எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இருளின் நிழல்-அத்தியாயம்-2

Priya pandu

Moderator

அத்தியாயம்-2

“அய்யோ…. அம்மா பேய்,…. பேய்….. என்ன யாராவது காப்பாத்துங்க……..”என்று அம்ருதா தன் முத்து பற்கள் அழகாக தெரியும் அளவிற்கு புன்னகைத்துக்கொண்டே….. சுற்றி முற்றி ஓட…..​

அதில் கடுப்பான யுகவேஷ்…… பற்களை நறநறவென கடித்துக்கொண்டு…… "உன்ன இன்னிக்கி நா சும்மா விடமாட்டேன்டி…….”என்று சுவற்றில் சாய்த்து வைத்திருந்த கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்துக்கொண்டு அவளை துரத்திக்கொண்டு ஓட……..​

அவளோ அவனின் கோபமான முகத்தை பார்த்து டர்ஜ் ஆனவள்……….. “அய்யயோ….. ஒரே ஒரு பேய் துரத்துது……... காப்பாத்துங்க……….. ஒரே ஒரு பேய் துரத்துது காப்பாத்துங்க……..” என்று கூவிக்கொண்டே ஓட………​

“சைத்தானே……….. நீதான்டி பேய், பூதம், காட்டேறி, மோகினி பிசாசு……..”என்று கத்தியவாறே அவளை துரத்த……..​

திடிர் என்று ஓடுவதை நிறுத்தியவள் ஸ்லோ மோஷனில் அவனை திரும்பி பார்க்க………. அதில் டர்ஜ் ஆவது அவனது முறையானது………​

“அய்யயோ…….. நார்மலா இவ திரும்புனாலே பேய் மாறிதான் இருப்பா……… இதுல ஸ்லோ மோஷன்ல வேற திரும்புறாளே……… அப்டியே ரெத்தக்காட்டேறிக்கு மாமியார் மாறியே இருக்காளே……...”என்று யுகன் மனதில் பேச……….​

அவளோ இன்னும் யுகனையே கீழ் கண்ணில் முறைத்து பார்த்தவள்……….. திடீர் என்று………. முகத்தை சுருக்கி……… "ஏண்டா யுகா……. என் முகத்துல இத்தன அழகுமாடா கொட்டிக்கிடக்கு…… ஒரு பக்கம் சைத்தான்……….”என்று வலப்பக்கம் திரும்பி காட்ட……. “ஒரு பக்கம் பேய்…….”என்று இடப்பக்கம் காட்ட…….. “ஒரு பக்கம் பூதம்…….”என்று அவனை நேராக நின்று பார்க்க……… "ஒரு பக்கம் காட்டேறி……..”என்று திரும்பி நின்று காட்ட…….. பின் சந்தேகம் வந்தவளாக…….. “ஆமா இதுல எந்த பக்கம் பார்த்தா டா நான் மோகினி பிசாசு மாறி இருக்கேன்………..”என்று அவனை திரும்பி நின்று கேட்ட விதத்தில் அவளது விரித்துவிடப்பட்ட முடிக்கும்……. அந்த வெள்ளை நிற டிரேஸ்க்கும் அப்படியே மோகினி பிசாசு போலவே இருந்தாள் அம்ருதா……….​

அதில் இவ்வளவு நேரம் அவள் ஸ்லோ மோஷனில் திரும்பிய விதத்தில் பேயாக மாறிவிட்டாளோ என்று டர்ஜ் ஆனவன் இப்போது ஒட்டுமொத்த கோவத்தையும் குத்தகைக்கு எடுத்தவனாக………​

“அடியே குந்தானி……….. உன்ன……. சாவடிச்சி பேயா மாத்துறேன்டி……. அப்போ உனக்கு டவுட் வராதுடி குந்தானி………..”என்று அவளை உண்மையான கோவத்தில் துரத்த அரண்டு போனவள்……..​

“வேணாம்டா யுகா……. என்னை விட்டுடு…….”என்று அவள் கத்த……..​

“உன்ன விடுறதா…….. உன்ன கொல்லாம…… இன்னிக்கி நான் அன்னம், தண்ணி பழகமாட்டேன்டி……...”என்று அவன் கத்தியவாறே அவளை துரத்த………​

“எரும…….. எரும….. நாட்டாம டைலாக்க எப்டி மாத்துது பாரு………..”என்று அரண்டவாறே அவள் ஓட……..​

“அது என்ன வேணா இருக்கட்டும்டி…….. உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா…… இப்டி நைட் 12மணிக்கு லைட்டலாம் ஆப் பண்ணிட்டு உட்கார்ந்துருக்க….. இதலாம் எதுக்கு என்னை பயமுறுத்ததானே……...”என்று அவன் தாவி அவளை பிடிக்க……..​

“ஆஆஆ….. அய்யோ விடுடா கைய…….. எரும……. இருட்டுல உட்கார்ந்த எனக்கே பயம் இல்ல…… உன்ன யாருடா லைட்ட போடாம உள்ள வர சொன்னது……….”என்று அவள் பதிலுக்கு கத்த……​

“அடியே வெள்ளச்சி……. கத்தாதடி……. இது அப்பார்ட்மென்டுடி……… நீ கத்துற கத்துக்கு….. நம்மள நாளைக்கே வீட்ட காலி பண்ண சொல்ல போறாங்க…….”என்று அவன் அவள் வாயை பொத்தியவாறே கத்த………​

“ம்ம்ம்….ம்ம்ம்ம்…...ம்ம்….”என்று அவள் முனுக……..​

“என்னடி குந்தானி அணத்துற…… வாய திறந்து சொல்லு……….”என்று அவன் மிரட்ட………​

அதில் கடுப்பானவள்….. தன் வாயில் இருந்த அவன் கையை கடித்துவிட்டாள்………​

“ஆஆஆஆ………… வாம்பயர்டி நீ….. எப்டி கடிச்சிருக்கா பாரு……. என்ன என் உடம்புல இருக்குற என்னோட 2லிட்டர் ரெத்தத்த குரிச்சிருப்பியா நீ……..”என்று அவன் வலியில் கையை உதறியவாறே கத்த​

“ச்சி… ச்சி…. அவ்ளோலாம் இல்ல……. ஏனா உன் உடம்புல அவ்ளோ ரெத்தம்லாம் இருக்காது……. வேணும்னா 2மில்லியா வச்சிக்கோ………..”என்றவள் அவன் தலையில் ஓங்கி ஒரு குட்டை குட்டியவாறே……. அவனை இழுத்து ஹால் சோபாவில் உட்கார வைத்தவள்……… அவன் கையை எடுத்து ஆராய்ந்தாள்………​

“வாய கையால மூடிட்டு…….. சொல்லுடி சொல்லுடினா எப்டிடா சொல்றது….. அதான் கடிச்சி வச்சிட்டேன்…….. பயில்வான்……… வலிக்கிதா……...”என்றாள் முதலில் கோவமாக ஆரம்பித்து கடைசியில் பரிவாக…….​

“ம்ச்….. நீ கடிச்சது கூட எனக்கு வலிக்கலடி…….. இப்டி பயில்வானு கூப்டாத…….. கடுப்பாகுது…….”என்றான் இல்லாத தன் சிக்ஸ் பேக்கை தடவியவாறே…….​

அதில் அம்ருதா புன்னகைத்தாள்……… ஏனேன்றால் யுகாவிற்கு அப்படிப்பட்ட பாடி……. அவன் உடம்பில் வெறும் எலும்பு மட்டும் தான் இருக்கும்…….. எலும்பின் மேல் எப்படி அழகாக தோள் போர்த்தியுள்ளது என்று அடிக்கடி அம்ருதா அவனிடம் கிண்டல் செய்வாள்……..​

முதலில் நாம் அம்ருதாவை பற்றி தெரிந்துக்கொள்வோம்….. அம்ருதாவின் நாடு….. துபாய் தான்……. அவளின் தந்தை……. தந்தையின் தந்தை என்று அனைவரும் பிறந்து வளர்ந்தது அனைத்தும் துபாயில் தான்……. சுமார் மூன்று தலைமுறையின் முன்னாலே அம்ருதாவின் கொள்ளு தாத்தா ஏதோ ஒரு காரணத்திற்காக துபாயில் போய் செட்டில் ஆகிவிட்டார்……​

அதன் முன் அவர்களின் சொந்த ஊர் கேரளா……… விஷாகப்பட்டினம் தான் அவர்களின் சொந்த ஊர்…….. அம்ருதாவின் குடும்பத்தில் கிட்டதட்ட நான்கு….. ஐந்து தலைமுறையாக வெறும் ஆண்கள் மட்டும் தான் பிறந்தனர்……… அனைவருக்கும் நான்கைந்து ஆண் பிள்ளைகளாக பிறந்தார்களே ஒழிய… பெண் பிள்ளைகளுக்கு வாய்ப்பே இல்லாமல் போனது…….. மருமகளாக மட்டுமே அந்த குடும்பத்தில் பெண்கள் வந்துக்கொண்டிருந்தார்கள்…….​

இதில் அனைவரது மனமும் வருத்தப்பட்டது என்னவோ உண்மை……. அதற்கான காரணமும் இருந்தது தான்……….. அதை நாம் பின்னால் பார்ப்போம்………​

இப்படியாக போய்க்கொண்டிருந்த அவர்களின் வாழ்வில் தான்…… அமிர்தலிங்கத்திற்கு தங்கப்பாண்டி பிறந்தார்……. தனக்காவது பெண் பிள்ளை பிறக்கும்….. தன் குடும்பத்தின் சாபம் தீரும் என்று அவர் நினைக்க…. ஆனால் அவருக்கு பிறந்ததோ மூன்று ஆண்பிள்ளைகளே…….​

அதில் நொந்து போனவர்……… தன் பிள்ளைகளுக்காவது பெண் பிள்ளை பிறக்கிறதா என்று பார்க்க……. முதலில் இரண்டு பிள்ளைகளுக்கும் ஆளாளுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் தான்…… அதில் மனதை தளறவிட்டவர்….. தன் கடைசி மகன் தங்கப்பாண்டிக்கு துபாயிலே இந்திய வம்சாவளியில் ஒரு பெண்ணை திருமணம் செய்துவிக்க…….. அவர்களுக்கும் சுமார் நான்கு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் போக….. இன்னும் அவர் வருத்தம் அதிகமானதே தவிற குறையவில்லை……..​

பின் நான்கு ஆண்டுகளுக்கு பின் பிறந்தாள்…… அந்த வீட்டின் ஒற்றை பெண் தேவதையாக அம்ருதா…… நல்ல ரோஜா போன்ற சிவந்த நிறத்தில்…… கண்….. மூக்கு…… அழகான உதடுகள் செதுக்கி வைத்தது போல…… கொழுக்மொழுக்கென்று பிறந்தாள் அவள்…..அதில் அமிர்தலிங்கத்திற்கு மனம் அவ்வளவு மகிழ்ச்சிகடலில் துள்ளியது……. தன் குடும்பத்தின் சாபம் நீங்கிவிட்டதாக ஒரே ஆர்ப்பரிப்பு……..அதனாலே அமிர்தமாக கிடைத்த அவளிற்கு அனைவரும் சேர்ந்து அம்ருதா என்று பெயர் வைத்தனர்…..​

அவளை அனைவரும் அந்த வீட்டின் தேவதையாக…….. தங்கள் குலதெய்வமாகவே அவளை நினைத்தனர்……… அவளும் அப்படிதான் வளர்ந்தாள்……. இல்லை என்று வருபவர்களுக்கு அள்ளி தருபவளாக……. அந்த குணம் அமிர்தலிங்கத்திற்கு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது………​

அவளுக்கு மேல் நான்கு அண்ணன்கள் இருக்க……. அவளது கால் தரையில் படாதவாறே வளர்க்கப்பட்டாள் அம்ருதா…….. எதாவது வேணும் என்றால் தன் நான்கு அண்ணன்களிடம் கேட்டால் போதும்……. வாங்கி குவித்துவிடுவார்கள்……… அவர்களுக்கு என்று நிறைய பிஸ்னஸ் இருந்தது துபாயில்…….. துபாயில் வந்து செட்டில் ஆகும்போது துவங்கப்பட்டது……… அனைத்தும் வெற்றிக்கரமாக சென்றுக்கொண்டிருந்தது…….​

அம்ருதா படித்தது அனைத்தும் துபாயில் தான்……… பள்ளிப்படிப்பை முடித்தவள்…… அவளுடன் தான் படித்தான்…… அம்ருதாவின் அம்மா காயத்ரியின் அண்ணன் மகன் யுகவேஷ்……… அம்ருதாவும், யுகவேஷும் ஒரே வருடத்தில் தான் பிறந்தார்கள்…… ஆனால் அம்ருதாவை விட ஒரு மாதம் பெரியவன் யுகவேஷ்……. அதனாலே இருவரையும் ஒரே நேரத்தில் ஒரே ஸ்கூலில் சேர்த்துவிட்டனர்…….​

அன்று ஆரம்பித்தது இவர்களின் நட்பு……… அவளுக்கு எதாவது ஒன்று என்றால் அவனும்……. அவனுக்கு ஒன்று என்றால் அவளும் தான் வந்து நிற்பார்கள் முதலில்…….​

இப்படியாக போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கை……… கல்லூரியில் வெவ்வேறு பிரிவு எடுக்கும்போது தான் பிரிந்தார்கள்…….. அதும் ஒரே கல்லூரி தான்…….. ஆனால் வெவ்வேறு துறை……..​

யுகா கம்ப்யூட்டர் துறையில் ஐடியும்……… அம்ருதா எக்கனாமிக்ஸில் பட்டப்படிப்பை முடித்தவள் அடுத்து கோஸ்டோலஜி எடுத்துப்படித்தாள்…….. அவளுக்கு சிறு வயதில் இருந்து இயற்கைக்கு மாறான ஸ்ப்ரிட்டுகளை பற்றி ஆராய பிடிக்கும்…… அதனால் எக்கனாமிக்ஸ் படித்து முடித்தவள்……… வீட்டில் அனைவரிடமும் அடம்பிடித்து கோஸ்டோலஜி சேர்ந்தாள்……. அதற்கு கடும்போர் நடந்தது என்னவோ உண்மை……..​

அனைத்திலும் அவளால் அனைவரிடமும் வாங்கிக்கொள்வது என்னவோ பாவப்பட்ட யுகா தான்…….​

“எனக்கு கண்டிப்பா கோஸ்டோலஜி படிக்கனும்….. அம்மே……..”என்று தன் தாயிடம் சண்டை போட…….​

அவர்…….. “அதுக்கு கண்டிப்பா நா சம்மதிக்கவே மாட்டேன் மவளே……...”என்று காயத்ரி ஒரு பக்கம் நிற்க…….​

மற்ற அனைத்திலும் அவளுக்காக நிற்கும் அவள் அண்ணன்கள், அப்பா, பெரியப்பா, தாத்தா அனைவரும் கூட இதில் அவளுக்கு எதிராக நிற்க……. இதில் அவள் போய் நேராக நின்றது தன் தாய் மாமன் விஷாலிடம் தான்…….​

“மாமா எனக்கு கோஸ்டோலஜி படிக்கனும்……… நீங்க அம்மையிடம் எனக்காக பரையூ…….”என்று அவள் இரண்டு சொட்டு கண்ணீர் விட……..​

அதில் தன் செல்ல மகளாக வளர்த்த தன் மருமகளின் கண்ணீர் தாங்காமல் விஷால் உடனே தன் தங்கையிடம் அனுமதிவாங்க ஓடிவந்துவிட்டார்……..​

“அண்ணே…….. நீ கொஞ்சம் அமைதியா இரு…… அவள அவ போக்குல இவங்களாம் விட்டு விட்டு தான் இவளுக்கு கொழுப்பு ஏறிபோச்சி…….”என்று காயத்ரி திட்ட……..​

“ஆமா அத்த…. அதும் கொஞ்ச நஞ்சம் இல்ல கிலோ கணக்குல……...”என்று யுகா எடுத்துக்கொடுக்க…….​

அதில் கடுப்பானவள் அவனை முறைக்க…….. அதனை தூசிபோல தட்டிவன் முகத்தை திருப்பிக்கொண்டான்……. பின் அவனுக்கு அவளால் அவ்வளவு பாடுப்பட்டிருக்கிறானே……​

சிறுவயதில் இருந்தே யுகா கொஞ்சம் பயந்த சுபாவம்……. ஆனால் அம்ருதா அப்படி இல்லை…… அவளுக்கு எதிலும் ஒரு அசட்டு தைரியம் இருக்கும்……. இவனுக்காக நிறைய பேரை அடித்து கூட இருக்கிறாள்……. அப்படிப்பட்டவள் யுகாவை சிறுவயதில் இருந்து பேய் கதை சொல்கிறேன் என்ற பெயரில் அவனை டர்ஜாக்கினால் அவன் சும்மா விடுவானா……..​

அவனுக்கு பேய் என்றாலே அலர்ஜி……….. இவள் யோசனை முழுதும் தெய்வத்திற்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தியிடம் தான் இருக்கும்……… சிறுவயதில் இருந்தே அம்ருதாவிடம் இந்த பழக்கம் இருக்கிறது……..​

அவனை நேரம் கிடைக்கும் போது எல்லாம் பயமுறுத்த அவன் இப்போது வச்சி செய்கிறான்……​

“மாமா……….”என்று அவள் கத்த……..​

உடனே விஷால் தன் மகன் தலையில் ஒரு குட்டை போட்டார்…….. அதில் யுகா தன் அத்தை பெத்த ரத்தினத்தை முறைக்க…… அவளோ நாக்கை துருத்தி அழகு காட்டினாள்………..​

“காயு….. பிள்ள ஏதோ ஆசப்படுது……. படிக்கட்டும் விடுமா……. நீ ஆசப்பட்ட மாறி எக்கனாமிக்ல கோல்ட் மெடல் வாங்கிட்டா…….. இது அவ ஆச……. அவ அவளுக்கு பிடிச்சத செய்யட்டுமே...”என்று விஷால் சப்போர்ட் செய்ய……….​

“ம்ச்….. உங்க மருமக அது மட்டும் தான் சொன்னாலா……….”என்று தங்கப்பாண்டி வாய் திறக்க…….. விஷால் முழித்தார்…….. பின் தன் மருமகளை காண……. அவளோ திருத்திருவென விழித்துக்கொண்டே…...நின்றாள்…...அதிலே அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது என்று புரிந்துக்கொண்டவர்…….​

“உங்க மருமக கோஸ்டோலஜி படிச்சிட்டு இந்தியாவுக்கு போனுமாம்……. அதப்பத்தி ரிசர்ஜ் பண்ண……..”என்று தங்கப்பாண்டி சொல்ல……… அதில் விஷால் அதிர்ந்து போய் தன் மருமகளை பார்த்தார்…….​

அதில் அம்ருதா முகம் குழப்பத்தை தத்து எடுத்துக்கொண்டது…… அவளும் சிறுபிள்ளையில் இருந்து பார்க்கிறாள் தானே இந்தியா என்று சொன்னாலே அவர்களின் வீட்டில் உள்ளவர்கள் முகம் மிரண்டு போவதை……..​

அதில் உள்ள காரணத்தை அனைவரிடமும் அவள் கேட்க…….. ஆனால் யாரும் அவளுக்கு ஒழுங்கான காரணத்தை கூறுவது போல் தெரியாது……. “அங்க நமக்கு யாரும் இல்ல அதான் போல…….”என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார்கள்……..இதில் கடுப்பானவள்……. மனதில்…….. கண்டிப்பாக நாம் இந்தியா போயே ஆகனும் ஆஆஆஆன்ன்ன்ன்ன்ன்….. என்று மனதில் சபதம் ஏற்றுக்கொண்டாள்…..​

அன்றில் இருந்து ஆரம்பித்தது…….. இந்த கோஸ்டோலஜி ஐடியா…….. அதும் அவளுக்கு அதில் இன்டரஸ்ட் வேறு……… அதனால் அதையே அவள் பற்றுகோளாக எடுத்துக்கொண்டாள்…….​

“என்னமா அம்ரு…….. இவங்களாம் ஏதோ சொல்றாங்க……..”என்று விஷால் கேட்க…….​

“மாமா எனக்கு கோஸ்டோலஜி படிக்கனும்…….. அது முடிஞ்சதும் ஜஸ்ட் 6மந்த் இந்தியால ரிசர்ச் இருக்கு……. ரிசர்ச் பேப்பர் சமிட் பண்ணிட்டேனா….. இவங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்….. ப்ளீஸ் இதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணுங்க……..”என்று அவள் கெஞ்ச………​

அதில் விஷால் ஒன்னும் சொல்ல முடியாமல் நிற்க…….. அவளின் இந்த கலக்கமான முகத்தை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் யுகா……..​

அம்ரு தன் தாய் தந்தையிடம் இருந்ததை விட அவனிடம் தான் அதிகமாக இருந்திருக்கிறாள்…… அப்போதேல்லாம் பட்டாம்பூச்சி போல சந்தோஷத்தை மட்டுமே முகத்தில் பூசிக்கொண்டு சுற்றியவள் முகம் இப்போது கலக்கமாக இருப்பதை கண்டவனது மனம் தாங்கமுடியவில்லை……..​

அவளையே இமைக்காமல் பார்த்தவன்……….. “நான் ருது கூட போறேன்……. அப்போ அவளுக்கு ஒன்னும் ஆகாதுல……..”என்று யுகன் சொல்ல……. அதில் அம்ருதா அவனை நன்றியுடன் பார்த்தாள்……..​

பாவம் இருவருக்கும் தெரியவில்லை……… அங்கு தான் இருவருக்கும் ஆபத்து காத்து கொண்டிருப்பதாக…………..​

(நிழல் தொடரும்…………)

 
Last edited by a moderator:
Top