எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எலியும் பூனையும்??

பகுதி - 1

“மாங்கல்யம் தந்துனானேன

மமஜீவன ஹேதுநா

கண்டே பத்நாமி ஸுபகே

த்வம ஜீவ சரதஸ் சதம்”


என்னும் இந்த மந்திரத்தை ஐயர் சொல்ல ...“மங்களம் நிறைந்தவளே! உன்னோடு அமைந்த இந்த இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும்!! என்று இந்த புனித திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன்.

என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுபபோகங்களுடன் நூறாண்டு வாழ்வாயாக!”

என்ற பொருளை உணர்ந்து நாதன் …. அம்முவின் கழுத்தில் அந்த பொன் தாலியை பூட்டினான்…

நாதனனோ!! இனி வரும் காலங்கள் எல்லாம் இவளோட தான்…. ஆனா இவ என்னை புரிஞ்சிக்கனுமே!!என்ற பரிதவிப்பில் ஊர்ல இருக்க எல்லா சாமிக்கிட்டையும்!! என்னை காப்பாற்றும்… இல்லை இல்லை எங்களை காப்பற்றும் என வேண்டிக்கொண்டான்….

அவள் கழுத்தில் தான் கட்டியிருந்த அந்த புது தாலிக்கும்!! அவள் நெற்றி வகிட்டிலும்!! இவள் என்னுடையவள் என்ற உரிமையில் அவன் குங்குமத்தை சூட்ட… அவளோ அவனை ஆழமாக பார்த்தாள்…

அவளின் பார்வையில் ஆயிரம் கேள்விகள் இருப்பது புரிந்தும் புரியாத மாதிரியே நடந்துக்கொள்பவனை அவளும் அறிந்தே இருந்தாள்….

இருவரின் மௌன மொழிகளுக்கு இடையில் வாழ்த்து சொல்ல வந்தவர்கள் வரிசையாக வர !! அவர்களை அழைத்து வந்த கார்முகில் நாதனின் கை பிடித்து வாழ்த்துக்கள் மாப்பிள்ளை.. என அவனை வாழ்த்தினான்..

அம்முமா!! நீ எவ்வுளோ அடி அடிச்சாலும் தாங்கிக்குற ஒருத்தனை உனக்கு கட்டிவச்சிட்டோம்… இனி நான் எக்ஸ்கேப்!!!என அவளை எப்போதும் போல வம்புப்பண்ண அவளோ ரொம்ப மரியாதையாக அண்ணா!!! இங்க ஒரு நிமிஷம் வாயேன்….

என்னையா மாமா கூப்பிட்டிங்க!! இதோ வரேன் … என கூப்பிடாத மாமாவை நோக்கி ஓடியவனை கண்டு சிரித்தாலும்…. அண்ணனுக்கே இந்த நிலை எனக்கு என்னலா காத்து இருக்கோ என வந்த பயத்தை வெளிக்காட்டாமல் வந்தவர்களை எல்லாம் அறிமுகம் படுத்தினான்...அவளும் அவளுக்கு தெரிந்தவர்களை எல்லாம் இவனுக்கு அறிமுகம் படுத்தினாள்…

பிறகு சில நொடிகளில் அவளை அவளுக்கே தெரியாமல் ரசித்து கொண்டே!!வந்தவர்களை கவனித்து கொண்டு இருந்தான்…

மச்சான் மோதிரம் போட வாங்க!! என ஐயர் கூப்பிட… மேடை ஏறிய கார்முகிலோ மோதிரத்தை போட்டு விட்டு அவனின் காதுக்கு மட்டுமே கேட்குமாறு மாப்பிள்ளை!! நீ அவளை ரொமாண்டிக் பார்வைனு நம்பி ஒரு பார்வை பார்க்க்குறியே… அதை என்னாலையே பார்க்க முடியல...நல்லவேளை இன்னும் அவ உன்னை பார்க்கல ….என சிரித்தவனை ஏன் மச்சி உன் கல்யாணத்துல நீ தர்ஷினியை பார்த்தியே ஒரு பார்வை!! அதே மாதிரி டிரை பண்ணேன்.. நீ என்னடான இப்படி சொல்லிட்டியே என அவனை டேமேஜ் பண்ணினான்…

இவர்களை கண்ட உற்றாரும் உறவினரும் நல்ல “மாப்பிள்ளை மச்சான்” என செல்லம் கொஞ்சி போக...அட கண்றாவியே!!...இவனுங்க அலைப்பறை தாங்கல என மனதிற்குள் நக்கலடித்தாலும் அம்முவும் அவர்களை ரசித்து கொண்டாள்…

காலையில் இருந்து அம்முவின் கடைகண் பார்வைக்காக ஏங்கிக்கொண்டு இருந்த நாதனை… கண்டுக்கொள்ளாத அம்முவின் கண்களில் தெரிந்த ரசிப்பையும் இதழ்களில் தெரிந்த முறுவலையும் கண்ட நாதனுக்கு கடுப்பாக இருந்தாலும்….இப்பவாச்சு இவ என்னை பார்த்தாலே என்ற எண்ணமே மனதை மகிழ்ச்சி கொள்ள செய்தது…

டேய் கார்.. அவுங்களை சாப்பிட கூட்டிட்டு வாடானு அனுப்புனா நீ என்ன மொக்கப்போட்டுட்டு இருக்க?? என திட்டிக்கொண்டே வந்த அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை குகன் .... எவ்வளவோ சொன்னேன்!!… இப்படி என் பேச்சை கேட்காம பாழும் கிணத்துல விழுந்துட்டியே சகலை என அவர் பங்குக்கு அம்முவை ஏற்றி விட… மாமா!! அக்கா வரா பாருங்க என அம்மு பூச்சாண்டி காட்டினாள்… அவரோ போடி உங்க அக்கா என்ன பெரிய ஆளா?? என அவரின் மனக்குமுறலை எல்லாம் அள்ளி விட்டுக்கொண்டு இருக்கும் போதே வாசுகியே மேடைக்கு வந்துக்கொண்டிருந்தாள்..

கார்முகிலின் கடைக்கண் பார்வையில் வாசுகி பட… மாமா இனியும் நீங்க வாய் பேசுனீங்கன அப்புறம் எல்லாம் உங்க விதி என்றவனின் உள்குத்து புரிய!! அந்தர்பல்டியாய் பேச்சை மாற்றி வாசுகியிடம் மாட்டக்கொள்ளாமல் தப்பித்தவரை கண்டு அங்கே ஒரு சிரிப்பலை….

சகலை நீங்க பெரிய ஆள் தான் போங்க!! என பாரட்டிய நாதனிடம் எல்லாத்துக்கும் இந்த நல்ல ஆத்மா தான் காரணம்…என கார்முகிலை காட்டினார்..

என்ன பண்றது??? எல்லாம் என் விதி!! என்னடா விதி?? என கேள்வி கேட்டுக்கொண்டே நெருங்கி வந்த வாசுகியிடம் அது ஒன்னும் இல்ல டி!! உங்களுக்குலா அண்ணனா இருக்கேன்ல அதை தான் டி சொன்னேன்….

நாங்க எல்லாம் உன் தங்கச்சியா பிறக்க நீ எல்லாம் கொடுத்து வச்சுயிருக்கனும் பக்கி என அவனை அடக்கிவிட்டு … அம்மு பசி தாங்க மாட்டானு உங்களை எல்லாம் அனுப்பி வச்சா எல்லாம் கதை பேசிக்கிட்டே இருக்கிங்க என அவர்களுக்கு ஒரு குட்டு வைத்து அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றாள்…

விருந்து முடிந்து மணப்பெண்ணையும் மணமகனையும் போட்டோ எடுக்க போட்டோகிராபர் கூட்டி வர சொல்ல…. நாதனோ இதோ வந்துட்டேன்!! என கத்தாத குறையாக மேடை ஏறினான் இவனுக்கு மாறாக அம்மு கடுப்பாக ஏறினாள்…

நாதனின் மனக்குறையை அறிந்த மாதிரியே…அந்த போட்டோகிராபர் அவனுக்கு அவரை அறியாமலே பல உதவிகளை செய்யலானர்..

கரும்பு திண்ண கூலி வேண்டுமா என்ன?? போட்டோகிராபர் எள் என நிக்க சொன்னால்!! நாதன் எண்ணெய் ஆக நின்றான்… இவர்களின் அலப்பறையில் அம்மு தான் திண்டாடிப்போனாள்…

இது எல்லாம் பத்தாது என அவனுடைய நண்பர்களும் அம்முவுடைய நண்பர்களும் அவர்களை வம்பு செய்ய அங்கே அம்மு மட்டுமே தவித்துப்போனாள்…

இதை எல்லாம் புரிந்து இருந்தாலும்!! இந்த நொடிகளை வீணாக்க நாதனுக்கு மனம் இல்லை…போட்டோகிராபர் எந்த போஸ் கொடுக்க சொன்னாலும் உள்ளார்ந்த அன்புடனும் காதலுடனும் செய்ய ஆரம்பித்தான்… அவள் கை பிடித்த போது அவள் கை நடுங்கினாலும் அவனின் பிடியில் அது மெல்ல மெல்ல மறைந்தப்போது அவனுடைய மனம் இன்னும் இன்னும் காதல் கொண்டது…

அவளுக்கு பிடிக்காதோ என்ற எண்ணிய ஒரு மனதை!! அவளின் ஒரு தொடுதல் தட்டி எறிந்தது… பிறகு அவன் அவளை அணைத்த போது!! வாகாய் அவள் கைக்குள் அடங்கிப்போனாள்… உலகமே அவன் கைக்குள் அடங்கிய உணர்வு…. அவன் கண்ணை பார்க்காமல் இவ்வுளவு நேரம் கடத்தியவளை வம்படியாக அவன் கண்ணோடு கண் பார்க்க வைத்தார்..அந்த போட்டோகிராபர்!! வாய் பேச்சு எதுவுமே இல்லாமல் அவனுடைய மொத்த காதலையும் அவன் கண்களின் வழியே அவன் கடத்த !! சில நொடிகளுக்கு மேல் அவளுக்கு அந்த கண்களின் காதலை ஏற்க முடியாமல்!! தலை குனிந்துக்கொண்டாள்…கூடியிருந்த அனைவரும் வெட்கமாம் மக்களே!! என அவர்களை கலாய்க்க…உண்மை தெரிந்த இருவரும் சிரித்தே மழுப்பினர்…

எல்லாம் முடிஞ்சிச்சு பா!! நீங்க கிளம்பலாம் என்று கிளம்பிய போட்டோகிராபரை ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தான் நாதன்…

திருமணம் விழாவும்..விருந்தும்.. இனிதே நிறைவு பெற மணமக்களை புகுந்த வீட்டுக்கு அழைத்து சென்றனர்…

அம்முவிற்கு என்னவோ தெரிந்த வீடு தான் ...இருந்தும் தன் குடும்பத்தை விட்டு செல்வது கஷ்டமாக இருந்தது.. அதை புரிந்து கொண்ட நாதனும் அவளின் போக்கிலே அவளை இருக்க விட்டான்... வீட்டுக்கு வந்தவுடன் அவளிடம் சொல்லிவிட்டு குடும்பம் விடை பெற!! கண்கலங்கியவளை அவளுடைய தாயும் தகப்பனும் அணைத்து ஆறுதல் படுத்தி கிளம்ப… அண்ணன் கார்முகிலும் அக்கா வாசுகியுமே கண்ணீர் மல்க நிற்க தர்ஷினியும்… குகனும் தான் அவர்களை நிதர்சனத்துக்கு கொண்டு வந்து கலகலப்புடனே அவளிடம் விடைப்பெற்றனர்..

கார்முகிலோ!! ஒரு அண்ணனாகவும் நாதனின் தோழனாகும் அறிவுரை என்ற பெயரில் சில மிரட்டல்களையும் விட்டு சென்றான்…

அடப்பாவி!! இவன் தங்கச்சி சிரிச்சி சந்தோஷமா இல்லனா எனக்கு பால்டாய்ல் கொடுத்துடுவேனு சொல்லறானே !!! பாவிப்பய… இவ மேல ஆசைப்பட்டு கட்டுன பாவத்துக்கு உயிர் பயத்தைலா அனுபவிக்கனும் போலையே தனக்கு தானே பேசிக்கொண்டே ரூமிற்குள் சென்றான்…

அடேய் நாதா!! அதுக்குல்ல லூசா மாறிட்டியா??? என அவன் தங்கை கண்மணி நக்கலடித்த பின்னரே அவன் மைட் வாய்ஸ் என நினைத்து சவுண்டாக பேசியது தெரிந்தது…

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என சொல்லும் ஆண் பரம்பரையில் பிறந்தவன்” ஆயிற்றே… ஏய் யாரு லூசு…போடி எருமை…. போயி அண்ணனுக்கு ஒரு காபி எடுத்துட்டு வா என அவளை அனுப்பி விட்டு உட்கார்ந்தவனை அவனுக்கு வந்த போன் கால் எழுப்பியது… பேசிக்கொண்டே அந்த ரூமிற்கு ஓரத்திற்கே சென்று விட்டான்..

அம்மு இந்த ரூம்ல நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு !! நான் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து எழுப்புறேன் என அவளை ரூமிற்குள் விட்டு சென்ற அத்தை போனதும் அவளும் அசதியில் படுத்துவிட்டாள்… அங்கே ஏற்கனவே இருந்ந நாதனை அம்மு கவனிக்கவேயில்லை… அவனும் கொஞ்சம் நேரம் கழித்தே அவளை அங்கே கவனித்தான்…

ரோசக்காரி!! ஒரு வார்த்தை பேசுறாளா பாரேன்...கல்யாணம் பண்ணிட்டு இவளை எப்படி எல்லாம் பார்த்துக்கலானு கனவு கண்டா...இவ கோவத்தை தீர்க்கவே பல மாசம் ஆகும் போலையே ஆண்டவா.. என அவளை ரசித்து கொண்டே இருந்தவனை அவனின் தாயாரின் குரல் நினைவுக்கு திருப்ப...

என்ன மா ?? என்னை கூப்பிட்டியா??? டேய் ரொம்ப நேரமா கூப்பிடுரேன்….அவ ரெஸ்ட் எடுக்கட்டும் நீயும் கொஞ்சம் படுப்பா என மகனின் தலை கோதி சென்றார்..
 
டாம் & ஜெர்ரியாய் சண்டையிட்டும்!! அன்புக்கொண்டும் சேரும் இரு துருவங்களின் கதை....
 
Last edited:
பகுதி 2

அம்மு !! அவள் மாமியார் காட்டிய இடத்தில் தூங்க இவனோ அவளையே பார்த்து கொண்டு இருந்தான்..

புருஷனு ஒருத்தன் இருக்கானே!! அவன் என்ன பண்றான்??ஏது பண்றானு நினைக்காம தூங்குறதை பாரு ...

எருமை மாடு!! என அவளை வஞ்சினாலும் அவள் வஞ்சி முகத்தை பார்த்துக்கொண்டே இருந்த அவனுக்கோ பழைய நினைவுகள் எல்லாம் கரைபுரண்டு வந்தது...

“அம்மு" அவனின் வாழ்க்கையே மாற்றியவள்..

அவனுடைய துணையாய் என்று அவள் தோன்றினாலோ!! அந்த கணத்தில் இருந்து…. அவளை தவிர ஒருத்தியை நினைக்காமல் விரதம் பூண்டவன்!! நாதன்…

அவளை பற்றின நினைவளைகள் வந்தப்பின்னர் அவனுடைய எண்ணங்கள் அவனுடைய குடும்பத்தை சுற்றி வந்ததது…

நால்வரை அடக்கிய அக்மார்க் தமிழ் குடும்பத்தில் பிறந்தவன்…தந்தை ராஜன் , தாய் லக்ஷ்மி தங்கை கண்மணியுடன் அவனுடைய குடும்பமே அவனுக்கான பலம்…

நடுத்தர குடும்பமே என்றாலும் அவர்களை நல்ல படியாக படிக்க வைத்தும்…நல்லதை சொல்லிக்கொடுத்தும் வளர்த்து இன்று அவன் ஒரு இன்ஜினியர் என்பதில் அவனை விட பெருமை கொண்டவர்கள்..

வேலையை கருத்தில் கொண்டே எதிலும் கலந்துக்கொள்ளாமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருந்தவனை அவனுடைய அப்பாவும் அம்மாவும் விடாபிடியாக உறவினர் திருமணம் என கூட்டி சென்றனர்... அவனும் இந்த நாள் தன் வாழ்க்கையில் நிகழ்த்த போகும் மாயம் தெரியாமல் சென்றான்..

உற்ற உறவினர் திருமணம் என வம்படியாக இழத்து சென்றாலும்!! அவனோ ஒரு ஒதுக்கு புறமாக அமர்ந்து கொண்டான்... சுற்றிலும் எப்போதோ சந்தித்த முகங்கள் எல்லாம் பழைய கதை பேசிக்கொண்டு இருக்க.. இவனோ அனைவரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்...

ஒரு இடத்தில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்க!! அவனுடைய கவனம் அங்கே சென்றது…

அங்கோ சிறார்களும் அவர்களுக்கு நடுவே ஒருத்தியும் உட்கார்ந்து கதை அளந்து கொண்டு இருந்தார்கள்.... அவள் பேச பேச அவளுடைய கண்களும் பேசுவதை கொஞ்சம் சுவாரஸ்யமாக பார்த்து கொண்டு இருந்தான்... அதே சுவாரஸ்யம் தான் அந்த சிறார்களுக்கும்..

யாரோ அவளை பார்ப்பது போல இருக்க !! நோட்டமிட்டவளின் கண்களுக்கு அவன் பட்டான்!!! இவனா ?? அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டானே…என நினைத்து கொண்டாளும் மீண்டும் சிறுவர்களுடன் தன் விளையாட்டை ஆரம்பித்து விட்டாள்… பாவம் அவனுக்கு தான் அவளை அடையாளம் காண முடியவில்லை..

அந்த விழா முழுக்க அவன் அவளின் சுட்டித்தனத்தையும் வாய்ப்பேச்சையும் ரசித்துக்கொண்டே நேரம் போக்கினான்…

விழா முடிந்து பல நாட்கள் ஆகியும் அவளின் நினைவு அப்போ அப்போ வந்து போய் கொண்டு இருக்க… எதேச்சையாக ஒரு நாள் முகநூலில் அவளின் முகம் தென்பட …உள்ளே சென்று பார்த்த பின்பு தான்…அவனுக்கு அவள் யார் என புரிந்தது… அச்சோ அந்த குட்டி பொண்ணு தான் இவளா!! இது தெரியாம போச்சே… என தோன்றியதும் அவளுக்கு ஹாய்!! என மெஜேஜ் பண்ணினான் …

யார் டா இவன்?? நமக்கு மெஜேஜ் பண்ணி இருக்கான்… என பார்த்தவளுக்கோ… கொஞ்சம் அதிர்ச்சி தான்…

அமுக்குளி” என பெயர் பெற்ற நாதன் தான்… நம்ப முடியாமால் மீண்டும் மீண்டும் பார்த்தவளுக்கு அவனுடைய அடுத்த மெஜேஜ் நம்பவைத்தது…

இவனிடம் பேசலாமா வேண்டாமா என யோசித்து கொண்டிருந்தவளை அவனின் அடுத்த மெஜேஜ் கூப்பிட்டது..

அவனை பற்றிய அனைத்து விசயங்களை தெரிந்து இருந்ததால் அவளும் ஹாய் நாதன்… என பதில் மெஜேஜ் அனுப்பினாள்…

அம்முவை பற்றி அவனுக்கு பெரிதாக தெரிந்தியிருக்கவில்லை…ஆனால் அவளுடைய பேச்சு அவனிடைய இருந்த ரசிப்பு தன்மையை உசிப்பியிருந்தது… அதான் எதையும் யோசியாமல் அவளுக்கு மெஜேஜ் செய்தான்…

சின்ன சிரிப்புடன் பழைய நினைவுகளில் மிதந்தவனை மீண்டும் தாயின் குரல் நிகர் காலத்துக்கு கொண்டு வந்ததது…

சொல்லுங்க மா… என சில நொடிகளில் அவர்கள் முன் நின்ற மகனை கண்டு இன்றும் பெருமையாகவே இருந்தது!!அந்த தாய்க்கு…

நாதா!! கல்யாணத்தை விசாரிக்க சுப்ரமணி தாத்தாவும் சுமதி பாட்டியும் வந்து இருக்காங்க!! அதான் கூப்பிட்டேன்… நீ போய் அவுங்க கிட்ட பேசிட்டு இரு..நான் அம்முவை எழுப்பி அனுப்புறேன் என்றவரின் வார்த்தைக்கு மறு பேச்சு பேசாமல் சென்றவனை கண்டு… முருகா !! சீக்கிரமே என பையனும் மருமகளும் ஒருத்தர் ஒருத்தரை புரிஞ்சு வாழ்க்கையை ஆரம்பிக்கனும் என்றபடியே அம்முவை எழுப்ப சென்றார்..

வாங்க தாத்தா.. வாங்க பாட்டி என புன்னகையுடன் வரவேற்றவனை எப்போதும் போல அந்த முதிய தம்பதி அன்போடு அணைத்துக்கொண்டனர்…

என்ன பாட்டி கல்யாணத்துக்கு வரமா என்னை ஏமாத்திட்டியே?? என சண்டையை ஆரம்பித்த போது அம்மு வந்துவிட… அவனின் கவனம் அவளிடம் சென்று மீண்டது…

அம்முவும் நாதனுக்கு குறையாத அன்புடன் வரவேற்க.. என்ன பாட்டி தாத்தா எதுமே பேசாம இருக்கிங்க உங்களை தான் என் பொண்டாட்டி கூப்பிடுற… என்ன என் பொண்டாட்டி அழகுல மயங்கிட்டிங்களா?? என வம்புப்பண்ணியவனை கண்டு அவர்கள் சிரிக்க இவளோ வராத சிரிப்பை வந்த மாதிரி காட்டிக்கொண்டாள்..

காலையில் இருந்து தன்னை இம்சித்தவளை கொஞ்சம் கடுப்பேற்ற இந்த சந்தர்ப்பம் தான் சரி என்ற முடிவோடு…என் பொண்டாட்டி கூட உங்களை காணோம்னு தேடினா என்றவனின் புரியாத மாதிரி பார்த்தவளை அவன் கண்டுக்கொள்ளவேயில்லை… அவனை நம்பிய அந்த பாட்டியும் அப்படியா அம்மு?? என அவளிடம் ஆசையாக கேட்க அவரை ஏமாற்றாமல் ஆமா பாட்டி நாதன் நீங்க வருவீங்கனு சொன்னனால உங்களை எதிர்பார்த்தேன் என அவள் வாயலையே மாட்டிக்கொண்டாள்..

ராசாத்தி… புருஷனை பெயர் சொல்லி தான் கூப்பிடுவியா?? என கேட்ட பாட்டியிடம் என்ன பதில் சொல்வது என முழித்தவளை கண்டு உள்ளுக்குள் ரசித்துக்கொண்டே.. நான் தான் பாட்டி பெயர் சொல்லியே கூப்பிட சொன்னேன்!! என்று நல்லவன் மாதிரி அவளை காப்பாற்றினாலும் அவனின் கள்ள சிரிப்பில் எல்லாத்தையும் கண்டுக்கொண்டாள்..

அம்மு… நம்ம குடும்பங்களுல புருஷனை அத்தான் தானே கூப்பிடுவோம்… ஏன் உனக்கு அப்படி கூப்பிட பிடிக்கலயா?? என்ற பெரியவளை… ஏய் சும்மா இருடி… நம்ம காலம் மாதிரி அத்தான் மாமானுட்டு… சின்ன பிள்ளைங்க அவுங்களுக்கு பிடிச்ச மாதிரி கூப்பிட்டு கிட்டும் என பெரியவர் அடக்கினார்…

அத்தான் என்ற வார்த்தை கேட்டவுடனே அவளை அறியாமல் அவள் கண்கள் அவனை தேடியது… அவளை ஏமாற்றாமல் அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்..
 
Last edited:
பகுதி 3

அம்மு!! நாங்க கிளம்புறோம் என்ற பாட்டி தாத்தாவின் வார்த்தைகள் அவள் செவியை எட்டியப்போது தான்… அவளுக்கு நினைவே வந்தது..

நாதன் தன் மனதை கண்டுக்கொண்டு விட்டானோ!! என்ற பயத்தில் அவனை பார்த்தவளுக்கோ .. வந்தவர்களை வழி அனுப்பிக்கொண்டு இருந்த அவனின் முதுகு தான் தெரிந்தது..

அவராச்சு கண்டுபிடிக்கிறதாச்சு…!! என அவளே ஒரு முடிவுக்கு வந்து தன் அத்தையை தேடி போனவளை... பின் தொடர்ந்த போன கால்களை அடக்கினாலும் அவன் மனதை அடக்க முடியவில்லை…ஏன்டி உன்னை எனக்கு தெரியாத?? பாக்க தான் திமிரு பிடிச்சவ ஆனா சரியான அழு மூஞ்சி என அவளை பற்றி மனசினுள்ளையே பேசிக்கொண்டான்…

டேய் எருமை… எவ்வுளோ நேரம் இப்படியே மனசுலையே பேசிட்டு இருப்ப??? உன்னைய நம்பி என் தங்கச்சியை கட்டிக்கொடுத்துட்டேனே!!… என கார்முகிலின் குரல் கேட்டு இவன் திரும்பி பார்க்க அவனோ கையில் பைகளுடன் நின்றிருந்தான்..

டேய்?? காலையில தான போன திருப்பியும் வந்துட்டியா என்றவனை ஏன்டா?? தங்கச்சியை கட்டிக்கொடுத்துட்டு அப்படியே போய்டுவேனு பார்த்தியாக்கும்... அண்ணன் டா!! என கேப்டன் விஜயகாந்த் மாதிரி பேசியவனை சாமி ஏற்கனவே உன் தங்கச்சி இம்சை!! இதுல காலையில போன இந்த அண்ணன் இம்சையும் வந்தோன கொஞ்சம் பயந்துட்டேன்… என்ற நாதனின் வார்த்தைகளை கேட்டு அச்சோ பாவம்!! என நாதனின் தலையை தடவிக்கொண்டே… என்ன பண்றது மாப்பிள்ளை எல்லாம் நீயா தேடின விதி என சீரியஸாக கலாய்த்தான்…

என்ன பார்த்த நாய்க்குட்டி மாதிரியா இருக்கு?? கையை எடுடா … நல்லவேளை இதை நாய் கேக்கல என்று மீண்டும் நக்கல் அடித்தவனை ...

ஐயா சாமி போதும் முடியல!! அழுதுடுவேன் என்ற நாதனை மேலும் கடுப்பேற்றாமல் கையில் இருந்த பைகளை அவன் கையில் திணித்தான்..

சரி சரி இந்தா பிடி சீக்கிரமா குளிச்சுட்டு இந்த டிரேஸ் போட்டு கிளம்பு என்றவனை இப்ப எதுக்கு புது டிரேஸ் ??? என கேட்டு அய்யோ உன் தங்கச்சியால எனக்கு இது கூட மறந்து போச்சுடா!! என வழிந்தவனை… மாப்பிள்ளைக்கு வெட்கமாக்கும்!! புள்ளை குட்டியை படிக்க வைக்க வேண்டிய காலத்துல வெட்கம் வேற… ஒழுங்குமரியாதையா சீக்கிரம் கிளம்பு.. இந்த கண்டராவியலாம் என்னால பார்க்க முடியல என திட்டிக்கொண்டே அவன் வெளியேறினான்...

நாதனுக்கோ அவனுக்கும் அவளுக்குமான தனிமை கிடைக்க போவதை எண்ணி துள்ளல் வந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு பயமும் வர தான் செய்தது..

அங்கோ அம்முவை உட்கார வைத்து ஒரு பெரிய போராட்டமே நடந்துக்கொண்டிருந்தது… அய்யோ அண்ணி!! என்ன ஏன் இவ்ளோ கொடுமை பண்றிங்க?? என கதறியவளை ஏய் சும்மா இரு டி...இதுலாம் பண்ணா தான் நீ கொஞ்சம் ஆச்சு பொம்பளை பிள்ளை மாதிரி இருப்ப என கருத்தாய் பேசியவளை …. அண்ணீ !!! என்ற அம்முவின் குரல் ஒன்றுமே செய்யவில்லை…

இவற்றை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த லெட்சுமி தான் மருமகளை காப்பாற்ற வந்த தேவதையாய் … தர்ஷினி போதும் மா… பாவம் அம்மு உன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறா பாரு என்றவரை…. அய்யோ இவ பாவமா?? இவகிட்ட மாட்டுன நீங்க எல்லாம் தான் பாவம் என நகைத்தவளை தொடர்ந்து லெட்சுமி அம்மாவும் நகைக்க…
அத்தை நீங்களுமா!!!… என்ற மாதிரி பார்த்த அம்முவை இருவரும் சேர்ந்தே அணைத்து கொண்டனர்..

நாதனை அழைத்து போக வந்த கார்முகில்…தன்னை காக்க வைக்காமல் கிளம்பி இருந்த நாதனை பரவாயில்லை இப்பவாச்சும் பொறுப்பா மாறினியே!! என கையை பிடித்து இழுத்து சென்றான்…

டேய் நான் என்னை சின்ன பையான?? விடு டா … ஏய் மணி ஆச்சு நல்ல நேரத்தில நீ ரூமுக்குள் போன தான எனக்கு சீக்கிரமா மருமகள் வருவாள்!! என்றவனின் ஆசை நாதனின் கண்களிளும் தாவியது… என்னை விட நீ நல்லா பிளான் பண்ற மேன் நீ!!! தேங்க் யூ பார் தி காம்பிலிமென்ட்…. நீயும் கருத்தா இருந்து சீக்கிரமே என்னை மாமன் ஆக்க வாழ்த்துக்கள்!! என என்று பெரியவர்கள் முன் நிற்க வைத்தான்…

வீட்டின் பெரியவர்கள் எல்லாம் கூடியிருந்து புதுமண தம்பதிகளை ஆசிர்வதித்து… நல்ல நேரத்தில் நாதனை ரூமுக்கு அனுப்பி விட… அம்முவையோ தர்ஷினி அழைத்து சென்றாள்…

மனதில் பல வித உணர்ச்சிகள் வந்த மயம் இருக்க …அவளின் முகத்தையே பார்த்து கொண்டு வந்த தர்ஷினிக்கு அவள் மனம் புரிந்தது… அவளை ஒரு நிமிடம் நிறுத்தி அம்முமா!! இனி நீ சின்ன பொண்ணு இல்ல… பொறுப்பா இருக்கனும்.. என அவள் சொல்லுவதையே பய பக்தியுடன் கேட்டு கொண்டிருந்தவளை… இப்படிலா சொல்லுவேனு பார்த்தியாக்கும்… நீ நீயா இரு அம்மு அதான் உனக்கு அழகு!!…. என்று நெற்றி முத்தம் கொடுத்து ரூமிற்குள் அனுப்பிய அண்ணியின் சிரிப்பு இவள் முகத்திலும் படர்ந்து இருந்தது…

ரூமிற்குள் வரும் போதே சிரித்த முகத்துடன் வந்த அம்முவை கண்ட நாதனுக்கு மனது நிறைந்துப்போனது…

தன்னை பெண்ணாய் உணர வைத்தவனின் முன்னால் மனைவியாய் நின்றவளுக்கோ அவனை நேர் கொண்டு பார்க்கவே முடியவில்லை… அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து கொண்டு இருந்தவனுக்கோ அவளை சீண்ட ஆசை பிறந்தது…

வாங்க அம்மு… ஏன் அங்கையே நின்னுட்டீங்க?? என்றவனின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அவனிடம் சென்று நின்றதும் அவனின் கால்களில் விழுந்து ஆசிர்வாதத்துகாக தலையை தூக்கியவளின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை…

அவள் நிமிடத்தில் அவனின் கால்களில் விழுந்ததை அவனும் எதிர்பார்க்கவில்லை!!…

அடுத்து என்ன செய்வது?? என்று முழித்தவனை கண்டு சிரிப்பு வந்தாலும்… நீங்க இப்ப என்ன ஆசிர்வாதம் பண்ணனும்!! என்றவளின் வார்த்தையை கேட்டு ஏய் மொத எந்திரி நீ!! என்ற எழுப்பியவனை உங்களுக்கு இதுலா பிடிக்காதுனு தெரியும் என்ற செய்தி அவனுள்ளே தென்றலை வீசியது…

ஸ்லோ மோட்சனில் அதை கொஞ்சம் பீல் பண்ணும் முன் அத்தை சொன்னதுனால செஞ்சேன்!!! என வெட்டுற மாதிரி பேசியவளை பார்த்து இவளை வச்சிக்கிட்டு நான் எப்படி குடும்பம் நடத்தி பிள்ளை பெத்து…
ஓ காட்!! என மைட் வாய்சில் பேசினாலும் அவனுடைய முகம் அவனுடைய மனக்கதறலை வெளிப்படுத்தியது…

அய்யே லூசு!! என்ற மாதிரி பார்த்தவளை …

என்ன மேடம்?? அடுத்து என்ன செய்ய சொன்னாங்க உங்க அத்தை?? ம்ம்ம் உங்களுக்கு இந்த பாலை கொடுக்க சொன்னாங்க ங்க… ஓ!! அப்ப கொடுக்க வேண்டியது தான??… நீங்களே குடிச்சிடுங்க எனக்கு வேணாம் என்றவளின் பேச்சை எல்லாம் மதிக்காமல் இந்தா நான் குடிச்சிட்டேன்… இது உன் பங்கு நீ குடி… என்றவனை இல்ல எனக்கு வேணாம்..இப்ப நீயா குடிக்கிறியா இல்ல நானே உன்னை குடிக்க வைக்கவா?? என்றவனின் கேள்வி முடியும் முன் அவனை முறைத்தவாறு மீதமிருந்த பாலை குடித்து முடித்தாள்…

அடுத்து மா??? இதுக்கு அப்புறம் உங்க அத்தை என்ன பண்ண சொன்னாங்க?? படுத்து தூங்க சொன்னாங்க என்றவளின் கண்களில் இருந்த கேலியை கண்டுக்கொண்டவனோ...இல்ல அதுக்கு முன்ன சில மேட்டர் இருக்கு டி… சரி அதை எல்லாம் நானே உனக்கு சொல்லி தரேன்...

முதலில நீ என் பக்கத்தில வந்து உட்காரு!! என்றவனை ஒரு மாதிரியாய் பார்த்தவளை பயப்படாத!! நான் எதுவும் பண்ணமாட்டேன்… என்றவனை நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது??? என அவளுக்குள் இருந்த அம்மு எகிரி குதித்து உங்க பக்கத்திலா உட்கார முடியாதுனு சொல்லு!!! என அவளுக்கு சொல்லிக்கொடுத்தாலும்… அமைதியாக அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்…. ( அவள் உள் மனதோ!! நீ ஒரு மானங்கெட்டவ டி!! என திட்டி விட்டு அமைதியாகியது)

நாம இப்படி இருக்கிறது நிஜம் தானா?? என கேள்வி கேட்டவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவனுடைய கையில் கிள்ளி விட்டாள்… அடிப்பாவி!! ஓ இந்த வாய் பேசாதோ!! என வலிக்காத மாதிரி அவள் குமட்டில் குத்தியவனை முறைத்தாலும் அமைதியாக இருந்தவளை… ஏய்!! அப்பலாம் எப்படி வாய் ஓயாம பேசுவ …எனக்கு அந்த அம்மு தான் வேணும் என ஆசையில் கதை கதையாய் பேச ஆரம்பித்து பத்து நிமிடம் ஆகியும் குனிந்த தலையை நிமிராமல் இருந்தவளை …என்ன டி ?? தூக்கம் வருதா என்றவனின் கேள்வி முடியும் முன் மண்டைய மேலும் கீழும் ஆட்டியவளை பார்க்க பாவமாக இருக்க… சரி நீ படு… நான் கீழ படுக்குறேன் என்றான்..
 
பகுதி 4என்னங்க??? என அவள் கூப்பிட்டும் அவன் திரும்பாமல் இருக்க… ஏங்க உங்களைத்தான் என அழுத்தமாக கூப்பிட்டவளின் குரல் என்னையா மா கூப்பிட்ட??? என பம்மாத்து காட்டினான்!! நாதன்…

இந்த ரூம்ல நீங்களும் நானும் தான இருக்கோம்… உங்களை கூப்பிடாம வேற யாரை கூப்பிடுவாங்க என பதிலுக்கு பொரிந்தவளை…சரி சொல்லுமா எதுக்கு கூப்பிட்ட?? நீங்களும் மேலையே படுங்க என்றவளை ஆசையாக பார்க்க ஆரம்பித்த கண்களை அவள் பார்க்கும் முன் மாற்றிவிட்டான்…

அம்மு… இந்த மெத்தை உங்க அப்பா அம்மா உனக்காக வாங்கிக்கொடுத்தது மா?? அதுல நான் எப்படி மா படுக்குறது??? நீ யூஸ் பண்ணிக்க … நான் கீழே படுக்குறேன் என அந்த ரூமில் இருந்த பாயை எடுத்து விரிக்க போனவனை… சரி அப்ப நானும் கீழேயே படுக்கிறேன் என்றவளை நான் சொல்றதை கேளு நீ மேல படு ….

அத்தை மாமா பெத்த பொண்ணை கல்யாணம் பண்ணுவாராம்…. அவுங்க வாங்கிக்கொடுத்த கட்டில் மெத்தைல படுக்கமாட்டாராம்!!! இவரோட அலப்பறை தாங்கல என முணுமுணுத்தவளின் குரல் அவனுக்கும் நன்றாகவே கேட்டது..

ஏய்!! என்ன சொன்ன?? ஒன்னும் இல்லையே… எனக்கு நல்லா காது கேட்கும் டி !! …

இப்ப என்ன தான் சொல்ல வர அம்மு?? எனக்கு தூக்கம் வருதுங்க…. சரி நீ என ஆரம்பித்தவனை முறைத்தவளை… சரி நீ இவ்ளோ சொல்றனால நான் மேல படுக்குறேன் என்றவனை ஐயா சாமி!! உங்க கருணைக்கு மிக்க நன்றி…

படுப்போமா?? படுப்போமேனானு அவன் மெத்தையில் படுத்ததும் தான் அவள் படுத்தாள்..

அம்முக்கு இருந்த தூக்கத்திலும் இவனுடன் மல்லுக்கட்டி ஏற்பட்ட களைப்பிலும் படுத்த பத்தாம் நிமிடத்தில் நித்திரையில் ஆழ்ந்து விட்டாள்..

நாதனுக்கோ துளியும் தூக்கம் வரவில்லை… எப்போதும் போல அவனுடைய பாடல் தொகுப்பை மெல்லிய ஒலியில் கேட்க ஆரம்பித்தான்..

அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் ஒலிக்க…மனமும் கண்களும் அவளை நோக்கி நகர்ந்தது…என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை

சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை

அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை

நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ

அவள் வான்மேகம் காணாத பால் நிலா

இந்த பூலோகம் பாராத தேன் நிலா
வரிகள் ஒவ்வொன்றும் இவளுக்கே எழுதியது போல இருந்தது.... பாட்டை நிதானமாக ரசித்துக்கொண்டே அவளையும் ரசித்துக்கொண்டுருந்தான்…

என் செல்லத்துக்கு மாமன் மேல அவ்வுளோ கோவமா ?? என அவளை பார்த்து பேச ஆரம்பித்தவனுக்கு நினைவு அவர்களின் முதல் உரையாடலை நோக்கி சென்றது..

அன்று!! அம்முவின் பதில் வந்ததும் சந்தோஷம் தான்…. அம்மு!! மாமா..அத்தை..கார்முகில் அப்புறம் உங்க அக்கா வாசுகி எல்லாம் எப்படி இருக்காங்க?? என அவளை அவன் தெரிந்து கொண்டான் என்பதை ஒரு கேள்வியில் கேட்க… என்ன பாஸ்?? இப்ப தான் நான் யாருனு கண்டுபிடிச்சீங்களா?? என சிரித்து மெஜேஜ் அனுப்பி அவனை டேமேஜ் செய்தவளை… இல்ல டா மா!! நான் பார்த்த அம்மு டக்குனு இவ்ளோ பெரியவளா மாறிப்போனது எனக்கு தெரியலை மா என்றவனை…. அப்புறம் உங்க வாழ்க்கை எப்படி போது?? என எந்த வித அலங்காரமும் இல்லாமல் பேசியவளின் தோரணை அவனுக்கு பிடித்து இருந்தது.. அன்று அவர்கள் பேச்சு முடிந்து டாட்டா பாஸ்!! என்று ஆப்லைன் சென்ற பின்.. மழை பெய்து ஒய்தது போல் இருந்தது…

இன்றோ!! இவளை ஒரு வார்த்தை பேசவைக்க நான் நூறு வார்த்தை பேச வேண்டியதாய் இருக்கே.. என அவளை கண்ணத்தை வருடிக்கொண்டே மெல்லிய குரலில் பேச அவளோ அவனுடைய தொடுதலில் சுகம் கண்ட மாதிரி அவனிடம் ஒட்டிக்கொண்டாள்…

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும்போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்!


என்ற பாடல் வரிகள் வர!! அவளை லேசாக அணைத்து கொண்டான்.. அவளும் அவனை ஒட்டிக்கொண்டாள்…

அவள் ஒட்டிக்கொண்டவுடன்!! அவ்வுளவு நேரம் வாராத தூக்கம் அவன் கண்களை தழுவியது… ரொம்ப நாள் கழித்து நிம்மதியாக தூங்கினான்..காலையில் ஆறு மணிக்கே எழுந்து பழகிய நாதனுக்கு.. அன்றும் விழிப்பு வந்துவிட….கண் விழித்தவனுக்கோ படுக்கையை விட்டு எழ முடியாமல் அம்மு அவனின் நெஞ்சில் தலை வைத்து தூங்கி கொண்டிருந்தாள்…

என் பொண்டாட்டி லேட்டா எந்திரிச்சு பழகினதுல இவ்ளோ நல்லது இருக்கா!!! இதுக்கூட சூப்பரா இருக்கே.. என அந்த நொடிகளை கண் மூடி அனுபவித்து கொண்டு இருந்தப்போது அம்மு கண் விழித்து விட்டாள்..

கண் விழித்ததும் தலையனை அல்லாத ஒன்றில் தன் தலை இருப்பதை உணர்ந்து நன்றாக பார்க்க!! அச்சச்சோ இப்படியா இவ்வுளோ நேரம் படுத்து இருந்தோம்?? தலையை தூக்கி நாதனை பார்க்க அவனோ தூங்கிக்கொண்டிருக்க… பிள்ளையார் அப்பா!!! என்னை காப்பாத்து.. என மெதுவாக அவனை தொந்தரவு செய்யாமல் எழுந்தவளின் பக்கம் அன்று விநாயகர் இல்லை மாறாக அவளின் பதியின் பக்கத்தில் நின்றுக்கொண்டார்…

அமைதியோ அமைதி!! அமைதிக்கெல்லாம் அமைதி என மனதில் சின்சாங் டைலாக் எல்லாம் சொல்லிக்கொண்டே எந்திருக்க… விதி அவளை அவனிடமே மாட்டிக்கொள்ள செய்தது…

 
பகுதி 5

சிவாஜிக்கே டப் கொடுக்கும் வகையில் நடித்து ஏமாற்றி கொண்டிருந்தவனுக்கு…அதுக்கு மேல் பொறுமை இல்லாமல் ஓரக்கண்ணால் அவளை பார்க்க அவளோ படு சீரியஸாக அவளுடையை தாலியுடனும் அவனுடைய செயின் உடனும் மல்லுக்கட்டி கொண்டிருந்தாள்..

நிலமையை சட்டென புரிந்து கொண்டவனோ!! அப்போது தான் எழுந்திருப்பவன் போல கண் விழிக்க!! அவளோ திரு திரு என முழித்துக்கொண்டிருந்தாள்..
என்ன அம்மு?? எழுந்திட்டியா என எழ?? மீண்டும் அவன் மேல் சாய்ந்து விட்டவளை வாகாய் ஏந்திக்கொண்டான்....நாதன்

பிள்ளையார் அப்பன் கொடுத்த நொடிகளை வீணாக்காமல் அவளை அணைத்து கொள்ள... அவளோ அவனுடைய செயின் உடன் மாட்டிக்கொண்ட தன்னுடைய தாலியை எடுப்பதிலையே குறியாக இருந்தாள்...

அம்மூ!!! என்ற அவனின் அழுத்தமான குரல் இது.... கொஞ்சம் நேரம் கையை காலை ஆட்டாம படு...நானே எடுத்து விடுறேன்... என்றவனை மறுத்து இல்லை நானே !! என வாய் எடுத்தவளை அவனுடைய சொல்றேன்ல மா.... அவளின் நாவையும்!! கைகளையும் அடக்கி அவனுடைய அணைப்பில் அமைதியாக இருக்க செய்தது...

மிரட்டுனா தான் காரியம் நடக்கும் போலயே!! என தன்னுடைய சோக கீதத்தை நெஞ்சில் வாசித்துக்கொண்டே அவளை இன்னும் தன்னுள் புதைத்து கொண்டான்...

அவனுடைய குரலில் அடங்கினாலும்!! மனதில் பிள்ளையார் அப்பா என்னை காப்பாற்று!! என அரற்றி கொண்டிருக்க... அவனோ அவளை தன்னுள் ஒட்டிக்கொண்டு தலையை வருடி.. அவளுடைய நெற்றியில் முத்தம் பதித்தான்...

அவனுடைய ஈர உதடு அவளுடைய நெற்றியில் ஒட்டி எடுத்த பிறகும் அவளுடைய விழிகள் அவன் விழிகளை பார்க்காமல் இருக்க... மேலும் அவளை வம்படிக்காமல் அவனின் செயினில் சிக்கியிருந்த தாலியை பிரித்து அதற்கும் ஒரு முத்திரை பதித்து அவளுடைய கழுத்தை நோக்கி வந்தவனின் செய்கை புரிய... அவனுடைய கைகளை கிள்ளி விட்டு சிட்டென பறந்து விட்டாள்..

அம்முவின் கால்கள் நேரே சென்று நின்றது ; குளியலறை... அங்கு சென்றப்பின்னயே அவளுடைய மூச்சு சீரானது... அவளுடைய காதல் கொண்ட மனது அவள் கணவனின் செல்ல சீண்டல்களிலும் , பார்வைகளிலும் , அவளுடைய கோபம் கொண்ட மனத்தை கூட கடைப்புரளத்தான் செய்தது...

என்னத்தான் அம்முவின் சுயமரியாதை அவளின் மனத்துக்கு கட்டுப்பாடு விதித்தாலும் ; அதையும் தாண்டியே அவனுக்கு பணிந்து போனவளின் போக்கு அவளுக்கே புரியவில்லை ?? குனிந்து யோசித்து கொண்டுயிருந்த அவளின் தலை நிமிர்ந்த போது அவளின் நிழல்படம் அவளுக்கு பதிலை சொல்லியது..

நேற்றுவரை அவள் கழுத்தில் இல்லாத தாலி அவனுடைய உரிமையை அவளுக்கு சொல்லியது....

அவளின் மனதின் பேச்சையும் ; மூளையின் பேச்சையும் அலசி ஆராய, இது நேரம் இல்லை என அந்த வீட்டின் மருமகளாகிய அவளின் அறிவு சொல்லியதும்.. நேரம் கடத்தாமல் அவளின் காலை வேலைகளையும் குளியல் வேலையையும் சீக்கிரமே முடித்து அன்று அலர்ந்த மலர்போல் வெளிவந்தாள் நாதனின் மனைவியான அம்மு...

வெளிவந்தவளின் கண்களில் சிக்கியது என்னவோ ; சிறுபிள்ளையேன நடைப்பழகி கொண்டுயிருந்த அவளின் வளர்ந்த குழந்தை... அவளின் தாய்மையுணர்வு கணவனை, அவளின் குழந்தையேன ரசிக்கத்தான் செய்தது.. அந்த கனிவோடவே நாதனை அடைந்தாள் அம்மு...

தன் பக்கத்தில் நிழலாட கண்ட நாதன்; திரும்பி தன்னுடைய சரிப்பாதியைய் கண்டு அவ்வுளவு நேரம் தான் கொண்ட சிறுபிள்ளை கோபத்தை மறந்து அவளின் கனிந்த முகத்தை கண்டு உவகை கொண்டான்..

அவர்கள் வாழ்க்கையின் முதல் நாளான அன்றைய தினத்தை பாழ் செய்ய ரெண்டுபேருக்குமே மனம் இல்லை... தங்களின் கசப்புகளை மறந்து இனிப்பான நிகழ்வுகளை நினைவில் கொண்டு பழைய நாதனாகவும் அம்முவாகவும் பேச ஆரம்பித்தனர்....

என்ன அம்மு சீக்கிரமே குளிச்சிட்ட ?? ஒரு மணி நேரம் தான் ஆகுது டி... எது ஒரு மணி நேரமா ஆச்சு... என்னத்த நீங்களா இஞ்சினியர் படிச்சு வேலைக்கு போயி...ஒரு டைம் பார்க்க தெரியல!!

ஏன் நிங்கத்தான் கத்து கொடுங்களேன்... யார் வேணானு சொன்ன ?? அதுலாம் அப்புறம் பாப்போம்... இப்ப போய் பல்லை விளக்கிட்டு குளிச்சிட்டு வாங்க பாஸ் ..நா வெளியப்போயி அத்தைய பாக்குறேனு ரூம் கதவை திறக்க நடந்தாள்...

அடியே நில்லுடி ஒரு நிமிசம் !! ம்ம்ம் சொல்லுங்க ?? ஏன்டி இப்ப நீ யாரு எனக்கு ?? ம்ம் ஏன் உங்களுக்கு தெரியாதா !! எனக்கு தெரியும் ஆனா உனக்கு நியாபகம் இருக்கா?? என்ன பாஸ் இப்படி கேட்டுட்டிங்க தாங்கள் தான் என்னுடைய மணாளன்...

என்ன டி சொல்ற?? பழைய வார்த்தை எல்லாம் போர் அடிச்சி புதுசா திட்ட வார்த்தை ஏதும் கண்டுபிடிச்சிட்டியா !! அச்சோ நீங்க என்னுடைய புருஷன்குறதை தான் அப்படி சொன்னேன்...

தமிழ்நாட்டு பையனு வெளியே சொல்லிடாதிங்க அப்புறம் என்னுடைய தமிழ்ப்பற்றுக்கு பெரிய கலங்கம் ஆயிடும்... ஆத்தா உன் தமிழ்ப்பற்றப்பத்தி ஊருக்கே தெரியும் டி... ஆனா உன்னோட தமிழ் மரபு என்ட மட்டும் மறந்து போய்டுமோ??? நா என்ன மறந்தேன் பாஸ் !! அடியே நா என்ன உன்னை பொண்டாட்டியா வேலைக்கா சேத்துயிருக்கேன் பாஸ்னு கூப்பிடுற ?? ஓ உங்களுக்கு அப்படிலா வேற ஒரு ஆசையா கொலைபண்ணிடுவேன்...

கொல்லப்போறேனு சொன்னவளின் பக்கத்தில் அவளை ஒட்டி நின்றவனை குறுகுறுனு பார்த்தவளை... ம்ம் கொல்லு டி !!! என்ற நாதனின் வார்த்தைகளில் கோபம் இல்ல..திமிரு இல்லை மாறாக எதோ ஒரு ஏக்கம் இருந்ததை அம்மு கவனிக்கவில்லை..

என்னை கொல்லு!! என அவளுடைய கணவன் நிற்க.. அவளோ அந்த வார்த்தையின் பொருளை அப்படியே புரிந்து கொண்டு கண்கலங்க நின்றாள்..

இம்புட்டு பாசத்தை என்மேல வச்சிட்டு சண்டாளி எப்படி டி அழுத்தமா இருக்கா?? என மனதில் கருவிக்கொண்டே... ஏய் லூசு , என்னைய பாருடி நீ விளையாட்டுக்கு சொன்ன மாதிரி
தான் நானும் சொன்னேன்..

அதும் இல்லாம நா வேற மாதிரி கொல்லுறதை சொன்னேன்.. இதுக்கு போய் கண்ணை கசக்குற... அது என்ன வேற கொல்றது ???? என்றவளின் கேள்விகான பதிலை உடனே அவளுக்கு புரியவைக்க சொன்ன மனதை அடக்கி... இப்ப வேணாம் அத்தான் அப்புறம் சொல்றேன் என அவளை அவ்விடத்தில் இருந்து கிளப்பும் விதமாக நீ போயி உங்க அத்தையை பாரு நான் குளிச்சிட்டு வரேன் ...

சரி என மண்டையை ஆட்டி கிளம்பியவளை... மா!! இன்னிக்கு நான் போட வேண்டிய டிரேஸை நீயே எடுத்து வச்சிட்டு போ என்றவனை ஏமாற்றாமல் அவனுக்கான உடையை எடுத்து மெத்தையில் எடுத்துவைத்தே அம்முவும் வெளி வந்தாள்..

அவளுடைய கால்கள் அவளை பூஜை அறையில் இருந்த அவளுடைய பிள்ளையார் அப்பனிடம் இழுத்து செல்ல...விநாயகா !! எல்லோரையும் நல்லா பாத்துக்க...எதையும் தாங்குற சக்தியை குடுப்பா... யார் மனசையும் நா புண்படுத்தக்கூடாதுனு என எப்போதும சொல்லும் வார்த்தைகளை கூறி மனமுருகி வேண்டி விளக்கு ஏற்றினாள்..

கடவுளிடம் வேண்டிக்கொண்டு...அத்தையை தேடி சமையல் அறைக்கு போனவளை..என்ன அம்மு இவ்ளோ சீக்கிரமே எந்திருச்சிட்ட?? அத்தை நேத்து நீங்க எங்க அம்மாக்கூட பேசிட்டு இருந்ததை தடுத்து நிறுத்தாம போனது என் தப்புனு இப்ப புரியுது அத்தை...

ஏன் அம்மு அப்படி சொல்ற என்ற பெரியவரை ... அட ஆமாம் அத்தை..இப்ப பாருங்க என்னைய பத்தி அ முதல் ஃ வரை எல்லாமே தெரிஞ்சிப்போச்சு...இனி நான் எப்படி உங்களை கரெக்ட் பண்ண?? என சீரியஸாக பேசியவளை சரியான வாயாடி!! என கண்ணத்தை பிடித்து கிள்ள... அத்தை !!! கொஞ்சம் காபி கொடுத்துட்டு கிள்ளுனீங்கனா நீங்க நல்லா இருப்பீங்க!! என கெஞ்சியவளிடம் காபி டம்ளர்களை கொடுத்து சீக்கிரம் நீயும் குடிச்சிட்டு அவனுக்கும் கொடுத்துடு...சரி அத்தை!! என சென்றவளின் குறும்பு தனம் நிலைத்து இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார்!!!லெட்சுமி அம்மாள்...
 
பகுதி 6

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

அடியே என் அழகியே
ஏ புள்ள என்ன விட்டு எங்க போற
நீ வெக்கத்தை விட்டு வாடி
வீட்டை விட்டு வெளிய வாடி
உன் அழகான முகத்தை

நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேன்

காபித்தட்டோட ரூமுக்கிட்ட வந்த அம்முவோ ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனாள்... நாதனின் மியூசிக் பிளையர் அந்த அளவுக்கு இருக்க... அது பத்தாத குறைக்கு அந்த பாட்டுக்கு கோரஸ் பாடுறேன் என்ற பெயரில் கழுதை மாதிரி கத்திட்டுயிருந்தான்... நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே சொல்ற நக்கீரர் பரம்பரைல வந்த அம்மு அவனின் காந்த குரலில் கடுப்பாக என்னங்க கதவை திறங்க!! என கத்த அவனோ கதவை திறக்கவேயில்லை இதுக்கு மேல் முடியாது சாமி அத்தை கொடுத்த காபி தண்ணி ஆறிடும் போலையே என அவளின் அதீத மெனெக்கிடல் அந்த காபியை சுற்றி வர..
திறந்திடு சீசே!! என அந்த கதவை திறக்க ..அம்மு வந்தது கூட தெரியாம நம்ம புதுமாப்பிள்ளை குஷியா புது டிரேஸ் போட்டுகிட்டு அம்சமா அழகா ஆடிட்டு இருந்தான்...

அடப்பாவி மவனே என்னா ஆட்டம்!!! இவனுக்கு ஏதும் பேய் பிடிச்சு இருக்குமோ??

ஆமாண்டி அது பெயர்க்கூட அம்முவாம் னு அவளோட மனசு அவள எட்டி உதைச்சிச்சு ..இவன ஒன்னு சொல்லிடக்கூடாதே உடனே வந்துரும்... வரவர அது என் மனசா அவன் மனசானே தெரியமாட்டேங்குது !! என மனதுக்குள்ளேயே குமுறி கொண்டிருந்தாள்..

அம்மு என்ற ஒருத்தி வந்ததும்...நின்றதும் என எதையுமே கவனியாமல் பாட்டு கச்சேரில ஐக்கியமாயி இருத்த நாதனின் கவனத்தை ஈர்க்க கவனம் ஈர்ப்பு போராட்டத்தை அவன் கேட்கும் பாட்டை நிறுத்தி செய்தவளுக்கு ஒரு முடிவும் கிடைத்தது..

நாதனோட பரவசநிலையில் ஒரு மாற்றம் வர!! மெல்ல மெல்ல ஆட்டம் அடங்கி தன்னுடைய சுதந்திரத்தை கெடுத்த அந்த அன்னிய சக்தியை பார்க்க!! அங்கே அம்மு நின்றுக்கொண்டிருந்தாள்..

கடுப்பாக ஏன்டி நல்ல பாட்டக்கூட கேக்க விடாமாட்டியா ?? அதை தான் நானும் கேக்குறேன்... நல்ல பாட்ட கேட்கவிடாமாட்டிங்களா??? அப்புறம் ஏன்டி நிறுத்துன ?? என ஏத்தமாக கேட்டவனின் மண்டையில் பல்பு எரிய உனக்கும் இந்த பாட்டு பிடிக்குமா டி?? என ஆசையாய் கேட்டவனை எனக்கு பிடிச்ச பாட்டுங்குறனாலதான் அந்த பாட்டை உங்ககிட்டேந்து காப்பாத்த நிறுத்தினேன் என சீரியஸாக பதில் பேசினாள்..

நாதனோ அவளுக்கு தான் சளைத்தவன் இல்லை என்ற ரேன்ஜில் என்னோட திறமையைப்பத்தி உனக்கு இன்னும் சரியா தெரியல !! அதான் நீ இப்படி பேசுற.... என படு சீரியஸாக பேசிக்கொண்டு இருந்தவனை தெய்வமே கொஞ்சம் கிழக்கு பாத்து நில்லுங்களேன் என சொன்ன தன் பொண்டாட்டியை சந்தேகமாக பார்த்து கொண்டே ஏன் டி?? என்னை ஏதும் பண்ணப்போறியானு கேட்டுகொண்டே நின்றவனின் பக்கத்தில் வந்த அம்முவோ...

அத்தான் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கனு அவன் காலடியில் விழுந்தால்... விளையாட்டுக்கு எதோப்பண்ணப்போறானு எதிர்பார்த்து இருந்தவன் காலடியில் விழுந்தவளை அச்சோ அம்மு... என்னடி பண்ற ?? சரி உன்னை மன்னிச்சிட்டேன்.. என மீண்டும் அவளை கிண்டல் அடிக்க அவளோ தலையை நிமிர்த்தி அவனை பார்த்து ஓ!! துரைக்கு இப்படிலா நினைப்பு இருக்கோ??? ராசா உங்க அலப்பறை எல்லை மீறி போகுது கொஞ்சம் குறைங்க!! அப்புறம் சீக்கிரம் ஒரு நாலு நல்ல வார்த்தை சொல்லி என்னை எழப்பிவிடுங்க மேல!! கால் வலிக்குது என்றவளின் பேச்சை அதுவரை சுவாரஸ்யமா ரசிச்சிகிட்டு இருந்த நாதன் அவ வலிக்குதுனு சொன்ன மறுகணம் இப்ப என்ன டி?? உனக்கு நல்ல வார்த்தை சொல்லித்தான எழப்பனும்!!

எப்போதும் உன்னோட இந்ந அழகான முகத்துல இந்த அழகான சிரிப்பு இருக்கனும்.. நீயும் உன் புருஷனும் சந்தோஷமா இருக்கனும் என ஆசிர்வதித்தவனை அச்சோ ரொம்பத்தானு!! எந்திரிக்க முற்ப்பட்டவளை கை கொடுத்து தூக்கிவிட்டு ஏன்மா மகராசி!! காலையில புருஷன் காலுல விழுவதுலா சரியா பண்ற?? ஆனா ஒரு காபி எடுக்க போறேனு அப்பவே போனியே...... எங்கடி அந்த காபி?? என கதறியவனை ... எரித்து விடுவது போல் முறைத்தவளை பார்த்தே அவன் பண்ண அலப்பறைகள் மனக்கண்ணில் வர... தன் பொண்டாட்டியை மறு பேச்சு பேச விடாமல் அம்முமா நீ கொண்டு வந்த காபி பச்சத்தண்ணி ஆகுறதுக்குள்ள குடிப்போமா?? என அவளின் கவனத்தை தன்னிடம் இருந்து காபியின் புறம் மாற்றி விட்ட தன்னுடைய அறிவை தானே மெச்சிக்கொண்டே காபியை குடித்து கொண்டிருந்தவனை என்னங்க நீங்க பண்ண அலப்பறையில அத்தை சொன்னதை சொல்லவே மறந்துட்டேன்!! அத்தை நம்மளை சீக்கிரமா கிளம்பி வர சொன்னாங்க...என செய்தி சொன்னாள்..

அம்முவின் முகத்தை நிதானமாக பார்த்துக்கொண்டே ஏன்டி அம்மு என்னை என்னனு சொல்லி ஆசிர்வாதம் கேட்ட ?? நாதனின் கேள்வி அவளின் முகத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்த... அவளோ உடனே அதை மாற்றிக்கொண்ட படியே!! ஆசிர்வாதம் பண்ணுங்கனு!! கேட்டேன் மா...ஓ அப்படியா மேடம்ம் ; நீங்க சொன்ன சரித்தான்...

சரியான பாம்பு காதுதா !!இவருக்கு கேக்க கூடாதுனுதா வாய்க்குள்ளையே சொன்னேன்.... நமக்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ!!

அம்மு , உன் Mind voice இங்க கேக்குது...கொஞ்சம் மெதுவா பேசிக்க என அவளின் மனதை படித்த மணாளன் என நிருப்பித்தவனை!! கண்டு காதல் பொங்க தான் செய்தது... காதலின் முன் நின்ற பல கேள்விகளுக்கு பதில் வரும் முன் அதை வெளிக்காட்ட கூடாது.. என்ற அம்முவின் மனது அப்போதும் தடா போட... காபியை குடிச்சிட்டிங்களா?? சரி வாங்க வெளிய போலாம் என சமார்த்தியமாய் பேசிய மனைவியின் பின்னையே அவனும் எழுந்து நடந்தான்..

அழகான சின்ன சிரிப்புடன் நாதனும் அவனின் மனைவியான அம்முவும் வெளியே வர... மகளின் முகத்தில் இருந்த மலர்ச்சியை கண்ட அம்முவின் தாய்க்கோ அளவில்லா ஆனந்தம்...

கல்யாணம் முடிந்து நாதனின் வீட்டில் விட்டு சென்று ஒருநாள் முழுதாக முடியவில்லை!!
ஆனாலும் அவளை பிரிந்து பல நாள் ஆன மாதிரி தோன்றியது அத்தாய்க்கு... அதற்கு ஏத்தாற்ப்போல நாதனும் அடுத்த நாளே அவர்கள் குடும்பத்தையே கிளம்பி வருமாறு அழைக்க குடும்பமே அம்முவை காண ஓடிவந்து விட்டது..

நாதனின் பிளான் எதுமே தெரியாத அம்முவோ தாயை கண்டவுடன் கன்னுக்குட்டிப்போல அவளிடம் தஞ்சம் புகுந்துக்கொண்டாள்...
பிறந்ததில் இருந்து பிரியாத பந்தம்.. அம்முவின் அப்பா, அண்ணன், அண்ணி, அக்கா , மாமா அவுங்க வீட்டு குட்டி சாத்தனுங்கனு வீடே நிறைஞ்சு இருக்க... ஒரு நாள் பிரிந்த ஏக்கத்தை அவளின் வார்த்தையினாலும் பாவனைகளாலும் வாய் வலிக்க பேசிக்கொண்டேயிருந்தாள்...

பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருவதே இந்த திருமணம் தானே !!! என்னத்தான் அவளை மறந்து சில நொடிகள் சிறுப்பிள்ளை என பேசிக்கொண்டிருந்தாலும்... அவ்வீட்டின் மருமகளாய் அனைவரையும் வரவேற்று சாப்பிடவைத்தாள்.... அனைவரும் சாப்பிட்ட பின் அவர்கள் போட்ட வட்ட மேசை மாநாட்டின் மூலமே அம்முவிற்கு நாதனின் திட்டம் தெரிந்தது....

தண்டோரா போடும் விதமாக குடும்ப பெருமக்களே அனைவரும் குலதெய்வத்தை நோக்கிய நம் பயணத்தை மேற்கொள்ள வந்தமைக்கு நன்றி!! சரியாக இரண்டு மணி நேரத்தில் நம்முடைய பயணம் ஆரம்பிக்க போகிறது... எனவே சீக்கிரமே கிளம்புங்க மக்கா!! என கத்திய கார்முகிலை தொடர்ந்து அனைவரும் கிளம்ப ஆயத்தமாயினர்..
 
பகுதி 7
அம்முவிற்கான வாழ்க்கையை அவ யோசிக்கிற முன்னாடியே அவளுக்கும் நாதனுக்கும் கல்யாணம் என்றார்கள்!!... அவளிடம் பதிலையையும் எதிர்பார்க்காமல் எல்லா வேலையும் நடந்தது... அவளுடைய குழப்பத்தை அவர்கள் சம்மதம் என்று நினைத்து கொண்டு மும்முரமாக இருந்தார்கள்... உண்மையில் அவளுக்கு அவனை கட்டிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி தான்.....

முதல் காதல்!! அவள் மனதை ஆண்டுக்கணக்காய் ஆண்டு கொண்டு இருக்கும் அவளுடைய ஆசை கள்வன்.. என்றோ கணவனாய் அவள் நெஞ்சில் குடியேறியவனாய் இருந்தும் அவளுக்கு ஒரு தயக்கம் இருந்தது!! அவர்கள் திருமணத்தில்..

மூளையில் ரீங்காரமிடும் பல கேள்வூகளுடன் அவனை கட்டிக்கொள்வதில் மனம் இல்லை என்றாலும்!! அவளால் ஏதும் செய்ய முடியாத நிலையில் நிறுத்தி இருந்தனர்!! இதற்கு பின்னால் கார்முகிலும் நாதனும் இருப்பதை யூகித்து இருந்தாலும்... அவர்கள் சொல் படியே நடந்தும் கொண்டாள்..

அவளுக்கும் நாதனுக்குமான பனிப்போரை உடைத்து நாதனே மனதை சொல்ல வேண்டும் இவளும் வீம்பாய் நடந்துக்கொண்டாள்..அவனிடம் அவள் பேச ஆரம்பித்தப்போதும் ஒரு மெல்லியக்கோடு போல் அவளின் கோபமும் , ஈகோவும் அவனுடனான உறவை இன்னும் அழகாக எடுத்து செல்ல!! தடையாகவே இருந்தது...

தங்களின் சஞ்சலங்களை தங்களின் குடும்பத்தினரிடம் கூட பகிர்ந்துக்காமல் தாங்கள் பெரிய சுயமரியாதை சுயம்புலிங்கம்ல !!! என நிருப்பித்தார்கள்..அம்முவும் நாதனும்

அம்முவை புரிந்துக்கொண்டவனாய் அவளுடைய காதலனாய்!! கணவனாய் அவர்களுக்குள் இருக்கும் மாய திரையை விலக்கவே... நாதன் அவளையும் அவர்கள் குடும்பத்தையும் ஒரு பக்தி பயணத்தை மேற்க்கொள்ள திட்டமிட்டு அதை செயலாற்றவும் செய்தான்..

அம்முவிற்கு நார்மலாவே டூர் போறதுனா தேன்மிட்டாய் சாப்பிடற மாதிரி... அவளுடைய மனநிலைக்கு இந்த விசயம் அவளுடைய மனதில் சாரலை வீசி சென்றது..

டூர் என்பது இவளுக்கு மட்டுமே புதிய விசயமாய் இருந்தது..மற்ற எல்லோரும் ஏற்கனவே அதற்காக தங்களை ஆயத்த படுத்திக்கொண்டனர்... ஆக மொத்தம் நான் தான் இங்க லூசா?? என அவளுடைய கோபத்தை நாதனை முறைத்தே காண்பிக்க மாறாக அவனோ ஒரு பிளையிங் கிஸ்சை அனுப்பி அம்முவை நிலம் பார்க்க செய்தான்..

பிராடு!! என அவனை திட்டிக்கொண்டே தன்னுடைய துணிகளை அடுக்கிக்கொண்டிருந்தவளுக்கு அவர்களுடைய முதல் பஸ் பயணத்தின் நிகழ்வுகள் மனதை தொட்டு சென்றது..இருவரும் உற்ற தோழர்கள் ஆனது அந்த பயணத்தில் தான்...

நிகழ்வுகளை நினைத்துக்கொண்டே தன் வேலைகளை முடித்து தன்னுடைய குடும்பத்தினருடன் லூட்டி அடிக்க
நாதனோ தன் தாயையும் மச்சானையும் படாதபாடு படுத்திக்கொண்டுயிருந்தான்...

நாதன் தான் இந்த பயணத்தை மேற்கொள்ள யோசனை தந்ததே!! ஆனால் இந்த பயணத்தை உண்மையாக்க பாடுபட்டது என்னவோ நாதனின் அம்மாவும்!! கார்முகிலும் தான்!!...தங்கள் குடும்பத்தினரை கூட ஈசியாக சமாளித்த அந்த இரண்டு புனித ஆத்மாக்களால் நாதன் என்ற துஷ்ட சக்தியை மட்டும் சமாளிக்க முடியாத அளவுக்கு அவர்களை அன்பு தொல்லை செய்து!! பின் அவர்களின் பொறுமையை சோதித்து என பல வழிகளில் அவர்களை கொடுமை செய்து விட்டான்..அவர்களும் நாதனுக்கான அன்பு பரிசை இரகசியமாக அந்த பயணத்தில் புகுத்தி விட்டனர்..

அம்முவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற மகனின் ஆசையும்...தன் தங்கையின் ஆசையை செய்ய பாடுப்படும் தன் மாப்பிள்ளையின் ஆசைக்காவே அவர்களும் இந்த பயணத்தை ஏற்பாடு செய்தனர்...
அம்முவின் எண்ணத்தின்படி பேமிலி மூனை ஆயத்தப்படுத்த அவர்கள் யாவரும் கூடிவிட்டனர்.

பேமிலி மூன் என்ற ஐடியாவை எப்போதோ அம்மு நாதனிடம் சொல்லிருக்க!! அதை நியாபகம் வைத்து அவனும் அதை நடத்த திட்டமிட்டான்.. கோயில் என்றால் தான் அவர்கள் குடும்பத்தினர் கூடுவார்கள் என்று யோசித்து கூப்பிட்டாலும்!! அதற்குள்ளான ஒரு மலை பயணத்தையும் மறைத்து இருந்தனர்!! அந்த இரகசிய கமிட்டி...

டேய் நாதா சீக்கிரம் எல்லாத்தையும் கூட்டிட்டு வெளிய வாடா ... பஸ் வந்துருச்சு என கார்முகில் கத்த....
இதோ வரோம்டா அம்மா , அத்தை மொத நீங்களா போய் ஏறுங்க... அப்பா , மாமா நீங்க போய் உங்க ஜோடிக்கூட ஏறுங்க ...அப்புறம் தர்சினி , வாசுகி நீங்கப்போய் உங்க ஆத்துக்காரர்க்கும் பிள்ளைக்குட்டிக்கும் இடத்தை பிடிச்சிவைங்க.... அப்புறம் அத்தை மாமாக்களே , சித்தப்பா சித்திக்களே நீங்களும் குடும்பமா போய் ஏறுங்க ...அட ஆண்டாவ !! ஒரு குடும்பத்தை வெளிய கிளப்புறத்துக்குள்ள முடியலடா சாமி!! என கார்முகிலிடம் அலுத்துக்கொண்டிருக்க... நீதான இதை எல்லாம் இழுத்துக்கிட்ட என அவன் நக்கலடிக்க நாதனோ என்ன செய்ய பக்கி... இது!! எல்லாம் எம் பொண்டாட்டிக்காக .... ஆன அவளை பாரு என்னை கண்டுக்காம அலையிறா!! என பஸ்யில் ஏறப்போனவளை கண்ணால் மேய்ந்து கொண்ட சொன்னவனை...உமக்கு அந்த அமைப்புலா இல்லை போல!! என்ற கார்முகிலை பஸ்யில் ஏற சென்ற தர்ஷினியிடம் மாட்டிவிட்டு நாலு அடிகளை போடுமாறு தங்கைக்கு அறிவுறையும் வழங்கி சென்றான்..

குடும்பத்தினரை எல்லாம் ஏற்றி விட்டு ஏறிய நாதனின் உள்ளிருந்த அவன் மனது பொண்டாட்டி நமக்குனு இடம் பிடிச்சியிருப்பா!! என்ற கனவுடன் பார்க்க அவளோ வீட்டில் இருக்கும் சில்லுவண்டுகளுடன் சேர்ந்து பின்னால் இருக்கும் சீட்டை முழுதும் ஆக்கிரமித்து ஆட்டத்தை ஆரம்பித்து இருந்தனர்....அவளை கண்டு அவனுக்கோ ரசனை தான் பூர்த்தது...


இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழைக்ககூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதேசடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்ககாய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதேஎன்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன்ஹோய் ஹோய் அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே

அவளின் முகத்தில் இருக்கும் இந்த சந்தோஷத்திற்காக எதையும் தாங்கலாம் என்றே தோன்றியது!! அந்த அன்பு காதல் கணவனுக்கு...

டேய் !! போதும் மேல ஏறு .. படில நின்னுட்டே சைட் அடிச்சிக்கிட்டு நிற்கிற?? என கத்திய கார்முகிலை ஏன்டா நீ சொல்ல மாட்ட ?? உன் தங்கச்சி எனக்குனு ஒரு சீட் கூட போடாம பண்ற வேலைய பாரு பக்கி... ஹா ஹா ஹா!! டேய் லூசு பயலே கண்ணை நல்லா திறந்து பாரு மாப்பிள்ளை... உனக்குனு ஒரு விண்டோ சீட் காலியா இருக்கு பாரு என கார்முகில் காட்ட ஹே !!!ஆமாடா ... என்னை இருந்தாலும் என் பொண்டாட்டி என் பொண்டாட்டி தான்... என வழிந்தவனை பார்க்க முடியாமல்....ஏம்பா பஸ்ல எல்லாம் வந்தாச்சா ?? வண்டியை எடுப்போமா என்று கார்முகில் கத்த "ஓஓஓ" கோரஸ் பாடி கிளம்ப சொன்ன அந்த சவுண்ட் பார்ட்டி குடும்பத்தினரை ஏந்திக்கொண்டு அந்த பஸ் புறப்பட்டது...

பக்கத்தில இருக்க பிள்ளையார் கோயில்ல ஒரு பூஜையை போட்டுட்டு கார்யும் நாதனும் அவுங்க சீட்ல போய் செட்டில் ஆக... சந்தோஷமா போகலானு பார்த்த எல்லோரும் இப்படி சொந்தக்கதை சோகக்கதைனு பேச ஆரம்பிச்சிட்டிங்காளேனு நாதனோட மனச்சாட்சி அவனை சொரண்டி கேக்க ....இதுக்கு மேல முடியாதுடா நாதா!! ... பொங்கி எழு !!! என எழுந்தவனோ

என் அருமை சொந்தங்களே ; பாசமிகு பந்தங்களே னு தன்னோட உரையை ஆரம்பித்த நாதனையை மொத்த பஸ்யும் நமட்டு சிரிப்புடன் பாத்துச்சுங்க..ஏன் இவுன்ங்க என்னை இப்படி பாக்குறான்கனு ??? நாதனுக்கு தோனுனாலும் மனம் தளராம பேச்சை நிறுத்தாம பேசிட்டு இருந்தான்.. அப்பையும் அந்த மக்கள் கூட்டம் சிரிச்சிட்டே இருந்தது..
 
பகுதி 8

ஒருவன் உயிரை கொடுத்து கத்திக்கொண்டு இருக்கும் போது!! ஏன் இந்த மக்கள் எல்லாம் இப்படி சிரித்து கொண்டிருக்கீறார்கள் என பேந்த பேந்த விழித்து தன் பொண்டாட்டியை நோக்க அவளும் சிரித்துக்கொண்டிருக்க... அட ஆண்டவனே இவளுமா!!.... ஆனால் அவளுடைய பார்வை அவன் பின்னர் இருக்கும் உருவத்தை பார்த்தே சிரிப்பதை உணர்ந்தவனுக்கு புரிந்துவிட்டது... அவன் பின்னால் இருப்பது தன்னுடைய உடன்பிறந்த அறுந்த வால் என்று!!!

அடியேய்!! எருமை என அவளை புகழ ஆரம்பித்த நாதனின் வாயை அடைக்கும் விதமாய்.. பக்தா உன் துயர் தீர்க்க வந்த என்னை விரட்டாதே... இந்த அறியா பிள்ளை விளையாட்டாய் செய்த தவறை மன்னித்து இனி என்ன செய்ய வேண்டும்?? என்று சொல்லுங்கள் வினாடியில் முடித்து விடலாம் என்று பேசிக்கொண்டே சென்ற கண்மணியின் பேச்சு எப்போதும் போல அவனை ரசிக்கவே செய்தது...

இவர்களின் சம்பாஸனை ஏதும் புரியாத மக்களோ..கொஞ்சம் நேரம் அவர்களை பார்த்தும் ஒன்றும் புரியாமல் தங்களின் பேச்சை மீண்டும் ஆரம்பிக்க... இதோ இதான் டி !! என் பிரச்சனை என சொந்த கதை பேசிக்கொண்டு வந்தவர்களை காட்ட... இதோ உன் பிரச்சனைக்கு தீர்வு தந்தோம் பக்தா என்று எழுந்தாள்!! கண்மணி..

சொந்தங்களே!! என கண்மணி உரையை ஆரம்பிக்க மீண்டும் அந்த பேருந்தில் அமைதி வர!! அதை உடனே பிடித்து கண்மணி தன்னுடைய திட்டத்திற்கு அனைவரையும் சம்மதிக்க வைத்தாள் ... அவளை நம்பாமல் பார்த்து கொண்டு இருந்த நாதனுக்கே கண்மணியின் பேச்சு திறமை ஆச்சரியத்தை தந்தது...

திட்டத்தை வீட்டின் பெரியவர்கள் இடத்தில் இருந்தே ஆரம்பித்தாள்..
அவளுடைய அப்பாவின் காதில் எதோ சொல்ல அவரோ பதிலுக்கு மகளின் காதில் கிசுகிசுக்க!! கடைசியாய் மகளுடைய பேச்சை தட்ட முடியாமல் தன்னுடைய மனைவியை நோக்கி அவருக்கு பிடித்தமான பாட்டை பாட... பஸ்யில் இருந்த அனைவருக்கும் ஒரே ஆராவாரம்... அந்த ஆராவாரத்துடன் ஒவ்வொரு ஜோடியாய் பாட கடைசியாய் நாதனுடைய பாட்டுக்காக அனைவரும் காத்திருந்தனர்...

அம்முவோ வெளியில் எந்த ஈடுபாட்டையும் காட்டாது போல இருந்துக்கொண்டு உள்ளேயோ தன்னுடைய கணவனின் பாட்டுக்காக ஏங்கிக்கொண்டு இருக்க... அவனுடைய மொத்த காதலையும் கொட்டி

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொலைபோட்டு

என்னையே கண்டவளே

கண்ண மூடி கண்ட கனவே

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

நள்ளிரவும் ஏங்க
நம்ம இசைஞானி
மெட்டமைச்சா பாட்ட
பொங்கி வழிஞ்ச

பொட்டலுல வீசும்
உச்சி மலை காத்த
புன்னகையில் ஏன்டா
என்ன புழிஞ்ச


சாராயம் இல்லாம
சாஞ்சேன்டி கண்ணால
கூளங்கள் சேராதோ செங்கல்ல

என அவளுடைய கண்ணோடு கண் நோக்கி பாட!! அவளுக்குள் எதோ உடைவது போல இருந்தது...
அவளுடைய வீம்பு வைராக்கியம் எல்லாம் அவளை விட்டு விலக ஆரம்பித்து விட்டதை புரிந்து கொண்டவளுக்கோ!! அதை பிடித்து வைக்க எதாவது வழியை தினம் தினம் தேடி பிடித்தாலும் அவன் பக்கத்தில் வந்து ஒரு வார்த்தை பேசினால் !! மனதில் ஏற்றி வைத்த வீம்பு எல்லாம் மாயமாய் மறைந்து போக ...என்ன கொடுமை பிள்ளையார் அப்பா!! என தன் நிலையை நொந்து நிமிர்ந்தவளின் கையை பிடித்து இழுத்து சென்றாள் கண்மணி...

எல்லாரும் பார்ப்பதை உணர்ந்து!! எவ்வித மாற்றத்தையும் காட்டாமல் எழுந்த வந்தவளின் மனதை அறிந்த நாதனாலும் ஒன்றும் பண்ணாமல் நிற்க!! இவர்களின் மனங்களை அறியாத கண்மணியோ அப்புறம் அண்ணியாரே நீங்க ஒரு பாட்டு பாடுங்களேன்!! என ஆசையாய் கேட்க இதை சற்றும் எதிர்பாராத அம்முவோ நாதனை பார்த்து விழிக்க!! அவனுக்கும் இதை எப்படி சமாளிப்பது என புரியவில்லை...
கண்மணியோ அவளை மீண்டும் நச்சரிக்க.. அதை தொடர்ந்த தன் குடும்பத்தினரின் நச்சரிப்பையும் தாங்காமல்... தன்னையும் அறியாமல் அவளுடைய வாய் வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்தது..

தன்னந்தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன்னினப்பில் நான் பறிச்சேன் தாமரையே

புன்னை வனதினிலே பேடை குயில் கூவையிலே

உன்னுடைய வேதனைய நான் அரிஞ்சேன்

உன் கழுத்தில் மாலை இட உன் இரண்டு தோளை தொட
என்ன தவம் செஞ்சேன் நானே மாமா

வன்னகிளி கைய தொட சின்ன சின்ன கோலம் இட

உள்ளம் மட்டும் உன் வழியே நானே உள்ளம் மட்டும் உன் வழியே நானே….

இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா கள்ள சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே


என அவளுடைய மனதின் வலியோடு பாடியவளின் மனத்தை புரிந்தவனுக்கோ...அவளின் வலியை சீக்கிரமே துடைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அவளுடைய கையை பிடிக்க போக!! அதற்குள் அவள் கையை பிடித்துக்கொண்டு பாராட்டிய தன் தங்கையையும் மனைவியையும் ஆசையாக பார்க்க மட்டுமே முடிந்தது!! நாதானால்...

அம்மு பாடின பின்னர்!! மற்ற மனைவிமார்கள் எல்லாம் பாடி முடிக்கவும் கோயில் வரவும் நேரம் சரியாக இருக்க..அனைவரும் இறங்கி ஒரு கும்பிடு போட்டு கோயில் உள்ளே நடக்க ஆரம்பித்தனர்..

அழகான சிறிய கோயில் அது!! கோயிலின் பின்புறம் ஒரு சிறிய ஓடை என பார்க்கவே ரம்மியமாக இருக்கும்... எப்போதும் கோயில் போகும் முன் ஓடையில் கால்களை நனைத்து செல்லுவது அவர்கள் வழக்கம்.. அனைவரும் கால்களை நனைத்து வந்த பின்னரும் கூட அம்மு வராமல் இருக்க நாதன் அவளை தேடி சென்றான்..

அம்மு அப்போது தான் கால்களை நனைக்க ஓடத்தில் இறங்கி கொண்டியிருந்தாள்..அவளுடன் சேர்ந்து கால் நனைக்க வந்தவனோ அவளுடைய கைகளுடன் கைக்கோர்த்து கால் நனைக்க.... தடுமாறியவளின் இடை பிடித்து நிறுத்தியவனின் பிடியில் இருந்து விலகியவளின் கைகளை வலிக்கும் விதமாக பிடித்தவனின் கோபம் புரிய...தலை குனிந்தவளை ஏய் என்னை பாருடி!! என உரக்க கேட்ட அவனுடைய குரலின் அடங்கியவளாய் பார்த்தவளை என்ன டி என் கையை விலக்குற?? என்னை பிடிக்கலையா ?? இல்ல நான் உன்னை தொடுறது பிடிக்கலையா?? சொல்லு டி... என கத்தியவனின் வாயை தன் கை கொண்டு மூட... கத்தி கொண்டு இருந்தவனின் வாய் மட்டும் அடங்காமல் அவனும் அடங்கிப்போனான்..

அத்தான்... திடீர்னு நீங்க தொட்டோன வந்த பயம் மா அது...என்னை உங்களுக்கு தெரியும்... என் மனசும் உங்களுக்கு புரியும்...அப்படி இருக்கப்ப உங்க கேள்விகளுக்கு ஒரு அர்த்தமே இல்ல பா... இப்ப வரீங்களா கோயிலுக்கு போகலாம் என கைகளை நீட்ட அவனும் அவளுடைய கைக்கோர்த்து கோயிலுக்கு சென்றான்..

கோயிலில் அவங்களுக்காக எல்லாம் காத்திருக்க.. தன் கையால் பொங்கல் வைத்து சாமிக்கு படையில் இட்டு ... தீபாராதனை காட்ட.. இருவரும் அவர்களுக்காக வேண்டி கொள்ள...நாதனுக்கு பட்டம் கட்டி!! இருவரையும் மாலை மாற்ற வைத்து அவளுடைய நெற்றியில் மீண்டும் அவன் குங்குமம் வைக்க இருவரின் மனமும் நிறைந்து இருந்தது...
 
Last edited:
பகுதி 9

ஏற்காடு" அழகிய மலைப்பிரதேசம் !!மலை என்றாலே அழகிய இயற்கை; எழில் மிகுந்த குடியிருப்புகள் என உங்களுக்கு நியாபகம் வந்தால் நீங்கள் சாதாரண மனிதர்கள் தான்...ஆனால் மலை என்றவுடன் உங்களுக்கு நம்முடைய மூதாதையர்களான குரங்குகள் நியாபகம் வந்தால் நீங்கள் எல்லோரும் என் இன மக்களுங்கோ!!! ஏற்காடு மலையில் உள்ள குரங்களுக்கே தாங்கள் குரங்குகளா இல்லை நாதனின் குடும்பம் குரங்குகளா என சந்தேகப்படுற அளவுக்கு அவுங்கலாம் ஊரையே தங்களை திரும்பி பாக்கவச்சிட்டு இருந்தாங்க!!

நேற்று மாலையே ஏற்காடுக்கு வந்துட்டாலும் இன்றுதான் அவர்கள் எல்லாமே வெளிய வந்து சுத்திப்பாக்க கிளம்பினார்கள்.. ஆனா அதுக்குள்ள அவுங்களோட சேட்டையை அவிழ்த்து விட ஆரம்பித்துவிட்டார்கள்!!! தொல்லை என்றாலும் அவர்களை பார்த்த எல்லோர் கண்களிளும் சிறு பொறாமையும் ஏக்கமும் எட்டி பார்த்தது என்னவோ உண்மை ...

எல்லோரும் ஏற்காட்டின் தாவரவியல் பூங்காவை பார்த்துவிட்டு; மலையில் உள்ள பல வியுக்களையும் , சேர்வராயன் கோயிலையையும் பார்வையிட படை எடுத்தார்கள்...

அதிகாலை
நாதன் அம்முவின் ரூம்:

நேற்று அசதியில் நாதனும் அம்முவும் படுத்தயுடன் உறங்கிவிட்டார்கள்... அதிகாலையில் நாதனுக்கு முன்னையே எழுந்த அம்முக்குதான் ஒரே பரவசமாக இருந்தது...பின்ன அவளுடைய ஆசை நிறைவேறிட்டதே (பேமிலி மூன்)!! ஆனால் இதை நாதன்தான் செய்துயிருப்பான் என ஒரு டவுட்டும் அறிவாளியான அம்மூக்கு வர!! தூங்கும் போது ஒரு மனிதனின் ஆழ்மனது அவனின் முகத்தில் தெரியும்" என எப்போதோ கேட்டதை நினைவுக்கொண்டு நாதனின் ஆழ்மனதை புரிந்துக்கொள்ள ஆசைப்பட்டு அவனை பார்வையிட ஆரம்பிக்க... நாதனின் முகத்தில் எள் அளவுக்கூட சோகம் இல்லை ; நேற்று இரவு குடும்பமா பேசிவிட்டு படுத்ததால் என்னவோ அவனின் உதட்டில் சிரிப்பும் இருந்தது!!! ஆனால் அதைப் பார்த்த அம்முக்கு என்னவோ சிறுப்பிள்ளை கோபம்தா... அம்முக்கு நாதனின் காதலை அவனின் வார்த்தைகளின் வழியே கேட்க; ஆசை!! அவள் காதல்யுற்று அதைக்கேட்க ஆசைப்பட்டப்போது ; அவன் தூரமாக சென்றுவிட்டான் பின்பு அவர்களின் திருமணத்தில் கூட அவன் அவளிடம் தனியே பேசவே இல்லை.!... அவனுக்கு அவன் பயம்!! என்பதை அவன் எப்படி சொல்வான்.. அவளுக்கு அவனிடம் கேட்க ஆயிரம் இருந்தது ஆனால் அவன் அவளுடைய உணர்வுகளை புரிந்துக்கொள்ளவே இல்லையோ!! என ஒரு வருத்தம் மட்டுமே இன்றுவரை அவள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது...

பிள்ளையார்ப்பா!! இந்த குண்டோதரனை பாரு என்னமோ பச்சப்பிள்ளை மாதிரி மூஞ்ஞை வச்சுக்கிட்டு தூங்குறான்...இவன் எப்படி தூங்கலாம்!!... அவனிடம் கிட்ட போய் அவன் காதுக்கிட்ட "உ"னு சவுண்டா கத்துனா அவன் பயந்துட்டு அரக்கபரக்க எந்திரிப்பானு பிளான் பண்ணி அவள் செய்ய ஆனா பிள்ளையார் அப்பன் நாதன் சைடு போய்டாறுனு அம்முக்கு தெரியாம போயிடுச்சு...அம்மு நாதன் காதுக்கிட்ட போற வரை பிளான் நல்லாத போச்சு ஏன் கத்துற வரைக்கூட பிளான் ஒகேத்தான்... ஆனா அப்புறம் ஒரு நிமிசத்துல அம்மு பிளான் " புஷ்" ஆக நாதன் ஹாப்பி... நாதன் எப்போதுமே தெளிவாத்தான் இருப்பான்.. அதே மாதிரி இப்பவும் அம்மு கத்துனோன அவன் அரண்டது என்னவோ உண்மைத்தான் ஆனா அடுத்த வினாடி நாதனின் கை அம்முவின் வாயை மூடி அவளை அணைத்து அவன் பக்கத்திலையே படுக்க வைத்துக்கொண்டான்...

அம்முவோ நாதன் இப்படி பண்ணுவானு எதிர்பார்த்துயிருந்த அலர்டா இருந்துயிருக்கும் பிள்ளைக்கு இப்படி கோழிக்குஞ்சு கத்துற மாதிரி கத்துற நிலைமை வந்துயிருக்காது...ஒரு நிமிசத்துக்கு அப்புறம் அம்முவால சும்மா இருக்க முடியல அவன் கையை கடிச்சு வைக்க....நாதனோ!!...அடிப்பாவி...என அவளை விட அப்ப எஸ் ஆனவதான்..அதுக்கு அப்புறம்.குளிச்சிட்டு தா வெளியவே வந்தாள்...அப்பையும் நாதனுக்கு போக்கு காட்டிட்டு சிறுசுகளை ரெடிப்பண்ண போக...நாதன் தான் அவளை தேடிக்கொண்டே இருந்தான்..

அந்த கோயில் பக்கத்தில இருந்த கோழிக்குஞ்ஞை பாத்தோன நாதனுக்கு அம்முவின் காலை நேர அலப்பறைத்தான் நியாபகம் வந்தது...தனியே சிரிச்சிட்டு இருந்தா அவுங்க லூசாம் டா மாப்புனு கார்யும் மதனும் நாதனை கலாய்க்க...ஆமா டா உன் பெரிய தங்கச்சியை கட்டுனதுனால மதன் பெரிய லூசு!! நா சின்னதை கட்டுனதுனால சின்ன லூசுனு விளக்கம் கொடுத்து காரோட வாயை பெவிக்கால் போட்டு அடைச்சிட்டான்...ஆமா சகலை கரக்டா சொல்லிட்டீங்கனு மதனும் நாதனும் கூட்டு சேர்ந்து கார்முகிலை கார்னர் பண்ண!!! அடப்பாவிங்களா !!எங்க வீட்டு பிள்ளைகளை என் முன்னாடியே கிண்டல் பண்றீங்களா என பொங்கி எழுந்தாலும் ஆன இது உண்மைங்கிறனால நானும் ஒத்துக்குறேனு சொன்ன அவனை கண்டு அங்கே ஒரே சிரிப்பு அலை...எல்லோரும் சந்தோஷமா சாமி கும்பிட்டு ; பல வியுக்களையும் பாத்துட்டு அப்படியே நாதனையும் அம்முவையும் ஓட்டி நேரத்தை ரொம்ப பயனுள்ளதா மாத்திக்கொண்டார்கள்....

மாலை ஆரம்பித்த நேரத்தில் எல்லோரும் அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் வெளியே வட்டமாக "கேம்ப் பயருக்காக" உக்காந்து இருந்தார்கள்...எல்லோரும் பாட்டு பாடி ,ஆடி என தங்களின் இந்த டூரை அனுபவித்து கொண்டு இருக்க.... நேரம் ஆக ஆக பெரியவர்களும் சிறியவர்களும் குளிர் தாங்காமல் தூங்க சென்றுவிட்டார்கள்.... மீதம் இருந்தது கார் ஜோடி ; மதன் ஜோடி மற்றும் நம்ம நாதன் ஜோடி...அவர்களும் நாதனுக்கு பிரைவசி கொடுத்து கொஞ்சம் தள்ளி செல்ல..அவர்கள் சென்றும் கூட அம்மு அந்த இரவின் அழகை மட்டுமே ரசித்துக்கொண்டுயிருந்தாள்...

"ஆ" என்னங்க ஆச்சு !!எதும் பூச்சி கடிச்சியிருச்சா??? ஆமா டி காலைல ஒரு குரங்கு கடிச்சிட்டு... சும்மா இல்லாம குரங்கை பிடிச்சா கடிக்காம கொஞ்சுமா பாஸ்!!! அந்த குரங்கை எப்படி டி கொஞ்ச வைக்கிறது ??? இவ்ளோ நேரம் பேசுனல வாய் வலிக்க, இப்ப பேசு டி பொண்டாட்டி...அதுலா எனக்கு தெரியாது போங்க... அடியே ஓடாத !!அடியே எருமை காலைல கடிச்சு வைச்சலே அதுக்கு உனக்கு ஒரு பனிஷ்மென்ட் இருக்கு ஒழங்கா அதை செஞ்சிட்டு போயி தூங்கு...அதுலா முடியாது நீங்க பிடிச்சனால நா தற்காப்புக்கு அப்படி பண்ணேன்... அதுனால அது தப்புயில்லை பாஸ்... சரி நா பனிஷ்மென்ட் தரேன் வாங்கிட்டு போ டி !! இங்க பாருங்க எங்க வீட்ல யாருமே என்னை அடிச்சது இல்லை ; என்னை மட்டும் அடிச்சு பாருங்க அப்புறம் நம்ம குடும்பத்துக்கிட்ட நீங்க சட்னி தான்...அய்யோ எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி !!! அடிங்க ; வாய் இல்லனா உன்னையலாம் நாய் தூக்கிட்டு போயிருக்கும் இன்னேரம்... நீ பண்ணதுக்கு இதான் தண்டனைனு அவள் கண்ணத்தில், அவள் நினைவுடன் இருக்கும் போது கொடுக்கும் முதல் முத்தமாக அவளின் தண்டனையை கொடுத்தான்....இனியாச்சு இதுங்க ரொமான்ஸ்ங்குற பேர்ல காமெடி பண்ணுங்களா!! இல்ல அடிச்சிக்கிட்டு சாகுங்களா ???
 
பகுதி. 10

அழகிய நிலா வெளிச்சத்தில்; லேசான குளிரில் ; அவனும் அவளும் !!!

அதிலும் அவளுக்கான தண்டனையை கொடுத்தப்பின் அந்த இடம் இன்னமும் ரம்மியமாக மாறிப்போனது; நாதனுக்கு...

தன்னவளின் முகம் கண்ட நாதனுக்கு!!அவளுக்கும் அப்படி தான் என தெரிந்துப்போக...அவளின் நிலையை அவளுக்கு பிரதிபலிக்க மெல்லிய குரலில் ஒரு பாட்டை பாடினான்...

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடி
நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி

குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும்
மேகல் மழை வேணும்

சத்தம் இல்லா முத்தம் தர வேணும்னு

தன் கண்ணத்தை அவளிடம் காட்டினான்...;ஏற்கனவே அம்மு அவனின் செயலினால் சிங்கம் என இருந்தவளை மருண்ட மான் மாற்றியவனை காண வெட்கம் கொண்டு இருக்க... அவனோ கண்ணத்தை காட்ட அவளோ அவ்விடம் விட்டு மான் கணக்கா ஓடத்தான் பார்த்தாள்...ஆனா நம்ம பய விட்டாத்தான !!!

அடியே!!! இருட்ல ஓடிப்போயி விழுந்து என்னை வீட்ல மாட்டிவிட்றாத தாயி... நானே உன்னை ரூமுக்கு கூட்டிட்டு போறேன் ஆன கொஞ்ச நேரம் ஆகட்டும்... அங்கப்பாரு நா போனப்போதுனு கூட்டிட்டு வந்த ஜோடிங்களா ரொமான்ஸ் பண்ணுதுங்க....அதுக்குலா ஒரு கொடுப்பினை வேணும் போல!!எல்லாம் என் நேரம் டி...

அம்முவை வெறுப்பேத்த நினைத்த நாதனுக்கு ஒரு தூண்டில் கிடைச்சிட்டு...

அம்மு அவளை பாத்தேன் டி!!!என நாதன் ஆரம்பிக்க... எவ அவ??? என லந்தாக அவளும் கேட்க. ..என்ன டி!! தெரியாத மாதிரி கேக்குற... மாலினி டி... என அவன் விளக்க அதுக்கு என்ன இப்ப??என இவள் கூலாக பேசினாள்..

அவளை எப்படி பாத்தேனோ அப்படியே இருந்தா டி ...
"ஓ"!!

பாவம்; ரியாக்ஷன் கொடுக்கலனா என் புருஷனுக்கு பல்பு ஆயிடும்... மித்தப்படி நீங்க அதுக்குலா ஆகமாட்டிங்கனு எனக்கு தெரியாதா என்ன! என மனதில் நினைத்ததை வெளிக்காட்டாமல் சீரியஸாக கேட்டுக்கொண்டாள்..


அவளே வந்து என்கிட்ட பேசுனா டி... உன்னை மாதிரி ஒரு நல்லவனை மிஸ் பண்ணிட்டேனு பீல் பண்ணா... எனக்கு பாவமா இருந்துச்சு... எவ எவளுக்கோ பாவம் பாப்பான்! நமக்கு மட்டும் பாக்கமாட்டான்!! அயோக்கிய ராஸ்கல்!! என சில வார்த்தைகளை தூவ நினைத்த மனதை அடக்கியபடியே அவனை பார்க்க... என் அருமையை இப்பையாச்சு தெரிஞ்சிக்க டி... என அவனும் கதறி கொண்டு இருந்தான்.. புருசனை மதித்து
சரிங்க சாமி.. தெரிஞ்சிக்கிறேன் என பதியை மதிக்கும் பத்தினியாய் மாறிப்போனாள் ..அம்மு!!

அம்மு!! ஆன ஒரு விசயம் டி... என்னோட அந்த காதல் தோல்வியை உன்கிட்ட மட்டும் தா எனக்கு சொல்ல தோனிச்சு....அப்பக்கூட நீ ஒன்னு சொன்ன நியாபகம் இருக்கா?? என்ன சொன்னேன்??ம்ம் சொரக்காய்க்கு உப்பு இல்லனு... ஓ காமெடியா நாளைக்கு சிரிக்குறேன் பாஸ்... சீக்கிரம் சொல்லுங்க இல்லாட்டி நா தூங்கப்போறேன்... சொல்லித்தொலையுறேன் கேளு...

"அட விடுங்க பாஸ்...உங்களுக்குனு ஒருத்தி இல்லாமலா போய்டுவா...கண்டிப்பா உங்களை தாங்க வருவா!பாருங்களேன்"...

நீ சொன்னப்பக்கூட எனக்கு நம்பிக்கை இல்லை டி ..ஆனா இப்ப அது நடந்துருச்சு டி... ஒரு காதல் தோல்வி அப்புறம் கூட எனக்கு காதல் வரும்னு உன்னால தா நா புரிஞ்சிக்கிட்டேன்... என்னோட கஷ்டம் சந்தோஷம் என எல்லாத்தையும் உன்கிட்ட தா எனக்கு பகிர்ந்துக்க தோனுச்சு... நீ எனக்கு அவ்ளோ முக்கியமானவ டி தங்கம்... என்னோட அந்த ராங்கி என்னை சீக்கிரமே புரிஞ்சிக்க அன்னிக்கு ஆசிர்வாதம் பண்ணமாதிரி இன்னிக்கும் சொல்லேன்....

நாதனின் வார்த்தை ஒவ்வொன்றும் அம்முவின் மனதில் இனிய தென்றலை வீசியது என்னவோ உண்மை தான் ... ஆனால் உடனே இறங்கி போனாள் அது அம்மு அல்லவே என மனதை அடக்கி கொண்டாள்..

அவளுக்கு தெரியும் நாதனின் வாழ்க்கையில் அவள் எவ்வுளவு முக்கியமானவள் என்று! ஏன் அவளின் வாழ்க்கையிலும் அவனைவிட பெரிது என்று எதுவும் இல்லையே....

அம்மு..என்னடி கனவா???இல்ல பாஸ்... கண்டிப்பா நீங்க நினைச்சது நடக்கும்... அதை என் கண்ணைப்பாத்து சொல்லுடி!! அதுலா முடியாது போங்க பா... பாருனு சொல்லுறேன்ல!! அத்தான் நீங்க நினைச்சது நடக்கும்... போதுமா இப்ப .. ஏய் பொண்டாட்டி என்னை என்னனு கூப்பிட்ட??? அத்தானு தா, ஏன் காது கேக்கலையா மிஸ்டர். நாதன்!!!

பாருயா!!நீ என் பொண்டாட்டி அம்முதான?? இப்படிலா சாக் கொடுத்தா நா எப்படி டி தாங்குவேன்... ஆனா பரவால இப்படியே என் மேல கொஞ்சம் கொஞ்சமா பாசம் வந்தா சரிதான்...தூக்கம் வருது பாஸ்!! போலாமா?? ம்ம்ம் குளிரும் அதிகம் ஆயிட்டு வா போலாம் ; என் கையை பிடிச்சிக்கிட்டே வா இருட்டா இருக்கு...ம்ம் சரி பாஸ்(இப்ப திருப்பியும் பாஸ் ஆயிட்டேனா!! மூடுக்கு ஏத்தாப்ல கூப்பிடுறாளே!!என நினைத்து கொண்ட அவளை பத்திரமாக கூட்டி சென்றான்

அந்த இருட்டில அவளை தத்தி பித்தி ரூமுக்கு கூட்டி வந்து சேர்க்க... நிறைய கதைப்பேசியதால் இருவருமே டையர்ட் ஆக படுக்க சென்றார்கள்..எப்போதும் போல அம்முமா உடனே படுக்க...நாதனும் படுத்துட்டான்....

அம்முவோட "அத்தானை" கேட்ட நாதனுக்கு ஒரே ஹாப்பி மைட் ; அந்த ஹாப்பி மனநிலையுடனே அவனோட பொண்டாட்டியை அணைத்துக்கொண்டு தூங்க ஆரம்பிக்க...தூக்க கலக்கத்தில் புரண்டு படுத்த அம்முவும் குளிரினால் அவனை அணைத்து படுத்தாள்...

ஓ காட் !!! என்னை ரொம்ப சோதிக்குறியே... சீக்கிரமே என் பொண்டாட்டி மனசு மாறிடனும்...

( மனசு மாற ஆரம்பிச்சிட்டு டா... மாங்கா மடையா!!) என மைட் வாய்ஸ்ல் சவுண்டா கத்திக்கொண்டாள் அம்மு..


அடுத்தநாள் காலையும் அழகாக விடிந்தது.... அவுங்க மக்கள் எல்லாம் ஆர்வமா அந்த கடைசி நாளை கொண்டாடிட்டு இருந்தார்கள்... அம்முவும் சந்தோஷமா இருந்தாள்.... நேற்றுக்கேட்ட அவனின் வார்த்தைகளே அவளின் மண்டையில் ரிங்காரமிட்டு கொண்டுயிருந்தது.. அதனால் இன்று இன்னும் பொழிவோடு இருந்தாள்...

அங்க கொஞ்சம் குழப்பாம திரிஞ்சிட்டு இருந்தது.. நம்ம நாதன் மட்டுமே!! ஏனா அன்னிக்கு மதியத்துடன் அவுங்க குடும்பம் கிளம்பி ; பேமிலி மூன் ஹனி மூனாக மாறப்போகிறது...நாதனுக்கு தா திக்கு திக்குனு இருந்துச்சு... அவன் பொண்டாட்டிக்கு தா இந்த ஹனி மூன் பத்தி தெரியாதே!!!

என்ன மாப்பிள்ளை மூஞ்சு பேய் அறைஞ்ச மாதிரி இருக்கு!! என கார்முகில் வம்பு பண்ண...அடப்போட நீ வேற...உன் தங்கச்சியை கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே என சோக கீதம் பாடியவனை இன்னும் கடுப்பாக்கும் விதமாக ஏன்டா மாப்பிள்ளை கட்டுனா அவளைத்தான் கட்டுவேன் இல்லான எனக்கு கல்யாணமே வேணாம்னு என் காலை பிடிச்சு கெஞ்சுனதுலா மறந்து போச்சா!! என அவனின் கடந்த கால செயலை நியாபக படுத்தியவனை ஒன்னும் சொல்ல முடியாமல் "ஆங்" அதுலா நல்லா நியாபகம் இருக்கு... இருந்தாலும் அவளுக்கு தெரியாம பண்ண பிளானை எப்படி எடுத்துப்பானு நானே பயந்துட்டு இருக்கேன்... என அவனின் பயத்தை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டான்..

சில்லுவண்டுலா லவ் பண்ற இந்த கலிகாலத்துல உன்னை மாதிரியும் பக்கிங்க இன்னும் இருக்கத்தான் செய்துங்க!!! டேய்... ஓவரா ரியாக்ட் பண்ணாம சந்தோஷாம இருடா... என் தங்கச்சி உன்னை தப்பா நினைக்க மாட்டா.. ஆனா இந்த பிளானை நீயே அவக்கிட்ட சொல்லிடு வேற யாராவது சொன்னத்தான் அவளுக்கு கோபம் வரும்...ஒழுங்கா போயி அவளைப்பாரு மாப்பு இல்லான உனக்கு பெரிய 'ஆப்பு'...

கார் சொல்பேச்சை கேட்ட நாதன் , அவன் பொண்டாட்டியை தேடிப்போனான்... அவளின் பொழிவான முகத்தில் உள்ள சந்தோஷத்தை கண்ட அவனுக்கு அவளிடம் பேச தைரியம் வர அதுமட்டும் வந்தா அவ நம்ம ஹீரோ இல்லையே கூடவே திமுரும் வர

தன்னோட போனை எடுத்து மீயூசிக் பிளையர்ல இருக்க இந்தப்பாட்டை அலறவிட்டான்...


ஒரு முறை என்ன பாத்து
ஓரக் கண்ணில் பேசு
நீ நெருங்கி வந்தா
காதல் வாசம்
என் உசுரு மொத்தம்
உன்ன பேசும்
ஒரசாத உசுரத்தான்
உருக்காத மனசத்தான்
அலசாத, என் சட்டை கிழிஞ்சி
வெளியே பறக்கும் இதயம்
ஒட்டி இருந்த நிழல் ஒட்டாம
உன் பின்ன அலையும்
உன் முட்ட முழி முறைச்சா

முன்னூறு ஊசி உள்ள இறங்கும்

ஏற்கனவே அந்த லூசு குடும்பம் இதுங்கல வச்சு மீம்ஸ் போடாத குறையா டிரெண்ட் ஆக்கிட்டு இருக்க.. இதுல இவனே வாங்க என்னை கலாய்ஙகனு சொல்லாத குறையா மாட்டிக்கிட்டான்

எல்லோரும் நாதனையும் அம்முவையும் ஒரு ஓரப்பார்வை பாத்துட்டு நடையை கட்ட ..

அம்முமாக்கு தா லவ்ஸ் பொங்க ஆனாலும் அந்த அடக்கமான பிள்ளை அவனை நிமிர்ந்து கூட பாக்காமல்…. தான் ஒரு எக்கோ பிடிச்ச கழதை என நிருப்பித்துக்கொண்டு இருந்தாள்..

அடியே பொண்டாட்டி!! உனக்காக பாட்டு போட்ட இந்த கிழபோல்டுல பார்த்துட்டு போகுதுங்க; நீ பாக்கமாட்டியா?? ஓ வெக்கமா!! என அதையும் பாசிட்டிவாய் பார்த்து பேசியவனை...நினைப்பு தா பொழப்பை கெடுக்குமாம் பாஸ்.... என போல்டு ஆக்கியவளை..உன் நினைப்பு என் பொழப்பை கெடுக்காது டி!!! என பவுண்டரி அடித்தவனை... இப்ப என்ன வேணும் உங்களுக்கு ??? கேட்டா கொடுப்பியா!! என சிக்ஸர் அடிக்க பார்த்தவனை பாத்து மொர கண்ணு வெளிய வந்துறப்போது என அவளின் மொரப்பை கமெண்ட் அடித்துக்கொண்டே...
நம்ம டூர் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தான் முடியப்போது என அவன் சொல்லி முடிக்கும் முன் ஹே சூப்பர் பாஸ்!!என கத்தியவளை..ஹேய் நா இன்னும் சொல்லி முடிக்கல டி ; உனக்கும் எனக்கும் மட்டும் தா இந்த பிளான் மித்த எல்லாம் இன்னிக்கு ஊருக்கு கிளம்பறாங்க என விசயத்தை சொல்லி முடித்தான்..

"ஆஆ" அடியே வாயை மூடு இரண்டு ஈ உள்ள போய்ட்டு வந்துருச்சு.... பாஸ் இதை ஏன் முன்னையே என்கிட்ட சொல்லலை!! எனக்கே இங்க வந்தப்புறம் தா தெரியும் டி.. எல்லாம் உங்க அத்தைமா பிளான்... என் மூஞ்ஞை பாரு; நா பாவம் டி.... பிடிக்கலனா சொல்லிடு போய்டுவோம் !!! என சரென்டர் ஆனவனை ஏன் அத்தைக்கிட்ட நா மாட்டனுமா!! இருந்துட்டே போவோம்... இல்லனா அத்தை மனசு கஷ்டப்படும்… என பிளானுக்கு பச்சை கொடி காட்டினாள்..

(அத்தை பெத்த பையன் கஷ்டப்படுவானு நினைக்கிறாள பாரேன்) என நாதன் பீல் மட்டுமே பண்ண முடிந்தது..

குடும்பத்தினர் அனைவரும் அன்றைய நாளை சாப்பிங் பண்ண ஒதுக்கி இருந்தனர்.... அவர்கள் அனைவருக்கும் நாதனும் அம்முவும் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப கிப்ட் கொடுத்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்... அதற்கு அவர்கள் பண்ண அட்டகாசத்தை பார்த்த கடைக்காரரே கடுப்பாகி ; சில பொருட்களை இலவசமாகவே கொடுத்தார்...

சாப்பிங் முடிச்சிட்டு வந்த மக்களுக்கு சுவையான மதிய சாப்பாட்டை ஒரு பெரிய ஹோட்டலில் கொடுத்தான், நாதன்... அம்முக்கு பெருமை தாங்கள; நாதன் அவர்களின் குடும்பத்தை கவனித்து கொண்ட விதம் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது... கூடுதலாக அவன் அவர்களுக்காக பிரத்யேக பரிசுப்பொருட்களை கொடுத்து அவர்களையும் மகிழ்விக்க செய்த அவனின் குணத்தை கண்டு வியக்கத்தான் செய்தாள்...

அந்தக்கூட்டம் கிளம்ப எத்தனித்தப்பொழுது அம்முவின் முகமோ சோகத்தை காட்ட அதை கவனித்த தர்சினி அவளிடம் பேச்சுக்கொடுத்தாள்..

ஓய் நாத்தனாரே என்ன மூஞ்சுல வெளிச்சம் கம்மியா இருக்கு!! என தர்சினி அவளிடம் வம்பளக்க... அப்படிலா இல்ல அண்ணி என்றவளை... அம்முமா!! அங்கப்பாரு உன் வீட்டுக்காரரை... அங்கு அவனோ அவள் முகத்தையே ஆராய்ந்து கொண்டு இருந்தான்... அவளின் கண்கள் அவனின் கண்களை சந்தித்தப்பொழுது அவளுக்கு இருந்த வருத்தம் கூட "டாடா" சொல்ல எத்தனித்தது..

அம்மு; இதான் கணவன் மனைவி உறவு... உனக்கு இது புரிய ஆரம்பிச்சியிருச்சு ஆனா நீ புரிஞ்சிக்காத மாதிரி அண்ணன்கிட்டையே நடிக்கிறல!! அவருக்கு உன்னைப்பத்தி தெரியாத என்ன ?? நீ பண்ற எல்லாமே அவருக்கு நல்லா தெரிஞ்சும் உன்னை உன் போக்குலையே விடுறானுனா அவர் உன்னை எந்தளவு லவ் பண்றாறுனு உனக்கு புரியலையா மா !! அதனால சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க.... உங்க அட்டகாசத்தை எங்களாள பாக்க முடியல டி !!!

அண்ணியாரே !! வயசான காலத்துல இவ்ளோ பேசுனா மூச்சு அடைச்சிக்கும்... கரேக்ட் தா அண்ணி அவரை நா புரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டேன்... அதுனால நீங்க நிம்மதியா ஊருக்கு போயி குடும்பத்தை பாருங்க... சரியா !! என்ற அம்முவின் பதிலை கேட்டு வாய் அடைத்து போன தர்சனியோ
சந்தடிசாக்ல என்னை கிழபோல்டுனு சொல்லுறியா நீ !! போயித்தொல பக்கி... ஒழுங்கா ஊரு வந்து சேருங்க ரெண்டுப்பேரும்... என விட்டு சென்றாள்..

ஏற்காட்டின் அழகை மேலும் அழகாக்கின அந்த குடும்பம் புதுமண தம்பதிக்கு சில அறிவுரை சொன்னப்பின்னே கிளம்பினர்.... நாதனுக்கும் அம்முக்கும் கிடைத்த முதல் தனிமையான நிமிடங்கள் ; அதுவும் அவர்களின் மனதில் உள்ள குழப்பங்கள் மறைய ஆரம்பித்தப்பின்னர் கிடைத்த "தனிமை"...

தனிமையில் இனிமை காண முடியுமா என நாதன் அம்முவை நோக்கிப்பாட ;அவப்பாட்டு போனை நோண்டிகிட்டு இருந்தா ...அடியே ;உனக்குலா ரொமான்ஸ்னா என்னனே தெரியாத டி ??ஏண்டி என்னை இம்சைப்பண்ற !!ஏன் பாஸ் இப்ப கழுதை மாதிரி கத்திட்டு இருக்கீங்க...எங்க அண்ணனுக்கு ஒரு மெசேஜ் பண்ணது குத்தமா !!மலை இறங்கிட்டாங்களாம் அத்தான் ...

ஏண்டி எல்லாரு மேலையும் பாசத்தை பொழியுற !!என்மேல அதை கொஞ்சம் தெளிக்க கூட மாட்டிய ?? என கரடியாய் அவன் கத்த. அத்தான் ...உண்மை உங்களுக்கே தெரியும் ....என இவளும் அந்த கரடிக்கான பதிலை சொன்னாள்..

பாருய்யா ...இங்க வாயேன் ...உங்கிட்ட ஒன்னு காட்றேன் ..வரும்போது என் போனை கொண்டுவா…. இந்தாங்க பாஸ்..

அந்த போன்ல இருக்க போட்டோஸ் ஆல்பம் பாரு...galleryku போன அங்க "பொண்டாட்டின்னு" போட்டு இருந்த போல்டர்க்கு போனது அவளின் விரல்கள்...அதற்குள்ளே அவளினன் இத்தனை வருட போட்டோக்களும் இருந்தன..

அழகான போட்டோக்கள் முதல் அசிங்கமான போட்டோக்கள் வரை ; அவற்றை அவள் ஆர்வமுடன் பார்ப்பதை அவன் இங்கே வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தான்...

கண்ணில் ஆனந்தக்கண்ணீர் வர அவனை பார்த்த அம்முவிற்கு அதற்குமேல் முடியவில்லை...அவளின் ஈகோவை எல்லாம் உதைத்து தள்ளிய அவளின் காதல் ; அவளை அவனை நோக்கி போகச்செய்தது ..அவளின் கண்ணீரை கண்ட நாதனுக்குமே லேசாக கண்கலங்கினாலும் அவளையே பார்த்துக்கொண்டுயிருந்தன் ...அவளின் ஒவ்வொரு அடியும் அவன் மனதில் உள்ள காதலை கூடச்செய்தது ..நேரே வந்த அம்மு நாதனின் கண்ணோக்கினாள் ...வாய் பேசாத ஆயிரம் வார்த்தைகளை அவர்களின் கண்பேசிக்கொண்டுயிருந்தது...

கண்ணின் பேச்சின்னிடையே அவன் உதிர்த்த அந்த வார்த்தைக்கு அவ்வுளவு சக்தியா !!!
 
பகுதி 11

அவ்ளோ லவ் பண்ணியா டி என்னை?? என்ற நாதனின் கேள்வி அவளின் நடையை நிறுத்த...ஒரு சிலைப்போல் அவனை பார்த்தாள்!!!

அவனுடைய கேள்வி அவளை "பேசாமடந்தை" ஆக்கும் என தெரிந்தும் அதைக்கேட்டவனின் மனதோ அவளின் காதலை தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் இருந்தது…அதுவே நாதனை முன்போக செய்தது..

அவளின் உணர்ச்சிகளை புரிந்தவனாய்;அவளிடம் சென்றவனோ அவளின் கையை தன் கையுடன் பிணைத்துக்கொண்டான்...

அவளை புரிந்துக்கொண்டவனாய் !! அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அவளிடம் பேசுவதற்கு வசதியான இடத்தில் அவளை உட்கார வைத்து அவளின் கண்களை காணும் விதமாக அவனும் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்….

அவள் கொஞ்சம் நார்மல் ஆனது தெரிஞ்சதும்... அவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்..


ஏன்டி பொண்டாட்டி!!! ஒரு சின்ன கேள்விக்கு இப்படியா ரியாக்ட் பண்ணுவ.... உன் வாய்ப்பேச்சுலா வெத்துவாய் தானா?? நீ லா அதுக்கு ஆக மாட்டனு அப்பவே எனக்கு தெரியும்...

எதுக்கு ஆக மாட்டேன் நா??? என மீண்டும் தலையை உயர்த்தியவளை அடிங்க... இதுக்கு முன்ன ஒரு கேள்வி கேட்டேன் அதுக்கு மட்டும் நீ 'ஆப்' ஆயிடுவ !!! இப்ப மட்டும் எதிர் கேள்வி கேளு... மூஞ்சியை பாரு!! பச்சப்பிள்ளை மாதிரி... என அவன் அரற்ற மீண்டும் அவளின் மவுனம் தொடர்ந்தது…

பொறுமையை இழந்த அவனோ இப்படி நீ எதுவும் பேசாம இருந்தா!! நா என்ன டி பண்ண?? என்மேல கோபம் மட்டும் படுற ஆனா என்னிக்காச்சு நீ பண்ண சேட்டைகளை நினைச்சு பாத்துயிருக்கியா ???

உனக்கு என்னத்தான் டி வேணும்???

சின்னப்பிள்ளைத்தனமா எல்லாத்தையும் நான் சொல்லனும்னு நினைக்கிற...

என்னைப்பத்தி உனக்கு தெரியாத டி??

சில விசயத்தை லா என்னால சொல்ல முடியல டி...

நீ உணரனும்...நீ அதை உணர்ந்துட்ட ஆனாலும் உன்னோட பொய் கோபத்துனால அதை நீ சொல்ல மாட்ற.....

என மூச்சு விடாமல் பேசியவனின் மனம் அப்போதும் ஆறாமல் அவளின் இடையை படித்து தன்னிடம் இழுத்தவனின் திடீர் தாக்குதலில் நிலைக்குலைந்தவளை அவனின் கை விடாமல் அவனிடம் ஒட்டி நிறுத்தியது…

அடியே!! நீ என்ட என்ன எதிர்பாக்குறனு எனக்கு தெரியும் டி...

நா அதை சொல்லிட்டா உன் கோபம் போய்டுமா இல்ல வேற எதாவது ஒரு விசயத்தை வைத்து என்னுட்ட சண்டை பிடிப்பியா???

ஆனா ஒன்னு அம்மு ...நீ எதிர்பாக்குற மாதிரி நானும் உன்ட சில விசயம் எதிர்பாப்பேனு உனக்கு ஏன் புரியல???...என் சண்டைக்காரி என்ட சண்டை மட்டும் தான் பிடிக்க தோனுமா???

வாய்த்தான் இருக்குனு ஓவரா பேசாதிங்க பா.... இப்படியே பேசுனீங்கனா கொன்றுவேன் !!!

மொத அதப்பண்ணு டி...நிம்மதியா போயி சேருறேன்....

என அவளுக்கு பதில் பதில் என்று பேசியவனுக்கோ!!

அவளுக்கு இப்படி சொன்னா பிடிக்காதே!!! என பேசிய பின் தோன்றி அவளை பார்க்க திரும்பின நாதனின் மனது கரைந்து போனது...

தன் தாயிடம் அடிவாங்கி பின் அவளிடமே வந்து நிக்கும் ஒரு குட்டி வாண்டுப்போல அவனின் 24 வயது பொண்டாட்டி நின்றாள்…

தன்னவளின் உணர்வுகளை புரிந்துக்கொண்ட அவன் ; அவளிடம் சென்று அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்....அவளோ முரண்டு பிடிக்க!! நாதனும் விடாமல் முரண்டு பிடித்து அவளை தன்னுள் அடக்கி கொண்டான்...

தன்னை அடக்கியவனின் அணைப்பு அவளுக்கும் தேவையாய் இருந்தது போல!! அவள் ஒண்டிக்கொண்டதை வைத்தே அவளின் மனதை அறிந்துக்கொண்டான்; அந்த மணவாளன் ... அவளின் கூந்தலை அவனின் விரல்கால் வருடி அவளை அமைதிப்படுத்தினான்.....

என் தங்கமே!! அத்தான் கேள்விக்கு பதில் சொல்லு டி!!!பாவம் ல நான்… என கெஞ்சியவனின் முகம் அவளுக்கு மட்டுமே !!!

நாதனை பத்தி அம்முவுக்கு நல்லா தெரியும்... அவன் எப்போதுமே அவனின் உணர்வுகளை மற்றவரிடம் பகிர்ந்துக்க மாட்டான்...

அவங்க குடும்பத்தில் அவனுடைய பெயரே "அமுக்குளி".... அவர்கள் பழக ஆரம்பித்த பின்னர் முதன்முதலாக அவளிடம் சில விசயங்களை அவன் பகிர்ந்தப்போது அவளுக்கே இது நம்ம 'நாதன்' தான என சந்தேகம் வந்தது என்னவோ உண்மை தான்...

அவர்கள் பழகிய காலத்திலும் அவர்கள் 'காதலர்கள்' போல் பேசியதுமில்லை நடந்துக்கொண்டதும் இல்லை... அவனுக்கான ஊன்றுக்கோலாக அவள் இருந்தாள் ; இவளுக்கும் அப்படியே அவன்....

அவர்களின் வாழ்க்கை அவ்வாறு சென்றப்போது தான் ; நாதன் அவளை விட்டு விலகி சென்றான்... அப்போதும் கூட நாதனை பற்றி அவள் தப்பாக நினைக்கவில்லை மாறாக அவனின் செயல் பின்னே நியாமான காரணம் இருக்கும் என நம்பினாள்... அவனின் பிரிவின் பின்னையே அவளின் காதல் கொண்ட மனம் விழித்தது....

அதன் பின்னே அவளின் அத்தான் போல அவளும் "அமுக்குளி" ஆகிவிட்டாள் அவளின் காதலில் மட்டும்...

அவளுக்குமே அவளின் காதலை அவளுக்குள்ளையே அதற்குமேல் பூட்டி வைக்க முடியாது என தோன்ற ஆரம்பித்தது... தன்னவனின் கேள்விக்கான ஏற்ற பதிலைச்சொல்ல வார்த்தைக்களை தேடிக்கொண்டுயிருந்தவளை , அவனின் வார்த்தைகள் கடந்த காலநினைவுகளில் இருந்தவளை நிகழ்கால நினைவுக்கு கொண்டு வந்தது.... அவனின் கண்ணை பார்த்து பேசுவதற்கான தைரியத்தை மனதில் கொண்டு வந்து அவனுக்கு பதில் சொல்ல எத்தனித்தாள்

அடியே பொண்டாட்டி !!! தூங்கிட்டியா டி ??

அவனுடைய கண்களை நேராக சந்தித்தவளோ….அத்தான்.... உங்களை நா எப்ப காதலிக்க ஆரம்பிச்சேனு எனக்கு சரியா தெரியல பா...ஏனா எனக்கே அது ரொம்ப லேட்டாத்தான் புரிஞ்சிது,.. என் உணர்வுகளை நான் புரிஞ்சிக்கிட்ட போது நீங்க என் கூட இல்லை....அந்த நொடியில் இருந்து உங்களை காதலிக்க ஆரம்பிச்சேன்!!

என் வாழ்க்கைல எங்க அப்பா அண்ணனுக்கு அப்புறம் நா நேசிச்ச ஒரு ஆண்மகன் னா அது நீங்கத்தான் அத்தான்!!

இப்ப சொல்றேன் உங்க கேள்விக்கான பதிலை நல்லா கேட்டுக்கோங்க!!

ஆமா அத்தான் ….

உங்கள அவுளோ காதலிக்குறேன் !!!

நான் விளையாட்டு தனமானவ தான்…பசங்க அழகா இருந்தா சைட் அடிப்பேன்...ரசிப்பேன்.. ஆனா அதுலா ஒரு சில நிமிசம் தான்.. அதுக்கு மேல எதுவும் தோனாது….ஆனா நீங்க என்கிட்ட பேசாமா போனப்புறம் தான் என் மனசுல நீங்க எந்த அளவுக்கு இருக்கிங்கனு புரிஞ்சிது...அப்பலெந்து இப்பவரா என் காதல் மட்டும் மாறவே இல்ல ..... மாறவும் மாறாதுனு கொஞ்ச நாளிலே புரிஞ்சிது...

அந்த நொடியில் இருந்து நான் உங்களுக்காக தான் வாழுறேன்…

ஐ லவ் யூ அத்தான்...ஐ லவ் யூ ஸோ மச்!!!

அவன் அவளிடம் இருந்து இந்த திடிர் 'பதில்' தாக்குதலை எதிர்பார்க்கவில்லை...பல வருடங்களாக "எதிர்பார்த்த நொடி" அதுவும் அவன் சற்றும் "எதிர்பார்க்காத பொழுது" நடந்த இந்த இனிய தாக்குதலில் தன்னை முழுமையாக தொலைத்து விட்டான்...

அவன் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லிவிடும் வேகத்தில் தன்னுடைய அச்சம் ,மடம் ,நாணம் ,பயிர்ப்பு என அனைத்தையும் அவள் மனதில் மறைத்துக்கொண்டு பதிலை சொல்லிவிட்டாள்... ஆனால் பதில் சொல்லிவிட்ட பின்னர் பெண்களுக்கே உண்டான வெட்கத்தில் அம்முவினாள் நாதனை நேர்க்கொண்டு பார்க்க முடியவில்லை!!!

தன்னவள் சொன்ன பதிலில் ஒரு நிமிடம் திளைத்தாலும் அவனின் சந்தோஷத்தை அவளிடம் தானே பகிர்ந்துக்க முடியும்..... அவளின் வெட்கத்தை கண்டுக்கொண்டவனாய் அவளை சீண்ட ஆரம்பித்தான்...

அம்மு மா ; இவ்ளோ நேரம் இங்க நின்ன "என் டார்லிங்" எங்க டி???

'ம்ம்ம்' காணமா போய்ட்டா பாஸ்...

எனக்கு, என் டார்லிங் வேணும் டி... அவத்தான் உண்மையை பேசுறா!!!

அத்தான்ன்ன்

உன் "அத்தான்" தா டி... அய்ய ரொம்பத்தான் போங்க!! என்ன டி; இப்பத்தான் காதலை சொன்ன அதுக்குள்ள போக சொல்ற... நா உன்னை விட்டு எங்க போவேன் டி!! பாஸ் ..


செல்லக்குட்டி மாமன் மேல உனக்கு இவ்ளோ லவ் இருக்கும்னு நா நினைக்கில.... இப்பையாச்சு எனக்கு ஒன்னு கொடு டி....

ஓ... ஒன்னுத்தான கொடுத்துட்டா போச்சு!! தன் கைகளை தட்டி லெப்டா இல்ல ரைட்டா பாஸ்... அடிப்பாவி பொண்டாட்டி !!! உன் மாமனையே அடிக்க பாக்குறியே; நல்ல மனைவி எனக்கு...

ஹலோ !! உங்களுக்கு இதுலா வராதுனு எனக்கு தெரிஞ்சனாலத்தான் போனப்போதுனு நானே சொன்னேன்... அதுவும் இல்லாம எனக்காக நீங்க பண்ண ஒவ்வொரு விசயத்துலையும் உங்க காதலை தெரிஞ்சிக்கிட்டேன் ... ஆனா எனக்கு நா சொன்ன மாதிரி நீங்களும் சொல்லனும் பாஸ்!!!

அது சொல்றேன் ; அதுக்கு முன்ன நீ என்னை பத்தி ஒரு கவிதை எழுதினியாமே !! அதை சொல்லு...இதுலா போங்கு ஆட்டம்; சொல்ல மாட்டேன் போங்க!! முன்னே போனவளின் பின்னளை பிடித்து இழுத்தான்; எதிர்பார்க்காத இழுப்பில் அவன் மேல இடிக்கும் படியாக நிக்க வைத்துவிட்டான்...

இப்பையாச்சு சொல்லுறியா !! இல்ல எப்படி உன் வசதி...
 
Top