எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

KK - 15

subasini

Moderator
களவு – 15

பூ போன்றவள் தான்

ஆனால் பூ அல்ல...

பாசத்தை மீறியக்கண்டிப்பு என்றும் தாயிடம் இருக்கும். அவள் அன்பில்கலங்கம் இருக்காது அதேப்போல் அவள் கண்டிப்பில் தயவிதாட்சன்யம் பார்க்கமாட்டாள்.தந்தையின் முன் நின்ற ப்ரனவின் கன்னம் எரிந்ததில் தன்னை அடித்தது யார் எனப் பார்க்க, அவன் முன் கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தாள் கங்கா...இரண்டு நாட்களில் பல அதிர்ச்சிகள் கேட்தால் உண்டான சோர்வின் காரணமாக உடல் பலகீனமானதில், சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த கங்கா மெல்லக் கண் திறந்த போது, அருகே கணவன் இல்லை என்றதும் எழுந்து வெளியே வந்தவள் கண்டது, கணவன் முன் நிற்கும் இளைய மகன் ப்ரனவேஷ்வரனைத் தான்.அவன் செய்தச் செயல் நினைவில் வர அந்த நொடி அவனைத் தன் பலம் கொண்ட மட்டும் அடிதிருந்தாள்...அடி வாங்கிய ப்ரனவ் மெல்ல “ அம்மா” என அழைக்க

“ உன் வாயால் என்னை அம்மா என்று கூப்பிடாதே டா , உன்னைப் பொருத்த வரை இன்னையோடு உன் அம்மா செத்துட்டா, இனி நீ என் முகத்தில் முழிக்காதே” என்று மீண்டும் ஒரு முறை நிதானம் தவறினாள் ப்ரனவின் தாய்...“கங்கா, திரும்பத் திரும்பத் தப்புப் பண்ணாத, அவன் சொல்ல வருவதைக் கேளு” என்ற கணவனின் வார்த்தைகளைக் கேட்டதும் , அவரைப் அவள் பார்த்தப் பார்வையில் அமைதியானார்..."நீங்க உங்க பிள்ளை , என்ன பண்ணினாலும் அதைச் சரி பண்ணத் தானே செய்வீங்க, என் பையனுக்கு நடந்த அநியாயதிற்கு யார் நியாயம் செய்வது?” என்று இத்தனை காலமும் ஒரு தாயாக அவனுக்கு அநியாயம் செய்ததை வசதியாக மறந்துப் பேசிக்கொண்டிருந்தாள்...

இளைய மகன் தவறிழைக்கக் காரணமானச் சூழலை உருவாக்கியதற்கான காரணகர்த்தாவே தான் என்பது நினைவில்லை.

தந்தையை எப்படி நேரிட எனப் பயந்து வந்த ப்ரனவிற்குத் தாயின் வாரத்தைகள் கேட்டு உயிர் உடலில் இருந்து, இந்த நிமிடம் போய் விடாதா எனத் தவித்தான்...

ருத்ரன் தன் உடன் பிறந்த அண்ணன் என்று அறிந்த நொடி முதல் அவன் தவிக்கும் தவிப்பு அடங்கிய வழி இல்லை... இனி நான் எப்படி எல்லோர் முகத்தில் முழிப்பது என்ற வேதனையை, கூரிய வார்த்தைகளைக்கொண்டு அவன் தாய் இன்னும் அதிகப்படுத்தி விட்டாள் ...தாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை உயிரோடு வதைக்க அவள் அருகே வந்தவன் “அப்படி எல்லாம் சொல்லாதீங்ம்மா, ருத்ரன் என் கூடப் பிறந்த அண்ணன் என்று இப்பத் தான் தெரியும், அண்ணன் தெரிந்திருந்தால் கண்டிப்பாக இப்படி எல்லாம் யோசிச்சு இருக்கவே மாட்டேன், என்னை நம்புங்க ப்ளீஸ்ம்மா,“ஓ அப்போ வேற ஒருத்தரா இருந்தால் கொலைச்செய்திருப்பாய், அப்படித் தானே டா.. ஒர் உயிரை எடுக்கும் அளவுக்கு நீ வன்மத்தை மனதில் வளர்த்தி இருக்க, என் வளப்புச் சரியில்லை என்று , நீ சொல்லாமல் சொல்லிட்ட இனி என்னடா” ... என முகம் திருப்பிச் சென்றவளின் கைகளைப் பிடித்தப்படி “அம்மா” .. என்று உள்ளே போன குரலில் அழைத்தவனை முறைத்தப்படி அவன் கரங்களை உதறினாள் கங்கா.

“நீங்க பேசவில்லை என்றால் நான் எங்கே போவேன், அப்படி எல்லாம் சொல்லாதீங்க” என்றவனின் வார்த்தைகள் எதுவும் கேட்க இஷ்டமில்லாமல், ருத்ரனின் அறைக்குச் சென்றாள் கங்கா...தாயின் பின்னே கெஞ்சியபடி உள்ளே வந்த ப்ரனவினைத் தொடர்ந்து தன்யா மற்றும் நீலகண்டேஷ்வரன், ருத்ரனின் அறைக்கு வந்தனர்...“அம்மா, நீங்க என்ன தண்டனை வேணா எனக்குத் தாங்க ஆனா, இப்படிப் பேசாமல் மட்டும் இருக்காதீங்க” என அவளிடம் கெஞ்சிக்கொண்டிருந்த தம்பியின் குரலில், கண் விழித்த ருத்ரன் பார்த்தது, தன்னையே நோக்கியபடி நின்றிருந்த தன்யாவை.கண் விழித்த ருத்ரன், அவளைப் பார்த்த என்ன எனக் கேட்க, விழியாலே அங்கே பார் என அவள் காட்டிய திசையில் அவன் பார்த்தென்னவோ , ரொம்பப் பரிதாபமாகக் கெஞ்சிக்கொண்டிருந்த ப்ரனவைத் தான்...'இவன் ஏன் இப்படி அழுதுச் சீன் போடறான்' என்று சிந்தித்தவனுக்குத் தெரியவில்லை தன்னுடைய இந்த நிலைக்கு அவன் தான் காரணம் என்று ...நடப்பது எதுவும் புரியாமல் அனைவரையும் பார்த்த ருத்ரன் மெல்ல எழ முயற்சிச் செய்தான்...

அந்த அசைவில் கங்காவின் கவனம் அவன் மேல் விழ “பட்டுப் பாரத்து” என்ற வார்த்தையில்

அவன் முகம் போன போக்கில் தன்யாவுற்குச் சிரிப்புத் தான் வந்தது... இடம் பொருள் புரியாமல் சட்டெனச் சிரித்து வைத்தாள்.. இந்த இக்கட்டான சூழல் சட்டென்று மாறியது தான்...மெல்ல ருத்ரனை அமர வைத்தவள் அவன் அருகே அமர்ந்து என்ன வேணும் எனக் கேட்டாள்...

மெல்ல “பட்டு... வேண்டாமே, ருத்ரன் இல்ல வேற எப்படி வேணாலும் கூப்பிடுங்க ப்ளீஸ்” எனச் சொன்னதும் தான் அவளுக்குப் புரிந்தது... உணர்வு மிகுதியில் அவனை அழைத்த செல்லப் பெயர்... “ஓஓ சாரி ஏதோ பழைய நினைவில் சொல்லிட்டேன்”.. என்றவள் கண்ணில் இருந்து தாரைக் தாரையாகக் கண்ணீர் வழிந்தது....அவளின் மனநிலை உணர்ந்து அருகில் நீலகண்டேஷ்வரன் வருவதற்குள், மெல்ல அன்னையின் கைகளில் முத்தம் வைத்த ருத்ரன் “ஏன் இப்படி அழறீங்க, அது தான் எனக்கு ஒன்னும் ஆகவில்லை தானே... எல்லாம் சரியாகிடும்... நான் பார்த்துக்கறேன்” என்றவன் தனக்கு உடலில் வலி உண்டான போதும் , அதைப் பொறுத்துக்கொண்டு தாயை மெல்ல அணைத்து விடுவித்தான்...அவனின் இந்த அணைப்பும் அவர்களுக்குள் இருக்கும் இந்தப் பாசபினைப்பும் பார்த்த ப்ரனவ் முதலில் அதிர்ச்சிக்குள்ளானான்...‘இப்பொழுதுத் தானே இருவரும் பேசிக்கொள்கிறனர், அதற்குள் எப்படி இந்த அளவுக்குப் பிணைப்பு ஏற்பட்டது ’... ம்ஹூம் என்ன இருந்தாலும் தாயிக்குத் தலைமகன் தான் என்ற எண்ணம் மனதில் வர அவன் முகம் வாடியது...

மெல்லத்தலைத் தாழ்த்திய படி அறையில் இருந்து வெளியில் சென்றவனைக் கவனித்த , ஈஷ்வரும் தன்யாவும் அவனோடு வெளியில் வந்தனர்...அங்கே இடப்பட்ட இருக்கையில் தலையைக்கவிழ்ந்து அமர்ந்திருந்தான் ப்ரனேஷ்வரன்.

இளைய மகனின் அருகில் வந்த தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் அவமானத்தால் குன்றிப்போனான் ப்ரனவ்.ப்ரனா! ஏன்டா , இப்படிப் பண்ணினாய், எதுவாக இருந்தாலும் என்னிடம் கேட்டு இருக்கனும் தானே!

உன்னிடம் இருந்து இப்படி ஒரு செயலை நான் நினைத்துக்கூடப் பாரக்க வில்லை" என்ற தந்தையின் கைகளில் முகம் புதைத்தவன்“ நான் தப்புப் பண்ணிட்டேன் அப்பா, திருத்த முடியாத மிகப்பெரிய தப்பு, என்னால எதையுத் மாத்த முடியாதே! நான் என்ன பண்ண, மீண்டும் உங்களைத் தலைக்குனியும் படிச் செய்துட்டேனே, நான் என்ன செய்வேன் அப்பா, என்று சிறுப்பிள்ளையைப் போலக் கதறி அழுதான் ப்ரனவ்...தவறைத் திருத்த முடியாமல் குற்றவுணர்வில் அழும் இளையவனின் அருகில் வந்து அமர்ந்து அவனைத் மார்போடு இறுக்கி அணைத்தார் நீலக்கண்டேஷ்வரன்...அவர் சட்டையில் கண்ணீரும் உமிழ் நீரும் நனைய ஒரு மூச்சு அழுதவனுக்குத, அப்பொழுது தான் தந்தையின் அணைப்பில் இருப்பது உணர்ந்தான்.“ தவறுக்குத் தண்டனை அதுதான் சரியானது, எனக்கு என்ன பண்ணினால் வலிக்குமோ அந்தத் தண்டனை அம்மா தந்திட்டாங்க, நீங்க தரும் தண்டனையை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கேன் அப்பா, ஜெயில் போவது என்றாலும் நான் ரெடிப்பா ” எனத் தன் தந்தை அவனுக்கு என்ன தண்டனைத் தருவார் என யூகித்து வைத்திருந்தான் ப்ரனவ்...ப்ரனவ் வெளியில் வந்ததும் அங்கே தனிமையில் ருத்ரனும் ,கங்காவும் இருக்கக் கங்காவின் அழுகை நின்றப் பாடில்லை...ஒரு கட்டத்தில் தாயைப் பார்த்து "ஏன்ம்மா இவ்வளவு அழுகை... நான் உங்களுக்குத் திரும்ப வந்ததில் பிடிக்கவில்லையா எனக் கேட்டதும் , அவன் வாயில் அடித்தாள் அவன் அம்மா...“ ரொம்பப் பேசற டா நீ” என்றவள்... மெல்ல அடிப்பட்ட அவன் முகத்தைத் தடவிப் பார்த்தாள்... "வலிக்குதா" என்றாள் ...“இல்லை எல்லாம் சொல்ல மாட்டேன் ரொம்ப வலிக்குது ... ஆனால் உங்களைப் பார்க்காமல் பேசாமல் செத்துப் போயிருவேனோ? என்ற பயத்தை விட இந்த வலி எல்லாம் எனக்குப் பெரிசில்லம்மா” என்றவன் , தன் தாயை அருகே அழைத்து “என்னை அந்த மரணத்திடம் இருந்து போராட வைத்தது, இந்த அழகான முகமும் அதில் இருக்கும் வட்டப்பொட்டுத் தான்ம்மா, இதைச் சொன்னால் நம்ப மாட்டிங்க” என்ற படி ஒரு முத்தம் பதித்தான் அன்னையின் நெற்றிப் பொட்டில்...என் வாழ்க்கையில் இந்த நிமிடம் நான் ரொம்ப எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம்…

உங்க கையில் நான்.... நாம் எல்லாம் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில்.. இது தான் என் கனவும் கூட” என்ற அவனின் ஆசை வார்த்தைகளில் ப்ரனவின் செயல் நினைவுக்கு வந்ததும், மீண்டும்

அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது..."ம்ச் திரும்ப என்னம்மா, நீங்க அழவது இது தான் கடைசியாக இருக்கனும், நீங்க அழறதுப் பார்க்க எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கு, என்னோட அம்மா எதற்கும் அழகவே கூடாது, அவங்க எப்பவும் சிரித்த முகத்தோடு இருக்கனும்” என்றதும் அவன் தோளில் சாய்ந்துப் படி ப்ரனவ் செயலை எல்லாம் கூறியவள் “நான் தான் எல்லாத்துக்கும் காரணம் ருத்ரா”...“நான் என்ன பற்றி மட்டுமே நினைத்து உங்களைப் பற்றி எங்கேயும் யோசிக்கவே இல்லை, 'அம்மா’ என்ற தகுதியை இழந்து விட்டேன் ருத்ரா” என்றவளின் அழுகையைத்தான் அவனால் நிறுத்த முடியாமல் போனது....“அம்மா, எல்லாப் பழைய கதையும் விடுங்கம்மா , நீங்க ஏன் கடந்த காலத்திலேயே வாழ்ந்துக்கொண்டிருக்கீங்க, இப்ப நாம் இரண்டு பேரும் ஒரே வீட்டில். அது மட்டும் யோசிச்சால் போதும், இப்படி எல்லாம் போட்டு வருத்தப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காமல், என்னோட உடல் நிலைச் சீக்கிரம் குணமடைய, இந்தச் சினிமாவில் வரும் டிபிகல் மதர் போலக் கடவுள் கிட்ட வேண்டிச் சில பல விரதம் இருப்பீங்கனுப் பார்த்தா இப்படி அழுமுஞ்சியாக இருக்கீங்க எனக் கேலிச் செய்து, அவளின் மனவலியைத் திசைத் திருப்பினான் ருத்ரன்...“உனக்குக் காலில் அடிப்பட்டு இருக்கக் கூடாது டா, இந்த வாயிலப் பட்டிருக்கனும்” என்றவள் தன் மகனின் நெற்றியில் முதன் முதலாக உரிமையோடு, எந்தத் தயக்கமும் இல்லாமல் தன் இதழைப் பதித்த அந்த நொடி அவள் மனதும் , கண்களும் ஒரே நேரத்தில் நிறைந்தது...ஒரு மகனாகத் தாயை அணைத்து இருக்கிறான் தான் , ஆனால் தன்னை மகன் என்று உரிமையோடு எந்தத் தடுமாற்றமும் இல்லாமல், மனதில் எந்த வேதனையும் குழப்பமும் இன்றித் தரும் தாயின் முதல் முத்தத்தால் ஏற்பட்ட ஆனந்தம், காதலில் கூட இவ்வளவு இன்பத்தை அவனுக்கு ஈட்டித் தந்திருக்காது என்று உணர்ந்த நிமிடம்.மண்ணில் வீழ்ந்த நொடி

கிட்டாதுப் போன தாய் மடி

இதோ என் அருகில்....

இப்போழுதும் அவள் கைளில்

எனைக்கொடுத்து மீண்டும்

சிறுப்பிள்ளையாய் இந்த

நிமிடம் மாறிப்போனேன்

அவள் கண்ணில் இருந்து

பிறந்த பாசத்தில்....

நினைவில்லா மழலையில்

உணரத் துடித்த உடல்

வெப்பத்தை வளர்ந்த

மகனாய் உணர்ந்துக்

கொண்டிருக்கிறேன் ஒரு

தாயின் வலியையும் சேர்த்தி....ருத்ரனின் மனதில் பல எண்ணங்கள் பயணிக்கத் தொடங்கியது. தன் உடல் நிலைச் சரியானால் என்ன நடக்கும் எனச் சிந்திக்க ஆரம்பித்தான். அவனுக்குத் தன் தொழில் பற்றி எந்தக் கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை, அதெல்லாம் சக்தி, பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது.ஆனால் குடும்பம் இப்படித் திசைக்கு ஒன்றாக இருப்பது பிடிக்கவில்லை அவனுக்கு, இதில் தம்பி என்ற அந்த முட்டாள் செய்த வைத்திருக்கும் வேலையை எப்படிச் சரி செய்வது என்று எண்ணங்கள் மனதில் ஓட அவன் முகத்தில் சிந்தனைக் கோடுகள் படர்ந்தது.அவன் முகத்தையே பார்த்திருந்த கங்கா, “ ருத்ரா என்ன ஆச்சு , எங்கையாவது வலிக்குதா? நான் போய் டாக்டரைக் கூப்பிட வா? என அவன் கைகளைத் தடவியப் படிக் கேட்ட அன்னையின் கண்களைப் பார்த்தவனுக்கு, அவள் கண்களில் இருந்த பயமும் , வலியும் ஒரு நிம்மதியைத் தந்தது.தன் எல்லாச் செயலும் தாயைப் பாதிப்பது சுகமாக இருக்க , மெல்லச் சிரித்தப்படி “அம்மா, ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க... கூல், எனக்கு இப்பொது இந்தப் பிரச்சனை இல்லை, ப்ரனவ் பண்ணி வைத்திருக்கும் விஷயத்தை யோசிக்குறேன்... கண்டிப்பாக அப்பா எல்லாம் கண்டுப்பிடுச்சு இருப்பாரு, அந்த டிரைவர் இப்போ அவர் கஸ்ட்டியில் தான் இருப்பான் நினைக்கிறேன், போலீஸ் இதில் இன்வால்வு ஆகிருந்தால், அவங்க எந்த அளவுக்கு விசாரிச்சு இருப்பாங்க என்று தெரியவில்லை, கம்பிளைன்ட் எதுவும் பண்ணாம வேற மாதிரி இதை டீல் பண்ணனும், அது தான் யோசிக்கிறேன்” என்றான்.“ருத்ரா, நீ சொன்னது சரி தான் , உங்க அப்பா எல்லாம் கண்டு பிடிச்சுட்டார், நீ தான் முடிவுப் பண்ணனும் எங்கிட்டச் சொல்லிட்டாரு”.. என்ற தாயைப் பார்த்தவன்...“ஓஓஓ” என்றான். தன் தாயின் மனதில் என்ன இருக்கு எனத் தெரிந்துக்கொள்ள விரும்பினான்...“ ஏன் ம்மா நீங்க என்ன நினைக்கிறீங்க... நான் என்ன பண்ணனும், என்ன மாதரி முடிவு எடுக்கனும் நீங்க சொல்லுங்க” என்றான்...“நான் எப்படிச் சொல்ல முடியும், பாதிக்கப்பட்டது நீ, அதற்குக் காரணம் அவன் , அதனால முடிவு நீ தான் சொல்லனும்” என்றவளை, ருத்ரன் பார்த்தப் பார்வையின் அர்த்தம் புரியவில்லை கங்காவுக்கு..

இந்தப் பதிலில் ஒரு சின்ன ஏமாற்றம் இருந்தது ருத்ரனுக்கு...“ஏன்ம்மா இப்படிச் சொல்லறீங்க, அவனைக் காப்பத்த என்னிடம் கேட்பீங்க என்று நான் எதிர்பார்த்தேன்” என்றான் மனதை மறைக்காமல்...“ ம்ம் நீ எதிர்ப்பார்த்தது சரி தான் ருத்ரா, நார்மலானக் குடும்பமாக நாம் இருந்திருந்தால் ஒரு வேளை அவன் தவறை மன்னிக்க நான் போராடி இருப்பேனா என்னமோ , ஆனால் இங்க எல்லாம் தவறாக இருக்கும் போது, இந்த நொடி நான் அவனுக்கு ஆதரவாகப் பேசினாலும் , உனக்கு ஆதரவாகப் பேசினாலும் என்னோட இந்தச் செயல், உங்க இரண்டு பேரையும் பாதிக்கும் ருத்ரா , எனக்கு நீங்க இரண்டு பேரும் ஒன்னுத் தான், என் முகத்தின் இரண்டு கண்கள் போல... அதுல ஒன்னு இப்போது மக்கர்ப் பண்ணுது , அதுக்கு லேசர்ச் சிகிச்சைப் பண்ணறதா நினைச்சுக்குவேன்.. உங்க இரண்டு பேர் வாழ்க்கையும் என்னைத் தான் முதலில் பாதிக்கும்” என்றவளின் நேர்மையான பதிலில் மயங்கித் தான் போனான் ருத்ரன்...“ம்ம் புரியுது ம்மா, வெளியில் யாரெல்லாம் இருக்காங்க, என்ற ருத்ரனின் கேள்விக்கு, உங்க அப்பா, ப்ரனவ், அப்பறம் அவன் மனைவி இருக்காங்க " என்ற கங்காவின் மனதில் தன்யாவை

மூத்த பிள்ளைக் காதலித்து இருப்பனோ? என்ற கேள்வி அந்த நொடி மனதில் பிறந்தது. உடனே அவனிடம் கேட்டு விட்டாள்...

ருத்ரனின் கைகளை மெல்ல வருடியப்படியே,”ருத்ரா அம்மா ஒரு கேள்விக் கேட்டா மறைக்காமல் உண்மையைச் சொல்லுவியா?” எனக் கேட்டாள்...“என்னம்மா இப்படி எல்லாம் கேட்கறீங்க, உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கனும் கேளுங்க . உங்கிட்டச் சொல்லாமல் நான் வேற யார் கிட்டச் சொல்லுவேன் , உங்களுக்குத் தெரியுமா எனக்கு ப்ரெண்ட்ஸ் கூட யாரும் இல்லை, எல்லாம் ஹாய், ஹலோ டைப் தான்...

ம்ம் கேளுங்க” என்றான் தன் தாயிடம்“நீ தன்யாவைக் காதலித்தாயா ருத்ரா” எனக் கேட்டதும்... உடல் வலியை மறந்து சத்தமாகச் சிரித்தான்... “அம்மா என்று அவன் கன்னம் பற்றியவன் இந்த விஷயத்தை உங்கிட்டச் சொன்னது யாரு அந்த அரவேக்காடா?” என்றான்... மேலும் ‘இவன் என்ன என்ன லூசுத்தனம் எல்லாம் பண்ணி வச்சு இருக்கானோ’ என நினைத்ததை ஒளிக்காமல் தன் தாயிடம் கூறினான்...அவளை நான் காதலிக்க எல்லாம் இல்லை , யாரோ என்னை ஏமாற்றி விளையாடி இருக்காங்க என்று நினைத்தேன், அது தன்யா என்றதும் எனக்குக் கோபம் தான் வந்தது. அதனால் அவளைக் கண்டித்தேன்...ப்ரனவ் அவளிடம் லவ் சொல்லி இருப்பனா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒரு தலையாக அவளைக் காதலிக்கிறான் என்பது எனக்கு எப்போதோ தெரியும், அப்படி இருக்கும் போது நான் எப்படி அம்மா அவளை... யோசிக்கும் போதே அசிங்கமா இருக்கு, இனிமேல் இப்படி எல்லாம் கேட்காதீங்க...அப்பறம் தன்யாவை ப்ரனவ் லவ் பண்ணறான் அப்பாவுக்கும் தெரியும் அம்மா”....என்றான் ருத்ரன்... அன்று ப்ரனவ் கல்யாணம் பண்ணி வந்த நேரம் கணவனின் போன் கால் நினைவுக்கு வர மெல்ல “ஓஓ” என்ற வார்த்தையைச் சத்தமே இல்லாமல் உதிர்த்தாள் அவன் அம்மா...தன் மகனிடம் “அப்போ நீ லவ் பண்ணல அப்படித் தானே” என்றதும் “நிச்சயமாக இல்லைம்மா... ஒரு பாதிப்பு இருந்தது.. அது தன்யா இல்லை என்பது எனக்கு நல்லாவே தெரியும்” என்றவன்...

மெல்ல “அம்மா ப்ரனவுக்கு என்ன தண்டனைத் தரனும் முடிவு பண்ணிட்டேன், நான் என்ன பண்ணினாலும் என் கூட இருப்பீங்களா?” என அவள் முகத்தைப் பார்த்தே கேட்டான் ருத்ரேஷ்வரன்...“கண்டிப்பாகக் ருத்ரா , நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்குச் சம்மதம் தான்... வாழ்க்கையில் ஒரு முறை உன் வரவை , நான் சரியாகப் புரிந்துக்கொள்ள வில்லை , ஆனால் இந்தத் தடவை அப்படி எல்லாம் எதுவும் நான் தவறாக நினைக்க மாட்டேன்". ஆனால் என்று ஒரு மௌனத்தைத் தந்தவள் மீண்டும்“நீ பிறந்த அந்த நொடி என் நினைவில் இருக்கு ருத்ரா ... அதற்கு அப்பறம் நான் உன்னைப் பார்க்கவே இல்லை... நீ இறந்துட்ட என்று நினைத்து இருந்தேன் கடந்த பல வருடங்களாக... ஆனால் உன்னை நேரில் பார்க்கும் போதெல்லாம் ஒருவிதப் படபடப்பு வரும், அஃது உங்கப்பா என்னை ஏமாற்றிய தாக்கம் என்று தான் நினைத்தேன்... உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எதையும் யோசிக்க மனம் தயாராவது இல்லை.. அதில் மிகப்பெரிய கேள்விக்குறி உங்கப்பாவை நான் நம்பாமல் போனது தான்...நீ அம்மாவை மன்னிச்சு ஏத்துக்கிட்டது போல உங்கப்பாவிடம் நான் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை டா... அவர் வலி இப்போது எனக்கு நல்லாப் புரியுது... அவருக்கு நான் இழைத்த அநியாயம் இந்த ஜென்மத்தில் சரி பண்ண முடியாது" என்று மகனிடம் தன் உள்ளத் துயர் அனைத்தும் வெளிப்படுத்தினாள்...இது வரை யாரிடமும் தன் மனதில் வலம் வரும் எண்ணங்களைப் பகிராதவள் , மூத்த மகனிடம் பகிர்ந்தாள்... அந்த அளவுக்கு அவன், அவள் வாழ்வில் எல்லாமுமாக இருந்தான்... கூட இல்லாத பொழுது மனதளவில் அவனிடமே எல்லாம் பகிர்ந்தது போல இன்று வார்த்தைகளால் எல்லாம் உரைத்தாள்...தாயின் வாழ்வில் தன் இடம் எதுவெனப் புரியவைத்த அவள் அன்பில் , அவன் கடந்த கால இழப்பு அடித்துச்செல்லப்பட்டது... இவர்கள் இழந்தக் காலத்தை இந்தச் சில மணி நேரத்தை ஈடு செய்தனர் இந்த அம்மாவும் பிள்ளையும்...மெல்ல , தாயின் கைகளை அழுத்திய படி “அம்மா எல்லோரையும் கூப்பிடுங்க எல்லா விஷயமும் இப்பவே பேசிறலாம், அப்பறம் ரொம்ப நாள் எல்லாம் இந்த ஹாஸ்பெடலில் இருக்க விருப்பலம்மா, நம்ம வீட்டிக்குப் போகலாம் ” என்றவனைப் பார்த்தாள் கங்கா...சரி எனத் தலை அசைத்தவள் மெல்ல எழுந்து வெளியே வந்தவள் கணவனிடம் “ ஈஷ்வர் எல்லோரையும் அவன் கூப்படறான்” என்றவள் அங்கு நிற்காமல் ருத்ரனின அறைக்கு வந்தாள்...ருத்ரனை, பார்க்க எல்லோரும் அவன் அறைக்கு வந்தனர்...

ப்ரனவிற்கு அவனை, எப்படி நேருக்கு நேர்ப் பார்க்க என்ற குற்றவுணர்வில் தலைத் தாழ்ந்து நின்றிருந்தவனையே பார்த்தப் படியே தந்தையிடம் கேள்விகளைக் கேட்டான் ருத்ரன்...

“அப்பா... என்னைத் தாக்கிய வண்டி பற்றிய தகவல்கள் எதாவது கிடைச்சுதா, சக்திக்குப் போன் பண்ணி வரச் சொல்லுங்க, எனக்கு நிறையக் கேட்கனும் ,என்ன பண்ணி வச்சு இருக்கான் தெரியலை” என்றவனிடம் , நீ பயபட வேண்டாம் ருத்ரா எல்லாம் அவன் கன்ட்ரோலில் தான் இருக்கு , நீ பேச வேண்டிய க்ளைன்ட் மீட்டிங் மட்டும் மாத்தி இருக்கான்..அதனால நீ அவங்க இடத்துக்குப் போக வேண்டி வரணும். அவங்க அப்படித் தான் முடிவுப் பண்ணி இருக்காங்க என்று தான் என்னிடம் கடைசியாக அவன் சொன்னத் தகவல், இன்னும் கொஞ்ச நேரத்தில் என்ன பார்க்க வரேன் சொல்லி இருக்கான் ருத்ரா” என்றதும்...ஒ அப்போ நான் அந்தத் தகவல்களை சக்தியிடம் பேசிக்கிறேன்....“அப்பறம் இந்த விபத்தைப் பற்றிப் போலீஸ் விசாரிக்கறாங்களா அப்பா? என்று கேட்கவும்...“ ஆமா ருத்ரா, நம்ம ஆட்களை வச்சு வண்டி ட்ரைவரைப் பிடிச்சாச்சு அவன் நம்மடையக் கஸ்ட்டியில் இருக்கான்.. நீ தான் என்ன பண்ணச் சொல்லனும்” என்றார்...ருத்ரன் தன் தந்தையிடம் எல்லாம் தெளிவாகப் பேசி முடிவு எடுக்கத் தீர்மானித்தான். இங்கிருந்து டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டிற்குச் செல்லும் முன் மனதில் இருக்கும் எல்லா வலி மற்றும் வேதனைகளைக் களைந்துப் புதிய வாழ்க்கை, எல்லோரும் சேர்ந்து ஒரே குடும்பமாக, ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்ற முடிவினை எடுத்திருந்தான். இது விட்டா இனி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதில் உறுதியாக இருந்தான்.ப்ரனேஷ்வரன் கண்டிப்பாகக் குற்றவுணர்வில் தனியே போயிருவான் என்ற பயம் , அவன் மனில் இருந்தது... தன் உயரை எடுக்க அவன் நினைத்தது சொல்லில் அடங்காத வலியைத் தந்தது , ஆனால் இப்படி மாறி மாறிப் 'பழிக்குப் பழி' என்று சென்றால் குடும்பம் என்ற அமைப்புச் சிதைந்து விடும் என்ற எண்ணத்தால், ஒர் அண்ணனாக அவன் செய்தச் செயலை மன்னித்து விட முடிவு செய்திருந்தான்.தன்னருகில் இருக்கும் தாயின் வேதனையைப் போக்கவும், தந்தையின் தனிமைப் தீக்கவும், இதை விட வேற வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அவனே முடிவு எடுத்தான். தந்தை இதற்கு எந்த எதிர்ப்பும் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது...சமூகத்தில் அவருடைய மரியாதையைச் சீர்ச்செய்யும் கடமை, அவனுக்கு இருப்பதாக நினைத்தான் ருத்ரன். இந்த முடிவு அவன் தந்தையைப் பாதிக்குமா இல்லை, அவரிடம் ஆலோசிக்காமல் எடுத்த இந்தச் செயல் அவரை எப்படிப் பாதிக்கும் எனப் பார்க்கலாம்....தொடரும்....
 
Top