Sowndharyacheliyan
Writer
காலை நேரமே நல்ல நேரம் இருந்ததால் புடவை எடுக்க கிளம்பினர் இரு வீட்டாரும்.
பேருந்தில் சென்றால் அலைச்சல் என வாடகை காரை முகிலன் ஏற்பாடு செய்திருந்தான்.ஒரு இடத்திற்கு செல்வதற்கு எதற்கு இரண்டு வாகனங்கள் என பரணிதரன் ஞானசம்பந்தரிடம் இரு குடும்பமும் ஒன்றாகவே செல்லலாமே என கேட்டிருக்க வீட்டு பெண்களிடம் கலந்தலோசிக்க,
"இல்லைங்க பட்டு எடுக்க நம்ம சொந்தம் எல்லாம் வரும் உங்க அக்கா என் தங்கச்சி குடும்பம் வரும் நம்ம தனியா ஆம்னி மாதிரி பெருசா வாடகை பிடிச்சுக்கலாம். அதுவும் இல்லாம போய் சேருற வரைக்கும் அண்ணியும் ரூபாவும் வாய் திறக்காம வேற பாத்துக்கணும் நம்ம தனியாவே போய்க்கலாம் " என திலகா நடப்பை எடுத்து கூற சம்பந்தரும் பரணிதரணியிடம் கூறிவிட்டார் உறவுகளை அழைத்து கொண்டு வருகிறோம் என.
இதனை பரணிதரன் வீட்டினில் கூற வனஜாவும் திலகா கூறியதையே தான் கூறினார்.
ஆக ஒரு இடத்திற்கு தனதனியாக கிளம்ப ஆயுத்தமானார்கள்.
"விக்ரம் உன் பொண்டாட்டி வீட்டு ஆளுங்க வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமாம்??" என பரணிதரன் சற்றே நக்கலாக கேட்க,
"இதோ ப்பா பக்கத்துல வந்துட்டாங்களாம்" என்றவனின் குரல் உள்ளடங்கி வந்தது.
பின்னே கடந்த ஒரு மணி நேரமாக இதையே தானோ கூறி கொண்டிருக்கிறான்.
"ம்ம்ம் வனஜா இன்னும் ஒரு கால் மணி நேரம் பாப்போம் அப்பவும் வரலையின்னா நம்ம கிளம்புவோம். உன் பையன் இருந்து அவன் மாமியார் வீட்டாளுங்கள கூட்டிட்டு வரட்டும் ஏன்னா இங்க இருக்குற வீரபாண்டியில இருந்து வர்றதுக்கு நாள் முழுக்க வேணும் இல்லையா??" என்க,
மகனிற்கு தலைகுனிவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
அவர் சொல்வதும் உண்மை தானே பக்கத்தில் அரை கிலோ மீட்டர் இருக்கும் வீரபாண்டியில் தான் சங்கவியின் பிறந்த வீடு இருக்கிறது. நினைத்தால் வந்து செல்லும் தூரத்தில் இருந்து கொண்டு அவர்களை மூன்று மணி நேரமாக காக்க வைத்து கொண்டிருந்தால் அவரும் என்ன தான் செய்வார்.
மாமானாரின் பேச்சை எல்லாம் காதில் வாங்கி கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு அவளின் அன்னை மீது கோபமாக வந்தது.
அவளும் காலையில் இருந்து இதோட பத்து முறைக்கும் மேல் அழைத்து விட்டாள் 'இதோ கிளம்பிவிட்டோம்' என்ற வார்த்தையை கூறி கூறியே மூன்று மணி நேரம் கடந்து விட்டது.
அவளின் தாய் மீது ஒருபுறம் கோபம் என்றால் புகுந்த வீட்டினரின் மீது அளவுகடந்த வருத்தமும் கோபமும் இருந்தது.
இவள் வீட்டில் வந்து சேர்ந்த காலம் தொட்டு அந்த வீட்டில் எந்த விஷேசம் என்றாலும் தேனியில் தான் பட்டு எடுப்பர். முக்கியமாக அதன் பொறுப்பு முழுவதும் சங்கவியின் கையில் தான்.
எந்த கடைக்கு செல்ல வேண்டும்? எத்தனை மணிக்கு செல்ல வேண்டும்? யார் யார் செல்ல வேண்டும்? ஒரு ஆளுக்கு பட்ஜெட் எவ்வளவு?? யாருக்கு எந்த உடை எடுத்தால் நன்றாக இருக்கும்??உறவுகளுக்கு எந்த மாதிரியான துணிகள் எடுக்க வேண்டும்?? என அதன் பொறுப்புகள் அனைத்தும் அவளிடம் மட்டுமே இருக்கும்.
வனஜா கூட அவளை செய்ய விட்டு ஒதுங்கி கொள்ளுவார்.
அப்படி நினைத்து தான் அவள் நிச்சயப்பட்டு எடுப்பதற்கு எந்த கடைக்கு செல்ல வேண்டும் யாரெல்லாம் செல்லலாம்?என திட்டம் அனைத்தையும் அவள் வகுத்து அதனை வனஜாவிடம் கூற,
"இல்லை சின்ன மருமக திண்டுக்கல்லுல பட்டு எடுக்க விரும்புது அங்க போகுறதா தான் முடிவு ஆகியிருக்கு" என்றிட இவளின் முகம் கருத்து விட்டது.
ஆக அவள் இந்த வீட்டிற்கு வரும் முன்னே அவளின் அதிகாரத்தை நிலைநாட்டி விட்டாளா? இதற்கு இவர்களும் ஒத்து போகின்றனரா? என வருவை பற்றி ஒரு எண்ணம் விழுந்து விட்டது அவள் மனதில்.
"கவி???" என விக்ரமின் பல்லை கடித்த அழைப்பிலேயே அவனின் கோபம் புரிந்தது சங்கவிக்கு.
அவளிற்கு இருக்கிற ரோதனை போதாதென்று அவளின் அம்மா வேற புதிதாக தலைவலியை கூட்டி கொண்டிருக்கிறார்.
அனைவரையும் உச்ச கட்ட கடுப்பில் வைத்து விட்டு ஆடி அசைந்து வந்து சேர்ந்தனர் சங்கவியின் அம்மாவும் கூடவே அவளது தங்கை அபர்ணாவும்.
"மன்னிச்சுக்கனும் கிளம்பும்போது ஒரு வேலை வந்து தாமதமாக்கிடுச்சு" என வந்ததும் அவர் நயமாக கூற அதற்கு மேல் எங்கே அவர்களை கடிந்து கொள்வது வாயை மூடி அனைவரும் கிளம்பும் படி ஆனது.
பரணிதரன் நெருங்கிய சில உறவுகளை பட்டு எடுக்க அழைத்திருக்கிறார் ஒரு மினி வேனை ஏற்பாடு செய்திருக்க அதில் ஏறி புறப்பட்டனர்.
"நான் சொன்னது போல நடக்க ஆரம்பிச்சுடுச்சு பாரு அவ இந்த வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே அவளோட அதிகாரத்தை காட்ட ஆரம்பிச்சுட்டா பாத்தியா" என லட்சுமி மகளிற்கு ஓத ஆரம்பித்தவர் திண்டுகல்லிற்கு வந்த பிறகே நிறுத்தினார்.
ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவளிற்கு லட்சுமியின் துர்போதனையும் சேர்ந்து கொண்டது.
இவர்கள் திண்டுக்கல்லில் நுழைந்ததும் பெண் வீட்டாருக்கு அழைத்து தகவல் சொல்ல அவர்களும் வந்துவிட்டதாக கூறினர்.
இவர்கள் சென்று இறங்கிய ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அவர்களும் வந்து விட முகிலனின் கண்கள் ரகசியமாக அவளை தேட,
உறவுகளை இறங்க விட்டு கடைசியாக இறங்கிய வருவின் கண்கள் ரகசியமாக எல்லாம் இல்லாமல் அப்பட்டமாகவே அவனை தேட,
பார்த்தவனிற்கு "தைரியம் தான்" என தோன்றிட அவளை இன்னும் தேட வைக்கும் பொருட்டு நைசாக அங்கிருந்து நழுவி கடையின் உட்புறம் சென்றவன் அவளை கண்காணிக்க,
தேடலின் முடிவில் இவன் அகப்படாததால் அதுவரை மலர்ந்திருந்த அவளின் முகம் சட்டென வாட்டம் கண்டது.
அவளின் தேடலில் கர்வம் பெருக நின்று கொண்டிருந்தவனிற்கு அவளின் வாட்டம் பொறுக்காது வெளியே செல்ல முயல அதற்குள் அவர்கள் உள் நுழைந்திருந்தனர்.
'ஒரு வேளை கடையின் உள்ளே இருக்கிறாரோ? இல்லையே அனைவரும் வெளியே இருக்க அவர் மட்டும் எப்படி உள்ளே வந்திருப்பார்?
ஆக தான் கேட்டும் அவர் வரவில்லையோ??' என்ற எண்ணங்களில் சிக்கி தவித்தவளிற்கு கண்கள் கலங்க அதனை யாரிடமும் காட்டாது தலை குனிந்து கொண்டவள் கல்கியின் கை பற்றியவாறே யாரையும் நிமிர்ந்து பார்க்காது உள்ளே வர,
அவளின் சிறு சிறு முக மாற்றங்களும் இவனின் கண்களிற்கு தவறவில்லை.
தனக்கு முன்னே சென்ற அனைவரையும் தலையசைத்து வரவேற்று புன்னகை சிந்தியவன் கல்கி அருகே வந்ததும் "வாங்க மச்சான்" என கணீர் குரலில் உரைக்க,
அதனை கேட்டு விசுக்கென்று நிமிர்ந்தவளின் முகம் அவனை கண்டதும் பூவாய் மலர்ந்தது.
பூரித்த முகத்துடன் லேசான கண்ணீருடன் இருந்தவள் முகிலனை ஈர்த்தாள் மிகவும் அளவுக்கதிகமாகவே ஈர்த்தாள்.
முகிலனின் வரவேற்பிற்கு தலையசைத்து ஆமோதித்தவன் அவனின் நலன் விசாரிக்க உடன் வருணா.
அருகில் அண்ணன் இருக்கிறான் என்று எதையும் கருத்தில் கொள்ளாது அவனையே வைத்து கண் வாங்காமல் பார்க்க இவனிற்கு தான் தடுமாறியது உள்ளே.
அதிக நேரம் அவளின் பார்வை தாக்கத்தை நிலைக்க விடாது பரணிதரன் அழைத்து விட அங்கே சென்றனர்.
அடுத்த என்ன பட்டு எடுக்கும் பிரிவிற்கு அனைவரும் செல்ல வனஜா கூறிய தொகையை கேட்டதும் லட்சுமிக்கு வயிறு எரிந்தது.
"நிச்சயத்துக்கு இவ்வளவு ரூபா போட்டு எடுக்கணுமா அண்ணி " என்றிட,
அருகில் இருந்த பெண் வீட்டாரின் முகம் அதிருப்தியை காட்டியது. அதிலும் ரூபாவின் முகம் எரிச்சலை காட்ட மறுக்காது அப்படியே காட்டி விட்டாள்
"எங்க பக்கத்துல அப்புடி தான் எடுப்போம்" என நறுக்கெனறு அவள் கூறிட,
'அப்போ நாங்க அவங்க ஆளுங்க இல்லைன்னு குத்தி காட்டுறாங்களா' என அவரின் முகம் சிறுத்து விட சங்கவிக்கும் அதே எண்ணம் தான்.
'அவள் அம்மா அப்படி என்ன தவறாக பேசி விட்டார் எதற்கு இவ்வளவு விலை என்று தானே கேட்டார் அதற்கு இவர்கள் சொல்லி காண்பிப்பார்களா?? இவர்கள் பேசுவதை கேட்டு அத்தையும் அமைதியாக இருக்கிறாரே' நினைத்தவளின் மனதில் பொறாமை என்னும் சிறு தீ பற்றியது.
சங்கிலியின் முக மாற்றத்தை கவனித்து விட்டு வனஜா அவள் பேசுவதற்குள் "இந்த வீட்டுல நடக்கிற கடைசி கல்யாணம் பெரியவனுக்கு தான் இப்புடி பண்ண முடியலை??சின்னவனுக்காச்சும் பண்ணலாம்" என பேச்சை கத்தரிக்க,
பெண் வீட்டாரின் முகம் மலர்ந்தது எனில் சங்கவியின் முகம் சுருங்கியது அவளின் கல்யாணம் நடந்த முறையை நினைத்து.
'திருமணம் தான் எப்படியோ நடந்து விட்டது அட்லீஸ்ட் ஒரு ரிஷப்சனாவது வைக்கலாமே' என அவள் விக்ரமிடம் கேட்டிருக்க,
"அப்பா நம்மளை ஏத்துக்காம அப்புடி எல்லாம் எதுவும் பண்ண முடியாது அது அவங்களை இன்னும் அவமானப்படுத்துற மாதிரி இருக்கும்" என அவன் முடித்து விட அதன் பிறகு எங்கே ரிஷப்சன் வைப்பது ஹரி பிறந்த பின்பு தானே அவர் ஏத்து கொண்டார்.
பேச்சுகள் முடிந்து புடவையை தேர்ந்தேடுக்க பெண்கள் ஆரம்பித்து விட அங்கே மணப்பெண்ணின் வார்த்தை மிகவும் மதிக்கப்பட்டது.
சங்கவியிடம் எதுவும் கருத்துகள் கேட்காது இருக்க அவளாக பேச விருப்பமற்று அமைதியாகிட அவளின் அம்மா அவளை இழுத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
அங்கிருந்து நற்காலியில் சற்று தள்ளி அமர்ந்து விட அப்போது தான் போன் பேசி விட்டு உள்ளே நுழைந்த முகிலன் இவர்கள் ஒதுங்கி நிற்பதை கண்டு புருவம் சுருங்கியவன்,
"ஏன் அண்ணி நீங்க இங்க இருக்கீங்க??" என்க,
"அது வந்து….." என அவள் பேசும் முன்னே இடைமறித்து அவளின் அம்மா,
"அங்க போயி என்ன பண்றது சின்ன மாப்பிள்ளை???"
"ஏன்?? போனா என்ன எல்லாரும் அங்க தான இருக்காங்க"
"அங்க இருக்குறவங்க எல்லாம் உங்க ஆளுங்க ஆனா நாங்க அப்புடி இல்லையே உரிமை இல்லாத இடத்துலே ஒதுங்கி தான நிக்கணும்"
"என்ன பேசுறீங்க யாருக்கு உரிமை இல்லை??அவுங்க எங்க ஆளுங்கன்னா அப்போ அண்ணி யாரு எங்க வீட்டு பொண்ணு தான??"
"நீங்க அப்புடி நெனைக்கீறிங்க ஆனா மததவங்களும் அப்புடியே நினைப்பாங்களா என்ன?? குடும்பத்துக்கு மூத்த மருமக அவ இப்புடி தனியா ஒதுங்கி நிக்கிறா, அதை கூட ஏன்னு யாரும் கேட்கலை என்ன இருந்தாலும் என் பொண்ணு வேற தான இதேது பெரிய மாப்பிள்ளை வந்திருந்தா இவ இப்புடி ஒதுங்கி நிக்க விட்டிருப்பாரா???
பேச்சுக்கு கூட யாரும் ஏன்னு கேட்கலை? இவளை கூப்பிடவே இல்லாதப்போ இவ கருத்து சொன்னா மட்டும் கேட்டுப்பாங்களா என்ன??அதான் நாங்களே எங்க மரியாதைய காப்பாத்திக்க ஒதுங்கிகிட்டோம்" என்றிட முகிலனுக்கு சுர்ரென்று ஏறியது.
அவனின் அண்ணி குடும்பத்தின் மூத்த மருமகள் அவர்களுக்கு அங்கே மதிப்பில்லையா??
"நீங்க வாங்கண்ணி" என கையோடு அவளை அழைத்து சென்று அங்கே விட்டவன் அன்னையை கடிந்து கொண்டான்.
"ம்மா என்னம்மா பண்றீங்க அண்ணிய விட்டுட்டு அவுங்கள கூப்பிடாமா நீங்க பாட்டுக்கு எடுத்துட்டு இருக்கீங்க?? நீங்களே இப்படி பண்ணா வருணாக்ஷி வீட்டு ஆளுங்க அண்ணிய மதிப்பாங்களா??" என்றிட வனஜாவிற்கு மகனின் தலையில் ஓங்கி கொட்டும் ஆத்திரம் வந்தது.
இருக்கின்ற இடத்தினை நினைவில் வைத்து கொண்டு அமைதியானவர் திரும்பி சங்கவியை பார்க்க அவரின் பார்வையை தைரியமாக எதிர்கொண்டாள்.
அவளிற்கு சப்போர்ட் செய்யவும் ஆள் இருக்கின்ற மிதப்பு.
அத்தோடு விடாது முகிலன் " அண்ணி போய் நிச்சய சேலையை செலக்ட் பண்ணுங்க ஏன் யாரோ மாதிரி விலகி நிக்கிறீங்க" என்றிட சங்கவி அனைவரையும் மிதப்பாக ஒரு பார்வை பார்த்து வைக்க,
பெண் வீட்டாருக்கு 'என்ன இது' என்று முகம் அதிருப்தியை காட்டியது.
அனைவரையும் அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தவள் அவர்களை கையால் விலக சொல்லி விட்டு உள் நுழைய பார்த்திருந்த வருணாக்ஷி பிடித்தமின்மையை அப்பட்டமாக காட்டினாள்.
அங்கிருந்த புடவையின் பார்வையை ஓட்டியவள் முகிலன் இடம் திரும்பி "விலை தம்பி??" என கேட்டிட,
அங்கிருந்த அனைவருமே பல்லை கடித்தனர்.சற்று முன்தானே வனஜா கூறினார் எந்த விலையில் புடவை எடுக்க வேண்டும் என??
"நீங்க பாருங்க அண்ணி உங்களுக்கா தெரியும்ல வருணாக்ஷிக்கு உதவி பண்ணுங்க எடுக்குறதுக்கு" என
முழுதாக பத்து நிமிடங்கள் பார்வையை அதில் ஒட்டியவள் ஒரு புடவையை தேர்ந்தெடுத்து "இது நல்லாருக்கும் தம்பி" என்றவாறு வருணாவிடம் நீட்ட அவள் அதை கையில் கூட வாங்கவில்லை.
அப்போது தான் சங்கவி கவனித்தாள் ஏற்கனவே அவளின் கையில் இருந்த புடவையை அடர் மெரூன் நிறத்தில் பச்சை பார்டர் வைத்து உடல் முழுதும் சிறு சிறு பூக்கள் தங்ககலரில் மின்னி பார்க்கவே கண்ணை பறித்தது.
சங்கவி அவ்வளவு ஒன்றும் மோசமாக எடுக்கவில்லை இருந்தும் வருணாவின் தேர்வு அம்சமாக இருந்தது.
அப்போது தான் முகிலனும் கவனித்தான் அப்புடவையை. பார்த்தவனின் கண்கள் மின்னியது.ஏனெனில் அது அவனுக்கு மிகவும் பிடித்தமான நிறம்.
அவனிற்கு மாறாக வருணாவின் கண்களில் தீ பொறி பறந்தது. 'இவருக்கு பிடித்த கலர் என நான் தேடி தேடி எடுத்து வைத்தால் இவர் அவர் அண்ணியை எடுக்க சொல்லுவாரா!!!!!' என ஆத்திரம் பொங்கியது அவளிற்கு.
"நிச்சய புடவை ஏற்கனவே எடுத்தாச்சு கா இதை நீங்களே கட்டிக்கோங்க அவர் தான் சொல்றாருன்னா நீங்களும் அப்புடியே வந்திடலாமா என்கிட்ட கேட்க வேண்டாமா??" என்றிட சங்கவியின் முகம் கருத்து விட்டது அவமானத்தில்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் அவளை ஏளனமாக சிரிப்பது போல் தோன்ற இன்னமும் குறுகினாள்.
ஆனால் உண்மை அதுவல்லவே!!!!!!!
வருவின் பதிலில் இவனது முகமும் வாடிவிட்டது. 'ச்சு இதை கொஞ்சம் தன்மையா சொல்லிருந்தா ஆகாதா இப்புடியா படக்குனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லுறது' என அவன் அவளை லேசாக முறைத்து வைக்க,
அடுத்து முகிலனுக்கு எடுக்க படை திரும்ப "அக்கா முகி மாமாக்கு நீ செலக்ட் பண்ணுக்கா மாமாவும் அதை தான் விரும்புவாறு" என அபர்ணா வாய் விட,
தர்மசங்கடமான நிலை அவனிற்கு.
இப்போது அவன் ஆமாம் என்றால் வருணாக்ஷி வருத்தப்படுவாள்.வேண்டாம் என்றால் அண்ணி வருத்தப்படுவார். யாருக்கு பேசுவது என குழம்பியவன் வரு சொன்னால்
கேட்டு கொள்வாள் என்ற தைரியத்தில் "நீங்களே எடுக்க அண்ணி" என்றிட அந்த இடமே அமைதியாகி போனது.
அவனின் இந்த பதிலில் வருணாவுக்கு வலித்தாலும் காட்டி கொள்ளாது நின்றாள்.
படித்துவிட்டு உங்கள் நிறை குறைகளைக் என்னுடன் இதே திரியில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்
Last edited: