எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தடம் மாறிய தாரகை விமர்சனம்

நறுமுகைத் தளத்தின் போட்டிக் கதை NNK23ன் தடம் மாறிய தாரகை எனது பார்வையில். மதுராகினி காதல்‌‌? கணவன் நவநீதன். மதுவின் நெருங்கிய தோழி நந்தினி சென்னையில் இருப்பதால் தானும் குடும்பத்துடன் கணவனின் ஆதரவுடன் சென்னைக்கு வந்துவிடுகிறாள். நல்ல இரு தம்பதிகளின் வாழ்வு பேராசைக் கொண்ட ரியாவால் தடம் மாறுகிறது.

தோழி மற்றும் கணவனின் துரோகத்தை தெரிந்துக் கொண்டதால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் மதுவின் வாழ்க்கை என்னவானது என்பதை சரளமான எழுத்து நடையுடன் தந்திருக்கிறார். உண்மை நிகழ்வுகளின் தாக்கத்துடன் எழுத்தாளனின் கற்பனையும் கலந்து தந்திருக்கும் எழுத்தாளர் கொடுத்த விதத்தில் நன்றாக இருக்கிறது.

கௌதம் மனைவி நந்தினியை விட்டு விலகினாலும் அதை அவள் மனமார உணர்ந்து கொள்வாளா என்பது சந்தேகம். மதுவின் வாழ்க்கை கணவனிடம் இருந்து பிரிவதுடன் முடிவதில்லை என்பதை உணர்ந்து அவள் எப்படி எதிர்காலத்தை எதிர்கொள்ள போகிறாள் என்பதை அடுத்த பாகத்தில் தெரிந்துக் கொள்ள நானும் ஆவலுடன் இருக்கிறேன். வாழ்த்துகள்.
 
Top