எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கனல் பொழியும் மேகம் 2

Mr D devil

Moderator
ஹாய் தங்கங்களே...
உங்களின் இத்தினி ஆதரவை நான் எதிர் பார்க்கவே இல்லை... அதற்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகள்... முதலில் கூறியது போல் வாரத்திற்கு இரண்டு அல்லது ஒரு அத்தியாயம் மட்டுமே போட இயலும்..

தகுந்த நேரத்தில் அத்தியாயம் போடாது காக்க விட்டதிற்கு மிகவும் வருந்துகிறேன்... மன்னிக்கவும்... (surprise update venumna...unga kitta tha iruku athu... Eppdinnu ungalukke theriyum vera enna ketpen 4-வார்த்தை விமர்சனம் தான்)


###


டிஸ்ஷு_ இதில் வரும் மது பழக்கம் காட்சிகள் அனைத்தும் உடலுக்கு தீங்கும் குடும்பத்தில் தீராத சண்டையும் கொண்டு வர கூடியது... பயன்படுத்தவோ முயற்சிக்கவோ கூடாது தப்பு.. ஸ்டே அவே...


#கனல் பொழியும் மேகம் 2


"அண்ணா..." என சுண்டு விரலை காட்டி "போகணும்..." எனக் குழந்தையாய் கூற... தம்பியின் முக பாவனையில் சிரித்தவன் அவனுக்கு தேவையானதை செய்து விட்டு வெளியில் வரவும் அவனின் அலைபேசி கத்தவும் சரியாக இருந்தது.

தொடுதிரையில் தெரிந்த எண்ணை புருவங்கள் நெரிய பார்த்தவன் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

எதிர் புறம் கூறிய செய்தியில்
"அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற டார்லி..." என்றான் எடுத்த எடுப்பிலேயே.

அதற்கு எதிர் புறம் கூறிய பதிலில் முகம் இறுக "சரி போறேன். போயி தொலைக்கிறேன்..." எனக் கூறி அழைப்பைத் துண்டித்தான்..

***

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் நின்றது அவனின் நான்கு சக்கர வாகனம். பார்கிங் ஏரியாவில் தனது (Mercedes-Benz) மெர்சிடிஸ் பென்ஸை நிறுத்தி பூட்டிவிட்டு முகமூடியையும், சன் கிளாசையும் அணிந்தவன் காரை விட்டு வெளியில் இறங்கி நின்றான்.

அவன் வரவை தென்றலும் எதிர் பார்த்திருந்ததோ... அவன் இறங்கி நின்றதும் அவனின் கேசத்தைக் கலைத்து விளையாடியது.

காற்றில் ஆடும் சீகையை ஒற்றை கையால் கோதியப்படியே உள்ளே நுழைந்தவனின் பார்வையில் விழுந்தாள் நறுமுகில்...

உடலோடு ஒட்டிய பாடிகான் டிரெஸ் முழங்கால் வரை நீண்டிருக்க அதன் கருப்பு நிறம் அவளது நிறத்தை சற்றே தூக்கி நிறுத்தியது. மேல்நாட்டு உடை அவளது உடலை உடுப்பாக பிடித்திருக்க முகமும், சிகையும் கூட அதற்கு ஏற்றார் போல அலங்கார பூச்சுடன் பேரழகு பொட்டகமாய் நின்றிருந்தாள் நறுமுகில்.

அவளையும், அவள் அணிந்திருந்த உடையையும் முகம் இறுக பார்த்தவன் தான் வந்த காரியத்தையும் மறந்து தனது வாகனத்தை நோக்கி நடக்க

"ஹாய் மிஸ்டர் ஆகாஷ் வானவராயன்..." அவளின் அழைப்பில் நின்றான்.

அவளின் அழைப்பில் எழுந்த கோபத்தை அடக்க கை முஷ்டியை மடக்கி ஓவ்வொரு விரலாக சொடக்கெடுத்தவன் பின்னால் திரும்பி பார்ப்பதற்குள்
அவளே அவனின் முன் வந்திருந்தாள்.

"வாட் அ சப்ரைஸ் மேன். சிக்ஸ் மந்த் இருக்கும்ல உங்களை பார்த்து... ஆக்சுவலி நான் உங்களை முன்னாடியே பார்ப்பேன் நினைச்சேன்..."எனக் குதுகலமாக கூறியவள் அவனின் பதிலைக் கூட எதிர்ப்பாராது சற்றே அவனை நெருங்கி நின்று

"நான் அன்னைக்கு சொன்னத பத்தி யோசிச்சியா?? பெர் நைட்டுக்கு டென் லக்ஸ் ஹிம்ம் இல்லை இண்டியன் பில்லினர் தேவி நாச்சியாரோட ரீலேஷன் வேற... கொஞ்சம் அதிகமா தான் எதிர் பார்ப்பு இருக்கும். டுவென்டி லக்ஸ் தரேன் அதுக்கு மேல உன் பெர்பார்மன்ஸ் பொறுத்து தான்..." என்றாள் கண்களை சிமிட்டி... அவளை தீ பார்வை பார்த்தவன் பதில் பேசாது நடக்க "உனக்கு மட்டும் தான் இந்த ஆஃபர் இருக்கு. நல்லா யோசிச்சு சொல்லு...."என்றாள் கத்தி.


அவளின் பேச்சில் கழுத்தை நெரித்து கொல்லும் வெறியே உண்டானது...
அவ்வெண்ணத்தை செயல்படுத்த நினைத்தானோ என்னவோ சட்டென திரும்பியவனின் கண்களில் அவள் வேறொரு ஆடவனின் தோளில் சாய்ந்து செல்வது தெரிந்தது...
அதை கண்டதும் அவனின் முகத்தில் அத்தனை அருவருப்பும் கோபமும் கிளர்ந்தெழுந்தது... தான் வந்த வேலையையும் மறந்து காரில் ஏறியவன் அங்கிருந்து புறப்பட்டு இருந்தான்.

******

கனலின் செங்கதிர்கள் தன் நாணத்தை மறைக்க மலைகளில் ஒழிந்து கொள்ளும் அழகிய மாலை பொழுது அது...


"ஏன் டா, வீல் சேர்லயே காலத்தை தள்ளலான்னு முடிவு பண்ணிட்டியா..." என்ற தேவம்மாளின் கேள்வியில் பாயாசத்தை குடித்துக் கொண்டிருந்தவனின் கை அப்படியே நின்றது...

"இப்ப எதுக்கு ஹிந்தி சீரியலை ஓட விடற..." என கிண்டலாக கேட்டார்.
கையில் இருந்த ஸ்பூனை கிண்ணத்தில் பட்டென வைத்துவிட்டு தேவம்மாளை முறைத்தவன்

"என் கிரகம் நீயெல்லாம் என்னை கிண்டல் பண்றது போல ஆயிடுச்சு கெழவி... என் கால் மட்டும் சரியாகட்டும். அப்பறம் இருக்கு உனக்கு..." என்றான் பற்களை கடித்தபடி..

அவனின் கோபத்தை தோளில் விழுந்த பொடுகைப் (dandruff) போல் தட்டி விட்டவர் ஹாலில் இருந்த சோபாவில் கால் நீட்டி அமர்ந்தார்.

தேவம்மாள் ஓய்ந்து அமரவும் அவரை கனிவுடன் பார்த்தவன் "பட்டுன்னு போற வயசுல பாயை விரிச்சிப் படுக்காம அங்கையும், இங்கேயும் அல்லாடிட்டு இருந்தா இப்படி தான் கால் வலிக்கும்..." அவனின் கனிவான பார்வைக்கு துளியும் சம்பந்தம் இல்லாமல் நக்கலாய் கூறியவனை மூக்கு விடைக்க பார்த்தவர் அவனுக்கு பதில் கூறும் முன்பே ஆகாஷ் உள்ளே நுழைந்தான்...

உள்ளே நுழைந்தவனின் முகம் வழக்கத்திற்கு மாறாக இறுகி இருந்தது... 'ஹாஹான் சிறுத்தையோட மூஞ்சி சீற்றத்துல கொதிச்சிட்டு இருக்கே... மாட்டனவன் மட்டன் தான்...' என முனகியபடியே தேவம்மாளை பார்த்தான் அகில். அவரும் உள்ளே வந்தவனை தான் பார்த்து கொண்டிருந்தார்.

அவன் முகத்தில் இருந்த கடுக்கடுப்பே கூறியது முகில் ஏதோ ஏடாகூடமாக பேசி வைத்திருக்கிறாள் என்று... அவனே கூறட்டும் என தேவம்மாள் காத்திருக்க அவனோ அவரை அழுத்தமாக பார்த்துவிட்டு தன் அறையை நோக்கி நடந்தான்...

"கொடிக்கி... என்ன சொல்லி தொலைச்சாலோ தெரியல, புள்ளை முகமே சரியில்லை..." என முணுமுணுத்து கொண்டவருக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை

இங்கு படுக்கையில் அமர்ந்திருந்த ஆகாஷோ காலையில் தேவா(தேவம்மாள்) பேசியதை தான் நினைத்து கொண்டிருந்தான்...

"ஆகாஷ்..." என அழைத்தவர் சிறிது நிமிட மௌனத்திற்கு பிறகு "அவ வெளிய போயிருக்கா...நீ போயி அவளை கூட்டிட்டு வா..." என்றார்... அதில் கோபம் கொண்டவனாய்

"அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற டார்லி..." என்றான் எடுத்த எடுப்பிலேயே. அதற்கு அவரிடம் பதிலில்லை என்றதும் அமைதியான அதே சமயம் அழுத்தமான குரலில் "ஐ கான்'ட்.. அஸ்க் சம் ஒன் எல்ஸ் டு கோ ஐ ஒன்'ட் கோ..."என்றான் ஆங்கிலத்தில் (என்னால முடியாது.. வேற யாராவது போக சொல்லுங்க நான் போக மாட்டேன்..)

அவன் சற்றே இறங்கிய குரலில் பேசவும் அவனுக்கு புரிய வைக்கும் நோக்கில் "இங்க பாரு ஆகாஷ் அவ வளர்ந்த முறை வேற... மத்த நாள் மாதிரி இந்த நாளும் இருந்திருந்தா நம்ம காட்ஸ வைச்சே அவளை நான் வாட்ச் பண்ண சொல்லி இருப்பேன்... பட் இன்னைக்கு அப்படி இல்லை... எல்லா மீடியா கண்ணும் நம்ம ஃபேமிலி மேல தான் இருக்கும். அவ ஏதாவது ஏடாகூடமாக பண்ணி வைக்கறதுக்குள்ள நீயே போயி அவளை கூட்டிட்டு வந்திடு... அவளை ப்லோ பண்ற நம்ம காட்ஸ் கிட்ட லொகேஷன் அனுப்ப சொல்றேன்..." என தேவா கூறியதும் மீண்டும் சீற்றத்தின் உச்சிக்கே சென்றவன்

"உன் தீடிர் பேத்தியை பாத்துக்க நான் ஒன்னும்.. ம்ம்ப்ச்...என்னால முடியாது பாட்டி..." என்றான்...

"சரி, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை... இத்தனை நாள் வீட்டுல தான் உன் அத்தையையும், மாமனையும் அசிங்கப்படுத்திட்டு இருந்தா... இன்னைக்கு ஏர்போர்ட்ல வைச்சு அசிங்கப்படுத்த போறா அவ்வளவு தான்... அதுக்காக நீ எதுவும் பண்ண வேண்டாம் பேராண்டி... இவ்வளவு நாள் எப்படி கண்டுக்காத மாதிரி இருந்தயோ இப்பவும் இருந்துக்க..." என தன் வழமையான கிண்டல் பேச்சில் முடித்தார் தேவா...


அதற்கு மேல் நடந்தது தான் மேலே கூறிய நிகழ்வுகள்...

சிகையை அழுந்த கோதி கொண்டவனின் காதில் தேவா கூறியது இன்னும் மின்னும் கேட்டது. தனிப்பட்ட முறையில் அவள் மேல் இருக்கும் கோபத்தில் தன் அத்தையின் வீட்டிற்கு செல்லாமல் விட்டது தவறோ என நினைத்தவன் அடுத்த நிமிடமே தேவாவிடமும், அகிலனிடமும் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிருந்தான்.

அவன் வெளியில் சென்றதும் தான் தேவாவிற்கு மூச்சே வந்தது... பின்னே ஆறு மாதங்களாக அவளை பார்த்து கொண்டு தானே இருக்கிறார்... அவளின் ஓவ்வொரு பேச்சும், செயலும் இவர்களை காயப்படுத்த மட்டுமே இருக்கும்.. அதில் தேவி நாச்சியார் காயப்பட்டு போகிறாரோ இல்லையோ தேவாவின் மகன் தான் காயப்பட்டு போவார்...

*****

சென்னை ECR இல் உள்ள சிறந்த பப்பில் நின்றது அவனின் (Mercedes-Benz) மெர்சிடிஸ் பென்ஸ்.. அருகிலிருந்த பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி பூட்டிவிட்டியவன் வழக்கம் போல் தன் முகமூடியையும்,சன் கிளாசையும் அணிந்தப்படி உள்ளே சென்றான்...

பிரிட்டிஷ் பப்கள் போன்ற அமைப்பில் இருந்தது அந்த பப்...
உள்ளே நுழைந்ததுமே இன்றைய கால ரசனைகளுக்கு வடிவமைக்கப்பட்டு இருந்தது அந்த பப்..சிவப்பு சுவர் கொண்ட சிவப்பு சோஃபாக்கள் மற்றும் மங்கலான வெளிச்சம், இருண்ட சூழல், அற்புதமான சுவர் கலை,பல நீல நிற நிழல்கள் என பார்ப்பதற்கே அத்தனை கவர்ந்தது அந்த இடம்... உள்ளே நுழையும்போதே இளைஞர்களின் வைப்ஸ் மோகம் நன்றாகவே புரிந்தது...

ஒரு புறம் டிஜே தன் அட்டகாசமான இசையால் அங்கிருப்பவர்களை ஆட வைத்து கொண்டிருந்தார்... மறுபுறம் அதை ரசித்தப்படியே தொழில் முறை பேச்சுகளும் நடந்துக் கொண்டிருந்தது...

கூட்டத்தின் நடுவே கண்களை சுழல விட்டவனின் விழிகளில் சிகப்பு நிற சோபாவில் பதுமையாய் அமர்ந்திருந்தவள் விழுந்தாள்.

அவள் இருந்த நிலை அவனுக்கு அத்தனை கோபத்தை கொடுத்தது.. கோபத்தை அடக்க கையை மடக்கி ஒவ்வொரு விரலாக சொடக்கெடுத்தப்படியே அவளை நோக்கி நடந்தான்.

பழுப்பு நிற திரவத்தை கண்ணாடி குடுவையில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தவள் ஆள் அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் விழிகளில் தெரிந்த சீற்றம் துளியும் அவளை பாதிக்கவில்லை என்பதை போல "ஓ நீயா.... உ.... ன் அத்தை வரலயா..." என சிறு இதழ் சுளிப்போடு கேட்டவள் தடுமாறியப்படி எழுந்து நின்றாள்.


" என்ன நினைச்சுட்டு இதெல்லாம் பண்ணிட்டு இருக்க நீ..." வார்த்தைகளை பல் இடுக்கில் வைத்து கடித்து துப்பினான் .

"லூக் மிஸ்டர் ஆகாஷ் வானவராயன். நான் என்ன வேணாலும் பண்ணுவேன். இது உனக்கு தேவை இல்லாத வேலை. அதை கேட்க உனக்கு எந்த ரைட்ஹும் இல்லை.உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு..." என வார்த்தைகள் போதையில் குழைந்து வந்தாலும் அழுத்தமாகவே கூறினாள்.

அவள் பேச்சில் கோபத்தின் உச்சிக்கே சென்றவன் சட்டென அவளை நெருங்கி அவளின் சிற்றிடைக்குள் கையிட்டு தன்னை நோக்கி இழுத்தான்... அவன் இழுத்ததும் சட்டென அவனின் மார்ப்போடு முழுவதும் மோதி நின்றாள். அவளின் விழி விரிப்பை கண்டு கொள்ளாமல் சிற்றிடையை இன்னும் இறுக்கி பிடித்து

"நான் இருக்கற வரைக்கும் நீ நினைக்கற எதுவும் நடக்காது... நடக்கவும் விட மாட்டேன்..." என அவளின் அதிர்ந்த விழிகளுக்குள் தன் விழிகளால் ஊடுருவியப்படியே கூறியவன் அவளை தோளோடு அணைத்தப்படியே அங்கிருந்து விலகி வந்திருந்தான்.

****

நான்கு திசைகளிலிருந்தும் பளிச் பளிச் என்று கேமராக்கள் தன் ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்க அதெல்லாம் கண்டுகொள்ளாமல் முன்னேறி நடந்தவரை பிரஸ் மீடியாக்கள் சூழ்ந்து விட்டது. எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் 'மக்களுக்கும் இறைவனுக்கும், எனக்கு உறுதுணையா இருக்கற என் குடும்பத்துக்கும் நன்றி...' கூறிவிட்டு விலகி விட்டார் தேவி நாச்சியார்.

நிலவன் கூறியதை போலவே அன்று இரவே மும்பையிலிருந்து சென்னை வந்து இருந்தனர் தேவி நாச்சியாரின் குடும்பம்.

ஒரு இந்திய பில்லியனர் தொழிலதிபரின் குடும்பம் என்ற மிடுக்கோ, பகட்டோ இதுவரை எவரும் காட்டியதில்லை... அவர்களின் வயதிற்கு ஏற்ப முதிர்ச்சியும், தன்னடக்கமுக்கும் நிறைந்தே இருந்தது... அது எப்போதும் போல அங்கிருந்தவர்களை அதிசயிக்க வைத்தது...

"ஆராத்தி எடுத்துட்டு வா செல்வி..." என்ற தேவம்மாளின் குரலில் அவரசமாக வெளியில் வந்தார் அந்த வீட்டின் வேலையாள் செல்வி...

ஆராத்தி தட்டை கையில் வாங்கியவர் தன் எதிரில் மருமகளுக்கு தானே ஆராத்தி சுற்றினார்...

"எதுக்கு அத்தை இதெல்லாம்..." சிறு சிரிப்போடு கேட்ட தன் மருமகளை பார்த்தவர்

"நீ சும்மா இரு, எத்தனை கண்ணுப்பட்டு இருக்கோ தெரியல..."என்று ஆராத்தி சுற்றி விட்டு செல்வியிடம் தட்டை கொடுத்து விட்டு மருமகளை அணைத்து விடுவித்தவரிடம்

"ஆகாஸ் எங்க அத்தை,.." என தன் பார்வையை சுழல விட்டப்படிக் கேட்கவும் அந்த ராட்சச கேட்டை தாண்டி ஆகாஷின் வாகனம் வரவும் சரியாக இருந்தது.

அவன் வாகனம் நின்ற அடுத்த நிமிடமே காரை விட்டு தள்ளாடியபடி இறங்கினாள் தேவி நாச்சியாருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவளான நறுமுகில்.

' அடப்பாவி சரியா தப்பான நேரத்தில கூட்டிட்டு வந்துட்டியே டா...' என நினைத்த தேவம்மாளோ சற்றே கலவர முகத்துடன் தன் பேத்தியை பார்த்தார்.

தள்ளாடிய நடையோடு வீட்டை நோக்கி வந்தவள் வாசலில் நின்ற கும்பலை கண்டதும் "ஓ எல்லாரும் வந்தாச்சா..." நக்கலாக கேட்டவள் பின்

"எங்க என்னை பெத்த தெய்வத்தை காணோம்..." எனக் கேட்டபடி நடந்தவள் கால் இடறி விழ போக

"குட்டிமா பார்த்து..." என பதறி அவளை பிடிக்க ஓடினார் அவளின் தந்தையும் தேவி நாச்சியாரின் கணவரான இளம்பிறையன்.

அவரின் குரலில் சட்டென தன்னை சுதாரித்து நின்று கொண்டவள் "பிளீஸ் டோண்ட் கம் நியர் மீ மிஸ்டர் பிறை... ஐ டோண்ட் வான்ட் இவென் யூர் ஷேடோ டூ ஃபால் ஆன் மீ..." எனக் கை நீட்டி தடுத்தாள். (பிளீஸ் என்கிட்ட வராதீங்க மிஸ்டர் பிறை... உங்க நிழல் கூட என் மேல பட நான் விரும்பல...)

அவள் அப்படி கூறியதும் சட்டென கலங்கிய கண்களை மறைக்க முயன்று தோற்றார் அவளின் தந்தை இளம்பிறையன்.


 
Last edited:

Mr D devil

Moderator
நறு என்னடா இப்படி இருக்கிறாள்? இன்னோருத்தி அமைதியானவாளடா
இன்னொருத்தியா... அவளுக்கு நான் எங்க போவேன் தங்கமே 😝😝😝😝
 

Mr D devil

Moderator
நறு என்னடா இப்படி இருக்கிறாள்? இன்னோருத்தி அமைதியானவாளடா
உங்களுக்காக நான் ஒரு வாரம் முழுவதும் காத்திருந்தேன் தங்கமே
 

Mr D devil

Moderator
போட்டது தெரியவில்லைடா. அதனால் படிக்கவில்லைடா
நினைத்தேன்... தெரிந்து இருந்தால் படித்து இருப்பீர்கள் என்று
 

Advi

Well-known member
முகில்க்கு என்ன பிராப்ளம், அவ ஏன் இப்படி எல்லாம் நடக்கற🤔🤔🤔🤔

தேவி தான் அம்மா, ஆன அப்பா அம்மா மேலையே இவளோ ஏன் வெறுப்பு????

இரட்டை பிள்ளையா முகில் ஓட டுவின் நிலவன் ஆ🤔🤔🤔🤔
 

Mr D devil

Moderator
முகில்க்கு என்ன பிராப்ளம், அவ ஏன் இப்படி எல்லாம் நடக்கற🤔🤔🤔🤔

தேவி தான் அம்மா, ஆன அப்பா அம்மா மேலையே இவளோ ஏன் வெறுப்பு????

இரட்டை பிள்ளையா முகில் ஓட டுவின் நிலவன் ஆ🤔🤔🤔🤔
Wow.... Tqq dr. Amala yen
 
Top