எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

KK - 12

subasini

Moderator
களவு – 12மருத்துவ மணையில் இருந்து வெளியே வந்த நீலக்கண்டேஷ்வரனின் மனமோ சுனாமியின் அழுத்ததை உள்ளே புதைந்துக்கொண்டு இருந்தது... எப்போது பேராழியாகச் சுற்றி இருப்பவரைச் சுழட்டி அடிக்கும் என அறியாமல் காலம் அதன் வேலையைச் செய்தது.அதே மனநிலையில் அலுவலகம் வந்தவர் வேதனையை மனதில் புதைதாலும், முகம் அதன் சாயலைக் காட்டிக்கொண்டிருந்தது... அதனால் அவரை யாரும் நெருங்காமல் தங்கள் பணியில் மிகவும் கவனமாக இருந்தனர்... இதன் காரணம் அன்றைய அலுவலுகப் பணியில் யாரும் தவறிழைக்காமல் திறன்படச் செய்தனர்.நீலக்கண்டேஷ்வரனின் மனதில் தன் தோழி மாயாவதியை நினைத்துச் சொல்லில் வடிக்க முடியாத வேதனை உலட்டி எடுத்தது.தனக்கும் தன் மனையாளுக்குமானச் சொந்தச் பிரச்சனையில் அவளுக்கு, பல அவப்பெயரைப் பெற்றுத் தந்ததை நினைத்து இன்றும் அவர் இதயம் ஓலமிட்டது.உயிர் தோழி என்பதற்கு இணங்க உயிரைக் காட்டிலும் மேலான அவள் மானத்தைத் தனக்காத் தாரை வார்த்த உத்தமிப் பெண் என்ற எண்ணம் சிந்தைனையில் பிறந்த அதே நேரம், அவள் கணவன் நரேனின் முகம் தான் வந்துப்போனது...அவனைப் போன்று சிறந்த காதலனாகத் தன்னால் வாழ இயலாமல் போன பாரம் தனது இடது மார்ப்பின் ஓரம் உணர முடிந்தது. வைரம் போன்ற இரண்டு பிள்ளைகள் இருந்தும், தனித்தனித் தீவாக இருக்கும் தங்கள் குடும்ப நிலைப் பார்த்து அவருடைய கௌரவம், அவர் முன்னே வந்து கேலிச் செய்தது. என்ன பெரிய மனிதனாகச் சமுகத்தில் வலம் வந்து என்ன பயன், தன்னால் மனைவி மக்கள் என ஒரே வீட்டில் வாழமுடியாத தன் கையாலாகதக் காதலின் மேல் இன்று வெறுப்புத் தோன்றியது.கடந்த காலக் தடங்களைத் தடவியபடிச் சென்ற எண்ணங்களின் பயணத்தைத் தடைச்செய்தான், அறைக் கதவினைத் தட்டிய படி அனுமதிக் கேட்டுக் காத்து நின்ற ப்ரனேஷ்வரன்.நீண்ட வருடங்களுக்குப் பின் தந்தையை அருகில் காண ஓரு வாய்ப்பு, தனக்கான இந்தச் சந்திப்பை ஒரு பொக்கிஷமாகக் கருதினான் நீலக்கண்டேஷ்வரனின் இளைய மகன்.

உள்ளே வர அனுமதிக் கேட்டுக் காத்திருப்பது உணர்ந்த ஈஷ்வர் வரச் சொல்லி அந்த நபருக்காகக் காத்திருந்தார். அனுமதிக்கிட்டியவுடன் ஆர்வத்தோடு உள்ளே வந்தவனின் கண்ணில் கண்டதோ, முகத்தில் கம்பீரம் இருந்த போதும் கண்களில் வேதனையோடு,உள்ளுக்குள்ளே இறுகிப்போன தந்தையைத் தான்.

இளைய மகனைக் கண்டதும் தன் வலியை எல்லாம் மறந்தவராகக் கண்ணில் பாசத்தோடு “ப்ரனா” என்ற அழைத்தபடி அவனைத் தன்னோடு இறுக்கி அணைத்திருந்தார் ...அந்த அணைப்பில் இத்தனை காலம் அவர் இழந்தது என்ன என்பது புரிந்தது. எத்தனை தடவைத் தொலைவில் இருந்து பார்த்திருப்பேன் இந்தக் குழந்தை முகத்தை ... இவை அனைத்தும் தன்னவளுக்காகத் தானே... ஆனால் அவளோ என மனைவியின் முகம் நினைவிற்கு வர, அவர் உதட்டில் ஒரு கோணல் சிரிப்பு உதயமாகி மறைந்து போனது.இன்று அருகில் தன் கை வளைவில் இளைய மகன் என்ற ஆனந்தமே, அவர் கண்களில் ஊற்றாகப் பிறக்க, தந்தையின் இந்த அணைப்பும் வரவேற்பும் சிறிதும் எதிர் பார்க்க வில்லை ப்ரனேஷ்வரன்.அவனும் என்ன செய்வான் அவன் கற்பனைக்குத்தான் நல்ல தீனித் தாய்க் கொடுத்து இருக்கிறாளே.தன் உரிமைக்காகவும் , தந்தை பாசத்திற்காகவும் அவரிடம் போராட வேண்டி வரும் என்ற அவன் எண்ணத்தைப் பொய்யாக்கி விட்டார் அவன் தந்தை.எதிர்பாராத தந்தையின் இந்த வரவேற்பில் அதிர்ச்சியானான். பெற்றவர்களின் சுயமரியாதை மற்றும் காதல் போரில் அடி வாங்கியது இவனும் தானே... குடும்பத்தின் பிரிவுக்குக் காரணம் மாயாவதி என்ற எண்ணம், அவன் மனதில் இருந்தது.அதற்குப் பழி வாங்கியதோ தன் உடன் பிறந்தவனை, அவன் மனதில் புரையோடி இருக்கும் அனர்தத்தைச் சரி செய்யும் கடமைப் பெற்றவர்களுக்கு இருக்கிறது. இனி வரும் காலம் தான் எல்லாவற்றுற்கும் பதிலாக...தந்தையின் அன்பில் தன்னை இழந்த இளைய மகனோ, மிகவும் உணர்ச்சி வசப்பட்டவனாகக் கண் கலங்கினான். அதன் ஈரம் தந்தையின் மார்பை நனைக்க , பதறியபடி அவன் முகம் பார்த்து “என்னடா, சின்னக் குழந்தை மாதிரி” எனக் கண்டித்தவாறே அவன் கண்களைத் துடைத்தார்.“ஏன்ப்பா நான் உங்க பையனில்லையா?” என ஏக்கமாகச் சிறு பிள்ளைப் போல ப்ரனேஷ் கேட்டக் கேள்வியில் உயிர் உடலை விட்டுப் போகவ எனக் கேட்டது போன்று இருந்தது ஈஸ்வர்க்கு.“என்னடாக் கேள்வி” என அடிப்பது போல் வந்தவர் , “நீ தான்டா என் உசுரு, நம்ம வீட்டுச் செல்லக்குட்டி டா நீ” என்றபடி மீண்டும் அணைத்தார் அவனை.“ஆமாம் இப்போ இதை நான் நம்பனும் , அது தான் கூடவே உங்க ஜெராக்ஸ் காஃபியை வச்சுட்டுச் சுத்தறீங்க, இதுல உங்க உசுரு என்று சொன்னால் நாங்க நம்பிருவோமா ? என்று தன் பொறாமையின் அளவைக் கட்டவிழித்து விட்டவன், தந்தையிடம் இத்தனை நாள் இழந்ததும் , அவர் பாசத்திற்கான ஏக்கம் என எல்லாவற்றையும் இந்தப் பேச்சில் பதிய வைத்தான் ப்ரனவ்...“நீ தான்டா என் தொழில் சாம்ராஜ்யத்தின் வாரிசு , இவ்வளவு நாள் சின்னப் பையன் கொஞ்ச நாள் அவன் இளமைப் பருவத்தைச் சந்தோஷமாக அனுபவிக்கட்டும் என்று நினைத்து, விட்டா நீ இப்படிப் பேசற” என்று அவனை இலகுவாக்கினார்.மனதில் ‘நாம் தான் இவனைச் சின்னப் பையன் நினைச்சுட்டோமோ’ என்றும் எண்ணினார். நடக்கிறது எல்லாம் பார்த்து இவன் என்ன கற்பனைப் பண்ணி வச்சு இருக்கானோ, முதலில் இவனிடம் பேசனும் நினைத்தவர், அதற்குத் தாமதம் செய்து இருக்க வேண்டாம். காலம் தான் எல்லா இடங்களிலும் நமக்கு எதிரி என்பது இங்கேயும் நிறுபனமாகியது..“ப்ரனா, தொழிலை எங்கே இருந்து கற்றுக்கொள்ள ஆசைப் படுகிறாய் எனச் சொல்லு, உன் விருப்பம் தான் ப்ரனா” என்ற தந்தையின் வார்த்தைகள் கேட்டு என்ன மாதிரி உணர்ந்தான் எனக் கேட்டால் சொல்லத் தெரியாத நிலையில் தான் இருந்தான் இளையவன்.தன் உரிமைக்காவும் பாசத்திற்காகவும் போராட வேண்டி வரும் என நினைத்து வந்தவனுக்குத் தந்தையின் சிவப்புக் கம்பள வரவேற்பு ஆச்சிரியம் தந்ததென்றால் அதைத் தவறாக உபயோகிக்காமல் தொழிலை அடிமட்டத்தில் இருந்து கற்றக் கொள்ள விரும்புவதாக தந்தையிடம் கூறினான்.அவரும் அதற்குச் சரி என்று காரியதர்சியை அழைத்துத் தன் இளைய மகனை அறிமுகப்படுத்தியர், அவனுக்குத் தொழிலில் உள்ள நுனுக்கங்களை எல்லாம் அடிமட்டதில் இருந்து , ருத்ரனுக்குக் கற்றுக் கொடுத்தது போல இவனுக்கும் கூட இருந்து கற்றுத் தருமாறுப் பணித்தார்.தன் காரியதரிசியிடம் கூறிய அனைத்துக் கேட்ட ப்ரவிற்குத் தந்தையின் அக்கறையில் அசந்து போனான். அவனைப் பார்த்தவர் சிறு புன்னகையோடு “எதுவாக இருந்தாலும் உன் விருப்பம் தான் நடக்கும் ப்ரனவ், என்று அவனுக்கு எல்லாமாக நின்றார்.எதிர்பார்த்து வந்தது எதுவும் நடக்காமல், கிடைக்காது என்று ஏங்கித் தவித்த தந்தையின் அன்பு எங்கும் யாராலும் களவாடப் படாமல், தனக்கே தனக்காய் அவரிடம் தான் இருந்து இருக்கிறது என்பதே அவனுக்கு மிகவும் பெரிய மனத் தைரியத்தைக் கொடுத்தது.மிகுந்த உற்சாகத்தோடு தந்தையின் காரியதர்சியிடன் இணைந்தான். அவரை அங்கிள் என்று உரிமையாக அழைத்தை அவரும் விருப்பியே ஏற்றுக்கொண்டார்.அவர் மனதிலோ அண்ணனைப் போல் தான் தம்பியும் ரொம்பப் பணிவும், முதலாளிப் பையன் என்ற ஆணவம் இல்லாத எளிமாயாகப் பழகும் குணமும் அவருக்குப் பிடித்திருந்தது... ப்ரனவிற்கான பணிப் புரியும் இடத்திற்கு வந்தனர்...அங்கே பணிப்புரியும் மேலாளரிடம் ப்ரனவை ஒப்படைத்த ஈஷ்வர் அவன் அவருடைய பொறுப்பு என்று கூறி, தன் இருப்பிடம் வந்தார்...மேலாளரிடம் பணிவாக , அவர் சொல்லச் சொல்ல ப்ரனவ் எல்லாம் தெளிவாக உற்சாகத்தோடு கற்றுக்கொண்டான். அவரிடம் அவன் காட்டிய பணிவும் கற்றுக்கொள்ளும் நேர்த்திப் பார்த்து. ஈஸ்வரின் இரண்டு பிள்ளைகளும் சிறந்தவராக இருந்தனர் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை தானே, தன் முதலாளியை நினைத்து அவருக்கு மனதில் பெருமைப் பிடிபடவில்லை...பொறுமையாக எல்லாம் கற்றுக்கொள்ளும் இந்த ஆர்வமும் நிதானமும் கண்டிப்பாக இவன் திறன்படச் செயல் படுவான் என்று மனதில் நினைத்தார்.தந்தையையும் அண்ணனையும் போலவே இவனும் இந்தத் தொழிலில் சிறந்து விளங்குவான் என்பது தெளிவாகப் புரிந்தது.வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றான் ப்ரனவ் , தனக்கான தொழில் திறமையைக் தந்தையிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதை ஒரு பாக்கியமாகக் கருதினான் ப்ரனவ், அந்த அளவிற்கு தந்தை மேல் பாசமும் மரியாதையும் இருந்தது.

தனக்கான எல்லா வேலையும் புரிந்துக் கொண்டவன் தந்தையைக் காண வந்தான்...அவன் வரும் நேரம் நீலக்கண்டேஷ்வரன் ருத்ரனின் பி ஏ சக்தியை அழைத்தவர், அவனுக்கு முதலாளியின் காதலைப் பற்றி எந்த அளவுக்குத் தெரியும் என அறிய சக்தியிடம் பேசிக்கொண்டிருந்த தருணம் இளைய மகன் உள்ளே வந்தான்...

“ருத்ரனுக்கு லவ் எதாவது இருக்கா, அதைப் பத்தித் தெரியுமா ? , சக்தி உன் முதலாளி நேற்று யாரைப் பார்க்கப் போனான் ? உனக்கு எதாவது தெரியுமா ? எனக் கேட்டார்...எதிர் முனையில் இருப்பவனோ... “ஐயோ பாஸ் எனக்குத் தெரியாது” என அலறினான்...அவன் பதட்டத்தை உணர்ந்த ஈஷ்வர் சத்தமாகச் சிரித்தார் பின் மெதுவாக “சக்தி நீ ஏன் இப்படிப் பதட்டப் படற” எனக் கேட்டார்....“இல்லை சார் நீங்க கேட்டதும் பயந்துட்டேன்”... என்றான்."ஓ, அப்படியா" எனச் சிறிநு நேர அவரின் மௌனம் சக்தியைச் சிந்திக்கத் தூண்டியது , தன் முதலாளிக்கு ஏற்பட்ட இந்த விபத்துக்குக் காரணம் ஏதோ ஒன்று இருக்கிறது என அவன் ஆழ் மனம் சொல்ல, “ பாஸ் எதாவது பிரச்சனையா, அவர் நடந்தது விபத்துத் தானா?” என அவன் இழுக்க...."அது விபத்துத் தான் சக்தி நீ எதுவும் கற்பனைப் பண்ண வேண்டாம்" என்ற நீலக்கண்டேஷ்வரனின் பதிலில் "ஓகே பாஸ்" என்றான் சக்தி ..." என்னடா, பாஸ் என்று கூப்படற... அப்படி நீ கூப்பிடும் போது , கொள்ளைக்கூட்டத்தலைவன் ஃபீல் வருதுடா... அழகா அங்கிள் இல்லை சார் என்றாவது கூப்படலாம். நீ இப்படி “பாஸ்” கூப்பிடும் போது பில்லா, பீ ஜி யம் கேட்குது டா” என்று அவனைக் கேலிச் செய்தவரிடம் ...“ அப்படியே பழகிட்டேன் பாஸ்” என்றான் மீண்டும்...

"ம்ம் சரி, நீ சொன்னாலும் கேட்க மாட்ட, ருத்ரன், ஹாஸ்பெடலில் இருப்பதால் உனக்குக் கொஞ்சம் வேலை அதிகம் இருக்கும், எதுவாக இருந்தாலும் என்ன கூப்பிடு ஓகே வா...தயங்க வேண்டாம் என்றார்...

இதைக் கேட்டதும் எஸ் பாஸ் என்றான் சக்தி..."ருத்ரன் சார், காலையிலேயே கூப்பிட்டுப் பேசிட்டார், எதுவாக இருந்தாலும் உங்களிடம் கேட்கச் சொன்னார்”.

" ஓ அப்படியா... அப்பறம் சக்தி... எனக்கு ஒரு தகவல் வேணும், அதைக் கொஞ்சம் பார்த்துச் சொல்ல முடியுமா " எனக் கேட்டதும்"பாஸ், என்ன மட்டும் சொல்லுங்க எல்லா டீடெயிலும் உங்க முன்னாடிக் கொண்டு வரேன்" என்றான் சக்தி..."அது நேத்து உன் முதலாளி ஒரு பொண்ணைப் பார்க்க ரெஸ்டாரென்ட் போயிருக்கான் , எந்த இடம் அவன் யாரைப் பார்த்தான் எல்லாத் தகவல்களும் வேணும் புரியுதா?" எனக் கேட்டார்...." ஓகே பாஸ்" என்றான் சக்தி..."நான் உன்னிடம் விசாரிக்கச் சொன்னேன் ருத்ரனுக்குத் தெரியவேண்டாம். என்ன புரியுதா சக்தி" என்ற அவர் குரலில் என்ன இருந்தது என்ற தெரியவில்லை, ஆனால் அவர் வார்த்தையை மீறக்கூடாது என்ற எண்ணம் மட்டும் மனதில் ஆழமாகப் பதிந்தது...இதையெல்லாம் கேட்ட ப்ரனவ் கண் முன் தன் காதல் கோட்டையை அவன் தந்தையே இடித்துத் தரைமட்டமாக்கும் காட்சித் தோன்றியது...

எப்படியும் தன் தந்தை இடையில் வந்தால் தன்யா விரும்பம் எல்லா எடுபடாது. அவள் தந்தை ருத்ரன் மாப்பிள்ளை என்றால், கண்ணை மூடிச் சரி சொல்லிடுவார் என்ற பயமே, அவனை எதுவும் யோசிக்க விடாமல் பண்ணியது...."என்ன சக்தி லைனில் இருக்கியா" எனக் கேட்ட ஈஷ்வரின் குரலில் சுயம் பெற்றவன் "சார் நீங்க கேட்டத் தகவல்கள் சீக்கிரம் உங்கள வந்து சேரும்" என உறுதி அளித்தான்.ருத்ரனின் கூட இருக்கும் காரியதர்சிக்கு இந்த அளவுத் துணிவும் தைரியமும் , புத்திசாலித்தனமும் இருப்பதில் ஆச்சரியம் இல்லை... அதனால் அவன் வார்த்தைகள் உள்ள நம்பிக்கையில் அவனின் நலம் மற்றும் அவன் சொந்தக் காரியங்கள் விசாரித்தவர் பின்னர் அழைப்பதாகப் போனை வைத்தார்...அவரின் இந்த அன்பும் அனுகுமுறையும் தான் அவர் வெற்றிக்குக் காரணம் என நன்றாகப் புரிந்தது சக்திக்கு...தன்னை ஒரு வேலை ஆள் என நினைக்காமல் அவர் பழகும் விதம், அவர் மேல் அவனுக்கு இன்னும் மரியாதைக் கூடியது... அதன் காரணம் பாஸ் என்ற அவன் அழைப்பு நூறு மடங்கு கூடியது....சக்தியின் அழைப்பைத் துண்டித்ததும், தன்னைக் காண வந்த மகனை அழைத்தவர், இன்றை நாள் எப்படிப் போனது அவனுக்குப் பிடித்ததா, என்ன எல்லாம் கற்றுக்கொண்டான், அடுத்து அவன் எப்படிச் செயல் படனும் என்று அவனிடம் உரையாடியதுல்லாம் அடுத்து அவனின் தொழிலைச் செப்பனிடுதல் பற்றியதாக இருந்ததால் அவனும் வேறெதுவும் சிந்திக்காமல் அவர் சொல்லித் தந்தப் பாடங்கள் எல்லாம் கவனமாகக் கற்றுக்கொண்டான்...அன்றைய நாளை எதிர்பார்த்ததை விட அழகாகச் சென்றதால் ப்ரனவ், சந்தோஷமான மனநிலையில் இருந்தான். பூமிச் சுற்றிய வேகத்தில் நாட்கள் மாதங்களாக ஓடியது.ருத்தரன் வாழ்க்கையில் தோற்றதாக நினைத்த காதலைத் தேடிப்பிடித்தார் நீலக்கண்டேஷ்வரன், அவன் பி ஏ சக்தியின் உதவியோடு...சக்தி, தந்தத் தகவலின் படி அந்தக் காபி விடுதியில் தன்யா மற்றும் யாத்ரா இருந்தனர்,

ப்ரனவின் காதல் தன்யா என்று மனதில் பதிந்ததால், நீலக்கண்டேஷ்வரனுக்கு அடுத்து வந்தது யாத்ராவின் பெயரும் அவள் பிள்ளை முகமும் தான், மீண்டும் ருத்ரன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் அசைப்போட்டவர்க்கு யாத்ரா மேல் எந்த விதத் தவறான எண்ணமும் வரவில்லை. எங்கேயோ புரிதல் தவறாக இருக்கு ... இதை மாற்றி அமைக்க வேண்டும் என மனதில் நினைத்தவர் ... சக்தியிடம் தன் மனதில் இருப்பதைக் கேட்டார்...“என்ன சக்தி நாம நினைக்கும் பெண் யாத்ராவா" எனக் கேட்டார்...“அவங்களாக இருக்கத்தான் வாய்ப்பு இருக்கு... ஆனால் டென்ஷன் தர அளவுக்குப் பேசற டைப் அவங்க இல்லை பாஸ்..., அதுவும் இல்லாமல் அன்றைக்கு அவங்கத் தனியா ரொம்ப நேரம் இருந்ததாகப் பேரர், சொன்னான்.இப்பொது அத்தை மாயாவது வீட்டில் தான் தங்கி இருக்காங்க , அவங்க அப்பா வியாபார விஷயமாக டெல்லிப் போயிக்கார்ப் பாஸ்” என்றது மட்டும் இல்லாமல் அவள் தந்தைக்கும் ருத்ரனுக்கும் இருக்கும் மன விரோதம் வரை, அவன் புள்ளி விவரங்கள் தரவும் அசந்துத் தான் போனார் ஈஷ்வர்.ருத்ரனின் உதவியாளன் என்றால் சும்மாவா என மனதில் நினைத்தவர் சக்தியின் இந்தத் தொழில் திறமையை மெச்சினார்...“அபாரம் சக்தி, உண்மையிலேயே ரொம்ப இம்பரஸ் அகிட்டேன் டா, உன்னோட வேலை , வேகம் , அதில் இருக்கும் விவேகம், நீ ருத்ரனிடம் இருக்கும் வரை அவனுக்குத் தொழில் தோல்வி என்பது இல்லை” என்றார் அவனை அணைத்தபடி....அவரின் இந்தச் செயல் எதிர்பாராத சக்திக் கூச்சத்தோடு “என் கடமையைத் தான் பாஸ் பண்ணறேன்” என்றான்.“சரி சக்தி, இந்த விசியம் நம்ம இரண்டு பேருக்குள்ள இருக்கட்டும், இனி ருத்ரன் இதைப் பத்தி யோசிப்பது சந்தேகம் தான் என்றார், மேலும் நான் மாயாவதியிடம் பேசிக்கிறேன்” என்றவர் அவனைப் பார்க்கமிகவும் சிந்தனை ரேகை முகத்தில் ஒட " ஆமாம் பாஸ், ருத்ரன் சார் இந்த விஷயம் பத்தி யோசிக்க வாய்ப்பு இல்லை, ஏன்னென்றால் மனதில் வேண்டம் என்று முடிவு எடுத்தா , அவர் மனதை மாற்ற ரொம்பக் கஷ்டம் என்றான். சக்தியின் வார்த்தைகளில் முதலாளியை எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கான் எனத் தெரிந்து கொண்டார் ஈஷ்வர் ...சக்தியை அனுப்பியவர் மாயாவதியிடம் பேச வேண்டும் என நினைத்தார்....அதற்கான நேரம் இதுவல்ல என முடிவெடுத்தார். ருத்ரன் இருக்கும் மன நிலையில் மீண்டும் காதலைப் பற்றிப் பேசி மேலும் அவள் மேல் அவனுக்குச் சினம் உருவாகக் கூடாது என நினைத்தார்... அவன் காதலி, தனசேகரின் மகள் என்றாலே யோசிக்காமல் அவளுக்கு 'ஏமாற்றுக்காரி' என்ற பட்டத்தைக் கொடுத்து விடுவான் எனப் பயம் மனதில் இருந்தது தான் காரணம்.வரும் காலம் என்ன எடுத்து வைத்திருக்கிறது என அறிய அவர் கடவுள் இல்லையே! வாழ்க்கையைப் போறப் போக்கில் வாழக் கற்ற மனிதன் தான், எத்தனை துன்பம் வந்த போதும் உடையாமல் மனம் சிதறாமல் சிந்தித்துச் செயல் படுகிறார்...இவை எதுவும் தெரியாத ப்ரனவ், தன்யாவை, என்ன சொல்லித் திருமணம் செய்ய எனச் சிந்தித்தான்... அவன் அடுத்துச் செய்யவிருக்கும் செயல் தன் குடும்பத்தை மேலும் இன்னலுக்குள் தள்ளும் என அறியவில்லை...

தொடரும்...
 
Top