எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கனல் பொழியும் மேகம் - 1

Mr D devil

Moderator
#டிஸ்ஸும்# ஹாய் தங்கங்களே

கதையை கண்டிப்பா ரெகுலரா கொடுக்க முடியாது ... வீக்லி டூ ஆர் ஒன் அப்டேட்ஸ் போடறேன்... (செவ்வாய் மற்றும் சனி கிழமை மட்டும் பாருங்க மற்ற நாள் எதிர் பார்க்க வேண்டாம்...

+( உங்களின் ஆதரவை பொறுத்து எதிர் பாரததையும் எதிர் பார்க்கலாம் )))

ஹான் 🧐🧐 அப்பறம் 1300 வார்த்தை எழுதி இருக்கேன்.. ஒரு நாலு வார்த்தை நல்லாத சொல்லிட்டு போங்க...இங்க தான் எப்பவும் இருப்பேன்
மேகம் 1

அந்த ஜமின் வீடு முழுவதும் குட்டி குட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் கூடியிருந்தனர் என்பது நன்றாகவே தெரிந்தது. சொந்த பந்தங்களின் ஆர்ப்பரிப்பும் குழந்தைகளின் சந்தோச கூச்சலும் வீடு முழுவதும் கேட்டது...வீட்டு பெரியவர்களின் முகம் கூட அவர்கள் அணிந்திருந்த நகைகளை போல ஜொலித்தது... குட்டி தேவதைகளின் காலில் தங்க கொலுசுகள் சிணுங்க இளம் பெண்கள் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் வைரங்களால் நிறைந்து இருந்தது...

இவையனைத்தும் முறியடிக்கும் வண்ணம் கேட்டது அவளின் அம்மா என்ற ஆர்ப்பாட்டமான குரல். குரல் வந்த திசையை தான் அனைவரும் பார்த்திருந்தனர்.

அனிச்சம் பூ பாதமோ எனும் சந்தேகம் தோன்றும் அளவிற்கு செந்நிறமா சிவந்திருந்த பொற்பாதங்களும் அதனை அலங்கரிக்க தங்கமணிகள் கோர்க்க பட்ட கொலுசும் தான் கண்ணில் விழுந்தது. பாதத்தையும் கொலுசையும் தாண்டி மேலே சென்றால் பிரம்மனின் கவிதையாய் தெரிந்தால் பெண்.. சிவப்பு நிறத்தில் அறிந்திருந்த பட்டு சேலைக்கு ஏற்ப பல வேலைப்பாடுகளுடன் அவள் அணிந்திருந்த ஆபரணங்கள் அவளின் அழகிற்கே அழகு சேர்த்தது.

சேலை முந்தானையை பிடித்திருந்த வெண்டை விரல்களில் ஜொலித்த வைர மோதிரமும்.. அவள் நடக்கையில் கேட்கும் கொலுசோடு சிணுங்கிய வலையல்களும் புது இசையை உருவாக்கியது...அந்த புது இசையில் லாயித்து நின்றவர்களை மேலும் மயக்க பளிச்சென்று மின்னியது அவளின் இடையில் ஒய்யாரமாய் விழுந்திருக்கும் வைரக்கல் பதித்த ஒட்டியாணம்...

அதற்கு சற்றே மேலே பார்த்தால் அரசனின் கிரீடத்தில் வீற்றிருக்கும் வைரத்தை போல அவளின் அழகிய மார்பில் ஒய்யாரமாய் வீற்றிருக்கும் மகரத கல் பொதித்த டாலர் மாலை மேலும் அழகு சேர்த்தது அவளுக்கு....

அவ்வீட்டு இளவரசியின் வதனத்தை பார்க்கும் முன்பே அவளின்
கழுத்தை சுற்றிலும் முத்தமிட்டு கொண்டிருந்த கார்க்கூந்தலை காதோரம் ஒதுக்கி விட்ட காரிகையின் செவிகளையும் ஆக்கிரமித்து இருந்தது ஒற்றை மரகத கல் பொதித்த ஜிமிக்கி.

உச்சி வகுட்டில் நார்த்தனமாடிய நெற்றி சுட்டியும் செதுக்கி வைத்த மூக்கில் சிறிய வைர மூக்குத்தியும் அழகாய் அலங்கரித்திருந்தது... கருமை திட்டிய நயனங்களும், உதட்டு சாயமா இல்லை இயற்கையிலயே சிவந்த இதழ்களா என ஆராயும் அளவிற்கு சிவந்திருந்த திருத்தமான இதழ்களுடன் நின்றிருந்தவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை அங்கிருப்பவர்களுக்கு...

அனைவரின் பார்வையும் தன்மேல் இருப்பதை உணர்ந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சந்தோச சிரிப்போடு தன் அன்னையை நோக்கி நடந்தாள் அவள். தன்னை நோக்கி வரும் பொற்பாதங்களை ஆசையோடு வருடியவரின் பார்வையில் அவள் குழந்தையாய் பருவ பெண்ணாய் கல்லூரி பெண்ணாய் நடந்து வரும் போது அணிந்திருந்த கொலுசின் ஒளியும், அவளின் சிரிப்பிற்கு தளம் தட்டும் ஜிமிக்கியும் கை வளையல்களும் நினைவு வர ஆனந்த கண்ணீர் பெருகியது அந்த தாயின் கண்களில்... தாயின் கண்ணிரை துடைத்து விட்டவள்

"அம்மா..." என அவரை அணைத்து விடுவித்தவளின் கைகளில் தங்க மணிகளை தாங்கிய குடை ஜிமிக்கி இருந்தது... அதை விழி விரிப்புடன் பார்த்த அவளின் தாயோ "நம்ம ஏ.வி.. ஜூவல்லர்ஸ்..." என மலர்ந்த புன்னகையுடன் கேட்க இமை தாழ்த்தி ஆமென்றால் அவரின் அன்பு மகள்...

"கட்..." என்ற சத்தத்தில் திரும்பி பார்த்தாள். இவ்வளவு நேரம் அவளையும் அவள் அன்னையாய் நடித்தவரையும் ஜூம் செய்தபடி இருந்த கேமரா அவர்களை விட்டு விலகி சென்றது.

"சூப்பர் மேம்... ஃபேண்டாஸ்டிக்(fantastic)..." என இயக்குனர் பாராட்ட மலர்ந்த சிரிப்புடன் அதை ஏற்றுக் கொண்டாள்.

"ஒன் டேக்ல பக்கவா முடிச்சிட்டீங்க மேம்., சூப்பர் குட் ஜாப்." என்ற மற்றவர்களின் பாராட்டை சிறு சிரிப்போடு ஏற்று கொண்டாள்.

அவள் நறுமுகில்... இருபத்தி நான்கு வயதான அரிவை... தனக்கென குடும்பம் இருந்தும் அவளின் பாட்டியிடம் மட்டுமே வளர்ந்தாள்.


தன் கல்லூரி காலங்களிலிருந்தே வெல்கம் கேர்ள்லாக பணி புரிந்தவள்
படிப்பு முடித்ததும் லோகல் சேனலில் நங்கூரமாக(anchor) சாரி நிகழ்ச்சித் தொகுப்பளராக பணிப் புரிந்தாள்... அங்கு பணி புரிந்துக் கொண்டே பல விளம்பர ஆடிஷனுக்கு சென்றவளுக்கு விளம்பர நிறுவனத்தில் வேலை கிடைக்க தற்போது அவளின் வேலைகளில் இதுவும் ஒன்றாகி போனது.

******

"ஏ.வி.. ஜூவல்லர்ஸ் பாரம்பரியத்தின் அடையாளம்..." என முடிந்த விளம்பரத்தையும் சோபாவில் அமர்ந்திருந்த தன் பேத்தியையும் மாறி மாறி பார்த்தார் தேவம்மாள்.

"இங்க என்ன பார்வை கெழவி..." அலைபேசியை பார்த்தபடியே கேட்டாள்.

"இல்ல விளம்பரத்துல பொண்ணு மாதிரி இருக்கற நீ, நேர்ல பாக்கும் போது கன்றாவியா இருக்கேயே எப்படின்னு பார்த்தேன்..." என்றதும் சட்டென அலைபேசியில் இருந்து தலையை நிமிர்த்தி அருகில் அமர்ந்திருந்த தேவம்மாவை முறைத்தாள்.

"என்ன கெழவி... நாக்கு சும்மா நிக்காம நார்த்தனம் ஆடுது போல..." என்றவள் வெட்டிருவேன் என்பதை போல் இரண்டு விரல்களை சேர்த்து பிரித்து காட்டினாள்.

"நீ வெட்ர வரைக்கும் என் கை என்ன நாட்டியமாடிட்டு இருக்குமா.. போ டி..."என்றவர் அவளின் முறைப்பை கண்டுகொள்ளாமல்

"மத்தியானம் தூங்காம சீரியல் பாக்கறோம்னு இல்லை இவனுங்களுக்கு வெகு நேரமா விளம்பரத்தயே போட்டுட்டு இருக்கானுங்க..." என புலம்பிக் கொண்டிருக்கும் வேளை தொலைகாட்சியில் விளம்பரம் முடிந்து தொடர்கதை ஆரம்பித்தது.

"ஆமா..." என கத்தியவள் அடுத்த நிமிடமே திமிராக நிமிர்ந்து நின்று

"எஸ் அம் இன் அ சீரியஸ் ரிலேஷன்ஷிப். இப்போ அதுக்கு என்ன பண்ண போறிங்க மிஸ்டர் ஹஸ்பேண்ட்...அண்ட் உன்னை கட்டிக்கிட்டதே இவனை வைச்சுக்க தான்..." என்றாள். அவள் அப்படி கூறியதும் அவளின் அருகில் நின்றிருந்தவன் அவளைப் பார்த்தான்.

"இதுக்கே ஷாக்கானா எப்டி..யூ நோவ் வாட்.. இப்போ நான் சொல்லபோறது தான் எக்ஸ்ட்ரீம். அது என்னன்னு நீ தெரிஞ்சுக்கனும்ல..." என்றாள் கைகளை மார்ப்பிற்கு நேராக கட்டிக் கொண்டு... இதற்கே இவனுக்கு ஹார்ட் அட்டாக் வருவது போல் இருந்தது.. அடுத்து அவளின் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு என்றதும் பேச்சே வரவில்லை அவனுக்கு.

"நான் உன் கூட என் லைஃப என்ஜாய் பண்ண இந்த மேரேஜ பண்ணிக்கிடேன்னு நீ நெனச்சுட்டு இருந்தனா.. தட் மே பி இன் யுவர் ட்ரீம்ஸ். அதுக்கு காரணம் நீ இல்ல. இவன் தான்.. இவன் மட்டும் தான்..." நான்கு புறமும் எதிரொலிக்க கத்தினாள் அவள்... அவள் அப்படி க்கத்தவும் அவள் அருகில் நின்றவனின் முகத்தையும், அவள் கணவனின் முகத்தையும் மாறி மாறி காட்டி பின் அவர்களை சுற்றி இருந்தவர்களையும் ஜூம் அவுட் ஜூம் இன் செய்து காட்டியது பின் நாயகனின் முகத்தில் அப்படியே நின்று தொடரும் என முடிந்து விட்டது.

"அட நாசமா போனவனுங்களா முக்கியமான சீன்ல எண்ட் கார்ட் போட்டுட்டீங்களே டா... நாடகம் போடற அரைமணி நேரத்தில கால் மணி நேரம் விளம்பரத்திலயும் அடுத்த கால் மணி நேரம் இவனுங்க மூஞ்சியை காட்டறதுலயுமே முடிஞ்சுருது..." என முன்னதை சத்தமாகவும் பின்னதை ஆதங்கமாகவும் கூற அவரை பக்கவாட்டில் திரும்பி கேலியாக பார்த்தாள் முகில்...

"என்னடி பாக்குற..." என்றதும் அவளின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தது... அவள் சிரிப்பின் அர்த்தம் உணர்ந்த தேவாவின் முகம் இறுகியது... அவரின் முக இறுக்கத்தை திருப்தியாக பார்த்தவள்

" உன் இரத்தம், உன் இரத்தத்தோட இரத்தம் எல்லாம் இன்னைக்கு நைட்டே வராங்க போல..." அலைபேசியை பார்த்துக் கொண்டே கேட்டாள். அவரின் அமைதியே ஆமென்பதை சொல்லாமல் சொல்ல பெருமூச்சுடன் எழுந்தவள் மாடியிலிருந்த தன் அறையை நோக்கி நடந்தாள்.

சிறிது நேரத்தில் அறையிலிருந்து வெளி வந்தவளை சிறு முக சுளிப்புடன் பார்த்தார் தேவம்மாள். அவரின் முக சுருக்கத்தை ஒரு வித துள்ளலுடன் பார்த்தவள்

" உன் மூஞ்சியேன் மூஞ்சூறு மாதிரி போகுது,..." என கிண்டலாக கேட்டாள்...

அவளின் கிண்டலை பொருட்படுத்தாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தார் தேவா.

உடலோடு ஒட்டிய பாடிகான் டிரெஸ் முழங்கால் வரை நீண்டிருக்க அதன் கருப்பு நிறம் அவளது நிறத்தை சற்றே தூக்கி நிறுத்தியது. மேல்நாட்டு உடை அவளது உடலை உடுப்பாக பிடித்திருக்க முகமும், சிகையும் கூட அதற்கு ஏற்றார் போல அலங்கார பூச்சுடன் இருந்தது.

சாதாரண உடையில் எவ்வித ஒப்பனைகளும் இல்லாமலயே அழகியாய் இருப்பவள் தற்போது சொல்லவா வேண்டும் பேரழகியாய் தெரிந்தாள்.

" என்ன டார்லி பேச்சே காணோம்.,.." என்ற முகிலின் கேலியில் தன்னிலைக்கு வந்தவர்

"ஹான் எதிர்ல வரது என் மருமகளோட மகளான்னு பாக்குறேன்..." என்றார் ஆச்சரியம் போல்...

"உன் மருமகளோட புள்ளை தான். எப்பவும் உன் பையனோட புள்ளையாக மாட்டேன்..." என முக இறுக்கத்துடன் கூறியவள் அடுத்த நிமிடம் அங்கிருந்து சென்றிருந்தாள்.

****

இதே நேரம் கிழக்கு கடற்கரை சாலையில் பரந்த பாதைகள், பசுமையான மரங்களால் சூழப்பட்ட தெருக்கள் மற்றும் நீலாங்கரையின் சமகால வசீகரம் பெற்ற கடற்கரை மாளிகையால் ஈர்க்கப்பட்ட ஒரு அற்புதமான கடற்கரை பங்களா அது.. நவீன நுழைவு வாயில், பழுப்பு நிற சுற்றுச்சுவர், பிரம்மாண்டமான அமைப்பு மற்றும் முத்து-வெள்ளை முகப்பில் பார்வையாளர்களின் கண்களை உடனடியாகக் கவரும் வகையில் இருந்தது அந்த வீடு...

"வாவ் சான்லஸ்.. இவ்வளவு (crowd)கிரவுட நான் பாத்ததே இல்ல நிலவா. ஜூன்னுகுள்ள நான் எழுந்து நடந்துட்டா வேர்ல்ட் என்டர்ப்ரனர் ஆப் தி இயருக்கு நானும் உங்களோட வருவேன்,..." என கூறியவனின் குரலை விட எதிர்ப்புறம் காணொளியில் வந்த சத்தமே அவ்வீட்டை நிறைத்தது...

மும்பையில் தற்போது நடைபெற்று கொண்டிருந்த விருது வழங்கும் விழாவை தான் வீடியோ காலில் பார்த்து கொண்டிருந்தான் அவன்.

"தீ(entrepreneur)என்டர்ப்ரனர் ஆப் தி இயர் தேவி நாச்சியார்..." என்ற குரலில் எழுந்தார் தேவி நாச்சியார்...

எவ்வித பகட்டும், பந்தாவும் இல்லாமல் நிமிர்ந்த நடையுடன் கம்பீரமாக மேடையை நோக்கி நடந்தவரின் மேல் தான் அனைவரின் கவனமும் இருந்தது...

ஒரு இந்திய பில்லியனர் தொழிலதிபர் இவ்வளவு சாதரணமாக இருக்கிறாரா... என்பதை போல் தான் அனைவரின் பார்வையும் எண்ணமும் இருந்தது.

தேவி நாச்சியார் ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்.. கம்பீரமும், நிமிர்வும் கூடவே கொள்ளை கொள்ளும் அழகையும் கொண்டவர்...

அழகு மற்றும் வாழ்க்கை முறை சில்லறை விற்பனை நிறுவனமான தேவின் இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.. இந்தியாவின் சிறந்த பெண் தொழில் முனைவோரில் ஒருவராக திகழ்பவர்..

ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக தனது பயணத்தை தொடங்கிய தேவி, இரண்டாயிரத்தில் தான் தனது தொழில் பயணத்தினை தொடங்கினார்.

அவரது விடாத உழைப்பினாலும் தனது குடும்பத்தின் துணையுடனும்
தேவின் நிறுவனத்தை இரண்டாயிரத்தி பன்னிரண்டில் நிறுவினார்.

ஆரம்பத்தில் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு இரண்டாயிரத்தி பதினெட்டில் (2018) இருந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்றும் ஆன்லைனில் வணிகத்தில் நல்ல லாபகரமான நிறுவனமாக செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப்களில் தேவினும் ஒன்று.

அதுமட்டுமல்ல வனவிலங்குகள் மற்றும் பாதுகாப்பில் ஆர்வமுள்ளவர் இரண்டாயிரத்தி இருபதில் (2020) ஆண்டில் தி தேவின் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை நாட்டின் இயற்கை வாழ்விடங்கள் மற்றும் பழங்குடி இனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது...****

"யார் கூட பேசிட்டிருக்க அகில்..." என்ற கம்பீரக் குரலில் வீல் சேரில் அமர்ந்திருவன் சட்டென பார்வையை குரல் வந்த திசையை நோக்கி வீசினான்.

ஜிம் ரூமிலிருந்து அப்படியே வந்திருந்தான் கேள்வி கேட்டவன். வியர்வை துளிகளில் நனைந்த முன் நெற்றி கேசம் அவனின் படர்ந்த நெற்றியில் மஞ்சம் கொண்டிருந்தது.. காதோரம் வழிந்த வியர்வை துளிகள் கழுத்து வளைவை கடந்து அவனின் அகன்ற மார்பில் பயணித்தப்படி இருந்தது... வியர்வை துளிகள் கூட அவனுக்கு வசீகரிப்பை கொடுத்தது...

அவன் ஆகாஷ் வானவராயன் முப்பதுகளின் தொடக்கத்தில் இருப்பவன்... கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே தந்தையின் தொழிலை கவனித்து வந்தவன் தற்போது முழு பொறுப்பையும் ஏற்று அதை திறம்பட நடத்தி வருகிறான்...

ஆறடி உயரத்தில் நிமிர்ந்து நின்று கேள்வி கேட்பவனை பார்த்ததும் நாவு தந்தியடிக்க பதில் பேசாது தொலைபேசியை காட்டினான்... வீடியோவில் தெரிந்த முகத்தை பார்த்ததும் இதுவரை இறுகியிருந்த முகம் சற்றே இளகியது..

அவனின் முகம் இளகியதும் "அத்தை அழகா இருக்காங்கல்ல அண்ணா..." என்றான். அதற்கு ஆமென தலையாட்டியவன்

"எப்ப இங்க வரீங்க... நிலவா..." வீடியோ காலில் இருந்த தேவி நாச்சியாரின் மகன் நிலவனிடம் கேட்டான்.

"இனி கிளம்பறது தான் மாமா... மக்சிமம் நைட் ரீச் ஆயிடுவோம்..." என நிலவன் கூற கூறவே பின்னாலிருந்து எட்டி பார்த்தார் தேவி நாச்சியாரின் அண்ணனும் ஆகாஷ், அகிலன், புவன்யாவின் தந்தையான தேவராஜ் வானவராயன்.

சிறு புன்னகையுடன் தந்தையை பார்த்து கையசைத்தவன் நிலவனிடம் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து தம்பியை பார்த்தான்..

'ஐயோ அந்த மிருகம் நம்பள நோக்கி தான் வருது...' என்ற மனதின் கவுண்டருக்கு கூட சிரிக்க முடியாமல் பாவமாய் அமர்ந்திருந்தான் அகிலன் வானவராயன்.

சில மாதங்களுக்கு நடந்த கார் விபத்தில் அகிலனால் தற்காலிகமாக நடக்க முடியாமல் போக... தற்போது மும்பையில் நடைபெறும் (என்டர்ப்ரனர் ஆப் தி இயர்) விருது வழங்கும் விழாவிற்கு அண்ணன் தம்பி இருவரும் செல்லவில்லை... இவர்கள் இருவரை தவிர(?) நாச்சியாரின் குடும்பமும் தேவராஜின் குடும்பமும் விழாவில் தான் இருந்தனர்...

"உன் ப்ளூ டூத் என்னாச்சு..." எனக் கேட்க

"சார்ஜ் இல்லைன்னு சார்ஜ் போட்டு இருக்கேன் அண்ணா..." என்றவன் தயங்கி "அண்ணா..." என சுண்டு விரலை காட்டி "போகணும்..." எனக் குழந்தையாய் கூற மெல்லிய புன்னகை ஆகாஷிடத்தில்.
 

S. Sivagnanalakshmi

Well-known member
சஸ்பென்ஸ் டீசருக்கு அர்த்தம் தெரிஞ்சது மகிழ்ச்சி. ஹீரோயின் இப்படியா இருக்கனும் கொஞ்சம் பீல் இருந்தது ஆனால் அது சீரியலில் என்கிற போது மகிழ்ச்சி. நறுமுகில் கியூட். வானவராயன் செம. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
 

Mr D devil

Moderator
Anchor na⚓️ nangooramaa .inimel anchors appudina naangooram thaan niyabagam varum 🙄🙄🙄.arambam amarkkalama irukku 🥰🥰🥰
Wow first comment neenga than... Tqq so much தங்கமே
Haha anchor appdina நங்கூரம் அப்படின்னு கூகுள் தான் சொல்றான்...
 

Mr D devil

Moderator
சஸ்பென்ஸ் டீசருக்கு அர்த்தம் தெரிஞ்சது மகிழ்ச்சி. ஹீரோயின் இப்படியா இருக்கனும் கொஞ்சம் பீல் இருந்தது ஆனால் அது சீரியலில் என்கிற போது மகிழ்ச்சி. நறுமுகில் கியூட். வானவராயன் செம. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
😻😻Wow tqq so much தங்கமே 😻😻
 

Advi

Well-known member
முகில் சூப்பர்🤩🤩🤩

அடப்பாவி ரைட்டர், ஆத்தினா டீ அதில் வர சீரியல் ஆ😳😳😳😳

ஏன் அவ பாட்டி கூட இருக்கா?????

தேவி தான் அவ அம்மா வா🤔🤔🤔🤔
 

Mr D devil

Moderator
முகில் சூப்பர்🤩🤩🤩

அடப்பாவி ரைட்டர், ஆத்தினா டீ அதில் வர சீரியல் ஆ😳😳😳😳

ஏன் அவ பாட்டி கூட இருக்கா?????

தேவி தான் அவ அம்மா வா🤔🤔🤔🤔
ஆம்மா ... நீங்க கதைன்னு நினைச்சா நான் என்ன பண்ணுவேன் தங்கமே😝😝... அவ பாட்டிகூட ஏன் இருக்கான்னா அந்த கிழவி மேல போகாம இருந்து இருக்கும்...இருக்குமோ🤥🤥🤥
 

Advi

Well-known member
ஆம்மா ... நீங்க கதைன்னு நினைச்சா நான் என்ன பண்ணுவேன் தங்கமே😝😝... அவ பாட்டிகூட ஏன் இருக்கான்னா அந்த கிழவி மேல போகாம இருந்து இருக்கும்...இருக்குமோ🤥🤥🤥
அப்ப தானே ஆகாஷ் மாமா பையனா இருப்பான்😁😁😁😁
 

Mr D devil

Moderator
எபி எப்போது வரும்.
இன்று இரவு அல்லது நாளை காலை பதிவிட்டு விடுவேன் சகி... நன்றி தாங்கள் தேடி வந்து கேட்டது எனக்கு பெரும் மகிழ்ச்சி
 

S. Sivagnanalakshmi

Well-known member
இன்று இரவு அல்லது நாளை காலை பதிவிட்டு விடுவேன் சகி... நன்றி தாங்கள் தேடி வந்து கேட்டது எனக்கு பெரும் மகிழ்ச்சி
சூப்பர் வாங்க
 
Top