எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆலியில் நனையும் ஆதவன் !! 🌦️- 23

NNK-34

Moderator
"வரு வா" ஆதித்தின் கெஸ்ட் ஹவுசின் வாசலில் கால்கள் வேருன்ற நின்றிருந்த வருணிக்காவை மிகவும் சிரமப்பட்டு வெளியே அழைத்து வந்து காரில் அமரவைத்தாள் ஆர்த்தி.

பார்ட்டி ஹாலில் ஆதித்திற்கு நடந்ததை எண்ணி மிகவும் வருத்தப்பட்ட வருணிக்கா, வர்ஷாவும் ஆதித்தும் கிளம்பியதுமே ஆர்த்தியுடன் கிளம்பியவள், தன் தோழி வேண்டாம் என்று சொல்லியும், ஆதித்தை பின்தொடர்ந்து நேராக அவனைக் காண வந்திருந்தவள், காரை வெளியே நிறுத்திவிட்டு ஆதித்திடம் பேசுவதற்காக உள்ளே வந்த நேரம் வாசலில் நின்றபடி அவள் கண்ட காட்சியில் மொத்தமாக நொறுங்கியிருந்தாள் வருணிக்கா.

இதயத்தில் மிக மோசமான வலியை அனுபவித்த பெண்ணவளுக்கு நெஞ்சமெல்லாம் அடைத்துக்கொண்டு வந்தது.

அதே நேரம் வருணிக்காவின் பின்னாலே வந்திருந்ததால் ஆர்த்தியும் வருணிக்கா கண்ட காட்சியை பார்த்திருக்க, உடனே வருணிக்காவை அழைத்துக்கொண்டு ஆர்த்தி வெளியேறிவிட்டாள்.

"அவளுக்கு போய் ஐ லவ் யூ சொல்லி, கிஸ் பண்றான்" உதடு துடிக்க வினவினாள் வருணிக்கா.

"அவ அவனோட வைஃப் வரு" தோழியை பார்க்க வருத்தமாக தான் இருந்தது, ஆனாலும் நிதர்சனத்தை புரியவைக்க வேண்டியிருப்பதால் கொஞ்சம் அழுத்தமாகவே கூறினாள் ஆர்த்தி.

"அப்படி சொல்லாத ஆர்த்தி என்னால முடியல பெயினா இருக்கு" நெஞ்சை அழுத்தி பிடித்துக்கொண்டபடி கண்ணீருடன் கூறிய வருணிக்கா சட்டென்று முகத்தை மூடி கொண்டு அழ ஆரம்பித்துவிட,

"இப்போ இவ்வளவு அழுற நீ, ஏண்டி அன்னைக்கு அவனை அவ்வளவு காயப்படுத்தின.? ஏன் அவனை தூக்கி வீசின?" ஆதங்கத்துடன் ஆர்த்தி வினவ,

சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு, "ஈகோ" என்றாள் வருணிக்கா எங்கோ வெறித்தபடி, ஆர்த்தி எந்த பதிலும் சொல்லவில்லை, வருணிக்காவே தொடர்ந்தாள்,

"என்னுடைய கோபமும் என் ஈகோவும் சேர்ந்து என் வாழ்க்கையவே அழிச்சிடுச்சுல" என்று கூறி தன் தோழியின் முகம் பார்த்தாள் வருணிக்கா.

"எப்பவுமே உறவுகள் கிட்ட ஈகோ பார்க்க கூடாது வரு, சரி நீ கவலை படாத லேட்டானாலும் இப்போ உன் தப்பை உணர்ந்துட்டல்ல இனி எல்லாமே சரியாகிடும். எல்லாருக்குமே முதல் காதலோடயே வாழ்க்கை முடிஞ்சிடாதே, ஸோ உனக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை சீக்கிரமா அமையும்" நிதானமாக எடுத்து கூறி வருணிக்காவின் மனதை தேற்றினாள் ஆர்த்தி, ஆமோதிப்பதாய் தன் தலையை மட்டும் அசைத்த வருணிக்கா,
"இனி அவன் எனக்கு இல்லைல ஆதித்தை இழந்துட்டேன்ல" என்று வெறுமையான குரலில் கூற, ஆர்த்தி ஆதரவாய் அவளை அணைத்து கொண்டாள்.

எப்படி கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து எந்த பயனும் இல்லையோ அது போல் தான் வாழ்க்கையும், நம்மை நேசிக்கும் உறவை அலட்சியப்படுத்திவிட்டு பின்பு அவர்கள் சென்ற பிறகு அவர்களுக்காக வருந்துவதில் எந்த பயனும் இல்லை.

@@@@@@

தன் முகத்தில் வர்ஷாவால் வீசப்பட்ட குளிர்பானத்தை கூட துடைக்காது, தனது வீட்டிற்கு வந்த விநாயக்கால் நிலைக்கொள்ளவே முடியவில்லை.

தனக்கு எதிரே இருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவனின் கண்கள் முன்பு வார்ஷா பேசியதும், ஆதித் தன்னை அறைந்த காட்சியும் பிழையின்றி வந்து வந்து போக, கண்ணில் பட்ட பொருளை ஆத்திரத்தில் தூக்கி வீசியவன்,

"விடமாட்டேன்.. உங்க ரெண்டு பேரையும் விடமாட்டேன்" அடிபட்ட மிருகம் போல பெருங்குரலில் கர்ஜித்தான்.

@@@@@@@

பனித்துளிகள் புலர்ந்தும் அதீத அயர்வால் வர்ஷா தன் கன்னத்தை தன்னவனின் மார்பில் வைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ஆதித்திற்கோ உறக்கமே வரவில்லை.

தன்னவளுடன் கழித்த இன்பமான பொழுதுகளை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தவன் வர்ஷாவின் வதனத்தை பார்த்தபடியே படுத்திருக்க அப்பொழுது சட்டென்று நினைவு வந்தவனாய் குனிந்து தன் இடது பக்கம் மார்பில் இருந்த வருணிக்காவின் பெயர் பதித்த டாட்டூவை கண்டு மிகவும் வருந்தினான்.
"அப்பவே ரிமூவ் பண்ணிருக்கணும் ச்ச யோசிக்காம விட்டுட்டோம். வர்ஷா நிச்சயம் வருத்தபட்டிருப்பா, நமக்காக தான் அவ எதுவும் காட்டிக்கல" என்றவன், ஒரு முடிவுடன் தன் கைவளைவில் கலைந்த ஓவியமாய் துயில் கொண்டிருந்த தன்னவளின் நெற்றியில் குனிந்து முத்தம் பதித்துவிட்டு, மனமே இல்லாமல் தன் மார்பில் இருந்த வர்ஷாவின் தலையை மெதுவாக நகர்த்தி அருகில் இருந்த தலையணையை இழுத்து அதில் வைத்துவிட்டு, படுக்கையில் இருந்து எழுந்தான்.

பின்பு வர்ஷாவுக்கு அணைவாக இரண்டு பக்கமும் தலையணைகளை வைத்த ஆதித் என்ன நினைத்தானோ ஒரு ஓரமாய் இருந்த தன் மேல் சட்டையை பார்த்தவன் அதை தன்னவளுக்கு அணிவிக்க,

அப்பொழுது சிறு சிணுங்களுடன் தலையணையில் முகம் புதைத்து கொண்டவளின் காதோரம் புன்னகையுடன் இதழ் பதித்தவன், பின் சில பல நிமிடங்களில் அறையை விட்டு வெளியேறினான்.

காலை வேளை நகர்ந்து மதியம் நெருங்கவும் மெல்ல கண் விழித்து, நேற்றைய நினைவுடன் எழுந்து அமர்ந்த வர்ஷாவின் விழிகள் தன்னவனை தான் தேடியது.

இரண்டு மூன்று நிமிடங்கள் தன்னவனை தேடி தன் பார்வையை சுழலவிட்டவளின் விழிகளில் டேபிள் மீது இருந்த ஃப்ளாஸ்க்கும் அதன் கீழே இருந்த துண்டு காகிதமும் தென்பட, காகிதத்தை கையில் எடுத்தவள்,

'குட் மார்னிங் பேபி, கொஞ்சம் முக்கியமான வேலை சீக்கிரம் வந்திடுவேன், ஃப்ளாஸ்க்ல் காஃபி இருக்கு குடிச்சிட்டு ரெஸ்ட் எடு டா' என்று அதில் எழுதியிருந்ததை புன்னகையுடன் வாசித்தவளுக்கு, வேறு எதை பற்றியும் சிந்தித்து பார்க்க முடியாத அளவுக்கு அவளது சிந்தனை முழுவதும் தன்னவனின் நினைவுகளே ஆட்க்கொள்ளவும், தான் அணிந்திருந்த தன்னவனின் மேல் சட்டையை இறுக்கமாக பற்றிகொண்ட வர்ஷாவுக்கு அதில் இருந்த அவனது பெர்ஃப்யூமுடன் கலந்த வியர்வை வாசனையும் சேர்த்து அவனின் வாசனையும் அவளது நாசியை தீண்டவும்,
சிலிர்புடன் தன் விழிகளை மூடி ஒரு கரத்தால் மேல்சட்டையை இறுக்கமாக தன் தேகத்துடன் அணைத்து பிடித்துக்கொண்டவள்,
மறு கரத்தால் சட்டையின் காலரை சற்று தன் நாசியின் அருகே நகர்த்தி அதன் சுகந்ததை தனக்குள் இழுத்தபடி அமர்ந்திருந்தாள்.

அப்பொழுது,
"ஹாய்" என்று தன் இதழ்கள் வர்ஷாவின் காது மடலை தீண்ட கூறிய ஆதித், அவள் சட்டென்று திரும்பி தன்னை பார்க்கவும், மயக்கும் புன்னகையுடன்,

"ஏன் இவ்வளவு சிரமம்? அதான் நான் இருக்கேனே" என்று தன்னவளின் விழிகளை பார்த்து குறும்பாக கூற, 'சட்டையை விட்டுவிட்டு தன்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டு வாசம் பிடிக்க சொல்ரக்கிறானா என்ன' கன்னங்கள் இரண்டும் சட்டென்று சிவப்பேரிறி விட பெண்ணவளுக்கோ ஆணவனின் விழிகளை கூட நிமிர்ந்து பார்த்து பேச முடியாத அளவுக்கு வெட்கம் வந்துவிடவும் அப்படியே குனிந்துகொண்டவளோ,

"எப்போ வந்தீங்க?" என்று கேட்டாள்.
அவனோ அவளது வெட்கத்தை ரசித்தபடி தன்னவளின் சிவந்த கன்னத்தில் சின்ன முத்தம் ஒன்றை பதித்து, அவளின் காதுமடலை நாசியால் சீண்டியவன்,

"ம்ம் அப்பவே வந்துட்டேன், தூங்கிட்டு இருந்த அதான் டிஸ்டர்ப் பண்ணல, சரி நான் அப்பவே சொன்னதுக்கு இது பதில் இல்லையே" என இன்னும் காதுமடலை வட்டமடித்தபடியே ஆதித் வினவவும், அவன் எதை சொல்கிறான்
என்பதை புரிந்துகொண்டவளோ தன்னை அளவுக்கு அதிகமாக ஆட்கொண்ட நாணத்தால் பதில் சொல்ல முடியாது தடுமாறியவள், நழுவும் பொருட்டு,

"குளிச்சிட்டு வரட்டா" என்று உள்ளே சென்ற குரலில் கேட்க,

"அப்போ சொல்லமாட்ட சரி வா" என்றவன் அவள் கரங்களை பற்றவும்,

"நானே போய்கிறேனே" என்று பதற்றம் கலந்த கூச்சதுடன் கூறியவளின் இதழில் மென் முத்தம் ஒன்றை பதித்து,

"பாவம்ன்னு பார்க்கிறேன், நீ இவ்வளவு வெட்கப்பட்டுகிட்டே இருந்தா அப்புறம் என்ன நடந்தாலும் நான் பொறுப்பில்லை இப்பவே சொல்லிட்டேன்" என்று கூறி அவள் விழிகளை பார்த்து ஆதித் ஒற்றை கண் அடிக்கவும், வர்ஷா மூச்சைடைத்து போனாள்.

தன்னவனின் பேச்சும், அவனது ஸ்பரிசமும் அவளுக்குள் அதிர்வை ஏற்படுத்த அவளால் ஒரு வார்த்தை கூட மூழுவதும் அவன் விழிகள் பார்த்து பேச முடியவில்லை, அந்தளவுக்கு வெட்கச்சிறையில் சிறைப்பட்டுக்கிடந்தவளை அப்படியே தன் கரங்களில் ஏந்திக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான் ஆதித்.

உள்ளே நுழைந்தவன் தன் வலிய கரங்களில் ஏந்தி வந்த தன்னவளை, கீழே இறக்கி,ஏற்கனவே இளம் சூடான வெந்நீரால் நிரம்பியிருந்த பாத் டப்பில் தன் கரம் வைத்து வெப்பத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு தன்னவள் சுதாரிப்பதற்குள் மீண்டும் அவளை தன் கரங்களில் ஏந்தி நீருக்குள் மெதுவாக கிடத்திவிட்டு அவள் அருகையே மண்டியிட்ட நிலையில் அமர்ந்தவன், தன்னையே இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்த பெண்ணவளின் விழிகளை பார்த்தபடியே அவளது இரு கால் பாதங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பற்றி வெந்நீர் கொண்டு பாதத்தின் உட்பகுதியில் மென்மையாக அழுத்தம் கொடுத்து பிடித்துவிடவும் பெண்ணவளின் இமைகளோ சுகமாக மூடிக்கொண்டது.

ஆதித்தின் ஒவ்வொரு செயல்களிலும் வார்ஷாவுக்கு அவன் மேல் காதல் கூடிக்கொண்டே போக, தன்னவனின் ஸ்பரிசத்தை கண்களை மூடி ரசித்துகொண்டிருந்தாள்.

அப்பொழுது, "ரிலாக்சா குளிச்சிட்டு வா நான் வெளில வெய்ட் பண்றேன்" என்று அவளின் செவியில் கூறிய ஆதித் அங்கிருந்து எழுந்துகொள்ள முனைந்த பொழுது, சட்டென்று விழிகளை திறந்த வர்ஷா ஆதித்தின் கணப்பொழுதின் விலகளை கூட தாங்க இயலாது தன்னவன் எழுந்துகொள்ளாதபடிக்கு வேகமாக அவனது மேல்சட்டையை பிடித்துக்கொண்டவள் அதே வேகத்துடன் தன்னை நோக்கி அவனை இழுக்க, இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் மிக நெருக்கமாக முத்தமிட்டுக்கொண்டது.

இப்பொழுது பெண்ணவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
என்ன தான் அவனுடன் இரண்டற கலந்திருந்தாலும் வெட்கமும் தயக்கும் செலுத்திய ஆதிக்கத்தில் வார்த்தைகள் எல்லாம் தொண்டைக்குள் சூல் கொள்ள, மீண்டும் மௌனமானாள்.

இதே நேரம் தன்னவளின் செயலுக்கான அர்த்ததை அவள் சொல்லாமலே புரிந்துகொண்ட ஆணவனோ அவள் விழிகளில் வழியும் ஆசையையும், அவளுக்குள் இருக்கும் தயக்கத்தையும் உணர்ந்தவனாய் தன்னவளை மேலும் தவிக்க வைக்காது, அவள் சொல்லாததையும் செயலாக்கியவன் அப்படியே முன்பு போல அவள் அருகே மண்டியிட, ஏற்கனவே அவள் அவன் சட்டையை பிடித்து இழுத்ததில் இருவரின் முகமும் சற்று நெருக்கமாகியிருக்க, இப்பொழுது இன்னுமே நெருங்கியிருந்தது.

அந்நேரம் ஒரு காதுமடல் முத்தத்துடன், "இது ஓகேவா" தன்னவளின் வாசனையில் உணர்வுகள் கட்டவிழ, இருவருக்குமான நெருக்கத்தை கண்களால் காட்டி ஆழ்ந்த குரலில் வினவினான்.

"ஹான் அது" மூச்சுக்கற்றுடன் இணைந்து வார்த்தைகளும் முட்டி மோத, இப்பொழுது இதழும் இதழும் இணைந்துகொண்டது.

நீடித்துக்கொண்டிருந்த அழுத்தமான ஆழ்ந்த முத்தத்தில், தன்னவனின் மார்பு பக்கச்சட்டையையை இறுக்கமாக பற்றியிருந்தவளின் கரமோ ஆணவனின் முத்த வேகத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாது, அதீத உணர்வின் பிடியில் சிக்கி கொண்டு தன் பிடியின் அழுத்தத்தை இன்னும் அதிகரிக்க, முத்தமிட்டு கொண்டிருந்தவனோ சட்டென்று அவளிடம் இருந்து விலகி எழுந்து நின்றபடி, இடது பக்க மார்பில் கரம் வைத்து வலியில் முகம் சுழித்தபடி, "ஆ" என்று முணங்கிவிட, வர்ஷா பதறிவிட்டாள்.

"என்னாச்சு?" வேகமாக ஆதித்தை நெருங்கியவள் அவன் தடுக்க தடுக்க அவனது சட்டை பொத்தான்களை விடுவித்து பார்த்தவளுக்கு அவன் மார்பு பகுதியை பார்த்தவளுக்கு கண்களில் சட்டென்று நீர்கோர்த்தது.

"ஏன் இப்படி செஞ்சீங்க? வலிச்சிருக்குமே?" என்று கண்ணீருடன் வினவியவளின் கன்னம்பற்றி,
"இதை பார்த்தப்போ நேத்து உன் கண்ல தெரிஞ்ச வலிய விட இப்போ என் வலி ஒன்னும் பெருசில்ல. எனக்காக உன் வலியை கூட மறைச்ச உனக்காக இந்த வலிய கூட தாங்கிக்கலைன்னா எப்படி?" அவள் கண்களில் இருந்து வழிந்த விழி நீரை துடைத்தபடி கூறினான்.

"என் மேல கொஞ்சம் கூட கோபம் இல்லையா?" விசும்பளுடன் வினவினாள்.

"ம்ஹூம்" என்று இல்லை என்பதாய் தலையசைத்தவன்,

"எப்பவும் வராது பழைய விஷயத்தை நினைச்சு நான் உன்கிட்ட கோபப்பட்டா நான் உன் கூட வாழ்ந்ததுக்கு அர்த்தமே இல்லாம போய்டும்" என்றான் ஆதித்.

அவன் மேல் இன்னும் இன்னும் காதல் பெறுகிக்கொண்டே போக,
"ஐயம் சாரி வெறி சாரி அவங்கள ரொம்ப லவ் பண்ணிருப்பீங்கள்ல" என்ற வர்ஷாவுக்கு கண்ணீர் தான் நிற்காமல் வழிந்தது.

"இல்லன்னு சொல்லமாட்டேன் வர்ஷா ஷீ இஸ் மை ஃபர்ஸ்ட் லவ். வருணிக்காவை உண்மையா தான் லவ் பண்ணினேன் ஆனா சூழ்நிலை மாறிடுச்சு. இப்போ என் மனசு முழுக்க நீ தான் இருக்க, இனி எப்பவும் நீ மட்டும் தான் இருப்ப." என்று ஆதித் இவ்வாறு சொன்ன மறுநொடி வர்ஷாவின் இதழ்கள் ஆதித்தின் நெற்றி, கண் என்று தயக்கமின்றி அவன் முகத்தில் முத்த ஊர்வலம் நடத்த ஆதித்தின் விழிகள் இப்பொழுது சுகமாக மூடிகொண்டது.

தயக்கத்தை தவிர்த்திருந்தாலும், சிறு சிறு தடுமாற்றங்களுடன் அவள் கொடுத்த அனைத்து முத்தங்களையும் சுகமாக வாங்கிகொண்டவன் பதிலுக்கு தான் கொடுக்கவும் தவறவில்லை. மோகத்தை தாண்டி உன்னத காதலுடன் இரண்டாம் முறை நடந்த இருவரின் இணைவும் அவர்கள் இருவரது மனதிலும் நிறைவை கொடுத்தது.

#####

"பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை சௌமி, அவுட்டிங் போறோம் ஸோ இன்னைக்கு ஒருநாள் என் க்ளாசை நீயே பார்த்துகோ" என்று தன் தோழி சௌமியாவிடம் கூறியப்படி கீழே வந்தாள் வர்ஷா.

டைனிங் டேபிலை தாண்டியதுமே வர்ஷாவின் விழிகள் தன்னவனை தேட, அவளவனோ அடுப்பில் மும்முரமாக சமைத்து கொண்டிருந்தான்.
வேர்க்க விறு விறுக்க வேலை செய்து கொண்டிருந்தவனை ரசித்தப்படி சமையலறை வாசலிலே வர்ஷா நின்றுவிட,

"தள்ளி நின்னு தான் பார்க்கணும்ன்னு இல்லை, கிட்ட வந்தும் பார்க்கலாம்" என்று திரும்பி பார்க்காமலே அவன் கூறவும், வியப்புடன் விழிவிரித்தவள்,

"எப்படி திரும்பி பார்க்காமலே கண்டுபிடிசீங்க?" என்று தன்னவனை நெருங்கி வந்து வினவ,

"அதெல்லாம் அப்படி தான். இந்தா எப்படி இருக்குன்னு டேஸ்ட் பண்ணி சொல்லு" என்று கண்சிமிட்டி கூறியவன், தான் சமைத்த கிரேவியில் இருந்து ஒரு ப்ரான் துண்டை எடுத்து வர்ஷாவுக்கு ஊட்டிவிட்டு அவள் முகத்தை பார்க்க, ரசித்து மென்றவளோ அருமை என்பது போல தன் விரல்களால் செய்கை செய்யவும் அழகாய் புன்னகைத்தவன்,

"சப்பாத்தி வித் ப்ரான் கிரேவி ஓகே தானே" என்று கேட்டான்.

"டபுள் ஓகே" என்ற பெண்ணவளோ சமையல் மேடை உயரமாக இருக்கவும் அதில் ஏறி அமர்வதற்காக திணறிகொண்டிருக்க, அவள் இடையை தன் இருக்கரங்களாலும் பற்றி அவளை சமையல் மேடை மீது அமரவைத்தவன், அவள் கரத்தில் உணவு அடங்கிய தட்டை கொடுத்தான்.

வர்ஷாவும் மென்னகையுடன் சப்பாத்தியை பியித்து வாயில் வைத்த கணம் திடிரென்று தோன்றிய கடந்த கால நிகழ்வில் அப்படியே தட்டை வெறித்தபடி அவள் அமர்ந்துவிட, வர்ஷாவின் இருபக்கமும் கரங்களில் உன்றி அவளை நெருங்கி நின்ற ஆதித், "என்னாச்சு புடிக்கலையா?" என்று கேட்டான்.

ஆதித் அவ்வாறு கேட்கவும் நிமிர்ந்து அவன் முகம் பார்த்த வர்ஷாவோ,
"ரொம்ப பிடிச்சிருக்கு, ஆனா என்னை விட நிரோக்கு தான் ஃபூல்க்கா சப்பாத்தி புடிக்கும், ஐஞ்சு கூட சாப்பிடுவா" என்று ஏதோ ஒரு நினைவில் தன்னை மறந்து நிரோஷா பெயரை குறிப்பிட்டு வர்ஷா கூறிவிட, அவள் கூறியதை நிதானமாக கேட்ட ஆதித்தோ,

"ஆஹான்.. யாரு அந்த நிரோ?" சப்பாத்தியை அவளுக்கு ஊட்டிவிட்டபடி இன்னும் நிதானமாக அவள் விழிகளை பார்த்துக்கொண்டே வினவ, வர்ஷா தான் தடுமாறிப்போனாள்.
 

NNK-34

Moderator
Oru valiya adhi Niro pathi therinjuka vendiya neram vanthuduchu pola. Adhi vidatha ivala. Yaru nu kelu.
அவன் கேட்டாலும் இவ சொல்றாணான்னு பார்க்கலாம் டியர்
Thank u so much dear
 
Top