எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மார்டன் பொண்ணு மாட்டிக்கிட்டா - 2

NNK-80

Moderator

இதுவரை நடந்தது என்னன்னா வீதில போற‌ ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்டது போல, எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லாத பிரச்சனைக்குள்ள‌ போய் சிலர அடிச்சீப்புட்டு வந்துட்டேன்😅, இப்போ அவனுங்க என் வீட்டு‌‌ முன்னாடி கொலை காண்டுல நின்னுட்டு இருக்காங்க😢, இதுக்கு‌ நடுல என்னய காப்பாத்த இருக்குற‌ அப்பா😍. நடுல நம்ம அறிமுகம்‌ வேற😁

இனிமே...​

பார்த்தேங்களா இதான்ங்க என்னோட பிரச்சனை, யாரோ ஒருத்தன் யாரோ ஒரு பொண்ண தொல்லை‌ பண்றான் வம்பு பண்றான் அப்படின்னா எனக்கு எதுக்கு கோவம் வரனும், நான்வாட்டுக்கு என் வேலை உண்டுன்னு போய் இருக்கலாம், ஆனா என்னன்னா அவன் அந்த பொண்ணுட்ட பண்றது அப்படியே என்ட்ட பண்ற மாதிரி இருக்குது, என்னோட உடம்பு எல்லாம் கூசுது அதை பார்க்கும்போது, இந்த empathy அப்படின்னு சொல்லுவாங்கள்ள அது எனக்கு கொஞ்சம் அதிகம், அதுதான் எனக்கு கோவம்‌ வர மெயின் காரணம்.​

சரி கதைக்கு வருவோம்…​

இங்க இப்போ என் அப்பா, அம்மா என்ன சொல்ல போறாங்கன்னு தான் பார்க்கணும்.​

“அடியே என்னடி ஒன்னும்‌ தெரியாத மாதிரி நடிக்குற உடனேவும், இந்த பையன்‌ யாருன்னு உனக்குத் தெரியாதா?” என கேட்க​

அகல்யா ராக்கியை திரும்பி ஒரு‌‌ பார்வை பார்த்தாள். அவ்வளவுதான் முடிஞ்சது கதை. அவன் பயந்து பம்பிவிட்டான்.​

( அய்யோ இவன் வேற என்னய பார்த்து பயந்து போட்டு கொடுக்கானே ) என அகல் மனதில் நினைத்துக் கொண்டாள்.​

வித்யா, அகல்யாவின் கையை பிடித்து இழுக்க, அவர்களை குத்தியதால் கையின் முட்டியில் ஏற்பட்ட‌ காயத்தை பார்த்தாள் வித்யா.​

“இது என்னடி?” என்று அவளை‌ மிரட்ட​

காயத்தை பார்த்த கேசவ், அவளது கையை பிடித்து “அம்மா அகல் என்ன இது, இங்க வா நான்‌ மருந்து போடுறேன் உள்ள வா” என‌ சொல்ல​

சுப்பாராவ் எகிறிக் கொண்டு வந்தார், “சார் அப்போ எங்களுக்கு என்ன பதில்?” என கேட்க​

லிஃப்ட் மீண்டும் திறந்தது.​

“அந்த பொண்ணு பதில் சொல்லுவா” என லிஃப்ட்டை கை காட்ட​

விக்கி ஒரு பெண்ணுடன்‌‌ வந்து இருந்தான்.​

அந்த பெண்‌ வேறு‌ யாரும் இல்லை‌ மகா அக்காவோட பொண்ணுதான். இந்த பொண்ணுக்கிட்ட‌ தான் ராக்கி வம்பு இழுத்தான்.​

“சார்‌ அப்போ நானு” என‌ கடைக்காரன்‌ வர​

“டேய் நீ பேசாத, உன்‌‌ வாயை ஒடச்சு விட்டுருவேன், விலையை குறைச்சு விக்குறேன்னு அப்பார்ட்மெண்ட் குள்ள‌ வந்த, பொருளை‌ கைல கொடுக்குறேன்னு பொண்ணுங்க கைய புடிப்ப, தடவுவ அப்பறம் உன்னய அடிக்காம மணப்பாங்களோ, இங்க பாருங்கடா என் பொண்ண பத்தி எனக்குத் தெரியும்,‌‌ அவ ரோட்டுல போறவனை எல்லாம் அடிக்க மாட்டா, அவ அடிச்சா ஒரு‌காரணம் இருக்கும், அவ உங்களை அடிச்சதும் மொதல்ல கால் பண்ணது எனக்குத் தான், போய் உங்க புள்ளைய சரி பண்ணிட்டு வந்து என்ட்ட என்‌ பொண்ணு பத்தி கம்ப்ளைண்ட் பண்ணுங்க” என கத்திவிட்டு அங்கிருந்து அனுப்பிவிட்டார் கேசவ்.​

சுப்பாராவ்விடம் நடந்ததை அந்த பெண் கூற, ராக்கி செமத்தியாக அடி வாங்கி வீட்டிற்கு சென்றான்.​

சோஃபாவில் அமர வைத்து, அகல்யாவின் கைகளுக்கு மருந்து போட்டுக் கொண்டு இருந்தார் கேசவ்.​

“அடியே மறுபடியும் மறுபடியும் சொல்லுறேன், நீ இந்த அடிதடிக்கு எல்லாம் போகாம ஒழுங்கா இருக்க பழகு, எவ எப்படி போனா உனக்கு என்னடி, உன்வேளை இதை பார்த்துட்டு வர வேண்டியது தானே” என கோவமாக கத்திக்‌கொண்டு இருந்தாள் வித்யா.​

“ஏய் புள்ளைய்ய கத்துனது போதும் நீ போய் உன் வேலைய மட்டும் பாரு” என கேசவ் ஒரு கத்து விட​

வித்யா பொட்டி பாம்பு போல் அடங்கினாள். கேசவ் கத்தி பேசாத ஒருவர் அவர் எப்போதாவது கத்தினால் அதில் ஏதும் காரணம் இருக்கும் என்பது வீட்டம்மாவிற்கு தெரியும், ஆனாலும் பெண்ணின் வாய் அல்லவா சும்மா இருக்குமா…​

“என்னம்மோ போங்க, அப்பன் ஆச்சு பொண்ணு ஆச்சு, எனக்கு எதுக்கு வம்பு, நாளை‌ பின்ன பொண்ணு பார்க்கும்போது தெரியும்” என புலம்பிக் கொண்டே வேலையை பார்க்கத் தொடங்கினாள்.​

இதுதான்ங்க என்னோட குடும்பம், இப்போ என்னோட லைஃப் ஸ்டைல்லையும் சொல்லிருறேன்.​

அப்பா பேங்க் மேனேஜர், அம்மா கவர்மெண்ட் காலேஜ்ல ப்ரஃபசர், இதனாலேயே சின்ன வயசுல இருந்து நான் கேட்டது எல்லாம் உடனே கிடைச்சுரும்.​

சிம்ப்பிலா சொல்லனும்னா, அங்க அப்பாவும்,அம்மாவும் உழைச்சு எனக்கு கொடுப்பாங்க, நானும் என் தங்கச்சியும் அதை‌ ஷாப்பிங், மால் அப்படி போய் செலவு பண்ணுவோம். கொஞ்சம்‌ சீப்பு தான், பட் இருந்தாலும் அப்பா காசு பொண்ணுங்களுக்குத் தானே ( 😁😅 )​

அப்பறம் டெய்லி ஒரு படம், அப்போ அப்போ படிக்குறது, எந்த அளவு சினிமா புடிக்குமோ அந்த அளவு எனக்கு புக்ஸ் அல்சோ புடிக்கும், வேற என்ன இருக்குது? ஹான் என் ஃப்ரண்ட் விக்கி, அவன்கூட சேர்ந்து ஊரு சுத்துவேன், எனக்கும் என் தங்கச்சிக்கும் சண்டை வந்துட்டே இருக்கும் எங்களை சமாளிக்குறதே வீட்டுல பெரும்பாடு, என் அப்பா ரொம்ப பாவம் சண்டைன்னு வந்துட்டா ஒன்றுக்கு மூனு பொண்ணுங்கள சமாதானம் செய்யனும்ல, அவ்வளவுதான் இதான் நான் இப்படி ஜாலியாக போறதுதான் என்னோட லைஃப்.​

எப்போதும் போல் அன்றும் அம்மாவின் நான்கு ஐந்து திட்டுகள் உடனும், தங்கச்சியுடனான செல்ல செல்ல சண்டைகளுடனும், இரண்டு படங்களுடனும் அந்த நாள் கழிந்தது.​

இரவு‌ நேரத்தில்…​

கேசவ் படுத்து இருந்த வித்யாவின் கால்களை தனது மடியில் வைத்து அழுத்திக் கொண்டு இருந்தார்.​

“ஏங்க” என வித்யா கூப்பிட​

“சொல்லுங்க வீட்டம்மா”​

“அகல்யாவோட ஆட்டம் நாளுக்கு நாள்‌ அதிகம்‌ ஆகுதுங்க, நாமளும் போகாத டாக்டர் இல்லை, பண்ணாத யோகா இல்லை, எது பண்ணாலும் அவளோட கோபத்தை கட்டுப்படுத்த‌ முடியயைங்க, எனக்கு பயமா இருக்குதுங்க” என கவலையுடன் சொல்ல​

“அகல்யாக்கு ஒன்னும் ஆகாது சரியா நீ தேவை இல்லாம பயப்படாத” என அவர் சமாதானம் படுத்திக்கொண்டு இருந்தார்.​

“இல்லைங்க, வர‌ வர மனசு படபடக்குது, இவளுக்கும் ஏதும் ஆகிருமோன்னு” என அவளது மனதின் உள்ளே இருந்த கவலையை கொட்டிக்கொண்டு இருந்தாள்.​

இதை எல்லாம் கதவின் வெளியே இருந்து அகல்யாவும், அஷ்வினியும் கேட்டுக்கொண்டு இருந்தனர்.​

இருவரும்‌ ஒருவரை ஒருவர் பார்க்க…​

“என்ன?” என்பது போல் இருவரும்‌ ஒரே போல் கண்களை உயர்த்தினர்.​

மீண்டும் ஒன்றும் இல்லை என்பது போல் இருவரும் தலையை ஆட்டி, ஒட்டுக் கேட்கத் தொடங்கினர்.​

“சரி வீட்டம்மா, இப்போ என்ன‌ பண்ணலாம்னு இருக்க?” என‌ கேட்க​

“இல்லைங்க எப்படியும் இவ இன்னும் காலேஜ் போக ரெண்டு மூனு‌ மாசம் ஆகும்‌ தானே, அதுனால என்‌ அம்மா வீட்டுல வேணும்னா விட்டுட்டு வரலாம்ல” என தயங்கி தயங்கி சொல்ல​

வித்யாவும், கேசவ்வும் காதல் திருமணம் செய்துக் கொண்டவர்கள். திருமணம் ஆனதில் இருந்து அவர்களும் இங்கு வரவில்லை. இவர்கள் ஒருமுறை அங்கு சென்றனர். ஆனாலும் அவர்களது மனம் இறங்காததால் திரும்பி வந்து விட்டனர். அப்போ அப்போ வித்யா மட்டும் கால் செய்து பேசுவாள். அது கேசவ்விற்கும் தெரியும் ஒன்றும் சொல்லமாட்டார். இப்படி இருக்கும் குடும்பத்திற்கு தனது பொண்ணை அனுப்புவதா என யோசித்தார்.​

அவர் யோசிப்பதை தெரிந்து கொண்ட வித்யா “ஏங்க அவங்களோட கடைசி காலம்ங்க இப்போதாவது பேத்திய பார்க்கட்டுமே, முன்ன‌ மாதிரி இல்லைங்க, இப்போ‌ மாரிட்டாங்க” என சமாதானம்‌ படுத்த​

“அடியே போச்சு போச்சு மாட்டிக்கிட்ட” என அஷ்வினி அகல்யாவை பார்த்து சிரிக்க​

யோசித்துக் கொண்டு இருந்த கேசவ், “சரி உங்க வீட்டுல கேட்டு சொல்லு, ஆனா‌ சின்னவளையும் சேர்த்துதான்‌ அனுப்பனும்” என கட்டளை‌யிட​

சின்னவளை பார்த்து சத்தமாக சிரித்து விட்டாள் அகல்யா.​

“மாட்டுனடா என் பம்பரகட்டை மண்டையா” என சிரிக்க​

இருவரும் அங்கேயே சண்டையிட‌ தொடங்கினர்.​

சத்தம் கேட்டு கேசவ் வந்து கதவை திறக்க…​

இருவரும் அதை கவனித்து, தோல் மேல் கை போட்டுக் கொண்டு, ஏர் போனை காதில் மாட்டிக் கொண்டனர்.​

கேசவ் வெளியே வந்ததும், “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை லாலலா” என ஒன்றாக‌ பாட்டு‌ பாட​

“ஒட்டா கேக்குற, இன்னைக்கு உங்களுக்குத் தீபாவளி தான்” என இருவரையும் துரத்தினார் கேசவ்.​

தொடரும்...​

 
Last edited:
Top