எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

KK - 16

subasini

Moderator
களவு - 16...ருத்ரேஷ்வரன் மனதில் என்ன போய்க் கொண்டிருக்கிறது என்று அறியாது எல்லோரும் வெவ்வெறு மனநிலை இருந்தனர்.அண்ணனின் முகம் பார்க்க முடியாமல் , ப்ரனவின் பார்வை மற்றவர்கள் மேல் இருக்க, அவன் அண்ணனோ தம்பியைப் பார்த்தான். அவனின் குற்றவுணர்வே அவனைத் தண்டித்துக்கொண்டிருக்கிறது என்று அவனைப் பார்த்த நொடி உணர்ந்தான் ருத்ரன். தன் தந்தையைப் பார்த்து எல்லா வார்த்தைகள் அங்கே அச்சில் ஏற்றினான்.“அப்பா நீங்க போலீஸிடம் இந்தக் கேஸை ஒரு விபத்து என்பது போல மாற்ற முடியுமா? எனப் பாருங்க, அந்த லாரி டிரைவர் போய்ப் போலீஸில் சரணடைய ஏற்பாடுப் பண்ணுங்க, நடந்தது விபத்து மாதிரித் தான் இருக்கனும் சொல்லிட்டேன்”... என்றான் ருத்ரன்.தன் மகன் தன்னை விட எல்லாம் முடிவுகளும், தெளிவாக எடுப்பதைப் பார்த்த அதிர்ச்சியில், அவன் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தார் ஈஷ்வர்.“அப்பறம் அந்த டிரைவர் குடும்பத்திற்கு வேண்டிய உதவி பண்ணுங்கள், ஆனால் அஃது அவனுக்குத் தெரியாமல் பார்த்துக்கோங்க, ...முதலாளிச் சொன்னாலும், இந்த மாதிரிச் செய்வது தவறு என்று அவன் தெரிஞ்சுக்கணும், இல்லையா... நம்மிடம் வேலை இருந்துக்கொண்டே , நம்மை முதுகில் குத்திய போலத் தான், அவன் செய்தது... அதற்கு இந்தத் தண்டனை அவசியம் நினைக்கிறேன். நம் குடும்பப் பிரச்சினை அவன் குடும்பத்திற்கு வறுமையை ஈட்டித் தருவதை ஏற்க முடியாது, அது தான் இந்த ஏற்பாடு” என்றான்.மேலும் தன் குரலைச் சரி பண்ணி, இனி எப்படி இருக்க வேண்டும் அனைவரின் வாழ்க்கை என்று அங்கே ருத்ரேஷ்வரன் தீர்மானித்தான்.தன் தந்தையின் மௌனத்தைப் பார்த்த ருத்ரன், “என்னப்பா நான் சொல்லறதுச் சரி தானே, ஏன் எதுவும் சொல்லமல் அமைதியாக இருக்கீங்க, நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க” என்றான்.“நீ தெளிவாகத் எடுத்த முடிவா இது, ருத்ரா? இல்ல” ...

என்று வார்த்தைகளை இழுத்தார் நீலக்கண்டேஷ்வரன் ...அவரின் இந்த வார்த்தையில் மனதளவில் கங்கா அடி வாங்கினாள்...“நீங்க என்ன சொல்ல வரீங்கத் தெரியுது, ஆனா நான் தெளிவாகத் எடுத்த முடிவு அப்பா இது .. அப்பறம் இன்னும் முழுசாக எல்லாம் கேட்டு விடுங்கள்” என்றவன்...“இனி நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் இருக்கனும், இதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது” என்று தன்யாவைப் பார்த்தவன் “நான் சொல்லறது எல்லோராக்கும் சேர்த்தித் தான்” என்றான்...வந்ததில் இருந்து அவனையே பார்த்திருந்த , தன்யா அவன் சொன்னதும் வேகமாகத் தலையாட்டி வைத்தாள்....ருத்ரன், அவள் கணவனை மன்னித்ததே பெரியதாக இருந்ததால், அவன் என்ன சொன்னாலும் கேட்கும் நிலையில் இருந்தாள். அவள் கணவனோ அதற்கு நேர்மாறாக யோசித்தான்...

‘தன் மேல் கோபம் எதுவும் இல்லையா ! இவனுக்கு. எப்படி என்னை இவனால் மன்னிக்க முடிந்தது... அவன் காதலையும் பரிச்சுட்டேன், இன்று அவனைக் கொலைச் செய்யும் அளவுக்குத் துணிந்து இருக்கேன்... கொஞ்சம் எல்லாம் தாமதாமாகி இருந்தால், இன்று அவன் உடலில் உயிர் இல்லை, இவை அனைத்தும் தெரிந்து எப்படி அவனால் என்னை மன்னிக்க முடிந்தது’ என்று மனதில் அவனுக்காக வாதாடிக்கொண்டிருந்தான்.. ப்ரனவ்.... “என்னப்பா.. உங்களுக்கு ஒகே தானே”... என்ற ருத்ரனின் வார்த்தைகள் எல்லாம் ஒரு காலத்தில் அவர் எதிர்பார்த்து ஏங்கிய வாழ்க்கை அல்லவா! எத்தனை ஏக்கங்கள் மனதில்... எல்லாம் காலம் கடந்து கிடைக்கிறது, அதில் மனம் சந்தோஷ வானில் பறக்கவில்லை... ஏன் என்று அவரால் கணிக்க முடியவில்லை.இதுவே ஒரு வாரத்திற்கு முன் இருந்த நீலக்கண்டேஷ்வரனால், எல்லாம் ஒரு நொடியில் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்க முடியும். இப்போது எல்லாம் தகர்ந்த நிலையில் இருந்தார்...தன்னுடைய இளைய மகனின் செயல் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அவனைத் தண்டிக்கலாம், அதற்குக் காரணமானப் பெற்றவர்களை என்ன செய்ய, அவரால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் அமைதியாக இருந்தார்.“ம்ம்... எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை ருத்ரா... எல்லாம் நீ சொன்னது போல் நடக்கும்” என்றவர்...“இப்போ எப்படி இருக்கு, உடலில் எங்கையாவது வலி இருக்கா... கால் அசைக்காமல் வைக்கச் சொல்லி இருக்காங்க”... என்றவர் “அப்பறம் ஒரு சந்தேகம் கேட்கலாமா”.. என்று அவனைப் பார்த்தவர்....“என்னப்பா எங்கிட்ட அனுமதிக் கேட்டுக் காத்திருக்கீங்க, எதுவாக இருந்தாலும் கேளுங்க” என்றான் சிரித்தபடியே...

“ என்னப் பண்ண, இப்போ நீ தான் உங்க அம்மா பிள்ளையாக இருக்கயேடா” எனக் கேலிச் செய்தவர்... உன் வண்டியில் இருந்து சில மெடிசன் கிடைச்சுது, அந்த மெடிசன் எல்லாம் நீ சாப்பிட்டு இருக்கியா”... எனக் கேட்டார்.“டூ டைம்ஸ் எடுத்தேன் , அதில் சம்திங் சார்ங் எனத் தெரிஞ்சுது , அதுக்கு அப்புறம் நான் எடுக்க வில்லை”... என்றவனைப் பார்த்து“ஒ அப்படியா ஆமா லாஸ்ட் டைம் உன்னை ட்ரீட் பண்ணின டாக்டர் இங்க இல்லை போல” என்று அவர் கேட்கவும்...“அவனை உங்களுக்குத் தெரியாதா! ப்ரனவோட ப்ரெண்ட் இருக்கான் இல்ல, அவனோட அண்ணன் பிரசாத் தான் அவன். என்னிடம் வந்து ரெக்வஸ்ட் பண்ணி கேட்டான், அப்ராடில் டிகிரி வித் ஜாப். நான் தான் வாங்கிக் குடுத்து அனுப்பி இருக்கேன்” என்றான்...அவனையே சந்தேகமாகப் பார்த்தத் தன் தந்தையைக் கண்டு சிரித்தவன்...“சரி சரி அப்படிப் பார்க்காதீங்க நானே சொல்லறேன்” என்றவன்...“எனக்குச் சந்தேகமாக இருந்துச்சு அந்த டாக்டர் நடவடிக்கை , ஆனால் அன்று நான் இருந்த மைண்ட் செட் சீரியசாக எடுக்க வில்லை... இந்த மருந்து ஏதோ பண்ணுது என்ற உள்ளுணர்வு இருந்துட்டே இருக்கும், இந்தச் சந்தேகத்தை ஏன் வளர விடனும் , லேப் டெஸ்ட் பண்ணினேன், டேப்லட் பத்தின டவுட் க்ளியர் ஆச்சு, உடனே அவனைப் பிடிச்சு விசாரிச்சேன், அதற்கு அப்பறம் அவனை மிரட்டி அனுப்பி வைத்தேன், கொஞ்ச நாளைக்கு அவனை டாக்டர் வேலைப் பார்க்க விடாமல் வச்சு இருக்கேன்" என்று சிரித்தான்... “சக்தியிடம் இருந்து இன்னேரம் எல்லா நீயூஸும் கலைட் பண்ணி இருப்பீங்கத் தானே அப்பா” என்றான் கூலாக.அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தது நீலக்கண்டேஷ்வரனுக்கு...

தந்தை மகனின் இந்த உரையாடலைக் கேட்டத் தன்யா 'என்னமா யோசிக்கிறாங்க இரண்டு பேரும், இவங்க இரத்தம் தானே ப்ரனவ் , அவனுக்கு மனதில் இந்த எண்ணம் எல்லாம் வராமலாப் போகும்..எதிரியை அவர் ஸ்டைலில் டீல் பண்ணிருக்காரு, என்ன எதிரி நினைச்சவன் சொந்த உடன் பிறந்தவன் தெரியாமல் போச்சே அவருக்கு, என்று எல்லாம் கணவனுக்குச் சாதகமாக யோசித்துக் கொண்டிருந்தாள்...ருத்ரனின் பேச்சை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கங்கா.. “போதும் ருத்ரா இனி நீ கொஞ்சம் ஓய்வு எடு,.. ரொம்ப நேரம் இப்படியே இருந்தா ரொம்ப முடியாமல் போகும்” என்றவள் அவனைப் படுக்கச் சொல்ல...“அம்மா... நீங்க என்ன ஒரு நோயாளி ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணாதீங்க, இட்ஸ எ ஆக்ஸிடென்ட் அவ்வளவு தான்” .“பாடியில் சில பல இடத்தில் அடி அதை வீட்டில் இருந்த படியே சரி பண்ணிக்கலாம் இல்லையா? அப்பா” என்றவனை முறைத்துப் பார்த்தார் அவன் தந்தை...“இவ்வளவு நேரம் நீ சொன்னதை எல்லாம் நான் கேட்டேன் ... ஏன்னென்றால் எல்லாம் சரியாக இருந்தது ருத்ரா ... இப்பொழுது சொன்னது நான் ஒத்துக்க மாட்டேன்.. நீ நல்ல படியாகத் தேறி வர வரைக்கும் இங்க தான் இருந்தாகனும் , நான் சக்தி, கூட இருந்து எல்லாம் பார்த்துக்கிறேன் ... நீ உங்க அம்மா கூட இங்கேயே இருக்கும் வழியைப் பாரு, என்ன கங்கா நான் சொல்வது சரி தானே” எனத் தன் மனைவியையும் தங்கள் உரையாடலில் சேர்த்துக் கொண்டார்...சட்டென்று கணவனின் வார்த்தைகள் கேட்டுத் திகைத்தாள் பின் மெல்ல “ஆமாம் ஈஸ்வர் நீங்க சரி தான்” என்றாள் உள்ளே போன குரலில்...மூன்று பேரும் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த ப்ரனவ் மெல்ல வெளியேறினான். தான் அங்கே அதிகப் பற்றோ என்று தோன்றியது மனதில்...அவன் சென்றதும் தன்யாவைப் பார்த்த ருத்ரன் “என்ன தன்யா, உன் புருஷன் எப்பவும் இப்படி அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்டாக இருந்தா எப்படி” எனக் கேலிச் செய்யவும் தான், அவளுக்கு அவன் அங்கே இல்லை என்பது புரிந்தது...“ஏன் மாமா அவரை இப்படிச் சொல்லுறீங்க, அவர் நல்ல மார்க் வாங்கும் மாணவர் தான்” என்றவள் “இப்போ அவர் மன நிலைச் சரியில்லை, தான் பண்ணினது தப்பு என்று உணர்ந்ததும், அதைச் சரி செய்யத் தெரியாமல் தினறிக் கொண்டிருக்காரு” என்றவள்...அவன் அருகே வந்தவள்.. “சாரி மாமா நீங்க அவரைத் தவறாக நினைக்காதீங்க... பொறாமைத் தான் அதன் விளைவுக் கொஞ்சம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது”...

“அவர் இந்தச் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள டைம் எடுக்கும் நினைக்கிறேன்” என்றவளைப் பார்த்தவன்...“ஆமாம் தன்யா, நான் அவனைப் புரிந்துக் கொண்டதால் தான், குடும்பத்தோடு இருக்க வைக்க முயற்சிப் பண்ணறேன்... நான் மட்டும் இல்லை, அவனும் நிறைய இழந்து இருக்கான். அவனுக்குக் கிடைக்க வேண்டிய எல்லாம், ஒர் அண்ணனாக நான் கண்டிப்பாகச் செய்வேன், அவன் தவறைத் திருத்துவது என் கடமைத் தானே” என்றவன், “நீ இந்த அளவுக்குப் புரிந்து கொண்டது ரொம்பத் தாங்ஸ் ம்மா” என்றவன் “அவனைப் போய்ப் பாரு” என்றான்.

சரி எனத் தலை அசைத்தவள் ப்ரனவைத் தேடி வந்தாள்.உள்ளே அனைவருக்கும் இடையே தான் மட்டும் தனித்து இருப்பதாக அதீதக் கற்பனை, அவனை அங்கிருந்து விரட்டியடித்து.

என்ன செய்யவது எனத் தடுமாறிக் கொண்டிருந்தான்.. அவனுக்குப் புரியவில்லை தானும் அந்தக் கூட்டத்தில் அங்கம் என்றும், அது தன்னுடைய குடும்பம் என்றும், குடும்பம் ஒரே கூரையின் கீழ் என அவன் அண்ணன் இவனுக்கும் சேர்த்தித் தான் போராடிக்கொண்டிருப்பது புரியாத முட்டாளாக இருந்தான் ப்ரனவ்.அவன் அருகில் வந்த மனைவியைப் பார்த்ததும், மனது உறுத்த அங்கிருந்து வேகமாக நடந்தான்...அவளோ பின்னிருந்து "ப்ரனவ், நில்லுங்க நானும் வரேன் ப்ரனவ்" என அழைத்தது எல்லாம் காற்றோடு காற்றாகிப் போனது...அவன் வேகத்திற்கு அவளால் பிள்ளைச் சுமந்த வயிற்றோடு ஒட முடியவில்லை. வேகமாகத் தன் அத்தையிடம் வந்தவள்...

"அத்தை, நான் அழைத்ததைக் காதில் கேட்காதது போல் வேகமாகப் போறாரு, எனக்குப் பயமாக இருக்கிறது" என்றாள்...உடனே நீலகண்டேஷ்வரன் அவளைப் பார்த்துப் "நீ பயபட வேண்டாம்மா ... அவனை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றவர் ருத்ரனைப் பார்த்தார்...

அவரின் பார்வையில் புரிந்துக் கொண்டவன்..."சக்தியைக் கூப்பிடுங்க அப்பா , அவனிடம் சொன்னால் பார்த்துப்பான்" என்றான்.. அவரும் சரி என்று, அலைபேசியில் சக்தியை அழைத்தார்...இன்று நடந்த சம்பவங்கள் அனைத்தும் அன்றைய பகல் பொழுதை விழுங்கியிருத்தது.

அர்த்த ராத்திரியில் அவனை அழைக்கச் சங்கடப் பட்டாலும், இருக்கும் சூழலை மனதில் கொண்டு அழைப்பை விடுத்துக் காத்திருந்தார்..."ஹலோ, பாஸ் அங்க எந்தப் பிரச்சினையும் இல்லையே" அழைப்பை ஏற்றதும் பதட்டமாக என்றான் சக்தி...அதைக் கேட்டவர் " இல்லை சக்தி அவன் சேப் தான், இப்போ தெளிவாக இருக்கான்.. நான் பேச வந்தது ப்ரனவ் பத்தித் தான்" .. என்றதும்"என்ன பாஸ் ஆச்சு , நான் என்ன பண்ணனும் ... தவறுதலாக அவர் நேம் எங்கேயும் லீக் ஆகிருச்சா" எனப் பதட்டமடைந்ததும் அவருக்குப் புரிந்தது...தன் முதலாளி மாதிரியே இவனும் அவனைப் பாதுக்காக்கத் தான் நினைத்திருக்கிறான் என மனதில் சிரித்தவர் ... "இல்லை சக்தி அதெல்லாம் ருத்ரன் தெளிவாக முடிவுப் பண்ணி இருக்கான், இப்போ ப்ரனவ் தான் பிரச்சனை , அவன் கார் எடுத்துட்டு வெளியே போய் இருக்கான், நடந்த சம்பவங்கள் எல்லாம் அவனை மன உளைச்சலில் தள்ளி இருக்கு , இப்போது அவன் இருக்கும் நிலையில், நாங்க யார் என்ன பேசினாலும் சரி வராது, இந்தச் சூழலில் பொறுமையாகப் பேசவும் முடியாது... நாங்க எல்லாரும் மருத்துவமனையில் தான் இருக்கோம் அவன் மனைவியும் எங்க கூடத் தான் இருக்கா அது தான்" ...என்று அவர் வார்த்தைகள் முடிப்பதற்கு உள்ளே..."பாஸ் ப்ரனவ் நான் பார்த்துக்கிறேன்" என்றவன் தன் இரு சக்கர வாகனத்தின் சாவி எடுத்தப்படி, வேகமாக வீட்டைப் பூட்டி விட்டு, அவன் அடிக்கடிப் போகும் கடற்கரைப் பகுதிக்கு வந்தான் சக்தி.'தன் மேல் எவ்வளவு நம்பிக்கையும் அன்பு இருந்தால் தன் வீட்டுப் பிரச்சைனயைச் சொல்லுவார் நம் பாஸ் . ஒரு வேலைக்காரானாகக் கட்டளை இட்டால் நான் செஞ்சிட்டுப் போயிருவேன், இருந்தாலும் எனக்குத் தகுந்த மரியாதைத் தருவது, இது தான் பெரிய மனிதன்' என மனதில் நினைத்தவனுக்கு , நீலக்கண்டேஷ்வரன் மேல் அவனுக்கு இருக்கும் மதிப்பும் அன்பும் இந்தச் செயலில் கூடியது அன்றிக் குறையவில்லை.ருத்ரன் கூடவே இருந்தால் ப்ரனவ் பத்திய அனைத்து விசயமும் இவனுக்கு அத்துப்படி என்பதால் ப்ரனவை,தேடிச்சென்றான்.

ராத்திரியில் வேளையில் கடற்கரையில் இருளை மட்டுமே அணைத்த படி இருக்கும் வானில் தனித்து வலம் வரும் நிலவை ரசிக்க மனமில்லாமல், கரையைக் கடக்க முயன்றுத் தோற்றுப் கொண்டிருக்கும் அலையைப் பார்த்து அமரந்திருந்தான் ப்ரனவ்.

தூரத்தில் அவன் வண்டியைக் கண்டதும், அதன் அருகே தன் வாகனத்தை நிறுத்திய சக்தி , அவனை நோக்கிக் கடற்கரை மணலில் கால் புதைய நடந்தான். காற்றில் அவன் கேசம் அசைய ப்ரனவ் மனநிலை எப்படி இருக்கும் என்று, ஒர் அளவுக்குக் கனித்து வைத்திருப்பதான். தன் தூக்கத்தைத் துறந்து வந்து இங்கே நிற்பது, அவன் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் அவன் பாஸிற்காக...ப்ரனவ் அருகே வந்தவன்.. அவனிடம் மெல்ல "சார்" என்று அழைத்தான்...

யாரெனப் பார்த்தவன் சக்தி என்றதும் மெல்லத் புருவம் இடுங்க நோக்கியதும்..."இல்லச் சார், நான் இங்க அடிக்கடி வாக்கிங் வருவேன், இங்கே உங்களைப் பார்த்தும் பேசலாம் வந்தேன்" என்றவனை நம்பாமல் பார்த்தான் ப்ரனவ்..."என்ன சார், நீங்க பார்க்கிறது எப்படி இருக்குத் தெரயுமா ? .."நீங்க என்னமோ மருத்துவமனையில் இருந்து சொல்லாமல், தன்யா மேம் கூப்பிட்டும் காதில் வாங்காமல், காரை எடுத்துட்டு வேகமாக வந்ததைப் பார்த்துட்டு, பாஸ் என்ன அழைத்து உங்களைப் பார்தது என்ன, ஏது என்று விசாரிக்கச் சொன்னது மாதிரி இருக்கு, உங்க இந்தப் பார்வை" ...என்று நடந்ததை அப்படியே சொன்னவனை முறைக்க முயன்றுத் தோன்றவனின் இதழில் புன்னகை அடங்கி இருப்பதைப் பார்தத சக்தி, அவன் இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதிச் செய்தான்."அப்படி எல்லாம் நீங்கள் தப்பா நினைக்காதீங்கச் சார்...

நான் ரெகுலராக வாக்கிங் போற நேரம் தான், என்ன இன்னைக்குக் மட்டும் கொஞ்சம் தூரம் நடந்து வந்தேட்டேன் அவ்வளவு தான் " என்றான் முகத்தை இயல்பாக வைத்தப்படி...அவன் அமைதியாக இருந்திருந்தால் கூட ப்ரனவ் சும்மா இருந்திருப்பானோ என்னமோ... சக்தியின் இந்தப் பேச்சில் ," ஓ , இந்தப் பேய் நடமாடும் நேரத்தில் நீ வாக்கிங் போவாயா ? .. உன் சகவாசம் எல்லாம் பேய்க் கூடத்தான் போல என்றான்."சார்" என்று இழுத்த படி “இப்ப என் கூட நீங்கள் தான் இருக்கீங்க, அப்போ நீங்க பேயா? சார்” என்றான் அவனைக் கிண்டல் செய்தபடி."நான் பேய் இல்லை சக்தி, உயிரை எடுக்கும் எமன், உடன் பிறந்த அண்ணன் என்று கூடத் தெரிஞ்சுக்காமல் அவனைக் கொல்லப் பார்த்து இருக்கிறேன்.. நான் ஒரு மிருகம்... என் கூட நீ நிற்காதே போ".. என்றான்.சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு நிலையில் அவனை மீறி மன அழுத்தத்தில் வார்த்தைகள் வெளி வரவும், என்ன பண்ண எனத் தெரியாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான் சக்தி.மெல்ல அருகில் வந்தவன், அவன் தோளில் கை வைத்தபடியே "நீங்க ரொம்பத் தப்பான வார்த்தைகள் விடறீங்கச் சார்" ..."ருத்ரன் சார் எப்பவும் உங்கள அவர் தம்பியாகத் தான் பார்த்தார்... எல்லா விஷயங்களையும்.. நீங்கள் புரிந்து கொள்ள லேட் பண்ணீட்டிங்க, அவ்வளவு தான்.. இதுக்கு ஏன் இவ்வளவு பெரிய வார்த்தைகள் சொல்லுறீங்க” என்று கேட்டான்..."பெரிய தவறுகளுக்கு, பெரிய வார்த்தைகள் தான் கேட்க வேண்டி வரும், எனக்கு நல்வாவே தெரியும் சக்தி. எல்லா வகையிலும் அவன் என்னிடம் இழந்து நிற்கிறான். அது தான் என்னாலத் தாங்க முடியல, அவனுக்குத் தெரிஞ்சு இருக்கு நான் தப்புப் பண்ணறேன் என்று, என்னை அடித்திருக்கலாம் அண்ணன் என்ற உரிமையில், கேள்விக் கேட்டுச் சண்டைப் போட்டு இருந்தா எனக்குக் கொஞ்சமாவது மனதிற்கு ஆறுதல் இருந்திருக்கும். ஆனால் அவனுக்கு என் மேல் கோபமே இல்லை... ஏன்டா, தப்புப் பண்ணற என்ற கேள்வி எதுவுமே கேட்கவே இல்லை தெரியுமா? மன்னிச்சு விடறான் டா" என்று உணர்ச்சி வேகத்தில் நண்பனாகச் சக்கியைக் கண்டான் ப்ரனவ் ..."ப்ரனவ் சார்... தம்பிக்கு வலிக்கக் கூடாது என்பதில், உங்க அண்ணன் ரொம்பத் தெளிவாக இருக்காரு , இதில் இருந்தே தெரியவில்லையா அவரோட பாசம்” என்றான்."உனக்கு என்னோட மன நிலைப் புரியாது சக்தி"... என்றான் ப்ரனவ்.ப்ரனவ் மனதில் மீண்டும் அண்ணனுக்குத் தான் செய்தத் துரோகம் எல்லாம் நினைவில் வர, “எனக்கு மட்டும் அவன் மேல் ஏன் இந்தப் பாசம் இல்லாமல் போச்சு சக்தி , இதில் இருந்தே தெரியவில்லை,அவனுக்குத் தம்பி சொல்லிக்கக் கூட எனக்கு அருகதை இல்லை என்று” என வேதனையில் அரற்றினான் ப்ரனவ்.மௌனமாகக் ப்ரனவின் முகத்தைப் பார்த்து, "ப்ரனவ் சார், உங்க அண்ணன் கூட நிழல் போல இருக்கிறவன் நான், பாஸ் என்னிடம் மேக்ஸிமம் உங்க இரண்டு பேரின் விஷயங்கள் பற்றித் தான் கேட்பாரு , விசாரிக்கச் சொல்லுவாரு, அந்த வகையில் நான் தெரிஞ்ச விஷயம் இது தான்.

உங்கள் அப்பாவும் அண்ணனும் உங்க பின்னாடித் தான் இருக்காங்க. உங்க மேல் அவங்களுக்கு நம்பிக்கை அதிகம், அதற்கு மேலாகப் பாசம் ஜாஸ்தி, அது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாக இருக்கு வேற ஒன்னும் இல்ல" என்றவன்..." எதிர்ப்பார்க்காத விஷயம் நீங்க இந்த அளவுக்குப் போவீங்கனு , அதற்குக் காரணம் என்ன தெரிஞ்சுக்கலாமா?... உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் வேண்டாம், உங்க குடும்பப் பிரச்சினை என்று தெரியும், அதைக் கேட்பதும் நாகரீகம் இல்லை... என்னிடம் பேசினால் வேதனைக் குறைந்து மன அமைதிக் கிடைக்கும் என்று நீங்க நினைச்சால் பகிரலாம், இல்லை என்றால் வேண்டாம், எல்லாம் உங்க இஷ்டம் தான் சார்" என்றபடி அவன் அருகே அமர்ந்துக் கடலலைகளைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினான் சக்தி.ப்ரனவ் முகம் அமைதியாக இருந்த போதும், மனமோ அந்த அலைகளைப் போலக் கரைக்கும், கடலுக்கும் இடையே அல்லாடிக்கொண்டிருப்பது போல நிம்மதியின்றித் தவித்தது. அந்த மனதிற்கு அமைதியும் நிம்மதியும் கிட்ட வேண்டும். அதற்கு என்ன செய்ய எனப் போராடிய நிலையில் சக்தியைத் தான் பார்த்தான். தன்னையே பார்த்த ப்ரனவிடம்"சார் நான் உங்களை வற்புறுத்தவில்லை , ஜஸ்ட் உங்க ரிலாக்ஸ்க்காகத் தான் சொன்னேன்...

இட்ஸ் ஓகே வாங்கப் போகலாம், இன்னும் கொஞ்சம் நேரத்தில் விடிஞ்சுரும்" ... என்றான் மேலும்"நாம் நினைப்பதெல்லாம் சரியாக இருப்பதாக நம்ம அறிவிற்குத் தோன்றும்... அதை வெளியே யாரிடமாவது பகிரும் பொது, அதில் இருக்கும் தவறுகள் நமக்குப் புரியும்...

என்று எதார்த்தம் பேசியவனின் சொல்லில் ஈர்கப்பட்டான் என்பதில் சந்தேகமில்லை.சக்தியின் வார்த்தைகளில் கவர்ந்திழுக்கப் பட்ட ப்ரனவ் உதிர்த்தப் புன்னகையில் , வலியும் வேதனையும் நிறைந்திருந்தது."உண்மையான வார்த்தைகள். என் மனதில் இருக்கும் எண்ணங்களின் அனர்த்தம் தான் இப்போ என்னை இங்கே மௌனமாக நிறுத்தி வைத்திருக்கிறது சக்தி, உனக்குத் என்னுடைய பிரச்சனை, மற்றும் நான் சஞ்சரிக்கும் மனநிலை எதுவும் தெரிய வாய்ப்பில்லை... ஆனால் உன்னிடம் இதையெல்லாம் சொல்லாமா? என்று கூட எனக்கு இப்போது தெரியவில்லை, அந்த அளவுக்கு நான் குழம்பிப் போயி இருக்கேன், இருந்தாலும் உன்னிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என்றான் ப்ரனவ்.மெல்ல அவன் தோளில் கை வைத்துத் தன் மன அழுத்தத்தை இறக்கி வைத்தான்...

"நான் என்ன இப்படி எல்லாம் யோசிக்கிறேன் என்று, என்னைத் தவறாக நினைக்காதே சக்தி , மனம் இப்போது மிகவும் குழப்பமான நிலையில் இருக்கு.நான் தன்யாவைக் காதலித்துத் தான் கல்யாணம் செய்து கொண்டேன், ஆனால் ருத்ரனுக்கு அவள் மேல் காதல் இருக்குமோ? என்ற கேள்வி என்னைப் பாடாகப் படுத்தி எடுக்குது. இந்தக் கேள்விக்கான பதில் 'ஆமாம்' என்று இருந்தால், நான் என்ன மாதிரியான செயலைச் செய்து வைத்திருக்கிறேன், மனதில் பொறாமை என்ற குணம் இந்த அளவுக்கு என்னைக் கீழாக நடக்க வைத்திருக்கிறது. இதைச் சரி பண்ணவே முடியாது... தன்யா மனதில் இருப்பதைச் சொல்லிட்டா, ஆனால் ருத்ரன்..

அது தான் என்னை இப்படி விரட்டியடிக்கிறது... கல்யாணத்திற்குப் பிறகு என் மேல் உள்ளக் காதலை உணர்ந்தாள் என் மனைவி.. அவனை அவள் கல்யாணம் பண்ணியிருந்தாலும், அவன் காதலை உணர்ந்திருப்பாள் தானே" என்ற இந்த அனர்த்தமான கேள்வியை ப்ரனவ் கேட்டதும் , என்ன பதில் தருவது என்று தெரியாமல் குழம்பபினான் சக்தி.ஆனால் அவன் தரும் பதிலில், ப்ரனவின் குழம்பிய மனம் தெளிவுப் பெறுமா? என்பது கேள்விக்குறித் தான்...பதில் இல்ல வினாவிற்கு

விடைத் தேடியப் பயணத்தில்

உணரும் உண்மை

நம்மை நகரவிடாமல்

நிறுத்தி விடும் இந்த

வாழ்க்கையில், பல

கேள்விகள் விடையின்றி....தொடரும்....
 
Top