எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

KK - 10

subasini

Moderator
களவு - 10மருத்துவமனையில் ருத்ரனின் அறையில் இருந்து வெளியே வந்த கங்காவிற்கு மனதில், அடிப்பட்டுப் படுத்திருக்கும் மகனின் அருகில் உரிமையோடு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற எண்ணம் உண்டாக்கிய வேதனையை முழுதுமாக அனுபவித்தாள்.இத்தனைக்காலம் யாரோ ஒருவருடைய பிள்ளை என்பது மறைந்து, 'என் பிள்ளையை எதுக்கு என்னிடம் இருந்து மறைத்து , பிரித்து வளர்த்திருக்கிறார்' என்று அப்பொழுதும் கணவன் மேல் தான் அவள் கோபம் மையம் கொண்டது. இந்தச் சூழ்நிலை அவளை இந்த டெஸ்ட் எடுக்க உந்தியது.இதை எப்படிச் சரி செய்வது? என்பது மட்டுமே அவள் எண்ணவோட்டமாக இருந்தது. தன் கணவனிடம் மகனுக்காக கொஞ்சம் இறங்கி வந்து இருக்கலாமோ.“தான்” என்ற அகங்காரம் இருக்கும் வரை அறிவு, சரியான பாதையில் பயணிக்காது என்பது அறிவில் உயர்ந்தவர் கூறியக் கருத்து, கங்காவிற்குப் பொருந்துமாக இருந்தது.மருத்துவரும் தோழியுமானச் சுமித்ராவிற்கு இத்தனை வருடம் இல்லாமல், இந்த இரவு நேரத்தில் அலைபேசியில் அழைத்தாள்...கங்காவின் அழைப்பைக் கண்டதும் அதிர்ச்சியில் சிறிது நேரம் அமைதியாக இருந்த சுமித்ரா, மெதுவாக அவள் குரலுக்குப் பதில் தந்ததும் , எதிர் முனையில் நீண்ட நெடிய நாட்களுக்குப் பின், தன் தோழியோடு உரையாடுவதையோ, அவளிடம் அவள் நலத்தை விசாரிப்பது ஒரு மரியாதை என்பதையோ, சிறிதும் யோசிக்காமல் மனதில் உள்ள எண்ணங்கள் எல்லாம், ஒரே மூச்சில் கூறத் தொடங்கினாள் கங்கா...“ஹாலோ, சுமி ... நான் கங்கா, எனக்கு உன்னோட உதவி வேணும் ப்ளீஸ், என்றவள் ருத்ரனுக்குத் தனக்குமான டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறினாள்.மேலும் ருத்ரனின் அட்மிட் ஆகியிருக்கும் அறையின் எண்ணைக் கூறி, "யாருக்கும் தெரியவேண்டாம், முக்கியமாக அவருக்குத் தெரியவேண்டாம்" என்றாள் ...நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன்னைத் தொடர்பு கொள்ளும் தோழியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள் சுமித்ரா."கங்கா நீ என்ன கேட்கிறாய் என்று தெரிந்துத் தானே பேசுகிறாய் "... சுமித்ராவின் இந்தக் கேள்வியில் "சுமி , ப்ளீஸ் புரிஞ்சுக்கோ எனக்காக இந்த உதவியை நீ செய்யமாட்டாயா? ... ஏன் நான் சொல்றதைப் புரிந்துக்கொள்ள மாட்டேங்கிறாய்" ... என்ற கங்காவின் வார்த்தைகளைக் கேட்டு என்ன பேசுகிறாள் கங்கா எனக் குழம்பித் தான் போனாள் சுமித்ரா ...மெதுவாக "அண்ணாக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?" என்ற சுமித்ராவிற்கு, நன்றாகப் புரிந்தது கங்காவின் குழம்பிய மனநிலை... "கங்கா நான் சொல்வதைக் கேள் கொஞ்சம் பொறுமையாக இரு நான் " ... என்ற சுமித்ரா, பேச முயலுகையில், அவளைத் தடைச் செய்வது போன்ற வீழ்ந்தனக் கங்காவின் வார்த்தைகள்..." எவ்வளவு வருஷம் பொறுமையாக இருக்கனும் சுமி, என்னுடைய மரணம் வரையா " ... என்று கங்கா உதிர்த்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தாள் சிமித்ரா ...இப்படிப் பேசுபவள் அல்ல கங்கா, எவ்வளவு பிரச்சினை வந்தாலும் துணிவோடு போராடும் குணம் அவளுடையது …கணவனைப் பிரிந்து நட்பு வட்டத்தில் இருந்து தன்னை விலக்கித் தனியாக இத்தனை வருடம் அவள் வாழ்ந்த வாழ்க்கைச் சொல்லும் அவள் திடமான மனதை ... தோழியின் இந்த வார்த்தைகள் அவளைப் பதட்டமடையச் செய்தது என்றால் மிகையில்லை..." கங்கா நீ எங்கே இருக்க இப்போ? " ... எனக் கேட்டாள்" உன் அண்ணா மருத்துவமனையில் தான் இருக்கேன்" என்ற கங்காவின் பதிலில் .. ." என் அண்ணா உனக்கு யாரும்மா " எனச் சிரித்தபடியே கேட்டச் சுமித்ராவின் குரலில் கிண்டல் இருந்தது.."சுமி ப்ளீஸ்" ... என்ற கங்காவின் குரலில் அவள் அருகில் இருக்கிவேண்டிய அவசியம் உணர்ந்தவள், தன் அறையில் இருந்து ருத்ரன் இருக்கும் வார்ட் நோக்கி வேகமாக வந்தாள் சுமித்ரா.சுமித்ரா விரும்பிப் படித்த பாடம் மருத்துவம், அவள் அதில் சிறந்த விளங்கினாள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனகசப்பும், தோல்வியும்அவளை தனிமை படுத்த, மருத்துவம் தன் வாழ்க்கை என வாழும் சுமித்ராவிற்கு, உற்றார் உறவினர் இல்லை … அவளுக்கு நட்பு மட்டுமே துணை என்று உணர்ந்த நீலகண்டேஷ்வரன், அவளை துயரத்தில் இருந்து காத்து, ஒரு அண்ணனாக துணை நின்றார். தங்கள் மருத்துவமனையில் அவளுக்குப் பணிக்கு அமர்த்தி அங்கேயே தங்கிக்கொள்ள எல்லா வசதியும் செய்து கொடுத்திருந்தார்... சுமித்ராவிற்கு மட்டுமே இந்தச் சலுகை என்பது தான் சிறப்பு ...நீலகண்டேஷ்வரன் தன் மனைவியின் தோழியைத் தன் உடன் பிறந்த சகோதரி போல் பாதுகாத்தான் தன்னவளுக்காக, அவள் கடமையைத் தன்னுடையதாக நினைத்துப் பின் பற்றினான்.அதனால் இந்த இருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் தெரியும் சுமித்ராவிற்கு. அவர்கள் பிரிவிற்குத் தானும் ஒரு காரணம் என்ற உறுத்தல் தான் இவ்வளவு காலமும் உயிர்த்தோழியைத் தொடர்பு கொள்ளாமல் இருந்தாள். அவளிடம் எல்லாம் ஒரு நொடியில் கூறி, இந்த நிலையை மாற்றிவிட துடிக்கும் அவள் இதயத்தை, தன் சத்தியத்தால் கட்டி போட்டு வைத்திருக்கிறார் ஈஷ்வர்.‘உன் கதையைக் கேட்டு அவள் வரவேண்டும் என்றால் என்றோ சொல்லி இருப்பேன் சுமித்ரா, அவள் உரசியது என் காதல் மட்டும் அல்ல, எங்கள் வாழ்க்கையின் அடித்தளத்தை. உன் தோழிக்குப் புரிந்து, தெளிந்து வரட்டும், அது வரை நான் காத்திருக்கத் தயார்' என்று அவளைத் தடுத்து நிறுத்தி இருந்தார். அண்ணன் வார்த்தைகளை மீறும் தைரியம் இல்லாமல் மௌனமாக இருந்தால் சுமித்ரா.

தன் அறையில் இருந்து தோழியைக் காண விரைந்தாள் சுமித்ரா....அதே நேரம் தன்னைக் கண்டு சென்ற பெற்றவளின் முகத்தில் இருக்கும் வேதனையைப் படித்த ருத்ரனுக்கு உறக்கம் கண்களை விட்டு எட்டிச் சென்றது.தொழிலில் முடியாது என்ற சொல்லுக்கே இடமில்லை அவனுக்கு... ஆனால் வாழ்க்கையில் அம்மாவின் வேதனையைத் தந்தை மனம் கோணாமல் எப்படிச் சரி செய்வது என முழிப் பிதிங்கி நின்றான் ...

மெல்லப் படுக்கையில் இருந்து எழுந்தவன், தன் அடிப்பட்ட காலை ஊற்றாமல் மெல்ல நொண்டியபடித் தன்னறையில் இருந்து வெளி வந்தவன், கண்டது அங்கே யாருமற்ற தனிமையில் எல்லாம் இழந்து நிற்கும் தாயைத் தான்.அதைக் கண்டதும் பதறியபடி மெல்ல அவள் அருகில் செல்ல முயன்றான் , அவன் நெருங்கும் நேரம் சுமித்ரா வந்து அவளை அணைத்திருந்தாள்."என்ன கங்கா இது ... சின்னக் குழந்தை மாதிரி ... கண்ணைத் துடை முதலில் ... எவ்வளவு பெரிய தொழில் அதிபரோட மனைவி நீ, இப்படி அழறது நல்லாவே இல்லை சொல்லிட்டேன்" என்று கண்டித்தாள்....“சமூகத்தில் வெற்றிப் பெற்று உயர்ந்த இடத்தில் இருக்கும் யாரும் வலியில் அழக்கூடாதா? சுமி ” என்று இயலாமையை வார்த்தைகளாக வடித்தாள் கங்கா...

" அதை விடு , இப்போது என்ன அவசியம் வந்தது உனக்கு , உன் பையன் ருத்ரன் என்று உனக்கு யாரிடம் நிருபிக்க வேண்டும் , இப்படி லூசு தனமாக டி என் ஏ டெஸ்ட் எடுக்கற முடிவு எதுக்கு ? என்று நான் தெரிஞ்சுக்கலாமா" என்று அவள் கூறியதில் ‘ருத்ரன் கங்காப் பெற்ற மகன் ’ என்ற செய்தி இருந்ததைக் கங்கா உணரவில்லை..."அவனோட அம்மா நான் தான் என்று எனக்குத் தெரியனும் சுமி , நான் என்ன சொல்ல வரேன் புரியுதா உனக்கு ” எனப் பரிதாபமாகச் சுமித்ராவைப் பார்த்து வைத்தாள் கங்கா ... மேலும்“என் மகனை யாரோடும் பங்குப் போட எனக்கு விருப்பம் இல்லை, அவன் என் மகன், என் மகன் மட்டுமே சுமி, இந்த உறவை யாரோடும் என்னால் பகிர முடியாது. யாசோதாவைக் கண்ணனின் தாயாகத் தேவகி ஏற்றுக் கொள்வாள் இதிக்காசத்தில்... நான் தேவகி இல்லை, ருத்ரன் என் மகன் மட்டுமே ” என்று தன் மனதில் உள்ள குமுறல் எல்லாம் கொட்டித் தீர்த்தாள்..."இவ்வளவு காலம் எத்தனை வலியோடு கடந்த வந்திருப்பேன் தெரியுமா ... அவனின் ஒவ்வொரு அசைவும் என் மகன் என்று மனதில் ஒரு குரல் எழுந்து ஓங்காரமிடும், அதைப் புறக்கணிக்க முடியாமல் அவரோட ‘நம் பட்டு உயிரோடு இல்லை’ என்ற அந்த வார்த்தைகள் என்னைய உயிரோடு கொல்கிறது சுமி ... என் முதல் பிள்ளையை இந்த வயிற்றில் தான் சுமந்தேன் , இன்னும் எனக்கு நினைவு இருக்கு அவன் பிறந்த தினம் ... இப்போதும் என்னால் உணர முடியும் சுமி , இதையெல்லாம் என்னால் தாங்க முடியவில்லையே! என்ன பண்ண.என் மகன் உயிரோடு இருந்து இருக்கிறான், நான் அவனைப் பார்க்காமல் அவனுக்குத் அம்மாவாக எதுவும் பண்ண முடியாத பாவியாக இருக்கேனே, அவன் பசியில் எப்படி எல்லாம் அழுதானோ! என்று யோசிக்கும் போது, உயிர் போற வலி உண்டாகுது எனக்கு” என்று கதறியக் கங்காவின் கண்களைத் துடைத்த சுமித்ரா, அவளை அணைத்துக்கொண்டாள்.இந்த அணைப்பு அவளுக்கான காயத்தின் மருந்து இல்லை எனத் தெரிந்தப் போதும், அது மட்டுமே முடிந்தது ஒரு தோழியாக....அவன் உடல் முடியாமல் இருக்கான் , ஆனால் என்னால் அவன் கூட உரிமையோடு இருக்க முடியவில்லை. என் மகன் தெரிந்துவிட்டால், நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை தானே , என் உரிமையை நான் ஏன் விட்டுக் கொடுக்கனும் சொல்லு ... அவன் நான் பெற்ற பிள்ளையா? இல்லை எனக்குத் தோன்றும் மாயையா? , என் மகன் உயிரோடு இல்லையா? இப்படிப் பல கேள்விக்குப் பதில் தெரியாமல் தவிப்பதைக் காட்டிலும் இந்த நொடி நான் இறந்தால் கூட எனக்கு வருத்தமே இல்லை” என மனதில் இத்தனை காலம் பொதிந்த வைத்திருந்த வேதனை எல்லாம் அங்கே கொட்டிக் கொண்டிருந்தாள் கங்கா.

கங்காவின் வார்த்தைகள் எல்லா அட்சரம் பிசகாமல் வாங்கியிருந்தான் அவள் மகன் ருத்ரன் ...தன்னை எந்த அளவுக்குத் தேடியிருக்கிறாள் என்றும் , அன்னையின் துயரத்தை நேரில் கேட்டும் , துடிக்கும் துடிப்பைப்பார்த்ததும் ...தாயின் துயரைத் தீர்ப்பது ஒன்றே இப்போதியத் தலையாயக் கடமை என்று உணர்ந்தவன் , அந்நேரம் கங்காவைப் பார்த்து "உன் துன்பத்தின் காரணம் புரியுது , ஆனால் உயிர் விடறதுப் பத்தி எல்லாம் பைத்தியக்காரத்தனமாப் பேசி, என்னிடம் அடி வாங்காதே சுமித்ரா ... ப்ரனவை மறக்காதே, அவனுக்கும் அம்மா நீ தான் புரிந்ததா ... அப்பறம் நீ சொன்ன வேலைப் பண்ணறது எல்லாம் பெரிய விஷயம் இல்லை ... ஆனா அண்ணாக்கு எவ்வளவு வேதனையைத் தரும் யோசிக்க மாட்டாயா நீ , அவனுக்கு அம்மா யாரு என்று கேட்பதும் , அவரை நீ சந்தேகம் படறதுக்கும் வித்தியாசம் இல்லை கங்கா ...

நீ பண்ணும் இந்த விஷயத்தில் அவரின் நிலையைக் கொஞ்சம் யோசி ... நீ அவர் சட்டையைப் பிடித்து உரிமையாக அன்றைக்கே கேட்க வேண்டிய கேள்வி இது கங்கா , அதை விட்டு இப்போ இப்படி அழுத என்ன பண்ண … ஆமா அப்படி என்ன உனக்கு இவ்வளவு கோபமும், ஈகோவும் அவரிடம் ... கொஞ்சம் அவரிடம் மனம் விட்டுப் பேசித் தான் பாரேன் கங்கா... கணவன் மனைவி இரண்டு பேரும் ஏன் அழகான வாழ்க்கையை இப்படிக் கரடு முரடானதாக மாற்றி வைத்திருக்கீங்க... உங்க பிள்ளைகளை எவ்வளவு பாதித்து இருக்கும், அவர்களிடம் கேட்கனும், அப்போ தெரியும் .நான் சொல்லறேன் ருத்ரேஷ்வரன் உன் மகன், உன் வயிற்றில் பத்து மாதம் சுமந்துப் பெற்ற உன் மூத்த பிள்ளைத்... அதில் உனக்குச் சந்தேகம் வரக் காரணம், உன் கணவன் என்றால் அவரை நிற்க வைத்துக் கேளு , அதை விட்டு இப்படிப் பைத்திகாரதனமாக எதுவும் பண்ணாத கங்கா" என்று அவளை அணைத்து ஆறுதல் படுத்தினாள் சுமித்ரா...“உங்க இரண்டு பேருக்கும் இடையே இருக்கும் இந்த ஈகோ தான், ருத்ரனையும் ப்ரனவையும் பிரிச்சி வைத்திருக்கு மறந்திறாத” என்று ஒரு தோழியாக அவளை உரிமையுடன் கண்டித்தாள்...“ ஏன் யாருமே என் மனநிலையில் இருந்து யோசிக்க மாட்டேன் என்கீறீர்கள்” என்ற கங்காவின் குரலில் வலி மட்டுமே இருந்தது..அந்த வலியின் தாக்கமாகக் கண்ணீர் கரைந்தது கன்னத்தில்... தன் தோழியின் குரலில் இருந்த மாற்றம் கண்டு பதறினாள் . ஆதரவற்ற பெண்ணாய்த் துயரம் தோய்ந்த முகத்தோடு பார்க்கவே பரிதாபமாக இருந்தது கங்காவின் தோற்றம்.எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த கங்கா, இன்று இப்படி இறுக்கமான மனநிலையில், முகத்தில் என்றும் இழப்பின் ஒளித் தெரியத் துன்பத்தின் பிரதிப் பிம்பமாகக் காட்சித் தந்தாள் சுமித்ராவுக்கு....சுமித்ராவின் வார்த்தைகளில் உள்ள உண்மை அப்போது தான் உரைத்தது , இது வரை தன்னைக் காண நீலக்கணாடேஷ்வரன் ஏன் வரவில்லை? என்பதற்கான காரணம் தெளிவாகியது...

மறைந்திருக்கும் உண்மை புரிந்ததும் தினறினாள் கங்கா ...அவருடைய காதலை உணராது சந்தேகித்துப் பிரிந்து வந்தது போலத் தானே இருக்கிறது சூழ்நிலை. அவளும் அப்படித் தானே நினைத்திருந்தாள், ருத்ரன் தன்னைக் காண வருவதற்கு முன் வரை, உண்மை என நம்பிய விசியங்களை யோசித்த கங்காவிற்கு, தான் செய்தப் பிழை முகத்தில் அறைய, அவளை வெகுவாகப் பாதித்தது. இதனால் உடலில் ஒரு சோர்வு வர அப்படியே இடிந்துப் போய் அமர்ந்தாள் கங்கா...தோழியின் நிலையை உணர்ந்தச் சுமித்ரா அவளை அணைத்த படி “வா, நாம வீட்டிற்குப் போகலாம்” கங்கா... “நீ இருக்கும் நிலையில் தனியாகப் போவது சரியில்லை” என அவளை அழைத்துச் சென்றாள்...சுமியின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அவள் உடன் சென்றாள் கங்கா.இங்க நடந்தது அனைத்தையும் பார்த்து வேதனையில், ருத்ரன் அன்னையின் வலிக்கான மருந்தாக எண்ணினான். தந்தையிடம் பேச வேண்டும் என்ற முடிவோடு திரும்பியதும், அறைக்குள்ளே செல்லும் தந்தையைக் கண்டவன் அதிர்ச்சிக்குள்ளானான். தன்னருகில் தான் இருந்தாரா ? அப்போ இங்கு நடந்த சம்பாஷனைகள் அனைத்தையும் கேட்டாருப்பாரோ ?இப்போது அவர் நிலை என்னவாக இருக்கும் ? அவர் என்ன யோசிக்கிறார் ? என்ற பல கேள்விகள் அவன் மனதில் தோன்றியது...அவரையும் வேதனைப் படுத்தாமல் எப்படி எல்லாம் சரி செய்ய என யோசித்தவனுக்கு விடைக் கிடைக்கவில்லை... வருங்காலம் தனக்கு என்ன எடுத்து வைத்திருக்கிறது என்று அறியாமல் பெற்றவர்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கத் தொடங்கி இருந்தான்.அதில் தன் மான் விழியாளை மறந்தான் என்பது தான் உண்மை..அவன் மனதை அசைத்தவளை ஒரு முறை நேரில் பார்த்திருந்தால், அவளை அவள் முகத்தை ஒருவேளை மறக்காமல் இருந்து இருக்கலாம். தான் விதி யாரை விட்டது.மெதுவாகத் தன்னறைக்கு வந்தவன் தன் தந்தையை நோக்கியபடிப் படுக்கையில் அமர்ந்தான். ருத்ரன் வந்தமர்ந்ததும் தன் தந்தையைத் தான் பார்த்தான்... அவருடைய முகம் கறுத்து இறுகிப் போய் இருந்தது.இந்த அம்மா பிள்ளையின் வேதனையில் , அவர் மனதில் நடக்கும் போராட்டத்தின் கருமை முகத்தில் படர்ந்தது. ...தன்னை நம்பாத கடலளவுக் காதலும், பாசமும் உள்ள மனைவி... அவளின் பொறுமையின்னையால் வாழ்க்கையில் கடந்த பத்தாண்டுகளாகத் தனித் தனியாகப் பிரிந்து வாழ்கின்றனர்... அவளைப் போலத் தானே அவரும் இத்தைக்காலம் தன் இளைய மகனைப் பிரிந்து வாழ்ந்தார். பெண்ணிற்குத் தான் பெற்ற வயிறு வலிக்கிமா? ஏன் உயிர்க்கொடுத்த தந்தைக்கு இந்த வலி நெஞ்சைக் கிழிக்காதா?இன்னும் ப்ரனவின் குழந்தைப் பருவம் அவர் கண்களில் நிழல் போல ஆடுகிறது. அவரை விட்டுத் தனியே கங்கா, பிரிந்துப் போகும் வரை, சிறிது நேரம் கூட நீலகண்டேஷ்வரனைப் பிரிந்து இருக்க மாட்டான் ப்ரனவ். அவனுக்கு எல்லா வகையிலும் தந்தையின் துணைத் தேவையாக இருந்தது . ஆனால் இப்போது....மெல்ல ஒரு பெரு மூச்சினை விட்டவரின் கண்கள் கலங்கி இரத்தமெனச் சிவந்தது. தன் தந்தையைப் பார்த்துக் கொண்டிருந்த ருத்ரனுக்கு ,அவரின் இந்தக் கலங்கிய நிலையைக் கண்டு பதறியபடி அவரின் தோளில் கை வைத்தான்.அப்போது தான் ருத்ரன் அங்கே இருப்பதை உணர்ந்தார் நீலகண்டேஷ்வரன். தன் கையால் கண்களைத் துடைத்த படி " எதாவது வேணுமா ருத்ரா" எனக் கேட்டவரிடம் ...'ஆமாம்' எனத் தலையை மட்டும் ஆட்டியவனிடம் "என்ன வேண்டும்" என எழுந்தார்....மெல்லிய குரலில் அவர் கண்களை நேருக்கு நேர்ப் பார்த்தவன் "எனக்கு அம்மா ,தம்பி, நீங்க, நான் என்று எல்லாம் ஒரே குடும்பமாக இருக்கனும்" என்றான்.நீலகண்டேஷ்வரன் அவனையே அமைதியாகப் பார்த்தபடிச் "சரி" என்றார்."உன் அம்மாவிடம் நீயே போய்ப் பேசு" என்றார்...இந்தப் பதிலிலேயே அவருடைய முடிவுத் தெளிவாகப் புரிந்தது ருத்ரனுக்கு.

தொடரும்...
 
Top