அவளை சுற்றி நின்று கொண்டனர்.


“ஏய் எல்லாரும் நகருங்க டி அந்த பொண்ணுக்கு காற்று கொஞ்சம் வரட்டும்” என்று காப்பாளர் கத்த அனைவரும் விலக தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தார் மெல்ல கண் அசைத்தாள் மீனாட்சி.


அவள் கன்னத்தில் தட்டி “மீனாட்சி” என்று எழுப்ப கண் திறந்தாள்

அவளின் கையை பிடித்து மெல்ல எழுப்பி நிற்க வைத்தார்

அவள் சுய நினைவின்றி தடுமாற

“அம்மாடி பெரிய பிள்ளை நீயே இப்படி கலங்கி போய் நின்னா

உன் குடும்பத்துக்கு யாரு ஆறுதல் சொல்லுவா உங்க அப்பாவுக்கு செய்ய வேண்டிய இறுதி மாரியாதையவாது ஒழுங்கா செஞ்சி முடிப்போம் வா மா” என்று அவளின் சித்தப்பா பாபு கண்கள் கலங்க கூற எந்த வித பதிலும் கூறாமல் அதே விரக்தியுடன் தலையை மட்டும் ஆட்டினாள்.


அவள் நடந்து செல்ல தடுமாறும் போது காவ்யா ஓடி வந்து அவளை பிடித்து கொண்டாள் “என் கூட வா மீனு” என்று அறைக்கு மெல்ல அழைத்து செல்ல எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் அவளுடன் சென்றாள் மீனாட்சி‌.


அறைக்கு அழைத்து சென்று அவளுக்கு சாப்பிட ஜூஸ் எடுத்து கொண்டு ஓடி வந்தவள் அதை அவள் கையில் கொடுக்க மீனாட்சி அதை வாங்காமல் அப்படியே அமர்ந்து இருக்க “மீனு கொஞ்சமாச்சும் குடி அவ்வளவு தூரம் போகனும்ல்ல உடம்புல தேம்பு வேணும் டி” என்று பேசி பேசி அவளை குடிக்க வைத்தாள் காவ்யா அவளுக்கு தேவையான துணிமணிகளை அடுக்கி வைத்து விட்டு ‌அவளை உடை மாற்ற வைத்து வெளியே கூட்டி வந்தாள்

வரும் போது அவள் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டவள் “சாரி எல்லாம் என் தப்பு தான்‌ நீ ஒன்னும் கவலை படாத மீனு நான் இருக்கேன் தைரியமா இரு” என்று ஆறுதல் கூறினாள்.


ஆயிரம் தான் காவ்யாவிற்க்கு மீனாட்சி மேல் கோபம் இருந்தாலும்

அவள் கஷ்டப்படும் போது அவளால் வேடிக்கை பார்த்து கொண்டே நிற்க முடியவில்லை.


அவள் கூறியதை கேட்ட மீனாட்சி

வாழ்க்கையையே வெறுத்ததை போல அவளை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நடந்து சென்றாள்.


மீனாட்சியின் சித்தப்பா அவளுக்காக காத்திருக்க ஒரு நடைபிணைத்தை போல உயிரற்று அவருடன் நடந்து தன் ஊருக்கு செல்ல பயணப்பட்டாள்.


பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது மீனாட்சி தற்செயலாக திரும்ப அவள் பக்கத்து இருக்கையில் ஒரு குழந்தை தன் தந்தையின் தோளில் பாதுகாப்பாக படுத்து உறங்கி கொண்டிருக்க அதை பார்த்தவளுக்கு

தன் தந்தையின் நினைவு வந்துவிட்டது எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தங்களை வளர்த்து

படிக்க வைத்தார் என்று நினைத்து கொண்டே பயணம் செய்து கொண்டு இருந்தாள்


மீனாட்சியின் தந்தை அவளின் சிறு வயதில் இருந்தே விவசாயம் தான் செய்து கொண்டிருக்கிறார் கடுமையான உழைப்பாளி வெயில் மழை என்று கூட பாராமல் உழைப்பவர் அவரின் அந்த உழைப்பே அவருக்கு வினையாக மாறி இருந்தது.


நன்றாக இருந்தவர் ஒரு நாள் வயலில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது மயங்கி விழ

மருத்துவமனைக்கு சென்று அனுமதித்தனர்

அப்போது தான் தெரிந்தது

ஆறுமுகத்தின் ஒரு கையும் காலும் செயலற்று போனது என்று அன்றிலிருந்து இன்று வரை படுத்த படுக்கையாக தான் இருக்கிறார்.


அவள் தாய் கண்ணம்மா தான் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்

“பொட்ட புள்ளைய இவ்வளவு கஷ்டத்துல எதுக்கு படிக்க வைக்குற எவனுக்காச்சும் கட்டி கொடுக்க வேண்டி தான” என்று

உறவினர்கள் எவ்வளவு கூறியும்

அதை எதையும் காதில் வாங்காமல் மீனாட்சியை படிக்க நகரத்திற்க்கு அனுப்பி இருந்தார்.


‘அப்படிப்பட்ட தன் தாய் தந்தைக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செய்து இருக்கிறோம்

ஒரு பெண் எதை இழக்க கூடாதோ அதையே இழந்து விட்டு வந்திருக்கிறோமே இந்த சமூகத்தை எப்படி எதிர் கொள்ள போகிறோம்

தன் தந்தைக்காக தான் இப்படி ஒரு காரியத்தை செய்தேன் என்று கூறினாள் யாரேனும் நம்புவார்களா‌

தன் தந்தை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கும் போதே அச்சமாக இருந்தது’ அவள் தன் எண்ண ஓட்டங்களில் முழ்கி இருக்க

இப்படியே மூன்று மணி நேரம் கழிந்தது

“மீனாட்சி” என்று அவள் சித்தப்பாவின் குரல் கேட்டு சுய நினைவிற்கு வந்தவள் திரும்ப

“ஊர் வந்திருச்சு வா மா” என்று அழைக்க இருவரும் கீழே இறங்கினார்.


அதுவரை அமைதியாக இருந்தவள் ஊரின் எல்லையில் கால் எடுத்து வைக்கவும் தன் தந்தையின் நினைவு வந்து விட

துக்கம் தொண்டையை அடைத்தது விறுவிறுவென நடந்து தன் வீட்டை சென்றடைந்தவள்

வெளியே அவளுடைய உறவினர்கள் அனைவரும் நின்றிருக்க மீனாட்சி வருவதை பார்த்தவர்கள் அவளை பாவமாக பார்க்க சிறிய ஓலை வீட்டின் வெளியே ஆறுமுகத்தை பிணமாக படுக்க வைத்திருக்க

இரண்டு புறமும் அவளின் தம்பி தங்கை அழுது கொண்டு இருந்தனர்.


மீனாட்சியை பார்த்தவர்கள் அவளிடம் கதறி கொண்டே ஓடி வர அவர்களை கட்டி அணைத்து கத்தி கதறி அழுக ஆரம்பித்தாள்

அவர்களை பார்த்த சுற்றியிருந்தவர்கள் “பாவம் இந்த பிள்ளைங்க இனி என்ன பண்ண போகுதுகளோ இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டாவது மகராசன் போய் சேர்ந்து இருக்கலாம் மருமகன் இருந்திருந்தா அவனாவது இந்த குடும்பத்தை பார்த்துருப்பான்” என்று கூற.


அதை கேட்டவளுக்கு நேற்று இரவு நடந்த அனைத்தும் நினைவுக்கு வர இன்னும் இன்னும் கதற ஆரம்பித்துவிட்டாள் கண்ணம்மா வந்து பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறி அமர வைக்க “அம்மா” என்று அவரை கட்டிக் கொண்டாள்.


ஊரே அந்த குடும்பத்தை பாவமாக பார்த்து கொண்டு நின்றிருந்தனர்.


“நல்லா உழைச்சிட்டு இருந்த மனுஷன் இரண்டு ஆள் வேலைய ஒரே ஆளா செய்வாரு

இந்த பிள்ளைங்க இவரு நல்லா இருக்கும் போது எப்படி இருந்துச்சிங்க இனி எப்படி காலம் தள்ள போகுதுங்களோ”


“நான் அப்போவே சொன்னே கண்ணம்மா கிட்ட மீனாட்சிய கட்டி கொடுத்துடுன்னு அவள் தான் கேட்கல” என்று கூட்டத்தில் சலசலத்து கொண்டிருக்க.


மீனாட்சி வந்தவுடன் இறுதி சடங்குகள் விரைவாக நடந்தது அனைத்தும் சடங்குகளும் செய்து முடித்து மீனாட்சி தம்பி கண்ணனுக்கு மொட்டை அடித்து தீப்பந்தத்தை கையில் கொடுக்கும் போது அதுவரை அழுகையை அடக்கி வைத்திருந்த கண்ணம்மா தலையில் அடித்து கொண்டு கதற ஆரம்பித்தார்

குடும்பமே கதறி அழுது கொண்டிருந்தது.


ஆறுமுகத்தின் தம்பி பாபு தான் அனைத்தையும் முன் நின்று பார்த்து கொண்டிருந்தார்.


நல்லபடியாக அவரை அடக்கம் செய்து முடித்தவுடன்

இரவு உறவினர்கள் ஒவ்வொருவராக தங்கள் வேலை முடிந்தது என்பதை போல கிளம்ப ஆரம்பித்தனர்.


இறுதியாக கண்ணம்மா மற்றும் அவரது மூன்று பிள்ளைகளும் எஞ்சி இருக்க அங்கே வந்த பாபு “அண்ணி” என்று அழைக்க‌

“என்னப்பா” என்று கண்ணம்மா கேட்க “அண்ணி தப்பா எடுத்துக்காதிங்க என் கிட்ட 5000 தான் இருக்கு எல்லாருக்கும் பணம் கொடுக்கனும்” என்று தயங்கி கொண்டே கூற

உடனே தன் காதில் இருந்த தங்க தோட்டை கழட்டிய கண்ணம்மா “இந்தாங்க இதை வச்சு எல்லாருக்கும் கொடுத்துடுங்க” என்க

“அம்மா ஒரு நிமிஷம்” என்று அவரை தடுத்த மீனாட்சி உள்ளே தன் பையில் இருந்த பணத்தை எடுத்து வந்து பாபு கையில் கொடுக்க “உனக்கு ஏது இவ்வளவு பணம்?” என்று பாபு கேட்க.


ஒரு கணம் என்ன கூறுவது என்று தெரியாமல் முழித்தவள்

“அது அது ஆ அப்பா ஆப்ரேஷனுக்கு என் பிரண்ட்ஸ் காலேஜ்ல டொனேஷன் மாறி கலெக்ட் பண்ணி கொடுத்தாங்க” என்று கூற அதன் பிறகு பாபு எதுவும் கேட்காமல் அதை வாங்கி கொண்டு வெளியே சென்றார் .


கண்ணம்மாவிற்கு மட்டும் தன் மகள் பொய் உரைக்கிறாளோ என்று தோன்றியது.


பணத்தை கொடுத்துவிட்டு வந்து அமர்ந்தவளுக்கு இன்று காலை வம்சி பேசிய பேச்சுகள் நினைவு வந்தது அதை நினைத்து வருத்தப்பட்டவள் பின் ‘அவனே நல்லவன் இல்லை நான் ஏன் அவன் சொன்னதை நினைச்சு வருத்தப்படனும் சரியான பொறுக்கி’ என்று நினைத்து கொண்டிருக்க


“மீனாட்சி” என்று கண்ணம்மா அழைக்க கனவில் இருந்து மீண்டவளை போல “ஆ என்னம்மா” என்க


“ஏது உனக்கு அவ்வளவு பணம்?”

“அதான் சொன்னனே என் பிரண்ட்ஸ் தான் மா கொடுத்தாங்க” என்றாள் தடுமாறி கொண்டே

அவளை பார்த்த கண்ணம்மாவிற்க்கு அவளின் மீது இருந்த சந்தேகம் விலகவேயில்லை “சரி” என்று கூறியவர் அவளை சந்தேகத்துடன் பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தார்.


அவர் பார்ப்பதை கண்டுகொள்ளாததை போல் இருந்தவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது அதை வெளிக்காட்டி கொள்ளாமல் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டாள்‌

‘அம்மாவுக்கு எல்லாமே தெரிஞ்சிடுமோ எப்படி தெரியும் ஒன்னு நான் சொல்லனும் இல்லை அன்னைக்கு என் கூட இருந்தவன் தான் வந்து சொல்லனும்

நானும் சொல்ல போறது இல்லை

அவனும் இனி என் வாழ்க்கையில் வர போறது இல்லை’ என்று மனதில் நினைத்து கொண்டிருந்தாள்.


யார் தன் வாழ்வில் வர மாட்டான் நினைத்து கொண்டு இருக்கிறாளோ அவன் மீண்டும்

அவள் வாழ்வில் அரக்கனாக நுழைய போகிறான் என்று அறியாமல் இந்த சிறு பெண் தனக்குள் பிதற்றி கொண்டிருந்தாள்.


********************************************


ஹோட்டல் அறையில் படுத்து உறங்கி கொண்டிருந்த வம்சியின் அலைபேசி ஒலிக்க

“சை எவன்டா அது” என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டே திரையில் பார்த்தவன் காதில் வைக்க மறுமுனையில் என்ன கூறினார்களோ “சொல்லு டார்லிங் ஒரு டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்” என்றவன் படுக்கையில் இருந்து எழுந்து கிளம்பி கண்ணாடி முன்னே தன்னை சரி பார்த்து கொண்டு இருக்க

சட்டையின் மேல் பட்டன் இரண்டும் திறந்து கிடந்தது அவன் நெஞ்சில்

நகக்கிறல் ஆங்காங்கே இருக்க

“சை பொண்ணா இல்லை குரங்கா அவள் பிராண்டி வைச்சிருக்கா” என்று திட்டிக் கொண்டே சட்டை பட்டனை போட்டுக் கொண்டான்.


ஹோட்டலின் வெளியே வந்தவன் தனது விலை உயர்ந்த காரை எடுத்து கொண்டு தன் வீட்டிற்க்கு இல்லை இல்லை மாளிகைக்கு சென்றான்.


இவன் கார் வாசலில் சென்று நிற்க செக்யூரிட்டி ஓடி வந்து கேட்டை திறந்து விட உள்ளே சென்றான்.


அங்கே வரிசையாக விலை உயர்ந்த ஐந்து கார்கள் நிற்க அதன் அருகில் ஆறாவதாக இந்த காரையும் நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.


யார் வந்தாலும் அன்னாந்து பார்க்க கூடிய மூன்று அடுக்கு பங்களா பெரிய பரப்பளவில் கார்டன் வசதியுடன் வம்சியின் தாத்தா காலத்தில் கட்டப்பட்ட வீடு

உள்ளே நுழைந்த வம்சி “டார்லிங்” என்று கத்தி கொண்டே ஓடி அங்கே ஷோபாவில் அமர்ந்து இருந்த மதிக்க தக்க பெண்மணியை கட்டி அணைத்து அவர் கன்னத்தில் முத்தமிட்டான்.


இவர் தான் வம்சியின் பாட்டி வடிவுக்கரசி சிறு வயதில் இருந்தே அவனை வளர்த்தது எல்லாம் அவன் பாட்டி தான்

வம்சிக்கு பாட்டி என்றாள் மிகவும் பிடித்தம்.


“சீ எச்ச பண்ணாத” என்று அவர் அவன் கையில் அடிக்க

“ஏன் நான் உன்னை கிஸ் பண்ணக்கூடாதா” என்க

“பண்ணலாம் பண்ணாலாம் கண்ணா நான் உன்னை எதுக்கு வர சொன்னேன்னா ஒரு நல்ல வரன் வந்துருக்கு” என்று கூறி முடிக்கும் முன்

அதுவரை சிரித்து கொண்டிருந்தவன் முகத்தில் இறுக்கம் வந்து விட

கோபத்துடன் எழுந்தவன்

“இது யாரோட வேலைன்னு எனக்கு தெரியும் நீ எதுவும் பேசாத” என்றவன் தடதடவென மேலே சென்றான்.


அங்கே தன் தந்தையின் அறைக்கு சென்றவன் படார் என கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் சேதுராமன் நின்றிருக்க “நான் பொண்ணு பார்க்க சொல்லி உங்களை கேட்டனா” என்றான் கோபத்துடன்

கேட்க அவர் எதுவும் கூறாமல் அமைதியாக நின்றிருக்க

“நான் கல்யாணம் பண்ணி இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசு வரும்ன்னு கனவுல கூட நினைக்காத அப்படி ஒன்னு இந்த ஜென்மத்தில் நடக்கவே நடக்காது

நீ எனக்கு இவ்வளவு கொடுமை பண்ணியும் உன்னை எதுக்காக விட்டு வச்சிருக்கேன்னா

நீ உன் மகனுக்கு அடுத்து வாரிசு இல்லையே இந்த வம்சம் இதோட அழிய போகுதுன்னு நினைச்சு கதறனும் அதுக்காக தான் உன்னை உயிரோடு வச்சிருக்கேன்

இதுக்கு அப்புறமும் பொண்ணு பார்க்குறேன்னு என் கிட்ட வந்த

தொலைச்சிருவேன்” என்று மிரட்டி விட்டு சென்றான்.


இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த வடிவுக்கரசி அம்மாவுக்கு கண்கள் கலங்கியது

‘அப்பனே முருகா என் பேரன் குழந்தை குட்டின்னு வாழ மாட்டானா இப்படியே ஒன்டி கட்டையா இருந்துருவானா எதாச்சும் பண்ணு பா’ என்று மனதில் கதறி கொண்டிருந்தார்.


வம்சி இப்படி பிடிவாதம் பிடிக்க என்ன தான் காரணமாக இருக்கும்?


தொடரும்….
 
அத்தியாயம் 4

கோவத்துடன் தன் அறைக்கு சென்ற வம்சி தன் கோவத்தை அடக்கும் வழி தெரியாமல் அந்த அறையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் போட்டு உடைக்க ஆரம்பித்தான் அங்கே வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரர்கள் இதை எதையும் கண்டுகொள்ளாமல் தங்கள் வேலையை செய்து கொண்டு இருந்தனர் இது எப்போதும் நடப்பது தானே என்பதை போல
ஆம் இது அங்கே வாடிக்கையாகி இருந்தது திருமண பேச்சை எடுத்தாலே அந்த வீட்டில் எதாவது ஒரு கலவரம் நடக்கும் என்பது அந்த வீட்டில் இருந்த அனைவருக்கும் தெரியும்.

பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு வடிவுக்கரசி தான் மனமுடைந்து போனார் இந்த வீட்டில் ஐந்து வருடமாக வம்சிக்கு
பெண் பார்க்கும் படலம் நடைபெற்று கொண்டிருக்கிறது
இன்று வரை எதற்க்கும் பிடி கொடுக்காமல் சுற்றிக் கொண்டு இருக்கிறான்.

சத்தம் தாங்க முடியாமல் அவன் அறைக்கு சென்று பார்த்தார் வடிவுக்கரசி
அந்த அறையில் இருந்த அனைத்து பொருட்களும் உடைந்து கீழே சிதறி கிடக்க அந்த அறையே குப்பை கூலமாக மாறி இருந்தது.

வம்சி ரத்தம் வடிந்த கையுடன் மது அருந்தி கொண்டு
அமர்ந்து இருந்தான் மெல்ல அவன் அருகில் சென்ற வடிவு அவன் தோளில் கை வைத்து
“டேய் கண்ணா இந்த ஒரே ஒரு தடவை என் பேச்சை கேட்க கூடாதா பாட்டிக்காக இதை கூட பண்ண மாட்டியா” என்று அவன் முன் கண்கள் கலங்க கெஞ்சும் படி கேட்க தன் கையில் இருந்த கண்ணாடி கிளாசை கோவத்துடன் அழுத்தி பிடித்தான் கிளாஸ் சுக்கு நூறாக உடைந்து கையின் சதை கிழிந்து ரத்தம் இன்னும் அதிகமாக வர ஆரம்பித்தது.

“அய்யோ கண்ணா என்ன பண்ற” என்று கத்தி கொண்டே வடிவு அவன் கையை பிடித்து பார்க்க அவன் உள்ளங்கையில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம்‌ வடிந்து கொண்டிருந்தது.

“மூர்த்தி” என்று வடிவு குரல் கொடுக்க அந்த வீட்டு வேலைக்காரன் முதல் உதவி பெட்டியுடன் ஓடி வந்தான்.

அவன் இந்த வீட்டில் 15 வருடமாக வேலை செய்து கொண்டு இருக்கிறான் அவனுக்கு தெரியும் அங்கே என்ன நடக்கிறது என்று அதனால் தான் முதல் உதவி பெட்டியுடன் ஓடி வந்தான்
வடிவு உடனே அவன் கையில் இருந்த கண்ணாடி துண்டுகளை ரத்தம் வடிய எடுத்து போட்டவர் மருந்தை வைத்து கட்டு போட்டுவிட்டார்.

“எல்லாம் தெரிஞ்ச நீயே என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கோன்னு டார்ச்சர் பண்ற பாட்டி” என்றான் கோவத்துடன் வம்சி
“பாட்டி இனி கல்யாண பேச்சே எடுக்க மாட்டேன் டா கண்ணா இந்த மாறி உன்னை நீயே வருத்திக்காத” என்று அழுது கொண்டே கூறியவர் மனம் நொந்து போய் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றார்.

பூஜை அறைக்கு மெல்ல நடந்து சென்ற வடிவு பாட்டி
தன் முன் இருந்த சாமி படங்களை விரக்தியுடன் பார்த்தார் “நாங்க உனக்கு என்ன குறை வச்சோம் எங்களை ஏன் இப்படி சோதிக்கிற எல்லாருக்கும் கல்யாணம் நடக்குற மாறி தான நானும் என் பேரனுக்கு கல்யாணம் நடக்கனும் நினைச்சேன்
இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு வேணும்ன்னு தான கேட்டேன் அது தப்பா உனக்கு கண்ணே இல்லையா” என்று கண்ணீர் விட்டு கதறினார்.

பூஜை அறையின் வாசலில் நின்றிருந்த சேதுராமன் தன் தாய் கலங்குவதை பார்த்து வேதனையுடன் நின்றிருந்தார்.

கடவுளே மனம் இறங்கி வந்து சொன்னாள் கூட வம்சி திருமணம் செய்து கொள்ள மாட்டான்
ஆனால் இந்த வாழ்க்கை என்பதே பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தவை தானே காத்திருப்போம் வம்சியின் மன மாற்றத்திற்க்காக.

மீனாட்சியின் இல்லம்….

பொழுது புலர்ந்தும் புலராத விடியற்காலை வேளை மீனாட்சி அவள் தம்பி தங்கைகளோடு உறங்கி
கொண்டிருந்தாள் அவளை யாரோ தட்டி எழுப்ப தூக்கத்திலேயே மெல்ல கண் விழித்தாள் யார் என்று பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள்
அழுக்கு ஆடையுடன் அவள் தந்தை ஆறுமுகம் நின்றிருக்க “அப்பா” என்று அழுது கொண்டே இதயம் படபடக்க அவரை பார்த்தாள்
“அம்மாடி இங்கே என்ன பண்ற நீ காலேஜிக்கு போகல” என்க
“அப்பா” என்றவளுக்கு மறு வார்த்தை பேச முடியாமல் தொண்டை அடைத்தது
“எழுந்து போய் படி டா மா இங்கே இருக்காத நல்லா படிச்சு நீ தான் உன் தம்பி தங்கச்சிய பார்த்துக்கனும்” என்றவர் அப்படியே அவள் கண்ணை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனார்
மறுகணம் “அப்பா” என்று அலறி அடித்து கொண்டு எழுந்தாள் மீனாட்சி.

கண்ணை திறந்து பார்த்தவள் தான் எங்கு இருக்கிறோம் என்று சுற்றி முற்றி பார்க்க அவள்‌ வீட்டில் தான் இருந்தாள் பக்கத்தில் அவள் தம்பி தங்கைகள் இருவரும் உறங்கி கொண்டிருந்தனர்.

அவள் எதிரே இருந்த புகைப்படத்தில் அவள் தந்தை
அவளை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தார்
‘கனவா’ என்று நினைத்தவளுக்கு ஏதோ நிஜத்தில் நடந்ததை போல தோன்றியது.

மெல்ல வெளியே எழுந்து சென்றாள்
பொழுது நன்றாக விடிந்திருந்தது
முகம் கழுவ வெளியே வர அங்கே அவள் தாய் கண்ணம்மா தூங்காமல் அமர்ந்து இருந்தார்.

“அம்மா இங்கே என்ன பண்றிங்க
தூங்கலையா நீங்க” என்க
“தூக்கம் வரல” என்றார் அவர் சோகத்துடன் அவரை பார்க்கவே பாவமாக இருக்க எதுவும் பேசாமல் முகம் கழுவ சென்றாள்.

அவள் கழிவறைக்கு சென்று வெளியே வரும் போது கண்ணம்மா யாருடனோ சண்டை போட்டு கொண்டிருந்தார்
“என்னாச்சி மா” என்று அவர் அருகில் பதறி அடித்து கொண்டு செல்ல அந்த நபர்
“வா மா நீ படிச்ச பிள்ளை தான
உங்க அப்பா என்கிட்ட இரண்டு லட்சம் கடன் வாங்கி இருந்தாரு
ஒரு வருஷம் ஆச்சு இன்னும் வட்டியும் வரல அசலும் வரல இந்தா பாரு உங்க அப்பா கையெழுத்து போட்ட பத்திரம்” என்று அவளிடம் கொடுத்தார்.

அதை கையில் வாங்கியவள் பார்த்து கொண்டே நிற்க
“சீக்கிரமாவே கொடுக்குறோம் அண்ணா கொஞ்சம் டைம் கொடுங்க” என்று மீனாட்சி கூற “இன்னும் ஆறு மாசம் அவகாசம் தரேன் அதுக்குள்ள கொடுக்கலன்னா இந்த வீட்டை என் பெயரில் எழுது கொடுத்துடுங்க” என்க
“அது எப்படி கொடுக்க முடியும்” என்று அவள் தாய் கோபத்துடன் கேட்க
“அம்மா ஒரு நிமிஷம்” என்றவள் “சீக்கிரமா கொடுத்துட்றோம் அண்ணா இப்போ கொஞ்சம் போறிங்களா எல்லாரும் பார்க்குறாங்க” என்றவள் அவரை அனுப்பி வைக்க.

“இன்னும் ஆறு மாசம் கழிச்சி வருவேன் பணம் தரல நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு சென்றார்.

இதையெல்லாம் எப்படி சமாளிக்க போகிறோம் என்று நினைத்து கொண்டே நின்றிருந்தாள் மீனாட்சி.

மறுநாள் காலை ‌கண்ணம்மா வேலைக்கு செல்ல தயாராகி கொண்டு இருந்தார் எத்தனை நாளுக்கு தான் அப்படியே இருக்க முடியும்
அனைவருக்கும் வயிறு என்ற ஒன்று இருக்கிறது பிள்ளைகளுக்காக வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்தார்.

மீனாட்சி அடுப்படியில் விறகு வைத்து சமைத்து கொண்டிருக்க
அவள் அருகில் சென்றார்.

“பாப்பா நீ காலேஜிக்கு கிளம்பல” என்க “அம்மா அது” என்று அவள் தயங்கி கொண்டே நானும் உன் கூட வேலைக்கு வரேன் என்க
“என் கூட வேலைக்கு வர தான் உன்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சிட்டு இருக்கனா
‌நீ எங்களை பற்றி கவலை பட வேண்டாம் நாங்க நல்லா தான் இருப்போம் நீ உன் படிப்புல மட்டும் கவனம் செலுத்து எத்தனை நாளுக்கு இப்படியே இருக்க போற போய் படிக்கிற வழிய பாரு” என்றார் கோவத்துடன்.

“அம்மா” என்று அவள் மீண்டும் இழுக்க

“உனக்கு அப்பா இல்லைன்னா
என்ன அம்மா இருக்கேன்ல்ல எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்
நீ காலேஜிக்கு கிளம்பு” என்று
கூற அவளும் ஏதோ புது தேம்பு வந்தவளை போல சென்று கிளம்ப ஆரம்பித்தாள்.

மீனாட்சி கிளம்பி வர பேருந்து நிலையத்திற்க்கு அவளுடன் வந்து அவளை வழி அனுப்பி வைத்தார் கண்ணம்மா
“வரேன் மா” என்று கூறி தன் தாயிற்க்கு கை காட்டி விட்டு பேருந்தில் ஏறி இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவள் மனதில் ஓடியது ஒன்று மட்டுமே இனி தன் கவனம் படிப்பில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டாள் வரும் போது இருந்த மீனாட்சியின் மனநிலை இப்போது இல்லை எந்த வித குழப்பமும் இல்லாமல் தெளிவான முடிவுடன் பயணப்பட்டாள்.

அன்றிலிருந்து மீனாட்சி கல்லூரிக்கு வந்த நாளில் இருந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்தாள் வகுப்பறையில் முதல் ஆளாக அமர்ந்து பாடங்களை கவனித்து குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தாள் மாலை நூலகத்திற்க்கு சென்று இன்னும் புத்தகங்களை எடுத்து ஆர்வத்துடன் படிக்க ஆராம்பித்தாள்.

இப்போதைக்கு அவளின் குறிக்கோள் நன்றாக படித்து வேலைக்கு சென்று தம்பி தங்கை மற்றும் தாயை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது
இந்த இடைப்பட்ட நாட்களில் வம்சியை பற்றி அவள் நினைத்து கூட பார்க்கவில்லை.

அன்று ஹாஸ்ட்டலில் தன் அறையில் புத்தகங்களை வைத்து ஏதோ குறிப்பு எடுத்து கொண்டு இருந்தாள் மீனாட்சி
அப்போது அவள் முன்னே வந்து நின்று அவளை முறைத்து கொண்டு இருந்தாள் காவ்யா
அதை கூட கண்டுகொள்ளாமல் அவள் எழுதி கொண்டு இருக்க அவள் புத்தகத்தை அவளிடமிருந்து பிடுங்கி மூடி வைத்தாள் காவ்யா
“ஏய் என்னடி பண்ற” என்று மீனாட்சி கேட்க
“ரொம்ப படிக்காத லூசாகிடுவ இன்னைக்கு நம்ம காலேஜ்ல் கல்ச்சரல்ஸ் எல்லாரும் பாட்டு டான்ஸ்ன்னு ஜாலியா இருக்காங்க நீ என்னடான்னா புக்கை வச்சிட்டு படிச்சிட்டு இருக்க வா அங்கே போகாலாம்” என்க

“நான் வரல நீ போ” என்று அவளிடமிருந்து புத்தகத்தை பிடுங்க பார்க்க “இன்னைக்கு ஒரு நாள் தான ஜாலியா இருக்கும் முடியும் வா மீனு” என்று அவளை தன்னுடன் இழுத்து சென்றாள் காவ்யா.

இருவரும் கல்ச்சரல்ஸ் நடக்கும் அரங்கத்திற்க்குள் சென்று அமர்ந்தனர்
அங்கே மாணவர்கள் அனைவரும் அமர்ந்து இருக்க மேடையில்
விருந்தினர்கள் ஒவ்வொருவராக
வந்து கொண்டடிருந்தனர்
அவர்களை பார்த்து மாணவர்கள்
ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.

பிரபல சினிமா நடிகை ரேஷ்மா வந்திருக்க அவள் மேடை ஏறும் போது மாணவர்கள் மத்தியில்
கை தட்டலும் விசில் சத்தமும் காதை கிழித்தது
“அடுத்தபடியாக பிரபல தொழிலதிபர் வம்சி கிருஷ்ணாவை மேடைக்கு அழைக்கிறோம்” என்று கூற அங்கே மேடை ஏரியவனை பார்த்தவளுக்கு கோபம் பொங்கியது.

வம்சி அவன் உடலுடன் இறுக்கி பிடித்த கருப்பு நிற ஷர்ட் மற்றும்
பழுப்பு நிற பேன்ட் உடன் ஷூ அணிந்து விளம்பர காட்சிகளில் வரும் மாடலை போல வந்து கொண்டு இருந்தான்
கம்பிரமாக மேடை ஏற அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு நடிகை ரேஷ்மாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

வம்சியை பார்த்து மாணவிகள் விசில் அடித்து கரகோஷமிட்டனர்
மீனாட்சியின் பக்கத்தில் இருந்த பெண் ஒருத்தி தன் நண்பியிடம் “ஆளு செம்மையா இருக்காருள்ள” என்று பேசிக் கொண்டிருக்க அவளால் அங்கே இருக்கே முடியவில்லை.

வம்சி நெருக்கமாக ரேஷ்மாவின் காதில் ஏதோ பேசிக் கொண்டு இருக்க ‘பொண்ணுங்க பக்கத்தில் தான் உட்காருவான் போல’ என்று மனதில் நினைத்து கொண்டிருந்தாள்
“இவரு அவரு தான” என்று காவ்யா மீனாட்சியின் கையை சுரண்டி கேட்க “யாரு எனக்கு தெரியாது” என்றாள் கோவத்துடன்.

அவள் கோவப்படுவதை பார்த்த காவ்யா எதற்க்கு வம்பு என்று எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து கொண்டாள்
பொறுத்து பொறுத்து பார்த்த
மீனாட்சி வம்சியை பார்க்க முடியாமல் “நான் வாஷ்ரூம் போகனும்” என்று காவ்யாவிடம் கூறிவிட்டு எழுந்து செல்ல போக
அவள் கையை பிடித்த காவ்யா
“நானும் வரேன்” என்க
“இல்லை நான் போய்ட்டு வரேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

வெளியே சென்றவளுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது வெளிக்காற்றை நிம்மதியாக கொஞ்சம் சுவாசித்து கொண்டே நின்று
இருந்தாள்.

அதே நேரம் உள்ளே இருந்த வம்சியின் அலைபேசி ஒலிக்க அதை எடுத்து காதில் வைத்தான் உள்ளே சத்தமாக இருக்க ஒன்று கேட்காமல் போக “ஹலோ” என்று கூறிக் கொண்டே வெளியே வந்தான்.

போன் பேசிவிட்டு திரும்பியவன் தற்செயலாக அங்கே நின்றிருந்த மீனாட்சியை பார்த்தான்.


இப்போது தான் மீனாட்சி ஒரு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாள்
வம்சியின் வரவால் இனி அவள் வாழ்வில் என்ன நடக்குமோ.

தொடரும்….
 
அத்தியாயம் 5


பக்கவாட்டில் இருந்து மீனாட்சியை பார்த்தவனுக்கு எங்கேயோ பார்த்ததை போல தோன்ற யோசித்து கொண்டே

திரும்ப புடவை கட்டியிருந்தவளின் வெளிர் என்ற இடை தெரிய அதை பார்த்தவனுக்கு உடனே பொறி தட்டியது இது அவள் தானே என்று அன்றைய கூடலும் நினைவுக்கு வந்தது ‘இவள் எங்கே இங்கே’ நினைத்து கொண்டே பார்த்தான்.


ஒரே ஒரு கணம் அவளை பார்த்து வைத்தவன் கண்டுகொள்ளாமல் அரங்கத்தின் கதவை திறந்து உள்ளே செல்ல போக குறுக்கே வந்த பேராசிரியர் ஒருவர் அவனை மறித்து “சார் ஒரே ஒரு செல்பி எடுத்துக்கலாமா” என்க

“ஒகே” என்றான் மெலிதாக புன்னகைத்து கொண்டே

அந்த பேராசிரியரின் அருகில் நின்றவன் போட்டோவிற்க்கு போஸ் கொடுக்க சரியாக அந்த நேரம்

கதவை திறந்து கொண்டு அரங்கத்தின் உள்ளே நுழைந்தாள் மீனாட்சி.


இருவரும் வழியில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்க அவன் முதுகு மட்டுமே தெரிய “எக்ஸ்கியூஸ் மீ” என்ற

அவள் குரல் கேட்டு உடனே வம்சி திரும்ப அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவளுக்கு இதயம் பட படவென அடித்து

கொண்டது அவனின் முகம் பார்க்க முடியாமல் தவித்தாள் அவனோ மிக சாதாரணமாக நின்றிருக்க அவனை தாண்டி சென்றவள்

அவன் காலின் மேல் கால் வைத்து விட தடுக்கி கீழே விழ போக அனிச்சையாக வம்சி அவளின் வெற்று இடையில் கை வைத்து அவளை தன்னோடு அணைத்து பிடித்து கொண்டான்

இருவர் முகமும் நெருங்கி இருந்தது வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்கள் இருவரும் அணைத்து கொண்டு நிற்பதை போல தோன்றியது

அது மட்டுமின்றி இருவரும் காதல் பார்வை பார்த்து கொள்வதை போன்ற பிம்பம் தோன்றியது.


வம்சியோ அவளை விடாமல் தன்னோடு நெருக்கி இடையில் இன்னும் அழுத்தம் கொடுத்து பிடித்திருக்க அவன் கண்கள் இரண்டும் அவளின் சிவந்த இதழிலும் அதன் கீழ் இருந்த மச்சத்தில் மட்டுமே நிலைத்து இருந்தது கூடலின் போது அதில் முத்தமிட்டதும் நினைவுக்கு வந்தது.


இவர்கள் இருவரும் அந்த அரங்கத்தில் காதல் புறாக்களை போல நின்றிருக்க அங்கிருந்தவர்களின் பலரின் மொபைலில் இது படம் பிடிக்கப்பட்டிருந்தது.


அவன் இரும்பு பிடியில் இடை வலிக்க சுய நினைவுக்கு வந்தவள் அவனிடமிருந்து விலகி ஓடி சென்றாள்

அது அவள் வெட்கப்பட்டு ஓடியதை போல பார்க்கும் அனைவருக்கும் தோன்றியது.


அங்கிருந்த மாணவிகள் மீனாட்சியை வயிதெரிச்சலுடன் பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தனர்.


உடனே சமநிலைக்கு வந்த வம்சி

அங்கே தன்னையே பார்த்து கொண்டிருந்த மாணவ மாணவிகளையும் பேராசிரியர்களையும் கண்டுகொள்ளாமல் மேடை ஏறினான்.


ரேஷ்மாவின் அருகில் வந்து வம்சி அமர அவன் காதில் “உங்க லவ்வரா வம்சி சார்” என்று அவள் கிசுகிசுக்க “நோ நோ யாரோ ஸ்டேன்ஜர் கீழே விழ போன அதான் தாங்கி பிடிச்சேன்” என்று கூற “பார்த்தா அப்படி தெரியல ஏதோ லவ்வர்ஸ் மாறி இருந்துச்சு” என்க

உடனே வம்சி அவளை எரிப்பதை போல பார்த்து வைக்க அவனை பற்றி தெரிந்த ரேஷ்மா பயந்து

திரும்பி கொண்டாள்.


இருவரும் பேசிக் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து பார்த்த மீனாட்சிக்கு மேலும் எரிச்சலை வரவழைத்தது அவன் பிடியில் இடை வேறு சிவந்து வலிக்க

லேசாக இடையை தடவிக் கொண்டே திரும்ப காவ்யா அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தாள்.


மீனாட்சி என்ன என்பதை போல ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளிடம் கேட்க “ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே நீங்க என்ன லவ்வர்ஸ்ஸா” என்க

உடனே மீனாட்சியின் முகம் மாறி அவளை முறைக்க

“இல்லை ரெண்டு பேரும் கட்டிபிடிச்சிட்டு எல்லாருக்கும் போஸ் கொடுத்திங்களே அதான் கேட்டேன்” என்றவளை பார்த்து

“அதெல்லாம் ஒன்னும் இல்லை” என்று கூறிவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.


வம்சி அவளை பார்த்த பார்வை அவளை ஏதோ செய்தது

‘என்ன பார்வை அது திங்குற மாறி பார்க்குறான்’ என்று மனதில் நினைத்தவள்

ரேஷ்மாவை பார்க்க ‘ஒரு வேளை இன்னைக்கு நைட் இவள் அவன் கூட இருப்பாளோ’ என்று நினைத்தவளுக்கு அன்றைய கூடலின் நினைவு வர முகம் இறுகியது.


அவள் யோசித்து கொண்டே அமர்ந்து இருக்க கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்திருந்தது.


கடைசியாக அன்றைய வருடத்தின் நன்றாக மதிப்பெண்கள் எடுத்து மாணவ மாணவிகளுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.


ஒவ்வொரு மாணவர்களாக பரிசை வாங்கி கொண்டு செல்ல

இந்த வருடத்தின் மதிப்பெண் அதிகம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்க அதில் மீனாட்சி பெயர் மைக்கில் அழைக்கப்பட அதை கண்டு கொள்ளாமல் ஏதோ யோசனையுடன் அமர்ந்து இருந்தவளின் தோளில் கை வைத்து உலுக்கினாள் காவ்யா

“ஏய் உன்னை தான் கூப்பிட்டாங்க டி” என்று கூற சுயநினைவுக்கு வந்தவள் எழுந்து மேடைக்கு ஓடினாள்.


“சிறந்த மதிப்பெண்ணுக்கான விருது மீனாட்சி” என்று கூற

வம்சியிடம் சென்று விருதை வாங்க வந்தவளை ஆச்சரியமாக பார்த்து வைத்தான் அவன்

விருதை அவன் கையில் இருந்து வாங்கியவள் அவனை பார்க்க முடியாமல் தவித்து கொண்டே

நிற்க புகைப்படம் எடுத்து முடித்தவுடன் சிட்டாக உடனே கீழே ஓடினாள்.


அவள் அங்கிருந்து செல்லும் வரை அவளையே பார்த்து கொண்டு இருந்தான் வம்சி.


அன்றைய விழா நல்லபடியாக முடிந்து விருந்தினர் அனைவரும் கிளம்பி விட

தன் அறைக்கு வந்த மீனாட்சி தான் உறக்கம் வராமல் தவித்து கொண்டிருந்தாள்

‘யாரை பார்க்க கூடாது என்று நினைத்தாளோ அவனையே பார்க்கும் படி ஆயிற்றே’ என்று மனதில் நினைத்தவள் உறக்கம் வராமல் திரும்பி திரும்பி படுத்து கொண்டிருந்தாள்

பின்னர் ஒரு வழியாக உறங்க ஆரம்பித்தாள்.


இரவில் உறங்கி கொண்டு இருந்தவளின் பக்கத்தில்‌ யாரோ வந்து படுக்க

யார் என்று கண் விழித்து பார்த்தவளின் அருகில் வம்சி தான் படுத்திருந்தான் அவள் இடையில் கை கொடுத்து அவளை திருப்பி அவள் இதழை நெருங்கி கொண்டே வர

அலறி அடித்து கொண்டு எழுந்தாள்.


கண் திறந்து பார்த்தாள் காலை நன்றாக பொழுது விடிந்திருக்க

காவ்யா குளித்துவிட்டு பக்கெட்டுடன் வந்து கொண்டிருந்தாள்.


“ஏய் என்ன டி பேய் அறைஞ்ச மாறி இருக்க காலேஜ்க்கு டைம் ஆச்சு கிளம்பு” என்க

தன் பக்கத்தில் வம்சியை தேட அந்த இடம் வெறுமையாக இருந்தது

தான் கண்டது கனவு என்று தெரிந்து நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டு கல்லூரிக்கு கிளம்ப ஆரம்பித்தாள்.


விழா முடித்து வந்த வம்சி தன் தொழிலில் பிஸியாகி விட

காலை அலுவலகத்திற்க்கு சென்றவன் தன் அறையில் வேலை பார்த்து கொண்டிருந்தான்.


அப்போது அவன் பி.ஏ சதிஷ் அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே வர பைலில் இருந்து தன் தலையை நிமிர்த்தியவன் “என்ன சதிஷ்” என்க

“சார் அது வந்து” என்று தயங்கி கொண்டே அவன் மேஜை மீது அன்றைய நாளிதழை வைத்தான்.


அதை கையில் எடுத்து படித்தான்

வம்சி அதில் கண்ணனின் பெயரை துணை பெயராக கொண்ட அந்த தொழிலதிபருக்கும் கல்லூரி குயில் ஒன்றிருக்கும் காதல் மலர்ந்து இருக்கிறது

11 வயது வித்தியாசத்தில் கூட காதல் மலருமா காதலுக்கு வயதில்லை என்பது உண்மை தானோ விரைவில் அந்த தொழிலதிபருக்கு திருமணமா..?

என்று எழுதியிருந்தது.


அதை பார்த்தவனின் கண்கள் இரண்டும் சிவந்து கை முஷ்டி இறுக கோபம் கொப்பளிக்க “இது யாரோட வேலை” என்றான் சதிஷை நோக்கி “தெரியலை சார்” என்று அவன் பதில் கூற அந்த நாளிதழை கிழித்து தூக்கி எறிந்தான் வம்சி.


இதற்கே இப்படி கோபப்படுபவன்

இன்னும் பிற்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களை அறிந்தாள் ராட்ஷனாக மாறிவிடுவானோ..?


தொடரும்….
 
Last edited:
அத்தியாயம் 6


“இடியட் உன்னை தெரியாதுன்னு

சொல்ல தான் இங்கே வேலைக்கு வைச்சிருக்கேனா இன்னும் அரை மணி நேரம் தான் உனக்கு டைம் அதுக்குள்ள இதை எழுதினவன் யாருன்னு கண்டுபிடிக்கல உனக்கு இங்கே வேலையே கிடையாது” என்று திட்டி சதீஷை துரத்திவிட்டான் வம்சி.


அவனை பற்றி பத்திரிகையில்

கிசுகிசு வந்ததற்க்கு கூட அவன் கவலைப்படவில்லை திருமணம் என்ற வார்த்தையை பார்த்தவனுக்கு தான் கோபம் தலைக்கேறி இருந்தது.


கோபத்தில் தன் முன்னே இருந்த கோப்பை மூடி வைத்தவன் வேலை பார்க்க கூட முடியாமல் அப்படியே அமர்ந்து இருந்தான்.


அந்த நேரம் அவன் அலைபேசி ஒலிக்க திரையில் யாரென்று பார்த்தான் அவன் நண்பன் ராகேஷ் தான் அழைத்து இருந்தான்

அழைப்பை எடுத்து காதில் வைக்க “மச்சி வம்சி வாழ்த்துகள் டா கல்யாணம் ஆக போகுதாமே உண்மையா டா

என்ன லவ்வா காலேஜில் நீ இருந்ததுக்கு எங்க கல்யாணம் பண்ணாம சாமியார் ஆகிடுவியோன்னு நினைச்சேன்” என்க

“பரதேசி நாயே நீ நேர்ல மட்டும் இருந்த உன்னை வெட்டி போட்டுருவேன் மரியாதையா போனை வச்சிடு” என்று கத்திவிட்டு அழைப்பை துண்டித்தான்.


இதே போன்று அடுத்தடுத்த அழைப்புகளில் வந்த அவன் நண்பர்களும் உறவினர்களும் அவனுக்கு திருமணமா என்று கேட்டு ‌நச்சரிக்க

தொல்லை தாங்க முடியாமல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து போட்டான்.


வம்சி இப்போது இருக்கும் மனநிலையில் அந்த பத்திரிக்கை நிரூபரை கொன்றாள் கூட அவன் ஆத்திரம் அடங்காது வெறி கொண்ட வேங்கையாக மாறி அமர்ந்து இருந்தான்.


அதே நேரம் கல்லூரிக்கு கிளம்பி நடந்து சென்று கொண்டிருந்த மீனாட்சியை பார்த்த அங்கிருந்த மாணவ மாணவிகள் அவளை பார்த்து கொண்டே ஏதோ தங்களுக்குள் பேசிக் கொண்டே சென்றனர்.


அவளுக்கு எல்லோரும் தன்னையே பார்ப்பதை போல உணர்வு தோன்ற எதையும் கண்டுகொள்ளாமல் வகுப்பறைக்குள் நுழைந்தாள்.


அவள் வகுப்பறையின் உள்ளே நுழையும் போது அங்கே இருந்த மாணவர்கள் அனைவரும் அவளை‌

வித்தியாசமாக பார்க்க என்னவென்று தெரியாமல் குழம்பியவள் அதே குழப்பத்துடன் தன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.


தன் அருகில் இருந்த காவ்யாவின் கையை சுரண்டியவள் “காவ்யா ஏன் எல்லோரும் என்னை வித்தியாசமாக பார்க்குறாங்க” என்று கேட்க

“காலேஜ் ஓட ஹாட் டாப்பிக்கே நீ தான்” என்று கையில் இருந்த நாளிதழை அவள் முன் வைத்தாள் அதை எடுத்து படித்தவள் ஒன்றும் புரியாமல் “என்ன டி இது” என்க

“அப்படியே ஒன்னும் தெரியாத பாப்பா மாறி நடிக்காத உண்மைய சொல்லு உனக்கும் அந்த வம்சிக்கும் நடுவுல என்ன ஓடுது” என்றாள் புருவத்தை உயர்த்தி அவளை பார்த்து கொண்டே.


“ஏய் எனக்கும் அவருக்கும் நடுவில் எதுவும் இல்லை டி” என்றாள் அவள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு

“பிறகு எப்படி?” என்று அவளிடம் கேட்க “காவ்யா நீ சொல்லி தான் டி இதுல அவங்க சொல்லி இருக்க பொண்ணு நான் தான்னு எனக்கே தெரியும்” என்றாள் கண்கள் கலங்க பதட்டத்துடன் மீனாட்சி.


“எதுக்கு இப்படி அழற அசிங்கமா”

“ஒரு வேளை அன்னைக்கு நைட் நான் அவர் கூட ஒன்னா இருந்தது எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சு போல டி”

என்றாள் மூக்கை உறிஞ்சி கொண்டே

“சீ அதெல்லாம் இருக்காது நேத்து கல்ச்சரல்ஸ்ல அப்போ அவர் உன்னை பிடிச்சாருல்ல அது தான் புகைஞ்சி இருக்கும் போல பெரிய பணக்காரங்கன்னா கிசுகிசு வரத்தான் செய்யும்

இதுக்கு போய் அழற” என்று அவளை சமாதானப்படுத்தி கொண்டிருந்தாள்.


“ஊமைச்சி மாறி இருந்துகிட்டு எவ்வளவு பெரிய ஆள வளைச்சி போட்டு இருக்கா பாரு” என்று பின் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவி ஒருத்தி கூற

மாற்றொருத்தி “ஆமா எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குன்னு யாருக்கு தெரியும்” என்று பேசிக்கொண்டு இருந்தனர்.


மொத்தத்தில் அந்த கல்லூரியில் இருந்த அனைவரும் வம்சியும் மீனாட்சியும் காதலர்கள் என்று நினைக்க ஆரம்பித்திருந்தனர்.


************************

சரியாக ஒரு மணி நேரம் கழித்து

வம்சிக்கு சொந்தமான ஒரு பழைய மில்லில் பத்திரிகை நிரூபர் சந்தானம் சேரில் கை கால்கள் இரண்டும் கட்டப்பட்டு

நெற்றியில் இருந்து ரத்தம் வடிய அமர்ந்து இருந்தான்.


வம்சியின் அடியாட்கள் அவனை கட்டி வைத்து அடித்து இருந்தனர்

அந்த மில்லின் உள்ளே தனது முழுக்கை சட்டையை மடித்து விட்டு கொண்டே கோபத்துடன் வந்தான் வம்சி அவன் பின்னே

அவனுடைய பி.ஏ சதீஷ் ஓடி வந்து கொண்டிருந்தான்.


நேராக சந்தானத்தின் முன்னே சென்று நின்றவன் சோர்ந்து தலை தொங்க கிடந்த சந்தானத்தின் முகத்தை நிமிர்த்தியவன் “இவன் தான” என்க “சார் ஏதோ தெரியாம உங்களை பத்தி எழுதிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க சார்” என்று கெஞ்சி கதறினான்.


“ஏன்டா நாயே உன்னால என்னோட இந்த ஒரு நாளே ஒன்னும் இல்லாமல் போய்டுச்சு

உன்னை எப்படி சும்மா விட முடியும்”


“சாரி சார் பிளீஸ் ஏதோ தெரியாம

பண்ணிட்டேன்”


“இந்த விரல் தான என்னை பத்தி எழுதுச்சு” என்று கூறி கொண்டே

அவன் கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலை வளைத்து முறிக்க

அவன் வலியில் அந்த இடமே அதிரும் படி கதறினான்.


அவன் மேல் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் அவன் விரல்களை ஒடைத்து இருந்தான்.


ஆத்திரம் அடங்காது உடனே தன் இடுப்பின் பின் பக்கமாக இருந்த துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றியில் வைத்து சுட போக அவன் அருகில் ஓடி வந்த சதீஷ்

“சார் பத்திரிகைக்காரன் எதாச்சும் பிரச்சனை ஆகிட போகுது” என்று தடுத்தான்.


“சை” என்று கையை உதறியவன்

கோபம் குறையாமல் சந்தானத்தின் மற்றொரு கையை

வளைத்து அவன் கதற கதற உடைத்து இருந்தான்.


“போனா போகுதுன்னு உன்னை இந்த தடவை சும்மா விடுறேன் இனி என்னை பத்தி எழுதனும்ன்னு நீ நினைக்கும் போது உனக்கு இந்த வலி நியாபகம் வரனும்” என்று அவனை மிரட்டி விட்டு துளி அளவு கூட இரக்கம் பார்க்காமல் தான் வந்த வேலை முடிந்தது என்று சென்றுவிட்டான்.


நேராக தன் வீட்டிற்க்கு வந்தவன்

சோர்ந்து போய் சோபாவில் அமர்ந்து இருந்த தன் பாட்டியின் மடியில் படுத்து கொண்டான்.


“என்னாச்சி கண்ணா ஏன் ஒரு மாறி இருக்க” என்று அவன் தலை கோதி கேட்க

“ஒன்னுமில்லை” என்றவன் கண்கள் மூடி படுத்து கொண்டான்

“கண்ணா அது உண்மையா?”

“எது” என்று கண்ணை திறக்காமலேயே கேட்டான்

“பத்திரிகையில் இருந்தது”

“நீயுமா பாட்டி எனக்கு இந்த ஜென்மத்தில் காதல் கத்திரிக்காய் கல்யாணம் எதுவும் என் வாழ்க்கையில் கிடையாது”

“கண்ணா எனக்கு ஒரே ஒரு கடைசி ஆசை இருக்கு

உனக்கு கல்யாணம் ஆகி ஒரு மகளோ இல்லை மகனோ பிறந்து என் கொள்ளு

பேரப்பிள்ளையை கையில் வச்சு கொஞ்சனும்” என்க

“அது இந்த ஜென்மத்தில் நடக்கவே நடக்காது வேற எதாச்சும் ஆசை இருந்தா சொல்லு டார்லிங்” என்று அவர் கன்னத்தை பிடித்து கொஞ்சி கொண்டே கேட்க

அவன் கையை தட்டி விட்ட வடிவு

‘அப்பனே முருகா என் பேரனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்கவே மாட்டியா’ என்று மனதில் வேண்டி கொண்டே சோர்ந்து போய் அவனை பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தார்.

வடிவு பாட்டியின் ஆசை நிறைவேறுமா.....


தொடரும்…
 
அத்தியாயம் 7

வடிவு முகம் சோர்ந்து இருப்பதை பார்த்த வம்சி எழுந்து அமர்ந்தான்
“ஏன் டார்லிங் டல்லா இருக்க என் கிட்ட நீ இதை தவிர என்ன வேணும்ன்னாலும் கேளு செய்யுறேன்” என்று அவர் கையை பிடித்து கொண்டே கேட்க
“எனக்கு எதுவும் வேண்டாம்” என்று அவர் முகத்தை தூக்கி வைத்து கொண்டார்.

“சரி உன்கிட்ட ஒன்னு சொல்லவா நான் நாளைக்கு ஆஸ்திரேலியா போறேன் நீ இப்படி டல்லா இருந்தா நான் எப்படி அங்கே நிம்மதியா இருப்பேன் சொல்லு”

“என்கிட்ட சொல்லவேயில்லை” என்றார் அவர் சோகமாக
“திடீர்ன்னு ஒரு அர்ஜென்ட் ஒர்க் கொஞ்ச நாள் அங்கே தான் இருக்க மாறி இருக்கும்”
“நீ இல்லாம நான் எப்படி கண்ணா இருப்பேன்” என்க
“நீயும் என் கூட வாயேன் டார்லிங்” என்றான் அவர் கன்னத்தை பிடித்து கொண்டு
“எனக்கு வெளிநாடு எல்லாம் செட் ஆகாது நீ சீக்கிரமா வா” என்க
“ஒகே அதுவரை பத்திரமா இருக்கனும்” என்றான் அவர் கன்னத்தில் முத்தமிட்டு
“சீ எச்சை பண்ணாத” என்றார்
மெலிதாக புன்னகைத்து கொண்டே
“எச்ச பண்ணுவேன்” என்று அவரின் மறு கன்னத்திலும் முத்தமிட்டான்.

மறுநாள் காலை வம்சி ஆஸ்திரேலியா கிளம்பிவிட்டான்
திரும்ப வரும் போது தன் வாழ்வில் நடக்க போகும் சூறாவளியை அறிந்து கொள்ளாமல் நிம்மதியாக சென்றான்.

அங்கே சென்ற வம்சி தன் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தான் மீனாட்சி என்ற ஒருத்தி இருப்பது கூட அவன் நினைவில் இல்லை.

மீனாட்சியின் கல்லூரியில் அடுத்த மாதம் செமஸ்டர் தேர்வுகள் இருப்பதால் அதற்காக தன்னை தயார் படுத்தி கொண்டு இருந்தாள்.

அவளுக்கு தன்னை பற்றி அடுத்தவர்கள் பேசுவதை பற்றி எந்த கவலையும் இல்லை
இப்போதைக்கு தன் படிப்பு தான் முக்கியம் என்று படிப்பில் கவனம்
செலுத்த ஆரம்பித்தாள்.

செமஸ்டர் தேர்வுகளை நல்ல படியாக முடித்தவள் கடைசி தேர்வு
முடித்து வரும் போது மிகவும் சோர்ந்து போய் விட்டாள் இரவு பகலாக கண்விழித்து படித்ததில்
அவள் உடல்நிலை மோசமாகி இருந்தது.

மறுநாள் காலை எழுந்து கொள்ள கூட முடியாமல் படுத்திருந்தவளை பார்த்த காவ்யா அவள் நெற்றியில் கை வைத்து “என்னாச்சு மீனு உடம்பு இப்படி சுடுது” என்க
“தெரியல காவ்யா ஜூரம் மாறி இருக்கு” என்று பேசக் கூட முடியாமல் திணறி கொண்டு கூறினாள்.

“மீனு வா ஹாஸ்பிட்டல் போலாம்”
“வேண்டாம் காவ்யா ஈவினிங் வரை பார்ப்போம்”
“ஏய் லூசா டி நீ உடம்பு இப்படி சுடுது” என்றவள் அவளை அழைத்து கொண்டு தனியார் மருத்துவமனை ஒன்றிற்க்கு சென்றாள்.

மருத்துவரை பார்க்க இருவரும் வெளியே அமர்ந்திருக்க
செவிலி பெண் வந்து “அடுத்து நீங்க தான் போங்க” என்க
“மீனு வா டி” என்று அவளை அழைத்து சென்றாள்.

மருத்துவரின் முன்னே சென்று மீனாட்சி அமர “சொல்லுங்க என்ன பிரச்சனை” என்று கேட்க
“டாக்டர் ஒரு ஒன் வீக்கா உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு ரொம்ப உட்கார முடியல எழுந்தா மயக்கம் வருது இரண்டு நாளாக ஒரே வாந்தி இன்னைக்கு காய்ச்சல் வேற இருக்கு” என்க அவள் உடம்பை தொட்டு பார்த்த மருத்துவர் அவள் நாடியை பிடிக்க “பிரீயட்ஸ் எல்லாம் கரெக்டா வருதா மா” என்றார்.

“எனக்கு இர் ரெகுலர் பிரீயட்ஸ்
அதனால ரெண்டு மாசமா வரல டாக்டர்” என்க
“சரி அங்கே உள்ளே போய் ரூமில் வெயிட் பண்ணுங்க செக் பண்ணிட்டு சொல்றேன்” என்றார்.

மீனாட்சி உள்ளே செல்ல அவளின் பின்னே காவ்யாவும் செல்ல “நீங்க இங்கேயே இருங்க” என்று மருத்துவர் மட்டும் உள்ளே சென்றார்.

அடுத்த சில மணி நேரத்தில் பிறகு வெளியே வந்தார் மருத்துவர் மீனாட்சி அவர் பின்னே வந்து அமர
“என்னாச்சி டாக்டர்” என்று காவ்யா கேட்க
“என்ன படிக்கிறிங்க ரெண்டு பேரும்” என்க
“பி.எஸ்.சி செகன்ட் இயர் எதுக்காக இதை எல்லாம் கேட்குறிங்க” என்க
“படிக்கிற வயசுல படிக்குறத தவிர எல்லா வேலையும் பார்ப்பிங்களா
இப்போ இருக்க பசங்க எல்லாம் மோசம்” மீனாட்சியை முறைத்து கொண்டே
“என்ன தான் ஆச்சு டாக்டர்” என்றாள் மீனாட்சி பயந்து கொண்டே
“நீ பிரக்னன்ட்டா இருக்கே யார் காரணம் உன் பாய் பிரண்ட்டா
இது கூடவா தெரியாம இருப்ப” என்று அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்து கொண்டே கூறினார்.

அவர் கூறியதை கேட்ட மீனாட்சி கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது காவ்யா அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்து இருக்க
“சீ அழாத இப்போ அழுது என்ன பண்ண கல்யாணத்துக்கு முன்னாடி உங்களுக்கு எல்லாம் என்ன அவசரம் அப்படி
அதுவும் ட்வின் பேபி வேற குழந்தை வேணும் கேட்குறவங்களுக்கு எல்லாம் கடவுள் எதுவும் கொடுக்குறது இல்லை
உங்க அப்பா அம்மா உங்களை நம்பி தான படிக்க அனுப்பி வச்சு இருக்காங்க கொஞ்சம் கூட சுய ஒழுக்கமே இல்லை
வெளியே போங்க முதல்ல” என்று டாக்டர் கத்த
மீனாட்சி தலை குனிந்து அழுது கொண்டே இருந்தாள்
தன் வாழ்வில் எது நடக்க கூடாது என்று நினைத்தாளோ அதுவே நடந்து விட பாவம் அவளும் என்ன செய்வாள்.

“போதும் நிறுத்துங்க டாக்டர் அவள் இப்படி ஒரு காரியம் பண்ணுனதே அவங்க அம்மா அப்பாவுக்காக தான்” என்று கோவத்துடன் காவ்யா கத்த
“என்ன சொல்ற” என்றார் டாக்டர் அதிர்ச்சியுடன்
“ஆமா டாக்டர்” என்று நடந்தவை அனைத்தையும் கூறி முடிக்க
“காலேஜ்ல் இந்த வேலையெல்லாம் பார்க்குறாங்களா” என்றார் அதே அதிர்ச்சி குறையாமல்
“ம்ம்” என்று காவ்யா தலை ஆட்ட
“எந்த காலேஜ் நீங்க” என்று கேட்டு கொண்டார்
“சரி பேபிக்கு யார் காரணம்” என்க
“அவரை பற்றி சொல்ல முடியாது டாக்டர் அவரு பெரிய ஆளு”
“சரி என்னால முடிஞ்ச உதவி பண்றேன் பேபிஸ்க்கு மூன்று மாதம் தான் ஆகுது வேண்டாம்னா அபார்ட் பண்ணிக்கலாம்” என்றார்.

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்” என்று காவ்யா கூற
“எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும் டாக்டர்” என்று கூறிய மீனாட்சி காவ்யாவை அழைத்து கொண்டு வெளியே சென்றாள்.

“நேக்ஸ்ட்” என்று மருத்துவர் குரல் கொடுக்க அவர்களை அடுத்து பத்திரிகை நிரூபர் சந்தானம் கையில் கட்டுடன் வர வெளியே அழுது கொண்டே சென்ற மீனாட்சியை பார்த்தான்.

“வணக்கம் டாக்டர்” என்று கூறி கொண்டே உள்ளே வர
“வாங்க சந்தானம் சார்” என்றார் சிறு புன்னகையுடன்
“மேடம் அழுதுட்டு போகுதே அந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனை” என்க
“ஏன் சார் உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா”
“ஆமா டாக்டர் எனக்கு தூரத்து சொந்தம் அந்த பொண்ணு” என்று பொய் கூறினார்.

அவருக்கு மீனாட்சியை வம்சி விஷயத்தில் முன்பே தெரியும்
அதனால் தான் பொய் சொல்லி விசாரித்து கொண்டு இருந்தார்.

“அந்த பொண்ணு பிரக்னன்ட்டா இருக்கா”
“என்ன சொல்றிங்க” என்றார் சந்தானம் அதிர்ச்சியுடன்
“ஆமா சார்” என்று நடந்தவை அனைத்தையும் கூறி முடிக்க
“அந்த குழந்தையோட அப்பா யாரு டாக்டர்” என்க
“அது சரியா தெரியல சார் அந்த பொண்ணு சொல்ல மாட்றா ஏதோ பெரிய பணக்காரனாம்
என்னவெல்லாம் நடக்குது பாருங்க நாட்டுல” என்றார் மருத்துவர்
சலிப்புடன்.

மீனாட்சியை பற்றி யோசித்து கொண்டே அமர்ந்து இருந்தார் சந்தானம் ‘கண்டிப்பாக அந்த குழந்தையின் தகப்பன் வம்சியாக தான் இருக்க கூடும்’ என்று நினைத்தவர் அதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டார்.

‘டேய் வம்சி என் கையவா உடைக்குற
உனக்கு பத்திரிகைக்காரன்னா யாருன்னு காட்டுறேன் டா’ என்று நினைத்துக் கொண்டார் வன்மத்துடன்.

அங்கும் இங்கும் விசாரித்து அந்த கல்லூரியில் தொடர்புடையவர்
அமைச்சர் வேதாசலம் தான் என்று கண்டுபிடித்தார்.

வேதாசலத்தின் உதவியாளர் பாஸ்கருக்கு அலைபேசியில் அழைத்தவர் வேண்டுமென்றே
வம்சியின் உதவியாளர் என்று கூறி “வம்சி சார் அன்னைக்கு நைட் வந்த அதே பொண்ணு தான் வேணும்ன்னு கேட்க்குறாரு அந்த பொண்ணு பெயர் என்ன பா” என்க
வம்சி என்ற பெயரை கேட்ட பாஸ்கர்க்கு பயம் தொற்றி கொள்ள “இருங்க ஒரே ஒரு நிமிஷம் இப்போ கேட்டுட்டு வரேன்” என்றவர்‌ அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் அழைக்க
“சார் அந்த பொண்ணு பெயர் மீனாட்சி ******* கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு” என்று கூற
“ஓகே” என்று உடனே துண்டித்தவர் தன் மொபைலில் இருந்து சிம்மை தூக்கி எறிந்தார்.

அவர் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை மலர்ந்தது ‘கல்யாணம் பண்ணாமயே அப்பா ஆகிட்டிங்க மிஸ்டர் வம்சி’ என்று மனதில் நினைத்து கொண்டார்.


சந்தானம் என்ன செய்ய காத்திருக்கிறாரோ…?

மொத்தத்தில் வடிவு பாட்டியின் வேண்டுதல் நிறைவேறிவிட்டது.

தொடரும்…..
 
அத்தியாயம் 8

மருத்தவமனையில் இருந்து வெளியே வந்த காவ்யா ஆத்திரம் தாங்க முடியாமல் ‌மீனாட்சியை திட்ட ஆரம்பித்துவிட்டாள்
“ஏன் டி அறிவு கெட்டவளே அதான் அந்த டாக்டரே சொன்னாங்கல்ல
அபார்ட் பண்ணி தொலைக்க வேண்டி தான கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா உனக்கு” என்று கத்த

“இல்ல அது என்னவோ தெரியல மனசு வரல காவ்யா” என்றாள் கண்கள் கலங்க
“சரி இந்த பேபிய பெத்துக்க போறியா சொல்லு
நீயே இன்னும் படிச்சே முடிக்கல முதல்ல இந்த குழந்தையோட அப்பான்னு யார கை காட்டுவா அந்த வம்சி கிட்ட நீ போய் சொன்னா உடனே அவன் உன்னை ஏத்துக்குவானா சொல்லு
நீ நல்லா படிக்கனும்ன்னு நினைச்ச உங்க அம்மாவ பத்தி யோசிச்சியா” என்க

‘அவள் கூறுவதும் உண்மை தானே இவள் போய் அவனிடம் பேசினாள் அவளை ஏற்று கொள்வானா என்ன
இவள் தாயின் நிலை என்னவாகும்’ என்று யோசித்து கொண்டு இருந்தவள் அமைதியாக நிற்க
“மீனு நமக்கு வேற வழி இல்லை டி இந்த பேபிய அபார்ட் பண்ணி தான் ஆகனும்” என்றாள்.

இரட்டை குழந்தை என்று அந்த மருத்துவர் கூறியதில் இருந்து
ஏனோ அவளுக்கு இந்த குழந்தைகளை கொல்ல மனம் வரவில்லை “காவ்யா எனக்கு ஒரு இரண்டு நாள் மட்டும் டைம் கொடு யோசிச்சுட்டு சொல்றேன்” என்க
“நீ திருந்தவே மாட்டியா
எவளாச்சும் ஒரு நாள் ஒன்னா இருந்ததுக்காக தன் வாழ்க்கையையே அடமானம் வைப்பாளா”

“காவ்யா எனக்கு டாக்டர் இப்படி சொன்னது கஷ்டமா இருக்கு
இரண்டு நாளுக்கு பிறகு வந்து
எல்லாம் பார்த்துக்கலாம்” என்க

அவளை பார்க்கவும் பாவமாக தான் இருந்தது காவ்யாவுக்கு
“சரி ‌இரண்டு நாள் தான் யோசிச்சிட்டு ஒரு நல்ல முடிவா சொல்லு இப்போ வா ஹாஸ்ட்டல் போலாம்” என்று அவளை தன்னுடன் அழைத்து சென்றாள்.

என்னதான் வேண்டாத பிள்ளைகளாக இருந்தாலும் அவளும் தாய் தானே எப்படி தன் பிள்ளைகளை தானே கொலை செய்ய முன் வருவாள்
மீனாட்சியின் இறுதி முடிவு என்னவோ?

ஆஸ்திரேலியாவில் வம்சிக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பு.…

தன் அறையில் எப்போதும் போல இன்றும் வேறு ஒரு வெள்ளைக்கார பெண்ணின்
மேலே படுத்திருந்தான் வம்சி அவளின் இதழ் நோக்கி முத்தமிட செல்லும் போது அவன் அலைபேசி ஒலித்தது அதை எடுக்காமல் விட்டவன் மீண்டும் அந்த பெண்ணை நெருங்க மறுபடியும் அழைப்பு வர எரிச்சலடைந்தவன்
அதை எடுத்து காதில் வைத்தான்
சதீஷ் தான் அழைத்து இருந்தான்
“ஏய் இடியட் எதுக்கு கால் பண்ணிட்டே இருக்க” என்று திட்ட
“சார் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் முதல்ல டிவிய ஆன் பண்ணி எதாச்சும் ஒரு தமிழ் நியூஸ் சேனல் பாருங்க” என்க
“ஏன் என்னாச்சு” என்றான் அவன்
எந்த வித பதட்டமும் இன்றி
“உங்க வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம் பிளீஸ் பாருங்க” என்றான்.

படுக்கையின் அருகில் இருந்த வம்சி தொலைக்காட்சியை உயிர்பித்து தமிழ் சேனல் ஒன்றை வைக்க “ *****தனியார் கல்லூரி ஒன்றின் நிறுவனர் அங்கு படித்த மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளியது வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது
இதில் பல முக்கிய பிரபலங்களுக்கும் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது
இந்த நிலையில் கிருஷ்ணா குரூப்ஸ் ஆப் கம்பெனியின் முதலாளி
திரு.வம்சி கிருஷ்ணா ஒரு பெண்ணை கற்பழித்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது வெளியே வந்துள்ளது அதுமட்டுமின்றி அந்த பெண் இப்போது கற்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது அதை பற்றிய சிசி டிவி காட்சிகளை பார்ப்போம்”
என்று செய்தி வாசிப்பாளர் கூறி முடிக்க அன்று ஹோட்டல் அறையில் மீனாட்சி உள்ளே செல்வதும் சிறிது நேரம் கழித்து அவள் பின்னே வம்சி முழு போதையுடன் நுழைவதும்” தெளிவாக தெரிந்தது.

மேலும் அந்த கல்லூரியின் நிறுவனர் கைது செய்யப்படுவதும் திரையில் தெரிந்தது.

அதை பார்த்தவன் கோபம் தலைக்கேற டிவி ரிமோட்டை தூக்கி எறிந்தான் “ஹலோ சதீஸ் உடனே நாம இந்தியாவுக்கு போறோம்” என்று அழைப்பை துண்டித்தவன் உடனே எழுந்து உடை மாற்றி பாக்கெட்டில் இருந்த ஒரு கட்டு பணத்தை அந்த வெள்ளை நிற அழகியின் மீது விட்டேறிந்து விட்டு வெளியே வந்தான்.

நேரே விமான நிலையத்திற்க்கு சென்றான் சதீஷ் அவனுக்கு முன்பே வந்து காத்திருக்க இருவரும் அடுத்த விமானத்தில் இந்தியா வந்து சேர்ந்தனர்.

வம்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் போதே பத்திரிகையாளர்கள் அவனை புடை சூழ்ந்து கொண்டனர்.

“சார் நீங்க தான் அந்த பொண்ண கற்பழிச்சிங்களா அந்த காலேஜ்க்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?” என்று ஒருவன் கேட்க அவனை ஓங்கி அறைந்தான் வம்சி.

அந்த காட்சி அங்கிருந்த நிரூபர்களின் கேமாரக்களில் பதிவானது உடனே அவன் அருகில் ஓடி வந்த சதிஷ் அவனை தடுத்து தன்னுடன் அழைத்து சென்றான்.

“இந்த வம்சி சார் கோவப்படுவதை பார்த்தா உண்மையா இருக்குமோன்னு தோனுது” என்று பத்திரிகையாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர்.

காரில் ஏறி அமர்ந்த வம்சிக்கு இன்னமும் கோபம் அடங்கவேயில்லை
கோபத்துடன் அமர்ந்து இருந்தவனை பார்த்து
“சார் கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று சதிஷ் அவனை சமாதானப்படுத்தி கொண்டு இருந்தான்.

“யார் அந்த பொண்ணு அவள் உண்மையாவே பிரக்னன்ட்டா இருக்காளா சதிஷ்” என்க

“ஆமா சார் அந்த பொண்ணு பெயர் மீனாட்சி அன்னைக்கு நைட் உங்க கூட தான் இருந்துருக்கா மே பி அது உங்க பேபியா இருக்கலாம் சார்”
என்றான்.

“ஒகே நம்ம ரவிக்கிட்ட சொல்லி அவள் கதையை முடிக்க சொல்லிடு” என்றான் வம்சி சாதரணமாக.

“சார் அந்த பொண்ணு பிரக்னன்ட்டா இருக்கா பாவம் சார் கொஞ்சம் யோசிங்க” என்றான் கெஞ்சும் தோணியில்
“எனக்கு அதை பற்றி எல்லாம் கவலையில்லை” என்றவன்
தன் அலைபேசியை எடுத்து
ரவிக்கு அழைத்தான்
ரவி அந்த நகரத்தின் பிரபல ரவுடி வம்சிக்கு தொல்லை தருபவர்களை இவன் தான் முடித்து வைத்து கொண்டு இருக்கிறான்.

“ஹலோ ரவி பொண்ணு பெயர் என்ன சொன்ன” என்று சதீஷிடம் கேட்க “மீனாட்சி” என்றான்
“மீனாட்சி **** காலேஜில் படிக்குறா அவள் கதையை முடிச்சிட்டு வந்து அமௌன்ட் வாங்கிக்கோ நாளைக்கு காலையில் அவள் செத்துட்டாங்குற
செய்தி வரனும்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

வம்சியை பார்த்து சதீஷ்க்கு கோபம் வந்தது ‘எப்படி இரக்கமே இல்லாம இருக்காரு பாவம் அந்த பொண்ணு’ என்று

மனதில் நினைத்து கொண்டான்.

மீனாட்சியின் நிலை என்னவோ…?

தொடரும்…
 
அத்தியாயம் 9


கல்லூரி வளாகம்…


கல்லூரியின் நிறுவனர் கைது செய்யப்பட்டத்தில் இருந்து அந்த இடமே பரபரப்பாக மாறி இருந்தது போலீஸ் வாகனம் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்க

அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.


அதுமட்டுமின்றி பிரபல நியூஸ் சேனல்களில் இருந்து வந்த நிரூபர்கள் மாணவ மாணவிகளையும் பெற்றோர்களையும் கையில் மைக்கை வைத்து கொண்டு கேள்விக் கேட்டு கொண்டு இருந்தனர்.


மீனாட்சியின் அம்மா கண்ணம்மா

செய்தி கேள்விப்பட்டு ஊரில் இருந்து வந்திருந்தார் கல்லூரியின் உள்ளே நுழைந்தவர்

நேரே மாணவிகள் விடுதிக்கு சென்றார் அங்கிருந்த அலுவலக பெண்மணியிடம் தான் மீனாட்சியை பார்க்க வந்திருப்பதாக கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டார்.


மீனாட்சியின் அறைக்கு சென்ற மாணவி ஒருத்தி “மீனாட்சி உங்க அம்மா வந்திருக்காங்க” என்று கூறிவிட்டு செல்ல அவளுக்கு பதட்டம் அதிகரித்தது பயத்தில் வேர்த்து கொட்ட ஆரம்பித்தது

அவள் பதட்டத்தை பார்த்த காவ்யா “உங்க அம்மா உண்மை என்னன்னு சொன்னா உன்னை புரிஞ்சிப்பாங்க டி வா” என்று அவளின் கையை பிடித்து வெளியே அழைத்து வந்தாள்.


சேரில் அமர்ந்து இருந்த கண்ணம்மா மீனாட்சி வருவதை பார்த்து எழுந்து நின்று கொண்டார் அவர் அருகில் வந்த மீனாட்சி தலைகுனிந்து அழுது கொண்டே நின்றிருக்க

அவள் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தார் கண்ணம்மா

அவளை அடித்தும் கோபம் குறையாமல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவளை முறைத்து கொண்டே நின்றிருந்தார்.


“அம்மா” என்று அவள் ஏதோ கூற வர அவளின் மறு கன்னத்திலும் அறைந்தார் “சீ பேசாத நீயெல்லாம் ஒரு பொண்ணா என் வயித்துல தான் நீ பிறந்தியா பணத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவியா டி

நான் உன்னை அப்படியா வளர்த்தேன்” என்று திட்ட

“ஆன்ட்டி அவள் மேல் எந்த தப்பும் இல்லை” என்று காவ்யா கூற

“யார் நீ?” என்றார் கோபத்துடன்

“நான் அவளோட ஃபிரண்ட்” என்க

“நான் என் பொண்ணு கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” என்றார் அவளை பார்த்து முறைத்து கொண்டே

அவர் பார்த்த பார்வையில் காவ்யா பயந்து எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டாள்.


“ உன்னை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தேன் டி

உனக்கு என்ன குறை வச்சேன் டி பாவி இப்படி ஒரு காரியத்தை பண்ணி வச்சிருக்க” என்று அவளின் தோளை தொட்டு உளுக்க அவள் எதுவும் பேசாமல் அழுது கொண்டே நின்றிருந்தாள்.


“அம்மா நான் தெரியாமா” என்று அவள் கூறி முடிக்கும் முன்னே இன்னும் வேக வேகமாக இரண்டு கைகளால் அவள் தோளில் அடிக்க ஆரம்பித்தார்.


அவள் என்ன பேச வருகிறாள் என்று கூட கேட்காமல் தன்னை சுற்றி பேசும் நான்கு பேரின் பேச்சை மட்டும் கேட்டு அவளை குற்றவாளியாக நிற்க வைத்துவிட்டார் அவளின் தாய்.


அலுவலக பெண்மணி ஓடி வந்து அவரை தடுத்து “உங்க சண்டையெல்லாம் வீட்டில் போய் வைச்சிக்கங்க” என்று கத்த

“வீட்டுக்கா இவளை ஊருக்கு கூட்டிட்டு போய் நான் எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டு நிக்கவா

நல்ல வேளை அந்த மனுஷன் செத்து போய்ட்டாரு இல்லைன்னா இந்த கருமத்தை எல்லாம் பார்த்துருக்கனும்


என் வீட்டு பக்கம் காலடி எடுத்து வச்ச உன் காலை ஓடச்சிடுவேன் நீ எங்கையோ போ என்னவோ பண்ணு ஒழுக்கம் கெட்டவளே பெத்த வயிறு பத்தி எரியுது டி உன்னால

நீயெல்லாம் நல்லாவே இருக்கு மாட்ட” என்று தரையில் இருந்த மண்ணை அவள் முகத்தில் வாரி வீசிவிட்டு அவளை திரும்பி கூட பார்க்காமல் அழுது கொண்டே சென்றார்.


அவர் பின்னே ஓடிச் சென்ற மீனாட்சி அவரின் கையை பிடித்து கொண்டு “அம்மா நான் சொல்றதை ஒரு தடவை கேளு மா நான் எதுக்காக இப்படி பண்ணினேன்னா” என்று கூற

“அடச்சீ என் கையை விடு டி” என்று அவள் கையை தட்டி விட்டவர் “நீ என் கையை தொட்டாளே பாவம்” என்று முகத்தை சுளித்து கொண்டே கூற மீனாட்சி உள்ளுக்கள் உடைந்து போனாள்.


அவள் கையை உதறிய கண்ணம்மா வேக நடையுடன் வெளியே சென்றுவிட்டார்.


அவரை தடுக்க முடியாமல் சூழலில் சிக்கிய மீனாக மீனாட்சி பரிதவித்து கொண்டு நிற்க காவ்யா அவளின் தோளில் கை வைக்க

கதறி கொண்டே அவளை கட்டி அணைத்து கொண்டாள்

மூக்கு நுனி எல்லாம் சிவந்து தேம்பல் வரும் வரை அழுதவளை அணைத்து ஆறுதல் கூறினாள் காவ்யா.


அலுவலக பெண்மணி அவர்கள் அருகில் வந்து “இந்தாம்மா மீனாட்சி நீ இனி இந்த ஹாஸ்ட்டலில் தங்க முடியாது உன்னை காலி பண்ண சொல்லிட்டாங்க சேர்மன்

உங்க அம்மா வந்து உன்னை கூட்டிட்டு போவங்கன்னு பார்த்தேன் அவங்களும் கூட்டிட்டு போகல சீக்கிரமா உன் பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துட்டு கிளம்பு” என்க

அவளின் தாய் அவளை தவிக்க விட்டு சென்றதே பெரிய அதிர்ச்சி என்றாள் இப்போது விடுதியில் இருந்து அவளை வெளியே அனுப்பினால் அவள் எங்கு போவாள் என்ன செய்வாள்.


“மேடம் உடனே போக சொன்னா அவள் எங்கே போவாள் பிளீஸ்” என்று காவ்யா கெஞ்ச

“சேர்மன் தான் சொன்னாங்க என்னால என்ன பண்ண முடியும் மீனாட்சி போய் உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு கிளம்பு” என்று கூறிவிட்டு அந்த பெண்மணி அவள் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.


தன் கண்ணில் இருந்த கண்ணீரை துடைத்த மீனாட்சி மனதில் ஒரு முடிவு எடுத்தவளாக உள்ளே தன் அறைக்கு நடந்து சென்றாள்

அவள் பின்னே காவ்யாவும் ஓடி வர அவள் தன் உடமைகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்.


“மீனு எங்கே கிளம்புற?” என்க

“இங்க பக்கத்தில் என் ஸ்கூல் ஃபிரண்ட் வீடு ஒன்னு இருக்கு அங்க போறேன்”

“எனக்கு தெரியாம யாரு உன் ஃபிரண்ட்?”

“உனக்கு அவளை தெரியாது”

“சரி நானும் உன் கூட வரேன் வந்து விட்டுட்டு போறேன்”

“வேண்டாம் காவ்யா நானே என் வாழ்க்கையை பார்த்துக்குறேன் யாரோட துணையும் எனக்கு தேவையில்லை” என்றவள்

தன் பேகை மாட்டி கொண்டு

வெளியே சென்றாள்.


அவள் கையை பிடித்த காவ்யா

“என்னால தான உனக்கு இவ்வளவு பிரச்சனையும்” என்று அழுது கொண்டே

அவள் கண்ணீரை துடைத்த மீனாட்சி “என் மேலையும் தப்பு இருக்கு காவ்யா” என்று சிரித்து கொண்டே கூறியவள் விடுதியில் இருந்து வெளியே கிளம்பினாள்.


கல்லூரி வளாகத்தின் வெளியே நின்று கொண்டு இருந்த மாணவ மாணவிகள் மீனாட்சியை

இவள் தானே என்பதை போல பார்த்து வைக்க

அவர்கள் பார்த்த பார்வை இவளை கூனி குறுக வைத்தது தன்னை சமாளித்து கொண்டு வெளியே சென்றாள்.


வெளியே ரவி தன் காரில் அமர்ந்து கொண்டு ‘எப்படி உள்ளே போகலாம்’ என்று யோசித்து கொண்டு இருக்க

மீனாட்சி வெளியே வருவதை பார்த்தவன் தன் கையில் இருந்த புகைப்படத்தில் இவள் தானா என்று பார்க்க இவளே தான் என்று நினைத்தவன் ‘ஆடு தானா வந்து தலையை விடுதே’ என்று நினைத்து கொண்டே அவளை பின் தொடர ஆரம்பித்தான்.


நேரே நடந்தது சென்றவள் சிறிது தூரம் சென்று பின்

தன் கல்லூரியின் அருகில் இருக்கும் ஏரியில் ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் சென்று நின்று கொண்டாள் அங்கிருந்த பாலத்தின் மீது ஏறி அங்கே சளசளத்து ஓடிக் கொண்டு இருக்கும் தண்ணீரை வெறுமையாக பார்த்தாள் தன் பையை தூக்கி தண்ணீரில் எறிந்தாள்.


அதை பார்த்த ரவி ‘சாக போறா போல நமக்கு வேலை மிச்சம்’ என்று நினைத்து கொண்டான்.


தண்ணீரை பார்த்து கொண்டே மூச்சை இழுத்துவிட்டவள்

‘இனி தான் யாருக்காக வாழ போகிறோம்’ என்று நினைத்தவள்

குதித்துவிடலாம் என்று தன் இரு கண்களை மூடிக் கொண்டு குதிக்க போக சரியாக அந்த நேரம் அவள் கையை யாரோ பிடித்து இழுக்க நிலை தடுமாறி கண்ணை திறந்தவள் யார் என்று பார்க்க ஒரு வயதான பெண்மணி காட்டன் புடவையில் நெற்றியில் பட்டை அடித்து கொண்டு காதில் வைர தோடு கழுத்தில் முத்து மணி என்று பணக்கார வீட்டு பெண்மணி போன்று நின்றிருக்க

“யார் நீங்க?” என்றாள் கோபத்துடன்.


தொடரும்….
 
அத்தியாயம் 10

“முதல்ல கீழே இறங்கி வா பிள்ளைத்தாச்சு பொண்ணு இங்கே எல்லாம் நின்னா சளி பிடிச்சிடும் கீழே இறங்கு”
என்க
“யாருங்க நீங்க உங்களுக்கு என்ன வேணும்?”
“சொல்றேன் முதல்ல நீ கீழே இறங்கி வா” என்று அவளை பாலத்தில் இருந்து கீழே கூட்டி வந்தார் வடிவு பாட்டி ஆம் வடிவு பாட்டியே தான்
சதீஷ் தான் நடந்தவை அனைத்தையும் கூறி அவரிடம் உதவி கேட்டிருந்தான்.

வடிவு ஒருவரை தவிர வம்சியை யாராலும் தடுக்க முடியாது என்று
அவனுக்கு தெரியும் ஒரு அப்பாவி பெண்ணின் உயிர் போய்விட கூடாது என்று நினைத்தான்.

அவருக்கு மீனாட்சியின் புகைப்படத்தை அலைபேசியில் அனுப்பி வைத்திருந்தான்.

கல்லூரியில் மீனாட்சியை பார்க்க வந்தவர் அவள் வெளியே செல்வதை பார்த்து எங்கே செல்கிறாள் என பின் தொடர அவள் தற்கொலைக்கு முயல்வதை பார்த்தவர் ஓடி வந்து அவளை தடுத்திருந்தார்.

தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த ரவி வடிவு பாட்டியை பார்த்தவுடன் அலைபேசியில் வம்சிக்கு அழைத்தான் “ஹலோ ரவி என்ன முடிஞ்சுதா’’ என்றான் கணீர் குரலில் வம்சி
“சார் அந்த பொண்ணு கூட உங்க பாட்டி இருக்காங்க” என்க
“வாட் என் பாட்டியா”
“ஆமா சார் இப்போ போடவா வேண்டாமா” என்க
“ஷிட் வேண்டாம் வந்துரு பிறகு பார்த்துக்கலாம்” என்றவன் அழைப்பை துண்டித்தான்
‘பாட்டிக்கு எப்படி அவளை தெரியும்’ என்று நினைத்து கொண்டே இருக்க
ரவி அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டான்.

“நான் வம்சியோட பாட்டி வடிவுக்கரசி” என்று மீனாட்சி கேட்ட கேள்விக்கு பதில் கூற
அதை கேட்டவளுக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேறியது
“உங்களுக்கு என்ன வேணும் உங்க பேரன் என் வாழ்க்கையை கெடுத்தது பத்தலையா நிம்மதியா வாழ தான் விடல
சாக கூட விட மாட்டிங்களா” என்க
“கண்ணு உன் கோபம் புரியுது என் பேரன் பண்ணியது தப்பு தான் நான் இல்லைன்னு சொல்லலை ஆனால் எங்க வீட்டு வாரிசை அழிச்சிடாத மா” என்று கண்கள் கலங்க கேட்க.

“தயவு செஞ்சு என்னை நிம்மதியா இருக்க விடுங்க பிளீஸ்” என்று அவளும் அழுது கொண்டே கூற
“உன் பிரச்சனை எல்லாம் தீர நான் ஒரு வழி சொல்றேன் தயவு செஞ்சு கேளு மா” என்க
அவள் என்ன என்பதை போல பார்த்து வைக்க
தயங்கி கொண்டே “நீ என் பேரனை கல்யாணம் பண்ணிக்கிறியா” என்று கேட்க.

அதை கேட்டவளுக்கு முகம் இறுகி போனது “என்னால முடியாது பாட்டி” என்று ஒரே வார்த்தையில் பதில் கூறி விட்டு அங்கிருந்து செல்ல பார்க்க
அவள் கையை பிடித்து கொண்டவர் “கண்ணு உங்கிட்ட கெஞ்சி கேட்க்கிறேன் என் பேரன் வாரிசை அழிச்சிடாத மா
எங்க வீட்டு வம்சம் இதோட அழிஞ்சிடுமோன்னு பயந்துகிட்டே இருந்தேன் உன் ரூபத்தில் அந்த கடவுள் எனக்கு உதவி பண்ணியிருக்காரு
உன் கையை காலா நினைச்சி கேட்க்கிறேன் என் பேரனை கட்டிக்க மா” என்று தன் கையை பிடித்து கெஞ்சி கதறியவரை பார்த்து கொண்டே நின்றிருந்தாள்.

அப்போதும் மனம் இறங்காமல் செல்ல பார்க்க “சரி நீ சாக தான போற வா நானும் உன் கூட வந்து சாகுறேன் என் கொள்ளு பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாத ஒரு வாழ்க்கை எனக்கும் தேவையில்லை” என்று அவள் கையை பிடித்து கொண்டு பாலத்தில் ஏற போக.

“லூசா பாட்டி நீங்க” என்று அவரை பிடித்து தடுக்க
“உண்மையாவே எனக்கு இந்த வாழ்க்கை நரகமா தான் கண்ணு இருக்கு இப்படி ஒரு வாழ்க்கை வாழ்றதுக்கு செத்தே போகலாம்” என்க
“என்ன பாட்டி இதெல்லாம் தப்பு”
“அதனால தான் சொல்றேன் நான் உயிரோட இருக்கணும்னா என் பேரனை கட்டிக்கோ” என்க
‘இந்த பாட்டி விடாது போலையே எப்படியும் அவன் சம்மதிக்க மாட்டான்’ என்று நினைத்தவள்
ஒரு மனதாக “சரி பாட்டி” என்றாள்.

“இப்போ நான் போறேன் பிறகு வரேன்” என்று மீனாட்சி நழுவ பார்க்க “எங்கே போற கண்ணு உன்னை தான் ஹாஸ்ட்டலில் இருந்து விரட்டி விட்டுட்டாங்களே எங்க வீட்டுக்கு வா போலாம்”
“உங்களுக்கு எப்படி தெரியும்” என்று அவள் சந்தேகத்துடன் கேட்க
“எல்லாம் தெரியும் வா” என்று அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றார்.

தன் காரில் ஏறியவர் “வா வந்து உட்காரு” என்று தன் பக்கத்தில் இருந்த இருக்கையை காட்ட தயங்கி கொண்டே அந்த விலையுயர்ந்த காரில் ஏறி அமர்ந்தாள்.

இவ்வளவு நேரம் அழுது கொண்டே கெஞ்சி கொண்டு இருந்த பாட்டி சாதரணமாக வருவதை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள்.

பாட்டியோ மனதில் ‘இவளை சமாளிச்சாச்சு அவனை எப்படி சமாளிக்க போறோம்’ என்று நினைத்து கொண்டே வந்தார்
அவருக்கு தெரியும் இந்த ஒரு வாய்ப்பை விட்டு விட்டாள் தன் பேரனுக்கு திருமணமே நடக்காது என்று.

அரை மணி நேர பயணத்திற்க்கு பிறகு கார் வம்சியின் பங்களாவிற்க்கு வந்து சேர்ந்தது.

கேட்டின் உள்ளே கார் நுழையும் போது அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை பார்த்த மீனாட்சிக்கு உள்ளுக்குள் பயம் வந்தது சமாளித்து கொண்டு வந்தவள்.

பங்களாவின் வாசலில் கார் நிற்க அங்கிருந்த வேலைக்காரன் மூர்த்தி கார் கதவை திறந்து விட கீழே இறங்கிய மீனாட்சியை பார்த்து மெலிதாக புன்னகைத்தான் அவள் பதிலுக்கு சிரிக்காமல் உம்மென்று முகத்தை வைத்து கொண்டு வந்தாள்.

வடிவு பாட்டி அவளை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல வம்சி அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு மதம் கொண்ட யானையை போல அவர்களை பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தான்.

திருமணம் குழந்தை என்ற பேச்சை கேட்டாளே கடித்து வைப்பவன் இன்று தன் குழந்தையை சுமந்து கொண்டு திருமணம் என்ற பெயரில்
ருத்தி தன் வாழ்வில் நுழைவதை சும்மா விடுவானா…?

தொடரும்….
 
Last edited:
அத்தியாயம் 11


வடிவு பாட்டி வம்சி தன்னை முறைப்பதை பார்த்தும் கண்டுகொள்ளாமல் மீனாட்சியின் கையை பிடித்து உள்ளே அழைத்து செல்ல

“ஏய் நில்லு டி” என்று வம்சி அந்த வீடே அதிரும் படி கத்தினான்

அதில் திடுக்கிட்டு திரும்பினாள் மீனாட்சி

அவன் கத்தியதை கேட்டு பயந்தவள் பாட்டியின் கையை இன்னும் கெட்டியாக இறுக பிடித்து கொண்டாள்

அவரும் அவளின் கையை நான் இருக்கிறேன் என்று சமாதானம் செய்வதை போன்று அழுத்தி பிடித்து கொண்டார்.


தன் கையின் முழங்கை சட்டையை மடக்கி விட்டுக் கொண்டே ஏதோ சண்டைக்கு செல்பவனை போன்று விறுவிறுவென எழுந்து நடந்து அவள் அருகில் சென்றவன் அவள் கழுத்தை பிடித்து நெருக்கி அவன் உயர்த்துக்கு தூக்கினான் “எதுக்காக இங்கே வந்த இது யாரோட குழந்தை சொல்லு டி?” என்று அவள் கழுத்தை இறுக்கி பிடிக்க

மீனாட்சியின் கண்கள் மேலே சொறுகி மூச்சு விட சிரமப்படுவதை பார்த்த

வடிவு பாட்டி ஓடி வந்து அவன் கையை பிடித்து கொண்டார் “டேய் கண்ணா அந்த பொண்ணு பாவம் அவளை விடுடா நான் தான் அந்த பொண்ணை இங்கே கூட்டி வந்தேன் சொன்னா கேளு

அவள் எந்த தப்பும் பண்ணல டா” என்று கத்திக் கொண்டே அவன் கையை பிடித்து இழுக்க மெல்ல அவள் கழுத்தில் இருந்து தன் கையை விடுவித்தான் அதில் நிலை தடுமாறி கீழே விழ போனவளை சேதுராமன் வந்து பிடித்துக்கொண்டார்.


மீனாட்சி மூச்சு விட முடியாமல் இறுமி கொண்டே இருக்க “மூர்த்தி தண்ணீர் எடுத்து வா” என்று அவர் குரல் கொடுக்க

மூர்த்தி தண்ணீர் எடுத்து கொண்டு ஓடி வந்தான் மெல்ல அவளுக்கு தண்ணீரை புகட்டினார் சேதுராமன்.


“பிள்ளைதாச்சு பொண்ணு கிட்ட போய் ஏன் டா உன் வீரத்தை காட்டுற இந்த பாவம் எல்லாம் உன்னை சும்மா விடுமா” என்று வடிவு பாட்டி கண்கள் கலங்க கேட்க.


“பாட்டி நீ சும்மா இரு இவள் எவன் பிள்ளைக்கோ என்னை அப்பனாக்க பார்க்குறா

பணத்துக்காக தான் இவள் அன்னைக்கு என் கூட இருந்தா இங்கே வந்து பத்தினி வேஷம் போடுறா படிக்குற வயசுல படிக்காம விபச்சாரம் பண்ணிக்கிட்டு இருந்தா இவளை போய் வீட்டு உள்ள சேர்க்குற எனக்கு வர கோவத்துக்கு இவளை இங்கேயே கொன்னு புதைச்சாலும் என் கோவம் தீராது” என்று திட்டிக் கொண்ட அவளை முறைத்து பார்த்தான்.


இறுமி கொண்டே இருந்தவள் அவன் கூறிய வார்த்தைகளை கேட்டவளுக்கு கண்கள் இரண்டும் குளம் கட்டியது தன்னை செருப்பால் அடித்ததை போல உணர்ந்தவள் இனி ஒரு நிமிடம் கூட இந்த வீட்டில் இருக்க கூடாது என்று நினைத்தவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.


“போதும் நிறுத்துங்க நானா ஒன்னும் உங்க வீட்டு படி ஏறி வரல உங்க பாட்டி தான் இங்கே கூட்டி வந்தாங்க யார பார்த்து விபச்சாரின்னு சொன்னிங்க

ஆமா உங்க கூட பணத்துக்காக தான் ஒன்னா இருந்தேன் நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்

ஆனால் இது உங்க குழந்தைங்க தான் அது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இதை எங்கே வேணும்னாலும் வந்து என்னால சொல்ல முடியும் உங்களால சொல்ல முடியுமா

சொன்னாலும் சொல்லைனாலும் நான் பத்தினி தான்

உங்கிட்ட தீயில் இறங்கி நிரூபிக்க நான் ஒன்னும் சீதையும் இல்லை நீங்க ஒன்னும் ராமனும் இல்லை என் குழந்தையை பார்த்துக்க என்னால முடியும்”

என்று கோபம் கொப்பளிக்க கூறியவள் வெளியே செல்ல போக வடிவு அவளின் கையை பிடித்து கொண்டார் அவருக்கு தெரியும் இந்த ஒரு வழியை விட்டாள் தன் பேரனுக்கு திருமணம் என்ற ஒன்று நடக்கவே நடக்காது என்று

அதுமட்டுமின்றி தன் பேரக்குழந்தைகளை விட்டு கொடுக்க அவருக்கு மனமில்லை

“அம்மாடி மீனாட்சி தயவு செஞ்சு

போகாத உன்னை கெஞ்சி கேட்க்குறேன்” என்று அவளிடம் மன்றாட.


“பாட்டி” என்று வம்சி காட்டு கத்தாக கத்தினான் “கண்ணா” என்று கண்கள் கலங்கி நின்றவர் அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு கீழே விழ போனார்.


வம்சி அவர் விழுந்ததை கவனிக்கவில்லை

தன் தாய் கீழே விழுந்ததை கவனித்த சேதுராமன் “பப்ளு பாட்டி கீழே விழறாங்க பாரு” என்று கத்த அவர் குரல் கேட்டு அனிச்சையாக திரும்பினான்.


வெகுநாட்களுக்கு பிறகு சேதுராமன் வம்சியை பப்ளு என்று அழைக்கிறார்.


அவன் அருகில் வருவதற்க்குள் வடிவு பாட்டி கீழே விழுவதை பார்த்த மீனாட்சி அவரை தாங்கி பிடித்துக் கொண்டாள்.


அவள் கையை பிடித்து கொண்டே

“இ..ங்..க இ..ரு..ந்…து போ…கா..த” திக்கி திணறி கூறியவர் அவள் கையை பிடித்து கொண்டு விடவேயில்லை அவளின் கையிலேயே மயங்கி சரிந்தார்.


அந்த நேரம் பார்த்து அவர் அருகில் ஓடி வந்த வம்சி “பாட்டி” என்று அவர் கன்னத்தில் தட்டி எழுப்ப அவர் சுயநினைவின்றி கிடந்தார் அவரை தன் கையில் தூக்கியவன் தன் காரை நோக்கி ஓடினான்.


அவன் பின்னே வந்த சேதுராமன் “நீயும் வா மா” என்று மீனாட்சியை அழைத்து கொண்டு காரில் ஏற அவளும் மறுக்க முடியாமல் அவருடன் சென்றாள்.


காரில் ஏறிய வம்சி டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை விரைந்து செலுத்தினான் பின்னே பாட்டியை தன் தோள் வளைவில் அணைத்து கொண்டு மீனாட்சி அமர்ந்து கொண்டாள்.


மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மருத்துவருக்கு அழைத்து விஷயத்தை கூறினான் வம்சி

கார் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றின் வாசலில் சென்று நின்றது

இவனுக்கு முன்பே மருத்துவர் வீல் சேருடன் நிற்க பாட்டியை அழைத்து கொண்டு அவசர சிகிச்சை பிரிவிற்க்கு ஓடினர் மூவரும்.


அவசர சிகிச்சை பிரிவின் வாசலில் நின்றிருந்த வம்சிக்கு பதட்டம் குறையவே இல்லை

தனக்கென இந்த உலகத்தில் இருக்கும் ஒரே ஒரு உயிரும் தன்னை விட்டு போய் விடுமோ என்று பதட்டத்தில் நின்று கொண்டு இருந்தான்

அவனுக்கு தன் தாயின் நினைவு வேறு வந்து இன்னும் பதட்டம் அதிகரித்தது.


யோசித்து கொண்டே அமர்ந்து இருக்க மருத்துவர் வெளியே வர

அதே பதட்டத்துடன் அவர் அருகில் சென்றவன் “டேய் பார்த்தி பாட்டி” என்க “பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் டா ஒரு அரை மணி நேரத்துக்கு பிறகு தான் எதுன்னாலும் சொல்ல முடியும் கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று கூறிவிட்டு உள்ளே சென்றான் வம்சியின் நண்பன் பார்த்திபன்.


வடிவு பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் என்று கூறியவுடன் வம்சி உடைந்து போய்விட்டான் எப்போதும் தன்னுடன் இருக்கும் கர்வம் திமிர் எதுவுமின்றி கண்ணீருடன் கலங்கி போய் அமர்ந்து கொண்டான்.


சேதுராமனால் தன் மகன் கவலைப்படுவதை தூரத்தில் இருந்து பார்க்க தான் முடிந்தது அவனை அணைத்து ஆறுதல் கூறலாம் என்று நினைத்தாள் கூட தன் மகன் அனுமதிக்க மாட்டான் அதனால் ஒரு ஓரமாக

அவரும் என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தார்.


வம்சியை சிறு வயதில் இருந்தே தாயாக தந்தையாக வளர்த்து ஆளாக்கியவர் அவனுடைய பாட்டி வடிவு மட்டுமே என்ன தான் அவன் பிடிவாதகாரனாக இருந்தாலும் பாட்டியிடம் பாசக்காரனாக தான் இருந்தான்.


மீனாட்சி நிலையோ சொல்லவே தேவையில்லை தன்னால் தான் அனைவருக்கும் பிரச்சனை என்ற குற்ற உணர்ச்சியில் நின்றிருந்தாள்.


சரியாக ஒரு மணிநேரம் கழித்து பார்த்திபன் வெளியே வந்தான்

வம்சி தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்து இருக்க

அவன் தோளில் கை வைத்தவன்

“வம்சி பாட்டி கண் முழிச்சிட்டாங்க இப்போ ஓகே ஆனால் இனி அவங்க கஷ்டப்படுற அளவுக்கு எந்த விஷயத்தையும் பார்க்கவோ கேட்கவோ கூடாது முடிஞ்ச அளவுக்கு அவங்கள ஹப்பியா வச்சிருக்க பாரு இல்லைன்னா இன்னோரு அட்டாக் வர வாய்ப்பு இருக்கு ஆமா யாரு மீனாட்சி”

என்க


“அந்த பொண்ணு தான்” என்று வம்சி கை காட்ட

“அவங்கள உங்க பாட்டி பார்க்கனும்ன்னு கேட்டாங்க”

“ஓ” என்றவனின் மனதில் அப்படி ஒரு வலி ‘என்னை பார்க்கனும் தோனலையா நேத்து வந்தவ முக்கியமா போய்ட்டாளா’ என்று நினைத்து கொண்டிருந்தான்‌.


“மீனாட்சி நீங்க உள்ளே போங்க பாட்டி கூப்பிட்டாங்க” என்று பார்த்திபன் கூற

“என்னையா டாக்டர்” என்று அவள் சந்தேகத்துடன் கேட்க

“ஆமா உங்களை தான்” என்று கூறிவிட்டு செல்ல.


மீனாட்சி அறையின் உள்ளே செல்வதை பார்த்து முறைத்து கொண்டே அமர்ந்து இருந்தான் வம்சி.


சிறிது நேரம் கழித்து செவிலிப்பெண் வெளியே வந்து

“சார் உங்க ரெண்டு பேரையும் பாட்டி கூப்பிட்டாங்க” என்று கூறிவிட்டு செல்ல

சேதுராமனும் வம்சியும் உள்ளே சென்றனர்.


படுக்கையில் பாட்டி படுத்து இருக்க அவரின் கையை பிடித்து கொண்டு மீனாட்சி அருகில் நின்றிருந்தாள்

உள்ளே வந்த வம்சி மீனாட்சியை எரிப்பது போல பார்த்துவிட்டு

பாட்டியின் அருகில் சென்று நிற்க

“பாட்டி ஓகே வா” என்க

“பரவாயில்லை கண்ணா” என்று மெல்லிய குரலில் சோர்ந்து போய் கூறியவர்

“சேது நான் சொன்னதை எடுத்து வந்தியா” என்க

உடனே சேதுராமன் தன் பாக்கெட்டில் இருந்த பொன் மஞ்சள் தாலியை அவர் கையில் கொடுக்க அதை வாங்கியவர்

தன் கையால் வம்சியின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.


“என்ன பாட்டி இதெல்லாம்”

“கண்ணா எனக்கு வேற வழி தெரியல என் கடைசி ஆசையா நினைச்சிக்கோ தயவு செஞ்சு இந்த தாலியை மீனாட்சி கழுத்துல கட்டு” கண்கள் கலங்க கெஞ்சுவதை போன்று அவனிடம் கேட்க

“என்னால முடியாது பாட்டி” என்றான் வம்சி கோபத்துடன்.
தொடரும்….
 
அத்தியாயம் 12


“கண்ணா” என்று படுக்கையில் அழுது கொண்டே கெஞ்சியவரை பார்க்க பாவமாக தான் இருந்தது மீனாட்சிக்கு

“பப்ளு பாட்டி பாவம் கொஞ்சம் யோசி பா” என்று சேதுராமன் கூற அவரை திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தான்

பாவம் அவர் அதிலேயே அமைதியாகிவிட்டார்.


அவருக்கு தெரியும் தன் மகன் பிடிவாதக்காரன் என்று அதனால் தான் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுவிட்டார்.


“கண்ணா நான் என் பேரப்பசங்களை பார்க்க வேண்டாமா,

நானும் இல்லைன்னா உனக்குன்னு யாரு இருக்கா உனக்கு ஒரு துணை வேண்டாமா”


“பாட்டி என் கிட்ட என்ன வேணும்னாலும் கேளுங்க இந்த

ஒன்ன தவிர என் வாழ்க்கையில் இனி ஒருத்திக்கு இடம் தர அளவுக்கு எனக்கு மனசு இல்லை சொன்னா புரிஞ்சிக்கங்க

அதுவும் இப்படி ஒருத்தி என் வாழ்க்கையில் வருவது எனக்கு துளி அளவும் விருப்பம் இல்லை”


“இப்படி ஒருத்தின்னா நீங்க என்ன சொல்ல வரீங்க என்னை மாறி ஒருத்தியை உங்களால கல்யாணம் பண்ணிக்க முடியாதா” என்று மீனாட்சி கோபத்துடன் கத்த


“கல்யாணம் பண்ணிக்க முடியாது டி

என்னோட ஸ்டேட்டஸ் என்ன உன் ஸ்டேட்டஸ் என்ன நம்ம ரெண்டு பேருக்கும் ஏணி வைச்சா கூட எட்டாது உன்னை மாறி ஒருத்தியை என் வீட்டு வேலைக்காரியா இருக்க கூட நான் அலோ பண்ண மாட்டேன் இதுல நீ என் வீட்டுக்காரியாக ஆசைப்படுறியா” என்று இவனும் பதிலுக்கு எகிறினான்

இவர்கள் இருவரும் மாறி மாறி கத்தி கொண்டே இருக்க

சத்தம் கேட்டு பார்த்திபன் உள்ளே நுழைந்தான்.


அங்கே இருவரும் மாறி மாறி கத்தி கொண்டே இருப்பதை பார்த்தவன் “வம்சி என்ன நடக்குது இங்கே

இது ஹாஸ்பிட்டலா இல்லை சந்த கடையா

அவங்க இப்போ தான் உயிர் பிழைச்சு வந்திருக்காங்க இப்படியா சத்தம் போடுவிங்க கொஞ்சம் எல்லாரும் வெளியே இருங்க” என்று கத்த அனைவரும் வெளியே செல்ல வம்சி மீனாட்சியை கொன்று விடுவதை போல பார்த்துவிட்டு சென்றான்.


அனைவரும் வெளியே சென்றவுடன் கதவடைத்துவிட்டு பாட்டியின் அருகில் சென்ற பார்த்திபன் “என்ன பாட்டி

என்ன சொல்றான் உங்க பேரன்” என்க

வடிவு பாட்டி அசால்ட்டாக படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தார் “எங்கே பா இவனுக்கு கல்யாணம் பண்றதுக்குள்ள எனக்கு உண்மையாவே ஹார்ட் அட்டாக் வந்துடும் போல

கல்யாணம் பண்ண மாட்டானாம் ஆனா பிள்ளை மட்டும் பெத்துப்பானாம் என்ன சொல்ல நான்” என்றார் சலித்து கொண்டே

“இப்போ என்ன தான் சொல்றான் பாட்டி”

“கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்னு ஒத்த கால்ல நிக்குறான் பார்த்தி” என்றார் முகத்தை உம்மென்று வைத்து கொண்டு.


வடிவு பாட்டிக்கு முன்பே தெரியும் தன் பேரன் திருமணத்திற்க்கு சம்மதிக்க மாட்டான் என்று அதனால் தான் பார்த்தியிடம் முன் கூட்டியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய சொல்லி இருந்தார்.


“இப்போ என்ன பார்த்தி பண்றது”

“பாட்டி நான் ஒரு ஐடியா சொல்றேன் அதை மாறி பண்ணிக்கலாம் கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்” என்று அவரிடம் சில விஷயங்களை கூறிவிட்டு வெளியே சென்றான்.


வெளியே வம்சி மீனாட்சியை வெட்டவா குத்தவா என்று பார்த்து கொண்டே நிற்க

நேரே வம்சியிடம் சென்றான் பார்த்திபன்

அவளிடமிருந்து கவனத்தை திருப்பிய வம்சி

“பார்த்தி பாட்டி இப்போ எப்படி இருக்காங்க” என்க

“வம்சி பாட்டிக்கு செகன்ட் அட்டாக் வர மாறி சிம்டம்ஸ் இருக்கு” என்று அவன் முகத்தை சோகமாக வைத்து கொண்டு கூற

“என்ன சொல்ற பார்த்தி” என்று பதறி அடித்து கொண்டே கேட்டான் வம்சி.


“நான்‌ அப்போவே சொன்ன கேட்டியா அவங்க கஷ்டப்படுற மாறி நடந்துக்காதன்னு அவங்க பிழைக்குறது உன் கையில தான் இருக்கு”


“பார்த்தி நான் பாட்டிய பார்க்கலாமா?”


“போய் பாரு ஆனா அவங்க கிட்ட நல்லபடியா பேசு” என்று சொல்லி அனுப்பினான்.


அறையின் உள்ளே வடிவு பாட்டி கண்களை மூடி படுத்திருக்க

அவர் அருகில் சென்ற வம்சி அவரின் கையை கண்கள் கலங்க பிடித்து கொண்டான் “பாட்டி” என்று அழைக்க அவர் மெல்ல கண்விழித்தார் இவன் சம்மதிக்க மாட்டானா என்பதை போல பார்க்க.


அவரை பார்த்தவன் “பாட்டி நான் அவளை கல்யாணம் பண்ணிக்குறேன்” என்றான் முகத்தை உம்மென்று வைத்து கொண்டே

வடிவு பாட்டி உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் “உண்மையாவா டா கண்ணா சொல்ற” என்றார் சோர்வுடன் முகத்தை வைத்து கொண்டு

“ஆமா நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் தீர்க்கமான முடிவுடன்.


வம்சியின் உயிரே அவன் பாட்டி

தான் அவருக்காக தன் உயிரை வேண்டுமானாலும் கொடுப்பவன் இதை செய்ய மாட்டானா என்ன.


அதை கேட்ட பாட்டி உள்ளுக்குள் குத்தாட்டம் போட “பார்த்தியை உள்ளே கூப்பிடு கண்ணா” என்றார் சோர்வுடன்

வெளியே வந்த வம்சி “பார்த்தி பாட்டி கூப்பிட்டாங்க” என்க

அவனும் படு தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு உள்ளே சென்றான்.


அவன் உள்ளே வந்தவுடன் “ரொம்ப நன்றி பார்த்திபா” என்று பாட்டி துள்ளி குதிக்க

“பாட்டி வெளியே சத்தம் கேட்க போகுது” என்க

“உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல பார்த்தி” என்று அவன் கன்னத்தில் முத்தமிட

அவன் அவரை பார்த்து சிரித்து கொண்டே நின்றிருந்தான்.


‘சிறு குழந்தையை போன்று எப்படி சந்ததோஷப்படுகிறார்’ என்று மனதில் நினைத்து கொண்டான்.


அடுத்த சிறிது நேரத்தில் வம்சி, மீனாட்சி, சேதுராமன் உள்ளே வர வடிவு பாட்டி மீண்டும் நோயாளியாகி படுக்கையில் படுத்து கொண்டார்.


வடிவு பாட்டி வம்சியின் கையில் தாலியை எடுத்து கொடுத்து“கட்டு கண்ணா” என்க

அவன் தாலியையும் அவளையும் பார்த்து கொண்டே நின்றான்

சொல்ல போனாள் இன்று தான் அவளை நன்றாக பார்க்கிறான்.


சாதரணமாக காட்டான் சுடிதார் ஒன்றை அணிந்து இருந்தாள் தலை முடி எல்லாம் கலைந்து சோர்ந்த முகத்துடன் அழுது சிவந்த கண்களுடன் பல நாள் சாப்பிடாதவளை போன்று தன் முன்னே மெல்லிய கொடி போன்ற உடல் வாகுடன் நின்றிருந்தவளை பார்த்து கொண்டிருந்தான்.


மீனாட்சிக்கும் வேறு வழி தெரியவில்லை தன் மேல் படிந்த கரையை நீக்க இந்த தாலி ஒன்று தான் சிறந்தது என்று நினைத்தாள் அதனால் தான் மறுப்பு எதுவும் கூறாமல் வந்திருந்தாள்.


இருவரும் வெவ்வேறு மன நிலையில் இருக்க

வடிவு பாட்டி கொடுத்த தாலியை யோசித்து கொண்டே கையில் வாங்கியவன் அவளை பார்த்து கொண்டே ‘இனி இவள் தானா’ என்று மனதில் நினைத்து கொண்டே மங்கல நாணை அவள் கழுத்தில் கட்டி முடித்து தன்னில் சரி பாதியாக்கி கொண்டான்.


மேள தாளங்கள் மங்கல வாத்தியங்கள் அற்று ஒரு சிறிய மருத்துவமனை அறையில் அமைதியாக கோடிஸ்வரன் வம்சி கிருஷ்ணாவின் திருமணம் நடந்து முடிந்தது.


மணமக்கள் இருவரும் ஒரு கட்டாயத்தின் பேரில் கணவன் மனைவியாக மணவாழ்க்கையில் நுழைந்தனர்.தொடரும்…..
 
அத்தியாயம் 13


வம்சி மீனாட்சியின் கழுத்தில் தாலியை கட்டி முடிக்க வடிவு பாட்டியின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் கரை புரண்டு ஓடியது நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டவர் தன் பேரனையும் பேரனின் மனைவியையும் திருப்தியாக பார்த்து கொண்டு இருந்தார்.


சேதுராமன் தன் மனதில் இருந்த ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்ததை போன்று உணர்ந்தார்.


பார்த்திபன் வம்சியின் கையை குலுக்கி “வாழ்த்துக்கள் மச்சான்” என்க அவன் பதில் எதுவும் கூறாமல் உர் என்று முகத்தை வைத்து கொண்டு நின்றிருந்தான்.


மீனாட்சி எதுவும் பேசாமல் தலைகுனிந்து நின்றிருந்தாள்

அவள் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள் என்று யாருக்கும் தெரியவில்லை.


இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வோரு மனநிலையில் இருக்க.


வடிவு பாட்டி “பார்த்தி என்னை எப்போ டா டிஸ்சார்ஜ் பண்ற இந்த ஹாஸ்பிட்டலில் இருக்கவே எனக்கு பிடிக்கல” என்று கேட்க

அவன் பதிலுக்கு “பாட்டி நீங்க இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கனும்” என்க

“அதெல்லாம் இல்லை என் பேரன் கல்யாணத்தை பார்த்ததுலேயே எனக்கு ஆயிரம் யானையோட பலம் வந்துருச்சு இனி வீட்டுக்கு போய் எல்லா சடங்கும் பண்ணனும் சொந்தக்காரங்க எல்லாருக்கும் சொல்லனும் நிறைய வேலை இருக்கு டா பார்த்தி” என்று குழந்தை போன்று அடம்பிடிக்க அவனும்

“சரி பாட்டி டிஸ்சார்ஜ் பண்றேன்” என்று சிரித்து கொண்டே கூறினான்.


“டேய் பார்த்தி பாட்டி கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கட்டுமே” என்று வம்சி கேட்க

“அவங்க நல்லா தான் மச்சி இருக்காங்க நீங்க டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க” என்றான்.


பாட்டியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு கூட்டி வர காரில் ஏறும் போது கூட வம்சி மீனாட்சியை திரும்பி கூட பார்க்கவில்லை தாலி கட்டியதும் தனது கடமை முடிந்தது என்பதை போல நடந்து கொண்டான்.


வடிவு பாட்டி வரும் வழியெல்லாம்

தனது மொபலை நோண்டிக் கொண்டு வர காரின் கண்ணாடி வழியாக பார்த்த வம்சி

“பாட்டி இப்போ தான உடம்பு சரி ஆகிருக்கு போனை கீழே வை” என்க அவனை முறைத்து கொண்டே போனை மூடி வைத்தார்.


‘இவனுக்கு நான் பாட்டியா இல்லை எனக்கு இவன் பாட்டியான்னே தெரியல’ என்று மனதில் சலித்து கொண்டே வந்தார்.


கார் கேட்டின் உள்ளே நுழைய வீட்டு வாசலில் ஆரத்தி தட்டுடன் சேதுராமனின் சித்தப்பா மகள் அதாவது வம்சியின் அத்தை

சரளா நின்றிருந்தார்

அவரை பார்த்த வம்சி

“பாட்டி இவங்களுக்கு எப்படி விஷயம் தெரியும்” என்று ஆச்சரியத்துடன் கேட்க

“அது ஒன்னும் இல்லை டா கண்ணா உன் கல்யாண போட்டோவை வாட்சாப்பில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன் அதை பார்த்துட்டு வந்துருப்பா போல” என்று அசால்ட்டாக கூற

டிரைவர் சீட்டில் இருந்து திரும்பி வடிவு பாட்டியை பார்த்து முறைத்தான் வம்சி

‘என்ன இவன் இப்படி பார்க்குறான்’ என்று பயந்தவர்.


“அம்மாடி மீனாட்சி கீழே இறங்கு” என்று கூறி கொண்டே அவரும் காரில் இருந்து இறங்கி கொண்டார்.


“பப்ளு‌ கீழே இறங்கு டா என்ன அத்தைய பார்த்து வெட்கமா” என்று கார் ஜன்னலில் எட்டி பார்த்து கூறிய அத்தையை பார்த்தவனுக்கு எரிச்சலாக இருந்தது ‘இந்த அத்தை வேற’ என்று நினைத்தவனுக்கு

பாட்டி மேல் தான் அத்தனை கோபம் திரும்பியது.


அவரை முறைத்து கொண்டே கீழே இறங்க “ஜோடியாக நில்லுங்க” என்று இருவரையும் ஜோடியாக நிற்க வைத்து ஆலம் சுற்றியவர் தட்டை எடுத்து கொண்டு வெளியே செல்ல

“வலது கால் எடுத்து வைச்சு உள்ளே போ மா” என்று பாட்டி கூற அதன்படியே உள்ளே சென்றாள்.


இருவரும் உள்ளே நுழைய அங்கே ஹாலில் வம்சியின் உறவினர்கள் ஒரு கூட்டமே வந்திருந்தனர்.


அவர்களை பார்த்தவனுக்கு கோபம் இன்னும் அதிகரிக்க “பாட்டி” என்று கத்தி விட்டான்

எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்த பாட்டி “காபி தான கண்ணா இதோ எல்லாருக்கும் எடுத்து வரேன்” என்று இவனிடமிருந்து தப்பித்தால் போதும் என ஓடிவிட்டார்.


சொந்த பந்தங்கள் அனைவரும் அவனை சூழ்ந்து கொள்ள

எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தான்

இவன் நிலையே இப்படி என்றால் மீனாட்சி நிலையோ சொல்லவே தேவையில்லை திணறி கொண்டு இருந்தாள்.


சுற்றி இருந்தவர்கள் அனைவரும்

“இவள் கிட்ட அப்படி என்ன இருக்குன்னு இவளை போய் இந்த வம்சி கல்யாணம் பண்ணிக்கிட்டான் புலி பக்கத்தில் பூனை மாறி இருக்கா”


“ஆமா நம்ம அளவுக்கு ஸ்டேட்டஸ் கூட இல்லை என்னவோ அவனுக்கு பிடிச்சிருக்கு”


மீனாட்சியின் அருகில் வந்த பெண்மணி ஒருத்தி “இது எத்தனை மாசம்?” என்க

அவளோ திக்கி திணறி “மூன்று ஆன்ட்டி” என்று கூற

“இந்த காலத்தில் இது ஒரு ஃபேஷன் ஆகி போச்சுல்ல கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தை பெத்துக்குறது

அவன் சொன்னாலும் நீ கொஞ்சம் பொருமையா இருந்துருக்க வேண்டாம்”

என்று கூற அவள் அவமானத்தில் தலை குனிந்து நின்றிருந்தாள்.


“ஆமா டிவியில் என்ன என்னவோ சொல்றாங்களே அது எல்லாம் உண்மையா” என்று அவளை கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடிக்க

வடிவு பாட்டி வந்து “மூர்த்தி எல்லாருக்கும் காபி கொடு” என்க

அனைவரின் கவனமும் காபிக்கு சென்றது.


எப்படியோ இப்போதைக்கு மீனாட்சியை காப்பாற்றினார் வடிவு பாட்டி.


அந்த நேரம் சரளாவின் மகள் காயத்ரி அங்கே வர அனைவரின் பார்வையும் அவள் புறம் திரும்பியது.


முட்டி வரை மட்டுமே உள்ள கவுன் ஒன்றை அணிந்து கொண்டு

கழுத்து வரை மட்டுமே இருந்த தலை முடியை விரித்து விட்டு ஹை ஹீல்ஸ் அணிந்து அவள் நடைக்கு ஏற்ப அவள் கூந்தலும் காற்றில் ஆட முகத்தில்

ஒன்றரை டன் மேக்கப்புடன் உள்ளே நுழைந்தாள்.


நேரே வம்சியிடம் சென்றவள் “மாமா என்கிட்ட சொல்லாமையே கல்யாணம் பண்ணிட்டல்ல நீ” என்று அவன் கையை பிடிக்க வம்சி காய்த்ரியை முறைக்க

உடனே அவன் கையில் இருந்த தன் கையை எடுத்து கொண்டாள்.


வம்சிக்கு தன்னை பிறர் தொட்டு பேசுவது சுத்தமாக பிடிக்காது

அது தெரிந்தும் தன் மாமா மேல் தனக்கு தான் உரிமை இருக்கிறது என்பதை காட்ட அவள் அவனின் கையை பிடிக்க அவன் பார்த்த பார்வையில் அவள் கையை எடுத்து கொண்டாள்.


“மாமா உன் பொண்டாட்டி எங்கே” என்று கேட்டு கொண்டே மீனாட்சியை தேட

“ஏய் காயூ எங்கே தேடுற இது தான் உங்க மாமா மனைவி” என்று சரளா கூற

“இவங்களா” என்று அவள் தன் உதட்டை ஒரு முழத்துக்கு சுளித்து கொண்டே கூற

“ஏன் காயூ முகத்தை அப்படி வச்சுருக்க” என்று வடிவு பாட்டி கேட்க

“சாரி பாட்டி நான் இவங்க டிரஸ் எல்லாம் பார்த்து புதுசா வேலைக்கு சேர்ந்துருக்க மெய்ட்ன்னு நினைச்சிட்டேன்” என்க

அவள் கூறியதை கேட்டு அங்கே இருந்த உறவினர்கள் அனைவரும் சிரித்து விட

காயத்ரியும் அவளை ஏளனமாக பார்த்து சிரித்தாள்.


மீனாட்சிக்கு ஒரே அவமானமாக இருந்தது கண்கள் கலங்கி அழுதேவிட்டாள் தலைகுனிந்து நின்றிருந்தாள்.


அப்போது தன் முன்னே யாரோ காயத்ரியை

அறையும் சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தாள் அவள் முன்னே வம்சி காயத்ரியை முறைத்து கொண்டே நிற்க காயத்ரி தன் அறை வாங்கிய கன்னத்தில் கை வைத்து கொண்டு நின்றிருந்தாள்.


வடிவு பாட்டி ‘இவளுக்கு இது தேவை தான்’ என்று நினைத்து கொண்டார்.


ஆம் வம்சி தான் காயத்ரியை அறைந்திருந்தான் “இடியட் அவள் உன் மாமா மனைவி அதுக்கு தகுந்த மரியாதை கொடுத்து பேசு” என்க

அங்கே சிரித்தவர்கள் அனைவரும் அமைதியாகி விட

மீனாட்சியின் கையை பிடித்து இழுத்து கொண்டு தன் அறைக்கு சென்றான் வம்சி

மீனாட்சி அவன் முகத்தை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டே அவனுடன் வந்தாள்.


அவளுடன் அறைக்குள் வந்தவன் கதவை வேகமாக அடித்து சாத்தி தாழிட்டான் “என்ன டி டிரஸ் இது பிச்சைக்காரி மாறி தான் டிரஸ் பண்ணுவியா” என்க

அவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே நிற்க

அவள் அருகில் சென்றவன் கன்னத்தை பிடித்து “உனக்காக சண்டை போட்ட உடனே உன் மேல லவ் இருக்குன்னு நினைச்சிக்காத நீ வம்சி கிருஷ்ணாவோட மனைவி அந்த ஸ்டேட்டஸில் இருக்க

பாரு இன்னும் அதே பழைய பிச்சைக்காரி மாறி இருக்கனும் நினைக்காத என்னோட மனைவியை அந்த இடத்தில் விட்டு கொடுத்தால் என்னோட ஸ்டேட்டஸ் என்ன ஆகுறது அதுக்காக தான் அவளை அடிச்சேன் உனக்காக இல்லை” என்று திட்டி கொண்டிருந்தான்.


சரியான ஸ்டேட்டஸ் பைத்தியம் போல இந்த வம்சி.


காதலே இல்லை என்கிறானே…

காதலே இல்லாமல் அல்லது குறைந்தபட்ச அன்பே இல்லாமல் ஒருவருக்காக பரிந்து பேச முடியுமா என்ன காத்திருப்போம் காதலாகுமா என்று…தொடரும்…
 
Top