எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆலியில் நனையும் ஆதவன் !! 🌦️ - 24

NNK-34

Moderator
ஆதவன் 24
download (1) (2).jpeg

வர்ஷாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, உணர்ச்சிவசப்பட்டு தன்னை மறந்து நிரோஷாவின் பெயரை கூறியிருந்தவளுக்கு, இப்பொழுது ஆதித்தின் முகத்தை பார்க்கவே சங்கடமாக இருந்தது.

இதுவரை எப்படியோ இனி ஆதித்திடம் பொய் சொல்வதற்கு வர்ஷாவின் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதே நேரம் உண்மையை கூறவும் பயமாக இருக்க, சொல்வதரியாது தினறிக் கொண்டிருந்தவளுக்கு கண்கள் இரண்டும் கலங்கிவிட்டது.

அவளது முகமாற்றத்தையும் நிரம்பியிருந்த விழிகளையும் கண்டவனோ, "வர்ஷா" என்று பதற்றதுடன் அழைத்ததும் உருண்டோடிய கண்ணீரை அவன் பார்த்துவிட கூடாது என்று, தலை தாழ்த்தி வர்ஷா துடைத்துக்கொள்ள, ஆனால் தப்பாமல் அதை கண்டு கொண்ட ஆதித்தோ வர்ஷாவை இன்னும் நெருங்கி,

"என்ன ஆச்சு? ஏன் அழற?" என்று கேட்டப்படி அவள் வதனத்தை நிமிர்த்தினான்.

ஆனால் பிடிவாதமாக மறுத்த வர்ஷாவின் முகமோ அவன் மார்பில் முட்டி மோதவும் அவள் நிலையை புரிந்துகொண்டவன் ஒரு வார்த்தை பேசாது அடுத்தகணமே அவள் அமர்ந்திருந்த வாக்கிலே அவளை அணைத்துக்கொள்ள, அவன் இடையை கட்டிக்கொண்ட அவளும் அவன் மார்புடன் தன் முகத்தை இன்னும் ஆழமாக அழுத்தி வைத்து கொண்டாள்.

நொடிகள் நிமிடங்களாக கடந்திருக்க, இதுவரை நிலையில்லாமல் வேகமாக துடித்து கொண்டிருந்த அவளது இதய துடிப்புகள் நேரம் கடந்த பிறகு இப்பொழுது கொஞ்சம் சீராக துடிப்பதை உணர்ந்த ஆதித்,

"யார் அவங்க டா, ஏதும் பிரச்சனையா?" தன்னவளது கண்ணீரையும் முக வாட்டத்தையும் தாங்கிக்கொள்ள முடியாது தென்றலாய் அவளது சிகையை வருடியபடி நிதானமாய் வினவினான், எப்படியாவது தன்னவளின் மன வலியை சரி செய்யும் ஆவலில். அவளிடம் பதில் இல்லை.

"இப்படி நீ உடைஞ்சு போற அளவுக்கு அவங்க முக்கியமானவங்களா? சொல்லணும்ன்னு தோணுச்சுன்னா மட்டும் சொல்லு, கட்டாயம் இல்லை, உன்னை நீயே ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத, உனக்கு எப்பவும் நான் இருப்பேன்" என்று ஆதித் சொன்ன அடுத்த கணம்,

"ஒருக்காலத்துல ரொம்ப முக்கியமானவங்க" அவன் அணைப்பில் இருந்து விலகி கீழே இறங்கி நின்றவள், அவன் முகம் பார்க்காது எங்கோ பார்த்தபடி கூறினாள்.

"இப்போ?" என்று கேட்டான் ஆதித்.

"நான் பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறவங்கள்ல அவங்களும் ஒருத்தங்க" நிறைந்த கண்களுடன் கூறினாள்.

"மன்னிக்க முடியாதளவுக்கு பெரிய தப்பு பண்ணிட்டாங்களா?" அவள் விழிகளை பார்த்துக்கொண்டே வினவினான்.

"ம்ம்" என்று ஆமாம் என்பதாய் தலையசைத்தவள்,
"யாராலையும் மன்னிக்க முடியாதளவுக்கு மோசமான காரியத்தை பண்ணிட்டா" சீக்கிரம் விழுவதற்கு தயாராக இருக்கும் கண்ணீருடன், தொண்டை அடைக்க இப்பொழுது அவன் விழிகளை பார்த்துக்கொண்டே கூறினாள்.

இரண்டு மூன்று நொடிகள் வர்ஷாவின் நிரம்பியிருந்த விழிகளையே பார்த்துக்கொண்டிருந்த ஆதித்தோ,
"தண்டனை அவங்களுக்கு கொடுக்குறியா இல்லை உனக்கு நீயே கொடுத்துக்கிறியா"அவளது மனதின் வலியை உள்வாங்கியவன், அவளின் கன்னத்தில் உருண்டோடிய கண்ணீரை துடைப்படி கேட்டான்.

பதில் சொல்ல முடியாது தவிப்புடன் வர்ஷா ஆதித்தின் முகத்தை பார்க்க அவனோ,

"மன்னிச்சுடு டா, அவங்க என்ன வேணும்ன்னாலும் பண்ணிருக்கட்டும் மன்னிச்சுடு" என்றவன்,
"நாம நேசிக்கிறவங்களோட தவறுக்கு தண்டனை கொடுக்க எத்தனையோ பேர் இருக்காங்க, ஆனா அவங்க தவறை மன்னிச்சி அன்பு காட்ட நம்மளால மட்டும் தான் முடியும். எல்லாத்துக்கும் மேல நமக்கு பிரியமானவங்களுக்கு கொடுக்கிற தண்டனை கூட நமக்கு தான் வலியை குடுக்கும்.
நம்ம விஷயம் கூட அப்படி தான், உனக்கு தண்டனை குடுக்கிறதா நினைச்சு உனக்கு நான் பண்ணின ஒவ்வொரு விஷயமும் எனக்கு ரொம்ப வலிச்சுது.
ஏன் இப்போ நீ கூட, தண்டனைய அவங்களுக்கு குடுத்துட்டு வலியை நீ அனுபவிச்சிட்டு இருக்க.
டிரஸ்ட் மீ வர்ஷா, நீ மட்டும் மன்னிச்சி பாரு உன் மனசு அவ்வளவு லேசா ஆகிடும்" அவளுக்குள் அவள் அனுபவித்து கொண்டிருக்கும் வலியை அப்படியே சொல்லி அதற்கு தீர்வும் கூறினான்.

வர்ஷாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவன் பேச பேச அவனையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருக்க,
"தேங்க் யூ.. தேங்க் யூ ஸோ மச்" என்ற வர்ஷா அழுகையோடு மேலும் தொடர்ந்து, "நீங்க ரொம்ப நல்லவர்" என்றாள்.

அதை கேட்டு மெலிதாக புன்னகைத்தவனோ,
"ஆஹான்" என்று போலியான ஆச்சரியமாக கேட்டான்.

"ஆனா நான் உங்களை போல நல்லவ இல்லை" என்றாள்.

"அப்படியா" வியப்புடன் கேட்டான்.

"ஆமா ரொம்ப சுயநலக்காரி, பொய்யும் சொல்லுவேன்" அவன் விழிகளை பார்த்து கூறினாள்.

"ம்ம் அப்புறம்" அலட்டிகொள்ளாமல் கூறினான்.

"ஆனா உங்களை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்." நாசியை உறிஞ்சியபடி கூறினாள்.

"வேண்டாம் கொடுக்காத உன்கிட்டயே வச்சிக்கோ" தன்னவளை தன் கைவளைவுக்குள் நெருக்கமாக அணைத்து பிடித்தபடி கூறினான் ஆதித்.

"என்ன நடந்தாலும் நீங்களும் என்னை விட கூடாது" அண்ணார்ந்து அவன் விழிகளை பார்த்து கூறினாள்.

"அவ்வளவு தானே நீயே போனாலும் நான் உன்னை விடமாட்டேன்" என்றவனின் கன்னத்தில் தன் பாதம் உயர்த்தி, எம்பி நின்று வர்ஷா இதழ் பதிக்கவும்,

"அங்க மட்டும் தானா? என் லிப்ஸ் பாவம் இல்லையா" என்று பாவம் போல ஆதித் கேட்கவும் இதழ் பிரித்து சிரித்தவள் தன்னவனின் இதழை சிறையெடுத்த கணம், ஆதித் வர்ஷாவை தன் கரங்களில் ஏந்தி கொள்ள, தன்னவனின் விருப்பத்தை அவனது கண்ணசைவிலே அறிந்துகொண்ட பெண்ணவளோ, தயக்கமின்றி தன்னவனை மொத்தமாக தாங்கிகொண்டவள். குட்டி புயலாய் தன்னவனை தனக்குள் சுழற்றி அடித்தாள். கொண்டாடி தீர்த்தாள்.

காதலில் ஆள்வதை விட ஆளப்படுவது கூடுதல் இன்பமோ? இருவரும் போட்டிபோட்டு ஒருவர் மீது மற்றவர்களுக்கு இருக்கும் காதலை மிச்சமின்றி காட்டியதில், யார் ஆண்டார்கள் யார் ஆளப்பட்டார்கள் என்னும் கணக்கு மட்டும் பிழையாய் போக, ஆக ஆண்டால் என்ன? ஆளப்பட்டால் என்ன? காதலில் அனைத்துமே இன்பம் தானே என்பதை இருவரும் அறிந்து கொண்ட கணம், ஒருவரை ஒருவர் அணைத்தபடி புன்னகைத்துக்கொண்டனர்.
@@@@@@@@@

"நாம வருவோம்ன்னு சம்பந்தி வீட்ல சொல்லிட்டல்ல" என்று கேட்ட தன் கணவர் கேசவனிடம்,

"ஆமா பா அப்பவே சொல்லியாச்சு, எத்தனை தடவை சொல்றது, வாங்க கிளம்பலாம்" என்று வேணி துரிதப்படுத்த,
அதே நேரம் ஆதித்தின் வீட்டில்,
"அவங்க எப்போ வரங்களாம்?" மஹாலக்ஷ்மி கொடுத்த காஃபி கப்பை வாங்கி கொண்டு ஸோஃபாவில் அமர்ந்தபடி வினாவினர் தேவராஜ்.

"இந்த டைம் தான் சொன்னாங்க பா வந்திருவாங்க" சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தை ஒருக்கணம் பார்த்து விட்டு கூறினார் மகாலக்ஷ்மி.

அப்பொழுது இவர்களது உரையாடலை கேட்டு ஆத்திரமடைந்த ஊர்மிளா,

"இப்போ எதுக்கு அவங்க இங்க வராங்க" என்று பல்லை கடித்துக்கொண்டு வினவவும் அவளை சலிப்புடன் பார்த்த மஹாலக்ஷ்மி, "அவங்க பொண்ணுக்கு முறை செய்யிறதுக்கு வராங்க ஊர்மி" என்றார்.

அதை கேட்டு இன்னுமே ஆத்திரமடைந்த ஊர்மிளாவோ,

"ஆமா அவங்க பொண்ணு யோக்கியதுக்கு முறை ஒன்னு தான் கேடு" என்று கோபத்தில் சற்று சத்தமாக பேசிவிட, அதை கேட்ட மஹாலக்ஷ்மி,

"என்ன பேசிட்டு இருக்கீங்க" என்று கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே,

"ஏன் என் பொண்ணு யோக்கியதுக்கு என்ன குறை?" என்று மஹாலக்ஷ்மியின் உரையாடலை இடைமறித்து, ரௌத்திரமாக வாசலில் நின்றபடி வினவினார் வேணி.

திடீரென்று அங்கு கேட்ட வேணியின் குரலில் ஊர்மிளா உட்பட அனைவருமே அதிர்ச்சியடைய, நிலைமை சரி செய்யும் பொருட்டு, "அதெல்லாம் ஒன்னும் இல்லை, உள்ளவாங்க சம்பந்தி" என்று மஹாலக்ஷ்மி தான் அவர்களை உள்ளே அழைத்தார்.

ஆனால் வேணியோ மஹாலக்ஷ்மியிடம்,
"அவங்க ஏன் அப்படி சொல்றாங்க?" நின்ற இடத்தில் இருந்து ஒரு இன்ச் கூட அசையாது அழுத்தமாக வினவினார்.

அனைத்தும் சுமுகமாக சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மஹாலக்ஷ்மி உட்பட யாருக்குமே நடந்து முடிந்தவற்றை இப்பொழுது கிளற விருப்பமில்லை, மேலும் வர்ஷாவின் பெற்றோருக்கு உண்மை தெரியவேண்டாம் என்று ஆதித் சொன்ன பிறகு ஊர்மிளாவின் பேச்சுக்கான காரணத்தை சொல்லவும் முடியவில்லை, வேறு காரணம் சொல்லி சமாளிக்கவும் தெரியவில்லை.

எனவே அனைவரும் தடுமாற்றதுடன் நிற்க, ஊர்மிளா மட்டும் திமிராகவே தான் நின்றிருந்தார்.

ஊர்மிளாவை ஒருகணம் முறைத்த மஹாலக்ஷ்மி,
"நீங்க அவங்க சொல்றதை பெருசா எடுத்துக்காதீங்க சம்பந்தி உள்ள வாங்க உட்கார்ந்து பேசலாம்" என்றார்.

அதற்கு, "இப்போ எதுக்கு இப்படி கெஞ்சிட்டு இருக்கீங்க அண்ணி" என்ற ஊர்மிளா மஹாலக்ஷ்மி மற்றும் தேவராஜ் தடுக்க தடுக்க வேணியை பார்த்து,

"ஏன் நான் சொல்ல கூடாது, ஒரு தடவை என்ன ஆயிரம் தடவை சொல்லுவேன். ஏன்னா உங்க பொண்ணு பண்ணின காரியம் அந்த மாதிரி, என்னன்னு புரியலைல நான் சொல்றேன்" என்றவர் நடந்த அனைத்தையும் கூறி,
"உங்க பொண்ணு பண்ணின காரியத்துக்கு அவளை இந்த வீட்ல வாழ விட்டதே எங்க வீட்டு ஆளுங்களோட நல்லா மனசை காட்டுது, ஆனா நான் நல்லவ இல்லைங்க, இவங்களை போல பொறுமையா போக, ஸோ நான் பேச தான் செய்வேன்" என்று ஊர்மிளா கூற, இதை கேட்ட வேணி மற்றும் கேசவன் இருவரும் மனதளவில் நொறுங்கிவிட்டார்கள்.

அவர்களால் இந்த விடயத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, காரணம் தங்கள் பிள்ளை மீது போட்ட பழி அப்படி அல்லவா, கேசவன் என்ன சொல்வதென்று தெரியாமல் நிலை குழைந்து நிற்க, வேணி தான் பொங்கிவிட்டார்.

ஒரு கணம் ஒரே ஒரு கணம் அனைவரின் முகத்தையும் பார்த்தவர், அவர்களிடம் இருந்து எந்தவித மறுப்பும் வரவில்லை என்பதை மனதில் குறித்து கொண்டு,

"வர்ஷா எங்க?" மஹாலக்ஷ்மியை பார்த்து நிதானமாக வினவினர்.

"மேல தான் இருக்கா நான் வர சொல்றேன்" என்று மஹாலக்ஷ்மி சொன்ன மறுகணம்,

"வர்ஷா" அடிதொண்டையில் இருந்து அழைத்த வேணியின் அழைப்பில் மகாலக்ஷ்மி திகைப்படைய, ஆதித்திடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த வர்ஷாவோ,

"அம்மா குரல் கேட்குது வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன் நான் வச்சிடவா" என்றாள்.

அதை கேட்ட ஆதித்,

"சூப்பர் நானும் கிட்ட வந்துட்டேன் கீழ போ வந்திடுவேன்" என்று சொல்ல தன்னவனிடம் விடை பெற்றுக்கொண்டு உற்சாகமாக கீழே வந்தாள் வர்ஷா.

அனைவரின் முகத்தில் இருக்கும் கலவரத்தையும் உள்வாங்கியப்படி கீழே வந்த வர்ஷாவோ வாசலில் நின்றிருந்த தன் தாய் தந்தையின் கலையிலந்த வதனத்தை கண்டு சற்று பதறியவள்,

"என்னாச்சு பா? அம்மா ஏன் ஒரு மாதிரி இருக்காங்க? ரெண்டு பேரும் ஏன் அங்கையே நிக்கிறீங்க? உள்ள வாங்க" என்று தன் தாயின் கரத்தை பற்ற வரும் முன் அவளது கரத்தை இறுக்கமாக பற்றிய வேணி,

"உன் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா அம்மு" என்று ஆழுத்தமாக கூற, நடந்த எதுவும் தெரியாத காரணத்தால் அதிர்ச்சியுடன் தாயை பார்த்த வர்ஷா,

"என்னாச்சு மா" என்று கேட்டாள்.

ஆனால் அதற்கு எந்த பதிலையும் கூறாத வேணி,
"உன்னை வான்னு சொன்னேன்" என்றார் அழுத்தமாக.

அதை கேட்டு, "எதுவா இருந்தாலும் பேசிக்கலாமே" என்ற மஹாலக்ஷ்மியிடம்,

"உங்க புள்ளைய பத்தி விடீயோ வந்தப்போ நீங்க நம்புனீங்களா?" என்று வேணி கேட்க அதற்கு இல்லை என்று மஹாலக்ஷ்மி தலையாட்ட, "நீங்க ஒரு நல்ல அம்மா சம்பந்தி, உங்களை போல தான் நானும் என் பொண்ணு மேலையும், என் வளர்ப்பு மேலையும் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வச்சிருக்கேன். அவ மேல விழுந்திருக்கிறது சாதாரண பழி இல்லைங்க கடந்து போறதுக்கு, ஆக இதை சரி பண்ணாம வர்ஷா இங்க அவளோட சுயத்தை இழந்து வாழ்றதுல எனக்கு விருப்பம் இல்லை. நான் யாரையும் தப்பு சொல்லல, கொஞ்சம் என் மனசை புரிஞ்சிக்கோங்க" என்ற வேணி,

"கிளம்பு அம்மு" என்று வர்ஷாவை பார்த்து கூறினார்.

அவர் அப்படி கூறவும் வர்ஷாவோ, "என்னாச்சுப்பா" என்று தன் தந்தையிடம் கலவரத்துடன் கேட்க, நீண்ட பெருமூச்சுடன் தன் மகளை பார்த்த கேசவன் வருத்தம் நிறைந்த குரலில்,

"பணதுக்காக நீ தான் அந்த வீடியோவே.." என்று ஆரம்பிக்கவுமே வர்ஷாவின் முகம் வெளிறிவிட,
அப்பொழுது "என்ன பேசிட்டு இருக்கீங்க? இவங்க எல்லாரும் தான் நம்ம பொண்ணை பத்தி தெரியாம அவ மேல பழியை போடுறாங்கன்னா. நீங்க அதை உங்க வாயால சொல்லலாமா. வர்ஷா நம்ம பொண்ணுங்க" கோபம் கலந்த ஆதங்கத்துடன் தன் கணவரின் பேச்சை இடைமறித்தபடி கூறினார் வேணி.

அனைவரின் உரையாடலை வைத்தே அனைத்தையும் கணிந்துவிட்ட வர்ஷாவோ உண்மை எங்கே வெளி வந்துவிடுமோ? ஒருவேளை வெளி வந்தால் ஆதித்தின் மனநிலை எப்படி இருக்கும்?
இனி தாய் தந்தையை எப்படி சமாளிப்பது? என்கின்ற சிந்தனையில் தவிக்க, அப்பொழுது பார்த்து வர்ஷாவின் கரத்தை பற்றிக்கொண்டார் வேணி.

அந்த நேரத்தில் ஒன்னும் பேச முடியாது தாயின் இழுப்பிற்கு நடந்த வர்ஷாவோ ஒரு அடி தான் எடுத்து வைத்திருப்பாள், அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவுக்கு வர்ஷாவின் கரத்தை இறுக்கமாக பிடித்திருந்தான் ஆதித்.
 

Shamugasree

Well-known member
Wow super dear. Varsha yen Niro pathi sollala. Avala mannika solravan avalukaga niro va mannika matana. Solliruntha avaluku enna achu nu parthu meeturukalame. Veni ivlo naal kovam irunthalum ponnu mela vecha nambikai super.
 
Top